மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.7.12

Astrology சந்திரனும் சட்னியும்!

Astrology சந்திரனும்  சட்னியும்!

பயிற்சிப் பாடம்

இட்லியைக் கண்டுபிடித்தது மாண்புமிகு தமிழன்தான் என்று நமக்குத் தெரியும். அதுபோல இட்லிக்கான சாம்பாரைக் கண்டுபிடித்ததும் தமிழன்தான் அதிலும் சந்தேகமில்லை. ஆனால் சட்டினியைக் கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் சொல்லலாம்

சட்டினியில்தான் எத்தனை வகைகள்! எங்கள் பகுதி வீடுகளில் அசத்தலாகச் சட்னி செய்வார்கள். விதம் விதமாகச் செய்வார்கள். அதனால் தெரியும். இட்லிக்கான சாம்பாரையும் விதம் விதமாக்ச் செய்வார்கள். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன்.

சட்னியை வகைப்படுத்தியுள்ளேன் பாருங்கள்:

1. தேங்காய் சட்னி (இதில் 4 வகைகள் உள்ளன)
2. தக்காளி சட்னி (இதில் அரைத்துக் கொதிக்க வைக்கும் சட்னி, வதக்கி   அரைக்கும் சட்னி என்று இரண்டு வகைகள் உள்ளன)
3. சின்னவெங்காயம், புளிச் சட்னி
4. கொத்தமல்லிச் சட்னி
5. பொதினாச் சட்னி
6. கசகசாச் சட்னி
7. உளுத்தம் பருப்பு சட்னி
8. கத்தரிக்காய் சட்னி,
9. உருளைக்கிழங்கு சட்னி
10. பீர்க்கங்காய் (தோல்) சட்னி
11.  பலகாய்ச் சட்னி
12. எள்ளுச் சட்னி

முதலில் தேங்காய்ச் சட்னியை எடுத்துக்கொள்வோம். எங்களூர் (கோவையில்) அன்னபூர்ணா உணவங்களில் தேங்காய்ச் சட்னி சூப்பராக இருக்கும். பொங்கல் அதைவிட சூப்பராக இருக்கும். அந்த இரண்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது கிறங்கிப் போய்விடுவீர்கள்.

நீங்கள் உணவுக்காதலராக இருந்தால், இந்தப் பிறவி எடுத்ததன் பலன் கிடைத்துவிட்டதாக அப்போது உணர்வீர்கள்!

வீடுகளில் பொதுவாகத் தேங்காயுடன் பொட்டுக்கடலையைச்
சேர்த்து விடுவார்கள். சுவை மாறிவிடும். தமன்னா தனியாக ஆடினால்
பார்க்கமுடியும். கூட்டத்தோடு (பின்னணியில் 50ற்கும் மேற்பட்ட
நடனப் பெண்களுடன்) ஆடினால் எப்படிப் பார்க்க முடியும்?

அந்தத் தேங்காய், பொட்டுக்கடலையுடன் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கும்போது ஒரு சுவை இருக்கும். வரமிளகாய் மட்டும் சேர்த்து அரைக்கும்போது சுவை வேறாக இருக்கும்.

ஒருமுறை எங்கள் பகுதி செல்வந்தர் வீட்டுத் திருமணம் ஒன்றில் காலைப் பலகாரம் சாப்பிடும்போது, தேங்காய்ச் சட்னி அற்புதமாக  இருந்தது. அதி சுவையாக இருந்தது. அத்தனை சுவையுடன் அதுவரை சாப்பிட்டதில்லை. தேங்காய் காரணமாக இருக்குமா? விடக்கூடாது  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு, சமையல் கட்டிற்குச் சென்று, சமையல் மேஸ்திரியை அணுகிப் பேச்சுக் கொடுத்தேன். தேங்காய் சட்னி சுவையாக இருப்பதன் ரகசியத்தைக் கேட்டேன்.

அவர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். சட்டென்று பதில் சொன்னார்:

”அதில் ரகசியம் ஒன்றும் இல்லை அப்பச்சி. தேங்காயுடன் முந்திரிப் பருப்பைப் போட்டு அரைத்திருக்கிறோம்.”

”முந்திரிப் பருப்பா?”

”ஆமாம். போடும் முன்பாக இளஞ்சூட்டில் நன்றாக வதக்கிவிடுவோம். ஆனால் சிவக்க விடாமல் வதக்க வேண்டும்”

”என்ன அளவு?”

”50 தேங்காய்க்கு இரண்டு கிலோ முந்திரிப்பருப்பு!”

முந்திரிப் பருப்பு விற்கிற விலையில் நமக்கெல்லாம் கட்டுபடியாகாது. ஆத்தாடி ...என்று பேசாமல் திரும்பி வந்து விட்டேன்!
--------------------------------------------------------------
’வாத்தி (யார்) இந்தச் சட்னி கதைக்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா! சந்திரன் தான் தேங்காய். மற்ற கிரகங்களை எல்லாம் இஞ்சி, பச்சை மிளகாய், வர மிளாய், முந்திரிப் பருப்பாக்கி விதம்
விதமாகச் சட்னி அரைக்கபோகிறேன்”

“எப்போது?”

“அவசர வேலை இருக்கிறது. வெளியூர்ப் பயணம். அதனால் நாளைக்கு (17.7.2012) அரைத்துப் பறிமாறுகிறேன். பொறுத்திரு ராசா!
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
2

அறிவிப்பு

நமது வகுப்பறையின் மாணவர் திரு. கண்ணன் சீதாராமன்  திருப்பதி பாத யாத்திரை செல்கிறார். சக மாணவர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பியுள்ளார். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேருமென்று கவியரசர் கண்ணதாசன் சொல்லுவார். ஆகவே வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் அவருடன் சென்று திரும்பலாம்

பாதயாத்திரை 21.7.2012 சனிக்கிழமையன்று துவங்குகிறது. அதன் விவரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்

அவ்ருடைய மின்னஞ்சல் முகவரி:   kseetharaman007@gmail.com
அலைபேசி எண்ணை அவர் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அதையும் வெளியிட்டு இருப்பேன்


அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
" திருமலா திருப்பதி பாத யாத்திரை !:, 
பற்றிய ஸ்கேன் காப்பியை வகுப்பில் ஏற்றுங்கள் . 1000 நபர்கள் வந்தாலும் பரவாக இல்லை வெங்கட் உள்ளார் .மேலும் தங்களுடைய மாணவன் இந்த
'  கண்ணன் சீதாராமன் "!
 உள்ளான் .   ஒரே ஒரு தகுதி மற்றும்  பாத யாத்திரையாக வருபவரிடம் வேண்டும் . விரத
 " கட்டுபாடும் ",  
மற்றும் வேண்டும் என்று மிகவும் தெள்ள தெளிவாக எல்லோருடைய கண்ணில் படும் அளவிற்கு தலைப்பை தாருங்கள் ஐயா !
இதனை விட மிகவும் சிறப்பான வழி  இருப்பின் அதனை கூறுங்கள் . அந்த
கட்டு பாடு
" 41 நாட்கள் மனசு சுத்தம் மற்றும் உடல் சுத்தம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி மற்ற வர்கள் அடுத்த வருடம் வாருங்கள் ",  என்று
அப்பொழுது அந்த  "  கண்ணனின் கருணை ",  இருப்பின் அனைவரையும்  அழைத்து செல்லுகின்றோம்  என்று " பாத யாத்திரை குருநாத  சுவாமி ",  கூறியதை கூறுங்கள்.
இதனை எழுதுவது விழுப்புரம் மற்றும் உளுந்தூர் பேட்டையை இடையில்
" திரு நாவலூர் "!
என்ற இடத்தில அங்கு உள்ள பெருமாளை அர்ச்சனை செய்து கும்பிட்டு வந்த உடன் திடீர் என்று எண்ணம் தோன்றியது அதனால் கூறுகின்றேன் வாழ்கையில் எவ்வளவோ  சந்திக்க  வேண்டிய உள்ளது நாம் நல்லது தானே ஐயா செய்கின்றோம் 
அன்புடன் மாணவன்.
கண்ணன் சீதாராமன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++