மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.2.20

Astrology மாசி மாசம் ஆளான பொண்ணு யாருக்கு?


Astrology மாசி மாசம் ஆளான பொண்ணு யாருக்கு?

மாசிமாசம் ஆளான பொண்ணு யாருக்கு? என்று கேட்டால் சின்னப்பையைகூடச் சொல்லுவான். அது மாமனுக்கு என்று.

அந்த அளவில் திரைப்படப் பாடல்கள் நம்மோடு ஒன்றாகக் கலந்திருக்கிறது.

பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டும் கொடுத்திருக்கிறேன்

நாயகன்:
  “மாசிமாசம் ஆளான பொண்ணு
   மாமன் எனக்குத்தானே”
நாயகி:
  “நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
   மாமன் உனக்குத்தானே”

பாடல் பிரபலமானதற்குக் காரணம், நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அந்தப் பாடலுக்கு காட்சி கொடுத்திருப்பார்.

பாடலுக்கு உயிரூட்டியவர்கள் பாடலைப் பாடிய திருவாளர் KJ ஜேசுதாஸ், திருமதி ஸ்வர்ணலதா, மற்றும் இசையமைத்த  இசைஞானி இளையராஜா (படம்: தர்மதுரை)

பாடலை எழுதிய கவிஞர் மோனைக்காக மாசி மாதம், மாமன் என்ற பதங்களை எல்லாம் போட்டுவிட்டார். வேறு  மாதத்தைப் போட்டிருக்கக்கூடாதா?

சரி போகட்டும். சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும் என்பார்கள். மக நட்சத்திரம் சிறந்த நட்சத்திரம். சிம்ம ராசிக்கு உரியது. அதுவும் மாசி மாதம் மக நட்சத்திரத்திரம் மிகவும் சிறப்பானது. அன்று பெளர்ணமி திதி. ராசிக்கு 7ல் சூரியன் தன்
சொந்த  ராசியைப் பார்த்தவாறு இருப்பார்.

அதனால், அன்றைய தினம் விசேடமானது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதியன்று மாசி மகம்

அன்று என்ன செய்யலாம்?

கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழ்க. பயன் பெறுக!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாசி மகம்

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு  சிறப்பான நாளாகும்.
அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய  இன்பவெள்ளத்தில்
அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு
தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள்  விரதமிருந்து கோயிலுக்குச்
சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில்
கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்)
சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி,
நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய
பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும்.
குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில்
நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரகத்தி அவரை
கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான்
சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார்.
அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது
வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை  அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை  அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார்.
அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும்
இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்"
என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம்
நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான்
தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.

இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த
வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டிருந்தார்.

ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது  அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று.

இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம்  கூறுகின்றது.

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்தால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது  வழக்கம்,

இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

கட்டுரை உபயம்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா. அதில் இதை வலையேற்றியவர்களுக்கு நன்றி!

இந்த ஆண்டு மாசி மகம் மார்ச் 8ம் தேதி - அதை நினைவில் வையுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.2.20

சினிமா: சகலகலாவல்லவனைத் தந்த படம் எது தெரியுமா?


சினிமா: சகலகலாவல்லவனைத் தந்த படம் எது தெரியுமா?

*ஒரு தலை ராகம்* 1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம் .

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் அவற்றோடு நடிப்பு, ஒளிப்பதிவு தயாரிப்பு என்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டு… வெகு ஜன மக்களின் பேராதரவையும் பெற்ற  டி.ராஜேந்தர் என்ற சகலகலாவல்லவனை தந்த படம் அது .

நாயகன் ராஜாவாக சங்கரும், நாயகி சுபத்ராவாக ரூபாவும் "ஒரு தலை ராகம்' படத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார்கள் என்றால் அது மிகையாகாது. மற்றும் உடன் பயின்ற நண்பர்களாக உஷா, தியாகு, சந்திரசேகர்,ரவீந்தர், தும்பு கைலாஷ் போன்ற புதுமுகங்கள் அனைவரும் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திற்கு அருமையாக பொருந்தியதால் படம் மிக யதார்த்தமாக அமைந்தது.

 படத்தின் கதை வசனம் பாடல்களை எழுதிய டி.ராஜேந்தரே பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார். "கடவுள் வாழும் கோவிலிலே', "வாசமில்லா மலரிது', "நான் ஒரு ராசியில்லா ராஜா', "இது குழந்தை பாடும் தாலாட்டு', "என் கதை முடியும் நேரமிது', "கூடையிலே கருவாடு' போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் அந்தக் கால இளைஞர்களை பல மாதங்களுக்கு முணுமுணுக்க வைத்த பாடல்களாகும்.

 படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆண் குரல்தான். பெண் குரல் பாடல் ஒன்றுகூட படத்தில் கிடையாது. காதல் என்ற பெயரில் நாயகனும் நாயகியும் பின்னிப் பிணைவதுபோன்ற காட்சிகளைக் கொண்ட படங்களுக்கு மத்தியில் நாயகனின் சுண்டு விரல்கூட நாயகியைத் தீண்டாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்ட "ஒரு தலை ராகம்' படத்தை ரசிகர்கள் உச்சியில் வைத்துதான் கொண்டாடினார்கள்.

அந்தப் படத்தில்  நடித்த ஷங்கர் ஒருதலை ராகம் ஷங்கர் என்ற பெயரிலேயே இன்றும் அறியப்படுகிறார் .

 "ஒரு தலை ராகம்' முதலில் ரிலீசானபோது தியேட்டர்கள் காற்று வாங்கியது. முதல் ஒரிரு நாட்களில் மிகச் சிலரே வந்து படம் பார்த்தார்கள். படம் பார்த்தவர்களின் வாய்வழி விமர்சனத்தால் கூட்டம் வர ஆரம்பித்தது. இரண்டாவது வாரத்தில் திரையரங்கை விட்டே தூக்குவதாக இருந்த படத்துக்கு மூன்றாவது வாரத்திலிருந்து டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டது. கல்லூரி மாணவ மாணவியர் திருவிழாபோல் கூட்டம் கூட்டமாக "ஒரு தலை ராகம்' ஓடும் திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்ததன் விளைவு, முதல் வாரம் நொண்டியடித்த படம் ஏராளமான திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடியதுடன் சில அரங்குகளில் வெள்ளி விழாவும் கொண்டாடியது. ஒரு வருடம் ஓடிய மிகச் சில தமிழ்ப்படங்களின் பட்டியலில் முற்றிலும் புதியவர்கள் பங்கு கொண்ட "ஒரு தலை ராகம்' படமும் இடம் பிடித்தது.
-------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.2.20

நீங்களும் நானும் விடைதெரியாத கேள்விகளும்!!!!


நீங்களும் நானும் விடைதெரியாத கேள்விகளும்!!!!

விடை தெரியாத ஆறு கேள்விகள் :?

1.எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென அகால மரணம்  அடைவது ஏன் ?

2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுத்தப்படுவது ஏன் ?

3. சுற்றமும் நட்பும் ஏராளமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?

4. இளகிய மனதுடன் பிறருக்கு உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?

5. எந்தவித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?

6. அகம்பாவமும் ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செலவந்தராக இருப்பது ஏன் ?

அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை நம் ப்ராரப்த கர்மா.
இது சாமானியர் அனைவருக்கும் பொருந்தும். விசேஷமாக சரணாகதி செய்து மோக்ஷத்தை எதிர்பார்த்திருக்கும் முமுக்ஷூவுக்கு இதன் மூலம் பகவான் நம் கர்மாவை கழித்துக் கொடுக்கிறார் என்று அர்த்தம்.

இன்னொரு பிறவி எடுத்து கழிக்க வேண்டியதை பகவான் பரம கருணையோடு இப்பிறவியிலேயே கழித்து விட்டு தன்னை வந்து அடையும் படி செய்கிறான்.

இதன் காரணமாக சரணாகதி பண்ணியவனின் துன்பங்கள் பல்மடங்கு பெருகியது போல் தோன்றலாம். ஆனால் அதுவும் பகவானின் பெருங் கருணையே. இது புரிந்த சரணாகதனுக்கு இந்த துன்பங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெற ஒரு விளையாட்டு வீரர் எத்தனை தியாகங்கள் செய்கிறார்?

ஒரு நாலு வருடம் தான் அதற்கு மதிப்பு. அதன் பிறகு உலகம் அவரை மறந்தே போகும். இந்த அல்ப விஷயத்துக்கே இந்தப் பாடுபட மனம் இசைகிறது என்றால் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற ஏன் சிறு துன்பங்களை மனம் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

இந்த கண்ணோட்டத்தில் தான் கண்ணன் கீதையில் சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிப்பாய் .........

மகிழ்வித்து மகிழுங்கள்
---------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.2.20

ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய பாண்டுரங்கன்!!!!


ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய பாண்டுரங்கன்!!!!

ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் இருந்தான்.
அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை 
அந்தக் காலத்தில் நடந்தே செல்ல வேண்டும். 
ஆகையால்  பயணச் செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான்
இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
திருமண செலவுக்கு  உண்டியல் பணம் உதவியது
பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல, உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்
அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான்
மறுபடியும் உண்டியல் உதவியது
பிறகு ஒரு பிள்ளை அதற்கும் அதே உண்டியல்
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, திருமணம் பேரன், பேத்தி இப்படியே காலம் கழிந்தது
தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார்
ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து, பத்ரிநாத் வந்தடைந்தார்

அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது
பட்டரோ இனி ஆறு மாதங்களுக்குப் பிறகு நடை திறக்கப்படும் என கூற, முதியவர் அதிர்ந்தார்
பட்டரின் கால்களைப் பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார், முதியவர் அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது
ஒரு முறை அவனை சேவித்து விடுகிறேன் தாங்கள் நடை திறந்தால் என கண்ணீர் விட்டு அழுதார்
பட்டரோ அசைவதாக இல்லை மூடிய நடை திறக்கப்படாது என கூறி நகர்ந்தார்
இவரோ தன் தலை விதி எண்ணி வருந்தினார்
இனி மேல் எந்த காலத்தில் நான் மீண்டும் நடந்து வந்து, இந்த பத்ரிநாதனை சேவிக்க என அழுது கொண்டு புலம்பினார்
பட்டரோ அய்யா மலையை விட்டு அனைவரும் இறங்கப் போகிறோம், வாரும் எனக் கூற கிழவனோ, நீங்க போங்க நான் சிறிது நேரம் அமர்ந்து விட்டாவது வருகிறேன் எனக் கூறினார்

சரி என அனைவரும் இறங்க சிறிது நேரத்தில் இருட்டத் தொடங்கியது
அப்போது, ஒரு சிறுவன் அங்கு வருகிறான்
அவன் அந்த முதியவரிடம்,
'ஏ தாத்தா! இங்க என்ன தனிமையில் அமர்ந்து உள்ளீர்' எனக் கேட்க அவரோ அந்த சிறுவனிடம் தன் வயிற்றெறிச் சலைக் கூறி அழுகிறார்
இதைக் கேட்ட சிறுவனோ சரி வாரும் அருகில்தான் நான் தங்கியுள்ள குகை உள்ளது அங்கு வந்து உணவருந்தி பிறகு பேசிக் கொள்ளலாம் என கூறி அவரை அழைத்து சென்றான்
அவருக்கு உணவளித்து தாத்தா உறங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் எனக் கூறிச் சென்றான்
முதியவரும் நாரயணா கோவிந்தான்னு பக்தியோடு நாமஸ்மரணம் செய்து விட்டு உறங்கினார்

பொழுது விடிந்தது
கிழவனோ குகையை விட்டு வெளியே வந்தால், கோவில் திறந்துள்ளது.........
கூட்டமோ ஏராளம்........ கிழவனுக்கோ அதிர்ச்சி என்னடா இது! பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார்
நடை திறக்கப்பட்டு உள்ளதே என நேராக பட்டரிடம் சென்று, 'ஏ சாமி கோவில் திறக்கப்படாது என சொன்னீங்க
இப்ப மறுநாளே திறந்து இருக்கீங்கன்னு கேட்க, பட்டரோ யோசித்தார்

இந்த முதியவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரம் அல்லவா வந்தவர் என நினைத்து, சரி அய்யா முதலில் நாரயணனை வணங்கி விட்டு வா எனக் கூற இவரும் உள்ளே சென்றார் அங்கே நாரயணன் அந்த சிறுவனாக தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது

ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளலே அடியார் பொருட்டு நீ ஆடாத நாடகம்தான் என்னவோ எம் வேந்தே இராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி!!!!!
ஆன்மீக வழியில்
பி சரவணன் சண்முகவள்ளி
------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.2.20

தகப்பன் சாமிகள்!!!!


தகப்பன் சாமிகள்!!!!

கோவை போகும் வழியில், மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன்,

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...

கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய்,

ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...

வயோதிகம் காரணமாகவோ,  நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, 
தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...

டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை.

அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், அவர் அமரவே இல்லை.

இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம்.

அருகே சென்று, தோளைத் தொட்டு திருப்பி, நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர்,  மெல்ல புன்னகைத்தே, வேணாம் சார் என மறுத்தார்.

அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.           

ஏனெனில் எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.

ஏன் எனக் கேட்டேன்.

அவங்க கொடுத்திட்டாங்க..

" யாரு " திரும்பி, பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார்.

நிச்சயமாய் நான் கொடுத்ததை போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.

பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும், உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன்.

" பேரென்னங்க ஐயா "

"முருகேசனுங்க "

" ஊருல என்ன வேல "

" விவசாயமுங்க "

" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "

" நாலு வருசமா செய்றேங்க "

" ஏன் விவசாயத்த விட்டீங்க "

மெல்ல மௌனமானார்.

தொண்டை அடைத்த துக்கத்தை, மெல்ல மெல்ல முழுங்கினார்.         

கம்மிய குரலோட பேச துவங்கினார்.

ஆனால், என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும்,

அவரின் முழு கவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே இருந்தது.

" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க,

ஒரு பொண்ணு,ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு.
ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார்.

நானும் முடிஞ்சவரை கடன, உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணுமே விளங்கலே,

கடைசிவரை கடவுளும் கண்ணே தொறக்கலை.

இதுக்கு மேல தாளாதுன்னு, இருக்கிற நிலத்த வித்து, கடனெல்லாம் அடைச்சுட்டு, மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.

பையன் இருக்கானே, அவனைப் படிக்க வைக்கணுமே, அதுக்காக, நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு  சேர்ந்தேன்.
மூணு வேளை சாப்பாடு. தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம்.
இந்த வேலைய பாத்துகிட்டே, பையனை என்ஜினியருக்கு படிக்க
வைச்சேன். படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன்
கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.

அப்படியா, உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர்.

சரி, அதான் பையன் வேலைக்கு போறான்ல,

நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,

நிச்சயமா போவேன் சார்,

பையனே "நீ கஷ்டப் பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான், ஆனா,இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு, அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "

" எப்போ "

" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் சார் "

" சரி, கடவுள் இருக்கார் பெரியவரே,

இனி எல்லாமே நல்லதாவே நடக்கும் ".

பெரியவர் சிரித்தார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது,

ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான்,

பெரியவர் முகம் மலர்ந்தார்.

" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்காங்க" என்றார்.

"என்ன சொன்னீங்க சார்.

கடவுளா !!!

கடவுள் என்ன சார் கடவுளு,

அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார்.

இல்லன்னா, ஊருக்கே சோறு போட்ட என்னைய, கடனாளியாக்கி இப்பிடி நடு ரோட்டுல நின்னு, சாப்பிட வாங்கன்னு கூப்பிட வைப்பானா,

" மனுஷங்க தான் ஸார் கடவுள் " முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து, நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம, இதோ இந்த  வயசானவனுக்கு கால் வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, *என் முதலாளி
ஒரு கடவுள்*,

"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப் படனும், பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு, கூழோ, கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன, எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, *என் மாப்பிள்ளை ஒரு கடவுள்*.

கஷ்டப் பட்டு அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, " நீ வேலைக்கு போவாதப்பா,எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன  *என் புள்ள* *ஒரு கடவுள்*

நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத,*எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு
கடவுள்*.

இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சிஅப்பப்ப ஆதரவா
பேசுற, *உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே
தான் சார் கடவுள்*.

" மனுசங்க தான் சார் கடவுள் "

எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே தோன்றியது,

இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.

வேண்டாமென மறுத்த போதும்,

பாக்கெட்டில் பல வந்தமாய் பணம் திணித்தேன்.

பஸ் கிளம்பும் போது, மெல்ல புன்னகைத்த,

முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,
தலை வணங்கியே, கும்பிட்டேன்.

ஒவ்வொரு வீட்டுக்குமே, இது போன்ற *தகப்பன் சாமிகள்*, நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நமக்குத்தான் எப்போதுமே *கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை*, 🤝

படித்ததில் பிடித்தது
----------------------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.2.20

ஏ.பி.நாகராஜன் அவர்களை அறிமுகம் செய்தது இவர்தான்!!!!


ஏ.பி.நாகராஜன் அவர்களை அறிமுகம் செய்தது இவர்தான்!!!!

எம்.ஏ.வேணு [தயாரிப்பாளர்-நடிகர்-தயாரிப்பு நிர்வாகி]

மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் சாதாரண காவலாளியாக இருந்தவர்தான் எம்.ஏ.வேணு. படத்தொழிலின் நுட்பங்களை
அறிந்துகொண்டு, பட அதிபராக உயர்ந்தவர்.

சம்பூர்ண ராமாயணம்,மாதவி உள்ளிட்ட சிறந்த பல படங்களைத் தயாரித்தவர். இவரது சொந்த ஊர் சேலம். அங்கு  செவ்வாய் பேட்டை பகுதியில் வேணுவின் தந்தை நூல் வியாபாரம் செய்து வந்தார்.
அவருக்கு 4 மகன்கள். மூத்தவர்தான் இந்த வேணு.

வேணு அதிகம் படிக்கவில்லை. சேலம், மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் காவலாளியாக வேலையில் சேர்ந்தார். அங்கு
தயாரிக்கப்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். வி.எம்.ஏழுமலைச் செட்டியாரும், இவரும் சேர்ந்து சில
படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தனர். இவர் இங்கு
தயாரிப்பு நிருவாகியாகவும் இருந்தார். நிருவாகத்தைத்
திறம்பட நிருவகித்தார் வேணு.

சகல நுட்பங்களையும் நன்கு அறிந்த வேணு, மாடர்ன் தியேட்டர்
ஸிலிருந்து விலகி, சிலருடைய கூட்டுறவுடன் “நால்வர்”
என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்தின் மூலமாகத்தான்
கதை-வசன ஆசிரியராகவும், கதாநாயகனாகவும் ஏ.பி.நாகராஜன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெற்றிப்படமானது.

இந்தப் படத்திற்குப் பின் எம்.ஏ.வேணு தனியாகப் பிரிந்து “எம்.ஏ.வி.பிக்சர்ஸ்” என்ற கம்பெனியைத் தொடங்கி முதன் முதலாக “மாங்கல்யம்” என்ற படத்தைத் தயாரித்தார். ஏ.பி.நாகராஜன் கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்தார். பி.எஸ்.சரோஜா, ராஜ சுலோச்சனா, எஸ்.ஏ.நடராஜன், எம்.ஏ.வேணு, ஏ.கருணாநிதி போன்ற பலர் நடித்திருந்தனர்.

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பிரமாதமாக ஓடியது.

பிறகு “பெண்ணரசி” என்ற படத்தைத் தயாரித்தார். ஏ.பி.நாகராஜனும் சூரியகலாவும் இணையாக நடித்தனர். “மனோகரா” பாணியில்
எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமாராகவே ஓடியது.

அடுத்தப் படம் ”டவுன் பஸ்”, என்.என்.கண்ணப்பாவும், அஞ்சலிதேவியும் இணையாக நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமானது. இதையடுத்து “சம்பூர்ண ராமாயணத்தை” பிரம்மாண்டமாக தயாரித்தார். பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்த இந்தப் படத்தைத் தயாரிக்க
நீண்ட காலமானது. இதனால் குறைந்த செலவில் குறுகிய கால
தயாரிப்பாக “முதலாளி” படத்தைத் தயாரித்தார். முக்தா வி.சீனிவாசன் இயக்கிய இப்படம் 1957-இல் தீபாவளிக்கு வந்த பெரிய நடிகர்கள் நடித்த படங்களைப் புறந்தள்ளிவிட்டு, மகத்தான வெற்றி பெற்றது. “சம்பூர்ண ராமாயணம்” 1958-இல் ஏப்ரல் 14-இல் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது.

1959-இல் “பாஞ்சாலி” படத்தைத் தயாரித்தார். ஆர்.எஸ்.மனோஹர், எல்.விஜயலட்சுமி, தேவிகா, ரி.கே.ராமச்சந்திரன் நடித்த இப்படம் தோல்வியடைந்தது. எம்.ஆர்.ராதா, நடிக்க “பணம் பந்தியிலே”
படத்தைத் தயாரித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் பின்
தயாரித்த “தங்க வளையல்”, “துளசி மாடம்”, “பட்டணத்து சிப்பாய்”
ஆகிய படங்கள்  வரிசையாய் தோல்வியைத் தழுவி எம்.ஏ.வேணுவின் அதிர்ஷ்டச் சக்கரம் சுழல்வது நின்றது.

வெற்றிப் படங்கள் மூலம் அவர் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை, தோல்விப் படங்கல் விழுங்கிவிட்டன. இவரது மனைவி பெயர் பார்வதி அம்மாள். இவர்கட்கு 5 மகள்கள்.

நன்றி:- தினத்தந்தி
-------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.2.20

மறுமலர்ச்சி உண்டாக இதைப் படியுங்கள்!!!!


மறுமலர்ச்சி உண்டாக இதைப் படியுங்கள்!!!!

ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

*இழந்த செல்வம் மீட்டு தரும்* " தென்குரங்காடுதுறை "

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!
🗣🗣🗣🗣🗣
*கடன், சங்கடங்கள் போக்கும்* " திருபுவனம் சரபேஸ்வரர் "

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.
🗣🗣
*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம்* "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு

*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர* "வாஞ்ஸ்ரீசியய்ம்"

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள். 🗣🗣🗣🗣

*பிதுர் தோஷம் நீக்கும்* " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.
🗣🗣🗣🗣🗣🗣
*மரண கண்டம் நீக்கும்* " திருநீலக்குடி "
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

*மாங்கல்ய தோஷம் நீக்கும்* " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

*கிரக தோஷங்கள் விலக்கும்* " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.
🗣🗣🗣🗣
*பெண் பாவம் தீர்க்கும்* " திருவிசநல்லூர் "
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.
[24/10, 22:47] ssudarsan2004:  *தேவாரம்  பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்           --- 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                   --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                     ----  02
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள்                        ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள்                           ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள்                          ----- 25

                                                                   மொத்தம்              275
               இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள்                             25

                சிவஸ்தலத்   தொகுதிகள்

       வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்       

1.     *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர்          ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர்         ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை             ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர்          ---  தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி            ----  சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை         --- காமனை எரித்தது
8. திருக்கடவூர்           ---- யமனை உதைத்தது

2.       *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*

1. கேதாரம் (இமயம்)         ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்)      ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி)       ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம்  (மகாராஷ்டிரம்)  ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்)       ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்)   ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்)           --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்)          ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்)        ---- இராமநாதேஸ்வரர்

            *முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர்          ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம்           ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை  ---- நினைக்க முக்தி தருவது
4. காசி                ---- இறக்க முக்தி தருவது

                 *பஞ்சபூத ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம்    ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா                   ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை                ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி                      ----- வாயு (வளி)
5. சிதம்பரம்                          ---- ஆகாயம் (விசும்பு)

                 *நடராஜருக்கான பஞ்ச சபைகள்*

1. திருவாலங்காடு     --- இரத்தின சபை
2. சிதம்பரம்           --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை             --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி      --- தாமிர சபை
5, திருக்குற்றாலம்     --- சித்திர சபை

              *(வியாக்ரபாதர் வழிபட்டவை)  புலியூர்கள்*

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

                  *சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர்  -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி  -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர்   ---- நீலவிடங்கர்  --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

           *சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர்  ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர்                       ---- அசபா தாண்டவம்
3. மதுரை                           ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர்                     ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி              ---- பிரம தாண்டவம்

                *சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

                 *காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

                        *நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*

1.            நந்தி சங்கம தலம்             --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2.            நந்தி விலகியிருந்த தலங்கள்  ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3.            நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்

பாக்கம்
4.            நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5.            நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6.            திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7.            திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

           
          *சப்த ஸ்தான (ஏழூர் விழா)  தலங்கள்*

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

             *திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*

1. திருவோத்தூர்    --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம்    ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம்       --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா       --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல்          --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர்    --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி  --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம்    --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர்     --- அரங்கநாதர்
12. திருவக்கரை     --- அரங்கநாதர்

        *ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்*

     உட்கோயில்                            கோயில்

1. திருவாரூர் அரநெறி                 ----   திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்       ---    திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில்             ----  மீயச்சூர்

               *காயாரோகணத் தலங்கள்*

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

              *மயானத் தலங்கள்*

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

              *கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

             *பூலோக கைலாசம்*

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

       *அழகிற் சிறந்த கோயில்கள்*

1. தேரழகு     ---    திருவாரூர்
2. வீதி அழகு  ---    திருஇடை மருதூர்
3. மதிலழகு   ---    திருவிரிஞ்சை
4. விளக்கழகு  ---    வேதாரண்யம்
5. கோபுரமழகு --    திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

        *பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*

1. திருக்குற்றாலம்  -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம்    --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா  --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர்     --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை         --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம்       --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை.  ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

ஆயிரங்கால்  மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*

1.            மயூர தாண்டவம்  - மயிலாடுதுரை
2.            அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3.            கடிசம தாண்டவம்- திருவக்கரை
4.            சதுர தாண்டவம்- திருநல்நூர்
5.            சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6.            லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

              *பெரிய கோபுரத் தலங்கள்*

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

*மண்டபங்கள் சிறப்பு*

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் -  கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*

1.     திருவானைக்காவல்
2.    ஆக்கூர்
3.    திருத்தேவூர்
4.    திருக்கீழ்வேளூர்
5.    சிக்கல்
6.    வலிவலம்
7.   அம்பர்மகாளம்
8.   தண்டலை நீள் நெறி
9.   திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

                    *பெரிய லிங்கம்*

 கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.
           

                       *பெரிய நந்தி*

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

                   *புகழ்பெற்ற கோயில்கள்*

             கோயில் – சிதம்பரம்
             பெரியகோயில்- தஞ்சை
             பூங்கோயில் – திருவாரூர்
             திருவெள்ளடை- திருக்குருகாவூர்
             ஏழிருக்கை-சாட்டியக்குடி
             ஆலக்கோயில்-திருக்கச்சூர்
             கரக்கோயில்- திருக்கடம்பூர்
             கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
             மணிமாடம்- திருநறையூர்
             தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
             அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
             சித்தீச் சுரம்- திருநறையூர்.

*நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்*

1.            திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2.            திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3.            சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4.            மாணிக்கவாசகர் – தில்லை

*சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்*

1.            மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2.            அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3.            மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்.

*சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்*

1.            மெய்கண்டார்- திருவண்ணாமலை
2.            அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3.            மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்

       பக்தர்கள் பொருட்டு

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.
------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.2.20

குறைகளோடு படைக்கப்பெற்றவர்கள்தான் நாம் அனைவரும்!!!!


குறைகளோடு படைக்கப்பெற்றவர்கள்தான் நாம் அனைவரும்!!!!

♥திருமணம் முடித்த ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் கவலைப் படாதீர்கள்..

♥ கணவன் சரி இல்லையே என்ற கவலையா??? பெண்களே கவலைப் படாதீர்கள்! உங்கள் தாயாரும் ஒரு கட்டத்தில் அப்படி கவலைப் பட்டவர் தான்..கணவனை திருத்தும் திறமை உங்களுக்கு உண்டு என நினையுங்கள்...

♥ மனைவி சரி இல்லை என்ற கவலையா? ஆண்களே கவலைப் படாதீர்கள்! எந்த ஆணுக்கும் 100% விருப்பமான மனைவி கிடைத்ததில்லை... மனைவியை புரிந்து கொண்டு நடக்கும் மனம் வேண்டும் என நினையுங்கள்...

♥குழந்தை இல்லையே என்ற கவலையா....??? கவலைப் படாதீர்கள்! தாய் தகப்பன் இல்லாமல் இருக்கும் பல குழந்தைகள் உங்களுக்காகவே காத்திருக்கிறார்கள் பல இல்லங்களில்...

♥பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! உங்கள் கஷ்டங்களை பிள்ளைகளிடம் மறைக்காமல் வெளியே தெரியும் படி கஷ்டத்தை உணர்த்துங்கள்..

♥சொந்த வீடு இல்லையே என்ற கவலையா??? கவலைப் படாதீர்கள்! இறுதியில் நம்மோடு வரப் போவது எதுவும் இல்லை என நினைத்து வாழும் வரை மகிழ்ச்சியாக வாழுங்கள்....

♥தீராத நோய் என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! மனதில் எந்த நோயும் இல்லை என சந்தோசப் படுங்கள் சுகமடைவீர்கள்....

♥பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா? கவலைப் படாதீர்கள்! நாளைய பெற்றோராக நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்ற பாடமாக அதை எடுங்கள்....

♥படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா??? கவலைப் படாதீர்கள்! இன்றைய உலக பணக்காரர்கள் 90% மாணவர்கள் படித்த வேலை கிடைக்காது கிடைத்த வேலையை செய்தவர்களே...

♥உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா...??? கவலைப் படாதீர்கள்! யாரும் உங்களுடன் கூடப் பிறக்கவில்லை என நினைத்து விடுங்கள்...

♥திருமணம் ஆகவில்லையே எனக் கவலைப் படுகிறீர்களா? உங்களுக்கான சிறந்த துணை காத்திருக்கிறது என நினையுங்கள்.. விரைவில் சிறந்த துணை அமையும்...

♥கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால், அவர்கள் முதுகில் குத்தி விட்டார்களா? கவலைப் படாதீர்கள்! உங்களின் கஷ்ட காலம் அவர்களோடு போய் விட்டது என நினையுங்கள்...

♥ உம்மீதும், குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா? கவலைப் படாதீர்கள்! உலகின் பல சிறந்த மனிதர்கள் மிக கேவலமான துன்புறுத்தலை எதிர் கொண்டவர்கள் தான்....

♥மொத்தத்தில் தன் மனைவியை கணவனை குழந்தையை சகோதரர்களை பெற்றவர்களை கொலை செய்யும் இவ்வுலகம்  நம்மை மட்டும் தங்க தராசிலா வைக்கப் போகிறார்கள்!

♥மனிதர்கள் அப்படித் தான்! *எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!* சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை! ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித் தான் வரும்!. எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு இறைவன் அருளியதை பொருந்திக் கொண்டு வாழ்வோமாக.

♥ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு குறையுடனே படைக்கப் பட்டுள்ளான். எல்லாம் பெற்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை.
-----------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.2.20

புராணக் கதை: காண்டிவ வில்லின் மகிமை!!!!!


புராணக் கதை: காண்டிவ வில்லின் மகிமை!!!!!

*சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*.

*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*.
*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*.

*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*.

*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*.

*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.

*அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்*.

*“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்*.

*பல ஆண்டுகள் கழிந்தன*.

*மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்*.

*“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்*.

*அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்*.

*கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்*.

*அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்*.

*அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்*

*வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்*.

*“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்*.

*"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது*.

*இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்*.

*மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்*.

*ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்*.

*அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்*.

*இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது*.

*இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”*
                   
*( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்*.

*இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்*.
---------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.2.20

Astrology ஜோதிடம்: ஆர்யபட்டா Aryabhatta


Astrology ஜோதிடம்: ஆர்யபட்டா Aryabhatta

ஆர்யபட்டா

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

இடம். நாளந்தா பல்கலைகழகம்.

தெரியாத பெயராக இருக்கிறதா?

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த
அரிய நிகழ்ச்சி  நடைபெற்றது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள்
ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர  விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய
நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும்
மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும்  கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும்
சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு  தான் எழுதவிருக்கும்
தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின்
மீது பக்தியுடன் எழுதுகிறான்.

அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன்
மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை.
அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின்
பெயர் ஆர்யபட்டியா!

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில்
தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக  நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான்
நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம்.

அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள்.
அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த  புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில்
அமர வைத்தான்.

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு  முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள்  எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!

அந்த மகானைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கிப் பாருங்கள்!
http://en.wikipedia.org/wiki/Aryabhata
-------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.2.20

சினிமா: நடிகர் திலகமும் அவருக்குக் கிடைத்த அரிய பாராட்டுக்களும்!!!!


சினிமா: நடிகர் திலகமும் அவருக்குக் கிடைத்த அரிய பாராட்டுக்களும்!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாய்மொழியாக வந்தது!:

1
”ராஜா அண்ணாமலை மன்றத்தில், வியட்நாம் வீடு நாடக அரங்கேற்றம். நாடகத்தில் எனக்கு அம்மாவாக எஸ்.எஸ்.வாசனுடைய அம்மாவின் புகைப்படத்தை மாட்டி வைத்தனர். ஒரு காட்சியில் நான் வசனம் பேசிக் கொண்டு  வரும் போது, அப்புகைப்படத்தின் முன் நின்று, 'எங்க அம்மா வீடு வீடா மாவாட்டி என்னை படிக்க வைச்சா... பிரஸ்டீஜ்  பத்மநாபன் அப்படி வளர்ந்தவன்...' என்று உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அரங்கமே அமைதியாக இருந்தது. ஆனால், முதல் வரிசையிலிருந்து ஒரு விசும்பல் குரல் கேட்டது. நான் மேடையிலிருந்து கீழே பார்த்தேன்.
எஸ்.எஸ்.வாசன் அழுது கொண்டிருந்தார். அன்று என் அப்பாவும்
நாடகத்திற்கு வந்திருந்து, மேடையில் ஒரு ஓரமாக  அமர்ந்திருந்தார்.
நாடகம் முடிந்ததும் எஸ்.எஸ்.வாசன் நேராக மேடைக்கு வந்து அப்பாவை கட்டிக் கொண்டு, 'அடடா...இப்படி ஒரு புள்ளய பெத்திருக்கீங்களே...' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது, என் தந்தை முன், என் நடிப்பிற்கு,
திரையுலக மேதையிடம் இருந்து கிடைத்த விருது.”

2
”எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில்; ஒரு பிராமண குடும்பம் இருந்தது; பனகல் குடும்பம் என்று பெயர். ஒருநாள்  ஷூட்டிங்கிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டில் இருந்த வயதான மாமி,
என்னை வழியனுப்ப வந்த என் மனைவியிடம், 'கமலாம்மா... நேத்திக்கு
உன் ஆம்படையான் நடிச்ச, வியட்நாம் வீடு நாடகம் பார்த்தேன்டீ;
என்னம்மா நடிச்சிருக்காரு. பிராமணனா பொறந்திருக்க வேண்டியவன். நானும் ஒரு குழந்தைய சுவீகாரம் எடுத்திருக்கேன். அவனுக்கு கூட
இவ்வளவு சரியா சந்தியா வந்தனம், அபிவாதயே செய்யத் தெரியல.
உன் ஆம்படையான் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டீட்டார் போ...' என்று பாராட்டு மழை பொழிந்தார். நான் கமலாவை ஏறிட்டு
பார்த்தேன். அவள் முகத்தில் என்றைக்கும் இல்லாத சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. இது, என் மனைவி  முன், எனக்கு கிடைத்த விருது.”

3
”'செவாலியர்' விருது எனக்கு கிடைத்திருக்கிற செய்தியை அறிந்த
இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), என்னை பாராட்டுவதற்காக மாலையோடு வந்தார். அவருக்கு வயது, 85. என் இத்தனை வெற்றிக்கும் காரணியாக இருந்தவர்களில் முதலாமவர் பெருமாள் முதலியார். பராசக்தி
படப்பிடிப்பின் போது என்னைத் திட்டியும், பேசியும், சிலர்
அலட்சியப்படுத்தியபோது, 'இதற்கெல்லாம் மனம் தளர்ந்து விடாதே;
இதை, ஒரு காதில் வாங்கி, மறுகாதில் விட்டு விடு. நீ நிச்சயம் ஒரு
நல்ல  நிலைக்கு வருவாய்...' என்று என்னை உற்சாகப்படுத்தியவர்.
அதன்பின், 32 ஆண்டுகள் என்னுடைய வளர்ச்சியை கண்டு
மகிழ்ந்தவர். அப்படத்தின் இயக்குனர் (கிருஷ்ணன் பஞ்சு) நேரில் வந்து என்னை பாராட்டுகிறார் என்றால், இதை விட எனக்கு வேறு பெரிய
விருது எது?”

நன்றி!
*நடிகர் திலகம்* *சிவாஜி கணேசன்* .
*" கதாநாயகனின் கதை* *நூலில்* *இருந்து"....*
-----------------------------------------------------------------
கேட்டதில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.2.20

சாக்ரட்டீஸ் சொன்ன அறிவுரை!!!!


சாக்ரட்டீஸ் சொன்ன அறிவுரை!!!!

நல்ல, நட்பை இழந்து விடாதீர்கள்... !!!*💐

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , "என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள்
அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???" என்று கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.*

👉 *"யாருக்கும் பயனில்லாத,*

👉 *நல்ல விஷயமுமில்லாத,*

👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,*

*என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*

👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*

உலகில் சிறு தவறு கூட, செய்யாதவர்களே இல்லை.

மேலும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,

வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!* 

நானும்  இழக்க மாட்டேன்.....
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.2.20

ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆனந்தம் இன்று ஆரம்பம்

வேத வியாசர்  மகாபாரதம் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது சரஸ்வதி_நதி பேரிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. இவர் கதை சொல்வதற்கு சிரமமாக இருந்தது. கீழே போ என்று சொல்லி விட்டார்.

பத்ரிகாசிரமத்தில் கீழே போனவள், திரிவேணி சங்கமத்தில் அந்தர்வாகினியாக கலக்கிறாள்.

ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது போலவே, கடவுள் வழிபாடும் இடையூறின்றி இருக்க கோயிலுக்குப் போக வேண்டும்.

குளம், குட்டை, ஏரி. ஆறு என எங்கு தண்ணீர் இருக்கிறதோ, அங்கு தான் தண்ணீர் எடுக்க முடியும். அதுபோல், எங்கு கோயில் உள்ளதோ அங்கு தான் அருள் என்னும் தண்ணீர் கிடைக்கும்.

பகவானுக்கு விக்ரஹநிலை மிக உயர்ந்த நிலை. எப்போது வேண்டுமானாலும் இதை வணங்கப் போகலாம். எப்போது வேண்டுமானாலும், அருளாகிய தண்ணீரைப் பெறலாம்.

நைமிசாரண்யம், திருவேங்கடம் (திருப்பதி), வானுமாமலை என பகவான் பல இடங்களில் விக்ரஹ நிலையில் காட்சி தருகிறான். வேறு நிலையில், அவன் காட்சி தரமாட்டானா என்றால் அதுவும் தருவான்.

அந்தணர்களுக்கெல்லாம் நெருப்பில் காட்சி தருவான். யோகிகளுக்கெல்லாம் உள்ளத்தில் காட்சியளிப்பான்.

இது மட்டுமல்ல... எங்கும் அவர் இருப்பார் என்று ஒரு கட்சி சொல்லும். ஆனால், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு பிரதிமை (உருவம்) வடிவில் காட்சி தருகிறான்.

சரி...கடவுளை நீ பார்த்திருக்கிறாயா என்று யாராவது நம்மிடம் கேட்டால், உருவத்தை மனதில் கொண்டு, பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா? என்றால் ஆம் என அடித்துச் சொல்ல வேண்டும். காரணம், அதனுள் இருப்பவன் நிஜபகவானே.

உருவம் நிஜமென்றால், அதை யாராவது கொள்ளை அடித்து விட்டுப் போகிறார்களே! அது உயிருள்ள தெய்வம் என்றால், அவர்களைத் தண்டிக்க வேண்டியது தானே! அல்லது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே, என்று அடுத்து சிலர் கேள்வி கேட்பார்கள். இதை கரிக்கட்டையால் சுவரில் எழுதுகிறவர்களும் உண்டு.

நம்மிடம் யாரும் கேள்வி கேட்காதவரை தெம்பாக இருப்போம். கேட்டு விட்டால் பயந்து விடுவோம்.

பகவானின் அர்ச்சா வடிவம் (உருவம்) தண்டிக்க வந்ததல்ல. தண்டனை ஏதும் இல்லாமல் கருணையோடு நம்மைக் காண வந்திருக்கிற வடிவம்.

அவன் நம் குற்றத்தைப் பார்ப்பதில்லை. அது நம்மைக் காக்கத்தான் வந்துள்ளதே தவிர, தன்னைத்தானே காத்துக் கொள்ளாது.

 ஒரு அலுவலகம் என இருந்தால் சட்ட திட்டம் வைத்துக் கொள்ளலாம். பகவானும் சட்ட திட்டம் வகுத்துக்கொண்டால் நம்மால் தாங்க முடியுமா? குற்றம் பாராமல் உள்ளார். இழுத்த இழுப்புக்கு வந்துள்ளார். அவர் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வினாடி நினைத்தால் போதும். இங்கு யாராலும் இருக்க முடியாது.

பிரதமர் நம் ஊருக்கு வந்தால், ஜில்லா அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்வர். பரபரப்புடன் இருப்பார். அவர் வந்து நிகழ்ச்சியை முடித்து விட்டுப் போன பிறகு தான் மூச்சு விடுவர்.

அங்கே அவரவருக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் அவரவரும் நிற்க முடியும். மீறிப்போனால், வெளியே தூக்கிப் போட்டு விடுவார்.

பகவானும், சட்ட திட்டம் என சொல்லிக்கொண்டு இப்படி செய்தால் நம்மால் தாங்க முடியுமா!

அவர் கருணையின் வடிவாக உள்ளதால் தான், நம்மால் இங்கே இருக்கவாவது முடிகிறது. அந்த தெய்வத்தை புளியோதரை, புஷ்பம் என சமர்ப்பித்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

 பால், பழமெல்லாம் அது சாப்பிடுமா? என்றால், நிச்சயமாக சாப்பிடும். வாயால் என்ன! மூக்கால் கூட சாப்பிடும். இதற்கெல்லாம் ஆதாரமிருக்கிறது.

தொண்டைமான் சக்கரவர்த்தி சீனிவாசனுடன்_பேசியுள்ளார்.

திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் பெருமாள் ஆற்று மணலைப் பொன்னாக்கி அளித்துள்ளார். காஞ்சிப் பெருமாள் திருக்கச்சி நம்பியுடன் பேசியுள்ளார்.

இவையெல்லாம் உருவ வடிவில் பகவான் நம்மோடு உறவாடுகிறான் என்பதற்கான சான்றுகள் தானே!

அப்படியானால், அவன் நம் முன் நேரடியாகத் தோன்ற வேண்டியது தானே என்று ஒரு கேள்வி எழுகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அவன் நரசிம்மமாக நம் முன்னால் வந்தால், நிலைமை என்னாகும்?

 நாம் என்ன செய்தாலும், போனால் போகிறது என்று தானே விட்டு வைத்துள்ளார்! வேண்டாமென அவர் அடங்கி இருக்கிறார். அதுதான் அவரது பெருமை. நாம் அவருக்கு பிரசாதம் செய்தாக வேண்டுமா?, என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

அவர் பெயரை வைத்து நாம் சாப்பிடத்தான் பிரசாதம். லட்டு, சர்க்கரைப் பொங்கல் என பிரசாதம் வைப்பது என்பது அவரவர் விருப்பம். நம் விருப்பத்தைக் கூட தன் விருப்பமாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

விதுரர் வீட்டுக்கு கண்ணன் வந்தான். அங்கே கறியமுது ஏதும் இல்லை, தாம்பூலம் இல்லை. பழம் மட்டுமே இருக்கிறது. அதையும், பகவான் முகத்தைப் பார்த்தபடியே உறித்துக் கொடுக்கிறார். எப்படி?

பகவானைக் கண்ட பரவச பதட்டத்தில், என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி, பழத்தைக் கீழே போட்டு விட்டு தோலை அவரிடம் கொடுக்கிறார்.

அதையும் அவன் விருப்பமாக ஏற்றுக்கொண்டான்.

ஆக, பகவான் தனக்கு உணவா பெரிதென நினைத்தான்! பக்தனின் பதட்டத்தையும், பக்தியையும், தூய உள்ளத்தையும் அல்லவா உணவாகக் கொண்டான்!

தினமும் அரைமணி நேரமாவது பக்தியுடன் முறைப்படி வணங்குங்கள்.

பெண்கள் இதை அவசியம் செய்ய வேண்டும். விளக்கை கை ஏற்றட்டும். நாம சங்கீர்த்தனத்தை வாய் சொல்லட்டும். மனம் எப்போதும் அவனை நினைக்கட்டும்.

உங்கள் வீட்டிலுள்ள பகவானின் உருவத்தை உங்கள் குழந்தை போல் கவனித்துக் கொள்ளுங்கள்.

குகன் பகவானுக்கு தேன், தினைமாவு கொடுத்தான். சபரி கடித்த பழத்தைக் கொடுத்தாள். அன்போடு எதைக்கொடுத்தாலும் அவன் பெற்றுக் கொள்கிறான். ஆண்டாள் என்ன கொடுத்தாள்!

தூமலர் துவித்தொழுது, என்று பாவையில் பாடுகிறாள். அவள் அளித்தது தூயமலர்கள்
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.2.20

அடடே, இன்று வாத்தியாரின் பிறந்தநாளா?அடடே, இன்று வாத்தியாரின் பிறந்தநாளா?

ஆமாம் சாமி ஆமாம்!!!

பிப்ரவரி 9ம் தேதி சரி, ஆண்டு என்ன?

9-2-1948

72 வயது முடிந்து 73 ஆரம்பம்!!!!

உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி!

நான் தொடர்ந்து வலைப்பதிவில் எழுதுவதற்கு அதுவே காரணம்!!!!

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.20

Astrology: ஜோதிடத்தின் பிரம்மாண்டம்


ஜோதிடத்தின் பிரம்மாண்டம்

நமிதாவின் புதுப்படத்தைப் போட்டுக் காட்டியபோது, என்இனிய தமிழ் மக்களே என்று படத்திற்குப் படம் அன்பொழுக அழைக்கும் இயக்குனர் சொன்னாராம்:

"படத்தில் நமீதா மட்டுமே பிரம்மாண்டமாக இருக்கிறார்"

அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று பிரம்மாண்டமாகத் தோன்றும்.

ஆனால் இறைவனின் படைப்பில் பிரபஞ்சம் மட்டுமே என்றைக்கும் பிரமாண்டமானது

அதன் ஒவ்வொரு பகுதியும் பிரம்மாண்டமானது!

இங்கே கோவையிலிருந்து யானைக்கட்டி செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் தூரம் சென்று, தடாகம் முருகன் கோவிலுக்கு அந்தச் சாலை பிரியும் இடத்தில் நின்று கொண்டு சுற்றிலும் உள்ள மலைகளையும், அதற்குப் பின்புறம் சில்லவுட்டில் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்த்தால்தான், இறைவனின் படைப்பு எவ்வளவு
பிரம்மாண்டம் என்று தெரியும்.

அதுபோல ஜோதிடத்தின் அடிப்படை விதிகளைப் படித்து விட்டு, அதன்அடுத்த பகுதிக்குச் செல்பவனுக்கு அதன் பிரம்மாண்டம் தெரியும்.

கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாக ஜோதிடத்தின் இரண்டு நிலைகளை இன்று உங்களுக்குச் சொல்கிறேன். அப்போதாவது உணருங்கள் அது எத்தனை பிரம்மாண்டமானது என்று!

முடியாதவர்களும், விரும்பாதவர்களும் நமீதாவின் படத்தோடு கழன்று கொள்வது நல்லது!:-)))
----------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள்.உங்கள் ஜாதகம் போலவே இன்னொருவருக்கு அமைய வேண்டும் என்றால் எத்தனை நாட்களாகும்?

ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்வார்கள்.

என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்: "அறுபது வருடங்களில் அதே போன்ற ஜாதகம்    கிடைக்கும்.அதனால் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்!

எவ்வளவு அறியாமை ?

அப்போ அறுபது வயதில் அவரைப் போலவே இன்னொருவர் பிறப்பாரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு இந்திராகாந்தி பிறப்பரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கலைஞர் மு.க. பிறப்பரா?

இல்லை! அது அறிவின்மை!
----------------------------------------------------------------------------------------
இப்பொது சொல்லுங்கள் உங்கள் ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?

யோசித்துப் பாருங்கள்

குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்

இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும் ஆண்டுகள்
= 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.

அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும் அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும் பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்

இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான்.இன்னும் லக்கினமும் வேண்டு மென்றால், மறுபடியும் to be multiplied by 12

விடை ஒரு யுகம் ஆகும்.ஒரு யுகத்திற்கு உங்களுடையதைப் போன்ற ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.

நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!

தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
------------------------------------------------------
12 ராசிக் கட்டங்களை வைத்து ஜாதகங்களை எழுதுகிறோம், அதில் லக்கினமும் ஒன்பது கோள்களும் இருக்கும் இடங்கள் (டிகிரியுடன்) குறிப்பிடப்பட்டிருக்கும்

அதை மாதிரியாக வைத்துக் கொண்டு விதம்விதமான ஜாதகங்களை உருவாக்கிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், உங்களால்
எத்தனை ஜாதகங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும்?

சட்டென்று உங்களால் விடை சொல்ல முடியாது!

இப்போது சொல்லித்தருகிறேன். நினைவில் வைத்துக் கொண்டு யாரும் கேட்டால் பொட்டென்று அடியுங்கள் (வாயால்)

ஒரு லக்கினம் + ஒன்பது கோள்கள் = 10 X 12 ராசிகள் = Ten to the power of Twelve = One followed by Twelve zeros = 100,000,00,00,000 - permutation combination

பாதிப்பேர்கள் பொறியாளர்கள்தானே? கணக்கிட்டுப்பாருங்கள்

ஒருலட்சம்கோடிஜாதகங்களைஎழுதலாம்! இன்றையஉலகஜனத்தொகைவெறும் 700 கோடிகள்தான்!-)))

எல்லாம் கணக்கு அய்யா, கணக்கு!

கிளியை வைத்து அறுபது அட்டைகள் என்ற கணக்கில்லை

முழுவதும் தெரிந்தால் உங்களைப் பிரம்மிக்க வைக்கும் கணக்கு!
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.2.20

மாமனிதர்கள்!


மாமனிதர்கள்!

எனது அலுவல்கள் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் பதிவுகள் எதையும் வலை ஏற்ற முடியாமற் போய் விட்டது. மன்னிக்கவும்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
மாமனிதர்கள்!

*மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!*

*முதல் மாமனிதர் :*

150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு  சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம்
நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.* அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என
சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.* சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய்
மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *“ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”.*
அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட
வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.*
இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத
படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி *“ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது  தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன்,
அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்”* என்றார்.

அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள *ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.*

*இரண்டாம் மாமனிதர் :*

 ஒரு சிறுவன் வீட்டில் படித்து கொண்டு இருக்கிறான். அப்போது வேலைக்கு சென்ற அவன் தந்தை மற்றும் தாய் இரவில் வீடு திரும்பினர். *வீட்டிற்கு வந்த அவன் தாய் உணவு சமைத்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியை பரிமாறினார் அவன் தாய். ஆனால்  அவன் தந்தை கருகியதை பொருட்படுத்தாமல் ரொட்டியை சாப்பிட்டார். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் அந்த தாய், அதற்கு அவன் தந்தை  “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்”*  என்று கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம்
ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தயக்கத்துடன் அச்சிறுவன் கேட்டான் *“அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா?”.* சற்று நேரம் மௌனமாக இருந்த தந்தை கூறினார் *“மகனே உன் அம்மா தினமும்
வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணி விடையும் செய்கிறார். பாவம் களைத்து போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும்.*

*நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”.* இந்த வரிகள் அச்சிறுவனின் மனதில் ஆழ பதிந்தது. அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் *முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்த விஞ்ஞானி Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள்.*

*மூன்றாம் மாமனிதர்:*

 ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்றபோது அவன் ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து உன் தாயிடம் கொடு என்றார். அந்த சிறுவன் மாலை
வீடு சென்றதும் கடிதத்தை அவன் தாயிடம் கொடுத்தான். அந்த கடிதத்தில் *“ உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி குறைவு. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதனால் உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்”* என்று எழுதியிருந்தது. இதை படித்த தாயின் கண்களில் கண்ணீர் வந்தது. அதை பார்த்த சிறுவன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என கேட்டார். கண்ணீரை துடைத்து விட்டு அந்த தாய் கூறினார், இந்த கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா *“நீ மிகுந்த அறிவு திறன் கொண்டவன். பள்ளி உனக்கு தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு தகுதி உடையவன்”* என்று எழுதியிருக்கிறார். அதன்பின் அந்த சிறுவன் வீட்டிலேயே அவர் தாயிடம் பாடம் கற்றார். *அந்த சிறுவன் தான்
1000 ம் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த தாமஸ்
ஆல்வா எடிசன்.*

*உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன
நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம்
தான் - நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.*

*புவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் விவேகானந்தர்* என்னும் ஞானமாய் மலர்ந்தது. *ஜைனுலாப்தீனின் உயர்ந்த எண்ணம் அப்துல்கலாம்* என்னும் விஞ்ஞானமாய் மலர்ந்தது. *நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் 1000 கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது.*

*இவர்கள் எல்லாம் மாமனிதர்கள், இவர்கள் போல் நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவர்கள் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்போல் நம்மால் இருக்க முடியும்.*

ஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் சென்றார். டிக்கெட் வழங்குபவர் கூறினார் *“7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அரை டிக்கெட்”.* அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் வழங்குபவர் கேட்டார்

உங்கள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு அந்த தந்தை கூறினார் 8 வயது. உடனே டிக்கெட் வழங்குபவர் கூறினார்

*“உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, நீங்கள் 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிய போவதில்லை நான் அரை டிக்கெட் கொடுத்திருப்பேன்”.* அதற்கு அந்த தந்தை கூறினார் “நான்
7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது, ஆனால் *ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்கு
தெரியும்”.*

*நம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை - ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க
முடியும் அல்லவா.*

*உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.*

*நன்றி!*
-----------------------------------------------------------------
படித்தேன்: பகிந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.2.20

Astrology: Quiz: புதிர்: 31-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 31-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து,” அன்பர் மிருகசீரிஷ நட்சத்திரக்காரர். அவருடைய 41வது வயதில்
அவருடைய மனைவி குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிவிட்டார். அதிலிருந்து  இவர் தனியாக அவதிப்படுகின்றார்.
குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் நிலைமையில் இல்லை.
ஜாதகப்படி இந்தப் பிரிவினைக்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி
அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: அன்பர் தனுசு லக்கினக்காரர். 10ம் வீட்டில் உள்ள சனீஷ்வரன்
7ம் வீட்டைப் பார்ப்பதோடு (10ம் பார்வை), ஏழாம் வீட்டுக்காரனனா
புதனையும் பார்க்கிறார் (7ம் பார்வை). அத்துடன் சந்திரனுக்கு
7ம் வீட்டையும் பார்க்கிறார் (3ம் பார்வை), அவருடைய மகா திசை
துவங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தனது வேலையைக் காட்டி
பாதகங்களைச் செய்துவிட்டார், குடும்பம் பிரிந்தமைக்கு
அதுவே காரணம்!!!!

இந்தப் புதிரில் 7 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை
வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 7-2-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger Unknown said...
சனி தசை சனி புக்தியில் பிரிவு.சனி 8ஆம் அதிபதி சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில். சந்திரன் 6ஆம் இடத்தில் உச்சம் விரயாதிபதி செவ்வாயின் பார்வையில்.7ஆம் இடம் சனியின் பார்வையில். 7ஆம் அதிபதி நீச்ச பங்கம். சுக்கிரன் உச்ச வர்கோத்தமம். புதன் சுக்கிரன் சனியின் பார்வையில்.
Friday, January 31, 2020 8:21:00 AM
-----------
உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் அடுத்த முறை உங்கள் பதில் வெளியாகாது!
--------------------------------------------------------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி குருவும் ஐந்தில் அமர்ந்துள்ளனர்
2 .இவர்களை விரயாதிபதி செவ்வாய் தன நேரடி பார்வையில் வைத்துள்ளார் மேலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டையும்
பார்வையில் வைத்துள்ளார்,இரண்டாம் வீட்டதிபதி சனியும் கேதுவுக்கும் செவ்வாய்க்கும் இடையில் அமர்ந்து கேட்டுவுள்ளார்
3 .ஜாதகரின் நாற்பத்து இரணடாவது வயதில் சனி திசை சனி புத்தியில் பிரிவு ஏற்பட்டு உள்ளது
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, January 31, 2020 1:45:00 PM
----------------------------------------------
3
Blogger jeya Laxmi. said...
களத்திரகாரகன் சுக்கிரன், களத்திரஸ்தானதிபதி புதன் இருவரும் சனி பகவானின் நேர் பார்வையில் இருக்கிறாரகள். சுக்கிரன் ஆறாமிட அதபதி. லக்கினாதிபதிக்கு எதிரி. குரு அஸ்தமனம் மேலும் விரயாதிபதி செவ்வாய் பார்வையில். சனி திசை சுக்கிர புக்தியில் பிரிவு ஆகும் என அனுமானிக்கிறேன்.
Saturday, February 01, 2020 12:03:00 PM
-------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 27 ஏப்ரில் 1952 இரவு 10 58 மணிக்குப் பிறந்தவ்ர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
லக்கினத்திற்கு 7ம் இடத்திற்கு அதிபதி புதன் 4ல் அமர்ந்து நேசம் அடைந்தார். அந்த 4ம் இட அதிபதி 5ல் அமர்ந்து சூரியனால் எரிக்கப்பட்டு அஸ்தஙதம் அடைந்தார்.லக்கினத்திலேயே மாந்தி.
6ம் இடத்துக்காரன் சுக்கிரன் 7ம் இட அதிபதி புதனுடம் இணக்கம் எனவே மனைவியுடன் பகை.7ம் இடத்திற்கு சனியின் பார்வை.
பாவாதிபலன் அட்டவணைப்படி 7ம் இடம் 9வது ரேங்க் பெறுகிறது. அஷ்ட வர்கத்தில் 7ம் இடத்திற்கு 21 பரல் மட்டுமே.
42 வது வயதில் சனிதசா சனி புக்தி.
நவாம் சத்தில் 7ம் இடத்தில் எட்டாம் அதிபதி.செவ்வாயால் சுக்கிரன் கெட்டது. 7ம் அதிபன் குருவிற்கு சனியின் சம்பந்தம்.மேலும் கேதுவின் சம்பந்தம்.சனி நவம்ச 6ம் நாயகன் ஆதலால் 7ம் அதிபன் குருவுடன் பகையாக இருப்பது.
இவையெல்லாம் மனைவி பிரிவுக்குக்காரணம்.
Saturday, February 01, 2020 12:50:00 PM
----------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் :
மனைவி மக்களை பிரிந்து வாழ ஜாதகப்படி உள்ள காரணங்கள்
1. தனுசு லக்கினம் , ரிஷப ராசி மிருகசீரிட நக்ஷத்திர ஜாதகரின் பிரிவிற்கு லக்கினம், இரண்டாம் இடம், ஏழாம் இடம், ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடத்தை பார்க்க வேண்டும்.
இவரின் லக்கினத்திலேயே மாந்தி உள்ளது, இது நீண்ட இன்பத்தை தர இயலவில்லை, மேலும் லக்கின அதிபதி குருவும்
உச்ச சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் ஆகி குடும்ப பிரிவை அதிகமாக்கினார் , ஏனென்றால் செவ்வாயின் நேரடி
பார்வை இதை செய்தது.
இரண்டாம் இடத்து அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தாலும் ஆறாம் அதிபதி சுக்கிரனின் உச்ச பார்வையால் பாதிக்க பட்டது. மேலும் ஏழாம் அதிபதி புதனும் நீச பங்கம் பெற்று சுக்கிரனோடுடன் அமர்ந்து திருமண வாழ்வை இனிக்க
செய்யவில்லை.
ஒன்பதாம் இடத்தில் அமர்ந்த கேதுவும் சுப பலன்களை தர இயலவில்லை. ஆதலால் இவரின் இரண்டாம் இடத்து அதிபதி சனியின் தசையில் சனி புக்தியில் குடும்ப பிரிவு ஏற்பட்டது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Saturday, February 01, 2020 7:34:00 PM
-----------------------------------------------------
6
Blogger Ram Venkat said...
வணக்கம்.
தனசு லக்கினம், ரிஷப ராசி ஜாதகர்.
ஜாதகப்படி அவரின் 42 வயதில் மனைவி, குழந்தைகளின் பிரிவினைக்கு என்ன காரணம்?
1) லக்கினாதிபதி குரு 5மிடத்தில் வலுவுடன் அமர்ந்துள்ளார்.
2) குடும்பாதிபதி சனி 10மிடத்தில் வக்கிர கதியுடன், ராகு மற்றும் செவ்வாய் இருபுறமும் சூழ்ந்து பாபகர்த்தாரி தோசத்துடன் உள்ளார்.
3) களத்திராதிபதி புதன் நாலாமிடத்தில் நீசமடைந்து அமர்ந்தாலும், நீசபங்கமடைந்துள்ளார். கத்திரியின் பிடியிலுள்ள
அவரின் மேல் வக்கிர சனியின் நேர் பார்வையும், 10ம்பார்வை 7மிடமான களத்திர பாவத்திலும் விழுகிறது.
4) ஜாதகரின் 42ம் வயதில் சனி தசை, சனி புத்தி நடப்பில் இருந்த போது அவரின் குடும்பத்தில் நடந்த குழப்பம் காரணமாக அவரின் மனைவி மற்றும் குழந்தைகளின் பிரிவு ஏற்பட்டது.
5) சனி தசை முடிந்து, புதன் தசை நடப்பு உள்ளதால், பிரிந்தவர் சேருவதற்கான வாய்ப்பு தற்சமயத்திற்கு இல்லை.
Saturday, February 01, 2020 11:05:00 PM
-----------------------------------------------------
 7
Latha Ramesh <latha19564@gmail.com>
answer to quiz on 31.1.2020
Sat, 1 Feb, 20:09 (9 hours ago)
to me
Sir,
The reasons are
1. lagna lord is dhanush is with mandi
2 mandi is aspecting the 7th house whose Lord is mercury
3 mercury is neechan and is having papa kartari yogam (rahu and sun) on both sides of it.
4.sani the 2nd house Lord is also in the 7th place from mercury.
5. Finally the concerned person dasa bhukti  is sani
These are the reasons for the separation.
regds.
Hema
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!