மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 541 - 550. Show all posts
Showing posts with label Lessons 541 - 550. Show all posts

17.7.12

Astrology சந்திரனும் சட்னியும் - பகுதி 2


Astrology சந்திரனும் சட்னியும் - பகுதி 2

முன் பாடத்தைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------ 
சட்னியில் தேங்காயின் முக்கியத்துவம்!

அதாவது சந்திரனின் முக்கியத்துவம்!

மனிதனுக்கு உடல் நிலை எத்தனை முக்கியமோ,  மன நிலையும் அத்தனை முக்கியமானது!

மனம் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது களத்தில் இறங்கினால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.

சிலர் எப்போதும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சிலர் எப்போதும் உற்சாகமில்லாது டல்லடித்து உட்கார்ந்திருப்பார்கள்.  அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் ஜாதகக் கோளாறுகள்.

இன்றைய பாடத்தில் அதைப் பார்ப்போம்.

12 ராசிகளில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிக்கான பலனை முதலில் பார்ப்போம். எல்லாம் பொதுப்பலன்கள்

1. மேஷத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மன உறுதி கொண்டவன். சிந்தனை வயப்படுபவன். உணர்ச்சி வேகம் உள்ளவன். உணர்ச்சிகள்
தூண்டப்படும்போது அதற்குத் தகுந்தாற்போல செயல் படக்கூடியவன். கள்ளம் கபடு இல்லாதவன். வெளிப்படையாகப் பேசுபவன்.

2. ரிஷபத்தில் சந்திரன் இருந்தால், நிலையான மனதை உடையவன். எந்த சூநிலையிலும் தன்னை, தனக்கு விருப்பமில்லாவிட்டால், மாற்றிக் கொள்ளாதவன். அதனால் வீண் பிடிவாதக்காரன் போன்ற தோற்றத்தை அளிக்கக்கூடியவன்.

3. மிதுனத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் அதிபுத்திசாலியாக இருப்பான். சிலர் வஞ்சனை உள்ளவர்களாக, இரட்டை வேடம்  போடுபவர்களாக இருப்பார்கள். அதையும் அடுத்தவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். எப்போதும்  பாதுகாப்பாக இருப்பார்கள்.

4. கடகத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மிகவும் உணர்ச்சி வசப்படுபவனாக இருப்பான். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மேல் அக்கறை உள்ளவனாக இருப்பான்.

5. சிம்மத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் தன்முனைப்பு உள்ளவனாக, ஈகோ உள்ளவனாக இருப்பான். சிலரிடம் தான் என்னும்  மனப்பாங்கு மிகுந்து இருக்கும். அகம்பாவம் இருக்கும். தற்பெருமைக்காரனாகவும் இருப்பான். அதே நேரத்தில் மகிழ்ச்சி உடையனாகவும்,  பலருடைய கண்களில் படுபவனாகவும் இருப்பான்.

6. கன்னியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் யதார்த்தமாக இருப்பான். உலக இயல்புகளோடு ஒத்துப்போகும் தன்மையுடையவனாக இருப்பான். குறிப்பிட்டுச்சொன்னால், He will be practical. எல்லா விஷயங்களிலும் ஒரு கண்ணோட்டத்துடன் இருப்பான். அத்துடன் extremely sensitive ஆக இருப்பான்.

7. துலாம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் அலைபாயும் மனதை உடையவன்.  swaying from one side to the other.swinging indecisively from one course of action or opinion to another. சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். சிலர் சலன புத்திக்காரர்களாக இருப்பார்கள். ஆனாலும் அன்பு மற்றும் கருணை மிக்கவர்களாக இருப்பார்கள்.

8. விருச்சிகத்தில் சந்திரன் உள்ளவர்கள், மற்றவர்களை நேசிக்கும் மனதை உடையவர்கள். பக்தி, விசுவாசம் மிக்கவர்கள்.  மென்மையானவர்கள். அவர்களுடைய மனதைத் தொடும்படி பேசினால், மயங்கி விடக்கூடியவர்கள்.

9. தனுசில் ச்ந்திரன் இருக்கப்பிறந்தவர்கள், இறைவனின் ஆசி உள்ளவர்கள் (blessed people). பெருந்தன்மை மிக்கவர்கள். அதாவது பெரிய மனது உடையவர்கள். மற்றவர்களின் உணர்வை மதிக்கக்கூடியவர்கள்.

10. மகரத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன், யாரிடமும் நட்புக் கொள்ளும் மனதை உடையவன். எதையும் சாதிகக்ககூடிய மன வலுவை  உடையவன். அட்சரசுத்தமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.செய்வதைத் திருந்தச் செய்யக்கூடியவன். முழுமையாகச் செய்யக்கூடியவன்.

11. கும்பத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் reserved  மற்றும் serious nature உடையவனாக இருப்பான். ஆனாலும் மனிதநேயம் மிக்கவனாக இருப்பான்.

12. மீனத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருப்பான். அடுத்தவர்களை நேசிப்பவனாக இருப்பான். அத்துடன் மாற்றங்களை விரும்புபவனாக இருப்பான்.

இவைகள் எல்லாமுமே பொது விதிகள். சந்திரனுடன் கூட்டாக உள்ள மற்ற கிரகங்களை வைத்து இவைகள் மாறுபடும். சுபக்கிரகங்களின் கூட்டு என்றால் யதார்த்தம் மற்றும் நற்பலன்கள் அதிகமாகும்.  தீய கிரகங்களின் கூட்டு என்றால் இந்தக் குணங்கள் மைனசாகி விடும். அதாவது குறைந்துவிடும்

சந்திரன், சுக்கிரனோடு சேர்ந்திருந்தால், எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் நட்பு பாராட்டக்கூடியவனாக இருப்பான். அத்துடன் இறைபக்தியுடைய வனாகவும், ரசனை உணர்வு மிக்கவனாகவும் இருப்பான். தனது மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து  கொள்வான். உலகத்தாரோடு ஒத்து வாழ்பவனாக இருப்பான்.

சந்திரன் குருவோடு சேர்ந்திருந்தால், அது மேன்மையான அமைப்பாகும். ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாகவும்,  பெருந்தன்மை  மிக்கவனாக வும்,  மற்றவர்களின் தவறுகளை எளிதில் மன்னிக்கக்கூடியவனாகவும் இருப்பான். இந்த இரு கிரகங்களும் எந்த ராசியில் சேர்ந்திருந்தாலும் இந்தப் பலன்கள் மாறாது. ஆனால் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இந்த அமைப்பு இருந்தால் பலன்கள்  மாறுபடும்.

சந்திரன் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இருந்தால் ஏற்படும் பாதகங்கள்.

6ல் (House of diseases)
8ல் (House of sins)
12ல் (House of losses & weakness)

ஆகிய இடங்களில் இருக்கும் சந்திரன் பலவீனமாகி ஜாதகனின் மனநிலையிலும், எண்ணங்களிலும் பாதகமான மாற்றங்களை உண்டாக்கும்.
அதே நேரத்தில் இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் சுபக்கிரகங்களான குரு அல்லது சுக்கிரனின் பார்வையைப் பெற்றிருந்தால், அந்தக் குறைகள் இருக்காது. அந்த இடங்களில் இருக்கும் சந்திரன் பலமாகி ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார். அதை மனதில் கொள்க!

கீழ்க்கண்ட அமைப்பு ஜாதகனின் மனநிலையில் பாதகங்களை உண்டாக்கும்:

1. குரு லக்கினத்திலும் செவ்வாய் ஏழாம் வீட்டிலும் இருக்கும் அமைப்பு: உதாரணத்திற்கு மேஷ லக்கினம். ஜாதகனுக்கு கொடூரத்தன்மை இருக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் ஆட்டி வைப்பான்.

2. சனி லக்கினத்திலும், செவ்வாய் சனிக்கு 6, 8 அல்லது 12ல் இருக்கும் நிலைமையும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.

3. சனி லக்கினத்திலும், சூரியன் 12லும், செவ்வாய் கோணங்களிலும் இருக்கும் அமைப்பும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.

4. மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் இருக்கும் நிலைமை ஜாதகனுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்

5. ஆறாம் வீடு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும். மன அழுத்தம் (Depression) என்றால் என்ன
வென்று தெரியுமல்லவா?

6. தேய்பிறைச சந்திரனும், சனியும் கூட்டாக 12ல் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும், ஜாதகனின் நடத்தையும் மாறுபடும்.

எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதத்திற்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே கவலை
கொள்ளாமல், ஜாதகத்தை அலசுங்கள். அப்படியே ஒரு அவுன்ஸ் 337 டானிக்கை ஒரு குவளை தண்ணீரில் கலந்து அவ்வப்போது குடியுங்கள்

(இது மேல்நிலை classroom2012 வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடங்களில் ஒன்று. உங்களுக்கும் பயன்படட்டும்  என்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்.)

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

16.7.12

Astrology சந்திரனும் சட்னியும்!

Astrology சந்திரனும்  சட்னியும்!

பயிற்சிப் பாடம்

இட்லியைக் கண்டுபிடித்தது மாண்புமிகு தமிழன்தான் என்று நமக்குத் தெரியும். அதுபோல இட்லிக்கான சாம்பாரைக் கண்டுபிடித்ததும் தமிழன்தான் அதிலும் சந்தேகமில்லை. ஆனால் சட்டினியைக் கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் சொல்லலாம்

சட்டினியில்தான் எத்தனை வகைகள்! எங்கள் பகுதி வீடுகளில் அசத்தலாகச் சட்னி செய்வார்கள். விதம் விதமாகச் செய்வார்கள். அதனால் தெரியும். இட்லிக்கான சாம்பாரையும் விதம் விதமாக்ச் செய்வார்கள். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன்.

சட்னியை வகைப்படுத்தியுள்ளேன் பாருங்கள்:

1. தேங்காய் சட்னி (இதில் 4 வகைகள் உள்ளன)
2. தக்காளி சட்னி (இதில் அரைத்துக் கொதிக்க வைக்கும் சட்னி, வதக்கி   அரைக்கும் சட்னி என்று இரண்டு வகைகள் உள்ளன)
3. சின்னவெங்காயம், புளிச் சட்னி
4. கொத்தமல்லிச் சட்னி
5. பொதினாச் சட்னி
6. கசகசாச் சட்னி
7. உளுத்தம் பருப்பு சட்னி
8. கத்தரிக்காய் சட்னி,
9. உருளைக்கிழங்கு சட்னி
10. பீர்க்கங்காய் (தோல்) சட்னி
11.  பலகாய்ச் சட்னி
12. எள்ளுச் சட்னி

முதலில் தேங்காய்ச் சட்னியை எடுத்துக்கொள்வோம். எங்களூர் (கோவையில்) அன்னபூர்ணா உணவங்களில் தேங்காய்ச் சட்னி சூப்பராக இருக்கும். பொங்கல் அதைவிட சூப்பராக இருக்கும். அந்த இரண்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது கிறங்கிப் போய்விடுவீர்கள்.

நீங்கள் உணவுக்காதலராக இருந்தால், இந்தப் பிறவி எடுத்ததன் பலன் கிடைத்துவிட்டதாக அப்போது உணர்வீர்கள்!

வீடுகளில் பொதுவாகத் தேங்காயுடன் பொட்டுக்கடலையைச்
சேர்த்து விடுவார்கள். சுவை மாறிவிடும். தமன்னா தனியாக ஆடினால்
பார்க்கமுடியும். கூட்டத்தோடு (பின்னணியில் 50ற்கும் மேற்பட்ட
நடனப் பெண்களுடன்) ஆடினால் எப்படிப் பார்க்க முடியும்?

அந்தத் தேங்காய், பொட்டுக்கடலையுடன் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கும்போது ஒரு சுவை இருக்கும். வரமிளகாய் மட்டும் சேர்த்து அரைக்கும்போது சுவை வேறாக இருக்கும்.

ஒருமுறை எங்கள் பகுதி செல்வந்தர் வீட்டுத் திருமணம் ஒன்றில் காலைப் பலகாரம் சாப்பிடும்போது, தேங்காய்ச் சட்னி அற்புதமாக  இருந்தது. அதி சுவையாக இருந்தது. அத்தனை சுவையுடன் அதுவரை சாப்பிட்டதில்லை. தேங்காய் காரணமாக இருக்குமா? விடக்கூடாது  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு, சமையல் கட்டிற்குச் சென்று, சமையல் மேஸ்திரியை அணுகிப் பேச்சுக் கொடுத்தேன். தேங்காய் சட்னி சுவையாக இருப்பதன் ரகசியத்தைக் கேட்டேன்.

அவர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். சட்டென்று பதில் சொன்னார்:

”அதில் ரகசியம் ஒன்றும் இல்லை அப்பச்சி. தேங்காயுடன் முந்திரிப் பருப்பைப் போட்டு அரைத்திருக்கிறோம்.”

”முந்திரிப் பருப்பா?”

”ஆமாம். போடும் முன்பாக இளஞ்சூட்டில் நன்றாக வதக்கிவிடுவோம். ஆனால் சிவக்க விடாமல் வதக்க வேண்டும்”

”என்ன அளவு?”

”50 தேங்காய்க்கு இரண்டு கிலோ முந்திரிப்பருப்பு!”

முந்திரிப் பருப்பு விற்கிற விலையில் நமக்கெல்லாம் கட்டுபடியாகாது. ஆத்தாடி ...என்று பேசாமல் திரும்பி வந்து விட்டேன்!
--------------------------------------------------------------
’வாத்தி (யார்) இந்தச் சட்னி கதைக்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா! சந்திரன் தான் தேங்காய். மற்ற கிரகங்களை எல்லாம் இஞ்சி, பச்சை மிளகாய், வர மிளாய், முந்திரிப் பருப்பாக்கி விதம்
விதமாகச் சட்னி அரைக்கபோகிறேன்”

“எப்போது?”

“அவசர வேலை இருக்கிறது. வெளியூர்ப் பயணம். அதனால் நாளைக்கு (17.7.2012) அரைத்துப் பறிமாறுகிறேன். பொறுத்திரு ராசா!
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
2

அறிவிப்பு

நமது வகுப்பறையின் மாணவர் திரு. கண்ணன் சீதாராமன்  திருப்பதி பாத யாத்திரை செல்கிறார். சக மாணவர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பியுள்ளார். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேருமென்று கவியரசர் கண்ணதாசன் சொல்லுவார். ஆகவே வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் அவருடன் சென்று திரும்பலாம்

பாதயாத்திரை 21.7.2012 சனிக்கிழமையன்று துவங்குகிறது. அதன் விவரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்

அவ்ருடைய மின்னஞ்சல் முகவரி:   kseetharaman007@gmail.com
அலைபேசி எண்ணை அவர் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அதையும் வெளியிட்டு இருப்பேன்


அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
" திருமலா திருப்பதி பாத யாத்திரை !:, 
பற்றிய ஸ்கேன் காப்பியை வகுப்பில் ஏற்றுங்கள் . 1000 நபர்கள் வந்தாலும் பரவாக இல்லை வெங்கட் உள்ளார் .மேலும் தங்களுடைய மாணவன் இந்த
'  கண்ணன் சீதாராமன் "!
 உள்ளான் .   ஒரே ஒரு தகுதி மற்றும்  பாத யாத்திரையாக வருபவரிடம் வேண்டும் . விரத
 " கட்டுபாடும் ",  
மற்றும் வேண்டும் என்று மிகவும் தெள்ள தெளிவாக எல்லோருடைய கண்ணில் படும் அளவிற்கு தலைப்பை தாருங்கள் ஐயா !
இதனை விட மிகவும் சிறப்பான வழி  இருப்பின் அதனை கூறுங்கள் . அந்த
கட்டு பாடு
" 41 நாட்கள் மனசு சுத்தம் மற்றும் உடல் சுத்தம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி மற்ற வர்கள் அடுத்த வருடம் வாருங்கள் ",  என்று
அப்பொழுது அந்த  "  கண்ணனின் கருணை ",  இருப்பின் அனைவரையும்  அழைத்து செல்லுகின்றோம்  என்று " பாத யாத்திரை குருநாத  சுவாமி ",  கூறியதை கூறுங்கள்.
இதனை எழுதுவது விழுப்புரம் மற்றும் உளுந்தூர் பேட்டையை இடையில்
" திரு நாவலூர் "!
என்ற இடத்தில அங்கு உள்ள பெருமாளை அர்ச்சனை செய்து கும்பிட்டு வந்த உடன் திடீர் என்று எண்ணம் தோன்றியது அதனால் கூறுகின்றேன் வாழ்கையில் எவ்வளவோ  சந்திக்க  வேண்டிய உள்ளது நாம் நல்லது தானே ஐயா செய்கின்றோம் 
அன்புடன் மாணவன்.
கண்ணன் சீதாராமன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!