மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.13

சிந்தனை செய் மனமே என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்

 
சிந்தனை செய் மனமே என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்
பக்தி மலர் (31.5.2013)

சிந்தனை செய் மனமே’ என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்  ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------
சிறுவன் ஹரேஷ் பாடிய பாடல்
http://youtu.be/MxRhZLzfEG0
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

30.5.13

கவிதை நயம்: பக்கத்து வீட்டு சீதாவும் பாரத மாதாவும்!

 இன்றைய கவிதை நயம் பகுதியை நம் மதிப்பிற்கு உரிய கவிஞர் வாலி அவர்கள் எழுதிய புதுக் கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து  மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
கவிதை நயம்: பக்கத்து வீட்டு சீதாவும் பாரத மாதாவும்!

பத்தும்
பெண் குழந்தைகளாகப்
பெற்றெடுத்து
விட்ட -
பக்கத்து வீட்டு
சீதா.....
குடும்பக்
கட்டுப் பாட்டைத்
தீவிர மாக
அனுஷ்டிக்கிறாள்.....
இனியொரு -
ஆண் குழந்தை
பிறக்க
வாய்ப்பே
இல்லையென்று!

சீதாவும்
பாரத
மாதாவும்
ஒன்றுதான்!

அறுபத்தைஞ்சு கோடி
மக்களைப்
பெற்றெடுத்து
விட்டு......

பாரத மாதாவும்....
இப்போது
குடும்பக் கட்டுப்பாட்டைத்
தீவிரமாக
அனுஷ்டிக்கிறாள்.....

இனியொரு -
காந்தி
பிறக்க
வாய்ப்பே
இல்லையென்று!

                 -கவிஞர் வாலி

(கவிஞர் வாலி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை இது. அப்போதைய இந்திய ஜனத்தொகை அறுபத்தைந்து கோடிதான்)


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.5.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 28

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 28

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 28

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!!
-----------------------------------------------------
உத்திராடம் 2, 3 & 4ம் பாதங்கள்

இது மகர ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சூரியனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. அஸ்விணி
2. பரணி
3. ரோகிணி
4. மிருகசீர்ஷம்
5. திருவாதிரை
6. பூசம்
7. ஆயில்யம்
8. மகம்
9. பூரம்
10. ஹஸ்தம்
11. சுவாதி
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரமும், பூரநட்சத்திரமும் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

மகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ராசிக்கு உரிய மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் உத்திராடம் (2, 3 & 4ம் பாதங்கள்) ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம (average) பொருத்தம் உண்டு!.

அவிட்டம்  பொருந்தாது.

சித்திரை நடசத்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

28.5.13

Astrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்?Astrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்?
 
Popcorn Post No.45


முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு

1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்

2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை

3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்

4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்

5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.

6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்

7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?

பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும்.
சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!

Any planet in the 12th house would make its dasa expense oriented!

அடடே, பணம் மட்டும்தான் கரையுமா?

இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்

அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.5.13

ஊர் கேட்ட பாடல்கள் உனக்காக வாழும்!

 
ஊர் கேட்ட பாடல்கள் உனக்காக வாழும்!

நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்...
ஊர் கேட்ட பாடல்கள் உனக்காக வாழும்!
உன் நினைவுகள் என்றும் எமக்காக வாழும்!..

 ---------------------------------------------------------------------------------
சென்னையில் காலமான பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் (91 வயது) அவர்களுக்கு வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைப் பதிவு
செய்கிறேன். எத்தனையோ உள்ளங்களைத் தன் எண்ணற்ற பாடல்களால் மகிழ்வித்த அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். பழநி அப்பனைப்
பிரார்த்திக்கின்றேன்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------

 Our sincere thanks to the person who uploaded this clipping in the net!
-----------------------------------------------------------------------------
அவர் பாடிய பாடல்களில், சிறந்த பாடல்களை, பிடித்த பாடல்களைப் பட்டியலிடுவது கடினம். சட்டென்று தோன்றிய சில பாடல்களை இங்கே
நினைவு கூறுகிறேன். பல பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் அவர்!

1
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
3
பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
4
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
5
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
6
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
7
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
8
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
9
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
10
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
11
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே
12
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
13
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )
14
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
15
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது
16
கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)
17
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
18
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
19
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
20
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
21
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
22
பார்த்தா பசுமரம்
படுத்தா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா - ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?
23
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
24
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
25
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
26
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
27
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
28
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
29
கண்போன போக்கிலே கால போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
30
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
31
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
32
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
33
புதிய வானம் புதிய பூமி -
எங்கும்பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
34
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
35
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தநனாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
36
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)
37
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
38
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
39
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கணும்
தானேய் தனன--
மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும்
தானேய் தண்னன்ன
40
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்
41
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
42
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
44
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
45
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
46
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
47
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா (சின்னப்பயலே ..)
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி
48
திருடாதே பாப்பா திருடாதே
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே (திருடாதே ....)
49
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
50
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
51
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
52
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் இம்ம்ம்ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
53
என்னை தெரியுமா என்னை தெரியுமா -
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
என்னை தெரியுமா ஆஆஆ ........ உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா ஆஆ...
54
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
55
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ
56
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
57
மானல்லவோ கண்கள் தந்தது - ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது - ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது - ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது
58
சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ
செவ்வானாமே இரு கண்ணானாதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
59
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
60
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
இட்ட அடி கனிந்திருக்க்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிர்ந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க
திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா
61
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா -
நாம்கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
62
நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
63
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா...
64
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
65
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
66
பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
67
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை
68
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே .....
கீதம் பாடும் மொழியிலே ...... (நாடகம் )
69
பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே -
என்னைக்காதல் வலையில் அடைத்தவளே
70
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
71
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
72
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா ஆஆஆ
73
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
74
ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே. இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே. இல்லே!”
75
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே!
76
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
77
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
78
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி
79
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்
80
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா பொன்னம்மா என்
வாசலலுக்கு வாப்ங்கி வந்தது என்னம்மா - என்னம்மா
81
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
82
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
83
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
84
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே
85
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
86
மதுரையில் பறந்த மீன்கொடியை
உன் கண்களில் கண்டேனே..
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
உன் புருவத்தில் கண்டேனே..
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே..
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே..உன்னை
தமிழகம் என்றேனே..
87
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
88
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!
89
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
90
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?
91
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.5.13

முருகனைக் கும்பிட மொழி எதற்கு?

முருகனைக் கும்பிட மொழி எதற்கு?
பக்தி மலர்

அப்பன் முருகனைக் கும்பிட மொழி எதற்கு? அதுவும் காவடியுடன் வரும் பக்தர்களுக்கு, மொழி எதற்கு? எந்த மொழியாக இருந்தால் என்ன? இசை ஒன்று போதாதா? பக்திப் பரவசம் ஒன்று போதாதா? ஆட்டம் பாட்டத்துடன், அற்புதமான இசையுடன் மலையாள மாநிலத்தில் இருந்து பக்திப் பரவசத்துடன், பாடலுடன், ஆடலுடன் பழநி அப்பனை நாடி வரும் பக்தர்கள் நிறைந்த காணொளி ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/YTexMOI1aWI
Our sincere thanks to the person who uploaded the clipping in the net!
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++

23.5.13

வாழ்க்கையைப் பற்றி நச்’ சென்று இரண்டு கவிஞர்கள் சொன்னது!

 

வாழ்க்கையைப் பற்றி  நச்’சென்று இரண்டு கவிஞர்கள் சொன்னது!

வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம். ஆனால் கவிஞர்களின் கண்ணோட்டம் நச்’சென்று வேறுவிதமாக இருக்கிறது. இரு
கவிஞர்கள் சொன்னதை இன்றைய கவிதை நயம் பகுதி அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்/ உணருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------

தலைப்பு: வாழ்க்கை என்பது....
..
பெட்டி படுக்கைகளைச்
சுமந்தபடி
ஒரு
பிரயாணம்

எப்போது சுமைகளை
இறக்கி வைக்கிறோமோ
அப்போது
சுற்றியிருப்பவர்கள்
நம்மைச்
சுமக்கத்
தொடங்கிவிடுகிறார்கள்!

    - கவிஞர் மு.மேத்தா
-----------------------------------

தலைப்பு: வாழ்க்கை...

எண்ணிப் பார்த்து
எண்ணிப் பார்த்து
எத்தனை தடவைகள்
எப்படி
எப்படியெல்லாம்
கூட்டினாலும்
கழித்தாலும்
பெருக்கி னாலும்
வகுத் தாலும்
கிடைக்கின்ற
விடையாக.....
பூஜியமே
வருகின்ற
புரியாத
புதிரான கணக்கு!

 - கவிஞர் வாலிவாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.5.13

Astrology மாதா பிதா குரு சனி!
Astrology மாதா பிதா குரு சனி!

“என்ன சார் குழப்பம்? மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுதானே சொல்லுவார்கள்?”

“ஜோதிடம் கற்றுக்கொள்ளும் நமக்கு மாதா பிதா குரு சனி என்பதுதான் பாடம்”

“எப்படி?”

“நமக்கு மாதா என்பது சந்திரனையும், பிதா என்பது சூரியனையும் குறிக்கும். சந்திரன் மனகாரகன், சூரியன் உடல் காரகன். இருவரும் நமக்குப் பிரதானம். அடுத்து நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவும், ஆயுள் மற்றும் கர்மகாரகனான சனியும் முக்கியம். மற்ற கிரகங்கள் எல்லாம் அதற்கு அடுத்துத்தான். புத்தியே பிரதானம் என்பவர்கள் புதனையும், இல்லை சுகமே முக்கியமானது என்பவர்கள் சுக்கிரனையும் அடுத்து சேர்த்துக்கொள்ளலாம்!
--------------------------------------------------------------------------------------------------
வாக்கியப் பஞ்சாங்கப்படி குரு பகவான் 28.5.2013ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:00 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவேசிக்கின்றார். அடுத்து வரும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு அவர் அங்கே இருப்பார். அதாவது 12.6 2014 வரை அங்கே இருப்பார்

இதனால் நன்மை பெறும் ராசிக்காரர்கள். (ராசி என்பது உங்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை வைத்துப் பார்க்க வேண்டும். இதைப் புது முகங்களுக்காகச் சொல்கிறேன்)

1. ரிஷபம்
2. சிம்மம்
3. துலாம்
4. தனுசு
5. கும்பம்

ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நன்மைகளைத் தரும்.

1. ரிஷப ராசிக்காரர்கள் இதுவரை ஒன்றாம் இடத்துக் குருவால் அவதிப்பட்டவர்கள், அந்த அவதிகளில் இருந்து விலகி நன்மை பெறுவார்கள்
2. சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை பத்தாம் இடத்தில் இருந்த குரு இப்போது பதினொன்றாம் இடத்திற்குப் போகிறார். அது கோள்சாரப்படி அதிகமான லாபத்தைத் தரும் இடம். அவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
3. துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை எட்டாம் இடத்தில் இருந்து காரியங்களை முடக்கி வைத்தவர் ஒன்பதாம் இடத்திற்கு, பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்கிறார். அது மிகவும் நன்மையானது.
4. தனுசு ராசிக்காரர்களுக்கு இதுவரை ஆறில் இருந்த குரு இப்போது ஏழாம் இடத்திற்கு இடம் மாறி ராசிக்காரர்களைத் தன் நேரடிப் பார்வைக்குக் கொண்டு வந்து ஏராளமான நன்மைகளைச் செய்வார்.
5. கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை 4ல் இருந்த குரு ஐந்தாம் இடமான புண்ணிய ஸ்தானத்திற்கு இடம் மாறுகிறார். அதுவும் நன்மையானதே
-------------------------------------------
கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்கு சராசரியான (average) பலன்கள் கிடைக்கும்.

1. மேஷம்
2 கடகம்
3. மகரம்
-------------------------------------------------------
கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்கு நன்மைகள் எதுவும் இருக்காது

1. மிதுனம் (ஒன்றாம் இடத்துக் குரு)
2.கன்னி (பத்தாம் இடத்துக் குரு)
3. விருச்சிகம் (எட்டாம் இடத்துகு குரு)
4.மீனம் (நான்காம் இடத்துக் குரு)
----------------------------------------
சரி நன்மைகள் என்றால் என்ன?

உங்களுக்குத் தெரியாதா என்ன?

இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். எல்லோருக்குமா? அதெப்படி எல்லோருக்கும்? திருமணத்தை நடத்திவைக்கக்கூடிய களத்திரகாரகன், ஏழாம் இடத்துக்காரன் அல்லது லக்கினாதிபதி அல்லது இரண்டாம் இடத்துக்காரனின் திசைகளில் ஒன்றும் நடந்து கொண்டிருக்க வேண்டுமே! அப்போதுதான் திருமணம் கூடி வரும்.

கோள்சாரத்தைவிட தசா புத்திப் பலன்கள் மிகவும் முக்கியமானது. நல்ல தசா புத்திகள் நடந்து கொண்டிருந்தால் கோள்சாரப் பலன்கள் பெரிய பாதிப்பை உண்டாக்காது.

நல்ல தசா புத்தியும் நடந்து கொண்டிருந்து இப்போது குருவும் நன்மையான இடத்திற்கு இடம் மாறுகிறார் என்றால் உங்களுக்கு இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும். பழம் நழுவிப் பாலில் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாய்க்குள் விழுந்ததைப் போல இருக்கும்.

அதுபோல, மோசமான தசாபுத்தியும் நடந்து, குருவும் கோச்சாரப்படி மோசமான இடத்திற்கு மாறுகிறார் என்றால், அவதிகள், கஷ்டங்கள் இரண்டு மடங்காகிவிடும்.

இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடி. சராசரியாக  பத்துக் கோடிப்பேர்களுக்கு ஒரு ராசி என்ற கணக்கு இருக்கும். இந்தக் குருப் பெயர்ச்சி பத்துக் கோடிப்பேர்களுக்கும் (ஒரு ராசியை வைத்து) ஒரே மாதிரியான பலனைத் தரும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஒருவருடைய சொந்த ஜாதகம், நடப்பு தசா புத்தி, அத்துடன் இந்தக் கோள்சாரம் ஆகிய மூன்றையும் வைத்துத்தான் பலன்கள். அதாவது நன்மை தீமைகள்.

நான் எப்போதும் சொல்வது போலவே, இப்போதும் சொல்கிறேன். ஜாதகம் என்பது கார். தசாபுத்தி என்பது சாலை, கோள்சாரம் என்பது ஓட்டுனர். இம்மூன்றும் நன்றாக இருந்தால் பயணம் அருமையாக இருக்கும். அதி சுகமாக இருக்கும். இன்னோவா ஏ.ஸி.கார். ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பர்ட் டிரைவர் என்று மூன்றுமே அமைந்தால் பயணம் சுகமாகத்தானே இருக்கும். பழைய மிலிசெண்ட்டோ பியட் கார், குண்டும் குழியுமான கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி சாலை போன்ற பாடாவதி சாலை, ஒரு எல் போர்டு ஓட்டுனர் போன்று மூன்றுமே இடக்காக இருந்தால் பயணம் எப்படி சுகப்படும்? அட்லீஸ்ட் 3ல் இரண்டாவது நன்றாக இருக்க வேண்டாமா?

ஆகவே குருப் பெயர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல், நடப்பு தசா புத்தியையும் பாருங்கள்.

அத்துடன் இறைவனையும் அன்றாடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார். நடக்க வேண்டியதெல்லாம் நல்லதாகவே நடக்கும். பிரார்த்தனையில் நம்பிக்கைதான் முக்கியம். அதை மனதில் வையுங்கள்.

என்னதான் பெயர்ச்சி நடக்கட்டுமே
இருட்டினில் கிரகம் மறையட்டுமே
தசாபுத்தி துணைசெய்யும் தயங்காதே (லக்கின)
காரகன் இருக்கிறான் மயங்காதே


என்ற வரிகளை மனதிற்குள் சொல்லிக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.5.13

Astrology மகிழ்ச்சியான அறிவிப்பு!


Astrology மகிழ்ச்சியான அறிவிப்பு!

அவசரப் பணி நிமித்தமாக வாத்தியார் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டுள்ளபடியால், வகுப்பறைக்கு 2 நாட்கள் விடுமுறை.  அடுத்த வகுப்பு 22.5.2013 புதன்கிழமையன்று நடைபெறும். அன்று முக்கியமான பாடம்.

ஆமாம், ராசி வாரியாக குருப்பெயர்ச்சிப் பலன்களுக்கான பாடம் அன்று வெளியாகும். அனைவரும் 2 நாட்கள் ஜோதிடத்தை மறந்து விட்டு விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். இல்லை, அதில் மகிழ்ச்சி
இல்லை என்பவர்கள் பழைய பாடங்களைப் புரட்டிப் படியுங்கள்.

நன்றி, வணக்கம்,
மற்றும்
அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.5.13

கண்கள் எப்போது கசிந்து உருகும்?


கண்கள் எப்போது கசிந்து உருகும்?

பக்தி மலர்

“அறுபடை வீட்டினில் வாழ்கின்றவன்  வடிவேல் முருகன் அழகைப் பாடு” என்ற பல்லவியுடன் திரு. ஜேசுதாஸ் அவர்கள் தன்னுடைய அற்புதமான குரலால் நம்மை மெய்மறக்க்ச் செய்யும்படி பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/RqqI1AXDu5A
Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.5.13

அனுபவம்: எதெதற்கு எத்தனை முழம்?

 
அனுபவம்:  எதெதற்கு எத்தனை முழம்?

தாங்கள் அனுபவித்து உணர்ந்ததை நம் முன்னோர்கள் நச்’ சென்று நான்கு வரிப் பாடல்களாகத் தந்து விட்டுப்போய் இருக்கிறார்கள். அதில்தான் எத்தனை நீதி உள்ளது. இன்றைய அனுபவப் பகுதியை நீதி வெண்பா பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------

நீதி வெண்பா

"கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்;
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே--வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. "


எதெதற்கு எத்தனை தூரம் தள்ளி நிற்க வேண்டும் என்பது இப்பாட்லில் சிறப்பாகச் சொல்லப்பெற்றிருக்கிறது. ஆடு மாடு போன்று தலையில் கொம்புள்ள பிராணிகளிடம் அவற்றின் அருகில் நிற்காமல் ஐந்து முழ தூரம் தள்ளி நிற்க வேண்டும். குதிரையாக இருந்தால் பத்து முழ தூரம் தள்ளி நிற்க வேண்டும். ஒற்றை யானையாக இருந்தால் ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டும். அப்போதுதான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்

ஆனால் அடி, தடி, வம்பு, தும்பு செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள வீண் மனிதர்களிடமிருந்து (தீயவர்களிடம் இருந்து) அவர்களின் கண்ணில் படாத தூரத்தில் ஒதுங்கி நிற்பதே நன்மை பயக்கும்! அதுதான் நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல நெறியாகும்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.5.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 27

 

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 27

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 27

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!!
-----------------------------------------------------
உத்திராடம் 1ம் பாதம் (மட்டும்)
இது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சூரியனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. அஸ்விணி
2. பரணி
3. ரோகிணி
4. திருவாதிரை
5. பூசம்
6. ஆயில்யம்
7. மகம்
8. பூரம்
9. ஹஸ்தம்
10. சுவாதி
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. திருவோணம்
16. ச்தயம்
17. உத்திரட்டாதி
18. ரேவதி

ஆகிய 18 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். தனுசு ராசிக்குக் கடகம் எட்டாம் வீடு. கடகத்திற்கு தனுசு ஆறாம் வீடு.. பூச நட்சத்திரமும், ஆயில்ய நட்சத்திரம் கடகத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

தனுசு ராசிக்கு விருச்சிகம் 12ம் வீடு. விருச்சிகத்திற்கு இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே விருச்சிக ராசிக்கு உரிய அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் உத்திராடம் (1ம் பாதம்) ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம (average) பொருத்தம் உண்டு!.

சித்திரை, அவிட்டம் ஆகிய இரு நட்சத்திரங்களும் பொருந்தாது.

மிருகசீரிஷம் நடச்த்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

14.5.13

Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2

 

Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா? - பகுதி 2

Serial write up.தொடர் எ
ழுத்தாக்கம் - பகுதி இரண்டு

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

அதற்கான சுட்டி (Link): http://classroom2007.blogspot.in/2013/05/astrology-marathon-posts.html
----------------------------------------------------------------------------------------------------------------
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு. அதைத்தான் விதி என்போம் என்று முன் பதிவில் சொல்லியிருந்தேன்.

என் வாசகருக்குக் கொடுத்த வாக்குப்படி என் புத்தகத்தை 20 சிறுகதைகளின் முதல் தொகுப்பாக இரண்டுமாத காலத்திற்குள் அவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருந்தேன்.

அடுத்த நாளே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்

எனக்குத் தெரிந்த பதிப்பாளர்கள் (Book Publishers) இருவர் சென்னையில் இருந்தார்கள். புத்தகம் வெளியிடுவதில் எனக்கு அனுபவம் (அப்போது) இல்லையாதலால, ஒரு பதிப்பகத்தின் மூலம் புத்தகத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினேன்.

முதலில் ஒருவரிடம் என் புத்தகத்தை வெளியிடுவது குறித்துப் பேசினேன்.

அவர் சாதகமாகப் பேசவில்லை. தமிழில் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதைத் தெளிவு படுத்தினார். அத்துடன் கதை, கவிதைப் புத்தகங்களுக்கெல்லாம் அச்சடித்தால் வாங்க ஆள் இல்லை என்றும் கூறினார். ஒரு பிளேட் அடித்தால் (அதாவது ஆயிரம் பிரதிகள் பிரசுரித்தால்) அதை விற்பதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டு காலம் ஆகும் என்றார். புத்தகக் கண்காட்சிகளில் போட்டுத்தான் விற்க வேண்டும் என்றார். அத்துடன் சுஜாதா, பாலகுமாரன் போன்ற பிரபலங்களின் புத்தகங்கள் விற்கும் அளவில் மற்றவர்களுடையது ஐந்து சதவிகிதம் கூட விற்காது என்றும் கூறினார்.

“என்ன செய்யலாம்?” என்று கேட்டேன்

“நீங்கள் கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு, ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ என்னும் தலைப்பில் எழுதுங்கள். நிறைய விற்கும்!” என்றும் யோசனை சொன்னார்

“அள்ள அள்ளப் பணம் என்னும் தலைப்பிலா?” என்று கேட்டேன். மெல்ல புன்னகைத்தார்

அள்ள அள்ளப் பண்மெல்லாம் எல்லோருக்கும் வராது. அதற்கெல்லாம ஜாதக அமைப்பு வேண்டும். ஜாதகத்தில் இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும். இரண்டாம் வீடு அண்டா. பதினொன்றாம் வீடு பைப். பைப்பிலும் தொடர்ந்து தண்ணீர் வரவேண்டும். அண்டாவும் ஓட்டை இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் லக்கினாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும். சிலருக்கு இரண்டாம் வீட்டில் பரல்கள் அதிகமாக இருக்கும். கூடவே சனி அல்லது ராகு இரண்டாம் வீட்டில் டென்ட் அடித்துக் குடியிருப்பார்கள். அண்டா இருந்தும் அது ஓட்டை அண்டா. வரும் காசெல்லாம் பல வழிகளில் கரைந்து கொண்டிருக்கும்

“அள்ள அள்ளப் பணம் என்பதெல்லாம் பொய். தள்ளத் தள்ள விதி என்பதுதான் உண்மை! - ‘தள்ளத் தள்ள விதி!’  என்னும் தலைப்பில் எழுதித் தரட்டுமா என்று நகைச்சுவையுடன் கேட்டேன்.

அவர் உற்சாகமாகிவிட்டார். “ஆகா...எழுதிக்கொடுங்கள். ஜோதிடப் புத்தகங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது!” என்றார்.

“சரி, அதைப் பிறகு பார்ப்போம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்

“நீங்கள் பாதி, நாங்கள் பாதி என்ற கணக்கில் பணம் போட்டால், புத்தகம் சாத்தியப்படும்” என்றார்.

Type setting, page alignment, wrapper designing, bulk purchase of 16.8 map litho paper, off set printing, multicolor wrapper printing, glue binding' என்று பல வேலைகள் உள்ளன. உத்தேசமாக 35 முதல் 40 ஆயிரம்வரை செலவாகும் என்றார்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அடுத்த பதிப்பாளரும் அதையேதான் சொன்னார். பழநி அப்பன் இருக்கிறான் பார்த்துக்கொள்வோம். நாமே முழுப்பணததையும் போட்டு புத்தகத்தைத் தயார் செய்துகொள்வோம் என்று முடிவிற்கு வந்தேன். அத்துடன் உடனே புறப்பட்டுக் கோவைக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

செட்டியார் வந்த் அன்றுதான் எனக்கு சனி மகாதிசை முடிந்து, புதன் மகா திசை ஆரம்பமாகியிருந்தது. நான் சிம்ம லக்கினக்காரன் புதன் என் ஜாதகத்திற்கு இரண்டு மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஏழில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேர் பார்வையில் வைத்திருக்கிறான். நான் நினைத்தபடி எனக்குப் புதன் கை கொடுத்தான். ஒன்று அல்ல மூன்று பத்தகங்களை ஆறு மாத காலத்திற்குள் அடுததடுத்து வெளிக் கொணர்ந்தேன். செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் தொகுப்பு ஒன்று, தொகுப்பு இரண்டு, தொகுப்பு மூன்று என்று என்னுடைய மூன்று புத்த்கங்களும் வெளிவந்ததுடன், அத்தனையும் விற்றுத் தீர்ந்தன. (மூன்று தொகுப்புக்களிலும் சேர்த்து மொத்தம் 60 சிறுகதைகள். ஒவ்வொரு தொகுப்புமே 160 பக்கங்கள்.)

புத்தகங்களைப் பதிப்பதில் உள்ள நெளிவு சுளிவுகளை எல்லாம் புதன் எனக்குக் கற்றுக் கொடுத்தான். அத்துடன் வடிவமைக்கவும், அச்சிடவும் தேவையான நபர்களை எல்லாம் அவனே என் முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

புத்தகங்களுக்கு அணிந்துரை வாங்க வேண்டுமே!

என்னுடைய முதல் புத்தகத்திற்கு மனமுவந்து மூவர் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள். முன்னாள் உச்சநீதி மன்ற நீதியரசரும், அப்போது இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக (Chairman, Law Commission of India) இருந்தவருமான திருவாளர்.டாக்டர், ஜஸ்டிஸ். AR.லெட்சுமணன் அவர்கள்
சிறப்பானதொரு பாராட்டுரை நல்கினார்கள்.  சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் தலைவரான திருவாளர் ப.லெட்சுமணன் அவர்கள் (இவர் மத்திய நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்களின் மூத்த சகோதரர்) எனது கதைகளை அலசி நல்லதோர் அணிந்துரை நல்கினார்கள். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த திருவாளர். முனைவர், பேராசான், தமிழண்ணல் அவர்கள் சிறப்பானதொரு அணிந்துரை வழங்கினார்கள். மூவரின் அணிந்துரையுடன் புத்தகம் அழகு பெற்றது.

இரண்டாவது புத்தகத்திற்கு இயக்குனர் SP.முத்துராமன் அவர்களும், பெரும் புலவர்.திரு.ப.நமசிவாயம் அவர்களும், கவித்தென்றல் திரு.காசு. மணியன் அவர்களும் அணிந்துரை வழங்கினார்கள்

என்னுடைய மூன்றாவது புத்தகத்திற்கு தில்லியைத் தலைமைச் செயலகமாகக் கொண்டிருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் திரு. சோம வீரப்பன் அவர்கள் அணிந்துரை வழங்கினார் (இவர் இயக்குனர் வசந்த அவர்களின் மூத்த சகோதரர்)

மூன்று புத்தகங்களுமே காரைக்குடியில் உள்ள செல்வந்தர்கள் மூவரின் வீடுகளில் நடந்த மணி விழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் வெளியிடப் பெற்றன.

வெளியீடு என்றால் மண்டபத்தைப் பிடிக்க வேண்டும். அழைப்பிதழ்கள் அனுப்பி வாசகர்கள் மற்றும் நண்பரகளைச் சேர்க்க வேண்டும். தலைமை தாங்க ஒருவரையும், வெளியிட ஒருவரையும், முதல் பிரதியை வாங்கிக் கொள்ள ஒருவரையும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் பேச இருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். வந்திருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும்.

ஆனால் எனக்கு ஒரு பைசாக் கூட செலவு ஏற்படாமல் பழநிஅப்பன் அதற்கும் வழி வகுத்தான்.

எப்படி நடந்தது அது?

அடுத்த பதிவில் அதைச் சொல்கிறேன்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------------------------------------------
எனது முதல் புத்தகம்

எனது இரண்டாவது புத்தகம்

எனது மூன்றாவது புத்தகம்


எனது முதல் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய மேன் மக்கள்

எனது இரண்டாவது புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய மேன் மக்கள்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13.5.13

Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?

 
 Astrology.Popcorn Post அவள் ஏன் பறந்து போனாள்? அல்லது பிரிந்து போனாள்?

Popcorn Post.45

வாழ்க்கை வாழ்வதற்கே. திருமணம் மகிழ்ச்சிக்கே! அவதிக்கல்ல. சில திருமணங்கள் அவதியில் முடிந்துவிடுகின்றன. இப்போதெல்லாம் திருமணம் முறிந்து போய், தமபதிகள் குடும்பநல நீதி மன்றத்தை நாடி விவாகரத்துப் பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கே வருத்தமாக இருக்கும். நமக்கு இல்லாவிட்டாலும், சம்பந்தப் பட்டவர்களின் பெற்றோர்களுக்கு, உடன் பிறப்புக்களுக்கு இருக்குமா? இருக்காதா?

அதற்கு மன ரீதியாகப் பல காரணங்கள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பில்லாமல் இருப்பதும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுமே முக்கிய காரணமாகும். காதல் திருமணங்கள்கூட பிரிவில் முடிந்து விடுவதைப் பார்க்கிறோம். அவர்களிடம் முன்பிருந்த அன்பு (Love) திருமணத்திற்குப் பிறகு எங்கே போய் விட்டது?

எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் கிரகக்கோளாறுகள்தான்!

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரத்தை வைத்து வெறும் பத்துப் பொருத்தங்களைப் பார்ப்பதுடன் ஏழாம் வீட்டின் அமைப்பையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்
-----------------------------------------------------
ஏழாம் வீட்டுக்காரன் (நன்றாகக் கவனிக்கவும் ஏழாம் வீட்டுக்காரன்) பகை வீட்டில் போய் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசமடைந்திருந்தாலும், அல்லது தீயகிரகத்தின் நேரடிப் பார்வையில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் பெற்றிருந்தாலும் தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்படும்!

அதுபோல எழாம் வீட்டுக்காரன், 6ஆம் இடம், 8ஆம் இடம், 12ஆம் இடம் ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பதோடு கெட்டுப்போய் இருந்தாலும் தமபதிகளுக்குள் பிரிவு ஏற்படும். இங்கே கெட்டுப்போவது என்பது தீய கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருப்பது என்று வைத்துக்கொள்ளுங்கள்

ஏழாம் வீட்டில் தீய கிரகம் அமர்ந்திருந்தாலும் அல்லது ஏழாம் வீட்டைத் தீய கிரகம் பார்த்தாலும் திருமணம் பிரிவில்தான் முடியும்!

இருவருக்குள் ஒருவருக்கு புனர்பூ தோஷம் இருந்தாலும் பிரிவில்தான் முடியும்

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இது பாப்கார்ன் பொட்டலம். சுவை கருதி இதன் அளவு அவ்வளவுதான்!!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.5.13

சிவசண்முகனுக்கு ஈடு யாருமில்லை!

 
சிவசண்முகனுக்கு ஈடு யாருமில்லை!

பக்தி மலர்

“சுவாமிமலை எங்கள் சுவாமி மலை - சிவசண்முகனுக்கு ஈடு யாருமில்லை” என்ற பல்லவியுடன் துவங்கும் பக்திப்பாடல் ஒன்றை சூலமங்கலம் சகோதரிகள் பரவசத்துடன் பாடியுள்ளார்கள் அந்தப் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/mzqyuKFg5Og
Our sincere thanks to the person who uploaded the clipping in the net  வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9.5.13

Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?


Astrology, Marathon Posts அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?

Serial write up.தொடர் எழுத்தாக்கம் - பகுதி ஒன்று

இன்று உலகில் உள்ள மனிதர்களை இரண்டு பிரிவாக வகைப் படுத்தலாம். ஒன்று பணத்தை வைத்துக் கொண்டு என்ன்ன செய்வது என்று மலைத்துப் போய் நிற்கும் மனிதர்கள். அதாவது சேர்ந்த பணத்தை, குவிந்து கொண்டி ருக்கும் பணத்தை அல்லது கொட்டிக்கொண்டிருக்கும் பணத்தை எங்கே முதலீடு செய்யலாம் அல்லது பதுக்கலாம் அல்லது என்ன செய்தால் பாதுகாக்கலாம் என்று மண்டையைப் பியத்துக் கொண்டிருப்பவர்கள் முதல் வகை.

பணத்திற்கு, அதாவது தேவைப்படும் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப்போய் அல்லது கிறுகிறுத்துப்போய் செயலற்று நிற்கும் மனிதர்கள் மற்றொரு வகை.

இருவருக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்.

இரு பிரிவினருக்கும் ஜாதகப்படி என்ன வித்தியாசம்?

அதீத பணக்காரர் (Enormously Rich) பெரிய பணக்காரர் (Very rich) பணக்காரர் (rich) செள்கரியமானவர் (well to do) மேல்தட்டு மக்கள் (upper Middle class) நடுத்தர வர்க்கத்தினர் (Middle class) ஏழை (Poor) மிகவும் ஏழ்மையானவர் (Very poor) மற்றும் பரம ஏழை (extremely poor) என்று சற்று விரிவாக வகைப் படுத்தலாம்.

ஜாதகப்படி வகைப்படுத்தலாமா?

படுத்தலாம். முடிந்தவரை விவரித்துக் காட்டுகிறேன். சற்று நீண்ட கட்டுரை. ஒரே ஸ்ட்ரோக்கில் எழுதினால் திகட்டிவிடும். ஆகவே சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து எழுத உள்ளேன். அவைகள் வாரம் ஒரு பகுதியாக சில வாரங்களுக்கு வரும். பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். பிறகு அடுத்த தலைப்பில் வேறு ஒரு மாரத்தான் பதிவு வரும்
-------------------------------------------------------------------------
“வாத்தி (யார்), அது என்ன மாரத்தான் போஸ்ட் என்ற பெயர்?”

“பாப்கார்ன் பதிவுகளைப்போல, இதுவும் ஒருவகைப் பதிவு என்று வைத்துக்கொள் ராசா!. பொட்டலம் சிறிதாக இருக்கிறதே என்ற பேச்சிற்கெல்லாம் இதில் இடமிருகக்காது. செட்டிநாட்டு விருந்தைப்போல முழுச் சாப்பாடாக இருக்கும். சுவைத்துச் சாப்பிடு ராசா!:-)))
-------------------------------------------------------------------------
1
நான் தொழில்முறை எழுத்தாளன் அல்ல! முதலில் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவரின் வற்புறுத்தலுக்காக எழுதத் துவங்கினேன். அதை நான் விபத்து என்று வேடிக்கையாகச் சொல்வேன்.. அது நடந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, தொடர்ந்து பல குட்டிக்கதைகளைச் சொல்லிச் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தேன். வியந்து பாராட்டிய அவர், இத்தனை சுவாரசியமாகப் பேசுகிறீர்களே - எழுதுவீர்களா? என்றார். எழுதினால் இன்னும் அதிகமான சுவாரசியத்துடன் எழுதலாம் என்றேன்.

“இதுவரை ஏன் எழுதவில்லை?” என்றார்

“எழுதினால் அதைப் பிரசுரிப்பதற்கு ஆள் வேண்டுமே? குமுதம் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் எல்லாம், ஸ்டார் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டும்தான் பிரசுரிப்பார்கள். (இது அன்றைய நிலை) ஸ்டார் எழுத்தாளர் ஆவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆகவே எழுதவில்லை!” என்றேன்

“நாங்கள் குறும் பத்திரிக்கைக்காரர்கள்தான். எங்களுக்கு எழுதிக்கொடுங்கள். நாங்கள் பிரசுரிக்கிறோம்” என்று வாக்களித்தார். அப்படித்தான் துவங்கியது எனது எழுத்துப் பயணம். அந்தப் பத்திரிக்கையில் தொடர்ந்து இதுவரை 100ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், குட்டிக்கதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். ஏராளமான வாச்கர்களின் ஆதரவு இருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இதழின் ஆத்மார்ந்த வாசகரும், காரைக்குடியின் மூத்த குடிமக்களில் ஒருவருமான திரு.வேங்கடாசலம் செட்டியார் என்பவர் நேரில் வந்து என்னைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்தார்.

“உங்கள் கதைகளில் ஒரு இருபது கதைகளைப் பிரதி எடுத்துக் கொடுங்கள்” என்றார்

“என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முத்து விழா (எண்பதாம் ஆண்டு நிறைவு விழா) வரவுள்ளது. அந்த விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு, உங்கள் கதைகளை ஒரு புத்தகமாக்கிப் பரிசாகக் கொடுக்கலாம் என்றுள்ளேன்”

“நல்லது. அப்படியே செய்யுங்கள். ஆனால் நான் ஒரு புத்தக ரசிகன். என் புத்தகம் எப்படி வரவேண்டும் என்பதில் எனக்கு ஒரு கனவு உள்ளது. ஆகவே நானே ஏற்பாடு செய்து, அச்சிட்டுப் புத்தகமாகத் தருகிறேன். உங்களுக்கு எத்தனை பிரதிகள் வேண்டும்?” என்று கேட்டேன்

“650 பிரதிகளை வாங்கிக் கொள்கிறேன்” என்றார்

அது நல்ல எண்ணிக்கை. உள்ளம் உவகை கொண்டது. சரி தருகிறேன் என்று என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

அடுத்த நொடியே இரண்டு நூறு ரூபாய்க் கட்டுகளை எடுத்து என் மேஜை மேல்வைத்தார்.

“இது எதற்கு?” என்றேன்

“தமிழில் எழுதி எல்லாம் சம்பாதிக்க முடியாது. புத்தகங்களை அச்சிடும் வேலையை உங்கள் கைக்காசை வைத்துச் செய்து நீங்கள் சிரமப்பட வேண்டாம் இதை  முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தகம் அச்சாகி வந்தவுடன் மீதம் எவ்வளவு தரவேண்டும் என்று சொல்லுங்கள். தந்துவிடுகிறேன்”

என் கைகளைப் பிடித்துக் குலுக்கி விட்டு, ஆசி வழங்கிவிட்டு, அவர் புறப்பட்டுச் சென்று விட்டார்.

இளையராஜா அவர்களின் பின்னணி இசையுடன் அந்தக் கணம் நான் காற்றில் பறந்ததென்னவோ உண்மைதான்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வேறு. அதைத்தான் விதி என்போம்!

என்ன நடந்தது?

அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன். பொறுத்திருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8.5.13

கவிதை நயம்: நாளைய பெண்!

 
இன்றைய கவிதை நயம் பகுதியை நம் மதிப்பிற்கு உரிய கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய புதுக் கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து  மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
கவிதை நயம்: நாளைய பெண்!

முதல்முறை கேட்டவன் நீ
பலமுறை கேட்டவள் நான்

காதல் என்ற பொட்டலம் பிரித்து
ஹார்மோன் விருந்துண்டோம்

பிழைபோல ஒரு சரி
சரிபோல ஒரு பிழை
பரஸ்பரம் உடன்பட்டோம்!

அரையிருளில் சகிக்கலாம்
என்பதன்றி
அழகில்லை நீயும் நானும்
பாத்திரத்தின் அழகு பார்ப்பதில்லை தாகம்
என் நினைவில்
உன் முகம் அழிந்து போகலாம்

இரண்டை மறவேன்;
குழி பறிக்கும் எலி போலும் உன் சுறுசுறூப்பையும்
ஒவ்வொரு பரவசத்தின் உயரத்திலும்
கெட்ட வார்த்தையில் என்னைத் திட்டியதையும்

மற்றப்டி
பகலில் உடன்படாது உனக்கும் எனக்கும்

பிரசவச் செலவை நீ ஏற்பின்
பெற்றுத் தருவேன் உன் சதைப் பிம்பம்

சுமக்கவோ....
கலைக்கவோ.....
இ மெயில் அனுப்பு!

         - கவிஞர் வைரமுத்து 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.5.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 26

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 26

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 26

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!!
-----------------------------------------------------
பூராடம்

இது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. அஸ்விணி
2. மிருகசீரிஷம்
3. திருவாதிரை
4. புனர்பூசம்
5. ஆயில்யம்
6. மகம்
7. உத்திரம்
8. ஹஸ்தம்
9. சித்திரை
10. சுவாதி
11. விசாகம்
12. கேட்டை
13. மூலம்
14. உத்திராடம்
15. அவிட்டம்
16. ரேவதி

ஆகிய 16 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். தனுசு ராசிக்குக் கடகம் எட்டாம் வீடு. கடகத்திற்கு தனுசு ஆறாம் வீடு.. புனர்பூசம் 4ஆம் பாதமும், ஆயில்ய நட்சத்திரம் கடகத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

தனுசு ராசிக்கு விருச்சிகம் 12ம் வீடு. விருச்சிகத்திற்கு இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ஆம் பாதத்தையும், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூராடம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம (average) பொருத்தம் உண்டு!.

கார்த்திகை நட்சத்திரம் பொருந்தாது.

ரோகிணி, திருவோணம், ச்தயம், பூரட்டாதி ஆகிய 4 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவற்றையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++=====

6.5.13

Astrology.Popcorn Post கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

 
Astrology.Popcorn Post கூலி வேலைதான் செய்ய வேண்டுமா?

Popcorn Post No.44

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எது முக்கியம்?

நல்ல வேலை. நல்ல சம்பளம் என்பது முக்கியம். நல்ல வேலைக்கு உரிய வயதில் படித்து (முக்கியமாக தொழில் நுட்பக் கல்வி) பட்டம் பெற்றிருப்பதும்
முக்கியம்.

எல்லோருக்கும் அது அமைந்து விடுகிறதா என்ன?

ஜாதகத்தில் 4ஆம் வீடு நன்றாக இருந்தால்தான் படிப்பு அமையும். 4ஆம் அதிபதி கெட்டிருந்தால், லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் அமர்ந்திருந்தால், அத்துடன் 4ஆம் வீட்டில் கேது போன்ற தீய கிரகங்கள் குடியிருந்தால், படிப்பு பாழாகிவிடும்.

படிப்பு பாழானால் என்ன? வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து நல்லபடியாகப் பிழைக்க முடியாதா?

முடியும் அதற்குப் பணம் வேண்டுமே? காசு வேண்டுமே? 4ஆம் அதிபதி கெட்டுப் போனதைப்போல, ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்காரனும் கெட்டிருந்தால், என்ன செய்வது? காசு எங்கே இருக்கும்? காசு எப்ப்டி வரும்? இரண்டாம் அதிபதியும் 12ல் இருந்தால் அந்த நிலைமை உண்டாகும்.

யாரும் கை கொடுக்க மாட்டார்களா? லக்கினாதிபதி நன்றாக இருந்தால், அது நடக்கும். ஆனால் லக்கினாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியிருந்தால்,
உதவிக்கு ஒருத்தனும் வர மாட்டான். ஜாதகன் தன்னிச்சையாகத்தான் போராட வேண்டும்.

என்ன செய்வது? கூலி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா?

ஆமாம். எத்தனையோ மக்கள் கூலி வேலைகள் செய்து பிழைத்துக் கொண்டிருக்கவில்லையா? அதில்தான் எத்தனை விதமான வேலைகள் உள்ளன.

எங்கள் பகுதிக்கு வாருங்கள். திருப்பூர், சோமனூர், கோவை போன்ற ஊர்களில் ஆயிரக் கணக்கான பேர்கள் தினக்கூலி, வாரக்கூலி வேலை செய்து
கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவ்ரும்.

கூலி வேலை பார்த்துக் காலம் தள்ளுவது என்பது மிகவும் சிரமமானதுதான். ஆனால் வேறு நல்ல கிரகத்தின் திசை வரும்போது, நிலைமை மாறி விடும்.
கூலி வேலை செய்தவன், அதே வேலையைப் பத்து ஆட்களை வைத்துச் செய்து பொருள் ஈட்ட ஆரம்பித்து விடுவான்.

 நேர்மையாகச் செய்யும் எந்த வேலையும் கேவலமானதல்ல! படித்துவிட்டு BPO அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களைவிட Mason, carpenter, Electrician போன்ற வேலைகளைக் கூலி அடிப்படையில் செய்பவரகள் அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஜாதகத்தில் 2ஆம் அதிபதி, 4ஆம் அதிபதி, லக்கினாதிபதி ஆகிய மூவரும் இளம் வயதில் ஒரு starting கொடுப்பதற்கு முக்கியம். அதை மனதில் கொள்க!

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இது பாப்கார்ன் பொட்டலம் அதையும் மனதில் கொள்க!!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

3.5.13

எனக்குப் பல் முளைக்கு முன்னே என்ன தந்தான் அவன்?


எனக்குப் பல் முளைக்கு முன்னே என்ன தந்தான் அவன்?

பக்தி மலர்

“தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருள் உரைத்த” என்ற பல்லவியுடன் ராதா-ஜெயலெட்சுமி அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்று (படம்: ஆதிபராசக்தி) இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/_IODo8QwpXw
our sincere thanks to the person who uploaded the song in the netவாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.5.13

Astrology.Popcorn Post திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?

 

Astrology.Popcorn Post திருமணம் ஏன் தள்ளிக்கொண்டே போகிறது?

Popcorn Post No.43

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் ஆண், பெண் இருபாலருமே திருமணத்தைத் தள்ளிக்கொண்டே போகிறார்கள். ஒரு கால கட்டத்தில் அவர்கள் விரும்பினாலும் கூட திருமணம் அவர்களை விட்டுத் தள்ளியே நிற்கிறது.

என்ன காரணம்? எல்லாம் கிரகக் கோளாறுகள்தான்!

முன் காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், ஆணிற்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்தார்கள். இப்போது படிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவு அதாவது பணம் சேர்த்து செட்டிலாக வேண்டும் என்ற நினைப்பு போன்றவற்றால் பலருக்கும் முப்பது வயதைக் கடந்தும்கூடத் திருமணங்கள் கூடி வரவில்லை.

யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் ஆக வேண்டாமா?

ஜாதகப்படி தாமதமான திருமணங்களுக்கு என்ன காரணம் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் பலவீனமாக (வீக்காக) இருந்தால் திருமணம் தாமதமாகும். பலவீனம் என்பது நீசமாகி நிற்பதைக் குறிக்கும்.உதாரணத்திற்கு துலா லக்கின ஜாதகத்திற்கு ஏழாம் அதிபதி செவ்வாய். அவன் அந்த ஜாதகத்தில் நீசம் பெற்றுக் கடக ராசியில் அமர்ந்திருப்பது, தீமையானது. திருமணம் தாமதமாகும்.

2. அதுபோல களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் திருமணம் தாமதமாகும்

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகள் இரண்டை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

பாப்கார்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் கண்மணிகளா!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==

1.5.13

Short Story: சிறுகதை: தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

 
Short Story: சிறுகதை: தண்ணீரில் வந்த பணம் எப்படிப் போயிற்று?

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை இது. இன்று மாதத்தின் முதல் நாள். அதை ஒரு நல்ல கதையுடன் துவங்குவோம் என்று உங்களுக்காக அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள். கதையைப் பற்றிப் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லுங்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் ஊக்க மருந்து!

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கோமதிக்கு வயது 24. வாட்டசாட்டமானவள். உயரமானவள்.  பார்த்தவர்களைத் திரும்பப் பார்க்க வைக்கும் அழகு மிகுந்தவள்.

காலம்  எழுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். பொதிகைத் தென்றல் வருடிக்கொடுக்கும் ஒரு பசுமையான கிராமத்தில் அவளுடைய வீடு  இருந்தது. கோமதி நான்கு  பசுமாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.

அவளுடைய கணவன் சுகவாசி! இருந்த நான்கு வேலி நிலத்தையும் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, குத்தகைப் பணத்தில் சுகஜீவனம் நடத்தி வந்தான்.

கோமதி சுறுசுறுப்பானவள். சுயமாக எதாவது செய்ய வேண்டும். என்பதற்காக மாடுகள், மாட்டுத் தொழுவம், அதைச் சுத்தப் படுத்துதல், மாட்டுத் தீவனம், பால் கரத்தல், இத்யாதி  போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந் தாள்.

அதேபோல காலையில் இருபது லிட்டர் பால் - மாலையில்  இருபது லிட்டர் பால் எனப் பால்வியாபாரத்தையும் அவள்தான் செய்து வந்தாள். இரண்டு
பாத்திரங்களில் பால்.அதை  வைத்துத்தூக்க வசதியாக ஒரு கூடை.அந்தக் கூடையைத் தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள நகரத்திற்குக் கொண்டுபோய் வாடிக்கையாளர்கள்  வீடுகளில் அவள்தான் விற்றுவிட்டு வரவேண்டும். அதோடு அவள் செல்லும் வழியில் குறுக்கிடும் காட்டாற்றையும் கடந்து  சென்று வரவேண்டும்.

காட்டாற்றில் வருடம் முழுவதும் கணுக்கால் அளவு அல்லது முழங்கால் அளவிற்குத் தண்ணீர் ஓடும். .மழைக்காலங்களில் மட்டும் வெள்ளப் பெருக்கெடுக்கும்.

அப்போது  ஆற்றைக்  கடக்க நினைப்பது முடியாத காரியம்.

கோமதியும் அந்தக் காட்டாற்றில் தனது சிவந்த பாதங்களை முழுமையாக நனைத்துக் கொண்டே போய்வருவதில் ஒரு அலாதியான மகிழ்வு கொள்வாள்.

ஆரம்ப காலங்களில் அந்த வியாபரத்தை மிகவும் நாணயமாக செய்து வந்த கோமதி, பின்னாட்களில் காசின் மேல் கொண்ட ஆசையால், சம அளவு தண்ணீர் கலந்து விற்க  ஆரம்பித்தாள்.

அவள் புறப்படும் முன்பு, தங்கள் கிணற்று நீரைத் துணியால் வடிகட்டி, பாலில் சேர்ப்பதைப் பார்த்த, பக்கத்து வீட்டு ஆவுடையா பிள்ளை, அவளைக் கடிந்து
கொண்டார்.

"தாயீ, பாலில் எதையும் கலக்காதே! அது பாவச் செயல். எத்தனை பேர் உன்னை நம்பி தங்கள் குழந்தை குட்டிகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கி றார்கள். எதாவது நீர்த் தொற்று நோய் ஏற்பட்டால் அந்தப்பாவம் உன்னைத்தான் வந்து சேரும்"

கோமதி அதைக் கண்டு கொள்ளவில்லை!

எப்போது முன்னேறுவதாம்?

தண்ணீர் ஊற்றி விற்க ஆரம்பித்தவுடன் அவள் கையில் அபரிதமாகப் பணம் சேர ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் ஏது வங்கிச் சேமிப்புக் கணக்கு?

கோமதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நெல்லைக்குச் சென்று, அந்தப் பணத்தை நகையாக மாற்றிக் கொண்டு வந்து விடுவாள். வாங்கிய நகைகளை
வீட்டில் வைக்க  பயந்து  தானே அணிந்து கொண்டு திரிவாள். ஒற்றை வடம், இரட்டை வடம் என்று சங்கிலிகள். கையைக் கலகலக்கச் செய்யும் வளையல்கள் என்று ஒரு நகைக்  கடைப் பதுமை போல் ஆகிவிட்டாள். அவள் மேனியில் ஐம்பது பவுன்களுக்கு மேல் தங்கம் நகை வடிவில் குடி கொண்டது.

ஒரு நாள், நகருக்குச் சென்று பாலை விற்றுவிட்டு வந்தவள், ஆற்றின் அருகே வந்த பின்தான் கவனித்தாள். ஆற்றில்  அரை முழங்கால் அளவு நீர், சுர்'ரென்று
சத்தத்துடன்  ஓடிக்கொண்டிருந்தது. அவள் உணர்ந்து விட்டாள், இன்னும்  சில மணித்துளிகளில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கான  அடையாளம்   அது!.

வெள்ளம் வருவதற்குள் ஆற்றைக் கடந்து விடலாம் என்று பரபரப்பாக ஆற்றைக் கடக்க முனைந்தாள். ஆனால் எதிர்பாராதவிதமாக,  பாதி ஆற்றை  கடக்கும்  முன்பே, இடுப்பளவு உயர்ந்து வந்த   ஆற்று நீர் புரட்டிப் போட்டு விட்டது.  அவள் சுதாகரிக்கும் முன்பே, அடுத்தடுத்தடுத்த நொடிகளில் வந்த பெரு வெள்ளம் அவளோடு முழுமையாக விளையாட ஆரம்பித்தது.  ஈடு கொடுத்து அவளால் நீந்த முடியவில்லை. அதோடு பயத்தில் மயங்கி விட்டாள்

                 *******************************************************

இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். ஆற்றின் ஒரு பக்கக் கரையில் மயங்கிக் கிடந்த கோமதி நினைவு  திரும்பிவர கண் விழித்துப் பார்த்தாள். ஆற்றில்
வெள்ளம்  வடிந்திருந்தது.

தான் எங்கே கிடக்கிறோம் என்று பார்த்தாள். தான் செல்ல வேண்டிய பாதையில் இருந்து ஒரு மைல் தூரம் தள்ளி செட்டியார் தோப்பு அருகே இருப்பதை  உணர்ந்தாள்.

ஆற்று நீர் தன்னை உருட்டி கொண்டு வந்து அங்கே தள்ளிவிட்டுப் போயிருக்கிறது என்று எண்ணினாள். அதோடு தன்னை உயிரோடு விட்டு விட்டுப் போன ஆற்றை  நோக்கிக் கை எடுத்துக் கும்பிட்டாள்.

அதற்குப் பிறகுதான் அவள் கவனித்தாள். அடுத்த நொடி தீயை மிதித்தவள் போலாகிவிட்டாள்.

என்ன ஆகிவிட்டிருந்தது?

அவள் உடலை அலங்கரித்துக் கொண்டிருந்த நகைகளில் ஒன்று கூட இல்லை. எல்லாம் எங்கே போயிருக்கும்? அவள் மயங்கிக் கிடந்தபோது அந்த வழியாகச்

சென்ற  எவனோ  அத்தனை நகைகளையும் அடித்துக் கொண்டு போயிருந்தான்.

ஈரத்தில் உடலோடு உடலாக ஒட்டிக் கொண்டிருந்த தன்னுடைய ஆடைகளைக்கூடச் சரி செய்யும்  சிந்தை இன்றி அவள் 'ஓ' வென்று குரல் கொடுத்துத் துக்கத்தோடு கதறி  அழுக ஆரம்பித்தாள்.

பின்னே அழுகை வராதா என்ன?

இழந்தது, ஒரு பவுனா அல்லது இரண்டு பவுனா? மொத்தமாக ஐம்பது பவுன்களாயிற்றே!

அப்படியே உட்கார்ந்து ஒரு பத்து நிமிடமாவது அழுதிருப்பாள். அப்போதுதான் அது நடந்தது. யாரோ தன்னை நோக்கி நடந்து வரும் ஓசை  கேட்டு.
அழுகையுடனேயே  திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பக்கத்துவீட்டு மனிதர் ஆவுடையாபிள்ளை அவர்கள்தான் வந்து கொண்டிருந்தார். கையில் காலிக்கூடை. தன்னுடைய  தோட்டத்துக் காய்கறிகளை  விற்றுவிட்டுத் திரும்புகிறார் போலும்.

வந்தவர் கோமதியைப் பார்த்துக் கேட்டார்," என்ன தாயி, இங்கின உக்கார்ந்து அழுதுக்கிட்டிருக்கே?"

கோமதி நடந்ததைச் சொன்னாள்.

ஒரு குறுகுறுப்புடன், அவள் தன்னுடைய பெரிய விழிகளை ஏற்றி இறக்கி நகை பறிபோன கதையை விவரித்ததைக் கேட்டபின் ஆவுடையா பிள்ளை சொன்னார்:

"சரி, விடுதாயி! போன நகைகள் திரும்ப வரவா போகுது? வா, வீட்டுக்குப் போகலாம்"

"எப்படியண்ணே, உங்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? என் துக்கம் தெரியவில்லையா?"

"நீ விசனப்பட்டு என்ன பயன். எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. நீ பாலில் தண்ணீர் கலந்து விற்றபோது, அப்படி விற்காதே, அது பாவச் செயல் என்று சொன்னேன். நீ கேட்கவில்லை. பாவச் செயல் எல்லாமே தர்மத்திற்கு எதிரானது. தர்மதேவன் கண்டிப்பாகக் கணக்கைத் தீர்க்காமல் விடமாட்டான். உன் கணக்கை இப்போது  அவன் தீர்த்திருக்கிறான். தண்ணீரில் வந்த காசு தண்ணீரிலேயே போய்விட்டது. நீ உழைத்த உழைப்பிற்கு உன் உயிர் மிஞ்சியிருக்கிறது. வா போகலாம்!"

கோமதிக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது.

தர்மத்தின் மேன்மையை உணர்ந்த அவள், அன்றிலிருந்து, அநியாயமாகப் பொருள் ஈட்டும் ஆசையை விட்டொழித்தாள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++