மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Astrology (மீள் பதிவு). Show all posts
Showing posts with label Astrology (மீள் பதிவு). Show all posts

22.5.20

Astrology: ஜோதிடம். ஹீரோவும் வில்லனும்!!!!

Astrology: ஜோதிடம். ஹீரோவும் வில்லனும்!!!!  

“சார், நான் ரிஷப லக்கினக்காரன்.சுக்கிரன் எனக்கு லக்கினாதிபதி.அத்துடன் அவனே ஆறாம் இடத்திற்கும் அதிபதி.அவன் என்னுடைய ஜாதகத்தில் 12ல்இருக்கிறான். அதாவது விரையத்தில் மறைந்து விட்டான்.ஆனால் நவாம்சத்தில் அவன் உச்சம் பெற்றுள்ளான்.அவன் எனக்கு ஹீரோவா? அல்லது வில்லனா?”

“இரண்டும்தான்.இரண்டு இடங்களுக்கு அதிபதி என்னும்போது, அவன் இரண்டையுமே செய்வான்.”

“விளங்கவில்லையே  சார்! ஒன்று ஹீரோ என்று சொல்லுங்கள்.அல்லது வில்லன் என்று சொல்லுங்கள்.ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்கும்”

“உங்கள் வீட்டிற்கு நீங்கள் பிள்ளை. உங்கள் மாமனார் வீட்டிற்கு நீங்கள் மாப்பிள்ளை.அதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையா? அல்லது   இரண்டுமே உண்மையா?”

“இரண்டுமே உண்மைதான்”

“அப்படித்தான் அதுவும்.உங்கள் லக்கினத்திற்கு அவன் ஹீரோ.   ஆறாம் வீட்டுக் காரியங்களுக்கு அவன் வில்லன். இரண்டு வீட்டு வேலைகளையுமே அவன் கச்சிதமாகச் செய்வான். ஹீரோ என்பதால் வில்லன் வேலையை விட்டுக் கொடுக்க மாட்டான்.இது எல்லாக் கிரகங்களுக்கும் பொதுவான குணம்.”

“சரி, எப்போதுசெய்வான்?”

“தனது மகாதிசை, மற்றும் புத்திகளில் செய்வான்”

“ஒரே தசாபுத்தியில் அவன் இரண்டு வேலைகளையும் எப்படிச் செய்ய முடியும்? ஏதாவது ஒன்றைத்தானே செய்ய முடியும்?அடுத்து எனக்கு சுக்கிரபுத்தி வரவுள்ளது. அந்த புத்தியில் அவன் நன்மையைச் செய்வானா அல்லது தீமையைச் செய்வானா என்று எப்படித் தெரிந்து கொள்வது”

“இங்கே கோள்ச்சாரம் உங்களுக்கு உதவும்.கோளாசாரச் சுக்கிரன் அல்லது சம்பந்தப்பட்ட கிரகத்தின் அன்றைய இருப்பிடம் (by placement) மற்றும் பார்வை (aspect) எந்த வீட்டின் மேல் விழுகிறதோ அந்த வீட்டிற்கான பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு இன்றையத் தேதியில் சுக்கிரன் கோச்சாரப்படி எங்கே இருக்கிறான் என்று படத்துடன் கீழே கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள். இன்றையச் சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து கொண்டு உங்களுடைய லக்கினத்தைப் பார்க்கிறான். இப்போது அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் அது நன்மையானதாக இருக்கும். இப்படித்தான் பார்க்க வேண்டும்.விளக்கம் போதுமா?”



“இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற வேலையாக இருக்கிறதே! குறுக்குவழி இல்லையா?”

“இருக்கிறது. அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தியுள்ளேன். அதில் சொல்லித் தந்துள்ளேன்.”

---------------------------------------------------------------------
1. மேஷ லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே மூன்றாம் இடத்திற்கும் அதிபதி
2. ரிஷப லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லக்கினாதிபதியும் ஆவான்.
3. மிதுன லக்கினத்திற்கு வில்லன்செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
4. கடக லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
5. சிம்ம லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஏழாம் வீட்டிற்கு அதிபதியும் (7th Lord) ஆவான்.
6. கன்னி லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியும் (5th Lord) ஆவான்.
7. துலா லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே மூன்றாம் வீட்டிற்கு அதிபதியும் (3rd Lord) ஆவான்.
8. விருச்சிக லக்கினத்தற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லக்கினத்திற்கும் அதிபதி ஆவான்.
9. தனுசு லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
10. மகர லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
11. கும்ப லக்கினத்திற்கு வில்லன் சந்திரன் (6th Lord)
12. மீன லக்கினத்திற்கு வில்லன் சூரியன் (6th Lord)
-----------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=====================================================

24.4.20

Astrology: கட்டுப்பட்ட திருமணம்!!!


Astrology: கட்டுப்பட்ட திருமணம்!!!

காதல் திருமணம் தெரியும்! அதென்ன கட்டுப்பட்ட திருமணம்?

Arranged Marriageஐ எப்படி மொழி பெயர்ப்பீர்கள்? ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றோ அல்லது பெற்றோர்கள் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம் என்றோ சொல்லலாம்.

பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு இளைஞனோ அல்லது ஒரு
யுவதியோ செய்து கொள்ளும் திருமணத்தை பெற்றொர்களுக்குக்
கட்டுப்பட்ட திருமணம் என்று சொல்லலாம் இல்லையா?

அதுதான் கட்டுப்பட்ட திருமணம்!

எது நல்லது?

இரண்டுமே நல்லதுதான். தம்பதிகள் நல்லவிதமாக இணைந்து மன
ஒற்றுமை, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் சரி!

இப்படிப் பொதுவாகச் சொல்லித் தப்பிக்காதீர்கள் - குறிப்பிட்டுச்
சொல்லுங்கள் எது நல்லது? உங்கள் கருத்துப்படி எது நல்லது?

என் அனுபவப்படி எது நல்லது என்பதில் ஒரு கருத்து உள்ளது. என்
ஆசானும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். அதைப் பதிவின் நடுவில் சொல்லியிருக்கிறேன்.

அதற்கு முன் கொஞ்சம் வறுத்தல் அல்லது பொரித்தல், காரம், உப்பு,
மசாலா பொடிகள் சேர்க்கும் வேலைகள் உள்ளது. அது முதலில். அப்போதுதானே சுவாமி பதிவு சுவையாக இருக்கும்?

இந்த ஜோதிடத் தொடரை ஆரம்பித்து 150 மாதங்கள் ஆகின்றன.
இந்தக் காலக்கட்டத்தில் எனக்கு வந்த, வந்துகொண்டிருக்கின்ற மின்னஞ்சல்களில் 25 சதவிகிதம் தங்களுடைய திருமணத்தைப் பற்றிக் கேள்வி கேட்டு வந்தவைதான் அல்லது வருபவை.

ஆண் வாசகர்களிடம் இருந்தும் வந்துள்ளன! கணிசமான அளவு
பெண் வாசகிகளிடம் இருந்தும் வந்துள்ளன.

உதாரணத்திற்கு சென்றவாரம் ஒரு அன்பரிடம் இருந்து வந்ததைக் கொடுத்துள்ளேன் பாருங்கள்:

"சார், நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என் காதல் நிறைவேறுமா? என்னுடைய ஜாதகப்படி அதற்கு வாய்ப்புண்டா? உங்களுக்கு நேரமில்லை என்று சொல்லாமல், எனக்காக - உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும்
ஒரு ஜீவனுக்காக, தயவு செய்து என் ஜாதகத்தைப் பரிசீலனை செய்து
பதில் எழுத வேண்டுகிறேன்."

நான் உடனே பதில் எழுதிக் கேட்டேன்: "அந்தப் பெண்ணும் உங்களைக் காதலிக்கிறாரா?"

இதற்கு மின்னல் வேகத்தில் பதில் வந்தது." ஆமாம் ஐயா! அவளும்
என்னைக் காதலிக்கிறாள்!"

இதற்கு என்ன எழுதுவது?

நான் எழுதிய பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்:

"அவளும் உங்களைக் காதலிக்கும்போது எதற்காக ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள்?ஒரு பெண் தன்னுடைய இதயத்தை உங்களிடம் தந்து
விட்டாள் அல்லது தன்னுடைய இதயத்தில் உங்களுக்கு இடம் தந்து
விட்டாள் என்னும் நிலை எவ்வளவு உன்னதமானது? எவ்வளவு
உயர்ந்தது? அதைவிட ஜாதகம் ஒன்றும் பெரிதல்ல. அவளைத்
திருமணம் செய்துகொள்ளுங்கள்.அதற்கான முயற்சியைச் செய்யுங்கள்"

விழிகள் படபடக்க, ஒரு இளம் பெண், ஒரு ஆடவனுடன் பேசுவதே
பெரிய காரியம். அதற்கு அடுத்து அவனுடன் பழகுவது. அதற்கு அடுத்து நெருங்கிப் பழகுவது. மனம் விட்டுப்பேசுவது. விரும்புவது. இப்படிப் பலநிலைகளைத்தாண்டித்தான் காதல் உண்டாகும். முதல் நிலையிலேயே பல இளைஞர்களின் தாவு தீர்ந்து விடும்.

இதில் அந்தப் பெண்ணிடம், ஜாதகம் மற்றும் இதர புண்ணாக்குகளைக்
கேட்டு வாங்கிப் பார்த்துக் காதலிப்பது என்பது நடக்கிற காரியமா?

சரி வாங்கிப் பார்த்து, ஒத்து வராத ஜாதகம் என்றால் அல்லது உங்கள் ஜாதகப்படி கட்டுப்பட்ட திருமணம்தான் என்றால் என்ன செய்வீர்கள்? காதலைப் பாதியில் முறித்துக் கொண்டு விடுவீர்களா? நடக்குமா அது?

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" என்றார் வள்ளுவர்.

ஆகவே காதலிக்கத் துவங்கிவிட்டால் மற்றதை எல்லாம் கடாசி விடுங்கள்!

"காதலி கடைக்கண் கட்டிவிட்டால், கள்வனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்'
என்பதுதான் காதலின் இலக்கணம்!

மாமலையே கடுகாகி விடும் போது ஜாதகம் எதற்கு?

இரு மனங்கள் இணைவது மட்டுமே காதல்!

அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் வாழ்க்கைதான். அல்லது அவளுக்காக ஒரு தாஜ் மகாலைக் கட்டும் அளவிற்கு வாழ்ந்தாலும் அது வாழ்க்கைதான்.
காதலில் கட்டுண்ட பிறகு எதற்கு அவநம்பிக்கை? ஏன் ஜாதகம் பார்க்க நினைக்கிறீர்கள்?

காதலில் அகப்பட்டுக் கொண்டால், ஜாதகத்தை மறந்து விடுங்கள்l!
ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றால், காதலில் ஈடு படாதீர்கள்!

தலை எழுத்துப்படிதான் - விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் தலை எழுத்துப்படிதான் திருமண
வாழ்வு!

காதல் திருமணம் என்றால் காதல் திருமணம்தான். கட்டுப்பட்ட
திருமணம் என்றால் அதுதான் நடக்கும். வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!.

யாரும் எதையும் மாற்ற முடியாது. அதை உணர வேண்டும்.

எதையும் மாற்ற முடியாது என்றால் எதற்காக ஜாதகம்?
எதற்காக ஜோதிடம்?

தனிப்பட்ட ஒருவனுக்காக ஏற்பட்டதல்ல ஜோதிடக்கலை! உன்னைக்
காதல் தேடி வந்து விட்டதா? காதல் செய்! அவ்வளவுதான்!

மெல்லியலாள் சாய்ந்தாள் தாங்கிக் கொள்: மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிக் கொள்!

துன்பம், பிரச்சினை என்பது, காதல் திருமணத்திலும் உண்டு! கட்டுப்பட்ட
திருமணத்திலும் உண்டு. ஏமாற்றம் இரண்டிலும் உண்டு.எது நல்லது? எது
கெட்டது? என்று விவாதம் செய்து, பிரித்து அலசவெல்லாம் முடியாது.

வம்பு, வாதம், பிரதிவாதம், சண்டை இவைகள் தான் மிஞ்சும். அவரவர்க்கு அவரவர் செய்வதுதான் நியாயம். அந்த நியாயத்தில் உண்மையெல்லாம் ஓரங்கட்டப் பட்டுவிடும்.

அதனால் என் கருத்திற்கு இங்கே இடமில்லை. என் ஆசான் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கருத்துத்தான் என் கருத்து. அதை அடுத்து
வரும் வரிகளில் கொடுத்திருக்கிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் "காதலைக் காவியத்திற்கு விட்டு விடுங்கள். கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

அவர் எழுதிய 4 வரிக் கவிதை:

"காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள் - உங்கள்
கல்யாணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள்"
பெற்றவர்கள் பார்ப்பதானால் பெருமையென்னவோ - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதனால் நன்மையல்லவோ"

நூற்றுக் கணக்கான காதல் படங்களுக்குப் பாடல்களை எழுதிய
அவருக்குத் தெரியாத காதலா, நமக்குத் தெரிந்துவிடப் போகிறது?"

ஒரு ஆணிற்கு இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது
ஒரு முகம்தான் பெண்ணின் கண்ணில்படும். இரண்டாவது முகம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியும். அதுபோல அவனுடைய
குடும்பப் பின்னணியைப் பற்றிப் பெண் நினைப்பது ஒன்றாக இருக்கும், திருமணத்திற்குப் பிறகு வேறொன்றாக இருக்கும். இதே விதிமுறைகள் பெண்ணிற்கும் சேர்த்துத்தான்.

பெற்றோர்கள் அக்கு வேறாக ஆணி வேறாக எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டுத் தங்கள் பெண்ணிற்கோ அல்லது பையனுக்கோ
மணம் முடிப்பதால். காதல் திருமணங்களைவிட கட்டுப்பட்ட
திருமணங்கள் பாதுகாப்பானது. அதனால்தான் கவியரசர்
சொன்னார். பெற்றோர்கள் பார்ப்பதால் என்ன பெருமையோ;
அவர்கள் மற்றதையும் பார்ப்பதால் வரும் நன்மையே என்றார்

வீடாகட்டும், வேலையாகட்டும், திருமண வாழ்க்கையாகட்டும்,
பாதுகாப்பும், சுதந்திரத் தன்மையும் முக்கியமில்லையா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படிப்பட்ட திருமண வாழ்க்கை கிடைக்கும் என்பதை முன் பதிவில் எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் இங்கே எடுத்து எழுதினால், பதிவு, அனுமார் வால் போல நீண்டு விடும். ஆகவே எழுத வில்லை. விருப்பமுள்ளவர்கள் மீண்டும் ஒருமுறை படிக்கலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, இன்றையப் பாடத்திற்கு வருகிறேன்.

1.
காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு
என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2.
சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.
ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.
அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது
சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
5.
ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.
குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.
அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.
அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.
இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10
செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11.
ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12.
1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13.
7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14.
கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15.
மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16.
கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17.
எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18.
திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19.
பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20.
இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1.
லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2.
ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3.
சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4.
சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5.
குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6.
சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7.
ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8
ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9.
எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10.
ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11.
ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12
எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.

Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புடன்'
வகுப்பறை வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.2.20

Astrology ஜோதிடம்: ஆர்யபட்டா Aryabhatta


Astrology ஜோதிடம்: ஆர்யபட்டா Aryabhatta

ஆர்யபட்டா

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

இடம். நாளந்தா பல்கலைகழகம்.

தெரியாத பெயராக இருக்கிறதா?

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த
அரிய நிகழ்ச்சி  நடைபெற்றது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள்
ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர  விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய
நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும்
மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும்  கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும்
சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு  தான் எழுதவிருக்கும்
தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின்
மீது பக்தியுடன் எழுதுகிறான்.

அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன்
மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை.
அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின்
பெயர் ஆர்யபட்டியா!

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில்
தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக  நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான்
நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம்.

அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள்.
அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த  புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில்
அமர வைத்தான்.

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு  முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள்  எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!

அந்த மகானைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கிப் பாருங்கள்!
http://en.wikipedia.org/wiki/Aryabhata
-------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.20

Astrology: ஜோதிடத்தின் பிரம்மாண்டம்


ஜோதிடத்தின் பிரம்மாண்டம்

நமிதாவின் புதுப்படத்தைப் போட்டுக் காட்டியபோது, என்இனிய தமிழ் மக்களே என்று படத்திற்குப் படம் அன்பொழுக அழைக்கும் இயக்குனர் சொன்னாராம்:

"படத்தில் நமீதா மட்டுமே பிரம்மாண்டமாக இருக்கிறார்"

அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று பிரம்மாண்டமாகத் தோன்றும்.

ஆனால் இறைவனின் படைப்பில் பிரபஞ்சம் மட்டுமே என்றைக்கும் பிரமாண்டமானது

அதன் ஒவ்வொரு பகுதியும் பிரம்மாண்டமானது!

இங்கே கோவையிலிருந்து யானைக்கட்டி செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் தூரம் சென்று, தடாகம் முருகன் கோவிலுக்கு அந்தச் சாலை பிரியும் இடத்தில் நின்று கொண்டு சுற்றிலும் உள்ள மலைகளையும், அதற்குப் பின்புறம் சில்லவுட்டில் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்த்தால்தான், இறைவனின் படைப்பு எவ்வளவு
பிரம்மாண்டம் என்று தெரியும்.

அதுபோல ஜோதிடத்தின் அடிப்படை விதிகளைப் படித்து விட்டு, அதன்அடுத்த பகுதிக்குச் செல்பவனுக்கு அதன் பிரம்மாண்டம் தெரியும்.

கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாக ஜோதிடத்தின் இரண்டு நிலைகளை இன்று உங்களுக்குச் சொல்கிறேன். அப்போதாவது உணருங்கள் அது எத்தனை பிரம்மாண்டமானது என்று!

முடியாதவர்களும், விரும்பாதவர்களும் நமீதாவின் படத்தோடு கழன்று கொள்வது நல்லது!:-)))
----------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள்.உங்கள் ஜாதகம் போலவே இன்னொருவருக்கு அமைய வேண்டும் என்றால் எத்தனை நாட்களாகும்?

ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்வார்கள்.

என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்: "அறுபது வருடங்களில் அதே போன்ற ஜாதகம்    கிடைக்கும்.அதனால் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்!

எவ்வளவு அறியாமை ?

அப்போ அறுபது வயதில் அவரைப் போலவே இன்னொருவர் பிறப்பாரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு இந்திராகாந்தி பிறப்பரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கலைஞர் மு.க. பிறப்பரா?

இல்லை! அது அறிவின்மை!
----------------------------------------------------------------------------------------
இப்பொது சொல்லுங்கள் உங்கள் ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?

யோசித்துப் பாருங்கள்

குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்

இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும் ஆண்டுகள்
= 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.

அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும் அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும் பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்

இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான்.இன்னும் லக்கினமும் வேண்டு மென்றால், மறுபடியும் to be multiplied by 12

விடை ஒரு யுகம் ஆகும்.ஒரு யுகத்திற்கு உங்களுடையதைப் போன்ற ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.

நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!

தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
------------------------------------------------------
12 ராசிக் கட்டங்களை வைத்து ஜாதகங்களை எழுதுகிறோம், அதில் லக்கினமும் ஒன்பது கோள்களும் இருக்கும் இடங்கள் (டிகிரியுடன்) குறிப்பிடப்பட்டிருக்கும்

அதை மாதிரியாக வைத்துக் கொண்டு விதம்விதமான ஜாதகங்களை உருவாக்கிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், உங்களால்
எத்தனை ஜாதகங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும்?

சட்டென்று உங்களால் விடை சொல்ல முடியாது!

இப்போது சொல்லித்தருகிறேன். நினைவில் வைத்துக் கொண்டு யாரும் கேட்டால் பொட்டென்று அடியுங்கள் (வாயால்)

ஒரு லக்கினம் + ஒன்பது கோள்கள் = 10 X 12 ராசிகள் = Ten to the power of Twelve = One followed by Twelve zeros = 100,000,00,00,000 - permutation combination

பாதிப்பேர்கள் பொறியாளர்கள்தானே? கணக்கிட்டுப்பாருங்கள்

ஒருலட்சம்கோடிஜாதகங்களைஎழுதலாம்! இன்றையஉலகஜனத்தொகைவெறும் 700 கோடிகள்தான்!-)))

எல்லாம் கணக்கு அய்யா, கணக்கு!

கிளியை வைத்து அறுபது அட்டைகள் என்ற கணக்கில்லை

முழுவதும் தெரிந்தால் உங்களைப் பிரம்மிக்க வைக்கும் கணக்கு!
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.10.17

நாகேஷ் சொன்ன நகைச்சுவை!


நாகேஷ் சொன்ன நகைச்சுவை!

முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்.படத்தின் பெயர் நினைவில் இல்லை. ஆனால்  காட்சி நினைவில் இருக்கிறது

நாகேஷ் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருவார். வீட்டில் இருக்கும் டைப்பிஸ்ட் கோபு நாகேஷைப் பார்த்துக் கேட்பார்.

"ஏண்டா ஜோசியருகிட்டே போனியே,என்ன சொன்னார் அவர்?"

அதற்கு நாகேஷ் அவருக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் உள்ள குரலில் பதில் சொல்வார்.

"அதெல்லாம் நல்லாத்தான் சொன்னாருப்பா!"

"அதான் என்ன சொன்னாருங்கிறேன்ல?"

"உனக்கு இந்தக் கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் எல்லாம் நாற்பது வயசு வரைக்கும்தான்னு  சொன்னாரு!"

"அதுக்கப்புறம்?"

"அதுவே பழகிப் போயிடும்னுட்டாரு!"

கொல்' லென்ற சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்ந்துவிடும்!
-----------------------------------------------------------------------------------
அது அவர் நகைச்சுவைக்காகச் சொல்லியது என்றாலும் பலருடைய ஜாதகத்தில் அது உண்மையாகவே இருக்கும்

ஏன் அப்படி?

குரு, சந்திரன், சுக்கிரன் மூன்றும் அதிக நன்மைகளைக் கொடுக்கக்கூடிய கிரகங்கள். அவைகள் மூன்றுமே ஒருவருடைய
அல்லது ஒருத்தியுடைய ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் (It these three planets are not placed in the right places) அந்த ஜாதகனுடைய அல்லது ஜாதகியுடைய வாழ்க்கை கடைசி வரை போராட்டங்கள்
மிகுந்ததாகவே இருக்கும்.

அந்த மாதிரி ஜாதகங்களுக்கெல்லாம், கருணை மிக்க கடவுள் நின்று போராடும் சக்தியைக் (Standing Power) கொடுத்திருப்பார்.

ஆனால் 40 வயதுவரை, அதாவது இளமைத் துடிப்புள்ள காலத்தில் இதெல்லாம் ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்கிறது? என்ற
துடிப்பு இருக்கும். 40 வயதிற்குமேல், சரி, இதுதான், நம்முடைய நிலைமை, என்று பக்குவப்பட்ட மனது உணர்ந்து விடும்.
ஆதலால், வருவதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலும் கிடைத்து விடும். வாழ்க்கைப் பயணத்தை ஒரு சோகம் கலந்த
மகிழ்ச்சியுடன் தொடர்வார்கள் அவர்கள்!

கூலி ஆளாக வேலையைத் துவங்குபவன், கடை வரைக்கும் கூலி வேலை பார்ப்பதற்கும், சைக்கிளில் செல்பவன் கடைசிவரை
சைக்கிளில் செல்வதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதற்கும், ஒரு சின்ன கிராம ரயில்வே ஸ்டேசனில், ஸ்டேசன் மாஸ்டராக
வேலைக்குச் செல்பவன், கடைசிவரை ஸ்டேசன் மாஸ்டராகவே வேலை பார்ப்பதற்கும், ஒரு இசையமைப்பாளரிடம், வயலின்ஸ்ட்டாக வேலை பார்ப்பவன், அதே சினிமாத்துறையில் கடைசிவரை, ஏதோ ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசித்துக் கடைசிவரை வாழ்க்கையை ஓட்டுவதற்கும், ஒரு ஸ்டுடியோவில்
 Light Boy Or Clap Boy வேலைபார்க்கும் ஒருவன் கடைசிவரை அதே
வேலையில் நீடிப்பதற்கும் - அவ்வளவு ஏன் பேருந்துகளில் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் வேலைக்குச் சேர்பவர்கள்
கடைசிவரை, அதே வேலையில் மன அமைதியோடு இருப்பதற்கும், நான் மேற்சொன்ன ஜாதக அமைப்புதான் காரணம்.

Twist, Up & Down உள்ள ஜாதகங்களில் 4 கிரகங்கள் நன்றாக இருக்கும், மீதி கிரகங்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள்
வாழ்க்கை ஏற்ற இறக்கம் உள்ளதாக இருக்கும்.

ஒரு நடிகர் ஒரே படத்தில் புகழின் உச்சிக்குபோய் விடுவார். அடுத்தடுத்து மேலூம் இரண்டு படங்கள் வெற்றியடைய, முதல்
படத்தில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நடித்தவர், நான்காவது படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் என்பார். அதையும்
கொடுத்து அவருடைய கால்சீட்டை வாங்க ஒரு கூட்டம்
அவருடைய வீடு வாசலில் காத்திருக்கும்.

இரண்டே ஆண்டுகளில் பத்துக் கோடி பணம் சேர்ந்து விடும். சென்னை தி.நகரில் பங்களா, பென்ஸ் கார் என்று வாழ்க்கை
தடபுடலாகிவிடும்

அதே நிலைமை நீடிக்குமா என்றால் - எப்படித் தெரியும்?

அவருடைய ஜாதகம் நன்றாக இருந்தால் நீடிக்கும். இல்லையென்றால் கிரகங்கள் ஊற்றிக் கவிழ்த்து விட்டு அல்லது அடித்துத் துவைத்து விட்டுப்போய் விடும்!

எப்படி?

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று அல்லது நான்கு படங்கள் தோல்வியுறும், மார்கெட் போய் விடும்.
ராசியில்லாத நடிகர் என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ஃபீல்டில் நிற்க வேண்டும் என்பதற்காக கையில் இருக்கின்ற காசைப்
போட்டுப் பெரிய பட்ஜெட் படமாக எடுப்பார்.அதுவும் நேரம் சரியில்லாத காரணத்தால் ஊற்றிக் கொண்டுவிடும். விட்ட பணத்தைப் பிடிப்பதற்காக கடன் வாங்கி மீண்டும் ஒரு சொந்தப் படம் எடுப்பார். அதுவும் ஓடாமல் அவரைச் சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கிவிடும்.

கடைசியில் கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்புவதற்காக சம்பாத்தித்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கடனை அடைப்பார். மீண்டும் லாட்ஜ் வாசம், எடுப்புச் சோறு என்றாகி விடும்.

இது சினிமாக்காரர்கள் என்று மட்டுமில்லை, பல தொழில் அதிபர்கள், வியாபாரிகள் வாழ்விலும் நடக்கின்றதுதான்.
சினிமாக்காரரை ஏன் முன்னிலைப் படுத்திச் சொன்னேன் என்றால், அது உங்களுக்கு சுலபமாக வசப்படும் அல்லது புரியும் என்பதால்.

இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்ததுதான். பெயரைச் சொல்லவில்லை. முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்

அந்த நடிகர் - பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவர் கஷ்டகாலம் வந்து, அனைத்தையும் இழந்து கோடம்பாக்கத்தில்
பொடி நடையாக ஒருமுறை நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்து அவரை வழி மறித்த பத்திரிக்கை
நிருபர் ஒருவர் அவரிடம் இப்படிக்கேட்டார்:

"என்ன அண்ணே, நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்?"

அவர் பதில் சொன்னார்:

"ஆமாம்ப்பா, கடவுள் பென்ஸ் காரில் போகச் சொன்னார் போனேன்; இப்போது நடந்துபோ என்றார்.நடந்து போய்க் கொண்டிருக்கிறேன். மீண்டும் என்னை அவர் பென்ஸ் காரில் போக  வைப்பார். போவேன்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. மீண்டும் அவருக்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. கதாநாயகன் வேடமல்ல;
குண சித்திர வேடம். சிறப்பாக நடித்தார். மீண்டும் பல
வாய்ப்புக்கள் அதே குணசித்திர வேடங்களில் நடிக்கத் தேடி
வந்தது. இன்று மீண்டும் நல்ல நிலைமையில் இருக்கிறார்
அவர்.
---------------------------------------------------------------------------
ஆகவே உங்களுடைய ஜாதகத்தைப் பற்றிய கவலையை எல்லாம் விட்டு விடுங்கள்.

நல்ல ஜாதகம் என்றால் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள் ஜாதகத்தைப் பற்றி யோசிக்கக்கூட

நேரமின்றி வாழ்க்கை முழு இன்ப மயமானதாக இருக்கும். அதிகாலையில் மும்பை மத்தியானம்  ஃபிராங்க்ஃபர்ட், நடு இரவு நியூயார்க் என்று பறந்து கொண்டிருப்பீர்கள்.வாழ்க்கையின் அவ்வளவு செளகரியங்களும் அதுவாகவே உங்கள் காலடிக்கு வந்து சேரும்.

அதேபோல உங்கள் ஜாதகம் சொல்லும் படியாக இல்லை யென்றால், நீங்கள் கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. உங்களுடைய துன்பங்களையும், அசெளகரியங்களையும் யாரிடமும்
கொடுத்துவிட்டு நீங்கள் தப்பிக்க முடியாது. உங்கள் துன்பங்களை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். துன்பப்படுபவனுக்கு மட்டும்தான் கடவுள் தோள்
கொடுப்பார். ஜாதகத்தில் அதற்குப் பெயர் நிற்கும் சக்தி!
That is standing power conferred by The Almighty!
--------------------------------------------------------------------
ஒரு குட்டிக்கதை மூலம் அதை விளக்குகிறேன்.

ஒரு பெரிய பக்தர் இருந்தார். எப்படியும் இறைவனைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற மன ஆதங்கத்துடன், ஒரு முறை அவர், தொடர்ந்து பல நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டதோடு, கடும்
பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

இறைவன் காட்சி கொடுத்தார்.அதோடு நில்லாமல் உன் பக்தியை மெச்சும் விதமாக ஒரு வரம் தருகிறேன். என்ன  வேண்டு மென்றாலும் கேள் என்றார்.

"நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக வரவேண்டும்.
அதுதான் என்னுடைய ஆசை! வேறொன்றும் வேண்டாம்"
என்று பக்தர் சொல்ல, அப்படியே நடக்கும், கவலையை விடு
என்று இறைவன் சொன்னார்.

பக்தர் விடவில்லை,"ஆண்டவரே, நீங்கள் எனக்குத் துணை யாகத்தான் உள்ளீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து
கொள்வது?" என்றார்

ஆண்டவன் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னார்.

"நீ அதை ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்
 உங்கள் ஊரில் உள்ள ஆற்று மணலில் நீ மட்டும் தனியாக
ஐம்பது அல்லது அறுபது அடி தூரம் நடந்து சென்று, திரும்பிப்பார்த்தாயென்றால் உன்னுடைய காலடிச் சுவடுகள் இரண்டுடன்உன்னுடன் நானும் நடந்து வந்ததற்கான காலடிச் சுவடுகளாக மணலில் பதிந்த மேலும் இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகள் உன் கண்களுக்குத் தெரியும்! அதுதான் அடையாளம்!" என்று சொல்லிக் கடவுள் மறைந்து விட்டார்.

பக்தரும் மிகவும் மகிழ்ந்து வீட்டிற்குத் திரும்பி விட்டார் வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது."உன்னைக் கண்டு நான்
ஆட, என்னைக் கண்டு நீ ஆட" என்று தன் மனைவியுடன்
மகிழ்வாக வாழ்ந்தார்.

ஒரு மூன்று வருட காலம் போனதே தெரியவில்லை!

ஒரு நாள் திடீரென்று நினைவிற்கு வர, ஆண்டவர் சொல்லியபடி கூட இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆற்று மணல்
பரிசோதனை செய்து பார்த்தார். என்ன ஆச்சரியம்? மணிலில் ஆண்டவர் சொல்லியபடியே இரண்டு ஜோடிக் கால் தடயங்கள் இருந்தன. அவரும் மன நிறைவோடு திரும்பி விட்டார்

காலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் அவர் தன் மனைவி, மக்களை யெல்லாம் விபத்தொன்றில் பறிகொடுக்க நேர்ந்தது. அது விதி
என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டார். அடுத்தடுத்துத் தொடர்ந்து துன்பங்கள் அப்போதும் துணிவுடன் அவற்றை
எதிர் கொண்டார். கடைசியில் துறவியாகி ஊர் ஊராகக் கோவில் கோவிலாகச் செல்ல ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.

"நாம் நமது விதிப் பயனால் இப்படித் துன்பப் படுகிறோம் அப்போழுதே ஆண்டவரிடம், துன்பமில்லாத வாழ்க்கையைக்
கொடு என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கொழுப்புடன் ஒன்றும் வேண்டாம், விதித்ததை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ துணையாக மட்டும் வந்தால் போதும் என்றோம். சரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய ஆண்டவர் நன்றாக இருந்த காலத்தில் துணையாக வந்தார்.அதைக் கண்ணாலும் பார்த்தோம்.

இப்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தனியாக இருக்கிறோம். மூன்று வேளை உணவும், படுக்கக் கோவில் மண்டபங்களும் கிடைத்தாலும் வாழ்க்கை வெறுமைதானே - இந்த வெறுமையான நேரத்திலும் ஆண்டவன் நமக்குத் துணையாக வருகிறாரா - தெரியவில்லையே?"

இப்படி நினைத்தவர், உடனே, ஆண்டவனின் துணையைப் பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணி, கண்ணில்
கண்ட ஒரு ஆற்றின் மணல் பகுதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

ஒரு நூறு அடி தூரம்வரை நடந்தவர், திரும்பிப் பார்த்தார்.

என்ன சோதனை?

இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகளுக்குப் பதிலாக ஒரு ஜோடிக் காலடிச் சுவடு மட்டுமே தெரிந்தது.மனம் நொருங்கிப் போய்விட்டது அவருக்கு!

சுடு மணல் என்றும் பார்க்காமல், அங்கேயே உட்கார்ந்து கண்ணீர் மல்க, கதறியவாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கத்
துவங்கினார்.

அடுத்த ஷணமே ஆண்டவர் காட்சியளித்தார்.

இவர் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவாறு கேட்டார்.

"நியாயமா _ கடவுளே? நான் இன்பமாக இருந்த போதெல்லாம் என் கூடவே துணையாக நடந்து வந்த நீங்கள், எனக்குத்
துன்பம் வந்த நிலையில் என்னைக் கைவிட்டுப் போனதேன்?"

அண்டவன், புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:

"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான். நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக
இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால் உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.
ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க
விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்
இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத் தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் - தெரிந்து கொள்வாய் பக்தனே!"
---------------------------------------------------------------------------
என்னுடைய தொழில் வேறு. I am a marketing agent ஜோதிடம் என்னுடைய தொழில் அல்ல - இதைப் பல முறைகள் சொல்லியிருக்கிறேன்.

தீவிரமாகப் படிப்பதும் எழுதுவதும் என்னுடைய பொழுது போக்கு!

ஒரு ஆர்வத்தில் வலையில் எழுதுகிறேன். அடுத்தவர்களுக்கு நான் படித்தவைகள் பயன் படட்டும் என்ற நல்ல நோக்கில் எழுதுகிறேன்

குறுகிய காலத்தில் (அதாவது 12 ஆண்டுகளில்) பல்சுவை - வகுப்பறை என்னும் என்னுடைய இரண்டு வலைப் பதிவுகளிலும் சேர்த்து இதுவரை 3000 பதிவுகளுக்கு மேல் பதிந்திருக்கிறேன்.

அதோடு தலா 15,000 முதல் 20,000 வாசகர்களைக் கொண்ட இரண்டு குறு மாத இதழ்களில் கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். 130ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்,
100ற்கும் மேற்பட்ட மனவளம், மற்றும் கவிதை ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.

தொடர்ந்து எழுதியும் வருகிறேன்

என்னுடைய ஒரே பிரச்சினை, நேரம் இன்மைதான்கடவுள் என் முன் தோன்றினால் - நாள் ஒன்றிற்கு 48 மணி நேரம் என்று எனக்கு மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்றுதான் அவரிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுப்பேன்

அவ்வளவு நேர நெருக்கடி!

பல அன்பர்கள் பின்னூட்டம் இடுகிறார்கள். "சார் நாங்கள் வேண்டுமென்றால் தட்டச்சு செய்து தரட்டுமா?" என்கிறார்கள்

அவர்களுக்கு என் நன்றி!

நான் கையால் எழுதி Scan செய்து அனுப்பினால்தானே அவர்கள் தட்டச்ச முடியும்?. அதே நேர அளவில் நான்
நேரடியகவே - மிகவும் வேகமாக Notepad'ல் தட்டச்சி விடுவேன்

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்  வாராவாரம் சில பதிவுகளை மட்டுமே பதிய முடிகிறது. பின்னூட்டங்களுக்கு முடிந்த நேரத்தில் மட்டுமே பதில் அளிக்க முடிகிறது. சில
சமயங்களில் அது தாமதமாகி விடுகிறது. ஆகவே வாசக அன்பர்கள் யாரும் தவறாக எதையும் நினைக்க வேண்டாம்
--------------------------------------------
இந்தக் கட்டுரையை 24-10-2007 அன்று எழுதி வகுப்பறையில் பதிவிட்டேன். இன்று நிறைய புது முகங்கள் இருப்பதால் அவர்களும் படிக்கட்டும் என்ற நல்ல நோக்கில் இன்று பதிவிட்டுள்ளேன்.

அதாவது இது மீள்பதிவு!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!

22-8-2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! என்று எல்லோராலும் இருக்க முடியுமா? அதுவும் ஒரு நிரந்தர வேலை இல்லாத போது. கையில் போதிய அளவு வருமானம் இல்லாதபோது. 99% நிம்மதியாக இருக்கமுடியாது.  ஒரு ஜாதகருக்கு நிரந்தமான நல்ல வேலை கிடைக்கவில்லை. வருமானமும் போதவில்லை. என்ன செய்வார் பாவம்! கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்.


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் - அதாவது க்ளிக்கினால் படம் முழுமையாகத் தெரியும்!

ஜாதகத்தைப் பாருங்கள்:

ஜாதகத்தை அலசி என்ன காரணம் என்பதையும் - தீர்வு உண்டா இல்லையா என்பதையும் எழுதுங்கள்

சரியான விடையை நாளை 24-8-2016 புதன்கிழமை மாலை 6 மணிக்குள் எழுதுங்கள். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.8.16

குரு பெயர்ச்சிப் பலன்கள்!

குரு பெயர்ச்சிப் பலன்கள்!

பெயர்ச்சிகளைக் கண்டு அயர்ச்சி அடையாதீர்கள். ஜாதகத்தின் பலன்களை நடக்கின்ற மகாதிசைகளும், Major Dasa Periods அதில் வரும் உப திசைகளும் (புத்திகளும்) Sub Periods தான் நமக்குத் தரும். பெயர்ச்சிப் பலன்கள் எல்லாம் அதற்கு அடுத்துத்தான் வரிசையில் நிற்க வேண்டியதிருக்கும்.

எல்லா ஊடகங்களும், குறிப்பாக நாளிதழ்களும், வார இதழ்களும் குருப்பெயர்ச்சிப் பலன்களை எழுதி அனைவரையும் கலக்கியிருக்கின்றன. 50%, 60% 80% 90% என்று பலன்களுக்கு மதிப்பும் கொடுத்துள்ளார்கள். அவற்றை எல்லாம் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆகவே விரிவான பலனை நான் எழுதவில்லை.

2-8=2016 செவ்வாயன்று குருபகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். நமது ராசிகளை வைத்துத்தான் பலன்களைப் பார்க்க வேண்டும்.

அதனால் பொதுவான நன்மைகளை அடையப்போவது. மகர ராசிக்காரர்களுக்கு 9ல் குரு.மீன ராசிக்காரர்களுக்கு 7ல் குரு. ரிஷப ராசிக்காரர்களுக்கு 5ல் குரு, விருச்சிக ராசிக்கு 11ல் குரு இந்த 4 ராசிக்காரர்களும் நன்மையான பலன்களை அடைவார்கள்

தற்போது குருபகவான் இருக்கும் இடமான கன்னி வீட்டிற்கு, 6, 8, 12ம் வீடுகளைக் கொண்ட ராசிக்காரர்களுக்கு  கும்ப ராசி (8ம் இடத்தில் குரு), மேஷ ராசி (6ம் இடத்தில் குரு), துலாம் ராசிக்கு 12ம் இடத்தில் குரு - ஆக இந்த ராசிக்காரர்களுக்கு சொல்லும்படியான நன்மைகள் அதிகம் இருக்காது.

மற்ற ராசிக்காரர்களுக்கு மத்திமமான பலன்கள் இருக்கும்

இந்தப் பலன்கள் எல்லாம் ஒரு ஆண்டிற்குத்தான். அதாவது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரு இடம் மாறும் வரைதான். அதை மனதில் கொள்க!

இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடி. சராசரியாக ஒரு ராசிக்கு 10 கோடி பேர்கள். அந்த பத்துக் கோடி பேர்களுக்கும்  நன்மை தீமைகள் அவரவர் ஜாதகப்படியும், நடக்கும் மகாதிசைகள், உப திசைகளின் படிதான் நடக்குமே ஒழிய பெயர்ச்சிகளால் அதிகம் பாதிப்பு இருக்காது. நான் வலியுறுத்திச் சொல்வதும் அதைத்தான். அதையும் மனதில் கொள்க!
----------------------------------------------------
அதெல்லாம் கிடக்கட்டும் நீங்கள் ராசிவாரியான பலன்களைச் சொல்லுங்கள் என்று பிடிவாதம் பிடிப்பவர்களுக்காக எளிய முறையில் பலன்களைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் அனைவரும் அதைப் பார்த்து உங்கள் ராசிக்கான பலனைத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------


















வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===================================================

4.6.16

Astrology Quiz: புதிர் எண்.110 ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்தார்?


Astrology Quiz: புதிர் எண்.110 ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்தார்?

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகத்தை அலசி, உங்கள் கணிப்பைச் சொல்லுங்கள்!



கேள்வி:

எப்படிப்பட்ட ஜாதகம்?

1. வேலை செய்யும் ஜாதகமா?
2. வியாபாரம் செய்யும் ஜாதகமா?
3. சுயதொழில் செய்யும் ஜாதகமா?
4. சுகஜீவன ஜாதகமா?

மொத்தத்தில் ஜீவனத்திற்கு ஜாதகர் என்ன செய்தார்?

நேற்று வெளியூர் பயணத்தினால் பதிவிட முடியவில்லை. ஆகவே இன்று பதிவிட்டுள்ளேன். உங்கள் பதில்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:30 மணிக்குள் அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.6.14

Astrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும்!

Astrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும்!

படிப்பை மட்டும் வைத்து ஒருவரை மேதை என்றோ அல்லது படிக்காததை மட்டும் வைத்து ஒருவரை முட்டாள் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

ஜாதகத்தில் படிப்பிற்கும் அறிவிற்கும் தனித்தனி இலாக்காக்கள் (வீடுகள்). கல்விக்கு நான்காம் வீடு. அறிவிற்கு (keen intelligence) ஐந்தாம் வீடு.

நான்காம் வீடு நன்றாக இல்லை என்பதற்காக, ஐந்தாம் வீடும் கெட்டிருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

சிலருக்கு 4ஆம் வீடு நன்றாக இருக்கும். சிலருக்கு 5ஆம் வீடு நன்றாக இருக்கும். நூற்றில்  பத்து அல்லது பதினைந்து பேர்களுக்குத்தான் இரண்டு வீடுகளும் நன்றாக இருக்கும். அதெல்லாம் வாங்கி வந்த வரம்!

அதனால்தான் பெரியவர்கள் இப்படிச் சொல்வார்கள்: படித்த முட்டாள்களும் உண்டு. படிக்காத மேதைகளும் உண்டு!

கவியரசர் கண்ணதாசன் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். அவருக்கு இல்லாத அறிவா? திறமையா? அனுபவமா?

அவர் இந்த படித்த முட்டாள்கள், படிக்காத மேதைகள் பிரச்சினையைத் தன்னுடைய பாடல் ஒன்றில் ஏற்றியதுடன், அதற்கு அற்புதமானதொரு விளக்கத்தையும் கொடுத்தார்

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

- கவியரசர் கண்ணதாசன்

படம்: படிக்காத மேதை. முழுப்பாடலும் வேண்டுமென்பவர்கள் இணையத்தில் உள்ளது. பாருங்கள்.
---------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்:


திருமதி ஸிமிரிதி இராணி அவர்கள் மோடியின் மந்திரி சபையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.Minister of Human Resource Development of Government of India.

23.3.1976ல் தில்லியில் பிறந்த அவருக்கு 38 வயதுதான் முடிந்துள்ளது. 40 வயதிற்குக் கீழே உள்ளவர்களை எல்லாம் இளமையானவர்கள் என்று எடுத்துக்கொண்டால் அவரும் இளமையானவர்தான்!

அழகான தோற்றம் உடையவர். ஆரம்ப காலத்தில் மாடலாகவும், தொலைக்காட்சி நடிகையாகவும் இருந்து மக்களிடையே பிரபலமானவர். அவருடைய தந்தை பஞ்சாபி. தாய் பெங்காலி. மூன்று சகோதரிகளில் அவர்தான் மூத்தவர். பன்மொழிகளில் வல்லவர். திறமையாகப் பேசக்கூடியவர்.

கல்வி: 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

பட்டப் படிப்பு படிக்காத அவருக்கு எப்படி முக்கியமான துறையைக் கொடுக்கலாம் என்று பல அன்பர்கள் (காங்கிரஸ்காரர்கள்) கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.



பட்டப் படிப்பு ஒன்று மட்டும் எப்படித் தகுதி என்று எப்படிக் கொள்ள முடியும்? அறிவு, புத்திசாலித்தனம், திறமை எல்லாம் முக்கியமில்லையா?

அவர் சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றின் காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களே அவர் தகுதியானவரா அல்லது இல்லையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்




அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.6.12

Astrology தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?



+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 24

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திநான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.96
அருள் முருகன்

Sir
I humbly request you to clarify my doubts.

1) Generally speaking suyabukthi will not do good to a person. The same would be the
case with Guru dasa Guru bukthi. In such a case how long will Guru dasa Sani bukti take in its 2 1/2 periodto provide relief to a person if generally speaking the person had suffered a lot in Rahu dasa ?

குரு தசையில் சனி புத்தி 30 மாதங்கள், 12 நாட்கள். அதுவும் சுமாராகத்தான் இருக்கும். அதற்கு அடுத்துவரும் குரு தசை புதன் புத்தி நன்மைகளை உடையதாக இருக்கும்! ராகு தசையில் கஷ்டப்பட்டீர்கள் என்பதற்காக அடுத்துவரும் தசா புத்திகள் தங்கள் விதிகளை மீறி செயல் படாது!

2) Generally speaking if a persons maternal uncle (mothers brother) plays an important role
in a persons upbringing(right from childhood days of the kid), will it be possible to find it
from the kids horoscope ?

தாய்வழி உறவுகளைப் பற்றியும், அவர்களுடன் உள்ள சுமூக உறவுகளைப் பற்றியும் 4ஆம் வீட்டை வைத்து ஒரளவிற்குத் தெரியும். தாய் மாமா, பாசமலர் சிவாஜி போல இருப்பாரா? கை வீசம்மா கை வீசு, என்று கையைப் பிடித்துக் கொண்டு பாடுவாரா என்பதெல்லாம் ஜாதகத்தில் தெரியாது!

3) If in a females horoscope 7 planets in drekkanam divisional chart occupy the same
raasi as they are seen in raasi chart, dharmakarmathipathi yoga found in 3'rd house, 10'th house getting 39 points in ashtavarga, 11'th house - 41 points, does that indicate the females brother will be a VIP in the society ?

என்ன சுவாமி குழப்புகிறீரே? திரேக்கணத்தை பற்றிய கேள்வியில் எதற்கு தர்மகர்மாதிபதி யோகத்தையும், 10 & 11 ஆம் வீட்டுப் பரல்களையும் கொண்டு வந்து கொக்கி போட்டு மாட்டுகிறீர்கள்? Drekkana is used to study the prospects of siblings. உடன் பிறப்புக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
VIP in the societyயாக இருப்பார்களா என்பதெல்லாம் (எனக்குத்) தெரியாது
------------------------------------------
email.No.97
P.பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்.

Dear Sir,
I have few more doubts.

1. Mandhi – you have mentioned that it will affect one aspect (out of multiple functions of
the house) of the house where it is sitting. Will this affect permanently? In one horoscope,
it is sitting in second house, Cancer, and affected the jathakan in his speech ie. he was
"Thikku Vai" in his child hood. Now he has over come that to grow up in career, though
this affects him very rarely and sometimes only. Does that mean Manthi will not affect
him further, or it will continue to affect in other areas like "Vakku" or "Speech" or other
functions of second house.

நீங்களே, அரிதாக, சிலசமயங்களில் மட்டுமே அந்தக்குறை உள்ளது என்று
எழுதியுள்ளீர்கள். இறைவழிபாடு செய்யச் சொல்லுங்கள். முற்றிலும் நீங்கிவிடும்!

2. If good planet becomes ucham, it means it has more power to do good.
In the same way if bad planet becomes ucham, does it mean it will do more harm?

தீயகிரகம் என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். சனி தீயகிரகம்தான். அதே நேரத்தில் அவன் ஆயுள்காரகன், கரம் காரகன் (authority for profession) உச்சம் பெற்ற சனி, ஜாதகனுக்கு (மற்ற அம்சங்களையும் வைத்து) நீண்ட ஆயுளையும், தொழிலில்/வேலையில் மேன்மையையும் தருவார்

3.Similarly if negative planet has more parals, does it mean it will affect the jathagan or it
will benefit the jathagan. Should the negative planets get lower suya parals to do less
harm to the jathagan.

எதிர்மறையான கிரகம் என்பது, 6,8,12 ஆம் வீட்டு அதிபதிகளைக் குறிக்கும். அந்த வீட்டு அதிபதிகளுக்கு சுயவர்க்கப்பரல்கள் அதிகம் இருந்தால், அவர்கள் ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யாவிட்டாலும் கஷ்டங்களிலிலும், துன்பங்களிலும், தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்கள்

4.How to see the houses and planets in Navamsa Chart. Is it to be done from the position
of lagna in navamsa, which is different from lagna in main chart or the lagna position in
the main chart to be applied to the same house in navamsa.

மின்னஞ்சல் கேள்வி எண்.71 தேதி 25.1.2010க்கான பதிலைப் பாருங்கள். அதே பதில்தான் உங்களுக்கும்!

5.In many manual horoscopes, I find the main chart would be correct, but navamsa would
be wrong. Sometimes I could not arrive at the manually developed Navamsa chart even
using a good software. Same is the case with the remaining portion of Dasa period at
birth. That could not be arrived to match with the manual workings. This indicates the
chart requires BTR. In some cases I tried with both Lahiri and Raman Ayanamsa. As you
have been familiar with manually constructing horoscope and you know people who do it,
can you please tell me why this happens and what could be the reason for them not
matching with computerised horoscope. What are the possible mistakes, those
astrologers would have committed.
Is there any tool for BTR or short cuts to rectify the same.
I look forward to your response at the earliest.

நல்ல சிற்பி செய்த சிலை நன்றாக இருக்கும். நல்ல பொறியாளர் வடிவமைத்த இயந்திரம் நன்றாக இயங்கும்.நல்ல இயக்குனர் இயக்கிய படம் அருமையாக இருக்கும். அதுபோலத்தான் இதுவும். ஜோதிடத்தில் நல்ல பாண்டியத்யம் பெற்ற ஜோதிடர்கள் எழுதிக் கொடுக்கும் ஜாதகத்தில் குறைகள் இருக்காது. அந்தக் காலத்தில் இருந்தார்கள். இப்போது இல்லை. சர்வமும் கணினி மயம். கணினி போற்றி, கணினி போற்றி, கணினி போற்றி, என்று மூன்றுமுறை
சொல்லிவிட்டுக் கணினியிலே கணித்து விடுங்கள்
----------------------------------------
email.No.98
திரு அரசு

மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.

லேட் அட்மிஷனாக வகுப்பில் சேர்ந்த எனக்கு தாங்கள் அனுப்பிய பழைய பாடங்களின் தொகுப்பினை படித்துப் பார்த்துப் புரிந்து கொண்டதில் எனக்கு ஏற்பட்டுள்ள கீழ்க்கண்ட இரண்டு ஐயங்களை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

1 . அஷ்டவர்க்கம் மற்றும் சுயவர்கப் பரல்களைக் கணக்கிடும் வழிமுறை என்ன என்பதை உதாரண ஜாதகத்துடன் சற்று விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.ஜாதகம் கணிக்கும் மென்பொருள் மூலம் பரல்கள் கணக்கிடப்பட்டு விட்டாலும் அதன் வழிமுறை குறித்து தெரிந்து கொள்ளவே இதனைக் கோருகிறேன்.

வழிமுறைகள்தானே? அது பெரிய பாடம். நீங்கள் கேட்டதற்காக நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள். உங்கள் ஆர்வம் வாழ்க! நாளும் வளர்க!

2. பரிவர்த்தனை தொடர்பாக ஒரு ஐயம்: சில ஜாதகங்களில் மூன்று கிரகங்கள் கூட்டாக பரிவர்த்தனை ஆகி இருப்பதை கண்டிருக்கிறேன் , உதாரணமாக ஐந்துக்குரிய கிரகம் எழில், எழுக்குரிய கிரகம் ஒன்பதில் ஒன்பதுக்குரிய கிரகம் ஐந்திலும் பரிவர்த்தனை ஆகி இருப்பின் இதையும் யோகதுக்குரிய பரிவர்த்தனை ஆக கொள்ளலாமா? இதற்கான பழங்கள் எப்படி இருக்கும் அய்யா?
வணக்கத்துடன், அரசு.

அது முக்கோணப்பரிவர்த்தனை என்று பெயர்.பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட அந்த 3 கிரகங்களுமே நன்மைகளைச் செய்வார்கள்
-----------------------------------
email.No.99
பழனிசெந்தில்

அன்புள்ள ஆசிரியர் அவர்களூக்கு,
குழ‌ந்தை இல்லாதவர்கள் தத்து எடுக்கும் குழந்தை ஜாதகம் மூலம் பலன் அல்லது பாதிப்பு அடைவார்களா? நன்றி.
செந்தில்.மதுரை.

உங்கள் கேள்வி சரியில்லை. பேருந்தில் பயணிக்கிறவன், அது எந்த ஊர் செல்லும் பேருந்து என்று பார்த்து ஏறமாட்டானா? பார்க்காமல் ஏறினால் என்ன ஆகும்? தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்? அதுவும் பஸ் புறப்பட்டு, 10 கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு கேட்டால், நடத்துனரிடம் டோஸ் வாங்கிக் கொண்டு பஸ்சைவிட்டு இறங்க நேரிடும். அதுபோலத்தான் இதுவும். தத்து எடுக்கிறவன், தத்து எடுக்கப்போகும் குழந்தையின் ஜாதகத்தைப் பரிசீலிக்காமல் தத்து எடுப்பானா?
பார்க்காமல் எடுத்தால், வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.100
லக்ஷ்மணன், சென்னை

வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் கேள்வி பதில் பகுதி மிக்க உபயோகமாகஇருக்கிறது
அதிலும் தாங்கள் பதிலுக்கு அசத்தலாக தலைப்பு கொடுப்பது, அது என்ன என்று ஆவலாக முதலில் படிக்க தோன்றும் அளவுக்கு உள்ளது. படங்களை வேறு போட்டு அசத்துவது இன்னும் தூக்கலாக இருக்கிறது ( எங்கே இருந்து சாமி படங்களை சேகரிக்கிறீர்கள்)

கூகுள் ஆண்டவர் சந்நிதியில் இல்லாத படமா? அங்கே இருந்துதான் எடுக்கிறேன் சார்!

என்னுடைய கேள்வி.
1. Md என்பது மாந்தியா Gl என்பது மாந்தியா ?
தாங்கள் ஒரு பாடத்தில் Md தான் மாந்தி என்று ஜகன்நாத் ஹோரா படம் போட்டு இப்படி சொன்னீர்கள்.
" உடனே சடாரென்று சொன்னேன்,” Native of the horsocope should be amentally retarded person" (இந்த ஜாதகன் ஒரு மனநோயாளி)
இன்னொரு இடத்தில் Gl தான் மாந்தி என்று குறிப்பிட்டீர்கள்
/ஜகந்நாத ஹோரா மென்பொருளில் வரும். அதில் Gள் (குளிகன்) என்று போட்டிருக்கும் அதுதான் மாந்தி// என்றுஅதற்க்கு ஒரு வாசகர் எழுதிய பதில்:
நல்ல வேளை வாத்தியாரையா. "Md" என்று போட்டிருப்பது மாந்தி என்று நினைத்தேன். = என்பதாகும்.
ஆக இதில் எது மாந்தி?

”சிங்காரிதான் காவேரி
காவேரிதான் சிங்காரி” என்று புரட்சித் தலைவர் படத்தில் ஒரு பாடல் வரும்.
அதைப்போல மாந்திதான் குளிகன்; குளிகன்தான் மாந்தி என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றுதான். ஜகந்நாத ஹோரையில் இரண்டும் வெவ்வேறு என்பார்கள். அவர்களுடைய மென்பொருளை
உபயோகிப்பவர்கள் "Md" என்று போட்டிருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். மாந்தியை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிகனைப் பெவிலியனுக்கு அனுப்பிவிடுங்கள். குழப்பம் இருக்காது!

2. ஜாதகத்தில் 4 வகைகள் மட்டுமே உண்டு: என்று சொல்லியது பற்றிய கேள்வி.

1. தர்ம ஜாதகம் (1,5,9 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
2. தன ஜாதகம் (2,6,10 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
3. காம ஜாதகம் (3,7,11 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
4, ஞான ஜாதகம் (4,8,12 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
என்னுடைய ஜாதக த்தில் முப்பது பரல்கள் மேல் இருந்தால் சரி என்றால் ஒன்றில் கூட சரியாக வரவில்லையே. இந்த செட் கணக்குப்படி முப்பது பரல்கள் எல்லாவற்றிலும் வரவில்லை . சரி இரண்டு இடங்களில் இருந்தால் போதும் என்றால் மேற் கூறிய இரண்டு

வகைக்கு ஒத்து வருகிறது.
1 – 5 - 9 இல் முறையே 31 – 25 – 25 பரல்கள்
2 – 6 – 10 இல் முறையே 31 - 24 – 34 பரல்கள்
3 – 7 – 11 இல் முறையே 34 – 19 – 33 பரல்கள்
4 – 8 – 12 இல் முறையே 34 – 26 – 26 பரல்கள்
1 – 2 – 3 – 4 – 10 – 11 இடங்கள் மட்டுமே 30 பரல்களுக்கு மேல் இருக்கிறது. இது எந்த வகை ஜாதகம் எப்படி பார்ப்பது என்று தயவு செய்து சொல்லி புரிய வைக்கவும்.
இப்படிக்கு
லக்ஷ்மணன் /////

அந்த நான்கு வகைகளிலும் வராத கலவையான ஜாதகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 4 வகைகளுக்குள் அடங்க வேண்டும் என்று அவசியம் ஒன்றும் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வி பதில் பகுதியில் இதுவரை 100 மின்னஞ்சல்களுக்குப் பதில் அளித்துள்ளேன்.
=========================================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!




12.6.12

Astrology வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?


++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?

Doubts: கேள்வி பதில் பகுதி 23

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திமூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.91
சரவண குமார்

Dear Sir,

1. Rishabathil Raghu Neesam, mithuna lagnathukku 12th place il Raghu ullar. Avar dhisai evaru irukkum?

தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது. only routine work!

2.In general, how is neesa grahas dhisai?

பொதுவாக நீச கிரகங்களின் தசை மகிழ்ச்சிகரமாக இருக்காது!

3 Oru graham neesamaga irunthalum, avar than suyavargathil 5 paral & 26 paral irunthal, avar balamaga ullar enru eduthu kollalama sir?

ஐந்து பரல்களைப் பெற்றுள்ளார் என்றாலே அவர் ஆட்டத்திற்கு செலக்ட் ஆகிவிட்டார் என்று அர்த்தம். ஆகவே அவர் ஓரளவிற்கு நன்றாக ஆடுவார். கவலை வேண்டாம்.

4. Pathaga isthanam, athan athipathi & athan dhasi patriya paadam vendum sir?

பழைய பாடங்களில் உள்ளது. தேடிப்பிடித்துப் படியுங்கள்
---------------------------------------------------------------------
email.No.92
சந்திரசேகரன் கருணாகரன்

Respected sir,
For Meena rasi Midhuna lagnam, Raghu is in Midhunam and keethu is in dhanusu and it is vargothamam. what will be effect of this for the persons on his married life during keedhu desai. waiting for your positive reply.
chandrasekaran

ஏழாம் அதிபதி குரு பகவானை ஏன் ஒளித்துவைத்திருக்கிறீர்கள். திருமண வாழ்விற்கு அவர் முக்கியமில்லையா? கேது தசை என்பது பிரேக் இல்லாத வண்டியில் போவதைப் போன்றது. உங்களுக்குக் கேது குருவின் வீட்டில் இருப்பதால், அவருடைய தசையில் அதிக பாதிப்புக்கள் இருக்காது!
------------------------------------------------------
email.No.93
சரஸ்வதி கல்யாணம், சென்னை

மதிப்பிற்கு உரிய ஐயா

தயவு செய்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும்

1.கடக லக்னத்துக்கு மூன்றாம் அதிபதி புதன்.பன்னிரெண்டாம் அதிபதியும் புதன்.இந்த நிலை விபரீத ராஜா யோகமா?

நிச்சயமாக இல்லை!

2.ரிஷப லக்னத்துக்கு ஒன்பது பத்து அதிபதி சனி. அதனால் பிறப்பிலேயே தர்மகர்மாதி யோகம் என்று சொல்லக் கேட்டு இருக்கின்றேன் . விபரீத ராஜா யோகமும் அதேபோலவா?

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகம்!

3.கடக லக்னத்துக்கு கன்னியில் கேது , மிதுனத்தில் புதன் செவ்வாய் சூரியன் சுக்கிரன் இந்த நிலை பலன் என்ன?தயவு செய்து விளக்கவும்

முக்கியமான 4 கிரகங்கள் 12ஆம் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டுள்ளன. அவைகள் கிரகயுத்ததில் உள்ளனவா, அஸ்தமனம் பெற்றுள்ளனவா, சுயவர்க்கத்தில் எத்தனை பரல்களுடன் உள்ளன, அம்சத்தில் அவற்றின் நிலை என்ன, இது போன்று பல என்ன, என்ன கேள்விகளை வைத்து, முழு ஜாதகத்தையும் அலசினால்தான் பதில் சொல்ல முடியும்! ஆகவே எனது பாடங்களை முழுமையாகப் படியுங்கள். உங்களுக்கே அலசும் தன்மை/திறமை கிடைக்கும்.
------------------------------------------------------------------
email.No.94
சோழி கணேசன்

வணக்கம் அய்யா

1.சனியின் சஞ்சாரத்தின் போது பரல்கள் குறைவாக இருக்கும் போது சிரமமான பலன்கள் ஏற்படும் என்று சொல்லியுள்ளீர்கள் ,இப்பொது எனக்கு சனி தசையில் சனி புக்தி நடக்கிறது .எட்டாம் இடத்தில சனி கோச்சாரத்தில் உள்ளார் அங்கு பரல்கள் 35 சனியின் சுயவர்க்க பரல்கள் 2 இதை எப்படி எடுத்துக்கொள்வது? பலன்கள் நன்றாக இருக்குமா அல்லது குறையுமா, அடுத்த சஞ்சரத்தின் போது 29பரல்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது பலன்கள் குறையுமா( because the house which has lesser than the previous one ,but normal is 25 isnt it?)

அடுத்த மாற்றத்தை அது நிகழும்போது பார்த்துக்கொள்வோம். இப்போது சனி சஞ்சாரம் செய்யும் இடத்தில் 35 பரல்கள் இருப்பதால், ஏற்றமான காலம். வாழ்க்கையின் அடுத்த லெவலுக்கு சனீஷ்வரன் உங்களை உயர்த்தி
விடுவான். அஷ்டமச் சனியும் சேர்ந்திருப்பதால், அந்த உயற்சி உங்கள் கடும் உழைப்பால் மட்டுமே கிடைக்கும்.

(கோள்சாரச்சனி 35 பரல்கள் உள்ள ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார். தன்னுடைய சுயவர்க்கத்தில் அவர் வலிமை இழந்து காணப்படுவதால், அந்த நன்மையின் அளவுகள் குறையலாம். மற்றபடி பெரிய பதிப்பு ஒன்றும் இருக்காது. அடுத்த பெயர்ச்சியில் இருப்பதைவிட 6 பரல்கள் குறைவாக உள்ளதால், அங்கே சஞ்சரிக்கும் காலத்தில் பொருள்/பண விரையத்தை ஏற்படுத்துவார். அப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாகக் கொடுக்கல் வாங்கல் மற்றும் நண்பர்களுக்கு ஜாமீன் கையெழுத்துப்போடும் விவகாரங்கள், கூட்டுத்தொழில் போன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!)

2. இரண்டாவது சந்தேகம் பொதுவானது ,ராசியில் கிரகங்களின்
அமைப்பை வைத்து பார்க்கும் போது சில கிரகங்கள் நன்மையான
இடத்திலும் சில கிரகங்கள் பகை வீட்டிலும் இருந்தாலும் ,அம்சத்தில்
அவை நல்ல அமைப்பில் மாறிஇருக்கும் பட்சத்தில் மொத்தத்தில்
எல்லாமே நல்ல அமைப்பில் உள்ளதுபோல தோன்றுமே இதை
எப்படி எடுத்துக்கொள்வது (ie ; the four planet is in good positin in rasi
other five are good in amsa means is it worth to take this kind of consideration
which seems to be good for the person )
தங்கள் மாணவன்
கணேசன்

அம்சத்தில் நன்றாக இருந்தால் நல்லதுதானே? எதற்காகத் தோன்ற வேண்டும்? நல்லது நடக்கும். நன்மைகள் கிடைக்கும். அருகில் சோழீஸ்வரர் இருக்கையில் கவலை எதற்கு?
--------------------------------------------------------
email.No.95
ஜெய்

வணக்கம் வாத்தியரே
1.ஒரு ஜாதகத்தில் எதனை குழந்தைகள் என்று எப்படி கண்டு பிடிப்பது?

25.1.2010 அன்று, பாடம் எண் 18ல் மின்னஞ்சல் எண் 75ற்கான பதில்தான் உங்களுக்கும் உரிய பதில். அதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்!

2.ஜாதகத்தில் மறுமணம் செய்ய செய்யகூடிய வருடத்தை எப்படி கணிப்பது?
அன்பு மாணவன்
ஜெய்

வருடத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வயதாகிவிடும். முதல் மணம் முறிந்து போனதற்கு சம்பந்தப்பட்ட ஆசாமி, நீதிமன்றத்தில் விவாகரத்துத் தீர்ப்பை வாங்கி வைத்துள்ளாரா என்று கேளுங்கள்.
வாங்கி வைத்திருக்கிறார் என்றால், மறுமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைத் தேடிப் பிடிக்கச் சொல்லுங்கள் (இன்றைய சூழ்நிலையில் மறுமணத்திற்குப் புதுப்பெண் கிடைப்பது கஷ்டம். ஆகவே அவரைப் போலவே
விவாகரத்தான ஒரு பெண்ணை மணந்து கொள்வாரா என்று கேளுங்கள்). அவர் சம்மதம் என்று சொன்னால், அந்த அம்மணியும் சரியென்று சொன்னால், எதையும் பார்க்க வேண்டாம். உடனே திருமணத்தை நடத்திவிடுங்கள்!.

ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும். நவாம்சத்தில் ஏழாம் அதிபதி நன்றாக இருந்தால் (That is free from afflictions) மறுமண வாய்ப்பு உண்டு!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!


5.6.12

Astrology அடித்துத் துவைத்து அலசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: அடித்துத் துவைத்து அலசுவது எப்படி?

Doubts: கேள்வி பதில் பகுதி 22

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திரெண்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.86
செந்தில் குமார்

Dear Sir,
I thank you for teaching astrology lessons for all. I have some basic astrology knowledge now. I have some doubts kindly clear the doubts.

1. Sir, when a graha utcham in amsam that graham has full power even that is in enemy house in rasi right sir.

செவ்வாய் சனிவீட்டில்தான் உச்சமடைகிறார். அது அவருக்குப் பகை வீடுதான். இருந்தாலும் உச்சமானதற்கான பலனைத் தன் தசா/புத்திகளில் ஜாதகனுக்கு அவர் தருவார். அதுபோல உச்சமான மற்ற கிரகங்களும் தரும். கவலை எதற்கு?

2. My doubt is when graham has parivarthanai yogam only in amsam that is 3 and 11th graham that is sevvai in 3rd house and suriyan in 11th house and 4th and 7th graham that is guru in 4th house and bhutan in sevanth house in amsam for muthunam lagnam is it has power sir and will they do good things in their dasas.Kindly clear my doubts.
Best Regards,
R.Senthilkumar.

அம்சம் என்றால் என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். Navamsam is the magnified version of a Rasi Chart பரிவர்த்தனை பெற்றதற்கான பலன்கள் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்திகளில் நிச்சயம் கிடைக்கும்!
---------------------------------------------------------------------
email.No.87
சரவண குமார்
Dear Sir,

1. I read in our lessons if Mandhi present in 11th place, That is good. If Guru also Joined with Madhi in 11th, is that good for the native?(11=Kumbam)
Thanks
Saravana

இரண்டு லாட்டரிகள் ஒரே சமயத்தில் அடித்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். 11ஆம் வீடு கும்பம் என்றால் லக்கினம் மேஷம்.
மேஷத்திற்கு குரு பாக்கியாதிபதி. அவர் 11ல் (லாபத்தில்) அமர்வது நல்லதுதான்!
------------------------------------------------------
email.No.88
ரவிச்சந்திரன்

Respected Sir,

I humbly request u to clarify one of my doubt.
Both Bride and Bridegroom are affected by Kala Sharpa Dhosa in their own
horoscope each and finished that period as per Lagna Astawarga paral.(Age 27
bride and 31 bride groom) before marriage. In Both horoscope, Ragu is in 5th
house. Can both do marry or not?
will ragu not affect puthra dhosa when kala sarpa dhosa period completed?
I am awaiting for ur precious answer.

இருவருக்கும் ஐந்தில் ராகு இருப்பதால், நட்சத்திரங்களை வைத்து
மகேந்திரப் பொருத்தம் உள்ளதா என்று பாருங்கள். அதோடு இருவருக்கும், ஐந்தாம் வீடு, அதன் அதிபதி இருக்கும் வீடு, காரகன் குரு இருக்கும் வீடு
ஆகிய வீடுகளில் அஷ்டகவர்க்கப்பரல்கள் 28ற்குமேல் இருக்கிறதா
என்றும் பாருங்கள்
------------------------------------------------------------------
email.No.89
சந்திரசேகரன் கருணாகரன்

Respected sir,

I have one doubt, For kumba lagnam simma rasi, if Bhudhan is in kanni with suriyan.
But bhudhan is in vakram and vargothamam, If it is so what will be effect for the person in studies and carrier development. waiting for your positive reply
chandrasekarn

கல்விக்குப் பார்க்க வேண்டிய இடம் 4ஆம் வீடு. 4ஆம் வீட்டின் வலிமை,
அதன் அஷ்டகவர்க்கப்பரல்கள், அதன் அதிபதியின் வலிமை, அந்த வீடு
பெறும் பார்வைகள், அதன் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள், அம்சத்தில் அவருடைய நிலைமை, அஷ்டகவர்க்கத்தில் அவருடைய சுய வர்க்கப்பரல்கள் என்பதோடு, வித்யா காரகன் புதனையும் பார்க்க வேண்டும். புதன் எட்டில் இருந்தாலும், உச்சமாக இருப்பதுடன், வர்கோத்தமும் பெற்றிருக்கிறார். புதன் வக்கிரம் அடைந்ததை மட்டும் பார்த்திருக்கிறீர்கள். அவருடைய சுயவர்க்கப் பரல்களையும் பாருங்கள். சும்மா அலசினால், போதாது. நன்றாகக் கல்லில் அடித்துத் துவைத்து அலச வேண்டும்.
அடித்துத் துவைத்து அலசுவது எப்படி என்று முன்பே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். முதலில் பழைய பாடங்களை நன்றாகப் படியுங்கள்.
--------------------------------------------------------
email.No.90
R.ஹரிகரன்

ஐயா,
அய்யா லக்னத்தில் மாந்தி உடன் சந்திரன் உள்ளது. இதன் பலன் என்ன தயவு செய்து விளக்கவும்.

என்னுடன் என் மாமா இருக்கிறார். என்ன நடக்கும் சொல்லுங்கள் என்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி. மாமா என்றால் தாய் மாமாவா. பெண்ணைக் கொடுத்தவகையில் மாமாவா அல்லது வேறு வகையில் மாமாவா?
உங்களுக்கும் அவருக்கும் எந்த விதத்தில் உறவு? ஏதாவது கொடுக்கல் வாங்கள் உள்ளதா? உங்களின் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்? உங்களின் தகுதி என்ன? என்று பல விஷயங்கள் தெரிய வேண்டாமா?
தெரியாமல் எதைச் சொல்வது?

லக்கினம் என்று எழுதினீர்களே? என்ன லக்கினம்? லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? சந்திரன் உச்சமான நிலையில் உள்ளாரா? அல்லது நீசமாகிப் படுத்திருக்கிறா? என்பதை எல்லாம் சொன்னீர்களா? சொல்ல வேண்டாமா?

பொதுப்பலனாகச் சொன்னால், சந்திரன் மனகாரகன் (authority for mind) அவருடன், தீய கிரகங்கள் ஒன்றாக இருப்பது நல்லதல்ல! மன உளைச்சல் இருக்கும். எந்த அளவு அந்த உளைச்சல் இருக்கும் என்பது ஜாதகத்தின்
மற்ற அம்சங்களை வைத்து மாறுபடும்.

நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்யும் முன்பு, வழக்கு
சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் (supporting documents) எல்லாம் சரியாக
உள்ளதா என்று பார்க்காமல் இருப்போமா? அதுபோல ஒரு
கேள்வியைக் கேட்குமுன்பு, அது சம்பந்தப்பட்ட விஷயங்களைச்
சொல்லிக் கேள்வியைக் கேட்பதுதான் முறையான செயல் ஆகும்!
புரிகிறதா நண்பரே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!



4.6.12

Astrology அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 21

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்தொன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.82
R.விஜய். ஈரோடு

ஐயா கேள்வி பதில் பதிவிற்கு நன்றி..
ஷட் பலனின்படி புதன் பலஹீனமாக உள்ளது.. புதனின் அருளை பெற என்ன வழிகள்? புதனுகென்று சிறப்பு வழிபாடு ஏதேனும் உள்ளதா?
நன்றி,
vijay,Erode.

புதன் என்று இல்லை, எந்தக் கிரகம் வலிமை இழந்து இருந்தாலும், நன்மைபெற கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.
அதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, திருஞானசம்பந்த சுவாமிகள் அருளினார். அந்தப் பாடலுக்கான சுட்டி (Link) இங்கே உள்ளது
---------------------------------------------------------------------
email.No.83
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

1.கணவன்,மனைவி பிரிந்து வாழும் காலத்தையும் திரும்ப சேர்ந்து வாழும் காலத்தையும் எவ்வாறு கண்டறிவது?

இருவரின் ஜாதகத்திலும் இரண்டாம் வீட்டில் (அதாவது குடும்ப ஸ்தானத்தில்) தீய கிரகங்கள் டென்ட் அடித்து அமர்ந்திருந்தால், அந்த கிரகத்தின் தசா/புத்தியில், வேலை காரணமாக அல்லது மன உளைச்சல் காரணமாக
ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க நேரிடும். அல்லது ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும், அந்நியோன்யம் அல்லது பேச்சு வார்த்தை இல்லாமலிருக்க நேரிடும்.

2.தசாநாதன்/புத்திநாதன் ராகு அல்லது கேது ஆக இருந்தால் நல்ல தசை புத்தியை எவ்வாறு அட்டவணை இல்லாமல் சுலபமாக கண்டறிவது?

குழப்புகிறீர்களே சுவாமி! தசாநாதன்/புத்திநாதன் ராகு அல்லது கேது என்று சொல்லிவிட்டு, நல்ல தசை என்று எதைக் கேட்கிறீர்கள்? சுலபமாகக் கண்டறிவதற்கு ஒருவழிதான் உள்ளது. உள்ளூரில் நல்ல ஜோதிடராகப்
பார்த்துக் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்
--------------------------------------------------------
email.No.84
அருள் முருகன்

Sir

Generally speaking for a person with dhanus lagna having guru and mandhi in lagnam, sani in 11'th house, will the person be egoistic, get angry for silly reasons, expect lots of respect(than normal human being) eventhough he may be a very honest, kind and principled person due to sani's aspect(paarvai) on lagnam ?
with regards,
Arul Murugan

சனி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. லக்கினத்தில் மாந்தி இருந்தாலே குணக் கேட்டைக் கொடுப்பான்.
------------------------------------------------------------------
email.No.85
சு.தேவராஜன்

ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.
எனக்கு ஒரு ஐயம்.

1. எனது நண்பன் ஜாதகத்தில் திருக்கணித முறைப்படி ஏழாம் வீட்டு அதிபதி செவ்வாய்.வாக்கிய முறைப்படி ஏழாம் வீட்டு அதிபதி குரு.இவர்கள் இருவரும் ராகுவுடன் சேர்ந்து சிம்ம வீட்டில் இருகின்றார்கள்.சிம்ம வீட்டை கேது பார்க்கிறான் . மகரம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறான். இந்த ஜாதகருக்கு திருமணம் நடைபெறுமா?.மனைவி எப்படி அமையும். அவர் மீன ராசி. எனக்கு விளக்கம் கூறுங்கள் ஐயா.
உங்கள் அன்பு மாணவன்
சு.தேவராஜன்

”இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளையும் இடது, வலது என்று பூட்டாமல், ஒரு பக்கமாகவே கட்டியிருக்கிறார்கள். இரண்டும் சம வலிமையுள்ள மாடுகள் அல்ல. இரண்டில் ஒன்று மாடு, மற்றொன்று
கன்றுக்குட்டி. வண்டியில் உள்ள இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரத்திற்கு அச்சாணி இல்லை. மாட்டிற்குத் தீவனம் வைத்து இரண்டு நாட்களாகிறது. கன்றுக்குட்டியின் பசியளவு தெரியவில்லை. வண்டியோட்டி புது ரெக்ரூட். வண்டியில் அமரும் இடமெல்லாம் ஆட்டம் கண்டதால் கயிறுபோட்டுக் கட்டப்பட்டுள்ளது. பயணத்தின் தூரம் 100 கிலோ மீட்டர். பயணம் எப்படி இருக்கும்? எப்போது ஊருக்குப் போய்ச் சேருவோம்?” என்று கேட்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி.

திருமணத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள முறைப்படி ஜாதகத்தை அலச வேண்டும். அதற்கு முழு ஜாதகம் வேண்டும். அல்லது முழுப் பிறப்பு விவரங்கள் வேண்டும்.

ஜாதகன் 32 வயதைத் தாண்டியவன் என்றால், ஏன் அதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் அவன் தகுதியும் தெரிய வேண்டும் (அதையும் ஜாதகத்தில் அலசலாமே என்றால், ஜாதகத்தின் 12 வீடுகளையும்
அலச வேண்டும். அதற்கு ஜோதிடருக்கு நேரம் இருக்காது. அதனால், அதற்கு உரிய கதைச் சுருக்கத்தை நாம்தான் அவரிடம் கொடுக்க வேண்டும்)

அஜீத் போன்ற தோற்றத்தையும், அண்ணா நகரில் பெரிய பங்களாவையும், முதுகலைப் பட்டத்தையும், மாதம் இரண்டு லட்ச ரூபாய் வருமானத்தையும் உடைய ஜாதகன், அனுஷ்கா சர்மா போன்ற பெண்ணைத் தேடி மணந்து
கொள்ளலாம். தி.நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் இளைஞன், தன் தகுதிக்குக் காந்திமதி போன்ற பெண்ணைத்தான் தேடவேண்டும். எல்லா அம்சமும் பொருந்திய மனைவி கிடைக்க ஜாதகனுக்குத் தகுதி வேண்டாமா?.

லக்கினத்தை விட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்களும், ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரனின் சுயவர்க்கப்பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால், விரும்பியபடி மனைவி அமைவாள். அது மூன்றும் இல்லாவிட்டால் கிடைக்கிற பெண்ண மணந்து கொண்டு, மனதையும் தேற்றிக் கொண்டு, வருகிறவளுக்கு அல்லது கிடைக்கிறவளுக்குத் தகுதியான கணவனாக நாம்தான் இருக்கவேண்டும்! புரிகிறதா நண்பரே?
--------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!


31.5.12

Astrology எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?


அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எங்கே முடியும் யாரறிவார்!
-- கவியரசர் கண்ணதாசன்!
============================================
Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?

Doubts: கேள்வி பதில் பகுதி 20

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபது!

Question &  answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.81

அருள் முருகன்,
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்தில்
ஜோதிடம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்
(ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு, என்னை விரிவாகப் பதில் எழுத வைத்தமைக்கு, அவருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!)

கேள்வி:
Sir, why so many conflicts and changes in your opinion within two years?
In the beggining stages of lessons, you told that thirukanitha panchanga is the right one by citing an example of horoscope of a child born in chennai. Later on you said to cast horoscopes by both the methods, and take vakiya panchanga if the lagna changes or else take thirukanitha. To my surprise in an answer given three days ago, you have told that for casting horoscopes vaakiya is only right one, thirukanitha is suitable only for mathematical calculations, why so many contradictions? As I am going to seriously pursue diploma course offered by Sastra University, Tanjore in Astrology I am really confused and surprised by the statements. My intention is not to blame you or find fault. But I tell openly what I feel, as in my horoscope Guru is in dhanus lagna. ( 15.07.1984, 5:20 pm, madurai).

நீங்கள் சொல்வது உண்மை. துவக்க காலங்களில், வகுப்பறையில், மாணவக் கண்மணிகளுக்கு, திருக்கணிதத்தைப் பயன்படுத்த அறிவுரை சொல்லியிருக்கிறேன். பிறகு, மாணவர்கள் எண்ணிக்கை
அதிகமாகி, உள்ளே நுழைந்தவர்களில் பலபேர்கள், தங்கள் வீடுகளில்
தங்கள் பெற்றோர்கள் எழுதிவைத்திருக்கும் ஜாதகத்திற்கும்,
கணினியில் கணிக்கும் ஜாதகத்திற்கும் லக்கினம் வித்தியாசமாக
இருக்கிறதே என்று கூறிய போது, நிலைமையை உணர்ந்தேன்.

அதாவது 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக எழுதப்பெற்ற ஜாதகங்கள் அனைத்தும் பொதுவாக வாக்கியமுறைப்படிதான் எழுதப்பெற்றிருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள் தங்களுக்கு வழிவழியாக வந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துக் கணித்துத்தான் எழுதியிருப்பார்கள். இன்றும் எழுதுவார்கள்.
அதனால் கணினியில் கணிக்கும்போது சிலருக்கு (எல்லோருக்கும் அல்ல) லக்கினம் வித்தியாசப்படும்

யார் அந்த சிலர்?

ஒரு லக்கினத்திற்கு 30 பாகைகள் - காலம் சுமார் 120 நிமிடங்கள் - 2.25 நட்சத்திரங்கள் - 9 நட்சத்திரப்பாகைகள்.

லக்கினத்தின் கடைசி நட்சத்திரப்பாகையின் பின் பகுதியில், அதாவது அந்த லக்கினத்தின் முடிவில் பிறக்கும் ஜாதகக் காரர்களுக்கு, லக்கினம் மாறிவிடும். திருக்கணிதத்தில் கடக லக்கினம் என்பது, வாக்கியத்தில் சிம்ம லக்கினம் என்று மாறிக்காட்சியளிக்கும்.

அதற்குக் காரணம் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் உள்ள பாகை வித்தியாசம் 1 பாகை 57 விநாடிகள். மணியில் சொல்வதென்றால் 6 நிமிடமும் 28 விநாடிகளும் ஆகும். நட்சத்திரத்தின் அளவு 13.3 பாகைகள் அதை 4ஆல் வகுத்தால் ஒரு பாகையின் அளவு 3.33 பாகைகள். மணியில் சொன்னால் 120 நிமிடங்கள் வகுத்தல் 9 பாதங்கள் = 13.33 நிமிடங்கள்.

அதனால் கடைசிப் பாதத்தின் பின் பகுதியில் (அதாவது காலசந்தியில்) பிறந்த ஜாதகனுக்கு, இரண்டு முறைகளிலும் கணித்துப் பார்த்தால் மேலே கூறியுள்ளபடி லக்கினம் மாறியிருக்கும். இது எல்லாக் கால சந்திப் பிறப்புக்களுக்கும் உள்ள பிரச்சினை!

அதற்கு என்ன தீர்வு?

காலசந்திப்புப் பிறப்புக்களுக்கு, இரண்டு லக்கினங்களின் குணங்களும் இருக்கும். கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள மக்கள் இரண்டு மாநில மொழிகளையும் சரளமாகப் பேசுவார்கள். இரண்டு மாநிலக் கலாச்சாரங்களும் அவர்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்.

அதனால் காலசந்திப்பில் பிறந்தவர்கள், அந்த இரண்டில் எந்த முறையை வேண்டுமென்றாலும் பின்பற்றலாம். பெரிய வித்தியாசம் இருக்காது.
-------------------------------------------------------------------
சரி, எந்தமுறை சரியானது?

அது பற்றி பெரிய யுத்தம் நடத்தும் அளவிற்கு இரண்டு முறைகளுக்குமே ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

முதலில் திருக்கணிதத்திற்கும் (Lahiri Ayanamsa), வாக்கியத்திற்கும் (Raman's Ayanamsa) உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்

Lahiri Ayanamsa.its value is 23 degrees, 51 minutes, 10 seconds.
Raman's Ayanamsa its value is 22 degrees, 24 minutes, 44 seconds.
Diffrence 1 degree, 27 minutes

இந்த வித்தியாசத்தின் காரணமாக நட்சத்திரத்தின் ஒரு பாதத்தில் பதிப்பாகம் வித்தியாசம் இருக்கும். ஒரு ராசியில் உள்ள ஒன்பது பாதங்களில் கடைசி பாதத்தில் பிறந்த ஜாதகனின் நட்சத்திரப்பாதம் (உதாரணத்திற்கு) லஹிரியில் சிம்ம லக்கினம் (உத்திரம் ஒன்றாம் பாதம்) என்றும், ராமன் முறையில் கன்னி லக்கினம் (உத்திரம் 2ம் பாதமாகவும்) என்றும் இருக்கும்.

ஜாதகன் குழம்பிப்போவான். தான் சிம்ம லக்கின ஜாதகனா? அல்லது கன்னி லக்கின ஜாதகனா என்று குழம்பிப்போவான். கால சந்திப்பில் (அதாவது லக்கின சந்திப்பில்) பிறந்த ஜாதகர்களுக்கு இந்தக் குழப்பம் இருக்கும்.

அதேபோல ராசி சந்திப்பில் உள்ள, புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் இடம் மாறி (ராசி மாறி) உட்கார்ந்து நம் கழுத்தை அறுக்கும்!

என்னுடைய ஜாதகத்தில் அந்தக் குழப்பம் உண்டு. நான் காலசந்திப்பில் பிறந்தவன். லஹிரி (திருக்கணித) முறையில் என்னுடைய லக்கினம் கடகம் என்று வரும். வாக்கிய முறையில் (ராமன் அயனாம்சப்படி) சிம்மம் என்று வரும்.

என் அன்னைவழிப் பாட்டனார், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்னும் பிரபல ஜோதிடரிடம், எங்கள் ஜாதகத்தை எல்லாம் கணித்து எழுதிவைத்துள்ளார். அதில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு பெங்களூர் வெங்கட்ராமன் (அவர்தான் இந்த ராமன் அயனாம்சத்தின் நந்தை என்று பகழப்படுபவர். இந்தியாவின் முதல் நிலை ஜோதிடராகத் திகழ்ந்தவர்) அவர்களுக்கு என்னுடைய பிறப்பு விவரங்களை அனுப்பி ஜாதகத்தை எழுதி வாங்கினேன்.(பணம் அனுப்பித்தான் சுவாமி)

அதுவும் என்னுடைய பாட்டனார் எழுதி வைத்துள்ள ஜாதகமும் (மிகத் துள்ளியமாகச்) சரியாக இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அவர் இந்தியாவின் புராதன ஜோதிட முறையான வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கிறார் என்று! அதனால் முழு நம்பிக்கையுடன் நானும் அதைத்தான் உபயோகித்து வருகிறேன். எனக்கு என்னுடைய லக்கினத்தின்படி பலன்களும் சரியாக உள்ளன! (அதானால் அந்த நம்பிக்கை பலமடங்கு கூடிவிட்டது)

என்னைப் பொறுத்தவரை, அவர்தான் அற்புதமான ஜோதிட ஞானம் உடைவராகத் திகழ்ந்தவர். விற்பன்னர். ஜோதிடத்தின் காரகராகப் போற்றப்பெற்றவர் (authority of vedic astrology). எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை ஜோதிடர்களும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கின்றார்கள்.

இந்தக் கணினியில் ஜோதிடம் கணிக்கும் முறைகள் எல்லாம் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நமது பிரதேசத்திற்குள் அடியெடுத்து வைத்தது.

ஆகவே அதற்கு முன்பாகப் (அதாவது 1990ற்கு முன்பாகப்) பிறந்தவர்கள் அனைவருடைய ஜாதகங்களும் வாக்கிய முறையிலேயே கணிக்கப் பெற்றதாக இருக்கும்.

கணினி ஜாதகத்தில் உள்ள option தெரியாமல், திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, பல இளைஞர்கள் என்னிடம் லக்கினம் மற்றும் கிரக அமைப்புக்கள், தங்கள் பெற்றோர்கள் கணித்து அல்லது எழுதி வைத்துள்ளதுபோல இல்லையே எனும்போது, நான் அவர்களுக்கு, உங்கள் பெற்றோர் எழுதிவைத்துள்ளதையே உபயோகியுங்கள் என்று சொல்வேன்.

ஆனால், தற்சமயம் உள்ள கணினி மென்பொருட்களில், வாக்கிய முறைகளிலும் கணிக்கும் வசதி வந்துவிட்டதால், அனைவருக்கும் அதன்படியே கணிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

வாக்கிய முறைப் பஞ்சாங்கம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. முனிவர்களால் உருவாக்கப்பெற்றது. அதை நீங்கள் அனைவரும் நம்பலாம். திருக்கணிதத்தை மறந்துவிட்டு, நீங்கள் அனைவரும், வாக்கிய முறையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்து/எழுதி வைத்துக் கொள்வது நல்லது!

இந்த இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் ஆறரை நிமிடங்கள் மட்டுமே எனும்போதும், நமது வீடுகளில் அந்தக் காலத்தில் இருந்த கடிகாரங்களை நம்பி அவர்கள் பிறந்த நேரத்தைக் குறித்துவைத்தார்கள் - அது 5 நிமிடங்கள் முன் பின்னாக நேரத்தைக் காட்டவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லாததாலும், நான் அலட்டிக்கொள்ளாமல், இரண்டு முறைகளுக்குமே கொடிகாட்டி வருகிறேன்.

ஆகவே பழைய பிறப்புக்களுக்கு, அவரவர் விருப்பப்படி எதை வேண்டு மென்றாலும் உபயோகியுங்கள். சராசரியாக 9 பேர்களில் ஒருவர்தான் காலசந்திப்பில் பிறந்திருப்பார். அவருக்கு மட்டும்
இரண்டு மனைவிகள். அதாவது இரண்டு லக்கினங்கள்:-))))))
-----------------------------------------------------------
சில இடங்களில் வேஷ்டியுடன் செல்வது உபயோகமாக இருக்கும். சில இடங்களில் கால்சட்டையுடன் (pant)செல்வது உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒரு சமயம் வேஷ்டி அணிந்து கொள்கிறீர்கள், ஒரு சமயம் கால் சட்டை அணிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? ஒரே வரியில், என் வசதிக்காக அணிந்து கொள்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். தேவகோட்டையில் வேஷ்டிதான் செளகரியமான ஆடை. கோவையில் கால்சட்டைதான் செளகரியமான ஆடை.

இந்த இரட்டைமுறை கணிக்கும் வசதி ஆரம்பகால மென்பொருட்களில் இல்லாததால், நான் கணினி ஜாதகங்களுக்கு திருக்கணிதத்தை சிபாரிசு செய்தேன். இப்போது வந்துவிட்டதால், குழப்பம் இல்லாமல் இருக்க வாக்கியமுறையையைச் சிபாரிசு செய்கிறேன்.

விளக்கம் போதுமா அன்பரே?
----------------------------------------------------------------------
உபரித் தகவல்கள்:

கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. நமது நாட்டிற்கு முற்காலத்தில் வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாகப் பரவியது.

நமது ஜோதிடம் வேதகாலத்தில் உருவானது. அதை Indian Vedic Astrology என்பார்கள். நமது ஜோதிடமுறை சந்திரனையும், அதன் சுற்றுப்பாதையில் உள்ள நட்சத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. நமது முறைக்கு Sidereal astrology என்று பெயர்.

மேலை நாட்டவர்களின் ஜோதிடம் சூரியனின் எழுச்சியை அடைப்படையாகக் கொண்டது. அதை அவர்கள் Sun Signs என்பார்கள். அவர்களுடைய முறைக்கு Tropical astrology என்று பெயர்.

The difference between the Tropical ( Western ) & The Sidereal ( Indian ) Zodiacs is round about 23 degrees this year. Sidereal Astrology is based on the immovable Zodiac- the Sidereal Zodiac - and Western Tropical Astrology is based on the Tropical Zodiac which is movable.

Jyotish (Sanskrit meaning “Science of Light”), is based on the Sidereal, or Nirayana, zodiac, which is fixed in relation to the stars, as opposed to the symbolic Tropical, or Sayana, zodiac, which is based on the Vernal, or Spring, Equinox. The difference between the two zodiacs lies in the ayanamsa, the difference in degrees and minutes between 0° Aries in the sidereal zodiac, and the Vernal Equinox. Since the earth's rotational axis moves slowly in a circular, or “precessional,” motion, the Vernal Equinox, the point where the Sun crosses the celestial equator each year, moving from south declination to north declination, never quite returns to its starting place.
---------------------------------------------------------------------------------------------

Unlike Western astrology that is based on the Tropical zodiac, the Vedic system of astrology (jyotish) employs the Sidereal (or true) position of the planets. The difference between the two, due to the precession of equinox, is called the "Ayanamsa".

However the apparent position of the planets (including Sun) in relation to the constellations is subject to this precession of the equinox which, basically, is the earth's slight backward movement through the constellations (aprox. 50.25 seconds per year) as it wobbles on it's axis.

There are several different Ayanamsa in use today but the one most widely used by traditional astrologers is the Lahiri ayanamsa which is sanctioned by the Indian government. This puts the degree of precession for (Oct) 2002 at approximately 23:53:26.

இந்த லஹிரி அயனாம்சம் என்பதைத்தான் நாம் திருக்கணிதம் என்கிறோம். கணினிகளில் இதன் முறைப்படி கணிப்பதற்கு option கொடுக்கப்பட்டிருக்கும். வாக்கியம் என்பது இதற்கெல்லாம் முற்பட்டது. காலம் காலமாக நாம் பாவிப்பது (உபயோகிப்பது)
---------------------------------------------------------------------------------
URL for ayanamsa calculation
---------------------------------------------------------------------
கணினி மென் பொருட்களில் இரண்டு முறைகளுக்கும் உள்ள வசதியைக் (option) காட்டும் படங்கள் கீழே உள்ளன. படஙகளின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்!


1. லஹரி முறை (அதாவது திருக்கணித முறை)

2. ராமன் அயனாம்ச முறை (வாக்கிய முறை)

3. அயனாம்சத்தைக் கண்க்கிட உதவும் தளம்

4. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி மற்றும் வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் கிரக பாதாச்சாரங்கள் (லக்கினத்தைக் கவனியுங்கள்) இரண்டு முறைகளுக்கும் உள்ள , கிரக பாகைகளைக் கவனியுங்கள்

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------
இன்றைய பொன்மொழி:

Failure seldom stops you, What stops you is the fear of failure.
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!