மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.13

அவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது?

 
அவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது?

கொட்டினால் கொட்டிவிட்டுப் போகிறது. அடுத்தவனைப் பார்த்து நாம் ஏன் ஆதங்கப்பட வேண்டும்? அல்லது ஏக்கம் கொள்ள வேண்டும்?

வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை அருகே இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

காலதேவன் பலரைப் புரட்டிப் போட்டிருக்கிறான். சிலரைச் சீராட்டி இருக்கிறான். சிலருக்குத் தங்கக் கிண்ணத்தில் பாலூட்டியிருக்கிறான். சிலரைச் சாத்தியிருக்கிறான். சிலரைத் தொங்கவிட்டு அடித்திருக்கிறான். அவனுடைய கலக்கலான செயல்பாடுகள் பற்றி இன்னொருநாள் விரிவாகப் பார்க்கலாம். இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்

சிலர் பிறக்கும்போதே செல்வத்துடன் பிறக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் அதற்கு ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களாம் அவர்கள்."been born with a silver spoon in his mouth"

The English language expression silver spoon is synonymous with wealth, especially inherited wealth; someone born into a wealthy family is said to have "been born with a silver spoon in his mouth". As an adjective, "silver-spoon" describes someone who has a prosperous background or is of a well-to-do family environment,


ஜாதகத்தில் 36 பாக்கியங்கள். அதில் முதல் பாக்கியம், முக்கியமான பாக்கியம், நல்ல தாய். நன்றாக குழந்தையை வளர்க்கக்கூடிய, அரவணைத்து அன்பு செலுத்தக்கூடிய தாய். அதனால்தான்   “மாதா, பிதா,குரு, தெய்வம்” என்று தெய்வத்தைக்கூட ஓரங்கட்டிவிட்டு, தாயை முன்னிறுத்திச் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் சொல்லத் தெரியுமா? நாமும் சொல்லுவோம். நல்ல தாய்க்குப் பிறந்த குழந்தை வாயில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவன் அல்லது பிறந்தவள்!."been born with a GOLD spoon in his mouth"

தாய் முதலில்.
தாய் சொல்லித்தான் தந்தை
இருவரும் சொல்லித்தான் குரு.
மூவரையும் வணங்கினால் அப்போது வரும் தெய்வம்!

God could not be everywhere, so he made mothers. கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது அதனால்தான் தாயைப் படைத்தான் என்றும் சொன்னார்கள்.

வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களுக்கெல்லாம் பொதுவாக நல்ல தாய் அமைந்திருக்க மாட்டாள். வேலைக்காரர்களின் கருணையில்தான் அதுபோன்ற குழந்தைகள் வளரமுடியும். அது என் அனுபவம்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இரண்டு தாயார்கள். ஒன்று பெற்றதாய். இன்னொருவருவர் சுவீகாரம் கொண்ட தாய். இருவருமே மேன்மையானவர்கள். தாயன்பில் திளைத்தவர் கண்ணதாசன். அதனால்தான் கவியரசர் தாயைப் பற்றி எழுதும்போதெல்லாம் அசத்தலாகப் பாடல் எழுதுவார்.

“பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே”
என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கியவர், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்:

“செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு”


பொன்னுலகத்தை நீ காண்பாய், காண வேண்டும். அதுவரை கண் உறங்கடா என் செல்வமே என்று தாய் பாடுகிறாள். என்னவொரு மன வெளிப்பாடு பாருங்கள்.

“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் -
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்”
என்று ஆசைப்பட்டார் கவியரசர். அது நடந்ததா? அது நடக்காது. நடக்கக்கூடிய நிலையிலா நம் நாடு இருக்கிறது?

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்”
என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கிய கவிஞர் வாலி அவர்கள், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்

“மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!”

ஆமாம் இறைவன் பலவற்றைப் பொதுவாகக் கொடுத்திருக்கிறான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்க்கையை மட்டும் அவன் எல்லோருக்கும் பொதுவாகக் கொடுப்பதில்லை. ஒரே மாதிரியாக அளந்து கொடுப்பதில்லை. கொடுத்ததில்லை.

மன்னர் காலத்தில், பல்லக்கில் போகிறவனும் இருந்தான். பல்லக்கைத் தூக்கிச் செல்பவனும் இருந்தான். இன்று பென்ஸ், BMW காரில் போகிறவனும் இருக்கிறான். அந்தக்காருக்கு சொற்ப சம்பளத்தில் ஓட்டுனராகப் பணிபுரிகிறவனும் இருக்கிறான்.

இந்த வேறுபாடுகளுக்கு, ஏற்றத்தாழ்வுகளுக்கு யார் காரணம்?  கடவுளா காரணம்? இல்லை. அவர் வேண்டுதலும் இல்லாதவர்.வேண்டாமையும் இல்லாதவர். அவர் காரணமில்லை. அவரவர்களின் விதிப்படி நடக்கிறது அது.. அவரவர்களுக்கு விதித்தபடி நடக்கிறது. அதை வாங்கி வந்த வரம் என்றும் சொல்லலாம். கிராமத்துக்காரர்கள் அதைத் தலை எழுத்து என்று சொல்லுவார்கள்.

“முதல் எழுத்து தாய் மொழியில்
தலை எழுத்து யார் மொழியில்?” என்று கேட்டான் ஒரு கவிஞன்.

தலை எழுத்து தேவமொழி!

அந்தக் கவிஞன் இறை நம்பிக்கை இல்லாதவன். அதனால் அது அவனுக்குத் தெரியவில்லை. தெரியவேண்டியதில்லை.
---------------------------------------------------------------------------------------
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத இதழ்காரர்கள் கேட்டுக்கொண்டதற்காக நான் சிறுகதைகளை எழுதத் துவங்கினேன். அது பெரியகதை.

அந்தப் பத்திரிக்கையின் மூலம் கிடைத்த வாசகர்களில் ஒருவர் தன்னுடைய மணிவிழாவில், அவர் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விருந்தாளிகளுக்குக் கொட்டுப்பதற்காக என்னுடைய சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கவிரும்புவதாகச் சொல்லி, என்னுடைய சிறுகதைகளில் 20 கதைகளைத் தருமாறு கேட்டார். கதைகளை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து கொடுங்கள். நான் புத்தகமாக அதை ஆக்கிக் கொள்கிறேன். என்றும் கூறினார்.

”உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவைப்படும்?”  என்று கேட்டேன்.

”600 புத்தகங்கள் தேவைப்படும்” என்றார்.

600 புத்தகங்கள் என்றால் பெரிய விஷயம் அது!

நான் தீவிர வாசகன். ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். என் புத்தகங்களைப் பற்றி எனக்கொரு கனவு உண்டு. ஆகவே ”நான்தான் அதை வெளியிட வேண்டும். நான் புத்தகமாக்கித் தருகிறேன். உங்களுக்கு எப்போது வேண்டும்?” என்று அவரிடம் கேட்டேன்.

”இரண்டு மாதங்களுக்குள் கொடுங்கள்” என்றார்.

உடனே நான் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

கண் இமைக்கும் நேரத்தில் தன் கைப்பையில் இருந்து ரூபாய் இருபதாயிரத்தை எடுத்து என் எதிரில் வைத்து, ”இதை முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

“புத்தகங்களை முடித்துக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறேனே” என்றேன்.

அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சொன்னார்: “தமிழில் எழுதி யாரும் சம்பாதிக்க முடியாது. நீங்கள் புத்தகத்திற்காக உங்கள் கைப் பணத்தை முடக்க வேண்டாம். இதை வைத்து புத்தகப் பணியைத் துவக்குங்கள். மீதம் தரவேண்டிய தொகையை என் மணிவிழா சமயத்தில் தருகிறேன்” என்றார்.

சரி என்று பணத்தை எடுத்துக் கொண்டவன், கமிட் ஆகிவிட்டேன். புத்தகம் வெளியிடுவதில் உள்ள சிக்கல் அப்போது எனக்குத் தெரியாது.

அவர் மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார்.

நான் என் புத்தகக் கனவுடன், அடுத்த நாளே சென்னைக்குப் பயணமானேன். இது நடந்தது 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள். சென்னையில்தான் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். எனக்குப் பரீட்சயமான மூன்று பதிப்பாளர்களைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேசினேன்.

முதலில் பேசிய அன்பர், என் Fuseஐப் பிடுங்கி, என் மனதை இருளடையச் செய்து விட்டார்.

”கதைப் புத்தகங்களைப் போடாதீர்கள். வேஸ்ட்” என்றார்.

“எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் எல்லாம், கணினி, ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக், ஈபுக் என்று போய்விட்டார்கள். அத்துடன் நீங்கள் ஒன்றும் சுஜாதாவைப் போல அல்லது பாலகுமாரனைப் போல பிரபலமான எழுத்தாளர் இல்லை. கூவிக் கூவித்தான் விற்றாக வேண்டும். அதனால்தான் சொல்கிறேன்” என்றார்.

”கதைப் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் விற்காது என்றால் வேறு எந்தமாதிரியான புத்தகங்கள் விற்கும்?” என்று கேட்டேன்.

”உங்களுக்குத்தான் எழுத வருகிறதே. பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது போன்ற தலைப்பில் எழுதிக் கொடுங்கள். போடுவோம். நன்றாகவும் விற்கும்” என்றார்.

”அள்ள அள்ளப் பணமா?” என்று கேட்டேன்

”ஆமாம்” என்றார்.

”அள்ள அள்ளப் பணம் எப்படி வரும்? யாருக்கு இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் அம்சமாக இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பணம் வரும். விதிக்கப்பெற்றிருந்தால்தான் பணம் வரும். ஆகவே தள்ளத் தள்ள விதி என்ற தலைப்பில் எழுதித் தரட்டுமா?” என்றேன்.

“ஆஹா, எழுதிக் கொடுங்கள்” என்றார்.

“அதைப் பின்னால் எழுதித் தருகிறேன். இப்போது கதைப் புத்தகத்திற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்.

“நீங்கள் பணம் போடுவதென்றால் சொல்லுங்கள். ஆகின்ற செலவில் ஆளூக்குப்பாதி, பிரதிகளிலும் ஆளுக்குப் பாதி” என்றார்.

“யோசித்துச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, கோவைக்குத் திரும்பிவிட்டேன். முழுப் பணத்தையும் நானே செலவழித்து புத்தகத்தை அச்சிட்டு வெற்றிகரமாக வெளியிட்டேன்.


காரைக்குடியில் 12.4.2010 அன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், எனது புத்தகத்தைப் பாராட்டி பேராசிரியர் திரு.கண.சிற்சபேசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி! பல பட்டிமன்றங்களுக்குத் தலைமை வகிப்பவர் அவர்.
எங்கள் பகுதியில் அவருக்கு நகைச்சுவைப் பேரரசர் என்ற சிறப்பு அடையாளப் பெயர் ஒன்றும் உண்டு.
=================================================================
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், அள்ள அள்ள எதுவும் கிடைக்காது. அதை மனதில் வையுங்கள்.

தள்ளத் தள்ள எல்லாம் வரும். விதி நம்மைத் தள்ளிகொண்டு போகும் போது எல்லாம் தானாக வரும். நல்லதும் வரும். கெட்டதும் வரும்.

எப்படி வரும் என்பதை, விரிவாகச் சொல்கிறேன். தற்சமயம் நேரமில்லை. புது வகுப்பிற்கான கட்டட வேலையில் மூழ்கி இருக்கிறேன். ஆமாம்! Galaxy2007 வகுப்பிற்கான வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு web designing தெரியாது. அதைத் தெரிந்த நிறுவனம் ஒன்றின் மூலம் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் எல்லாம் முடிந்துவிடும். உறுப்பினர் சேர்க்கை உட்பட எல்லா வேலைகளும் நிறைவாகிவிடும். ஆகவே புது வகுப்பில் தள்ளத் தள்ள விதி என்பதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன். அப்போது நீங்கள் படிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

30.10.13

Astrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்!

 

Astrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபது

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

1.ஜாதகர் சென்னைக்காரர்.
2.இவருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் ஒரு தொடர்பு உண்டு
3.இவர் பலவிதங்களில் பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



29.10.13

கேட்க வேண்டிய கேள்வி!


கேட்க வேண்டிய கேள்வி

நேற்றையப் பதிவில் கேட்கக்கூடாத கேள்வி என்ற தலைப்பில் உங்கள் வயதைச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.

இன்றையப் பதிவில் கேட்க வேண்டிய கேள்வி என்று கேட்டிருக்கிறேன். அது உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள் என்பதுதான்.

உங்கள் விருப்பத்தை அறிந்தால், வகுப்பறையை இன்னும் சிறப்பாக நடத்திச் செல்ல ஏதுவாக இருக்கும்

கடந்த ஏழு ஆண்டுகளாக வகுப்பறையை நல்லபடியாக நடத்திக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் மேலான ஆதரவினாலும், ஒத்துழைப்பாலும்தான் அது சாத்தியப்படுகிறது.

அதை மறுப்பதற்கில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


Year Period No of Posts
2007 Full Year 89
2008 Full Year 157
2009 Full Year 211
2010 Full Year 269
2011 Full Year 272
2012 Full Year 279
2013 Up to Oct' 28 212
Total Posts 1489
Astro Posts 770
Other Posts 719
 -----------------------------------------------------------------
வகுப்பறையில் சில விஷயங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இன்றைய கேள்வி உங்களுக்கு அதிகம் பிடித்தது எது? அதாவது உங்கள் மனதை அதிகமாகக் கவர்ந்தது எது? அதைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
=============================================

What you like more in the Classroom
  
pollcode.com free polls 

28.10.13

கேட்கக்கூடாத கேள்வி!




கேட்கக்கூடாத கேள்வி!

உங்கள் வயதென்ன கண்மணிகளே, நண்பர்களே?

பெண்களிடம் வயதையும், ஆண்களிடம் வருமானத்தையும் கேட்கக் கூடாது என்பார்கள்!

ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகத் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை! சொல்வதாலும் ஒன்றும் குறைந்து விடாது!

வகுப்பறைக்கு வந்து செல்லும் கண்மணிகளின் வயதையும், அத்துடன் வந்து படித்துவிட்டுப் போகின்ற நண்பர்களின் வயதையும் ஒரு முக்கியமான காரணத்திற்காகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வரிசையில் அடுத்தடுத்து இன்னும் இரண்டு சர்வே பதிவுகள் தொடர்ந்து வரும். அனைத்தும் முடிந்த பிறகு உங்களுக்கெல்லாம்  பயன்படும்படியான செய்திகளைத் தரவுள்ளேன்

ஆகவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்

அன்புடன்
SP.VR. சுப்பையா

What is your age?
  
pollcode.com free polls 



25.10.13

அவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது?

--
அவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது?

முயற்சியும், ஆர்வமும் இருந்தால் எல்லாம் வரும்.

அது எப்படி வராது? ஒரு கை பார்த்துவிடுவோம் என்று தன்நம்பிக்கை, தன்முனைப்போடு இறங்கிப் பாருங்கள். எல்லாம் வரும்.

நான் 17 ஆண்டுகளுக்கு முன்பு கணினியை கற்றுக்கொள்ள முயன்றபோது, என் நண்பர் ஒருவர் Fuseஐப் பிடிங்கி வைத்து, வீட்டை இருட்டாக்கி விடுவதைபோல பேசினார்:

“அதைக் கற்றுக் கொள்வது கடினம். உன் நேரத்தை வீணடிக்காதே!”

நான் சொன்னேன். ”இருபது வயதுகூட நிரம்பாதவர்கள் எல்லாம் அதில் நுழைந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்: அவர்களுக்கு வரும்போது. எனக்கு ஏன் வராது?”

ஒருவனுக்கு ஒன்று வரும்போது நமக்கு மட்டும் ஏன் அது வராது என்று களத்தில் இறங்கினால் எல்லாம் வரும்.

அதேபோல், ஆச்சரியப்படும் விதமாக பத்தே நாட்களில் எனக்கு கணினி வசப்பட்டது. திரு.சுந்தரராஜன் என்னும் கணினி வாத்தியார், தினமும் ஒரு மணி நேரம் எங்கள் வீட்டிற்கு வந்து எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

நான் அவரிடம் துவக்கத்திலேயே சொன்னேன்: “எனக்கு காரை ஓட்ட மட்டும் சொல்லிக்கொடுங்கள். வண்டியை எப்படி ஸ்டார்ட் செய்வது. எப்படி நகர்த்துவது. எப்படி ஓட்டுவது. எப்படி நிறுத்துவது என்பதை மட்டும் சொல்லிக்கொடுங்கள். மற்றவற்றை நானாக நோண்டிக் கற்றுக்கொள்கிறேன்”

அதாவது எஞ்சின், கார்புரேட்டர், கிளட்ச், கியர்பாக்ஸ், அண்டர் சேசிஸ் என்று அனைத்தையும் காட்டி அவற்றின் செயல்பாடுகளையும் விளக்கி என்னைத் துவக்கத்திலேயே குழப்பாதீர்கள் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். அதன்படியே அவரும் சொல்லிக் கொடுத்தார்.

இப்போது கணினியின் செயல்பாடுகள் அனைத்தும் எனக்குத் தெரியும். எல்லாம் நானாக நோண்டியும், தோண்டியும் கற்றுக்கொண்டது.அதனால்தான் சென்ற பத்து ஆண்டுகளாக என்னால் நிறைய எழுத முடிகிறது. கணினியால் அது சாத்தியமாகிறது. பத்திரிக்கைகளுக்கு எழுத முடிகிறது.ப்ளாக்கில் எழுத முடிகிறது.

இதுவரை சுமார்100 சிறுகதைகளையும், 100ற்கும் மேற்பட்ட குட்டிக்கதைகளையும், 3 ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளேன். வகுப்பறை மற்றும் பல்சுவை ஆகிய இரண்டு ப்ளாக்குகளிலும் சேர்த்து இதுவரை சுமார் 2,000 பதிவுகளை  (Posts) எழுதியுள்ளேன். பத்து புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.

17 ஆண்டுகளுக்கு முன்பு நான் கணினி ஒன்றை வாங்கியபோது, அதன் விலை 60 ஆயிரம் ரூபாய். அதுவும் 486Dx கணினிக்கு அந்த விலை. அதாவது Hard Discன் அளவு அரை ஜி.பி அளவு கூடக் கிடையாது.

ஆனால் இப்போது என்னிடம் இருக்கும் கணினி இண்டெல் ஐ 5 ப்ராசசர், 500 ஜி.பி ஹார்ட் டிஸ்க், 6 ஜி.பி ராம் என்று எல்லா வசதிகளுடனும் உள்ளது.  BSNL Broadband  இணைப்பும் unlimited browsing and unlimited download என்று அனைத்து வசதிகளுடன் இருக்கிறது. எல்லாம் தொழில் நுட்பங்களின் அசுர வளர்ச்சி.

இந்த இடத்தில் ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். கதை எழுதத் தெரிந்ததால்தான், ஜோதிடத்தையும் கதைகளைப்போல சுவாரசியமாக எழுத முடிகிறது
----------------------
சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

ஜோதிடமும் அப்படித்தான் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

கூடுதலாக நினைவாற்றல் மட்டும் வேண்டும். நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான். தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, அமலா பால்
நயன்தாரா போன்ற கனவுலகக் கன்னிகளைப் பற்றிய செய்திகள் மட்டும் மனதில் எப்படி நிற்கிறது? அப்படி ஜோதிடததையும் கொண்டுபோய் ஸ்டாண்டு போட்டு நிறுத்த வேண்டியதுதான்.

நேற்றைய பதிவில் புதிருக்குப் பதில் சொன்ன திரு.பழனிசண்முகம் ஜாதகி விதவை என்று எப்படிச் சொன்னார்? ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீடு கணவனையும், ஏழாம் வீட்டில் இருந்து அதற்கு எட்டாம் வீடு கணவனின் ஆயுளையும் குறிக்கும் என்பது விதி (Rule). ஜாதகிக்கு அந்த வீட்டிற்கு உரிய சனீஷ்வரன் கெட்டிருந்ததால், ஜாதகி விதவை என்று கணித்துச் சொல்லிவிட்டார். ஜாதகத்தைப் பார்வையிடும் நேரத்தில் அந்த விதி (Rule) அவருடைய மனதில்/நினைவில் எப்படி  எட்டிப் பார்த்தது? அதுதான் நினைவாற்றல். பழனிசண்முகத்திற்கு வசப்பட்ட ஜோதிடம் உங்களுக்கு ஏன் வசப்படாது? யோசித்துப் பாருங்கள்.

என் ப்ளாக்கிற்கு வருகிறவர்கள், அதாவது ஜோதிடப் பாடத்தைத் தேடி வருகிறவர்கள் இரண்டு விதம். ஒன்று தங்கள் ஜாதகம் சம்பந்தமான செய்திகளை மட்டும் பார்க்கிறவர்கள் ஒரு விதம். நாமும் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பவர்கள் இன்னொரு விதம்.

என் அனுபவத்தில் இங்கே வருகிறவர்களில் பத்து சதவிகிதம் பேர்கள்தான் கற்றுக்கொள்ளூம் ஆர்வத்துடன் வருகிறவர்கள். மற்றவர்கள் எல்லாம் தங்கள் ஜாதகத்தை அலசிப் பார்க்க மட்டுமே வருகிறவர்கள்.

அது சரிதான் என்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கொடுக்கிறேன்.

நேற்று புதிய வகுப்பான galaxy2007ஐப் பற்றிச் சொன்னதோடு, இனி அதில் மட்டுமே ஜோதிடப் பாடங்கள் வெளிவரும் என்றும் சொல்லியிருந்தேன்.

நேற்று முச்சூடும் (அதாவது நேற்று முழுவதும்) வந்து சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 பேர்கள். புது வகுப்பில் சேர்வதற்கு மனுப் போட்டவர்கள் எத்தனை பேர்கள் என்று தெரியுமா? இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 60 பேர்கள்தான் மனுப் போட்டிருக்கிறார்கள்.
துவக்க நாளுக்குள் (அதாவது நவம்பர் 7க்குள்) 100 அல்லது 120 பேர்களுக்கு மேல் சேரமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. சேராதவர்களுக்குத்தான் நஷ்டம்!!

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதத் துவங்கியபோது 10 பேர்கள் கூட படிக்க வரவில்லை. 6 மாதங்களுக்குப் 30 பேர்கள் கிடைத்தார்கள்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை ஐநூறைத் தொட்டது.

எண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதுமே கவலைப் படுவதில்லை!

என் எண்ணங்களை, என் சிந்தனைகளை, நான் அறிந்துணர்ந்ததை ஆவணப் படுத்துகிறேன். அவ்வளவுதான். இரண்டு பத்திரிக்கைகளில் சென்ற பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் தொடர் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை 10 புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் ஜோதிடம் இம்மிகூட இல்லை. அந்தப் பத்திரிக்கையின் மூலம் எனக்கு முப்பதாயிரம் வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

அதனால்தான் சொல்கிறேன். எண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதும் கவலைப் படுவதில்லை.

உறவினர்கள், நண்பர்கள் என்று இருநூறு பேர்கள் இருப்பதைவிட, நம் மேல் உண்மையான அன்போடும், நன்றி, விசுவாசத்தோடும் இருக்க நான்குபேர்கள் கிடைத்தால் போதும். அதுதான் சிறப்பானது! அதுதான் வாழ்க்கை.

வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் அது பொருந்தும்!

அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Post 2


Devotional: கம்பெடுத்தால் ஆடும் குரங்கு கந்தா என் மனது! 

பக்தி மலர் 

கம்பெடுத்தால் ஆடும் குரங்கு கந்தா என் மனது: நீ வேலெடுத்து நின்றதைக் கண்டு உணந்தேன் இப்பொழுது. என்ற பல்லவியுடன் துவங்கும் முருகன் பாடல் ஒன்று இன்றையப் பக்தி மலரை நிறைக்கின்றது. பாடியபாடகி உருக்கமாகப் பாடுகின்றார். முழுப் பாடலையும் கேளுங்கள்.

அன்புடன்,
வாத்தியார் 
------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this song in the net! 



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

24.10.13

Astrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்!

 


முக்கிய அறிவிப்பு!

இன்று சஷ்டி. முருகப்பெருமானை வணங்குவதற்கு உகந்த நாள்.. பழநிஅப்பனை வணங்கிவிட்டு,  கீழ்க்கண்ட செய்திகளை  உங்களுக்குத் தெரியப்படுத்துவதில்  மகிழ்ச்சியடைகிறேன்!.

மூன்று தினங்களூக்கு முன்பு,  cut & paste கலாச்சாரத்தால், எனது எழுத்துக்கள், ஆக்கங்கள் அப்பட்டமாகத் திருட்டுபோவதைப் பற்றி எடுத்துச்  சொல்லி, அதற்கு என்ன செய்யலாம் என்று உங்களின் மேலான ஆலோசனைகளைக் கேட்டிருந்தேன்.

பலரும், தனி இணைய தளம்தான் அதற்குத் தீர்வு என்றும், User Name
and Password  உள்ள உறுப்பினர்கள் மட்டுமே உள்நுழையும் படியாக
அதைஏற்படுத்தி நடத்துங்கள் என்றும் பரிந்துரைத்துள்ளார்கள்.
ஆலோசனை நல்கிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

உறுப்பினர் கட்டணம் குறித்து ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை வெவ்வேறு விதமாகச் சொல்லியுள்ளார்கள்.

உறுப்பினர் கட்டணம் அல்லது நுழைவுக் கட்டணம் என்று அதைச் சொல்லலாம். அது ஒரு ஆண்டுக்கான கட்டணம். அதை நான் முடிவு செய்யாமல் உங்கள் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன். நீங்கள் அனைவரும் உறுப்பினராக வேண்டும். எழுதும் பாடங்களைப் படித்துப் பயன்பெற வேண்டும்.அது மட்டுமே என் விருப்பம்.

கட்டணத்தை நீங்கள் உங்களின் விருப்பம்போல் செலுத்தலாம். அதில் இணையதளத்தை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் உள்ள தொகை
போக உபரியாகக் கிடைக்கும் பணத்தை நான் செய்து கொண்டிருக்கும் பொதுத் தொண்டுகள் மற்றும் அறச்செயல்களுக்கு பயன் படுத்தலாம் என்று
உள்ளேன்.

தனி இணைய தளம் ஒன்றை வடிவமைக்க ஏற்பாடு செய்துள்ளேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அது தயாராகிவிடும். அதற்கான Domain Name பதிவாகி விட்டது. Hosting Serverக்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். அவை பற்றிய முழுவிபரத்தை, அந்த வேலைகள் முடிந்த பிறகு தருகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
 நமது புதிய வகுப்பறையின் முகவரி (URL)

Domain Name: galaxy2007.com

காலக்ஸி என்பது அண்டத்தைக் குறிக்கும். அதில் கிரகங்கள் உட்பட அனைத்தும் அடக்கம். அதனால் அந்தப் பெயர். 2007 என்பது நமது வகுப்பறையின் பிறந்த வருடத்தைக் குறிக்கும். ஆகவே அதையும் சேர்த்துக்கோண்டிருக்கிறேன்.

அது மட்டும்தான் காரணமா?

இல்லை Samsung Galaxy Smart Phone வைத்திருக்கிறேன். அற்புதமாக இருக்கிறது. அதை வாங்கிய நாளில் இருந்து காலக்ஸி என்ற பெயரும் பிடித்துவிட்டது:-)))))
------------------------------------------------------------------------------------------------

நவம்பர் மாதம் 7ஆம் தேதி (அதுவும் சஷ்டி தினமே) புதிய வகுப்பைத் துவங்கலாம் என்றுள்ளேன்.

இனி எழுதவுள்ள ஜோதிடப் பாடங்கள் அனைத்தும் அதில் மட்டுமே வெளியாகும். வாரம் 3 பாடங்களுக்குக் குறையாமல் பதிவாகும்.

இப்போது உள்ள இந்த வகுப்பிலும் பதிவுகள் தொடரும். அவைகள் ஜோதிடத்தைத் தவிர்த்து மற்ற பதிவுகளாக இருக்கும். அவைகளும் வழக்கம்போல எனது எழுத்து நடையில் சுவாரசியம் மிக்கதாக இருக்கும்.

புதிதாக வருபவர்கள் படிப்பதற்கு வசதியாக அடிப்படைப் பாடங்கள் இங்கே இருக்கும்.

உறுப்பினர்களை ஆய்ந்து அனுமதிப்பது எனது முக்கியமான வேலை. அதற்கு நீங்கள் அனைவரும் உங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

அதற்கான படிவம் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இணையதளத்தில், புதிய ஜோதிட வகுப்பில் சேர்வதற்கு விருப்பமுள்ள அனைவரையும் விண்ணப்பிக்க வேண்டுகிறேன். என் மின்னஞ்சல் மூலம்
தெரியப்படுத்துங்கள் (My mail ID: classroom2007@gmail.com) 
Please mention the words "New Classroom" in the subject box of the mail. It is important

அன்புடன்,
வாத்தியார்


அடிக்குறிப்பு: முன்பு உள்ள எனது தனித் தளங்களில், குறைந்த அளவு எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தபோதே எனக்குச் சில டெக்னிகல் பிரச்சினைகள் ஏற்பட்டன.

1.Bandwidth பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது.
2.சார்’ உள்ளே நுழைய முடியவில்லை என்று புகார்கள் வந்தன.
3. பின்னூட்டங்களுக்கு பதில் இல்லையே என்ற புகார்களும் வந்தன.

ஆனால் கூகுள் பிளாக்கில் (தற்போது உள்ள வலைப்பூவில்) எந்தப் பிரச்சினையும் இல்லை.

4227 தொடர்பாளர்கள் என்று வலைப்பூவின் கணக்குச் சொல்கிறது.
தினமும் சராசரி Page view 4,500 பக்கங்கள் என்று என் ப்ளாக்கரின்  Dash Board கணக்குக் காட்டுகிறது. அதேபோல தினமும் வந்து செல்கிறவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 பேர்கள் என்று  வலைப்பூவின் வெளியில் உள்ள Hit Counter (Traffic Counter) காட்டுகிறது.

ஆகவே அந்தக் கணக்குகளில் ஏதோ குழப்பம் உள்ளது. கணினியின் தொழில் நுட்பம் எனக்குத் தெரியாததால் என்ன குழப்பம் என்று என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

ஆனால் வருபவர்கள் எத்தனை பேர்களாக இருந்தாலும் ஆர்வத்துடன், முனைப்புடன் படிப்பவர்கள் சுமார் 200 பேர்கள்தான். அதை மட்டும் என்னால் உணரமுடிகிறது.

ஆகவே தேர்வு செய்து முதலில் 200 பேர்களுக்கு மட்டும்தான் புது வகுப்பில் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளேன். இரண்டு மாதங்கள் பார்த்துவிட்டு, பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றால் ஜனவரி’ 2014 முதல் மற்றவர் களுக்கும் அனுமதியளிக்கலாம் என்றுள்ளேன். இல்லை என்றால் வேறு ஏதாவது  வழி செய்ய வேண்டும்.

ஆகவே நமது வகுப்பறைக்கு வரும் தொழில் நுட்பம் தெரிந்த மாணவக் கண்மணிகள் இந்தப் பிரச்சினையைப் போக்க என்ன செய்யலாம் என்று தங்கள் யோசனைகளைச்  சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
 2
 

Astrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்!

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்கள்:
1.  ஜாதகி அழகானவர். நேர்மையானவர். ஒழுக்கமானவர். புகழ் எல்லாம் இல்லை. மாறாக இகழ்கள் மட்டுமே!
2. கையில் பணம் அன்றாடத் தேவைக்கு மட்டுமே இருந்தது. இருக்கின்றது. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே. பிறகு கெட்டுவிட்டது. அதற்கான காரணம் அடுத்தவரியில் இருக்கிறது.
3. திருமணமானவர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டார். ஜாதகி கைம்பெண்ணாகிவிட்டார். அதாவது விதவை!
4. ஜாதகிக்குக் குழந்தைகள் உள்ளன.இரண்டு பெண் குழந்தைகள். இரண்டையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்.


1
தனுசு லக்கினம். இயற்கையாகவே நல்ல லக்கினம். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்றுள்ளார்.

உச்சம் பெற்று என்ன பயன்? எட்டில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார். முதுகெழும்பு உருவப்பட்ட நிலை! Anticipatory bail வாங்க முடியாத இடம்!

2.
குரு அமர்ந்த அந்த வீட்டுக்காரன் சந்திரன் (இந்த ஜாதகத்திற்கு அவன் அஷ்டமாதிபதியும் கூட) பரிவர்த்தனை பெற்று லக்கினத்தில் வந்து ஜம்’மென்று அமராமல், சனியின் பிடியில் சிக்கி மாட்டிக்கொண்டுள்ளான். துப்பவும் முடியாது. விழுங்கவும் முடியாது போன்ற நிலை.

3.
லாபாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான். மறைந்து நின்று பார்க்கும் மர்மமென்ன என்று அவனைக் கேட்க முடியாது! ஆறாம் வீட்டைப் பார்க்கும் மர்மமென்ன என்று அவனைக் கேட்க முடியாது!

4.
ஆக மொத்தம் 3 சுபக்கிரகங்களுமே வலுவிழந்து பயனில்லாமல் போய்விட்டார்கள். Foot Boardல் கூட இடம் கிடைக்காத நிலைமை.

5.
ஏழாம் வீட்டுக்காரன் புதன் 12ல். களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். அத்துடன் செவ்வாய் மற்றும் மாந்தியின் கூட்டணி. இதைப் பார்க்கும் எவருமே ஜாதகிக்குத் திருமணம் ஆகாது. இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்பார்கள். ஆனால் நடந்தது வேறு.

பரிவர்த்தனையான சந்திரன், ஏழாம் வீட்டை நேராகப் பார்ப்பதால் திருமணத்தை நடத்திவைத்தான். குடும்ப ஸ்தானத்தை தன்னுடைய
நேரடிப் பார்வையில் வைத்திருக்கும் குரு, ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கையைத் தர வேண்டிய கட்டாயத்தால் தன்னுடைய வீட்டோ
பவரைப் பயன் படுத்தி ஜாதகிக்குத் திருமணத்தை நடத்திவைத்தான்.

6.
பாக்கிய ஸ்தான அதிபதி (9th House Lord - House of gains lord) சூரியன் நீசமாகிவிட்டான். நீசமானால் செல்லாக் காசு. அதோடு அவன் அமர்ந்த வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் செவ்வாயும் மாந்தியும். மறுபக்கம் கேது. அவன் சிறைப்பட்டும் விட்டான். அதோடு அவன் அரச கிரகமாதலால், சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்று ஜாதகியைப் பாடும் நிலைக்குத் தள்ளிவிட்டான்.

7.
கவியரசரின் பாடல்களில் முத்தாய்ப்பாய் ஒரு வரியை எழுதியிருப்பார். அந்த வரிதான் பாட்டையே தூக்கி நிறுத்தும். அதுபோல உள்ள பாவ அவலங்களுக் கெல்லாம் முத்தாய்ப்பாய் முக்கிய பாவமான நான்காம் வீட்டில் (சுகஸ்தானம் -  House of comforts) ராகு போய் அமர்ந்து அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக் கிறார். குடியிருக்கின்றார்.  4ல் ராகு என்பது மோசமான அமைப்பு. சுகக்கேடு.

8.
மொத்தத்தில் எல்லாம் மோசம். ஒரு மோசமான ஜாதகத்திற்கு இந்த ஜாதகத்தை உதாரணமாகச் சொல்லலாம்!
-------------------------------------------------------
சரி, அப்படியென்றால், எப்படி இந்த ஜாதகத்திற்கு 337 வரும்? நல்ல அமைப்பே கிடையாதா?

9
லக்கினத்தில் அமர்ந்த சந்திரன் அழகைக் கொடுத்ததோடு, எதையும் தாங்கும் மனதையும் கொடுத்தான். லக்கினத்தில் அமர்ந்த (3ஆம் வீட்டிற்கும் உரிய) சனி, உறுதியான, போராடும் குணத்தையும் கொடுத்தான்.

10
குருவோடு பரிவர்த்தனையான சந்திரன் ஜாதகியின் திருமணத்தை நடத்திவைத்தான். சனி உடன் இருந்ததால் ஜாதகிக்குத் தாமதமான
திருமணம். 30 வயதில்தான் திருமணம் நடந்தது.

11.
ஐந்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் இருந்தாலும் ஆட்சி பலத்தோடு உள்ளான். அத்துடன் புத்திரகாரகன் குருவின் விஷேசப் பார்வையையும் அவன் பெற்றுள்ளான். ஆகவே ஜாதகிக்கு திருமணமானவுடன் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.

12.
சந்திரனும் சனியும் சேர்ந்திருப்பது புனர்பூ தோஷம் ஆகும். புனர்பூ தோஷத்தின் பலன் தம்பதிகள் பிரிய நேரிடும். லக்கினத்தில் சனி
இருப்பது விதவை தோஷத்திற்கான அறிகுறி. தம்பதிகளின் பிரிவு வேறு மாதிரியாக ஆயிற்று. கணவனை வைகுண்டத்திற்கு அனுப்பிவிட்டு ஜாதகியை விதவையாக்கி சனி தன் வேலையை முடித்துக்கொண்டான். ஜாதகியின் 10 ஆண்டு திருமண வாழ்வு ஒரு  முடிவிற்கு வந்தது.

குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சனீஷ்வரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்தது கேடானது. ஆனால் அந்த வீட்டை
தன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் குரு பகவான், ஜாதகிக்குக் குடும்ப பந்தத்தைக் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறார்.

ஜாதகி பிறந்தது ஒரு நல்ல குடும்பத்தில். வாழ்க்கைப் பட்டது ஒரு செல்வந்தர் வீட்டில். மூத்த மருமகள். ஆனால் 4ல் அமர்ந்த ராகு ஜாதகியின் கைக்கு எதையும் எட்டாமல் செய்து submissive levelலிலேயே வாழும்படி செய்துவிட்டான்.(என்ன நடந்தது என்பதை எழுதினால் பத்துப் பக்கக் கதை எழுத வேண்டும். ஆகவே எழுதவில்லை. அத்துடன் அது தேவை இல்லாததும் கூட)
---------------------------------------------------------------------------------------------------
பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.  சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

 சரியான விடைகள் -  அதாவது நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தது:

சரியான பதில்கள்:
1.  ஜாதகி அழகானவர். மன உறுதி மிக்கவர்
2. பணக் கஷ்டம் உடையவர்.
3. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே.
4. திருமணமானவர்.
5. திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இல்லை. மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கும் அல்லது ஜாதகி விதவையாகி இருப்பார்.
6. ஜாதகிக்குக் குழந்தை உண்டு!

ஓரளவு 4 அல்லது 5  விடைகளை நெருங்கி எழுதியவர்கள்:

1. திரு.சந்திரசேகரன்.
2. Redfort, Tirupur
3. திரு.ஜி.முரளி கிருஷ்ணா
4. திரு, பழனிசண்முகம்
5. திருமதி சுசீலா கந்தசாமி
6. திரு.Kmr.Krishnan, Lalgudi

இவர்களில் திரு, பழனிசண்முகம் மட்டும்தான் ஜாதகி விதவை என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

அதுபோல கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!!!!!

அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.10.13

Astrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

 

Astrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி பத்தொன்பது!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். நடிகை அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும்! இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.




அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார் 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++========

22.10.13

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது?

 

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? 

சனீஷ்வரனிடம்  போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு நாம் மேல் நோக்கிப் பயனப்பட்ட பிறகு என்ன நடந்தால் என்ன?

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை யோசித்து அல்லது தெரிந்து கொண்டு இப்போது ஏன் மண்டைக்குக் குடைச்சலைத் தர வேண்டும்?

மரணத்தை அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அல்லது பார்க்காமல் அதைப் புறந்தள்ளிவிட்டுப் போய் விடலாம். இன்றைக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. முதல் பிரச்சனை அநியாய விலைவாசிகள். அவற்றைச் சமாளிக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். இது போன்ற மொக்கைப் பதிவுகள் எல்லாம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் இப்போதே பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.

மற்றவர்கள் தொடரலாம்!
-------------------------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது என்பது பற்றியும் விவரிக்கின்ற பண்டைய திபேத்திய நூல் ஒன்றைத் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன். புக் மார்க் செய்து வைத்து, நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.

http://www.holybooks.com/wp-content/uploads/The-Tibetan-Book-of-Living-and-Dying.pdf

அந்தப் புத்தகம் பற்றி ஆய்வு செய்து உரை நிகழ்த்தியவர்களின் காணொளிக் காட்சியும் உள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்தில்  சொல்லுங்கள்!
------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மறு பிறவியைப் பற்றியும் பல மதங்கள் பலவிதமாக வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றன.

உடம்பிற்குத்தான் மரணம். ஆத்மாவிற்கு மரணம் இல்லை. ஆத்மா வேறு ஒரு பிறவியை எடுத்து விடும் என்பதை இந்து மதத்தில் பல மகான்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

"ஏற்றப் பழந்துணியை நீக்கி எறிந்தொருவன்
மாற்றும் புதிய உடை வாய்ப்பது போல்
தோற்றுமுயிர் பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல் கொண்டு பிறக்குமென்று கொள்"


என்கிறது பழம் பாடல் ஒன்று. இதை முன்பு ஒரு முறை இணையத்தில் படித்தேன். பகவத்கீதையில் இந்த வரிகள் வருவதாக அந்த  அன்பர் கூறியுருந்தார்.

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான்  அந்த நிலை நமக்கு உண்டாகும்.

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without  desire

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

குறள் - 362

பட்டினத்தடிகளும் தனது பாடல் ஒன்றில்

பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்று பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது நீ இறந்து சாம்பலாகிப்
போகும்போது, உன் ஆத்மா மேற்கொள்ளும் அடுத்த பயணத்திற்கு இந்தப் பாவ புண்ணியக் கணக்கை கொண்ட கோப்பும் (file) உன் ஆத்மாவுடன் கூடவே வரும் என்று சொல்லியிருக்கிறார்.

அதுதான் நம்முடைய அடுத்த பிறவியை நிர்மானிக்கும் வலிமை கொண்டதாகும் என்கிறார்கள்.

ஜோதிடத்தில் அதைத்தான் பூர்வ புண்ணியம் என்கிறோம். வாங்கி வந்த வரம் என்கிறோம்.

இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இன்றையத் தேவைகளை சமாளிப்பதற்கு என் அரிய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் தர்ம சிந்தனையோடு சில அறச்செயல்களையும், பொதுத் தொண்டுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். வரம் வாங்கு வதற்காக அல்ல! ஒரு நற்சிந்தனையால் அதைச் செய்துகொண்டிருக்கிறேன்

நடப்பது நடக்கட்டும். எல்லாம் எனை ஆளும் ஈசன் செயல்!
என்னைப் பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான். அவன் வழி நடத்துகிறான். நடத்துவான்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------
அடுத்ததாக, சுவாரசியமான ஜோதிடப் புதிர் ஒன்று உங்களின் அலசலுக்காகக் காத்திருக்கிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள். அது நாளை வெளியாகும்!



Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21.10.13

Astrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி பதினெட்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல! வெளி மாநிலக்காரர். பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
---------------------------------------------------------------------------------
இடைச் சேர்க்கை!


வேண்டுகோள்!

ஜோதிடம் பொதுவானது. பழமையானது. காலம் காலமாக உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு மேலாக பல மகான்களும், ஞானிகளும்  ஜோதிடத்தை விரிவாகத் தந்துள்ளார்கள். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம். யாரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது!

பிறக்கும்போதே யாரும் ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. இறையுணர்வு, தெய்வ அருள் (intuition power), ஞானம் உள்ளவர்கள் அதில் மேன்மை உற்று விளங்கினார்கள்.

மற்றவர்கள் கற்று உணர்ந்தார்கள். கற்றுணர்தலிலும் அது மனதில் நிற்பதற்கும் தெய்வசித்தம் வேண்டும்.

கற்றுணர்தல், அனுபவம், எழுத்து என்பது ஆளாளுக்கு வித்தியாசப்படும். தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அது தங்களுடைய நடையில் அவர்கள் எழுதும்போது, அதை ஒருவர் அச்சரம் பிசகாமல் காப்பியடித்து தான் எழுதியதுபோல் பதிவிடுவதில் என்ன நியாயம் உள்ளது?

எழுத விரும்புபவர்கள், தாங்கள் கற்றதை, தங்கள் அனுபவத்தைத் தங்கள் நடையில் எழுதட்டும். அதில் தவறில்லை!

ஆனால் இன்றைய அவல நிலையில் நியாய அநியாயங்களுக்கெல்லாம் இடமில்லை. முடிந்தால், விருப்பப்படுவதை செய்துகொள், யார்
உன்னைக் கேட்க முடியும் என்னும் நிலைப்பாடுதான் மேலோங்கி உள்ளது.

இன்றைய இணைய வளர்ச்சியில் cut & paste கலாச்சாரத்தில் எல்லாம் சாதாரணமாகிவிட்டது.

சட்டம், வழக்கு எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. ராஜீவ் காந்தி கொலை வழக்கே பல ஆண்டுகளாக இன்னும் நிலுவையில் உள்ளது. இணைய வழக்குகள் எல்லாம் எம்மாத்திரம்?

ஆகவே நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தில் எழுதுவது என்பது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது.

பலர் எனது எழுத்துக்களை, ஆக்கங்களை அப்பட்டமாகத் திருடிக் கொண்டு போகிறார்கள். இதைக் காலம்காலமாக பலரும் எனக்குஎடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் KmrK அவர்களுக்கு இந்தத்திருட்டு விஷயம் நன்றாகத் தெரியும். சென்ற வாரம் நமது வகுப்பறை மாணவி Ms.கோகிலம் அவர்களும் சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் திருட்டு ஒன்றைச் சுட்டிக் காட்டி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

ஆகவே நம் ஜோதிட வகுப்பைத் திறந்தவெளியில் நடத்தாமல், Closed Roomல் நடத்த விரும்புகிறேன். அத்துடன் இங்கே திறந்த வெளியில் உள்ள முக்கியமான பாடங்களை எல்லாம் அந்த அறைக்கு மாற்றிவிடலாம் என்றும் நினைக்கிறேன்!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். 

என்ன செய்யலாம்? உறுப்பினர்களை எப்படி அனுமதிக்கலாம் என்பது பற்றிய உங்கள் அனைவரின் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன!!! உங்கள் பதில்களை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள் (My mail ID: classroom2007@gmail.com)

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++==

18.10.13

Devotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்!!


Devotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்!!

 பக்தி மலர்

 வீரமணிதாசனின் கணீர்க்குரலில் பாடப் பெற்ற முருகன் பாமாலையொன்று இன்றைய பக்தி மலரை நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன் 
வாத்தியார் 

--------------------------------------------------------------


Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++=====

17.10.13

Astrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயகி அஞ்சலீனா ஜோலி’’யா அவர்?

 

Astrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயகி அஞ்சலீனா ஜோலி’’யா அவர்?

ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

Hollywood Actress Angelina Jolie தான் அவர்!!!!
---------------------------------
Angelina Jolie
June 4, 1975 (age 38)
Los Angeles, California, U.S.
Citizenship: United States, Cambodia, Sarajevo (honorary)
Occupation: Actress, film director, screenwriter
Years active: 1982; 1991–present
Spouse(s): 1.Jonny Lee Miller (m. 1996–d. 1999)
              2.Billy Bob Thornton (m. 2000–d. 2003)

Partner(s): Brad Pitt (2005–present)
Children     6 (Most of them are adopted)
-------------------
மேலதிக விபரத்திற்கு:
http://en.wikipedia.org/wiki/Angelina_Jolie

++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்கள்:
1.  ஜாதகி மிகவும் அழகானவர். புகழ் பெற்றவர்
2. கையில் அபரிதமான பணப்புழக்கம் உள்ளவர்
3. திருமணமானவர். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உள்ளது. விவாகம் ரத்தில் முடிந்துவிட்டது.
4. ஜாதகிக்குக் குழந்தை உள்ளது.
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்.


1
கடக லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சந்திரன், மிகச் சிறந்த திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ஐக்கியமாகி உள்ளார். உடன் அந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ள குரு பகவான். மேலும் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் அதே வீட்டில். கேட்கவும் வேண்டுமா? சந்திர மங்கள யோகமும், குருச் சந்திர யோகமும் அமைந்து ஒன்பதாம் வீட்டை மேன்மைப் படுத்தின. பெண்களுக்கு ஒன்பதாம் வீடு (பாக்கிய ஸ்தானம்) முக்கியமானது. ஒன்பதாம் வீடு சிறப்பாக அமைந்ததற்கு உதாரண ஜாதகம் இது.

2.
லக்கினத்துடன் சந்திரன் சம்பந்தப்படும்போது, அழகான தோற்றத்தை அது கொடுக்கும். இங்கே லக்கினாதிபதியே சந்திரனாகி, ஒன்பதில் அமர்ந்ததால் ஜாதகிக்கு அழகான தோற்றத்தைக் கொடுத்தார். அத்துடன் சுபக் கிரகமான சுக்கிரனும் லக்கினத்தில் வந்து அமர்ந்து ஜாதகியின் அழகிற்கு அணி சேர்த்தார். திரைப்பட நாயகி என்றால் சொல்லவும் வேண்டுமா? அதே அமைப்புக்கள் அவருக்குப் பெரும் புகழையும் தேடிக் கொடுத்தது.

3.
சூரியனும், புதனும் ஒன்று சேர்ந்து (புதாதித்யா யோகம்) ஜாதகிக்கு பன்முகத் திறமைகளைக் கொடுத்தன. ஜாதகி திரைப்பட நாயகி, இயக்குனர், கதாசிரியை என்று பல துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

4.
இரண்டாம் வீட்டில் மாந்தி இருப்பது உசிதமல்ல. அந்த வீட்டின் செயல்பாடுகள் 3ல் ஏதாவது ஒன்றைக் கெடுப்பார் என்பது விதி. அவர் ஜாதகியின் குடும்ப வாழ்க்கையைக் கெடுத்தார். இரண்டு முறைகள் திருமணம் செய்து கொண்டும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையவில்லை. இரண்டு விவாகங்களுமே ரத்தில் முடிந்தது.

இரண்டாம் வீட்டு அதிபதி 11ல் அமர்ந்ததாலும், தனகாரகன் குரு லக்கினாதிபதியுடன் சேர்ந்ததாலும், ஜாதகிக்கு எந்தவித பணப்பிரச்சினையும் இல்லை.

5.
ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தாலும், அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய், அந்த வீட்டிற்கு ஐந்தில் (9ல்) அமர்ந்ததாலும், குழந்தை பாக்கியத்திற்கு காரகன் அவருடன் இருப்பதாலும் ஜாதகிக்குக் குழந்தை பிறந்தது. அந்த பாக்கியத்திற்குக் குறை இல்லாமல் போனது.

6.
ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்கும் சுக்கிரன் அவருக்குத் திருமணத்தை நடத்தி வைத்தான். ஆனால் ஏழாம் வீட்டதிபதி சனி 12ல் (விரையத்தில்) அமர்ந்ததால், திருமணங்கள் நிலைக்கவில்லை. ரத்தில் முடிந்தன.

7.
22 வயதில் (சரியான நேரத்தில்) ஆரம்பித்த சுக்கிர திசை, ஜாதகிக்கு எல்லா நன்மைகளையும் வாரி வழங்கியது. சுக்கிரன் 4 and 11ஆம் வீடுகளுக்கு அதிபதி, அத்துடன் அவர் லக்கினத்தில் அமர்ந்திருப்பதைக் கவனியுங்கள்!

8.
ஜாதகிக்கு, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. மொத்தம் 27 யோகங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்பதாம் வீட்டால் கிடைத்த யோகங்கள்தான் மிகவும் சிறப்பானவை. ஆகவே மற்ற யோகங்களைப் பட்டியலிடவில்லை!

 9.
கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் லக்கினாதிபதியுடன் சேர்ந்திருப்பது மிகவும் நன்மையானதாகும். ஜாதகியின் கனவையெல்லாம் நனவாக்கிக் கொடுத்தான் அவன்!
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த ஜாதகியின் பிறப்பு விவரங்களைக் கொடுத்து வகுப்பறையில் பதிவிடச் சொன்னவர். திருவாளர் kaven alias Gowri Shankar, Mumbai. அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆணித்தரமாக சரியான சொற்பிரயோகத்துடன் பதிலை ஒரு சிலரே எழுதியுள்ளனர். இருந்தாலும் சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

1.Dallas Kannan
2.AK.Anandh
3.M.Srinivasa Rajulu
4.Kaven
5.Dinesh
6.Thiru Mahesh
7.S.Bagavathi
8.Murali
9.Janani Murugesan
10.Palani Shanmugam
11.Chandrasekaran
----------------------
4ற்கு மூன்றை மட்டும் சரியாக எழுதியவர்கள்:
1.G.Murali Krishna
2.Kmr.Krishnan
3.Redfort
4.Kohilam
5.Swaravani
6.Susila Kandaswamy
7.Ravichandran
8.Dhanalakshmi
9.Pathi Raghu
10.AMG
11.Chandrasekaran Suryanarayanan
---------------------------

பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

”2ல் மாந்தி, 5ல் உச்சம் பெற்ற இராகு. இராகு கடக இலக்கினாதிபதி சந்திரனுக்கு பகைவர். அதனால் குடும்ப ஸ்தானமும் புத்திர ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருக்க கூடும்” என்று எழுதிய ஒருவர், அடுத்த பத்தியில் "குடும்ப காரகன் மற்றும் புத்திர காரகனான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் இலக்கினாதிபதி சந்திரனோடு இருப்பதால் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன் ஜாதகிக்கு இருக்கும். ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் உண்டு. திருமணம் நடந்து சிறிது காலம் கழித்தே குழந்தை பிறந்திருக்கும்." என்று எழுதியுள்ளார்.

இப்படி இரண்டு நிலைப்பாடுகளை எழுதாமல், ஆணித்தரமாக ஒன்றை மட்டுமே எழுத வேண்டும். எழுதினால்தான் நல்லது. கணிப்பும் சரியாக இருக்கும்!

ஜாதகியின் அழகைப் பற்றி சிலர் எழுதவில்லை. விவாகம் ரத்தானதைப் பற்றி சிலர் எழுதவில்லை. அதை எல்லாம் எழுதினால்தானே கணிப்பு முழுமை பெறும்!

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++=
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.10.13

Astrology: Quiz No.17: உங்கள் பதிலை எழுதுங்கள்!

 

Astrology: Quiz No.17:  உங்கள் பதிலை எழுதுங்கள்!

தொடர் - பகுதி பதினேழு!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம்.

இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும்
எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

15.10.13

Astrology: Quiz.16 Find out the native of the horoscope. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 

Astrology: Quiz.16 Find out the native of the horoscope. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி பதினாறு

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச்
சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை
வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம்.

தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஒன்றிற்கு 2 க்ளூ கீழே உள்ளது!

ஜாதகர் ஒரு அரசியல்வாதி.  பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++======

13.10.13

வாத்தியாரின் விஜயதசமி வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் விஜயதசமி வாழ்த்துக்கள்!

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான இன்று ஆயுத பூஜையையும், நாளை விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் நம் வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும், சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் நாம் வழிபடுகின்றோம். செய்யும் தொழிலே தெய்வம்,  உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் நீங்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.

நாளை வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 15.10.2013 செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும்!
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

11.10.13

கை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்கள்


கை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்கள்

பக்தி மலர்

விநாயகரைத் துதிக்கச் செல்பவர்கள் என்ன கொண்டு செல்ல வேண்டும்? கை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்கள். அருணகிரியார் அதைத்தான் சொல்கின்றார்.

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி’ என்று துவங்கும் அருணகிரியாரின் பாடல் ஒன்று இன்றைய பக்திமலரை அலங்கரிக்கின்றது. அந்தப் பாடலைத் திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்கள் தனது இனிய குரலால் பாடி நமது மனதில் என்றும் நிற்கும்படி செய்கின்றார்.

அனைவரும் பாடலைக் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

--------------------------------------------------------
பாடலில் உள்ள அருஞ்சொற்களுக்கான விளக்கம்:

கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி: 
பழம், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை விரும்பி உண்கின்ற யானைமுகத்தானின் திருவடிகளைப் போற்றுங்கள்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்:
அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவன் அவர். நீங்கள் நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சம்

அவர். அவரை வணங்கினால் நம்முடைய வினைகள் யாவும் விரைவில் நீங்கிவிடும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை:
ஊமத்த மலரையும், பிறைச் சந்திரனையும் தன்னுடைய சடைமுடியில் அணிந்து கொண்டிருக்கும் சிவபெருமானுடைய மகன் அவர்.

மற்போர் வீரனைப்போன்ற திரண்ட தோள்களையுடையவர் அவர். மத யானையை ஒத்தவர் அவர்.

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொண்டு பணிவேனே:மத்தளம் போன்ற பெருவயிற்றை உடையவர் அவர். உத்தமியாகிய பார்வதியின் மகன் அவர். அவ்வாறாகிய கணபதியைத் தேன்
துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நாம் வணங்குவோம்.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே:
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூலை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய தன்மையானவர் அவர்.

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா:
அசுரர்களின் திரி புரங்களையும் எரித்த சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரன் அவர்.

அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி:
வள்ளி மீது கொண்ட காதல் துயரத்தோடு அவர் தம்பி சுப்பிரமணி சுவாமிக்கு தினைப் புனத்தில் யானையாகத் தோன்றி, அக்குற மகளை அச்சிறு முருகனுக்கு அக்கணமே மணம் செய்து கொள்ள அருள் பாலித்தவர் அவர்.
------------------------------------------------------------------------------------
திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்கும்போது சிவபெருமான் விநாயகரைப் பூஜித்துச் செல்ல மறந்தார். அதனால், சிவபெருமான்

ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்கின்றது சிவபுராணம்.
----------------------------------------------------------------------------------
பாடலைக் கேளுங்கள்!
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this song in the net!    




வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10.10.13

Astrology: Answer to quiz 15

 
Astrology: Answer to quiz 15

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா?
அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?
3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை?

சரியான பதில்கள்:

1.ஜாதகி திருமணமானவர்.
2.நல்ல கணவர் மற்றும் குடும்ப வாழ்க்கை உள்ளது.
3.ஜாதகிக்குக் குழந்தை இல்லை. அது ஒன்றுதான் பிரச்சனை!
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்


1
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார். ஏழாம் வீட்டைப் பார்க்கும் அவரும்,  குருவோடு கைகோர்த்த சுக்கிரனும் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ஏழாம் வீட்டுக்கார்ன் சனி 12ல் அமர்ந்ததால் சற்றுத் தாமதமான திருமணம். அவ்வளவுதான்.
2
குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது.  அத்துடன் குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களின் பார்வையும் குடும்ப ஸ்தானத்தின் மேல் இருக்கிறது. ஆகவே நல்ல குடும்பவாழ்க்கை அமைந்தது.
3
குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.
1.குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2.அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்.
3.குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்து விட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி புதனுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4. மேலும் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)5. இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் ஜாதகிக்குக் கைகொடுக்க  இயலாமல் போய்விட்டது!
--------------------------------------------------------------------
குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக் கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டு
இருக்கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும்
மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு விதத்தில் அதுவும் வரம்தான்!
----------------------------------------------------------------
இந்த ஜாதகிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தை இன்மை. அதாவது குழந்தை இல்லை. அதைக் கோடிட்டுக் காட்டியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயர்களைக் கீழே தெரிவித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்! பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

சரியான விடையை எழுதிய அந்தப் பத்துப் பேர்கள்:
1.  திரு.சத்தியநாராயணன்.
2. திருமதி.கோகிலம்.
3. திரு.ஜி. முரளிகிருஷ்ணா.
4. திரு.உதயகணேஷ்.
5. திருமதி ஜனனி முருகேசன்.
6. திரு.சி.ஜீவானந்தம்.
7. திரு. A.K ஆனந்த்.
8. திரு.AMG.
9. திருமதி. தனலெட்சுமி.
10. SRi.

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9.10.13

Astrology:Write your answer to the queries - Quiz 15 புதிருக்கான பதிலை எழுதுங்கள்

 

Astrology: write your answer to the queries: Quiz No.15 புதிருக்கான பதிலை எழுதுங்கள்

தொடர் - பகுதி பதினைந்து

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான்!




கேள்விகள்

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா? அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?
3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8.10.13

என்ன பாட்டுடா சாமி!!!!

 

முக்கிய அறிவிப்பு:

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இன்று வரவேண்டிய புதிர் பகுதி, ஒரு நாள் தள்ளிவைக்கப் பெற்றிருக்கிறது. அது நாளை காலை வெளியாகும். அனைவரும் பொறுத்தருள்க!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------------------

என்ன பாட்டுடா சாமி!!!! 

சில பாடல்களைக் கேட்கும்போது, அவை நம்மை உள்ளே இழுத்துக் கொண்டுவிடும். பாடலின்  தாக்கம் அன்று முழுவதும் நம் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.

அப்படித் தாக்கம் நிறைந்த தத்துவப் பாடல் ஒன்றை, உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன். கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடல், குணா என்னும் திரைப்படத்தில் வந்ததாகும். 5.11.1991ல்  வந்த படம். சுமார் 22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாடல் புதிதாகவே உள்ளது. கேட்கக்
கேட்கப் புதிதாகவே உள்ளது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!

பாடலை உயர்த்திப் பிடிப்பது திருவாளர் இளையராஜா அவர்களின் வளமான குரல் என்றால் அதை மறுப்பதற்கில்லை.

பாடலைக் கேட்டுப் பாருங்கள். வரிக்கு வரி கேளுங்கள். என்னவொரு அற்புதமான வரிகள்.அற்புதமான பாடல்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------
பாடலின் வரி வடிவம் கீழேற் உள்ளது. அதைத் தொடர்ந்து ஒலி, மற்றும் ஒளி வடிவமும் உள்ளது.

அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு - ஞானப் பெண்ணே
சக்கையாக போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

(அப்பன் என்றும் அம்மை என்றும் .)..

குத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்க யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப்பார்வை ஏதடா

ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும் கூட்டம்தான்
விட்டோடும் ஓர் சந்தைக்கடைதான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா

தட்டுக் கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்

(அப்பன் என்றும் ...)
++++++++++++++++++++++++++++++++++++++++++
 Our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7.10.13

Astrology: Quiz.14 Find out the native of the horoscope

 
Astrology: Quiz.14 Find out the native of the horoscope.

புதிர் தொடர் - பகுதி பதினான்கு

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்குகொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச்

சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை
வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின்பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஒன்றிற்கு 3 க்ளூ கீழே உள்ளது!

ஜாதகர் இந்தியர். பிரபலமானவர். அவருடைய பெயரின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் ஒன்றுதான்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++