மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.15

மனதிற்கான மருந்துகள்


மனதிற்கான மருந்துகள்

மனவளக் கட்டுரை

1) செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக்
கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்கா
விட்டால் - யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப்
 பணத்தைச் செலவழியுங்கள்.

2. இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் enjoy பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்

3. முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்துப்
பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.

4.உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக்குழந்தைகளையோ,
நீங்கள் செத்தபிறகுதான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும்
என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கிவிடாதீர்கள்.

5. நீங்கள் செத்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ
அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள்
என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப்போவதில்லை.

6. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம் சொத்து எல்லாம்
ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும்
அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை
மனதில் வையுங்கள்!

7. உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலைவிதிப்படிதான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யூ!

8. நீங்கள் மாங்கு மாங்கென்று என்னதான் உழைத்தாலும், தினசரி
வாழ்க்கை  ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த
காலத்தில் இருந்து சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம்வரை
ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரசியம் எங்கே இருக்கும்?
ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி
இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

”வந்ததை வரவில் வையுங்கள்
சென்றதை செலவில் வையுங்கள்”
அதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்த மகிழ்ச்சிக்கான
சூத்திரம்!

9. எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய்,
நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!.

10. உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள்
வாழ்க்கை தனிமைப்பட்டுப் போய்விடும்!

11. மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும்,
நடப்பிற்கும் உள்ள இடைவெளிதான் மன அழுத்தத்தை உண்டு
பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக அதிகமாக மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

12. அடிக்கு அடி, சரிக்குச் சரி, என்ற போட்டி மனப்பான்மையை
உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக்
கடிக்க முடியாது. ஆகவே உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள்.
அதுதான் நல்லது.

சுருக்கமாக, எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச்
செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
 நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்!

அன்புடன்,
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.4.15

நகைச்சுவை: நன்றாக ஏமாற்றுகிறார்கள்!


நகைச்சுவை: நன்றாக ஏமாற்றுகிறார்கள்!

கிரிக்கெட்டில் நம்மை நன்றாக ஏமாற்றுகிறார்கள்! எப்படித் தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான் இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,ஆனா 10 பேர் தான் Out ஆகி இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு Batsman அவுட்.., ரெண்டு கையயும் தூக்கினா Six.. ( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும்தானே…! ஆனா அவரே ஏன் Out
பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..அப்போ, மீதி ஒவர்
எல்லாம் பவர் இல்லாம இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு சொல்வாங்க.. ஆனா அவரும்
மேட்ச் முடிஞ்சா - Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்கப்
போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க..ஆனா கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும் Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை
மட்டும் “OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை மட்டும் தான் ” Man of the Match “-
ன்னு சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம் Women-ஆ..?
சொல்லுங்கள்

படித்ததில் பிடித்தது!

அன்புடன்,
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.4.15

Quiz.no.82 Answer: கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?


Quiz.no.82 Answer: கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்?
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்? - அந்தக்
காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

படம்: மணப்பந்தல். ஆண்டு 1962
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
=========================================
புதிர் எண் 82ற்கான விடை

28.4.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், ஒரு ஜாதகத்தைக் கொடுத்து மூன்று கேள்விகள் கேட்டிருந்தேன். கேட்கப் பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகர் பிறந்த தேதி என்ன?
2. ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
3. அந்தக் கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலைச் செய்தது?

சரியான பதில்:
1. அது ஒரு அம்மணியின் ஜாதகம். அவர் பிறந்ததேதி:  1.7.1969
2. ஏழாம் வீட்டில் (களத்திர ஸ்தானத்தில்) வக்கிரகதியுடன் செவ்வாய்.
12ல் (அயன, சயன, போக ஸ்தானத்தில்) சனீஷ்வரன். இரண்டுமே
கேடானது. அதனால் மணவாழ்க்கைக்கு உரிய அமைப்பு கேடாக
இருந்தது.
3.அம்மணிக்குச் சிறிய வயதில் திருமணமானது. ஆனால் திருமண வாழ்வு சோபிக்கவில்லை. சோகத்தில் முடிந்தது.

விவாகம் ரத்தும் ஆனது.22 வயதில் திருமணமானது. 26 வயதில்
விவாகம் ரத்தானது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!



ரிஷப லக்கின ஜாதகம்.
ஏழாம் வீட்டில் செவ்வாய். அதுவும் வக்கிரகதியில் (Rotrogation)
குரங்கு சேட்டைகளைச் செய்யும்.
அதுவும் கள் குடித்த குரங்கு என்ன செய்யும்.?
அதி மோசமான சேட்டைகளைச் செய்யும்.
7ல் உள்ள செவ்வாய் திருமணத்திற்குக் கேடானது.
அதுவும் வக்கிரகதியில் இருக்கும் செவ்வாய் அதிகக் கேடானது.
ஜாதகிக்கு ராகு திசை துவங்கியவுடன் திருமணம் சிறப்பாக நடந்தது.
ஆனால் அதே ராகு அவரை மகிழ்ச்சியாக வாழ்விடாமல் பிணக்கத்தை
உண்டு பண்ணி விவாகத்தையும் ரத்தாக்கி விட்டது.

சுபக்கிரகமான குருபகவான், கேதுவுடன் கூட்டாக இருப்பதோடு,
ராகுவின் பார்வையிலும் இருப்பதால், அவரும்  ஒன்றும் தலையிட்டுச்
சரி பண்ண முடியாத நிலையில் இருந்துவிட்டார்.

கேடான விஷயங்கள் எல்லோருடைய ஜாதகத்திலும் இருக்கும்.
மிகவும் கேடான விஷயம் எது என்பதுதான் முக்கியம்.
இந்த ஜாதகத்தில் மிகவும் கேடான விஷயம் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பதுதான்.
நிறையப் பேர்கள் ஜாதகியின் புத்திர பாக்கியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
பள்ளிக்குப் போவதுதான் முதல் பாக்கியம். படித்துப் பட்டம் வாங்குவது இரண்டாவது விஷயம். பள்ளிக்கே போகவில்லை எனும்போது.
பட்டம் பெறாததைக் குறை சொல்வதில் பயனில்லை.
எட்டாம் வீட்டுக்காரன் குரு தன் வீட்டிற்குப் 10ல் அமர்ந்து லக்கினத்தையும், லக்கினாதிபதியையும் தன் பார்வையில் வைத்திருப்பதால், ஜாதகருக்கு ஆயுள் குறைபாடும் இல்லை!

போட்டியில் 30 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில்
23 பேர்கள் மட்டும் ஜாதகரின் பிறந்த தினத்தைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அது 1.7.1969
முக்கியமான கணிப்பை எழுதியவர்களுக்கு நட்சத்திரக் குறீயீடு கொடுத்துள்ளேன். பலனை ஒட்டி எழுதியவர்களையும்
கீழே சேர்த்துள்ளேன். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------
1
//////OpenID guest2015 said...
பிறந்த தேதி ‍
ஜுலை 1 1969 3.17 AM
ஜாதகத்தில் உள்ள கேடான அம்சங்கள்.
லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது. லக்னாதிபதிக்கும் அதே நிலைமை.
எட்டாம் அதிபதி (மிக வலுவாக 8 பரல்கள் கொண்ட) குருவின் ஒன்பதாம் பார்வை லக்னம்‍‍ மற்றும் லக்னாதிபதியின்
மேல். அத்தோடு கேதுவின் கூட்டணி.
ஏழில் வக்கிர செவ்வாய் ஆட்சி. அதன் ஏழாம் பார்வை லக்னத்தின் மேல்.இரண்டில் சூரியன். சனி செவ்வாயின் பார்வை
இரண்டாம் வீட்டின் மேல்.
ஒன்பதாம் வீட்டில் (பாதக வீடு) மாந்தி மற்றும் சந்திரன். அந்த வீட்டின் அதிபதி சனியின் பத்தாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மேல்.
சுக்கிரனும் சனியும் 1/12 என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
மிக கேடான அமைப்பு இரண்டு, ஐந்து, ஏழில் பாப கிரகங்கள். ஒன்பதில் மாந்தி குழந்தைகளால் மனக்கஷ்டம் வரலாம்.
தாய், தந்தை ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். கண் பார்வை கோளாறு ஏற்பட்டிருக்கலாம். ராகு திசையில்
திருமணம் நிலைக்காமல் போயிருக்கலாம் அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.
thanks
sree
Monday, April 27, 2015 12:56:00 PM/////
--------------------------------------------
2
/////Blogger Ravichandran said...
Ayya,
1. DOB: 1-July-1969, 4AM Chennai
2. Two bad reasons: a)Shani is sitting in 12th house, because he is owner for 9th and 10th houses.b) 8th house
hemmed by Chevvai & Mandhi. So he would have got minimal life(Arpa Ayul).
3. a)This person might not got all in luckily in his life, because Shani is sitting in 12th house(Shani is lucky house owner in his horoscope). Moreover he would not have got sexual desires in his life, because shani is sitting in his 12th house.
b) He would have undergone lot of struggles because of 8th house is under Papa Karthari Yogam.
Your Student,
Trichy Ravi
Monday, April 27, 2015 2:18:00 PM//////
----------------------------------------------
3
*****//////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz No.82:
1. He/she has born on 01.07.1969 at04:00 to 05:00am.
2. Saturn is placed in 12th place. This is the bad sign of this given horoscope.
3. When Saturn is situating 12th place, It makes Baba kathri Yoga for Lagna and Lagna lord. The Native has to struggle in their life.
4. Saturn is affecting couch pleasure as well as family life (Second house) and also second house lord Mercury is placing 12th place from its own house.
5. Saturn is the Yogakaraga as well as karmakaraga(Authority of 10th house). Hence, The native couldn't get better job in their life. It affects his life too.
6. Hence, Saturn is so weak and affects the Native's family life as well as profession.
With kind regards,
Ravichandran M.//////
------------------------------------------------
4
*****/////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ஜாதகர் பிறந்த தேதி – 01.07.1969 நேரம் 3.30 AM
லக்னமும் லக்னாதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு செவ்வாயின் நேரடிப்
பார்வை வேறு. 7ல் செவ்வாய் இருப்பது தாமத திருமணத்தைக் குறிக்கும்.
குடும்ப ஸ்தானமும், சந்திரனும் சனியின் பார்வை இருக்கிறது. அது குடும்ப வாழ்க்கையில் சண்டை ச்ச்சரவு மற்றும் பிரச்சினையை உண்டு பண்ணி பிரிவினையை ஏற்படுத்தும். சனி 12ல் இருப்பதால் ஜாதகர் தனியே வாழ நேரிடும்.லக்னத்துக்கும், லக்னாதிபதிக்கும், சந்திரனுக்கும் குரு பார்வை இருந்தாலும் குரு கேதுவாலும் ராகுவாலும் பாதிக்கப் பட்டிருக்கிறார்.
5ம் வீட்டில் குருவும் கேதுவும் சேர்ந்திருப்பது நல்லதல்ல. குரு 5ல் இருப்பதால் காரகோ பாவ நாஸ்தி. கேது
இருப்பதால் புத்திர நாஸ்தி
Monday, April 27, 2015 4:41:00 PM////
-------------------------------------------
5
*****/////Blogger thozhar pandian said...
ஜாதகர் ஜூலை 1 1969ம் ஆண்டு பிறந்தவர்.
ஜாதகத்தில் சற்று வலுவில்லாத அமைப்பு என்று பார்த்தால் இடப இலக்கினத்திற்கு யோககாரகரான சனி நீசம் அடைந்திருப்பது, பாக்கிய ஸ்தானத்தில் மாந்தி இருப்பது மற்றும் மாரகாதிபதி செவ்வாய் 7ம்
இடத்தில் இருந்து இலக்கினத்தை தனது நேரடி பார்வையில் வைத்து இருப்பது. இவற்றை விட கேடு என்றால் இலக்கினமும்
இலக்கினாதிபதி மற்றும் களத்திரகாரகரான சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருப்பது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை இல்லாமல் போனது. அப்படியே திருமணம் நடந்திருந்தாலும் அதில் மகிழ்ச்சி
இருந்திருக்காது. புதனும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருப்பதால், கல்வியிலும் சிக்கல் இருக்கும். 14 வயதிற்கு
மேல் வரும் செவ்வாய் மகாதசை ஜாதகருக்கு பல சிரமங்களை கொடுத்திருக்கும். ஒரே ஆறுதல் இலக்கினத்திற்கும்
இலக்கினாதிபதிக்கும், சந்திரனுக்கும், புதனுக்கும் குரு பார்வை இருப்பதுதான்.
Monday, April 27, 2015 11:03:00 PM///////
--------------------------------------------
6
////Blogger Siva Radjane said...
1.ஜாதகர் பிறந்த தேதி என்ன?
01.07.1969
2.ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
ஜாதகரின் 2 ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜாதகரின் 2 ம் வீட்டில் சூரியன் அமர்ந்து ,அந்த வீட்டை பாக்கியாதிபதி சனி’யின் நீச பார்வை. மேலும் 2 ம் வீட்டிற்கு
12 ம் அதிபதியின் 8 ம் பார்வை. ‘2 ம் அதிபன் புதன் ‘2’க்கு 12 ஸ்தானமான லக்கினத்தில் மறைந்து பாப கர்த்தாரியில்
உள்ளார்.
மேலும் சந்திரனுக்கு ‘2’ அதிபனான சனி’ நீசத்தில்..
3.அந்த கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலை செய்தது?
a. ஜாதகரின் வாக்கு ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாதகர் பிறவியிலேயே வாய் பேச வராதவர். கண்
பார்வை குறைபாடு உடையவராகவும் இருப்பார்..
b. 2 ம் வீடு பாதிப்பில் உள்ளதால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அமைந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கை நிலைத்திருக்க வாய்ப்பில்லை.
க.சிவராஜன்
(பாண்டிச்சேரி)
Monday, April 27, 2015 11:58:00 PM/////
----------------------------------------------
7
////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
1. பிறந்த தேதி: 1‍/07/1969 காலை 03.30 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்துள்ளார். ( இடம்:
சென்னை)
2. கேடான அம்சம்: குடும்பஸ்தானம், (2ம்வீடு பலவீனமாக உள்ளது).
3. வாழ்க்கையில் குடும்பம் இல்லாமல் அமைந்து விட்டது.
Tuesday, April 28, 2015 3:51:00 AM//////
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!




Quiz.no.82 Answer: கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்? 
அந்தக் காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன் 

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே.
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா?
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா?
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் க‌ண்களினாலே.
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்? - அந்தக்
காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்
(உனக்கு மட்டும்... சொல்லி விடாதே)

படம்: மணப்பந்தல். ஆண்டு 1962
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
=========================================
புதிர் எண் 82ற்கான விடை

28.4.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், ஒரு ஜாதகத்தைக் கொடுத்து மூன்று கேள்விகள் கேட்டிருந்தேன். கேட்கப் பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகர் பிறந்த தேதி என்ன?
2. ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
3. அந்தக் கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலைச் செய்தது?

சரியான பதில்:
1. அது ஒரு அம்மணியின் ஜாதகம். அவர் பிறந்ததேதி:  1.7.1969
2. ஏழாம் வீட்டில் (களத்திர ஸ்தானத்தில்) வக்கிரகதியுடன் செவ்வாய்.
12ல் (அயன, சயன, போக ஸ்தானத்தில்) சனீஷ்வரன். இரண்டுமே
கேடானது. அதனால் மணவாழ்க்கைக்கு உரிய அமைப்பு கேடாக
இருந்தது.
3.அம்மணிக்குச் சிறிய வயதில் திருமணமானது. ஆனால் திருமண வாழ்வு சோபிக்கவில்லை. சோகத்தில் முடிந்தது.

விவாகம் ரத்தும் ஆனது.22 வயதில் திருமணமானது. 26 வயதில்
விவாகம் ரத்தானது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!



ரிஷப லக்கின ஜாதகம்.
ஏழாம் வீட்டில் செவ்வாய். அதுவும் வக்கிரகதியில் (Rotrogation)
குரங்கு சேட்டைகளைச் செய்யும்.
அதுவும் கள் குடித்த குரங்கு என்ன செய்யும்.?
அதி மோசமான சேட்டைகளைச் செய்யும்.
7ல் உள்ள செவ்வாய் திருமணத்திற்குக் கேடானது.
அதுவும் வக்கிரகதியில் இருக்கும் செவ்வாய் அதிகக் கேடானது.
ஜாதகிக்கு ராகு திசை துவங்கியவுடன் திருமணம் சிறப்பாக நடந்தது.
ஆனால் அதே ராகு அவரை மகிழ்ச்சியாக வாழ்விடாமல் பிணக்கத்தை
உண்டு பண்ணி விவாகத்தையும் ரத்தாக்கி விட்டது.

சுபக்கிரகமான குருபகவான், கேதுவுடன் கூட்டாக இருப்பதோடு,
ராகுவின் பார்வையிலும் இருப்பதால், அவரும்  ஒன்றும் தலையிட்டுச்
சரி பண்ண முடியாத நிலையில் இருந்துவிட்டார்.

கேடான விஷயங்கள் எல்லோருடைய ஜாதகத்திலும் இருக்கும்.
மிகவும் கேடான விஷயம் எது என்பதுதான் முக்கியம்.
இந்த ஜாதகத்தில் மிகவும் கேடான விஷயம் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பதுதான்.
நிறையப் பேர்கள் ஜாதகியின் புத்திர பாக்கியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
பள்ளிக்குப் போவதுதான் முதல் பாக்கியம். படித்துப் பட்டம் வாங்குவது இரண்டாவது விஷயம். பள்ளிக்கே போகவில்லை எனும்போது.
பட்டம் பெறாததைக் குறை சொல்வதில் பயனில்லை.
எட்டாம் வீட்டுக்காரன் குரு தன் வீட்டிற்குப் 10ல் அமர்ந்து லக்கினத்தையும், லக்கினாதிபதியையும் தன் பார்வையில் வைத்திருப்பதால், ஜாதகருக்கு ஆயுள் குறைபாடும் இல்லை!

போட்டியில் 30 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில்
23 பேர்கள் மட்டும் ஜாதகரின் பிறந்த தினத்தைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அது 1.7.1969
முக்கியமான கணிப்பை எழுதியவர்களுக்கு நட்சத்திரக் குறீயீடு கொடுத்துள்ளேன். பலனை ஒட்டி எழுதியவர்களையும்
கீழே சேர்த்துள்ளேன். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------
1
//////OpenID guest2015 said...
பிறந்த தேதி ‍
ஜுலை 1 1969 3.17 AM
ஜாதகத்தில் உள்ள கேடான அம்சங்கள்.
லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது. லக்னாதிபதிக்கும் அதே நிலைமை.
எட்டாம் அதிபதி (மிக வலுவாக 8 பரல்கள் கொண்ட) குருவின் ஒன்பதாம் பார்வை லக்னம்‍‍ மற்றும் லக்னாதிபதியின்
மேல். அத்தோடு கேதுவின் கூட்டணி.
ஏழில் வக்கிர செவ்வாய் ஆட்சி. அதன் ஏழாம் பார்வை லக்னத்தின் மேல்.இரண்டில் சூரியன். சனி செவ்வாயின் பார்வை
இரண்டாம் வீட்டின் மேல்.
ஒன்பதாம் வீட்டில் (பாதக வீடு) மாந்தி மற்றும் சந்திரன். அந்த வீட்டின் அதிபதி சனியின் பத்தாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மேல்.
சுக்கிரனும் சனியும் 1/12 என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
மிக கேடான அமைப்பு இரண்டு, ஐந்து, ஏழில் பாப கிரகங்கள். ஒன்பதில் மாந்தி குழந்தைகளால் மனக்கஷ்டம் வரலாம்.
தாய், தந்தை ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம். கண் பார்வை கோளாறு ஏற்பட்டிருக்கலாம். ராகு திசையில்
திருமணம் நிலைக்காமல் போயிருக்கலாம் அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புள்ளது.
thanks
sree
Monday, April 27, 2015 12:56:00 PM/////
--------------------------------------------
2
/////Blogger Ravichandran said...
Ayya,
1. DOB: 1-July-1969, 4AM Chennai
2. Two bad reasons: a)Shani is sitting in 12th house, because he is owner for 9th and 10th houses.b) 8th house
hemmed by Chevvai & Mandhi. So he would have got minimal life(Arpa Ayul).
3. a)This person might not got all in luckily in his life, because Shani is sitting in 12th house(Shani is lucky house owner in his horoscope). Moreover he would not have got sexual desires in his life, because shani is sitting in his 12th house.
b) He would have undergone lot of struggles because of 8th house is under Papa Karthari Yogam.
Your Student,
Trichy Ravi
Monday, April 27, 2015 2:18:00 PM//////
----------------------------------------------
3
*****//////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz No.82:
1. He/she has born on 01.07.1969 at04:00 to 05:00am.
2. Saturn is placed in 12th place. This is the bad sign of this given horoscope.
3. When Saturn is situating 12th place, It makes Baba kathri Yoga for Lagna and Lagna lord. The Native has to struggle in their life.
4. Saturn is affecting couch pleasure as well as family life (Second house) and also second house lord Mercury is placing 12th place from its own house.
5. Saturn is the Yogakaraga as well as karmakaraga(Authority of 10th house). Hence, The native couldn't get better job in their life. It affects his life too.
6. Hence, Saturn is so weak and affects the Native's family life as well as profession.
With kind regards,
Ravichandran M.//////
------------------------------------------------
4
*****/////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ஜாதகர் பிறந்த தேதி – 01.07.1969 நேரம் 3.30 AM
லக்னமும் லக்னாதிபதியும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு செவ்வாயின் நேரடிப்
பார்வை வேறு. 7ல் செவ்வாய் இருப்பது தாமத திருமணத்தைக் குறிக்கும்.
குடும்ப ஸ்தானமும், சந்திரனும் சனியின் பார்வை இருக்கிறது. அது குடும்ப வாழ்க்கையில் சண்டை ச்ச்சரவு மற்றும் பிரச்சினையை உண்டு பண்ணி பிரிவினையை ஏற்படுத்தும். சனி 12ல் இருப்பதால் ஜாதகர் தனியே வாழ நேரிடும்.லக்னத்துக்கும், லக்னாதிபதிக்கும், சந்திரனுக்கும் குரு பார்வை இருந்தாலும் குரு கேதுவாலும் ராகுவாலும் பாதிக்கப் பட்டிருக்கிறார்.
5ம் வீட்டில் குருவும் கேதுவும் சேர்ந்திருப்பது நல்லதல்ல. குரு 5ல் இருப்பதால் காரகோ பாவ நாஸ்தி. கேது
இருப்பதால் புத்திர நாஸ்தி
Monday, April 27, 2015 4:41:00 PM////
-------------------------------------------
5
*****/////Blogger thozhar pandian said...
ஜாதகர் ஜூலை 1 1969ம் ஆண்டு பிறந்தவர்.
ஜாதகத்தில் சற்று வலுவில்லாத அமைப்பு என்று பார்த்தால் இடப இலக்கினத்திற்கு யோககாரகரான சனி நீசம் அடைந்திருப்பது, பாக்கிய ஸ்தானத்தில் மாந்தி இருப்பது மற்றும் மாரகாதிபதி செவ்வாய் 7ம்
இடத்தில் இருந்து இலக்கினத்தை தனது நேரடி பார்வையில் வைத்து இருப்பது. இவற்றை விட கேடு என்றால் இலக்கினமும்
இலக்கினாதிபதி மற்றும் களத்திரகாரகரான சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருப்பது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை இல்லாமல் போனது. அப்படியே திருமணம் நடந்திருந்தாலும் அதில் மகிழ்ச்சி 
இருந்திருக்காது. புதனும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருப்பதால், கல்வியிலும் சிக்கல் இருக்கும். 14 வயதிற்கு
மேல் வரும் செவ்வாய் மகாதசை ஜாதகருக்கு பல சிரமங்களை கொடுத்திருக்கும். ஒரே ஆறுதல் இலக்கினத்திற்கும்
இலக்கினாதிபதிக்கும், சந்திரனுக்கும், புதனுக்கும் குரு பார்வை இருப்பதுதான்.
Monday, April 27, 2015 11:03:00 PM///////
--------------------------------------------
6
////Blogger Siva Radjane said...
1.ஜாதகர் பிறந்த தேதி என்ன?
01.07.1969
2.ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
ஜாதகரின் 2 ம் வீடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜாதகரின் 2 ம் வீட்டில் சூரியன் அமர்ந்து ,அந்த வீட்டை பாக்கியாதிபதி சனி’யின் நீச பார்வை. மேலும் 2 ம் வீட்டிற்கு
12 ம் அதிபதியின் 8 ம் பார்வை. ‘2 ம் அதிபன் புதன் ‘2’க்கு 12 ஸ்தானமான லக்கினத்தில் மறைந்து பாப கர்த்தாரியில்
உள்ளார்.
மேலும் சந்திரனுக்கு ‘2’ அதிபனான சனி’ நீசத்தில்..
3.அந்த கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலை செய்தது?
a. ஜாதகரின் வாக்கு ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாதகர் பிறவியிலேயே வாய் பேச வராதவர். கண்
பார்வை குறைபாடு உடையவராகவும் இருப்பார்..
b. 2 ம் வீடு பாதிப்பில் உள்ளதால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அமைந்திருந்தாலும் குடும்ப வாழ்க்கை நிலைத்திருக்க வாய்ப்பில்லை.
க.சிவராஜன்
(பாண்டிச்சேரி)
Monday, April 27, 2015 11:58:00 PM/////
----------------------------------------------
7
////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
1. பிறந்த தேதி: 1‍/07/1969 காலை 03.30 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்துள்ளார். ( இடம்:
சென்னை)
2. கேடான அம்சம்: குடும்பஸ்தானம், (2ம்வீடு பலவீனமாக உள்ளது).
3. வாழ்க்கையில் குடும்பம் இல்லாமல் அமைந்து விட்டது.
Tuesday, April 28, 2015 3:51:00 AM//////
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!


27.4.15

Astrology: quiz number.82 உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்!


Astrology: quiz number.82 உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்!

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன் 
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே. 
------------------------------------------------------------------------
Quiz No. 82

27.4.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!


மேலே உள்ள ஜாதகத்தை வைத்து 3 கேள்விகள்:

1. ஜாதகர் பிறந்த தேதி என்ன?
2. ஜாதகத்தில் உள்ள மிகவும் கேடான அம்சம் எது?
3. அந்தக் கேடான அமைப்பு ஜாதகருக்கு என்ன கெடுதலைச் செய்தது?

ஜாதகத்தை அலசி  உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.4.15

கோயிலுக்குள் சென்றபோது கண்டது என்ன?

கோயிலுக்குள் சென்றபோது கண்டது என்ன?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ”வேல் வந்து வினை தீர்க்க ...” என்னும் முருகப்பெருமானின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=================================
வேல் வந்து வினை தீர்க்க ... 
மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி ... 
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )

பால் கொண்டு நீராட்டிப் 
பழம் தந்து பாராட்டி 
பூமாலை போட்டேனடி ...
பூமாலை போட்டேனடி ... 
திருப்புகழ் மாலை கேட்டேனடி 
(வேல் வந்து ... )

பங்குனியில் உத்திரத்தில் ... 
பழநி மலை உச்சியினில் 
கந்தன் என்னைக் கண்டானடி ...
கந்தன் என்னைக் கண்டானடி ... 
எந்தன் சிந்தையில் நின்றானடி 

வேலழகும் மயிலழகும் ... 
வீற்றிருக்கும் பேரழகும் 
காலமெல்லாம் இருக்குமடி ... அந்த 
காட்சி என்றும் இனிக்குமடி 
(வேல் வந்து ... ).

சூலமங்கலம் சகோதரிகள் பாடியது!
=================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.4.15

நகைச்சுவை: தாலிகட்டி கூட்டிக்கிட்டு வர்றதுன்னா என்ன?



நகைச்சுவை: தாலிகட்டி கூட்டிக்கிட்டு வர்றதுன்னா என்ன?

நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் படிக்கலாம். மற்றவர்கள்
பதிவை விட்டு விலகவும். அது நம் இருவருக்குமே நல்லது.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
சாப்ட்வேர் இன்ஜினியர்கள்..

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?
அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் அப்பா.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே
மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல
எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக
கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க
பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு
MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க.
 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம்,
 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச
நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு
சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும்
50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது
வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு
நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய
500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு
ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ்
ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம்.
எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும்
இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது
மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய
அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே
 "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ்
பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக்
குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன
எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு
போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு
"Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா..
-----------------------------------
Tag: படித்ததில் பிடித்தது
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.4.15

குட்டிக்கதை: உண்மை எப்போது பலியாகும்?


குட்டிக்கதை: உண்மை எப்போது பலியாகும்?

ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால்,
அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான்..

மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து,

“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது
தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச்
சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது.
விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான்.

மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான் ,அந்த விவசாயி.பின்பு
சிறிது நேரம் கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம்,
"நண்பா, நீ  எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை
ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.

அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும்."
என்று சொல்லிச் சென்றார். இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,“நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க
முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.

அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத்
தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி
அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.

மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான். அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு
நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க
வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த
ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம்” என்றான்.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....

இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும் உண்மையைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படித்ததில் பிடித்தது.

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.4.15

எத்தனை பெயர்கள் சாமிகளா!


எத்தனை பெயர்கள் சாமிகளா!

48 வகை நீர்நிலைகள் : அனைத்திற்கும் தனித்தனிப் பெயர்கள். தெரிந்துகொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------
1. அகழி (moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர்நிலை.
2.அருவி (water falls) மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது.
3. ஆழ்கிணறு (moat) கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு.
4. ஆறு (river) பெருகி ஓடும் நதி.
5. இலஞ்சி (reservoir of drinking and other purpose) குடிப்பதற்கும் வேறு
வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.
6. உறை கிணறு (ring well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண்
அல்லது பைஞ்சுதையினால் வலையமிட்ட கிணறு.
7. ஊறுணி (drinking well tank) மக்கள் குடிப்பதற்கு உள்ள நீர் நிலை.
8. ஊற்று (spring) அடியிலிருந்து நீர் ஊறுவது.
9. ஏரி (irrigation tank) வேளாண்மைப் பாசன நீர்த் தேக்கம்.
10. ஓடை (brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் எப்பொழுதும்
பொசித்து வாய்க்கால் வழியாக ஓடும் ஒரு நீர் நிலை.
11. கட்டுக் கிணறு (built in well) சரளை நிலத்தில் வெட்டி கல், செங்கலால் உள்சுவர் எழுப்பிய கிணறு.
12. கடல் (sea) மாபெரும் நீர்ப் பரப்பு.
13. கம்வாய் (irrigation tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14. கலிங்கு (sluicae with many ventways) ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கம்.
உடைப்பு எடுக்காமல் முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாகக் கட்டப்பட்டு பலவகைகளால் அடைத்துத் திறக்கக் கூடியதாய் உள்ள நீர்
செல்லும் அமைப்பு.
15. கால் (channel) நீரோடும் வழி.
16. கால்வாய் (supply channel to a tank) ஏரி, குளம், ஊருணிக்கு நீர் ஊட்டும் பாய்கால் வழி.
17. குட்டம் (large pond) பெரிய குட்டை.
18. குட்டை (small pond) சிறிய குட்டம். கால்நடை முதலியவற்றை குளிப்பாட்டும் நீர்நிலை.
19. குண்டம் (small pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர்நிலை.
20. குண்டு (pool) குளிப்பதற்கான சிறு குளம்.
21. குமிழி (rock cut well) நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழும்பி வரச் செய்த குடைக்கிணறு.
22. குமிழி ஊற்று (artesion fountain) அடிநிலத்து நீர் நிலமட்டத்துக்குக் கொப்பளித்து வரும் ஊற்று.
23. குளம் (bathing tank) ஊரின் அருகே மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் நீர்நிலை.
24. குளம் (irrigation tank) கொங்கு மண்டலத்தைச் சார்ந்த இடங்களில்
ஏரிக்கு வழங்கும் பெயர்.
25. கூவம் (abnormal well) ஒழுங்கில் அமையாத கிணறு.
26. கூவல் (hollow) ஆழமற்ற கிணறு போன்ற ஒரு பள்ளம்.
27. கேணி (large well) அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.
28. சிறை (reservoir) தேக்கி வைக்கப்பட்டுள்ள பெரிய நீர்நிலை.
29. சுனை (mountain pool) மலையில் இயல்பாய் அமைந்த நீர்நிலை.
30. சேங்கை (tank with duck weed) பாசிக் கொடி மண்டிய குளம்.
31. தடம் (beautifully constructed tank) அழகாக நான்கு புறமும் கட்டப்பட்ட
குளம்.
32. தனிக்குளம் (tank surrounding tank) கோயிலின் நான்கு புறமும் சுற்றி
அமைந்த அகழி போன்ற நீர் நிலை.
33. தாங்கல் (irrigation tank) இந்தப் பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்.
34. திருக்குளம் (temple tank) கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
35. தெப்பக்குளம் (temple tank with inside pathway along parpet walls) ஆளோடியுடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம்.
36. தொடுகிணறு (digwell) ஆற்றின் உள்ளேயும் அருகிலும் அவ்வப்போது மணலைத் தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37. நடை கேணி (large well with steps on one side) இறங்கிக் செல்லும் படிக்கட்டு அமைந்து பெருங்கிணறு.
38. நீராழி (bigger tank with centre mantapa) நடுவில் மண்டபத்துடன் கூடிய பெரும் குளம்.
39. பிள்ளைக் கிணறு (well in middle of a tank) குளம். ஏரியின் நடுவில் அமைந்த கிணறு.
40. பொங்கு (well with bubbing spring) ஊற்றுக்கால் கொப்புளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
41. பொய்கை (lake) தாமரை முதலியன மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட நீர்நிலை.
42. மடு (deep place in a river) ஆற்றின் இடையேயுள்ள மிக ஆழமான பள்ளம்.
43. மடை (small with single ventway) ஒரு கண் மட்டும் உள்ள சிறு மதகு.
44. மதகு (sluice with many ventways) பல கண்களைக் கொண்ட ஏரிநீர்
வெளிப்படும் பெரிய மடை.
45. மறுகால் (surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46. வலயம் (round tank) வட்டமாய் அமைந்துள்ள குளம்.
47. வாய்க்கால் (small water cource) ஏரி முதலிய நீர் நிலைகளிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறிய கால்.
48. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லும்!
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.4.15

மனதில் என்றும் நிலைத்து இருப்பது எது?


மனதில் என்றும் நிலைத்து இருப்பது எது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்  அவர்கள்
பாடிய “உயிர் கொடுத்த நாள் முதலாய்....” என்ற பாடல் வரிகள் நிலைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
==================================
உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை 
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை 

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை

பயிர் வளர்க்கும் மழையது போல் ... அருளவந்தனை
நான் பட்ட துன்பம் எட்ட ஓட ... பார்வை தந்தனை 

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

பழநி மலையில் வீற்றிருக்கும் ... தண்டபாணியே
ஞானப் பழமாக இனித்திருக்கும் ... அழகு தெய்வமே 

மழலையாக தவழ்ந்து வந்த ... குழந்தை வேலனே 
என் மனத்திலென்றும் நிலைத்து நின்ற ... சுவாமிநாதனே 

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

காட்டுகின்றக் காட்சியெல்லாம் ... கண்டுகொள்கிறேன்
உன் கருணை ஒன்றை நம்பியன்றோ ... காத்திருக்கிறேன் 

ஆட்டுகின்றக் கோலை நோக்கி ... ஆடிவருகிறேன் 
உன் அன்பு என்னும் கோயில் நோக்கி ... ஓடி வருகிறேன் 

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... வணங்க வைத்தனை

முருகா ... முருகா ... முருகா ... முருகா ... .
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.4.15

குட்டிக்கதை: நமது சக்தி நமக்கு எப்போது தெரியும்?



குட்டிக்கதை: நமது சக்தி நமக்கு எப்போது தெரியும்?

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன.
ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து  சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.  பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின்
சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது
நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல
முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான்
மன்னன்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும்  கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து
பறவைக்கு என்ன  ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று
ஆராயுமாறு கட்டளையிட்டான்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம்
எந்தக் குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது
ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்”  என்றான் கண்டிப்புடன்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது.
நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.

“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது
மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம்
தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து  வா” என்று கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.

அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.

“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும்
கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”

மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்…
 “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்று
மில்லை!” என்றார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது
சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான்.அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை
 நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள்.
ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே
இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே
அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம்
சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில்
பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு
போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே
தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு
வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.

நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும்
கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக
சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம்
சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல..👍

இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.4.15

இனிய வாழ்விற்கு சில இலகுவான செயல்பாடுகள்!:


இனிய வாழ்விற்கு சில இலகுவான செயல்பாடுகள்!:

✨தண்ணீர் நிறைய குடியுங்கள்.
✨காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
✨ இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
✨உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
✨தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
✨ நிறைய புத்தகம் படியுங்கள்.
✨ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
✨குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
✨குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
✨உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
✨எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
✨உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
✨ மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
✨நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.
✨அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
✨கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
✨ வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
✨எப்பொழுதும் மகிழச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
✨வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
✨ முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
✨வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
✨ மன்னிக்கப் பழகுங்கள்.
✨ 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
✨அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
✨உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
✨ உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
✨ ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
✨உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
✨உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
✨ எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

அன்புடன்,
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

இன்று புதிய தமிழாண்டு பிறக்கின்றது. ஸ்ரீமன்மத வருடம் சித்திரைத் திங்கள் முதல் நாள். வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் வருடம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் உங்கள் அனைவருக்கும் அள்ளித் தரட்டும். பழநிஅப்பனைப் பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.4.15

Quiz: எங்கே இதற்குப் பதில் சொல்லுங்கள்!

Quiz: எங்கே இதற்குப் பதில் சொல்லுங்கள்:

பணத்திற்கு ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெயர் உண்டு. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

Money has different names !!! 
1.In church its called (offering), 
2.in school its (fee), 
3.in marriage it's called (dowry), 
4.in divorce (alimony), 
5.when u owe someone its (debt ), 
6.when u pay the government (tax), 
7.in court (fines), 
8.civil servant retirees (pension) 
9.boss to workers (salary), master to subordinates (wages), 
10.when u borrow from bank (loan), 
11.when u offer after a service (tip), 
12.to kidnappers (ransom), illegally received in d name of service (bribe). 

The question is "when a Husband gives it to his Wife what do we call it??
Answer __________??

ஆமாம். கணவன் மனைவிக்குக் கொடுக்கும் பணத்திற்கு என்ன பெயர்?
பின்னூட்டத்தில் விடையைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.4.15

வேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்?


வேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பகழைப் பாடும் பாடல் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்

ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
(ஆறுமுகம் இருக்க ... )

நீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்
காவடிகள் தூக்கி வர வேண்டும்
முருகன் சேவடியில் மாலையிட வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

ஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை
காலமெல்லாம் பாடும் நிலை வேண்டும் 
பழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... ).

பாடிப் பரவசப் படுத்தியவர் பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.4.15

கவிதை: தத்துவப் பாட்டில் பக்தி, காதல் பாட்டில் தத்துவம் என்று கலக்கியவர் அவர்!


கவிதை: தத்துவப் பாட்டில் பக்தி, காதல் பாட்டில் தத்துவம் என்று 
கலக்கியவர் அவர்!

கவியரசர் கண்ணதாசன்

தத்துவப் பாடல்கள்

தத்துவம் என்பது உலக நெறிகளையும், மனித வாழ்க்கை நெறிகளையும் பொருள்படச் சொல்வதாகும்

பக்திப் பாடல்களையும், காதல் பாடல்களையும் எப்படிச் சுவைபட எழுதினாரோ, அதற்குச் சற்றும் குறைவில்லாத வடிவில் பல தத்துவப் பாடல்களையும் கவியரசர் கண்னாதாசன் அற்புதமாக எழுதியுள்ளார்.

உறவு, பிரிவு, வறுமை, செழுமை, சிறுமை, பெருமை, இன்பம்,
துன்பம், பிறவி, மரணம் என்று மனித வாழ்க்கையின் ஒவ்வொரு
நிலைக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார் அவர்!

"நம்பினோர் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையற்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!"

என்று தத்துவப் பாட்டில் பக்தியையும்,

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!"

என்று காதல் பாட்டில் தத்துவதையும் கலக்கலாகக் கலக்கிக்
கொடுத்தவர் கவியரசர்.

"காலமகள் கண்திறப்பாள் சின்னையா - நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா - அதில்
நமக்கு ஒருவழி இல்லையா என்னையா?"

என்று கலங்கி நிற்கும் நெஞ்சங்களைத் தன் பாடல்களால் வருடிக் கொடுத்தவர் அவர்.

"பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
பகைவன் கூட நண்பனே!
பாசம் காட்டி ஆசை வைத்தால்
மிருகம் கூட தெய்வமே!"

என்று மனித நேயத்திற்குப் புது விளக்கம் ஒன்றைத் தன் பாடலால் சொன்னதும் அவர்தான்!

"பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மண முடிப்பதில்லை
மண முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை"

என்று காதலுக்கும், திருமண வாழ்விற்கும், மண உறவுகளுக்கும் சர்வ சாதாரணமாக நெஞ்சில் பதியும்படி விளக்கம் சொன்னதும் அவர்தான்.

"போனால் போகட்டும் போடா - இந்தப்
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?"

என்று கேள்வி கேட்டு நிலையாமைத் தத்துவத்தைப் பாமரனுக்கும் புரியும்படியாகப் பாட்டில் வைத்தவர் அவர்தான்.

தத்துவ முத்தில் இரண்டு பாடல்களைக் கொடுத்துள்ளேன்.
------------------------------------------------------------------
மனிதனுடைய புத்தி!

"போயும் போயும் மனிதனுக் கிந்த
புத்தியைக் கொடுத்தானே! - இறைவன்
புத்தியைக் கொடுத்தானே! - அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே - மனிதன்
பூமியைக் கெடுத்தானே...!

(போயும்)

கண்களிரெண்டில் அருளிருக்கும் - சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் - அது
உடன் பிற்ந்தோரையும் கருவறுக்கும்!
பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே! - புலியின்
பார்வையில் வைத்தானே! - இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே! - இதயப்
போர்வையில் மறைத்தானே!.....

(போயும்)

கைகளைத் தோளில் போடுகிறான் - அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்!
பைகளில் எதையோ தேடுகிறான் - கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்.....

(போயும்)"

படம்: தாய் சொல்லைத் தட்டாதே - வருடம் 1961

காற்று மட்டுமா மாசு பட்டுவிட்டது? மனிதனின் புத்தியும் மாசு பட்டு
விட்டது. பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து மனிதனின் புத்தி கெட்டு விட்டதோடு, அது அவன் வாழும் பூமியையும் கெடுத்துவிட்டது என்று
தன் பாடலைத் துவங்கிய கவியரசர் கண்களிரெண்டில் அருளிருப்பதைப் போன்று காட்சிகொடுக்கும் மனிதனின் புத்தியில் ஆயிரம் பொருளிருப்பது போலத் தெரிந்தாலும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் என்று சொன்னதோடு - அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும் என்று
சொன்னது இந்தப் பாடலின் சிறப்பு!

பாயும் புலியின் கொடுமையை அதன் பார்வையில் வைத்த இறைவன்
பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
என்று ஆதங்கம் மேலிடச் சொன்னது மற்றுமொரு சிறப்பு!. கைகளைத் தோளில் போடுகிறவன் - அதைக் கருணை என்று கூறுபவன் பைகளில் எதையோ தேடுவதையும்,கையில் பட்டதை எடுத்து ஓடுவதையும் முத்தாய்ப்பாய்க் கூறிப் பாடலை நிறைவு செய்தார் பாருங்கள் அதுதான்
இந்தப் பாடல் காலத்தாலும் மக்கள் மனதை விட்டு மறையாமல் நிற்கச் செய்கின்றது!

மற்றுமொரு பாடல்.
--------------------------------------------------------------------
''குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம்
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி

சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி

ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி

எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!"

படம் - பணத்தோட்டம் - வருடம் 1963

மனிதனின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்தப் பாடல்.மலர்த்தோட்டம் போட்டு மகிழ்வோடு விளையாடு என்று
இறைவன் கொடுத்த மனம் பணத்தோட்டம் போட்டு எப்படிப்
பாழாகின்றது என்பதைச் சிறப்பாகச் சொல்லிய கவியரசர்.
மனிதனின் இயற்கைக் குணம் மாறாது என்று சொல்லி முடித்தது
தான் இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!

இந்த இரண்டு பாடல்களுமே திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கத்
திரு.டி.எம்.எஸ் அவர்களின் கணீரென்ற குரலில் தமிழகமெங்கும் வெள்ளித்திரைகளில் ஒலித்த பாடல் என்பது குறிப்பிடப்பட
வேண்டிய மற்றுமொரு சிறப்பாகும்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.4.15

நகைச்சுவை: ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?


நகைச்சுவை: ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?
++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவையை ந்கைச்சுவையாக மட்டும் பாருங்கள்!
-------------------------------------------------------
1
"டேய் மண்டையா, அங்க என்னடா லோலாயி?”

“நீங்க திடீர்ன்னு செத்துப்பொய்ட்டா, அண்ணி என்ன செய்யும்னு தெரிஞ்சுக்கிறதுக்காக போய்க் கேட்டேன்”

“அந்தக் கருமாந்திரம் புடிச்சவ என்னடா சொன்னா?”

“அவங்க தங்கச்சியோட போயி தங்கிருவாங்களாம்!”

“ஓஹோ”

“இப்ப அதே கேள்விய உங்ககிட்ட கேக்கிறேன் - அண்ணி திடீர்ன்னு செத்துப்பொய்ட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?”

“இதில யோசனை பண்றதுக்கு என்னடா இருக்கு? நானும்
சந்தோஷமாப் போயி அவ தங்கச்சியோட தங்கிருவேன்டா!”
--------------------------------------------------------
2
”டேய் மண்டையா?”

”என்ன அண்ணே?”

”அந்த சைக்கிள் கடைக்காரன் பொண்ணு வந்து உன்னிய லவ்ஸ்
பண்றேன்னு சொன்னுச்சாமே?”

”ஆனா, நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்”

”ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே?”

”எங்க வீட்டில எல்லோருக்கும் சொந்தத்திலதாண்ணே கண்ணாலம் ஆகியிருக்கு அதனால் வேண்டாம்னு சொல்லிட்டேன்”

”எல்லோருக்குமே சொந்தத்திலேயா? அதிசயமாயிருக்கேடா!”

”ஆமாண்ணே, எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கட்டிக்கிட்டாரு.
எங்க அத்தை மாமாவைத்தான் கட்டிக்கிட்டிருக்கு. அதைவிடுங்க
எங்க அண்ணி எங்க அண்ணனைத்தான் கட்டிக்கிட்டிருக்கு!”
-------------------------------------------------------------------
3
“அண்ணே...!”

“என்னடா, மண்டைய்யா?”

“என்னோட போன் நம்பர் மாறிடுச்சு! குறிச்சிக்கிடுங்கண்ணே!

“வளவளங்காம சட்டுன்னு சொல்லுடா படவா”

“முன்னாடி (நோக்கியா) 3310 ; இப்ப 6610 அண்ணே!”
------------------------------------------------------------------
4
“என்னடா சொல்றே?”

“ஆமாண்ணே, எம் பையனை மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துட்டேண்ணே”

“என்னது, மெடிக்கல் காலேஜ்லயா? அங்க என்ன படிப்புடா இவன் படிக்கப்போறான்?”

“இவன் படிக்கலேண்ணே, இவனை வச்சு அவங்க படிக்கப்போறாங்க!”
------------------------------------------------------------------------------------
5
“டேய், இதுக்கு மட்டுமாவது ஒழுங்கா பதில் சொல்டா!”

“நான் அப்பவே ரெடி, கேள்வியைக் கேளுங்க”

“ராமர், கிரிஷ்ணர், காந்திஜி, இயேசுநாதர் இவிங்க நாலு பேருக்குள்ளார இருக்கிற ஒற்றுமை என்னடா?”

“இது ஜுஜூபி கேள்வி, யாரைக் கேட்டாலும் பதில் சொல்வானே!
கொஞ்சம் கஷ்டமான கேள்வியாக் கேளுங்கண்ணே!”

“மவனே, முதல்ல இதுக்கு நீ ஒழுங்கா பதில் சொல்டா”

“நாலு பேருமே அரசாங்க விடுமுறை நாள்ள பொறந்தவங்கண்ணே!”

“அடப்பாவி!”
--------------------------------------------------------------------------------
6
“அண்ணே, டி.வியைத் தவிர வீட்டிலேயிருக்கிற மத்த சாமானெல்லாம் திருட்டுப் போயிருச்சண்ணே!”

“அத மட்டும் ஏண்டா விட்டுட்டுப் போனாங்க?”

“நான் படம் பார்த்துக்கிட்டு இருந்தேன்ல!”

-------------------------------------------------------------------------------
இந்த ஆறில் எது நம்பர் ஒன்?

அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.4.15

Quiz.no.81 Answer: விதியின் காலடியில் சிக்கிச் சீரழிந்தது அந்த செம்பருத்திப்பூ!

Quiz.no.81 Answer: விதியின் காலடியில் சிக்கிச் சீரழிந்தது அந்த செம்பருத்திப்பூ!

செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்

புதிர் எண் 81ற்கான விடை

7.4.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
ஒரே ஒரு கேள்வி கேட்டிருந்தேன். திருமண வாழ்க்கையைப் பற்றிக்
கூறுங்கள் என்றிருந்தேன்.அனால் அது பல கேள்விகளை உள்ளடக்கிய கேள்வி. திருமண வாழ்க்கை என்பதை எப்படி ஒரே கேள்விக்குள்
அடக்க முடியும்? அதனால் அது பல கேள்விகளை உள்ளடக்கியதாகும்.

சரியான பதில்:
அம்மணிக்குச் சிறிய வயதில் திருமணமானது. ஆனால் திருமண
வாழ்வு சோபிக்கவில்லை. சோகத்தில் முடிந்தது.
விவாகம் ரத்தும் ஆனது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

கடக லக்கின ஜாதகம்.
ஏழாம் வீட்டுக்காரன் சனி நீசமடைந்துள்ளான்.
ஏழாம் வீட்டில் 12ம் வீட்டுக்காரன் புதன் அமர்ந்துள்ளான். உடன் சூரியன்.
சுகாதிபதியும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 6ல் அமர்ந்துள்ளான்.
குடும்ப ஸ்தானத்தில் கேது.
எட்டில் ராகு. அவனுடைய மகாதிசை ஜாதகியின் 21வது வயதில் ஆரம்பமானது. கேடாக அமைந்தது. ஜாதகியை நிமிர
விடவில்லை. ஜாதகிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.
யோகக்காரகன் செவ்வாய், 9ம் அதிபதி குரு சேர்க்கையால் செவ்வாய் திசையில் ஜாதகியின் 21ம் வயதில் திருமணம் நடந்தது.
சனீஷ்வரனும் (7th lord) , சுக்கிரனும் (authority for marriage)  ரன்
அவுட்டானதால் திருமண வாழ்வு நிலைக்கவில்லை.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 24 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 12 மட்டுமே சரியான/
ஒட்டிய பதிலை எழுதியிருக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர்தான்
திருமணம் நடந்த காலத்தைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்.

ஜாதகிக்கு இளம் வயதில் திருமணம் ஆனதும், திருமணம் 
மகிழ்ச்சியின்றி விவாகரத்தில் முடிந்ததும் என்பதும்தான்
 key answers

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1
////////Blogger SSS CONSTRUCTION said...
Sir, the lady got married on mars dasa but the marriage life was end on divorce the reason is the 2nd lord is in 7th place with 12th lord and the 7th lord is in 10th place neecham and the sukaran is in 6th place and kethu is in 2nd place and ragu is in 8th place mars aspecting the ragu so the first marriage was end but the second marriage is good because the the 3rd house give the 2nd marriage this is virgo the lord budha he give double marriage.
Monday, April 06, 2015 8:15:00 AM//////
--------------------------------------------
2
////Blogger slmsanuma said...
Quiz No. 81
ANSWERS
1) Karagan Sukkiran --- Sukkiran is in 6th place (Hidden) to laknam --- 12th place to 7th place --- Pabakarthariyogam
2) Bhavagaathipathi Saneeswaran --- Saneeswaran is in 10th place to Laknam (Kenthiram) --- 4th place to 7th place (Kenthiram) -- Look the 7th place --- association with Mandhi
3) Bhavaga Nilai --- Suriyan Budhan association gives Budha Adhithya Yogam --- 20 Bindhus for 7th place --- 7th place aspect by Neechapanga Saneeswaran who is the Bhavagaathipathi --- Raghu is in 2nd place to 7th place --- Kethu in 2nd place to laknam with 30 bindhus for 2nd place.
4) Laknathipathi – Chandiran Ucham with 28 Bindhus --- Guru with 6 bindhus looks Laknathipathi and Laknam
As per the above conditions much delayed marriage and subsequently the marriage is annulled by divorce and thus she lasts here family bakkiyam. Babies are there.
Monday, April 06, 2015 9:23:00 AM/////
-------------------------------------------
3
/////Blogger valli rajan said...
Dear Guruji,
1. As guru said in earlier lesson lagna lord in 11 house will give native comfort and achieve everything without much effort.
2. Ketu in second house is bad. 
3. 12th lord in seventh house.
4. sun in seven house which is its enemy house.
5. Guru with the mars which is yogakarakka for kadaka lagna.
6. Venus in the sixth house which is bad.
7. venus is 12th from 7th house.
8. sun 2nd lord in 6th house from its house.
In native guru dasa, at her age of 28 she will get married.
Native's marriage life is not very happy one.
There will be second marriage because either by way of divorce from first marriage or spouse would have died. 
Even though she has very successful life, her marriage life is marred by unhappiness.
Monday, April 06, 2015 10:40:00 AM/////
-----------------------------------------------
4
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz 81க்கான பதில்.
அம்மணி பிறந்த நேரம் : 3 Feb 1971, 17:15
கடக லக்கினம், கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி,
லக்கினாதிபதி சந்திரன் 11ல் உச்சம், அதன் மீது கடக லக்கின யோகாதிபதி செவ்வாயின் பார்வை. ராஜ கிரகமான சந்திரன் லக்கினாதிபதி 11ல் உச்சம் பெற்றதால் அனைத்து செல்வ செழிப்பும் உடையவர்.
லக்கினம் மற்றும் ராசிக்கு குருபார்வை இருப்பதால் நிச்சயம் திருமணம் உண்டு. 5ல் குரு, செவ்வாய். நிச்சயம் ஒரு ஆண் குழந்தைக்கு தாய்.
7ல் 2ம் அதிபதி சூரியன் மற்றும் 3, 12 அதிபதி புதன் கூட்டு. சுபர் பார்வை இல்லை. அதன் மீது நீட்ச சனியின் 10ம் பார்வை. விவாகரத்து பெற்றவர்.
திருமண வாழ்க்கை திருப்தி இல்லை.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Monday, April 06, 2015 1:05:00 PM//////
----------------------------------------------
5
/////Blogger asbvsri said...
Answer to Quiz no – 81:
1. The lady born on 3rd Feb 1971 at 5.13 PM. 
2. Kadaka lagnam, lagnathipathi Chandran Ucham.
3. 7th house owner Sani, Neecham in Rasi but Ucham in Navamsam. 
4. Kudumbasthanathipathi Suriyan, 2nd house owner in 7th house with Budan. 
5. Ketu in 2nd house with Rahu parvai from 8th house.
6. 12th and 3rd house owner Budan varkothamam in 7th house. Budan is enemy to lagnathipathi.
7. Yogathi9. pathi Sevvai Atchi in 5th house
8. Guru – 9th and 6th house owner in 5th house – thirikonam looking at 9th house and lagnam Hence definitely she has child. 
9. Rahu dasa started on 12/11/1991 at the age of 20 and was there till 2009 till the age of 38.
10. Rahu is Atma Karakan and being in 8th house would have given a tough time during this period.
11. She should have had a very turbulent marriage / family life.
After 2009 Guru dasa started and till 2011 and would have given some relief. But again during Sani bukthi trouble would have started and till 2020 end of Sukra bukthi she will have tough time.
K R Ananthakrishnan, 
Chennai
Monday, April 06, 2015 3:45:00 PM////
-------------------------------------------
6
////Blogger anand tamil said...
ஜாதகிக்கு ராகு திசை சனி புத்தியில் தன் 26 வயதில் திருமணம் நடந்தது.
ஜாதகியின் திருமண வாழ்வு சிறப்பாக இல்லை .ஜாதகி தன்னுடய கணவனை இழந்திருப்பார் இல்லயேல் பிரிந்திருப்பார் .
காரணம் :
7ஆம் இடத்து அதிபதி சனி நீசமடைந்துவிட்டான் .
களத்திரகாரன் சுக்கிரன் 6 இல் மறைந்து விட்டான் .
சனியின் மேல் சுபகிரகங்களின் பார்வை இல்லை.
லக்கினத்தின் மேல் 3,12 அதிபதி புதனின் பார்வை
Monday, April 06, 2015 3:55:00 PM/////
---------------------------------------------
7
//////Blogger Srinivas said...
1. Lagnathipathi Chandran is ucham. Bagyathipathi Guru (9th lord) is placed in 5th house along with 5th house and 10th house lord Mars.
2. 7th lord Shani is in neecham along with Mandhi in 10th house. Shani aspects 7th house. Suryan (2nd lord ) andd 12th lord Budhan are in 7th house. Sukran is weakly placed in 6th house. 
3. Rahu and ketu in 2nd and 8th house. 
4. Marriage would have happened in Rahu dasa and Shani bukthi considering the strong lagnathipathi, 5th lord and 9th lord. However, marriage would have been troublesome due to non favourable position of Sukran, 7th lord (neecham).
Monday, April 06, 2015 4:12:00 PM/////
-------------------------------------------------
8
/////Blogger Kirupanandan A said...
என்ன வாத்தியாரே வர வர கேள்வி கடினமாகிக் கொண்டே வருகிறது. குத்து மதிப்பாக ஒரு பாடலை பதிலாகச் சொல்லி விட்டு நாளைக்கு நீங்கள் பதிலைச் சொன்னவுடன் அதற்கு தகுந்தாற்போல் விளக்கத்தை மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

லக்கினத்திற்கு 7ல் புதன், சூரியன் ஆகிய இரு கிரகங்களால் திருமணம் உண்டு. மிகத் தாமதமாக ராகு தசை பிற்பகுதியில் 30 வயதிற்கு மேல் திருமணம். ஆனால் அதிக காலம் நிலைக்காது. பிரிவு/விவாகரத்து உறுதி. காரணம் குடும்பஸ்தானமான 2ல் கேது. களத்திரகாரகன் சுக்கிரன் 6ல் மறைவு. 7ம் அதிபதி சனி 10ல் நீசம். உடன் மாந்தி இருக்கிறார். யோகக்காரகன் செவ்வாய், 9ம் அதிபதி குரு சேர்க்கை திருமணத்தை நடத்தித் தரும் அதே நேரத்தில் 6ம் அதிபதியாகவும் குரு வருவதால் பிரிவு நிச்சயம்.
Monday, April 06, 2015 8:56:00 PM/////
------------------------------------------------------
9
/////Blogger lrk said...
ஐயா. வணக்கம்
புதிர் 81 ----- விடை
அம்மணிக்கு தாமத வயதில்
திருமணம் நடந்தது.
காரணங்கள்
7 ஆம் அதிபதி நீசமாகி உள்ளார்.
ஆனால் லக்கினாதிபதி உச்சமாகவும்
லக்கினத்தை குரு 9 ஆம் பார்வையாகவும் பார்கிறார் .
7 ல் புத ஆதித்திய யோகம் உள்ளது.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சி யாக
இல்லை
காரணங்கள்
சுக்கிரன் 6 ல் மறைவு
2 ஆம் இடத்தில் கேது
7 ஆம் வீட்டுக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் உள்ளார்
மாங்கல்ய ஸ்தானம் 8 ல் ராகு உள்ளார்.
மேலும் 8 ஆம் இடத்தை செவ்வாய் பார்க்கிறார்.
நன்றி ஐயா
கண்ணன்.
Monday, April 06, 2015 9:45:00 PM//////
---------------------------------------------
10
//////Blogger praba karan said...
1. குடும்பத்திற்கு அதிபதி சூரியன் களத்திரஸ்தானத்தில் அமர்ந்து, ஜாதகிக்கு சிறிய வயதில் திருமணத்தை நடத்திவைப்பான்.(அதாவது 21 -23க்குள்)
2.ஆனால் குடும்ப வாழ்க்கை சிறக்காது. நீசமான களத்திரக்காரன், 6ஆம் இடத்தில் மறைந்த சுக்கிரன், 2ஆம் இடத்திலுள்ள கேது, 7ஆம் பார்வையாக 2ஆம் வீட்டைக்கெடுக்கும் ராகு, ஆகிய காரணாங்களால் குடும்ப வாழ்க்கை சிறக்காது.7ல் அமர்ந்த சூரியன் மற்றும் 8ல் உள்ள ராகு, நிரந்திர களத்திர பிரிவை(கணவன் இறப்பு/விவாகரத்து) ராகு மகா தசையில் ஏற்படுத்திருக்கும்.
Monday, April 06, 2015 11:30:00 PM/////
---------------------------------------------
11
Blogger Prasanna said...
Dear Sir, 
The given chart the native has high kalathra dosha . There might be delay in her marriage but she is married . probability of marital disharmony is seen in this chart, no happy marital life.
Reasons :
Kalathra dosha causes trouble, delay or break in marriage. So compatibility of both the bride and groom are studied by analyzing their charts to check for doshas before marriage. 
To judge Kalathra dosha in a chart, one must study the 2nd, 7th and 11th houses. The 7th house is however given the most importance in evaluating this dosha.
Seventh house is combust with Sun here. 
Third and 12 th lord mercury is seen present with surya in 7th house, so 7th house is highly corrupted here. There is no aspect of Guru over 7th house. 
planets like Sun, Mars, Saturn, Rahu and Ketu are called papa grahas or malefics. If papa grahas are positioned in the 1st, 2nd, 4th,7th 8th and 12th houses from the lagna, or moon then they cause doshas.
Kethu is seen present in second house which is not auspicious for marital life. Rahu placed alone in 8th house is causing Mangalya dosha here.No aspect of Guru over 8th house which is to be noted here. 
For cancer lagna 11th house is bhadaka stahna . Moon , lagna lord is placed in 11th house , tells the marital life has no happiness for this native . It is also one of the kalathra dosha as stated by me above. 
From Chandra rasi too we are able to note kalathra dosham in this chart.( Kindly see the placement of planets as explained above from Chnadra Rasi too )
I conclude there is no marital happiness for this native though she is married. 
Regards, 
Prasanna.
Dubai. 
http://devarshivedicastrology.freeforums.org
Monday, April 06, 2015 11:53:00 PM//////
-----------------------------------------------
12
////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our today's Quiz No.81:
I.She has got married after 38 of her age. delayed marriage.
Reasons:
1. lagna lord is exalted in 11th place.
2. Bagyathipathi is in good place.
3. Yogathipathi also along with bagyathipathi in 5th place.
4. In Navamsa, Seventh house is good and seventh house lord is exalted.
5. Seventh house lord is sitting 4th house from its own house and debilitated along with manthi and aspecting its own house as its 10th aspect.
6. Kalathra karaga Venus is sitting 12th place from seventh place. This is the reason for delayed marriage.
II.Family life may not be happy.
Reasons:
1. Second house lord is sitting 6th place from its own house.
2. Kethu is sitting in second house.
3. Lagna lord and seventh house lord are in 2/12 position as well as both are enemies.
4. In Seventh house, sun is sitting along with 12th house lord. It's bad sign for family life.
With kind regards,
Ravichandran M
Tuesday, April 07, 2015 2:09:00 AM////////
--------------------------------------------------------

6.4.15

Astrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்!


Astrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் 
தெருவெங்கும் ஊர்வலமாம்!

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு
கூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்
கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு
கூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்
சேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம்
சேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம் - நல்ல
சீரகச்சம்பா அரிசி போலச் சிரிச்சிருப்பாளாம் 
சிரிச்சிருப்பாளாம் ஹோஹோஹோஹோ

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்
செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம்
செப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம் நல்ல
சேலஞ்சில்லா மாம்பழம் போல் கனிதிருப்பாளாம்

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஊர்வலத்தில் வந்தவள் யர் கூறடியம்மா அவள்
உடனிருந்த மாப்பிள்ளை தான் யாரடியம்மா
ஊர்வலத்தில் வந்தவள் யர் கூறடியம்மா அவள்
உடனிருந்த மாப்பிள்ளை தான் யாரடியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா இந்த
மணமகனைக் கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா ஹோஹோஹோஹோ ஹொஹோ

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

பாடல்: திருமணமாம் திருமணமாம்
திரைப்படம்: குடும்பத் தலைவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1962
-----------------------------
என்னவொரு வர்ணனை பாருங்கள்:
கூரைநாட்டுப் புடவை. தலையில் ஒருகூடை பூ,
சேர நாட்டு யானைத் தந்தம்போன்ற தோற்றம்,
சீர்கச் சம்பா அரிசி போன்ற சிரிப்பு
செம்பருத்திப் பூவைப் போன்ற சிவந்த மேனி
செப்புச்சிலை போன்ற வடிவமைப்பு,
சேலம் ஜில்லா மாம்பழம் 
என்று கவியரசர் கண்ணதாசன் அசத்தியிருக்கிறார் பாருங்கள்
------------------------------------------------------------------------
Quiz No. 81

6.4.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!


மேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகத்தை அலசி அம்மணியின் திருமண வாழ்க்கை பற்றிய உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!