மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 321 - 330. Show all posts
Showing posts with label Lessons 321 - 330. Show all posts

5.4.10

உங்களில் எத்தனைபேர் ஞானிகள்?

-----------------------------------------------------------------------
உங்களில் எத்தனைபேர் ஞானிகள்?

எண் ஏழு!

ஏழாம் எண் கேதுவிற்கு உரியது. சிந்தனையாளர்களுக்கும், தத்துவஞானி களுக்கும் உரியது.

கேது ஆன்ம மலர்ச்சிக்கு உரிய கிரகமாகும். அதன்காரணமாக இந்த எண்காரர்கள், ஆன்மீக சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். தான் யார், தன் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதைபற்றி எல்லாம் தெரிந்துகொள்ளும் முனைப்பாடு இருக்கும்.

எண் ஏழு எல்லா எண்களையும்விட ஆத்மார்ந்தமானது. ஆத்ம உணர்வு கொண்டது. ஆத்ம திருப்தியைத் தேடிப்பிடிக்கும் சக்தியை உடையது. ஏழாம் எண்காரர்கள் எதையும் தேடிப்பிடித்து, அறிந்து தெளியக் கூடியவர்கள்.

ஆராய்ந்தறியும் மனப்பான்மை கொண்டவர்கள். அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள். குறிப்பிட்ட செயலில் தன்முனைப்போடு செயலாற்றுபவர்களாக இருப்பார்கள். விஞ்ஞானபூர்வமாக எதையும் அனுகுபவர்களாக இருப்பார்கள். ஒருமுறைக்கு இருமுறை எதையும் சிந்தித்துத் செயல்படுபவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மற்றவர்களுக்குப் புதிரானவர்களாக இருப்பார்கள்.

உண்மையை விரும்புவர்களாக, உண்மையைத் தேடுபவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள். ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள்

இந்த எண்ணில் பிறந்த கலைஞர்கள், தங்கள் கனவுகளையும் எண்ணங்களையும், கவிதை அல்லது நாடக வடிவில் வெளிப்படுத்துவார்கள். எதையும் உன்னிப்பாகக் கவனிப்பதும், ஆராய்வதும் அவர்களுடன் பிறந்த இயற்கைக் குணமாகும்.
அதன் காரணமாக அவர்களுக்கு இயற்கையாகவே ஒரு உந்துசக்தி உடன் இருக்கும் (intuitive power). அந்த உந்துதலின் காரணமாக இந்த எண்ணில் பிறந்த சிலர்,மந்திர தந்திர சாஸ்திரங்கள், மாயாஜாலங்கள் போன்றவற்றில் ஈடுபாடு
கொண்டவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஜோதிடத்தில் அதீதமான ஆர்வம்/ஞானம் இருக்கும்.

அத்தகைய அதீத ஆற்றல்களால், இந்த எண்காரர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக விளங்குவார்கள். சிலருக்கு அத்திறமைகளை வைத்துப் பெரும் பொருள்/செல்வம் சேரும்.

ஏழாம் எண்காரர்கள் பழகுவதற்கு மென்மையானவர்கள். இனிமையானவர்கள். அதன் காரணமாக அவர்களைச் சுற்றி உள்ளவர்கள், தங்களுடைய ரகசியங் களையும், உணர்வுகளையும், அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

இந்த எண்காரர்கள் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், (ஓவியம், நடனம், நடிப்பு மற்றும்) இசைக்கலைஞர்களாகவும் பரிணமளிப்பார்கள்.அதாவது அந்தத் துறைகளுக்குச் சென்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

இந்த எண்காரர்கள் இயற்கையை இரசிப்பார்கள். அமைதியையும், நிம்மதியையும் அதிகம் விரும்புவார்கள். இன்னும் சொல்லப்போனால் அவற்றைப் போற்றுவார்கள்.

தங்களைச் சுற்றிப் பலர் வலம் வரும் வாய்ப்பு இருக்கும்போதும், அல்லது சூழ்நிலை இருந்தாலும், ஏழாம் எண்காரர்கள் தனிமை விரும்பிகள். தனிமையில் பணியாற்றும்போது சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.

career choices: Scientist, religious leader, philosopher, scholar, preacher, sage, teacher, inventor, researcher.

மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவது இந்த எண்காரர்களுக்குச் சிரமமான விஷயம். தனிமை நல்லதுதான். ஆனால் தனிமைப்பட்டுப் போய்விடக்கூடாது. அதை இந்த எண்காரர்கள் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
Intimacy might be difficult for them. Some of them can be cynical, selfish, egocentric,
withdrawn, aloof, lonely, overly reserved and suspicions. They should be careful not to
become too inward and isolated.

தங்களுக்கு உள்ள பொதுக்குணங்களால், இந்த எண்காரர்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். அதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல இந்த எண் உலகியல் வாழ்க்கைக்கு ஒத்துவராத எண்ணாகும்.
Number seven Can be a curse for worldly life. திருமண வாழ்வில் கசப்பு உண்டாகலாம். எந்த வயதில் வேண்டுமென்றாலும் உண்டாகலாம். ஆகவே இந்த எண்காரர்கள் அவற்றில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்

நட்பு எண்கள்: 8, 6, 5
பகையான எண்கள்: 1, 2, 9
உரிய நாள்: திங்கட்கிழமை
உரிய நிறம்: வெண்மை
நவரத்தினக்கல்: வைடூரியம் (Cat's eye)


----------------------------------------------------------
உரிய தொழில்கள்: கலைஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கையளர்கள், திரைப்படத்தயாரிப்பாளர்கள்.
திருமணம் மற்றும் தொழிலுக்கு இசைந்து வரக்கூடிய எண்கள்: 3, 6, 7

நமது வகுப்பறையில் எத்தனை ஞானிகள் அல்லது ஞானிகளாகப் போகிறவர்கள் இருக்கிறீர்கள்? ஏழாம் எண்ணிற்கு உரியவர்கள் இருக்கிறீர்கள்? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போங்கள்

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

31.3.10

ஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்திருந்த தந்தை!

....................................................................................................................
ஆறு வயதில் விதவையான மகள்; அதை முன்பே கணித்து வைத்திருந்த தந்தை!

லீலாவதி.

பெயரைப்போலவே அந்தச் சிறுமியும் அழகானவள். வயது ஆறுதான். அந்த வயதிற்கே உரிய குறுகுறுப்பும், சுட்டித்தனமும் அவளிடம் இருந்தன. ஆனால் அதிகமாக இருந்தன.

தன்னுடைய தந்தை வாங்கிக்கொண்டு வைத்திருந்த நீர்க் கடிகாரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் எப்படி நேரம் தெரியும்? எதைவைத்து நேரத்தைக் கண்டுபிடிப்பது?

காலம் 12ஆம் நூற்றாண்டு. அதை நினைவில் வையுங்கள். அப்போதெல்லாம் சுவர்க்கெடிகாரம், கைக்கெடிகாரம் எல்லாம் ஏது?

அந்த அறைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று அவளுடைய தந்தை எச்சரித்திருந்தார். அந்தக் கருமம் பிடித்த எச்சரிக்கைதான், ஒரு அதீதமான ஆர்வத்தை வேறு தூண்டி விட்டிருந்தது.

கடிகாரத்தை எட்டிப்பார்த்தாள். சிறிது குற்ற உணர்வும் எட்டிப் பார்த்தது.

அப்போதுதான் அது நடந்தது. அது என்ன விளைவிக்கப் போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.

அவள் அணிந்திருந்த மூக்குத்தியில் இருந்து கழன்ற முத்து ஒன்று, சட்டென்று, அந்தக் கடிகாரத்திற்குள் போய் விழுந்தது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அறையை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டாள்.

அடுத்த நாள் அவளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. ஆமாம், பால்ய விவாகம். அந்தக் காலத்தில் அதெல்லாம்

சர்வசாதாரணம்.

இப்போது 32 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல், பொருள் ஈட்டலில் உள்ள பெண்களைப் போல அல்லாமல், அந்தக்காலத்தில் அதே வயதிற்குள் பெண் இரண்டு தலைமுறை வளர்ச்சியைப் பார்த்துவிடுவாள்.

லீலாவதியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

ஆனால் கொடுமை என்னவென்றால், திருமணம் முடிந்த மறுவாரம், அவளுடைய கணவன் (8 வயதுச் சிறுவன்) இறந்துவிட்டான். அருகில் இருந்த குன்றின் மீது நண்பர்களுடன் ஏறும்போது, தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டான்.

அனைவரும் கதறி அழுதார்கள். இறந்த பிறகு என்ன செய்ய முடியும்? எடுத்துக்கொண்ட உயிரை எமன் திருப்பித்தருவானா என்ன?

அவளுடைய தந்தையின் பெயர் பாஸ்கராச்சாரியார். மிகப் பெரிய கணித மேதை. அத்துடன் ஜோதிட வல்லுனர். இந்திய வரலாறு அணைத்துக் கொண்ட பெயர்.

தன்னுடைய மகளின் திருமணம் குறிப்பிட்டுள்ள அந்த நாளில், குறிப்பிட்டுள்ள அந்த நேரத்தில்தான் நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். நாள் தவறினாலும், நேரம் தவறினாலும் மகள் விதவையாகி விடுவாள் என்பது அவருக்குத் தெரியும். அதானால்தான் அந்த நீர்க் கெடிகாரத்தை வாங்கிக் கொண்டுவந்து வைத்திருந்தார். அதைவைத்துச் சரியான நேரத்தில் தன்
மகளின் திருமணத்தை நடத்த எண்ணியிருந்தார். அவர் எண்ணத்தில் கழன்று விழுந்த முத்தின் வடிவில் மண்ணைப் போட்டான் காலதேவன். கடிகாரத்தில் முத்து விழுந்தது அவர் கண்ணில் படாமல் போய்விட்டது.

கடிகாரம் நேரத்தைச் சொதப்பியது அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. தன்னுடைய தவறான ஜோதிடக் கணிப்புத்தான் மகள் விதவையானதற்குக் காரணம் என்று அவர் தன்னையே குற்றம் சாட்டிக்கொண்டார்.

என்ன செய்வது? நடந்தது நடந்துவிட்டது.

ஆறுவயதுக் குழந்தைக்கு ஒன்றும் தெரியவில்லை. தான் விதவையாகிவிட்டதின் அவலம் புரியவில்லை. பாஸ்கராச்சார்யா ஆச்சாரமான அந்தனர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய குல வழக்கப்படி பெண் எந்த வயதில் விதவையானாலும்
விதவையானதுதான். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கலங்கிப் போன, நொருங்கிப்போன பாஸ்கராச்சார்யா, இரண்டு திங்களில் சமாதானமானார். விதியின் சவாலை ஏற்றுக் கொண்டார். தானே ஆசானாக இருந்து, தன் மகளையும் பெரிய கணித மேதையாக்கினார்.

சித்தாந்த சிரோனணி என்னும் கணித நூலை எழுதியவர் அவர். டிரிகொனாமெட்ரி, அல்ஜீப்ரா, கால்குலஸ் போன்ற கணிதங்களை எல்லாம் விடிவமைத்து விளக்கம் எழுதியவர். அவருடைய வரலாறைப் படித்தால் தலை சுற்றும். தலை சுற்றாது என்று நிச்சயம் தெரிந்தவர்கள், அவருடைய வரலாற்றைப் படியுங்கள். விக்கி மகாராசாவிடம் பாஸ்கராச்சார்யாவைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன அதற்கான சுட்டி இங்கே உள்ளது. அழுத்திப் பாருங்கள்

சூரிய, சந்திர கிரணங்களை அறியும் முறைகளை எல்லாம் கணிதத்தின் மூலம் வடிவமைத்தவர் அவர். இந்திய ஜோதிடத்திற்கு அவர் ஆற்றிய பங்கை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

அவருடைய காலம் கி.பி 1114 முதல் 1185 வரை. கர்நாடக மாநிலத்தில், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜ்ஜடபிட்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.

அவரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள்:

Bhaskara accurately defined many astronomical quantities, including, for example, the length of the sidereal year, the time that is required for the Earth to orbit the Sun, as 365.2588 days[citation needed] which is same as in Suryasiddhanta. The modern accepted measurement is 365.2563 days, a difference of just 3.5 minutes.

His mathematical astronomy text Siddhanta Shiromani is written in two parts: the first part on mathematical astronomy and the second part on the sphere.

Bhaskara (1114 – 1185) (Kannada ಭಾಸ್ಕರಾಚಾರ್ಯ) (also known as Bhaskara II and Bhaskara Achārya ("Bhaskara the teacher")) was an Indian mathematician and astronomer. He was born near Bijjada Bida (in present day Bijapur district, Karnataka state, South India) into the Deshastha Brahmin family. Bhaskara was head of an astronomical observatory at Ujjain, the leading mathematical centre of ancient India. His predecessors in this post had included both the noted Indian mathematician Brahmagupta (598–c. 665) and Varahamihira. He lived in the Sahyadri region.

Bhaskara and his works represent a significant contribution to mathematical and astronomical knowledge in the 12th century. His main works were the Lilavati (dealing with arithmetic), Bijaganita (Algebra) and Siddhanta Shiromani (written in 1150) which consists of two parts: Goladhyaya (sphere) and Grahaganita (mathematics of the planets).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வராக மிஹிராவைப்பற்றிய மேலதிகத் தகவல் வேண்டுவோர்களுக்காக கிழே ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் அதை அழுத்திப்பார்க்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் (1.4.10 & 2.4.10) விடுமுறை. அடுத்த வகுப்பு 3.4.2010 சனியன்று. ’கட்’ அடிக்காமல் அனைவரும் வந்து சேரவும்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

30.3.10

ஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா? இல்லையா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆஸ்தான ஜோதிடர் சொன்னது நடந்ததா? இல்லையா?

ஆஸ்தான ஜோதிடர் சொன்னதைக் கேட்டு அரசசபை அதிர்ச்சியில் உறைந்தது!

எங்கும் அமைதி. யாரும் வாயைத் திறக்கவில்லை!

மன்னன் மட்டும் ஒரே விநாடியில், மனதைத் தேற்றிக்கொண்டு கேட்டான்: “நீங்கள் சொல்வது உண்மையா குருவே?”

குருவின் வார்த்தைகளில் துக்கம் தொனித்தாலும், அதிகாரத்தொனியும் சேர்ந்தே இருந்தது.

“உண்மைதான், மகராஜா! எனக்கும் அதைச் சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. சில சமயங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும். கிரகங்களின் நிலைமை அதைத்தான் தெளிவு படுத்துகின்றன. இளவரசனின் மரணம் தவிர்க்க முடியாதது. அவன் தனது பதினெட்டாவது வயதில் உயிர் நீப்பான். மரண மடைவான்.”

அரசன் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஆனால் அவனுக்குப் பின்புறம் அமர்ந்திருந்த மகாராணியால் முடியவில்லை, உணர்ச்சி மேலிடக் கதறி அழும் தொனியில் அவள் சொன்னாள்: “இல்லை, இல்லை, மகராஜா! நீங்கள்தான் ஏதாவது செய்து நமது செல்வனைக் காப்பாற்ற வேண்டும். இவருடைய ஜோதிடத்தைப் பொய்யாக்க வேண்டும்.அது உங்களால்தான் முடியும்”

என்ன நடந்தது?

அரசன் ஜெயித்தானா? அவனால் ஜோதிடத்தைப் பொய்யாக்க முடிந்ததா?

அதெப்படி முடியும்? அரசனுக்கு ஜோதிடம் சொன்னவர் என்ன அரைக்காசு மரத்தடி ஜோதிடரா?

இந்திய ஜோதிடக்கலையின் தந்தை என்று போற்றப்படும் மிஹிரர் அவர். மன்னனும் சாதாரண பத்தோடு பதினொன்றாம் மன்னன் அல்ல! இந்திய வரலாற்றில் தனது பெயரை நிலை நிறுத்திவிட்டுப்போன மன்னன் அவன். பெயரைச் சொன்னால் உங்களில் பலருக்கும் அவனைத் தெரியவரும்.

அவன் பெயர் விக்கிரமாதித்தன். ஐந்தாம் நூற்றாண்டில் வாழந்து பெயர் பெற்றவன். மெளரிய சாம்ராஜ்யத்தின் தூணாக விளங்கியவன்.

ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும், ஜோதிடரின் மேல் மிகுந்த விசுவாசமும் இருந்தாலும், தனது பாழாய்ப்போன மனதிற்காக வேண்டிய பாதுகாப்பை எல்லாம் கொடுத்துத் தன் மகனைக் கண்ணுக்குகண்ணாய் வளர்த்தான் அவன். ஆனாலும் ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில்,
குறித்துக் கொடுத்தபடி ஒரு வராகத்தால் (பன்றியால்) இளவரசன் கொல்லப்பட்டான்.

செய்தி காதிற்கு எட்டியவுடன், மன்னன் செய்த முதல் வேலை, ஜோதிடரை அழைத்துவரச் செய்ததுதான்.

வந்தவரிடம் அரசன் சொன்னான்: “ நான் தோற்றுவிட்டேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள், நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்!”

அரசனைப்போலவே துக்கத்தால் சூழப்பட்ட ஜோதிடர், வருத்தமுற்றுப் பேசலானார்.“ மன்னர் மன்னா, நான் ஜெயிக்க வில்லை. நமது நாட்டின் வானவியலும், ஜோதிடமும் ஜெயித்துள்ளன! (My Lord, I have not won.
It is the science of astronomy and astrology that has won.)

”அது எதுவாக இருந்தாலும் சரி, எனது மதிப்பிற்கு உரிய ஜோதிடரே, நீங்கள் அறிந்து வைத்திருக்கும் கலையில் உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை!அந்தக் கலையில் நீங்கள் அடைந்திருக்கும் மேன்மைக்கு நான் தலை வணங்குகிறேன். உங்களுக்கு உயரிய விருதான வராக விருதை அளிக்கிறேன். இன்று முதல் நீங்கள் வராகமிஹிரர்!

வெறும் மிஹிரர் வராகமிஹிரர் ஆனகதை இதுதான்.

இது புனையப்பெற்ற கதை அல்ல! உண்மையில் நடந்த கதையாகும்!

மீதிக்கதை நாளை வெளிவரும்

ஹி..ஹி..முழுக்கதையையும் எழுதிப் பதிவிட இன்று நேரம் இல்லை!

(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
வாத்தியார்!


வாழ்க வளமுடன்!

29.3.10

ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!

225 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.

இடம்: கடவுளின் சொந்த தேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர்
(எந்த மாநிலம் என்று தெரிகிறதா?)

அங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக்
காசு பார்ப்பதை விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையை காப்பாற்ற வந்த ரட்சகனாக தன்னை எண்ணிக்
கொண்டு, பல சீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக் கொண்டிருந்தார்.
பல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்

அந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.

தன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப் பட்டான்.

தன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.

77 ஆண்டுகள் என்று தெரிந்தது!

மரண தண்டனை கிடைக்கும்படியான ஒரு குற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக் காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம். போனால் உயிர் போகட்டும். இல்லையென்றால் ஜோதிடக் கலைக்கு ஒரு வலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என்றும் முடிவு செய்தான்.

இளைஞனல்லவா? உடனே செயலிலும் இறங்கினான்.

நடந்தது என்ன?

படித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்! மேலே படியுங்கள்

இது நடந்த கதை.

அந்த இளைஞனின் பெயர் நாராயணன் இளையத். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், திருச்சூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மச்சத் என்னும் ஊரில் பிறந்தவன் அவன். பிறந்த ஆண்டு 1765. எடக்காடு நம்பூதிரி என்னும் பிரபலமான ஜோதிட விற்ப்பன்னர் அவனுக்கு குருவாக அமைந்தார். அவருடைய குருகுலத்தில் இவனும் கற்றுத் தேறினான்.

அவனுக்கு இருபது வயதாகும்போது, ஒரு ஆர்வத்தில், தனது ஆயுள் ஸ்தானத்தைக் கணக்குப்பண்ணிப் பார்த்தான். தனது விதிப்படி தனக்கு நீண்ட ஆயுள் உண்டு என்று தெரிந்துகொண்டான். அதை சோதித்துப்பார்க்கவும் விரும்பினான்.

அதற்கு அவன் தேர்வு செய்த இடம், அந்தக் காலக்கட்டத்தில் கொச்சிப் பகுதியில் ஆட்சி செய்துகொண்டிருந்த சதன் தம்புரான் என்னும் அரசனின் மாளிகை. அந்த அரசன் கோலோச்சிய காலம். (1781 - 1805)

அரசனின் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நம் நாயகன்,கருவறை வரை சென்று, அங்கிருந்த ஏராளமான பொக்கிஷங்களில், தங்கத்தால் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பானைகளில் ஒன்றை மட்டும் தூக்கிக் கொண்டு தப்பிக்க முயன்றான். இரவு நேரம் என்றாலும் காவல் பலமாக இருந்ததால் மாட்டிக்கொண்டு விட்டான். கையும் களவுமாக அவனைப் பிடித்த காவலர்கள்,
அவனை அரசனின் முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

அரசன் யோசிக்கவேயில்லை. கடுங்கோபத்துடன், அவனுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினான்.

விதி எப்போதுமே அதற்கென்று ஒரு வழி வைத்திருக்கும். அந்த வழியை அது திறந்துவிட்டது.

அரண்மனையில் இருந்த பண்டிதர்களில் சிலர் அவனை அறிந்திருந்தார்கள். அவனுக்குத் தண்டனையளிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், இரக்கத்துடன் வந்து அவனிடம் பேசலுற்றார்கள். அத்தகைய கொடிய தண்டனை பெறும் அளவிற்கு அவன் செய்த குற்றம் என்ன?

நமது நாயகன் தான் வந்த நோக்கத்தை அவர்களிடம் முழுமையாக சொன்னான். விரைந்து சென்ற அவர்கள், மன்னனிடம் முழு விவரத்தையும் சொல்ல, மன்னன், ஒருவிதக் குறுகுறுப்புடன், நமது நாயகனைத் திரும்ப அழைத்துப் பேசலுற்றான்.
மன்னன் எல்லாக் கலைகளுடனும், ஜோதிடத்தையும் ஓரளவிற்குக் கற்றவன் என்பதால், நமது நாயகனிடம் பேசப் பேசப் பிரமிப்பிற்கு ஆளானான். அவனை மன்னித்ததோடு, விடுதலை செய்தும் அனுப்பிவைத்தான்.

ஜோதிடம் என்னும் ஒரு தெய்வீகக் கலையை சோதிக்க முயன்றது மாபெரும் தவறு என்று மன்னன் அவனை எச்சரித்தபோது, நமது நாயகன் மன்னனிடம் இவ்வாறு சொன்னான்.”அரசே ஜோதிடத்தின் மீதும், தெய்வத்தின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. என் ஜாதகப்படி நான் சாக மாட்டேன், தண்டனைக்குள்ளாக மாட்டேன் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து இச்செயலில் ஈடுபட்டேன். இக்கலையின் சிறப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இதைச் செய்தேன்”

அவனின் வார்த்தைகளில் மயங்கிய மன்னன், தன் காலம்வரை அவனையே தனது ஆஸ்தான ஜோதிடராக வைத்துக் கொண்டார்.

பிரசன்ன ஜோதிடத்தில் மிகவும் தேர்ந்தவனான நமது நாயகன், பல அசரடிக்கும் பலன்களைக்கூறி, அவை அவ்வாறே நடந்தேறியபோது, அவனைப் பார்த்துப் பிரம்மித்தவர்களே அதிகம்.

பிரசன்ன ஜோதிடம் என்பது கேள்வியையும், கேள்வி கேட்கும் நேரத்தையும் வைத்துப் பலன் சொல்வதாகும்.

ஒரு வாழைக்கன்று வைக்கப்படும் நேரத்தை வைத்து, அந்தக் கன்று வளர்ந்து கனி தருமா? தராதா? வைத்தவன் அதைச்சாப்பிடுவானா? அல்லது மாட்டானா? அல்லது அந்தக் கனி என்னவாகும் என்பது வரை சொல்லும் ஆற்றல்
பிரசனன ஜோதிடத்திற்கு உண்டு என்பார்கள்.

ஒரு சமயம் நமது நாயகன், தம்புராக்கள் என்னும் பெரிய பண்டிதரைப் பார்த்துவரச் சென்றான். இவன் சென்ற நேரம், பண்டிதர், முடிதிருத்தத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். இவனைக் கணடதும், அவர் விளையாட்டாகச் சொன்னார்:

“என்னப்பா நான் முடிவெட்டக் கிளம்பும்போது, நீ வந்திருக்கிறாயே, உன்னோடு இப்போது எப்படிப் பேசுவது? சரி, உன்னுடைய பிரசன்ன ஜோதிடத்தை வைத்துச் சொல், இப்போது நான் முடிவெட்டிக்கொள்வேனா? அல்லது மாட்டேனா?”

“சட்டென்று தன் மனதிற்குள் கணக்கிட்ட நமது நாயகன் சொன்னான், “இல்லை, இப்போது நீங்கள் முடி வெட்டிக் கொள்ள முடியாது. அதற்கு இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்கவும் வேண்டும்”

”நாவிதன் எங்கள் தோட்டத்தில் எனக்காகக் காத்திருக்கிறான். உன் பிரசன்னம் பொய்யாகப் போகிறது. என்னுடன் வா, காட்டுகிறேன்” என்று அவர் புன்னகையுடன் சொன்னார்.

ஆனால் அது பொய்யாகவில்லை. உண்மையாகிப்போனது.

எப்படி?

அது சமயம், அங்கே வந்த பண்டிதரின் தாய், தன் மருமகளுக்கு (அதாவது பண்டிதரின் மனைவிக்கு) நாள் தள்ளிப்போய்விட்டதையும், அவள் கருவுற்றிருப்பதையும் சொல்ல, முடி திருத்தம் தள்ளிவைக்கப்பட்டது.
கேரள அந்தனர்களின் முறைப்படி மனைவி கருவுற்றிருக்கும்போது,
கணவன் தாடி வளர்க்கும் அந்தக்கால வழக்கத்திற்கு அவரும்
ஆட்படுத்தப்பட்டார். எட்டு மாதங்கள் கழித்து, அவருடைய மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகே, அவர் முடிதிருத்தம் செய்துகொள்ள முடிந்தது.

நமது நாயகனின் பிரசன்ன ஜோதிட மகிமை எப்படி உள்ளது பார்த்தீர்களா?

(V S. கல்யாணராமன் என்னும் கணிதம் மற்றும் ஜோதிட மேதை எழுதிய செய்திகளின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை. அவருக்கு நமது நன்றி உரித்தாகுக!)

சதன் தம்புரானைப் பற்றிய மேல் விவரங்கள் விக்கி மகராசாவிடம் கிடைக்கும். இங்கே சொடுக்கிப் பாருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
V S. கல்யாணராமனைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

V S KALYANRAMAN A mathematician and amateur astronomer by training, a bureaucrat by profession and a student of astrology by passion, the author had his traditional training in astrology in his teens, under a couple of doyens of Gurus of yester years, with a vow not to
turn a professional. Commencing his career as a teacher in Kerala completed it as a
Senior Class I officer of the Government of India. After a stint of story writing in Tamil in the fifties, turned to serious study of Saiva Siddhanta, Philosophy, Psychology, Vedic Mathematics, Bharateeya Ganitha Sastra, Jyothisha (astronomy), the various astrological systems, Vastu Sastra, Vedic Numerology and allied disciplines, under various masters of repute.

As a freelancer, though was contributing on varied topics, occasionally to various magazines in English, Tamil and Malayalam, mostly under disguise, for decades and has received many awards and accolades, would prefer to remain, anonymous and a student, till his last breath

பிரசன்ன ஜோதிடத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

Prasna Marga is an ancient branch of horoscopic astrology by which an astrologer attempts to answer a question by constructing a horoscope for the exact time and place at which the question was received and understood by the astrologer. A common misconception is that the horoscope must be constructed for the place and time the querent establishes the question. In the previous centuries this issue did not create any problems as the astrologer would consult with the querent face to face. These days the querent could be in Africa and send an email with the question to an
astrologer in Australia. Hence, it is necessary to emphasize the point.

The answer might be a simple yes or no, but is generally more complex with insights into, for example, the motives of the questioner, the motives of others involved in the matter, and the options available to him. History Prasna Marga has been practiced for centuries in India known as Prasna Shastra (Sanskrit prasna = question). It is a branch of Vedic astrology which is still widely used across the Indian subcontinent. The more advanced form is the Astamangalam Prasna and Deva Prasna methods of Kerala. The state of Kerala, in India, is famous even today for its traditional use of Prasna Marga.
++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி, வணக்கத்துடன்,
வாத்தியார்


சதன் த்ம்பூரான் மன்னரின் அரண்மனை
வாழ்க வளமுடன்!

16.3.10

மலர்கள் மலர்வது எனக்காக!

............................................................................................................
மலர்கள் மலர்வது எனக்காக!

ஆறாம் எண்ணிற்கான எண் ஜோதிடம்!
+++++++++++++++++++++++++++++++++++
ஆறாம் எண்ணிற்கு உரிய கிரகம் சுக்கிரன்.

காதல், ரசனை, கலைகள்,அழகு, ஆடம்பரம் என்றுள்ளவைகளுக்குக் காரகன் சுக்கிரன். ஆகவே ஆறாம் எண்ணிற்கு உரியவர்களுக்கு அதெல்லாம் இருக்கும். இப்படிச் சொல்லலாம் - அதற்கெல்லாம் உரியவர்கள் இவர்கள்.

ரிஷபம் மற்றும் துலாம் லக்கினத்தில் பிறந்தவர்கள், அத்துடன் 6ற்குரிய தேதிகளில் பிறந்திருந்தவர்கள், அல்லது ஆறாம் எண் விதி எண்ணாக அமையப்பெற்றவர்கள் ஆகியவர்களுக்கு மேற்சொன்ன குணங்கள் எல்லாம் நிறையவே இருக்கும்.

காதல் உணர்வும், கலை உணர்வும் இந்த எண்காரர்களை ஆட்கொண்டுவிடும். பெருந்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அனைவருடனும் இசைந்து போவார்கள். பிரச்சினை செய்யாத பிறவிகள் என்று சொல்லலாம்.

இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல, காதலும், இசையும் இவர்களை இழுக்கும். இவர்கள் வசிக்கும், வீடு, அலுவலகம் என்று எதுவாவானாலும் கலைநயத்துடன் அல்லது அலங்காரத்துடன் இருக்கும். விதம்விதமான உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள். சாதுவான, இனிமையான தன்மையுடன் இருப்பார்கள். சிலசமயங்களில் மட்டுமே மற்ற சகமனிதர்களைப்போல நடந்துகொள்வார்கள். அதுவும், இவர்களுடைய உணர்வுகளுக்கு எதிரான செயல்கள் நடக்கும்போது மட்டுமே அப்படி நடந்துகொள்வார்கள்

நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதுபோல, காதலின்றி அமையாது இவ்வுலகு எனும் நம்பிக்கை உடையவர்கள் இவர்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். திருமண பந்தத்திற்கு, அதாவது இல்லாளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

சங்கீதம், நாட்டியம், நாடகம், திரைப்படம், என்று மனதை மகிழ்விக்கும், பொழுது போக்கும் அம்சங்கள் அனைத்திலும் ஈடுபாடு கொள்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவைகளில் தங்களுக்குள்ள திறமைகளையும் வெளிப்படுத்துவார்கள்.

பணமும்,நவீன வாழ்க்கை வசதிகளும் இவர்களைத் தேடிவரும். அதனால் பனத்தைக் கட்டிக்காக்க மாட்டார்கள். செலவுகளுக்கு அஞ்ச மாட்டார்கள்.

எதையும், எவரையும் புன்னகையுடன் எதிர்கொள்வார்கள். அதை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, பதிலுக்கு இவர்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கையின் அவலம்!

இந்த எண்காரர்கள் பாசமிக்கவர்கள். பொறுப்பானவர்கள். தியாக உணர்வு உடையவர்கள், சுயநலமில்லாதவர்கள், கொடையாளிகள், அன்பானவர்கள், இரக்கமுள்ளவர்கள், நடுநிலமையுடையவர்கள், கவர்ச்சியானவர்கள். இது அனைத்தும் பொதுக்குணங்கள்.

இதைப்படித்துவிட்டு, சார் என் மகனின் எண் ஆறு. ஆனால் பொறுப்பில்லாமல் இருக்கிறானே என்று யாரும் கேட்க வேண்டாம். அதனால்தான் இவைகளைப் பொதுக்குணங்கள் என்று சொல்கிறேன். ஜாதகத்தில் உள்ள கோளாறுகளுக்குத் தகுந்தபடி இந்தக் குணங்களில் சில இல்லாமலும் போகலாம். அதுதான் வாங்கி வந்த வரம் எனப்படும்.

இந்த எண்காரர்கள் சிறந்த குடும்பஸ்தர்களாக விளங்குவார்கள். சமூக அக்கறை இருக்கும். வாக்கை நிறைவேற்றும் தன்மை இருக்கும். ஒப்புக்கொண்டபடி நடக்கும் செயல்பாடு இருக்கும்.

பாடகர், இசைக்கலைஞர்கள், நடிகர்கள், கைவினைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், ஓவியர், சிற்பி என்றுள்ள துறைகளில் பணியாற்றத் தகுந்தவர்கள் இவர்கள். அவற்றில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.

They will be too emotional and overly sentimental. They also might sacrifice themselves too much for the sake of others.

உதவிக்கும், குறுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பார்கள். அதுதான் இந்த எண்காரர்களின் பலவீனம். எப்போதும் நிம்மதியையும், அமைதியையும் விரும்புபவர்கள் இவர்கள்.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நட்பு எண்கள் 4, 5, 8
எதிரான எண்கள்: 1, 2
உகந்த நாள்: வெள்ளிக்கிழமை.
நவரத்தினம்: வைரம்
உலோகம்: வெள்ளி
உகந்த தொழில்கள்: Healt care, alchemists, art critics, journalists
வியாபாரத்திற்கும், திருமணத்திற்கும் இசைவான எண்கள்: 3, 6, 9

=========================================================
சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் வாழ்க்கையை அணுஅணுவாக அனுபவிக்கப் பிறந்தவர்கள். கவியரசரின் மொழியில் சொன்னால், இந்த உலகம் பிறந்தது எனக்காக என்பார்கள். ஓடும் நதிகள் எனக்காக என்பார்கள். மலரும் அத்தனை மலர்களும் எனக்காக என்பார்கள்.

பாடலின் முக்கிய வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக -
அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

தவழும் நிலவாம் தங்கரதம்

தாரகை பதித்த மணிமகுடம்

குயில்கள் பாடும் கலைக்கூடம்

கொண்டது எனது அரசாங்கம்"

++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

15.3.10

ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது!

எண் ஐந்தைப் பற்றிய எண் ஜோதிடம்!
------------------------------------------------------------
எண் 5 புதனுக்கு உரியது. இந்த எண்காரர்கள் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடியவர்கள்.வடிவேல் மொழியில் சொன்னால் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது. முடியாதது என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. எதையும் உற்சாகத்தோடு முயன்று பார்ப்பார்கள்.தங்கள் புத்திசாலித்தனத்தால் முடித்தும் காட்டுவார்கள்.

இவர்களுடைய புத்திசாலித்தனம் மின்னல் வேகத்தில் வேலை செய்யும். வாழ்க்கையில் வெற்றியாளனாகவும், புகழ் மிக்கவர்களாகவும் வலம் வருவார்கள்.

5, 14, 23, ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் இந்த எண்ணிற்கு உரியவர்கள். பிறப்பு எண் 5 வந்தாலும் சரி அல்லது கூட்டல் எண் (விதி எண்) 5 வந்தாலும் சரி, அவர்களுக்கு இந்தக் குணாதிசயங்கள் இருக்கும்.

மற்றவர்களுக்கு மாதக் கணக்கில் யோசித்து முடிவெடுக்கும் யோசனைகள் (ஐடியாக்கள்) இவர்களுக்கு நொடியில் தோன்றும். இன்றைய விஞ்ஞான உலகத்தின் பல சாதனைகள் எல்லாம் பெரும்பாலும் இந்த எண்ணிற்கு உரியவர்களால் ஏற்பட்டதுதான்.

இந்த எண்காரர்கள் மன வலிமை கொண்டவர்கள். சிந்தனைகள், எண்ணங்கள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் ஒரு வேகம் இருக்கும். அந்தக் குணத்தால், பணம் பண்ணுவதில் ஒரு வல்லமை இருக்கும்.
இந்த எண்காரர்களுக்குப் பங்குச்சந்தை ஒரு சிறப்பான ஏற்றத்தைக் கொடுக்கும். அதில் நுழைந்து, தங்களுடைய ஆற்றலைக் காட்டினால் ஆதீதப் பொருள் குவியும் அல்லது அதிக அளவில் செல்வம் சேரும். அதனால்தான் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போன்றது என்று சொல்லப்படுகிறது.

இந்த எண்காரர்களின் வீக்னெஸ் என்ன? வீக்னெஸ் இல்லாமல் இருக்குமா? ஒரு காரியம் ஆகவில்லை என்றால் சீக்கிரம் தளர்ந்து போய்விடுவார்கள். மனப் போராட்டம் வந்தால் தங்களை இழந்துவிடுவார்கள். தாங்கமாட்டார்கள். மற்றவர்களின் முட்டாள்தனத்தையும் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த எண்காரர்களுக்குப் புதுப்புது புத்திசாலித்தனமான எண்ணங்கள் தோன்றும் யோசனைகள் வரும். அதன் காரணமாகப் புதுப்புது வியாபாரங்களையும், தொழில்களையும் விரும்பிச் செய்வார்கள். தோல்வியைப் பற்றிய பயமே இருக்காது. எதையும் ஒருகை பார்ப்போம் என்று இறங்குவார்கள். இறங்கி முழுவேகத்துடன் செய்வார்கள்

இந்த எண்ணில் பிறந்தவர்கள், பொதுவாகத் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் பிரபலமடைவார்கள்

ஐந்தாம் எண்ணில் பெயரை உடையவர்கள், அல்லது பெயரை உடைய நிறுவனங்கள் மற்றவர்களை ஈர்க்கும்படியாக இருக்கும். அதன் காரணமாகவே வெற்றிபெற நினைக்கும் பலர் இந்த எண்ணில் பெயரைத் தேர்ந்தெடுப்பார்கள். தோல்வி என்பது இருக்காது. இருந்தாலும், வாங்கிய அடியை மறந்துவிட்டு, எழுந்து போராடி, வெற்றியடைவார்கள்.

மாற்றத்தை விரும்புவார்கள். அன்றாட வேலைகள் ஒன்று போலிருந்தால், சீக்கிரம் போரடித்துவிடும் bored by routine. உணவு, உடை, போன்ற நடைமுறை விஷயங்களில்கூட அடிக்கடி மாற்றங்களைச் செய்வார்கள்

மனைவியாக வருபவளும், இவர்களுடைய இந்த குணத்தை அறிந்துகொண்டு, இவர்களுக்குத் தகுந்தமாதிரி விதம் விதமாகப் பணிவிடை செய்ய வேண்டும். முக்கியமாக இவர்களை விதம் விதமாகக் கொஞ்சி உறவாட வேண்டும்:-)))

She has to display her affection in different ways and She has to retain his affection by cooking tasty dishes, and impress him with changes in her personality.

தொழில் அல்லது வியாபாரத்தில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். நிறைய சம்பாதிப்பார்கள். நிறைய செலவும் செய்வார்கள்.

ஐந்தாம் எண்ணில் பிறந்ததோடு மட்டும் அல்லாமல், ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றும் இருந்தால், அதீதப் பணம், பெயர், புகழ் என்று எல்லாவற்றையும் தேடிப்பிடிப்பார்கள். புதிய யுக்திகளை உபயோகித்து வழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். போற்றக்கூடிய, நினைவில் வைக்கக்கூடிய, பல செயல்களைச் செய்வார்கள்

இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). It will be instant love out of passion rather than reason. 9,16,27 எண்காரர்கள் இவர்களைக் காந்தம்போல கவரக்கூடியவர்கள். அந்த எண்காரர்களை மணந்துகொள்ள நேரிட்டால், வாழ்க்கை கசந்துவிடலாம். நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் இவர்களை ஓவர்டேக் செய்து ஓரங்கட்டிவிடுவார்கள்.

5, 14, 23 ஆகிய தேதிகளும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் இவர்களுக்கு உகந்த நாட்களாகும். Light grey, white, Light shades ஆகிய நிறங்கள் உகந்த நிறங்களாகும். இருட்டான நிறங்களை இவர்கள் தவிர்க்க வேண்டும். சிறந்த கல் பச்சை நிறக்கல் - மரகதம் emerald

சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள். எதையும் செய்து முடிக்கக்கூடியவர்கள். சீட்டுக் கட்டில் உள்ள ஜோக்கரைப் போன்றவர்கள் இவர்கள். ஆட்டத்தில் அது எந்தச் சீட்டுடனும் சேர்வதைப் போல இவர்களும் யாருடனும் சேர்ந்து பணியாற்றக்கூடியவர்கள்

கவியரசர் கண்ணதாசன் மொழியில் இவர்களைப் பற்றிச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்:

"என்னைத் தெரியுமா..... ?
என்னைத் தெரியுமா..
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா..
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா..

ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்..

நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்
நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்..
வாழ்வை சோலையாக்கலாம்..
இந்தக் காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
( என்னை )"

(படம்: குடியிருந்த கோவில்)
+++++++++++++++++++++++++++++
இந்த எண்காரர்களுக்கான மேலதிகத் தகவல்கள்:

1. The direction of growth in lifetime will be toward change, freedom, and progressive thought and action.
2. The number 5 Destiny potentially endows the native with the wonderful characteristic of multi-talents
3. Good at presenting ideas and knowing how to approach people to get what you want.
4. That will give an edge in any sort of selling and easy success when it comes
to working with people in most jobs.
5. Whatever they do, they have the capacity to be clever, analytical, and a very quick thinker.
6. The Destiny 5 will be welcome in many varied professional environments.
7. The public sector is a natural for you because you must administer to all peoples.
8. The media, advertising, promotion, publicity, all types of selling, and entertainment are all potential
fields for this number
9. Settling on a single career may not be in the cards for them, as they are in a
continuous state of flux brought by constantly changing interests.
10. If there is too much of the 5 energy in their makeup or if they develop negatively, the
negative side of the number may appear. It is restless
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

11.3.10

நாலு பேருக்கு நன்றி!

++++++++++++++++++++++++++++++++++++++++++
நாலு பேருக்கு நன்றி!

நான்காம் எண் ராகுவிற்கு உரியது. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள். நடைமுறை வாழ்க்கை வாழ்பவர்கள். ஆங்கிலத்தில் சொன்னால் They are very practical people.
பந்தா இல்லாதவர்கள்.

நான்காம் எண்காரர்கள் எதிலும் விவரமானவர்கள். அமைப்பானவர்கள்.
ஒரு ஒழுங்குமுறையில் செயல்படக் கூடியவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள்.

எடுத்த காரியத்தை நடுவில் விட்டு விடமாட்டார்கள். என்ன இடர் வந்தாலும் போராடி அல்லது எதிர்த்து நின்று கடைசியில் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். கடினமான உழைப்பாளிகள்

வங்கியாளர், கணக்காளர், மேலாளர், விஞ்ஞானிகள், வழக்குரைஞர்கள் போன்ற வேலைகளில் சிறப்பாகச் செயல் படக்கூடியவர்கள்.

இந்த எண்காரர்களுக்கு மன உறுதி, பிடிவாதம், எடுத்த காரியத்தில் முனைப்பு போன்றவை மேலோங்கி இருக்கும். அதனால் சமயங்களில் வளைந்து கொடுத்துப் போகமுடியாமல் அவதிப்படவும் நேரிடும்

பாரம்பரிய வழிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு செயல் படக்கூடியவர்கள். மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். இயல்பானவர்கள். சுயகட்டுப்பாடு உடையவர்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள். ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு முரண்பட்டவர்களாகவும், குறுகிய சிந்தனைகளை உடையவர்களாகவும், பிடிவாதம் மிக்கவர்களாகவும் காட்சியளிப்பார்கள். அது எண்காரர்களுக்கு உரிய பொதுத் தோற்றம்.

காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள். சீக்கிரமே வெறுப்பும் அடையக்கூடியவர்கள். காதலில் ஈடுபடும்போது, காதலன் அல்லது காதலி இசைந்து வருபவராக இருந்தால், நேர்த்தியான காதலராகப் பரிணமளிக்கக்கூடியவர்கள்.

புரிந்து கொள்ளமுடியாதவர்கள். அதன்காரணமாகப் பலர் இவர்களை நெருங்கமாட்டார்கள். தங்களை நேசிப்பவர்களுக்கு உயிரையும் தரக்கூடியவர்கள். அதே நேரத்தில் தனிமை விரும்பிகள்.
(Difficult to understand and get close to. Loyal to those they love but a loner)
எதையும் சட்டென்று அறிந்து கொள்ளும் தன்மை இருக்கும்.
தெளிவான மனநிலையை உடையவர்கள். துணிச்சலானவர்கள்.
சாதாரண மனிதர்களில் இருந்து மாறுபட்டவர்கள்

அதீத புத்திசாலிகள். அதீத மனக்கட்டுப்பாடுகள் மிக்கவர்கள். பகுத்தறிவு கொண்டவர்கள். எதிர்பார்ப்பதைச் செய்யக்கூடியவர்கள். கனவுகளைத் துரத்திச் சென்று அதை நனவாக்குபவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள். சமூக சிந்தனைகளை உடையவர்கள். இருந்தாலும் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். சிலரால் காதலில் வெற்றிபெற முடியாது. எதையும் சீரியசாக எடுத்துக்கொள்பவர்கள்.
வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். இருந்தாலும் திருப்தியடையாதவர்கள். அதீதமான விருப்பு & வெறுப்புக்களை உடையவர்கள். சிலர் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள். அதன்காரணமாகத் தனித்து இருக்கவும் நேரிடும். பல அரிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர்கள். இருந்தாலும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளமாட்டாரகள்.

Health & Finance:
Birth number 4 people usually suffer form breathlessness, weakness, sudden stomach pain & respiratory problems. Their financial prosperity usually start from late twenties.
If possible they should avoid joint business. They will be more successful while working alone.

சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் தனித் தன்மைவாய்ந்தவர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். அதன்காரணமாக பலருக்கும் எதிரியாகக் காட்சியளிப்பவர்கள். மற்ற எண்காரர்களைவிட இவர்களுக்குத்தான் அதிக அளவில் விரோதிகள் இருப்பார்கள்.

”நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி”

என்று புரட்சித்தலைவரின் படத்தில் பாடல் ஒன்றுவரும். அந்தப் பாடலில் குறிப்பிடப்படும் தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும் என்று வர்ணிக்கப்படும் நபர்கள் இந்த 4 எண்ணுக்கு உரியவர்கள். தங்களுடைய முற்போக்கு சிந்தனைகளால் பலருக்கும் தோள் கொடுப்பவர்கள் அவர்கள்.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணிற்கு உரியவர்கள்
1,2,7 & 8ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மட்டும் இவர்களுடன் சினேக மனப்பான்மையுடன் இருப்பார்கள்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய நாட்கள்
இவர்களுக்கு உகந்த கிழமைகள்
Lucky colour are Electric blue, Half Shades, Grey



கோமேதகம் இவர்களுக்கு உரிய நவரத்தினம் ஆகும். ராகு திசை நடப்பவர்கள் அனைவரும் இந்தக் கல்லை அணிந்து கொள்ளலாம்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

9.3.10

மஞ்சளின் மகிமை!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மஞ்சளின் மகிமை!

மூன்றாம் எண் குருவிற்கு உரியது.3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3ஆம் எண்ணாகும்.

இந்த மூன்றாம் எண்காரர்கள் பொதுவாக வசீகரமானவர்கள். ஆண்கள் கம்பீரமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். சிலர் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடன் இருப்பார்கள்

ஜோதிடமாகட்டும் அல்லது எண் ஜோதிடமாகட்டும், குருவிற்கு முக்கியமான பங்கு உள்ளது. சூரியனிட மிருந்து தான் பெறும் சக்தியைவிடப் பன்மடங்கு சக்தியை வெளிபடுத்தும் கிரகமாகும் அது. நியாயத்தையும், தர்மத்தையும் போதிக்கும் கிரகம் அது. அதனால்தான் அதற்குப் பிரஹஸ்பதி அல்லது வாத்தியார் என்ற பெயரும் உண்டு. பண்டைய நூல்கள் குருவை முக்கியப்படுத்திப் பல செய்திகளைச் சொல்கின்றன. Jupiter is a planet of courage, boldness, power, hard work, energy, knowledge, and speech.

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் குருவிற்கு நட்புக் கிரகங்களாகும். தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குருவிற்குச் சொந்த இடங்களாகும். கடகம் உச்சமான இடம். மகரம் நீசமான இடம்.

பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டிற்குக் காரகன் குரு. தந்தைக்குக் காரகன் சூரியன் என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின் மற்ற செயல்பாடுகளுக்கெல்லாம் குருவே அதிபதி.

ஒன்பதாம் வீடுதான் அதிர்ஷ்டத்தைக்குறிக்கும் வீடு. அதிர்ஷ்டத்திற்கு அதிபதி குரு. அதை மறக்க வேண்டாம். ஜாதகத்தில் குரு, கேந்திர கோணங்களில் இருப்பது நன்மை பயக்கும்!

நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும் குருவின் அமைப்பு முக்கியம். பெண்ணின் ஜாதகத்தில் குருவின் அமைப்பைவைத்துத்தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான். ஜாதகத்தில் குரு மறைவிடங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.

சனி, ராகு அல்லது கேதுவுடன் கூட்டாகவோ அல்லது எதிரெதிர் பார்வையுடனோ இருக்கும் குருவால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மிதுனம், கன்னி லக்கினக்காரர்களுக்கு, அதுபோன்ற அமைப்பு இருந்தால், சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும்

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கடினமான உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள். தங்களைத் தாங்களே பலவிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம் என்பது சிறிதும் இருக்காது. அதீதமாகப் பொருள் ஈட்டக்கூடியவர்கள். அதாவது சம்பாதிக்கக்கூடியவர்கள்.

அறவழிகளில் ஈடுபாடு உடையவர்கள். கடமையே வெற்றிக்கு வழி என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஓய்வு என்று சொல்லி ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். செய்யும் வேலை அலுப்பைத் தந்தாலும், அதை விடாது செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள்.

எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். முத்தவர்களின் அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.

ஆரோக்கியமான உடற்கட்டு இருக்கும். வாழ்க்கையுடன் இயைந்து போவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியை உடையவர்கள். நகைச்சுவை உணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத் தூண்டுதலாக விளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.

ஒற்றிலக்க எண்களில் - அதாவது 1,3,5,7,9 எனும் எண்களில் 3ஆம் எண்தான் அதிக சக்தியுள்ள எண். தலைமை எண் என்றும் சொல்லலாம்.

It makes its natives independent, bold, active, hard, working, dependable, popular, disciplined & self-confident. At the beginning of their career, which they start quite early in life they have to struggle a lot. This struggle, however, is very beneficial for their growth and development and makes them shine.

கடுமையான உழைப்பினால், சிலருக்கு, மன அழுத்தங்கள் உண்டாகும். சில இடையூறுகள் ஏற்படும். ஆனால் இந்த எண்ணிற்கு இயற்கையாகவே உள்ள அதிர்ஷ்டம்தரும் அமைப்பினால், அவைகள் எல்லாம் அவ்வப்போது களையப்பட்டுவிடும். தேவையானபோது இந்த எண்காரர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். செய்யும் வேலையில் அல்லது தொழிலில் தலைமை ஏற்கும் நிலைக்கு உயர்வார்கள்.
----------------------------------------------------------
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்: 3,12,21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். வியாழக்கிழமை உரிய கிழமையாகும். அதுபோல திங்கள், செவ்வாய்
& புதன் கிழமைகளும் இந்த எண்காரர்களுக்குச் சாதகமான கிழமைகளே!

இந்த எண்காரர்களுக்குச் சாதகமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறத்தில் துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணை உறை, கைக்குட்டை என்று எல்லாவற்றிலும் மஞ்சள் நிறத்தையே போற்றி வைத்துக்கொள்ளலாம்

நவரத்தினங்களில் மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் நன்மை பயக்கும்!



உடல் நலம்: இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சக்காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த எண்காரர்களின் வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகிய வயதில் வாழ்க்கை ஏற்றமுடையதாக இருக்கும்

ஐந்தான் ஜார்ஜ் மன்னர், அப்ரஹாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரபலங்கள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

8.3.10

முத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ!

மனிதர்களில் பலவிதமான குணமுடையவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேர்களும் ஒன்றிலிருந்து ஒன்பதிற்குள் உரிய எண்களின் குணங்களில் வகைப்பட்டுவிடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட எண்ணைச் சார்ந்தவர்களின் குணங்கள் பொதுவாக ஒன்றாக இருக்கும். அதாவது அந்த எண்ணின் குணாதிசயங்களைச் சார்ந்து இருக்கும்.

இரண்டாம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் மனகாரகன்.இரண்டாம் எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். மெல்லிய உணர்வுகளை உடையவர்கள்.

உயர்வான, சாதுவான, இனிமையான குணமுடையவர்களாக இருப்பார்கள். நுண்ணிய, சமாளிக்கும் திறன்மிக்க, ராஜதந்திரமிக்க, பொறுமையுள்ள, நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். உண்மையானவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு என்ன தேவை என்று உணரக்கூடியவர்களாக இருப்பார்கள். அதன்காரணமாக ஒரு குழுவாகச் செயல்படும் தன்மையை உடையவர்களாக இருப்பார்கள். அழகை நேசிப்பவர்களாக இருப்பார்கள்.

ஆசிரியர், ஆலோசகர், இசைக்கலைஞர், கட்டடக்கலைஞர், தூதுவர் போன்ற தொழில்களில் அல்லது வேலைகளில் பரிணமளிப்பார்கள். அதாவது பெயர் எடுப்பார்கள்.

சிலர், கோழைத்தனம், பயஉணர்வு அல்லது தன்னம்பிக்கைக் குறைபாடுகள் உடையவர்களாக இருப்பார்கள். அதன் காரணமாக வெற்றிபெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். இதுவும் அந்த எண்ணின் தன்மையாகும். தேய்பிறைச் சந்திரனில் பிறந்தவர்களுக்கு இந்தத்தன்மை இருக்கும்!

சிலர் சட்டென்று மனதளவில் காயப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் எதிர்ப்பில் இருந்தும், விமர்சனங்களில் இருந்தும் தப்பிக்கும் உணர்வுடையவர்களாகவும் இருப்பார்கள்.


இந்த எண்ணிற்கு நட்பான எண்கள் 1, 3
நட்பு இல்லாத எண்கள் 5, 4
உரிய நாள்: திங்கட்கிழமை
உரிய நிறம்: வெண்மை! (White)
உரிய நவரத்தினம்: முத்து (Pearl)
உரிய உலோகம்: வெள்ளி (Silver)

தொழில் அல்லது வேலை:

நீதித்துறையில் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர்கள். இந்த எண்காரர்களுக்கு இயற்கையாகவே பேச்சுத்திறமை இருக்கும் என்பதால், அவர்களால் நீதித்துறையில் வெற்றிபெறமுடியும். அதுபோலவே இந்த எண்காரர்களுக்கு அரசியலும் பொருத்தமான துறையாகும். நடனம், இசை, இலக்கியம், சிற்பக்கலை ஆகிய துறைகளும் இவர்களுக்கு வெற்றிகரமான துறையாகும். பதிப்பகம், ஜவுளித்துறை, நகைவியாபாரம் ஆஇய துறைகளில் பணியாற்றும் இந்த எண்காரர்களுக்கு அபரிதமான செல்வம் சேரும்.

உடல் நலம்: நீரழிவு நோய்க்கு (Diabetes) ஆட்பட நேரிடும். கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் ஆளாக நேரிடும்.

திருமணம்: இந்த எண்ணுடைய பெண்கள் ஒன்றாம் எண்காரர்களையும், இந்த எண்ணில் பிறந்த ஆண்கள் 7ஆம் எண்ணுடைய பெண்களையும் மனந்து கொள்ளலாம். பொருத்தமாக இருக்கும்!

மகாத்மா காந்திஜி, லால் பஹதூர் சாஸ்த்ரி ஆகியவர்கள் இந்த எண்ணில் பிறந்த இந்தியப் பிரபலங்கள்.

அன்புடன்
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

4.3.10

உங்களுக்காக ஒரு இணைய தளம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்காக ஒரு இணைய தளம்!

உங்களுடைய பெயர் அதிர்ஷ்டகரமானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுடைய பிறந்த தேதியை வைத்து உங்களுடைய
அதிஷ்ட எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

கை சொடுக்கும் நேரத்தில் அதைக் கணித்துத்தர ஒரு இணைய தளம் உள்ளது.

அதை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன். அதற்கான சுட்டி இங்கே உள்ளது

அது உலகப்புகழ் பெற்ற எண்கணித மேதை சீரோ அவர்கள் வழங்கியுள்ள எண் சாஸ்திரப்படி உள்ளது. அதுதான் அதன் (அந்த தளத்தின்) சிறப்பு அம்சமாகும்! சீரோ எண் கணிதத்தைக் கற்றுக்கொண்டது இந்தியாவில் என்பது அதைவிடச் சிறப்பான செய்தியாகும்!

பார்த்து மகிழுங்கள்! பயன்படுத்தி மகிழுங்கள்!

அதை நமக்கு அடையாளம் காட்டிய ms torrent அவர்களுக்கு உங்களின் சார்பாக ஒரு நன்றியைச் சொல்லிவிடுகிறேன். நன்றி ms torrent
-------------------------------------------
அந்த தளத்தை வைத்து நம் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பெயர் எப்படி உள்ளது? அதிர்ஷ்டமானதாக உள்ளதா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அத்தனை பெயர்களுமே சூப்பரான அதிர்ஷ்டத்துடன் உள்ளன.

1. Tata = 10 (Lucky Number)
2. Birla = 9 (Lucky Number)
3. Goenka = 23 (Lucky Number)
4. Tirubhai Ambani = 36 (Lucky Number)
5. Venkateshwara = 46 (Lucky Number)

ஐந்தாவதாக உள்ளவர் யாரென்று கேட்கிறீர்களா? அவர்தான் நம்ம வெங்கி. ஏழுமலை மேலே தலைமை அலுவலகம் வைத்திருக்கிறாரே - அந்த வெங்கிதான்!:-))))))))

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!