மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.5.17

மருத்துவர் கட்டணம் இல்லாத மருத்துவமனை!!!


மருத்துவர் கட்டணம் இல்லாத மருத்துவமனை!!!

5 ஸ்டார் ஹோட்டல் போல காட்சி அளிக்கும் இது மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4 டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

 திருச்சியில் இருந்து வெறும் 2 மணி நேரம் பஸ் பயணம்.சேவை மனப்பான்மை என்று எவ்வளவோ இருந்தாலும் எனக்கு என்னவோ இது தான் சிறந்ததாக தெரிகிறது. இது மக்களுக்கான மருத்துவமனை.

உபயாகப்படுத்தி கொள்ளுங்கள் .. share செய்து பலருக்கு தெரியப்படுத்துங்கள்.

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

 1. தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பரிசோதிக்க நோயாளிகள் வரவேண்டும் என்பதற்காக குறைந்த செலவில் செயல் படுகின்றன. திருச்சியில் எஸ் ஆர் எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இதுபோலக் குறைந்த செலவில் வைத்தியம் செய்கிறார்கள்.அவர்கள் சுற்று வட்டாரத்திலிருந்து அவர்களுடைய வாகனங்கள் மூலம் நோயாளிகளை அழைத்துச் செல்கிறார்கள்.

  ReplyDelete
 2. i am in madurai.this is all fake news.

  ReplyDelete
 3. Respected Sir,

  Happy morning.... Thanks for sharing such a precious info.

  Have a great day.

  Thanks & Regards,
  Ravi-avn

  ReplyDelete
 4. //////Blogger kmr.krishnan said...
  தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் பரிசோதிக்க நோயாளிகள் வரவேண்டும் என்பதற்காக குறைந்த செலவில் செயல் படுகின்றன. திருச்சியில் எஸ் ஆர் எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இதுபோலக் குறைந்த செலவில் வைத்தியம் செய்கிறார்கள்.அவர்கள் சுற்று வட்டாரத்திலிருந்து அவர்களுடைய வாகனங்கள் மூலம் நோயாளிகளை அழைத்துச் செல்கிறார்கள்./////

  உண்மைதான். கோவையில் ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குறைந்த செலவில் பற் சிகிச்சை அளிக்கிறார்கள் என் அனுபவம் அது. பழைய பற்களை அகற்றிவிட்டு புதிதாக பல் கட்டுவது ரூ.ஐயாயிரத்தில் சாத்தியம். அதுவே வேறு மருத்துவ மனைகளில் ரூ50,000 மேல் செலவு ஆகும். நன்றி கிருஷ்ணன சார்!!!!

  ReplyDelete
 5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Very useful information thanks sir/////

  நல்லது. நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 6. /////Blogger karuppiah Sakthi said...
  i am in madurai.this is all fake news.////

  குறை சொல்லாமல் அந்த மருத்துவமனைக்குச் சென்று விசாரித்துவிட்டு எழுதுங்கள் நண்பரே. மேலே மூத்த வாசகர் திரு.kmr.krishnan அவர்களின் பின்னூட்டத்தையும் அதற்கான என்னுடைய பதிலையும் படித்துப் பாருங்கள்!

  ReplyDelete
 7. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning.... Thanks for sharing such a precious info.
  Have a great day.
  Thanks & Regards,
  Ravi-avn//////

  நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா, எது எப்படியோ,நம்மால் அவர்களுக்கும்,அவர்களால் நமக்கும் லாபம்தானே.நன்றி.

  ReplyDelete
 9. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா, எது எப்படியோ,நம்மால் அவர்களுக்கும்,அவர்களால் நமக்கும் லாபம்தானே.நன்றி./////

  ஆமாம். நன்றி ஆதித்தன்!!!!

  ReplyDelete
 10. வேலம்மாள் ஆஸ்பத்திரி பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மை . நடுத்தறவர்கத்தினர்க்கு ஏற்ற ஆஸ்பத்திரி.


  ஆசானே இதுமாதிரியான உயிர் காக்கும் மருத்துவ மனை பற்றிய அனைத்திணைக்கும் தனியாக பாடம் ஒதுக்குவீர்கள் என்று நம்புகின்றேன் .

  உண்மையிலே நல்லதொரு கவனிப்பு இந்த ஆஸ்பத்திரியில் ஆகும்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com