மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.11.08

கால்தடங்கள் அற்ற பூமியில் காற்றாக நுழைவது எப்படி?


"சிற்றின்பத்தின் சின்ன வாசல்வழி பேரின்பம் நாம் அடைவோம்"
என்று நாயகன் உருகிப் பாடுகிறான்:

உடனே நாயகி மனம் கிறங்கிப் பாடுகிறாள்

"கால்தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்"

விட்டானா நாயகன்? தொடர்கிறான்:

"சித்திரை மாதத்தை நான்நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்"

'மாதத்தை எப்படி நனைக்க முடியும்?' என்று கிறுக்குத்தனமாகக்
கேட்காமல் - அதாவது லாஜிக் எல்லாம் பார்க்காமல், பாடலை
மட்டும் கேட்போம்.

அவன் சொற்களில் மயங்கி விட்ட நாயகி தேனாகக் குழைகிறாள்

"மார்கழி மாதத்தை நான்எரித்து முடுபனி காலத்தில் அனல்கொடுப்பேன்"

இவளுக்கு அவனே பரவாயில்லை. அவன் மாதத்தை நனைத்துத்
தருவதாக மட்டுமே பிதற்றினான். இவளோ மாதத்தை எரித்துத்
தருவேன் என்கிறாள். விட்டால் ஒன்பது கிரகங்களையும் இட்லிச்
சட்டியில் வைத்து அவித்துத் தருவேன் என்பாள் போலிருக்கிறது.

அவன் க்ளீன் போல்டாகி விட்டான். தொடர்ந்து சொல்கிறான்

"அடியே, சகியே சுகியே...............!"

சகியே, சுகியே என்று தரையில் விழுந்து புரள ஆரம்பித்து
விட்டான் அவன்.

நாம் ஏன் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்?
வாருங்கள் போவோம்; பாடத்தைப் புரட்டுவோம்!
------------------------------------------------------------------------------------------
இந்தப்பாடல், நூறுக்கும் மேற்பட்ட பின்னணிக் கலைஞர்கள்
இசையமைத்து ஒலிக்கும்போது அற்புதமாக இருக்கும். கேட்டுப்
பாருங்கள்.

இந்தக் கணம் அதை மறந்து விட்டுப் பாடத்தைப் பாருங்கள்.

ஒலிநாடா அல்லது குறுந்தகடு எதுவும் இல்லாமல், அதைவிடப் பத்து
மடங்கு இசையுடன் அந்தப் பாடல் ஒரு இளம் பெண்ணின் மனதிலோ
அல்லது இளைஞனின் மனதிலோ ஒலித்துக் கொண்டிருந்தால், அதை
அவர்கள் உணவு, உறக்கம் ஆகியவைகளின்றி, தொடர்ந்து கண்களை
மூடிக் கேட்டுக் கொண்டிருந்தால் - தலையசைத்துக் கொண்டிருந்தால்,
அவர்கள் சுக்கிரனின் பிடியில் அதாவது காதலின் பிடியில்
சிக்கியிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.

சுக்கிரனின் ஆசியின்றி காதல் எவரையும் கட்டித் தழுவாது.
அதேபோல சுக்கிரனின் ஆசியின்றி எவருடைய மண வாழ்வும்
மகிழ்ச்சியுடையதாக இருக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"ச்சே என்ன அற்புதமாக எழுதியிருக்கான்டா. பின்னிட்டான்டா!
என்று ஒரு கவிதையையோ அல்லது கதையையோ நீங்கள் சிலாகித்துப்
பேசுவது, அதை எழுதியவனுக்குத் தெரியாது.

அதே போல "Fantastic!" என்று ஒரு சிற்பத்தையோ அல்லது ஒரு
ஓவியத்தையோ அல்லது ஒரு நல்ல திரைப்படத்தையோ பார்த்துவிட்டு
நீங்கள் முகம் மலர்ந்து சொல்வது, அதைப் படைத்தவனுக்குத் தெரியாது

ஆனால் ஒன்றை மட்டும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுக்கிரன் ஒருவனுடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் அன்றி
ஒருவன் இலக்கியம், மற்றும் கலைத்துறைகளில் பிரகாசிக்க முடியாது.

சுக்கிரன் மெல்லிய உணர்வுகளுக்கு அதிபதி. மெல்லிய உணர்வுகள்
இன்றி ஒருவன் கவிஞனாகவோ அல்லது எழுத்தாளனாகவோ ஆவது
எப்படி சாத்தியம்?

அதுபோல அசத்தலான கற்பனை வளம், உணர்ச்சிகளின் தாக்கம்
இன்றி ஒருவன் எப்படிக் கலைஞனாக முடியும்?

நடிப்பு, பாட்டு, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், கவிதை, கதை
என்று உள்ள அத்தனை கலைகளுக்கும் அதிபதி சுக்கிரன்தான்

சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் அவைகள் வரும்
இல்லையென்றால் வராது!

ஆனால் அந்தக் கலைகளை வைத்துக் காசு பண்ணுவதற்கு மற்ற
கிரகங்களின் உதவி தேவை. அங்கேதான் மற்ற கிரகங்கள் சுக்கிரனுடன்
கைகோர்த்து ஜாதகனுக்குப், பணம், புகழ் எல்லாவற்றையும் தேடிக்கொடுக்கும்
இல்லை என்றால் ஜாதகன் அவனளவிற்குள் குடத்தில் வைத்த விளக்குப்
போல கலைஞனாக இருப்பான். அவன் கலைஞன் என்று தெரியாமலேயே
போய்விடும்!

அதுதான் சில கலைஞர்களுடைய வாழ்வில் சோகமானது.

சினிமாத்துறைக்குச் சென்று பலர் பிரகாசிக்காமல் போய்விடுவதற்கு
அதுதான் காரணம். சினிமா என்றல்ல பலதுறைகளிலும் சிலர்
பிரகாசிக்காமல் போய் விடுவதற்கும் அதுதான் காரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுக்கிரனுக்கான பொதுப் பலன்கள்:

1. ஜாதகத்தில் சுக்கிரன் தீய கிரகங்களின் (அதாவது சனி, ராகு, மற்றும்
கேது) சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருந்தால் போதும்
ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

2. அதே போல செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை அல்லது பார்வை
இல்லாமல் இருந்தாலும் ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி
நிறைந்ததாக இருக்கும்.

3. In short, if Venus (Sukkiran) is free from any affliction by association
or aspect, the native of the horoscope will be blessed with a happy
and comfortable married life!

4. சுக்கிரன், செவ்வாயின் சேர்க்கை அல்லது பார்வையின்றியிருந்தால்
அதுவும் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் ஜாதகனுக்கு
இளம் வயதில் அல்லது உரிய வயதில் திருமணமாகிவிடும்.
பெண்களுக்கும் அதுவேதான் விதி

5. அதேபோல ஜாதகத்தில் சுக்கிரன் எவ்வளவு வலுவாக இருந்தாலும்
இரண்டாம் வீடு நன்றாக அமையவில்லை என்றால் - அதாவது குடும்ப
ஸ்தானம் நன்றாக அமையவில்லை என்றால் பல தடைகளைத் தாண்டித்தான்
அந்த ஜாதகன் அல்லது ஜாதகி திருமணம் செய்துகொள்ள நேரிடும்

6. எனக்குத் தெரிந்து ஒரு பெரிய அரசியல்வாதிக்கு இரண்டாம் வீட்டில்
மாந்தி. அவருக்கு இன்றுவரை திருமணமாகவில்லை. குடும்ப வாழ்க்கை
அமையவிடாமல் மாந்தி தடுத்துவிட்டது அல்லது கெடுத்துவிட்டது.

வேண்டுமென்றே பெயரைச் சொல்லவில்லை. முடிந்தால் கண்டுபிடித்துக்
கொள்ளுங்கள். அவருடைய ஜாதகம் என்னுடைய முன் பதிவில் உள்ளது.
கண்டுபிடித்தால், உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். பின்னூட்டத்தில்
வெளிப்படுத்த வேண்டாம். மீறி வெளிப்படுத்தினால் அதை Delete செய்து
விடுவேன் என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறேன். முடிந்தவரை உயிரோடு
இருக்கும் தலைவர்களைப் பற்றி எழுதுவதை நான் விரும்புவதில்லை.
அவர்களுடைய ஆதரவாளர்கள் உள்ளே வந்து தொல்லை கொடுப்பார்கள்

7. சுக்கிரன் அமர்ந்த இடத்தின் வீட்டுக்காரன் (அதாவது அந்த இடத்தின்
அதிபதி) 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன், கேந்திர அல்லது
திரிகோண இடங்களில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகனுக்கு, சொத்து,
சுகம், மகிழ்ச்சி எல்லாம் தேடி வரும்.

8. சுக்கிரன் அமர்ந்த இடத்தின் அதிபதி, அந்த இடத்தில் இருந்து
அதாவது அவனுடைய வீட்டில் இருந்து ஆறாம் இடம் அல்லது
எட்டாம் இடத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கும் அவனுடைய
மனைவிக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் உண்டு

9. சுக்கிரன் ரிஷபத்தில் இருந்தால். அது அவருக்கு மிகவும்
உகந்த இடம். ஜாதகனுக்கு, மகிழ்ச்சியையும், சுகங்களையும் அள்ளிக்
கொடுப்பார் அல்லது வாரி வழங்குவார். ஜாதகனுக்கு அழகிய
பெண்களுடன் நட்புக் கிடைக்கும். சிலருக்கு அழகிய பெண்களின்
சேர்க்கை கிடைக்கும் (நட்பிற்கும் சேர்க்கைக்கும் வித்தியாசம்
தெரியுமல்லவா?) ஆசைகள் பெருமளவில் நிறைவேறும்.
வீடு, வாகனம், பணியாள் என்று எல்லாம் கிடைக்கும்.
அதோடு சிலருக்குப் பெண் சம்பந்தப்பட்ட நோய்களும்
கிடைக்கும்:-)))))

10. துலாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால், அரசாங்க ஆதரவு,
கீர்த்தி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சிலர் காம வேட்கை
மிகுந்தவர்களாக இருப்பார்கள் (சுக்கிரனின் சொந்த வீடல்லவா?
'அது' இல்லாமல் இருக்குமா?)

11. மீனத்தில் சுக்கிரன் இருந்தால் அவன் அங்கே உச்சம்.
பணம் வரும். சிலருக்கு வந்த பணம் களியாட்டங்களில்
கரைந்து போகவும் செய்யும். அல்லது வேறு விதத்தில் நஷ்ட
மடைவார்கள்.

12. கன்னியில் சுக்கிரன் நீசம். இங்கே சுக்கிரன் இருந்தால் ஜாதகனின்
வாழ்க்கையில் ஏமாற்றங்களை அதிக அள்வில் சந்திக்க நேரிடும்
குடும்பத்தில் துயரம் உண்டாகும். சிலர் ஒழுக்கமில்லாத வாழ்க்கை
வாழ்வார்கள்.

இதே அமைப்பை சுப கிரகங்கள் பார்த்தால் மேற்கூறிய தீய பலன்கள்
இல்லாமல் போய்விடும். அல்லது வெகுவாகக் குறைந்துவிடும்.

===================================================
நான் ஜோதிடம் படித்தது எல்லாம் ஆங்கிலப் புத்தகங்களின்
மூலம். அதனால்தான் என்னால் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடிந்தது.
அதற்காக நான் தமிழைக் குறைத்து மதிப்பிட்டுச் சொல்வதாக யாரும்
நினைக்க வேண்டாம். தமிழ் செம்மொழி! செம்மையான மொழி!

அப்போது கிடைத்த தமிழ் ஜோதிட நூல்கள் எல்லாம் பாடல் வடிவில்
இருந்ததால்தான் நான் தமிழில் படிக்க இயலாமல் போய்விட்டது.

அவற்றிற்கான பொழிப்புரை அல்லது பதவுரையைத் தேடிப்படித்தால்
தாவு தீர்ந்துவிடும். அப்படியே நான் படித்துக் கொண்டிருந்திருந்தால்
எப்போது அதை முடித்திருப்பேன் என்று சொல்ல முடியாது.
பதிவு எழுதாமல் இன்னும் படித்துக் கொண்டிருக்க நேர்ந்திருக்கலாம்
அல்லது பாதியிலேயே ஜோதிடத்தைக் கை கழுவியிருக்கலாம்.

சந்தேகம் இருந்தால் "குமாரசுவாமியம்" என்னும் ஜோதிட நூலை
வாங்கி ஒரு பக்கத்தையாவது முழுமையாகப் படித்துப் பாருங்கள்
அப்போது உண்மை தெரியும்
__________________________________________________________
சுக்கிரன் ஜாதகத்தில் பன்னிரெண்டு வீடுகளில் இருக்கும் பலன்கள்

இதை ஆங்கிலத்தில் கொடுப்பதற்குக் காரணம். எளிய ஆங்கிலம்
அனைவருக்கும் புரியும். இரண்டாவதாக சில சொற்களைத் தமிழில்
எழுதக் கூச்சமாக இருக்கும். ஆங்கிலத்தில் தடாலடியாக எழுதி
விடலாம். பொருளும் சிதையாது.

1. Venus in the Ascendant

Venus in the Ascendant makes one handsome,blessed with good eyes,
happy, with good longevity, attractive to the opposite sex and with
good children.

2. Venus in the Second House

In the second Venus makes one a poet , with good education and
wealth, with knowledge of music & with gift of the gab.In the
horoscopes of Tennyson, Byron, Omar Khayam, Tagore & Aurobindo
Venus in the second was responsible for their fame as poets.

3. Venus in the Third House

Venus in the 3rd makes one devoid of happiness from spouse and
subject to the influence of the opposite sex. Will have difficulty in
controlling anger. Will be miserly

4. Venus in the Fourth House

Venus tenancy of the fourth makes one wealthy, with a lovely well
sculptured house and conveyances. Will be famous and will have
a lot of admirers.

5. Venus in the Fifth House

Will be a lord, very intelligent with a lot of wealth and relatives.
Will be clever and will be equal to a minister. Will be revered by
many. Intelligence of a higher order will be exhibited.

6. Venus in the Sixth House

Venus in the sixth makes you suffer disgrace at the hands of
women & you become the destroyer of your enemies. Will be
subject to diseases. Will be afflicted by defeats and scandals.

7. Venus in the Seventh House

Will be a lover of the opposite sex. Will have beauty, brains and
fortune. If male, there will be problems in marital life .

8. Venus in the Eighth House

This benign position of Venus makes one wealthy with good
longevity. Will be regal in bearing and respected by many.
Benefics in the house of longevity increases longevity.

9. Venus in the Ninth House

Venusian of the Ninth makes one interested in the psychic arts,
wealthy, fortune via father and with good partner and children.
Will have favour from the Government.

10. Venus in the Tenth House

This benign position of Venus makes one very intelligent, famous
and will be a doer of altruistic deeds. Will excel in textile technology.
Will have wealth from textile trade. This dominance of Venus on
the Meridien is good for business dealing with clothes.

11. Venus in the Eleventh House

Will love the opposite sex , will have subordinates and will have
wealth of no mean order. This is a powerful regal yoga, as Venus
in the house of gains can confer gains of a high standard.

12.Venus in the Twelfth House

Will be wealthy and will be a traveler. Will enjoy all the pleasures
of life. Will be bereft of relatives. This powerful position of Venus
favours wealth & enjoyments of a high order.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுக்கிரனின் சொந்த வீடுகள்: ரிஷபம், துலாம்
சுக்கிரனின் உச்ச வீடு: மீனம்.
சுக்கிரனின் நீச வீடு: கன்னி
சுக்கிரனின் நட்பு வீடுகள்:மிதுனம், மகரம், கும்பம்
சுக்கிரனின் சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு
சுக்கிரனின் பகை வீடுகள்: கடகம், சிம்மம்

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சுக்கிரனுக்கு 100%
வலிமை இருக்கும்.

சுக்கிரனுடன் பதன் சேர்ந்திருந்தால் நிபுனா யோகம்
ஜாதகன் எதையும் எளிதில் கற்றுத் தேர்ந்துவிடுவான். செய்யும்
வேலையில் நிபுனனாக இருப்பான்.

சம வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் சுக்கிரனுக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த சுக்கிரனுக்குப் பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த சுக்கிரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகளையெல்லாம் நான் தராசு வைத்து எடை போட்டுச்
சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!
===================================================
சுக்கிரனின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:
சுயவர்க்கத்தில் சுக்கிரன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1 பரல் : துன்பங்களும், பிரச்சினைகளும் நிறைந்த வாழ்க்கை

2. பரல்கள்: குறிக்கோள்கள் நிறைவேறாத வாழ்க்கை. அலைச்சல்கள்
நிறைந்த பயணங்கள்.

3. பரல்கள்: எல்லோரிடமும் விரோதப் போக்கு அல்லது விரோத
மனப்பான்மை கொண்ட வாழ்க்கை

4. பரல்கள்: சம அளவு மகிழ்ச்சியும், துக்கமும் உள்ள வாழ்க்கை

5. பரல்கள்: நல்ல உறவுகள், நல்ல நட்புக்களுடன் மகிழ்ச்சியாக வாழும்
வாழ்க்கை

6. பரல்கள். அதீதமான செளகரியங்கள், சுகங்கள், பெண்சுகங்கள்
கூடிய வாழ்க்கை

7. பரல்கள்: சொத்து, சுகம், பணம், காசு, அன்பான மனைவி என்று
எல்லாம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை

8. பரல்கள்: எல்லாவிதமான மகிழ்ச்சிகளும், சுகங்களும், பெருமைகளும்
நிறைந்த வாழ்க்கை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுக்கிரனின் கோச்சாரப் பலன்கள்:
குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரன் இருக்கும் ராசியை வைத்து:

1ல் இருக்கும் போது - சுகம்

2ல் இருக்கும் போது - தன லாபம், கெளரவம்

3ல் இருக்கும் போது - மகிழ்ச்சி

4ல் இருக்கும் போது - உறவுகளால் மகிழ்ச்சி, செல்வாக்கு

5ல் இருக்கும் போது - தனலாபம்

6ல் இருக்கும் போது - ********* காரியத் தடைகள்

7ல் இருக்கும் போது - ********* பெண்களால் உபத்திரவம். பெண்
ஜாதகியாக இருந்தால் ஆண்களால் உபத்திரவம் என்று கொள்க!

8ல் இருக்கும் போது - வசதி, சுகம்

9ல் இருக்கும் போது - மகிழ்ச்சி, தனலாபம்

10ல் இருக்கும் போது - கலகம், அவமானம்

11ல் இருக்கும் போது - தன லாபம்

12ல் இருக்கும் போது - தனலாபம்

சுக்கிரனின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிகக் குறைவானது!

In short, Venus is significator of love and all the pleasures of worldly life.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுக்கிரன் எப்போதும் நன்மைகளையே கொடுப்பார். சுக்கிரதிசை வந்தால்
வாழ்க்கையின் எல்லா உச்சிகளையும் தொட்டுவிடலாம் என்று சிலர்
நினைப்பதுண்டு. அதே போல சனீஷ்வரன் எப்போதும் கஷ்டங்களையே
கொடுப்பார். வாழ்க்கை சோதனையாக இருக்கும். சனி திசை வந்தால்
அவதிப்பட வேண்டும் என்றும் சிலர் நினத்துக் கொண்டிருப்பார்கள்
அதெல்லாம் உண்மையல்ல!

எந்தக் கிரகமும், முழுவதும் நன்மைகளையோ அல்லது முழுவதும்
தீமைகளையோ அளிக்காது.

ஒவ்வொரு கிரகமும், அதன் இருப்பிடம், சம்பந்தம் கொண்டுள்ள
மற்ற கிரகங்கள், பார்வை ஆகியவற்றைப் பொறுத்தே நன்மையையும்
தீமையையும் வழங்கும்

There is no fixed rules for awarding benefits by planets. That is the
main hurdle for the leaner to learn astrology.

சுக்கிரனைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது.

அடுத்த பதிவில் வேறு ஒரு கிரகத்தைக் கையில் எடுத்துத் துவைப்போம்

அதுவரை பொறுத்திருங்கள்

இந்தப் பதிவில் உங்களுக்கான பகுதிகளை மட்டும் அல்லது வரிகளை
மட்டும் படித்து விட்டு வந்து, "சார், அடுத்தபாடம் எப்போது?" என்று
யாரும் கேட்க வேண்டாம். 'செய்வன திருந்தச் செய்' என்பது முதுமொழி.
ஆகவே அனைவரும் பாடத்தை முழுமையாகப் படியுங்கள்.

அதுதான் நீங்கள் எனக்குத் தரும் 'முதல் மரியாதை'

(கவனிக்கவும். இது படத்தின் பெயரல்ல! என் மனதில் இருந்து வரும்
சத்தியமான வார்த்தை.)

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26.11.08

கோட்டையில்லை, கொடியுமில்லை, எப்பவும் ராஜா!

கோட்டையில்லை, கொடியுமில்லை, எப்பவும் ராஜா!

அடடா, யாரவர்? இசைஞானியா?

இல்லை அவர் இசைக்கு மட்டும்தான் ராஜா!
நான் சொல்ல வருகிறவர் சுகங்களுக்கு ராஜா!

உங்களுக்குத் தெரிந்திக்க வாய்ப்பில்லை. நோ சான்ஸ்!

ஆனால் அவரைப்பற்றி சொன்னால், உடனே அதுபோன்ற அம்சங்கள்
உடைய ஒருவரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

அவர்தான் மிஸ்டர்.சுகவாசி. (பெயரை மாற்றியிருக்கிறேன்)
அவர் எனக்குப் பரீட்சையமானவர். அதனால்தான் மாற்றம் அவசியமாகி
விட்டது. அவருக்கென்று ஒரு வேலையுமில்லை; ஒரு தொழிலுமில்லை!
அதனால் ஒரு தொல்லையுமில்லை. சுங்கவரி, சேவை வரி, விற்பனை வரி,
வருமான வரி என்று எந்த வரித்தொல்லைகளும் இல்லாதவர்.

கதைநடந்த காலம் பதினைந்தாண்டுகளுக்கு முந்தைய காலம்

சுறுசுறுப்பானவர். நல்ல தோற்றமுடையவர். யாரையும் தன்னுடைய
பேச்சுத் திறமையால் வளைத்துப் போடக்கூடியவர். இறங்கினால்,எடுத்த
காரியத்தைச் சாதிக்ககூடியவர்.

படிப்பெல்லாம் பள்ளி இறுதியாண்டுவரைதான். ஆனால் தமிழிலும்
ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடியவர். துணிச்சலாக, அதிரடியாகப்
பேசக்கூடியவர். இவைகள்தான் அவருடைய தகுதிகள்.

அப்போது அவருக்கு வயது நாற்பது.எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவர்.
இந்த எல்லாம் என்கின்ற பதத்தை மூன்று முறைகள் அழுத்திச் சொல்லிப்
படியுங்கள். அப்போதுதான் அதன் அர்த்தம் உங்களுக்கு முழுதாகப் பிடிபடும்.

அவருக்குக் கட்டிக்கொண்ட - கட்டுப்படுகின்ற (அதுதான் முக்கியம்)
மனைவியும், ஒரு மகனும் உண்டு. வீட்டைப் பற்றிக் கவலைப் படாதவர்.
சிறிய வீடு. ஆனாலும் சொந்தவீடு. வீட்டு வாடகை உபத்திரவம் இல்லாதது
அவருக்குப் ப்ளஸ் பாயிண்ட். ஒன்றாம் தேதியன்று, கையில் இருக்கும்
பணத்தில் ஐயாயிரம் ரூபாயையோ அல்லது ஆறாயிரம் ரூபாயையோ,
மனைவியின் கையில் கொடுத்துவிடுவார். அது வீட்டுச் செலவுகளுக்கு.
அந்தக் காலகட்டத்தில் அது போதுமான தொகை.

மற்றதை வீட்டு அம்மையார் பார்த்துக் கொள்வார்கள்.

காலையில் ஆறு மணிக்கு எழுந்தார் என்றால், காலைக்கடன்களை
முடித்துக் குளித்து எட்டு மணிக்குள், நெற்றியில் விபூதியும், சந்தனமும்,
சட்டையில் Jovan' செண்ட்டும் மணக்கத் தயாராகிவிடுவார். காலைச்
சிற்றுண்டியும் முடிந்திருக்கும்.

மல்லிகைப்பூப் போன்ற இட்டிலியும், நெய்யும், தேங்காய் சட்டினியும்
உடன் ஃபில்டர் காப்பியும் உள்ளே இறங்கி, உற்சாகத்தையும் கொடுத்து
விடும்

He is ready for that day jobs!

அவருக்குத்தான் வேலை இல்லை என்றீர்களே?

முதலாளி இருக்கும் வேலை அவருக்கு இல்லை என்றும், வாடிக்கையாளர்
இருக்கின்ற தொழிலும் அவருக்கு இல்லை என்று சொன்னேனே தவிர, வேலை
வெட்டி இல்லாத ஆசாமி என்றா சொன்னேன்?

கதையைப் படியுங்கள். அவருடைய மொத்த வாழ்க்கையும் சுவாரசியமானது

எட்டு மணிக்குள் அவரைத் தேடி ஆசாமிகள் வந்து விடுவார்கள்.

முதலில் வருகிறவனுக்குத்தான் முன் இடம்!

"என்ன கந்தசாமி?" வந்திருக்கும் கார் டிரைவரிடம் கேட்பார்.

"சின்னய்யா, உங்களைக்கூட்டிக் கொண்டு வரச்சொன்னார்"

"என்ன விஷயம் என்று சொன்னாரா? அவசரமாமா?"

"ஆமாம் அண்ணே! குனியமுத்தூரில் ஃபாக்டரி கட்டுவதற்காக ஒரு இடம்
பார்த்திருக்கிறார். அதை முடித்துக் கிரயம் செய்ய வேண்டுமாம். நீங்கள்
வந்தால்தான் முடியுமாம். அழைத்து வரச்சொன்னார்"

வேறு ஒருவன் வந்தால் அழைப்பு வேறுவிதமாக இருக்கும்.

"அண்ணே, பெரிய செட்டியார் உங்களை அழைத்துக் கொண்டு வரச்
சொன்னார்."

"என்னடா விஷயம்?"

"அவருடைய மகன் நேற்றுக் கிளப்பிற்குப் போய்விட்டுக் காரில் திரும்பி
வரும்போது, அவனாசி ரோட்டில் ஆக்சிடெண்ட். ஒரு ஆளை அடித்துப்
படுக்க வைத்து விட்டான். போலீஸ் கேசாகி விட்டது. நீங்கள் வந்தால்
தான் பிரச்சினை தீரும்"

உடனே கிளம்பிவிடுவார். போனால் எப்போது திரும்பி வருவார் என்று
தெரியாது. மதியம், மாலை, இரவு உணவெல்லாம் தடபுடலாய் போகின்ற
இடங்களில்! பத்து மணிக்குத் திரும்பிவந்தால் நல்லது. சில சமயம்
இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்.

அவருடைய தலை முடிகளை எண்ணினாலும் எண்ணலாம். அவருக்கு
இருக்கின்ற நட்பு வட்டத்தை என்ன முடியாது!

ஒரு தடவை, ஒரு நாள் பழகியவன், அவரை விட மாட்டான். அவருடைய
அருமை தெரிந்து அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு விடுவான்.

அதேபோல நமது நாயகனும் ஒரு நாள் பழக்க மென்றாலும் மறக்க
மாட்டார். கணினி மூளையில் பழகியவனின் பயோ டேட்டா பதிவாகிவிடும்

சிலசமயம், எவனுடவனாவது அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இருக்கும் போதே அல்லது ஒரு வங்கியில் பகுதி மேலாளருடன் பேசிவிட்டுத்
திரும்பிக் கொண்டிருக்கும்போது, அவரைத் தேடி, மோப்பம் பிடித்து அவருடைய
நெருங்கிய நண்பர்களில், மூவரோ அல்லது நால்வரோ, அங்கே வந்துவிடுவார்கள்.

"ஏய் அப்பனே, வண்டியில் ஏறு!" இது அவர்கள்.

"எங்கே போக வேண்டும் சொல்லுங்கள்" இது இவர்

"நீ முதலில் ஏறு, சொல்கிறோம்"

ஏறிக்கொள்வார். கார் காந்திபுரத்தில் இருந்து புறப்பட்டு, பன்னிரெண்டு கிலோ
மீட்டர்கள் தூரம் பயணித்து, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையைக் கடந்த
பிறகுதான் இவர் கேட்பார்"

"எங்கேடா போகிறோம்? திருப்பூருக்கா?"

"இல்லை, பெங்களூருக்கு!"

"அடப்பாவிகளா? நான் வீட்டில் சொல்ல வேண்டாமா?"

"என்னைக்கு உன்னை வீட்டில் தேடியிருக்கிறார்கள் - சொல்வதற்கு?"

"இல்லையில்லை, வெளியூர் செல்வதானால் நான் சொல்லிவிட்டுத்தான் வருவேன்"

"அதெல்லாம் நாங்கள் சொல்லிவிட்டோம். உன் ஒய்ப்தான் நீ வங்கிக்குச்
சென்றிருக்கும் விஷயத்தைச் சொன்னார்கள். இல்லையென்றால் நீ வங்கியில்
உட்கார்ந்து பிளேடு போட்டுக் கொண்டிருப்பது எங்களுக்கு எப்படித்
தெரியும்? உன்னை எப்படிக் கொத்திக் கொண்டு வந்திருக்க முடியும்?"

"சரி, சரி, எத்தனை நாள் பயணம்?"

"அதை இன்னும் முடிவுசெய்யவில்லை! உத்தேசமாகச் சொன்னால் நான்கு
நாட்கள் என்று வைத்துக்கொள்"

"நான்கு நாட்களா? மாற்று உடைகள் எதுவும் இல்லையே பாவிகளா?"

"எங்களுக்கு இருக்கிறது"

"உங்களை எவன் கேட்டான்? எனக்கு என்ன செய்வது?"

"போகிற இடத்தில் வழக்கம்போல ரெடிமேடாக வாங்கிக் கொள்வோம்!"

"சரி பெங்களூரில் ரூம் எல்லாம் போட்டுவிட்டீர்களா?"

"நீ இருக்கையில் அதெல்லாம் எதற்கு? உன்னைப் பார்த்தபிறகு எந்த
ஹோட்டல்காரனாவது அறை இல்லை என்று சொல்வானா?"

"பெங்களூரில் என்னடா வேலை?"

"நிஜலிங்கப்பாவைப் பார்த்துப் பேசி, லால் பார்க்கை விலைக்கு
வாங்க வேண்டும்?"

"ஏன் அல்சூர் ஏரியை வாங்குங்கள். அதில் உள்ள தண்ணீரை
வெளியேற்றிவிட்டு, மல்லய்யாவிடம் சொல்லி அதைப் பியரால்
நிரப்பி ஆட்டம் காட்டலாமே?"

"அதில் ஒரு ஆபத்து இருக்கிறது?"

"என்ன?"

"இங்கேயிருந்து போகிற தமிழன் எவனும் திரும்பி வரமாட்டான்"

"டேய் கருமம் பிடித்தவங்களா, என்ன வேலை என்று சொல்லித்
தொலைங்கடா"

அவருடைய பொறுமைச் சோதிக்காமல், அவசரமாகப் போகின்ற
வேலையைச் சொல்வார்கள். போகின்ற அந்த செயலுக்கு அவருடைய
உதவி தேவைப் பட்டாலும் அல்லது தேவைப்படாவிட்டாலும், அவரைக்
கூட்டிக்கொண்டு போவார்கள். ஒரு பாதுகாப்புக்காக, ஒரு கம்பெனிக்காக,
ஒரு பேச்சுத் துணைக்காக, அதைவிட ஒரு ஜாலிக்காக அவரைக்
கூட்டிக் கொண்டு போவார்கள்.

நம் நாயகருடைய பல தகுதிகளில் ஒன்று அற்புதமாகக் கார் ஓட்டுவார்
சொந்தமாக அவருக்குக் கார் கிடையாது என்றாலும், அவருடைய
நணபர்களின் கார் அத்தனையும் அவருடையதுதான். மாருதி ஜென்னில்
இருந்து, பென்ஸ் வரை அவர் ஓட்டியிருக்காத கார்களே கிடையாது.

அடுத்துவரும் நிறுத்ததில் அல்லது மோட்டலில் காரின் ஸ்டீரிங் வீல்
அவர் கைக்குப் போய்விடும்.

செல்லும் ஊரில் அவருக்கு, சோப்பிலிருந்து வான் ஹுஸேன் சட்டை
வரை அத்தனையையும் வேண்டிய அளவிற்கு வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்
அதோடு, அவருக்கு காப்பி சிகரெட்டிலிருந்து, பீட்டர் ஸ்காட் வரை ஒரு
செலவும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். அதோடு திரும்பி வந்துவுடன்
அவர் சொல்லிக் கொண்டு வீட்டில் இறங்கும்போது, பெரிய நோட்டுக்
கட்டில் ஒன்றையோ அல்லது இரண்டையோ அவர் பெட்டிக்குள் வைத்துக்
கொடுத்து விடுவார்கள்.

சிலர், தங்கள் வேலைகளுக்கு அவரை மட்டும் அனுப்பும்போது கையில்
வேண்டிய பணத்தையும், காரையும் கொடுத்துவிடுவார்கள்

வேலையை நேர்த்தியாக முடித்துக் கொடுப்பதில் அவருக்கு இணை அவரேதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே சொல்ல வந்தது. அந்த மனிதருக்கு வாழ்க்கையில் எல்லா
செளகரியங்களும், சுகங்களும் தேடி வந்து அனைத்துக் கொண்டன!

என்ன காரணம்?

அவர் ரிஷப லக்கினக்காரர். ரிஷப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே
ஜாலியானவர்கள். காரணம் அதன் அதிபதி. அதோடு நம் நாயகருக்கு
ரிஷப லக்கின நாயகன் பதினொன்றில். சுயவர்க்கத்தில் எட்டுப்பரல்களுடன்

அவருக்கு சொந்தத்தில் பெரிய அளவில் பணம் இல்லாவிட்டாலும்,
முறையான சம்பாத்தியம் துளிக்கூட இல்லாவிட்டாலும், அவரால் எப்படி
வாழ்க்கையின் அத்தனை சுகங்களையும் அனுபவிக்க முடிந்தது?

அதற்குக் காரணம் வலுவான சுக்கிரன்தான்.

அவரைப்போன்ற சுகவாசிகள் சின்ன லெவலிலோ அல்லது பெரிய லெவலிலோ
பலர் இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வாத்தியார் அவரைப் பற்றிய கதை எதற்கு?"

"அவரை மறந்து விடுங்கள். சுக்கிரனைப் பற்றி நினையுங்கள்"
======================================================
சுக்கிரனைப் பற்றிய தனிப் பதிவிற்கான முன்னோட்டம்தான் இது!

மற்ற விவரங்கள் அடுத்த பதிவில்!

(தொடரும்)
===================================================
இது இடைச் சேர்க்கை!

பின்னூட்டத்தில் பலர் எனக்கு 90 வயதில் சுக்கிரதிசை வரும்
என்றும் அல்லது வயதான காலத்தில் வரும் என்றும் குழப்பத்தில்
உள்ளார்கள்.

அதற்காக அவசரமாக இந்த தசா புத்தி அட்டவனையை இடைச்
சேர்க்கையாகக் கொடுத்திருக்கிறேன்

இதை முன்பே என்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறேன்

அது எந்தப் பதிவு என்று தேட நேரமில்லை.
கூடுதுறையாரும் தன் வகைப் படுத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறாரா
என்று தெரியவில்லை.

ஆகவே மீண்டும் ஒருமுறை அதைப் பதிவில் கொடுக்கின்றேன்

அதைப்பாருங்கள். 9 கிரகங்களின் திசைகளிலும், தசா நாதனுடன்
சேர்ந்து புத்தி நாதர்களும் அந்த தசை காலத்தைப் பங்கு போட்டுக்
கொண்டிருப்பார்கள்.

ஆகவே ஒன்றை மட்டும் தெளிவாக வைத்திருங்கள்.

ஒரு கிரகத்தின் தசை உங்களுக்கு வர சந்தர்ப்பம் இல்லை என்று
நினைக்காதீர்கள்.

புத்திநாதன் என்கின்ற போர்வையில் அவர் வருவார்.
நல்லவராக இருந்தால் கட்டித் தழுவி விட்டுப்போவார்.
தீயவராக இருந்தால் அடித்துக் கீழே தள்ளிவிட்டுப்போவார்.
மீண்டும் வேறு ஒரு நல்லவர் வந்து உங்களை எழுப்பி உட்கார
வைத்து ஒத்தடம் கொடுத்து ஆறுதல் சொல்வார்.

இது ஒவ்வொரு தசையிலும் நடக்கும்

சுக்கிரதிசையிலும் நடக்கும்
சனி திசையிலும் நடக்கும்
ராகு திசையிலும் நடக்கும்
மொத்தம் எல்லா தசைகளிலும் நடக்கும்
தழுவதுவதும், அடிவாங்குவதும் மாறி மாறி நடக்கும்
இரவு பகலைப்போல!

புரிந்ததா கண்மணிகளே?
========================================================================
ஒவ்வொரு கிரகமும் தசா புத்திகளைப் பங்கிட்டுக் கொள்ளும் நாட்களின் விவரம்:
எண்கள் அனைத்தும் நாட்களைக் குறிக்கின்றது!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

23.11.08

வாத்தியாரைத் துவைப்போம் வாருங்கள்!


தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள்.வித்தியாசமாக யோசிக்காதீர்கள்
வாத்தியாரைத் (என்னையல்ல) துவைக்கலாம் வாருங்கள் என்று நான்
சொல்லி அழைப்பது வேறு ஒரு வாத்தியாரைத் துவைத்துக் காயப்போட!

யார் அந்த வாத்தியார்? அவரைத் துவைப்பது எப்படி? என்பது பற்றி
இப்போது பார்ப்போம் வாருங்கள்!

இதற்கு முன் துவைப்பது எப்படி? என்று எழுதிய பதிவைப் படித்தவர்கள்
மட்டும் மேலே செல்லுங்கள். மற்றவர்கள் அந்தப் பதிவைப் படித்துவிட்டு
வாருங்கள். அதற்கான சுட்டி இங்கே உள்ளது!

கிரகங்களில் வாத்தியார் என்று சொல்லப்படுபவர் குரு பகவான்
அவருக்குத்தான் பிரஹஸ்பதி என்று பெயர். வாத்தியார் என்று பெயர்

குரு சாத்வீகமான கிரகம்.சுபக்கிரகம்.மனிதனுக்கு நல்ல வாய்ப்புக்களை
உருவாக்கிக்கொடுப்பவர். அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவர். இறையுணர்வு,
இறைமார்க்கம், தத்துவஞானம்,செல்வம்,(உங்கள் மொழியில் சொத்துக்கள்)
குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கான காரகன் (authority)அவர்தான்.

எந்த வீட்டில் அமர்ந்திருந்தாலும் அல்லது எந்த கிரகத்துடன் கூட்டணி
போட்டு அமர்ந்திருந்தாலும், நன்மையையே அளிக்கக்கூடியவர் குரு.

வாரநாட்களில் அவருடைய ஆதிக்கம் மிகுந்த நாள் வியாழக்கிழமை.
அவருக்கான நிறம் மஞ்சள். அவருக்கான திசை வடகிழக்கு. இந்திய
எண் சாஸ்திரப்படி அவருக்கான எண் மூன்று!

அறிவு, உண்மையுணர்வு, தர்மசிந்தனை, நல்லொழுக்கம் ஆகியவை ஒரு
ஜாதகனுக்கு இருக்கக் குருவே காரணம். நன்றி விசுவாசம் போன்ற
நல்லுணர்வுகள் ஒரு ஜாதகனுக்கு ஏற்படுவதற்கும் குருவே காரணம்.
அதேபோல் ஒரு பெண் அல்லது ஆண் நடத்தையில் (ஒழுக்கத்தில்)
மேன்மையுற்று இருப்பதற்கும் குருவே காரணம்.

தூரதேசப் பயணங்களுக்கும் குருவே காரணம்.

ஒருவனின் முன்வினைக் கர்மப்படிதான் குரு அவனுடைய ஜாதகத்தில்
வந்து அமர்வார். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும், நல்ல சேர்க்கை
அல்லது பார்வை பெற்றிருந்தாலும், அத்துடன் அஷ்டகவர்கத்தில்
அதிகப்பரல்களைப் பெற்றிருந்தாலும், அவனுடைய முன்வினைகளில்
குறைகள் ஏதும் இல்லை என்று அறிக!

****** ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குரு பகவான் முக்கியமானவர்.
அவர்தான் அந்தப் பெண்ணிற்கு வாழ்க்கையில் அவளுக்குக் கிடைக்க
வேண்டிய பாக்கியங்களை எல்லாம் 'ஜஸ்ட் லைக் தட்' என்று உரிய
நேரத்தில் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்.

பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன், குரு ஒன்பதாம் இடத்தில்
(பாக்கியஸ்தானத்தில்) இருந்தாலும் அதுவும் உச்சம் பெற்றோ அல்லது
அஷ்டகவக்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் பரல்களையும் பெற்று
ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தை
மேலும் பார்க்காமல் மூடிவைத்துவிடலாம். ஒரே வார்த்தையில்
சொன்னால் அதிர்ஷ்டமான பெண்.
அதற்கு மேல் வேறு என்ன வேண்டும்?

சரி, ஆண்களுக்கு என்ன சொல்வது?

அந்தமாதிரிப் பெண் கிடைத்தால் கேள்வி கேட்காமல், கண்ணைமூடிக்
கொண்டு அவளை மணந்து கொள்ளலாம்!

ஆண்களுக்கு லக்கினத்தில் குரு இருந்தால் போதும். அதிர்ஷ்டமான
ஜாதகன் அவன். அவனுடைய ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம்.
ஏனென்றால் the primary placement for Jupiter is the first house in a
horoscope!

அந்த மாதிரி ஜாதக அமைப்புள்ளவனைப் பெண்கள் ஏறெடுத்தும்
பார்க்காமல் திருமணம் செய்துகொள்ளலாம்.

Both are called blessed horoscopes!

சரி இதற்கு எதிர்மறையான ஜாதகங்கள் எவை?

அதாவது cursed horsocopes எனப்படுபவைகள் எவை?

அதை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும்.
ஆகவே பொறுத்திருங்கள். அதற்கென்று ஒரு கிரகம் உள்ளது
அந்தக் கிரகத்தை எழுதும்போது அதை அறியத்தருகிறேன்!
========================================================
அதீதமான ஆர்வம், திறமையுடையவர்கள், அமைதியான் பேர்வழிகள்,
மத குருமார்கள், உபன்யாசம் செய்பவர்கள், அரசியல் வாதிகள்,
அமைச்சர்கள், நீதிபதிகள் போன்றவர்கள் எல்லாம் குருவின் அருள்
பெற்றவர்கள். இல்லாவிட்டால் அவர்கள் அந்த நிலையில் இருக்க
முடியாது.

வேத நூல்கள் குருவை, பிரஹஸ்பதி என்று சொல்கின்றன. ஆசிரியன்
என்று சொல்கின்றன. உங்கள் மொழியில் சொன்னால் வாத்தியார் அவர்.
தேவகுரு என்கின்ற இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு.

நன்மைகளை அள்ளித்தரும் தன்மையுடையவர் என்பதால் கிரகங்களில்
அவர்தான் (நமக்கு) முதன்மையானவர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Jupiter is a karaka or indicator of fortune, wealth, fame, luck,
devotion and faith, spirituality, charity, morality, meditation, mantra,
children, magistrates, ministers, lawyers and leaders in government
and religion.

Jupiter represents sacred scripture, wisdom, benevolence and
philosophy.
Jupiter's most favored position is in the first.
He does well both in the Kendra's and Angles, and
the auspicious Trikonal Houses.
His nature is KAPHA, or watery.
His gemstone is Yellow Sapphire or Yellow Topaz
and his metal is Gold.
As a benefice planet he reaches full maturity the earliest of the
9 grahas at age 16.

Worship of BRIHASPATI or GURU (Jupiter) Devata results
in a cure from ailments affecting the stomach and helps one
toward off his/her sins, helps him/her in gaining strength, valor,
longevity etc. He grants the boon of father-hood to the childless,
good education (Vidya).

He is revered as the Guru of Devas, protector of the world and
is considered SRESHTA (matchless) among the wise.

Kind-hearted, he is considered the Loka Guru and dispenser of
justice and can be known only by a proper study of the Vedas.

Thursdays are considered to be the best day for the worship
of Jupiter.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குரு பகவானின் சொந்த வீடுகள் இரண்டு: தனுசு மற்றும் மீனம்
குரு பகவானின் உச்ச வீடு:கடகம்
குரு பகவானின் நீச வீடு: மகரம்
குரு பகவானின் நட்பு வீடுகள்: மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்
குரு பகவானின் சம வீடுகள்: கும்பம் மட்டுமே!
குரு பகவானின் பகை வீடுகள்: ரிஷபம், மிதுனம், துலாம்,

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் குருவிற்கு 100%
வலிமை இருக்கும்.

குருவுடன் சந்திரனும் சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம்
அல்லது ஏழாம் பார்வையாக சந்திரன் பார்த்தாலும், அல்லது
குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5ம் அல்லது 7ம் அல்லது
9ஆம் பார்வையாகச் சந்திரனைப் பார்த்தாலும் யோகம்தான்
அதற்குப் பெயர் கஜகேசரி யோகம்

(அவற்றிற்கான பலன்கள் யோகங்களைப் பற்றி நடத்தவுள்ள
பாடங்களில் பின்னால் வரும். அதற்கான சிலபஸ் இப்போது
இல்லை!)

சம வீட்டில் இருக்கும் குருவிற்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் குருவிற்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் குருவிற்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த குருவிற்குப் பலன் எதுவும் இல்லை என்று சொல்ல
முடியாது. இங்கேதான், இந்த விஷயத்தில்தான் குரு மற்ற கிரகங்களில்
இருந்து வேறு படுவார். நீசம் பெற்றாலும் அவர் நன்மையே செய்வார்.

எங்கே இருந்தாலும் நல்லவன் நல்லவன்தான்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
நம் தாய் எங்கேயிருந்தாலும் நம் தாய்தான் இல்லையா? அதுபோல!

உச்சமடைந்த குருவிற்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகளையெல்லாம் நான் தராசு வைத்து எடை போட்டுச்
சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!
===================================================
குரு பகவானின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:

0 பரல் இருந்தால்: உறவுகளை இழக்க நேரிடும்

1 பரல் இருந்தால்: உடற்கோளாறுகள், உடல் நலமின்மை

2 பரல்கள் இருந்தால்: எதிலும் பயஉணர்வு, உணர்ச்சி
வசப்படும் தன்மை

3 பரல்கள் இருந்தால்: காது சம்பந்தப்பட்ட நோய்கள்,
சக்தி வீணாகுதல், அலைச்சல்

4 பரல்கள் இருந்தால்: அதிகமான நன்மையும் இல்லை,
அதிகமான தீமையும் இல்லை

5 பரல்கள் இருந்தால்: எதிரிகளைத் துவசம்செய்யும் நிலை,
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி!

6 பரல்கள் இருந்தால்: சொத்து, சுகம், வண்டி வாகனம் என்று
சுகமான வாழ்க்கை!

7 பரல்கள் இருந்தால்: அதீதமான அதிர்ஷ்டம், மகிழ்ச்சி
உண்டாகும்

8 பரல்கள் இருந்தால்: செல்வாக்கு, புகழ், செல்வம்
எல்லாம் கிடைக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இருக்கும் இடத்தை வைத்துப்பலன்:

இந்த முறை கும்ப லக்கினத்தை வைத்து உங்களுக்கு விளக்கம்
சொல்கிறேன்.

கும்ப லக்கினம் எதற்கு ஐயா?

கும்பலக்கினம்தான் மென்மையான லக்கினம்.
சிம்ம லக்கினத்திற்கு நேர் எதிர் லக்கினம் அல்லவா?

கும்ப லக்கினம்தான் நாயகிகளின் லக்கினம். சிம்ம லக்கினம் ஹீரோ
லக்கினம் என்றால் கும்ப லக்கினம்தான் ஹீரோயின் லக்கினம்.

கும்ப லக்கினம்தான் நிறைவான லக்கினம். அதனால்தான் அதற்கு
ரிஷிகள் நிறைகுடத்தை' அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.

கும்பலக்கினப் பெண் கிடைத்தால் யோசிக்காமல் திருமணம் செய்து
கொள்ளுங்கள்

கும்ப லக்கினப் பெண்கள் என்ன செய்வது?

அவர்கள் சிம்ம லக்கினத்தைத் தேடிப்பிடிக்க வேண்டியதுதான்.
ஹீரோயின் ஹீரோவைத்தானே தேட வேண்டும்?

கும்பலக்கின ஆடவர்கள் நிறைவான குணங்களை உடையவர்கள்
அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் மகிழ்ச்சி
கொள்வாள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கும்பலக்கினத்தை குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்து பார்த்தால்
ஜாதகன் லக்கியானவன் (அதிர்ஷ்டமானவன்) அல்லது லக்கியானவள்
அங்கே அமரும் குரு கும்பலக்கினத்தின் இரண்டாம் வீட்டின் பலனையும்,
பதினொன்றாம் வீட்டின் பலனையும் ஜாதகனுக்கு அள்ளி வழங்குவான்.
ஜாதகனுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், கையில் காசு தங்கும்.
செல்வம் சேரும். செய்யும் வேலைகளில் நல்ல பலன் இருக்கும்

கும்பலக்கினக்காரர்களுக்கு குரு 6, 8, 12 ஆம் வீடுகளில் சென்று
அமரக்கூடாது!

அமர்ந்தால் என்ன ஆகும்?

கும்பலக்கினத்திற்கு ஆறில் குரு அமர்ந்தால் அது கடக வீடு,
குருபகவான் அங்கே உச்சம். இருந்தாலும் அது ஆறாம் வீடு.
ஆகையால் அவரால் உரிய பலனை உரிய காலத்தில், உரிய
அளவில் தர இயலாது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை
ஜாதகனுக்கு ஏற்படும்.

கும்பலக்கினத்திற்கு எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீட்டில் அமரும்
குருபகவானால் அதிகப் பயன் இருக்காது. இரண்டும் மறைவிடங்கள்

கும்பலக்கினத்திற்கு 4ஆம் இடமும், 9ஆம் இடமும் முக்கியமான
இடங்கள். 4ஆம் வீடு சுகஸ்தானம், 9ஆம் வீடு பாக்கியஸ்தனம்.
இரண்டு இடங்களுமே சுக்கிரனின் வீடுகள். அங்கே சென்று குரு
அமர்ந்திருந்தால் - அவருக்கு அது பகை வீடுகள். ஜாதகனுக்கு
குருவினால் கிடைக்கும் பலன்கள் குறைந்துவிடும். அப்படி அமரும்
போது கும்பலக்கினக்காரர்களுக்கு எந்த இரண்டு வீடுகளின் பலன்
கள் குறையும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

கும்ப லக்கினத்திற்கு 3ஆம் வீடும், 10ஆம் வீடும் குருவிற்கு
நட்பு வீடுகள். அங்கே அமரும் குருவால் ஜாதகன் நற்பயன்களைப்
பெறுவான். 3ஆம் வீடு தைரியம், மற்றும் சகோதரன் சகோதரிகளுக்கான
இடம். பத்தாம் இடம் வேலை, மற்றும் தொழிலுக்கான இடம். அவைகள்
குருவால் சிறப்புறும்

கும்ப லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு மிதுனம். குருவிற்கு அது பகை வீடு
அங்கே குரு அமர்ந்தால் ஜாதகனுக்கு ஐந்தாம் வீட்டின் அமர்ந்த
குருவால் அதிகப் பலன்கள் கிடைக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குருவைப் பற்றிய மேலதிக விவரம். மொழிபெயர்த்து, அதன் பொருளைச்
சிதைக்காமல் அப்படியே கொடுத்துள்ளேன். எளிய ஆங்கிலத்தில்தான்
உள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தனித் தமிழ் ஆர்வலர்கள்.
அதைப் படிக்க வேண்டாம்! அவைகள் உபரித் தகவல்கள்தான்.

குருபகவான் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:

In the first house.: Magnetic personality, good grammarian, majestic
appearance, highly educated, many children, learned, dexterous,
long-lived, respected by rulers, philologist political success, sagacious,
stout body, able, influential leader.

Second house.: Wealthy, intelligent, dignified, attractive, happy, fluent
speaker, aristocratic, tasteful, winning manners, accumulated fortune,
witty, good wife and family, eloquent, humorous, and dexterous.

Third house.: Famous, many brothers, ancestors, devoted to the family,
miserly, obliging, polite, unscrupulous, good agriculturist, thrifty, good
success, energetic, bold, taste for fine arts and literature, lived by
relatives.

Fourth house.: Good conveyances, educated, happy, intelligent, wealthy,
founder of charitable institutions, comfortable, good inheritance,
good mother, well read, contented life.

Fifth house.: Broad eyes, handsome, states manly ability good insight,
high position, intelligent, skilful in trade, obedient children, pure-hearted,
a leader.

Sixth house.: Obscure, unlucky, troubled, many cousins and grandsons,
dyspeptic, much jocularity, witty, unsuccessful, intelligent, foeless.

Seventh house.: Educated, proud, good wife and gains through her,
diplomatic ability, speculative mind, very sensitive, success in agriculture,
virtuous wife, pilgrimage to distant places.

Eighth house.: Unhappy, earnings by undignified means, obscure, long
life, mean, degraded, thrown with widows, colic pains, pretending
to be charitable, dirty habits.

Ninth house.: Charitable, many children, devoted, religious, merciful,
pure, ceremonial-minded, humanitarian principles, principled, conservative,
generous, long-lived father, benevolent, God-fearing, highly cultured,
famous, high position.

Tenth house.: Virtuous, learned, clever in acquisition of wealth,
conveyances, children, determined, highly principled, accumulated
wealth, founder of institutions, good agriculturist, non-violent,
ambitious, scrupulous.

Eleventh house.: Lover of music, very wealthy, states manly ability,
good deeds, accumulated funds, God-fearing, charitable, somewhat
dependent, influential, many friends, philanthropic.

Twelfth house.: Sadistic, poor, few children, unsteady character,
unlucky, life lascivious later life inclined to asceticism, artistic taste,
pious in after-life.

மேலே உள்ள பலன்கள் பொதுப்பலன்கள்தான். மற்ற கிரகங்களின்
சேர்க்கை ,பார்வை, அமர்ந்த பாவாதிபதியின் நிலைமை, லக்கினாதி
பதியின் நிலமை ஆகியவற்றை வைத்து மாறக்கூடியவை.

ஆகவே அலசும் போதும் அலசிப் பிழியும் போதும் இன்னும் பத்து
வாளி தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது!:-))))
=================
கோச்சாரத்தில் குருவின் பலன்:

வடமொழியில் கோ என்றால் கிரகம், சாரம் என்றால் அசைதல்.
கிரகங்கள் இடம் விட்டு இடம் அசைந்து போவதால் ஏற்படக்கூடிய
பலன்களே கோச்சாரம் எனப்படும்

கோச்சாரத்தில் 30 பரல்களுக்கு மேல் இருக்கும் வீடுகளில் பயணிக்கும்
காலங்களில் குருபகவான் நன்மையான பலன்களை மட்டுமே தருவார்.

குரு ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டுகாலம் தங்கிவிட்டுச்செல்வார்

தற்சமயம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான். வரும்
டிஸம்பர் மாதம் 6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மகரராசிக்குக்
குடி பெயருகிறார். அதாவது தன்னுடைய பெட்டி, படுக்கைகளை
எல்லாம் சுருட்டிக் கொண்டு அங்கே போகிறார். ஒரு ஆண்டுகாலம்
அங்கே இருப்பார்.
.........................................................................
குருவின் சஞ்சார பலன்கள்!
ஏழு இடங்களில் கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்காது
அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

முதல் வீட்டில்:
சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம் (unfavourable circumstances.)
நிலைதடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள்
உள்ள காலம் அந்த ஒராண்டு காலம்.

மூன்றாம் வீட்டில்: மனம், மற்றும் உடல் நலக் குறைவுகள், பதவி நீக்கம்
அல்லது பதவி மாற்றம். துன்பங்கள்

நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள்.சுகமின்மை!

ஆறாம் வீட்டில்: சுகக்குறைவுகள்

எட்டாம் வீட்டில்: துக்கம். மரணத்திற்குச் சமமான கஷ்டங்கள்

பத்தாம் வீட்டில்: பதவி துறத்தல் அல்லது பதவியில் இடம், ஊர் மாற்றம்
பண நஷ்டங்கள்.

பன்னிரெண்டாம் வீட்டில்: துக்கம், தூர தேசம் போய் வருதல் அல்லது
தொலைவான இடம் சென்று வசித்தல், தனவிரையம். நிலைமாற்றம்
போன்றவை இருக்கும் அந்த ஓராண்டு காலத்தில்
.............................................
ஐந்து இடங்களில், கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்கும்
அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

இரண்டாம் வீட்டில்: பணவரவுகள்.

ஐந்தாம் வீட்டில்: பண லாபங்கள், புத்திரபாக்கியம், புத்திர லாபம்,
பெண்சுகம்.

ஏழாம் வீட்டில்: மதிப்பு மரியாதை, செல்வாக்கு கிடைக்கும் காலம்
பணவரவுகள் அதிகரிக்கும் காலம்

ஒன்பதாம் வீட்டில்: மனைவி மக்கள் சுகம், தனலாபம், எடுத்துச்
செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும் காலம்

பதினொன்றாம் வீட்டில்: மகிழ்ச்சியான காலம். நினைத்தது நிறை
வேறும் அந்த ஓராண்டு சஞ்சாரத்தில்!

இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள்
நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில்
குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான்
பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள்
இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய chartல்
உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.

*******பொதுவாக, குரு, 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம்
மற்றும் பதினோராம் இடம் ஆகிய இடங்களில். சஞ்சாரம் செய்யும்
காலங்களில் திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் திருமணத்தை
நடத்தி வைப்பார். குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்குக்
குழந்தையைத் தருவார். இடம், வீடு வாங்கக் காத்திருந்தவர்களுக்கு
அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்.

குருவால் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், வியாழக்
கிழமையன்று வீட்டில் விளக்கேற்றி அவரை வழிபடுதல் நன்மை
பயக்கும்!

எப்படிப் பயக்கும்?

வழிபட்டுப்பாருங்கள் தெரியும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து எந்த கிரகத்தைத் துவைக்க உள்ளோம்?

அந்தக் கிரகத்தின் தன்மையையை நினைத்தால் துவைக்க மனம் வராது!

யார் அவர்?

மெல்லிய உணர்வுகளுக்கு, முக்கியமாக கிறங்க வைக்கும், மயங்க
வைக்கும் காதல் உணர்வுகளுக்குச் சொந்தக்காரர் அவர்.

எந்தத் தோற்றமுடைய பெண்ணையும் மனதிற்குப் பிடித்துவிட்டால்
அழகாக்கிக் காட்டுபவர் அவர்தான். விழிகள் படபடக்க, கன்னம்
சிவக்கப் பேச வைப்பவர் அவர்தான்

''நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூல் கொண்டதோ?

பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு"

"லாலலா லாலலா லல்ல லா........!"

என்று பெண்னைப் பாட வைப்பவர் அவர்தான்

பாடத்தெரியாவிட்டாலும் மனதிற்குள் பாட வைப்பவர் அவர்தான்
சிறகில்லாவிட்டலும் மனதிற்குள் சிறகடித்துப் பறக்க வைப்பவர்
அவர்தான்.

பதிலுக்கு ஆணை இப்படிப் பாட வைப்பார் அவர்:

"உன்னை விட்டு உடல் மீளவில்லை
என் கால்கள் வேர் கொண்டதோ?

யுகம் யுகமாய் நான் எரிந்துவிட்டேன்
பனித்துளியே என்னை அணைத்துவிடு!"

யார் அவர் என்று தெரிகிறதா? தெரிந்தால் வைத்துக் கொள்ளுங்கள்
சஸ்பென்சை போட்டு உடைத்து விடாதீர்கள்
===============================================
என்ன வாத்தியார், உங்கள் வயதிற்கு இப்படியெல்லாம் வர்ணித்துக்
காதல் உணர்வுகளை எழுதலாமா? என்று கேட்காதீர்கள்!

உங்களுக்குப் புரிவதற்குத்தான், பிடிபடுவதற்குத்தான் அப்படி
எழுதியுள்ளேன்.

என்னுடைய வயதிற்கு, என்னுடைய அனுபவத்திற்கு எழுதுவதற்கென்றே
ஒரு கிரகத்தைப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறேன்.

அவர் பெயர் சனீஸ்வரன்.

அவரைப் பற்றி எழுதும்போது என்னுடைய கைவரிசையைக்
காட்டுகிறேன். என்னுடைய மொழியில் அசத்தலாக எழுதுகிறேன்
இந்த Topic வரிசையில் அவரைப் பற்றியதுதான் நிறைவுப் பதிவு.
சற்றுப் பொறுத்திருங்கள்!
============================================
அடுத்த பதிவில் சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்

பின் குறிப்பு:
ஸ்கிரீன் சைஸில் மொத்தம் 16 பக்கங்கள் தட்டச்சி பதிவிட்டிருக்கிறேன்
உங்களுக்கான பகுதியை மட்டும் பதிவில் படிக்காமல் எல்லா வரிகளையும்
படியுங்கள். படித்து மனதில் ஏற்றுங்கள்.

உடனே வெளிவந்து அடுத்த பாடம் எப்போது சார் என்று கேட்க
வேண்டாம். நீங்கள் நன்றாகப் படித்ததும், வகுப்பறைக் கண்மணிகள்
அனைவரும் படித்து முடித்ததும் தெரிந்தால், நானே அடுத்த பாடத்தை
வலயேற்றிவிடுவேன்.

அது எனக்கு எப்படித் தெரியுமா?

தெரியும்! நன்றாகத் தெரியும்!

தெரியாவிட்டால் நான் எப்படி வாத்தியார் வேலை பார்க்க முடியும்?
வாழ்க வளமுடன்!

22.11.08

மனதுக்கொரு மருந்து

"உடம்பிற்கு மட்டுதானே மருந்துகள் உள்ளன! மனதிற்கு ஏது மருந்து?"
என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.

இளவட்டங்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய மனதிற்கான மருந்து ஒன்று
இருக்கிறது. வகுப்பறைப் பதிவில் அதை விவரமாக எழுத முடியாது.

தமிழகமெங்கும் அந்த மருந்து கிடைக்கும் கடைகளின் பெயரை மட்டும்
சொல்கிறேன். புரிந்து கொள்ளுங்கள். ஆளை வளத்துப்போடுகின்ற,
பழகிவிட்டால் இறுதியில் சாகடிக்கக்கூடிய மருந்து கிடைக்கும் இடத்தின்
பெயர். டா' வில் ஆரம்பிக்கும் க்' கில் முடியும்.

புரிகிறதா?

ஆனால் மனதிற்கு உரிய உண்மையான மருந்தை, அதுவும் செலவில்லாத
மருந்தைப் பற்றி இன்று அறியத்தருகிறேன்
=========================================================

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்

கோளறு திருப்பதிகம்:
பாடலைப் பாடிய ஸ்தலம்: மறைக்காட்டுநாதர் கோவில்,
திருமறைக்காடு (வேதாரண்யம்)

உலக வாழ்க்கையில், மக்கட்கு இறைவன் ஆணைப்படி, நன்மை
தீமைகளைத் தருவன, ஞாயிறு திங்கள் முதலான கோள்கள்
(நவக் கிரகங்கள்). சமண நெறியினின்று சைவசமயத்தைக்காக்கத்
திருமறைக் காட்டிலிருந்து மதுரை செல்ல முற்பட்ட ஞானசம்பந்த
ரிடம், அப்பர் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை,
சமணர்களோ வஞ்சகர்கள், காலந் தாழ்த்துப் புறப்படலாம், எனக்
கனிவோடு தெரிவித்தார். அப்போது ஞானசம்பந்தர், அடியார்களுக்கு
இடர்வாரா என உரைத்தருளும் இத்திருப்பதிகம், சிறந்த கவச
மந்திரமாக விளங்குகிறது.

அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்!
============================================================

அதெப்படி வாத்தியார் பாட்டைத் தினமும் ஒருமுறை படிப்பதால்
மட்டும் நன்மை வந்துவிடுமா? என்று கேட்காதீர்கள். எல்லாமே நம்பிக்கையின்
அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது!

எல்லாம் நடக்கும்!

இரவில் படுப்பவன், நாளைக் காலையில் எழுவோம் என்று நம்பிக்கையில்தான்
படுக்கிறான்.

விமானத்தில் பயணிப்பவன், போய்ச்சேருவோம் என்கின்ற நம்பிக்கையில்தான்
பயணிக்கிறான்

மருத்துவர் எழுதிக்கொடுக்கும் சீட்டுப்படி மாத்திரைகளை விழுங்கும்போது,
நமக்கு மருத்துவர் கொடுத்துள்ள மருந்து நோயைத் தீர்க்கும் என்று நம்பிக்கை
யோடு மாத்திரைகளை விழுங்கினால் நோய் நிச்சயம் குணமாகும்.
மனதும் உடம்பும் ஒத்துழைக்கும்

மருந்து தயாரித்தளிக்கும் கம்பெனிகளையோ அல்லது சீட்டு எழுதிக்கொடுத்த
மருத்துவரையோ திட்டிக் கொண்டே மருந்தைச் சாப்பிட்டால் சீக்கிரம்
குணமாகாது

ஆகவே நம்பிக்கையோடு தினமும் படியுங்கள். உய்வு கிடைக்கும். அல்லது
மன உறுதி கிடைக்கும்

you will get the standing power to face any crisis....including the present
global financial crisis:-))))))))

உடலுக்கு மருந்தை மருத்துவர் தருவார்.

மனதிற்கு ஒரு மருந்தை ஞானிகளால்தான் தரமுடியும்

ஞானசம்பந்தர் தெய்வ அருள் பெற்ற ஞானி. அவர் தந்த ஊக்க மருந்தை
தினமும் படித்துப் பயன் பெறுங்கள்!
=======================================================

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழுபதி னெட்டோடு ஆறும் உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

மதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

வாள்வரி அதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவை யோடுகொலை யானை கேழல் கொடுநா கமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

செப்பிள முலைநன் மங்கையொரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடு முடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடு மிடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

பலபல வேட மாகும் பரன்நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடு எருக்கும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

தேனமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல் துன்னிவளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

========================================================
திருஞானசம்பந்தரின் பெருமை; வரலாறு கூறும் உண்மை!

வெப்பு நோய் தவிர்த்தல்:

ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன்
அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன்
ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப்
பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் `நுமது ஊர் எது`
எனக் கேட்கப் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு
சம்பந்தரை நோக்கி `உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள்`
எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை
நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி
`மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த
பிறகு வாது செய்யலாம்` என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப்
பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா;
ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம்` என்றார். சமணர்கள்
மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்து
கிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய்
மேலும் கூடியது. ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம்
பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில்
நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப்
பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான்.
ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய்
தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து
`யான் உய்ந்தேன்` என்று போற்றினான்.

அனல் வாதம்:

பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க
வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம்
என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் வாய்மையைக்
கூறுங்கள்` என்றார். சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட
பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு
எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்`
என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம்
அமைக்கக் கட்டளையிட்டான்.

ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச்
செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். `போகமார்த்த பூண்முலையாள்`
என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர்
நள்ளாற்றிறைவனைப் போற்றி அவ் ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம்
அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வள ரொளி` என்றதொரு
திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில்
எரியாது பச்சென்றிருந்தது.சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப்
பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து
சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான்
இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும்
பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்
பெறுவதாயிற்று.

புனல்வாதம்:

சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை
நோக்கி `ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே
முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள்
எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச்
செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்`
என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்
களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில்
தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை
செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான்.

ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை
அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும்
`அஸ்தி நாஸ்தி` என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி
ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே
விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய
உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர்,
திருப்பாசுரம் எனப்படும் `வாழ்க அந்தணர்` என்னும் திருப்பதிகத்தை
அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை
ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக்
கிழித்து எதிர் ஏறிச் சென்றது.

அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர்
அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன்
ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து
சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வன்னியும்
மத்தமும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ் வேடு
வைகையின் வடகரையிலமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று
நின்றது. ஏடு நின்ற கோயில் ஏடகம் எனப் பெற்றது. குலச் சிறையார்
அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார்.

அனைவரும் கண்டு அதிசயித்து மகிழ்ந்தனர்.

சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். ஞானசம்பந்தர்
பாண்டியமன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று
`வீடலால வாயிலாய்` என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம்
திருமடத்துக்கு எழுந்தருளினார்.

மேலும் படிக்க விரும்புவோர்க்கான சுட்டி
வாழ்க வளமுடன்!

20.11.08

நவகோள்கள் மகிழ்ந்து நன்மை அளிக்கும் பாடல்!

நவகோள்கள் மகிழ்ந்து நன்மை அளிக்கும் பாடல்!

"அடடா அப்படியா? சீக்கிரம் பாடலைச் சொல்லுங்கள் வாத்தியார்"
என்று நீங்கள் அனைவரும் கேட்பீர்களா என்று தெரியா விட்டாலும்,
ஒரு சிலராவது விரும்பிப் படித்துப் பயன் அடைவீர்கள் என்கின்ற
நம்பிக்கையில் பாட்டை இன்று பதிவு செய்கிறேன்.

தினமும் ஒருமுறை படித்துப் பயனடையுங்கள்!
=============================================

நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் பாடல் இதோ:

கந்தர் சஷ்டி கவசம்

காப்பு
நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஸ்டி கவசந் தனை.

குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி

நூல்
நிலை மண்டில ஆசிரியப்பா

சஸ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண் கிணி யாட
மையல் நடஞ்செயும் மயில் வாகனனார்

கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து
வர வர வேலா யுதனார் வருக !
வருக! வருக! மயிலோன் வருக!
இந்திரன் முதலா எண்திசை போற்ற,
மந்திர வடிவேல் வருக! வருக!

வாசவன் மருகா! வருக! வருக!
நேச குறமகள் நினைவோன்! வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!
நீறு இடும் வேலவன் நித்தம் வருக!
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

சரஹண பவனார் சடுதியில் வருக!
ரஹண பவச, ரரரர ரரர
ரிஹண பவச,ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹ,வீரா நமோ நம!
நிபவ சரஹண நிற நிற நிர்றென

வசர ஹணப வருக வருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!
என்னை ஆளும் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்து என்னை காக்க வேலோன் வருக !

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்,
உய்யொளி சௌவும், உயர் ஐயுங் கிலியும்,
கிலியுஞ் சௌவும், கிளரொளி ஐயும்
நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் ரீயும் தனி ஓளி யொவ்வும்

குண்டலியாம் சிவகுகன் தினம் வருக !
ஆறு முகமும், அணிமுடி ஆறும்
நிறு இடு நெற்றியும். நீண்ட புருவமும்,
பன்னிரு கண்ணும், பவளச் செவ்வாயும்,
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்,

ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்
பல்பூஷணமும், பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும், முத்து அணி மார்பும்

செப்பு அழகு உடைய திருவயிறு உந்தியும்,
துவண்டா முருங்கில் சுடரொளிப் பட்டும்,
நவரத்னம் பதித்த நல்சீ ராவும்,
இருதொடை அழகும், இணம் முழந் தாளும்,
திருவடி யதனில் சிலம் பொலி முழங்க

செககண செககண செககண செககண
மொகமொக மொகமொக மொகமொக மொககென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
ரரரர ரரரர,ரரரர ரரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி,ரிரிரி
டுடுடுடு டுடுடுடு,டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு, டங்கு டிங்குகு
விந்து விந்து, மயிலோன் விந்து
முந்து முந்து,முருகவேள் முந்து

என்றனை ஆளும் ஏரகச் செல்வ !
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று,
உந்திரு வடியை உருதியென்று எண்ணும்

எந்தலை வைத்து உன் இணையடி காக்க!
என் உயிர்க்கு இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப் பெருவெல் காக்க!
முப்பத்து இருபல் முனைவேல் காக்க!

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க!
மார்பை இரத்ந வடிவேல் காக்க!
சேரிள முலைமார் திருவேல் காக்க!

வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழு பதினாறும் பருவேல் காக்க!
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
நாண் ஆம் கயிற்றை நவ்வேல் காக்க!
ஆண் பெண்குறிகளை அயில்வேல் காக்க!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!

பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைகால், முழந்தாள் கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
முங்கை இரண்டும் முரண்வேல் காக்க!

பிங்கை இரண்டும் பின்னவள் காக்க!
நாவில், சரஸ்வதி நல்துணை யாக,
நாபிக் கமலம், நவ்வேல் காக்க!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து, கனகவேல் காக்க!
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க!
அரை இருள் தன்னில் அனையவேல் காக்க!
ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க!

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க!
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட,

பில்லி சூனியம் பெரும்பகை அகல,
வல்ல பூதம், வலாஷ்டிகப் பேய்கள்,
அல்லல் படுதும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளை பேய்களும்,

பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும், இருட்டிலும், எதிர்ப்படும் அண்ணரும்,
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்,

விட்டாங் காரரும், மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும், சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து μடிட,
ஆனை அடியினில், அரும்பா வைகளும்
பூனை மயிரும், பிள்ளைகல் என்பும்,

நகமும், மயிரும், நீள் முடி மண்டையும்
பாவைகள் உடனே, பலகல சத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்,
ஒட்டிய செருக்கும் ஒட்டியப் பாவையும்,
காசும், பணமும், காவுடன் சோறும்
,
μதும் அஞ்சனமும், ஒரு வழிப் போக்கும்,
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட,
மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட,
கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட,
ஆஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட,

வாய்விட்டு அலறி, மதிகெட்டு μட,
படியினில் முட்டப், பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு, கால்கை முறியக்
கட்டு கட்டு, கதறிடக் கட்டு!

முட்டு முட்டு, முழிகள் பிதுங்கிட;
செக்கு செக்கு செதில் செதிலாக;
சொக்குச் சொக்கு; சூர்ப்பகைச் சொக்கு;
குத்துக் குத்து கூர்வடி வேலால்;
பற்றுப் பற்று பகலவன் தணல் ஏரி;

தணல் ஏரி தணல் ஏரி, தணல் அது ஆக;
விடுவிடு வேலை, வெருண்டது ஒட;
புலியும், நரியும், புன்னரி நாயும்
எலியும், கரடியும், இனித்தொடர்ந்து ஒடத்,
தேளும், பாம்பும், செய்யான் பூரான்,

கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க,
ஒளிப்பும் சுளுக்கும், ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சுலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல் விப்புருதி
பகக்ப் பிளவை, படர் தொடை வாழை,
கடுவன், படுவன், கைதாள் சிலந்தி,
பற்குத்து, அரணை, பரு அரையாப்பும்,
எல்லாப் பிணியும், ஏன்றனை கண்டல்

நில்லாது μட, நீ எனக்கு அருள்வாய்!
ஈரேழ் உலகமும், எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,
மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,
உன்னைத் துதிக்க, உன் திருநாமம்

சரஹண பவனே! சையொளி பவனே!
திரிபுர பவனே! திகழொளி பவனே!
பரிபுர பவனே! பவன் μழி பவனே!
அரிதிரு மருகா! அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!

கந்தா! குகனே! கதிர் வேளவனே!
கார்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை,
இடும்பனை அழித்த இனியவேள் முருகா
தணிகாசலனே! சங்கரன் புதல்வா!
கதிர் காமத் உறை கதிர்வேள் முருகா,

பழநி பதிவாழ் பால குமாரா!
அவினனகுடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மா மலையுறூம் செங்கல்வ ராயா!
சமரா புரிவாழ் சண்முகத்து அரசே!
காரார் குழலாள் கலைமகள், நன்றாய்

என்நா இருக்க, யான் உனைப் பாட,
எனைத் தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன், பரவசம் ஆக;
ஆடினேன் நாடினேன்; அவினேன் பூதியை
நேசமுடம் யான் நெற்றியில் அணியப்,

பாச வினைகள் பற்றது நீங்கி,
உன்பதம் பெறவே, உன் அருள் ஆக
அன்புடன் இரட்சி; அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக, வேலா யுதனார்
சித்திபெற்று, அடியேன் சிறப்புடன் வாழ்க!

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க!
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்!

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க,
எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்,
எத்தனை அடியென் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன் கடன்:
பெற்றவள் குறமகள், பெற்றவளாமே!

பிள்ளை யென்று, அன்பாய்ப் பிரியம் அளித்து,
மைந்தன் என்மீது, உன் மனம்மகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்ற அடியார் தழைத்திட அருள்செய்!
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயேன் பகர்ந்ததைக்

கலையில் மாலையில் கருத்துடன், நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி,
நேசமுடன் ஒரு நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்,

ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு,
ஓதியே செபித்து உகந்து நீறு அணிய,
அஷ்டதிக்கும் உள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்;
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்;

நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்;
நவமதன் எனவும் நல் எழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்;
கந்தர்கை வேலாம் கவசத்து அடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்;

விழியால் காண வெருண்டிடும் பேய்கள்;
பொல்லாதவரை பொடிப் பொடி யாக்கும்;
நல்லோர் நினைவில் நடனம் புரியும்;
சர்வ சத்துரு சங்கா ரத்து அடி
அறிந்து, எனது உள்ளம், அஷ்ட லட்சுமிகளில்

வீர லட்சுமிக்கு விருந்து உணவு ஆகச்
சூர பத்மாவைத் துணித்தகை யதனால்,
இருபத் தேழ்வர்க்கும்,உவந்து அமுது அளிந்த
குருபரன், பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!

எனைத் தடுத்து ஆட்கொள, என்றனது உள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே, இடும்பா போற்றி!
கட்மபா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கி¡¢ கனக சபைக்கும் ஓர் போற்றி!
மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்;

சரணம் சரணம் சரஹண பவஓம்,
சரணம் சரணம் சண்முகா சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

19.11.08

துவைத்துக் காயப்போடுவது எப்படி? பகுதி 1

உறவுப் பெண்மணி ஒருவர் தன்னுடைய மூன்று வயதுக் குழந்தையை
அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு, வந்திருந்தார், அந்தக் குழந்தை
துறுதுறுவென்று தன்னுடைய விழிகளை உருட்டியவாறு, அனைத்தையும்
பார்த்தவாறு தன் அன்னையின் அருகில் அமர்ந்திருந்தது. அமெரிக்காவில்
இருந்து விடுப்பில் வந்திருந்தார்கள் அவர்கள் .

அப்போது எங்கள் வீட்டுப் பணிப்பெண், வெளியில் இருக்கும் கல்லில்
துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார். 'டப், டப்' என்ற சத்தம்
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

எங்களுடைய உரையாடலில் குறுக்கிட்ட அக்குழந்தை கேட்டது.

"மம்மி என்ன சத்த்த்தம்?"

உடனே அதன் அன்னை, அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய்
அந்தத் துவைக்கும் காட்சியைக் காட்டி, அந்தக் குழந்தைக்கு விளக்கம்
சொல்லிவிட்டுத் திரும்பி வந்து அமர்ந்து கொண்டு பேசத்துவங்கினார்.

"அங்கே இதை அவள் பார்த்ததில்லை, ஆதாலால் வியப்புடன்
பார்க்கின்றாள்" என்றும் சொன்னார்.

ஆமாம், அமெரிக்காவில் குடியிருப்புக்களில் எல்லாம் பொது வாஷிங்
மெஷின் அல்லவா இருக்கிறது. கல்லில் அடித்துத் துவைக்கும் காட்சி
எல்லாம் அங்கே எப்படிக் காணக் கிடைக்கும்?

உள்ளே வந்த குழந்தை அம்மாவின் சூரிதார், மேல் துணியொன்றைத்
தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டு, டப், டப் என்ற சப்தமிட்டவாறு,
தரையில் அடித்து விளையாட ஆரம்பித்துவிட்டது.

இது அமெரிக்கா என்று இல்லை, இப்போது நம் நாட்டிலும், பெரிய
நகரங்களில், பல வீடுகளில் இப்போது காணக் கிடைக்காத காட்சி.
காரணம் மனிதனோடு சாதனங்களும் இயந்திரமயமாகி விட்டன!.

கொடி அடுப்பு (விறகு அடுப்பு), அம்மி, ஆட்டுக்கல், உலக்கை, குந்தாணி,
(உரல்) திருகை (மாவு திரிக்கும் திருகை) வேம்பா (தண்ணீர் கொதிக்க
வைப்பதற்கு உரிய சாதனம்)) அண்டா, துவைக்கும் கல் என்று பல
சுவையான விஷயங்களை நாம் இழந்துவிட்டோம். அதோடு அவற்றில்
வேலை செய்த அந்தக்காலத்துப் பெண்களுக்கு இருந்த உடல்
ஆரோக்கியமும் இன்றையப் பெண்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு
போய்விட்டது!

நான் சிறுவனாக இருந்த காலத்தில் என்னுடைய பாட்டி வீட்டில் ஒரு
ஐந்தாண்டு காலம் தங்கிப் படித்தேன். அப்போது வீட்டுக் கிணற்றில்
தண்ணீர் இறைத்துத்தான் குளிக்க வேண்டும். துவைக்க வேண்டும்.
எங்களுடைய சின்ன மாமா அதற்குப் பயிற்சி கொடுப்பார்.

40 அல்லது 50 வாளிகள் தண்ணீரை எல்லாம் சர்வ சாதரணமாக
இறைப்போம். சமயத்தில் கயிற்றுடன் வாளி நழுவி கிணற்றுக்குள் விழுந்து
விட்டால், அதை பாதாள கரண்டி என்னும் உபகரணம் கொண்டு
எடுப்பதற்கும் கற்றுக் கொடுத்தார்கள்.

சவுக்காரத்தை (soap) அதிகமாகக் கரைக்காமல், துணியிலுள்ள அழுக்கை
எடுப்பதில் இருந்து, கல்லில் அடித்துத் துணியைத் துவைத்து மூன்று நான்கு
முறை தண்ணீரில் அத்துணியை அலசி எடுப்பது வரை முறையான பயிற்சி
கொடுத்தார்கள்.

துவைத்துக் காயப்போட்டு எடுத்தால் துணி தும்பைப் பூவைப் போல
பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.

அந்த வாய்ப்பெல்லாம் நகரவாசிகள் யாருக்கும் இப்போது இல்லை.

சில கிராமங்களில் வேண்டுமென்றால் இருக்கலாம்
--------------------------------------------------------------------------------------------------------
எதற்காக இந்தத் துவைக்கும் புராணம்? அலசல் புராணம்?

கிரகங்களை எப்படித் துவைப்பது,அலசுவது, காயப்போடுவது என்பதை
இன்று சொல்லித் தரவுள்ளேன். அதற்கான முன்னுரைதான் அது!

ஜாதகத்தை வைத்துத்தான் -))))))))
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதலில் புதனை எடுத்துக் கொள்வோம்

அவன்தான் புத்திநாதன். வித்தைகளுக்குரிய நாதன். அவன் ஜாதகத்தில்
நன்றாக இருந்தால்தான், படிப்பது மண்டையில் ஏறும். படிப்பது புரியும்
அல்லது விளங்கும். கல்விக்கு அதிபதி அவன்தான்.

வாக்கு சாதுர்யம்(பேச்சு வன்மை), சங்கீதம், ஜோதிடம், பிரசங்கம்
(மேடைப்பேச்சு), யுக்தியான செயல்கள், ஓவியம், சிற்பக்கலை, வணிகம்
போன்ற பல புத்தி சம்பந்தப்பட்ட செயல்களுக்கு அவனே காரகன்.

இல்லாவிட்டால், மக்குப் பிளாஸ்த்திரி என்று வாத்தியாரிடம் (என்னிடம்
அல்ல) பெயரை வாங்கிக் கொண்டு, தத்தித்தத்தி பள்ளி இறுதியாண்டு
வரை செல்ல நேரிடும்

இரவு படித்ததெல்லாம் காலையில் மறந்துவிடும். பகலில் படித்ததெல்லாம்
மாலையில் மறந்துவிடும்.

நினைவாற்றல் இருக்காது. மறதி அதிகமாக இருக்கும்.

வெளியில் செல்லும் போது மனைவி வாங்கிக் கொண்டு வரும்படி
சொல்லியனுப்பிய சாமானை வாங்கி வராமல் வீட்டிற்கு வந்தபிறகு
மனைவியிடம் இடிபட நேரிடும்.

"உங்களுக்கு சமர்த்துப் பத்தவில்லை" (சாமர்த்தியம் இல்லை) என்ற
கெட்ட பெயரை வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.

எனக்குத்தெரிந்த உறவினர் ஒருவர், தன்னுடைய ஆடிட்டர் வீட்டிற்குச்
சென்றார். ஆடிட்டர் வீட்டருகே பார்க் செய்ய இடமில்லாததால்,
தன்னுடைய காரை 100அடி தூரம் தள்ளி நிறுத்தனார். ஆடிட்டரிடம்
ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பியவர், காரில்
வந்ததை மறந்து விட்டு, ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.
வீட்டிற்கு வந்தவுடன், அவருடைய மனைவி, "காரில் அல்லவா
சென்றீர்கள், ஆட்டோவில் வருகிறீர்களே?" என்று கேட்ட பிறகுதான்
தன்னுடைய தவறும், மறதியும் அவருக்குப் பிடிபட்டது.

அதேபோல் ஒருமுறை தன் மனைவியோடு ஜவுளிக்கடைக்குச் சென்றவர்,
அந்த அம்மணி கடையைக் கலக்கிக் கொண்டிருந்த நேரத்தில், பொறுமை
இழந்து தம்மடிக்க பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை வரை சென்றார்.
அதற்கு முன் ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டுத் தம்மடித்தால் சுகமாக
இருக்கும் என்று கொஞ்சம் தள்ளியிருந்த ஹோட்டல் வரைக்கும் சென்றார்

சென்றவர் காப்பி, தம் எல்லாம் முடிந்த பிறகு, மனைவி ஜவுளிக்கடையில்
இருப்பதை மறந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

இதெல்லாம் எதனால் ஏற்பட்டது அவருக்கு?

புதனின் திருவிளையாடல்தான் அது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புதன் நியூட்ரல் பிளானெட். (சமநிலைக் கிரகம்) நல்லவனுடன் சேர்ந்தால்
ஜாதகனின் புத்தி நல்லவிதமாக வேலை செய்யும். அதே புதன் தீயவனுடன்
சேர்ந்தால் கெட்ட வழியில் வேலை செய்யும்.

அதாவது புதன் சுக்கிரனுடன் சேர்ந்தால் ஆக்க வழியில் ஜாதகன் வேலை
செய்வான். அதே புதன் சனியுடன் சேர்ந்தால், ஜாதகன் ஆக்க வழிகளுக்கு
எதிர்மாறான விஷயங்களில் அற்புதமாக வேலை செய்வான்.

ஜாதகத்தில் புதனும் வக்கிர நிலைமையில் (rotrograde) இருந்தாலும் புத்தி
வக்கிர சிந்தனைகளில்தான் அதிகமாக ஈடுபடும்.

வக்கிர சிந்தனை என்றால் என்ன? ஒரு சின்ன உதாரணம். மாற்றான்
தோட்டத்து மல்லிகையை சைட் அடிப்பான். அவள் மேல் ஆசை கொள்வான்
முடிந்தால் முயற்சித்தும் பார்ப்பான். நண்பனையே போட்டுக் கொடுப்பான்
பல நல்ல பண்புகள் இல்லாமல் இருப்பான்.

அதே வக்கிரபுதனுடன், வக்கிர சனியும் சேர்ந்து கொண்டால், ஜாதகன்
கிரிமினல் வேலைகளை உற்சாகமாக செய்வான். அது சின்னதோ அல்லது
பெரியதோ, தகாத வேலைகளைச் செய்யத்தயங்க மாட்டான்.

தகாத வேலை என்றால் என்ன? பஸ்சில் பெண்ணை உரசிப் பார்ப்பதில்
இருந்து வங்கியில் போலிப் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்குவது
வரை ஆயிரக்கணக்கான தகாத வேலைகள் இருக்கின்றன். பட்டியல்
இட்டால் மாளாது. அதோடு உங்களுக்குத் தெரியாததா என்ன?

ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருந்தால், ஜாதகன் தீவிரவாதச்
செயல்களில் ஈடுபடுவான். பல அழிவு வேலைகளில் ஈடுபடுவான். ஒசாமா
பின்லேடனின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட அமைப்பு உள்ளது என்று
படித்திருக்கிறேன்.

வக்கிரம் என்றால் என்ன? ஒரு கிரகம் வானவெளியில் சில சமயங்களில்
பின்புறமாகச் சுற்றும் (reverse). உதரணமாக செவ்வாய், புதன், சுக்கிரன்
ஆகிய மூன்று கிரகங்களும் எப்போது ஓடு பாதையில் 90 டிகிரிகளுக்
குள்ளேயே தங்கள் சுழற்சியை மேற்கொள்ளும். தன்னுடைய சுற்றும்
வேகம் அந்த விதிக்கப்பட்ட 90 டிகிரிகளைக் கடக்கக்கூடிய நிலைமை
ஏற்படுமானால், அது தன்னுடைய வேகத்தைக் குறைத்து ஏற்படப்போகும்
இடை வெளியைச் சரி செய்ய பின்புறமாகச் சுழலத் துவங்கும். பிறகு
தொடரும் கிரகங்கள் அந்தச் சுழற்சி இடைவெளிக்குள் வந்த பிறகு
மீண்டும் முன்புறமாகச் சுழலத் துவங்கும். அந்தப் பின்சுற்றல்தான்
வக்கிரம் எனப்படும். அந்தக் காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின்
ஜாதகத்தைக் குறிக்கும் ஜோதிடர் கிரகத்தின் அருகில் (வ) என்று
குறிப்பிட்டிருப்பார்.

அப்படிக் குறிக்கத்தவறிய ஜாதகத்தைப் பார்த்து, அதைக் கொண்டு
வந்த ஜாதகனுக்குப் பலன் சொல்லும்போது. அது தவறான பலனாகப்
போய்விடும். அவன் ஜோதிடரைத் திட்டிக் கொண்டே தன்னுடைய
வீட்டிற்குப் போய்ச் சேருவான்.
------------------------------------------------------------------------------------------------
புதனின் சொந்த வீடுகள்: மிதுனம் & கன்னி
உச்ச வீடு: கன்னி
நீச வீடு: மீனம்
நட்பு வீடுகள்: ரிஷபம், சிம்மம், துலாம்,
சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
பகை வீடு: கடகம் மட்டுமே!

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் கிரகத்திற்கு 100% வலிமை
உண்டு.

சம வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீச மடைந்த கிர்கங்களுக்குப் பலன் எதுவும் இல்லை!

உச்சமடைந்த கிரகங்களுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளைவையெல்லாம் நான் ஸ்கேல் வைத்து அளந்து சொல்லவில்லை
அனுபவத்தில் சொல்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------
அஷ்டவர்க்கத்தை வைத்துப் புதனுக்கான பலன்கள்

புதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 3ம் அல்லது 3ற்குக் கீழான பரல்
களுடன் இருந்தால் பலனில்லை. 4 பரகளுடன் இருந்தால் சராசரிப்
பலன்கள்.

புதன் 5 பரல்களுடன் இருந்தால் - அனவரிடமும் நட்பு பராட்டும்
மேலான்மை உடையவனாகவும், எதையும் புரிந்து கொள்ளும்
ஆற்றலுடனும் ஜாதகன் இருப்பான்.

புதன் 6 பரல்களுடன் இருந்தால், எடுத்த காரியங்களில் எல்லாம்
வெற்றி கிடைக்கும்.

புதன் 7 பரல்களுடன் இருந்தால் மதிப்பு, மகிழ்ச்சி, செல்வம், சொத்து
சுகங்களுடன் ஜாதகன் இருப்பான்

புதன் 8 பரல்களுடன் இருந்தால் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது
ஆட்சியாளர்களுடன் தொடர்புடையவனாக இருப்பான்
Either he will be a ruler or associated with rulers
========================================================
இருக்கும் இடத்தை வைத்துப் பலன் பார்ப்பது

உதாரணத்திற்கு சிம்ம லக்கினத்தை எடுத்துக் கொள்வோம்
அதுதான் சுவாமி லக்கினங்களிலேயே ஹீரோ லக்கினம். அதனால்தான்
அதற்கு சிங்கத்தை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.
சூரியனின் வீடு அல்லவா அது!

1. சிம்ம லக்கினத்திற்கு புதன், இரண்டாம் வீடு (House of Finance,
Family affairs & speech) மற்றும் பதினொன்றாம் (House of Profits -
லாபஸ்தானம்) ஆகிய வீடுகளுக்கு அதிபதி. சிம்ம லக்கினக்காரர்
களுக்கு செவ்வாய் (யோக காரகன், 4 & 9ஆம் வீடுகளுக்கு அதிபதி
அவன்) எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமானவன்.
அந்த லக்கினக்காரகளுக்குப் புதன், கேந்திர, திரிகோணங்களில்
இருப்பது நல்லது. குறிப்பாக ஏழில் இருப்பது நல்லது.
இருந்தால் ஜாதகனுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, கையில்
எப்போதும் காசு பணம், மயக்கும் பேச்சுத் திறமை, செய்யும்
வேலையில் அல்லது தொழிலில் அதிக வருமாணம் கிடைக்கும்.

2. 6, 8, 12 ஆம் இடங்களில் இருந்தால் எதிரான பலன்கள்
=========================================================
கன்னி லக்கினக்காரகளுக்கு, புதன் லக்கினாதிபதி மற்றும் பத்தாம் இடத்து
அதிபதி. ஆகவே கன்னி லக்கினக்காரகளுக்கு அவன்தான் முக்கிய
மானவன். அவன் ஜாதகத்தில் மறையக்கூடாது (அதாவது 6, 8, 12 ஆம்
இடங்களில் போய் அமர்ந்து கொண்டு சேட்டை செய்யக்கூடாது)

அப்படி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு உரிய வேலை
கிடைக்காது. வாழ்க்கையில் உயர்வும் கிடைக்காது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துலா லக்கினக்காரர்களுக்கு: 9ஆம் வீடு மற்றும் 12ஆம் வீடு ஆகிய
இடங்களுக்கு உரியவன். முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தைக் கவனத்தில்
கொள்ளவும்.

அவன் நன்றாக இருந்தால், எல்லா பாக்கியங்களையும் அவன் தேடிப்
பிடித்துக் கொடுப்பான்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விருச்சிக லக்கினத்துக்காரர்களுக்கு புதன் ஆயுள்காரகன் (8ஆம் இடத்து
அதிபதி. அதோடு லாபாதியும் அவன்தான்.

இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்து
முக்கியமானவன்
=======================================================
தனுசு லக்கினம்: 7ஆம் அதிபதி (இல்லத்தரசி அல்லது அரசன்)
10ஆம் இடம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதி அவன்
இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்துப்
புதன் முக்கியமானவன்
=======================================================
மகரம்: 6ஆம் அதிபதி மற்றும் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) புதன்
பாதி வில்லன் பாதி ஹீரோ என்கின்ற நிலைமையில் புதன் இந்த
லக்கின வேலைகளைச் செய்வான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கும்பம்: 5th Lord & 8th Lord
மீனம்: 4th lord and 7th lord
மேஷம்: 3rd lord and 6th lord
ரிஷபம்: 2nd lord and 5th lord
மிதுனம்: Lagna lord and 4th lord
கடகம்: 12th lord & 3rd lord

மேற் பத்திகளில் கூறிய முறைகளிலேயே இவற்றிற்கும் பலனை உணர்ந்து
கொள்ளுங்கள்

பாடத்தின் நீளம் கருதியும், உங்களுடைய பொறுமை கருதியும்,
என்னுடைய நேரம் கருதியும் இன்றையப் பாடத்தை இத்துடன் நிறைவு
செய்கிறேன்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பல்சுவைப் பதிவில் ஒரு சிறப்புச் சிறுகதையைப் பதிவிட்டுள்ளேன்
நமது கண்மணிகள் யாரும் படித்தது மாதிரித் தெரியவில்லையே?
படித்து விட்டீர்கள் என்று எப்படித் தெரியும்?
ஒருவரி பின்னூட்டம் இட்டால் அல்லவா தெரியும்!

வாழ்க வளமுடன்!

17.11.08

ஜோ.பா.எண்.135: பன்னிரெண்டாம் வீடு - இறுதிப் பகுதி

இந்தப் பாடத்தின் முன் பகுதிக்கான சுட்டி (Link) இங்கே உள்ளது

எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் யாருக்குத்தான் குதூகலம் இருக்காது?
பதினைந்து வயது முதல், எண்பது வரை அதற்கு விதிவிலக்கானவர்கள்
எவரும் இல்லை!. இறை நம்பிக்கை இல்லாத சிலருக்குக்கூட ஜோதிடத்தில்
நம்பிக்கையுண்டு. அதை நான் அறிவேன்.

அதுவும் ஜோதிடர், ஒரு பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து "இவளுக்கென்று ஒரு
ராஜகுமாரன் வருவான். அதுவும் அந்தக் காலம் மாதிரிக் குதிரையில் வராமல்
பென்ஸ் காரில் வருவான். வந்து இவளைக் கொத்திக்கொண்டு போய்விடுவான்,
அதற்குப் பிறகு இவளது வாழ்வில், தேனும் பாலும் கரை புரண்டு ஒடும்" என்று
சொல்லவிட்டாலும், "அன்பான, அழகான, நன்றாகச் சம்பாதிக்கக்கூடிய வரன்
கிடைக்கும்" என்று சொல்லிவிட்டால் போதும். அவள் அப்போதே கலர் கலராய்
கனவுகளில் மிதக்கத் துவங்கிவிடுவாள்.

அதே நிலைதான் பல இளைஞர்களுக்கும்.

நடுத்தர வயதுக்காரர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் பலவிதமான
பிரச்சினைகள் அவைகள் எப்போது தீரும், தாங்கள் எப்போது நிம்மதியாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருப்போம் - அதற்குரிய காலம் எப்போது கனிந்து வரும்
என்று தெரிந்து கொள்வதில் முனைப்பாகவும், ஆர்வமாகவும் இருப்பார்கள்

ஆனால் ஜோதிடரைப் பார்த்துவிட்டு வந்தவர்களில் பாதிப்பேர்களுக்குத் திருப்தி
இருப்பதில்லை.

ஏன் திருப்தி இருப்பதில்லை, அதற்கு ஜோதிடர் என்ன செய்ய முடியும் என்பதை
அல்லது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பாடத்தில் அலசுவோம்

இப்போது பன்னிரெண்டாம் பாடத்தின் நிறைவுப்பகுதி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பன்னிரெண்டாம் பாடத்தின் நிறைவுப்பகுதி!

1. செல்வத்தை (பணத்தை) விரும்பாத மனிதனே கிடையாது. செல்வத்தைத் தருவது
பத்தாம்வீடும், பதினொன்றாம் வீடும், அவை இரண்டைவிட முக்கியமாக இரண்டாம்
வீடுமே ஆகும். அப்படி அந்த வீட்டு நாயகர்கள் நமக்கு அள்ளித்தரும் பணத்தை
நம் கைகளில் இருந்து கரைப்பவர்கள், 6, 8, மற்றும் 12ஆம் வீட்டு நாயகர்களே.
முதலில் கூறிய மூவரும் (அதாவது 10th, 11th & 2nd Lords) நம்முடைய ஹீரோக்கள்
பின்னால் கூறிய மூவரும் (6, 8, மற்றும் 12ஆம் அதிபதிகள்) நம்முடைய வில்லன்கள்

2, ஹீரோக்களின் வீடுகளைப் பாருங்கள். அங்கே அஷ்டகவர்கத்தில் 30ம், அதற்கு
மேலும் பரல்கள் இருந்தால் நல்லது. கவலையே படவேண்டாம். வில்லன்கள்
எவ்வளவு வேகமாகக் கரைத்தாலும், அதற்கு மேலேயே உங்களுக்குப் பணம் வரும்

3. இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகமாக இருந்தால், எவ்வளவு
பணம் வந்தாலும், அல்லது நீங்கள் எவ்வளவு பணம் சம்பாத்தித்தாலும், அல்லது
உங்கள் தந்தைவழிச் சொத்து எவ்வளவு இருந்தாலும், அவ்வளவும் கரைந்து விடும்
கையில் ஒன்றும் தங்காது. பூட்டுப்போட்டுப் பூட்டிவைத்தாலும் தங்காது!

4. அப்படிக் கரையும் பணம்கூட, வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும்
அந்த வீடுகளைச் சுபக்கிரகங்கள் பார்க்கும் என்றால், நல்ல வழியில் கரையும். உங்கள்
குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளும் வழியில் கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்கும்
வழியில் கரையும்.

5. இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும்,அந்த
வீடுகள் பாவக்கிரகங்கள் அல்லது தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் உங்கள்
பணம் தீய வழியில் கரையும். சீட்டு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், குடி, பெண்பித்து,
என்று தீய வழியிலேயே கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்காத வழியில்
கரையும், நீங்கள் மற்றவர்களுக்குப் பதில் சொல்ல முடியாத வழியில், ஏன் வெளியில்
சொல்ல முடியாத வழியில் கரையும்

6. அதுபோல 12ஆம் வீட்டை நல்ல கிரகங்கள் பார்த்தால், உங்கள் தந்தை அல்லது
மனைவி, அல்லது நண்பர்கள் உங்கள் மீது கவனம் செலுத்தி, உங்கள் பணம்
கரையாமல் காப்பார்கள்.

7. அதற்கு மாறாக 12ஆம் வீடு தீயகிரகங்களின் பார்வையில் இருந்தால்,
உங்களுக்குப் புத்தி சொல்ல ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஓட்டைப் பானையில்
ஊற்றும் தண்ணீர் போல உங்கள் பணம் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.

8. 12ஆம் வீட்டுக்காரனும், ஒன்பதாம் வீட்டுக்காரனும் பரிவர்த்தனையாகியிருந்தால்
ஜாதகன் தன் பணத்தை அறவழியில் செலவு செய்வான். நிறைய தர்ம கரியங்களைச்
செய்வான்.

9. 12ஆம் வீட்டு அதிபதி உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நட்பு வீட்டில்
இருந்தாலும் ஜாதகன் பெருந்தன்மையானவனாக இருப்பான்.

10. அதே அமைப்பில் (12ஆம் வீட்டு அதிபதி உச்சம் பெற்றிருத்தல் அல்லது நட்பு
வீட்டில் இருத்தல்) நல்ல வர்க்கத்துடன் கூடிய ஒன்பதாம் அதிபதியின் பார்வை
பெற்றால் ஜாதகன் அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான்.

11. பன்னிரெண்டாம் வீட்டில் குரு, சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்கள் இருக்கு
மென்றால் ஜாதகன் கஞ்சனாக இருப்பான். தன்னுடைய பணத்தை யாருக்கும்
கொடுக்க மாட்டான்.

12. 12ஆம் வீடும் நன்றாக இருந்து (நிறைய பரல்களுடன் இருப்பது) சுக்கிரனும்
நன்றாக இருந்தால், ஜாதகனுக்கு, அதீத பெண்சுகம் கிடிக்கும், அதுவும் வேண்டும்
போது வேண்டிய நேரத்தில் கிடைக்கும். 'அந்த' விஷயத்தில் கொடுத்து வைத்தவனாக
இருப்பான்.

13. அதே சுகம் 12ஆம் வீட்டு அதிபன், சுபக்கிரகத்துடன் கூட்டணி போட்டு
ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருந்தாலும், அப்படி அமைப்புள்ள ஜாதகனுக்கும்
கிடைக்கும்.

14. குடும்ப சூழ்நிலை, வறுமை, உடல் நலக்குறைவு, அல்லது உடல் ஊனம் இது
போன்ற இன்ன பிற காரணங்களால் சிலருக்கு 'அந்த' சுகம் (sexual pleasures)
கிடைக்காமல் இருக்கலாம். அல்லது மறுக்கப் பட்டிருக்கலாம். ஆண் அல்லது
பெண் - இருபாலருமே அதற்கு விதிவிலக்கல்ல! அப்படி அமைவதற்குக் காரணம்
லக்கின அதிபதி, 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்வதோடு, அல்லது நீசமாவதோடு
சனி, ராகு, மாந்தியுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு உள்ளவர்களுக்கு அது நடக்கும்!

15. பன்னிரெண்டில் சூரியன் இருந்து, அது தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது
பார்வை பெற்றிருந்தால், ஒருவனின் செல்வம் நீதிமன்றம், அரசு தண்டனை என்று
கரையும்.

16. அதே நிலைமையில் சூரியனுக்குப் பதிலாக செவ்வாய் இருந்தால், ஒருவனின்
செல்வம், அடிதடி, வம்பு, வழக்கு, எதிரிகள் என்கின்ற வகையில் கரையும்.
ஏமாற்றங்கள், துரோகங்கள் என்கின்ற வகையிலும் கரையும்.

17. அதே நிலைமையில் புதன் இருந்தால், ஒருவனின் செல்வம் அல்லது பணம்
வியாபாரம் அல்லது பங்கு வணிகம் என்று காணாமல் போய்விடும்.

18 அதே நிலைமையில் இருக்கும் சுக்கிரனால், ஒருவனின் செல்வம், பெண்பித்தால்
தொலைந்து போய்விடும். சிலருக்கு, ஊழலில் சிக்கிக் கொண்டு இழப்பாகிவிடும்.

19. பன்னிரெண்டில் சனியும், செவ்வாயும் கூட்டணி போட்டு, நல்ல கிரகங்களின்
பார்வையின்றி இருந்தால் பணத்தை, உடன்பிறப்புக்காளால் தொலைக்க நேரிடும்
அல்லது கரைக்க நேரிடும்.

20. பன்னிரெண்டாம் வீட்டில் லக்கினாதிபதியும் சந்திரனும் கூட்டணியாக அமர்ந்
திருந்து, குரு அல்லது சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்களின் பாரவையின்றி இருந்தால்
ஜாதகனின் பணம் மருத்துவச் செலவுகளிலேயே கரைந்து விடும். சிலருக்கு இந்த
அமைப்பில், பணம், பிறருக்குக் கடனாகக் கொடுத்து அல்லது ஷ்யூரிட்டிகளில்
கையெழுத்து இட்டு மாட்டிக் கொள்வதன் மூலம் காணாமல் போய்விடும்.

21. இவற்ரைப் பார்த்துப் பயந்து விடாமல், ஜாதகத்தை முழுமையாக அலசுவதன்
மூலமே அவற்றை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு அஷ்டகவர்க்கம்
உங்களுக்குத் துணை செய்யும்.

இந்தப் பலன்கள் எப்போது அரங்கேறும்? அந்தந்த கிரகங்களின் தசா புத்திகளில்
அரங்கேறும்!

பன்னிரெண்டாம் பாடம் நிறைவுறுகிறது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

14.11.08

ஓம்கார் சுவாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு!என்னுடைய முன்பதிவைப் படித்துவிட்டு ஓம்கார் சுவாமிஜி அவர்கள்
ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். அவருக்குப் பதில் சொல்லும் முகமாக
இந்தப் பதிவு. பதில் பெரிதாக இருப்பதால் பின்னூட்டத்தில் சொல்ல
இயலவில்லை! கடைசி வரிவரை படிக்கவும்!

சுவாமிஜியின் கேள்வி என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுடைய
முன்பதிவைப் படிக்க வேண்டுகிறேன். சுட்டி இங்கே உள்ளது!
===========================================================

ஒபாமாவின் பிறந்த நேரம் 7.24 pm. என்று ஆணித்தரமாக ஒபாமாவின்
பிறப்புச் சான்றிதழை வைத்து ஒருவர் கொடுத்துள்ளார்.
அதற்கான சுட்டி இங்கே உள்ளது.
===========================================================
Barack Obama's
7:24 pm Birth Time

NewsScope; June 16, 2008. The Obama camp finally released his
birth certificate in response to claims from the political fringe that
he was born in Kenya, and therefore ineligible to run for president.
For the astrological community, the search for his accurate birth
time is over, and we now know
... NeptuneCafe Presents
...
Obama's birth time of 7:24 pm shown here is now known to be
accurate. Listed below are a few examples from Obama's
personal history that verify the 7:24 pm time, with attention
paid to the angles, and as the ruler of his Aquarius Ascednant,
transiting Uranus. Abbreviations: T = transit, P2 = secondary
progressed. Orbs are given as minutes of a degree,
with all being less than one degree, and most less than 1/4

October 1982 - Father dies drunk in car accident
T UR cnj MC, opp MO
T PL squ SA
P2 MO opp PL

November 7, 1995 - Mother dies of ovarian cancer
T PL cnj MC
T UR cnj SA
P2 MO cnj P2 UR

February 6, 1990 - elected Editor of the Harvard Law Review
T SU cnj AS
T PL in 9th squ AS
T UR sxt NE in 9th
P2 MO tri AS
P2 AS cnj Pallas

October 3, 1992 - marries Michelle
T PL opp CE
T CH cnj DE
T JU sxt MC
T (MO-UR-NE) octile MC
P2 AS tri MC
P2 AS cnj Juno
P2 ME opp Juno

July 26, 2004 - Speech at the Democratic National Convention
T UR cnj CH
T PL sxt AS
T MA cnj DE, P2 VE
P2 MO cnj MC

February 10, 2007 - Declares Candidacy
T MO cnj IC
T SA cnj DE
T NE cnj AS
T UR sxt P2 MC
P2 MO squ P2 ME, P2 MA
P2 VE cnj UR

January 3, 2008 - Wins Iowa
T SU cnj P2 MC
T NE squ CE, cnj AS
T SA sxt NE
T NN squ MC
P2 SU tri P2JU
P2 MO tri P2 Vesta
that he was born at 7:24 pm, which gives him 18º03'
Aquarius Rising and 28º53' Scorpio at his Midheaven.

With no planets in the tenth or eleventh houses, Neptune
in the ninth house is Obama's most elevated planet. Neptune
was already a prominent player in his horoscope, since
it's the only planet aspecting his Sun. Now, when Obama
responds to a reporter's difficult question with "I believe...",
we know that he's in touch with some transcendent, i
neffable set of values which shapes his political worldview.

Obama's Neptune is precisely conjunct the U.S. Scorpio
Ascendant. As JFK did in the early 1960s, Obama is
channeling the nation's collective hopes and visions for a better world.
====================================================
Barack Obama's
7:24 pm Birth Time

August 4 1961 Friday 7.24 PM
Birth Place: Honolulu
21.18 N 157.51 W
GMT Time difference Minus 10.00 Hours

நட்சத்திரம் ரோகிணி (ரிஷப ராசி)
மகர லக்கினம். லக்கினத்தில் குருவும் சனியும்
2ல் கேது
4ல் மாந்தி (தாய் ஸ்தானம்)
5ல் சந்திரன் (ரோகிணி நட்சத்திரம்)
6ல் சுக்கிரன்
7ல் சூரியனும், பாக்யாதிபதி புதனும், லக்கினத்தை பார்த்தபடி
8ல் ராகுவும், செவ்வாயும்

நடப்பு தசா குரு திசையில் சந்திர புத்தி 22.3.2009 வரை
அதற்குப்பிறகு குரு திசையில் செவ்வாய் புத்தி 26.2.2010 வரை
(அந்தக் கால கட்டம் அவருக்கு மிகவும் கடினமான காலமாகும்)

அதோடு அடுத்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனி கன்னி ராசிக்கு
மாறுகிறார். ஒபாமாவின் ஜாதகத்தில் சனி தன்னுடைய சுயவர்க்கத்தில்
ஜீரோ பரலில் உள்ளார் அதுவும் நல்லதல்ல!

கொடுக்கப்ப்ட்டுள்ள தேதி, இடம், மற்றும் நேரம் ஆகியவை சரியானதுதான்
என்றால் சுவாமிஜியின் கணிப்பில் ஒரு அர்த்தம் உள்ளது.
ஆனால் அதை இப்போது வெளிப்படுத்துவது நாகரீகமாகாது!
ஆகவே என் கருத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை!
சுவாமிஜி மன்னிப்பாராக!

கடவுள் சக்தி வாய்ந்தவர். அவர் ஒபாமாவை ஆசீர்வதிப்பாராக!
God is great. He may bless Barac Obama!

வாழ்க வளமுடன்