மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 661 - 670. Show all posts
Showing posts with label Lessons 661 - 670. Show all posts

26.6.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 30

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 30

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 30

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
அவிட்ட நட்சத்திரம் 1 & 2ஆம் பாதங்கள் (மட்டும்) மகர ராசி.
இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. விசாகம்
5. மூலம்
6. திருவோணம்

ஆகிய 6 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரம் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அதை விலக்கி விடுவது நல்லது.

மகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ராசிக்கு உரிய மூலம், நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 4 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அவிட்டம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

அஸ்விணி, பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை,உத்திரம், கேட்டை, உத்திராடம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 12 நட்சத்திரங்களும் பொருந்தாது (கஷ்டம்டா சாமி)

ரோகிணி, திருவாதிரை, பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++======

25.6.13

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!


Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!

எதுவுமே நமக்கு உறுதுணையாக இருந்தால்தான், வாழ்க்கை சுவைக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்!

பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் இளம் வயது வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும்!
வாத்தியார் உறுதுணையாக இருந்து சொல்லிக்கொடுத்தால்தான் பாடங்கள் மண்டையில் ஏறும்!
மனைவி உறுதுணையாக இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
வேலைபார்க்கும் இடத்தில், மேலதிரிகாரி உறுதுணையாக இருந்தால்தான் வேலை செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்!!
நண்பன் உறுதுணையாக இருந்தால்தான் நட்பு நன்மையைக் கொடுக்கும். அல்லது மேன்மையைக் கொடுக்கும்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அதுபோல நீங்கள் இருக்கும் அதாவது வசிக்கும் ஊர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் வாழ்க்கை வளம் உடையதாக இருக்கும்,
மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று எண்கணிதம் சொல்கிறது.

வேலை வாய்ப்பின் காரணமாக நீங்கள் எந்த ஊரில் வேண்டுமென்றாலும் வசிக்க நேரலாம். அல்லது தொழில் காரணமாக அந்தத் தொழில் நடக்கக் கூடிய ஊரில் வசிக்க நேரலாம். ஊரை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன செய்வது? அல்லது வாழ்க்கையில் வளம்  பெறுவதற்கு என்ன செய்வது? வெளிநாட்டில் பணி செய்ய நேர்ந்தால் என்ன செய்வது?

பருத்தி வியாபாரம் செய்பவன் தேனி, ராஜபாளையம், மதுரை அல்லது கோயமுத்தூரில் இருந்தால்தான் அந்த வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்ய
முடியும். அதை விட்டுவிட்டு அறந்தாங்கி, புதுக்கோட்டை, பேராவூரணி, அல்லது தஞ்சாவூரில் இருந்து கொண்டு அந்தத் தொழிலை எப்படிச்
சிறப்பாகச் செய்ய முடியும்?

கணினி தொழில்நுட்பத்தில் பட்டம் வாங்கியவன், சென்னை, பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் வேலை கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லி,
வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரத்தில் வேலை தாருங்கள் என்று அந்த நிறுவனங்களில் கேட்க முடியுமா?

Microsoft,IBM, Oracle. HP, Symantec போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தால், இந்த ஊரில் வேலை போட்டுத் தாருங்கள் என்று  கேட்க முடியுமா? ஒரு தட்டுத் தட்டி அனுப்பிவிடமாட்டார்களா? அது  Delhi, Singapore, Washington, New Jersy அல்லது Bostan  என்று எந்த ஊராக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் சென்று, அந்த வேலையில் சேர வேண்டுமல்லவா? நம் விருப்பத்தை எல்லாம் கேட்க அங்கே யார் இருக்கிறார்கள்? நம் மாமா  இருக்கிறாரா அல்லது மாமனார் இருக்கிறாரா?

அதற்கு எண் கணிதம் ஒரு நல்ல பதிலைச் சொல்கிறது. அதைப் பின்னால் பார்ப்போம். முதலில் எந்த ஊர் உங்களுக்குச் சரிப்படும் என்பதை மட்டும்
இப்போது பார்ப்போம்.

முதலில் நீங்கள் பிறந்த ஊர் எப்படி என்று பார்ப்போம்! பிறந்த ஊரே சரிப்பட்டதுதானா என்று பார்ப்போம்.

“பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முடியுமா?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்!
--------------------------------------------------------------------------------------------
நாம் பிறந்த எண்தான் நமக்கு அதிர்ஷ்ட எண். முதலில் உங்கள் பிறந்த தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். 1 முதல் 9 வரை அதைச் சுருக்கி
ஒற்றைப் படை எண்ணாக மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு:

1, 10, 19, 28ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 1.
2, 11, 20, 29ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 2
3, 12, 21, 30ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 3
4, 13, 22. 31ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 4.
5, 14, 23ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 5.
6, 15, 24ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 6
7, 16, 25ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 7.
8, 17, 26ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 8
9, 18, 27ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 9.


நீங்கள் பிறந்த ஊர் சேலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எண்: SALEM = 3+1+3+5+4 = 16 = 7 அந்த ஊருக்கான எண் 7. அந்த ஊரில் பிறந்த ஒருவருடைய தேதியும் 7 என்று வைத்துக்கொள்ளுங்கள் (ஒரு பேச்சிற்குத்தான் சாமிகளா) அவருக்கு மதுரையும், கோயமுத்தூரும் சரிப்பட்டு வராது.

ஏன்? ஒன்றும், ஒன்பதும் ஏழாம் எண்ணிற்கு உடன்படாத எண்கள்

Madurai = 4+1+4+6+2+1+1= 19 = 1
Coimbatore = 3+7+1+4+2+1+4+7+2+5 = 36 = 9


நமது மாநிலத்தின் தலைநகரம் ஆரம்ப காலத்தில் சென்னப்ப நாயக்கர் என்ற தனிமனிதருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆமாம் மொத்த இடமும்
அவருக்குச் சொந்தமானதாக இருந்தது.

The name Chennai is a shortened form of Chennaipattanam, the name of the town that grew around Fort St. George, which was built by the English in 1639. Chennapattanam was named after the Telugu ruler Damarla Chennappa Nayakudu, Nayaka of Kalahasthi and Vandavasi, father ofDamarla Venkatadri Nayakudu, from whom the English acquired the town in 1639. The first official use of the name Chennai is said to be in a sale deed, dated 8 August 1639, to Francis Day of the East India Company.

The city's colonial name, Madras, is believed to have been derived from Madraspattinam, a fishing village north of Fort St. George. However, it is uncertain whether the name 'Madraspattinam' was in use before European influence.

After the British gained possession of the area in the 17th century, the two towns, Madraspattinam and Chennapattinam, were merged, and the British referred to the united town as Madrasapattinam. The state government officially changed the name to Chennai in 1996, at a time when many Indian cities were being renamed. However, the name Madras continues to be occasionally used for the city as well as for places named after the city, such as the University of Madras and The Indian Institute of Technology, Madras.(தகவல்: விக்கி மஹாராஜா)

1996ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் என்ற பெயர்தான் நிலவியது.

MADRAS = 4+1+4+2+1+3 = 15 = 6
CHENNAI = 3+5+5+5+5+1+1 = 25 = 7


ஆறு என்ன எண் சுக்கிரனின் எண். அந்த ஆறு எண்ணில் பெயர் இருந்தவரை சென்னை கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தது. 7 என்று மாறிய பிறகு அதே கொடி பறந்து கொண்டிருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இரண்டு பெயர்கள் உள்ளதே? எதை எடுத்துக்கொள்வது? இரண்டு பெண்டாட்டிக்காரன்கதைதான். 1996ஆம் அண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் மூத்த தாரத்தின் பிள்ளைகள். அவர்கள் MADRAS என்பதையே எடுத்துக்கொள்ளலாம்!:-)))
----------------------------------------------------------------------------------------------
எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்துக்கள்:

1 = A, I, J, Y, Q
2 = B, K, R
3 =  C, G, L, S
4 = D, M, T
5 = E, H, N, X
6 = U, V, W
7 = O, Z
8 = F, P

----------------------
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5
F = 8 G = 3, H = 5, I = 1, J = 1
K = 2, L = 3, M = 4, N = 5,  O = 7
P = 8, Q = 1, R = 2, S = 3 T = 4
U = 6. V = 6, W = 6, X = 5, Y = 1, Z = 7

------------------------------------------------



-----------------------------------------------------------------------------------------------
1. நீங்கள் முதலில் உங்கள் பிறந்த ஊருக்கும் உங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பாருங்கள்.
2. அடுத்து வசிக்கும் ஊருக்குப் பாருங்கள்.
3. அது பொருந்தவில்லை என்றால், எண் கணிதம் மாற்று வழியைச் சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லித் தருகிறேன்.
4. அடுத்து ஜோதிடம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? அதையும் எழுதுகிறேன்.
.
பொறுத்திருங்கள்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.6.13

Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?

 

Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரனுக்குத் தெரியாதா?

எட்டாம் எண் பலரையும் பயம் கொள்ள வைக்கும் எண்ணாகும். ஆனால் எட்டில் ஏராளமான நன்மைகளும் உண்டு.

இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் Facebookகை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் முதன் எழுத்து எண் கணிதத்தின்படி எட்டிற்கு
உரிய எண்ணாகும். Facebook என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களும் எட்டு ஆகும். அதன், அதாவது அந்தச் சொல்லின் கூட்டு எண்ணும் எட்டு
ஆகும்

Facebook = F (8) + A (1) + C (3) + E (5) + B (2) + O (7) + O (7) + K (2) = 35
இந்த 35ன் தனி எண் = 35 = 3 +5 + 8

எட்டு எண்பது வலிமை மிக்க எண்ணாகும் (Powerful Number)

Bombay = B (2) + O (7) + M (4) + B (2) + A (1) + Y (1) = 17 = 8

1995ஆம் ஆண்டு அதன் பெயர் மாற்றப்பெற்ற பிறகு அதன் அதிஷ்டங்களும் எட்டிலிருந்து வேறு ஒரு எண்ணுக்குப் போனது!

Mumbai = M (4) + U (6^) + M (4) + B (2) +A (1) + I (1) = 18

எழுதும்போது எல்லா எண்களும் மேலே துவங்கி கீழே முடியும். எட்டு மட்டும் மேலே துவங்கி மீண்டும் மேலேயே முடியும். நாம் பயணத்தை எங்கே
துவங்கினோமோ அங்கேயே அந்தப் பயணம் முடியும் என்பதை அது குறிக்கும்!

முகம் பார்க்கும் கண்ணாடியில் மற்ற எண்களெல்லாம் மாற்றத்துடன் தெரியும். எட்டு மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தெரியும்!

எட்டைக் குறுக்கு வசத்தில் இரண்டாக உடைத்தால் இரண்டு ஜீரோக்கள் (சைபர்கள்) கிடைக்கும். வாழ்க்கை இறுதியில் ஜீரோ என்பதை அது
உணர்த்தும். எண் எட்டு சனியினுடைய எண். அவன் ஆயுள்காரகன் அதை மனதில் வையுங்கள்.

எட்டாம் எண் பல தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், மகான்களுடன் தொடர்புள்ள எண்ணாகும்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாவர். 4 +4 = 8 அவருடைய பெயருக்கான எழுத்துக்களின் மதிப்பும்
எட்டுதான். Barack Obama = 212132 72141 = 26 = 8

நட்சத்திர வரிசையில் பார்த்தீர்கள் என்றால், சனி பகவானுடைய நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவைகளின் வரிசை எண் 8, 17, 26 ஆகும் அவைகளின் தனி எண்ணும் எட்டுதான்

மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206 = 8

மனித மூளையின் ஆற்றலுக்கு வேலை கொடுக்கும் செஸ் ஆட்டத்தில் உள்ள காய்களின் எண்ணிக்கை எட்டு. பெரிய காய்கள் +  சிப்பாய்கள் எட்டு
ஆட்டத்தின் தளத்திலும் எட்டு கட்டங்கள், எட்டு வரிசைகள்

ஒரு காகிதத்தை எட்டு தடவைக்கு மேல் உங்களால் மடிக்க முடியாது. வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்

உலக அளவில் ஆங்கில மொழி ஏன் இத்தனை பிரபலம்?

அந்த மொழியில் உள்ள எழுத்துக்கள் 26 = 8

ஆங்கில மொழியில் உள்ள  F & P ஆகிய இரண்டு எழுத்துக்களுக்கும் உரிய எண் 8. அந்த எழுத்துக்களுடன் துவங்கும் பல சொற்கள் நம் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டதாக இருக்கும். நம்மைக் கலக்குவதாக இருக்கும்!

Fail, Fate, False, Fire, Fatal, Fear, Fever, Fight, Foreign, Frustration, Fracture, Future (worry of future), Freedom, Fall,Fast,Famine,Fibroid, etc.

Pass, Pacemaker(for heart),  Poverty,Pathetic, Pain,Panic, Proud, Perversion, Philosophy, Police, Poor, Prison,Poison,Phishing, Prohibition,Patient (in hospital) and Punishment etc.


இந்திய சுதந்திரம் அடைந்த தினம்

15-8-1947 = 35 = 8
அன்றைய நட்சத்திரம் பூசம் = வரிசையில் எட்டாவது நட்சத்திரம் = அத்துடன் அது சனி பகவானின் நட்சத்திரம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது அஷ்டமி திதியன்று. அது திதிகளின் வரிசையில் எட்டாவது திதியாகும். அத்துடன் அவர் தனது பேற்றோர்களுக்கு
எட்டாவது குழந்தையாவார்.

கவியரசர் கண்ணதாசனும் தன்னுடைய பேற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாவார்

இந்த ஆக்கம், இணையத்தில் முன்பு படித்த கட்டுரை ஒன்றுடன் என் சொந்த சரக்கையும் கலந்து கொடுத்துள்ளதாகும்
----------------------------------------
சரி, தலைப்பிற்கு வருகிறேன்

யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?

தெரியும். எண் கணிதத்தில் அது விவரமாகத் தெரியாது. ஆனால் ஜோதிடத்தில் அது பளிச்’சென்று தெரியும்

அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”வாத்தி (யார்) பாடத்திற்கும் முகப்பில் உள்ள படத்திற்கு என்ன சம்பந்தம்?”

”கண்ணா, அவர் திருநீறு பூசியிருக்கும் அழகைப் பார்த்தாயா? அதை உனக்குச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் அந்தப் படம். திருநீற்றை அப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

18.6.13

Astrology: எத்தனை வில்லன்களப்பா சாமி?

 

Astrology: எத்தனை வில்லன்களப்பா சாமி?

கல்கி அவர்கள் எழுதிய அற்புதமான பொன்னியின் செல்வன் தொடர்கதையில், அவருடைய மொழியாற்றல், கதை சொல்லும் உத்தி, கதாபாத்திரங்களைச் சுட்டிக் காட்டும் நேர்த்தி என்று படிப்பவர்களை வியக்கவைக்கும் பல விஷயங்கள் உள்ளன.

கதையில் வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சேந்தன்அமுதன், என்று பல நாயகர்கள். குந்தவை, வானதி, பூங்குழலி, நந்தினி என்று பல நாயகிகள். பழு வேட்டரையர்கள், ரவிதாசன் போன்ற வில்லர்கள். அத்தனை பேர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கதையை அனாசயமாகக் கொண்டு செல்வார்.

அதுபோல ஜோதிடத்தில் பல நாயகர்களும் உண்டு. வில்லர்களும் உண்டு.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற நாயகர்கள் உள்ளார்கள். சனி, ராகு,கேது, மாந்தி, குளிகன் போன்ற வில்லர்களும் உள்ளார்கள்.

வில்லர்களில் முதல் மூவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் திரை மறைவிற்குப் பின் நின்று போட்டுத் தள்ளும் வில்லன்களான மாந்தி, மற்றும் குளிகனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது.

இருவருமே கொடியவர்கள்.

சிலர், மாந்தியும் குளிகனும் வெவ்வேறானவர்கள் என்பது தெரியாமல் இருவரும் ஒருவரே என்பார்கள்.

அது உண்மையல்ல!

இருவரும் தனித்தனியானவர்கள். ஜாதகனைப் போட்டுத்தள்ளுவதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை!

அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

8.6.2013 அன்றைய கிரக நிலைப் படம் கிழே உள்ளது.


மாந்தியும் , குளிகனும் வெவ்வேறு பாகைகளில் இருப்பதைப் பாருங்கள். ஜகன்னாத ஹோரா மென்பொருளைத் தட்டினால், எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும், அவர்களின் நிலைப்பாடு தெரியவரும் (ஆன்லைனில் அது இலவச மென்பொருள்)

பண்டைய ஜோதிட நூல்கள் குளிகனை சனியினுடைய புத்திரன் என்றும், மாந்தியை எமனுடைய புத்திரன் என்று கூறுகின்றன. இருவரில் மாந்தி மிகவும் மோசமானவன்.பயம் கொள்ளவைப்பவன். இருக்கும் இடத்தின் பலன்களை ஜாதகனுக்குக் கிடைக்கவிடாமல் தட்டிப் பறிப்பவன். அழித்துவிடக்கூடியவன்

ஆகவே மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தின் பாவபலன் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும். அத்துடன் மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதியின் திசைப் பலனும் ஜாதகனுக்குக் கேடுகளையே செய்யும்.

முற்காலத்தில் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழர்கள் பலரின் ஜாதகத்தில் மாந்தியைப் பற்றியை ஜாதக அமைப்பே குறிப்பிடப் பெற்றிருக்காது. காரணம் தமிழ் நாட்டில் வாழ்ந்த பல ஜோதிடர்கள் அக்காலத்தில், மாந்தியையும், அஹ்டகவர்க்கத்தையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாததே காரணம்.

உங்கள் ஜாதகத்தை எடுத்துப்பாருங்கள். அதில் மாந்தி, குளிகன், அஷ்டகவர்க்கம் ஆகிய மூன்றும் இல்லை என்றால் புதிதாக ஒன்றைக் கணித்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்!

சரி, மாந்தி & குளிகனால் ஏற்படும் கேடுகள் என்னென்ன? அது பெரிய பாடம். பின் ஒரு நாள் அதை எழுதுகிறேன்.தற்சமயம் நேரம் இல்லை. இங்கே அல்ல! இங்கே எழுதினால் கஷ்டப்பட்டு என் மொழியில் என் நடையில் உதாரணங்களுடன் எழுதுவதை லவட்டிக்கொண்டு போய் தங்கள் வலைத்தளங்களில் தாங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொண்டு விடுகிறார்கள். அநியாயத்திற்குத் திருட்டுப்போகின்றன! ஜோதிடம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை எழுத ஆசைப் படுகிறவர்கள், தங்கள் நடையில் எழுதட்டும். கட் & பேஸ்ட் கலாச்சாரம் எதற்கு?

ஆகவே அதை மேல்நிலை வகுப்பில் எழுதுவதாக உள்ளேன். பின்னால் அது புத்தக வடிவில் வரும்போது அனைவரும் படித்துப் பயனுறலாம். மகிழலாம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.6.13

Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?

 

Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?

’பணம் எதை எதைக் கொடுக்கும்?’ என்று கேட்டால் சாமானியனின் பதில், அதாவது சராசரி மனிதனின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

”அம்மாவைத்தவிர, பெற்ற தாயைத் தவிர, விலைமதிப்பில்லாத தாயன்பைத் தவிர எல்லாவற்றையும் கொடுக்கும்” என்பான்

உண்மையான பதில் அதுவல்ல!

’பணம் எதை எதைக் கொடுக்காது?’ என்று கேட்டால் பலவிதமான பதில்கள் கிடைக்கும்.

பணம் நல்ல, அன்பான மனைவியைக் கொடுக்குமா? அல்லது நல்ல, புரிந்து நடக்கக்கூடிய கணவனைக் கொடுக்குமா? கொடுக்காது. தவறிக் கிடைத்தால் அது பணத்தால் வந்ததாக இருக்காது. ஜாதகப் பலனால் வந்ததாக மட்டுமே இருக்கும்!

இரண்டாம் வீடும், ஏழாம் வீடும், அதன் அதிபதிகளும், காரகர்களும் நன்றாக இருந்தால் மட்டுமே அது கிடைக்கும்!

பணம் நல்ல பிள்ளைகளைக் கொடுக்குமா? நல்ல பெயரை வாங்கிக்கொடுக்ககூடிய, பெற்றோர் சொன்னால் கேட்கக்கூடிய, பெற்றோரை மதித்து நடக்கக்கூடிய பிள்ளைகளைக் கொடுக்குமா? கொடுக்காது. ஒருவனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு அம்சமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
பணத்தால் மட்டுமே அது நடக்காது.

பணம் கல்வியைக் கொடுக்குமா? ப்ளஸ் டூவில் 98% கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்பைக் கொடுக்குமா?
பணம் அறிவைக்கொடுக்குமா?
பணம் புத்திசாலித்தனத்தைக் கொடுக்குமா?
பணம் நகைச்சுவை உணர்வை, எப்போதும் கலகலப்பாக இருக்கும் உணர்வைக் கொடுக்குமா?
பணம் நம் மீது பாசத்தோடு, பரிவோடு இருக்கும் உறவினர்களைக்கொடுக்குமா?
பணம் நல்ல தொழிலை, நமக்கு வசப்படும் தொழிலைக் கொடுக்குமா?
பணம் விசுவாசமுள்ள நல்ல வேலைக்காரர்களைக் கொடுக்குமா?
பணம் அடுத்தவரை சரிபண்ணிக்கொண்டு செல்லும் நல்ல குணத்தைக் கொடுக்குமா?
பணம் முழு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
பணம் எப்போதும் நிம்மதியாக இருக்கும் நிலையைக் கொடுக்குமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்

மேலே குறிபிட்டுள்ள எதையும் பணம் கொடுக்காது!
---------------------------------------------------------------------
இன்றைய பொருள் சார்ந்த உலகில் அநேக மக்கள், பொருள் இருந்தால், அதாவது பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

ஆனால் உலக அனுபவம் அதை வேறு விதமாகச் சொல்கிறது. மாற்றிச் சொல்கிறது.

மகான்கள் மற்றும் வாழ்வியல் நிபுணர்கள், பணத்தைத் தேடி ஓடாதே என்று சொல்கிறார்கள். உனது சக்தி, முயற்சி, செயல், மற்றும் நேரம் முழுவதையும் பணத்தைத் தேடுவதில் செலவழிக்காதே என்று சொல்கிறார்கள்.

மற்ற எல்லா செயல்களையும்விட பணத்தேடல், பணத்தைச் சம்பாதிப்பதற்கான அல்லது பணத்தைக் கைப்பற்றுவதற்கான  வழிமுறைகள் உங்களை அதிகமான அதர்மங்களை, பாவங்களைச் செய்யத் தூண்டுகிறது, செய்ய வைக்கிறது என்கிறார்கள்.

உங்களுடைய மென்மையான/மேன்மையான குணங்களையும், நல்ல கொள்கைகளையும் அது அழித்துவிடக்கூடும்.

எத்தனை சொத்துச் சண்டைகள்? குவித்து வைத்த அல்லது இம்மி இம்மியாகச் சேர்த்துவைத்த சொத்துக்களுக்காக எத்தனை விதமான சண்டை சச்சரவுகள். எத்தனை விரோதங்கள்? எத்தனை மனப் போராட்டங்கள்?

அப்பன் மகனுக்குள், அண்ணன் தம்பிகளுக்குள், அல்லது உடன் பிறந்த சகோதரிகளுடன், சுருக்கமாகச் சொன்னால் குடும்பத்திற்குள் எத்தனை சண்டைகள்? எத்தனை சதிகள்? வெட்டு, குத்துக்கள்?

கட்டித்தழுவ வேண்டிய உறவுகள் எல்லாம் வெட்டி வீசப்படும் நிலைமை. கொட்டி கவிழ்க்கப்படும் நிலைமை!

அனுதினமும் செய்திதாள்களில் எத்தனை செய்திகள் வருகின்றன!

வயல் வரப்பை ஒரு அடி அகலப்படுத்தியதற்காக அண்ணனின் கையை வெட்டிய தம்பியை நாம் பார்க்கவில்லையா?

சொத்துத் தகறாரில் அப்பனைப் போட்டுத் தள்ளிய மகனைப் பற்றி நாம் கேள்விப்படவில்லையா?

பணத்திற்காக உயிர் நண்பனுக்குத் துரோகம் செய்யும் ஆசாமிகளை நாம் பார்க்கவில்லையா?

பணத்தால் சந்தோஷம் என்ற குழந்தை மட்டும் உருவாகாது. துன்பம் என்ற தீராத கஷ்டம் என்ற பிணியுள்ள, முடமான குழந்தையும் பிறக்கும். அதை மனதில் வையுங்கள்.

மற்ற செயல்களால், மற்ற விஷயங்களால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பணத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி குறைவானதே என்று ஒரு ஆய்வு சொல்கின்றது.

நமது அத்தியாவசியத் தேவைகளுக்குப் போதுமான அளவில் கிடைக்கின்ற பணமே நமக்குப் போதுமானதாகும். அதுவே நமக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும். அந்த அளவைத் தாண்டிக் கிடைக்கின்ற பணம் மகிழ்ச்சியைக் கொடுக்காது!

ஓரளவு பணம் இருந்தால் அது உன்னைக் காப்பாற்றும். அதிகமான பணம் இருந்தால் அதை நீ காப்பாற்ற வேண்டும்!
அதீதமான பணம் கிடைக்கும்போது, அதைப் பாதுகாப்பது, தகுந்த இடத்தில் அதை முதலீடு செய்வது போன்ற பிரச்சினைகள் தலை தூக்கும்.

சாதாரண மக்கள் தங்கள் தேவைக்கு உரிய பணம் கிடைக்காததால் மகிழ்ச்சியாக இல்லை.

பணம் இருப்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. இல்லாதவனும் மகிழ்ச்சியாக இல்லை!

மொத்தத்தில் இரண்டுவிதமான மனிதர்கள்தான் உலகில் உள்ளார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் ஒருவகை. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் இன்னொருவகை!

தர்ம சிந்தனையும், நியாய உணர்வும், இறையுணர்வும்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுதான் நிதர்சனமான உண்மை!

அதைத்தான் நமது வேதங்களும், புராணங்களும் சொல்கின்றன!

அதை உணருங்கள். அது மட்டும் போதும், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்!
-----------------------------------------
A successful person is one who can lay a firm foundation with the bricks that others throw at him or her. - David Brinkley

பிருஹத் பாரசாரா ஹோரா என்னும் பழமையான ஜோதிட நூல் என்ன சொல்கிறது?

1. பதினொன்றாம் வீடு மிகவும் நன்றாக இருந்தால் நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.(an auspicious 11th house makes a person happy at all times)
2. அதேபோல 11ஆம் வீட்டுடன் 9ஆம் வீடும் நன்றாக இருந்தால் எல்லாமே மகிழ்ச்சியுடையதாக அமையும். மனைவி, மக்கள், வாழ்க்கை என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாமுமே சூப்பராக இருக்கும். 9ஆம் வீடு என்பது 11ஆம் வீட்டிற்குப் பதினொன்றாம் வீடாகும். அதையும் மனதில் வையுங்கள்!  9th house (11th from 11th house).

இது மேலநிலை வகுப்புப் பாடம் (http://classroom2013.com) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.6.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 29

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 29

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 29

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
திருவோண நட்சத்திரம்.

நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு’ என்ற அடைமொழியுடன் கூடியதாமும். ஒன்று திருவாதிரை (இது சிவபெருமானின் நட்சத்திரம்) இரண்டு திருவோணம் (இது பெருமாளீன் நட்சத்திரம்)

இது மகர ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சந்திரனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. அஸ்விணி
2. பரணி
3. மிருகசீர்ஷம்
4. புனர்பூசம்
5. ஆயில்யம்
6. மகம்
7. பூரம்
8. உத்திரம்
9. சித்திரை
10. விசாகம்
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. உத்திராடம்
16. அவிட்டம்
17. பூரட்டாதி
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரமும், பூரநட்சத்திரமும் உத்திரம் முதல் பாதமும் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

மகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ராசிக்கு உரிய மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் திருவோணம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருத்தம் உண்டு!.

பூசம்  பொருந்தாது.

கார்த்திகை நட்சத்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.6.13

Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?

 

Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?

பயிற்சிப்பாடம்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றால் வருத்தம் அதிகமாகும். இரண்டு மடங்காகும். கைக்கு எட்டவில்லை என்றால் சும்மா இருப்போம். கைக்கு எட்டிவிட்டு, கையில் கிடைத்துவிட்டு, அது வாய்க்குள் சேரவில்லை என்றால் வருத்தம் அதிகமாகுமா இல்லையா?

சிலருக்கு ஜாதகப்படி அப்படியாகிவிடும்.

பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகத்தின் மகாதிசை மிகவும் நன்மையானதாக இருக்கும் என்பது முக்கியவிதி. ஆனால் ஒரு ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிர்கத்தின் மகாதிசை நடந்தும் அது பயனளிக்கவில்லை.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.




1. சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 4ல். கேந்திரத்தில். நல்லபடியாக உள்ளார்
2. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் திரிகோணத்தில் (9ல்) ஆட்சி பலத்துடன் உள்ளார்.
3. அத்துடன் அவருடைய பார்வை கல்விகாரகன் புதனின் மேல் விழுகிறது.

ஜாதகன் பூரட்டாதி நட்சத்திரக்காரர். ஆரம்பதிசையான குரு திசையில் இருப்பு 9 ஆண்டுகள். அதற்குப் பிறகு 19ஆண்டுகாலம் சனி மகாதிசை. அது 28 வயதுவரை நீடித்தது. சனி திசை ஜாதகனுக்குச் சரியான பலனைக் கொடுக்கவில்லை. இளம் வயதில் தொடங்கிய சனி திசை ஜாதகனை அலைக்கழித்து, ஜாதகனின் படிப்பைக் கெடுத்துவிட்டது.

காரணம் என்ன?

1. சனி கேதுவின் கூட்டணியால் கெட்டிருக்கிறது.
2. அத்துடன் சனியின் மேல் எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் விழவில்லை.
3. தசாநாதனாகிய சனி 4ஆம் வீட்டையோ அல்லது அதன் அதிபதியையோ பார்க்காமல் விலகி/ஒதுங்கி இருக்கிறது.
4. கல்வி ஸ்தானமாகிய 4ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய், அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார்

இந்த 4 காரணங்களால் ஜாதகனால் படிக்க முடியாமல் போய்விட்டது.

ஆகவே நல்ல தசாபுத்தி நடந்து பயன் இல்லை. பயன் அளிக்கும்  வகையில் தசாநாதன் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++

4.6.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 31

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே
பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது
பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
அவிட்ட நட்சத்திரம் 3 & 4ஆம் பாதங்கள் (மட்டும்) கும்ப ராசி.
இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. மகம்
2. விசாகம்
3. மூலம்
4. திருவோணம்

ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) பொருந்துபவற்றில்  எதுவும் இல்லை. கும்ப ராசிக்கு  மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே மகர  ராசிக்கு திருவோண நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அவிட்டம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

அஸ்விணி, பரணி, சித்திரை,உத்திரம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தாது.

கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் கேட்டை, பூராடம், சதயம் ஆகிய 12 நட்சத்திரங்களும்
மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று
வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29.5.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 28

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 28

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 28

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!!
-----------------------------------------------------
உத்திராடம் 2, 3 & 4ம் பாதங்கள்

இது மகர ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சூரியனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. அஸ்விணி
2. பரணி
3. ரோகிணி
4. மிருகசீர்ஷம்
5. திருவாதிரை
6. பூசம்
7. ஆயில்யம்
8. மகம்
9. பூரம்
10. ஹஸ்தம்
11. சுவாதி
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரமும், பூரநட்சத்திரமும் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

மகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ராசிக்கு உரிய மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் உத்திராடம் (2, 3 & 4ம் பாதங்கள்) ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம (average) பொருத்தம் உண்டு!.

அவிட்டம்  பொருந்தாது.

சித்திரை நடசத்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

28.5.13

Astrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்?



Astrology.Popcorn Post கைக்காசு எப்போது கரையும்?
 
Popcorn Post No.45


முதலில் கரை என்றால் என்னவென்று பார்ப்போம். கரை என்ற தமிழ்ச்சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உண்டு

1. காகம் கரைவதும் கரைதான். அதாவது காகம் 'காகா’ என்று ஒலி எழுப்புவதைக் காகம் கரைகிறது என்று சொல்லுவார்கள்

2, நீரைத் தேக்கிப் பிடித்து நிறுத்தும் மேடான மண் பகுதிக்கு (ஏரி, குளங்களில்) கரை என்றுதான் சொல்லுவார்கள். ஏரிக்கரை

3. ஒரு திடப்பொருளை நீரில் கரைத்து திரவ நிலைக்குக் கொண்டு வருவதையும் (சோப்பை இப்படிக் கரைத்து விட்டாயே) கரைத்தல் என்று சொல்லுவார்கள்

4. வீணாகக் காசைச் செல்வழிப்பதையும், இப்படிக் காசைக் கரைக்கிறாயே என்றுதான் சொல்லுவார்கள்

5. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை நீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைக்கும் கரைத்தல் என்றுதான் பெயர். இந்தக் கட்டியைக் கரைப்பதற்கு எவ்வளவோ செலவு செய்துவிட்டேன்; ஆனால் கட்டி கரைந்த பாடாக இல்லை என்று சிலர் அங்கலாய்ப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் கரைத்தலில்தான் வரும்.

6. கற்பூரம் போன்ற பொருட்கள் காற்றில் ஆவியாகி ஒன்றுமில்லாமல் போகும் நிலைக்கும் கரைந்துபோய்விட்டது என்ற சொல்தான் பயன்படுத்தப்பெறும்

7. இருப்பில் உள்ள சேமிப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக செலவழிந்து கொண்டிருந்தாலும்’ கைக்காசு கரைந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லுவார்கள்

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். ஜாதப்படி இப்படிக் கரைக்கும் பணி ஒருவனுக்கு எப்போது அமுலுக்கு வரும்? அதாவது எப்போது நடக்கும்?

பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் மகாதிசையில் அது நடக்கும். அது எந்தவிதமான கிரகமாக இருந்தாலும் அதை நடத்திவைக்கும்.
சனி, ராகு அல்லது கேது போன்ற கிரகங்களின் மகாதிசை என்றால் இந்தக் கரைக்கும் பணி ஜரூராக நடக்கும். சுபக்கிரகங்களின் மகாதிசை என்றால் சற்று மெதுவாக நடக்கும். ஆனால் முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். மொத்தத்தில் கரைத்துவிட்டுப் போய்விடும்!

Any planet in the 12th house would make its dasa expense oriented!

அடடே, பணம் மட்டும்தான் கரையுமா?

இல்லை. கை இருப்பை, சேமிப்பைக் காலி செய்துவிட்டுப் போவதோடு, வீடு வாசல் இருப்பவர்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை விற்க வைத்து, விற்று வரும் பணத்தையும், வைத்துக்கொள்ளவிடாமல் காலி செய்து விட்டுப் போய்விடும்

அதேபோல, அந்தத் தசாநாதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் மிகவும் குறைந்த பரல்களுடன் இருந்தால், ஜாதகனின் ஆரோக்கியத்தைக் கரைத்துப் படுக்க வைத்துவிடும். ஜாதகன் வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருக்க நேரிடும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமான விதிகளை மட்டும் கூறியுள்ளேன். மற்றவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

இதற்குப் பரிகாரம் உண்டா? பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!