மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.5.17

Astrology: ஜோதிடம்: சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்

Astrology: ஜோதிடம்: சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்

சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் மொத்தப் பரல்களாகும்.

அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாகக்கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்

அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.

பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
அழகான பெண்ணான ஹன்சிகா மோத்வாணிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் நல்லுசாமிக்கும் அதே 337தான். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்திக்கும் அதே
337தான்

பின் வாழ்க்கை எவ்வாறு வேறு படுகிறது? அதை வரும் பாடங்களில் விரிவாகப் பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------------------
சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்

மொத்தப் பரல்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்
அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த  வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி  நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,
தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில்  comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,
அவர்களுடைய  தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம்.
 (சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்

18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்
பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.

19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்
இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது

பாடம் பெரியதாக உள்ளதால் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் அடுத்த பகுதியை பின்னொரு நாளில் பார்க்கலாம்!!!!

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

33 comments:

 1. Thangal nadaiyil padika padika thigatatha suvai, migavum arumaiyana pathivu iyya nandri

  ReplyDelete
 2. Hi subbiah sir,
  Please tell more about 3rd , 8th, 6th houses in your following Friday special horoscope classes in this classroom

  ReplyDelete
 3. வணக்கம்.ஐயா
  நல்ல தகவல் நன்றியுடன்
  மூர்த்தி

  ReplyDelete
 4. முக்கியமான பாடத்தை மிக மிக தெளிவாக கூறியுள்ளீர்.
  நன்றி.

  ReplyDelete
 5. Sir,

  Thanks a lot.
  One common question.
  A Famous Person(your fav. Simma Lagna) who is having Saniswaran in 2nd house in Rasi and 2nd house Owner(Budhan) is Ucham in Amsam, can become a Politician? Hope you got , Whom I am talking about. Sani Dasa over for him with this month and Budhan Dasa going to start soon.
  Please share your thoughts.

  ReplyDelete
 6. மிக்க நன்றி அய்யா.இவ்வளவு நாள் எனக்கு திருமண தடை 2ல் இருக்கும் ராகுவால் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.ஆனால் இந்த கட்டுரையின் மூலம் தெளிவடைந்து விட்டேன். ஆம் எனக்கு ஏழாம் இடத்தில் 18 பரல்கள் தான்.
  மிக்க நன்றி அய்யா.

  ReplyDelete
 7. Hi sir,
  Following up as above request, tell about 3rd,6th,8th,12th houses according to astavarga.

  ReplyDelete
 8. Hi sir,
  Following up as above request, tell about 3rd,6th,8th,12th houses according to astavarga.

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா,பாடமும்,விளக்கமும் நன்று.நன்றி.

  ReplyDelete
 10. 6 முக்கியமான வீடுகளில் 30 பரல் இருந்தாலே அதிருஷ்டம் ஆன ஜாதகம்
  1, 2, 6, 9, 11, 12 சுகமான வாழ்க்கை
  1, 4, 5, 6, 10, 11 பட்டம் பதவி உயர்வு
  இந்த மாதிரி நிறைய உள்ளது
  பட்டியல் போகலாம் நேரம் கிடைக்கும் பொழுது

  ReplyDelete
 11. Did you miss the most important houses 5&9. Isn't these houses have limited vision/challenges astrologer prediction but unlimited possibility of goods Grace to change ones fate?

  ReplyDelete
 12. ஐயா வணக்கம்

  பாடம் அருமை

  கண்ணன்

  ReplyDelete
 13. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Thangal nadaiyil padika padika thigatatha suvai, migavum arumaiyana pathivu iyya nandri////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 14. ////Blogger kmr.krishnan said...
  Very useful lesson,Sir/////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

  ReplyDelete
 15. /////Blogger Hari Haran said...
  Hi subbiah sir,
  Please tell more about 3rd , 8th, 6th houses in your following Friday special horoscope classes in this classroom/////

  பழைய பாடங்களில் அந்த வீடுகள் பற்றி நிறைய எழுதியுள்ளேன். தேடிப்பிடித்துப் படியுங்கள் நண்பரே!!!!!

  ReplyDelete
 16. ////Blogger moorthy krishnan said...
  வணக்கம்.ஐயா
  நல்ல தகவல் நன்றியுடன்
  மூர்த்தி/////

  நல்லது. நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 17. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
  முக்கியமான பாடத்தை மிக மிக தெளிவாக கூறியுள்ளீர்.
  நன்றி.////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 18. /////Blogger KJ said...
  Sir,
  Thanks a lot.
  One common question.
  A Famous Person(your fav. Simma Lagna) who is having Saniswaran in 2nd house in Rasi and 2nd house Owner(Budhan) is Ucham in Amsam, can become a Politician? Hope you got , Whom I am talking about. Sani Dasa over for him with this month and Budhan Dasa going to start soon.
  Please share your thoughts./////

  நீங்கள் திருவாளர் ரஜினிகாந்தைப் பற்றிக் கேட்கிறீர்கள்! புதன் திசை பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். கொடுக்கட்டுமே! நல்லதாக இருந்தால் சரிதான்!!!!

  ReplyDelete
 19. ///Blogger saravanan vpn said...
  மிக்க நன்றி அய்யா.இவ்வளவு நாள் எனக்கு திருமண தடை 2ல் இருக்கும் ராகுவால் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.ஆனால் இந்த கட்டுரையின் மூலம் தெளிவடைந்து விட்டேன். ஆம் எனக்கு ஏழாம் இடத்தில் 18 பரல்கள் தான்.
  மிக்க நன்றி அய்யா./////

  இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். தடைகள் விலகிவிடும்!!!! நன்றி!

  ReplyDelete
 20. /////Blogger Hari Haran said...
  Hi sir,
  Following up as above request, tell about 3rd,6th,8th,12th houses according to astavarga./////

  அஷ்டகவர்க்கத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். பத்தகம் தயாராகிக் கொண்டுள்ளது. பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே!!!!

  ReplyDelete
 21. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,பாடமும்,விளக்கமும் நன்று.நன்றி.////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

  ReplyDelete
 22. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
  6 முக்கியமான வீடுகளில் 30 பரல் இருந்தாலே அதிருஷ்டம் ஆன ஜாதகம்
  1, 2, 6, 9, 11, 12 சுகமான வாழ்க்கை
  1, 4, 5, 6, 10, 11 பட்டம் பதவி உயர்வு
  இந்த மாதிரி நிறைய உள்ளது
  பட்டியல் போகலாம் நேரம் கிடைக்கும் பொழுது /////

  1,9, 10 & 11ஆம் வீடுகளில் (இந்த 4 வீடுகளில்) 30 அல்லது 30ற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தாலும் உயர்வான வாழ்க்கைதான்!!!!!

  ReplyDelete
 23. /////Blogger selvaspk said...
  Did you miss the most important houses 5&9. Isn't these houses have limited vision/challenges astrologer prediction but unlimited possibility of goods Grace to change ones fate?/////

  உண்மைதான். ஆனால் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால்தான் விதி வசப்படும்!!! நன்றி!

  ReplyDelete
 24. /////Blogger Kannan L R said...
  ஐயா வணக்கம்
  பாடம் அருமை
  கண்ணன்////

  நல்லது. நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 25. இந்த 337 டானிக்க கு(ப)டிச்சதும் ரொம்ப தெம்பா இருக்கு சார்! நன்றி :)

  ReplyDelete
 26. வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.

  எனக்கு லக்னத்தில் 22 பரல், மூன்றாம் இடத்தில் 23பரல், பதினொன்றாம் இடத்தில் 26பரல் இருக்கிறது. 10ம் இடம் தவிர மற்றவற்றில் 28, 29,30, என்று சராசரியாக உள்ளது.

  ஆனால் 10 ஆம் இடத்தில் மட்டும் 43 உள்ளது.

  ஆக நான் எந்த விஷயம் செய்தாலும் பர்ஃபெக்ட், அவனைப் போல் செய்ய முடியாது என்று பெயரெடுத்தாலும், தொடர்ந்து ஒன்றை செய்ய முடியாததற்கும், பெயர் வாங்கி கொடுக்கும் அளவுக்கு வருமானம் இல்லாததற்கும் காரணம் என்ன என்பதை பரல்களை வைத்து பார்க்கும்போது புரிந்தது.

  அஷ்டகவர்க்க வகுப்பில் படித்தபோது பலரது ஜாதகங்களை அலசினேன். பரல்களை வைத்து இந்த விஷயத்தில் பிரச்சனை இருக்கக் கூடும் என்று ஸ்கெட்ச் எளிதாக போட முடிகிறது ஐயா.

  கற்றதை மற்றவருக்கு கற்றுத்தரும் தங்கள் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 27. ஐயா எனது சாதகத்தில் 10மிடத்தில் 38பரல்கள் இருந்தும் 12வருடமாக சொந்த தொழில் ?ஆகவே இருக்கிறது.கன்னி லக்னம் ரிசப ராசி.நடப்பு குரு தசை கேது புத்தி. 10.9.71/0800am.periyakulam. நான் சோதிடத்தை தொழிலாக செய்து வருகிறேன்.நன்றி.

  ReplyDelete
 28. ////Blogger Unknown said...
  இந்த 337 டானிக்க கு(ப)டிச்சதும் ரொம்ப தெம்பா இருக்கு சார்! நன்றி :)///

  ஆமாம். தெம்பாக இருக்கும். அதற்காகத்தான் அடிக்கடி அதைக் குடிக்கச்சொல்லிப் பரிந்துரைப்பேன். நன்றி!!!!

  ReplyDelete
 29. ////Blogger திருவாரூர் சரவணன் said...
  வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.
  எனக்கு லக்னத்தில் 22 பரல், மூன்றாம் இடத்தில் 23பரல், பதினொன்றாம் இடத்தில் 26பரல் இருக்கிறது. 10ம் இடம் தவிர மற்றவற்றில் 28, 29,30, என்று சராசரியாக உள்ளது.
  ஆனால் 10 ஆம் இடத்தில் மட்டும் 43 உள்ளது.
  ஆக நான் எந்த விஷயம் செய்தாலும் பர்ஃபெக்ட், அவனைப் போல் செய்ய முடியாது என்று பெயரெடுத்தாலும், தொடர்ந்து ஒன்றை செய்ய முடியாததற்கும், பெயர் வாங்கி கொடுக்கும் அளவுக்கு வருமானம் இல்லாததற்கும் காரணம் என்ன என்பதை பரல்களை வைத்து பார்க்கும்போது புரிந்தது.
  அஷ்டகவர்க்க வகுப்பில் படித்தபோது பலரது ஜாதகங்களை அலசினேன். பரல்களை வைத்து இந்த விஷயத்தில் பிரச்சனை இருக்கக் கூடும் என்று ஸ்கெட்ச் எளிதாக போட முடிகிறது ஐயா.
  கற்றதை மற்றவருக்கு கற்றுத்தரும் தங்கள் பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி சரவணன்!!!!

  ReplyDelete
 30. /////Blogger kannan Malola said...
  ஐயா எனது சாதகத்தில் 10மிடத்தில் 38பரல்கள் இருந்தும் 12வருடமாக சொந்த தொழில் ?ஆகவே இருக்கிறது.கன்னி லக்னம் ரிசப ராசி.நடப்பு குரு தசை கேது புத்தி. 10.9.71/0800am.periyakulam. நான் சோதிடத்தை தொழிலாக செய்து வருகிறேன்.நன்றி./////

  செய்து வாருங்கள். முன்னேற்றம் ஏற்படும். நன்றி!!!

  ReplyDelete
 31. Sir,
  Enadhu jadhagathil yogangal ulladhu, analum vazhkail munnetram suthamaaga illai enadhu jadhagathai siridhu araindhu parkavum dob 08-11-1980, time 22.00 birth place CHENNAI please consider my request
  Nanri

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com