மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.7.23

Astrology எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

Astrology 

எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

ராகுவும், கேதுவும் சொந்த வீடில்லாத கிரகங்கள். சாயா கிரகங்கள்.அவைகளுக்கு சில வினோதமான குணம் உண்டு.

ஜாதகனின் வாழ்க்கையில் பெரும்பாலும் கேடு (தீங்கு) விளைவிக்கக்கூடிய கிரகங்கள் அவைகள். சாபக் கேடான கிரகங்கள். 
இயற்கையான தீய கிரகங்கள் (Natural malefic planets) ஜாதகத்தில் இரண்டு விதமான தீய யோகங்களை  (Harmful yogas) 
கொடுக்கக்கூடியவைகள் அவைகள்.

1, காலசர்ப்ப யோகம்.
2. சண்டாள யோகம்.

சண்டாளன் என்பது சமூகத்தில் மதிப்பில்லாத மனிதனைக் குறிக்கும் சொல்லாகும்.

ராகு அல்லது கேதுவுடன் வேறு ஒரு கிரகம் சேரும்போது, அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின் பலாபலன்கள் கெட்டுப்போகும். 
உடன் சேரும் கிரகம் தன்னுடைய உண்மையான தன்மையை இழந்து விடும். அதுபோல ராகுவும், கேதுவும் 
தாங்கள் குடியிருக்கும் வீட்டின் தன்மையையும் கெடுத்துவிடக்கூடிய வல்லமை பெற்றவை.

ஆகவே அவர்களின் இருப்பு (presence)  வரவேற்கக்கூடியதல்ல. அது எந்த வீடாக இருந்தாலும் சரி! அதுதான் பலன்.

மேலும் அவைகள் தங்கள் சேர்க்கையாலும், பார்வையாலும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. அதுபோல தாங்கள் குடியிருக்கும் 
வீட்டையும், தாக்கி அழிக்கக்கூடியவை.

சமயங்களில் அவைகள் சேரும் கிரகங்களின் இயற்கைத் தன்மையைப் பொறுத்து அது நன்மையாகவும் அல்லது தீமையாகவும் 
முடியலாம். மாறுபடலாம். வேறு படலாம். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

In short, these 2 planets (nodes) exhibit their own qualities modified  for good or bad depending upon the planets
 which they associate.

இந்த இரண்டு கிரகங்களும், ஜாதகத்தில் 6ம் வீடு, 8ம் வீடு அல்லது 12ம் வீடு போன்ற தீய இடங்களில் (மறைவு ஸ்தானங்களில்)
 இருக்கும் என்றால்

தீய பலன்கள் அதிகரித்தே காணப்படும்.

1. சூரிய சண்டாள யோகம்.

சூரியனோடு ராகு அல்லது கேது சேரும்போது, ஜாதகனின் தந்தைக்கு உடல் உபாதைகள் மற்றும் உடற்கோளாறுகளை 
ஏற்படுத்தும். ஜாதகனை முன் கோபக்காரனாக்கும். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும்.

2. சந்திர சண்டாள யோகம்.

சந்திரனோடு, ராகு அல்லது கேது சேரும்போது, அவர்களுடைய சந்திர ஆதிக்கம் கேடானது ஆகும். எப்போதுமே 
விரும்பத்தகாதது ஆகும்.

ஜாதகனின் தாயாரின் உடல் நலத்திற்து கேடானது ஆகும். அத்துடன் ஜாதகனின் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும்  
கேடானது ஆகும்.”உடலும் உள்ளமும் நலம்தானா?” என்று கேட்கும் நிலையில் ஜாதகன் இருப்பான்.

ஜாதகனை ஏழையாக்கும். மற்றவர்களுக்கு கீழே ஜாதகன் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் (அடிமைத் தொழில்)
தகாத காரியங்களை ஜாதகன் செய்வான். அவைகள் செய்ய வைக்கும்.

இவைகள் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது 
கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.7.23

Astrology ஆர்யபட்டா


Astrology ஆர்யபட்டா

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

இடம். நாளந்தா பல்கலைகழகம்.

தெரியாத பெயராக இருக்கிறதா?

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த 
நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர 
விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் 
துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் 
மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். 
பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். 
அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய 
நூலின் பெயர் ஆர்யபட்டியா!

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் 
படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் 
உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, 
பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் 
தலைமைப் பதவியில் அமர வைத்தான்.

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று 
உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது 
என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது 
ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் 
பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!

Motions of the solar system:

Aryabhata correctly insisted that the earth rotates about its axis daily, and that the apparent movement of the stars is a relative motion caused by the rotation of the earth, contrary to the then-prevailing view, that the sky rotated. This is indicated in the first chapter of the Aryabhatiya, where he gives the number of rotations of the earth in a yuga and made more explicit in his gola chapter

India\'s first satellite was named after Aryabhata

Algebra, Trigonometry என்று கணிதத்தின் பல பரிமானங்களை வடிவமைத்தவர் அவர்தான். உலகிற்குச் சொல்லித்தந்துவிட்டுப்போனது அவர்தான்

அந்த மகானைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கிப் பாருங்கள்!

http://en.wikipedia.org/wiki/Aryabhata

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.7.23

பத்தாம் வீடு - அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல்

பாடம் 6 - பத்தாம் வீடு - அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல்

நீங்கள் நன்றாக வாழ்வதற்கு நவக்கிரகங்கள் பாடும் பாட்டுத்தான் முக்கியம்.
லக்கினாதிபதி, ஐந்தாம் அதிபதி,ஒன்பதாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி
ஆகியவர்கள்தான் இனிமையாக, மனம் மகிழப்பாடுவார்கள்.

1. லக்கினாதிபதி (1st Lord)
2. பூர்வ புண்ணியாதிபதி (5th Lord)
3. பாக்கியாதிபதி (9th Lord - Lord for Gains)
4. லாபாதிபதி (11th Lord - Lord for Profit)
ஆகியோர்கள் ஜாதகத்தில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் நன்றாக
இருந்தால், ஜாதகனும் நன்றாக இருப்பான்!

Lagna lord, fifth lord, ninth lord & eleventh lord ஆகியோர்கள் பாடினால்
வாழ்க்கை முழுவதும் மகிச்சியாக இருக்கும்.

ஆனால் அஷ்டகவர்க்கத்தை எழுதிய முனிவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள்
ist house, 9th house, 10th house & 11th house ஆகிய வீடுகள் நன்றாக இருந்தால்
போதும் என்கிறார்கள். நன்றாக இருப்பது என்பது என்ன?

அந்த வீடுகள் நான்கிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்
இருந்தால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். மூடி வைத்துவிடலாம். ஜாதகன்
எல்லா நலன்களையும் பெற்று, வசதியாக வாழ்வான். அவன் காதில் எப்போதும்
இளையராஜாவின் அசத்தலான பின்னணி இசை (BGM) ஒலித்துக் கொண்டிருக்கும்.
சின்னக்குயில் சித்ரா அல்லது சாதனா சர்க்கத்தின் ”லல லல லல் லல்லா”
ஒலித்துக் கொண்டு இருக்கும்.

அப்படி இல்லையென்றால் ‘அசதி’ அதிகமாக இருக்கும். அசதி அதிகமாக
இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். 
நான் எதற்காக அதை விவரிக்க வேண்டும்?

சின்ன வயதில் உன் வாழ்க்கையைப் பார்க்காதே, நாற்பது வயதில் பார்; 
வாழ்க்கையின் அர்த்தம் பிடிபடும் என்பார்கள் அனுபவஸ்தர்கள்.

90% மனிதர்கள் அந்த 40வது வயதில் தங்கள் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில்
எடுத்துவிடுவார்கள். அதற்குக் காரணம், அடிக்கடி எட்டிப் பார்க்கும் அசதி!

அன்புடன்
வாத்தியார

-------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!