மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.19

ஏடாகூடமான பள்ளிக்கூடம்!!!!


ஏடாகூடமான பள்ளிக்கூடம்!!!!

ஒருபள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூடமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்...😂
😂முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...
😂சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி...😂

😂"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு" "பழனியப்பா",
😂அடுத்தப் பையன எழுப்பி ,
"உன் பேர் சொல்லு" "மாரி"
"உன் அப்பா பேரு" "மாரியப்பா..." 😂
😂அவருக்கு கொஞ்சம் டவுட் வருது😦...
😂இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி...
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு"
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு😒...
😂அடுத்தப் பையன எழுப்பினாரு...
😂"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு..." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்😍)
😂"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு"
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி...😈😈😈
😂அடுத்த பையன எழுப்பி,
"உன் அப்பா பேர சொல்லு..."
"டேவிட்.."
"உன் பேரு...?"
"டேவிட்சன்" கொலவெறி ஆயிட்டாரு😬😬😬,
😂கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
😂"உன் தாத்தா பேர சொல்லு...😣"
"சார்... அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு😬😠,
"அப்பாவோட தாத்தா...😤."ன்னாரு
"வீரமணி",
"சரி அப்பா பேரு?",
"வீ.ரமணி",
"உன் பேரு?😕",
"வீ.ர.மணி...😊"
அப்புறம் என்ன... !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லையாம்... 😂😂😂
==========================================================================
2

1.  சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "காதலர் தினம்"
2. அன்பான பொண்ணை திருமணம் செய்தால் தினமும் "அன்னையர் தினம்"
3. தவறான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "தியாகிகள் தினம்"
4. சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "உழைப்பாளர் தினம்"
5. பணக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "புத்தாண்டு தினம்"
6. அதி புத்திசாலி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "முட்டாள்தினம்"
7. லூசுப் பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "குழந்தைகள் தினம்"
8. கோபக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "அடிமைகள் தினம்"
9. திருமணமே செய்யாமல் இருந்தால் தினமும் "சுதந்திர தினம்"

=========================================================
படித்து, நகைத்துப் பதிவிட்டது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.9.19

Astrology: Quiz: புதிர்: 27-9-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 27-9-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து " ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண  நட்சத்திரக்காரர். 30 வயது வரை அவர் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தன் நண்பர்களுடன்
சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார், முறையான கல்வியும் இல்லை. முறைப்படி ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் 31 வயதிற்கு மேல் எல்லாம் சரியானது. அது வேற கதை. ஆனால் இளம்
வயதில் அவர் தன் பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருந்த நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்"
என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் சிம்ம லக்கினக்காரர். 13 வயது முதல் 31 வயது வரை
அவருக்கு ராகு மகா திசை நடந்தது. அந்த தசா காலத்தில் ஸ்திரமான வாழக்கை இருக்காதே சாமி. லக்கினத்திலும் 7ம் வீட்டிலும் ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்.தறுதலையான மனப் பாங்கிற்கும் ஒரு வேலையிலும் நிலைத்து நில்லாமல் போனதற்கும் இது தான் காரணம்,

ஆனால் அடுத்து 32வது வயதில் துவங்கிய குரு மகா திசை அவருக்கு
நல்ல வேலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் ரிப்பேராக இருந்த அவருடைய பெயரையும் பழுது பார்த்துக்கொடுத்தது. 3ம் வீட்டில் குரு பகவானும் 10ம் அதிபதி  சுக்கிரனும் ஒன்றாக இருப்பதைப் பாருங்கள்.
அவரை நல்வழிப் படுத்தியதில் இந்த இருவருக்குமே சம பங்கு உண்டு.

இந்தப் புதிரில் 7 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 4-10-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
////////Blogger R.S.GANESH KUMAR said...
மதிப்பிற்குரிய அய்யா ,
நான் தங்களின் புது மாணவன்.எனக்கு தெரிந்தவற்றை இங்கே பகிர்கிறேன். ஏதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டி மன்னிக்கவும்.
திருவோணம் என்பது சந்திரனின் நட்சத்திரம். ஜாதகர் அந்த சந்திரா திசையில் பிறந்து 6 ஆண்டு 5 மாதம் 4 நாட்கள் வரை வாழ்ந்திருக்கிறார்.
அந்த சந்திரன் 6 வது வீட்டில் இருந்தாலும் தனது 7 ஆம் பார்வையால்
( 12 ஆம் வீட்டை ) கடக வீட்டை பார்க்கிறார். அந்த சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்திருந்தால் நிச்சயம் நல்ல விரயத்தைத்தான் கொடுத்திருக்கும். மாறாக தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் பார்வை விழக்கூடிய இடம் என்பது தனது சொந்த வீடான கடகத்தில் என்பதால்
அவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. அதற்கு பிறகு செவ்வாய் திசை 7 வருடம். அந்த குஜ பகவான் 4ஆம் வீட்டிற்கு உரியவர். அவர் லக்கினத்தில் கேதுவுடன் இருக்கிறார். அனால் அவர் பார்வை 4ஆம் வீட்டில் இருக்கிறது. அடுத்து
ஜாதகருக்கு ராகு திசை 18 வருடம். ஆனால் ராகு 7 ஆம் வீட்டில் குரு பார்வையில் இருக்கிறது. ஆக மொத்தம் (சந்திரன்+செவ்வாய்+ராகு) (6 . 5 + 7 + 18 ) 31 . 5 வருடம் ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். 4ஆம் வீட்டில் அந்த வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் பார்வை உள்ளது. அதே போல 7 ஆம் வீட்டில் குரு
பார்வை இருக்கிறது. நிச்சயம் இந்த வீடுகள் எல்லாம் நன்றாக இருப்பது
போல எனக்கு தோன்றுகிறது. பின் எவ்வாறு 31 வயது வரை வாழ்க்கை சரி இல்லாமல் போனது என்று எனக்கு புரியவில்லை தயவு செய்து விளக்கவும்.
Friday, September 27, 2019 8:05:00 AM
------------------------------------------------------------
2
Blogger Unknown said...
வணக்கம் ஐயா. 12ம் அதிபதி 6ல் மறைவது நன்மை.ஆனாலும் நீசம் பெற்ற சனியின் வீட்டில் அவரது பார்வையில் இருந்ததால் மேலும் பன்னிரெண்டாம் இடத்தையும் பார்ப்பதால். குழந்தை பருவத்திலும் நோய் (இடது கண் அல்லது காது) சம்பந்தப்பட்ட தொல்லை இருந்திருக்கும். அடுத்து 7 வருட செவ்வாய் யோகாதிபதியின் தசை ஆனால் கேதுவுடன் சேர்ந்து லக்னத்திலேயே இருப்பதால், மந்தநிலை, பொறுப்பற்ற தன்மை,கோவம்,மாறுபட்ட எண்ணம் மற்றும் செயல் இவைகளால் படிப்பும் தடைபட்டிருக்கம். அடுத்த ராகு 18 வருடம் 7ஆம் இடத்தில் நீசம் பெற்ற சனியின் வீட்டில், படிப்பை முற்றிலும்
கெடுத்து கூடா நட்பு கூட வைத்திருப்பார். அதற்கு அடுத்து வந்த குரு பகவான் 5ஆம் அதிபதி ஆட்சி பலம் பெற்ற சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பதாலும் மேலும் 7ல் உள்ள ராகு 9ல் உள்ள சனி ஐ பார்பதாலும் முற்றிலும் நிலமை நல்ல
அமைப்பிற்கு திரும்பி இருக்கும்.சிம்ம லக்னத்திற்கு சனி நீசம் பெற்று இருப்பதால் நல்ல குடும்ப வாழ்க்கையும் அமைந்திருக்கும். அடுத்து வரும் அவரது திசையும் நன்மையே செய்யும்.நன்றி
Friday, September 27, 2019 1:15:00 PM
----------------------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற புதிருக்கான காரணங்கள்
1 சிம்ம லக்கினம் , திருவோண நக்ஷத்திரம் , மகர ராசி ஜாதகருக்கு , இளம் வயதில் தன் பெற்றோருக்கு பிரச்சினையாக இருந்ததற்கு , லக்கின அதிபதி மற்றும் லக்கினத்தில் அமர்ந்த கிரகங்களை பார்க்க வேண்டும். இதில் லக்கினத்தில் கேதுவுடன் செவ்வாய் அமர்ந்து , யாருக்கும் அடங்காத தன்மையை கொடுத்தது.
2 மேலும் லக்கினத்தை ராகு நேரடி பார்வையில் உள்ளதால் நிலைமை இன்னும் கோளாறானது. இது ஜாதகரின் ராகு தசையில் அதாவது 13 வயது முதல் ஆரம்பமானது. அதனால் ஜாதகர் யாருக்கும் அடங்காமல் தன் போக்கிற்கு அலைந்தார்.
3 . இந்த நிலை பெற்றதற்கு ராகு தசையே முக்கிய காரணமாகும். மேலும் ராசி நாதன் சனி ராசி கட்டத்தில் நீச ஸ்தானத்தில் ஒன்பதில் இருந்ததும், மற்றும் நவாம்ச கட்டத்தில் எட்டாம் இடத்தில் ராகு வுடன் அமர்ந்து இந்த நிலை
ஏற்பட செய்தார்.
4 பின்னர் வந்த குரு தசையில் இது சரியானது. ஏனென்றால் சிம்ம லக்கினத்திற்கு குரு உகந்த சுப கிரகமாகும்.
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
Friday, September 27, 2019 2:40:00 PM
-------------------------------------------------------
4
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 லக்னதிபதி சூரியன் இரண்டில் லாபத்தில்
2 .இரண்டாம் அதிபதி புதன் உச்சம் பெற்று புதஆதித்திய யோகத்துடன்
3 .லக்கினம் ராகுவின் நேரடி பார்வையில்
4 .கர்மகாரகன் சனி நீசம் தொழிலிஸ்தான அதிபதி சுக்கிரனும் பத்தாம் இடத்திற்கு 6/8 நிலை
5 ஆகவே இளம் வயதில் வந்த திசைகள் (ராகுதிசை )வரை
ஜாதகருக்கு பலனளிக்கவில்லை
6 .அடுத்து வந்த குரு திசையில் குரு தன் ௫,7 ஆம் பார்வையால் சனி,ராகுவை கட்டுபடுத்தி ஜாதகர் க்கு நல்ல தொழிலை அமைத்து கொடுத்து ஜாதகரின் வாழ்வை மேம்படுத்தி இருக்கிறார்
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, September 27, 2019 4:29:00 PM
------------------------------------------------
5
Blogger seethalrajan said...
வணக்கம். கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் இளமை பருவத்தில் 13-31 வயது
வரை ராகு தசை நடைபெற்றது. அவர் நல்ல பலன் செய்ய மாட்டார். ராகு நல்லது செய்யும் இடம் ஆன மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம்
இடத்தில் ராகு இல்லை.
ராகு பச்ஜொந்தி கிரகம், தான் அமர்ந்த வீட்டு அதிபதி போல் மாறி பலன் அளிப்பார். அவர் அமர்ந்த வீட்டு அதிபதி சனி நீச்சம். 3,6,11 லும் ராகு இல்லை. செவ்வாய் பார்வையில் ராசியில், நவாம்சத்தில் சனி, செவ்வாய் கூட்டு. ஆதலால் நல்லது செய்ய வில்லை. குரு சுக்கிரன் சேர்ந்து இருப்பதால் நல்ல வழி மாறினார். நன்றி.
Saturday, September 28, 2019 1:44:00 PM
------------------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 அக்டோபர் 1970 விடியற்காலை 2 மணி 49 நிமிடம் போலப் பிறந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
திருவோணம் நட்சத்திரக் காரர்களைச் சாதாரணமாக பொது மனிதர்களாகவே அடையாளம் காண்கிறார்கள்.வீட்டிற்கு அதிகம் உதவியில்லை என்பார்கள்.
ஜாதகருக்கு கும்பத்தில் ராகு.குருவின் பார்வை செவ்வாயின் பார்வை.கும்பம் ஜாதகரின் 7ம் இடம். ஜாதகரின் 14 வயதில் ராகு தசா ஆரம்பித்தது.7ம் இடத்துக்கான சனைச்சரன் 9ல் அமர்ந்து நீசம் அடைந்தார்.எனவே ராகு
சனைச்சரனைப்போல தன் தசாவில் களத்திர  லாபங்களைக்கொடுத்திருப்பார். அது ராகு என்பதால் முறையான வழிகள் இல்லாமலும் இருந்திருக்கலாம். ராகுதசா 32 வயதில் முடிந்து குரு தசா ஆரம்பித்தவுடன் ஜாதகர் தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டார்.
Saturday, September 28, 2019 4:05:00 PM
----------------------------------------------------------------
7
Blogger Ram Venkat said...
"ஜோதிடப் புதிர்: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்கு காரணம் என்ன ?"
சிம்ம லக்கினம், மகர ராசி ஜாதகர். இளம் வயதில் அவர் தன் பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருந்த நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகருக்கு 6 1/2 வருடம் சந்திர தசை குழந்தைப் பருவத்தில் கழிந்தது. அதன் பின் வந்த 7 வருட‌ செவ்வாய் தசையில் படிப்பு ஏறவில்லை. 13 வயதிற்கு பின் ராகு தசை தொடங்கி 30 வயது வரை நடந்துள்ளது. ராகு தசையில் வந்த 7 1/2 சனியும் சேர்ந்து கொண்டதால், ஜாதகர் பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
முறைப்படி ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. கர்மகாரகன்
சனி நீசம் வேறு. பிறகு வந்த குரு தசையில் மேற்கண்ட நிலை மாறி எல்லாம் சீரானது.
இரா.வெங்கடேஷ்.
Saturday, September 28, 2019 7:54:00 PM
======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.19

Astrology: Quiz: புதிர்: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்குக் காரணம் என்ன ?

Astrology: Quiz: புதிர்: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்குக் காரணம் என்ன ?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண  நட்சத்திரக்காரர். 30 வயது வரை அவர் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார், முறையான கல்வியும் இல்லை. முறைப்படி ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் 31 வயதிற்கு மேல் எல்லாம் சரியானது. அது வேற கதை. ஆனால் இளம் வயதில் அவர் தன் பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருந்த நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 29-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.9.19

மகாளய அமாவாசையின் மேன்மை!!!!


மகாளய அமாவாசையின் மேன்மை!!!!

மகாளய அமாவாசை வழிபாட்டால் பித்ருக்களின் ஆசி கிடைக்க பெறும்!!!

மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே
மகாளய அமாவாசை எனப்படும்.

பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். பித்துரு வழிபாடு இல்லற வாழ்க்கைக்கு
பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெற்று சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோரால் பின்பற்றப்
பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் நம்மை சபித்து விடுவார்கள்

என்பதும், அதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை
அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகமாக கூறப்படுகிறது.

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை.

வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு (கடலுக்கு) சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்வது நல்லது.

நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமையபெறுகிறது. அதிலே பிதுர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் சிரமமாக பார்க்காமல் சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதுர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

இந்த பதினைந்து திதி நாட்களில் நம் மூதாதையர் இவ்வுலகை நீத்த நாளில் அவர்களுக்காக தர்ப்பணம் என்ற நீத்தார் கடனை நிறைவேற்றி, மானசீகமாக அவர்களை தம் இல்லத்திற்கு வரவழைத்து, சாதம் இட்டு, அவர்கள்
உயிரோடு இருக்கும்போது அவரைப் பராமரித்த பாவனையில் நடந்துகொள்வது இந்த சம்பிரதாயத்தின் நோக்கமாக உள்ளது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் உச்சரிக்கப்படும் மந்திரம்:

’ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உஸ்ரீஷ்டைஹி குஸௌதஹைஹி
த்ருப்யத் த்ருப்யத த்ருப்யத்

அவர்களுடைய ஆன்மா எல்லாம் புண்ணியம் அடைய இந்த அமாவாசை நாளில் இந்த தர்ப்பையோடு கல்ந்த நீரை அவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று பொருள்.

இந்த ஆண்டு 28-9-2019 சனிக்கிழமை அன்று மகாளய அமாவாசை
----------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.19

சாகாவரம் பெற்ற கண்ணதாசன்


சாகாவரம் பெற்ற கண்ணதாசன்

ஒரு பாடலின் பல்லவி இல்லாமலேயே சரணமோ அல்லது சரணத்தின் ஒரு வரியே கூட அந்த பாட்டை நம் மன சிந்தனையில் ஓட  விடக்கூடிய வலிமையை பெற்றவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. அப்படி அவர் எழுதிய சில பாடல்கள் கீழே தொகுக்க பட்டுள்ளது.

அவ்வகை பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்த எம். எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்  டி எம். செளந்திர ராஜன்,  பி.சுசீலா , பி.பி. சீனிவாஸ், சிவாஜி,எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர் ,ஜேசுதாஸ் , எஸ். பி. பாலசுப்ரமணியம் ,சீர்காழி ஐயா மற்றும் இதில் விடுபட்ட ஏனைய கலைஞர்களும் இவருடைய பாடல்களுக்கு பெருமை சேர்த்தனர்.

அதில் சில படப் பாடல்களின் சரணங்கள் மட்டும் உங்கள் ரசனைக்கு.

"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா"

"தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்"

"கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா "

"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா"

"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்"

"காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்"

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்"

"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? "

"கன்னிக் காய் ஆசைக் காய்
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக் காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ "

"செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா ||

"நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே"

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் "

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா"

"வாழ்க்கை வழியிலா ?
ஒரு மங்கையின் ஒளியிலா ?
ஊரிலா ? நாட்டிலா ?ஆனந்தம் வீட்டிலா ?
அவள் நெஞ்சின் ஏட்டிலா ?
சொந்தம் இருளிலா ?
ஒரு பூவையின் அருளிலா ?
எண்ணிலா ?ஆசைகள் என்னிலா ?
கொண்டது ஏன் ?
அதைச் சொல்வாய் வெண்ணிலா "

பிரமிப்பாக இருக்கிறதல்லவா?
------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.9.19

சுஜாதாவின் எழுத்துத் திறமை!


சுஜாதாவின் எழுத்துத் திறமை!

இதை படித்த பிறகு கண்ணீர் வந்தால் அது மகா பெரியவா மகிமை மற்றும் சுஜாதாவின் எழுத்து திறமை.

'தேடல்' - சுஜாதா

போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது.

“சரியா இருபது வருஷம் ஆச்சு இந்த மெட்ராசை விட்டு” “நிறைய மாறுதல் இருக்கும்” என்றாள் பாகீரதி.

“கடல் மட்டும்தான் மாறலை !”

பாகீரதி தன் கைப்பெட்டியைத் திறந்து, சின்னச் சின்ன பல வர்ணக் குப்பிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறந்து கவிழ்த்து கிடைத்த ரோஜா நிறக் குழம்பை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தன் வயசைப் பத்து நிமிஷம் குறைத்துக் கொண்டாள். விமானத்தில் குப்பென்ற வாசனை சூழ்ந்தது.

“சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போறதுக்கு மேக் அப்பா ?”

“மேக் அப் இல்லை வெய்யில் தாங்காது என் ஸ்கின்.”

“மே ஐ ஹேவ் யுர் அட்டென்ஷன் ப்ளீஸ்…!” என்று மண்டை மேல் இருந்த ஸ்பீக்கர் கமறியது. அதற்கப்புறம் புரியவில்லை.

“உலகத்திலேயே மோசமான ஏர்லைன்னு வருஷா வருஷம் இந்தியன் ஏர்லைன்சுக்குத்தான் பரிசு தரணும்.”

பாகீரதியின் ஆழ்ந்த மௌனத்தைத் தொடர்ந்து, “உலகத்திலேயே மோசமானதொரு ஏர்போர்ட் பாம்பே” என்றார்.

பாகீ அவரைக் கடைக் கண்ணால் பார்த்து, “உங்க இந்தியா தூஷணையை ஆரம்பிச்சுட்டீங்களா ?”

“உண்மையைத்தானே சொல்றேன். இந்த நாடு உருப்படுமா சொல்லு. ஏர்போர்ட்டில் குடிக்க ஒரு வாய் தண்ணி கிடையாது. உட்கார ஒரு நாற்காலி கிடையாது. அமெரிக்கால Confirm பண்ண டிக்கெட் இங்க மெசேஜ் வரலைங்கிறான். ப்ளேன் மூணு மணி நேரம் லேட்டு. எதுக்காக இந்த நாட்டுக்கு ஏரோப்ளேன் ?”

பாகீரதி பேசாமல் இருந்தாள். இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னால் இன்னும் பெரிசாக வாக்குவாதம் வளரும்.

“காஞ்சீபுரத்தில் ஓட்டல் ஏதாவது உண்டா இல்லை வயக்காட்டு பக்கம் ஒதுங்கலாமா ?”

பேசவில்லை.

“அலுமினிய சொம்போட ?”

பேசவில்லை.

விமானம் தரை தொட்டு ஒரு தடவை குதித்தது.

“என்ன மோசமான லாண்டிங் !”

விமானம் ஊர்ந்தது.

“உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோ. எதுக்காக என்னை இழுக்கறே !”

“நீங்களும் பார்க்கணும்.”

“எதுக்கு நான் ? எனக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாதே. நான் ஒரு ஃபிசிக்ஸ் ஆசாமி — அக்னாஸ்டிக் !”

பாகீ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமின்றி, “இன்னிக்கு என்ன கிழமை ?” என்றாள்.

“இந்தியாவுக்கு வந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குக் காத்திருந்து கிழமையே மறந்து போச்சு….”

“எத்தனை நேரம்?இவங்களுக்கெல்லாம் எதுக்கு ஏரோ பிரிட்ஜ்?”

பிரயாணிகள் இறங்க அவசரப்பட்டு முன் வாசலில் நெருக்கினார்கள்.

“மூணு மணி நேரம் உட்கார்ந்திருந்தாங்க. மூணு நிமிஷம் கதவு திறக்கப் பொறுமை இல்லை ........ இந்தியன்ஸ்!”

“நீங்க இந்தியன் இல்லையா ?” என்று கேட்க விருப்பமின்றி பாகீ பேச்சை மாற்றினாள்.

“நீங்க முதல்ல அமெரிக்கா புறப்படறப்ப எத்தனை டாலர் வச்சிருந்தீங்க ?”

“ரெண்டு டாலர்! ஜஸ்ட் டூ டாலர்ஸ் !”

அது அவருடைய செல்ல ‘டாபிக்.’ எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் !

“கென்னடில வந்து இறங்கறேன், டெலிபோன் செய்யக் காசு இல்லை. ‘கலெக்ட் கால்’ னா என்னன்னே தெரியாது. அப்ப அங்க ஒரு….”

அவர் வாழ்க்கையில் முன்னேறிய கதையை 27வது தடவை கேட்கத் தயாரானாள்.

சீட்டிலேயே உட்கார்ந்திருந்து, எல்லோரும் இறங்கியதுமே அவர்கள் வெளியே வந்து பாலம் கடக்கும் போது, உஷ்ணம் அவர்களைத் தாக்கி, ஐம்பது அடி அவர்களுடனேயே கூட வந்து ‘ஏசி’க்குக் கொண்டு வந்துவிட்டது.

‘எஸ்கலேட்டர் அவுட் ஆப் ஆர்டர் ‘ என்று போர்டைப் பார்த்து சிவசங்கரன் நக்கலாகச் சிரித்தார்.

“இருக்கிற ஏழை ஜனங்களுக்கு உணவும் உடையும் கொடுத்து, பாப்புலேஷனை கண்ட்ரோல் பண்ணா போதும். மத்த எதுவும் வேண்டாம் இந்தியாவுக்கு. சாட்டிலைட் எதுக்கு ? எதுக்காக மிசைல் ப்ரோக்ராம் ?” என்று மூன்று வரியில் இந்தியாவுக்கு விமோசனம் சொன்னார்.

பாகீ மௌனமாகவே வந்தாள். அமெரிக்காவில் இருந்தால் விவாதித்திருப்பாள்…. ‘நாமெல்லாம் இதைச் சொல்வது ரொம்பச் சுலபம், நடைமுறை தான் கஷ்டம்’ என்று.

இங்கே பாகீரதி அவருடன் எந்த விதத்திலும் வாதாட விரும்பவில்லை, காஞ்சிபுரம் போய்ச் சேரும் வரையாவது!

கீழே ஹாலில் இறங்கினதும் கைவண்டி எடுத்துக் கொண்டார். அதன் சக்கரங்கள் சண்டி பண்ண, “சேச்சே ! ஒரு கைவண்டி சரியா பண்றாங்களா பாரு இந்தியாவிலே …”

கன்வேயரில் சுயம்வர ராஜகுமாரி போல் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அவர்கள் பெட்டியை, ஒரு சிப்பந்தி அதன் பாகேஜ் சீட்டைத் தப்பாகப் படித்து, எடுத்து வைத்துக் கொள்ள, சிவசங்கரன் “எக்ஸ்க்யூஸ்மி, எக்ஸ்க்யூஸ்மி” என்று ஓடிப் போய் அவன் கையைப் பிடித்துத் தடுக்க, அந்தச் சிப்பந்தி. “பொட்டி உன்னுதுன்னா சொல்லு – மேல கை போடாதே ! நீ கை வச்சா நான் கை வைக்க எத்தினி நேரமாகும் ? நீ சீமான்னா உங்க ஊரோட வச்சுக்க — இந்தப் பேட்டைல நான் சீமான் “ என்றான்.

“வாட் வாட் ?”

அவர் திரும்பிய போது முகம் சிவந்திருந்தது. கைகள் உதர ஸார்பிட்ரேட் மாத்திரை எடுத்து அடக்கிக் கொண்டார்.

“ஃபூல்ஸ் ! ஃபிலிஸ்டைன்ஸ்…” பாகீரதியின் மேல் பாய்ந்தார்.

“எல்லாம் உன்னால தான். எதுக்காக என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தறே? நான்தான் இந்தியா வர மாட்டேன்; பிரின்ஸ்டன்லயே இருக்கேன்; எனக்குப் பிடிக்காது இதெல்லாம்னு சொன்னேனில்லையா? எதுக்காக என்னை டார்ச்சர் பண்றே ? நான் எதுக்காக மெட்ராஸ் ஏர்போர்ட்டில ஒரு பொறுக்கி கிட்ட கெட்ட வார்த்தை கேட்கணும் ?”

“டேய் ...... யார்ரா பொறுக்கி! ஒரு உதை விட்டன்னா அரை டிராயர்லாம் ரத்தம் ஆயிரும் !”

“நீங்க வாங்க; அவனோட என்ன ?”

பாகீரதி அவசரமாக வெளியே வந்தாள். இந்த உச்ச சமயங்களில் பேசவே கூடாது.

வராந்தாவுக்கு வந்தார்கள். வாசலில் கார் காத்திருக்கும் என்று சொன்னார்கள். யார் என்று தெரியவில்லை. அவரவர் அவரவர் கார்களில் ஆரோகணித்துக் கதவு சாத்திக் கொண்டு புறப்பட்டுச் செல்ல, சற்று நேரத்தில் வராந்தா காலியாகி விட்டது.

“ஆட்டோ போலாங்களா ? செவண்டி ருப்பீஸ் கொடுத்துருங்க. எங்க மைலாப்பூர் தானே !”

“நான் எங்கே போனா உனக்கென்ன ?”

“அவனோட பேச வேண்டாம்.”

“சும்மனாங்காட்டியும் கேட்டேன். கோவிச்சுக்கிறியேம்மா !”

அப்போது ஒரு டிரைவர் வந்து, “நீங்க டாக்டர் சிவராமனா ?”

“டாக்டர் சிவசங்கர்.”

“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ? ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !”

“ஆமாம்.”

“இருங்க வண்டி வந்திருக்குது.”

“நான் சிவராமன் இல்லைப்பா.”

“சரி சிவசங்கர். வாங்க! உங்களுக்குத்தான் வண்டி.”

பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி, ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தான்.

“ஒரு பேரை ஒழுங்காக் கொடுக்கத் தெரியலை; என்ன ட்ராவல் எஜெண்டுப்பா !”

“அது சில சமயங்கள்ள தப்பாயிருதுங்க, டெலெக்ஸ்ல….”

“எது சரியாய் இருக்கு உங்க நாட்டில ?”

“டிரைவர் உங்க பேரு என்ன ?”

“பால்ராஜு...ங்கம்மா. ஏசி போட்டுரலாங்களா…? காசட் போட்டுரலாங்களா…?” காசட்டைச் செருகினான்.

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்….”

“எனக்குக் காதல் வேண்டாம்ப்பா !”

கார் கிளம்பி நெடுஞ்சாலையில் சேர்ந்து கொண்டது. “பக்தி பாட்டு போடட்டுங்களா ?”

“எதுவும் வேண்டாம்ப்பா, ஆளை விடு!”

“பூந்தமல்லி பக்கம் திரும்பியதும், “பால் ராஜ், மெதுவாப் போங்க, அவசரமே இல்லை.”

“நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”

“நாளைக்கு மெதுவா தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்… இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்குது !”

“அப்படீங்களா ? சந்தோசங்க. மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தொன்பது முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம் பதினொன்று பண்ணா நூறாயிடும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”

“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?

“ஆமாங்க அதனாலே என்ன சார் ?”

“Funny !” என்றார் சிவசங்கர்.

“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ – கோயிலுக்குப் போ — கடைசில — எல்லா தெய்வங்களும் ஒண்ணு தானே ….”

“விபூதி வரவழைப்பாரா ?”

“அது சாய்பாபாங்க. அவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”

“உனக்கு நடந்ததா ?”

“பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மேரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !”

“அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார்.

அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.

“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க !”

“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா !”

“அம்மா உங்களுக்கு ?”

“நிம்மதி “ என்றாள்.

“அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”

“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.”

“எனக்குத் தேவைப்படுதுங்க.”

“லுக் அவுட் !” என்று கத்தினார்.

வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.

அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னி போட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”

சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது.

“இளநி சீவலாங்களா ?”

“வேண்டாம்ப்பா .”

“சீவிட்டேங்களே…”

பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள்.

“சரி, குடு” என்றார். நல்ல வேளை.

இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !”

பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி இடைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார்.

“இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ.

“வேண்டாம்மா. பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.”

“மயிரிழைல தப்பினம்.” “எல்லாம் பெரியவர் ஆசிங்க !”

“அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.

காஞ்சிபுரத்தை அணுகும்போது மணி மூன்றாகிவிட்டது. ஏரியில் வாத்துகள் நீந்த, அதை அணைத்துச் சென்ற பாதையில் பனைமர சோல்ஜர்கள் காவல் நின்றன. கோபுரங்கள் வெண்மையாக, புதுசாகத் தெரிந்தன. நகரமே நூறாவது ஆண்டைக் கொண்டாட அலங்கரித்துக் கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்கும் தட்டியும் மூங்கிலும், சுதந்திர மாடுகளும், ஓடும் நாய்களும், லாட்டரி டிக்கெட் நிறைந்த சைக்கிள்களும்….

பாகீரதிக்கு உற்சாகம் பொங்கியது.

பெரிசாக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இங்கதான் விழா நடக்கப் போகுதுங்க.”

“யாராவது இந்த ஊரைப் பார்த்தா பழைய பல்லவர் காலத்து தலைநகர்னு சொல்வாங்களா ? வாட்டிகனைப் பார்த்தியே எப்படி இருந்தது ? ஆயிரம் ஆண்டு பழசுன்னா அமெரிக்கால என்னமா ‘ப்ரிசர்வ்’ பண்ணுவா !”

“நமக்கு அதெல்லாம் முக்கியமில்லைங்க,”

“நான் உன்கிட்ட பேசலை பால்ராஜ்.”

“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிறலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துறலாம்.”

சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”

“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க வண்டியை விரட்டிக்கிட்டே வந்தேன்.”

“நாளைக்குப் பார்த்துக்கலாம். முதல்ல ஓட்டல். எனக்குப் பசிக்கிறது.”

ஆர்ச் வளைவுகளில் மூன்று பெரியவர்களும் ஆசிர்வதிக்க நரசிம்மராவ் எழுதிக் கொண்டிருந்தார்.சினிமா சுவரொட்டியை உரக்கப் படித்தார்.

ஒரே ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல்தான் இருந்தது. அதிலும் ரூம் போட்டு உள்ளே சென்று படுக்கையில் உட்கார்ந்ததும் குறை சொன்னார்.

“பாத்ரூமில் கரப்பான் பூச்சி, சுவர்களில் ரத்தக் கரை, டவல் அழுக்கு, மருந்து நாற்றம்…அமெரிக்கால ஒரு மினிமம் comfort - ஆவது….”

பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்தது பரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”

“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப் பரவாயில்லை. தலைவலி எனக்கு !”

அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.”

“வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.”

“நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”

“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.”

“அதான் பால் இருக்கானே ?”

“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….”

“ச்சே! உன்னோட வேதனை பாகீ !”

“ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப் பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”

அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்.

“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.”

“நான்தான் காரணமா சொல்லு ?”

“சரி நானும்தான் காரணம்.”

பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”

சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும் ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”

“சும்மா வாங்களேன் துணைக்கு!”

அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!” என்றார்.

பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.

மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது.

“ஹூ இஸ் திஸ் பாய் ?”

“புதுப் பெரியவா.”

“வாட் நான்சென்ஸ், இந்தப் பையன் கால்ல விழணுமா ?”

“நீங்க விழ வேண்டாம்.”

“இவர் நம்பர் த்ரீயா ? வேர் இஸ் நம்பர் டூ ?”

“பேசாம இருங்களேன் ப்ளீஸ்.”

ஆயாசம் தரும் அளவுக்குக் காத்திருந்த பின் ஆரத்தி எடுத்தார்கள்.

அங்கிருந்து சுவரோரமாக நடந்து நழுவி, பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள்.
சிவசங்கரன் ஓரமாக நிற்க ........ “நிக்கறேளே உட்காருங்கோ. பேரு ? “
“ஷிவ்ஷங்கர்.”

“ஊரு ?”

“அமெரிக்கால ப்ரின்ஸ்டன்ல பிசிக்ஸ் ப்ரொபசரா இருக்கேன்.”

” ப்ரின்ஸ்டன்லதானே ஜெயராமன்னு மடத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் இருக்கார்.”

“எனக்குத் தெரியாது. ப்ரின்ஸ்டன்ல ஐன்ஸ்டைன்னு ஒரு மகாமேதை இருந்தார்.”

“உங்க பௌதீக சாஸ்திரம் என்ன சொல்றது, ஆதி சங்கரர் சொன்னதைத் தானே !”

“இல்லை சுவாமி. பௌதீகம் ரொம்ப தூரம் போயிட்டது. பிரபஞ்சத்தையே ஒரு துகள், ஒரே ஒரு சக்தி இதில் விளக்க முடியுமா பார்க்கறா !”

“அதையே தான் – சக்தியும் சிவமும்னு ஒரு சரீரத்தில் அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தோட ஒரே பொருளா விளங்கறா !”

”இல்லை நாங்க சொல்றது வேற .”

“அது இங்கிலீஷ், இது சம்ஸ்கிருதம். பவானீத்வம். இனி நீயாவே நான் ஆகி விடுகிறேன். நான், என்னுடையது என்கிறதை உன்னிடத்திலேயே கரைச்சுடறேன்ன்னு சொல்றார்…”

“அப்படி இல்லை “ என்றார் சிவசங்கரன்.

“வாங்க போகலாம்” என்றாள் பாகீரதி.

“உங்களுக்கு மிராகிள்ஸ்ல நம்பிக்கை இல்லையா ?”

“இல்லை.”

“பால்ப்ரண்டன், ஆர்தர் கோஸ்லர் எல்லாரும் எழுதிருக்காளே படிச்சதில்லை ?”

“இல்லை.”

“பரமாச்சார்யாள் மெஹபூப் நகர்ல சாதுர்மாஸ்ய பூஜைக்காக காம்ப் இருக்கறப்ப, உங்களைப் போலத் தான் ஒருத்தர் அமெரிக்காவில இருந்து வந்திருந்தார். பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ரிக்ஷாவைப் போட்டுண்டு வந்தார். ஆசீர்வாதம் வாங்கிண்டார்.

அப்பல்லாம் மஹாபெரியவா நன்றாகவே எல்லோருடனும் பேசுவா. அவர் கொடுத்த குங்குமத்தைத் தன் தலையிலே அப்பிண்டு, ஆப்பிளைக் கொடுத்து அனுப்பிச்சார்.

அவர் மடத்திலேயே சாப்பிட்டுட்டு ஏதாவது கான்ட்ரீப்யூஷன் பண்ணலாம்னு பர்சை எடுக்கறார். காணோம். பதறிப் போய்ட்டார்.

பர்ஸ் மட்டும் இல்லை. பாஸ் போர்ட்டு, ‘டிராவலர் செக்’குங்கறாளே — பதினஞ்சாயிரம் டாலர் — எல்லாமே காணும். அப்படியே ஒடிஞ்சு போய்ட்டார். எங்கன்னு தேடுவார் ? சாப்ட்ட இடத்தில இல்லை. சைக்கிள் ரிக் ஷாக்காரனை வீடு தேடித் போனா அவங்கிட்டேயும் இல்ல..கடைசில எங்க இருந்தது தெரியுமா ? பஸ் ஸ்டாண்டிலஸ்டாண்டி சிமெண்ட் பெஞ்சில அவர் உட்கார்ந்திருந்த இடத்தில. அந்த இடத்தில் ரெண்டாயிரம் பேராவது புழங்கியிருப்பா. இதுக்கு என்ன சொல்றேள் சிவசங்கரன், மிராக்கிள் இல்லையா இது ? இதை உங்க பௌதீக சாஸ்திரம் எப்படி விளக்க முடியும் ?”

“நீங்க மிராக்கிள்ன்னு சொல்லலாம். நான் இதை பிராபபிலிட்டி — சான்ஸ் இப்படித்தான் சொல்வேன். தரிசனம் ஆச்சோல்லியோ போகலாமா பாகீ !”

அவர் புன்னகைத்துப் பிரஸாதம் படாமல் கொடுத்தார்.

வெளியே வரும்போது பாகீரதி கோபத்தில், “அவர் கிட்ட கூடவா ஆர்க்யுமென்ட்?”

“ஏன் ? அவரும் என்னைப் போல் ஒரு ஆத்மா தானே ? அதானே அத்வைதம் சொல்றது ?”

பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க. மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”

அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி

ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.

ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.

உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை.

அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான். இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”

“தொண்ணூறுங்க ! அய்யா ..... அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு”

“அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ ” என்று பாகீரதியை அருகே அழைக்க .......

பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.

“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துக்குத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான்.

ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் !

உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”

“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”

அந்த இளைஞன், அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல, ஸ்ரீமஹா பெரியவா கைகளை உயர்த்தி வாழ்த்தினார். பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது.

காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.

ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்த அந்த இளைஞன், “எல்லாம் சரியாய்ப் போய்டும். கவலைப்படாதீங்கோ.

பையன் பேர் என்ன சொன்னேள் ?”

“பாலாஜி.”

அவர்கள் வெளியே வந்தனர்.

சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?” “சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !

அவள் அடங்காமல் அழுதாள்.

“பாகீ ! பாகீ ... டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்தி அழைத்துச் சென்றார். பின்னால் குரல் கேட்டது. மடத்து சிப்பந்தி ஒருவர் ஓடி வருகிறார். '' மாமி மாமி, பெரியவா உங்க கிட்ட யாரையோ அனுப்பியிருக்கா "'

யார்?

ஒரு கட்டுக்குடுமிக்காரர் ஒருவர் ஒரு இளம் வாலிபனுடன் வந்தவர் '' டேய் பாலாஜி நேத்திக்கி பெரியவா சொன்னாளே இன்னிக்கி வருவான்னு ''இவா தானே அது -

''எங்க அப்பா அம்மா தான் வந்திருக்கா !”

இதற்கு மேல் எழுதுவது அர்த்தமில்லை. இதயமும் மனமும் தானே எழுதிக் கொள்ளும்...
--------------------------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.9.19

ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!


சதன் தம்புரானின் அரண்மணை கேரளா
-----------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!

225 ஆண்டுகளுக்கு முற்பட்டகாலம்.

இடம்: கடவுளின் சொந்ததேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர்
(எந்த மாநிலம் என்று தெரிகிறதா?)

அங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக் காசு பார்ப்பதை விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையைக் காப்பாற்ற வந்த ரட்சகனாகத் தன்னை எண்ணிக்
கொண்டு, பலசீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக் கொண்டிருந்தார்.

பல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்

அந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.

தன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப்பட்டான்.

தன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.

77 ஆண்டுகள்என்றுதெரிந்தது!

மரண தண்டனை கிடைக்கும் படியான ஒருகுற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக் காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம்.போனால் உயிர் போகட்டும்.இல்லையென்றால் ஜோதிடக்கலைக்கு ஒருவலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என்றும் முடிவு செய்தான்.

இளைஞனல்லவா? உடனே செயலிலும் இறங்கினான்.

நடந்தது என்ன?

படித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்! மேலே படியுங்கள்

மேலே படிக்க PDF முழு கோப்பிற்கு எழுதுங்கள். மின்னஜ்சலில் அனுப்பிவைக்கிறேன்
மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
Subject boxல் மறக்காமல் Kerala Youth என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.19

Astrology: Quiz: புதிர்: 20-9-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 20-9-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து " ஜாதகர் கார்த்திகை நட்சத்திரக்காரர். அவருக்கு 44 வயது நடக்கும்போது தொடர்ந்து 2 ஆண்டு காலம் சொந்த வீடு வாங்குவதற்காக பாடுபட்டார். ஆனால் ஒரு வீட்டை வாங்க முடியவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? க்ளூ வேண்டுமா? அவருக்கு அப்போது குரு மகா திசையில்
சுக்கிரபுத்தி நடந்து கொண்டிருந்தது. ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் மிதுன லக்கினக்காரர். தசா நாதன் குரு பகவானும், புத்தி நாதன் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 6/8 நிலைப்பாட்டில் (அஷ்டம சஷ்டம நிலைப்பாட்டில்) இருப்பதைப் பாருங்கள், அவ்வாறு இருக்கும்போது நன்மையானது எதுவும் நடக்காது. அந்த தசா புத்தியில் ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு அதுதான் காரணம்.

ஆனால் அதற்கு அடுத்து வந்த குரு மகா திசை சூரிய புத்தியில் ஜாதகரின் ஆசி நிறைவேறியது. ஒரு வீட்டை வாங்கினார் குரு பகவானின் பார்வை சூரியனின் மேல் விழுவதைப் பாருங்கள்

இந்தப் புதிரில் 8 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 27-9-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
///////Blogger Santhanam Salem said...
ஒருவர் சொந்த வீடு பாக்கியம் அனுபவிக்க வேண்டு மென்றால் சுக ஸ்தானாதிபதி பலமுடன் இருக்க வேண்டும்.
சுகங்களை கொடுக்ககூடிய அசுர குரு பலமுடன் இருக்க வேண்டும். சுக ஸ்தானாதிபதியும், களத்திரகாரகனும், பூமி காரகனும் மறைந்து போக கூடாது, நீசம் அடைய கூடாது, கூடா நட்பு கொண்டிருக்க கூடாது. அது போன்ற அமைப்பு இருந்தால் ஒருவருக்கு வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் நாலாம் அதிபன், களத்திரகாரகன், பூமி காரகன் இவர்கள் வலுவுடன் இருந்து, பகை,

நீசம், மறைவிடங்களில் இல்லாமல் இருந்தால் அவர்களில் யார் வலுவுடன் இருந்து திசை அல்லது புத்தியை நடத்துகிறார்களோ அவர்களுடைய காலத்தில் ஒருவருக்கு வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் யோகம் அமையும்.யோகாதிபதிகளின் தசை நடக்கும் போது சொந்தமாக வீடு கட்டும் யோகம் கிட்டும். ஜோதிடத்தில் சுக்கிரனைகட்டிடக்காரகன் என்றும், 4வது வீட்டை கட்டிட ஸ்தானம் என்றும் கூறுவர். பொதுவாக 4ஆம் அதிபதியின் தசை, புக்தி அல்லது சுக்கிரன் வலுவாக இருந்து அதன் தசை, புக்தி நடக்கும் காலகட்டங்கள் மற்றும் யோகாதிபதி, ஜீவாதிபதி,
லக்னாதிபதியின் தசா புக்திகள் நன்றாக இருக்கும் காலகட்டத்தில் வீடு கட்டுவதற்கான வாய்ப்பு, வசதி, வருமானம் கிட்டும்.
இதுமட்டுமின்றி பூமிக்காரகன் செவ்வாயின் நிலையையும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். நிலம்

வாங்கி வீடு கட்டும் யோகம் அனைவருக்கும் அமையாது. பலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும். அதற்கு செவ்வாய், சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
ஜாதகரின் நான்காம் வீட்டில் நீச சுக்கிரன் // நான்காம் வீட்டில் நீச சுக்கிரன் எட்டாம் இடத்து அதிபதியுடன் // செவ்வாய் 6ம் இடத்து அதிபதி // நான்காம் இடத்து அதிபதி 4க்கு விரைய ஸ்தானமான 3ல் // லக்கினாதிபதி பாபகர்தரியோகத்தில் சூரியனோடு கூட்டு //
ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு இதுவே காரணம்
SANTHANAM SALEM
Friday, September 20, 2019 6:08:00 AM
--------------------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
ஜாதகரின் வீடு வாங்க போகாமல் போனதற்கான காரணங்கள்:
1 . ஜாதகர் மிதுன லக்கினம் , ரிஷப ராசி . புதன் லக்கின அதிபதி.
வீடு மற்றும் வாகனம் போன்ற சுகம் சம்பந்தப்பட்ட திற்கு லக்கினத்தில் இருந்து நான்காம் வீட்டை பார்க்க வேண்டும்.
2 . ஜாதகரின் நான்காம் வீட்டின் அதிபதி புதன் , நான்காம் வீட்டிலிருந்து பனிரெண்டில் மறைந்து மூன்றாம் வீட்டில் உள்ளார். மேலும் நான்காம் வீட்டில் அமர்ந்த ராசி அதிபதி சுக்கிரனும் நீசம் பெற்று உள்ளார். அவர் சனியுடன் கூட்டணி பெற்று நீசமாக உள்ளார். பொதுவாக நீசம் பெற்ற தசை மற்றும் புக்தி பலன்களை தராது.
3 மேலும் நான்காம் வீட்டின் மீது எந்த வித சுப கிரகங்களின் பார்வையும் இல்லை. பாக்கிய ஸ்தான அதிபதி அதாவது ஒன்பதாம் வீட்டு அதிபதி சனியுடன் சுக்கிரன் கூட்டணி போட்டாலும் , குரு பதினொன்றில் அமர்ந்து , நான்காம் வீட்டிற்க்கு , ஆறு மற்றும் எட்டில் உள்ளார். பொதுவாக ஆறு மற்றும் எட்டில் ( நான்காம் வீட்டில் இருந்து ) அமர்ந்த அமைப்பு பலன்களை தராது.
4 . ஜாதகருக்கு அதனால் தான் குரு தசை சுக்கிர புக்தி யில் வீடு வாங்கும் அமைப்பு உண்டாகவில்லை. ஜாதகருக்கு குரு

தசை நடந்தாலும் குரு லக்கின அதிபதி புதனுக்கு, சுப கிரகமல்ல. மேலும் நான்காம் வீடு குரு மற்றும் சுக்கிரனுக்கு ஆறு மற்றும் எட்டு அமைப்பில் அமர்ந்ததால் வீடு வாங்கும் பாக்கியம் , அமையவில்லை
நன்றி
இப்படிக்கு
சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, September 20, 2019 8:37:00 AM
---------------------------------------------------------
3
Blogger C Jeevanantham said...
Dear Sir,
The given horoscope person could not buy house because of the following points.
1. 4th house is for to buy house. 4th lord is in 3rd. i.e. 12th place to 4th. its loss.
2. 12th lord sukran is in 4th. i.e. loss to the 4th place.
3. 8th lord sani is in 4th. i.e. loss to the 4th.
4. Lagna is aspected by 8th lord sani.
5. Lagna lord as well as 4th lord is join with sani in navamsa also.
6. Present Guru dasa sukra buthi, sukran is neecham and also 12th lord.
7. 2nd place is ruling finances, material value and comfort. But kethu sitting in this place is disturbing.
Because of these above reasons, the native could not buy house. But there is a chance to get after completion of sukra buthi.
Thanking you,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, September 20, 2019 9:43:00 AM
----------------------------------------------------
4
Blogger kumaran said...
வாத்தியார்க்கு வணக்கம் .
மிதுன லக்கினம் ,லக்கினத்துக்கு பாதகாதிபதி தசை ,சுக்கிர புத்தி காலம் ..லகினத்துக்கு 4-இல் வீடு மனை ,வாகனம் குறிக்கும் இடம் ,இதில் சுக்கிரன் காரகம் வீடு ,வாகனம் ,என்பதால் சுக்கிரன் நீச்சம் பெற்று சனி உடன் உள்ளார்

,பொதுவாக லகினத்துக்கு 4-இல் சனி இருப்பின் அகதி வாழ்கை என்று பொருள் .லகினதுக்கு 8-அம அதிபதி 4-இல் இருப்பதால் ஜாதகர் க்கு யோகம் இல்லை ,அதேபோல் சுபர் பார்வை ஏதும் 4-அம வீட்டின் மீதி இல்லை. 4-க்கு
உடையவன் 3-இல் சூரியன் உடன் சேர்க்கை ,கேடு கொடுக்கும் கேது லஹீனத்துக்கு 2-இல் தன சாதனம் இல் உள்ளார்
,இதுவும் ஒரு காரணம் என்று எடுத்து கொள்ளலாம் .
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, September 20, 2019 10:19:00 AM
---------------------------------------------------------
5
Blogger seethalrajan said...
வணக்கம், கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் குரு, சுக்கிரன் 6,8 அமைப்பில் இருப்பதே காரணம்.
Friday, September 20, 2019 12:27:00 PM
---------------------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
௧.லக்னதிபதி வெற்றி சுத்தமான மூன்றில் பூத ஆதித்ய யோகத்துடன் உள்ளார்
2 .ஆயினும் நாலாம் இடத்திற்கு 1 /12 நிலை
3 ..காரகன் செய்வாய் தசநாதன் குருவிற்கு எட்டாம் இடத்தில
4 . சுகக்காரகன் சுக்கிரனும் தசநாதன் குருவிற்கு
ஆறாம் இடத்தில ஆகவே வீடு வாங்க வாய்ப்பில்லை
5 அடுத்து வந்த ஒன்பதாம் அதிபதி சனிவீஸ்வரனின் திசையில் நாலில் அமர்த்தந்தால் ஜாதகரின் ஆசை நிறைவேறியிருக்க வாய்ப்புண்டு
நன்றி,
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, September 20, 2019 3:26:00 PM
-----------------------------------------------
7
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 செப் 1952 அன்று அதிகாலை 1 மணிக்குப் பிறந்தவர் . பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் சஷ்டாஷ்டகமாக நிற்கின்றனர்.மேலும் குருவும் சுக்கிரனும் இயற்கையி எதிராளிகள்.
எனவே அவர்களுடைய தசாபுக்தி ஜாதகருக்குப் பயனுள்ளதாக அமையாது.
நாலாம் அதிபன் புதன் தன் வீட்டிற்கு 12ல் மறந்தார்.சூரியனால் அஸ்தஙதம் ஆக்கப்பட்டார். சொத்துக்கான காரகன்
செவ்வாய் லக்கினத்திற்கு 6ல் மறைவு.
மிதுன லக்கினத்திற்கு குரு பாதகாதிபதி அவர் தசா மிதுனத்திற்கு உதவாது
இக்காரணங்களால் ஜாதகரின் வீடு வாங்கும் முயற்சி பலிக்கவில்லை.
Saturday, September 21, 2019 12:31:00 PM
------------------------------------------------------
8
Blogger Ram Venkat said...
புதிர்: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ?"
மிதுன லக்கினம், ரிசப‌ ராசி ஜாதகர்.
அவருக்கு 44 வயது நடக்கும்போது தொடர்ந்து 2 ஆண்டு காலம் சொந்த வீடு வாங்குவதற்காக பாடுபட்டார். ஆனால் ஒரு
வீட்டை வாங்க முடியவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
1) வீடு மற்றும் சுகஸ்தானமான 4ல் சனி மற்றும் விரையாதிபதி சுக்கிரன் அமர்ந்துள்ளனர்.
2) அதன் அதிபதி புதன் 4க்கு 12ல் அதாவது சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார்.
3) 44 வயதில் அவருக்கு நடந்த தசா, புக்தி நாதர்களான குருவும், சுக்கிரனும் 6,8 முறைப்படி அமர்ந்து அவரின் வீட்டு ஆசையில் மண் விழ வைத்தனர்.
4) 4மிடத்திற்கும், வீடு, நிலம் போன்றவைக்கு காரணமான செவ்வாய் கிரகத்திற்கும் சுப கிரகங்களின் பார்வையுமில்லை.
மேற்கண்ட காரணங்கள் மற்றும் ஜாதக நிலவரங்களை வைத்து பார்க்கும் போது இந்த ஜாதகரின் வீடு வாங்கும் ஆசை
நிறைவேறாமல் போனதற்கு வீட்டிலுள்ள பெண்களே காரணமாக இருப்பார்கள்.
Saturday, September 21, 2019 8:23:00 PM
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.9.19

Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ?


Astrology: Quiz: புதிர்: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கார்த்திகை நட்சத்திரக்காரர். அவருக்கு 44 வயது நடக்கும்போது தொடர்ந்து 2 ஆண்டு காலம் சொந்த வீடு வாங்குவதற்காக பாடுபட்டார். ஆனால் ஒரு வீட்டை வாங்க முடியவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? க்ளூ வேண்டுமா? அவருக்கு அப்போது குரு மகா திசையில் சுக்கிரபுத்தி நடந்து கொண்டிருந்தது

ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 22-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.19

அசத்தலான காணொளிகள் உங்களை மகிழ்விக்க!!!!!


அசத்தலான காணொளிகள் உங்களை மகிழ்விக்க!!!!!

நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை மகிழ்விக்கும் விதமாக சில காணொளிகளை வலை ஏற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
1. பழ, கருப்பையா அவர்கள் காரைக்குடிக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும். வட்டார  மொழியில் அவர் கலக்கலாகப் பேசுவதைக் கேளுங்கள்:2. புலவர் ராமலிங்கம் அவர்கள் இயற்கையாகவே நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். அவருடைய இந்தக் காணொளியைப் பாருங்கள்!3. ஆண்களுக்கு ஆதரவாகப் பேசும் அம்மணியின் பேச்சைக் கேளுங்கள்!!!!4. பெண்களைப் பற்றி அருமையானதொரு கருத்தைச் சொல்லும் நித்யானந்தாவின் காணொளியைப் பாருங்கள்!!!!

====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.9.19

குட்டிக்கதை: யார் மீது தவறு?குட்டிக்கதை: யார் மீது தவறு?

மற்றவர்களை பிரமிக்கவைப்பதா வாழ்க்கை?

அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான்.

விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர்  எடுக்கவில்லை.'சரி... இன்னும் ஒரு மணி நேரத்தில், வீட்டுக்கு தானே போகப் போகிறோம்...' என எண்ணியவன்,கால் டாக்சியில் கிளம்பினான்.15 நிமிடங்களில் கிழக்கு தாம்பரத்தில் இருந்த நவீன அபார்ட்மென்ட்டை அடைந்தது, கால் டாக்சி.

அபார்ட்மென்ட்டை அடைந்து, இரண்டு மூன்று முறை காலிங்பெல்லை அடித்தும், கதவு திறக்கவில்லை. ஒருவேளை வீடு பூட்டியிருக்கிறதோ என நினைத்து, மறுபடியும், தன் அப்பாவை மொபைல் போனில் கூப்பிட்டான்.

 'ரிங்' போனதே தவிர, போனை எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், எதிர்வீட்டு காலிங்பெல்லை அடிக்க, இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்தார், அவ்வீட்டுக்காரர்.

''மாமா... அப்பா, அம்மா வெளியே போயிருக்காங்களா... போன் பண்ணா, எடுக்கமாட்டேங்கிறாங்க,'' என்றான்.

''உனக்கு விஷயமே தெரியாதா... உங்க அப்பா, உன்கிட்ட சொல்லலயா...''

''இல்லயே மாமா... என்ன விஷயம்?''

''உனக்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கு. உங்க அப்பாவும், அம்மாவும், முதியோர் இல்லத்துல இருக்காங்க; யாராவது வந்தா கொடுக்கச் சொல்லி அட்ரஸ் கொடுத்திருக்காரு உங்கப்பா; இரு எடுத்துட்டு வர்றேன்,'' என்று சொல்லியபடியே உள்ளே சென்று எடுத்து வந்து கொடுத்தார்.

'இவங்களுக்கு என்னாச்சு... எல்லா வசதிகளும் நிறைஞ்ச அபார்ட்மென்ட் இருக்ககையில் ஏன் முதியோர் இல்லத்தில போய் தங்கணும்...' என்று குழம்பிப் போனான்.

''தேங்க்ஸ் மாமா... நான் வரேன்,'' என்று சொல்லி கிளம்பினான்.

அதுவரை மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த அவன் மனைவி ப்ரீதி, ''என்னாச்சு தீபக்?'' என்று கேட்டாள்.
''என்னத்த சொல்ல... முதியோர் இல்லத்துல தங்கி இருக்காங்களாம்...'' என்றான் கோபத்துடன்!

''முதியோர் இல்லமா... ஏன் வீட்டை விட்டுட்டு...'' என்றாள், ஆச்சரியத்துடன்!

அப்பார்ட்மென்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்து, கால்டாக்சியில் ஏறியதும், ''முடிச்சூர் போப்பா,''என்று சொன்ன  தீபக், மீண்டும், தன் அப்பாவை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றான். அவர் எடுக்கவில்லை என்றதும், கோபத்தில் அவன் முகம் சூடானது.

''எங்கே போறோம்?'' என்று கேட்டாள் ப்ரீதி.
''அமைதி இல்லம்,'' சொன்னவனின் குரல் அதிர்ந்தது.

காரில் இருந்து இறங்கியவர்களின் கண்களில் பட்டது, 'அமைதி ஹோம்' போர்டு!

மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு, இல்லத்தின் உள்ளே சென்றான், தீபக். வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர், ''யார் நீங்க, என்ன வேணும்...'' என்று கேட்டார்.

''ராமச்சந்திரன், மாலதி அம்மாளை பாக்கணும்,'' வியர்வையை துடைத்தபடியே சொன்னான். ப்ரீதியும், மகனும் மொபைலை
நோண்டியபடி இருந்தனர்.

''நீங்க?''

''அவங்களோட பையன்,'' என்றான் தயக்கத்துடன்!

அவனை உட்கார சொன்னவர், ''சின்ன நிகழ்ச்சி நடக்குது சார்... பெரியவங்களோட நேரம் செலவழிக்கிறதுக்காக, ஒரு
கம்பெனியிலிருந்து வந்திருக்காங்க, கொஞ்சம் வெய்ட் செய்யுங்க,'' என்று சொல்லி, உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில், மகிழ்ச்சியுடன் அங்கு வந்தனர், தீபக்கின் பெற்றோர். வெறுப்பு, கோபம் இரண்டும் சேர்ந்து, அவர்களை வெறித்தவன், ''என்னப்பா இதெல்லாம்... என்ன நினைச்சுட்டு இங்க வந்தீங்க...'' என்றான்.''தீபக்...'"
சாப்பிட்ட உடனே மூச்சு வாங்குதுப்பா... இப்ப எல்லாம் ஒண்ணும் முடியல,'' என்றபடி, அவனருகில் அவன் அம்மா அமர,

''அம்மா... முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க; என்ன மடத்தனம் இது...'' என்று கர்ஜித்தான்.

அங்கு வந்த தீபக்கின் அப்பாவிடம், ''ஏன் மாமா...உங்களுக்காகத் தானே எல்லா வசதியும் இருக்கிற மாதிரி அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்திருக்கோம். சொல்லாம கொள்ளாம நீங்க பாட்டுக்கு முதியோர் இல்லத்துல வந்து
தங்கிட்டீங்களே... உங்க மகன் எவ்வளவு, 'ஷாக்' ஆயிட்டார் தெரியுமா...''என்றாள், ப்ரீதி.

''என் மானத்த வாங்கணும்ன்னே, இங்க வந்து தங்கி இருக்கீங்க... ரிசப்ஷன்ல இருந்தவர்கிட்ட, நான் அவங்க பையன்னு சொல்றப்ப, எப்படி கூனி, குறுகிப் போயிட்டேன் தெரியுமா...

''உங்களுக்கு அபார்ட்மென்ட்ல வசதி குறைவுன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லன்னு வேற வசதியான ப்ளாட் வாங்கி, அதுல உங்கள ராஜா மாதிரி தங்க வைச்சிருக்க மாட்டேனா...''  என்றவன்,

அம்மாவைப் பார்த்து, ''அப்பா தான் மடத்தனமா ஏதோ சொன்னார்ன்னா உனக்கு மூளை வேணாமா...சே, எதிர் ப்ளாட்டில் குடியிருக்கிற மாமா, 'உனக்கு விஷயமே தெரியாதா'ன்னு கேட்ட போது, அந்த இடத்துல என்னால நிக்கவே முடியல.

''உன் கோபம் புரியுதுப்பா. ஆனா...''

''என்னப்பா ஆனா...'' கோபமாக ஆரம்பித்தவனை, அமைதியாக இருக்கும்படி சைகையினால் கட்டளையிட்டவர்,

 ''உன்கிட்ட சொல்லாம நாங்க இந்த முடிவ எடுத்திருக்க கூடாது தான்; ஆனா, முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்க... நாங்க இங்க வந்தது, மாற்ற முடியாத முடிவுன்னே சொல்லலாம்,'' என்றதும், அதிர்ச்சியுடன் அப்பாவை பார்த்தான்.

''ஆமாம் தீபக்... உன்கிட்ட முதல்ல ஏன் சொல்லலன்னு கேட்ட இல்லயா... சொன்னா உனக்கு புரியாது; ஒத்துக்க மாட்டே; தர்க்கம் செய்வே...

நீ சொன்னியே, அந்த அபார்ட்மென்ட்டுல எங்களுக்கு என்ன குறைன்னு... வசதியில எந்தவொரு குறையும் இல்ல; ஆனா, எங்களால எதிர் வீட்டுக்காரரைக் கூட சந்தித்துப் பேச முடியிறதில்லங்கிறது தான் பெரிய குறை. ''மாசத்துக்கு ரெண்டு, மூணு முறை, 'ஹலோ சார்... சவுக்கியமா...' அவ்வளவுதான் பேச்சு; எதிர் பிளாட்காரர் தான் இப்படின்னா, மத்த
ப்ளாட்ல எல்லாம், யார் இருக்காங்கன்னே தெரியாது. நாங்க கூட, சில பேர் கூட பழக முயற்சி செய்தோம்; யாரும் ஈடுபாடு காட்டினா தானே... நாள் முழுக்க, நாங்க ரெண்டு பேரும், எங்களுக்குள்ளேயே என்னத்தப்பா பேசிக்கிறது...

''இங்க ஏன் வந்தோம்ன்னு கேட்டியே... இங்க எல்லாரும் எங்க வயசுக்காரங்க; மனம் விட்டு பேசுறோம்... சண்டை சச்சரவுகளும் வரத் தான் செய்யும்; அதுவும் வாழ்க்கைக்கு தேவை தானே... பேசிப் பழக, மனுஷங்க இல்லாதது என்ன வாழ்க்கை...

''நீ, வேலை கிடைச்சதுன்னு அமெரிக்கா போயிட்ட... உன்னை போகாதேன்னு சொல்ல, எங்களுக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஏன்னா, அது உன் விருப்பம்; உன் வாழ்க்கை. எங்க கதி... வெறும் கட்டடம் மட்டும்
வாழ்கையாகிடுமா?

''இங்க எங்களோட பேசிப் பழக நிறைய பேர் இருக்காங்க. எங்க மனசுக்கு நிறைவு இருக்கு... நீ மறுபடியும் ஊரில் வந்து செட்டில் ஆகறேன்னு சொல்லு. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கறதா இருந்தா, மறுபடியும் 
வீட்டுக்கு வர்றோம். அதுக்கு சாத்தியமில்லன்னா நாங்க இங்கேயே இருந்துடுறோம்.

 வெறும் சுவர்கள் மத்தியில் இருக்கறது கொடுமை; அது, எங்களால முடியாதுப்பா,'' என்றவரின் கண்கள், கலங்கி இருந்தது.

''தீபக்... இந்த முடிவை எடுத்ததுல, எனக்கு தான் பெரிய பங்கு இருக்கு,'' என்ற அம்மா, ''இங்கே, எல்லாரும் கிட்டத்தட்ட எங்க வயசுக்காரங்கிறதால சிரிச்சு, பேசி, கலகலன்னு பொழுது போகுது.

செங்கல், சிமென்ட், கதவு, ஜன்னல், மாடுலர் கிச்சன், 'ஏசி' இதெல்லாம் மட்டும் வீடு இல்லப்பா, வீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்; இனிமே இது தான் எங்க வீடு"

ஏப்பா நீங்கள் திருமணத்திற்கு முன்பே நல்ல உத்தியோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிய அரசு வேலையில் தானே இருந்தீங்க.தாத்தா சொத்தான விவசாய நிலங்கள் வேறு நிறைய இருந்திருக்கு  இவ்வளவு பணத்தையும் 
வைத்துக்கொண்டு பின் ஏன்ப்பா ஒரே பிள்ளை போதும்னு நிறுத்துனீங்க?என்னோடு இன்னும் ஒரிரு குழந்தைகளை பெற்று வளர்த்து படிக்கவைக்க வசதியிருந்தும் தாங்கள்  ஏன் செய்யவில்லை? உங்கள் வசதியை வைத்துக்கொண்டு என்னால் இனி  அண்ணன்,தம்பி,அக்காள் தங்கைகளை பெறமுடியுமா? யாரும் இல்லாதவனா என்னை நீங்கள்  ஆக்கிவிட்டீர்களே

அப்பா?தாத்தா வசதி குறைவாயிருந்தும் ஐந்தாறு குழந்தைகளை பெற்று உங்களை எல்லாம் நல்லா வளர்க்கவில்லையா?படிக்கவைக்கவில்லையா?நீங்கள் எல்லாம் அண்ணன்,தம்பி, அக்கா,தங்கை என எப்படி சந்தோஸமா
இத்தனை வருஷமும் இருந்தீர்கள்.

உங்கள் அண்ணன் தம்பி எல்லாம் நிறைய குழந்தை குட்டிகளோடு சந்தோஸமா தானேப்பா ஊரில் இருக்காங்க?மற்றவுங்க
பெரிசா நினைக்கனும்னு என்னையும் ஹாஸ்டலதங்கவைத்து படிக்கவைத்து படிப்பு படிப்பு என்று என் இளமையில் எனக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சந்தோஸமும் இல்லாமல் செய்தீங்களேப்பா. உங்களுக்கு பிறகு எனக்கு யாருப்பா இருக்கா?

எனக்கு நல்ல வேலைக்கிடைத்தும் அங்கே போனால் உங்களுக்கு துரோகம் செய்கின்றோமோ என்று என்னை என் மனசாட்சி தினம் தினம் கொள்றது உங்களுக்கு தெரியாதுப்பா.அங்கேயும் வந்து தங்கமாட்டேன் என்கின்றீங்க.

என் மனைவி, அவள் வீட்டில் அவளும் ஒரே பெண். அவள் அப்பா அம்மாவுக்கும் உங்களை போன்ற நிலைதான்.  என்னைப் போன்றே அவளும் அவுங்க அப்பா அம்மாவை வயதான காலத்தில் பக்கத்தில் வைத்து பாதுகாக்க
முடியவில்லையே என்ற கவலை.இது எல்லாம் எங்கள் தவறாப்பா?

ஒரே பிள்ளையான என்னையும் நல்லா படிச்சாதான் பெரிய வேலைக்கு போய் நிறைய சம்பாதிக்கலாம் என,என்னை ஹாஸ்டல்ல தங்கவைக்கும் போது நீங்கள் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்காப்பா?

நீங்க,அம்மா,எவ்வளவு பெரிய வீடு,சித்தப்பா பையன்,பெரியப்பா புள்ளைங்கயென அவ்வளவு பேர் இருந்தும்,என்ன சின்ன
வயதில் இருந்தே ஹாஸ்டலில் தங்கிபடிக்கவைத்தப்ப நான் எவ்வளவு கஷ்டபட்டேன் என்பது உங்களுக்கு தெரியாதுப்பா?

அப்பயும் இதே போல பெரிய வீட்டில் நீங்களும் அம்மாவும் மட்டும்தானேப்பா இருந்தீங்க?அப்ப தோனலையாப்பா நம் பிள்ளை நம்மோடு தங்கியிருந்து படிக்கவைக்க வேண்டும் என்று? நம்ம சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே நம் நிலங்களில் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு,படிப்புக்கு ஏத்த ஒரு வேலையையும் அங்கேயே தேடிக்கிட்டு சித்தப்பா பிள்ளை,
பெரியப்பா பிள்ளை என நம்ம சொந்த பந்தத்தோட நானும் நிம்மதியா இருந்திருப்பேன்.நீங்களும்  கடைசிகாலத்தில் நிம்மதியா இருந்திருக்கலாமேப்பா? நம்ம சித்தப்பா பெரியப்பா பிள்ளையெல்லாம் வசதி குறைவா இருந்தாலும் கூட்டுக் குடும்பமா நிம்மதியாதானப்பா ஊர்ல இருக்காங்க.

என் புள்ளைய நல்லா படிக்கவைத்து அமேரிக்காவில் வேலைக்கு அனுப்ப போறேன்னு நம் சொந்த பந்தத்திலும், ஊர் முழுவதும் நீங்கள் சொல்லிகிட்டு இருந்ததை நான் என் சின்ன வயசுல பல முறை கேட்டதால்தான் நான் உங்கள் எண்ணத்தை நிறைவேத்த வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்து அமேரிக்காவும் போனேன். சென்னையிலும் வீடு வாங்கினேன். இப்ப என்னை குறை சொல்றீங்களே இது சரியாப்பா?ஊர்ல நாளு பேர் பெருசா நினைக்கனும்னு வாழ ஆரம்பித்ததால் இப்ப நம் சந்தோஷத்தையெல்லாம் இழந்தும் வெளிலகாட்டிக்கமுடியாம இருக்கோமேப்பா. மற்றவங்களை
பிரமிக்கவைப்பதாப்பா வாழ்க்கை?

அருமையான சிறுகதை.யார் மீது தவறு?
-------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.19

தலைமுறை இடைவேளி

தலைமுறை இடைவேளி

அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம் 
சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது ,

டேய் உனக்காவது இது கிடைத்தது , நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன  என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!

இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது  150ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி  இதவிட betterஆ வேறஇல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,,

என் மகளிடம் பொருமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத      காலண்டர் அட்டையை தான் கொண்டு போவேன்,, ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன், , சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்;

bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;; என்று என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!! நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!😉😉

நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா) சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால் இன்று அப்பா filter water கேன் (2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (3 std படிக்கிறாள்) பார்க்கிறேன் 🤔

இதுதான் தலைமுறை இடைவேளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு  தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி
( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)  அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்

நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!

( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டர்) ;

இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்? என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான் , ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன்( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!!

இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான் ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!

இன்று

ஒரு லிட்டர் gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி கொண்டு ஓடி இருக்கிறேன்

(கடைக்கார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடலை புண்ணாக்கை எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்)

boost is secerd of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;

இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது;

நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க 🤔🤔

இது நெட்டில் சுட்டது இல்லை!

வாழ்கையில் பட்டது!!..
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.9.19

பொருளாதார வீழ்ச்சி!!!!


பொருளாதார வீழ்ச்சி!!!!

இந்தியாவில் அறிவிக்கப்படாத நிதி நெருக்கடி நிலை ஒன்று தற்போது நிலவி வருகிறது. பொதுமக்களுக்கு இதன் தாக்கம் மிக மெதுவாகத்தான் தெரியவரும். தொடர்ந்து வரவிருக்கும் பெரும் நெருக்கடிகளுக்கு இது ஒரு சாம்பிள் மட்டுமே என்று நான் நினைக்கிறேன்.

• வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிக்கின்றன என்றால் என்ன அர்த்தம்.? புதிய முதலீடுகள் வரவில்லை என்று அர்த்தம்..? திவாலானதாக அறிவிக்கும் முறைகள், மற்றும் இந்த கார்ப்பரேட்டுகளின் தொடர்ந்த ஊழல்களால் இது நடக்கிறது.

• கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகள் விலை போகவில்லை. வாங்க யாரும் வரவில்லை.. இதன் பொருள் ஸ்டீல், சிமெண்ட்,. பாத்ரூம் ஃபிட்டிங்குகள், கட்டுமானங்கள் ஆகியவை பெரும் சரிவை சந்திக்கப் போகின்றன. இதன் காரணமாக வங்கிகளின் வாராக்கடன்கள் நிச்சயம் மிக மிக அதிகரிக்கப் போகின்றன. வெறும் கம்பெனிகள் மட்டுமில்லாமல் தனிப்பட்ட நபர்களும் கடனை கட்ட முடியாமல் வாராக்கடன் பட்டியலில் சேரும் நிலைமை அதிகரிக்கப் போகிறது. ஆக சிக்கல் மேலும் அதிகரிக்கப் போகிறது.

• வாகன விற்பனையும் சரிந்து வருகிறது. இந்த நிமிடத்தில் பார்த்தோம் என்றால் இந்திய வரலாற்றில் முதன் முறையாக இரு சக்கர வாகன விற்பனை விகிதம் மைனசில் போய்க் கொண்டிருக்கிறது. மாருதி தனது உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துவிட்டது. பல வாகன விற்பனையாளர்கள் தங்கள் ஷோரூம்களை மூடி வருகிறார்கள். இதன் விளைவாக ஸ்டீல், டயர்கள் மற்றும் அக்சசரிகளின் விற்பனை படுபயங்கரமா வீழ்ச்சியை சந்திக்கும்.

• மேற்சொன்ன மூன்று காரணங்களின் மூலமாகவே கோடிக்கணக்கான வேலை இழப்புகள் வரப் போகின்றன. முக்கியமாக அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் கணிசமான அளவுக்கு குறையப்போகிறது. வருவாய் குறைந்தால் அரசு சும்மா இருக்குமா.? இழந்த வருவாயை சரி செய்ய மேலும் மேலும் வரிகளைப் போட்டு மக்களின் முதுகை ஒடிக்கப் போகிறது. வரும் வருமானம் அனைத்தையும் அரசு தனியார் கம்பெனிகளிடம் அப்படியே தூக்கிக் கொடுத்து விடுகிறது. வரும் பற்றாக்குறைக்கு மட்டும் மக்கள் மீது வரி போட்டு சுரண்டுகிறது. இந்த மாதிரி பொருளாதார வீழ்ச்சி நேரத்தில் இந்த அரசு என்ன செய்யும்.. அரசின் சொத்துக்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கத் துவங்கும். அரசின் நஷ்டம் மேலும் மேலும் அதிகரிக்கத் துவங்கும்.

இந்த பொருளாதார சரிவின் தாக்கத்தை பொதுமக்கள் 2020 மார்ச் வாக்கில் உணரத் துவங்குவார்கள். ஏனென்றால் தற்போது சாமானிய இந்தியர்கள் யாருக்கும் இதன் தாக்கம் இன்னமும் உறைக்கவில்லை. அன்றாட தேவைகளான குளியல் சோப்பு, ஷாம்பூ, சோப் பவுடர்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட விற்க முடியாத நிலை அல்லது அதை மக்கள் வாங்க முடியாத நிலையும் சீக்கிரம் வரப் போகிறது.

• கடந்த சில வருடங்களாகவே இந்த FMCG எனப்படும் அன்றாடம் விற்பனையாகும் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை டிவியில் விளம்பரம் வருமே.. அந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களுக்கான விளம்பரங்களை கடைசியாக நீங்கள் டிவியில் எப்போது பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா.? இரண்டு வருடங்களுக்கு முன்பு பதஞ்சலி டிவி விளம்பரங்களில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாகவே பதஞ்சலி இறங்கு முகத்தில் இருக்கிறது. அரசின் சப்போர்ட்டோடு படு வேகமாக முன்னேறி வந்த பதஞ்சலியே வீழ்ச்சியை சந்திக்கிறது என்பதுதான் அபாயத்துக்கான அறிகுறி.

அன்றாடப் பொருட்களை விடுங்கள்.. பதஞ்சலி ஆயுர்வேதா எனப்படும் பதஞ்சலி மருந்துகளின் விற்பனையே 2018 ல் இருந்து பத்து சதவீதம் வீழ்ச்சியில்தான் இருக்கிறது. பதஞ்சலி போன்ற கம்பெனிகள் மட்டுமல்ல.. ராட்சத நிறுவனமான ஹிந்துஸ்தான் லீவரின் விற்பனையே இறங்குமுகத்தில்தான் உள்ளது. நகர்ப்புறங்களில் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களான சோப்பு, டூத் பேஸ்ட், தலைக்குத் தேய்க்கும் எண்ணை, பிஸ்கட்டுகள் போன்ற எண்ணற்ற பொருட்களின் விற்பனை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. விற்பனை சரிவதால் கம்பெனிகளின் லாபமும் சரிந்து வருகிறது. இந்த வீழ்ச்சிக்குள்தான் அன்றாட தேவைப் பொருட்களோடு, இரு சக்கர வாகனங்கள், குறைந்த விலை கார்கள் ஆகியவை வருகின்றன.

இப்போது அடுத்த பிரச்சினையான போக்குவரத்து வருகிறது. இந்திய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.. நவம்பர் 2018 க்கு மேல் வாடகை லாரிகளின் வருமானம் 15% சரிந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. பெருமளவு இடமாற்றம் செய்யும் fleet வகை போக்குவரத்து அதை விட அதிகமான சரிவைச் சந்தித்திருக்கிறது. அனைத்து 75 தேசிய வழித் தடங்களிலும் போக்குவரத்து சொல்லத்தக்க அளவு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் பெருமளவு போக்குவரத்தான fleet transportation கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 25% முதல் 30% வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்றால் நிலைமையின் தீவிரத்தை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். ஆக லாரி ஓனர்களின் வருவாயும் முப்பது சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

ஆக அடுத்த காலாண்டில் பெரிய பாதிப்பு காத்திருக்கிறது. பெருமளவு இடமாற்றம் செய்யும் பல போக்குவரத்து அதிபர்கள் தங்கள் மாதாந்திர தவணையை கட்ட முடியாமல் போகக் கூடிய ஆபத்து காத்திருக்கிறது. அது மேலும் ஒரு வீழ்ச்சிக்கு வித்திடப் போகிறது.

• சரக்கு இட மாற்றத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த பெரும் வீழ்ச்சிக்கு காரணம் தொழில்ரீதியான உற்பத்தி பெரும் சரிவை சந்தித்திருப்பதுதான். அதாவது தேவைகள் குறைந்துவிட்டதால் உற்பத்தி குறைந்துவிட்டது. உற்பத்தி இல்லாததால் லாரி போக்குவரத்தின் தேவையும் குறைந்துவிட்டது. அவ்வளவுதான். நகரங்களிலும் சரி, கிராமங்களிலும் சரி, நுகர்வோர் (consumers) தங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய உற்பத்தியும் மிக மிக மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரலுக்குப் பிறகு விவசாயப் பொருட்களின் தேவை கூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். பழம் மற்றும் காய்கறிகளின் டிமாண்ட் கூட 20% குறைந்துவிட்டது.

• இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் போகப் போக ஒவ்வொரு துறையாக அடி வாங்கப் போகின்றன. ஆகவே மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராக இருங்கள் நண்பர்களே..

நன்றி : நந்தன் ஸ்ரீதரன்
----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.19

Astrology: Quiz: புதிர்: 13-9-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 13-9-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து "ஜாதகர் மக நட்சத்திரக்காரர். அவருக்கு 27  வயது நடக்கும்போது தொடர்ந்து 6 ஆண்டு காலம் மன அமைதியின்றி தவித்தார். அதற்குப் பிறகு தீவிர
சிகிச்சைக்குப்பின் எல்லாம் சரியானது. அதாவது அவருக்கு சூரிய மகா திசை நடந்த காலத்தில் மன அமைதியில்லாமல் போனது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?" ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி சந்திரன் 2ல் - சூரியனுடைய வீட்டில். சந்திரன் லக்கினாதிபதி மட்டுமல்ல மனகாரகனும் (Lord of the mind) அவன்தான். அவன் அமர்ந்த இடத்திற்குரிய சூரியன் 11ல். அதுவும் பரம
எதிரியான சனீஷ்வரனின் பார்வையுடன்.(3ம் பார்வை) சூரிய மகாதிசை நடந்தபோது அதே சனியின் பார்வையால்தான் மன அமைதியில்லாமல் போனது. The Lagna Lord Moon (Authority for mind) is the dispositor (Ruler) of the sun
in a maraka house. சூரிய திசை முடிந்து சந்திர திசை துவங்கியவுடன்
நிலைமை சரியானது.

இந்தப் புதிரில் 6 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 20-9-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில்
மன நிம்மதியின்மை ஏற்பட்டதிற்கான காரணங்கள்
1 . குரு உச்சமான கடக லக்கின ஜாதகம். மனம் பற்றிய இயல்பை பார்ப்பதற்கு ஐந்தாம் இடத்தை பார்க்க வேண்டும்.

இந்த ஜாதகருக்கு ஐந்தாம் இடத்து அதிபதி செவ்வாய் ஆகும். இந்த செவ்வாய் ராசி கட்டத்தில் சனியின் ஏழாம் பார்வை பெற்று மோசமான நிலை அடைந்து உள்ளது. கடக லக்கினத்திற்கு சனி தீய கிரகமாகும்.
2 மேலும் நவாம்ச கட்டத்திலும் செவ்வாய் ராகுவின் பிடியில் நீசமாக உள்ளது.
3 மன காரகன் சந்திரனும் நவாம்ச கட்டத்தில் ஆறில் மறைந்து உள்ளது. ஆறாம் இடம் நோய் பற்றிய ஸ்தானமாகும்.
அதனால் சந்திரன் நின்ற சிம்ம லக்கின அதிபதி சூரிய தசையில் மனம் பாதிக்க பட்டது. மேலும் சுக ஸ்தானமும் ( நான்காம் இடம் )கேது அமர்ந்து ராகு பார்வை பெற்று உள்ளது. அதன் அதிபதி சுக்கிரனும் லக்கினத்திற்கு பனிரெண்டில் அமர்ந்து சுகத்தை பாதித்தது.
4 இந்த நிலை ஆறாம் இடத்து அதிபதி லக்கினத்தில் உச்ச மானதால் நிலை பின்னர் சரியானது. குரு கடக லக்கினத்திற்கு சுப கிரகமாகும். இவரே ஒன்பதாம் இடத்து அதிபதியும் ஆவார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, September 13, 2019 7:22:00 AM
------------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சந்திரன் இரண்டாம் வீட்டில் (சூரியனின் வீட்டில்)
2 .சந்திரன் மனகாரகன்
3 .சந்திரன் ஆறாம் அதிபதி குருவிற்கும் செவ்வாய்க்கும் இடையில் மாட்டிக்கொண்டுள்ளார்
ஆகவே சந்திரன் தான் அமர்ந்த சூரியனின் திசையில் மன அமைதியின்மையை கொடுத்துள்ளார்
4 .செவ்வாய் கடகத்திற்கு யோகக்காரன் ஆயினும் தீய கிரகம் என்பது குறிப்பிட தக்கது ௫.லக்கினத்தில் மாந்தி
5 எட்டாம் அதிபதி சனிஈஸ்வரனின் மூன்றாம் பார்வை சூரியனின் மீது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, September 13, 2019 11:47:00 AM
---------------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 17 மே மாதம் 1967 அன்று காலை 10 மணி 42 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று
எடுத்துக்கொண்டேன்.
கடகலக்கினத்திற்கு ஐந்தாம் இடம் விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்.செவ்வாய் தன எதிரியான சனியின் நேரடிப்பார்வையில் உள்ளார். மேலும் ஐந்தாம் அதிபன் செவ்வாய் வக்கிரம் அடைந்துள்ளார்.
புதன் புத்திக்குக் காரகன். இந்த புதன் சூரியனால் எரிக்கப்பட்டார்.மேலும் புதனுக்கும் சனியின் பார்வை.சூரியனுக்கும் சனியின் பார்வை.
மனோகாரகனான சந்திரனை மாந்தியும் செவ்வாயும் சூழ்ந்துள்ளது.
தூக்கம் இடத்திற்கான(12) புதன் அஸ்தங்கத மடைந்து ஐந்தாம் இடத்தினைப்பார்த்தது. அதனால் ஜாதகர் தூக்கம் இன்றித்
தவித்து மனோவியாகூலம் அடைந்திருப்பார்.
ஐந்தாம் அதிபன் செவ்வாய் ஹஸ்தம் நட்சத்திரத்தில் நிற்பதால்
நட்சந்திர அதிபன் சந்திரனைப்போல இயங்குவார்.
செவ்வாய் பலமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மனம் கலங்க வாய்ப்பு
அதிகம். சூரிய தசா, செவ்வாய்புக்தி(ஐந்தாம் அதிபன் புகதி) அவருக்கு
மனோ வியாதியைக்கொடுத்தது.
Friday, September 13, 2019 12:51:00 PM
-----------------------------------------------------------
4
Blogger seethalrajan said...
ஐயா வணக்கம்,
கொடுக்க பட்டுஉள்ள ஜாதகத்தில், 2ம் அதிபதி சூரியன் 3,12க்கு உரிய மிகவும் கெட்ட இரண்டு ஆதிபத்யம் வைத்துஉள்ள புதன் வுடன் கூட்டு, சனி பார்வை, நவாம்சத்தில் கேதுவுடன் சனி வீட்டில் எல்லாம் சேர்த்து சூரியனின் கரகத்துவமான ஆன்மாவையும், உயிர் சக்தி பாதிக்கப்பட்டது. நன்றி.
9840055374.
Friday, September 13, 2019 10:11:00 PM
-------------------------------------------------------
5
Blogger Lokes said...
பிறப்பு : 17/05/1967, 10:50 AM, சென்னை.
கடக லக்கினமாகி லக்கினத்தில் மாந்தியுடன் 6, 9 ஆம் அதிபதி குரு சனி சாரத்தில் உச்சமாகி , லக்கினாதிபதியும் மனக்காரகனுமான சந்திரன் சர லக்கினத்திற்கு மாரகஸ்தானமான 2 இல் அமர்ந்து கேது சாரம்வாங்கி, கேதுவுக்கு வீடுகொடுத்த சுக்ரன் விரயஸ்தானத்தில் அமர்ந்த ஜாதகம். மாரகஸ்தான அதிபதி சூரியன் அம்சத்தில் சனி வீட்டிலமர்ந்து
ராசியில் திக்பலத்திற்கு அருகில் சுய சாரத்தில் 8 ஆம் ஸ்தானாதிபதியும் தன் அதிஎதிரியுமான சனி பார்வை பெற்று தன் அதிநற்பு கிரகமான 3, 12 ஆம் ஸ்தானாதிபதி புதனுடன் பாதகஸ்தானமான 11ஆம் வீட்டில் அமர்ந்து தசை நடத்தியதால் மாரகத்திற்கு நிகரான மன அமைதியின்மையை தந்தார்.
ஆயுள் கண்டமில்லாமல் நோய் குணமடைய காரணம் குரு
பாக்கியஸ்தனாதிபதியாகி உச்சதிக்பலம் பெற்று லக்கினதிலமர்ந்து வலுப்படுத்தி 8 ஆம் ஸ்தானாதிபதியும் ஆயுள் காரகனுமான சனியை 9 ஆம் பார்வையில் வைத்திருப்பது. பாவகர்தாரி யோகத்தில் சந்திரன் இருந்தாலும் அவர் வளர்பிறையாகி 8 ஆம் வீட்டை பார்க்கிறார்.
Saturday, September 14, 2019 12:57:00 AM
------------------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. கடக இலக்கினம், சிம்ம இராசி ஜாதகம்.
2. ஜாதகர் சூரிய திசையில் மன அமைதி இன்றி இருந்தமைக்கு காரணம் பாதக ஸ்தானத்தில் சூரியன், மூன்றாமிட அதிபதி புதன் அமர்ந்திருப்பது. மூன்றாமிட அதிபதி புதனுடன் கூடிய சூரியனை அஷ்டமாதியும் பகையுமான சனி பார்ப்பது ஆகியவை ஆகும்.
3. அடுத்த வந்த லக்னாதிபதி மற்றும் மனோகாரகன் சந்திரன் திசையில் நலம் பெற்றார்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக....
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, September 14, 2019 10:50:00 AM
-----------------------------------------------------------
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.19

Astrology: Quiz: புதிர்: மன நிம்மதியின்மைக்குக் காரணம் என்ன?


Astrology: Quiz: புதிர்: மன நிம்மதியின்மைக்குக் காரணம் என்ன?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் மக நட்சத்திரக்காரர். அவருக்கு 27 வயது நடக்கும்போது தொடர்ந்து 6 ஆண்டு காலம் மன அமைதியின்றி தவித்தார். அதற்குப் பிறகு சிகிச்சைக்குப்பின் எல்லாம் சரியானது.
அதாவது அவருக்கு சூரிய மகா திசை நடந்த காலத்தில் மன அமைதியில்லாமல் போனது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
ஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்

சரியான விடை 15-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.19

நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....!!!!!


நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....!!!!!

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால், ஓய்வு எடுக்க எண்ணினார். அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம், நேர்மையானவரிடம், உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார். ஒரு புதுமையான முறையில் நிர்வாகம் செய்திட ஒரு உண்மையான உழைப்பாளியை தேர்ந்தெடுக்க எண்ணினார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்: அன்புள்ள ஊழியர்களே, என்னுடைய ஓய்வுக்குப் பின், உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்குள் நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த பொறுப்பாளி என்றார்.

இப்போது என் கையில், பலதரப்பட்ட, பல வகைகளை சார்ந்த, ஏராளமான விதைகள் இருக்கின்றன. யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது.

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு, தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து, அடுத்த வருடம் இதே நாளில், என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ, அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும் இராமசாமிக்கும் ஒரு விதை கிடைத்தது. அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் மனைவியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

அந்த அம்மையாரும் உடனே ஒரு தொட்டியும், மண்ணும், சாணமும், தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து, அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் இராமசாமியின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம். செடி வளரவே இல்லை, நாட்கள் உருண்டோடின. ஆறு மாதங்கள் ஆனது.

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார்.

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது.

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

இராமசாமியும் தன் மனைவியிடம் காலி  தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார்.

அந்த அம்மையார் அவரை சமாதானப்படுத்தி சொன்னார்: நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள். உங்கள் நேர்மை, உழைப்பு ஒரு போதும் வீணாகாது என்றார். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

இராமசாமி செட்டியாரும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. பல்வேறு விதமான பூக்கள் பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கின.

இராமசாமியின் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை. அழகு என்றார். எல்லாரும் செம்மையாக, செழிப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் என்று புகழ்ந்தார்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.

அங்கிருந்த ஒவ்வொரு ஊழியரும் தனக்குக்குதான் பொறுப்பாளர் பதவி கிடைக்கப் போகிறது என்ற மகிழ்வில் இருந்தனர். அச்சமயம் இராமசாமி மட்டும் மிகவும் அமைதியாக கடைசி வரிசையில் நின்றிருந்தார். அவரை அருகே வருமாறு அழைத்தார் அந்த முதலாளி.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார், என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் நேர்மைவாதியான, உழைப்பாளியான இராமசாமி.

முதலாளி இராமசாமியிடம் உங்கள் செடி எங்கே? என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விபரமாக கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னார் இராமசாமி.

முதலாளி இராமசாமியைத் தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார்.

பிறகு இராமசாமியை அழைத்து, தோளில் கையை போட்டுக் கொண்டு: நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

இராமசாமி செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி. தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே! பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்? என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா? அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled Seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால், அது முளைக்க இயலாது. அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ஆனால் இராமசாமி மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார். ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும், நேர்மையும், தர்மத்தை பாதுகாக்கும், என்ற கொள்கையை நீருபித்த இராமசாமிக்குக் கிடைத்தது மிகப் பெரிய பதவி.

நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும். புகழ் வர வேண்டாம்.

ஏனெனில், அந்த புகழுக்கு உரியவன் ஆண்டவன் மட்டுமே!
-----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!