Astrology: ஜோதிடம்: சூரிய கிரஹணத்தைப் பற்றி 3 செய்திகள்!!!!
கொரோனாவுக்கு விடிவு காலம் வந்து விட்டது,
கொஞ்சம் சிரிங்க பாஸ் !
🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹
என்னுடய நண்பர் கொரோனா பற்றி என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் கேளுங்களேன் ! .
சென்னையில் வசிக்கும் நான் உலகளவில் அனுபவம் மிக்க ஒருஅணு விஞ்ஞானி. பல நாடுகளில் அணு உலைகளை ஆய்வு செய்திருக்கிறேன். செர்னோபில் உட்பட கிட்டத்தட்ட 750 அணு உலைகளை நான் பார்த்திருக்கிறேன். இபோதும் சில நாடுகளுக்கு நான் கன்சல்டன்டாக இருக்கிறேன்.
கொரோனா பற்றிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் பாதிப் பேர் பயத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் பொதுவாக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களை இந்த நோய் தாக்குவதில்லை.
கொரோனா பூமியின் காற்று மணடலத்தில் உலகெங்கும் பெருகி வளரும் ஒரு வைரஸ். இது உலகளாவிய செயல்பாடு.
உங்களுக்கு நினைவிருக்கும், டிசம்பர் 2019ல் பல கோள்கள் ஒரே நேர்க் கோட்டில் வந்த விஷயம். அதனுடைய தாக்கம்தான் இது.
அப்போது நாம் இதுபற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. இது எப்படி நடைபெறுகிறது என்றால் இது ஒரு விதமான நியுட்ரான்கள் மூலம் ஏற்படும் வைரஸ். இது காற்றுமண்டலத்தில் லட்சம் கோடிகளில் பெருகி பயோ ப்ரோடீன் கூறுகளில் நுழைந்து பூமியின் மேற்பரப்பில் பல மடங்கு விரிவடைந்து காற்றில் வருகிறது. இதை எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது.
வரும் ஜூன் 21 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டு அதனுடைய நிழல் பூமியின் மீது விழுந்து பூமியை மறைக்கும் போது இந்தக் கொடிய வைரஸ் தானாகவே மறையக் கூடிய தன்மை வாய்ந்தது.
அந்த கிரஹணம் முடிந்து பூமியின் மீது விழும் சூரியனின் புத்தொளி இந்த வைரஸை செயலிழக்க வைக்கும். ஜூன் 21க்குப் பிறகு சுத்தமாக மறைந்து விடும். இது நடக்கும் என்று நிச்சயம் நான் நம்புகிறேன். இதையேதான் நாசாவில் விஞ்ஞானியாக வேலை செய்யும் அனுபவம் மிக்க என்னுடைய நண்பரும் உறுதியாக நம்புகிறார். அதற்குப் பிறகு எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும் பல நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. இது விஷயமாக ஏதாவது டிவி சேனல்கள் என்னுடன் பேச விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன்.
Dr. கே .எல்.சுந்தர்கிரிஷ்ணா, சென்னை [ +91 89399 02019 ]
(பி.கு: இதைப் பிரதமரின் கவனத்துக்கு அவரே கொண்டு சென்று விட்டதாகச் சொன்னார் !)
--------------------------------------------------------------------------------
2
சூரிய கிரஹணம்...!!!
ஜோதிடப்படி
டிசம்பா் 26 அன்று நடந்த சூா்ய கிரஹணத்தன்று., சூா்யன்., சந்திரன்., குரு., புதன் ஆகிய நான்கு கிரஹங்களும்., மூலம் நக்ஷத்திரத்திலும், சனி., கேது பூராட நக்ஷத்திரத்திலும்., தனுா் ராசியில் சஞ்சரித்தன.
அது மிகவும் மோசமான நிலைப்பாடு. அந்த கிரஹணத்துக்கு பின்தான் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டது.
ஒரு மோசமான கிரஹணத்துக்கு பின் ஏற்படும் விளைவுகளை., அடுத்த கிரஹணம் வந்துதான் சரி செய்யும். இரண்டு கிரஹணங்களுக்கு இடையில்தான் மஹாபாரத யுத்தம் நடந்ததாக சொல்கிறார்கள்.
அப்படிப் பார்க்கும் போது., அடுத்த கிரஹணம் ஜூன் 21 அன்று வருகிறது. இதில் சூா்யன்., சந்திரன்., ராகு மூன்றும்., மிருகசீாீிக்ஷ நக்ஷத்திரத்திலும்., புதன் புனா்பூச நக்ஷத்திரத்திலும் சஞ்சரிக்கின்றன.
முதலாவது., கேது தொடர்பானது.
இரண்டாவது ராகு தொடர்பானது.
ராகு., கேது இரண்டில் கேது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.
எனவே, ஜூன் 21க்கு பின் கொரோனாவின் தாக்கம் குறைந்து., செப்டம்பா் 24ல் ராகு ரிஷபத்திற்கு மாறி நீச்சமடையும் போது., கேது விருச்சிகத்தில் உச்சமடையும்போது முற்றிலும் நீங்கலாம்.
இந்த., வரும் கிரஹணத்தின் போது ரோஹிணி, மிருகசீாீிக்ஷம்., திருவாதிரை., சித்திரை., அவிட்டம் நக்ஷத்திரக்காரர்கள் கிரஹண சாந்தி செய்ய வேண்டும்....
இது அவரவர் நன்மைக்கும்., உலக நன்மைக்கும் வழி வகுக்கும்.
கிரஹணங்களின் போது., சூா்யன்., சந்திரனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் தடைப்படுவதால், நம் உடலின் எதிர்ப்பு சக்தி., ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால்தான்., அந்த நேரத்தில் எதுவும் உண்ணக் கூடாது என சொல்வது.
அதை மீறி உண்ணும் போராட்டம் நடத்துவது அவரவர் விருப்பம். அதன் பாதிப்பு அவர்களையே சேரும்.
இது விஞ்ஞானம் கலந்த ஆன்மீகம்...
முன்னோர்கள் நம்மை விட சிறந்த அறிவாளிகள்., ஞானிகள். எல்லாவற்றுக்கும் ஏன்., எதற்கு என கேள்வி கேட்காமல்., அவர்கள் சொல்லை கடைப்பிடிப்பது நமக்கு நன்மையே தரும்....
ஜூன் 21 கிரஹணத்தை பக்தியுடன் வரவேற்போம். உலக நன்மைக்காக வேண்டுவோம்..
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யானறியேன் பராபரமே..
------------------------------------------------------------------------------
3
சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள்......
வருகிற சார்வாரி ஆண்டு ஆனி மாதம் (07) 21.06.2020. ஞாயிற்றுக்கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பம். தமிழ்நாட்டில் நிலவும். காலை 10.22 to மதியம் 1.50 வரை உள்ளது.
பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்:
1. மிருகசீரிடம்,
2. சித்திரை
3. அவிட்டம்.
4. திருவாதிரை.
5. ரோஹிணி.
மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் மற்றும் இதர நட்சத்திரக்காரர்கள் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் ?
1. வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி நமசிவாய என்கிற மந்திரத்தை கிரகணம் முடியும் வரையில் ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2. தீட்சை பெற்றவர்கள் இந்த கிரஹணத்தின் பொழுது அனுட்டான நியமனங்களை செய்ய வேண்டும்.
3. வீட்டில் இருக்கும் பயன்படுத்துகின்ற பொருட்களின் மீது தர்ப்பை புல்லை போட வேண்டும்.
4. கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது.
5. கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது உத்தமம்..
6. முடிந்தால் நாக பிரதிஷ்டை செய்து (பஞ்சலோகம், அல்லது ஏதாவது கல் சிலையில் இருந்தால் கூட பரவாயில்லை) அதற்கு அபிஷேகம் பூஜை செய்ய வேண்டும் என்று குறிக்கப்படுகிறது.
இதனால் ராகு , கேது தோஷம் நிவர்த்தியாகும்..
7. சிவ பூஜை செய்பவர்களும் இத்தருணத்தில் பூஜை செய்வது உத்தமம்.
சிவபூஜை செய்பவர்கள் அதிகாலையில் தாங்கள் சிவ பூஜை செய்திருப்பினும் கூட மறுபடியும் சூரிய கிரகணத்தின் பொழுது செய்ய வேண்டும் என்று நியமம் உள்ளது.
8. அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பிராமணர்களை கொண்டு சாந்தி செய்து கொள்ள வேண்டும்..
9. கிரகணம் முடிந்த பிறகு தங்கள் இல்லத்தை கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு வேண்டுகிறேன்.
10. கோயிலில் யாகங்கள் நடைபெற்றால் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறேன்..
இத்தகவலை மற்றவர்களுக்கு அனுப்பி புண்ணியத்தை பெறுமாறு வேண்டுகிறேன்..
தெரிந்தால் தெரியாததுபோல் பேசுவான் அறிவாளி.
தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் உளரிக்கொட்டுவான் முட்டாள்........
மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது......!!!!
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir very useful information thanks sir vazhga valamudan
ReplyDeleteRespected sir,
ReplyDeleteGood morning and Good afternoon sir. Today only I read this message. A good news and world will have good new breath because of this Surya Grahanam. God's grace this world become pure and fresh and bad things will go away.
regards,
N visvanathan