மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.5.17

ராஜராஜ சோழனின் பெருந்தன்மை!


ராஜராஜ சோழனின் பெருந்தன்மை!

ராஜ ராஜ சோழன் அரியணை ஏறிய காலம். இவர் மகள்களில்  மூத்தவள் (மாதேவடிகள்) புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு மதம் மாற முடிவெடுத்த சமயம்.

காலை அரசவையில் மகள் வந்து நின்று தான் புத்த பிஷுனியாக மாறப் போவதாக உறைக்க அரசன் மறுப்பேதும் கூறாது ஒத்துக்கொண்டு அனுப்பினார்

சில காலஞ்சென்று அரசன் தன் மகளைக் காண இளவரசர் ராஜேந்திரனுடன் நாகையிலிருந்த சூடாமணி விகாரம் செல்கிறார். பிஷூக்கள் அரசரை வெளியில் வந்து வரவேற்று, மகளைக் காண்பதாக இருந்தால்  புத்தரின் சந்நிதானத்தில்தான் காண வேண்டுமென்றும் அரச அம்சங்களின்றிப் பார்க்க வேண்டுமென்றும் விதிகளின் அடிப்படையில் அனுமதித்தனர்

மறுக்காமல், அரசன் இதைக் கடைப்பிடித்து உள்ளே சென்று கண்டபோது முதல் முறையாக உறைந்து போனார். பாலுட்டி சீராட்டி வளர்ந்தவள் அன்று தலை வழித்து சிறு காதனி கூட இன்றி அரசரை சந்தித்தாள். புத்தரின் பாதத்தில், நான் நிம்மதியாக இருக்கிறேனென்று கூறிவிட்டு சென்றவிட்டாள்

வருந்திய முகத்துடனும் சிந்தனை பரவி காணப்பட்டவரைப் பார்த்து ராஜேந்திரன், "தந்தையே சொல்லுங்கள் தகர்த்து விடவா இந்த விகாரத்தை!" என்று வினவ தந்திரத்தில் வல்லவர் விடையளித்தார்:

    "மகனே இதைத் தகர்த்தால் நமக்கு நஷ்டமே, லாபமில்லை அதை விடுத்து..நமது சைவ விழாக்களையும் வழிபாடுகளையும் விரிவு படுத்துவோம்...அன்றி புத்த மதத்தை எதிர்த்தால் மக்கள் அதிக அளவில் மதம் மாற நாமே வித்திடுவதாகும், மேலும் "சீ விஜய"(Singapore) சாம்ராஜ்ய வர்த்தகம் பாதிக்கப்படும், ஆக இவர்களத் தொடாமல் நம்மை வளர்த்து இவர்களப் புறந்தள்ள வேனுமென்றார்

இதன் பிறகு வளர்ந்ததுதான் நாம் இன்று கானும் பெரிய கோவில். காலப்போக்கில் புத்த மதமும் மறைந்தது

இந்த நிகழ்வை தற்கால நம் சமூக நிலைக்கு உவமையாக எடுத்துக்கொள்ளுங்கள். கலப்பு மணங்கள் செய்பவர்களுக்கு, குறிப்பாக வேற்று மதங்களில் திர்மணம் செய்து கொள்பவர்கள் - அவர்கள் சுயத்தை இழக்க  நேரிடும் (அரச அம்சங்களைச் சோழன் மகள் களைந்தது போல) என்ற தெளிவில்லை.

ஆகவே கலப்பு மணங்களை எதிர்க்காதீர்கள். காலப் போக்கில் மாறியவர்களே உணர்வார்கள் என்று விட்டுவிடுங்கள்!

படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.5.17

தேவேந்திர யோகம்!!!


தேவேந்திர யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்!!!!

தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

எங்களுக்கு அமெரிக்க அதிபதியாக இருப்பவரைத்தான் தெரியும், தேவேந்திரனைப் பற்றித் தெரியாது என்று யாரும் சொல்ல வேண்டாம். கீழே சுட்டியில் உள்ள செய்தியைப் படித்துப் பாருங்கள்

சுட்டி:-http://en.wikipedia.org/wiki/Indra

அடடா, அருமை சார், எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இதுவரை நீங்கள் எழுதியதில் எந்த யோகமும் இல்லை. இதுவாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று ஆர்வமுடன் சொல்பவர்களுக்கு இந்த யோகத்தில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அந்த நிபந்தனை ஒத்துவந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.

முதலில் நீங்கள் ஸ்திர ராசிக்காரரா (Fixed signs)என்று சொல்லுங்கள்

“சார், வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்துவிடுங்கள். ஸ்திர ராசி எதெது என்பதைப் படித்தேன். மறந்து விட்டது. அதையும் நீங்களே சொல்லி விடுங்கள்” என்று சொல்லும் மாப்பிள்ளை பெஞ்ச் மைனர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படியுங்கள்.

ஸ்திர ராசிகள் (Fixed signs)
1. ரிஷபம் (Taurus),
2. சிம்மம் (Leo),
3. விருச்சிகம் (Scorpio)
4. கும்பம் (Aquarius)

ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்!

”சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா?”

பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள்.

உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்
------------------------------------------------------------------------------
யோகத்தின் பலன் என்ன?

1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome)
2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான்.
3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?)
4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், என்ன சஸ்பென்சை இழுத்துக்கொண்டே போகிறீர்கள். நீங்கள் எழுதுவது கதையல்ல - ஜோதிடக் கட்டுரை, அதை நினைவில் வையுங்கள்”

சரி, உங்கள் ஆர்வம் புரிகிறது. இதோ அந்த யோகத்திற்கான அமைப்பைச் சொல்லிவிடுகிறேன்.

1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும்
2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும்.
3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும்
4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும்

அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்:
லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி
இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன்

A planetary combination formed by Ascendant placed in a fixed sign, Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and
the lords of 2nd and 10th houses in mutual exchange.

This yoga is powerful in making the individual extremely beautiful, loved by pretty women, owner of vast wealth and villas.
He attains a very high social status.
-----------------------------------------------------------
சார், படத்திற்கு என்ன விளக்கம்?

தேவேந்திரன் ஐராவதம் எனும் வெள்ளை நிறமுடைய யானையை வைத்திருந்தானாம். அதை நினைவு படுத்த இந்தப் படம். இப்போது வெள்ளை யானை கிடைக்காது. ஆகவே இந்த யோகம் உள்ளவர்கள். வெள்ளை நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் அல்லது மெர்சிடஸ் பென்ஸ் அல்லது பென்ட்லி கார்களை வைத்துக் கொள்ளலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் வகுப்பறைக் கண்மணிகள் யாருக்காவது இந்த அமைப்பு இருந்தால் சொல்லுங்கள். நான் நேரில் வந்து பார்க்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.5.17

இறைவன் தரும் வாய்ப்பு!


இறைவன் தரும் வாய்ப்பு!

எத்தனை அயோக்கியனாக இருந்தாலும் அவன் திருந்த, சிந்திக்க இறைவன் ஒரு வாய்ப்பை அளிப்பான். இரணியனுக்கு அந்த வாய்ப்பு நரசிம்மபிரபுவின் மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது.

அவன் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. ராவணனுக்கு அந்த வாய்ப்பு "இன்றுபோய் நாளைவா" வில் கிடைத்தது.

அவனும் அதை கோட்டை விட்டான். துரியனுக்கு கண்ணன் தூதின்போது கிடைத்தது.

விஸ்வரூபமெடுத்து நாராயணனாய் துரியன் முன் நின்று தான் யார் என்பதை உணர்த்தி துரியன் சிந்திக்க ஒரு வினாடியை கொடுத்தான்

இறைவன். இதை "moment of truth" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறை இந்த "moment of truth" வரும்.....அந்த வினாடியில் எடுக்கும் முடிவு தான் அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.

அருச்சுனனுக்கு போரின்போது இந்தக் குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்து "போரிடுகிறாயா,வில்லை கீழே போடுகிறாயா?" என்று கேட்டான் இறைவன்.

கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் அருச்சுனன்.

கர்ணன் முன் தோன்றி அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தான் இறைவன்.

செஞ்சோற்றுகடனின் பேரில் அதை முட்டாள்தனமாக நிராகரித்தான் கருணன்.

கும்பகருண்னைபோல் கருணனும் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க இறைவன் அளித்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டான்....
பாகவதத்தில், புராணத்தில் இது வழக்கமாக கானப்படும் நிகழ்வுதான்.

இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.

திருந்த எத்தனை தூரம் சந்தர்ப்பம் தர முடியுமோ  அத்தனை
தூரம் சந்தர்ப்பம் கொடுக்கிறான்.

இரணியனை எப்போது அவன் கொன்றான்?

பிரகாலாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும் அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தான்....

ஒரு சிறுவனை கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும் இரணியன் திருந்தவில்லை.

இறுதியில் நரசிம்மமாய் வந்து இரணியனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி அவன் விழிகளை உற்றுநோக்கினான் நாராயணன்.

அப்போதும் இரணியன் மனதில் துளி பக்தி வரவில்லை.துளியும் அவன் திருந்தவில்லை.இரணியனின் விழிகளில் நாராயனன் கண்டது வெறுப்பைத்தான்.

இனிமேல் இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்தபின்னரே அவன் வயிற்றை கிழித்து அவனை மாய்த்தான் நாராயணன்

ஆகவே இறைவன் தரும் வாய்ப்பைப் பயன் படுத்தத் தவறாதீர்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.5.17

மீராவைக் கொண்டாடும் அவர்கள் ஏன் ஆண்டாளைக் கொண்டாடுவதில்லை?


மீராவைக் கொண்டாடும் அவர்கள் ஏன் ஆண்டாளைக் கொண்டாடுவதில்லை?

மீரட் புரட்சி நடக்கும் முன்பே வேலூர் புரட்சியை  நிகழத்தியர்கள் நாங்கள்..நீங்கள் மீரட் புரட்சியையே முதல் இந்திய சுதந்திர போராக பதிந்து கொண்டீர்கள்.

ஆங்கிலேயரை  வெற்றிக்கொண்ட வேலுநாச்சியாரை தந்தவர்கள் நாங்கள்..நீங்கள் தோற்ற ஜான்சிராணியே வீரத்தின் அடையாளமாக கொண்டாடினீர்கள்..

வங்கத்தேசத்திற்கு முன்பே மொழிப்போரை நிகழ்த்தி மொழிக்காக அதிக உயிர் தியாகம் செய்தவர்கள் நாங்கள்.

நீங்கள் வங்க தேசத்தினருக்காகவே தாய்மொழி தினத்தை நினைவு கூறுகின்றீர்கள்..

வடக்கே ஒருத்தி (மீரா) வடமொழியில் கடவுளை கணவனாக அடைய பாடி கடைசி வரை காத்திருந்தபோது..

தெற்கே ஒருத்தி தமிழில் திருப்பாவை பாடி சூடி தந்த சுடர்கொடியாய் (ஜோதியாக மாறி மரணம் இல்லாத பெருவாழ்வு பெற்ற  ஆண்டாள்) அதே கடவுளை கணவனாக அடைந்தாள்..

நீங்கள் வடமொழியை  தேவபாசை என்றும்  உலகில் முதலில் தோன்றிய மூத்த  மொழியாம் தமிழ்மொழியை  நீசபாசை என்றீர்கள்..

நாங்கள் அவ்வையார், வள்ளுவர், கம்பன், வள்ளலார்,  பாரதியை என பலரை  தந்தோம்.. நீங்கள் தாகூரை மட்டும் கொண்டாடினீர்கள்..

நாங்கள் கணவனுக்கு கற்பை நீருபிக்க வேண்டி  தீயில் மூழ்கி வந்த உங்கள் சீதையையும் வணங்குகிறோம்..(நீங்கள் கற்புடன் அனுப்பிய இராவணனை அரக்கனான கதைகட்டி புராணத்தை மாற்றி காட்டுறீங்க)

 கணவனுக்காக மரணத்திற்கான  நீதி வேண்டி பாண்டிய அரசனை எதிர்த்து தனியாக போராடி வென்ற கற்பு தெய்வமே எங்கள் கண்ணகி தாய்  மதுரை நகரை தீயிட்டு எரித்த கற்புகரசி  கண்ணகியை நீங்கள் யாரென்றே இன்னும் அறிவதில்லை..

உங்களது ரிஷிகளை பற்றி எங்களுக்கு கற்பிக்கிறீர்கள்..

எங்களது சித்தர்களை பற்றி நீங்கள் கற்பதில்லை..

நாங்கள் குப்தர்களை பற்றி படிக்கும் அளவுக்கு நீங்கள் சோழப்பேரரசை சேர, பாண்டியர்  பற்றி நீங்கள் அறிவதில்லை..

கலிங்கம் வென்ற அசோகரை நாங்கள் புகழ்கிறோம்..

கல்லணை கட்டிய கரிகால் சோழனை நீங்கள் பேசுவதில்லை..

இராமகிருஷ்ணரும், சீரடி சாய் பாபாவும் எங்கள் தமிழ் நாட்டில்  வழிபாட்டு கடவுளாக விளங்குவது உங்களுக்கு தெரியுமா?

கருணை இல்லாத ஆட்சி கடிந்து ஒழிக! என  ஆங்கிலேயர் ஆட்சியில் முழங்கியவர்  அனைத்து உயிர்களும் ஒருமைப்பாடு உணர்வுடன்  எல்லா உயிர்களும் இன்புற்று  வாழ வேண்டிவர்  ஜீவகாருண்ய ஒழுக்கம்  கடைபிடித்து மரணம் இல்லாத  பெரும் வாழ்வு பெற்ற மகான் இராமலிங்க அடிகள் என்கிற   வள்ளலார் பற்றி வட (மட) நாட்டு மக்களுக்கு  தெரியுமா?

தமிழக முதல்வராக விளங்கி ஓமந்தூரார் பதவி துறந்து எளிமையாக  வடலூர் சென்று கடைசி காலம் வரை திரு இராமலிங்க அடிகளார் அவர்கள் திருப்பணி செய்து வாழ்ந்தது போல் முதல்வர் அங்கே யாராவது   உண்டா?

தமக்கு வந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு விட்டுகொடுத்து உலகறியச் செய்தவர் இராமநாதபுர சேதுபதி மன்னர் அவரை நீங்கள்  அறிந்துகொள்ள நினைத்தது உண்டா?.

நேதாஜி படைகட்டியபோது தமிழர்களிடத்தில் அதிக அளவு ஆதரவை திரட்டி தந்தவர் வள்ளலார் வழிவந்த எங்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பதை நீங்க எத்தனை பேர் அறிவீர்

தமிழகத்தின் தெருக்கள் தோறும், வீடுகள் தோறும் நேதாஜிகளும், காந்திகளும், அம்பேத்கர்களும் உண்டு.

எத்தனை வீர பாண்டிய கட்டபெம்மண் வ.உ.சிக்கள்,புதுமை பாரதிகள், ஈ.வே.ரா பெரியார்கள், இராஜதந்திர  இராஜாஜிகள், காமராசர்கள், பசும்பொன் தேவர்கள், கக்கன்கள், அறிஞர் அண்ணாகள், கலாம்கள் உங்களிடத்தில் உண்டு..?

கல்விக்கான தங்கள் சொத்துகள் அனைத்தும் வழங்கிய கல்வி வள்ளல்கள் பச்சையப்பா முதலியார், தியாகராயர், செங்கல்வராயர்,அழகப்பர்  இப்படி பட்டியல் பெரியது

உலகம் போற்றி கொண்டாடும் எங்கள் சிற்பம் மற்றும் நாட்டிய கலைகள்

 தமிழ் மகள் முறத்தில் புலி அடித்து விரட்டிய வீரம் எங்கள் வீரம்

 ஆராய்ச்சி மணி கட்டி பசுவுக்கு நீதி அளித்த  மனுநீதி சோழன் தந்த  நீதி
எங்கள் நீதி

முல்லை கொடிக்கு தேரையும், புறாவிற்காக தான் தொடையையும்  தந்த மன்னர்கள் கொடை எங்கள் கொடை (அரிசி பானையில் இருந்தும் அள்ளி கொண்டு சென்றது இல்லை)

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்..ஆம்.. நாங்கள் தமிழர்கள்.*.
---------------------------------------------------------
படித்ததில் அதிர்ந்தது.உங்களுடன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.5.17

என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்!!


என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்!!

1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது.
நாம் அணைக்கக் கூடாது.

3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது

5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது

.9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது

.15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.

19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.

20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும் , வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது.

படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.5.17

Astrology: ஜோதிடம்: சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்

Astrology: ஜோதிடம்: சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்

சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் மொத்தப் பரல்களாகும்.

அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாகக்கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்

அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.

பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
அழகான பெண்ணான ஹன்சிகா மோத்வாணிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் நல்லுசாமிக்கும் அதே 337தான். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்திக்கும் அதே
337தான்

பின் வாழ்க்கை எவ்வாறு வேறு படுகிறது? அதை வரும் பாடங்களில் விரிவாகப் பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------------------
சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்

மொத்தப் பரல்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்
அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த  வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி  நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,
தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில்  comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,
அவர்களுடைய  தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம்.
 (சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்

18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்
பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.

19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்
இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது

பாடம் பெரியதாக உள்ளதால் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் அடுத்த பகுதியை பின்னொரு நாளில் பார்க்கலாம்!!!!

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.17

ராகு கேது தோஷமுடையவர்கள் செல்ல வேண்டிய இடம்


ராகு கேது தோஷமுடையவர்கள் செல்ல வேண்டிய இடம்

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி

பிரம்மா வழிபட்டு, திருமால் பூஜை செய்து, கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததும், மேருமலையின் ஒரு துண்டு
வைரக்கல்லாகி விழுந்த இடத்தை தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவதும், போன்ற பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ள
மகுடேஸ்வரர் கோவில்.

சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி.

இறைவன் பெயர்: கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி.

இறைவி பெயர் : வடிவுடைநாயகி, சௌடாம்பிகை.

அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.

தல விருட்சம் : வன்னி.

தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவிரி.

ஆகமம் : சிவாகமம்.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யார்
வலிமை மிக்கவர் என்ற போட்டியில், ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் பலமாக சூறாவளி காற்றை வீசி ஆதிசேஷனை மேருவில் இருந்து கீழே தள்ள முயன்றார்.

அப்போது மேரு மலை சிதறி ஐந்து துண்டுகளாக பூமியில் விழுந்தன.
அவை ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கங்களாக ஆனது. இவற்றில்
வைரக்கல் கொடுமுடியில் விழுந்தது. அதனால் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருப்பதாக ஐதீகம்.

மேருவில் இருந்து சிதறி வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர, வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.

மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.

கொடு என்றால் மலை, முடி என்றால் சிகரம். மலை சிகரமே
மூலஸ்தானமாக உள்ளதால், மூலவர் கொடுமுடிநாதர் என அழைக்கப்படுகிறார்.

தலச் சிறப்பு :

காவிரியின் மேல் கரையில் உள்ள இக்கோவில் பல தீர்த்தங்களை
உடையது. காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும்,

மகாவிஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும், தரிசித்த மாத்திரத்தில்
பிறவியை போக்கி முக்தியை தருவது, சுயம்பு மூர்த்தியாகிய மகுடலிங்கர் கோவிலாகும்.

உலகை சமநிலைப்படுத்த செல்லும் போது கயிலையில் நடந்த பார்வதி, பரமேஸ்வரன் திருமணக் காட்சியை அகத்தியர் கண்டுகளித்த இடம்
கொடுமுடி.

இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்களும், தனித்தனி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

ஆதிசேஷனால் உருவான கோவில் என்பதால் இங்கு நாகர் வழிபாடு விசேஷம். காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம்,
பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம்
ஆகியவை இக்கோவிலின் தீர்த்தங்களாகும்.

மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள்
சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின்
இக்குறை தீர்ந்தது.

எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான்.
பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று.

பிரார்த்தனை :

ராகு கேது தோஷம் உடையவர்கள் இக்கோவிலில் பரிகாரங்கள் செய்தால் திருமணத்தடை நீங்கும்.

குழந்தைப்பேறு கிட்டவும் இக்கோவிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.5.17

நமது சுக துக்கங்களை எவை முடிவு செய்கின்றன?


நமது சுக துக்கங்களை எவை முடிவு செய்கின்றன?

ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வ்ந்தார். சிறு
வயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று
சிறந்த மனிதராய் திகழ்ந்தார்.அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக் கொடுப்பவர் யாருமில்லை.

அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக் கொடுத்தார்களே அன்றி அள்ளிக் கொடுக்கவில்லை.அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை. அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப் பேசி வந்தாள்.

அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்றசெல்வ வளம் மிக்கவராகத் திகழ்ந்தார்.அவரது நிலையைச் சொல்லிக் காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச் சேர்க்கும்
வழியைப் பின்பற்றும்படி கூறிவந்தாள்.

அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவதாகக் கூறிப் புறப்பட்டார்.

அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாகத் தன் வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்.இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர்.தனபாலனின் வில் வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்கவிறு
விறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.

இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி தாயார் பார்த்தாள். பின்அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப் பார்த்தாள்.

கண்களை மூடிப் படுத்திருந்த அந்த மாயக் கண்ணன் புன்னகை புரிந்தார்.

அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன
அநீதி. சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக் கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை?அவருக்கு செல்வ
வளத்தைத் தரக்கூடாதா?"என்றாள் சற்றே கோபத்துடன்.

அதே புன்னகையுடன் நாராயணர்"என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு
அதிபதி?செல்வத்தை அள்ளிக் கொடுக்கவேண்டியதுதானே?" என்றார்
கள்ளச் சிரிப்போடு.

"நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத் தடுத்தார் நாராயணர்.

"லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜன்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை.நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்."

"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி.அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்."என்றவளைப் பார்த்துப் புன்னகைத்த நாராயணர்,

"சரி. உன் விருப்பப் படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால் இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்." என்று அனுமதியளித்தார்.

மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன் மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.நமது
ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம் என்ற எண்ணத்துடன் தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.

அதே சமயம் தன் கையிலிருந்த பொன் மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி.கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையைத் தாண்டிச் சென்று தன் கண்களைத் திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல்நடப்பது ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானு கோடி நன்றிப்பா" என்று இரு கை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.

வைகுண்ட நாராயணன் சிரித்தார்."என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே."

"சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கிறேன்."

"சரி.உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன்.

இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.

தன் முன் கிடக்கும் அந்த மூட்டையைக் கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன்.மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள்.

நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள்.இப்போதும் இறைவன் புன்னகைத்தார்.

"லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார்.உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே.என்ன செய்வது.அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்."என்றார் பெருமூச்சுடன்.அதேசமயம் கையில்
எடுத்த செல்வத்தைப்பிரித்துப் பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாதஅந்தப் பாதையில் யார் இந்த மூட்டையைப் போட்டிருப்பார்?யாரேனும் தேடிவருவார்களா என்று
அங்கேயே காத்திருந்தான்.

அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று அடைந்த தனபாலன் தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டு இருந்தான்.அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்துஏன் இங்கேயே தங்கிவிட்டாய்? என்று விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச் சொன்னான்.தான் தவறவிட்ட திரவியத்தைப் பற்றிக் கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக் கொடுத்து ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா?நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான்.

தனபாலனும் அதைப் பெற்றுக் கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான்.மிகுந்த நல்ல காரியம் செய்து விட்டது போல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்த
செல்வம் அவனைச் சேரவில்லை பார்.இது அவனது பூர்வ ஜன்மவினை."என்றார் அதே புன்னகையோடு.

இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனைச் செல்வந்தனாக ஆக்க முடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி."என்று கூறித் தலைவணங்கி நின்றாள்.

நாமும் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும்
நன்மையே நினைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற உண்மையைப்
புரிந்து கொண்டு வாழவேண்டும்.

தெய்வீகத்தை உணர்ந்து நடக்க வேண்டும்!!!

படித்தேன: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.5.17

சிறந்த பயிற்சி எது?


சிறந்த பயிற்சி எது?

மனவளக் கட்டுரை!!!

கீதை உபதேசங்கள்
------------------------------
🎀01. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
---------------------------------
🎀02. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
------------------------------
🎀03. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
---------------------
🎀04. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
------------------------------
🎀05. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
------------------------------
🎀06. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
------------------------------
🎀07. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.
------------------------------
🎀08. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
------------------------------
🎀09. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
------------------------------
🎀10.  சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
------------------------------
🎀11. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
-----------------------------
🎀12.  உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
------------------------------
🎀13. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
------------------------------
🎀14. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.
------------------------------
🎀15.  சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
------------------------------
🎀16.  மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.
------------------------------
🎀17.  தனியாக பயணம் செய்ய வேண்டாம் .
------------------------------
🎀18.  உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
------------------------------
🎀19. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.
------------------------------
🎀20. உணவை குறைக்கூற வேண்டாம்.
------------------------------
🎀21. பெருமை வேண்டாம்.
------------------------------
🎀22 வறுமையின் போது பொறுமை காக்கவும்.
------------------------------
🎀23. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
------------------------------
🎀24. செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
------------------------------
🎀25. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
------------------------------
🎀26. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
------------------------------
🎀27. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.
------------------------------
🎀28. ஒரு நாளைக்கு குறைந்தது 1 ஒரு  முறையாவது இறைவனை நினைவு கூறுங்கள்.
------------------------------
🎀29. இருட்டில் சாப்பிட கூடாது.
------------------------------
🎀30. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம் .

பகவான் - கிருஷ்ணன்
..................................
இது கீதை உபதேசம் தானா என்று தெரியவில்லை. இருந்தாலும் உபதேசம் என்று எடுத்துக்கொள்வோம்!
==============================================
2
Walking is the best exercise!!!         🏃

*Walk Away* 🚶 
from arguments that lead you to nowhere but anger. 

*Walk Away* 🚶 
from people who deliberately put you down. 

*Walk Away* 🚶 
from any thought that reduces your worth. 

*Walk Away* 🚶 
from failures and fears that stifle your dreams.

*Walk Away* 🚶 
from people who do not care for you and who are opportunistic.

The more you *Walk Away* 🚶 
from things that poison your soul,
The Happier Your Life Will Be.

Gift Yourself A Walk...Towards Happiness. 
---------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.5.17

மரணம் என்னும் தூது வந்தது. அது கேன்சர் என்னும் வடிவில் வந்தது!!!!

மரணம் என்னும் தூது வந்தது. அது கேன்சர் என்னும் வடிவில் வந்தது!!!!

Blood Cancer......
Brain Cancer......
Breast Cancer......
Colon Cancer......
Liver Cancer......
Lungs Cancer......
Prostate Cancer......
Ovarian Cancer......

என்று புற்று நோயில்தான் எத்தனை வகை!!!

ஆனால் அத்தனை வகையான புற்று நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பெற்றுள்ளன. அதுவும் மிகக் குறைந்த விலையில். கிடைக்கும் இடத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

அனைத்து இந்திய மக்களும் அறியும் வண்ணம் இதிப் பிரபலப் படுத்துங்கள்

'Curcuminoids' is a medicine which cures several cancer. Its available at reasonable cost at "Cancer Herbalist in Bangalore".Create Awareness. It might help someone. Forward to as many as u can, kindness costs nothing.

Cancer Herbalist, Bangalore.
Address: 6, DVG Road,
Gandhi Bazaar, Basavanagudi,
Bangalore -  560004 Landmark: Near Vidyarthi Bhavan hotel 

Phone:
080-41218877
080-26601127
8884588835
Cancerherbalist@gmail.com 

படித்தேன். மகிழ்ந்தேன்.உங்களுடன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.5.17

அஷ்டலெட்சுமி யோகம்!


அஷ்டலெட்சுமி யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடங்கள்

Lesson on Ashtalakshmi Yoga

அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன்
ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும்
கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and 
Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, 
and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள் Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga )

If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity! 

இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம் This is the sloka for Ashtalakshmi Yoga

சஷ்ட ஸ்தான கதே ராகு
லக்ன கேந்த்ர கதே குரு
அஷ்டலக்ஷ்மி சமயுக்தம்
மத்யவான் கீர்த்திமான் நர!

Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th )
Lagna Kendra Gathe Guru ( Jup angular )
Ashtalakshmee Samayuktham
Madhyavan Keerthiman Nara.
+++++++++++++++++++++++++++++++++++++
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் அவைகளைப் பற்றிய விவரம்:

தனலெட்சுமி - செல்வத்திற்கு
(Dhana Lakshmi - Wealth as prosperity)

தான்யலெட்சுமி - விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு!
(Dhanya Lakshmi - Agriculture as prosperity)

தைரியலெட்சுமி - துணிச்சலுக்கு, தைரியத்திற்கு
(Dhairya Lakshmi - Courage)

விஜயலெட்சுமி - வெற்றிக்கு
(Vijaya Laksmi - Victory)

ஆதி லெட்சுமி - சக்திக்கு
(Adi Laksmi - Power)

வித்யா லெட்சுமி - கல்விக்கு, கற்றலுக்கு
(Vidya Laksmi - Learning)

கஜலெட்சுமி - ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு
(Gaja Lakshmi Will Power)

சந்தானலெட்சுமி - குழந்தைச் செல்வத்திற்கு
(Santhana Lakshmi Children as prosperity)

The native born under this yoga, enjoys the Eightfold Prosperity. Rahu and Jupiter should be powerful, however, to confer the full benefits of this yoga.
---------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.5.17

மருத்துவர் கட்டணம் இல்லாத மருத்துவமனை!!!


மருத்துவர் கட்டணம் இல்லாத மருத்துவமனை!!!

5 ஸ்டார் ஹோட்டல் போல காட்சி அளிக்கும் இது மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4 டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

 திருச்சியில் இருந்து வெறும் 2 மணி நேரம் பஸ் பயணம்.சேவை மனப்பான்மை என்று எவ்வளவோ இருந்தாலும் எனக்கு என்னவோ இது தான் சிறந்ததாக தெரிகிறது. இது மக்களுக்கான மருத்துவமனை.

உபயாகப்படுத்தி கொள்ளுங்கள் .. share செய்து பலருக்கு தெரியப்படுத்துங்கள்.

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.5.17

நமது இச்சைகள் எப்போது திருத்தப் படுகின்றன?


=====================================================================
2
*தை அமாவாசை 

*பித்ரு தோஷம் நீக்கும் தை அமாவாசை திருத்தலங்கள் !

*திதிகளில் சிறப்பானதாக அமாவாசை திதி போற்றப்படுகிறது. அமாவாசை - சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள்.*

*மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் அடையும்.*

*அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும்.*

*ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால், சிறப்பான பலனைத் தரும். மேலும் மூதாதையர்களின் ஆசியும் கிடைக்கும்.*

*முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த திதி:*

 *அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி.*

*மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.*

*அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.*

*ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.*

*மூன்று அமாவாசைகள் !*

*வருடத்துக்கு இரண்டு அயனங்கள். ஆடி மாதம்  முதல் மார்கழி முடிய உள்ளது தட்சிணாயனம். இது சூரியனின் தென்திசை நோக்கிய பயணத்தைக் குறிக்கும்.*

*தை முதல் ஆனி வரை உள்ளது உத்தராயனம். இது சூரியனின் வடதிசை நோக்கிய பயணத்தைக் குறிக்கும்.*

*இந்த அயனங்களில் உத்தராயனத்தில் பகல் பொழுதும், தட்சிணாயனத்தில் இரவுப் பொழுதும் அதிகமாக இருக்கும்.*

*இவற்றில், தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.*

*கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.*

*புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்கள் அனைவரும் பூமியில் ஒன்று சேருவதாக ஐதீகம். அன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச்செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பெற வேண்டும்.*

*தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் பித்ருலோகத்துக்குத் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.*

👉🏽 *பொதுவாக, ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பதுதான் மிகச் சிறந்தது. இயலாதவர்கள் கண்டிப்பாக இந்த மூன்று அமாவாசைகளிலாவது தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பித்ரு தோஷம் உண்டாகும்.*

*பித்ரு தோஷம் என்றால் என்ன?*

*முன்னோர்களின் வருத்தத்தாலும், சாபத்தாலும் ஏற்படுவது பித்ரு தோஷம்.*

*ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு  அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம் என்பதை அறியலாம்.*

*மேலும் ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும்.*

 *லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5-ம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.*

*ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம்.*

*பித்ரு வழிபாட்டின் அவசியம்...*

*பூமியில் பிறந்தவர்கள் யாருமே பாவ புண்ணியத்திலிருந்து தப்ப முடியாது. பாவங்களில் மகா பாவமாக சொல்லப்படுவது, நம்மைப் பெற்றவர்களையும் நம்முடைய முன்னோர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனிக்காமல் இருப்பதுதான். அவர்கள் உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் இருப்பது மகா பாவம் என்றால், அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து,  பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது மகா மகா பாவம் ஆகும்.*

*இத்தகைய பாவங்களுக்கு ஆளாகும் அன்பர்கள், பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய சந்ததியினரும் பல வகையான துன்பங்களை அடைகின்றனர்.*

*நம் முன்னோர்களுக்கு வருடாந்திர சிராத்தம் செய்வதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.*

*இயலாத நிலையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளிலும் புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள நீர்நிலைகளில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.*

*அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது எப்படி?*

*அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், யமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை மிகவும் சிறந்ததாகும்.*

*தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.*

*தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து, மறைந்த முன்னோர்களின் படத்தைச் சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.*

*முன்னோர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும்.*

*கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும்.*

*பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.*

*செய்யக் கூடாதவை.*

*அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.*

*தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.*

*நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.*

*அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.*

*தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.*

*காகத்துக்கு  சாதம் படைப்பது ஏன்?*

*அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.*

*அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.*

*சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது.*

*காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.*

*காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.*

துயர் போக்கும் துளசி!

*பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம்.*

*அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.*

*முன்னோர் ஆராதனைக்கு ஏற்ற திருத்தலங்கள்!*

*மாதம்தோறும் வரும் அமாவாசையன்று நாம் நம்முடைய வீட்டிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அல்லது அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்கலாம்.*

*ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.*
----------------------------------------------------
*தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!*

*ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம், பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம் என்று பல தலங்கள் இருக்கின்றன.*

*முன்னோர் ஆராதனைக்காக மட்டுமின்றி, தை அமாவாசையன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன.*

 *தை அமாவாசையில் முன்னோர் ஆராதனைக்கும், சிறப்பு வழிபாட்டுக்கும் உகந்த சில திருத்தலங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.*

*ராமேஸ்வரம்:*

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று.

 ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி, ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண வரலாறு சொல்லப்படுகிறது.

ராமபிரானின் உத்தரவின்படி சீதாபிராட்டி அக்னி பிரவேசம் செய்தபோது, பிராட்டியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத் தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது, பிராட்டியின் கற்பின் வெப்பம் அக்னிபகவானைத் தகித்ததாகவும், அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி வெம்மையைப் போக்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னி தீர்த்தமாக புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல் சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த ஸ்ரீஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கே ஆடி, புரட்டாசி, தை அமாவாசை மட்டுமல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர் வழிபாடு செய்து, பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
-----------------------------------
*திலதர்ப்பணபுரி:*

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்கு தான் சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணபுரி. தற்போது திலதைப்பதி என்றும், செதலப்பதி என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்தத் தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக் காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த தலங்களில் ஒன்று.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத் தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார். ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால், இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின் பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில் வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில் ராமபிரானை தரிசிக்கலாம். இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது.

 நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத் தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால், நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு.

காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதுபோல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுகிறது.
-------------------------------------------
*திருப்புல்லாணி:*

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம். இந்தத் தலத்தில் உள்ள ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு புத்திர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில் முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனக்கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார்.

ராமன் இங்கு தங்கியிருந்த காலத்தில், சீதாதேவி ராவணனால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். லட்சுமணனோ, ராமர் சயனம் கொள்ள ஆதிசேஷனாகவும் மாறிவிட்டபடியால், சீதை மற்றும் லட்சுமணரை இந்தக் கோயிலில் நாம் தரிசிக்க முடியாது.

இந்தத் தலத்தில் சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்!
---------------------------------------
*திருச்செந்தூர்:*

அழகு முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வாகனமாகவும் கொடியாகவும் கொண்ட திருத்தலம் திருச்செந்தூர். முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரே தலம் திருச்செந்தூர்.  எனவே ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை செய்வது சிறப்பு என்பது ஐதீகம்.

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் இந்தத் தலத்தில் தீர்த்தங்களாகித் திகழ்வதாகக்  கூறப்படுகிறது. இவற்றில் பலவும் மணல் மூடி தூர்ந்துவிட்டனவாம். தற்போது, சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றிலும் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

 திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்களில் தென்புலத்தார் தீர்த்தமும் ஒன்று என்றும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி, பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பதால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன், அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
------------------------------------------------------
*திருவெண்காடு:*

 சீர்காழி - பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது. நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு.

 காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும் 6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று.

இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன. சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில் ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.
---------------------------------------------
 *பவானி கூடுதுறை:*

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் *‘திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்)* எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், *‘தென் திரிவேணி சங்கமம்’* என்று அழைக்கப்படுகிறது.

பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர்.

பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்திமிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது சிறப்பு.
------------------------------------------------------
*திருவிளமர்:*

திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.

சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது.

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீப ஜோதியாக தெரிவதை காணலாம்.

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி, பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
-------------------------------------------
*திருக்கண்ணபுரம்:*

திருவாரூரில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம்.

பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான இந்தத் தலத்தில் பெருமாள் ஸ்ரீநீலமேகப் பெருமாள் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள்.

ஒன்பது படித்துறைகளுடன் திகழும் இந்தத் தலத்தின் நித்ய புஷ்கரணியும் விசேஷமானது. இதன் படித்துறைகள் ஒன்பதும் நவகிரகங்களைக் குறிப்பதாக ஐதீகம். இந்த புஷ்கரணியில் நீராடிவிட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், முன்னோரின் ஆசிகள் கிட்டும் என்பது ஐதீகம்.

அப்படிச் செய்ய இயலாதவர்கள், நித்ய புஷ்கரணியில் எள்ளைத் தெளித்துப் பிரார்த்தித்தாலே போதும்; முன்னோரின் ஆசியும், பெருமாளின் அனுக்கிரகமும் கிடைக்கும்.
--------------------------------------------
*கருங்குளம்:*

 திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கருங்குளம். மார்த்தாண்டேஸ்வரன் என்ற மன்னர், தாமிரபரணிக் கரையில் இருந்த கருங்குளம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தார். தினமும் சிவபூஜை செய்ய விரும்பிய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், *‘தாமிரபரணிக் கரையில் ஆலயம் அமைத்து வழிபடுவாயாக’* என்று கூறினார். மன்னரும் அப்படியே ஆலயம் அமைத்து வழிபட்டார்.

இந்த நிலையில், பக்கத்து நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர் சிங்கநாதன், தீராத வயிற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். எந்த வைத்தியராலும் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் மன்னரைச் சந்தித்த முனிவர் ஒருவர், *‘முன் ஜன்மத்தில் நீ யாரோ ஒரு மகரிஷியின் சாபத்துக்கு ஆளாகி, இன்றுவரை அதற்கான பலனை அனுபவித்து வருகிறாய். கருங்குளத்து ஈசனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், சாபம் நீங்கப் பெறுவாய்’* என்றார். அதன்படி இங்கு வந்த மன்னர், சிவபெருமானை தரிசித்துப் பிரார்த்தித்தார். சாபம் நீங்கப் பெற்று, வயிற்றுவலியில் இருந்து மீண்டார் என்கிறது தல வரலாறு.

மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகுலசேகரநாயகி.

முன் ஜன்ம சாபம் நீக்கிய தலம் என்பதால், தை அமாவாசை நாளில் பித்ருக்கள் கடன் செய்வதற்கு உகந்த தலம் இது. தை அமாவாசை நாளில் இங்கு வந்து, தாமிரபரணியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், பித்ரு தோஷங்களும் தீராத நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
------------------------------------------
*அகரம்:*

தாமிரபரணி மஹாத்மியத்தில், வியாசரால் போற்றப்படும் இந்தத் தலத்தில்... காசி தலத்தைப் போலவே, ஸ்வாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். எனவே இதை, *‘தட்சிண காசி’* என்று ஞான நூல்கள் சிறப்பிக்கின்றன. இங்கே வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணியை, *`தட்சிண கங்கை'* என்று போற்றுகின்றனர். இது, பித்ரு சாப விமோசன தீர்த்தமாகத் திகழ்கிறது.

ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை திருநாளிலும் இங்கே வந்து, தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடன் ஸ்ரீகாசிவிஸ்வநாதருக்கு வில்வ மாலையும் ஸ்ரீவிசாலாட்சிக்கு செவ்வரளி மாலையும் சார்த்தி வழிபட வேண்டும். அத்துடன், பசுநெய் ஊற்றி 21 தீபங்கள் ஏற்றி வைத்தோ, தில ஹோமம் (எள்ளினால் செய்யப்படும் ஹோமம்) செய்தோ வழிபட, ஈசனின் அருளும் கிட்டும்; பித்ருக்களும் ஆசீர்வதிப்பர்!

இதுவரை பித்ரு தர்ப்பணம் செய்யத் தவறியவர்கள், அரிசி மற்றும் காய்கறிகளைத் தானம் அளித்து, (வசதி இருந்தால் கோ தானமும் செய்யலாம்) இறைவனை வழிபட, பித்ரு தோஷம் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்!
--------------------------------------------------
*திருபுவனம்:*

தந்தையின் ஈமக் கடன்களைச் செய்து முடிப்பதற்காகக் காசிக்குச் செல்ல விரும்பினார் மைந்தன். ஆனால் பாவம்... வழிச் செலவுக்குக்கூட அவரிடம் காசில்லை. ஆனாலும், காசிக்குச் செல்வதில் உறுதியாக இருந்தார் அவர்.

அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய ஈசன், ‘’காசிக்குச் செல்ல முடியவில்லையே என்று வருந்தாதே! இங்கேயுள்ள ஆலயத்துக்கு வந்து, அருகில் ஓடும் நதியில் உன் தந்தையின் அஸ்தியைக் கரைத்து, பித்ரு காரியத்தை நிறைவேற்று. காசிக்குச் சென்று காரியம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இங்கேயே கிடைக்கும்’’ என அருளி மறைந்தார்.

கனவால் மெய்சிலிர்த்துக் கண் விழித்தவர், தென்னாடுடைய ஈசனின் பெருங்கருணையை எண்ணி மகிழ்ந்தார். விடிந்ததும், அருகில் உள்ள நதிக்கரைக்குச் சென்று, பித்ரு காரியங்களை நிறைவேற்றினார். இறுதியாக, அஸ்தியைக் கரைக்க நீரில் இறங்கினார். அப்போது, அஸ்தியானது (சாம்பல்) நறுமணம் கமழும் பூக்களாக மாறியது. இறைவனும் அருளை அள்ளி வழங்க, முன்னோரின் ஆசீர்வாதமும் அந்த மைந்தருக்குக் கிடைத்தது என்கிறது ஸ்தல புராணம்.

‘காசிக்கு நிகரான பலன் தரும்’ என்று இறைவனே குறிப்பிட்ட அந்தத் தலம் திருபுவனம்; நதி - வைகை. அஸ்தி சாம்பலைப் பூவாக மாற்றியதால், இங்குள்ள இறைவனுக்கு ஸ்ரீபூவனநாதர், ஸ்ரீபுஷ்பவனநாதர் எனத் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்வர். அம்பாளின் திருப்பெயர்- ஸ்ரீசௌந்தரநாயகி.

இந்தத் தலத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, வடகிழக்காக அமைந்திருக்கும் ஆலயம் இது. எனவே, அமாவாசை என்றில்லாமல் எல்லா நாளுமே இங்கே பித்ரு காரியம் செய்வதற்கு ஏற்ற நாளாகக் கருதுகின்றனர் பக்தர்கள்!
-------------------------------------------------------------
*தீர்த்தாண்டதானம்:*

‘‘முன்னோர் ஆராதனை என்பது மிகவும் முக்கியமான வழிபாடு. முன்னோர் ஆராதனை செய்யச் செய்ய, வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்’’ என்று ராமபிரானுக்கு அகத்தியர் அருளினார். அதன்படி, ஓர் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கான கடனைச் செய்து, சிவபெருமானின் பேரருளைப் பெற்றார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தாண்டதானம். இங்கே ஈசனின் திருநாமம் - ஸ்ரீசர்வதீர்த்தேஸ்வரர்.

ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர்.
===============================================
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.5.17

அவர்கள் என்ன செய்தார்கள்? பதிலுக்கு நாம் என்ன செய்தோம்?


அவர்கள் என்ன செய்தார்கள்? பதிலுக்கு நாம் என்ன செய்தோம்?

Q.What is difference b/w India and USA?

Answers.

1.America produced Microsoft, 
India produced Satya Nadella (CEO)

2.America produced Pepsi Co.
India produced Indra Nooyi (CEO)

3.America produced Adobe Systems, 
India produced Shantanu Narayen (CEO)

4.America produced CitiGroup, 
India produced Vikram Pandit (Ex CEO)

5.America produced Berkshire Hathaway Insurance, 
India produced Ajit Jain (President)

6.America produced MasterCard, 
India produced Ajay Banga (CEO)

7.America produced Quest Diagnostics, 
India produced Surya Mohapatra (Ex CEO)

8.America produced Deloitte, 
India produced Punit Renjen (Global CEO)

9.America produced Google, 
India produced Sundar Pichai (CEO)

And finally,

10. 🇺🇸America produced Quora, 
India produced Balaji Viswanathan.

It’s sad to see so many comments with negative👎 perspective which “completely disregard " the role of India played to mold those top Indians.

So here is a little stat:

1. Satya Nadella- B.E Electrical Engineering from Manipal Institute of Technology

2. Indra Nooyi- (PGDM /MBA) from IIM Calcutta

3. Shantanu Narayen- BSc. Electronics Engineering from Osmania University

4. Ajit Jain- B.Tech Mechanical Engineering from IIT Kharagpur

5. Ajay Banga- PGDM (/MBA) from IIM Ahmedabad

5. Surya Mohapatra- B.S in Sambalpur University

6. Sundar Pichai- B.Tech Metallurgical Engineering from IIT Kharagpur.

7. Balaji Viswanathan- B.E Computer Engineering from Thiagarajar College of Engineering

Indian Schools were the ones to provide the “basic” for those geniuses which created the roots for the tree to grow.
Proud to be Indian

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.5.17

என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது?


என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது?

மனவளக் கட்டுரை!

உங்கள் சிந்தனைக்கு*
***********************
*நான்கு நபர்களை புறக்கணி*

🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*

😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*

😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*

💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑சேவகன்            

*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*

🙋🏻♂பொறுமை
🙋🏻♂சாந்த குணம்
🙋🏻♂அறிவு
🙋🏻♂அன்பு

*நான்கு நபர்களை வெறுக்காதே*

👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி

*நான்கு விசயங்களை குறை*

👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு

*நான்கு விசயங்களை  தூக்கிப்போடு*

🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்

*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*

👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.5.17

புத ஆதித்ய யோகம்

புத ஆதித்ய யோகம்

யோகங்களைப் பற்றிய பாடங்கள்!!!!

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன்:
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும்.
This yoga will give lots of talent, success, honour and fame in society.
-------------------------------
எல்லோருக்கும் கொடுக்குமா?

கொடுக்காது.

ஏன் கொடுக்காது?

சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனைக் கும்மியடிக்கும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும்.

Mercury is the first planet in the Solar System and is very close to the Sun. It cannot be more than one sign away from the Sun in the rasi chart. This yoga, therefore, appears in a lot of charts, but not all the charts can have the benefits of this yoga.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.

The Sun and Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart
---------------------------------------------------------------------
சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு)
மேஷம் (சூரியனின் உச்ச வீடு)
மிதுனம் (புதனின் ஆட்சி வீடு)
கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு)
ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்!
மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால்
------------------------------------------------------------------------
மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது

ரிஷப, சிம்ம, துலா மற்றும் மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்
------------------------------------------------------------------------
புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை!

சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.5.17

கவிதை: கவியரசரின் அசாத்திய திறமை!!!!


கவிதை: கவியரசரின் அசாத்திய திறமை!!!!

அது  ஒரு  பிப்ரவரி  மாதம்.  M.S. விஸ்வநாதன் , கவிஞருக்கு  போன் செய்து பேசினார்:

கவிஞரே  Sivaji படம் .  *மே*  மாதம்  சிங்கப்பூரில சூட்டிங்.    ஒரு  பிளவர்  ஷோ வுக்கு  தகுந்த  மாதிரி  ஒரு  பாட்டு  எழுதி  கொடுங்க....

ஒரு  பத்து  நாள்  கழித்து  அடுத்த  போன்.    என்ன  கவிஞரே இன்னும்  பாட்டு  வந்து  சேரலையே .

ஆனா  நம்ம  கவிஞர்  கண்ணதாசனோ  ஒரு  மஜாவுலே எதுக்கும்  அசரல.  இன்னொரு பத்து  நாள்  கழித்து  அடுத்த  போன்.

 என்ன  கவிஞரே இப்படி லேட்  பண்றீங்க. ... நான்  டியூன்  போட்டு , Sivaji   கிட்ட  சம்மதம்  வாங்கி , ரெக்கார்டிங்  பண்ணி , அப்புறம்  *மே*  முதல்  வாரத்தில்  சூட்டிங். .. இப்புடி  லேட்  பண்ணுனா  ...ரொம்ப  பிரச்சனை  ஆயிடும். ...

இன்னொரு பத்து  நாள். ... ஒன்னும்  ஆகலை. ...

 அடுத்த  போன்.... சற்று  ஓங்கிய  குரலில். .. என்ன  கவிஞரே.... எல்லோரும்  ரொம்ப  கோபமா இருக்காங்க. ... *மே*. .

மாத *மே*  முடிஞ்சுடும்  போலிருக்கு.....எனக்கும்  சரி  பட்டு  வருமானு  தெரியல..... .. சற்று  கடின  வார்த்தைகளில். ....

கவிஞருக்கோ  தன் மீது  பரிதாப   கோபம்....

எப்பவுமே  அன்பாக இருக்கும் தம்பி  MSV யே   இப்படி  கடின  வார்த்தைகளை  உபயோகித்து  பேசியது  மனதில்  ஒரு  நெருடல். . ...

அடுத்த  நாள்  MSV  கையில்  பாட்டு. ....

அன்பு  நடமாடும்  கலைக்கூட *மே*.....
ஆசை மலை  மேக   *மே*...  
கண்ணில்   விளையாடும்  எழில்  வண்ண  *மே* ...
கண்ணித் தமிழ்  வண்ண *மே*......

MSV  கண்களில்  கண்ணீர். ...

எல்லா வரிகளுமே மே என்று முடியும் படி இருந்தது. அதுதான் கவியரசரின் திறமை!!!

பாடலின் முழு வரிகள்:

திரைப்படம்: அவன் தான் மனிதன் (1975)
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத்தோட்ட மணியாரமே பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் தவமே சென்னல் குலமன்னனே
இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே உலகம் நமதாகுமே
அன்று கவிவேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
======================================================

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.5.17

ஓஹோ...வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?


ஓஹோ...வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?

*வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?*

 *நெஞ்சு_எரிச்சல்_போகணுமா*

*ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை….! மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும்!!!!

*சதை_குறையணுமா?*

*வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்...!*

*காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை* *என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?* *எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது...!*

*உடம்பு_வலிக்கிறதா?*

*உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்...!*

*கால்_பாதங்கள்_வலிக்கிறதா*

*எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்...!*

*மூக்கு_அடைப்பா?*

*மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போகும் வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்...!*

*வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போது*

*வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி.*

 *ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்...!*

*திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்...!*

*ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு*

*அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்...!*

*தரையை_துடைக்கும் போது*

*அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்...!*

*திடீரென்று_கடுமையான_தலை_வலியா?*

*தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்....!*

*சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்’*

*தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.*
--------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!