மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.14

Astrology: Popcorn Post 49. திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)

 

Astrology: Popcorn Post 49. திருமணத்திற்கு உரிய வயது (Right age for marriage)


31.7.2014

உரிய வயது அல்லது உரிய நேரம் என்று நீங்கள் யாரிடமும் வாதிட முடியாது. அது ஆளாளுக்கு மாறுபடும். நீங்கள் வாதிட்டால் பெரும்பாலும் அது தோல்வியில்தான் முடியும். அல்லது சண்டையில்தான் முடியும்.

காலையில் எப்போது எழுந்திருக்க வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்பாக, அதாவது காலை 6:00 மணிக்குள் எழ வேண்டும் என்பேன் நான். எத்தனை பேர்கள் அதை ஒப்புக்கொள்வீர்கள்?

அதுபோல உரிய வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது திருமணம் நடக்க வேண்டும். உரிய வயது எது? என்பதில்தான் தகறாறு.

அந்தக் காலத்தில், அதாவது 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்துவைத்தார்கள்.

இப்போது அப்படி இல்லை. கல்வி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளத்தில் ஸ்திரத்தன்மை, வீடு வாசல் வாங்கி செட்டிலாக வேண்டும் என்ற அபிலாஷைகள் போன்றவற்றின் காரணமாக பலரின் திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை.

பெண்களும் சரி, ஆண்களும் சரி 30 வயதுவரை திருமணத்திற்கு  அவசரப் படுவதில்லை. அதுதான் இன்றைய நிலை. பெற்றவர்களும் கவலைப் படுவதில்லை. கல்விக் கடனை கட்டி முடிக்கட்டும். ஒரு 2 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை வாங்கட்டும் என்று பொறுமையாக இருக்கிறார்கள்.

முதலில் பெண்ணை எடுத்துக் கொள்வோம். ஒரு பெண் 12 அல்லது 13 வயதில் பூப்படைகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவளுடைய வசந்தகாலம் 36 ஆண்டுகள். அதாவது அதிக பட்சம் 50 வயது. அதற்குப் பிறகு மெனோபாஸ், கர்ப்பப்பைக் கொளாறுகள் போன்றவைகள் வந்து பல பெண்களைப் பயமுறுத்தும் காலம் வந்துவிடும்.

32 வயதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் என்றால் அவளுடைய வசந்த காலத்தில் பாதி காலாவதியாகிவிடுமே! 24 வயது என்றால் ஓரளவு பரவாயில்லை. வசந்த காலத்தில் 1/3 மட்டும்தான் காலியாகும் மிச்சம் 2/3 இருக்கும்

ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? யாராக இருந்தாலும் 25 வயதிற்குள் திருமணம் நடைபெற வேண்டும். அந்த வயதைத் தாண்ட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
---------------------------------------------
உரிய வயதில் திருமணம் என்பது நம் கையிலா இருக்கிறது? ஜாதகப்படி அதற்கு உரிய நேரம் வர வேண்டாமா?

உண்மைதான்.

நேரம் வராவிட்டால் என்ன செய்வது?

இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் வழி காட்டுவார்
---------------------------------------------
சரி உரிய வயதில், அதாவது இளம் வயதில் திருமணம் நடைபெற ஜாதகப்படி என்ன அமைப்பு இருக்க வேண்டும்? அதை மட்டும் இன்று பார்ப்போம்!

1. ஏழாம் அதிபதி, அதாவது ஏழாம் வீட்டுக்காரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்

2.ஏழாம் வீடு சுபக் கிரகங்களின் பார்வையோடு இருக்க வேண்டும். ஏழாம் வீடு பாபகர்த்தாரியோகத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.

3. களத்திரகாரகன் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் நல்ல நட்சத்திரத்தின் சாரத்தில் இருக்க வேண்டும்

4. லக்கினகாரகன் வலிமையாக இருப்பதுடன் ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும்.

5. ஏழாம் வீட்டில் சுபக்கிரகங்கள் குடி இருப்பது நன்மையானதாகும்

6. இரண்டாம் வீடு கெட்டுபோகாமல் இருக்க வேண்டும்

பாப்கார்ன் பொட்டலம் 200 கிராம் அளவுதான். இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்

==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.7.14

Astrology: quiz 64: Answer: வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க!

 

Astrology: quiz 64: Answer: வாங்க மச்சான் வாங்க சொந்த வழியைப் பாத்துட்டீங்க வலையை வீசி நீங்க தங்கச் சிலையைப் புடிச்சிட்டீங்க!

புதிர் எண் 64ற்கான விடை

30.7.2014


நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி:

”அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை?”

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகருக்கு அவருடைய  திருமணம் அதீத தாமதமாகி அவருடைய 42ஆவது வயதில் நடைபெற்றது.

ஜாதகப்படி, அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.






கும்ப லக்கின ஜாதகர். லக்கினாதிபதி சனீஷ்வரன் 11ல். அது நல்ல அமைப்பு.
ஏழாம் அதிபதி சூரியன் வர்கோத்தமம் பெற்று வலுவாக உள்ளார். அதாவது ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் உள்ளார்.
ஏழாம் வீட்டின் மேல் குரு பகவானின் பார்வை (9ஆம் பார்வை)
ஆகவே இந்த அமைப்புக்களால் ஜாதகருக்குத் திருமணம் நடைபெற வேண்டும். நடைபெற்றது.

ஆனால் அதீத தாமதமாக அவருடைய 42ஆவது வயதில் நடைபெற்றது. அதுவும் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக விவாகரத்தான பெண்மணி ஒருவரை விரும்பி மணந்து கொண்டார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது.

தாமதத்திற்குக் காரணம்:
களத்திரகாரகன் சுக்கிரனும் சனீஷ்வரனும் சேர்ந்து இருப்பது தீமையானது.தடையானது. அதீத தாமதத்திற்கு அது ஒரு முக்கிய காரணம். சுக்கிரனின் மேல் உள்ள வேறு 3 கிரகங்களின் ஆதிக்கத்தால் அவர் ஒரு விவாகம் ரத்தான பெண்ணை மணந்து கொள்ள நேரிட்டது.
28 வயதில் துவங்கிய சந்திர திசையில் அவருக்குத் திருமணம் நடைபெறவில்லை. சந்திரனுடன் லக்கினாதிபதி, சுக்கிரன் ஏழாம் வீட்டுக்காரன் ஆகிய மூவருக்குமே தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மேலும் 34 வயதில் துவங்கிய எழரைச் சனியின் பாதிப்பால் சிக்குண்ட அவருக்கு 41வயதுவரை திருமணம் நடைபெறவில்லை.

கோள்சார சனி மிதுனத்திற்கு வந்தவுடன் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) தனது பாதிப்புக்களை விலக்கிக் கொண்டு ஜாதகனின் திருமணத்தை நடத்திவைத்தார். அவருடன் சேர்ந்து இருக்கும் சுக்கிரனும் அதற்கு உதவி செய்தார்.

தசாநாதன் சந்திரனாக இருந்து ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனியின் பிடியில் இருந்தால், அந்தக் காலகட்டத்தில் நன்மையான மேட்டர்கள் எதுவும் நடக்காது. அதை மனதில் வையுங்கள்
----------------------------------------
போட்டியில் மொத்தம் 22 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அவர்களில் 2 பேர்கள் மட்டும் தாமதத்தைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். (******* )அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.

பாராட்டுப் பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
******** ///////Blogger Srinivas said...
    The native is born on 30-Nov-1960 at around 12.20pm, considering chennai as birth place.
    1. Lagnathipathi Shani is in 11th house with 2nd and 11th lord Guru and yogakaraka and bhagyathipathi Sukran.
    Grahayutham in 11th house. Chevvai (in Vagram) is aspecting lagnathipathi, Sukran and lagnathipathi.
    2. Lagnam has Maandhi and ketu and Maandhi is aspecting 7th house. So this would have caused delays 2nd house lord Guru is aspecting 3rd house, 5th and 7th house.
    7th house lord Suryan is in 10th house.
    3. Yogakaraka Sukran is aspecting 5th house (purva punya sthanam).
    Marriage of the native would have got delayed. The native might have got married in Chandra dasa
    or chevvai dasa.

    Tuesday, July 29, 2014 9:44:00 PM/////

--------------------------------------------
********* /////Blogger Manikandan said...
    திருமணம் நிச்சயமாக நடைபெற்று இருக்கும்.
    1. லக்கணாதிபதி, குடும்ப ஸ்தானாதிபதி , களத்திர காரகன் மூவரும் கூட்டணியாக 11.ல்.
    2. களத்திர ஸ்தானாதிபதி சூரியன் ராசியில் 10-ம் வீட்டிலும் , வர்கோதததமம் பெற்றும் உள்ளார்.
    ஆனால்,
    ராகு மற்றும் கேது வின் ஆதிக்கம் 7-ம் வீட்டில் + செவ்வாய் பார்வை மூவர் கூட்டணி மீது.
    செவ்வாய் மற்றும் சனி நேர் பார்வை தாமத / காதல் திருமணத்திற்கு காரணமாய் இருக்கிறது.
    Tuesday, July 29, 2014 11:13:00 PM//////
===============================================

1
//////Blogger karthi said...
    thirumanam nadanthu irukkum
    7 m idathirkku guruvin parvai irukku
    7 m aathi suriyan 10 il irukkinrar
    kalathirakaraganudan guruvum lagnathipathi sanium ullarkal
    Tuesday, July 29, 2014 7:23:00 AM/////

-----------------------------------------
2
/////Dallas Kannan said...
    Respected Sir
    Not sure if it is trick question.
    Since you ask us to only answer to the question, I am not going to say anything about Rahu being in 7th house or Sukra/Mars Parivarthanai in navamsa...
    He is definitly married. He got married after 21 in Sun dasa.
    1. 7th lord sun is in kentram, friends house and vargothamam.
    2. Lknathipathi in 11th house/uchham in Navamsa
    3. 2nd/11th lord in his own 11th place and looks at 7th house.
    Tuesday, July 29, 2014 9:29:00 AM/////

--------------------------------------------
3
/////Blogger rm srithar said...
    Respected sir
    1. He got marriage from other religion (Rahu is in seventh house)
    2. But Marriage life is not satisfied he got Divorcee / Widow.
    Sukran is join with Virayathipathee Saturn.
    Regards
    Rm.Srithar
    Tuesday, July 29, 2014 10:38:00 AM/////

-----------------------------------------
4
/////Blogger seethalrajan said...
    குருஜி வாணக்கம்,
    லக்னாதிபதி 11ல் உடன் பாக்யாதிபதி சுக்ரன் அதுமட்டுமா ஆட்சி பெற்ற குருவும் அங்கேயே அமர்ந்து இருக்கிறார், மிக மிக சிறப்பான அமைப்பு.
    7ல் ராகு இருந்தாலும் எந்த பதிப்பும் இருகாது இந்த அன்பருக்கு, ஏனெனில் அந்த வீட்டு அதிபதி 10ல் பலமாக அம்ர்ந்து இருகிறார் அதுவும் வர்கோத்துவம் பேற்று அத்துடன் குரு பார்வை 7ம் வீட்டுகு கிடைக்கிறது. ஒரே ஒரு குறை சூரியன் லக்னாதிபதிக்கு 2/12 அமர்ந்து இருபதுதான். அதாலால் மறு திருமணம் நடைபெறும்.
    மனைவி அரசங்க அதிகரியா இருபார். சூரிய திசையிலெ திருமணம் நடை பெற்று இருகும். நன்றி
    Tuesday, July 29, 2014 10:40:00 AM/////
----------------------------------------------
5
//////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!
    புதிர் எண்: 64 இற்கான பதில் !!!
    குறிப்பிடப்பட்ட அன்பர் கும்ப லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி லாபஸ்தானத்தில் லாபாதிபதி குருவுடன். லக்கினாதிபதி சனி, யோகம் மற்றும் களத்திரகாரகன் சுக்கரனுடன் கிரக யுத்தம். இருந்தாலும் ஏழாமதிபதி சூரியன் நட்பு வீட்டில் மற்றும் வர்கோதமத்தில். முதல் நிலை கேந்திரவீடான பத்தாம் வீட்டில். மேலும் முதல் நிலை சுபகிரகம், மற்றும் குடும்பஸ்தானாதிபதி குருவின் ஒன்பாதம் விசேச பார்வையில் ஏழாம் வீடு.ஏழில் ராகு இருந்ததால் தார தோஷம். இவை அனைத்தும் இருந்தாலும் ஏழாமதிபதியின் (சூரியன்) திசை 28 வயது வரை உள்ளது. சூரிய திசை சுக்கர புத்தியில் 28 ஆம் வயதில் திருமணம் நடைபெற்று இருக்க அதிகமான வாய்ப்புகள் உண்டு !!!!!
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, July 29, 2014 10:58:00 AM/////
--------------------------------------------------
6
/////Blogger Sakthivel K said...
    dear sir.
    அன்பருக்கு திருமனம் நடந்திருக்கும்
    சூரியதிசையில் நடந்திருக்கும்
    2ம் அதிபதி குரு 11ல் ஆட்சி!
    குரு 7ம் இடத்தை பார்வை செய்கிரது
    7 ம் அதிபதி 10ல் திக்பலம் !!!
    5 ம் அதிபதி 9ல் பாக்யவான் !!!
    k.sakthivel
    Tuesday, July 29, 2014 11:02:00 AM/////
---------------------------------------------------------
7
//////Blogger amuthavel murugesan said...
    திருமணம் நடைபெற்று இருக்கும்.
    1. 7 ஆம் இடத்து அதிபதி 10ல் , குருயின் 9 ம் பார்வை 7 ம் வீட்டின் மேல்.களத்திரகாரன் 11 ல் இருப்பதாலும் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    இப்படிக்கு
    மு.சாந்தி
    Tuesday, July 29, 2014 11:58:00 AM/////
----------------------------------------------
8
/////Blogger GOWDA PONNUSAMY said...
    வாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் நமது வகுப்பறை சார்பாக,ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதக அன்பருக்கு
    திருமணம் நடை பெற்றுள்ளது.
    அவருடைய சந்திர தசா குரு புக்தியில் சுக்கிரன் அந்தரத்தில் அவருடைய 30 வயதிற்க்கு மேல் திருமணம் நடந்துள்ளது.    அலசல்:
    1). கும்ப லக்னமாகி,லக்னாதிபதி சனி 11ல், அந்த வீட்டதிபன் ஆட்சி பெற்ற குருவுடனும்,களஸ்திரகாரகன் சுக்கிரனுடனும் கூட்டணி.அத்துடன் லக்கினத்திற்க்கு, லக்கினாதிபதியான சனியின் பார்வை.
    2). ஏழாமிடத்தில் ராகு இருப்பினும்,இரண்டாம் அதிபதி ஆட்சி பெற்ற குருவின் பார்வை திருமணத்தை நடத்தி வைத்துள்ளது.
    3). லக்கின அதிபதி 11ல். 2ம் பதி 11ல். களத்திரகாரகன் 11ல். 7ம் பதி சூரியன் உச்ச கேந்திரமான 10ம் வீட்டில்.
    நன்றியுடன்,
    பொன்னுசாமி.
    Tuesday, July 29, 2014 12:11:00 PM/////
-------------------------------------------------
9
//////Blogger bg said...
    பிறந்த நாள் நவம்பர் 30 1960
    திருமண நடைபெற வாய்ப்பு உள்ளது.
    7 ஆம் அதிபதி சூரியன் பத்தில்.
    தன் (சூரியன்) திசையில் நடத்தி வைப்பார்.
    மேலும் குரு ஏழாம் வீட்டை பார்க்கிறார்.
    காரகன் மற்றும் யோகாதிபதி சுக்கிரன் 11 இல் உடன் லாபாதிபதி மற்றும் 2 ஆம் இடத்து அதிபதி குரு மற்றும் லக்கினாதிபதி சனியுடன் உள்ளார்.
    மேலும் 10 இடத்தின் அதிபர் 5 இல் இருந்து 11 ஆம் இடத்தை பார்க்கிறார்.
    Tuesday, July 29, 2014 12:46:00 PM////
----------------------------------------------
10
//////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    7இல் ராகு இருந்தாலும் 7க்குடைய சூரியன் ராசியில் கேந்திரமாகிய 10மிடதில் மற்றும் வர்கோதமம், லக்னாதிபதி சனி ராசியில் யோகாதிபதி சுக்கிரன் மற்றும் குடும்பாதிபதியும் லபாதிபதியும்மான குருவுடன் லாப ஸ்தானத்தில் சேர்க்கை அத்துடன் நவாம்சத்தில் உச்சம். ஆகவே திருமணம் நிச்சயம் சற்று தாமதமாக நடந்திருக்கும். அதாவது இந்த ஜாதகருடைய 27வது வயதில் சூரிய திசை சுக்கிரன் புக்தியில் திருமணம் நடந்திருக்கும். காரணம் செவ்வாயின் பார்வையில் சனி, குரு, சுக்கிரன் மற்றும் அயன சயன போக ஸ்தானம்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, July 29, 2014 4:11:00 PM/////
-----------------------------------------------------
11
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 64 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    கும்ப லக்கின ஜாதகரான இவருக்கு,
    லக்னாதிபதியான சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள். அவர்கள் இருவரும் குடும்ப ஸ்தான அதிபதி குருவுடன் சேர்க்கை பெற்று லாபஸ்தானத்தில் இருப்பதாலும் களத்திர ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைப்பதாலும் அவருடைய 27 வது வயதில் திருமணம் ஆகி இருக்கும்.
    Tuesday, July 29, 2014 4:39:00 PM//////
----------------------------------------------
12
//////Blogger murali krishna g said...
    அய்யா ,
    அன்பர் அஸ்வினி-4. கேது நட்சத்திரம். மேஷா ராசி கும்ப லக்னம். அன்பருக்கு நிச்சயம் திருமணம் உண்டு! லக்னத்தில் கேது ஏழில் ராகு.இருந்தாலும் 11-ல் இருந்து இரண்டாம் அதிபதியான குரு தன்னுடைய ஆட்சி வீடான தனுசில் இருந்து ஏழாம் வீட்டை ஒன்பதாம் பார்வை பார்க்கிறார். வலுவான பார்வை. அவர் லக்னாதிபதி சனியுடனும் களத்திர காரகன் சுக்கிரனுடனும் கூட்டு வேறு ! அவனே திருமணத்தை நடத்தி முடிப்பான் !. ஏழாம் அதிபதி சூரியன் கேந்திரத்தில் நல்ல ஷட்பலத்துடன் இருக்கிறார். ராகு சூரியனின் வீட்டில் வலிமை குறைந்து காணப்படுகிறார் !. நவம்சத்தில் ஏழில் சனி இருந்தாலும் அவர் உச்சம் பெற்று இருக்கிறார் !. அதனால் திருமணம் நிச்சயம் உண்டு !
    எப்போது என்றால் சூரிய தசையில் குரு அல்லது சுக்கிர புக்தியில் நடந்திருக்கும் !
    Tuesday, July 29, 2014 6:51:00 PM//////
-------------------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
    இந்த அன்பர் 30 நவம்பர் 1960, பகல் 12மணி 24 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடத்தினை சென்னை என்றே எடுத்துக்கொண்டேன்.
    ஜாதகத்தின் சிறப்புக்கள்:
    லக்கினாதிபதி சனைச்சரன் 11ம் இடத்தில் இருப்பது.
    குடும்ப ஸ்தானதிபதி குருபகவான் 11ம் இடத்தில் இருப்பது.
    யோககாரகனும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 11ல் நிற்பது.
    குருபகவானின் சிறப்புப்பார்வை 7ம் இடத்திற்கு இருப்பது.
    குருபகவானின் சிறப்புப்பார்வை சந்திரனின் மேல் இருப்பது.
    ஏழாம் அதிபன் சூரியன் கேந்திரம் ஏறி 10ல் நின்றது.
    ஜாதகத்தின் எதிர்மறைகள்:
    லக்கினத்திலேயே கேதுவும் மாந்தியும் நின்றது.
    ஏழாம் இடத்தில் ராகு நின்றது.
    12ம் இடத்திற்கு செவ்வாய் பார்வை
    லக்கினாதிபதியை செவ்வாய் பார்ப்பது.
    களத்திரகாரக‌னை செவ்வாய் பார்ப்பது.
    எட்டாம் இடத்திற்கு செவ்வாய் பார்வை.
    எட்டம இடத்திற்கு சனியின் பார்வை.
    இந்த ஜாதகருக்கு 28 வயதில் திருமணம் சந்திர தசா சந்திரபுக்தியில்.
    40 வயதில் செவ்வாய் தசா சனிபுக்தியில் மண முறிவு.
    Tuesday, July 29, 2014 7:42:00 PM//////
----------------------------------------------
14
/////Blogger praba karan said...
    அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு,
    இது என்னுடைய முதல் முயற்சி. தவறு(கள்) இருப்பின் மன்னிக்கவும். classroom2007-ல் 170வது பாடப்பகுதி வரை படித்துள்ளேன். தெரிந்த ஜோதிட அறிவை வைத்து என்னுடைய பதிலைப் பதிவுச்செய்துள்ளேன்.
    I.திருமணம் நடக்கும். ஆனால் தாமதமாகும்.
    திருமணம் நடப்பதற்கான அமைப்புகள்:
    1. 7-ஆம் அதிபதி சூரியன் நன்மை பயக்கும் ராசிகளில் ஒன்றான விருட்சகத்தில் இருப்பது.
    2. சுக்கிரனும்,குருவும் சேர்ந்து 11 ஆம் வீட்டில் இருப்பது.
    3. 7-ஆம் வீட்டின் மீதுள்ள குருவின் 9-ஆம் சிறப்புப்பார்வை.
    4. வர்த்தக்கோமம் ஆகியுள்ள 7-ஆம் அதிபன்.
    தாமதமான திருமணத்திற்குக் காரணங்கள்:
    1. 7இல் உள்ள ராகு மற்றும் லக்கனத்திலிருந்து 7-ஆம் பார்வையைச் செலுத்தும் கேது.
    2. சனியின் பிடியில் உள்ள சுக்கிரனும்,குருவும் மற்றும் அம்சத்தில் 7-ல் உள்ள சனி.
    II.திருமணம் சூர்ய மஹா தசை ,குரு அல்லது சுக்கிர புக்தியில் நடக்கும்.
    இதுவரை வகுப்பின் வெளியிலிருந்து உங்களின் பாடங்களை உங்களின் அனுமதியின்றிக் கவனித்துவந்தேன். என்னுடைய முதல் வருகையைப்பதிவுச் செய்து வகுப்பைத் தொடர தங்களின் அனுமதியை வேண்டிக்கொள்கிறேன்.
    இங்கனம்,
    உலோ.பிரபாகரன்
    Tuesday, July 29, 2014 8:06:00 PM/////
----------------------------------------------
15
/////Blogger thozhar pandian said...
    7ல் இராகு, 7ம் வீட்டு சூரியன் அந்த வீட்டிற்கு 4ம் வீடான 10ல் வர்கோத்தமம் பெற்றிருக்கிறார். களத்திரகாரகர் சுக்கிரன் இலக்கினத்திற்கு 11ல், 7ம் வீட்டிற்கு 5ல் இருக்கிறார். 2ம் வீடான குடும்ப ஸ்தான அதிபதியான குரு பகவானும் 11ல் களத்திரகாரகருடன் இருக்கிறார். இருப்பினும் களத்திரகாரகருக்கும், குரு பகவானிற்கும், சனி கூட்டும், செவ்வாயின் பார்வையும் உள்ளது. ஆனால் சனி இலக்கினாதியும் கூட. 1ல் மாந்தியும் கேதுவும் 7ல் இராகுவும் உள்ளனர். இதனால் ஜாதகருக்கு திருமணம் சூரிய மகா தசையில் சுக்கிர புத்தியில் நடந்திருக்கும்.
    Tuesday, July 29, 2014 10:28:00 PM//////
--------------------------------------------
16
/////Blogger Laksh Mannan said...
    திருமணம் நடை பெற்றிருக்கும்..
    23,24 வயதில்....
    குரு வின் 9பார்வை 7ஐ பார்ப்பதால்...
    Tuesday, July 29, 2014 10:34:00 PM//////
----------------------------------------
17
/////Blogger C Jeevanantham said...
    Dear sir
    The person got married two times minimum. 2nd lord is with sukran and sani. 7th place rahu. Multiple marriage and not satisfied.
    Tuesday, July 29, 2014 11:39:00 PM/////

--------------------------------------------------------
18
//////Blogger Ajith M S said...
    ஏழாமிடத்தில் ராகு இருப்பினும் யோகாதிபதியான சுக்கிர சாரம் பெற்றும் குடும்பாதிபதியான குருவின் (ஆட்சி பலத்துடன் இருக்கிறார்) பார்வையைப்பெற்ற ராகு திருமணத்திற்கு இடையூறு செய்ய மாட்டார்.. வாழ்க்கைத்துணை வழியே சிற்சில பிரச்சனை அல்லது சிறு பிரிவு இருந்திருக்கக்கூடும்
    குடும்பாதிபதி, யோகாதிபதி மற்றும் லக்னாதிபதி லாபத்தில் நிற்பதால் மிக இளைய வயதில் திருமணம் ஆகி இருக்கும்.. இள வயதில் வந்த சுக்கிரதசை 21 வயது முடிய.. சுக்கிரதசை முடிவதற்குள் திருமணம் ஆகி இருக்கும்..
    Wednesday, July 30, 2014 12:01:00 AM//////
------------------------------------------------
19
//////Blogger Narayanan V said...
    kandipaka suriya thisaiyil thirumanam nadanthirukum
    Wednesday, July 30, 2014 12:09:00 AM//////

-------------------------------------------
20
///////Blogger sivaradjane said...
    ஐயா வணக்கம்..
    லக்கினத்தில் மாந்தி.உடன் கேது ,7 ல் ராகு. 7 ம் அதிபதி சூரியனும், சுக்கிரன் ,குரு, லக்னாதிபதி சனி ஆகியோர் 1 -12 நிலையில் கிரக யுத்தத்தில் உள்ளனர். இவர்களின் மேல் 'செவ்வாயின் பார்வையும் உள்ளது.
    ஆயினும் 7 - ம் அதிபர் சூரியன் 'வர்கோத்தமம்' அடைந்து வலுவாக உள்ளார். அம்சத்தில் சூரியனும் ,களத்திரகாரகன் 'சுக்கிரனும் ஒன்றாக உள்ளனர். லக்கினாதிபதி 'சனியும் அம்சத்தில் உச்சமாக உள்ளார். மேலும் 7 ம் வீட்டை 'குரு' தன் விசேஷ 9 - ம் பார்வையால் பார்க்கிறார்.
    ஆகவே இந்த ஜாதகருக்கு சூரிய திசையில் திருமணம் நடந்திருக்கும் . இது காதல் திருமணமாக இருந்திருக்கும்.
    sivarajan
    (pondicherry)
    Wednesday, July 30, 2014 1:40:00 AM/////
============================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.7.14

Astrology: quiz.64: வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க!

 
Astrology: quiz.64: வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க!

Quiz No.64: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தி நான்கு

29.7.2014


Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.



அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.7.14

நகைச்சுவை: சிரிக்க மட்டுமே! வாருங்கள், படித்துவிட்டுச் சிரித்து வைப்போம்!

 
நகைச்சுவை: சிரிக்க மட்டுமே! வாருங்கள், படித்துவிட்டுச் சிரித்து வைப்போம்!

1.
உண்மையான பதற்றம்  (Real Tension)

சர்தார்ஜி அன்பரும் அவர் மனைவியும் நீதி மன்றத்தில் நின்று கொண்டிருந்தார்கள். இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு.

நீதிபதி, தன்னுடைய தீர்ப்பை வழங்கும் முன்பாகக் கேட்டார்:

“ஒரு ஒரு பிரச்சினை பாக்கி உள்ளது. உங்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளன. அவற்றை எப்படிப் பிரித்துக்கொள்வீர்கள்?”

சர்தார்ஜி தன்னுடைய மனைவியுடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு வந்தவர், நீதிபதியிடம் சொன்னார்.

“மாண்புமிகு நீதிபதி அவர்களே, அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுங்கள். அடுத்த ஆண்டு இன்னும் ஒரு குழந்தையுடன், இருவரும் வருகிறோம்”

புன்னகை செய்த நீதிபதி, அவர்கள் கேட்டபடி ஒரு ஆண்டுகாலம் அவகாசம் அளித்ததுடன். வழக்கையும் ஒரு ஆண்டிற்குத் தள்ளிவைத்தார்!

பிரச்சினை அத்துடன் முடியவில்லை. ஜோக்கும் முடியவில்லை...... மேலே படியுங்கள்.

                                                                                V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
                                                                                V


பத்து மாதங்கள் பறந்து சென்றது.

அடுத்து, இருவருக்கும் இரட்டைக் குழந்தை பிறந்தது!
===========================================================
2
சாமியாருக்கும் அதே தொழில்நுட்பம்தான்

"சுவாமிஜி, என் கணவர் என்னை ஏமாற்றுகிறார். அவருக்கு வேரு ஒரு பெண்னுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகப்படுகிறேன். அதை நிருபித்து அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

சுவாமிஜி பதில் சொன்னார்: “வெரி சிம்ப்பிள். சந்தேகப்படும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு முன்பாக உன் கணவனைக் கொண்டுபோய் நிறுத்து. உன் கணவனுடைய போனில் உள்ள வைஃபி (wifi) தன்னிச்சையாகக் கனெக்ட் ஆகும். அதைவைத்துப் பிடித்துக்கொள்”
============================================================
3
“குட் மார்னிங்” என்ற இனிமையான குரல் கேட்டவுடன், அந்தப் பெண்மணி தன் வீட்டுக் கதவைத் திறந்தார்.

வாக்கும் கிளீனரை விற்க வந்திருந்த சேல்ஸ்மேன், நின்று கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணி என்ன ஏது என்று கேட்கு முன்பாக அதிரடியாக உள்ள நுழைந்த அந்த விற்பனைப் பிரதிநிதி, வரவேற்பு அறையில் நுழைந்ததோடு, தன் கைப் பையைத் திறந்து, அதில் இருந்த மாட்டுச் சாணியை, அங்கே தரையில் விரித்திருந்த கார்பெட் மீது கொட்டினார்.

அத்துடன் தன்னுடைய குரலை உயர்த்திச் சொன்னார்:

“மேடம் இன்னும் மூன்றே நிமிடங்களில், எங்கள் கம்பெனியின், பவர்ஃபுல் வாகும் க்ளீனரை வைத்து, இந்தச் சாணம் முழுவதையும் க்ளீன் செய்து விடுகிறேன் பாருங்கள். அப்படி முடியாவிட்டால் இந்தச் சாணம் முழுவதையும் நானே தின்று விடுகிறேன்.”

அந்தப் பெண்மணி கேட்டார்:

“சில்லி சாஸ் வேண்டுமா?”

“சேல்ஸ்மேனுக்குக் குழப்பமாகிவிட்டது.” எதற்காகக் கேட்கிறீர்கள் மேடம்?”

“இன்று மின் தடை உள்ளது. வீட்டில் மின்சாரம் இல்லை. மாலை ஆறு மணிக்குத்தான் வரும்!”

ஒரு வாடிக்கையாளர் வீட்டிற்குள் நுழையும் முன்பாக தேவையான எல்லாத் தகவல்களையும் தெரிந்து கொண்டுதான் போக வேண்டும். அத்துடன் தேவையில்லாத சவால்களையும் விடக்கூடாது. அதற்காகத்தான் இந்தக் கதை!
=======================================================================
மூன்றுமே மின்னஞ்சல்களில் வந்தவை. மொழியாக்கம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம். மூன்றில் எது மிகவும் நன்றாக உள்ளது? அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

=================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.7.14

காலை இளம் கதிரில் என்ன தெரிகிறது?

 
காலை இளம் கதிரில் என்ன தெரிகிறது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்று நிறைக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது
அந்த கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதிகொள்ளுது
குமரா உனை மனம் நாடுது கூத்தாடுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது
சிவ சுப்ரமண்ய சுப்ரமண்யம் என்று சொல்லுது
சுகமாகுது ... குக நாமமே ... சொல்லாகுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
சக்தி வேல் சக்தி வேல் என்றே சேவல் கூவுது
சக்தி வேல் வேல் சக்தி வேல் வேல் என்றே சேவல் கூவுது

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
வினை ஓடுது வடி வேலது துணையாகுது
ஆகுது ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம்
முருகா ... முருகா ...
பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
முருகா ...

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது குருநாதனே
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
குருநாதனே முருகா
   

பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
======================================================

24.7.14

Astrology: சுகங்களுக்கு அத்தாரிட்டி யார்?

 

Astrology: சுகங்களுக்கு அத்தாரிட்டி யார்?

Popcorn Post No.48


எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா? அதாவது ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை!

Authority என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும். தந்தைக்கு அத்தாரிட்டி சூரியன். தாய்க்கு அத்தாரிட்டி சந்திரன் என்று இருப்பதுபோல களத்திரத்திற்கு, அதாவது திருமணத்திற்கு அத்தாரிட்டி சுக்கிரன் மட்டும்தான்!

வாழ்க்கையில் உள்ள எல்லா சுகங்களுக்கும், படுக்கை சுகம் உட்பட (அதாவது ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணிற்கு ஆண் பரிசமும்) எல்லா சுகங்களுக்கும் உரியவன் சுக்கிரன்தான். ஆகவே அவன்தான் திருமணம் செய்து வைக்கும் அதிகாரமும் கொணடவனாவான்.

பெண்களுக்கு மட்டும் ஒரு துணைக் காவடியும் உண்டு. மெயின் காவடியை சுக்கிரன் தூக்குவான். துணைக் காவடியை குரு பகவான் தூக்குவார். அதனால்தான் பெண்களுக்கு மஞ்சள் கயிற்றைத் தாலிக் கயிறாக அணிவிக்கிறோம். மஞ்சள் நிறமுடைய தங்கத்தில் திருமாங்கல்யத்தைச் செய்கிறோம். பெண்களைத் தினமும் மஞ்சள் பூசிக் குளி என்கிறோம். தங்கம் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு விரளி மஞ்சளை, மஞ்சக் கயிற்றில் கட்டி அணிவிக்கின்றோம். இவை எல்லாம் குருபகவானை மகிழ்விப்பதற்கும், அவரின் ஆசீகளைப் பெறுவதற்கும்தான்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் மட்டும் செவ்வாயைக் கூப்பிட்டுப் பார்ப்போம். அதுபோல செவ்வாய் தோஷத்திற்கும் அவர் வந்து நிற்பார். அவரின் பங்களிப்பு அவ்வளவுதான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.7.14

Astrology: quiz 63: Answer: அடடே, அவரா இவர்?

 

Astrology: quiz 63: Answer: அடடே, அவரா இவர்?

புதிர் எண் 63ற்கான விடை

23.7.2014

நேற்றையப் பதிவில், பிரபலமான ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.



கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. யாருடைய ஜாதகம்?
2. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்ன?
------------------------------------
சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1.அன்னை சாரதா தேவி அவர்களின் ஜாதகம் அது. 22.12.1853 ஆம் தேதியன்று மேற்கு வங்கத்தில் ஜயராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் அவர்.
நேரம் மாலை 7.15 மணி

2.அவருடைய ஜாதகத்தில் 5ஆம் வீட்டில் கேது. உச்சம் பெற்ற கேது. ஐந்தில் கேது இருந்தால் ஒன்று அரச யோகம் அல்லது ஆண்டி யோகம் என்று அடிக்கடி சொல்வேன். அதைவைத்து முன்பு ஒருமுறை பதிவு ஒன்றையும் எழுதியுள்ளேன். அவர் பெண் துறவியானதும்,  பகவான் ராமகிஷ்ணருக்கு மனைவியாகி, துறவியாகி பணிவிடை செய்த்ததும், அன்னை என்று அவருடைய சீடர்களால் மட்டுமல்ல. அனைவராலும் அழைக்கப்பெற்று புகழ்பெற்றதும் அதனால்தான். கேதுவுடன் கூட்டாக இருக்கும் 3ஆம் இடத்து அதிபதி (வெற்றி ஸ்தான அதிபதி) புதனின் பங்காற்றலும் அதற்கு ஒத்துழைத்தது என்றால் மறுப்பதற்கில்லை. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கிய காரணம் 5ல் உள்ள கேது மற்றும் புதனின் ஆதிக்கம்.
----------------------------------------

போட்டியில் மொத்தம் 19 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்களில்  12 பேர்கள் இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுயிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.

மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
//////Blogger Dallas Kannan said...

    Mother Jayrambati alias Sarada Devi.
    1. Kadaha laknam - Leaders Laknam
    2. Laknathipathi and yogakaraha both joined together in friends house. Kendrathipathi and konathipathi togther itself good yogam. They give Sasi-Mnagala yogam too. Guru's look adds more strength
    3. Uchha kethu and budan in 5th house. Kethi in 5, will give samrajyam or sanyasam. She got the second one.
    4. Sukra looks at Lakna
    5. Sukra and Sani parivarthanai.
    Looks like we can keep going on the greatness. I have listed what I can see quickly. Hope I covered all important ones.
    Tuesday, July 22, 2014 6:25:00 AM//////

------------------------------------------------------
2
/////Blogger Sivachandran Balasubramaniam said..
.
    மதிப்பிற்குரிய ஐயா,
    புதிர் எண்: 61 இற்கான பதில் !!!
    உதாரணமாக கொடுக்கப்பட்ட ஜாதகம் - holy mother என்று அழைக்கப்பட்ட சுவாமி ஸ்ரீ சாரதாதேவி அவர்கள் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி). ஸ்ரீ சாரதாதேவி அம்மா அவர்கள் 22.12.1853 இல் மேற்குவங்காளத்தில் ஜெயராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து 5 வயதிலேயே குழந்தை திருமணம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஷருடன் செய்தாலும் லௌகீக வாழ்வில் ஈடுபடவில்லை.தியானம், இறைவழிபாடு, போதனை, கணவர்சேவை, ஞானம் இப்படி இவர் வாழ்ந்த 66 ஆண்டு வாழ்வில் பெரும்பாலும் ஞான வாழ்வே வாழ்ந்தார். ஜாதகப்படி அதற்கான காரணங்கள்.
    முதலில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஞானவாழ்விற்கு மிக முக்கியம். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும், லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்து 2ம் வீட்டில் அமர்ந்ததால் இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
    ஏழாம் அதிபதி சனி லக்கினத்திற்கு 11இல் வக்கிர நிலையில் மற்றும் 7ஆம் வீட்டில் சுக்கரன், ( காரகன் பாவநாசம் ), மேலும் வக்கிர சனி மற்றும் சுக்கரன் பரிவர்த்தனை யோகத்தில். இரண்டில் செவ்வாய். இவை அனைத்தும் அம்மா அவர்களுக்கு திருமணம் மற்றும் லௌகீக வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் செய்துவிட்டன.
    ஆதியோகம்/ கூர்ம யோகம்: லக்கினம் / சந்திரனுக்கு 5,6, 7 இல் நன்மை செய்யக்கூடிய கிரகம் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே லக்கினத்திற்கு 5இல் புதன், 6இல் குரு, 7இல் சுக்கரன். சந்திரனுக்கு5 இல் குரு, 6ல் சுக்கரன் இருக்கிறார்கள். இதனால் ஒரு துறையில் அதிக ஈடுபாடும், ஞானமும், தலைமை தாங்குதல், வழிநடத்துதல் போன்றவற்றை செய்ய வைத்தது.
    சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்ந்ததால் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டது. புத்தி காரகன் புதன் 5இல் (கோணத்தில்) உடன் ஞானகாரகன் கேதுவும் உச்சமாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உள்ளதால். ஆழ்ந்த சிந்தனை, ஞானம், உலகஅறிவு,ஞானம் போதித்தல் இவற்றில் ஈடுபடவைத்தது.
    மேலும் 3,6,8,12 வீடுகளின் பரல்களும் 110 (27.5 சராசரி) உள்ளதால் பற்றற்ற உலகியல் வாழ்க்கையை கொடுத்தது.
    தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
    தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
    இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
    ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
    கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.இந்த ஜாதகத்தில் சுக்கரன், சனி பரிவர்த்தனை, சனியும் கேதுவும் பரஸ்பரபார்வையில் உள்ளதால் அம்மா அவர்கள் துறவற வாழ்க்கையில் ஈடுபட வைத்தது.
    சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு - அம்மா அவர்களின் ஜாதகத்தில் இவை அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று திரிகோணத்தில். இது ஒரு சிறப்பான அமைப்பு.
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, July 22, 2014 11:42:00 AM//////
------------------------------------------
3   
//////Blogger Chandrasekharan said...

    Respected Sir,
    This horoscope belongs to : Sri Sri Maa "Sarada Devi" born 22/Dec/1853.
    Jadhagathil Sani and Sukran Parivarthanai. 11-il 8-m adhipathyudan amarndha Raghu and 5-il kedhu-udan amarndha budhan aanigathil idupathai koduthargal.
    Thank You.
    Tuesday, July 22, 2014 12:29:00 PM/////

------------------------------------------
4
/////Blogger bg said...

    அன்னை சாரதா தேவி.
    பிறந்த நாள் : 22.12.1853
    மேன்மைகள்
    1.கேது உச்சம் + 5 ஆம் இடத்தில் உள்ளார்.
    2. லக்கினாதிபதி + யோகாதிபதியுடன் இணைந்து 2 இல் உள்ளார்.
    அந்த இடத்தை ஆட்சி பெற்ற குரு பார்க்கிறார்.
    3. மேலும் லக்கினாதிபதி + யோகாதிபதி + குரு+ சூரியன் திரிகோண அமைப்பில் உள்ளார்.
    4. ஆட்சி பெற்ற குரு ஆறில் இருந்து 12 அம் இடத்தை பார்க்கிறார்.
    5. 12 ஆம் அதிபதி புதன் உச்சம் பெற்ற கேதுவுடன் இணைந்து 5 ஆம் இடத்தில் இருக்கிறார்.
    6. நவாம்சத்தில் குரு உச்சம். அம்சத்தில் சனி ஆட்சி.
    7.சுக்கிரன் 7 இல் இருக்கிறார். மேலும் அம்சத்தில் 12 இல் இருப்பது இல்லறத்தை துறந்து துரவறம் செல்ல காரணம்.
    Tuesday, July 22, 2014 12:41:00 PM////
---------------------------------------------
5
//////Blogger GOWDA PONNUSAMY said...

    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    தங்களின் உடல் நலன் விரைவில் சீரடைந்தமைக்கு இறைவனுக்கு நன்றிகள்.
    1).கொடுக்கப் பட்டுள்ள ஜாதகம் அன்னை சாரதா தேவி அவர்களுடையது.
    சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்களின் துணைவியார்.
    2). ஜாதகத்தின் மேண்மைக்கு முக்கியமான காரணம், லக்கினத்திற்க்கு 5ல் கேது பகவான் 12க்கு அதிபதி புதனுடன் கூட்டணி.
    ”ஐந்தில் கேது அரசனா? ஆண்டியா?” என்ற தலைப்பில் தாங்கள் அளித்த பாடமே இதன் விளக்கம்.

    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.
    Tuesday, July 22, 2014 1:02:00 PM//////
---------------------------------------------
6
//////Blogger Selvam Velusamy said...

    இது 22-12-1853ல் பிறந்த அன்னை ஸ்ரீ சாராத தேவி (ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி) அவர்களின் ஜாதகம்.
    இந்த ஜாதகத்தில் மேன்மையான அமைப்பு என்னவெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்ச காரகன் கேது பகவான் உட்சம் பெற்றுள்ளார். அதனால்தான் அன்னை அவர்கள் ஆன்மிகத்தில் ஒரு உயரிய இடத்தை பெற முடிந்தது. 5ல் கேது பகவான் இருந்தால் ஒன்று ஆண்டியாக இருப்பார்கள் அல்லது அரசனாக இருப்பார்கள் என்று தாங்கள் கூரியதுதானே. அத்துடன் லக்னாதிபதி சந்திரன் பூர்வபுன்னியதிபதி செவ்வாயுடன் சேர்க்கை கூடவே பாக்கியாதிபதி குருவின் பார்வையுடன்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, July 22, 2014 3:27:00 PM/////
----------------------------------------------------------
7
/////Blogger Ravichandran said...

    Ayya,
    Please find my findings.
    22 Dec 1853
    Sarada Devi
    1. Ketu placed in 5th house person will be living as king or Andi(Sanniyasi). She got Sanniyasi position following Ramakrishna devotee.
    2. She got Gnanam, because Ketu is Uccham and along with Bhudhan(rules for intelligence)
    3. Shani and Sukra Parivarthanai - Marriage life is not good.
    4. Shasi Mangla Yogam - Yogakaran and lagna owner sitting in second house. Due to that, she born in good family.
    5. Rahu is in 11th house is good placement, but Rahu is in Neecham.
    6. Shani is in 11th house. It is good placement for Shani. So she got lot of spiritual followers.
    Your Student,
    Trichy Ravi
    Tuesday, July 22, 2014 5:55:00 PM/////

-------------------------------------------
8
//////Blogger Chandrasekaran Suryanarayana said...

    QUIZ NO.63 வணக்கம்
    22/12/1853 அன்று கல்கட்டாவில் பிறந்தவர் சாரதாதேவி அம்மையார். திரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி ஆவார்.
    கடக லக்கினத்தில் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்.
    ஜாதகரின் மேன்மைக்கு காரணம்.
    1. நவாம்சத்தில் குரு உச்சமாக‌ அமைந்துள்ளது.
    2. அவ‌ருடைய 5ம் வயதில் சந்திர தசையில் ஆன்மீகத்தில் வாழ்க்கையை தொடங்கினார்.உச்சமான குருவின் 9ம் பார்வை சந்திரனின் மீது இருப்பதை காணலாம்.
    3. தனுசு ராசியில் 6ம் வீட்டு அதிபதி குரு அமர்ந்து அவருடைய பார்வை 2ம் வீட்டில் உள்ள லக்கினாதிபதி சந்திரனை 9ம் பார்வையால் பார்ப்பதாலும், 5ம் பார்வை 10ம்வீட்டில் பார்பதாலும், 7ம் பார்வை 12ம் வீட்டில் பார்ப்பதாலும் ஜாதரின் சிறந்த ஆன்மீக வாழ்க்கைக்கு குரு துனையாக இருந்தார்.
    4. அவருடைய வாழ்க்கை தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக தியாகம் செய்ததற்க்கு காரணம் லக்கினாதிபதி சந்திரன் 2ம் வீட்டில் அம‌ர்ந்து லக்கினத்தை 12ம் வீடாக அமைந்தது. (1/12 நிலை).
    5. 7ம் வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரனின் 7ம் பார்வை லக்கினத்தின் மீது பார்ப்பதால் வசீகரமான தோற்றத்தை வழங்கி ஆன்மீக சேவையால் மக்களை கவரும் சக்தி அடைந்தார்.
    6. 5ம் வீட்டில் அமர்ந்துள்ள கேதுவும், புதனும் அவருக்கு ஆன்மீக வழிக்கு உதவியாக இருந்தது. 3ம் வீட்டு அதிபதி புதன் 5ம் வீட்டில் அமர்ந்தது விசேஷமாக அமைந்துள்ளது.
    7. கல்விக்கான 4ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து குருவின் 9ம் பார்வை பெற்று சந்திரனுடன் சேர்ந்து சசிமங்கள யோகத்தை அடைந்துள்ளார். அதனால் அவருக்கு ஆன்மீக ஞானம் கிடைத்தது.
    8. குருவும், சூரியனும் சேர்ந்து 7ம் பார்வையால் 12ம் வீட்டை பார்ப்பதால் மக்களுக்கு ஆன்மீக வழியில் சேவை செய்யும் அமைப்பை பெற்றார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Tuesday, July 22, 2014 7:36:00 PM/////
-------------------------------------------------
9
//////Blogger Kirupanandan A said...

    அன்னை சாரதா தேவி அவ‌ர்களின் ஜாதகம். அவர் ஜாதகத்தில் ஞான/ மோட்ச காரகன் கேது புத்தி ஸ்தானமான 5ல் புத்திகாரகன் புதனுடன் இணைந்து உச்சமாக இருக்கிறார். அதனால் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்தார். 9ம் அதிபதி குரு ஆட்சியாகி ஆத்மகாரகன் சூரியனுடன் இருக்கிறார். இதுவும் ஒரு காரணம்.
    Tuesday, July 22, 2014 7:58:00 PM/////
------------------------------------------
10
//////Blogger S.Namasu said...

    மதிப்பிற்குரிய அய்யா,
    ஜோதிட புதிர் போட்டி எண் 63க்கான எனது கணிப்பு:-
    1.அன்னை சாரதாதேவின் ஜாதகம்.(பிறந்த தேதி 22-டிசம்பர்-1853)[ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துனைவியார்].
    2.ஜாதகத்தின் மேன்மைக்கான காரணங்கள்:-
    *கடக லக்கினம், சிம்ம ராசி, லக்கன அதிபதி "சந்திரன்" யோகக்காரனான "செவ்வாயுடன்" 2ம் வீட்டில் (சந்திர மங்கள யோகம்}உள்ளார்.
    *லக்கனத்திற்கு ராகு உடன் சேர்ந்த வக்கிர சனின் 3ம் பார்வை.(7&8ற்கு அதிபதி) மேலும் வேறு எந்த கிரக பார்வையும் இல்லை.
    *5ம் இடத்தில் உச்சம் பெற்ற "கேது"உடன் 12.3 க்கு அதிபதியான புதன் வலுவான நிலையில் உள்ளார்.கேது ஞானகாரகன் ஆகையால் துறவு வாழ்க்கைக்கு வித்திடும்.இதுதான் முக்கியமான காரணம்.
    *2ம் இடத்து அதிபதி "சூரியன்" 6ம் இடத்தில் அதிபதி "குரு"உடன் இனைந்து உள்ளார்.குருவின் 9ம் பார்வை 2ம் இடத்தின் மீது உள்ளது.இதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் பொதுசேவையில் ஈடுபட்டார்.
    *7ம் இடத்தில் களத்திர காரகன் "சுக்கிரன்" உள்ளார் இது காரகோபாவநாசா ன்படி காரகம் நன்றாக இருக்காது.
    * மேற்கண்ட காரனங்களால் இந்த ஜாதகம் மேன்மையானது.
    சுபம்.
    Tuesday, July 22, 2014 10:20:00 PM/////
------------------------------------------------
11   
//////Blogger Srinivas said...

    1. The horoscope is of Sri Sri Maa Sarada Devi who was born on 22nd December, 1853 in the evening time (6-8pm IST).
    She is the wife and spritual counterpart of Ramakrishna Paramahamsa.
    2.
    a. Lagnathipathi Moon is placed in 2nd house with yogakarakka Chevvai (lord of 5th and 10th houses). Shashi mangala yogam.
    Yogakarakka Chevvai aspects 5th, 8th and 9th house in this chart.
    b. 7th and 11th house lords (saturn and venus respectively) are in parivathanai.
    c. Ketu is along with 12th and 3rd lord Mercury in the chart which indicates spritual inclination. Yogakaraka aspects Ketu and budhan.
    d. 9th and 6th house lord is in 6th house along with 2nd house lord Sun. It indicates involvement in religious activities.
    Guru is uchham in navamsa. Saturn is in its own house in navamsa.
    e. As 2nd lord and 9th lord is in 6th house, the marriage life wasn't like regular marriage. Saturn aspects 5th house which has ketu and 3rd and 12th lord mercury and hence the native didn't have any kids.
    Wednesday, July 23, 2014 12:16:00 AM//////

---------------------------------------------
12
//////Blogger ravichandran said...

    Respected Sir,
    My answer for our today's Quiz No.63:
    1) The native of the given horoscope is Holy Mother Saradha Devi. Born on 22.12.1853.
    2) The special aspect of this horoscope is Lagna lord Moon associated with(fifth, tenth house as well as) Yoga karaga Mars and getting Jupiter(associated with Sun) aspects. This leads to Great Sanyacha yoga as well as blessed fame and many disciples.
    Reasons:.
    i) Moon and Mars associated in second house and getting jupiter aspects in second house as well as tenth house. This will give spritual work and fame.
    ii) In fifth house, Kedhu and Mercury are there and getting MArs aspects. This is also one of the reason for involving spritual life.
    iii) Saturn and Rahu is associated in eleventh house and aspecting fifth house.
    iv) In sixth house, Jupiter is sitting in its own house along with second house lord Sun. It gave lot of followers to her.
    v) In fifth house, Kedhu and Mercury are there and getting aspects of Saturn and Rahu as well as Mars aspects. These are caused to lose her "Ego" and leaded her to guide other people. (public service)
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, July 23, 2014 1:18:00 AM/////

====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.7.14

Astrology: quiz.63: கொடுத்துள்ள ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்னவென்று சொல்லுங்கள்!!





Astrology: quiz.63: கொடுத்துள்ள ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்னவென்று சொல்லுங்கள்!!

பகுதி அறுபத்திமூன்று

22.7.2014

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பிரபலமானவரின் ஜாதகம்.




1. யாருடைய ஜாதகம் என்பதைக் கண்டு எழுதுங்கள்
2. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்ன? என்பதையும் எழுதுங்கள். அதுதான் முக்கியம்

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

2 கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

இன்று இணையத்தில் உங்களுக்குப் பல வசதிகள் உள்ளன. ஆகவே யாரென்று கண்டு பிடிப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.7.14

ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்? பகுதி 2



ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்? பகுதி 2

மனவளக் கட்டுரை

இக்கதையின் முதல் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டுப் பின் இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!
----------------------------------------------------------------------
தில்லியில் இருந்து வடக்கில் சோனிபட் செல்லும் நெடுஞ்சாலை, கிழக்கில் காஜியாபாத் செல்லும் நெடுஞ்சாலை, தெற்கில் நொய்டா, குர்கான், ஃபாரிடாபாத் போன்ற ஊர்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலை, ஆகிய சாலைகளில் உள்ள விளை நிலங்களுக்கெல்லாம் அடித்தது யோகம்.

பெரும் பணக்காரர்களும், ரியல் எஸ்டேட் காரார்களும், தொழிற்சாலைகளைக் கட்ட விரும்பும் நிறுவனங்களும், ஒன்றுக்குப் பத்து விலையைக் கொடுத்து இடங்களைக் கொத்துக் கொத்தாக வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நிலையில் நமது கதையின் நாயகருக்கும் ஒரு யோகம் அடித்தது. தனக்குச் சொந்தமான பல இடங்களில் ஒரு இடத்தை - அது வெறும் 20 ஏக்கர் பூமி - விற்று 100 கோடி ரூபாய்களைப் பார்த்துவிட்டார். தேர்த்திவிட்டார். எல்லாம் பூர்வீக நிலங்கள். கோதுமை விவசாயம் செய்து எந்தக் காலத்தில் அத்தனை பெரிய தொகையைப் பார்ப்பதாம்?

உடனே ஒரு கணக்காய்வாளரைப் பிடித்து வருமான வரியைக் கட்டிவிட்டு, கிரேட்டர் நொய்டாவிற்குச் செல்லும் பாதையில் ஒரு பண்ணை வீட்டை வாங்கிக் கொண்டு செட்டிலாகிவிட்டார். இதுபோல இன்னும் சில சொத்துக்கள் உள்ளன. அவற்றை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பத்திரங்களை வங்கி லாக்கர்களில் பத்திரப் படுத்திவிட்டார்.

வீட்டில் 3 பேர்கள்தான். அவர், அவருடைய அன்பு மனைவி, 21 வயது நிரம்பிய அவருடைய மகன். இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நல்ல பஞ்சாபி சமையல்காரரை வேலைக்குச் சேர்த்து வேளாவேளைக்கு சிக்கன் கபாஃப், சிக்கன் மஞ்சூரியா என்று பிடித்த உணவுகளாக சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிக்கத் துவங்கினார்.

உடற்பயிற்சிக்கு  வீட்டிலேயே ஜிம் இருந்தது. பகலில் மனைவியுடன் 2 மணி நேரம் சீட்டாடுவார். மூட் இருக்கும் சமயங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்.

மாலை 7 மணியானால் பாட்டிலும் கையுமாக தோட்டத்தில் அமர்ந்து விடுவார். 10 மணிவரை பொழுது போகும். துணைக்கு மனைவியையும் இருத்திக்கொள்வார். இவருக்கு விஸ்கிதான் பிடிக்கும். அம்மணி ஒயின் சாப்பிடுவார். பையனுக்குக் கார் வாங்கிக் கொடுத்திருந்தார். பையனும் வெளியே சுற்றிவிட்டு ஒன்பது மணிக்கு சமர்த்தாக வீட்டிற்குத் திரும்பிவிடுவான்.

அவருடைய சமூகத்தில் குடிப்பது ஒன்று தவறான செயல் அல்ல! மேலும் வீட்டில் ஏதாவது விசேடம் என்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் குடும்பங்களுடன் அழைத்துப் பெரிய அளவில் தண்ணிப் பார்ட்டி நடக்கும்.

எல்லாம் அளவாகக் குடிக்கும் குடிகாரர்கள் நிறைந்த சமூகம் அவர்களுடைய சமூகம். குடித்துவிட்டுத் தெருவில் விழுந்து கிடக்கும் நபர்களைப் பார்க்க முடியாது.

குடியின் சாதக பாதகங்களைப் பற்றி தன் மகனுக்குச் சொல்லிக் கொடுக்க விரும்பியவர். அதைப் பதினைந்து நாட்கள் பாடமாக நடத்தத் துவங்கினார்.
21 வயதாகிவிட்டதால் அந்தப் பாடம் அவனுக்கு அவசியம் என்றும் நினைத்தார்.

கல்காஜி நகர் சித்தரஞ்சன் பார்க் அருகே இருக்கும் பார் ஒன்றிற்கு மகனை ஆழைத்துச் சென்றவர். தன்னுடைய பயிற்சியைத் துவக்கினார்.

விஸ்கி, பியர், ஒயின், பிராண்டி, ரம், ஜின் என்று குடிப்பதற்குக் கிடைக்கும் அத்தனை சரக்குகளிலும் மாதிரிக்கு ஒவ்வொரு பாட்டிலை வரவழைத்து அவற்றை விளக்கினார். எவை எவை எந்தெந்த மூலப் பொருள்களில் இருந்து செய்யப்படுகிறன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்தார். பிறகு எந்தெந்தப் பருவத்திற்கு எதெதைக் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

பிறகு அவைகள் சந்தைப் படுத்தப்படும்போது வரும் பாட்டில்களின் அளவைக் கூறினார். 180ml, 360ml, 750ml பாட்டில்களை வரவழைத்துக் காட்டினார். ஒரு ஸ்மால் பெக் என்பது 30ml என்பதையும் ஒரு லார்ஜ் என்பது 60ml என்பதையும் சொன்னார். 3 லார்ஜ்களுக்குமேல் சாப்பிடக்கூடாது என்பதையும், அதையும் சற்று இடைவெளி கொடுத்தே சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு உற்சாகமாக, “மை டியர் சன், லெட் அஸ் ஸ்டார்ட் வித் விஸ்கி டுடே!” என்று சொல்லியவர், பணியாளரை அழைத்து தேவையான வற்றைக் கொண்டு வரும்படி பணித்தார்.

முதலில் ஒரு ஸ்மால் பெக்கில் ஆரம்பித்தவர், அடுத்தடுத்து அரை மணி நேர இடைவெளியில் மேலும் இரண்டு லார்ஜ் அளவுள்ள விஸ்கியை வரவழைத்து அருந்தினார். மகனையும் அருந்தச் செய்தார். பிறகு வீட்டிற்குத் திரும்பினார்கள். ஓட்டுனர் வாகனத்தைச் செலுத்த தங்களுடைய பண்ணை வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்ப்டியே ஒரு வாரம் சென்றது.

நடுவில் ஒரு நாள் பையன் கேட்டான். “அப்பா, எப்படி ஆரம்பிப்பது என்று சொல்லிக் கொடுத்தீர்கள். எப்போது நிறுத்துவது என்பதை நீங்கள் சொல்லித் தரவில்லையே?”

“நல்ல கேள்வி. பொறுத்திரு. பயிற்சியின் முடிவில் உனக்கே விளங்கும். அல்லது நான் சொல்லித் தருகிறேன்” என்றார்.

அடுத்த வாரம் அளவை சற்று அதிகப் படுத்தினார். இரண்டு வாரங்கள் சென்றது தெரியவில்லை.

பயிற்சியின் கடைசி நாள் அன்று அவருடைய பையன், அவர் கழிப்பறைக்குச் சென்றிருக்கும் சமயம், அவனாகவே ஒரு லார்ஜ்ஜை ஊற்றி ஒரே மடக்கில் குடித்துவிட்டான். அவருக்குத் தெரியாது என்று நினைத்தான். என்ன ஆகும் என்று குறுகுறுப்பும் இருந்தது. வயதுக் கொளாறு.

வந்தவர், அதைக் கவனித்துவிட்டார். ஆனாலும் கண்டு கொள்ளவில்லை. வழக்கம்போல மேஜையில் இருந்த பாட்டிலில் இருந்த மதுவை ஊற்றி இருவரும் அருந்தினார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

போதை தலைக்கேறிய நிலையில் பையன் சற்றுக் குளறலுடன் கேட்டான்:

“அப்பா, எப்போதும் கேஷில் ஒருவர்தானே இருப்பார். இன்று ஏன் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள்”

“இதுதாண்டா அளவு. கேஷில் இருப்பது ஒருவர்தான். உனக்கு போதை அதிகமானதால் ஒருவர், இருவராகத் தெரிகிறார். குடியில் இதுதான் மோசமான நிலைமை. இந்த அளவைத் தொடக்கூடாது. இதற்கு முன்னரே நிறுத்திவிட வேண்டும். குடியை எப்போது நிறுத்துவது என்று கேட்டாயே. இப்போதுதான் நிறுத்த வேண்டும். இதையும் மீறித் தொடர்ந்தால், கவிழ்ந்து கிடக்க நேரிடும். புறிகிறதா?”

“நன்றாகப் புறிகிறது டாடி. தெரிந்து கொண்டேன்” என்றான்
---------------------------------------------------------------------
நேற்றுச் சொன்ன முதல் கதைக்கும் இதுதான் பதில்.

”நீ யாருக்காகச் சம்பாதிக்கின்றாயோ, அவர்கள் உன்னுடைய சம்பாத்தியத் திறமையையோ அல்லது அல்லது அதில் உள்ள வலிகளையோ புரிந்து கொள்ளாமல் நடக்கத் துவங்கினால், நீ சம்பாதிப்பதை நிறுத்திவிட வேண்டும். நன்றி, விசுவாசம் இல்லாத இவர்களுக்கா இத்தனை நாட்கள் பாடு பட்டோம் என்று நினைக்க வேண்டும். உன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் இரண்டாகத் தெரிவார்கள். அவர்களுடைய உண்மையான உருவம் தெரியும். மனதில் கசப்பு உண்டாகும். அந்த நிலையில், சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு, சேர்த்து வைத்த பணத்தை உன் கடைசிக் கால பாதுகாப்பிற்காக ஒரு அளவு பணத்தை நிறுத்திக் கொண்டு விட்டு, மற்றவற்றை அறவழிகளில் செலவழிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு, கல்வி, மற்றும் திருமணங்களுக்குப் பண உதவி செய்ய வேண்டும். கோயில் திருப்பணிகளுக்குக் கொடுக்க வேண்டும். அன்ன தானங்கள் செய்ய வேண்டும். ஒரு மனத் திருப்தி உண்டாகும். அந்த மனத் திருப்திதான் உன்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயங்களில் உனக்கு உறுதுணையாக இருக்கும்!

ஆக இரண்டு வெவ்வேறு கதைகளுக்கும் முடிவு ஒன்றுதான்.
ஒரே மனிதன் இரண்டாகத் தெரிவதும் நடக்கும். அனைவரின் வாழ்விலும் நடக்காவிட்டாலும், 75% மனிதர்களின் வாழ்வில் நடக்கும். நடக்கும்போது இந்தக் கதைகளை நினைத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.7.14

அவ்வையார் அருளிய விநாயகர் அகவல்

 

அவ்வையார் அருளிய விநாயகர் அகவல்

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன!

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப்

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!


மொத்தம் 72 வரிகள்.இதைத் தினமும் பாராயணம் செய்து பயன்பெறுங்கள்!

3 தினங்களாக உடல் நலக் குறைவு. பருவநிலை மாற்றம் காரணமாக, சளி காய்ச்சல் என்று நோய்கள் ஏற்பட்டு, அடித்துப் படுக்க வைத்துவிட்டன. இன்றுதான் தேறி எழுந்துள்ளேன். 3 நாட்களாக வகுப்பறைப் பக்கம் வராததற்குக் காரணமும் அதுதான். அனைவரையும் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.7.14

ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்?

 
                 
ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்?

மனவளக் கட்டுரை
----------------------------------------------------------------------------
உலகில் உள்ள மக்களை எல்லாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அல்லது இரண்டாகப் பிரிக்கலாம்.

1.  பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறவன்.
2. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறவன்.

ஆனால் இரண்டு பேர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு பேர்களுமே பணத்தேடலில் உள்ளார்கள். செல்வம் உள்ளவனும் பணத் தேடலில் உள்ளான். செல்வம் இல்லாதவனும் பணத் தேடலில் உள்ளான். நூறு கோடிகள் உள்ளவன் ஆயிரம் கோடிக்கு முயற்சி செய்கிறான். ஆயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளவன் அடுத்த நிலைக்கு (next stage) முயற்சிக்கிறான்.

என்னால் நிறையப் பேர்களை அடையாளம் காட்ட முடியும். உதாரணத்திற்கு சிலரை மட்டும் அடையாளப் படுத்துகிறேன். ஜி டிவியின் உரிமையாளர் சுபாஷ் சந்திரா, முகேஷ் அம்பானி, ரத்தன் டாட்டா, பில் கேட்ஸ், வாரென் ப்ஃபெட் போன்றவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் பணம் தேவைப்படுகிறது, உங்களுக்கும் எனக்கும் உள்ள லெவல் ஆயிரங்கள் என்றால். அதுவே சிலருக்கு லட்சங்கள். சிலருக்குக் கோடிகள். எண்ணிற்குப் பின்னால் வரும் சைபர்கள்தான் வேறுபடும்.

மெய்ஞானம் என்ன சொல்கிறது? பணத்தின் மீது ஆசை வைக்காதே! ஆசைதான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்கிறது.
விஞ்ஞானம் என்ன சொல்கிறது. ஆசைப்படு. கனவு காண்.
அப்போதுதான் உன் கனவுகள் நனவாகும் என்கிறது.

அந்தக் கனவை கவியரசர் கண்ணதாசன் மூன்றே வரிகளில் சொன்னார்:

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்


நிர்வாக இயலும் அதைத்தான் சொல்கிறது. ஆசைப்படுவதை நிறுத்தாதே, நிறுத்தினால் உன் வளர்ச்சி முடிந்துவிடும்
(your prosperity will come to an end)

”சரி எல்லோரும் பணம் சம்பாதிக்க முடியுமா?

”முடியும்”

”ஜாதகப்படி இரண்டாம் வீடும் பதினொன்றாம் வீடும் நன்றாக இருந்தால்தானே பணம் வரும்?”

“அப்போது முயற்சிக்கு என்ன பலன்?”

“என்ன சொல்கிறீர்கள்? முயற்சி செய்தால் பணம் வருமா?”

“உழைப்பும், புத்திசாலித்தனமும் இருந்தால் பணம் வரும்.
உழைக்கிறேன் என்று நாள் ஒன்றிற்குப் பன்னிரெண்டு மணி நேரம் கூலிக்கு மண் வெட்டினால் பணம் வராது. புத்திசாலித்தனம் கலந்த உழைப்பில் பணம் வரும். அதாவது செய்யும் தொழிலைப் புத்திசாலித் தனத்தோடு செய்தால் பணம் வரும்.”

“ஜாதகம்?”

“கவியரசர் கண்ணதாசன் கவிஞராக வேண்டும் என்பதுதான் ஜாதகம். ஆனால் அவர் 5,000ற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், அதற்குச் சமமான எண்ணிக்கையில் தனிப்பாடல்களையும் எழுதினாரே - அதை எப்படி ஜாதகக் கணக்கில் சேர்க்க முடியும்? அல்லது அதிர்ஷ்டக் கணக்கில் எப்படிச் சேர்க்க முடியும்? அவர் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தார். புத்திசாலித் தனத்தோடு உழைத்தார்.அதனால்தான் அவரால் சாதிக்க முடிந்தது. மக்கள் மனதில் இடம் பிடிக்க முடிந்தது.” ”

நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டுமென்றால், மாடுகளை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அந்த எண்ணிக்கை உன்னுடைய உழைப்பால் மாறுபடும். நான்கு மாடுகள் நாற்பதும் ஆகலாம் அல்லது நானூறும் ஆகலாம். அதைத்தான் நமது முன்னோர்கள் முயற்சி திருவினையாக்கும் என்றார்கள்.

சரி, இப்போது சொல்ல வந்த கதைக்கு வருகிறேன்.

ஒரு செட்டியார் இருந்தார். அவர் பெரிய செல்வந்தர். தோட்டம், துறவு, வயல், நகை நட்டு, மனைகள், இடங்கள், வங்கி இருப்புக்கள், பங்குப் பத்திரங்கள் என்று எல்லா செல்வங்களும் உள்ள வசதி படைத்த சீமான் அவர்.

இத்தனை வசதிகள் இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு வீட்டில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்காமல்,தன்னுடைய உழைப்பால், சிறப்பாகப் பணி செய்து, நிதிவர்த்தகத்தில் மென் மேலும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்தார். கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து கொண்டிருந்தார்.

அவருடைய மகன் வணிகவியலில் முதுகலைக் கல்வியை முடித்து விட்டு வெளியில் வந்தான். மகனையும் தன்னுடைய தொழிலேயே ஈடுபடுத்த விரும்பினார் அவர்.  அதற்காக அவனுக்குத் தன்னுடைய அலுவலகத்தில் ஒரு வேலை கொடுத்ததோடு, அவரே முன்னின்று பயிற்சியும் கொடுக்கத் துவங்கினார்.

"ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போடக்கூடாது. கூடை கவிழ்ந்தால் எல்லா முட்டைகளும் உடைந்து, ஊற்றிக் கொண்டுவிடும். பெருத்த நஷ்டம் ஏற்படும். ஆகவே நாம் முதலீடு செய்ய விரும்பும் பணத்தை நான்கு பங்காக வைத்து, ஒரு பங்கை நிலத்திலும் (lands & real estates), ஒரு பங்கை தங்கத்திலும் (gold) , ஒரு பங்கை பங்கு வணிகத்திலும் (shares), மீதமுள்ள ஒரு பங்கை வட்டித் தொழிலிலும் (money lending) ஈடுபடுத்த வேண்டும்.புரிந்ததா?”

“ஒன்று இறங்கினாலும், மற்றவை நம் முதலீட்டைத் தக்க வைக்கும். நம்மைக் காப்பாற்றும்”

“கரெக்ட்” என்று சொன்னவர், அந்த நான்கு தொழிலிலும் உள்ள நெளிவு சுளிவுகளைச் சொல்லிக் கொடுத்து, சுமார் 15 நாட்களுக்குப் பயிற்சியையும் கொடுத்தார்.

அடுத்து, இருக்கும் செல்வத்தையும், சேரும் செல்வத்தையும் எப்படிப் பாதுகாப்பது என்று சொல்லிக்கொடுத்தார். அதற்கும் ஒரு விரிவான 15 நாள் பயிற்சியைக் கொடுத்தார்.

ஒரு மாதம் ஆயிற்று?

அவனுக்கு என்று தன் அலுவலகத்தில் ஒரு தடுப்பறையைக் கொடுத்து (exclusive cabin) வேலையைத் துவக்கி வைத்தார்.

அன்று மாலை, வேலைகள் முடியும் சமயத்தில் அவரை வந்து சந்தித்த அவன், “அப்பச்சி ஒரே ஒரு சந்தேகம் உள்ளது.கேட்கலாமா?” என்றான்.

“ஆஹா...தாராளமாகக் கேள்”

”உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்' என்றார் கவியரசர் கண்ணதாசன். அதுபோல துவக்கம் என்று
ஒன்றிருந்தால், முடிவு என்று ஒன்று இருக்குமல்லவா? பிஸினஸின் துவக்கத்தை மட்டும் சொல்லிக் கொடுத்தீர்கள். பிஸினசின் முடிவை நீங்கள் சொல்லித் தரவில்லையே? அதாவது எப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித் தரவில்லையே?

”நல்ல கேள்வியடா மகனே! அதற்கு பதில் இருக்கிறது. சொல்கிறேன் கேள்” என்று அவர் அசத்தலாக சொல்லத் துவங்கினார்.

(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை, மற்றும் நேரம் கருதியும், எனது ஆக்கம் மற்றும் தட்டச்சும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். கட்டுரையின் அடுத்த பகுதி நாளை வெளிவரும். பொறுத்திருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.7.14

சிலிர்க்கவைக்கும் சில காணொளிக் காட்சிகள்!




சிலிர்க்கவைக்கும் சில காணொளிக் காட்சிகள்!

இன்று உங்கள் பார்வைக்காகவும், ரசித்து மகிழவும் சில காணொளிக் காட்சிகளை வலை ஏற்றியுள்ளேன். அனைத்துமே 1 முதல் 3 நிமிடங்கள்
வரை மட்டுமே ஓடக்கூடியதாகும். பார்த்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------------------------------------------------
 1. மீன் பிடிக்க ஒரு அற்புதமான வழி!


 2. போயிங் விமானத் தொழிற்சாலை


3. Cleaning the Cobra Bit


4. இசைஞானியின் 1001 வது படம்


5. An incredible Artist


6. தளங்களைப் போடுவதற்கான இயந்திரம்



 7. ஒரு மாணவனின் மனக்குறைகள்


8. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு அசுர ஓட்டம் - பகுதி 1


9. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு அசுர ஓட்டம் - பகுதி 2


இந்த ஒன்பதில் எது உங்கள் மனதை அதிகம் கவர்ந்தது. 
அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.7.14

சிலிர்க்கவைக்கும் சில உண்மைத் தகவல்கள்!

 

சிலிர்க்கவைக்கும் சில உண்மைத்தகவல்கள்!

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் சில உண்மைத் தகவல்கள்!.

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில்
"சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே
இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன.இந்த பாறைகளின்
வயது 250 கோடிவருடம். ஏழுமலையானின் திருமேனியும்,
இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம்
சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்
பாறைகள் பெடிப்பதில்லை.ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு
365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்
வெடிப்பு ஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில்
சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலை
யானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்.
ஏழுமலையான்  திருவுருவச்சிலையில் அப்படி எதுவும்
அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால்
ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள்
எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.
ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி,காதணிகள்,
புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ்
போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி
ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது.திருமலை 3000 அடி
உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30மணிக்கு
குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம்
செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம்டிந்தவுடன்
ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால்
வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.வியாழக்கிழமை
அபிஷேகத்திற்கு முன்னதாக,நகைகளைக் கழற்றும்போது,
ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன. திருப்பதி
ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள்,
சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக
இருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும்.
பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை,முறுக்கு,
ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம்,மெளகாரம், லட்டு, பாயசம்,
தோசை, ரவாகேசரி,பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி
போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி
வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிரவேறு எந்த
நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத்தாண்டாது. வைரம், வைடூரியம்,
தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச்
செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட
எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக்
கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும்
கொண்டபுடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை
கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான
அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில்
ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம்
சாத்துவார்கள். இது மேல்சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய
பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள்
காத்திருக்க வேண்டும்.

4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய்
கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம்
செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து
வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம்
சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை
சாத்தப்படுகிறன.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று
கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க
வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ,
நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு,
பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய
உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்
தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில்
பால் அபிஷேகம் செய்யப்படும்.பிறகு கஸ்தூரி சாத்தி,
புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி
வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார்
ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து
 பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால்
திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒரு ரோஜா மலரின் விலைசுமார் 80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர்,
தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம்
போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்
கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி,
இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும்
இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால்
ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை
செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்ததி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ
எடை.இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை.
சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375கிலோ.
கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில்
யாரிடமும் கிடையாது. இதன்மதிப்பு ரூ.100 கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண
தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு
பல காணிக்கைகளையும், அறக்கட்டளை களையும் செய்து
அவற்றை கல்வெட்டுகளிலும்,செப்பேடுகளிலும்
பொறித்துள்ளனர். சோழ அரசியும்இங்கு வந்து காணிக்கை
சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை
ஆண்டவனைப்போலவே, அபிஷேகஅலங்காரம் செய்து
பார்க்க ஒரு சிறிய விக்கிரகம்கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி
வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ
 குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன்
பெருந்தேவி நகை களைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும்
வைத்தார். முதலாம் குலோத்துங்க   சோழன் திருமலை
தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு
உபயோகப் படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம்
நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில்
விபூதி நெற்றிப்பட்டை  சாத்தப்பட்டு திருவீதி உலா நடக்கிறது.
தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை  பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும்
பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்
கோயிலுக்கு வந்திருக்கிறார்.  அவரும் அன்னமய்யாவும் சம
காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி
தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திரசாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான்
மீது சேஷசலநாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது
கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளியமரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும்
கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர்
நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம்
முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற
இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்
சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார்.
அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார்.
குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக் கடன் செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ
ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள்
ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை
எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே
அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக் கோயிலில் நித்யபடி
பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள்
விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள்
ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால்
என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு
இனத்தைச்சேர்ந்த நெசவாளர் கள் இதை பயபக்தியுடன்
நெய்கிறார்கள். உள் பாவாடை  சீமாட்டியின் திருமேனியில்
படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில்
வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ
கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடு
களிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய
வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50,000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும்,
2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு
பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில்
கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்து
விட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து
குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முசாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் “வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும்,தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம்  இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார்.
முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும்.பிறகு தென்கலை
சாத்துமுறை சேவிக்கப்படும்.பிறகு நைவேத்தியம் செய்யப்படும்.
பிறகு ஒரு தீபாராதனைசெய்யப்படும்.ஏழுமலையான் அந்த
தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி
தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த
முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த
மாலைகள் திருப்பதி கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீஆண்டாள்
ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கினார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன.
இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.169 கல்வெட்டுக்கள்
சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர்
காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர்
காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன்
(பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன.
கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான்  தெலுங்கு, கன்னட
மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில்தான் உள்ளன.

இணையத்தில் படித்தது. மனதை வியக்க வைத்ததால், உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்

---------------------------------------------------------------------
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.7.14

சீர் அகம் தா செந்தூர் வடிவேலா!

 

சீர் அகம் தா செந்தூர் வடிவேலா!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சின்னக்குயில் சித்ரா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்றின் பாடல் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------
சீரகம்தா செந்தூர் வடிவேலா

ஆறகத்திலே உறையும் உமைபாலா
  யாரகத்தில் நான் உரைப்பேன் கரம் தொழுது
    ஏழைக்கென்று முருகா மனம் இளகு
(சீரகம்தா செந்தூர் வடிவேலா ... வடிவேலா)

கடல் ஆடிடும் கண்ணின் கரை ஓரம்
மனம் அலைபாயுதே கந்தன் அருள் தேடியே
  பழம் வேண்டியே குன்றில் சினந்து நின்றாய்
    அந்தக் கனல் தீர்ந்ததோ
      செந்தூர்க் கரை ஆள்கிறாய்

திருவிழி காலம் யாவும்
  வளமும் ... நலம் தரும் ... அதிமதுர
(சீரகம்தா ... )

கொடிச்சேவலே அந்தச் சூரபத்மன்
  உந்தன் மயில் வாகனம் என்னும் வடிவானதோ
    விழிச் சூரியன் கொண்ட முகம் ஆறு
      பகை துயர் தீர்க்குமே உந்தன் திருநீறு

துணை வரும் வேலும் மயிலும்
  அருளும் ... அநுதினம் ... ரசமிகு
சீரகம்தா செந்தூர் வடிவேலா

ஆறகத்திலே உறையும் உமைபாலா
  யாரகத்தில் நான் உரைப்பேன் கரம்தொழுது
    ஏழைக்கென்று முருகா மனம் இளகு
(சீரகம்தா ... ).


பாடியவர்: 'பத்மஸ்ரீ' K.S. சித்ரா - 'சீரகம்தா'
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.7.14

Astrology: quiz 62: Answer: இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்!

 

Astrology: quiz 62: Answer: இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்!

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்
(துள்ளாத)

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்
(துள்ளாத)

பாடலாக்கம். கவிஞர் பட்டுக்கோட்டை பி. கல்யாணசுந்தரம்.
படம்: படம் : கல்யாணப் பரிசு (1959)
பாடியவர்: ஜிக்கி

----------------------------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, மூன்று கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. அன்பர் உயர் கல்வி கற்றவர். முதுகலைப் பட்டப்படிப்பு வரை படித்தவர். அதற்கு மேலும் வேறு துறைகளில் படித்தவர்.
2. அன்பர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கட்டை பிரம்மச்சாரி.
3. சுயதொழில் செய்பவர்.self employed. உடல் உழைப்பு, மூளை, பத்திசாலித்தனம் ஆகிய 3 மட்டுமே மூலதனம்!

------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!

1. கன்னி லக்கினக்காரர். லக்கினாதிபதி புதன் 12ல். விரையம் ஏறி உள்ளார். ஆகவே ஜாதகரின் வாழ்க்கை அவருக்குப் பயன்படாது. அவரது
உறவினர்களுக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும்.

2. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் சூரியன்.
மறுபக்கம் கேது. அது ஜாதகருக்கு, லக்கினாதிபதி 12ல் இல்லாமல் இருந்தாலும்நன்மை செய்யக்கூடிய அமைப்பு அல்ல!

3. ஆறாம் அதிபதி (வில்லன்) சனி கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன்னுடைய நேரடிப்பார்வையில் வைத்துள்ளான். அத்துடன்
களத்திரகாரகன் 12ல். மேலும் கிரகயுத்ததில். 2ல் மாந்தி குடும்ப வாழ்க்கைக்குக் கேடானது. இம்மூன்றும் சேர்ந்து ஜாதகருக்குத் திருமண வாழ்க்கை இல்லாமல் செய்துவிட்டன. அதாவது இல்லறவாழ்க்கை இல்லாமல் செய்துவிட்டன.

4. ஏழாம் அதிபதி குருவை, எட்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் கட்டிப்போட்டிருக்கிறான். லக்கினாதிபதியை 12ஆம் வீட்டுக்காரன் சூரியன்
கட்டிப்போட்டிருக்கிறான். ஆறாம் வீட்டுக்காரன் லக்கினத்தையே செக்கில் வைத்திருக்கிறான். ஆக இந்த 3 அமைப்புக்களுமே மோசமானது. ஆகவே
ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை இல்லை. ஆனாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டு கட்டை பிரம்மச்சாரியாகவே இருக்கிறார்.

5. பத்தாம் அதிபதி புதன் 12ல். ஆகவே ஜாதகர் வேலைக்கும் செல்லவில்லை. வியாபாரமும் செய்யவில்லை. சுய தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

6. வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் கேது ஜாதகருக்கு அறிவுபூர்வமாக வாதாடும் திறமையை கொடுத்துள்ளான்.

7. சூரியனும் புதனும் சேர்ந்துள்ளதால் ஜாதகர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அரசு சம்பந்தப்பட்ட செயல்களை
செய்து  கொடுத்துக்கொண்டிருக்கிறார். (அரசாங்க வேலையில்
இருப்பவர் அல்ல) அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவருக்குப் போதுமானதாக இருப்பதால்மகிழ்ச்சியோடு தன் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

8.ஜாதகத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் சந்திரன் உச்சம் பெற்று
முக்கியத் திரிகோண வீடான 9ஆம் வீட்டில் இருக்கிறார். ஜாதகரின்
 மன நிலைமிகவும் வலிமை பெற்றது அதனால்தான். எதையும்
தாங்கும் இதயம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் அந்த வீட்டுக்காரன் 12ல் மறைந்தாலும்அமர்ந்த காரணத்திற்காக சந்திரன் அவருக்குத் தேவையான விஷயங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான்.

9. ஜாதகருக்கு 9 வயது முதல் 27 வயதுவரை ராகு திசை. எட்டாம்
இடத்து ராகுவால் அந்த திசை நன்மையானதாக இருக்கவில்லை.
அதற்குப் பிறகுவந்த குரு திசை, ஜாதகருக்கு அவருடைய சுய
தொழிலில் நன்மைகளைச் செய்தது. ஜாதகரின் நிதி நிலமையை ஸ்திரப்படுத்தியது. குரு பகவான்உச்சம் பெற்றிருப்பதோடு, லாபத்தில் அமர்ந்திருப்பதையும் கவனியுங்கள்.

10. நீசமான செவ்வாய் உச்சமான குருவோடு சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்றுள்ளான். எட்டாம் அதிபதிக்கு ராஜ யோகம் கிடைத்து என்ன
பயன்? எட்டாம் வீட்டால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும். பஸ்ஸில் நின்று கொண்டே போகாமல் உட்கார்ந்து கொண்டு போகலாம்.
அவ்வளவுதான்!

11. நான்காம் வீட்டுக்காரன் உச்சம். அந்த வீட்டிற்கு எட்டில் இருந்தாலும்
உச்சம் பெற்றதற்கான பலனில் பாதியாவது உண்டு. அதைவிட
முக்கியமாகஅவர் உயர்கல்விக்கு உரிய இடமான ஐந்தாம் வீட்டைத் தன்னுடைய நேர் பார்வையால் பார்க்கிறார். ஆகவே அவர் ஜாதகருக்கு
உயர் கல்வி கற்கும்வாய்ப்பைக் கொடுத்தார். வித்யாகரகன் புதன் 4ஆம் வீட்டிற்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் அவரும் கல்விக்கு உதவினார். அத்துடன் அவர்நவாம்சத்தில் உச்சம் பெற்று நல்ல நிலையில் உள்ளார். ஆகவே ஜாதகர் முதுகலைப் பட்டம் வரை படித்துத் தேறினார்.

12. ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் லக்கினாதிபதியும் லக்கினமும் கெட்டிருந்தால், அவைகள் பயன்படாது. அதை மனதில் வையுங்கள்

வரும் ஆனால் வராது’ என்று சொல்வதற்கு உதாரண ஜாதகம் இது. ஜோதிடம் நன்றாகத் தெரிந்தவர்களையே கவிழ்க்கக்கூடிய ஜாதகம் இது!

அ) ஏழாம் வீட்டுக்காரன் குரு உச்சமாக இருக்கிறான். அத்துடன் தன் வீட்டைப் பார்க்கிறான். ஆனாலும் ஜாதகனுக்குத் திருமணம் ஆகவில்லை ஏன்?

லக்கினாதிபதியும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.அதுபோல களத்திரகாரனும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.ஆகவே திருமணம் ஆகவில்லை
----------------------
ஆ) திருமணம் ஆகியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

ஜாதகத்தில் புனர்பூ தோஷம் உள்ளது. சந்திரனின் மேல் வில்லன்
சனியின் விஷேசப் பார்வை. அத்துடன் 2ல் மாந்தி குடும்பம் நடத்த விடமாட்டான்.ஜாதகரைத் தள்ளிக்கொண்டு போய்விடுவான்.
மனைவியுடன் அருகில் இருந்து குடும்பம் நடத்தியிருக்க மாட்டார்!
------------------------------
இ) ஜாதகர் ஏன் வெளி நாடு செல்லவில்லை?

கடல் கடப்பதற்கு ஒன்பதாம் வீட்டுக்காரான் முக்கியம். இங்கே
அவன் 12ல் இருக்கிறான். 9ஆம் வீட்டுக்காரன் 12ல் இருந்தால் வைத்தியத்திற்காகமட்டுமே வெளி நாடு செல்ல முடியும்.
உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஜாதகங்கள்.
-----------------------------
ஈ) ஜாதகர் ஏன் அரசு உத்தியோகத்திற்குச் செல்லவில்லை?

சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால் அந்த அமைப்பு உண்டென்பது
பொதுவான விதி (Rule). ஆனால் இங்கே அவர்கள் 12ல் இருப்பதால்
அது  நடக்கவில்லை.

அலசல் போதுமா?
-------------------------------------------------------
நமது மாணவர் டல்லாஸ் கண்ணன் குறிப்பிட்டுள்ளதுபோல இது கஷ்டமான தேர்வுதான்!

மொத்தம் 35 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்களில்
ஒருவர்கூட 3 கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதவில்லை.
ஆகவே கலந்துகொண்டவர்களில் 2 பதில்களைச் சரியாக அல்லது 
சரியான பதிலையொட்டி எழுதிய 9 பேர்களைத் தேர்வு செய்கிறேன். அவர்களுக்கு எனது மனம்உவந்த பாராட்டுக்கள்

அவர்களின் பெயர்கள்:
1. R.Venkatesh
2. C.Jeevanantham
3. S.N.Ganapathi Nataraja
4. Seethalrajan
5. Chandrasekaran Suryanarayana
6. Venkat Lakshmi
7. Thangaraj
8. Manikandan

9. Srinivas

மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!