மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.11.19

Astrology: Quiz: புதிர்: நான் பேச நினைப்பதை எல்லாம் கோள்கள் பேச வேண்டும்!!!!


Astrology: Quiz: புதிர்: நான் பேச நினைப்பதை எல்லாம் கோள்கள் 
பேச வேண்டும்!!!!

ஒரு இளைஞனின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோணம் நட்சத்திரக்காரர். லக்கினாதிபதி புதன் எட்டில் உள்ளார். என்னுடைய ஜாதகம் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். மொத்தத்தில் நான் அதிஷ்டமில்லாதவன் (unlucky) என்று அவரே சொல்லிக்கொண்டிருப்பார். இளம் வயதில் அவர் வாழ்க்கையில் நடந்தவற்றை வைத்துப் பார்க்கும்போது அப்படித்தான் இருந்தது.

ஏன் இந்த நிலைமை? நல்லதும் கெட்டதும் கலந்ததுதானே வாழ்க்கை! அவருக்கு எப்போது நல்ல காலம்”

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 1-12-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.11.19

நீங்களும், நானும், நமது கஷ்டங்களும்!!!!


நீங்களும், நானும், நமது கஷ்டங்களும்!!!!

*கடும் கஷ்டம் அனுபவிக்கிறீர்களா? கடவுள் உங்களை கை விடமாட்டார்.!!*

நம்மில் பலருக்கு, மனிதில் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். ‘நமக்கு மட்டும், கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறான். அடுத்தவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர். இதே போன்ற எண்ணம், மஹாபாரத்தில், பாண்டவர்களுக்கும் ஏற்பட்டது.

குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. பிதாமகர் பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்திருந்தார். தை மாத ரத சப்தமி நாளில் இறப்பதற்காக காத்திருந்தார். ஒருநாள், தருமன் உட்பட பாண்டவர்கள், பீஷ்மரை சந்தித்தனர்.
நலம் விசாரித்த பீஷ்மர், ‘உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டதா' என, கேட்டார்.

இதற்கு தருமன் சிரித்தான். ‘தாத்தா! நாங்கள் தருமத்தின் பாதையில் தானே நின்றோம். எங்களுக்கு உள்ள பங்கை  தரமறுத்து, துரியோதனன் துன்புறுத்தினான். தருமம் வெல்ல, நாங்கள் அடைந்த கஷ்டங்கள், துயரங்கள் உங்களுக்கு தெரியாதா? அவ்வளவு கஷ்டங்கள் அடைய, நாங்கள் செய்த தவறு என்ன. தவறு செய்த துரியோதனன், கடைசி வரையில் மகிழ்ச்சியாக தானே இருந்தான்’ என, கேட்டான் தருமன்.

மற்ற நான்கு பேரும், ‘ஆமாம் தாத்தா, நல்ல வழியில் நடந்தால், கஷ்டங்கள் அனுபவிக்கதான் வேண்டுமா‘ என, கேட்டனர். பீஷ்மர் சிரித்துவிட்டு, பதில் அளித்தார்.

'பேரக்குழந்தைகளே! நீங்கள் வாழ்வில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்துவிட்டு தான், இன்று வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை நான் மறுக்கவில்லை. ஆனால், இவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும், நீங்கள் நிம்மதியை இழக்கவில்லை. அதர்ம பாதையில் செல்லவில்லை. கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் மகிழ்ச்சியை இழந்தீர்களா?

13 ஆண்டு வனவாசம் இருந்த போது கூட, நீங்கள் மகிழ்ச்சியாக தான் இருந்தீர்கள். ஆனால், துரியோதனன் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. ஆனால், அவன் நிம்மதியாக இருந்தானா?

எந்நேரமும் உங்களை பற்றியே நினைத்துக் கொண்டு, உள்ளூர பயந்து கொண்டிருந்தான். உங்களுக்கு தீமை செய்வதில் தான், அவனது முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தன.துரியோதனனால், உங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போதேல்லாம், உங்களை கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றினான்.

நல்ல எண்ணங்களுடன் நீங்கள் இருந்ததால், உங்கள் பக்கம் கடைசி வரை, இறைவன் இருந்தான். ஆனால், துரியோதனன் பக்கம் அவன் ஒரு போதும் இல்லை. நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பது, அவர்களின் திறமையை வெளிப்படுத்ததான். பல கஷ்டங்களை அனுபவித்த போதும், நீங்கள் தருமத்தின் பாதையைவிட்டு அகலாமல் இருந்ததால், பெரும் பெயரும் புகழும் பெற்றுள்ளீர்கள்.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான், கெட்டவர்களுக்கு ஆண்டவன் அள்ளி தருவான், ஆனால், கைவிட்டுவிடுவான் என, கூறி முடித்தார் பீஷ்மர்.

உண்மைதான், ஆண்டவன் நமக்கு கஷ்டம் கொடுக்கிறான் என்றால், அவன் நம்மை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், மனதில் எந்த  சந்தேகமும் வராது. கஷ்டம் கொடுத்த இறைவனுக்கு அதிலிருந்து நம்மை காப்பாற்றவும் தெரியும்... 

*அன்புடன் திருமலை*
-------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.11.19

இவையல்லவா சிறந்த அறிவுரை!!!


இவையல்லவா சிறந்த அறிவுரை!!!

1
வாழ்க்கையில் தடுமாறி விழுந்தவனுக்கு ஆறுதல் கூறா விட்டாலும் பரவாயில்லை, அவமானப் படுத்தாதீர்கள்.

சூழ்நிலை உங்களை பதற்றப் பட வைக்கிறதா, இல்லை சூழ்நிலையையும் பதற்றப் படாமல் கையாளுகின்றீர்களா என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர் யார். ஒரு கட்டம் அப்படி என்றால் மறுகட்டம் இப்படி. ஏற்றம் இறைவன் பரிசு. இறக்கம் கர்ம வினைக்கு தீர்வு.

புத்திசாலித் தனமாக பேசுபவர்கள் குறைவு. புத்திசாலி என்று நினைத்து கொண்டு பேசுபவர்கள் தான் அதிகம்.

ஜால்ரா அடிப்பவருக்கு உடனடி மரியாதை கிடைக்கும் ஆனால் நிலைக்காது. தகுதி திறமை உள்ளவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் குறையாது.
--------------------------------------------------------------------------
2
"வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றி உங்கள் குடும்பமும், நண்பர்களும் உங்களை நேசிப்பது தான்" என்கிறார் உலகப் பணக்காரர் வாரன் பஃப்பட்.

"பலர் ஏகப்ட்ட பணம் சம்பாதித்து மிகப் பெரிய கட்டிடங்கள், தொழில்களை அமைக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒருவரும் விரும்புவது கிடையாது என் கையில் அவை அனைத்தும் வீண் தான்.

அன்பு மட்டும் தான் உலகில் விலைக்கு வாங்க முடியாத பொருள். எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்க முடியும். அன்பை வாங்க முடியாது. அன்பை அடைய நீங்கள் அன்பானவராக இருக்க வேண்டியது அவசியம். அதிகமாக அன்பை கொடுக்க, கொடுக்க அதிகமாக அது திரும்ப கிடைக்கும். அதிலும் உங்கள் குடும்பம், நண்பர்களின் அன்பை எத்தனைக்கு எத்தனை அதிகமாக அடைகிறீர்களோ அத்தனைக்கு அத்தனை உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்"

தனது சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ள தகவல் இது..
-----------------------------------------------------------------------
3
திரும்பத் திரும்ப செய்வது தான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டு விட்டு ஓடுவது வெற்றிக்கு வழியாகாது.

யார் மீதோ உள்ள கோபத்தை யார் மீதோ காட்டுவது தான் மனித இயல்பு. அப்படிக் கோபத்தை காட்டியும் நம்முடன் இருப்பவர்கள் நம் உறவினர்கள் மட்டும் தான்.

எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் உலகத்தை தான் நினைப்பது போல மாற்ற நினைத்து நிம்மதியை இழக்கிறார்கள்.

எதையும் இலவசமாக வாங்க விரும்பாதே. அது சுயமரியாதைக்கு இழுக்கு.  முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை.

நிதானமாக சிந்தித்து செயல் படுவது, உறுதியோடு செயல் படுவது, கடுமையாக உழைப்பது என்று இருந்தால் மன நிறைவான வாழ்க்கை அமையும்.
----------------------------------------------------------------------------------
4
’ சலனப் பட்ட மனம்..''
..................................

சிறு கல்லை துாக்கி போட்டால் கண்ணாடி சிதறி விடும். அதைப் போல் *மனதில் சிறு சலனம் ஏற்பட்டால் எடுத்த செயல் தோல்வியில் தான் முடியம்..*

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோயோ இருக்கிறது.. ஆனால் ஒருவராலும் அதன் அருகில் போக முடியாது.

ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும். கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

சலனம் இல்லாத கிணற்றில். சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாகத் தெரியும்.

அதற்கு காரணம் கிணற்றில் சலனம் இல்லை. அதனால் சூரியனின் பிம்பம் மிக தெளிவாகத் தெரிகிறது. அது போலத்தான் நம் உள்ளமும்..

எந்தவித சலனம் இல்லாமல் இருந்தால் தான் நாம் எண்ணிய குறிக்கோளை எளிதில் அடையலாம்..

ஓட்டப்பந்தயம் ஒன்றில் இருவர் மட்டுமே கலந்து பங்கேற்றனர். தொடக்கத்தில் இருவரும் சமமாக ஓடினர்.

ஒரு கட்டத்தில் ஒருவன் களைப்பு அடைந்தான். ஆனால் பந்தயத்தில் தோற்பதை அவன் விரும்பவில்லை.

அதனால் மற்றவனை திசை திருப்பும் விதமாக தங்க ஆப்பிள் ஒன்றை உருட்டி விட்டான். அதை எடுக்க விரும்பிய மற்றவன் கவனம் தடுமாறியது..

இதற்கிடையில் தங்க ஆப்பிளை உருட்டி விட்டவன் வேகமாக ஓடி எளிதில் இலக்கை அடைந்தான்..

ஆம்., நண்பர்களே..,

மனித வாழ்வும் ஓட்டப்பந்தயம் போலத்தான்.. சலனத்திற்கு இடம் கொடுத்தால், நம் எதிர்கால முன்னேற்றம் தடைபடும். அதனால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது.
---------------------------------------------------------------------
5
உன் உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில் நீ இருக்காதே - உள்ளுக்குள் அழுது கொண்டு வெளியில் நீ சிரிப்பாய்.

போலி மனிதர்களை நம்பி நீ வாக்குக் கொடுக்காதே - நீ பொய்யனாக காண்பிக்க படுவாய்.

சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவர்களை நம்பாதே - உன் முடிவிலிருந்து நீயே மாறி விடுவாய்.

மற்றவர்களின் குறைகளைப் பேசுபவர்களோடு சேராதே - ஒரு நாள் இதற்கு நீயும் இரையாக்க படுவாய்.

ஏமாற்றியவர்களோடு திரும்பவும் இணைந்து கொள்ளாதே - நீ மேலும் நோகடிக்கப் படுவாய்.

சரியான முடிவு எடுக்காமல் எந்த செயலிலும் இறங்காதே - உன் வாழ்நாள் முழுதும் நீ துயரப் படுவாய்.

உனக்கு சரி என்று தோன்றினால் யாருக்காகவும் நீ பின்வாங்காதே.
-----------------------------------------------------------------------------------
6
கற்ற நல்ல விஷயத்தை வாழ்வில் பின்பற்றாவிட்டால் கல்வி கற்றது வீண் விரயம் தான்.

தன்னை நேசிக்கும் கணவன் தன் பெற்றோரையும் மதிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் விருப்பம்.

தர்மம் செய்ய பழகுங்கள். தவறு செய்ய பயப்படுங்கள். நல்லவை உங்களைத் தேடி வரும்.

தேவைப்படும் இடத்தில் பேசுங்கள். தேவையில்லாத இடத்தில் பேசி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

சுயநலம் அதிகமானால் நம்மை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி விடும். சுயநலத்துடன் பொதுநலம் சேரும் போது வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.
----------------------------------------------------------------------------
7
பிரச்சினை வந்தால் கவலைப் படாமல், பிரச்னையை சமாளிக்க மனதை பக்குவப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்த வரை பிறரிடம் உதவி கேட்பதை தவிர்த்து விடுங்கள். இல்லை என்றால் வாழ்க்கை முழுவதும் முன்னேற முடியாது.

கணவனை கேட்டு முடிவெடுக்கும் மனைவியும், மனைவியிடம் எதையும் மறைக்காத கணவரும் நல்ல குடும்பத்திற்கான முன்மாதிரி.

நம்முடைய எண்ணம் செயல் யாவும் பிறருக்கு நன்மையும் பயனும் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன தேவையோ, புரியுமோ அதை மட்டும் எடுத்து சொல்வது நல்லது. புரிந்து கொள்ள முடியாததை சொல்வதால் யாருக்கும் பயனில்லை.
--------------------------------------------------------------------------------
8
பெருமையைப் பகிர்ந்து கொள்ள பெற்றோர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மனைவி. செல்வத்தை பகிர்ந்து கொள்ள மக்கள். மனக் குழப்பம் தீர நல்ல நண்பர்கள். இவை அமைந்தால் இல்லறம் நல்லறமாகும்.

அடுத்தவருக்கு உதவ பணமோ வசதியோ அனுபவமோ கல்வியோ  அவசியமில்லை. அக்கறை இருந்தால் போதும்.

கணவன் மனைவி சண்டையில் இருவரது பெற்றோரும் விலகி இருந்தால் பிரச்சினைக்கு எளிதாக தீர்வு கிடைத்து விடும்.

வாழ்க்கையில் இல்லறம் நல்லறமாக புரிதல் அவசியம். புரிதல் இருந்தால் பிரிதல் என்றுமே வராது.

ஆண்கள் பெரும்பாலும் மனைவியை விட மற்ற பெண்கள் அழகு என்று நினைப்பார்கள். பெண்கள் பெரும்பாலும்  கணவனை விட மற்ற ஆண்கள் புத்திசாலி என்று நினைப்பார்கள்.
---------------------------------------------------------------------------------
9
ஒருவர் திறமையை ஒருவர் ஊக்குவித்து, ஒருவர் கவலையில் ஒருவர் பங்கு கொண்டு, ஒருவர் குறையை ஒருவர் பொறுத்து, ஒருவர் துன்பத்தில் ஒருவர் ஆறுதல் அளித்து, ஒருவர் முயற்சியில் ஒருவர் ஒத்துழைத்து, ஒருவர் கோபத்தில் ஒருவர் அமைதி காத்து, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே நல்ல இல்லறம்.

சந்தித்த பல ஏமாற்றங்களை எல்லோரிடமும் சொல்ல வேண்டாம். உங்கள் பலவீனத்தை தெரிந்து கொண்டு அவர்களும் ஏமாற்ற நினைப்பார்கள்.

ஒருவரின் கோபத்தை குறைக்க இன்னொருவரின் மௌனமே சிறந்த இல்லறம்.

உலகத்தில் யாரும் சந்தோசமாக இருப்பதாக சொல்லவில்லை. தானே புத்திசாலி என்று நினைப்பது போல் தானே துக்கமுள்ளவன் என்று நினைக்கிறார்கள்.

நீங்கள் முயற்சி செய்யாமல், எதுவும் உங்கள் விருப்பம் போல் தானாக நடக்காது.
----------------------------------------------------------------------------------------
10
ஆணும் பெண்ணும் எத்தனை சாதித்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும், ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம் என்ற உணர்வை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே இனிய இல்லறம்.

பணத்தை தொலைத்தாவது வாழ்வைத் தேட வேண்டும். வாழ்வைத் தொலைத்து விட்டு பணத்தை தேடக் கூடாது.

உங்கள் மனதை சரியாக அறிந்தவர்கள், உங்கள் செயலை தவறாக நினைக்க மாட்டார்கள்.

சுயமரியாதையை இழந்து பணம் சம்பாதிக்கக் கூடாது. பிறகு அந்த அவப் பெயர் நீங்காது.

சந்தோஷமோ துக்கமோ சமநிலையில் இருக்க பழகினால்,
===================================================================
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.11.19

கருப்பு எள்ளின் மகத்துவம்!!!!


கருப்பு எள்ளின் மகத்துவம்!!!!

*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா...*

எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே
இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக
அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு

தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிந்தால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..!

முக்கியமாக, எள்ளு சாப்பிடறதால புற்றநோய் வராமல்இருக்குமாம்.
அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது
அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

*முன்னோர்களின் பாதை..!*
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே
எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை  கடைபிடித்து வருகின்றோம்.

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!*
இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது
புற்றுநோயை எதிர்த்து நிற்பதே.

நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

*எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!*
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம்.

இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

*காரணம் என்ன..?*
இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம்,
வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

*தாய்லாந்தின் ஆராய்ச்சி..!*
தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள்  வெளியிட்டது. அதில் கருப்பு
எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும்,
மூளை செல்களை மறு  உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம்

'Sesamin' தான்.

*Sesamin அப்படினா என்ன..?*
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

*பெண்களுக்கு எப்படி..?*
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில்
கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..!
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது.

குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

*கருப்பா..?வெள்ளையா..?*
எந்த எள் அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில்,
கருப்பு எள் தான். எள் பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான்
மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை
விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அட, இதுக்கூடவா..?
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இரும்பு சத்து, வைட்டமின் - A & Bஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல்,
ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்..

*அழுக்குகளை வெளியேற்ற*
எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..?
தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன்
சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன்
சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.

*உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின்
ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது*.

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மைகள்.

🍀*1. *ஆரோக்கிய இதயம்*
 நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது.
எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது,
அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

*🍀2.* *நீரிழிவு*
 நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின்
சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு
வருவதைத் தடுக்கும்.

*🍀3.* *வலுவான எலும்புகள்*
 நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும்
இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

🍀*4. *செரிமான பிரச்சனை*
 மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில்
சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு,
செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

*🍀5.* *சுவாசக் கோளாறு*
 நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால்,
இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

*🍀6.* *இரத்த அழுத்தம்*
 நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது
நல்ல பலனைத் தரும்.

🍀*7. *பளிச் பற்கள்*
 தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

*🍀8.* *புற்றுநோய்*
 நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை
அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

🍀9. *அழகான சருமம்*
 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின்
நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின்
வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

🍀10. *புரோட்டீன்*
 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான்.
🍀நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு
ஒரு சிறந்த உணவுப் பொருள்.

இதனை பயன்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ்வோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே
---------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.19

அபிராமி அம்மன் சிலைக்கு கண் வடித்த கதை!!!!!அபிராமி அம்மன் சிலைக்கு கண் வடித்த கதை!!!!!

படித்ததில் நெகிழ்ந்தேன்..பகிர்ந்தேன்....

கண்கள்
🍲🍲🍲🍲
அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார், எங்கிருந்து வருகிறான், எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் வருவான் என்பதில் மட்டும் அவருக்குத் துளியும் சந்தேகமில்லை. அந்த முதிய கேரள நம்பூதிரி சொன்னது அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....".

அபிராம பட்டரின் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்தது. வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு விக்கிரகம் இன்னும் பிரதிஷ்டையாகாத கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் தொலை தூரத்திற்கு வேறு எந்த வீடும் கிடையாது. காலையில் பால்காரன் வந்து விட்டுப் போனால் வேறு யாரும் அவர் வீட்டுக்கு வருவது கிடையாது. உறவினர்களோ நண்பர்களோ இல்லாமல் தனிமையாக அவர் அந்த வீட்டில் வசித்து வந்தது செந்திலின் திட்டத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்தியது.

ஒரு புராதன அம்மன் கோயிலில் நகைகளைக் கொள்ளை அடிக்க அவன் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டான். அதை வாங்குவதற்கு வட நாட்டு மனிதர் ஒருவர் தயாராக இருந்தார். கொள்ளை அடித்தவுடன் அன்றைய தினமே நகைகளை அவர் வந்து வாங்கிக் கொண்டு போவதாக இருந்தது. ஆனால் கொள்ளையடிக்கப் போகும் கோயிலின் அருகே உள்ள பெரிய மைதானத்தில் அவனது திட்ட நாளன்றே முதலமைச்சரின் பொதுக்கூட்டம் நடக்க திடீரென்று ஏற்பாடு ஆனது. போலீஸ் நடமாட்டம் அதிகமாக அந்தப் பகுதியில் ஆரம்பிக்கும் என்பதால் அவன் தனது திட்டத்தை மூன்று நாட்கள் முன்னதாக செயல்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அந்த வட நாட்டு மனிதரோ முன்பு சொன்ன தேதிக்கு முன்னால் வர முடியாது என்று சொல்ல கொள்ளை அடித்த நகைகளுடன் மூன்று நாள் மறைந்திருக்க ஒரு இடத்தைத் தேடித் தேடிக் கடைசியாக அவன் தேர்ந்தெடுத்தது தான் அவர் வீடு. நகைகளை வெற்றிகரமாக அவன் கொள்ளையடித்து விட்டான். லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை ஒரு பழந்துணியில் கட்டிக் கொண்டு அவன் அவரது வீட்டை அடைந்த போது இரவு மணி பன்னிரண்டு. அந்த நேரத்தில் வாசற் கதவு திறந்திருந்ததும் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்ததும் அவனை திடுக்கிட வைத்தன. 'யாராவது வந்திருக்கிறார்களா?' வெளியே சிறிது நேரம் நின்று காதுகளைக் கூர்மையாக்கினான். காற்றும், வண்டுகளும் தான் சத்தமிட்டன. வீட்டுக்குள் இருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. தன் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு மெள்ள உள்ளே நுழைந்தான்.

"வாங்கோ..வாங்கோ"

அபிராம பட்டர் மிகுந்த சந்தோஷத்துடன் எழுந்து நின்று அவனை வரவேற்றார். கிட்டத்தட்ட எழுபது வயதைத் தாண்டிய அவர் தன் வயதில் பாதியைக் கூடத் தாண்டாத அவனது திடகாத்திரமான முரட்டு உருவத்தையோ கத்தியையோ பார்த்து பயக்காதது மட்டுமல்ல அவனை எதிர்பார்த்தது போலக் காத்திருந்ததும், வரவேற்றதும் அவனுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இது வரை இது போன்ற சந்தர்ப்பங்களில் அவன் எதிர்கொண்டதெல்லாம் பயம், அதிர்ச்சி, மயக்கம், உளறல், கூக்குரலிடுதல் வகையறாக்களைத் தான்.

"உட்காருங்கோ" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிர் நாற்காலியைக் கை காட்டினார்.

செந்தில் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தான். இங்கு நடந்து கொண்டிருப்பவை எதையும் அவனால் நம்ப முடியவில்லை. அபிராம பட்டரைக் கூர்ந்து பார்த்தான். அவர் அவிழ்ந்திருந்த தன் குடுமியை நிதானமாக முடிந்து கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அது ஒரு சந்தோஷமான, மனம் நிறைந்த புன்னகை.

"பெருசு நீ என்னை வேற யாரோன்னு நினைச்சுட்டே போல இருக்கு" செந்தில் கரகரத்த குரலில் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

அபிராம பட்டருக்கு அந்தக் கேரள நம்பூதிரிகள் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....". அவன் வந்த நேரமும் சரி, கத்தியோடு வந்த விதமும் சரி அவர்கள் சொன்னது போலத் தான் இருக்கிறது.

"அப்படியெல்லாம் இல்லை" என்று அமைதியாக சொன்னார்.

'கிழத்திற்குப் பைத்தியம் முற்றி விட்டது போலிருக்கிறது' என்று எண்ணிய செந்திலுக்குச் சிறிது உதறல் எடுத்தது. போலீஸைக் கூட சமாளிக்க அவன் தயார். ஆனால் பைத்தியம் என்றால் அது அடுத்து என்ன செய்யுமோ என்று அனுமானிக்க முடியாததால் ஏற்ப்படுகிற உதறல் அது. அதை வெளிக் காட்டாமல் யோசித்தான். எதிராளியை என்றுமே பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது அவனது தொழில் சூத்திரம். பயம் மட்டுமே என்றுமே மனிதனை செயல் இழக்க வைக்கிறது என்பதும் அது தனக்குப் பாதுகாப்பு என்பதும் அனுபவம் அவனுக்குக் கற்றுத் தந்த பாடம். கத்தியை அவர் முன்னுக்கு நீட்டினான். "பெருசு இது பொம்மைக் கத்தியில்ல. நான் நினைச்சா ஒரு நிமிஷத்தில உன்னைக் கொன்னுடலாம் தெரியுமா?"

அபிராம பட்டர் அதற்கும் அசரவில்லை. "நான் எப்ப சாகணும்னு பராசக்தி நான் பிறந்தப்பவே நாள் குறிச்சுருக்கா. அதுக்கு முன்னாடி நீங்க நினைச்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அந்தக் கத்தியை உள்ளே வைங்கோ. நான் என்ன உங்க கிட்ட சண்டையா போட்டேன்".

மனிதர் ஒடிசலாக இருந்தாலும் அவர் பேச்சு உறுதியாக இருந்தது. அவரை என்ன செய்வது என்றே அவனால் தீர்மானிக்க முடியவில்லை. "பெருசு உன் கிட்ட நானும் சண்டை போட வரல. நான் இங்க மூணு நாள் தங்கப் போறேன். நான் இங்க இருக்கறது வெளிய ஒருத்தனுக்கும் தெரியக் கூடாது. அது உன்னால வெளிய தெரியப்போகுதுன்னு தெரிஞ்சாலோ, நீ என் கிட்ட எடக்கு முடக்கா நடந்துகிட்டாலோ நான் உனக்கு நாள் குறிச்சுடுவேன். பராசக்தி குறிச்ச நாள் வரை நீ உசிரோட இருக்க முடியாது. புரிஞ்சுதா"

"புரிஞ்சுது. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. பயப்படாதீங்கோ. எவ்வளவு நாள் வேணும்னாலும் இருங்கோ. உங்களாலும் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு. அதுக்காகத் தான் பெளர்ணமி எப்போ வரும், நீங்க எப்போ வருவீங்கன்னு நான் ஆவலாய் காத்துகிட்டு இருந்தேன்".

அந்தக் கடைசி இரண்டு வாக்கியங்களும் அவனை திடுக்கிட வைத்தன. எரிச்சலோடு சொன்னான். "புதிர் போடாம எனக்கும் பைத்தியம் பிடிக்கறதுக்கு முன்னாடி விவரமா சொல்லுய்யா"

அபிராம பட்டர் சொல்ல ஆரம்பித்தார். பம்பாயில் கோடிக் கணக்கில் சொத்துள்ள வைர வியாபாரம் செய்யும் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தின் பூர்வீக இடமும் அந்த இடத்தில் ஒரு பராசக்தி கோயிலும் இங்கிருந்தன. தங்களது சுபிட்சத்திற்கு அந்தப் பராசக்தியின் அருள் தான் காரணம் என்று பெரிதும் நம்பிய அந்தக் குடும்பம், தடைப்படாமல் பூஜை அந்தக் கோயிலில் நடக்க அபிராம பட்டரை நியமித்திருந்தது. தனது பதினெட்டாம் வயதிலிருந்து அபிராம பட்டர் கோயிலில் பூஜை செய்து கொண்டு அருகில் இருந்த அந்த வீட்டில் வசித்து வந்தார். வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தினர் அனைவரும் வந்து பராசக்தியை தொழுது விட்டுப் போவார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பராசக்தி சிலை சேதப்பட்டுப் போனது. அதே சமயம் அந்தக் குடும்பத்தின் மூத்த தலைவருக்கு மாரடைப்பும் வரவே உடனடியாக பல லட்சம் செலவு செய்து கோயிலைப் புதிதாகக் கட்டவும் சாஸ்திரப்படி ஒரு பராசக்தி சிலை செய்யவும் ஏற்பாடு செய்தார்கள். கோயில் கட்டப்பட்டு முடிந்த போது பராசக்தி சிலையில் கண்களைத் தவிர சிற்ப வேலை எல்லாமே முடிந்திருந்தது. அந்த நிலையில் சிற்பி ஒரு சாலை விபத்தில் இறந்து போனான். இது ஒரு பெரிய அபசகுனமாகத் தோன்றவே அந்தக் குடும்பத் தலைவர் அபிராம பட்டரையும் அழைத்துக் கொண்டு கேரளா சென்று சில வேத விற்பன்னர்களான நம்பூதிரிகளையும் ஜோதிடர்களையும் கலந்தாலோசித்தார். அவர்கள் அஷ்ட மங்கலப் ப்ரஸ்னம் வைத்து ஆருடம் சொன்னார்கள். பெளர்ணமி இரவு அன்று ஒருவன் தானாகவே அபிராம பட்டரைத் தேடி வருவான் என்றும் அவனைக் கொண்டு அந்தக் கண்களைச் செதுக்கும் படியும் சொன்ன அவர்கள் சிலையைப் பிரதிஷ்டை செய்ய நாளையும் குறித்துக் கொடுத்திருந்தார்கள். அப்படிச் செய்தால் அந்தக் குடும்பத்தார்களுக்கு எல்லா தோஷங்களும் நீங்குவதோடு அந்தக் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசிக்கும் பிரசித்தியும், சக்தியும் வாய்ந்த ஸ்தலமாக மாறும் என்றும் சொன்னார்கள்.

"இந்த வீட்டுக்கு வெளியாட்கள் வந்து பல காலம் ஆயிடுச்சு. ஆனா அவங்க சொன்னது போல இந்த பெளர்ணமி ராத்திரியாப் பார்த்து நீங்க வந்திருக்கீங்கோ. அவங்க சொன்னபடியே நீங்க இங்கே இருந்து அந்தக் கண்களையும் செதுக்கித் தரணும். அந்தக் குடும்பத்துப் பெரியவர் நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தரச் சொல்லி என் கிட்டே அவர் கையெழுத்து போட்ட ப்ளாங்க் செக் கொடுத்துட்டுப் போயிருக்கார். அதில் நீங்க என்ன தொகை வேணும்னாலும் எழுதிப் பணம் எடுத்துக்கலாம். அவங்களுக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை"

கேட்டு விட்டு செந்திலே ஒரு சிலையாகத் தான் நின்றிருந்தான். கடைசியில் அரை மனதோடு சொன்னான். "நான் ஒரு திருடன். சிற்பியல்ல"

"அஷ்ட மங்கல ப்ரஸ்னம் வைத்தவர்கள் மஹா தவசிகள். சாதாரணமானவங்க அல்ல. அவங்க சொன்னது பொய்க்காது. உங்களுக்கு சிற்பக்கலை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை" அபிராம பட்டர் ஆணித்தரமாகச் சொன்னார்.

அந்த ப்ளாங்க் செக் நிறையவே ஈர்த்தாலும் செந்திலுக்கு அந்த இடமே மாந்திரிகம் நிறைந்ததாகத் தோன்றியது. எல்லாம் முன்னமே தெரிந்து வைத்திருந்த அந்தக் கேரள நம்பூதிரிகளும், அபிராம பட்டரும் அவனை அசத்தினார்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா என்கிற பிரமிப்பு தீரவில்லை. கூடவே அங்கிருந்து ஓடி விடலாம் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் அந்தத் திருட்டு நகைகளோடு இனி எங்கே போய் ஒளிவது? இன்னமும் மூன்று நாள் ஒளிந்திருக்க இது தான் பாதுகாப்பான இடம்.

"பெருசு நான் இப்ப எங்கேயிருந்து வர்றேன் தெரியுமா? ஒரு அம்மன் கோயில்ல இருந்து நகைகளைக் கொள்ளை அடிச்சுட்டு வர்றேன். என்னைப் போய் ஒரு அம்மன் சிலைக்குக் கண் வடிக்கச் சொல்றிச்ங்க. இத்தன உசந்த வேலையை எங்கிட்டத் தர்றீங்களே தமாஷா இல்ல"

"உங்களை மாதிரிக் கொள்ளை அடிச்ச ஒருத்தர் தான் ராமாயணம் எழுதினார். எல்லாம் தெய்வ சங்கல்பம். சரி சரி மணி ரெண்டாகப் போகுது. பேசாமத் தூங்குங்கோ. மீதி எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்" என்று அவர் அவனுக்குப் படுக்கையை விரித்துத் தானும் போய் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது குறட்டை சத்தம் லேசாகக் கேட்டது.

அவனுக்கு உறக்கம் வரவில்லை. 'இனி இந்த வேலையைச் செய்ய மாட்டேன்' என்று சுமார் இருபது வருடங்களுக்கு முன் அப்பாவின் எதிரில் உளியைத் தூக்கி எறிந்த நாள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அப்பா அன்று சொன்னார் "இது ஒரு நல்ல கலைடா".

"நீங்க கலையைப் பார்க்கிறீங்க. நான் இந்தக் கலை இத்தனை வருஷமா உங்களுக்குக் கொடுத்த பட்டினியைப் பார்க்கறேன்"

அதற்குப் பின் அவன் உளியை எடுத்தது பூட்டுகளை உடைக்கத் தான். இத்தனை வருடம் கழித்து இப்படியொரு சூழ்நிச்லையில் மறுபடி அவனுக்கு ப்ளாங்க் செக்குடன் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அபிராம பட்டரின் குறட்டை சத்தம் அதிகமாகியது. ஒரு கொள்ளைக்காரன் வீட்டில் இருக்கும் போது எந்த பயமும் இன்றித் தூங்கும் பட்டரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவனையும் அறியாமல் அவனுக்கு ஏனோ அந்தப் பட்டரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

மறு நாள் காலை அவன் சொன்னான் "எனக்கு நேத்துத் தூக்கமே வரல பெருசு"

"கையில கொள்ளையடிச்ச நகை அவ்வளவு இருக்கிறப்ப எப்படித் தூக்கம் வரும்"

"என்ன கிண்டலா. அது சரி. என்னை இங்க வச்சிகிட்டு எப்படிப் பெருசு நீ நிம்மதியாத் தூங்கினே"

"உண்மையைச் சொன்னா நான் ஆறு மாசம் கழிச்சு நேத்து தான் நிம்மதியாத் தூங்கினேன்" அபிராம பட்டரின் கண்களில் நீர் தழும்பியது "அந்தப் பணக்காரங்களைப் பொறுத்த வரை இந்த பராசக்தி அவங்களைச் சுபிட்சமாய் வச்சிருக்கும் ஒரு தெய்வம். ஆனா எனக்கு எல்லாமே அவள் தான். பதினெட்டு வயசுல பூஜை செய்ய ஆரம்பிச்ச எனக்கு அப்புறம் ஒரு குடும்பமோ, பணமோ, வேற சினேகிதர்களோ வேணும்னு தோணலை. தாயாய், சினேகிதியாய், குழந்தையாய்,சொத்தாய்,எல்லாமாய் எனக்கு அவள் இருந்தாள். பூஜை செய்துகிட்டு இருக்கிறப்பவே ஒரு நாள் அவள் காலடியில் உயிர் போயிடணும். அது தான் என் ஒரே ஆசை. விக்கிரகம் சேதப்பட்டப்ப என்னையே ரெண்டாப் பிளந்த மாதிரி துடிச்சேன். நேத்து உங்களைப் பார்த்த பிறகு தான் நிம்மதி.சந்தோஷம்.எல்லாம் சரியாகி நான் பழைய படி பூஜை செய்ய ஆரம்பிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு"

"ஏன் பெருசு எனக்கே அவங்க இவ்வளவு பணம் தர்றாங்களே. உனக்கு எவ்வளவு தருவாங்க"

"எவ்வளவு வேணுனாலும் தருவாங்க. பசிக்குச் சோறு, உடுக்கத் துணி, தங்க இடம் இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்கோ. அதுக்கு மேல கிடைக்கிறதெல்லாம் அதிகம் தான். அவங்க தந்தாலும் நான் வாங்கறதில்லை"

அந்தக் கிழவரின் கள்ளங்கபடமில்லாத பேச்சும் வெகுளித்தனமும் அவன் தந்தையை அவனுக்கு நினைவுபடுத்தின. அவரும் இப்படித்தான் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்தார். ஆனால் பிழைக்கத் தெரியாதவர் என்று தான் நினைக்கும் இந்தக் கிழவரின் நேற்றைய நிம்மதியான உறக்கமும் பிழைக்கத் தெரிந்த தனது உறக்கம் வராத நிலையும் ஒரு கணம் அவனுக்கு உறைத்தது. இது பற்றி நினைக்க அவன் விரும்பவில்லை. பேச்சை மாற்றினான்.

"ஏன் பெருசு இவ்வளவு சின்னவனான என்னைப் போய் எதுக்கு நீங்க, வாங்க, போங்கன்னு சொல்றே"

"என் தெய்வத்திற்கு கண்கள் தரப்போறவர் நீங்க. நீங்க எவ்வளவு சின்னவராக இருந்தாலும், எப்படிப் பட்டவரா இருந்தாலும் சரி எனக்கு கடவுள் மாதிரி தான்"

அவரது வார்த்தைகள் அவனை என்னவோ செய்தன.

"நான் சிற்ப வேலை செஞ்சு இருபது வருஷம் ஆயிடுச்சு. இப்ப எனக்கு எப்படி வரும்னு தெரியல"

"நல்லாவே வரும்.எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவர் அருகில் கோயிலில் இருந்த அந்த சிற்பத்தைக் காண்பித்தார். பழைய சிற்பி உபயோகித்த உபகரணங்களும் அங்கிருந்தன. சிலைக் கல்லையும் அந்த உபகரணங்களையும் அவன் நன்றாக ஆராய்ந்தான்.

"பெருசு, நீங்க போங்க. எனக்குக் கொஞ்சம் தனியா இருக்கணும்" அவர் போய் விட்டார்.

அந்த சிலையையே பார்த்தபடி நிறைய நேரம் செந்தில் உட்கார்ந்தான். திருடன் திரும்பவும் கலைஞனாக மாற சிறிது நேரம் தேவைப் பட்டது. தன் குருவான தந்தையை நினைத்துக் கொண்டான்.
"சிலை கல்லில் வர்றதுக்கு முன்னால் மனசில் துல்லியமாய் வரணும். அதுக்கு முன்னால் உளியைத் தொடக்கூடாது" என்று அப்பா என்றும் சொல்வார். சிலையை நிறைய நேரம் பார்த்து கண்ணை மூடினான். மனதில் பல விதமான கண்கள் வந்து வந்துப் பொருத்தமில்லாமல் மறைந்தன. கடைசியில் பேரழகுடன் இரு விழிகள் வந்து மனதில் உள்ள சிலையில் நிலைத்தன. அவனுக்குள் ஏதோ ஒரு சக்தி ஒரு துளியாக ஆரம்பித்து வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது. உளியைக் கையில் எடுத்தான். சிலை கண்கள் திறக்க ஆரம்பித்தது.

அவனுக்கே எப்படி செதுக்கி முடித்தான் என்று தெரியவில்லை. ஆனால் முடித்த பின் அவனே சொக்கிப் போனான். பராசக்தியின் கண்கள் மெள்ள மெள்ளப் பெரிதாகிக் கொண்டே போவது போலத் தோன்றியது. கடைசியில் அந்தக் கண்களைத் தவிர வேறெதையும் அவனால் காண முடியவில்லை. அண்ட சராசரங்களையே அவன் அந்தக் கண்களில் கண்டான். அந்தக் கண்களில் இருந்து கவனத்தைத் திருப்ப அவனால் முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. பார்த்தான். பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். காலம் அவனைப் பொருத்த வரை நின்று போய் விட்டது.

அபிராம பட்டர் மதியம், மாலை, இரவு என மூன்று நேரங்களில் வந்து பார்த்தது அவனுக்குத் தெரியாது. இரவில் அவர் வந்து பார்க்கும் போது இரண்டு சிலைகளைப் பார்த்தார். அந்தத் தெய்வச் சிலையும் மனிதச் சிலையும் ஒன்றை ஒன்று நேராகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. அந்த முரட்டு முகம் சிறிது சிறிதாகக் கனிய ஆரம்பித்து பேரமைதியுடன் பளிச்சிட்டது. பட்டர் பராசக்தியைப் பார்த்தார். அவரது பராசக்தி இப்போது முன்பை விட அதிகப் பேரழகுடன் ஜொலித்தாள். எல்லை இல்லாத சந்தோஷத்தில் அவர் கண்கள் அருவியாயின. அவர் சாஷ்டாங்கமாய் அவனது கால்களில் விழுந்தார்.

இந்த உலகிற்கு மறுபடியும் திரும்பிய அவன் தீயை மிதித்தவன் போலப் பின் வாங்கினான். "பெரியவரே, என்ன இது..." அவனது பேச்சும் தோரணையும் முற்றிலும் மாறி இருந்தது.

அபிராம பட்டருக்கு வார்த்தைகள் வரவில்லை. மெளனமாக அந்தச் சிலையைக் காண்பித்துக் கை கூப்பினார். பின்பு அந்தப் ப்ளாங்க் செக்கை நீட்டினார்.

அவன் வாங்கவில்லை. "நான் கண்களைச் செதுக்குனதுக்கு அவள் என் கண்களைத் திறந்துட்டா பெரியவரே. எங்களுக்குள்ள கணக்கு சரியாயிடுச்சு" புன்னகையோடு கரகரத்த குரலில் சொன்னான். "ஒரு விதத்தில் பார்த்தா வாழ்க்கையே நமக்கு அவள் தர்ற ப்ளாங்க் செக் தான், இல்லையா பெரியவரே. என்ன வேணும்னாலும் எழுதி நிரப்பிக்கோன்னு குடுத்துடறா. நாம் தான் எதையோ எழுதி எப்படியோ நிரப்பிக் கெடுத்துடறோம்" அவன் குரலில் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு வருத்தப் படுவது போல் தெரிந்தது. அதற்குப் பின் பேசும் மனநிலையில் இருவருமே இல்லை. மனம் நிறைந்திருக்கையில் வார்த்தைகள் அனாவசியமாகவும், மெளனமே இயல்பாகவும் இருவருக்கும் தோன்றியது. சாப்பிட்டு விட்டுத் தூங்கினார்கள்.

நடு இரவில் அபிராம பட்டர் விழித்துப் பார்க்கையில் செந்திலின் படுக்கை காலியாக இருந்தது. வீடு முழுவதும் தேடி அவன் இல்லாமல் கோயிலுக்குப் போய்ப் பார்த்தார். அவன் அங்கும் இருக்கவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அவன் போய் விட்டிருந்தான். ஆனால் அவன் நேற்றுக் கொண்டு வந்திருந்த நகைகள் எல்லாமே பராசக்தியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

படித்ததில் நெகிழ்ந்தேன்..பகிர்ந்தேன்....
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.11.19

Astrology: Quiz: புதிர்: 22-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 22-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, மகம் நட்சத்திரக்காரர். 23வது வயதில் வேலைக்குச் சேர்வதற்காக அவர்  எழுதிய போட்டித் தேர்வுகள் அனைத்திலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அதாவது அவர் பாஸாக வில்லை,நொந்து போய்விட்டார். அவருடைய பெற்றோர்களும் மனம் நொந்து போய் விட்டார்கள்,

ஏன் இந்த நிலைமை? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் மிதுன லக்கினக்காரர். 20வயதிற்கு மேல் அவருக்கு சூரிய மகா திசை துவங்கியது, சூரியன் 12ல் உள்ளார்.  அது விரைய ஸ்தானம்.
தசாநாதன் பலன்களைக் கொடுப்பவர். அவரே விரையத்தில் ஏறி
அமர்ந்ததால், ஜாதகருக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை.
அதுவும் 23வது வயதில் ஜாதகர் போட்டித் தேர்வுகள் எழுதிய சமயத்தில்
சூரிய மகா திசையில் சனி புக்தி நடந்து கொண்டிருந்தது, தசாநாதனும்
புக்தி நாதனும் 2/12 நிலைப்பாட்டில் அதுவும் கேடானது.

சனியின் மேல் செவ்வாயின் பார்வை. ஆகவே ஜாதகருக்கு வெற்றி கிட்டவில்லை, அடுத்து வந்த புதன் புத்தி ஜாதகருக்கு  நன்மையாக அமைந்தது. ஜாதகர் மீண்டும் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று
வேலையில் சேர்ந்தார், சூரியனும் புதனும் யோக சேர்க்கையில் உள்ளன. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்  எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 29-11-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே ... கொடுக்க பட்டு உள்ள ஜாதகத்தில் மிதுன லக்கனம் ..அதிபதி புதன் 12-இல் மறைவு .புத்தி கூர்மை காரகன் புதன் லகினத்துக்கு 12-இல் மறைவு .எண்ணம் எழுத்து 3-அம் இடம் 3-க்கு உடையவன் கூடவே
கூட்டு சேர்த்து கேடு விளைவிக்கும் கேது கூட சேர்க்கை பெற்று 12-இல் மறைவு . சலன புத்தி காரகன் 12-இல் சுக்கிரன் ,புதன் பரிவர்த்தனை பெற்று உள்ளார் .ஆனாலும் சுக்கிரன் எதிரி சூரியன் கூடவே அடுத்தத வீட்டில் வேறு .மனம் காரகன் சந்திரன் பகை பெற்று வேறு தனித்து சனியின் பார்வை
பெற்று உள்ளார் சனி,சந்திரன் பார்வை மனசஞ்சலம்
ஏற்படுத்தும்...அதேபோல் தொழில் காக 10-இல் செவ்வாய் ,குரு இருந்தாலும் சனி தன்னோடு கட்டு பாட்டுக்குள் செவ்வாய் வைத்து கொண்டு உள்ளதால் இந்த அமைப்பு எற்பட்டு உள்ளது ..அதேபோல் குட்டி சுக்கிரன் ஆட்டம் கண்டு விட்டான் .. ஆதலால் இளமை காலத்தில் அவரால் தேர்ச்சி பெற
முடியவில்லை ..
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, November 22, 2019 8:40:00 AM
---------------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 19 மே 1975 அனறு காலை 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறந்தவர்.
பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகருக்கு 20 வயது முதல் 26 வயதுவரை சூரியதசா நடந்தது.
சூரியனே அரசாங்க வேலைகளைக் கொடுக்க வேண்டிய
கிரகம். படிப்புக்கான புதன் மற்றும் நான்காம் இடமான படிப்புக்கான இடத்திற்கும் உரிய புதன் 12ம் இடத்தில் மறைந்தார்.சூரியனும் 12ல் மறைந்தார். கேதுவின் சம்பந்தம்.ராகுவின் பார்வை.லக்கினத்தில் 8ம் அதைபன் சனி மற்றும் 12ம் அதிபன் சுக்ரன். படிப்புக்கான 4ம் இடத்தில் மாந்தி.பெரும்பாலும் சூரிய தசா சனி புக்தியில் தேர்வுகள் நடந்து தேர்வு
முடிவுகளும் வெளிவந்திருக்கும். இவையே அவருக்குப் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்காததற்குக்காரணங்கள்.
நவாம்சத்தில்4ம் இட அதிபதி செவ்வாய் 8ல் மறைவு.எதிரியான புதனுடன் கூட்டணி.நான்காம் இடத்தில் சனி அமர்ந்து நீசம் அடைந்து நின்றது.
பாவ பல அட்டவணையில் கல்விக்கான 4ம் இடத்திற்கு 9 வது இடம்
அதாவது 9/12 ரேங்க்.நாங்காம் அதிபதியும் கல்விக்கான காரகன் புதனுக்கு சுயவர்கத்தில் 2 பரல் மட்டுமே.அதாவது 2/8.
Friday, November 22, 2019 1:10:00 PM
-------------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
யா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி 12 ல் மேலும் அவரே கல்விக்கும் அதிபதி
ஆகிறார்
2. 4 ல் மாந்தி
௩.நான்காம் இடத்தின் மேலும் இளம் வயதில் வந்த தசை காரகன் சுக்ரனின் மீது ஆறு எட்டு அதிபதி செவ்வாய் சனியின் பார்வை
3. சூரியனும் லக்கினத்திற்கு12 ல்
ஆகவே தன 27 வயதிற்கு மேல் செவ்வாய் திசை குரு புத்தியில் அவருக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, November 22, 2019 6:39:00 PM
------------------------------------------------------
4
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. மிதுன இலக்கினம், சிம்ம இராசி ஜாதகம்.
2. 23 வயதில் அந்த இளைஞருக்கு மூன்றாம் அதிபதியான சூரியன் தசை நடைபெற்றது. சூரியன் விரய ஸ்தானத்தில் கேதுவின் பிடியில் அகப்பட்டு உள்ளார் மேலும் வித்தியா பதியும் 1,4 அதிபதியுமான புதனும் விரய ஸ்தானத்தில் கேதுவின் பிடியில் அகப்பட்டு வலிமை இழந்து உள்ளார்.
3. தொழில் ஸ்தானாதிபதி குரு ஆறாம் அதிபதியுடன் சேர்க்கை அம்சத்தில் நீசம் மற்றும் கர்மகாரகன் சனி ஆறாம்
அதிபதியின் பார்வையிலும் அம்சத்தில் நீசமமாகியும் உள்ளார். கர்மாதிபதி களின் இந்த நிலையும் கூடுதல் காரணங்களாக அமைந்துள்ளது.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, November 23, 2019 1:20:00 AM
-------------------------------------------------------
5
Blogger classroom2007 said...
வணக்கம்
19.05.1975 ஆம் தேதி காலை 08.22. மணிக்கு மிதுன லக்கினம், சிம்ம ராசியில் மகா நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகர். (எடுத்து கொண்ட இடம் - சென்னை)
மிதுன லக்கினத்திற்கு யோககாரனான சுக்கிரன் (4 பரல்)
யோகமில்லாதவர்கள் : சூரியன், செவ்வாய், குரு
ராஜ யோகத்தை கொடுப்பவர் : சனியும், குருவும் ஓன்று சேர்ந்து கேந்திர / திரிகோணத்தில் இருந்தால் ஒரு தீய சனி கிரகம் லக்கினத்தில் வந்து அமர்ந்ததால் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எதிரானது. இவர் பாக்கியஸ்தான அதிபதியும் ஆவார்.
சனியின் (3 பரல்) 10ம் பார்வை 10ம் வீட்டில் அமர்ந்துள்ள குரு , செவ்வாய் மீது. செவ்வாய் 6ம் வீட்டிற்கும், 11ம் வீட்டிற்கும்
அதிபதி. தாமதமான காரியங்கள் ஏற்படும்
லக்கினாதிபதி புதன் (2 பரல்) 12ல் மறைந்ததால் ஜாதகன் போராட பிறந்தவன்.
23 வயதில் ஜாதகருக்கு சூரிய மகா தசை. சூரியன் 12ல் லக்கினாதிபதியுடன் சேர்ந்துள்ளார்.கேதுவுடன் கூட்டு, ராகுவின்
பார்வை எல்லாம் சேர்ந்து நேரத்தை வீணாக்கி செலவு செய்ய வைப்பதும் இதுவே காரணம்.
2001-2011 - சந்திர மகா திசையில் எல்லா வித நல்ல மாற்றங்களும் ஏற்படும். சந்திரன் (6 பரல்).சந்திர ராசியிலிருந்து 10ம் வீடு தான் 12ம் வீடு. லக்கினாதிபதி புதன் அமர்த்துள்ளார்.
சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 12-ம் இல்லத்தில் வீற்றிருந்தால் ஜாதகர் அனைத்து சௌபாக்கியம்/சௌகரியத்தையும் அனுபவித்தும், மகிழ்வான குடும்ப வாழ்க்கை வாழ்வதோடு மற்றவர்களும் நன்கு வாழ
வழிவகை செய்தும்.
10ம் விட்டு 35 பரல். 10ம் வீட்டு அதிபதி குரு (6 பரல்) 5ம் பார்வையால் 2ம் வீட்டை பார்ப்பதால் நல்ல வருமானம் கிடைக்க வழி செய்வார். 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்ப்பதால் சொத்துக்கள், வாகன வசதிகளை செய்து கொடுப்பார்.
(2004- 2012) 29 வயது முதல் 37 வயது வரை ஏழரை சனி காலம்.போராட்ட வேண்டிய காலம் தான்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, November 23, 2019 5:03:00 AM
---------------------------------------------------
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் :
மிதுன லக்கினம், சிம்ம ராசி , மகம் நக்ஷத்திர ஜாதகர் போட்டி தேர்வுகளில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள்
1. பொதுவாக படிப்பு ஸ்தானம் படிப்பு அறிவு போன்று நிலை அறிய நான்காம் இடத்தையும் , வித்யா காரகன் நிலையையும் அறிய வேண்டும்
2. இவரின் நான்காம் இடத்து அதிபதி மற்றும் வித்யா காரகன் இரண்டும் புதன் ஆவார். இவரின் புதன் அஸ்தங்கதம் ஆகி கேது வுடன் சேர்ந்து பனிரெண்டில் அமர்ந்து விரயம் செய்தது. இது படிப்பினால் ஏற்படும் பயனை இல்லாமல் விரயம் செய்தது. மேலும் நான்காம் இடத்தில் அமர்ந்த மாந்தி நிலையை மோசம் அடைய செய்தது.
3. நவாம்சத்திலும் புதன் எட்டில் ஆறாம் அதிபதியுடன் அதாவது செவ்வாயுடன் சேர்ந்து மறைந்து அதிக கஷ்டத்தை தந்தது.
4. மேலும் போட்டி தேர்வு எழுதும் போது இவரின் வெற்றி ஸ்தானாதிபதி சூரியன் தசை நடந்தது . இவரின் சூரியன் பனிரெண்டில் மறைந்து
வெற்றியை விரயம் செய்தது.
5. பின்னர் வந்த சந்திரா தசைக்கு அடுத்து வந்த குரு தசை வந்தவுடன் நிலையான வேலை அமைந்தது. ஏனென்றால்
பத்தாம் இடத்து அதிபதி குரு மிதுன லக்கினத்திற்கு அசுப கிரகமாக இருந்தாலும் பத்தில் அமர்ந்து அதாவது சொந்த
வீட்டில் அமர்ந்து நன்மை செய்தார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, November 23, 2019 8:08:00 AM
----------------------------------------------------
7
Blogger Ram Venkat said...
வணக்கம்.
மிதுன லக்கினம், சிம்ம ராசி ஜாதகர்.
அவர் தன் 23வது வயதில் வேலைக்குச் சேர்வதற்காக எழுதிய போட்டித் தேர்வுகள் அனைத்திலும் அவருக்கு வெற்றி
கிடைக்கவில்லை. ஜாதகப்படி ஏன் இந்த நிலைமை?
1) லக்கினாதிபதியும், புத்தி காரகனுமான புதன் 12ல் மறைந்து, சூரியன்
மற்றும் கேதுவுடன் கூட்டணியிலுள்ளார்.
2)23 வயதில் சூரியனின் தசை, சனி புக்தி நடந்துள்ளது.தசா நாதனும், புத்தி நாதனும் 1, 12 நிலைமையிலுள்ளனர்.
3) போட்டித்தேர்வுகள் பெறும்பாலும் அரசாங்க வேலை வாய்ப்பு கிடைக்க நடத்தப் படுவது. அதில் வெற்றி பெற ராஜ
கிரகமான சூரியன் நல்ல நிலையிலும், அறிவாற்றலும் வேண்டும். ஆனால் சூரியன், புதன் சேர்க்கையில் ஏற்பட்ட நிபுணத்துவ யோகம் 12மிடமான மறைவு ஸ்தானத்தில் கேதுவின் கூட்டால் செயல்படவில்லை.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகரின் வேலைக்கு சேர்வதற்கான தேர்வுகளில் வெற்றி கிட்டவில்லை. ஆனால் 10மிடமான
தொழில் ஸ்தானத்தை காரகன் சனி பகவான் தன் 10ம் தனிப்பார்வையில் வைத்து இருப்பதாலும், தொழில் ஸ்தானம்
வலுவாக இருப்பதாலும், ஜாதகருக்கு தனியார் துறையில் ஒரு நல்ல பணியில் அமரும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
Saturday, November 23, 2019 1:50:00 PM
----------------------------------------------------------------
8
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கம்!கொடுக்கப்பட்ட அன்பர் மே மாதம் 19ம் தேதி 1975ல் பிறந்தவர் மிதுன லக்கினம்.லக்கின யோகாதிபதிகள் சுக்கிரன் 20 வயது வரை நடந்து முடிந்துவிட்டது.சூரியன் 6+ சந் 10 + செவ் 7 = 13 வருடங்கள் நண்மை
செய்யாத தசைகள். ஆக 43 வருடங்கள் நிலையற்ற தண்மை. 10ல் ஆட்சி பெற்ற குரு பாதகாதிபதியாகி 6ம் பதி செவ்வாயுடன் கூட்டணி போட்டு ஸ்தமில்லாத வேலை, தொழில். நடப்பு ராகு தசை செவ்வாய் வீட்டில் அமர்ந்து சனியின்
அனுசம் நட்சத்திரத்தில் இருந்து தசை நடப்பதால் வேலை இல்லை. சுக்கிரன் புதன் பரிவர்த்தனையால் வியாபாரத்தில் செழித்திருப்பார்.
அன்புடன்
- பொன்னுசாமி.
Saturday, November 23, 2019 8:53:00 PM
--------------------------------------------------------
9
Blogger seethalrajan said...
ஐயா வணக்கம், இந்த ஜாதகத்தில் சனியின் பார்வை 10ம் வீட்டின் மேல், அதோடு 20 முதல் 26 வயது வரை சூரிய தசை, அவர் 12ல் வெற்றியை தரவேண்டியவர் விரயத்தில். ஆதலால் வெற்றி பெற முடியவில்லை.
Saturday, November 23, 2019 11:23:00 PM
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.11.19

Astrology: Quiz: புதிர்: ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ?


Astrology: Quiz: புதிர்: ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ?

ஒரு இளைஞனின் ஜாதகம் கீழே உள்ளது. மகம் நட்சத்திரக்காரர். 23வது வயதில் வேலைக்குச் சேர்வதற்காக அவர்  எழுதிய போட்டித் தேர்வுகள் அனைத்திலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதாவது அவர்
பாஸாக வில்லை, நொந்து போய்விட்டார். அவருடைய பெற்றோர்களும் மனம் நொந்து போய் விட்டார்கள், ஏன் இந்த நிலைமை?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.11.19

இளமை எப்போது கொலுவிருக்கும்?


இளமை எப்போது கொலுவிருக்கும்?

 *இரவு தென்றலாக குளுமையுடன் மணம் வீசி குதூகலம் கொள்ள வைக்கும் பாடல்*

 படம் : *ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்*
 வெளியீடு : *7 மே 1965*
 பாடல் : *இளமை கொலுவிருக்கும்* 
பாடலாசிரியர் : *கவியரசு கண்ணதாசன்*
 பாடியவர் : *P.சுசீலா*
 இசை : *விஸ்வநாதன்* *ராமமூர்த்தி *
 நடிப்பு : *ஜெமினிகணேசன் & சாவித்திரி* இயக்கம் : *K.J.மஹாதேவன்*

பாடல் :
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்

அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ 
.
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா 
.
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

 *பாடலும் காட்சியும்* காணொளி வடிவம்!!!!


=================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.11.19

வாழ்க்கை எப்போதுமே ஏன் இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை ?

வாழ்க்கை எப்போதுமே ஏன் இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை ?

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது, துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக

"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்
என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை

ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.11.19

நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதைப் படியுங்கள்!!!!


நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் 
இதைப் படியுங்கள்!!!!

அன்பு நண்பர்களே வணக்கம். தற்போதைய சூழ்நிலையில் நாம் அனைவரும் 4 சக்ர வாகனம் 🚘 வைத்துள்ளோம்.

வருகின்ற *01/12/2019* முதல் அனைத்து வாகனத்திற்கும் *FasTag* கட்டாயம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாம் பலரும் நம்முடைய வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அப்போது நாம் கண்டிப்பாக *டோல்கேட்டினை* கடக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வங்கிகள்
சார்பாகவும் இவைகள் வழங்கப்படுகிறது.

வாகனத்தின் பதிவு(RC), இன்சுரன்ஸ், உரிமையாளரின் கலர் போட்டோ, ஆதார் கார்ட்_ ஆகியவற்றின் நகள்களை வழங்கி தங்கள்  வங்கிகளின் மூலமே பெற்று கொள்ளலாம்.

மொபைல் ஆப் மூலமாக ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

*ரூபாய் 500/-* செலுத்தவேண்டும்.
இவற்றில் *100/-* ரூபாய் வாகனத்தில் ஒட்டகூடிய ஸ்டிக்கருக்கும், *200/-* ரூபாய் டெபாசிட்டாகவும், *200/-* ரூபாய் நமது கணக்கில் வரவு வைக்கப்படும்.
*இவைகளை பெற்றபின் தங்களுக்கென்று யூசர் ஐடி வழங்கபடும், பாஸ்வேர்ட் தாங்களே செட் செய்து கொள்ளலாம்*
---------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.19

ஆறுதல் கிடைக்க என்ன செய்யவேண்டும்?


ஆறுதல் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை "ஆசுகவி" என்பார்கள்.

தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.

இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை. 

அவற்றுள் இனிமையான ஒரு பாடலை இங்கே பார்ப்போமா?

"ஆறுதல் என்பது ஐந்து முறை வரும்படி பாடல் பாட முடியுமா, உம்மால்?"   காளமேகத்திடம் சவால் விட்டார் ஒருவர்.

புன்னகைத்த காளமேகம் உதட்டிலிருந்து அடுத்த நொடி வந்து விழுந்தன நான்கு வரிகள்!

"சங்கரர்க்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கு மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை; பித்தா! நின்பாதம்
பிடித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!"

பாடிவிட்டு வெற்றிக் களிப்போடு நகைத்தார் காளமேகம்.

"பாடல் சரி, ஆனால் பொருள் குழப்புகிறதே?  சண்முகனுக்கு ஆறுதலை சரி. மற்றவர்களுக்கு இப்பாடல் பொருந்தாதே?"

சவால் விட்டவரே தோல்வியை ஒப்புக்கொண்டு தலையைச் சொறிய, காளமேகம் கம்பீரத்தோடு சொன்னார்:

"சங்கரருக்கு ஆறு தலை - அதாவது தலையில் கங்கை ஆறு.
முருகனுக்கும் ஆறுதலை.
ஐங்கரனுக்கு-  அது ஆறுதலை இல்லை, மாறுதலை! யானை முகமாக மாறிய தலை.
சங்கைப் பிடித்த  திருமாலுக்கும் மாறுதலை. நரசிம்மாவதாரத்தில் சிங்கமாக மாறிய தலை.
பித்தனாகிய ஈசன் கால்களைப் பிடித்தோருக்கு இறுதியில் கிடைப்பது ஆறுதல்!
அவ்வளவு தான்! "

தமிழை வைத்து என்ன அழகாக வார்த்தை விளையாட்டு விளையாடியிருக்கிறார், பார்த்தீர்களா?

நன்றி பசுபதிநாதன் சேலம் அவர்கள்
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.19

Astrology: Quiz: புதிர்: 15-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 15-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, பரணி நட்சத்திரக்காரர். கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். சொந்தத் தொழில் துவங்கி நஷ்டப்பட்டு அதையும் ஊற்றி மூடிவிட்டு வந்துவிட்டார், பிறகு அரபு தேசத்தில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தவர், அதையும் உதறித்தள்ளி விட்டு ஊருக்குத்
திரும்பி விட்டார், எல்லாம் அவருடைய 28 வயதிற்குள் அரங்கேறியவை. கேள்விகள் இதுதான்:
1, அவருக்கு ஏன் இந்த நிலைமை? 2.நிரந்தமான வேலை எப்போது கிடைக்கும்? ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் மிதுன லக்கினக்காரர். பத்தாம் வீட்டில் சனி மற்றும் ராகு.பத்தாம் வீட்டைச் சுற்றி  இரண்டு சுப கிரகங்கள், ஒரு பக்கம் சுக்கிரன்
 மறு பக்கம் சந்திரன்,சுபகர்த்தாரி யோகம். 10ம் வீட்டின் மேல் குரு பகவானின் நேரடிப் பார்வை. பத்தாம் வீட்டில் ராகுவும் சனியும் இருப்பது அமைதியற்ற தன்மையைக் கொடுப்பார்கள் (restlessness) ஆனால்  குரு பகவானின்
பார்வை 10ன் மேல் இருப்பதால் அவர் அதைத் தனது தசா புத்தியில் சீராக்குவார்.ராகு திசை குரு  புத்தியில் எல்லாம் சீரானது. ஜாதகருக்கு
நல்ல வேலை கிடைத்தது!!! அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 22-11-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே .. படிப்பு சம்பந்தம் கொண்ட 4-இல் கேது வேறு , சனியின் பார்வையில் ,4-க்கு உடையவன் 8-இல்
மறைவு பெற்று சூரியன் சேர்க்கை அஸ்தங்கம் ஆகி விட்டார் .. படிப்பு
காரகன் புதன் வலு இழந்து உள்ளார் . 10-க்கு உடையவன் கேது கூட்டணி
வேறு அது மட்டும் இல்லாமல் 10-இல் சனி ராகு சேர்க்கை வேறு .. சூரியன் தசை யில் ஜாதகர் படிப்பு பாதியில் நிறுத்தி இருப்பார் காரணம் சூரியன்
8-இல் புதன் சேர்க்கை வேறு ..அடுத்து வந்த சந்திரன் தசை ஜாதகர்
வெளிநாடு சென்றார் .. ஆனால் 10 க்கு உடைவான் பலம் இழுத்து
நிலையில் உள்ளார் .. சந்திரா தசை முடிவில்  நிரந்தர வேலை அமையும் .. கூடவே குரு பார்வை 10-அம் வீட்டின் மேல் இருப்பதால் வாழ்கை போய் கொண்டு இருக்கும்
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, November 15, 2019 8:36:00 AM
------------------------------------------------------------
2
Blogger Shanmugasundaram said...
The person was born on 26/01/1969 time 3.15pm .Lagnathipathy mercury is in 8th house.Dasa
bukthi was not favourable  until 28years.tenth house lord is in 4th with ketu Tenth house having saturn and rahu combination. Moreover at early age
sun dasa moon dasa and mars dasa was running hence it was not suitable for profession at
rahu dasa guru bukthi he may get good profession.thanks sir vazhga valamudan
Friday, November 15, 2019 9:25:00 AM
------------------------------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 26 ஜன்வரி 1969 அன்று மாலை 3 மணி 18 நிமிடங்களுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகருக்கு 8ம் இடத்துக்காரனான சனி 10ம் இடமான வேலைக்கான
இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அவரோடு கூட ராகுவும் சேர்ந்துள்ளார்.
10 இடத்துக்கான குரு பகவான் கேதுவுடன் கூட்டணி.
எனவே அடிக்கடி வேலை மாற்றம். நிலையான வேலை சந்தேகம்.
லக்கினாதிபதி 8ல் மறைந்து வக்கிரம் அடைந்து சூரியனால் எரிக்கப்பட்டார்.லக்கினத்திலேயே மாந்தி.
படிப்புக்கான இடம் 4ன் அதிபதியும் கல்விக்கான காரகன் புதன் 8ல் மறந்து வக்கிரம் அடைந்து சூரியனால் எரிக்கப்பட்டதால் படிப்பு பாதியில் நின்றது
சுய தொழில் வியாபாரத்திற்கான 3ம் இடத்துக்காரன் சூரியன் 8ல் மறைந்து
தன் வீட்டிற்கு 6ல் நின்றார். எனவே சுய தொழில் நட்டம் ஏற்பட்டது.
செவ்வாயும் சனியும் 6 8 ஆக நின்றது. பாக்கிய ஸ்தனமான 9ம் இடம்
சனி ராகு, சூரியன் ஆகியவர்களால் சூழப்பட்டு 12ம்
அதிபதியால் நிறந்துள்ளது. எனவே மிகவும் பாக்கியக்குறைவு.
ராகு தசா ராகு புக்தி நவ்ம்பர் 1997 வரை,,28 வயதுவரை, நீடித்தது.அதுவரை சிரமமதான். ராகு 10ல் நின்றதால் அதன் பின்னர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டார். குரு தசா 2013ல் வந்தபோது 44 வயதில் நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்.
kmrk1949@gmail.com
Friday, November 15, 2019 2:04:00 PM
-----------------------------------------------------
4
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி எட்டில்
2 .பத்தாம் வீட்டில் சனியும் ராகுவும்
3 .புதன் எட்டில் அமர்ந்ததால் படிப்பை பாதியில் விட்டுஇருக்கிறார்
4 தன 19 வயதில் 2ஆம் வீடு அதிபதி சந்திரனின் தொழில் துவங்கியவர் ஆறாம் அதிபதி செவ்வாயின் parvayal தொழிலை கைவிட்டுருக்கிறார் அடுத்து வந்த செவ்வாய் திசை சுக்கிர புத்தியில் வெளிநாடு சென்ரிய்ந்தாலும் 6-ம் இடத்தானின்திசை பலன் அளிக்க வில்லை
அடுத்துவரும் ராகு திசை குரு புத்தியில் அவருக்கு நல்ல வேலை
கிடைத்து அமோக இருப்பார் ஏனனில் பத்தாம் அதிபதி
குரு சண்டாள யோகத்துடன் பத்தாம் வீட்டையும் எட்டாம் வீட்டையும்
தன பார்வையில் வைத்துள்ளார்
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, November 15, 2019 6:17:00 PM
--------------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்
மிதுன லக்கினம் , பரணி நக்ஷத்திரம் மேஷ ராசி ஜாதகர் வேளையில் பிரச்சினை ஏற்பட்டதிற்கான காரணங்கள்
1 பொதுவாக வேலை பற்றிய நிலை அறிய பத்தாம் இடத்தையும் பத்தாம் இடத்தின் அதிபதி நிலையையும் , பத்தாம் இடத்து மீது உள்ள கிரகங்களின் பார்வையையும் பார்க்க வேண்டும்.
2 இந்த ஜாதகருக்கு பத்தாம் இடத்தில் சனியுடன் ராகு சேர்ந்து நிலையை மோசமடைய செய்தது. மேலும் பத்தாம் இடத்தின் மேல் கேதுவின்
பார்வை வரும் நிலைமை மோசமடைய காரணமாகும்.
3 இவருக்கு 24 வயதில் ராகு தசை வேறு வந்து வேலையையே நாசம்
செய்து , ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டது.
4 பத்தாம் இடத்து அதிபதி குருவின் பார்வை பத்தாம் இடத்தின் மேல் விழுவதால் , குரு அசுப கிரகமாக இருந்தாலும் குரு
தசையில் இருந்து நிலைமை சரியாகி நல்ல நிலை அடைந்தார்.
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, November 15, 2019 6:53:00 PM
------------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. மிதுன இலக்கினம், மேச இராசி ஜாதகம்.
2. அவரின் இந்த நிலைமைக்கு ஆறாம் அதிபதியின் பார்வையில் உள்ள சந்திரதசை, அடுத்து வந்த ஆறாம் அதிபதியான
செவ்வாயின் தசை நடந்ததே காரணம் ஆகும்.
தொழில் தானமாகிய பத்தாமிடம் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு
உள்ளதுடன் கர்மகாரகன் சனி மற்றும் கருமகாரகாதிபதி
குரு ஆகியோர்களும் ராகு கேதுவின் பிடியில் அகப்பட்டு உள்ளார்கள்.
ஆகவே அவருக்கு இந்த குறிப்பிட்ட வயது வரை
தொழில் நிலையில் போராட்டம் ஏற்பட்டது.
3. அதன்பின் வந்த ராகு மகா தசையில் சனி புத்தியில் அவருக்கு
நிரந்தரமான வேலை கிடைக்கும். ஏனெனில் பத்தாமிட
ராகு, பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதி சனி, இவர்கள்
மேல் பத்தாமிட அதிபதி குருவின் பார்வை
ஆகியவற்றால் பலன் கிடைக்கும்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, November 16, 2019 9:18:00 AM
---------------------------------------------------
7
Blogger seethalrajan said...
ஐயா வணக்கம், கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் 19 வயது முதல்
26 வயது வரை மிதுன லக்னத்திற்கு வரவே கூடாத
செவ்வாய் தசை நடை பெற்றது அதலால் செவ்வாய் எல்லாவற்றையும் கெடுத்தார். (செவ்வாய் திரிகோணம் ஏறியது மிகவும்
கேட்டது) பிறகு வந்த ராகுவும் சனியுடன் சேர்ந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் எனவே ராகு தசையும் அவருக்கு
கைகொடுக்கவில்லை. நன்றி
Saturday, November 16, 2019 1:38:00 PM
-----------------------------------------------------------
8
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கம்!
ஜாதகர் ஜனவரி 26 1969 ல் மிதுன லக்கினத்தில் பிறந்தவர். யோகாதிபதி சுக்கிரன் தசையில் பிறநது 3 வருடங்கள்
குழந்தை பருவத்துடன் முடிந்தது. நண்மைகளை அளிக்க முடியாத
சூரிய தசை 6 + 10 வருட சந்திர தசை + தீமை
மட்டுமே செய்யும் செவ்வாய் தசை 7 வருடம் என 26 வருடங்கள். 10ல் இருக்கும் ராகு தசை சுய புத்தி 3 வருடங்கள் என
29 வருடங்கள் கழிந்தது.10ம் அதிபதி 10ல் உள்ள தன் வீட்டை தானே பார்ப்பதாலும் தொழில் காரகன் சனி 10ல்
இருப்பதாலும் லக்கினாதிபதி புதன் 8ல் அமர்ந்து 2ம் வீட்டை
பார்த்ததாலும் 30 வயதிற்க்கு மேல் வந்த ராகு தசை குரு
புத்தி புதன் அந்தரத்தில் வேலை கிடைத்திருக்கும். காரகன் சனி 10ல்
இருந்து விரய வீட்டை பார்ப்பதாலும் ஸ்தானாதிபதி
குரு(பாதகாதிபதியும் ஆகியதால்) 12ம் வீட்டை பார்ப்பதாலும்
ஜாதகருக்கு நிரந்தர வேலை என்பதற்க்கு வாய்ப்பில்லை.
அன்புடன்
-பொன்னுசாமி.
Saturday, November 16, 2019 10:15:00 PM
-----------------------------------------------------
9
Blogger Ram Venkat said...
வணக்கம்,
மிதுன லக்கினம், மேஷ ராசி ஜாதகர்.
அவருடைய 28 வயதிற்குள் படிப்பு ஏறவில்லை... செய்தொழிலில்
நஷ்டம்... கிடைத்த வேலை வாய்ப்பிலும் நிலையாமை
போன்ற ஏமாற்றங்கள்.. ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்னாதிபதி புதன் 8ல் மறைவு.
2) தொழில் ஸ்தானத்தில் காரகன் சனி மற்றும் ராகுவின் கூட்டமைப்பு. காரகோ பாவ நாசய: என்பதற்கு ஏற்றாற்போல்
தொழில் நிலையாமை..
3) தொழில் ஸ்தானாதிபதி குரு நாலில் கன்னியில் அமர்ந்து கேதுவுடன்
கூட்டு, சனியின் நேர் பார்வையில் உள்ளார்.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.
நிரந்தர வேலை, ராகு தசை, குரு புத்தியில் அமைய வாய்ப்புள்ளது.
-இரா.வெங்கடேஷ்.
Saturday, November 16, 2019 10:35:00 PM
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.11.19

Astrology: Quiz: புதிர்: காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கையா வாங்க!


Astrology: Quiz: புதிர்: காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கையா வாங்க!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. பரணி நட்சத்திரக்காரர். கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். சொந்தத் தொழில் துவங்கி நஷ்டப்பட்டு அதையும் ஊற்றி மூடிவிட்டு வந்துவிட்டார்,
பிறகு அரபு தேசத்தில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தவர்,
அதையும் உதறித்தள்ளி விட்டு ஊருக்குத் திரும்பி விட்டார், எல்லாம் அவருடைய 28 வயதிற்குள் அரங்கேறியவை.

கேள்விகள் இதுதான்:
1, அவருக்கு ஏன் இந்த நிலைமை?
2.நிரந்தமான வேலை எப்போது கிடைக்கும்?

ஜாதகத்தை அலசி இவற்றிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 17-11-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.11.19நன்மையும் தீமையும் எப்படி வரும்?

பழமையான பாடல் ஓன்று...

இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.
அது கணியன் பூங்குன்றனார் எழுதிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்...."
இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.
பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்....உங்களுக்காக!!!!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள்
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.


*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

– கணியன் பூங்குன்றனார்


பாடலின் வரிகளும், பொருளும்:

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."

எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."
தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*

துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...

*"சாதல் புதுமை யில்லை*.."

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......

*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."

இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*

எழுதியவர் ஊர்:
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் தாலுக்கா
மகிபாலன்பட்டி கிராமம்!!!

அவர் பிறந்த இடத்தில்
நம்மை ஒரு
பாழடைந்த பலகை மட்டுமே
நம்மை
வரவேற்கிறது.
வாழ்க
நமது தமிழ்த்தொண்டு.......!!!!!
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!!

13.11.19

நமக்கென்று உள்ள மருந்துகள்!!!!


நமக்கென்று உள்ள மருந்துகள்!!!!

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!
----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.11.19

சனீஷ்வரனின் தோஷம் விலக இதைப் படியுங்கள்!!!!


சனீஷ்வரனின் தோஷம் விலக இதைப் படியுங்கள்!!!!

நளன்_தமயந்தி_கதை
#இதை_படிப்பதினால்  #சனி_தோஷம்_விலகும்

படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும்.
அவர்களும் படித்து பயன் பெறட்டும்.

★ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

★தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

★சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான்.

★நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

★இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.

★தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

★ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

★இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.

★பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

★தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.

★அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.

★திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

★நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரி வரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்!!!

சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்...!!!!
-----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.11.19

Astrology: Quiz: புதிர்: 8-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 8-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, கார்த்திகை நட்சத்திரக்காரர். உடல் நலமின்றி இருந்தார் (Severe Health Problems) ஜாதகரின் 29 வது வயதில், அதாவது அவருக்கு ராகு திசையில் சனி புத்தி துவங்கியவுடன் உடல் நலக் கோளாறுகள் அதிகமாகி பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார்கள். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வைத்தியம் பார்க்கத் துவங்கினாலும், பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டுத்தான் துவங்கினார்கள், கேள்வி இதுதான்: ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் துலா லக்கினக்காரர். தசாநாதன் ராகு 6ம் வீட்டில் அமர்ந்துள்ளார். புத்தி நாதன் சனீஷ்வரன் நீசமாகி இருப்பதுடன் 7ம் வீட்டில் (மாரக ஸ்தானத்தில்) பாதிப்புடன் உள்ளார். அத்துடன் ஏழரைச் சனியும் நடந்து கொண்டிருந்தது. (மேஷத்தில் சனீஷ்வரன் அந்த சமயத்தில்) லக்கினாதிபதி சுக்கிரனும் விரையத்தில். கடுமையான உடல் பாதிப்பிற்கு இவைதான் காரணம், இவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 11 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 15-11-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 12 செப்டம்பர் 1968 அன்று காலை 10 மணி 17 நிமிடம் போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
1. நோய்க்கான ஆறாம் இடம் ராகுவால் ஆக்கிரமிப்ப்புச் செய்யப்பட்டுள்ளது. எனவே ராகுதசாவில் ஜாதகர் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.
2.ஆறாம் இடத்திற்கான குரு பாதக ஸ்தானம் ஆன சிம்மத்தில் அமர்ந்துசூரியனாலும் எரிக்கப்பட்டார். வலுவை இழந்தார்.
3. லக்கினம் மாந்தியாலும் , ராசி நீச சனியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.,கர்ம ஸ்தான அதிபதி சந்திரன் நீச சனியால் பாதிக்கப்பட்டு இருவரும் லக்கினத்தைத் தங்கள் பார்வையில் வைத்துள்ளனர்.
4.ஆயுள் காரகனான் சனி மேஷத்தில் நீசம் பெற்றார். வக்கிரமும் அடைந்தார்.
5.எட்டாம் அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து நீசமும் பெற்றார். கேதுவாலும் பாதிக்கப்பட்டார்.
6. ஆறில் அமர்ந்த ராகுவின் தசா, கர்மகாரகனான சனியின் புக்தியில் ஜாதகர் மிகவும் மோசமான நோய் வாய்ப்பட்டார்.
Friday, November 08, 2019 6:10:00 AM
-------------------------------------------------
2
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே ... கொடுக்கப்பட்டு உள்ள ஜாதகத்தில் துலா லக்கனம் ,லக்கனத்தில் மாந்தி , கஷ்ட பட்ட ஜீவனம் கூடவே சனி பார்வை சுபர் பார்வை என்பது லகினத்துக்கு இல்லை. கூடவே 6-இல் ராகு வேறு ருண ஸ்தானம் ,லகினத்துக்கு 1,க்கு 8க்கு குடையவர் அமர்த்த இடம் வேறு கெட்டு போய் நீச்சம் பெற்று கூடவே கேது கூட்டணி . மேற் சொன்ன காரணம் பொதுவாக ஒரு மனிதனுக்கு கஷ்ட வாழ்கை கொடுக்கும் . 6இல் அமர்த்த கிரகம் தசை ராகு வால் ஜாதகதர் கஷ்ட பட்டு உள்ளார் என்பது விதி அதேபோல் லகினத்துக்கு 11-அம அதிபதி பாதகாதிபதி சூரியன் நட்சத்திரம் கார்த்திகை சனி இன் வீட்டில் ..
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, November 08, 2019 8:41:00 AM
------------------------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கொடுத்த ஜாதகரின் உடல் நல கேட்டிற்கான காரணங்கள் :
துலா லக்கினம், கார்த்திகை நக்ஷத்திரம் , மேஷ ராசி ஜாதகர்
பொதுவாக உடல் நலம் மற்றும் நோய் பற்றி அறிய ஜாதகரின் நான்காம் மற்றும் ஆறாம் இடத்தை பார்க்க வேண்டும்.
இவரின் நான்காம் இடத்து அதிபதி சனி நீசமாக , வர்கோத்தமமாக லக்கினத்திற்கு ஏழில் சந்திரனுடன் சேர்ந்து அமர்ந்து , தனது நீச பார்வையை லக்கினத்தின் மேல் செலுத்துகிறது. இது முதல் நிலை உடல் நல பாதிப்பிற்கான காரணம் ஆகும்.
மேலும் ஆறாம் இடத்தில் நோய் பற்றிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து நோய் உருவாக்குவதை மேற்கொள்கிறது. இது தன்னுடைய தசையில் நோயினை உண்டாக தொடங்குகிறது.
சனியும் நீச மாக வர்கோத்தமமாக உள்ளதால் ராகு தசை சனி புக்தியில் நோய் உண்டானது. மேலும் ஆறாம் இடத்து அதிபதி குரு துலாம் லக்கினத்திற்கு அசுப கிரகமாகும் . அது ஆறாம் இடத்திற்கு ஆறில் உள்ளது. மேலும் நவாம்சத்திலும் லக்கினத்தில் இருந்து ஆறாம் இடத்தில் மறைந்து உள்ளார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, November 08, 2019 1:15:00 PM
----------------------------------------------
4
Blogger sree said...
துலா லக்கினம் மேஷ ராசி . லக்கினாதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானாதிபதி சுக்கிரன் நீச்ச பங்க அமைப்பில் இருந்தாலும் ராகு கேதுவின் பிடியில். ஆயுள் காரகன் சனி நீச்சம் பெற்று வக்கிரம் பெற்றுள்ளார். ஒன்பதாம் அதிபதி புதன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் உச்சம் பெற்று நீச்ச சுக்கிரன் மற்றும் கேதுவின் கூட்டணியில் உள்ளார். இவரது நோய்க்கான காரணத்தை ஆராய்ந்தால் ஆறாம் வீட்டில் உள்ள ராகு மற்றும் ஆறாம் பாவகத்தில் உள்ள வக்கிர சனி ஆறாம் வீட்டோன் குரு மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றுள்ளதால் அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டிருக்க கூடும். ஆறாம் வீட்டிற்கு ராகு, சனி மற்றும் செவ்வாய் அதை தீவிரப்படுத்த ஆறாம் வீட்டோன் குருவின் பார்வை இவருக்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தியது.கோச்சார ஜென்ம சனி இதனை இன்னும் தீவிர படுத்தி அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவே .
Friday, November 08, 2019 3:09:00 PM
----------------------------------------------------------
5
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
l லக்கினாதிபதி விரயத்தில் (12ல்
2 ஆறாம் அதிபதி குரு பதினொன்றில் (ஆறாம் இடத்திற்கு ஆறில்
3 .லக்கினத்தில் மாந்தி
4 .6ஆம் இடத்தில ராகு
5 .நாலாம்திபதி சனி அந்த இடத்திற்கு நாலில் காரகன் பாவ நாசம் )
6 .உடல் காரகன் சூரியன் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து கேட்டு உள்ளார்
ஆறில் அமர்த்த ராகு திசையில் சனி புத்தியில் உடல நல குறைவு ஏற்பட்டுள்ளது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, November 08, 2019 5:57:00 PM
--------------------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
1. துலா இலக்கினம், மேச இராசி ஜாதகம்.
2. உயிராகிய லக்னாதிபதி சுக்கிரன் நீசமாகி விரய தானம் சென்றுள்ளார். லக்னாதிபதி ராசி மற்றும் அம்சத்தில் கேதுவின் பிடியில் அகப்பட்டு கெட்டுள்ளார். லக்னத்தில் மாந்தியும் லக்கினத்தின் மீது நீச சனியின் பார்வையும் கூடுதல் பாதிப்பு.
3. நான்காம் இடாதிபதி சனீஸ்வரன் ராசி மற்றும் அம்சத்தில் நீசம் அடைந்துள்ளார். உடல் காரகனான சந்திரனும் ராசியில் நீசனோடும், அம்சத்தில் ராகுவுடனும் சேர்ந்துள்ளார்.
இவ்விதம் உயிரும் உடலும் கடுமையாக ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த ஜாதகருக்கு கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக....
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Friday, November 08, 2019 8:12:00 PM
-------------------------------------------------
7
Blogger Thanga Mouly said...
ஜாதகருக்கு மாந்தி லக்கினத்தில் அமர்ந்து இருக்க, நீசச் சனி வர்க்கோத்தம நிலையில் மேலும் நீசனுக்குரிய அசுபத்ததன்மையினை ஜாதகருக்கு ஏற்படுத்துகின்றார்,
இங்கு 6ம் வீட்டில் திசா நாதன் ராகுவும், சனியானவர் தனது முழுப் பார்வையினால் லக்கினத்தினை(உடல்) பார்ப்பது, ராகு திசை சனி புத்தி நடக்கும் போது ஆரோக்கிய நிலைக்கு சவாலானது.
Saturday, November 09, 2019 5:31:00 PM
---------------------------------------------------------
8
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கங்கள்!
ஜாதகர் 1968, செப்டம்பர் 12ம் தேதி காலை 10-30 மணியளவில் பிறந்தவர். துரதிருஷ்டமான ஜாதகம். துலா லக்கினம், லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து நீச்சம் அடைந்துள்ளார்.
லக்கினத்திற்க்கு சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் உச்சமான 12ம் பதி புதனுடனும் கேது வுடனும் இணைந்து பலம் பெற்ற ராகுவின் பார்வையும் பெற்று கெட்டுவிட்டார்.
நோயை குறிக்கும் 6ம் பதி குரு பதகாதிபதி சூரியனுடனும் செவ்வாயுடனும் இணைந்து ஜாதகரை நோயில் விழ வைத்துள்ளார். யோகாதிபதி சனி நீச்சமடைந்து தேய் பிறை சந்திரனுடன் இணைந்து லக்கினத்தை பார்த்து கெடுத்து விட்டார்.
கேது கொடி பிடிக்கும் தோஷ ஜாதகம். பாவர்கள் அனைவரும் பலம் பெற்று சுபர்கள் அனைவரும் பலவீனமடைந்து விட்டதால் இந்த நிலை.
( இது போன்ற அமைப்பில் இருந்த எனது தம்பியை கடந்த மார்ச் மாதம் நாங்கள் இழக்க வேண்டியதாகி விட்டது )
அன்புடன்
-பொன்னுசாமி
Saturday, November 09, 2019 6:39:00 PM

உங்கள் தம்பியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்!
--------------------------------------------------------------------------
9
Blogger Ram Venkat said...
வணக்கம்.
துலா லக்கினம். மேஷ ராசி ஜாதகர்.
கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோச ஜாதகம்.(லக்கினம் மட்டும் வெளியிலுள்ளது).
ஜாதகரின் கடுமையான உடல் நல பாதிப்பிற்கு, ஜாதகப்படி என்ன காரணம்?
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோகஸ்தானம் எனப்படும்.
இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம்.
ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள்மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும் .
1) லக்கினாதிபதி சுக்கிரன் 12ல் நீசமடைந்து மறைவு.
2) உடலிலில் தோன்றக்கூடிய அனைத்துவகையான நோய்களைத் தெரிவிக்கும் இடமாக ஆறாம் பாவம் விளங்குகிறது. அதில் ராகு அமர்வு மற்றும் அதன் அதிபதி குரு சிம்மத்தில் அமர்ந்து கத்திரியின் பிடியில் செயலிழந்து விட்டார்.
3) 6மிடத்தில் அமர்ந்த ராகு அதிக அமிலம்சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளைநோய், குடல்புண், தோல் வியாதிகள் போன்றவற்றை அவரின் தசையில் ஏற்படுத்துவார்.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு ராகு தசையில் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு பாதிப்ப்டைந்தார்.
Saturday, November 09, 2019 9:17:00 PM
----------------------------------------------------------
10
Blogger Lokes said...
பிறப்பு: 12/09/1968, 10:20 AM, Chennai.
துலாம் லக்கினமாகி, லக்கினத்தை 6 இல் நீசமான சனி பார்க்க, லக்கினாதிபதி சுக்கிரன் நீச சனியுடன் இணைந்து பாபத்துவமான சந்திரனின் சாரம் வாங்கி, விரயஸ்தானத்தில் நீசமாகி, கேதுவுடன் 2 டிக்ரிக்குள் இணைந்து லக்கினமும் லக்கினாதிபதியும் வலுவிழந்த ஜாதகம். மேலும் 4 மற்றும் 5 க்குரிய யோககாரகனான சனியும் நீசமாகி, 9 க்குரிய புதன் கேதுவுடன் 5 டிக்ரிக்குள் இணைந்து 1, 5 9 ஆம் பாவம்களும் அதிபதிகளும் பலவீனமாகி உள்ளதால், உடல் நலக்குறை இருக்கும். லக்கினத்தை விட 6 ஆம் வீடு உச்சபுதனின் சாரம் பெற்று அமர்ந்த ராகுவினாலும் புதன் மற்றும் சுக்கிரனின் பார்வையாலும் வலுப்பெற்று ஜாதகரை நாள்பட்ட நோய்வாய் படுத்தியது. ராகு தசையில் ராகுவிற்கு வீடுகொடுத்த குரு தன் நட்பு கிரகமான சூரியனுடன் இணைந்து அஸ்தமனாகி 6 க்கு 6 ஆம் வீடான 11 ஆம் வீட்டில் நிற்க, ரோஹஸ்தனாதிபதி குரு புத்தியில் உடல் நலம் கெடாமல், நீசசனி புத்தியில் உடல் நலக்கோளாறு அதிகமானது. ஜாதகருக்கு நீரிழிவு நோயால் சிறுநீரகங்கம் பாதிப்பு, கால் பாதம் அழுகல் மற்றும் நிணநீர் அமைப்பில் பிரச்சனை இருந்திருக்க வாய்ப்புள்ளது. கேது புத்தியில் ஆயுள் முடிந்திருக்கும்.
Sunday, November 10, 2019 1:04:00 AM
---------------------------------------------------------------
 11
Haridoss Krishnan <doshari22@gmail.com>
ஐயா,
ஜாதகரின் சனி கிரகம் நீசம் ராசி  மற்றும் நாவம்சம் இரண்டிலும். நீசம் பெற்ற சனி லக்கினத்தை பார்க்கிறார் மேலும் லக் னா திபதி சுக்ரன் 12 ல் நீசம் .இவையெல்லாம்தான்அவரின் உடல் நல பிரச்சி னைக்கு காரணம்
=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!