மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.11

Astrology: Made for each other கூட்டணி எது?

-----------------------------------------------------------------------------------------
Astrology: Made for each other கூட்டணி எது?

Astrology ஒத்துவரும் கூட்டணி எது?

கூட்டணியில் பலவகை உள்ளது.

உண்மையான கூட்டணி. சந்தர்ப்பக் கூட்டணி. காலத்தின் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணி. ஒத்துவராது என்றாலும் அதைத் தெரிந்தே அமைந்திருக்கும் கூட்டணி என்று பலவிதமான கூட்டணிகள் உள்ளன.

கிரகங்களின் கூட்டணியும் அதைப் போன்றதுதான்.

சுபகிரகங்களின் கூட்டணி ஜாதகனுக்கு நன்மைகளை அள்ளித்தரும் உண்மையான கூட்டணியாக இருக்கும். Made for each other என்று சொல்லக்
கூடிய அம்சங்கள் நிறைந்திருக்கும்

ஒரு சுபக்கிரகமும், ஒரு பாப (தீய) கிரகமும் கூட்டணி சேர்ந்தால், அது ஒத்துவராத கூட்டணியாக இருக்கும் உங்கள் மொழியில் சொன்னால்
Not made for each other என்று வைத்துக்கொள்ளுங்கள்.

சூரியனும் சந்திரனும் கூட்டாக இருந்தால், அது இரண்டாவது  வகையைச் சேர்ந்ததாக இருக்கும். ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும்போது, சூரியனுக்குப் பத்து பாகைகள் சந்திரன் தள்ளி இருப்பது நன்மையானதாக இருக்கும். அத்துடன் சூரியனைவிடச் சந்திரன் வலுவாக இருந்தால் (வலு என்றால் என்ன என்பதைப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன்) சந்திரன் கூட்டணிக் கொள்கைகளையும் மீறி ஜாதகனுக்கு நன்மையான பலன்களைச் செய்வார்.

அப்படி இல்லாவிட்டாலும், சந்திரன் தன்னுடைய மகா திசையிலும், அல்லது வேறு கிரகங்களின் மகா திசையில் தன்னுடைய புத்திக் காலங்களிலும் நன்மைகளையே செய்வார். ஏனென்றால் அவர் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள்
__________________________________________________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) என்ன பலன்களைத் தருவார் என்பதை இதற்கு முந்தைய பாடத்தில் பார்த்தோம்

அடுத்து சூரிய மகா திசையில், சந்திர புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 180 நாட்கள்  (just 180 days only) - அதாவது ஆறுமாத காலம். மொத்த காலமும் நன்மையுடையதாக மகிழ்ச்சியுடையதாக இருக்கும்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

கூறினோம் ரவிதிசையில் சந்திரபுத்தி
   குணமான மாதமது ஆறதாகும்
தேறினோம் அதன்பலனை செப்பக்கேளு
   தீங்கில்லா தனலாபம் சம்பத்துண்டாம்
ஆறினோம் வந்தபிணி தீரும் ரோகம்
   அரசரால் மகிழ்ச்சியது தானுண்டாகும்
தேறினோம் ரவிசந்திரன் பொசித்த நாளில்
   தீங்கிலா நாளென்று தெளிந்து காணே!


ஆனால் இதற்கு நேர்மாறாக சந்திரதிசையில் சூரிய புத்தி இருக்கும். தன்னுடைய மகா திசையில் சந்திரன் தன் புத்திக்காலத்தில் அளித்த நன்மைகளுக்கு பதில் நன்மைகளை சூரியன் அளிக்க மாட்டார். அவர் வழி தனிவழி

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

மானேகேள் சந்திரதிசை சூரியபுத்தி
   மரணநாள் மாதமது ஆறதாகும்
தானேதான் சத்துருவும் அக்கினியின் பயமும்
   தாபமுள்ள சுரதோஷம் சன்னிதோஷம்
ஏனோதான் காணுமடா யிறுக்கமதுவுண்டாம்
   ஏகாந்த தேகமது இருளதுவேயடையும்
தேனேகேள் லட்சுமியும் தேகமுடன் போவாள்
   திரவியங்கள் சேதமடா சிலவுடனே தீதாம்!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

29.6.11

Astrology ஆடிய ஆட்டம் என்ன?

--------------------------------------------------------------------------------------
Astrology ஆடிய ஆட்டம் என்ன?

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் ஒன்றின் தொகையறாவில் அசத்தலாக சில வரிகள் வரும். மனிதனின் நிலைப் பாட்டை மிக அற்புதமாகச் சொல்லியிருப்பார்.

வரிகளைக் கொடுத்துள்ளேன். பாருங்கள்

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?


முழுப்பாடலையும் ஒலி வடிவில் கேட்க விருப்பமா?

இதோ சுட்டி உள்ளது:
--------------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பட்டம், பதவி, பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு உள்ள காலத்தில் மனிதன் போடும் ஆட்டம் விதமாக விதமாக இருக்கும். நாம் பார்க்காத ஆட்டங்களா?

எல்லா ஆட்டங்களுமே ஒரு முடிவிற்கு வராமல் போகாது. உயிரோடு இருக்கும் போதே முடிவிற்கு வந்து விடும்

மூன்று சுபக் கிரகங்களின் தசா புத்திகளில் ஆட்டம் போடும் மனிதனை, மூன்று பாப கிரகங்கள் தங்களுடைய தசா புத்திகளில் புரட்டிப் போட்டுவிடும். அடித்து நொறுக்கிவிடும்.

கட்டிவைத்தும் அடிக்கும். தொங்க விட்டும் அடிக்கும்.

பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவன், திகார் சிறைச்சாலைக் கொசுக் கடியில் அவதிப்படவும் நேரிடும்

ஆகவே ஆட்டம் போடாமல் தர்ம சிந்தனையுடன், இறையுணர்வுடன் இருப்பதே நல்லது.

எதையும் எதிர்கொள்ளும் சமமான மனநிலை அப்போது கிடைக்கும்!
_______________________________________________________
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் சனி புத்திக்கான பலன்களையும், சனி மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

அடுத்து சுக்கிரதிசையில் புதன் புத்தி, மற்றும் கேது புத்தி. அவை இரண்டையும் தசாபுத்திகள் தொடக்கப் பகுதியில் பார்த்து விட்டோம்.

இன்று, அதற்கு அடுத்து சூரிய மகா திசையில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் நல்ல பலன்களைத் தருவார். வலு என்றால் தனது சுயவர்க்கத்தில் 5 அல்லது அத்ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும். உச்சம் பெற்றோ அல்லது கேந்திர மற்றும் திரிகோண வீடுகளில் இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவார். இது பொதுப்பலன். தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஜோதிடத்தில் குறுக்கு வழி எல்லாம் கிடையாது. அலசிப் பார்த்துத்தான் பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய திசை மொத்தம் ஆறு ஆண்டு காலத்திற்கு நடைபெறும். மற்ற கிரகங்களின் புத்திகளில் பலன்கள் வேறுபடும். ஆனால் அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) அவர் பெரிதாக நன்மைகள் ஒன்றையும் செய்ய மாட்டார். அவர் சுப கிரகம் அல்ல - அதனால் செய்ய மாட்டார்.

அவருடைய சுயபுத்திக் காலம் 108 நாட்கள்  (just 108 days only)

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

கூறப்பா கதிருக்கு வருஷம் ஆறு
   குணமுள்ள புத்திநாள் நூத்தி எட்டாகும்
பாரப்பா அக்கினியால் பீடை உண்டு
   பாங்கான அபமிருந்து பொருளுஞ் சேதம்
ஆரப்பா அறிவார்கள் பிதாமிருந்தியு
   அரிதான வாணிபம் ஜெயமாகாது நஷ்டம்
கோளப்பா கண்ணோணுவான் கனலே மீரும்
   கொடுமையுள்ள நாளென்று கூறினோமே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.6.11

Astrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

----------------------------------------------------------------------------------------
 Astrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

அதெப்படி இரவு தொடர்ந்திடும்? இரவும், பகலும் மாறி மாறித்தானே வரும்?

”இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்” என்றுதானே கவியரசர் கண்ணதாசன் எழுதினார். ஆனால் இன்னொரு கவிஞர் வேறு மாதிரி சிந்தனை செய்து எழுதினார். இரவு தொடர இந்திரனைக் காவல் வைத்தால் போதும் என்கிறார்.

சரி, இந்திரனை எப்படிப் பிடித்துக்கொண்டு வருவது? அவனுக்கு உத்தரவு போட்டு எப்படிக் காவல் செய்ய வைப்பது? அதெல்லாம் உங்கள் வேலை. அது பற்றி அந்தக் கவிஞர் ஒன்றும் கூறவில்லை.

நாயகி ஏக்கத்தில் அப்படிக் கூறுகிறாள். ஏக்கத்திற்கெல்லாம் இலக்கணம் இல்லை. அதீதக் கனவுக் கணக்கில் அது வரும். பாடலைப் பாருங்கள்:

நாயகி:
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை


நாயகன்:
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

(பாடல் ஆக்கம் கவிஞர் வாலி. திரைப்படத்தின் பெயரும் வாலி. வெளிவந்த ஆண்டு 1999. பாடியவர்கள். திருமதி அனுராதா ஸ்ரீராம் மற்றும் திரு.உன்னி கிருஷ்ணன். இசை: தேவா. நடிப்பு அஜீத், சிம்ரன்)

என்னவொரு வெளிப்பாடு பாருங்கள். நடக்காத கற்பனைதான் என்றாலும், கேட்பதற்கு சுகமாக இருக்கிறதல்லவா?

ஏ.ஸி எல்லாம் வேண்டாம். மின் வெட்டு சமயத்தில் பிரச்சினையாக இருக்கும். ஆகவே நிலவைப் பிடித்துக் கொண்டு வந்து கட்டில் காலில் கட்டி வைத்து விடு. அறை குளிர்ச்சியாக இருக்கட்டும். படுத்தால் ஆளே அமுங்கும் படியான மெத்தை வேண்டும். மேகத்தைக் கொண்டு வந்து மெத்தையாகப் போடு. எரிக்கும் சூரியனை கடலுக்குள் அமுக்கி வை. இரவு முடியக்கூடாது. கடலை விட்டு சூரியன் வெளியே தலை காட்டக்கூடாது. அந்த வேலையை இந்திரனிடம் கொடுத்துக் காவலாக இருக்கச்சொல்.

அடடா, என்னவொரு கற்பனை பாருங்கள். இது போன்ற கற்பனை எல்லாம் யாருக்கு வரும்? கவிஞர்களுக்கு மட்டும்தான் வருமா? இல்லை. காதல் வயப்பட்டுள்ள அனைவருக்குமே வரும். அது மட்டுமல்ல எட்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சமாக இருந்து அவரின் பார்வையில் இரண்டாம் வீடு இருக்கும் ஜாதகர்களுக்கும் வரும். மனகாரகன் சந்திரன் உச்சமாக இருக்கும் ஜாதகர்களுக்கும் வரும்.
------------------------------------------------------------------------------------------
அதுபோல இன்பம் தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

சந்திரனைக் கொண்டு வா சமர்த்தாய் கட்டி வை
குருவைக் கொண்டுவா கொல்லையில் நிற்க வை
காயும் சனியைக் கடலுக்குள் பூட்டிவை
சுகமாய் இருந்திட சுக்கிரனைக் காவல் வை


இதை எல்லாம் செய்தால் வாழ்க்கை சுகமாகவே - அதாவது இன்பமாகவே இருக்கும். முயன்று பாருங்கள்:-)))))
---------------------------------------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் வியாழ புத்திக்கான பலன்களையும், வியாழ மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் சனி புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
இரண்டுமே அதி நட்புக் கிரகங்கள். கேட்கவா வேண்டும்? இரண்டிலும் பலன்கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் தேடி வந்து சேரும்.

பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 38 மாதங்கள்

உண்டாகும் சுக்கிரதிசை சனியின் புத்தி
   உண்மையுள்ள மாதமது முப்பத்தெட்டு
தெண்டாடும் அதன் பலனை சொல்லக்கேளு
   திரவியமும் பூமிமுதல் சேரும்பாரு
நன்றாகும் அரசபதியாவாய் பாரு
   நன்மையுள்ள மாதர் மைந்தர் நாடுநகர் உண்டாம்
சென்றாகும் செல்வபதியாவான் பாரு
   தீர்க்கமுள்ள மன்னனெனச் செப்பலாமே!


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை சனி மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

பாழில்லா காரிதிசை சுக்கிரபுத்தி
   பாங்கான மாதமது முப்பத்தெட்டு
நாளில்லா மங்கையரும் மனமாட்சியுமாம்
   நன்றான பெருஞ்செல்வம் நாலதிலேயுண்டாம்
ஆளில்லா அரசனுடன் அனுதினமும் வாழ்வான்
   அணைகட்டு விரக்கமுடன் அலங்காரமுண்டாம்
கோளில்லா சத்துரு நோய் இல்லை பாரு
   கோகனமாது செல்வம் கொடுப்பாள் தானே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

26.6.11

எச்சதாற் காணப்படுவது எது?

--------------------------------------------------------------------------------------
எச்சதாற் காணப்படுவது எது?

வாரமலர்
------------------------------------------
இன்றைய வாரமலரை நண்பர் ‘முக்காலம்’ எழுதியுள்ளார். படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
சமீபத்தில் சென்னையில் இருந்து மதிய நேரத்தில் என் ஊருக்குப் பயணம் செய்தேன்.சரியான வெய்யில்; புழுக்கம். சென்னையைக் கடக்கும் முன்னால் இடை வழியில் வயதான தம்பதியர் பேருந்தில் ஏறினார்கள். அன்று முகூர்த்த நாள் ஆகையால் பேருந்து நிரம்பி வழிந்தது. அந்தப் பெரியவர் தோளில் கனமான பையும், கையில் தடியுமாகத் தடுமாறிக் கொண்டு நின்றார். அவரை அழைத்து என் இருக்கையை அவருக்கு அளித்துவிட்டு நான் நின்று கொண்டேன். நன்றி சொல்லிவிட்டு அமர்ந்த பெரியவர் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து என்னுடன் பேசத் துவங்கினார்.

"சாரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! நங்கந‌ல்லூரா?"

"நங்கநல்லூருக்கு அடிக்கடி வருவேன். ஆனால் நான் நிரந்தரமாகச் சென்னையில் வசிக்கவில்லை."

"எந்த ஊருன்னு சொல்ல‌லாமோ?"

"பேஷா!சத்தியமங்க‌லத்திற்குப் பக்கத்தில் ஒரு கிராமம்."

"அப்படியா?சத்தியில் வக்கீல் ராகவனைத் தெரியுமோ? அவர் பிள்ளையும் வக்கீலாத்தான் பிராக்டீஸ்பன்றான்."

"நன்னாத்தெரியுமே! அவர்தான் எங்க‌ள் குடும்ப வக்கீல். தாத்தா காலத்திலிருந்து நிலம் நீச்சு அதிகம். அதைக் கட்டிக் காப்பாத்த அடிக்கடி சட்டத்தை உரசிக்க வேண்டியுள்ளது. அதனாலே வக்கீல் ராகவனை எங்க எஸ்டேட்
அட்வகேட்டா வைச்சுன்டுட்டோம்."

"ரொம்ப சந்தோஷம்! பாத்தேளா பேச்சுக் குடுத்தா நெருங்கி வந்துட்டோம். ராகவன் எனக்கு என்ன‌ சொந்தம் தெரியுமோ...?"

பெரியவர் சொன்ன சொந்த முறை எனக்கு ஒன்றும் விளங்க‌வில்லை.

என் பாட்டி சொல்வது போல,"ஆச்சாளுக்குப் பூச்சா மதனிக்கு ஒடப்பொறந்தா; நெல்லுக் குத்தற நல்லுவுக்கு நேரே ஓர்ப்படியா.."

அந்த சொந்தத்தை நான் சொன்னால் என் முகவரியை எப்படியாவது கண்டுபிடித்து என் வீடு தேடி வந்து கல் எறிந்தாலும் எறிவீர்கள்.அதனால் அதை அப்படியே விட்டுவிடுவோம்.

ராகவனைப்பற்றி நினைவு படுத்தியவுடன் என் மூளை ஆகிய கணினி 'பூட்' ஆகிவிட்டது.நினைவு மேலெழுந்து வந்தது.

ராகவன் ஊரிலேயே பெரிய வக்கீல். வயதிலும் மூத்தவர். உயர்நீதி மன்றத்துக்கு அடிக்கடி சென்று வாதாடக் கூடியவர். உச்ச நீதி மன்ற வழக்குறைஞர்களுடன் நல்லதொடர்பு. சத்தி நல்ல பணக்கார ஊர். வழக்கு வியாஜ்ஜியத்துக்குக் குறைவில்லை.அதனால் ராகவனும் வக்கீல் தொழிலிலேயே நிறைய சம்பாதித்து
செழிப்பாக வாழ்ந்தார்.

ராகவனுக்கு ஒரு பெண்.நல்ல அழகி.தன் அந்தஸ்த்திற்குத் தகுந்த மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தார். மண நாளும் வந்தது . காலையில் முகூர்த்தம் முடிந்து பெண் கழுத்தில் தாலியும் ஏறிவிட்டது. உள்ளூர்
பிரமுகர்கள் எல்லாம் வந்து வாழ்த்திப் பரிசளித்து, விருந்துண்டு தேங்காய்களைக் கவர்ந்து கொண்டு விடை பெற்றுச் சென்று விட்டனர்.

மாலையில் நலங்கு என்ற சம்பிரதாயத்திற்காகப் பெண் மாப்பிள்ளையை அழைத்து வரவேண்டும்.மூன்றாவது மாடியில் தங்கியிருந்த மணமகனைத் தோழியருடன் சென்று நலங்குக்கு அழைதாள் மணப்பெண்.சம்பிரதாயமாகக் கொஞ்சம் பிகு செய்து கொண்ட மாப்பிள்ளை சம்மதித்து எழுந்து பெண்ணுடன் படி இறங்கினார்.சற்றும் எதிர்
பார்க்காமல் கால் இடறிப் படிகளில் உருண்டார். தலையில் அடிபட்டு பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டது உடனே காரில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

மருத்துவமனையில் "வரும் போதே இறந்துவிட்டார்" என்று பிரகடனம் செய்தார்கள்.

ஊர் முழுவதும் செய்தி பர‌வியது.ஊரே அழுதது. சில விஷமிகள் "பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. கட்டாயக் கல்யாணமாதலால் பெண்ணே தள்ளிவிட்டு விட்டாள்." என்று கட்டி விட்டு விட்டார்க‌ள்.பல விதமான
கதைகள் உலவின.பத்திரிகையில் வரும் கற்பனைத் திகில் கதைகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போன்ற பல திடுக்கிடும் சம்பவங்களுடன் பல மாதங்கள் இது பற்றி சந்துமுனைகளில் அலசப்பட்டது.
************************************************************************
இப்போது பேருந்தில் கூட்டம் குறைந்துவிட்டது.பெரியவரிடம் எனக்கும் அமர இடம் கிடைத்தது.

"என்ன பேச்சையே காணும்."என்று மீண்டும் துவங்கினார் பெரியவர். மனதில் ஓடிய பழைய‌ காட்சிகளை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்த போதே அடுத்த தலைப்புக்கு மாறினார் பெரியவர்.

"நாங்கள் உள்ளகரத்தில் இருக்கோம்.ஆயில் மில் பேருந்து நிலையம் தெரியுமா? அது பக்கத்தில் டாக்டர் ராஜகோபாலன் தெரு."

மீண்டும் எனக்கு நினைவுக்கு வேலை கொடுத்தார் பெரியவர். டாக்டர் ராஜகோபாலன் வேறு யாருமல்ல. என்னுடைய பெரிய மாமனார்.சுமார் 25 வருடத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டார்.

"நல்ல டாக்டர் அவர். அந்தக் காலத்து எல் ஐ எம்.அதிகமாக மருந்து கொடுத்து செலவு வைக்க மாட்டார். கை வைத்தியம் போல எதோ கொஞ்சம் மருந்திலேயே குணப்படுத்தி விடுவார்.பணமும் இப்போ மாதிரி அதிகம் பிடுங்க‌ மாட்டார். சொல்பத் தொகைதான் கொடுப்போம். கொடுத்ததை வாங்கிக்கொண்டு உண்மையான சேவை
செய்வார்" என்றார் பெரியவர். "அவருடைய நினைவாக தெருவுக்குப் பெயர் வைத்துள்ளோம்."

என்னுடைய உறவினர் ஒருவர் தான் வழ்ந்த பகுதியில் இன்னும் புகழோடு மக்கள் மனதில் நிறைந்து இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.அந்த மகிழ்ச்சியில் மூழ்கி டாக்டர் ராஜகோபாலனின் நல்லியல்புகளைப் பற்றி சிந்தனை ஓடியது
************************************************************************
"என்ன யோசனை ?" மீண்டும் சிந்தனையைக் கலைத்தார் பெரியவர்.

"உங்க‌ளுக்கு நங்கந‌ல்லூர் நல்ல பழக்கம் என்றால், எஞ்சினியர் கந்தசாமியைத் தெரியுமோ?" என்று பேச்சுக்கொடுத்தார் பெரியவர்.

என்ன ஆச்சரியம்!? அவரையும் நான் அறிவேன்.

அது ஒரு தனிக்கதை.

வீட்டுக் கடன் கொடுப்பது பரவலாக்கப்பட்ட நேரத்தில் வீடு கட்ட ஒப்பந்தக்காரராக  இயங்கியவர் எஞ்சினியர் கந்தசாமிதான்.நிறைய வீடுகள் கட்டப்பட்டன.நங்கநல்லுரில் உள்ள தனி வீடுகள் பலதும் கந்தசாமி கட்டியதுதான். நல்ல சம்பாத்தியம்.

என்னமோ ஒரு வக்கிர புத்தி.குடும்பம், குழந்தைகளைத் தவிக்க விட்டு,அவரிடம் வேலைக்கு வந்த ஒரு கூலிக்கார பெண்ணுடன் தலைமறைவு ஆனார் எஞ்சினியர்.அரபு நாட்டுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்பட்டது.
************************************************************************
சிந்தனையில் இருந்த என்னை "சார், சார் நான் இறங்க‌ வேண்டிய இடம் வந்தாச்சு. போயிட்டு வரேன்"என்று உரக்கக் கூவினார் பெரியவர்.

"ரொம்ப சிந்தனை செய்கிறீர்கள் சார். மூளை கொதிச்சுப்போயிடும். சிந்தனையை ரொம்ப ஓட்டாதீர்கள்."என்று இலவச‌ அறிவுரை வழங்கிவிட்டுப் போனார் பெரியவர்.

மூன்று விதமான ஹானஸ்டு ஃப்ரஃபொஷனில் இருந்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக நினைவில் நிற்கிறார்கள்.

"எச்சதாற் காணப்படும்"என்று மனதில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. ஏன் என்று சொல்லுங்களேன்.
‍++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிகு:டாக்டர் ராஜகோபாலன் மட்டும் உண்மைப்பெயர். மற்றவை ஊர், பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. சம்பவங்கள் நடந்தவை.
ஆக்கம்: 
முக்காலம் 
(புனைப்பெயர் - உண்மைப் பெயரை அவர் தரவில்லை )

       

வாழ்க வளமுடன்!

24.6.11

சீடனைத் தேடிவந்த சுவாமிகள்!

-----------------------------------------------------------------------------------------
சீடனைத் தேடிவந்த சுவாமிகள்!

பக்தி மலர்
---------------------------------
இன்றைய பக்தி மலரை நம் வகுப்பறை மூத்த மாணவரின் கட்டுரை ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------
என் தந்தையாரைப் பற்றி நான் அதிகம் எதுவும் இதுவரை எழுதவில்லை. அதற்கான காரணம் பல இருந்தாலும், மனதில் ஏற்பட்ட தயக்கம்தான் முதல் காரணம்.

மஹாகவி பாரதியாரைப்பற்றி அவருடைய மனைவியார் எழுதும்போது, "வானத்தில் இருந்து ஏதோ ஒன்று இறங்கி வந்து என்னுடன்  சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, தன் பணி முடிந்தவுடன் திரும்பித் தான் வந்த இடத்திற்கே
போய்விட்டது" என்பது போல எழுதியுள்ளார்.

என் தந்தையாரைப்பற்றியும் எனக்கும் அந்த விதமான பிரமிப்பு உள்ளதால், ஏதாவது எழுதி அவருடைய  பெருமைக்கு பங்கம் வந்து விடக் கூடாதே என்ற தயக்கம்தான் காரணம்.

இப்போது அவ‌ர் வாழ்வில் ந‌ட‌ந்த‌ ஒரு நிக‌ழ்ச்சியை ம‌ட்டும் பார்ப்போம்.

அவ‌ர் ஒரு சுத‌ந்திர‌ப்போராட்ட‌ வீர‌ர் என்ப‌தை முன்ன‌ர் ஒரு ப‌திவிலேயே குறிப்பிட்டு இருந்தேன்.சுத‌ந்திர‌ப் போராட்ட‌த்திற்குப் பின்ன‌ர் அவ‌ர் அர‌சிய‌லில் இருந்து முற்றிலும் வில‌கி காந்திய‌ கிராம‌ நிர்மாண‌ப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டார்.

அந்த‌ ச‌ம‌ய‌ம் அவ‌ர் ந‌டு‌ வ‌ய‌தை அடைந்து விட்ட‌தால் ஆன்மீக‌ நாட்ட‌மும் அதிக‌ரித்துவிட்ட‌து. ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌  ம‌ட‌ம், மிஷ‌ன் ச‌ந்நியாசிக‌ளில் 800 பேருக்கு மேல் அவ‌ர் ச‌ந்தித்து இருக்கிறார்.மேலும் ப‌ல‌ சாது ச‌ந்நியாசிக‌ள்
ப‌ரிச்ச‌ய‌மும் ஏற்ப‌ட்ட‌து.

அப்பா‌வுக்கு ஏற்ப‌ட்ட‌ தொட‌ர்பில் திருக்கோயிலூர் ஞானாந‌ந்த‌ சுவாமிக‌ள் மிக‌மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்.ஒரு  கால‌க‌ட்ட‌த்தில் அந்த‌ சுவாமிக‌ளின் ந‌ம்பிக்கைக்கு உரிய‌ ஒரு சீட‌ராக‌ அப்பா‌ விள‌ங்கினார்.

சுவாமிக‌ளுட‌ன் அப்பாவுக்கு ஏற்ப‌ட்ட‌ ‌ முத‌ல் ச‌ந்திப்பு ப‌ற்றி ப‌திவு செய்வ‌தே இக்க‌ட்டுரையின் முக்கிய‌ நோக்க‌ம்.

ஆட்ட‌யாம்ப‌ட்டி என்று சேல‌த்திற்கு அருகில் ஓர் ஊர்.அங்கே திரு க‌ந்த‌சாமி முத‌லியார் என்று ஒரு ந‌ண்ப‌ர்  அப்பா‌வுக்கு உண்டு. அவ‌ர் அடிக்க‌டி அப்பாவை சேல‌த்தில் வைத்துச் ச‌ந்திப்பார். ச‌ந்திக்கும் போதெலாம் த‌ங்க‌ள்  ஊரில் உள்ள‌ ம‌ட‌த்தைப் ப‌ற்றியும், அத‌ற்கு சித்த‌லிங்க‌ ம‌ட‌த்தில் இருந்து சுவாமிக‌ள் ஒருவ‌ர் வ‌ந்து செல்வ‌து ப‌ற்றியும் கூறிக் கொண்டே இருப்பார்.அந்த‌ சுவாமிக‌ள் நீண்ட‌ கால‌ம் ஆட்டையாம்ப‌ட்டியில் இருந்த‌தாக‌வும்,  பின்ன‌ர் தென்னாற்காடு மாவ‌ட்ட‌ம் சித்த‌லிங்க‌ ம‌ட‌த்திற்குச் சென்று த‌ங்கிவிட்ட‌தாக‌வும் கூறி வ‌ருவார்.

"நேற்று கூட‌ சுவாமிக‌ள் இங்கே வ‌ந்திருந்தாரே!" என்று சுவாமிக‌ள்  வ‌ந்து விட்டுப் போன‌ பின்ன‌ர் க‌ந்த‌சாமி  முத‌லியார் வ‌ந்து சொல்வார்.

அப்பா‌வுக்கு சுவாமிக‌ளைத் த‌ரிசிக்க‌ முடிய‌வில்ல‌யே என்று ஆத‌ங்க‌மாக‌ இருக்கும்.த‌ரிசிக்க‌ வேண்டும் என்ற‌  ஆவ‌லும் மேம்ப‌டும்.

"இதோ பாரும் முத‌லியார் !சும்மா வ‌ந்து இது போல‌ சொல்வ‌தில் ஒன்றும் ப‌ய‌னில்லை.சுவாமிக‌ள் வ‌ந்த‌வுட‌ன்  என‌க்குத் த‌க‌வ‌ல் சொல்ல‌ வ‌ழியைப் பாரும்.இல்லாவிட்டால் அந்த‌ சுவாமிக‌ளைப் ப‌ற்றி என்னிட‌ம் ஒன்றும் இனி
பேச‌வேண்டாம்."

"கோவ‌ப்ப‌டாதீர்க‌ள் கிருஷ்ண‌ன்! சுவாமிக‌ளைத் தாங்க‌ள் த‌ரிசிக்க‌ கூடிய‌விரைவில் ஏற்பாடுசெய்கிறேன்."

முத‌லியார் தான் சொன்ன‌ சொல்லை அவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் நிறைவேற்றுவார் என்று அப்பா எதிர்பார்க்க‌வேவில்லை.

ஒரு வார‌ம் சென்று அப்பா வேலை பார்க்கும் க‌த‌ர்க‌டை வாயி‌லில் ஒரு குதிரை வ‌ண்டி வ‌ந்து நின்ற‌து.அதில்  முன்புற‌மிருந்து முத‌லியார் 'தொப்'பென்று குதிக்கிறார்.பின்புற‌மிருந்து காவி உடை த‌ரித்த‌ சுவாமிக‌ள் ஒருவ‌ர்  தானும்  'தொப்'பென்று குதிக்கிறார். இருவ‌ருமாக‌ க‌த‌ர் க‌டைக்குள் ச‌டாரென‌ மின்ன‌லைப்போல பிர‌வேசிக்கிறார்க‌ள்.

"சாமி! சாமி! இதான் சாமி!" என்று முத‌லியார் ப‌ட‌ப‌ட‌க்கிறார்.

நிமிர்ந்து பார்த்‌த‌ அப்பா அப்ப‌டியே பிர‌மித்து விட்டார‌ம். சுவாமிக‌ளின் அருள் பார்வையால் காந்த‌ம் ஊசியை  இழுப்ப‌து போல‌ சுவாமிக‌ளின்பால் அப்பா ஈர்க்க‌ப்ப‌ட்டாராம்.என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் திகை‌த்து 
விட்டார‌ம் அப்பா.

பிர‌மிப்பில் இருந்த‌ அப்பாவை நோக்கி சுவாமிக‌ள்,"ப‌க்த‌கோடியைக் காண‌ சுவாமிக்கு நீண்ட‌ நாளாக‌ ஆவ‌ல். இன்றுதான் திருவ‌ருள் கூட்டிவைத்த‌து" என்றாராம்.

எப்ப‌டி இருக்கிற‌து பாருங்க‌ள்! அப்பாதான் சுவாமிக‌ளை த‌ரிசிக்க‌ ஆவ‌லாக‌ இருந்தார். ஆனால் சுவாமிக‌ள்

சொல்கிறார் த‌ன‌க்கு 'ஆவ‌ல்' என்று!இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆவ‌ல்க‌ளை சுவாமிக‌ள் வைத்துக்கொள்ள‌லாம் போல‌!

சுவாமிக‌ளின் க‌ருணையைக் க‌ண்டு  அப்பா மெழுகாக‌ உருகிவிட்டார். அங்கேயே ‌ விழுந்து சுவாமிக‌ளை  ந‌ம‌ஸ்க‌ரித்தார் அப்பா.

"சுவாமி விருத்தாச‌ல‌ம் ர‌யிலில் செல்கிறார். ர‌யிலுக்கு நேர‌மாகிவிட்ட‌தால் உட‌னே செல்கிறோம்" என்று கூறிவிட்டு  ப‌திலுக்குக் காத்திராம‌ல் முத‌லியாரும் சுவாமிக‌ளும் ப‌டியிற‌ங்கிக் குதிரைவ‌ண்டியில் ஏறிப் ப‌ற‌ந்து விட்டார்க‌ள்.

திகை‌ப்பில் இருந்த‌ அப்பா சுய‌ நினைவுக்கு வ‌ந்து இது என்ன‌ க‌ன‌வா அல்லது நினைவா என்று த‌ன்னைத்தானே  கிள்ளிப் பார்த்துக்கொண்டு, 'சட்'டென‌ முடிவெடுத்துத் தானும் ர‌யில் நிலைய‌த்திற்கு ஓடியிருக்கிறார். போகும்போது
ப‌ழ‌ங்க‌ளை வாங்கிச்சென்று இருக்கிறார்.

விருத்தாச‌ல‌ம் பாச‌ஞ்ச‌ர் வ‌ண்டியில் ஏறி அம‌ர்ந்து இருந்த‌ சுவாமிக‌ளிட‌ம் ப‌ழ‌ங்க‌ளைக் கொடுத்து  மீண்டும் ஆசி  பெற்று இருக்கிறார்.

"ந‌ல‌மாக‌‌ இருங்க‌ள். அடிக்க‌டி சுவாமியை வ‌ந்து பார்க்க‌வும்" என்று‌ கூறியுள்ளார் சுவாமிக‌ள்.

அத‌ன் பின்ன‌ர் சுவாமிக‌ளுட‌ன் அப்பாவின் தொட‌ர்பு நீடித்த‌தாக‌ இருந்த‌து.

திருக்கோயிலூரில் இருந்து தின‌மும் யாராவ‌து அப்பா‌வைச்  ச‌ந்திக்க‌ சேல‌ம் வ‌ருவார்க‌ள். எங்க‌ள் இல்ல‌த்தில்  த‌ங்குவார்க‌ள்.இல்ல‌த்தில் எப்போதும் சுவாமிக‌ளைப் ப‌ற்றிய‌ பேச்சாக‌வே இருக்கும்.‌

இதுதான் த‌டுதாட்கொள்ளுத‌ல் என்ப‌தா?

குரு த‌க்க‌ த‌ருண‌த்தில் சீட‌னின் பாக்குவ‌மான‌ நிலை அறிந்து தானாக‌வே வ‌ந்து சீட‌னின் பொறுப்பை ஏற்பார்  என்ப‌து அப்பாவின் வாழ்வில் நிஜ‌மாயிற்று.

சுவாமிக‌ளின் அருட்க‌டாட்ச‌ம் கிடைத்த‌ பின்ன‌ர் எஙங்க‌ள் இல்ல‌ம் ப‌ல‌ முன்னேற்ற‌ங்க‌ளைக் க‌ண்ட‌து.

ச‌மாதியான‌ சுவாமிக‌ளைப் பிரிய‌ம‌ன‌மில்லா ப‌க்த‌ர்க‌ள் அவ‌ர் பூத‌ உட‌லை வைத்துக்கொண்டு 3 நாட்க‌ள் அவ‌ர்  உயிர்த்தெழுவார் என்று காத்து இருந்த‌ன‌ர்.

அப்போதைய‌ ஐ ஜி பொன் ப‌ர‌ம‌குருவும் அப்பாவும்தான் சுவாமிக‌ள் இனி திரும்ப‌மாட்டார், அட‌க்க‌ம் செய்வ‌தே  ச‌ரி என்ற‌ முடிவினைத் துணிந்து ப‌க்த‌ர்க‌ளிட‌ம் சொல்லி ஒப்புத‌ல் பெற்ற‌ன‌ர்.

த‌ன் இறுதி நாட்க‌ள் வ‌ரை சுவாமிக‌ளுட‌ன் ஆன‌ த‌ன் அனுப‌வ‌த்தைப் பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் எல்லாம் அப்பா  சொல்லிவ‌ந்தார்.

குருவ‌ருள் பெற்று அனைவ‌ரும் உய்வோம்.

வாழ்க‌ ச‌த்குரு ஞானாந‌த‌ர் புக‌ழ்!

நன்றி, வணக்கத்துடன்,
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி


 ஞானானந்தா சுவாமிகளுடன் எனது பெற்றோர்கள்
----------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

23.6.11

Astrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்?

----------------------------------------------------------------------------------------
 Astrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் ராகு புத்திக்கான பலன்களையும், ராகு மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் வியாழ புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
இரண்டுமே சுபக்கிரகங்கள் கேட்கவா வேண்டும்? இரண்டிலும் பலன்கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் வரிசையில் (Queue) வந்து சேரும்.

பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 32 மாதங்கள்

காணவே சுக்கிரதிசை வியாழபுத்தி
   கனமான மாதமது முப்பத்தியிரண்டு
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
   தோகையரும் மங்களமும் சுபயோகமாகும்
பேணவே பெருஞ்செல்வம் பெருகும்பாரு
   பெரிதான புத்திரனும் பெண்களுண்டாகும்
நாணவே நாடுநகரம் உண்டாகும்பாரு
   நன்மையுடன் வாகனமும் நடப்புடனே உண்டாம்


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை வியாழ மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

போமென்ற வியாழதிசை சுக்கிரபுத்தி
   பொருள்காணு மாதமது முப்பத்தியிரண்டு
ஆமென்ற அதன்பலனை சொல்லக்கேளு
   அருளான லெட்சுமியும் அன்புடனே சேர்வாள்
சுபமென்ற சோபனமும் மனமகிழ்ச்சியுண்டாம்
   சுகமான கன்னியுடனே சுகமாக வாழ்வான்
நாமென்ற நாடுநகர் கைவசமேயாகும்
   நன்றாக அவனிதனில் நன்மையுடன் வாழ்வான்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

22.6.11

Astrology உடன்கேடு எப்போது வரும்?

----------------------------------------------------------------------------------
Astrology உடன்கேடு எப்போது வரும்?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் செவ்வாய் புத்திக்கான பலன்களையும், செவ்வாய் மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்
---------------------------------------------------------------
ஒன்று சுபக்கிரகம். ஒன்று தீயகிரகம். பலன்கள் நன்மையுடையதாக இருப்பதில்லை. பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 36 மாதங்கள்

பாரப்பா சுக்கிரதிசை ராகுபுத்தி
  பாங்கான மாதமது முப்பத்தாறாகும்
சேரப்பா அதன்பலனை செப்பக்கேளு
  சிற்றேகம்காமாலை ஜெயமும் நோவாம்
ஆரப்பா அரசர்பகை அபவிருந்துமாமே
  அன்பான தாய்தந்தை அடவுடனே சாவாம்
மேரப்பா மேகமதால் ரோகமுண்டாம்
  மேலெல்லாம் சிரங்கு குட்டம் ஆவான்பாரே!


அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு தீய பலன்களை ராகு மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

காணவே ராகுதிசை சுக்கிரபுத்தி
  கணக்கானமாதமது ஆறாறாகும்
தோணவே அதன்பலனை சொல்லக்கேளு
  தோகையர்கள் தன்னாலே சுகமாகும்பாரு
பூணவே பூமிமுதல் பொருளுஞ்சேதம்
  புகழ்பெற்ற அரசரால் சந்தோஷமாகும்
ஊணவே வியாதியது பீடிப்பாகும்
  உடன்கேடு வந்ததனால் கலகமாமே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

18.6.11

நீங்களும் கடவுள்தான்!

--------------------------------------------------------------
நீங்களும் கடவுள்தான்!

வாரமலர்
------------------------------------------------
ஞாயிறன்று வரவேண்டிய வாரமலர் இன்றே வருகிறது. வாத்தியார் இரண்டு நாட்களுக்கு வகுப்பறைக்கு ’கட்’. அதாவது வெளியூர்ப் பயணம். ஆகவே அது இன்றே பதிவிடப்பெறுகிறது. Auto posting  முறையில் வெளியிடலாமே? அதில் ஒரு சிரமம் உள்ளது. கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களைப் பதிவிற்கு அனுப்ப முடியாது. இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுமே? கட்டுரையாளரின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வேண்டு மென்றால், இன்று பதிவிடுவதுதான் நல்லது. இன்று இரவுதான் பயணம். ஆகவே இன்று 9:00 PM வரை வரும் பின்னூட்டங்களைப் பதிவிற்கு அனுப்பி வைக்க முடியும். ஆகவே படித்து மகிழுங்கள். பின்னூட்டம் இட்டு எழுதியவரையும் மகிழ்வுறச் செய்யுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
சமீபத்தில் தன் பூதவுடலை விட்டு புகழுடம்பு எய்திவிட்ட சத்திய சாய்பாபாவுடன் என் மூத்த‌ சகோதரர் முனைவர் திரு கண்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இது 1976ல் நடந்த நிகழ்ச்சி.

அப்போது என் அண்ணன் கண்ணன் அவர்கள் பெங்களூரு டாட்டா இன்ஸ்டிட்யூட் என்று அழைக்கப்படும், ஐ ஐ எஸ்சி யில் முனைவர் ப‌ட்டம் பெற ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.

அங்கே பலதரப்ப‌ட்ட குழுக்கள் உண்டு.ஓர் ஆன்மீகக் குழுவுடன் அண்ணன் தொடர்பில் இருந்தார்கள்.

அந்த‌ ஆன்மீக‌க் குழுக்கார‌ர்க‌ள் ஒரு விடுமுறை நாள் அன‌று புட்ட‌‌ப‌ர்த்தி சாய்பாபாவை த‌ரிசிக்க‌ ஏற்பாடு செய்தார்க‌ள். அண்ண‌னும் அந்த‌க்குழுவுட‌ன் சென்றுள்ளார்.

பொது த‌ரிச‌ன‌த்திற்குப் பின்ன‌ர் பாபாவுட‌ன் த‌னிச் ச‌ந்திப்புக்கு இவ‌ர்க‌ளுக்கு அனும‌தி கிடைத்துள்ள‌து. பாபாவுட‌ன் பேச‌வும் கேள்விக‌ள் கேட்க‌வும் ச‌ந்தேக‌ம் தெளிய‌வும் ஏற்பாட‌கியிருந்த‌து.

அறைக்குள் நுழைந்த‌வுட‌னேயே, இந்த‌ ஆய்வாள‌ர்க‌ளுக்குத் த‌லைவ‌ராக‌ப்போன‌ 

பேராசிரிய‌ருக்கு காற்றில் கையைச் சுழ‌ற்றி மோதிர‌ம் வ‌ர‌வ‌ழைத்துக்கையில் 
அணிவித்து உள்ளார் பாபா.பார்த்த‌ இவ‌ர்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌ம் உண்டாயிற்று

"பாபா!இது ஓர் அற்புத‌ம்தானே?" ....இது ஓர் அன‌ப‌ரின் கேள்வி.

"இருக்க‌லாம்" ....இது பாபா.

"அப்ப‌டியானால் இதை எப்ப‌டி பாபா நினை‌த்த‌வுட‌ன் உருவாக்க‌ முடிகிற‌து?"

"நீங்க‌ள் எல்லோரும் விஞ்ஞானிக‌ள்.உங்க‌ளுக்குத் தெரியும் ஒன்றை உருவாக்க‌வும் முடியாது, அழிக்க‌வும் முடியாது.ஒன்று ம‌ற்றொன்றாக‌ மாறுமே அல்லாது புதிதாக‌ ஒன்று உருவாக‌ முடியாது. எல்லாம்  இருப்ப‌தே. பாபாவால் அத‌னை வேண்டும் போது வெளிக் காண்பிக்க‌ (project) முடியும். அவ்வ‌ள‌வே."

"இப்ப‌டிப்ப‌ட்ட‌ அற்புத‌ங்க‌ள் செய்ய‌த்தான் வேண்டுமா?"

"இந்த‌ச் செய‌ல்க‌ள் அத‌ற்கான‌ தேவை இருக்க‌க் கூடிய‌ சாதார‌ண‌ ப‌க்த‌ர்க‌ளுக்காக‌ச் செய்ய‌ப்ப‌டுகிற‌து.உங்க‌‌ளுக்கு இந்த‌ அதிச‌ய‌ங்க‌ளில் நாட்ட‌ம் இல்லை எனில் விட்டு விடுங்க‌ள்.ஆனால் பாபா ம‌ற்றொரு அதிச‌ய‌த்தை எப்போதும் நிக‌ழ்த்திக் கொண்டு இருக்கிறார். அத‌னை ம‌ன‌தில் வாங்கிக் கொள்ளுங்க‌ள்.எப்போதும் பாபா ம‌ல‌ர்ந்த‌ முக‌த்துட‌ன் ப‌க்த‌ர்க‌ளைச் ச‌ந்திக்கிறார். துக்க‌ப்ப‌ட்டு, வாழ்க்கைத் துன்ப‌ங்க‌ளில் அடிப‌ட்டு வ‌ரும் ப‌க்த‌ர்க‌ளுக்கு பாபாவின் ம‌ல‌ர்ந்த‌ ம‌ந்த‌காச‌மான‌ முக‌ம் ஆறுத‌லை அளிக்கிற‌து. அதுவே பாபாவின் முக்கிய‌மான‌ அதிச‌ய‌ம். பாபாவின் அன்பு என்னும் அதிச‌ய‌த்தை,அற்புத‌த்தைக் காணுங்க‌ள். முடிந்தால் நீங்க‌ளும் அத‌னைக் க‌டைப்பிடியுங்க‌ள். உங்க‌ளாலும் அன்பு செலுத்த‌ முடிந்தால் ப‌ல‌ அதிச‌ய‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌தைக் காண‌ முடியும்."

"பாபா தாங்க‌ள் க‌ட‌வுளா?"

"ஆம்!நான் க‌ட‌வுள்தான்! எந்த‌ அள‌வு நீங்க‌ள் க‌ட‌வுளோ அந்த‌ அள‌வு நானும் க‌ட‌வுள்தான். நான் க‌ட‌வுள் என்ற‌ உண்மை என‌க்குப் புல‌னாகிவிட்ட‌து. அத‌னால் என‌க்குச் ச‌ந்தேக‌ம் எழ‌வில்லை. நீங்க‌ள் உங்க‌ளைக் க‌ட‌வுளாக‌ உண‌ர்ந்து கொள்ளும் ப‌க்குவ‌ நிலையை இன்னும் அடைய‌வில்லை.ஆக‌வே த‌ன்னைக் க‌ட‌வுள் என்று உண‌ர்ந்த‌வ‌ரின் சொற்க‌ளில் உங்க‌‌ளுக்கு ந‌ம்பிக்கை ஏற்ப‌ட‌வில்லை."

இன்னும் ப‌ல‌ கேள்விக‌ளுக்கும் பாபா பொறுமையாக‌ப் ப‌தில் அளித்து உள்ளார்.  பாபாவின் தெலுங்கை அவ‌ருடைய‌ சீட‌ர் ஒருவ‌ர் ஆங்கில‌த்தில் மொழிபெய‌ர்த்துள்ளார். மொழிபெய‌ர்ப்பாள‌ர் செய்யும் த‌வ‌றான‌ பொருள் வ‌ரும்ப‌டியான‌ மொழிபெய‌ர்ப்பை பாபாவே ச‌ரியாக‌ப் புரியும் ப‌டிக்கு ஆங்கில‌ச் சொற்க‌ளை கூறி விள‌க்கியுள்ளார்.

அந்த‌ த‌ரிச‌ன‌ம் ம‌ன‌தைவிட்டு நீங்காத‌ ஒன்றாக‌ ஆன‌து. அடிக்க‌டி நினைவு கூர்ந்து என் அண்ண‌ன் அவ‌ர்க‌ள் மீண்டும் மீண்டும் இதைக் கூறுவார்க‌ள்

அத‌னை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொண்டேன்.க‌ருத்தூன்றிப் ப‌டித்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் பாபாவின் அருளாசி கிடைக்க‌ப் பிரார்த்திக்கிறேன்

அன்புடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி

வாழ்க வளமுடன்!

17.6.11

என்றும் இனிக்கும் காட்சி எது?

-----------------------------------------------------------------------------------
என்றும் இனிக்கும் காட்சி எது?

பக்தி மலர்

வேல் வந்து வினை தீர்க்க பாடல்
பாடியவர்கள்:  சூலமங்கலம் சகோதா¢கள்
------------------------------------------------------------

வேல் வந்து வினை தீர்க்க
மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )

பால் கொண்டு நீராட்டிப்
பழம் தந்து பாராட்டி
பூமாலைப் போட்டேனடி
பூமாலைப் போட்டேனடி
திருப்புகழ் மாலைக் கேட்டேனடி
(வேல் வந்து ... )

பங்குனியில் உத்திரத்தில்
பழநி மலை உச்சியினில்
கந்தன் என்னைக் கண்டானடி
கந்தன் என்னைக் கண்டானடி
எந்தன் சிந்தையில் நின்றானடி

வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி
(வேல் வந்து ... ).


வாழ்க வளமுடன்!
அன்புடன்
வாத்தியார்

16.6.11

Short Story வாங்கி வந்த வரம்


---------------------------------------------------------------------------
 Short Story வாங்கி வந்த வரம்
   
     எங்கள் ஊர் முழுக்க இதே பேச்சுத்தான். பாதிப் பேர் முதலில் நம்பவில்லை. உண்மையைத் தெரிந்து கொண்டவர்களுக்குத் திகைப்பாக இருந்தது.

     இருக்காதா பின்னே?

     இதுவரை ஒரு பத்து ரூபாய்கூட தான தர்மம் பண்ணித் தெரியாத கருப்பஞ் செட்டியார் திடீரென்று ஒரு கோடி ரூபாயை ஊர்ப் பொது நிதிக்குக் கொடுத்திருக்கிறாறென்றால் அது சாதாரணமான விஷயமா என்ன?

     சச்சின் டென்டூல்கர் ஔப்பனிங் பௌலராக மாறி முதல் மூன்று பந்தில் மூன்று விக்கட்டுகளைச் சாய்த்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அந்தச் செய்தி!

     மாவன்னா வீட்டுக் கல்யாணத்திற்காக ஊருக்கு வந்திருந்தேன். திருமண மண்டபத்தில் எல்லோரும் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இன்னும் எங்கள் வீட்டிற்குப் போகவில்லை. வீட்டிற்குப் போனால் முழு விபரமும் தெரிந்து கொள்ளலாம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டேன்.

     கருப்பஞ் செட்டியாருக்கு அறுபத்தைந்து வயது. எங்கள் ஊர் நகரத்தார்  உயர்நிலைப் பள்ளியில் கருப்பஞ் செட்டியாரும் என் தந்தையாரும் ஒன்றாகப் படித்தவர்கள். அது மட்டுமில்லாமல் அவர் எங்கள் பங்காளி வேறு. எங்கள் தந்தையார் கருப்பஞ் செட்டியாரின் கஞ்சத்தனத்தைப் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள் - நாங்கள் அப்படியிருக்கக்கூடாது என்பதற்காக!

     ‘கஞ்சனுக்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம்?’ என்று ஒருமுறை என் தந்தையாரிடம் நான் கேட்டபோது அவர்கள் இப்படி விளக்கம் சொன்னார்கள்.

     தன் வீட்டு மரத்தில் காய்க்கும் மாம்பழங்களைத் தன் வீட்டாரைத் தவிர வெளியாட்களுக்குக் கொடுக்காதவன் கஞ்சன். அதே பழங்களைத் தன் வீட்டாருக்கேகூடக் கொடுக்காமல் வெளியே விற்றுக் காசாக்கி மகிழ்பவன் கருமி!

     கருப்பஞ் செட்டியார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சஷ்டியப்தபூர்த்தி சாந்தி வந்த போது கூட - சொந்த பந்தங்களுக் கெல்லாம் வேஷ்டி, சேலை வாங்க வேண்டும், வைதீகச் செலவு, விருந்துச் செலவு என்று பத்து லட்சம்வரை செலவாகுமே என்ற ஒரே காரணத்திற்காக சாந்தியே செய்து கொள்ளவில்லை. சுவாமி மலை’ க்குப்போய் சாமி தரிசனம் பண்ணிவிட்டுத் திரும்பிவிட்டார்.

    இன்றைக்குத் தேதியில் அவருக்கு பத்துக் கோடி ரூபாய்க்குமேல் சொத்துத் தேறும். மதுரை, காரைக்குடி இரண்டு ஊர்களிலும் கட்டிட வாடகையே மாதம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குமேல் வந்து கொண்டிருக்கிறது. கொடுக்கல் வாங்கல் வியாபாரத்திலும் மாதாமாதம் அதைவிட அதிகமாகப் பணம் வந்து கொண்டிருக்கிறது.

    ஆனாலும் மிகவும் சிக்கனமானவர். பார்வைக்குப் பழைய நடிகர் எஸ.வி. சுப்பையா மாதிரி இருப்பார். துவைத்துக் கட்டிய வேஷ்டி, சட்டை.. கையில் மஞ்சள் பை. காலில் ரப்பர் செருப்பு. அதிகம் பேச மாட்டார்.

    எங்கள் ஊர் எல்லையில் ஒரு தோப்பு வீட்டில் குடியிருக்கிறார். தோப்பு வீடு என்பதனால் எல்லாம் வசதி. காய்கறி, பால் என்று எதற்குமே வெளியே எட்டிப் பார்க்க வேண்டாம். ஊரின் மத்தியில் உள்ள வளவு வீட்டில் கால் பங்கு உள்ளது. அவர் வரமாட்டார். அவர் மனைவி சீதை ஆச்சி மட்டும் வாரம் ஒருமுறை அங்கே சென்று வீட்டில் விளக்கேற்றிக் கும்பிட்டு விட்டுத் திரும்புவார்கள்.

    வெகு நாட்கள் வரை மாட்டு வண்டிதான் வைத்திருந்தார். கடந்த சில வருடங்களாகத்தான் - அதுவும் ஆடிட்டரின் கட்டாயத்தின் பேரில் கார் வாங்கி வைத்திருக்கிறார். வருமானவரி சலுகைக்காக. அந்தக்காரையும் வாரம் ஒருநாள் எடுத்து ஒரு பத்து பதினைந்து கிலோமீட்டர் தூரம் ஔட்டிவிட்டுக் கொண்டு போய் நிறுத்திவிடுவார். காரைத் தொட்டில் கட்டிப் போட்டு வைக்காத குறைதான். துணி போட்டு மூடி வைத்திருப்பார்.

    பெரிய அளவில் வைப்புத் தொகையெல்லாம் வைத்திருப்பதால் உள்ளுர் வங்கியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு. பாதி நாட்கள் காலைப் பொழுதை அங்கேயே கழித்துவிடுவார். பேனா, பென்சில், பேப்பர், கவர், உள்ளூர் போன் அழைப்புக்கள் என்று எல்லாவற்றையும் வங்கி செலவிலேயே செய்து முடித்து விடுவார்.

    இப்படி அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.

    அவர் மனைவி சீதை ஆச்சி ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து போனார்கள். ஆச்சி தலைவலி, தலைவலியென்று ஆறு மாதங்களாகச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது செட்டியார் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஆஸப்ரின், அனாஸின், பாரல்டிம், கோடாலித் தைலம், ஜண்டுபாம் என்று செலவைச் சுருக்கியதோடு ஆச்சியின் உயிரையும் சுருக்கி விட்டார்.

    ஒரு நாள் தலைவலிப் ப்ரச்னை பூதாகரமாகி, ஆச்சியை மதுரைக்குக் கூட்டிக் கொண்டுபோய் நவீன மருத்துவ மனை ஒன்றில் சேர்த்தபோதுதான், மூளையில் கட்டி ஒன்று முற்றிய நிலையில் இருப்பதும், ஆபத்தான நிலைமையும் தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தும் பலனளிக்காமல் ஆச்சி அதே மருத்துவமனையில் உயிரை விட்டு விட்டார்கள். ஆச்சியின் கதை மதுரை தத்தனேரி சுடுகாட்டில் முடிந்துவிட்டது..

    ஆனால் அதையெல்லாம்விட முக்கியம்- அதிரடியாக கருப்பஞ்செட்டியாரின் மனம் மாறியது எப்படி?

    அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்!
 
           ***********************

    சித்திரை வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. மண்டபத்தில் இருந்து நான் எங்கள் வீட்டிற்குப் போன போது மணி 12.30 ஆகிவிட்டிருந்தது. வீட்டிற்குள் வெட்கை தெரியவில்லை.

    என் தந்தையார் மதிய உணவை முடித்துக்கொண்டு சற்று நேரம் கண் அயர்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

    என்னைப் பார்த்ததும் வா’வென்றார். புன்னகைத்தார். அவர் அருகில் சென்று அமர்ந்தேன். பர்மா பிரம்புப்பாயும், அதன் மேல் விரிக்கப்பட்டிருந்த பட்டு ஜமுக்காளமும் அமர்வதற்கு இதமாக இருந்தது.

    வீட்டு விஷயங்களைப் பத்து நிமிடங்கள் பேசிய பிறகு கருப்பஞ் செட்டியாரின் விஷயத்திற்குத் தாவினேன்.

    ‘அவருக்கு என்ன ஆயிற்று?’ என்று ஆர்வத்தோடு கேட்டேன்.

    என் தந்தையார் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னார்கள்.

    மதுரை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கிற்குப் போகுமுன்பு சீதை ஆச்சி அவர்கள் தன் கணவரிடம் பத்து நிமிடங்கள் வருத்தம் கலந்த கோபத்தோடு பேசினார்களாம். தன் பேச்சால் கருப்பஞ் செட்டியாரை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிப் போட்டு விட்டார்களாம். அதுதான் ஆச்சி கடைசியாகப் பேசிய பேச்சாம். செட்டியார் ஆடிப்போய் விட்டாராம். அதோடு சிகிச்சை பலனளிக்காமல் ஆச்சி இறந்தும்போய் விட்டதால் அதிர்ந்தும் போய் விட்டாராம்.

    ஆச்சி பேசிய பேச்சை ஆச்சி பேசிய தொனியோடு என் தந்தையார் பின் வருமாறு சொன்னார்கள்.

    “காசு காசென்று காசைக் கட்டிகொண்டு அழுகிறீர்களே- அந்தப் பெரிய டாக்டர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? ஆரம்பத்திலேயே பார்த்திருந்தால் குணப்படுத்தியிருக்கலாம் என்றாரா இல்லையா? சாவிற்கு நான் ஒன்றும் பயப்படவில்லை. விதி முடிந்தால் போய்ச்சேர வேண்டியதுதான். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்-மனிதன் செத்துப்போனால்- பட்டினத்தார் சொன்ன மாதிரி காது ஒடிந்த ஊசி கூட கூட வராது. எல்லாம் இருக்கும் வரைதான். உடன் வருவது அவனவன் செய்த பாவ, புண்ணியம் மட்டும்தான். மனிதனாகப் பிறந்தவனுக்குத் தர்ம சிந்தனை வேண்டும். அது உங்களிடம் துளி அளவுகூட இல்லை. ஏதோ போன ஜென்மத்தில் வாங்கி வந்த வரத்தால் நீங்கள் நகரத்தார் குடும்பத்தில் பிறந்தீர்கள். என்னைப்போன்ற அன்பான, அனுசரனையான மனைவி உங்களுக்குக் கிடைத்தது. கீரையும் சோறும்தான் என்றாலும் சொந்த வீட்டில் சாப்பிட்டீர்கள். ஆனல் இந்தப் பிறவியில் நகரத்தார்களுக்கே உரிய தர்ம சிந்தனையோடு எந்தக்காரியமும் நீங்கள் செய்யவில்லை. அதனால் அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே கிடைக்காது. வாங்கித்தான் குடிக்கவேண்டும்!”

    இந்த ‘வாங்கித்தான் குடிக்கவேண்டும்’ என்ற சொற்கள்தான் செட்டியாரின் மனதை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறதாம். திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டிருக்கிறதாம்.

    மன மாற்றத்திற்கும் அதுதான் காரனமாம்.

    ‘வாங்கிக்குடித்தல்’ என்னும் சொல் செட்டிநாட்டிற்கே- செட்டிநாட்டிற்கு மட்டுமே தெரிந்த சொல். பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது அதன் பொருள்.

    இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவர் சொல்லும் சத்தியமான வார்த்தைகளுக்கு என்ன வலிமை உண்டு என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது

    கண்களில் நீர் மல்கி விட்டது!
---------------------------------------------------------------------
அடியவன் எழுதி -    16 ஏப்ரல்’ 2005ம் தேதியிட்ட மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை. உங்கள் பார்வைக்காக இன்று இதை வலையில் ஏற்றினேன்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14.6.11

Astrology ஈன ஸ்திரியின் சிநேகம் எப்போது உண்டாகும்?

-----------------------------------------------------------------------------------
Astrology ஈன ஸ்திரியின் சிநேகம் எப்போது உண்டாகும்?

தசா புத்திப் பாடல்கள் வரிசையில் நேற்று சுக்கிரதிசையில் சந்திர புத்திக்கான பலன்களையும், சந்திர திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் செவ்வாய் புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்
---------------------------------------------------------------
ஒன்று சுபக்கிரகம். ஒன்று தீயகிரகம். பலன்கள் நன்மையுடையதாக இருப்பதில்லை. பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 14 மாதங்கள்

தானென்ற சுக்கிர திசை செவ்வாய்புத்தி
   தாழ்வானமா தமது பதினாலாகும்
ஏனென்ற அதன்பலனை இயம்பக்கேளு
   எலிகடியும் பீனிசமுமும் இணைப்புமுண்டாம்
வானென்ற வயிற்றினிலே நோவுண்டாகும்
   வகையுடனே ஆசனத்தில் கடுப்புண்டாகும்
தேனென்ற தெரிவையர்கள் விகற்பமாகும்
   தீதான சத்துருவும் சேர்வான்பாரே!


ஆனால் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு தீய பலன்களை செவ்வாய் மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

தானென்ற சேய்திசையில் சுக்கிரன்புத்தி
   தாழ்வானமா தமது பதினாலாகும்
வீணென்ற அதன்பலனை வினவக் கேளு
   விரசாவு சத்துருவாகி விலங்குமுண்டாம்
ஏனென்ற யீனஸ்திரி போகமுண்டாம்
   இன்பமில்லா துன்பமது இடஞ்சல்காட்டும்
கோனென்ற இராஜாவால் கலகமுண்டு
   கோதண்டம்தான் வருகும் கொடுமைபாரே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

13.6.11

Astrology அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்?

------------------------------------------------------------------------------------
Astrology அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்?

ஜாதகத்தில் எத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும், இருக்கும் இடத்தின் தசாபுத்திக் காலத்தில்தான் அது நம் கைக்கு வந்து சேரும்.

இருந்து என்ன பலன்? கைக்கு வந்தால்தானே அனுபவிக்க முடியும்? வங்கியில் இருந்து என்ன பலன்? கைக்கு வந்தால்தானே செலவழிக்க முடியும்? அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்?

உதாரணத்திற்கு உங்களுக்கு வீடு வாங்கும் யோகம் இருந்தால், 4ஆம் வீட்டுக்காரனின் தசாபுத்திகளில்தான் அது நிறைவேறும். சில சமயம் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுபக் கிரகத்தின் தசா புத்தியிலும் அது நிறைவேறும்.

ஆகவே உங்களுக்கு நடைபெறும் தசா புத்திகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி பலன்களுக்கான நேரத்திற்கும் பொறுமையாகக் காத்திருங்கள்
----------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக 21.4.2011 அன்று சுக்கிரதிசையில் சூரிய புத்திக்கான பலன்களையும், சூரிய திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.

இன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் சந்திர திசைக்கான பலன்களைப் பார்ப்போம்
---------------------------------------------------------------
இரண்டுமே சுபக் கிரகங்கள். ஆனாலும் பலன்கள் சரிசமமாக, சுபமாக இருப்பதில்லை. சந்திரனின் கடக வீடு சுக்கிரனுக்குப் பகைவீடு. அதுபோல சுக்கிரனின் இரண்டு வீடுகளில் துலாம் வீடு சந்திரனுக்குப் பகை வீடு. ஆனால் அதே நேரத்தில் சுக்கிரனின் ரிஷப வீடு சந்திரனுக்கு உச்ச வீடாகும். உச்சத்திற்கான பலனை அவர் தன்னுடைய தசா புத்தியில், அதாவது சுக்கிர மகா திசையில் தன்னுடைய தசா புத்தியில் தருவார். பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தசாபுத்திக்காலம் 20 மாதங்கள்

ஆவானே சுக்கிரதிசை சந்திரபுத்தி
   அருளில்லாமா தமது நாலைந்தாகும்
போவானே அதன்பலனை புகழக்கேளு
   பொன்பெறுவாள் அன்னையுமே மரணமாவாள்
சாவானே சம்பத்தும் குறைந்துபோகும்
   சதிரான மனையைவிட்டு ஓடிப்போவான்
நோவானே வியாதியது துடர்ந்துகொள்ளும்
   நுணுக்கமுள்ள வினைசமயம் நுகருந்தானே!


ஆனால் இந்தப் பலன்களுக்கு நேர் மாறாக சந்திர திசையில் சுக்கிர புத்தி மழிச்சி தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்

கேளப்பா சந்திரதிசை சுக்கிரபுத்தி
   கெணிதமுள்ள நாளதுவுமாதம் நாலைந்து
ஆளப்பா அதன்பலனை சொல்லக்கேளு
   அன்பான லட்சுமியு மனதினமுநிற்பாள்
வாளப்பா வாகனமும் பொன்முத்துசேரும்
   வகையான பூஷணமும் மிகுதியுண்டாம்
கேளப்பாகலியாணங் கெணிதமுடன் நடக்குங்
   கெத்தமுடன் சுகந்தங்கள் அணிவான்பாரே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

11.6.11

முகவரி தெரியாமல் மோதியபோது!

-------------------------------------------------------------------------------------
முகவரி தெரியாமல் மோதியபோது!

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற எண்ணம்தான் காவியத்திற்கு ஆரம்பம்.

புதுக்கவிதைக்கு காவிய அந்தஸ்த்தைக் கொடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.

புதுப்புதுச் சொற்கள். புதிய பிரயோகங்கள். சொற்சிலம்பம் ஆடி அசரவைக்கிறார்.

ஒரு கவிஞருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி எழுதப்பட்ட இந்த நெடுங்கவிதை பல நூற்றாண்டுகளைக் காணப்போவது உறுதி.

சா.விஸ்வநாதன்.
(கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிராஜன் கதை என்னும் நூலிற்கு திரு சாவி அவர்களின் வாழ்த்துரை)

ஒரு கவிஞனின் வாழ்க்கை வரலாறு புதுக் கவிதையில் எழுதப் பட்டது என்றால் அது கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய இந்த கவிராஜன் கதையாகத்தான் இருக்கும். சரி அதன் 48 -ஆவது பகுதிக்குப் பயணிப்போம்.

மகாகவியின் மரணம்

கொஞ்சம் தாமதித்திருந்தால்
சில நிமிஷங்களில்
ஒரு சகாப்தத்தையே
சாகடித்திருக்கும்.

நல்லவேளை
தரையில்
கொட்டிக்கிடந்த பாரதியை
குவளைக் கண்ணனின்
அம்புக்கைகள் விரைந்து
அள்ளி எடுத்தன.

காய்ந்த உடம்பெங்கும்
காயங்கள்
தேகமெல்லாம் அங்கங்கே
சின்ன சின்ன
கிழிசல்கள்

அவன் பட்ட துயருக்காய்
அங்கங்கள் அங்கங்கே
ரத்தமாய் அழுதன.

அங்கே
இன்னும் சில நிமிஷங்கள்
இருந்திருந்தால்-
அந்த யானை
தேங்காய் தந்தவனையே
சிதறு தேங்காய் போட்டிருக்கும்.

காயப்பட்ட கவிஞனை
ராயப்பேட்டை மருத்துவமனையில்
சீனுவாச்சாரியார் சேர்த்தார்.

பகைவனுக்கு அருளச்சொன்ன
பாவலன் - தன்னைப்
பழுதாக்கிய யானையைப்
பழித்தானா?... இல்லை.
கண்ணீரின் வலிக்கு -
புன்னகை ஒத்தடம்
கொடுத்துக் கொண்டான்.

"யானை - என்
முகவரி தெரியாமலே
மோதிவிட்டது
இருந்தாலும் அதற்கு
இறக்கமதிகம்
இல்லையேல் -
துதிக்கையால் என்னைத்
துவைத்திருக்காதா? "

அங்கங்களின் காயம்
ஆறிவிட்டது
ஆனால் அந்த அதிர்ச்சி
அவசர வியாதிகளை
அழைத்து வந்தது.

....................................
...................................
ஏ மரணமே
எங்கள் மகாகவியின்
படுக்கையை அன்று
பாடையாக்கி விட்டாயே

அந்த மரண இரவில்
ஒரு மயான மௌனம்

விளக்குகள் வெளிச்சத்தை
அழுது கொண்டிருந்தன.

ஒரு மகாகவி
மரணத்தோடு
மல்யுத்தம் நடத்துகிறான்
வெளியேறத் துடிக்கும் உயிர்
உடம்பை அடிக்கடி
உதைக்கிறது.

மருந்தை மாகவிஞன்
மறுதலிக்கிறான்.

*******************************************************
ஆம், மரணப் படுக்கையில்
முடங்கிக் கிடக்கும்
செஞ்சூரியனை
சமதர்ம சங்க நாதத்தை,
பெண்ணடிமை ஒழிக்கப் புறப்பட்ட
கவிச் சுடரொளியை

நாள்தோறும்
மறவாமல் சென்று
ஆறுதல் கூறும்
அந்த மீனவ நண்பர்
அன்றும்
காணச் சென்றார்.

சிங்காரவேலர்,
தனது தோழருக்கு;
எப்போதும் போல் அன்றும்,

அக்னிக் குஞ்சிற்கு ஆகாரம் தர
வெந்நீரில் 'ஹார்லிக்சைக்'
கலந்து கொண்டார்.

அறிவு ததும்பும் அமுதக் கலசத்தை
தன் மடியிலே வைத்து கொண்டு - ஆம்
மகாகவியின் சிரத்தை தன் மடியில்
இருத்திக் கொண்டு
அமுதுக்கு அமுதூட்டினார்.

கலந்த ஹார்லிக்சை கனிவோடு
ஊட்டினார்.

அமுது பருகும் அந்நேரம்..
வெடித்துச் சிதறி விண்ணையே
முட்டிய எரிமலை
அமைதி கொள்கிறது.

சுயராஜ்ஜியம் வேண்டி
புறப்பட்ட புரட்சிப் புயல்
நிசப்தம் கொள்கிறது.

காலனையே மிதிக்கத்
துணிந்தவனை,
சக்தியும் மடியில் இருந்து
இறக்கி விட்டாள்.

அமரத்துவம் கொண்ட
கவிகளைப் படைத்து
உலகமே உய்ய
மானுடம் பாடிய மகாகவி
அமைதி கொள்கிறான்.

அடுத்த சில மணித்துளிகள் - தன்
அருமை நண்பர் மடியிலே
அமரர் ஆனார்.

********************************************************************
(மேலே உள்ள அந்த செவ்வரிகள் நான் கூறியவை. அதை கவிஞர் வைரமுத்து தனது கவிராஜன் கதையில் செதுக்கவில்லை?! இப்போது மீண்டும் வைரமுத்துவின் வரிகளுக்கே செல்வோம்)

ஏகாதிபத்தியத்தை
எதிர்த்துப் பறந்த ராஜாளி
சிரமத்தில் துடித்துச்
சிறகடிக்கிறது.

அந்த இரவில்
ஒரு யுகபாஷை
ஊமையாகிவிட்டது.

செப்டம்பர் ராத்திரி
அதிகாலை இரண்டு மணி

மரணம் - அந்த
முப்பத்தொன்பது வருஷக்
கவிதைக்கு
முற்றுப் புள்ளி வைத்தது.

உயிர் துடிக்கிறது பாரதி

உடம்பெல்லாம் கண்ணீர்
ஓடுகிறது மகாகவியே

இன்று நினைத்தாலும்
தலையறுந்த சேவலாய்த்
தவிக்கிறது நெஞ்சு

என் கண்ணீர் - உன்
எரிந்த சடலந்தேடி
எங்கெங்கோ அலைகிறது.


அந்த சமூகச் சிற்பிகளின் சிந்தனையோடு வணக்கம் கூறுகிறேன்.
நன்றி!

ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

10.6.11

யாரைய்யா என்னைவிட ஆனந்தமாக இருப்பது?

------------------------------------------------------------------------------------
 யாரைய்யா என்னைவிட ஆனந்தமாக இருப்பது?

பக்தி மலர்

கிரீஷ் ச‌ந்திர கோஷ் என்ற பெயரைத் தெரியாத வங்காளிகளே இருக்க முடியாது.

எப்படித் தமிழ் நாட்டில் சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்மல் சம்பந்த முதலியாரையும், மதுரைபாய்ஸ் கம்பெனிக் காரர்களையும், நவாப் ராஜமாணிக்கத்தையும், மேடை நாடகங்களைப் பற்றிப் பேசும்போது
தவறாமல் குறிப்பிடுவார்களோ, அதுபோல வங்கத்தில் நாடகத்
தந்தையாகவே கிரீஷ் சந்திரகோஷ் இன்றளவும் போற்றப் படுகிறார்.

இந்த கிரீஷ் கோஷ் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர்.

கலை ஞானம் உள்ளவர்களே  சமூக‌ ஒழுக்கத்தில் சற்றே ஏறுமாறாகத்தான் காட்சி கொடுப்பார்கள். நமது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மதுபானத்திற்கு அடிமை என்பது ஊர் அறிந்த ரகசியம்.பலரையும் அது போலச் சுட்டலாம். ஆனால் அதுவல்ல நாம் சொல்ல வருவது.

கிரீஷ் கோஷும் ஒரு மொடாக் குடியர். எப்போதும் புதிய புதிய மதுபான வகைகளை விரும்பி அருந்துவார். ஆங்கிலேய அரசாங்கத்தில் 'ஆக்டராய்' என்ற மதுவால் வரும் வரிதான் பிரதானமானது.

மேலும் வங்கத்தில் முதல் முதலில் பெண்களை மேடையில் ஏற்றி நடிக்க வைத்தவர் கிரீஷ். அவர் பெண்களை மேடை ஏற்றும் வரை பெண் பாத்திரங்களையும் ஆண்க‌ளே நடித்து வந்தனர்.நம் தமிழ்நாட்டிலும் ஸ்த்ரி பார்ட் இருந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே முதல் முதலில் ஸ்திரி பார்ட் செய்தவர்தான்.

மது,மாது,மாமிசம் ஆகியவைகளுக்கு கட்டுப்பட்டுத் தன் நிலை இழந்தவராகவே கிரீஷ் வாழ்ந்துள்ளார்.இந்நிலை அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை குருவாக ஏற்றுக்கொள்ளும் வரை நீடித்தது.

ஒரு நாள் கிரீஷின் நண்பர் ஒருவர்," நீ என்ன‌ப்பா குடித்து விட்டு ஆனந்தம் என்கிறாயே! உன்னை விட ஆனந்தமாக இருப்ப‌வர் ஒருவர் இருக்கிறார் தெரியுமா?"என்று கேட்டுள்ளார்.

"அது யாரைய்யா என்னை விட ஆனந்தம் அதிகமாக அனுபவிப்பது? எங்கே உள்ளான் அந்த மனிதன்?"

"தட்சிணேஸ்வரக் காளிகோயிலில் ஓர் அறையில் தங்கியுள்ளார் அந்த அபூர்வ மனிதர்"

"அப்படியா!? இதோ உடனே போய் எந்த அளவு அந்த மனிதன் என்னை விட அதிக ஆனந்தமாக இருக்கிறான் என்று பார்த்து விடுகிறேன்" என்று வீராப்பாகக் கிளம்பி வந்தார் கிரீஷ் கோஷ்.

கையில் பாட்டிலுடனும், உள்ளத்தில் ஆவேசத்துடனும் வந்து ஸ்ரீராமகிருஷ்ணரின் அறை வாசலில் நின்ற கிரீஷை ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவரோ இறை ஞானத்தில் மூழ்கித் திளைத்து ஆனந்த பரவசத்தில் ஆடிப்பாடிக் கொண்டு இருக்கிறார். ஆடை போன இடம் தெரியவில்லை. சுற்று முற்றும் என்ன நடக்கிறது என்றும் பார்க்கவில்லை. தன்னுள்தானே மூழ்கிப் பாடி ஆடிக் கொண்டு இருக்கிறார்.

இதை கண்ணுற்ற கிரிஷுக்குத் தன் நண்பர் சொல்லியது சரிதான் என்று தோன்றிவிட்டது.

"உண்மையில் இந்த மனிதர் என்னைக் காட்டிலும் ஆனந்தமாகத்தான் இருக்கிறார். எந்தக் கடையில் சரக்கு வாங்குகிறார் என்று கேட்போம்"

கிரீஷ் ஸ்ரீராமகிருஷ்ணரை பிடித்து உலுக்கினார். சற்றே நினைவு திரும்பிய குருதேவர்,"என்ன வேண்டும் உமக்கு?" என்றார்.

"இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறீரே!எந்தக் கடையில் மதுபானம் வங்குகிறீர் என்று சொல்லலாமா?"

"ஓ!தாரளமாகச்சொல்லலாம்தான். இந்த மது இலவசமாக வேறு கிடைக்கிறது. அளவும் நம‌க்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். என்ன, உடனே அதை உமக்குச் சொல்ல மாட்டேன். அடிக்கடி நீர் இங்கு வந்தால் அந்தக் கடைக்காரரிடம் அறிமுகப்படுத்தி விடுகிறேன்."

"அப்படியா!சரி அடிக்கடி வருகிறேன்" என்று கூறிவிட்டு அன்று கல்கத்தா திரும்பிவிட்டார் கிரீஷ் கோஷ்.

மகானின் தரிசனமும், ஸ்பரிசமும் அவர் மனதில் பல மாற்றங்களை வரவழைத்தன. இருந்தாலும் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தார் கிரீஷ்.செல்லும் போது கையில் புட்டியுடந்தான் செல்லுவார். குருதேவர் முன்னிலையிலேயே குடிப்பார். சில சமயம் குடிக்காமல் கட்டுப்படுத்தப் பார்ப்பார். ஆனால் பழகிவிட்ட உடல் கேட்கத் துவங்கும் அவர் பதட்டப்படுவதைப் பார்த்த குருதேவர் குடிக்க அனுமதிப்பார். இப்படியே சில மாதங்கள் கடந்தன.

ஆன்மீக வழிகளையெல்லாம் கிரீஷுக்கு எடுத்துச்சொல்லுவார் குருதேவர்.

"கொஞ்சம் ஜபம் செய். ஐந்து நிமிடம் தியானம் பழகு" என்றெல்லாம் சொல்வார் குருதேவர்.கிரீஷும் முயல்வார். ஆனால் 'முடியவில்லையே' என்று தவிப்பார்.

ஒருநாள்,"என்னால் நீங்கள் சொல்லும் எந்த முறைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை. எனக்காக நீங்களே எல்லாவற்றையும் செய்து, பலனை மட்டும் எனக்குத் தாருங்கள்" என்று குருதேவரிடம் விண்ணப்பம் செய்தார் கிரீஷ்.

"அப்படியா! சரி உன் பொறுப்பு இனி என‌க்கா? அப்படியே ஆகட்டும்.உன்னால் முடிந்த ஒன்றைமட்டும் செய்வாயா?"

"சரி செய்கிறேன். என்ன அது?"

"இன்று முதல் நீ குடிக்கும் ஒவ்வொரு கோப்பையையும் 'என் குருதேவரான ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பணம் என்று சொல்லிவிட்டு அருந்துவாயா?"

"சரி அப்படியே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிரீஷ் வீடு திரும்பினார்.

இரவு படுக்கப் போகும் முன்னால் குடிக்கப் புட்டியைத் திறந்தார்.

குருதேவர் கூறியது நினைவுக்கு வந்தது.

"இந்தக் கோப்பை குருதேவருக்கு அர்ப்பணம்" என்று சொல்லி வணங்கினார். கோப்பையின் உள்ளே குருதேவர் சிரிக்கிறார். இது ஏதோ பிரமை என்று வேறு ஒரு கோப்பை எடுத்து மீண்டும் மது ஊற்றி அர்ப்பணம் என்றால் அதிலும் குருதேவர்!

கிரீஷ் கோஷால் குடிக்க முடியவில்லை. அப்போதே குருதேவரைக் காண ஓடிவந்தார்.

'குடிப்பதை நிறுத்த முடியவில்லை' என்றவர் 'குடிக்க முடியவில்லை' என்று சொல்பவராக மாறினார்.

பின்னரும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கிரிஷுக்கு அவ்வப்போது அனுமதி அளித்து சிறிது சிறிதாகக் குடியைவிடச் செய்தார். ஆங்கில மனோதத்துவம் எல்லாம் அறியாத குருதேவர் "Withdrawal syndrome"  பற்றி எப்படித்தான் அறிந்தாரோ?!

கிரீஷ் தன்னை அடிக்கடி "பாவி பாவி" என்று கூறிக் கொள்ளுவார்.ஒருமுறை குருதேவர் கிரீஷைக் கண்டிக்கும் குரலில், " ஏன் அப்படிச்சொல்கிறாய்? யார் ஒருவன் 'பாவி பாவி' என்று சொல்கிறானோ அவன் பாவம் செய்தவனாகிறான். நான் தேவியின் பக்தன் எப்படி பாவம் செய்வேன் என்று சொல்லு. பாவம் உன்னை அண்டாது!"என்றார்.

இதை சுவாமி விவேகானந்தர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் உள்ளத்தில் இது ஆழப் பதிந்தது.

இதைத்தான் அமெரிக்காவில் சுவாமிஜி கூறினார்,"Ye!  Divinity on earth! Sinners! It is a sin to call a man so!" கிரீஷின் குருபக்தி அவரைக் காத்தது!

நாமும் குருபக்தி, இறை பக்தியைப் பெறுவோமாக!.

நன்றி, வணக்கத்துடன்,
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி


வாழ்க வளமுடன்!

8.6.11

திருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை!

----------------------------------------------------------------------------------------
திருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை!

இளைஞராக இருந்த காலத்தில், தமிழ் வசப்பட்டவுடன் வாலியும் சும்மா இருக்கவில்லை. தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.

முதல் பிரதியை வெளியிட்டவர் யாரென்று நினைக்கிறீர்கள்? கேட்டால் அசந்து போவீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்?

அந்தக் காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராக இருந்த திருவாளர் கல்கி அவர்கள்தான் அந்தப் பத்திரிக்கையை வெளியிட்டுச்சிறப்பித்ததோடு, வாலியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையையும் கொடுத்துவிட்டுப் போனார். தன் கதைகளைப் பல திருப்புமுனைகளோடு கொண்டு செல்லும் அவர், வாலியின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது அதிசயமா அல்லது தெய்வாதீனமா என்றால் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம்.

அன்று திரு.கல்கி அவர்களுடன் திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களும், திருச்சி வானொலி நிலைய அதிகாரி திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் அடுத்து ஒரு ஏற்றம் வாலியின் வாழ்வில் நிகழ்ந்தது. வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளராகத் தன் தனித்தமிழ் நடையால் ராஜ நடைபோட்ட எழுத்தாளர் சுஜாதா! அவரின் இயற்பெயரும் ரங்கராஜன்தான் என்பது வியப்பிற்குரிய விஷயம்!
=====================================================================


--------------------------------------------------------------------------
மாறுதலுக்காக இன்று ஒரு நாடகச் செய்தி!

செய்தி பழசுதான். ஆனால் சுவையானது.

அக்காலத்தில் கோவைக்குப் பல நாடகக் குழுவினர் வந்து நாடகங்களை நடத்தி, கோவை மக்களை மகிழ்விப்பார்கள். விசு, மெளலி, எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி என்று பலர் தங்கள் குழுவினருடன் வருவார்கள். அந்த மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் இப்போது இல்லை.
----------------------------------------------------------------
காத்தாடி நாமமூர்த்தி அவர்களின் நகைச்சுவை நாடகத்தில் பார்த்த காட்சி ஒன்றை என் நினைவுத்திரையில் இருந்து உங்களுக்கு அளிக்கிறேன். மனிதரின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் அசத்தலாக இருக்கும்
---------------------------------------------------------------------
காட்சியில் காத்தாடி ராமமூர்த்தியின் மளிகை பாக்கியை வசூல் செய்து கொண்டு போவதற்காக மளிகைக் கடைக்காரர் வீடு தேடி வந்திருப்பார். அவர் வந்திருக்கும் செய்தியைக் குளித்துக் கொண்டிருக்கும் தன்
கணவரிடம் சொல்வதற்காக நடிகை குட்டி பத்மினி குளியலறைக் கதவின் மறுபுறம் நின்று பேச்சுக் கொடுப்பார்:

“ஏன்னா, செட்டியார் வந்திருக்கார். சீக்கிரமா வாங்கோ?”

“எந்தச் செட்டியாருடீ?”

மனைவி கோபமாக: ”ம்ம்ம்..ராஜா சர் முத்தையா செட்டியார்!”

“நான் ஒன்னும் அவரிடம் கடன் ஏதும் வாங்கவில்லையேடி?”

“அதுதான் கொடுத்துவிட்டுப் போகலாம்னு வந்திருக்கார்!”

“விளையாடாம, விஷயத்தை ஒழுங்கச் சொல்லுடீ!”

இதற்குள், என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நைசாக உள்ளே வந்த மளிகைக் கடைக்காரர், சத்தமின்றி நடந்துவந்து குட்டி பத்மினியின் பின்புறம் நின்றிருப்பார். அதைக் கவனிக்காமல், தம்பதிகளின் உரையாடல் தொடரும்.

“மளிகைக்கடைச் செட்டியார்தான் வந்திருக்கார்!”

“ஓ..அந்த லூசு வந்திருக்கா? எங்க ஆத்துக்காரர் குளிக்கிறார்.வர்றதுக்கு ஒருமணி நேரம் ஆகும்னு சொல்லி அனுப்பிச்சுவைடி அவரை!”

=========================================================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

5.6.11

சங்கடமில்லாத சங்கேத மொழிகள்!

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சங்கடமில்லாத சங்கேத மொழிகள்!

வாரமலர்

இன்றைய வார மலரை, நமது வகுப்பறை மூத்த மாணாக்கர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது.
படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------------------
'தடுக்கி விழுந்தேன்' என்பது வலைதளத்தில் ஓர் இன்பமான அனுபவமாகப் போய் விடுவது உண்டு.http://www.stumbleupon.com/  என்று ஒரு தளமே உள்ளது.

அதுபோல தடுக்கி விழுந்ததுதான் http://thiruvarangan.blogspot.com/

மோஹனரங்க‌ன் என்ற ஸ்ரீவைஷ்ணவ அன்பர் எழுதுகிறார். அருமையான,கட்டுரைகள்.வைஷ்ணவ சம்பிரதாயத்தை அறிய ஒரு நுழைவுவாயில் அந்த வலைப்பூ.

அதில் 'வைணவ பரிபாஷை'பற்றி 6 கட்டுரைகள் மிகவும் சுவையுடன் எழுதியுள்ளார். நகைச்சுவையுடன், அந்த சம்பிரதாயத்தை அறிய விரும்புவோருக்கு அருமையான விருந்து.

தத்துவம் எல்லாம் எனக்கு எட்டிக்காய். படிக்கக் கூடியதாக இருக்கும் கதை கட்டுரைகளையே படிப்பது எனது இயல்பு. கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பக்கத்தைப் புரட்டும் மன இயல்பு என்னுடையது.அதாவது மிகச் சாதாரணன். 'அறிவுஜீவி' மனமயக்கம் சற்றும் இல்லாதவன்.சுற்றி வளைத்துச் சொல்லும் சொற்கள் மண்டையில் சுலபமாக ஏறாது எனக்கு.

போகட்டும். என் புராணம் வேண்டாம். சொல்ல வந்த செய்திக்கு வருவோம்.

பரிபாஷை என்கிறார்களே அது என்ன?

"பெரும்பாலும் பரிபாஷை என்பது ஒரு குழுவினரின், அல்லது ஒரு கோஷ்டியினரின் பரிமாற்றப் பேச்சு.......பேச்சு வழக்குகள் என்பனவற்றில் குழூஉக்குறி, சங்கேதம் என்பன பொதுவாக அமையும்."என்கிறார் மோஹனரெங்க‌ன் சுவாமி.

அந்தக் குழுவினர் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய சங்கேத மொழி பரிபாஷை!

ராணுவத்தில் ஒரு வழக்கம் உண்டு.ஒவ்வொரு  நாளும் ஒரு சொல்லை ரகசியமாக சொல்லி விடுவார்கள்.எப்படி நம் கணினிக்கு 'பாஸ்வர்ட்' சொல்லி உள்ளே புக வேண்டுமோ அதுபோல காவலுக்கு நிற்போரிடம் 'பாஸ்வர்ட்' சொல்லிப் புக வேண்டும். பாஸ்வர்ட்  தெரியாதவர்கள் எதிரியாகப் பாவித்து வெளியில் நிறுத்த‌ப்படுவர்.கிட்டத் தட்ட பரிபாஷையும், தான் இந்தக் கூட்டத்தைச் சார்ந்தவந்தான் என்பதை நிலை நிறுத்தும் வேலையைத்தான்
செய்கிற்து.தத்துவ நிலையில் நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் நடைமுறை யதார்த்ததில் நான் சொல்வது 'பரிபாஷை என்பது ஓர் அடையாளக் குறிப்பே'.

தண்ணீர் என்பதை ஸ்ரீவைஷ்ண‌வர் "தேர்த்தம்" என்பர்.ஸ்மார்த்தர்கள் 'ஜலம்' என்றோ 'தீர்த்தம்' என்றோ சொல்வார்கள்.தேர்த்தாமாடுதல் என்றால் குளித்தல் என்று பொருள் வைணவக் குடும்பங்களில்.  ஸ்மார்த்தக் குடும்பத்தில் அதுவே 'ஸ்நானம்' ஆகிவிடும்.

பாயசம் என்பது எல்லோருக்கும் தெரியும்.வைண‌வர்கள் அதனை அக்காரவடிசல் என்பார்கள்.சர்க்கரை பொங்கல் என்பது திருக்கண்ணமுது. தயிர்சாதம் என்பது ததியன்னம்.

ஒரு ஸ்மார்த்தக் குடும்பத்தில் நடக்கும் பூஜை வழிபாடு அதைத் தொடர்ந்து நடக்கும்  விருந்துக்குப் பெயர் சமாராதனை.வைணவ குடும்பத்தில் அதுவே ததியாரதனை.

இப்படி ஒரே செயலுக்கோ ,பொருளுக்கோ அவரவர் குழு சார்ந்த சொற்களைப் பயன்படுத்தும் சொற்களே பரிபாஷை.

தஞ்சை மாவட்டத்தில் 'ஒரு நல்லதிற்கு போயிருக்கிறார்' என்றால் ஒரு 'சாவுக்கு,இழவுக்குப் போயிருக்கிறார்' என்று பொருள்.அல்லது அதையே சில குழுக்கள் 'தேவைக்குப் போயிருக்கிறார்' என்றும் சொல்லும்.

"திருவாளத்தான்" என்று 'வள வள' என்று பேசுபவனைக் குறிப்பாக உணர்த்துவார்கள்."அதோ வருகிறானய்யா திருவாளத்தான்! நான் போய்க் கொள்கிறேன்!"என்று நண்பர் குழு 'போர'டிப்பவன் கண்ணில் பட்டதும் சிதறி
ஓடும்.

"மேற்படியார் வந்தாப்பல" என்று சொன்னவுடனே அந்தக்குழுவில் உள்ளோர் அந்த 'மேற்படியார்'  யார் என்று புரிந்து கொள்வார்கள். குழுவில் சேராதவர்களுக்குப் புரியாது.

ஏதோ பரிபாஷை என்றால் அய்யர்,அய்யங்கார் சமாச்சாரம் என்று எண்ணி விடாதீர்கள். அரசியலிலும் இது கடைப் பிடிக்கப்படும்.

பேரறிஞர், பேராசிரியர், பெருந்தலைவர்,புரட்சித் தலைவர்,மூதறிஞர்,கலைஞர்,நாவலர், நாஞ்சிலார்,.... இவற்றை சொன்னவுடனேயே யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்க‌ளுக்குப் புரிகிறதல்லவா? அவர்களுடைய
முழுப்பெயரைச் சொல்லாமலே புறிகிறதல்லாவா?அதுதான் சங்கேத மொழி. அந்த அந்தக் குழுவில் மட்டுமே அது செல்லுபடியாகும் அல்லது செலவாணியில் இருக்கும்.

அரசியலில் இப்படி பட்டப் பெயர் இல்லாதவர்கள் தங்கள் ஊர் பெயரை சூட்டிக் கொண்டார்கள்.

தஞ்சையார், புதுகையார், நாவல்ப‌ட்டார், தாந்தோன்றியார்,என்பது போலப் பலபல.அன்பில் ஊரைச் சேர்ந்தவர் அன்பிலார்! 'அன்பு இல்லாதவர்' என்றும் பொருள் கொள்ளலாகும்தானே!

எல்லாத் தொழிலுக்கும் சங்கேத மொழி உண்டு.கூடப் பணி புரிபவர்களுக்கு சங்கேதப் பேர் எல்லாம் உண்டு.

கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.மேஸ்திரி வந்தார். சித்தாள் ஒருத்தி கூவினாள்,"தண்ணிவண்டி வந்திடிச்சி" மற்றவர்கள் உஷார் ஆனார்கள். எப்போதும் 'மப்'பில் இருக்கும் மேஸ்திரிக்கு சங்கேதப் பெயர் 'தண்ணிவண்டி'

திருமண‌த்தில் சமையல்வேலை மேற்பார்வையில் இருந்தேன்."சாம்பாரை எடைகட்டு, பாலை எடைகட்டு" என்று சமையல் மேஸ்திரி சொன்னார்.அப்படியென்றால் 'சுடுநீரை எடுத்து சாம்பாரிலோ, பாலிலோ ஊற்று' என்று பொருள். அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த சொல்லாட்சி.

'கழுத்து ஆம்படையானிடம் இத்தனை நாள் கஷ்டப்பட்டேன். இப்போ வயத்தாம்படையானிடம் சிரமப்படுகிறேன்' என்றாள் ஒரு மூதாட்டி.கழுத்தில் தாலிகட்டினவன் கழுத்தாம்படையான்.வயற்றில் இடம் பிடித்தவன் வயத்தாம் படையான். அதாவது பெற்ற மகன்.

செருப்பு காணாமல் போய்விட்டது. கிவாஜ சொன்னார் "பரதாழ்வார் வந்து போயுள்ளார்". பொருள் புரிகிறதல்லவா? ஸ்ரீராமனின் பாதுகையை வேண்டிப்பெற்றுச் சென்றார் அல்லவா தம்பி பரதன்?

அந்தக் காலத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சப் பண‌த்திற்குப் பரிபாஷை உண்டு.ஒரு கப்பல் தர வேண்டும். ஒரு மான் தரவேண்டும் என்றால் அந்தப் படம் போட்ட நோட்டை லஞ்சமாகத் த‌ர வேண்டும் என்று பொருள்.

'அறுவை' என்பதும் ஒரு சங்கேதச் சொல்தான். மேற்கொண்டு அறுக்காமல் முடித்துக் கொள்கிறேன்.

எழுத்தாக்கம்
கே.முத்துராம கிருஷ்ணன்
லால்குடி

வாழ்க வளமுடன்!

3.6.11

மந்திகள் எதற்குப் பயப்படும்?

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 மந்திகள் எதற்குப் பயப்படும்?

வெள்ளி மலர்.

இன்றைய வெள்ளி மலரை நமது வகுப்பறையின் மூத்த மாணாக்கர் திரு. கோபாலன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
_____________________________________________

மந்திகள் பயந்தது ஏன்? மொட்டுக்கள் மலர்ந்தது ஏன்?

திருஞானசம்பந்தப் பெருமான் தலயாத்திரை செய்து கொண்டு வரும்போது, கரைபுரண்டு ஓடும் காவிரி நதியின் வடகரை வழியாகப் பல தலங்களை தரிசித்துக்கொண்டு வருகிறார். காவிரி ஆறு தன்னிரு கரைகளிலும் சோலைகளையும், வயல் வெளிகளையும் பசுமையாகப் பரப்பிக் கொண்டு தவழ்ந்து செல்லும் காட்சியைக் காண்கிறார். ஆங்காங்கே வானளாவ எழுந்து நிற்கும் ஆலய கோபுரங்கள் கண்களுக்குத் தெரிகின்றன. காத தூரம் கடக்குமுன் ஐந்தாறு ஆலயங்கள் தென்பட, அங்கெல்லாம் சென்று வழிபட்டு மேற்கு திசை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

அப்போது தூரத்தே ஓர் உயர்ந்த கோபுரம் கண்களுக்குத் தென்படுகிறது. ஓ! அதுதான் திருவையாற்றுத் தலமோ? சாலையின் இருபுறத்திலும் அடர்ந்து வளர்ந்த சோலைகள். சலசலத்து ஓடும் வாய்க்கால்கள். அந்த வாய்க்கால்களிலிருந்து மதகுகள் வழியாக வயலுக்குத் தண்ணீர் பாயும் ஓசை. பறவைகளின் ஒலி. ஆங்காங்கே புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளின் கழுத்தில் கட்டிய மணிகளின் ஓசை. இதோ, நெருங்கி வந்து விட்டார் ஐயாறப்பரின் வானுயர்ந்த கோபுரத்துக்கு அருகில்.

ஆலயத்தின் உள்ளிருந்து இசையின் ஒலி கேட்கிறது. அந்த இசைக்குத் தகுந்தாற்போல ஒலிக்கும் சலங்கை ஒலி. அவற்றோடு இணைந்து ஒலிக்கும் மத்தளத்தின் ஒலி. இந்த ஒலிகள் எல்லாம் ஆலயத்தைச் சுற்றி வெகு தூரம் பரவிக் கிடக்கிறது. காவிரிக் கரையில் அமைந்துள்ள பசும் சோலைகளில் பறவைகளின் கானம். பழுத்துத் தொங்கும் பழங்களைச் சுவைத்துச் சாப்பிடும் மந்திகளின் கூட்டம். திடீரென்று ஆலயத்திலிருந்து மத்தளங்களின் ஒலி பலமாகக் காற்றில் மிதந்து வருகிறது.

அந்த ஓசையைக் கேட்ட மாத்திரத்தில் மரத்தில் பழங்களை உண்டு கொண்டிருந்த மந்திகளுக்கிடையே ஓரு சலசலப்பு. அந்த மந்திகள் பழம் சாப்பிடுவதை நிறுத்திவுட்டு ஒலி வந்த திசையை உற்று நோக்குகின்றன. பிறகு திடீரென்று மரத்தின் கிளைவிட்டுக் கிளை தாண்டி, ஓங்கி வளர்ந்த ஒரு மரக் கிளையின் மீது ஏறி மரத்தின் உச்சிக்குச் செல்கின்றன. அங்கிருந்து அவை வானத்தை அண்ணாந்து நோக்குகின்றன. அங்கு அவைகள் என்ன தேடினவோ தெரியவில்லை, அவைகள் ஏமாற்றமடைந்தது போல தோன்றியது. மறுபடியும் அவைகள் பழங்களைத் தின்னத் தொடங்கிவிட்டன.

ஞானக்குழந்தை திருஞானசம்பந்த மூர்த்தி இந்தக் காட்சியை காண்கிறார். மெல்ல சிரித்துக் கொள்கிறார். அவருக்குத் தெரியும் அந்த மந்திகள் ஏன் அப்படி மரத்தின் உச்சிக்குச் சென்று வானவெளியை அண்ணாந்து பார்த்தன, பின் ஏன் ஏமாற்றமடைந்து பழங்களைத் தின்னத் தொடங்கின என்று. ஆலயத்திலிருந்து ஒலித்த அந்த மத்தள ஒலி, அவைகளுக்கு இடியோசை போலக் கேட்டிருக்கிறது. மழை வருகிறதோ, அதற்காக வானம் உறுமுகிறதோ, இடி இடிக்கிறதோ என்று அவை வானத்தை அண்ணாந்து பார்த்தனவாம். அங்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் பிறகு வழக்கம் போல பழங்களைத் தின்னத் தொடங்கினவாம்.

திருஞானசம்பந்தர் திருவையாற்றை நெருங்கிவரும் நேரம் பார்த்த இந்தக் காட்சிகளை வர்ணித்துப் பாடுகிறார்.

"புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமரும் கோயில்;
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட
முழவு அதிர மழை என்று அஞ்சிச்
சில மந்தி அலமந்து மரம் ஏறி
முகில் பார்க்கும் திரு ஐயாறே!"


மறுபுறம் மான் கூட்டங்கள் ஓடிவருகின்றன. அங்கு வழியில் ஓடும் ஒரு ஓடையைத் தாண்டி அந்த மான்கள் பாய்ந்து ஓடுகின்றன. அப்படி திடீரென்று மான்கள் ஓடிவரவும், அங்கு மரத்தடியில் திரிந்துகொண்டிருந்த மந்திகள் பயந்து போய் மரத்தின் மேல் பாய்ந்து ஏறுகின்றன. அப்படி அவை பாய்ந்த வேகத்தில் மரத்தில் கட்டியிருந்த தேன்கூடு சிதைந்து தேன், ஓடை நீரில் சிந்துகிறது, நீரில் ஏற்பட்ட இந்த சந்தடியால் அங்கு ஓடிக்கொண்டிருந்த மீன்கள் நீருக்கு மேலாகத் துள்ளத் தொடங்கின, மீன்கள் துள்ளி விழுந்ததனால் அங்கு முளைத்து மொட்டு விட்டிருந்த தாமரைகள் மலரத் தொடங்கின. இந்தக் காட்சி அவர் கண்களில் படுகிறது.

"ஊன்பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன்
பலிக்கு உழல்வார் உமையாள் பங்கர்
தான்பாயும் விடை ஏறும் சங்கரனார்
தழல் உருவர் தங்கும் கோயில்;
மான்பாய, வயல் அருகே மரம் ஏறி
மந்தி பாய மடுக்கள் தோறும்
தேன்பாய, மீன்பாயச் செழுங்கமல மொட்டு
அலரும் திருஐயாறே!"


எழுத்தாக்கம்
வி.கோபாலன்
தஞ்சாவூர்

_______________________________________________________________
மகிழ்ச்சியான அறிவிப்பு

வாத்தியார் வெளியூர்ப் பயணம். அவருடைய சொந்த ஊரில் கோவில் திருவிழாக்கள். திரும்பி வர 4 நாட்கள் ஆகும். அதுவரை வகுப்பறைக்கு விடுமுறை. பழைய பாடங்களை மீண்டும் படியுங்கள். அடுத்த வகுப்பு
8.6.2011 புதனன்று நடைபெறும்!

வாரமலர் மட்டும் 5.6.2011 அன்று வெளியாகும் (Through Google blog's auto post option). அதை எழுதியவர் யார்? பொறுத்திருந்து பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!