மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.20

எது உனக்குச் சொந்தம் ?


எது உனக்குச் சொந்தம் ?

கடல் மீது கொண்ட நீலம்
தனக்கே சொந்தமென
கடல் கொந்தளித்தால்
வானம் தான் கோபம் கொள்ளாதோ?

வான் மீது கொண்ட மேகம்
தனக்கே சொந்தமென
வான் வழக்கிழுத்தால்
கடல் தான் கோபம் கொள்ளாதோ?

உடல் மீது கொண்ட ஆன்மா
தனக்கே சொந்தமென
உடல் கூக்குரலிட்டால்
இயற்கை தான் கோபம் கொள்ளாதோ?

உன் மீது கொண்ட காற்று
தனக்கே சொந்தமென
உன் உள்ளமுரைத்தால்
பஞ்சபூதங்கள் தான் கோபம் கொள்ளாதோ?

எதுவும் சொந்தமில்லா உலகில்
எல்லாம் சொந்தமென மானிடன்
மாயையை மெய்யாக்கி வாழ்வது
மட்டும் ஏனோ?.
--------------------------------------
படித்து ரசித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.6.20

Astrology: சார்வரி ஆண்டிற்கான. பலனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்சார்வரி ஆண்டிற்கான. பலனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்

சாருவரி யாண்டதனிற் சாதிபதி நெட்டுமே
தீர்மறு நோயாற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமிவிளை வில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏமமின்றிச் சாவா ரியம்பு

பாடலின் பொருள்
சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து செயல் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள் மழை இருக்காது பயிர்கள் விளைச்சல் இருக்காது மக்களுக்கு பாதுகாப்பு  இருக்காது மக்கள் மடிவார்கள் அனேகம் பேர்கள் இறந்து போவார்கள்
  ----  இது சித்தர்கள் எழுதி வைத.துள்ள பாடல்

இதன்படிதான் நடந்துகொண்டிருக்கிறது!!!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

======================================================================

28.6.20

Astrology: Quiz: புதிர்: 26-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!Astrology: Quiz: புதிர்: 26-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். உயர்ந்த பதவியில் அமர்ந்த யோக ஜாதகம் என்ற குறிப்புடன் ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவர் மிருகசீரிஷம் நட்சத்திரம் முதல் பாதத்திற்கு உரியவர். கடக லக்கினம் ரிஷப ராசி. சாதாரண ஏழைக் குடும்பம் ஒன்றில் - அதுவும் கிராமச் சூழ்நிலையில் பிறந்த அவர் தன் சொந்த முயற்சியாலும் ஜாதகப் பலனாலும் நினைத்துப் பார்க்க முடியாத முன்னேற்றம் அடைந்து நாட்டிலேயே மிகப் பெரிய பதவி ஒன்றில் அமர்ந்து விட்டார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் என்ன? ஜாதகத்தை அலசி அவற்றிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!! ” என்று கேட்டிருந்தேன்.

பதில்: கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்று 11ம் இடத்தில் அம்ர்ந்துள்ளார். அதன் காரணமாக மொத்த ஜாதகமும் அதீத வலிமையைப் பெற்றுள்ளது. யோககாரகன் செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்திருப்பது சிறப்பானது. அத்துடன் 9ம் வீட்டில் (பாக்கிய ஸ்தானத்தில்) வர்கோத்தமம் பெற்றுள்ள குரு பகவானின் பார்வையை அவர் பெற்றுள்ளார். அரச கிரகமான சூரியன் உச்சம் பெற்று முக்கியமான கேந்திர வீடான 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதோடு, இருபுறமும் சுபக்கிரகங்கள் சூழ சுபகர்த்தாரி யோகத்துடன் உள்ளார். இந்த அம்சங்கள்தான் (அமைப்புக்கள்தான்) அவருடைய முன்னேற்றத்திற்கும் உயர் பதவிக்கு காரணமாகும்.

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

அவர் யாருமல்ல. முன்னாள் ஜனாதிபதி ஜெயிலசிங்’ தான் அவ்ர். சிலர் அதைக் கண்டுபிடித்து எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு விஷேசமான பாராட்டுக்கள்

இந்தப் புதிரில் 12 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 3-7-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger ஜகதீஸ்வரன் said...
ஜகதீஸ்வரன், கானாடுகாத்தான்: லக்னம் குருவின் பார்வையில். லக்னாதிபதி உச்சம்.2ஆம் அதிபதி சூரியன் 10ல் உச்சம் மற்றும் திக் பலம்.அரசாங்க வேலை.பாக்யாதிபதி குரு ஆட்சி மற்றும் வர்கோத்தமம். ராஜ யோகாதிபதி செவ்வாய் நீச்ச பங்கம் மற்றும் குருவின் பார்வையில்.அதிகாரமுள்ள வேலை. தர்ம கர்மாதிபதி யோகம்.சுக்கிரன் மற்றும் புதன் பரிவர்த்தனை.குரு தசையில் இருந்து நல்ல முன்னேற்றம். சனி தசை 11 ஆம் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து நல்லது செய்தது.
Friday, June 26, 2020 10:07:00 AM
--------------------------------------------
2
Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. The given horoscope is having Kalasarpa Yogam. All planets are between Rahu and Kethu.
2. kadaga lagna , 5th lord is in Lagna. Yogathipathy sitting in lagna.
3. 9th lord Guru is in 9th place aspecting lagna.
4. Lagna lord chandran is exalted in 11th place. Lucky.
5. 2nd lord sun is exalted in 10th place.
6. 11th lord and 12 th lord exchange their place.
This horoscope belongs to Mr. Zail Singh.
These are all the reasons for the native to become higher position in his life.
Thanking you sir.
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, June 26, 2020 10:37:00 AM
--------------------------------------------------------------------
3
Blogger Unknown said...
தொழில் ஸ்தானமாகிய பத்தாம் இடத்தில சூரியன் உச்சம்.
குரு தன்னுடைய ஆட்சி வீட்டில் வர்கோத்தமம் பெற்று வலுவாக உள்ளார்
மேலும் லக்கினத்தை ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார்
இவர் குரு திசையில் நல்ல வேலையில் அமர்ந்திருப்பர். குரு திசை சூரிய புக்தியில் தலைமை பதவி வாய்த்திருக்கும்.
லக்கினாதிபதி சந்திரன் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் உச்சம். தனஸ்தானமான ரெண்டாம் வீட்டதிபதி சூரியன் கேந்திரத்தில் உச்சம். பணம் பதவி மற்றும் புகழ் அகையவற்றிருக்கு இந்த கிரக அமைப்புகள் கரணம்
மேலும் இது காலசர்ப்ப யோகா ஜாதகம். இருபத்தைந்து வயது முடிய ராகு திசை முடியும் வரை கடினமான வாழ்க்கை. குருதிசை ஆரம்பம் முதல் வழக்கை வெற்றிப்பயணம்தான்.
K. Ravi
Friday, June 26, 2020 12:01:00 PM
----------------------------------------------------------------
4
Blogger Unknown said...
Kodukkappattulla jaathakam Kadaka laknam, Rishaba raasi. Laknaththil neesa sevvay. Laknaththil kadaka lakna yogaathipathy sevvay iruppathu sirappu. Aanaal, sevaay neesamavathu nallathalla. Sevvaykku veedu koduththa Chandran uchcham. Aagave, sevvaay neesabangam. Sevvayudan kethu serkkai. Kethuvum sevvay maathirithaan. Enave, Sevvaykku double power. Double Yogam. 6, 9 kkuriya Guru 9 il aatchi. So, 1kkudaiya Chandran Uchcham, 5kkudaiya Sevvay Neechabangam, 9kkudaia Guru Aatchi. Guru Sevvayai paarpathaal Guru Mangala Yogam. Guru 9kku udaiyavan, Sevvay 10kku udaiyavan. So, Dharmakarmathipathi yogam. Not only this but Sun also Ucham. 10 il Uchcha Sooriyan uyar pathaviyai koduththathu. 11il Chandiran Uchcham. Chandiranudan Puthan Serkai. Manamum
Puthiyum othu iyayaindhu pala laabangalaith tharum.
A.NATARAJAN,
CHIDAMBARAM.
Friday, June 26, 2020 12:41:00 PM
---------------------------------------------------
5
Blogger seenivasan said...
Sir,
SUN ans Moon in Exalted position
Jubitor is ruling
Venus and mercuury is in interchange so indirectly in their own house
Rajayogathipathi Mars is in lagna and in neesa panga rajayoga
and in young age must have struggled due to kala sarpa dosam as all planets are positioned in between ragu and ketu
Friday, June 26, 2020 12:47:00 PM
------------------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங் அவர்களுடையது.5 மே 1916ல் மதியம் 12 மணி 30 நிமிடத்திற்கு பஞ்சாப்பில் உள்ள சந்வான் என்ற கிராமத்தில் பிறந்தவர்.தந்தையார் தச்சு வேலை செய்பவர். சிறு வயதிலேயே தாயாரை இழந்தவர்.
லக்கினாதிபதி சந்திரன்11ல் லாபத்தில் உச்சம். யோகாதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்து நீசபங்க ராஜ யோகம். இரண்டாமதிபதியும், தனகாரகனுமான, அரசாங்கபதவிக்கான சூரிய பகவான் 10ல் அமர்ந்து உச்சம். பாக்கியாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சியாக அமர்ந்து லக்கினத்தையும் நண்பரான யோகாதிபதியன செவ்வாயையும் பார்க்கிறார்.சுக்கிரனும் புதனும் பரிவர்தனை.
1951ல் துவங்கி அரசாங்கப் பதவிகளில் இருந்தார். அப்போது அவருக்கு குருதசா சந்திரபுக்தி, சூரிய புகதி, செவ்வாய் புகதி ஆகிய சாதகமான தசா புக்திகளில் துவங்கிய பதவி , அவர் உயர்ந்த பதவியான ஜனாதிபதிவரை நீடித்தது.
Friday, June 26, 2020 3:31:00 PM
--------------------------------------------------------
7
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்று மூன்றாம் அதிபதி(வெற்றி ) புதனுடன் .அமர்ந்துள்ளார்
2 .பத்தில் உச்சம் பெற்ற சூரியன் அரசாங்க உத்யோகத்தில் அமர வைத்துள்ளார்
3 .பத்தாம் அதிபதி லக்கினத்தில் வந்து அமர்ந்ததால் பதவியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்
4 மேலும் ஒன்பதாம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று பத்தாம் அதிபதியை பார்க்கிறார் (குரு மங்கள யோகம் )
5குரு கேதுவை பார்ப்பதால் குரு சண்டாள யோகம் வேறு
6எட்டாம் அதிபதி பனிரெண்டில் மறைவு
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, June 26, 2020 4:54:00 PM
-------------------------------------------------
7 -A
Blogger csubramoniam said...
ஐயா மேலும் ஒரு தகவல் இந்த ஜாதகம் முன்னாள் குடியரசு தலைவர்Giani Zail Singh அவர்களுடையது என நினைக்கின்றேன்
birth date 05/05/1916 12:10hrs
birth date 05/05/1916 12:10hrs
நன்றி
Friday, June 26, 2020 5:48:00 PM
---------------------------------------------------
8
Blogger Jeyalaxmi said...
வணக்கம் ஐயா. 26.6.20 அன்று கேட்கப்பட்ட கேள்விக்கான பதில். கடக லக்னம. லக்னாதிபதி சந்திரன் உச்சம் பெற்று லாபஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெறற புதனுடன் உள்ளார். தன வாக்கு ஸ்தான அதிபதி சூரியன் உச்சம் திக்பலம் பெறுகிறார். லக்னத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து வர்கோத்துமம ஆட்சி பலம் பெற்ற குரு பகவான் தீட்சையினால் நீச்ச பங்கம் பெற்று யோகம் தரும் நிலையில் உள்ளார். பரிவர்த்தனை பெற்ற லாபாதிபதியும் நண்பருமான சுக்கிரனுடன் இணைந்து நட்பு வீட்டில் அமர்ந்து சனி பகவானும் பலத்துடன் உள்ளார். ராஜ் கிரகங்களான சூரிய சந்திரர்கள் உச்சம். செவ்வாய் நீச பங்கம். குரு வர்கோத்தமும் ஆட்சியும். புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்களாகி பரிவர்த்தனை என்பது இந்த ஜாதகத்தின் சிறப்பு. பலமற்ற செவ்வாய் ராகு திசையில் சிரமபபட்டிருப்பார். குரு திசையில் முன்னேற்றம் சாத்தியமாகும். பத்தில் உள்ள திக்பலம் பெற்று உச்சம் பெற்ற சூரியனால் மிக உயர்ந்த நிலையை அடைந்து இருப்பார். வாக்கு ஸ்தானதிபதி சூரியன் உச்சம் பெற்று கீர்த்தி ஸ்தானாதிபதி புதன் லாபத்தில் உச்சம் பெற்ற லக்னாதிபதி சந்திரனோடு இனைந்திருப்பதால் இவர் பேச்சு எழுத்தும் புகழ் பெறும். பலம் வாய்ந்த கிரகங்களின் திசைகளால் வாழ்க நாள் முழுவதும் நல்ல புகழ் பெற்று வாழ்வார்கள் என்று கண்டிக்கிறேன். விடை சரியாக இருக்கும் பட்சத்தில் இது குருவான உங்களுக்கான வெற்றி. உங்களின் எளிமையான எழுத்து நடையே எனக்கு தெரியாத பல நுணுக்கங்களை அறிந்து கொள்ள உதவியது. நீங்கள் நீண்ட காலம் சகல செளபாக்கியத்துடனன வாழ இறைவனை உளமார வேண்டுகிறேன். நன்றி. வணக்கம் ஐயா.
...
Friday, June 26, 2020 8:56:00 PM
-------------------------------------------
9
Blogger kumaran said...
அன்பு வாத்தியாருக்கு மிக்க வணக்கம் .. கொடுக்க பட்டு உள்ள ஜாதகம் , உயர் பதவி க்கு காரணம் சூரியன் 11இல் உச்சம் பெற்று 11-அம இடத்துக்கு சுப கத்திரி யோகம் கொடுத்து 11-ம்ம்ம் இடம் வலுவாக உள்ளது அதுபோல் 10-இல் குரு சொந்த வீட்டில் இருந்து இன்னும் தொழில் இடம் வலுவு பெற்று சனி பார்வை 10-இல் வேறு இதுவே அதற்கு காரணம் ....
நன்றி குமரன் ..
9655819898
Saturday, June 27, 2020 9:09:00 AM
------------------------------------------------
10
Blogger seethalrajan said...
அனைவருக்கும் வணக்கம், இந்த ஜாதகத்தில் நண்பர் 1 ஹீரோவும், இயற்கை சுபரும் ஆன குரு, தனது சொந்த வீட்டில் ஆடசி பெற்று, உயர்ந்த கோண பலம் பெற்று, உயர்த்த கேந்திர அதிபதிபதியை தன்பார்வையில் வைத்து தர்மகர்மாதிபதி(9,10) யோகத்தை, இவரின் 23 வயதில் ஆரம்பித்தது தான் காரணம்..
Saturday, June 27, 2020 1:30:00 PM
---------------------------------------------------
11
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கொடுத்து இருந்த ஜாதகரின் உச்ச நிலை அடைதலிற்கான காரணங்கள்
1. கடக லக்கின , மிருகசீரிட நக்ஷத்திரம் ரிஷப ராசி ஜாதகரின் சுப கிரகங்களான லக்கின அதிபதி சந்திரன் தனது உச்ச ஸ்தானமான ரிஷபத்தில் அமர்ந்ததும்,
2. லக்கினத்திற்கு சுப கிரகங்களான செவ்வாய் நீச பங்கம் பெற்று லக்கினத்திலேயே அமர்ந்ததும், மற்றொரு சுப கிரகமும் பாக்கியாதிபதியான குரு வர்கோத்தமமாக ஒன்பதாம் இடத்தில் சொந்த வீட்டில் அமர்ந்து அணைத்து பாக்கியங்களையும் உரிய நேரத்தில் தவறாமல் தந்தது.
3.ஒருவரின் உச்ச பதவி நிலையை அறிய அவரின் பத்தாம் அதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்து மேலும் பத்தாம் இடத்தில் சூரியன் உச்ச நிலை அடைந்ததும் ஜாதகருக்கு மிக உயரிய நிலையை அடைய செய்தது
நன்றி
இப்படிக்கு
ப . சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, June 27, 2020 5:22:00 PM
----------------------------------------------
12
Blogger Sridhar said...
10 ஆம் இடத்தில் சூரியன் உச்சம்
குரு வர்கோத்தமம் மற்றும் சொந்த வீட்டில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்
பத்தாம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் குருவின் பார்வையில்
இவை அனைத்தும் மிகப்பெரிய பதவியை கொடுத்தது
Sunday, June 28, 2020 2:51:00 AM
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.6.20

Astrology: Quiz: புதிர்: உயர்ந்த பதவியில் அமர்ந்த யோக ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: உயர்ந்த பதவியில் அமர்ந்த யோக ஜாதகம்!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. மிருகசீரிஷம் நட்சத்திரம் முதல் பாதம். கடக லக்கினம் ரிஷப ராசி. சாதாரண ஏழைக் குடும்பம் ஒன்றில் - அதுவும் கிராமச் சூழ்நிலையில் பிறந்த அவர் தன் சொந்த முயற்சியாலும் ஜாதகப் பலனாலும் நினைத்துப் பார்க்க முடியாத முன்னேற்றம் அடைந்து நாட்டிலேயே மிகப் பெரிய பதவி ஒன்றில் அமர்ந்து விட்டார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் என்ன? ஜாதகத்தை அலசி அவற்றிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 28-6-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.6.20

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. ஒருவரின் வாழ்க்கை மேம்பட நீங்கள் உதவ விரும்பினால் அவருக்கு மீனைக் கொடுத்து உதவாதீர்கள். பயன்படும் வகையில் மீன் பிடிக்கக்கற்றுக் கொடுங்கள் என்பார்கள், இங்கே இளைஞன் ஒருவன் செய்யும் காரியத்தைப் பாருங்கள்.2. அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்று எளிய மக்கள் சிலாகித்துச் சொல்லும் விதமாக சுவாமிமலையில் உறையும் முருகப்பெருமானுக்கு ஒரு சிறப்பு உண்டு. அவர் தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என்பார்கள். அதை மட்டும்தான் அனைவரும் சொல்வார்கள். ஆனால் அந்தப் பிரணவ மந்திரம் என்ன என்றால் சொல்லத்தெரியாது. சரி யாருக்குத்தான் அந்த மந்திரம் தெரியும்? அருணகிரிநாதருக்குத் தெரியும். அவருக்கு எப்படித் தெரியும்? அதையும் அவரே சொல்லியிருக்கிறார். அதை விளக்கும் விதமாக அன்பர் ஒருவரின் சொற்பொழிவு கீழே உள்ள காணொளியில் உள்ளது. அவசியம் பார்த்து மகிழுங்கள்3. ஒரு இளம் பெண் கலக்கலாக இசைத்திருக்கிறார். அவர் பாடுவதைக் கேட்டு மகிழுங்கள்!===============================================================
அன்புடன்
வாத்தியார்
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.6.20

பணக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்?


பணக்கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்?

வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார்.

இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே... என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நுாலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது.

அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.

''சுவாமி.... எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை. லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்'' என்றார்.

பரமாச்சாரியார் அவரிடம், '' முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கை உடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்.''

கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?

சுவாமிகள் புன்முறுவலுடன், ''வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்''

அடியவர் கடைசி அடியை ராகத்துடன் 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.

'அதற்கு என்ன பொருள்?'

'குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்'

பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ''வருவாய் அருள்வாய் என்றால் 'வா, வந்து அருள்புரிய வேண்டும்' என்பது ஒரு பொருள். இது தவிர, 'வருவாய் தா' என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் 'வருவாய் பெருகும்' என்பதில் இன்னுமா சந்தேகம்? வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும்.

நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது.🙏
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!


23.6.20

நீங்களும் கிருஷ்ணரும்!!!!


நீங்களும் கிருஷ்ணரும்!!!!

*கிருஷ்ணரின்  வார்த்தைகள்*

*நீ அனுபவித்தால்!*

|| ராதேக்ருஷ்ணா ||

நீ க்ருஷ்ணனை கர்பத்தில் அனுபவித்தால்
உன்னை தேவகிக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை பிள்ளையாய் அனுபவித்தால்
உன்னை வசுதேவருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை குழந்தையாய் அனுபவித்தால்
உன்னை யசோதைக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை மாட்டுக்காரனாக அனுபவித்தால்
உன்னை நந்தகோபருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை காதலனாய் அனுபவித்தால்
உன்னை கோபிகைகளுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை தகப்பனாக  அனுபவித்தால்
உன்னை ருக்மிணிக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை பார்த்தசாரதியாய் அனுபவித்தால்
உன்னை அர்ஜுனனுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை நண்பனாய் அனுபவித்தால்
உன்னை உத்தவருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை தூதுவனாய் அனுபவித்தால்
உன்னை பாண்டவர்களுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை தெய்வமாய் அனுபவித்தால்
உன்னை பீஷ்மருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை கீதாசார்யனாக அனுபவித்தால்
உன்னை சஞ்சயனுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ஆபத்பாந்தவனாக அனுபவித்தால்
உன்னை த்ரௌபதிக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ரங்கனாய் அனுபவித்தால்
உன்னை ஆண்டாளுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை நாராயணனாய் அனுபவித்தால்
உன்னை ராமானுஜருக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை குருவாயூரப்பனாக அனுபவித்தால்
உன்னை மஞ்சுளாவுக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை பாண்டுரங்கனாக அனுபவித்தால்
உன்னை புண்டலீகனுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை உடுப்பி க்ருஷ்ணனாக அனுபவித்தால்
உன்னை கனகதாஸருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை கிரிதாரியாக  அனுபவித்தால்
உன்னை மீராவுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ஸ்ரீ நாத்ஜீயாக அனுபவித்தால்
உன்னை வல்லபாச்சார்யருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை பூரி ஜகந்நாதனாக அனுபவித்தால்
உன்னை க்ருஷ்ண சைதன்யருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை ராஸநாயகனாக அனுபவித்தால்
உன்னை ஜயதேவருக்குப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை அனந்த பத்ம நாபனாக அனுபவித்தால்
உன்னை மஹாராஜா ஸ்வாதித் திருநாளுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனை ஸ்ரீமத் பாகவதமாக அனுபவித்தால்
உன்னை சுகப்ரம்மரிஷிக்கும்ப் பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை நாமஜபமாக அனுபவித்தால்
உன்னை ஹரிதாஸ்யவனுக்குப்  பிடிக்கும்!

நீ க்ருஷ்ணனை ராதிகாதாஸனாக அனுபவித்தால்
உன்னை க்ருஷ்ணனுக்குப் பிடிக்கும் !

நீ க்ருஷ்ணனிடம் ப்ரேமையில் உன்னையே கொடுத்து
அவன் இஷ்டப்படி வாழ்ந்தால் உன்னை ராதிகாவுக்குப் பிடிக்கும் !

உன்னிடத்தில் இத்தனைபேர் ப்ரியம் வைக்கக் காத்திருக்க 
நீ ஏன் மனிதர்களின பொய்யான அன்பிற்காக ஏங்குகிறாய் !!!

க்ரிஷ்ணனிடம் சரணாகதி ஆகிவிடு !!

ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.6.20

நடிகை சோபியாலோரென் அசத்தலாகச் சொன்னது!!!


நடிகை சோபியாலோரென் அசத்தலாகச் சொன்னது!!!

சோபியா லோரென் 26-9-1934ல் ரோம் (இத்தாலி) நகரில் பிறந்தவர்
17 வயதில் உலக அழகி பட்டம் பெற்றார்
24 வயதில் அமெரிக்க திரை உலகைக் கலக்கினார்

அந்தக் காலத்து கனவுக்கன்னி அவர்!!!

1958ம் ஆண்டு அமெரிக்காவின் பாரமவுண்ட் பிலிம் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இவர் நடித்த 5 படங்களும் தொடர் வெற்றிகளைக் கொடுக்க அகில உலக பிரபலமானார். இவரைப்
பற்றிய மேல் விபரங்களுக்கு விக்கி மகாராஜாவிடம் கெளுங்கள்.
சொல்வார்

வாருங்கள், அவர் அசத்தலாகச் சொன்னது என்ன என்பதை இப்போது பார்ப்போம்:

”எனக்கு தேவையான அளவு தன்னம்பிக்கைஏற்பட்டபோது, கிடைத்த வாய்ப்புக்கள் பறி போயின! தோற்று விடுவோம் என்று உறுதியாக
நான் நம்பியபோது வெற்றிகள் வந்து என்னைத் த்ழுவிக்கொண்டன!
வெறுப்பின் உச்சத்தை நான் தொட்டபோது, என் மீது அதீதமான
அன்பைச் செலுத்தி என்னை ஒருவர் விரும்பத்துவங்கினார்.
தூக்கத்திற்காக பல மணி நேரம் துவண்டு படுக்கையில் புரண்டபோது தூக்கம் வரவில்லை. வெளிச்சம் வந்து சேர்ந்தது. ஆமாம் விடிந்து விட்டது. வெளிச்சம் வந்து விட்டது. பின் எங்கே தூங்குவது?

ஆமாம் இதுதான் வாழ்க்கை.

நீங்கள் எதை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் திட்டமிடுங்கள், ஆனால் உங்கள் வாழ்க்கை உங்களுக்காக என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது.

வெற்றி உங்களை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தும்!
ஆனால் தோல்வி இந்த உலகை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்!!!

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்!

பல சமயங்களில் இதுதான் இறுதி முடிவு என்று நினைத்து நாம் நமது நம்பிக்கையைக் கைவிடும்போது, கடவுள் புன்னகையோடு சொல்வார்:
“Relax Sweetheart; It’s just a Bend, not the End..!"(வளைவுதான் முடிவு அல்ல)
--------------------------------------------------------
*WORTH READING IT AGAIN AND AGAIN* அதனால் மொழிமாற்றம் செய்து பதிவிட்டேன்

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.6.20

Astrology: Quiz: புதிர்: 19-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 19-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு பெண்மணியின் ஜாதகதைக் கொடுத்து, அவர் ஆயில்ய நட்சத்திரம். அவருக்கு திருமணமாகி நல்ல கணவர் கிடைத்தும் நல்ல தாம்பத்திய வாழக்கை அமைந்தும் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. அந்த நல்ல பெண்மணிக்கு குழந்தை பாக்கியம் ஏன் கிட்டவில்லை? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஐந்தாம் வீடு கெட்டிருக்கிறது. ராகுவின் ஆதிக்கத்தோடு கேதுவோடு கூட்டணியில் இருக்கும் செவ்வாயின் பார்வையும் உள்ளது. 5ம் வீட்டுக்காரனான புதன் சனீஷ்வரனின் பிடியில் சிக்கி உள்ளார். அத்துடன் மாந்தியின் பார்வை. குழந்தைக்குக் காரகனான (Authority) குரு பகவான் கேதுவின் பிடியில் அத்துடன் சனீஷ்வரனின் பார்வை. அத்துடன் குரு பகவானுக்கு ஐந்தில் மாந்தி. ஆகவே இக்காரணங்களால் ஜாதகிக்கு குழந்தை இல்லை

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 26-6-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger C Jeevanantham said...
ஐயா,
1 . இந்த பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் ராகு உள்ளது. Rahu spoiled the 5th place.
2 . 5 ஆம் இடத்து அதிபதி புதன் , சனி உடன் சேர்ந்து கெட்டு விட்டது. சுக்கிரன் கூட சனி உடன் சேர்ந்து கொண்டு குழந்தை பிறப்பை வெகுவாக தாமத படுத்தியது.
3 . குருவின் பார்வை இருந்தாலும் குரு கேது சேர்க்கை குழந்தை இல்லாமல் செய்து விட்டது.
நன்றி ஐயா .
Friday, June 19, 2020 11:14:00 AM
-------------------------------------------
2
Blogger Unknown said...
ஐயா நான் இந்த பதிவிற்கு புதியவன்
தங்களுடைய பதிவுகளை வாசித்து வருகிறேன். அதன் அடிப்படியில் இந்த என் புதிய முயற்சி.
லக்கினத்திற்கு ஐந்தாம் இடத்தில ராகு மற்றும் பன்னிரெண்டாம் வீட்டின் அதிபதி செவ்வாயின் பார்வை ஐந்தாம் வீட்டின் மேல். இதுவே குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு கரணம் என நினைக்கின்றேன்.
மேலும் லக்கினாதிபதி சுக்கிரன் சனியின் ஆதிக்கத்தில்
K. RAVI
Friday, June 19, 2020 12:46:00 PM
----------------------------------------------
=====
Blogger OnlineBlackMagicSpecialist said...
Great Blog!! That was amazing. Your thought processing is wonderful. The way you tell the thing is awesome.
Kala Jadu For Love In Gurgaon
Friday, June 19, 2020 5:25:00 PM
-----------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சுக்ரன் ஒன்பதில் பாக்யாதிபதி சனியுடன் ,குடும்பஸ்தானதிபதி புதனுடன் அமர்ந்துள்ளார் ஆகவே திருமண வாழ்கை நன்றாக அமைந்துள்ளது.
2 .ஐந்தாம் அதிபதி புதன் சனியுடனும் ,ஆறாம் அதிபதி சுக்கிரனுடன் உள்ளார்
௩.ஐந்தில் ராகு ,ஐந்தாம் வீட்டின் மீது எட்டாம் அதிபதி குருவின் பார்வை ,
மேலும் காரகன் குரு ராகு கேதுவுடன் அமர்ந்து கெட்டுப்போய் உள்ளார் ,
3 .விரயாதிபதி செவ்வாயின் பார்வையும் ஐந்தாம் இடத்தின் மீது உள்ளது ,
ஐந்தாம் இடமும் காரகனும் கேட்டு போனதால் ஜாதககிக்கு குழந்தை இல்லை
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, June 19, 2020 5:37:00 PM
--------------------------------------------
4
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில்
ஜாதகி ரிஷப லக்கினம், கடக ராசி , ஆயில்ய நக்ஷத்திர காரருக்கு குழந்தை பேரு அமையாமல் போனதற்கான காரணங்கள்
குழந்தை பேரு அமைய ஜாதகியின் ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் இவற்றை பார்க்க வேண்டும்.
இதில் ஜாதகியின் ஐந்தாம் இடத்தில் ராகு நின்று ஐந்தாம் இடத்தை செயலற்று போக செய்தது மேலும் ஐந்தாம் இடத்தின் மீது எட்டாம் அதிபதி குருவ்யுடன் சேர்ந்த பனிரெண்டாம் அதிபதி செவ்வாயின் பார்வை மேலும் ஐந்தாம் இடத்தை மோசம் செய்தது. மேலும் ராசி கட்டம் மற்றும் நவாம்ச கட்டத்தில் ஐந்தாம் அதிபதி புதன் பாதகாதிபதி சனியின் பிடியில் உள்ளார் மற்றும் நவாம்ச கட்டத்தில் புதன் கேது வுடன் கூடிய நிலை அனைத்தும் ஐந்தாம் இடத்தை சேத படுத்தியது.
ஒன்பதாம் இடம் லக்கின அதிபதி யுடன் சனி இருந்தாலும் குழந்தை பேற்றினை தர இயலவில்லை ஏனென்றால் பாதகாதிபதி யாக சனியே உள்ளதால் அவரால் சரியாக செயல் பட இயலவில்லை. மேலும் நவாம்சத்தில் ஒன்பதாம் அதிபதி சனி மாந்தி கூட்டணி உள்ளதால் அவரால் குழந்தை பேற்றினை தர இயலாத நிலையே உள்ளது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, June 19, 2020 7:31:00 PM
----------------------------------------------
5
Blogger Jeyalaxmi said...
வணக்கம் ஐயா. புத்திர பாவமான ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து கிரகண தோஷமுடைய குரு மற்றும் விரையாதிபதி செவ்வாய் பார்வை பெறுகிறார். ரிஷப லக்னத்திற்கு குரு எட்டுக்குடையவரும் எதிரிடை கிரகமுமாவார். புத்திர பாவாதிபதி புதன் ஆறுக்குடையவர் பாதகாதிபதி உடன் பாதக ஸ்தானத்தில் இருந்து பலமிழந்தார்.பாதகாதிபதி சனி பகவான் பார்வை குரு பகவான் மேல் விழுந்தது குழந்தை பேறு இல்லாத நிலைக்கு ஜாதகரை தள்ளி விட்டது.
Saturday, June 20, 2020 10:00:00 AM
------------------------------------------------
6
Blogger Hari said...
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம், லக்னாதிபதி சுக்ரன் மற்றும் 5க்குடைய புதன் இரு கிரகங்களும் ஆட்சி பெற்ற பலமான சனியின் வீட்டில் அமர்ந்தது. மேலும் குரு செவ்வாய் மற்றும் கேதுவுடன் கூட்டணி இவை இரண்டுமே குழந்தைப்பேறை கெடுத்துவிட்டன.
Saturday, June 20, 2020 10:12:00 AM
----------------------------------------------
7
Blogger vasanth said...
Gud evening sir,
5th house occupied by malefic raghu.
5th house lord is conjunction with saturn.
puthira karagan "Guru" is conjunction with Malefic kethu and sevai
in Navamsam also 5th house lord bhudan is conjunction with malefic kethu.
Thanks.
Saturday, June 20, 2020 9:22:00 PM
---------------------------------------------
8
Blogger Ram Venkat said...
ரிசப லக்கினம், கடக ராசி ஜாதகி.
அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஜாதகப்படி என்ன காரணம்?
1) புத்திர ஸ்தானமான கன்னி ராசியில் ராகு நங்கூரமிட்டு அமர்ந்துள்ளார்.
2) புத்திர ஸ்தானாதிபதி புதன் மற்றும் இலக்கினாதிபதி சுக்கிரன் கத்திரியின் பிடியிலுள்ளனர்.
3) புத்திர காரகன் குருவும், செவ்வாய் மற்றும் கேது கிரகங்களின் கத்திரியின் பிடியில் அகப்பட்டு வலுவிழந்து உள்ளார்.
புத்திர ஸ்தானம் வலுவிழந்து உள்ளதால் ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
Saturday, June 20, 2020 9:47:00 PM
------------------------------------------------
9
Blogger seethalrajan said...
வணக்கம், கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் 1,5,9 அனைவரும் பாதக ஸ்தானத்தில் இருந்து பாதிக்க பட்டு உள்ளனர், மேலும் 5ல் ராகு, காரகன் குரு கேதுவுடன், 5ம் வீட்டுக்கு கொடிய எதிரியானா செவ்வாய் சேர்க்கை, ஆகையால் குழந்தை இல்லை.
Saturday, June 20, 2020 11:21:00 PM
--------------------------------------------------
10
Blogger Sridhar said...
புத்திர காரகன் குரு கேதுவுடன் மற்றும் சனியின் பார்வையில்
5ஆம் வீட்டில் ராகு
5ஆம் அதிபதி புதன் சனியுடன்
இந்த அமைப்புகளால் குழந்தை இல்லை
Sunday, June 21, 2020 2:54:00 AM
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.6.20

Astrology: Quiz: புதிர்: குழந்தைப் பேறு கிட்டாத பெண்மணியின் ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: குழந்தைப் பேறு கிட்டாத பெண்மணியின் ஜாதகம்!!!

ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. ஆயில்ய நட்சத்திரம். அவருக்கு திருமணமாகி நல்ல கணவர் கிடைத்தும் நல்ல தாம்பத்திய வாழக்கை அமைந்தும் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. அந்த நல்ல பெண்மணிக்கு குழந்தை பாக்கியம் ஏன் கிட்டவில்லை?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 14-6-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.6.20

இளம் பெண்களின் மன நிலை!


இளம் பெண்களின் மன நிலை!

சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த செய்தி..

இவரதுமேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன்.

சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன்.

பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா?

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...

‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம்.

ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா..

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.

‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’

வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா.

அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான்.

அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே,

நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன்.

எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா.

அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார்.

பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை)

நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான்.

இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ்.

எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண்.

அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம்.

அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...

இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம்.

அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.

‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க.

அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது!
என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள்.

பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட...

பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள்.

இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...

‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.

‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.

‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது.

அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்...

தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...

சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது...

‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய்,

இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.

அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.

என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.

தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்
 பட்டிருக்கிறார் என்றால்..

அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.

இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.

வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.

கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க...

கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.

படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.

முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி,

தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!
----------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.6.20

காந்தாரியும் கிருஷ்ண பரமாத்வாவும்!!!!!


காந்தாரியும் கிருஷ்ண பரமாத்வாவும்!!!!!

interesting read.....somewhat long post.....very powerful and enlightening.....

பொறுமையாக படிக்கவும்...மிகுந்த ஞானம் தோன்றும்.

காந்தாரியின் கனவு

“நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா!  நீ
 பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா?
நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா?

 ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது.

இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்!

உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது!  இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!”

என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள்.

லோகநாயகன், ஜகத்ரக்ஷகன், புருஷோத்தமன் என தானே தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்குத் தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.

 எனினும், அவள் கோபம்  அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும் போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத் தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

திடீரென எதோ சப்தம் கேட்க, தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.

 கிருஷ்ணன் கையில் குழல், துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். 

ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க

“எங்கே வந்தாய்? இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு? வாய்க்கு வாய் நான் உன் பக்தை எனச் சொல்வாயே? இது தான் உன் பக்தரக்ஷண லக்ஷணமா?”

“காந்தாரி இன்னும் கோபம் தீரவில்லையோ?”

“என் நூறு புதல்வர்கள், கோடி வீரர்கள், பல கோடி குதிரை, யானை என இவ்வளவு பேரழிவு தேவையா கிருஷ்ணா? நீயே இதைத் தடுத்திருக்கலாமே? உன்னால் முடியாததா என்ன?

“என் முடியாது? தடுத்திருக்க முடியும். அல்லது அனைத்தையும் என் ஸங்கல்பத்தாலேயே நினைத்த மாத்திரத்தில் அழித்திருக்க முடியும்”

“பிறகு ஏன் செய்யவில்லை?

“காந்தாரி! நீ என் பரம பக்தை. அதோடு சிறந்த பதிவ்ரதையும் கூட. அதனால் உனக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். கேள்!

 இந்த யுகம் பாரதப்போரோடு முடிகிறது. ஸம்பவாமி யுகே யுகே என்பது படி, புது யுகம் பிறக்க, பழையது அழிய வேண்டும். பாசம் எனும் கருமேகம் உன்னை மட்டுமல்ல உன் கணவனின் கண்களையும் மறைத்தது.

அந்த மாயத்திரை இன்னும் விலகவில்லை. அந்தகம் நிறைந்த இந்த மாளிகையில் ஒரே ஒரு அகல் விளக்கு விதுரன் மட்டுமே. அவன் மட்டுமே என்னை பூரணமாக அறிவான்”

“கிருஷ்ணா! உன்னை நான் இன்று அறிந்து கொண்டேன். நீயும், விதுரனும்  பக்ஷபாதம் கொண்டவர்கள்”

“காந்தாரி! என் பக்தனை நிந்தித்தால் வரும் பாவம் என்னை நிந்திப்பதினும் கொடியது. அதனால் தான் இன்று உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டேன். உன்னுடைய இந்த கேள்விக்கு நான் விடைகூறுமுன்  நீ பதில் சொல்.

முதலில் ஏன் நீ உன் கணவனைச் சபிக்கவில்லை? சக்கரவர்த்தி நினைத்திருந்தால், இந்தப் போரே நிகழ்ந்திருக்காது.

 பாண்டவர்கள் நியாயமாகக் கேட்ட ஆட்சியை ஏன் அவர் கொடுக்க விரும்பவில்லை? ஆரம்பத்திலிருந்து துரியோதனை பாபியாக வளரவிட்டதே அவரது கண்மூடித்தனமான பிள்ளைப்பாசம் அல்லவா?
நீ பதிவ்ரதை என்பது உன் கணவனுக்கு! ராஜமாதாவாக இந்த நாட்டு மக்களின் நலனை நீ ஒரு கணம் எண்ணிப்பார்த்திருப்பாயா?

பிறகு, பீஷ்ம, கிருப, துரோணாதிகளை ஏன் நீ சபிக்கவில்லை? தன் சஹோதரர்களின்  தர்ம பத்தினியையே பல்லாயிரம் பேர் முன்னிலையில் துரியோதனனும், துச்சாதனனும் மானபங்கப்படுத்திய பின்பும் மௌனம் சாதித்தனரே?

 மேலும், விபீஷணன் போல விதுரன் மட்டுமல்லவா மனசாட்சிக்குப் பயந்தான்? மற்றோர் எல்லாரும் செஞ்சோற்றுக்கடன் என்ற போர்வையில் துரியனுக்காக போரும் புரிந்தனரே? பெரியவர்களைச் சபிக்க முடியாது என்ற எண்ணமோ?

உன் மகன்?  தன் சகோதர்களையே  அடிமைகளாக்கி, அவமானப்படுத்தி அவர்களின் மனைவியையே “மடியில் வந்து அமர்வாய்” என விளித்து மாபாதகம் செய்தானே?

மேலும்,  “ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு சமான:” என்று உனக்குத் தெரியாதா? தன் 99 சகோதரர்களுக்குத் தந்தையாக இருக்க வேண்டியவன் தன் சுயநலத்திற்காக அவர்களைப் பலி கொடுத்தானே? அவனை ஏன் சபிக்கவில்லை?

 பிள்ளைப்பாசம் அறிவுக்கண்ணை மறைத்ததோ? நீ இப்போது கேட்கும் நியாயம் அன்று எங்கே போனது? அவனைக் கேட்டாயா?
ஏன் சகுனியை சபிக்கவில்லை? அவன்தான் உண்மையில் உடன்பிறந்தவள் குடும்பத்தை கூற்றின் மறுஉருவம் போல் சர்வ நாசமாக்கியவன்.

“கிருஷ்ணா! சகுனி என் சகோதரன். மேலும், நீ மேற்கூறிய அனைவரும் என் உற்றார் உறவினர் ஆச்சாரியர்கள் அல்லவா?

“பார்த்தாயா காந்தாரி! அறியாமை உன் புத்தியை மட்டுமல்ல பக்தியையும் மறைக்கிறது. அப்போது நான் யார்? உனக்கு   சொந்தமில்லையா?  பாண்டவர் என்னை சொந்தமெனக் கொண்டனர். அதனால் பிழைத்தனர்.

“கபடனே! குந்தி உன் சொந்த அத்தை. அதனால் தான் ஒருதலை நீதியாக பாண்டவர் பக்கம் நின்று என் குலத்தை வேரோடு சாய்த்துவிட்டாய்”

“பேதையே! அதுவல்ல நிஜம். உலகில் நல்லோரெல்லாம் என் சொந்தம். நான் அவர்களுக்குப் பூரணமாய் சொந்தம். அவர் மனமே நான் நித்யவாசம் செய்யும் வீடு.

“சரி அதைவிடு காந்தாரி! பாண்டவர் அழிந்து துரியோதனன் பட்டம் கொண்டிருந்தால் உனக்கு மகிழ்ச்சி தானே ஏற்பட்டிருக்கும்? அது சுயநலம் அல்லவா? அதற்கு என்ன செய்தால் தகுமோ அதை துரியோதனாதிகளைச் செய்ய விட்டாயே?

“கிருஷ்ணா! ஒரு தாய் தன் மக்கள் நன்றாய் இருக்க வேண்டும் என நினைப்பது தவறா?”

“அப்படியானால் நான் இந்த உலகுக்கெல்லாம் தாயன்றோ! எனக்கும் சுயநலம் இருக்கக் கூடாதா? உலகம் முழுமையும் என் சொத்து. அதை நல்விதம் ஆத்தலும், காத்தலும் என் பொறுப்பு. அதையே செய்தேன்”.

என் அவதார நோக்கை நிறைவேற்ற இந்தப்போர் ஒரு சாக்கே. ஆனால் ஏன் அதை தனி ஒருவனாக நான் செய்யவில்லை? ஏன்  என எண்ணிப்பார்.
“என் 100 பிள்ளைகளையும் கொன்றுவிட்டாயே? இனி நான் எண்ணிப்பார்க்க என்ன இருக்கிறது?

“அப்படியில்லை. நான் கர்மேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன் எனினும், சில விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேன்.

கர்மா – அவரவர் முன்வினைப் பயன்கள் பகுத்தறிவு – நல்லவை, தீயவைகளை அறிந்து கொள்ளும் திறன்.இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள  இவ்விரண்டிலும் நான் தலையிடுவதில்லை”

மேலும், இராமனாக ஏன் காடுகளில் திரிந்து வானரர் உதவியோடு இராவணனை அழிக்க நான் சிரமப்பட்டிருக்க வேண்டுமென எண்ணிப்பார். நான் உயர்வற உயர் நலம் உடையவன். அதை யாருக்கும் விளம்பரப்படுத்த அவசியமில்லாதவன். ஆனால் என் பக்தர்கள்? பக்தர்களுக்கு ஏற்றம் அளித்தல் என் கடமை.

போரில்லாவிட்டால் அபிமன்யு எனும் வீரன் சரித்திரத்தில் எவ்வாறு இடம் பெற்றிருப்பான்? கர்ணனின் கொடைத்திறனும், செஞ்சோற்றுக்கடன் தீர்த்த தீரமும் எப்படி விளங்கியிருக்கும்? பீஷ்மனின் வைராக்யம் எப்படி மற்றவர்க்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கும்?

மறுபுறம், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், அவ்வளவு ஏன்? உன் சகோதரன் போன்ற கீழ்மக்களிடம் இருந்து பிறருக்குப் பாடம் புகட்டவேண்டியது என் கடமையல்லவா?

“எனினும், எங்கள் பக்கம் நீ இருக்கவில்லையே கண்ணா?”

“அதற்கும் ஒரு வாய்ப்பு வந்ததே காந்தாரி. உன் மகன் தான் நிராயுதபாணியான நான் வேண்டாம் என்று என் சேனைகளை எடுத்துக்கொண்டான். மேலும் விதுரனின் வடிவில், அவன்  திருவாக்கில் நான் உங்கள் கூடவே இருந்தேனே? நல்லோர் உருவில் என்றும் நான் இருப்பேன். என்னை அறிய நீங்கள் முயலவில்லை. உன் கனவில் இன்று நான் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு கணம் நினைப்பவர்க்கே ஓடி வருபவன் நான். நீ என் பக்தை.

“கிருஷ்ணா! உன்னையே சபித்த என்மேல் இவ்வளவு உனக்கு அன்பும் கருணையுமா உள்ளன?”

“காந்தாரி! உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டு உன்னை பெரும் பாவத்திலிருந்து காத்தருளினேன்”

“பெரும் பாவமா? அது என்ன கிருஷ்ணா?”

“ஒருவேளை நீ பாண்டவர் யாரையாவது சபித்திருந்தால், பாகவத அபசாரம் எனும் படுகுழியில் வீழ்ந்திருப்பாய். என்னை நிந்தித்தலிலும் அது மிக மிகக்கொடுமையான பாவம்”.

“கிருஷ்ணா! ஜனார்தனா! என் அறிவுக்கண்களைத் திறந்தாய். ஆனால் என் சக்திக்கு ஏற்ற உன்னைச் சரணடையும் ஒரு உபாயம் சொல்வாயா?”

“கலங்காதே! பதினெட்டு அத்தியாயங்களாய் அர்ச்சுனனுக்கு உரைத்ததை ஈரடியில் உனக்குச் சொல்கிறேன்.

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக்க்ஷேமம் வஹாம் யஹம் ||

“நீயென்றால் அது நானே. உனக்குள் இருந்து உன்னைப் பேசவைத்தேன். கர்மாவுக்கு பேதம் இல்லை. நான் உட்பட. உன் சாபம் பலிக்கும். என் பழைய பகைவன் வாலியே என்னை அழிக்க வேடனாக வந்து வஞ்சம் தீர்ககப்போகிறான். நான் அழிவற்றவன். அவதாரம் மறையலாம். ஆனால்,
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

என்ற என் வாக்கிற்கேற்ப நான் என் எண்ணப்படி மீண்டும் மீண்டும் பிறப்பேன்”

“கிருஷ்ணா! அறிவுச்சுடர் ஏற்றியவனே! போதும் இந்த வாழ்வு! இனி நான் என் கணவருடன் அனைத்தையும் துறந்து வடக்கிருந்து உன் நிழல் தேடி வந்து சேர்வேன்”.

இவ்வாறு கூறியதும் சட்டென்று நினைவு வந்தவளாய், எழுந்து அமர்ந்தாள். கனவு என்றாலும், அதன் உட்பொருளை உணர்ந்து அவள் மனம் தெளிந்தது. திருதராஷ்ட்ரனைக் கண்டு உடனே கானகம் ஏக முடிவு செய்து மெல்ல அவன் அறை நோக்கி நடந்தாள்.

கரிய உருவம் ஒன்று பின்னால் சிரித்தபடி நின்றது.......

- Author unknown......
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.6.20

Astrology: ஜோதிடம்: சூரிய கிரஹணத்தைப் பற்றி 3 செய்திகள்!!!!


Astrology: ஜோதிடம்: சூரிய கிரஹணத்தைப் பற்றி 3 செய்திகள்!!!!

கொரோனாவுக்கு விடிவு காலம் வந்து விட்டது,

கொஞ்சம் சிரிங்க பாஸ் !

🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹

என்னுடய நண்பர் கொரோனா பற்றி என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் கேளுங்களேன் ! .

சென்னையில் வசிக்கும் நான்  உலகளவில் அனுபவம் மிக்க ஒருஅணு விஞ்ஞானி. பல நாடுகளில் அணு உலைகளை ஆய்வு செய்திருக்கிறேன். செர்னோபில் உட்பட கிட்டத்தட்ட 750 அணு உலைகளை நான் பார்த்திருக்கிறேன். இபோதும் சில நாடுகளுக்கு நான்  கன்சல்டன்டாக இருக்கிறேன்.

கொரோனா பற்றிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் பாதிப் பேர் பயத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். என்னைப்  பொறுத்த அளவில் பொதுவாக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களை இந்த நோய் தாக்குவதில்லை.

கொரோனா  பூமியின் காற்று மணடலத்தில் உலகெங்கும் பெருகி வளரும் ஒரு வைரஸ்.  இது உலகளாவிய செயல்பாடு.
உங்களுக்கு நினைவிருக்கும், டிசம்பர் 2019ல் பல கோள்கள் ஒரே நேர்க் கோட்டில் வந்த விஷயம்.  அதனுடைய தாக்கம்தான் இது.

அப்போது நாம் இதுபற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.  இது எப்படி நடைபெறுகிறது என்றால் இது ஒரு விதமான நியுட்ரான்கள் மூலம் ஏற்படும் வைரஸ்.  இது காற்றுமண்டலத்தில் லட்சம் கோடிகளில் பெருகி பயோ ப்ரோடீன் கூறுகளில் நுழைந்து பூமியின் மேற்பரப்பில் பல மடங்கு விரிவடைந்து காற்றில் வருகிறது. இதை எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது.

வரும் ஜூன் 21 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டு அதனுடைய நிழல் பூமியின் மீது விழுந்து பூமியை மறைக்கும் போது இந்தக் கொடிய வைரஸ் தானாகவே மறையக்  கூடிய தன்மை வாய்ந்தது.

அந்த கிரஹணம் முடிந்து பூமியின் மீது விழும் சூரியனின் புத்தொளி இந்த வைரஸை செயலிழக்க வைக்கும்.  ஜூன் 21க்குப் பிறகு சுத்தமாக மறைந்து விடும்.  இது நடக்கும் என்று நிச்சயம் நான் நம்புகிறேன்.  இதையேதான் நாசாவில் விஞ்ஞானியாக  வேலை செய்யும் அனுபவம் மிக்க என்னுடைய நண்பரும் உறுதியாக நம்புகிறார். அதற்குப் பிறகு எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.  கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும் பல நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. இது விஷயமாக ஏதாவது டிவி சேனல்கள் என்னுடன் பேச விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன்.

Dr. கே .எல்.சுந்தர்கிரிஷ்ணா, சென்னை [ +91 89399 02019 ]

(பி.கு: இதைப் பிரதமரின் கவனத்துக்கு அவரே கொண்டு சென்று விட்டதாகச் சொன்னார் !)
--------------------------------------------------------------------------------
2
சூரிய கிரஹணம்...!!!

ஜோதிடப்படி

டிசம்பா் 26 அன்று நடந்த சூா்ய கிரஹணத்தன்று., சூா்யன்., சந்திரன்., குரு., புதன் ஆகிய நான்கு கிரஹங்களும்., மூலம் நக்ஷத்திரத்திலும், சனி., கேது பூராட நக்ஷத்திரத்திலும்., தனுா் ராசியில் சஞ்சரித்தன.

அது மிகவும் மோசமான நிலைப்பாடு. அந்த கிரஹணத்துக்கு பின்தான் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டது.

ஒரு மோசமான கிரஹணத்துக்கு பின் ஏற்படும் விளைவுகளை., அடுத்த கிரஹணம் வந்துதான் சரி செய்யும். இரண்டு கிரஹணங்களுக்கு இடையில்தான் மஹாபாரத யுத்தம் நடந்ததாக சொல்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும் போது., அடுத்த கிரஹணம் ஜூன் 21 அன்று வருகிறது. இதில் சூா்யன்., சந்திரன்., ராகு மூன்றும்., மிருகசீாீிக்ஷ நக்ஷத்திரத்திலும்., புதன் புனா்பூச நக்ஷத்திரத்திலும் சஞ்சரிக்கின்றன.

முதலாவது., கேது தொடர்பானது.

இரண்டாவது ராகு தொடர்பானது.

ராகு., கேது இரண்டில் கேது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.

எனவே, ஜூன் 21க்கு பின் கொரோனாவின் தாக்கம் குறைந்து., செப்டம்பா் 24ல் ராகு ரிஷபத்திற்கு மாறி நீச்சமடையும் போது., கேது விருச்சிகத்தில் உச்சமடையும்போது முற்றிலும் நீங்கலாம்.

இந்த., வரும் கிரஹணத்தின் போது ரோஹிணி, மிருகசீாீிக்ஷம்., திருவாதிரை., சித்திரை., அவிட்டம் நக்ஷத்திரக்காரர்கள் கிரஹண சாந்தி செய்ய வேண்டும்....
இது அவரவர் நன்மைக்கும்., உலக நன்மைக்கும் வழி வகுக்கும்.

கிரஹணங்களின் போது., சூா்யன்., சந்திரனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் தடைப்படுவதால், நம் உடலின் எதிர்ப்பு சக்தி., ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால்தான்., அந்த நேரத்தில் எதுவும் உண்ணக் கூடாது என சொல்வது.

அதை மீறி உண்ணும் போராட்டம் நடத்துவது அவரவர் விருப்பம். அதன் பாதிப்பு அவர்களையே சேரும்.

இது விஞ்ஞானம் கலந்த ஆன்மீகம்...

முன்னோர்கள் நம்மை விட சிறந்த அறிவாளிகள்., ஞானிகள். எல்லாவற்றுக்கும் ஏன்., எதற்கு என கேள்வி கேட்காமல்., அவர்கள் சொல்லை கடைப்பிடிப்பது நமக்கு நன்மையே தரும்....

ஜூன் 21 கிரஹணத்தை பக்தியுடன் வரவேற்போம். உலக நன்மைக்காக வேண்டுவோம்..

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யானறியேன் பராபரமே..

------------------------------------------------------------------------------
3
சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள்......

வருகிற சார்வாரி ஆண்டு ஆனி மாதம் (07) 21.06.2020. ஞாயிற்றுக்கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பம். தமிழ்நாட்டில் நிலவும். காலை 10.22 to மதியம் 1.50 வரை உள்ளது.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்:

1. மிருகசீரிடம்,
2. சித்திரை
3. அவிட்டம்.
4. திருவாதிரை.
5. ரோஹிணி.

மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் மற்றும் இதர நட்சத்திரக்காரர்கள் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் ?

1. வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி நமசிவாய என்கிற மந்திரத்தை கிரகணம் முடியும் வரையில் ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

2. தீட்சை பெற்றவர்கள் இந்த கிரஹணத்தின்  பொழுது அனுட்டான நியமனங்களை செய்ய வேண்டும்.

3. வீட்டில் இருக்கும் பயன்படுத்துகின்ற பொருட்களின் மீது தர்ப்பை புல்லை  போட வேண்டும்.

4. கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது.

5. கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது உத்தமம்..

6. முடிந்தால் நாக பிரதிஷ்டை செய்து (பஞ்சலோகம்,  அல்லது ஏதாவது கல் சிலையில் இருந்தால் கூட பரவாயில்லை) அதற்கு அபிஷேகம் பூஜை செய்ய வேண்டும் என்று குறிக்கப்படுகிறது.

இதனால் ராகு , கேது தோஷம் நிவர்த்தியாகும்..

7. சிவ பூஜை செய்பவர்களும் இத்தருணத்தில் பூஜை செய்வது உத்தமம்.

சிவபூஜை செய்பவர்கள் அதிகாலையில் தாங்கள் சிவ பூஜை செய்திருப்பினும் கூட மறுபடியும் சூரிய கிரகணத்தின் பொழுது செய்ய வேண்டும் என்று நியமம்  உள்ளது.

8. அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பிராமணர்களை கொண்டு சாந்தி செய்து கொள்ள வேண்டும்..

9. கிரகணம் முடிந்த பிறகு தங்கள் இல்லத்தை கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு வேண்டுகிறேன்.

10. கோயிலில் யாகங்கள் நடைபெற்றால் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறேன்..

இத்தகவலை மற்றவர்களுக்கு அனுப்பி புண்ணியத்தை பெறுமாறு வேண்டுகிறேன்..

தெரிந்தால் தெரியாததுபோல் பேசுவான் அறிவாளி.
தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் உளரிக்கொட்டுவான் முட்டாள்........

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது......!!!!
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.6.20

Astrology: Quiz: புதிர்: 12-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!Astrology: Quiz: புதிர்: 12-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்து, அம்மணி பூச நட்சத்திரக்காரர். அவருக்கு திருமணமாகி நல்ல கணவர் கிடைத்தும் தினசரி அவருடன் கருத்து வேறுபாடு வாய்த்தகராறு வம்புச்சண்டை என்று போட்டுவிட்டு பிரிந்து வந்து விட்டார் அம்மணி. பெற்றோர்களுக்கு ஒரே கவலை. இருக்காதா பின்னே? அம்மணி கணவனுடன் ஒத்துப் போகாமைக்குக் காரணம் என்ன? ஜாதகப்படிஅதற்கு என்ன காரணம்? அம்மணி மனம் மாறி திரும்பவும் கணவனுடன் சேர்ந்துவிடுவாரா அல்லது மாட்டாரா? ஜாதகப்படி அதற்கு வாய்ப்பு இருக்கிறதா அல்லது இல்லையா? ஜாதகத்தை அலசி அவைகள் இரண்டிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: அம்மணி தனுசு லக்கினக்காரர். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்று உள்ளார். ஆனால் எட்டாம் வீட்டில் உள்ளார், ஏழாம் அதிபதி புதன் லக்கினாதிபதிக்கு எட்டில் உள்ளார். அதாவது லக்கினாதிபதியும் ஏழாம் வீட்டுக்காரரும் அஷ்டம சஷ்டமத்தில் உள்ளார்கள் (8/6 நிலைப்பாட்டில் உள்ளார்கள்) ஆகவே வம்ப்ச்சண்டை வாய்த்தகறாரு, பிரிவு. சந்திர ராசியில் இருந்து பார்த்தால் குருவும் சந்திரனும் ஒன்றாக உள்ளார்கள். சந்திரனுக்கு ஏழாம் அதிபதி சனீஷ்வரனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் நல்ல நிலைமையில் உள்ளார்கள். ஆகவே அடுத்து சனியின் கோள்சாரம் மாறும்போது நிலைமை மாறி தம்பதிகள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அம்மணிக்கு தாம்பத்திய வாழ்வில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 7 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 19-6-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .ஜாதகத்தில் குடும்பஸ்தானமாகிய இரண்டாம் வீட்டின் மேல் எட்டாம் அதிபதியின் பார்வையும் ,விரயாதிபதி செவ்வாயின் பார்வையும் உள்ளது எனினும்
2. லக்கினாதிபதி குரு எட்டில் அமர்ந்தாலும் உச்சம் பெற்று எட்டாம் அதிபதி சந்திரனுடன் அமர்ந்து இரண்டாம் இடத்தை பல படுத்தியுள்ளார்
3.மேலும் செவ்வாயின் மீது சுபகிரகமாகிய சுக்கிரனின் பார்வை உள்ளதால் திருமண வாழ்வில் ஜாதகி கணவனுடன் இணைத்து சுக வாழ்வு பெறுவார்
நன்றி
தங்களின் விடையை ஆவலுடன்
Friday, June 12, 2020 2:20:00 PM
------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில்
தனுசு லக்கினம், பூச நக்ஷத்திரம், கடக ராசி ஜாதகி கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக பிரிய காரணங்கள்
நிலையான திருமண வாழ்விற்கு இரண்டாம் இடம், ஏழாம் இடம் ஒன்பதாம் இடம் மாற்றும் ஐந்தாம் இடத்தை பார்க்க வேண்டும்
இவரின் இரண்டாம் இடத்து அதிபதி சனி நான்கில் சூரியனுடன் அஸ்தங்கதம் ஆகி திருமண வாழ்வை கெடுத்தது . மேலும் நவாம்சத்தில் நான்கில் சூரியனுடன் இணைவு. மேலும் ஏழாம் அதிபதி புதன் ராசி கட்டத்தில் மூன்றில் மறைவு , அதுவும் ராகுவின் சதய நக்ஷத்திர சாரத்தில் உள்ளார். மேலும் நவாம்ச கட்டத்திலும் எட்டில் மறைவு. இது திருமண வாழ்வை கெடுத்தது.
ஒன்பதாம் அதிபதி சந்திரனும் ஒன்பதாம் இடத்திற்கு பனிரெண்டில் மறைந்ததும் , லக்கினத்தில் இருந்து எட்டில் மறைந்ததும் பாக்கிய ஸ்தானத்தை கெடுத்தது.
மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ராகு நின்று அதை கெடுக்கும் வேலையை செய்தார். மற்றும் திருமண வாழ்விற்கு உகந்த சுக்கிரன் ஆறில் ராகு வுடன் இணைந்து இல்லற சுகத்தை இல்லாமல் செய்தார்.
உச்ச குருவின் பார்வையால் திருமணம் நடந்தது . ஆனால் மீண்டும் இணைய வைக்க லக்கின அதிபதி குருவினாலும் இயலவில்லை. ஏனென்றால் ஜாதகிக்கு குரு தசையே வாழ்வில் வராமல் போனது.
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி 8879885399
Friday, June 12, 2020 3:00:00 PM
--------------------------------------------------
3
Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. The native's lagna lord jupiter is in 8th place with moon.
2. Sukran is with Rahu in 5th place. Both sukran and jupiter is spoiled.
3. 8th house lord aspects 2nd house. (2nd house is for family)
4. 2nd house lord is with sun (enemy).
Due to these above reasons the native always fight with the partner and could not live with the husband.
When sukra dasa start, at that time there is a chance for the native to join with the husband. Since sukran and Mars are exchanging their sign there is a chance to rejoin in sukra dasa or Mars dasa.
Thanking you sir,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, June 12, 2020 3:51:00 PM
-------------------------------------------------------
4
Blogger jeya Laxmi. said...
பாதகாதிபதி புதன் சுபக்கிரக பார்வையினறி மூன்றாவது வீட்டில் இருந்து பாதகம் பாதகாதிபதி உண்டாக்கினார். எனவே தம்பதிகள் சேர்ந்து வாழ வாய்ப்பு குறைவு.
Friday, June 12, 2020 11:32:00 PM
--------------------------------------------
5
Blogger seethalrajan said...
🙏கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இருவரும் ராகு, கேது பிடியில், 7ம் அதிபதி புதன், ராகு சாரம், 2ம் அதிபதி சனி அஸ்தமனம், லக்கின அதிபதி உச்ச வர்கோத்தமம், ஆனாலும் சேர்ந்து வாழ்வார் ஏனெனில் செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை, 2ம் வீட்டுக்கு சுபர் பார்வை, 7ம் அதிபதி தனித்த புதன் சுபராகி 7க்கு திரிகோணத்தில் ஆதலால் சேர்ந்து இருப்பார். நன்றி.
Saturday, June 13, 2020 3:29:00 AM
--------------------------------------
6
Blogger hemalatha ramesh said...
sir, answer to your quiz.
1. second house sani is in the fourth house which is the maathru sthana.
2 this sani the lord of the second house is aspected by mandi.
3.Mandi is in kanni and the Seventh house Lord is mercury
4 Most importantly in navamsam lagna has mandi and sukran and in the
seventh house mars is there aspecting each other.
considering all these facts the chances of living together are remote.
regards
hema
Saturday, June 13, 2020 1:06:00 PM
------------------------------------------
7
Blogger kmr.krishnan said...
1. ராசி லக்கினம் இரண்டிலும் லக்கினாதிபதி 8ம் இடத்தில் மறைந்தது.
2.ராசி லக்கினம் இரண்டிலும் லக்கினத்திற்கு சனியின் பார்வை.
3.லக்கினம் ராசி இரண்டிலும் சூரியனும் சனியும் 4ம் இடத்தில்.4ம் இடம் தாயாரைத்தவிர குடும்பத்தில் அனைத்து உறவுகளையும் குறிக்கும்.. எனவே ஜாதகி குடும்பம் நடத்தமுடியாமல் சண்டைபிடித்துக்கொண்டு விலகினார்.
4. ராசி லக்கினம் இரண்டிலும் 6ம் இடத்திற்கு சனியின் பார்வை. ஆகவே பகை ஏற்படுத்திக்கொள்வதில் அக்கா நிறைய சமர்த்து உடையவர்.
5.லக்கினம் ராசி இரண்டிலும் சுக்கிரன் செவ்வாய் இரு பகைவர்கள் எதிரும் புதிருமாக உள்ளனர்.இதுவும் சண்டை பிடிக்க ஒரு காரணம்.
சுக்கிர தசா நடக்கும் போது ஜாதகி மீண்டும் ஒன்று சேர ஒரு வாய்ப்பு ஏற்படலாம்.
Saturday, June 13, 2020 4:52:00 PM
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.6.20

Astrology: Quiz: புதிர்: பிரிந்துவந்த பெண்மணியின் ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: பிரிந்துவந்த பெண்மணியின் ஜாதகம்!!!

ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. பூச நட்சத்திரம். அவருக்கு திருமணமாகி நல்ல கணவர் கிடைத்தும் தினசரி அவருடன் கருத்து வேறுபாடு வாய்த்தகராறு வம்புச்சண்டை என்று போட்டுவிட்டு பிரிந்து வந்து விட்டார் அம்மணி. பெற்றோர்களுக்கு ஒரே கவலை. இருக்காதா பின்னே?

அம்மணி கணவனுடன் ஒத்துப் போகாமைக்குக் காரணம் என்ன? ஜாதகப்படிஅதற்கு என்ன காரணம்? அம்மணி மனம் மாறி திரும்பவும் கணவனுடன் சேர்ந்துவிடுவாரா அல்லது மாட்டாரா? ஜாதகப்படி அதற்கு வாய்ப்பு இருக்கிறதா அல்லது இல்லையா?

ஜாதகத்தை அலசி அவைகள் இரண்டிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 14-6-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.6.20

வலிகளையும் வேதனைகளையும் எப்படித் தாங்குவது?


வலிகளையும் வேதனைகளையும் எப்படித் தாங்குவது?

வாழ்க்கை என்றால் ஆயிரம் வலிகளும், வேதனைகளும், துன்பங்களும் இருக்கத்தான் செய்யும். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்றால் இவற்றை எல்லாம் கடந்தால்தான் சிகரங்களை அடைய முடியும்..

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது.

பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்வி களும், பொறுக்க முடியாத வலிகளும் தான்..

வலி வந்தபோது தான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடுதான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப் பட்டதுதான் இந்த வாழ்க்கை.

உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போதுதான் அழகான உடற் கட்டைப் பெற முடிகிறது.

இப்படித்தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும் போதுதான் வளமான வாழ்க்கை வாழ முடியும்.

புகழ்பெற்ற ஓவியர் ஒனாயர்,’ரூமேட்டிஸம்’ என்னும் நோயால் பாதிக்கப் பட்டு இருந்தார்.

ஆனால் அவர் தன் கடும் கை வலியையும் பொறுப் படுத்தாமல் ஓவியங்களை வரைந்து கொண்டு இருந்தார்..

அவருடைய நண்பர்கள், இந்த வயதான காலத்தில் வலியின் உச்சத்தில் நீங்கள் வரைவது அவசியாமா..? பேசாமல் ஒய்வு எடுத்துக் கொள்வது தானே.? என்றார்கள்.

அதற்கு ஓவியர் ஒனாயர் சொன்னார்,

வலி நீடிப்பது கொஞ்ச நேரம் தான்.ஆனால் வரைவதன் இன்பமோ பலநாட்கள் நீடிக்கும்.. வரைகிற ஓவியமோ காலம் கடந்தும் நீடிக்கும்.. என்றார்..

வலி பொறுக்க முடிய வில்லை என்றால் நீங்கள்  முன்னேறவில்லை என்று அர்த்தம்.

நீங்கள் உயரும் போது , உங்களின் இன்றைய நிலையை விட்டு உயர்ந்த  நிலைக்கு செல்லும் போது , புது புது பிரச்சனைகள்  வரத்தான் செய்யும்.

அவற்றை  சமாளிக்க வேண்டும். அப்போதுதான் உயர்வு அடைய முடியும்.

பெரிய நிலையை அடைந்தவர்கள், உயர்ந்தவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

எவ்வளவு வலிகளை தாங்கி வந்திருப்பார்கள் என்று தெரியும். தூக்கம் தொலைத்து, பசி, தாகம் மறந்து, பல சுகங்களை தியாகம் செய்து வந்து இருப்பார்கள்

ஆம்.,நண்பர்களே..,

நாம் இலட்சியத்தை அடைய வேண்டுமானால் சிறிய வலிகளையும், வேதனைகளையும்,துன்பங்களை பொறுத்துத்தான் ஆக வேண்டும்..

வலிகளையும், இடையுறுகளையும் தாண்டி செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள். !!!!
ஆக்கம் உடுமலை சு.தண்டபானி..!!!!
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
========================================
*எதை இழந்தீர்கள்*
*என்பது முக்கியமல்ல..*

*என்ன மிச்சம் இருக்கிறது*
*என்பதே முக்கியம்..!*

*இழந்ததற்கு வருந்த வேண்டும்*
*என்றால் வாழ்நாள் போதாது..!!*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.6.20

என்ன ரசனைடா சாமி ?


என்ன ரசனைடா சாமி ?

எதையும் ரசிப்பதற்கு ஒரு ரசனை உணர்வு மிகுந்த மனம் வேண்டும். ஒருவர் தங்கள் ஊரில் கிடைக்கும் உணவுகளைப் பற்றி ரசித்து ரசித்து எழுதியுள்ளார். அருமையாக உள்ளது. படித்துப்பாருங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
மதுரையின் உணவுக்கடைகள பற்றி ஒரு திரட்டு போடுறேன்...  மதுரைல குட்டிக்குட்டித் தெருக்கள்ல கூட சுவை மிக்க கடைகள் இருக்கு... அதனால நான் மிஸ் பண்ணீட்டா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க... வாங்க போவோம்

முதல்ல மங்களகரமா ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம்..

 ஸ்வீட்னா இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... "அதிரசம்" தானப்ப முதலிதெருவுலருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்குர முக்குல ஒரு கடை இருக்கு அந்தக்கடையில அதிரசம் திங்கனும்... சும்மா டரியலா இருக்கும்.. அந்த வெளிப்புற மொறுமொறுப்பு...கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும்... ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்...

காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் SS காலனில SBI பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா கெளரின்னு ஒரு கடை இருக்கு..பைபாஸ் ரோடு கெளரிகிருஷ்ணா இல்ல... இது குட்டிக்கடை... இட்லி,தோசை,பூரி, பொங்கல்னு எல்லாமே நல்லாருக்கும்... அங்க என்ன ஸ்பெசல்னா... அந்த சாம்பார்ர்ர்ர்ர்ர்... செம்மையா இருக்கும் கைல வாங்கி குடிக்கலாம்... அதோட டெய்லி ஒரு ஸ்பெசல் சட்னி அரைப்பாங்க... எல்லாமே கெத்து காட்டும்பெரும்பாலும் மதுரைல காலை நேர டிபன கடைல சாப்பிடுர பழக்கம் மக்களுக்கு குறைவு , பெரும்பாலும் சைவக்கடைகள்தான் இருக்கும்..
.
11 மணிக்கெல்லாம் மத்தியாணச் சோத்த ரெடி பண்ணீருவாய்ங்க...
மதியத்த இங்க ஒவ்வொரு மாதிரி கொண்டாடலாம் அறுமுகம் மெஸ்னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு... முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெரிசாக்கி நடத்துராங்க.. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும்.. இடிச்ச நாடுக்கோழி யோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம் பக்கத்துலயே அம்மா மெஸ், குமார் மெஸ்லாம் இருக்கு ஆனா அதெல்லாம் பேருக்காக வெளியூர்காரங்க வந்து சாப்பிடுர இடமா மாறிப்போச்சு...

அடுத்து கீழ்வெளிவீதி அம்சவள்ளி பிரியாணி... பிரியாணி கொஞ்சம் குழைவா இருக்கும்... அங்க விற்கிர கோழிச்சில்லரைன்னு ஒரு குழம்பு ஐட்டத்துக்கு 20 பேர் எப்பவும்வரிசைல நிப்பாய்ங்க... பிரியாணி மதியம் 2.30 க்கெல்லாம் காலியாகிடும்... அங்க ஒரு புரூட் மிக்சர் விப்பாய்ங்க பிரியாணிய ஒரு ஏத்து ஏத்திட்டு ஒரு மிக்சரபோட்டம்னா ஒரு பினிஷிங்குக்கு வந்துரும்.

அப்புறம் காமராஜர் சாலைல கிருஷ்ணன் மெஸ்னு ஒரு கடை இருக்கு அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும்... அப்பிடியே அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்க கறி நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா அப்பிடியே பூவா உதிரும் பாத்துக்கங்க...அங்க புறா, காடை, முயல்னு எல்லா சைடீஸும் பட்டயக்கெளப்பும்..

நான் சொன்னா எல்லாக்கடைலயுமே சீரகச்சம்பா பிரியாணிதான்... இங்க பாஸ்மதி பிரியாணிய பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டாய்ங்க... ராவுத்தர் கடைல மட்டும் கிடைக்கும்...மதியச்சாப்பாட்டுக்குன்னே சில கடைகள் இருக்கு... தமிழ்சங்கம் ரோடு ஜானகிராம்ல அயிரமீன் குழம்பு வாங்கி சோத்துல குலைச்சு அடிச்சோம்னா எம்புட்டு திங்கிறோம்னே தெரியாம உள்ள இறங்கும்...3 தடவ கொழம்ப ஊத்தி திண்ணுபுட்டு மறுக்கா சோத்த வாங்கி அந்த எலும்பு ரசத்த ஊத்தி பிசைஞ்சு..கரண்டி ஆம்லேட்டோட வச்சு இழுத்தோம்னா... எப்டி இருக்கும்.... ஆங் அப்டி இருக்கும்

இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்ச கடைகள்தான்... சில கடைகள் சிலருக்கு மட்டுமே தெரிஞ்சது.. அதுல ஒன்னுதான் காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு பக்கத்துலயே வெளிய தெரியாத அளவுக்கு அடக்கமா ஒரு குட்டிக்கடை லெட்சுமி மெஸ்னு ஒரு பழைய ஸ்டேண்டிங் போர்டு இருக்கும்..
அங்க சோத்துக்கு குடல் குழம்பு, கறிக்குழம்பு, மீன் குழம்பு , நாட்டுக்கோழிக் குழம்புன்னு ஒவ்வொன்னும் பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி கைய குழிவா வச்சு வாங்கிக் குடிக்கலாம் போல இருக்கும்... சோறுகள்ல குழம்புகள...குதூகலமா வெளாட விட்டு எடுத்து செங்கச்சூளைல மண்ண அப்புன மாதிரி ஒரு கட்டு கட்டலாம் ... சைட் டிஷ்லாம்  தரம்ம்ம்மா இருக்கும்... வக்காளி ஒரு ஊறுகா வைப்பாய்ங்க.... அதுல என்ன மாயம் செய்வாங்களோ... அம்புட்டுப்பயலும் கறிக்கொழம்புக்கே ஊறுகாயத்தொடு வெளுப்பாய்ங்க 

வெத்தலப் பேட்ட பக்கத்துல நூரி மெஸ்னு ஒரு பாய் கடை... நெய் சோறும் குடல் குழம்பும் அந்தரா இருக்கும்.

வடக்கு ஆவணி மூலவீதிலருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு போற சந்துகள்ல ரெண்டாவது சந்துல ஒரு செட்டியார் கடை இருக்கு... செட்டிநாட்டு ஸ்டைல்ல பயமுறுத்தி  விடுவாய்ங்க... அங்க புறா சாப்பிட்டுபாருங்க....
கீழவாசல் அருளானந்தம்னு ஒரு கடை இருக்கு... சோத்துச் சொர்க்கம்யா... திண்ணுட்டு அங்கனயே ஓரமா எடம் கிடைச்சா தூங்கீரலாம்னிருக்கும்.... சைட்டிஷ்லாம் மயக்குவாளுக..

சைவ சாப்பாட்டுக்கு பைபாஸ் ரோடு லட்சுமி மெஸ், டவுன்ஹால் ரோடுப்பக்கத்துல சபரீஸ்.. காமராஜர்சாலை சபரீஸ்னு.. பெரிய கடைகளும்...சைவச்சாப்பாட்டோட வெங்காய பக்கோடா வச்சு சாப்பிடுரது மதுரைக்காரனுக வழக்கம்...

மத்தியானத்துலயே பெரும்பாலான ஹோட்டல்ல புரோட்டாவும் குஸ்காவும் கிடைக்கும்...இருந்தாலும் அது டின்னர் ஸ்பெசல்ல அத தனியா சொல்றேன்.இப்ப சிறு தீனி மற்றும்

 டீ காபி கூல்ட்ரிங் பக்கம் போவோம்

தல்லாகுளம் விசாலம் காபி சாப்பிட்டுப் பாருங்க... சாப்டு அரைமணிநேரமானாலும் அந்த காபி கசப்பு தொண்டைல நிக்கும் அப்பிடி ஒரு டேஸ்ட்டு...

அடுத்து தண்ணி குடிக்கக் கூட மனசு வராது  ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்ல ப்ரேமவிலாஸ்னு ஒரு மிட்டாய் கடை... ஸ்வீட் கடைதான் அந்தக்காலத்துலருந்து இருக்கதால மிட்டாய்க்கடைன்னே வழக்காகிடுச்சு... தாமரை இலைல அப்டியே பொசுக்கப் பொசுக்க (சுடச்சுட) அல்வா எடுத்து போட்டு குடுப்பாய்ங்க...ரெண்டா பிச்சு வாய்ல போட்டா....அப்டியே கரையும்யா  அங்க விக்கிர ஸ்பெசல் மிச்சர்தான் இங்க பாதி பேர் வீட்ல சோத்துக்கு வெஞ்சணம் (சைட்டிஷ்). அந்த அல்வாவ அங்கனயே நின்னு திங்கிர கூட்டமே எப்பயும் பத்துப் பேர் இருப்பாய்ங்க... அல்வா கடை வாசல்லயெட் மல்லியப்பூ வச்சு நாலஞ்சு அக்காக்க விக்கும்ங்க... எம்புட்டு நேக்கா யாவாரம் பண்ணுவாய்ங்க...தெரியுமா... ஏப்பா தம்பி அல்வா மட்டுமா வாங்கிட்டுப்போற... வீட்டுக்காரப்புள்ளைக்கி பூ வாங்கிட்டுப்போய்யான்னு அங்கயே நம்மள  வாடிவாசல்ல நிக்கிர காளை மாதிரி உசுப்பேத்தி விட்டுருவாய்ங்க.
..
நேதாஜி ரோட்டுல தங்கமயில் ஜுவல்லரிக்கு பின்னாடி நர்சிங்னு ஒரு ஸ்வீட் கடை இருக்கு ...நார்த் இந்தியன் ஸ்வீட்டுகள் அங்க மட்டுந்தான் திங்குரது... கச்சோரி அங்க நல்லாருக்கும்... மசால்பூரி பாணிப்பூரியும் அங்க நல்லாருக்கும்.

சாயங்காலத்துல கோவில சுத்தி நிறைய ஸ்னாக்ஸ் விப்பாய்ங்க ஷப்னம் வாசல்ல விக்கிர காரப்பொரிக்கு காத்துக்கெடக்கலாம்யா..பருப்பு போளி,பச்சப்பயிறு, காரப்போளி,சுண்டலு, உளுந்தம்பருப்புன்னு எல்லாத்தையும் அவிச்சு விப்பாய்ங்க... தள்ளுவண்டிகள்ல முள்ளு முருங்கக்கீர வடை அப்பப்ப போட்டுத்தருவாய்ங்க

ரெண்டுரூவா வடைக்கெல்லாம் சொத்தெழுதி வைக்கலாம்யா  ஜிகர்தண்டா... மதுரையோட அடையாளமாவே மாறிப்போச்சு ... விளக்குத்தூண் பேமஸ் ஜிகர்தண்டா கடை ஒன்னுதான் இருக்கும் அப்பல்லாம் இப்ப அவங்க நிறைய ப்ரான்சஸி குடுத்து அங்கங்க இருக்கு.. வெளியூர்கள்லயும் இருக்கு.
..
ஆனா நாங்க பெரும்பாலும் ஜிகர்தண்டாவ மஞ்சணக்காரத்தெரு முக்குல ஒரு பாய்விக்கிராப்புள அங்கதான் சாப்பிடுரது.... டேஸ்ட்டு நம்மள திண்னுரும்...  முனிச்சாலைலருந்து செயிண்ட்ஜோசப் கேர்ள்ஸ் ஸ்கூல் போற வழில போஸ்ட்டாபீஸு பக்கத்துல பத்திரீசியார் ஸ்கூலுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடைல க்ரேப்ன்னு கேட்டீங்கன்னா ஒரு ஜூஸ டம்ளர்ல மோந்து குடுப்பாய்ங்க...யோவ்வ்வ்வ் அதெல்லாம் குடிச்சுப்பாக்கனும்யா...  முனிச்சாலைல சிக்னல் பக்கத்துலயே புகழ்பெற்ற கோவிந்தராஜ் பருத்திப்பால் கடை ஒன்னு இருக்கு ஒரு டம்ளர் குடிச்சா பசியாரிடும்

டின்னர மதுரைல கொண்டாடலாம்யா...

புரோட்டா மதுரயோட ஊர் உணவு. கொத்து புரோட்டாவ ம்யூசிக்கோட கொத்துரது எங்கூர்ல ஆரம்பிச்சகுதான்... பெஸ்ட் புரோட்டான்னா அண்ணாநகர் நியூமாஸ் ஓட்டல் புரோட்டாதான் அங்க போடுர மடக்கு புரோட்டா பிச்சம்னா அப்பிடியே பூவா பிரியும் பாத்குக்கங்க...சால்னா அங்க சுமாராத்தான் இருக்கும்... அண்ணா பஸ்டாண்ட்லருந்து ஆவின் போற வழியில இருக்க கூரைக்கடை... உக்காந்து சாப்பிட ரெண்டு டேபிள்தான் நைட்டு கடை கூட்டம் அம்மும்... சுக்கா, குடலு , ரத்தப்பொரியலு, நாட்டுக்கோழி சாப்ஸு, நெஞ்சு சாப்ஸுன்னு அத்தனையுமே கெரங்கடிக்கும்ஆவின் பக்கத்துலருக்க பன் பரோட்டா கடைல 3 புரோட்டா வயிறு ரொம்பீரும்... தலைக்கறி ரோஸ்ட்லாம் தெறிக்கவிடும்...குழம்பெல்லாமே அடிச்சுத்தூக்கும்


தெற்குவாசல் சுகன்யால புரோட்டாவ வீசி வெளாடுவாய்ங்க டேஸ்ட்டும் அந்தல சிந்தலயா இருக்கும்  க்ராஸ்ரோடு கீர்த்தனா ஓட்டல்லாம் வெரட்டி வெரட்டி திங்கலாம்...

கரிமேடு மீன் மார்கெட் பக்கத்துல ஒரு குட்டிக்கடைல விருதுநகர் பொறிச்ச புரோட்டா கிடைக்கும்.. நொறுக்கிப்போட்டு கொழம்புகள கொலச்சு அடிச்சோம்னா விருதுநகர்லயே போய் தின்னுட்டு வந்த மாதிரி இருக்கும்  சைவக்கடைகளும் நைட்ல கலைகட்டும்.... கீழவாசல் நாகலெச்சுமி அனெக்ஸ்... ரேவதி டிபன் செண்டர்லயெல்லாம்... வெண்பொங்கல், தக்காளிப் பொங்கல்  ( வெரைய்ட்டி ரைஸ செள்ராஸ்ட்ரா கடைகள்ல அப்பிடித்தான் சொல்லுவாய்ங்க), புளியோதர, லெமன்சாதம்னு எல்லா சாதமும் டின்னருக்கு கிடைக்கும்...இந்த ஐட்டங்கள் ல செளராஸ்ட்ரா கட்சிகள அடிச்சுக்க முடியாது...  அங்கயெல்லாம் போனா  மிலிட்ரி முறைதான் எல்லா வெரெய்ட்டியும் ஒவ்வொரு வாய் சாப்பிட்டாலே போதும்னு எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி சுத்துல விட்டு சாப்பிடுவோம்.. பில்ல  சரியா பங்கு போட்டுக்குவோம் 

 மதுரையின் ரோட்டுக்கடைகள என்னவே முடியாது அதுல ஒன்னு ரெண்ட சொல்றேன்... அண்ணா நகர் அக்கா கடைன்னு ஒரு கடை 40 வருசமா இருக்கு... ஒரு மரத்தடில ஆரம்பிச்சது... இப்பவும் அதே மரத்தடில ஒரு வீட்டயே ஓட்டலா மாத்தி நடக்குது ... அங்க முட்ட சப்பாத்திக்கொத்து ஒன்னு போடுவாய்ங்க.... ருசி அள்ளும் பைபாஸ் ரோட்ல கேஎப்சி இருக்கு அது நமக்கு வேணாம் அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு அக்கா கடை போட்டிருக்கு... முட்டதோசயெல்லாம் பத்துக்கும் மேல தின்னுட்டு அடுத்த தோசைக்கு தட்ட நீட்டீட்டே நிப்போம்... அந்தக்கா போதும் போடான்னு வைய்யும்

யானைக்கல்தான் மதுரைக்கு தூங்கா நகர்னு பேர் வாங்கிக்கொடுத்த இடம், அங்க பரமேஸ்வரி , ராஜேஸ்வரின்னு ரெண்டு கடை எதிரெதிரா இருக்கு... சோறு சாம்பார் ரசம் மோர் பாயசம்னு நைட்டு 3 மணிக்கும் சாப்பிடலாம்... வெங்காயக்குடல் அங்க ரொம்ப நல்லாருக்கும். அடுத்து சுல்த்தான் கடைநைட்டு 3 மணி வரை பிரியாணி புரோட்டா சைட்டிஷ்னு  எல்லாம் கிடைக்கும்... வெளியூர்லருந்து சாப்பிடாம லேட்டா வரவங்களுக்கு அதுதான் புகழிடம்...நிறைய சொல்லாம விட்டது போலத்தான் இருக்கு... இன்னொரு நாள்ல விட்டத லிஸ்ட் பண்ணி சொல்றேன்.

கொரொனா லாக்டவும் முடிஞ்சு உலகம் நார்மல் மோடுக்கு வந்ததும் மதுரைக்கு வந்து சாப்பிட்டு பாருங்க மக்களே

Jeevan
ps
😍 டெலிஃபோன் டைரக்டரி மாதிரி தான் போடனும் 😂. இதுல ஜானகிராம், பழைய கோனார் கடை, முதலியார் கடை அப்புறம் சைவத்துக்கு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி வட மேற்கு மூலைல ஒரு கடை பேர் மறந்து போச்சு. 😍😍
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.6.20

வத்தக் குழம்பு புராணம்


வத்தக் குழம்பு புராணம்

வத்தக் குழம்பு செத்த நாக்கையும் உயிர்ப்பிக்கும் என்பார் அறுசுவை ஆறுமுகக் கவிராயர்..

உணவே மருந்து மருந்தே உணவு என்னும் தமிழரின் பாரம்பரியச் சமையலின் தலைமை மருத்துவ குணம் கொண்ட குழம்பு தான் இந்த வத்தக் குழம்பு.. சுவையிலும் தனித்துவத்தில் இருப்பது இதன் பெரும் சிறப்பு.!

வத்தக்குழம்பின் மகாத்மியங்களை சொல்லத்தான் இப்பதிவே.!

#சுண்டைக்காய்_வத்தல்_குழம்பு, #மணத்தக்காளி, #பிரண்டை, #பூண்டு, #வெண்டை, #எண்ணெய்_கத்திரிக்காய்,  #கொத்தவரங்காய் போன்ற வகைகள் வத்தக்குழம்பிற்கு மிகச் சிறந்த வகைகள்..

வெற்றிலை போட்டு வைக்கும் வத்தல் குழம்பும் உண்டு.. இதில் #டாப்_1_இடம்_சுண்டைக்காய்_வத்தக்குழம்புதான்.! சிவாஜி - பத்மினி போல பர்ஃபெக்ட் ஜோடி.!

முதலில் வத்தக் குழம்பிற்கு வைக்கும் சாதம் முக்கியம்.! குழையவேக்கூடாது..
MN நம்பியார்போல மிக விறைப்பாகவும் அதே நேரம்
SV ரங்காராவ்போல கொஞ்சம் பதமாகவும் இருக்கவேண்டும்!

குழம்பை சொத சொதன்னு சோற்றில் ஊற்றாமல் பிரட்டுவதுபோல பட்டும் படாமல் பிசைவது மிகச்சிறந்த முறை ஆகும்.

அதிலும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பிறகு..வத்தக் குழம்பை விட்டு பிசைந்து சாப்பிட்டால்!ஆஹஹாஹா! வத்தக்குழம்பு எவ்வளவு கெட்டியாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது.. என் பாட்டி வீட்டில் வைக்கும் வத்தக் குழம்பு எல்லாம் அம்மியில் அரைத்த துவையல் போல ஐஸ்க்ரீமின் ஒரு ஸ்கூப் போல மிக கெட்டியாக இருக்கும்..

இதற்கு தொட்டுக் கொள்ள வெறும் சுட்ட அப்பளமே தேவாமிர்தமாக இருக்கும்.!
பூசணிக்காய் பால்கூட்டு, தயிர் பச்சடி, புடலங்காய் பருப்பு கூட்டு, வாழைத்தண்டு பருப்பு கூட்டு, இப்படி பருப்பு சேர்த்து செய்யும் எல்லா கூட்டும் வத்தக் குழம்பிற்கு பெஸ்ட் காம்போ.. அவியலும் பிரமாதமாக இருக்கும்..

வேலி பிரண்டையை உரசி என் அம்மா வைக்கும் வத்தக் குழம்பு அருமையான மருத்துவ குணம் கொண்ட ஆரோக்கியமான உணவாகும்.. அதே போல.. மணத்தக்காளி போட்டும் வைப்பார்கள் வயிற்று கோளாறுகள் ஒரே நாளில் காணாமல் போய்விடும்..

அல்சர் இருப்பவர்கள் வாரத்தில் இரு முறை சாப்பிடலாம்.. ஒரு முறை கோவை வந்திருந்த போது என் பழைய எம்.டி. சுவாமிநாதன் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது கொங்கு ஸ்டைல் வதங்கல் கத்திரி வத்தக்குழம்பு சாப்பிடும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்! அடர் வயலட்டில் மேனியெங்கும் எண்ணெய் மினுமினுங்க நன்கு எண்ணெயில் வதங்கிய முழு கத்திரிக்காய்கள்.. குலாப் ஜாமூன் போல புளிக்குழம்பில் மூழ்கியிருக்க.. கூடவே சுண்டைக்காய் வத்தலும் போட்டு நான் சொன்ன துவையல் பதத்தில் மேடை(சை)க்கு வந்தது..

சாம்பாருக்கு பிறகு 4முறை வத்தக்குழம்பையே சந்திரமுகி ரஜினி போல ரிபீட்டு கேட்டு கேட்டு வாங்கினேன்.!

அடுத்து வெங்காய வத்தக்குழம்பு.. இதுவும் மருத்துவ குணம் மிக்க அஜீரணத்தை கட்டுப்படுத்தும் குழம்பு இதற்கு வடகம், பொரித்த அப்பளம், சில நேரங்களில் மாங்காய் தொக்கு என பல காம்போக்கள் உண்டு..

பாகற்காய் வத்தக்குழம்பு எனது விருப்ப உணவுகளில் ஒன்று.. கொஞ்சம் இனிப்புள்ள பரங்கிப் பூசணி, கொத்தவரங்காய், அவரை, செள செள, காய் கூட்டுகள் இதற்கு..பக்கா பொருத்தமாக இருக்கும்..

எந்த வத்தக்குழம்பாக இருந்தாலும் என்ன காய் போட்டாலும் சுண்டைக்காய் சேர்த்து போடுதல் வத்தக்குழம்பிற்கான லட்சணங்களில் ஒன்று..

இந்த வத்தக்குழம்பில் எல்லாம் இன்னொரு வசதி.. தயிர் சாதத்திற்கு இதைத் தொட்டுக் கொள்ள பிரமாதமாக இருக்கும்.. ஒரே ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் எப்போதும் விடமாட்டீர்கள்.!

கால மாற்றங்களில் ஓட்டல்களில் செக்கச் செவேலென இன்று ஒரு கிண்ணத்தில் வைத்து தரப்படுவதெல்லாம் வத்தக் குழம்பே அல்ல..

சீகைக்காயை அந்த காலத்தில் கரைப்பார்களே அந்தக் கலரில் இருப்பதே அக்மார்க் வத்தக்குழம்பு.

சூடான சாதத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் 1ஸ்பூன் விட்டு.. பிசைந்து அதை சுட்ட அப்பளத்துடன் சாப்பிடும் சுகமே சுகம்.!

இன்னூன்னு சொல்ல மறந்துட்டேனே..!

#முதல்நாள்_செய்த_வத்தக்குழம்பை_பத்துநாள்_வச்சு_வச்சு_சாப்பிட்டால்_பரமசுகம்...

ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்..!!!

அப்போ நாளைக்கு உங்க வீட்டில் வத்தக் குழம்பு தானே.!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.6.20

One man army உருவான கதை!


One man army உருவான கதை!

 *Traffic Ramasamy*

1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன்.

அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)

சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன்.

ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.

எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.

‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.

‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.

நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.

‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு.

அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை.

மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை.

14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.

மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர்.

இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த 14 வயதில் உருவானது. 

- *டிராஃபிக் ராமசாமி எழுதிய  ‘ஒன் மேன் ஆர்மி‘ நூலில் இருந்து.* .

ஆக்கம்: Ananthamurugan Pondicherry
---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!