மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Horoscope Predictions. Show all posts
Showing posts with label Horoscope Predictions. Show all posts

6.12.25

Short Cut Astrology - 6 குறுக்குவழி ஜோதிடம் புகுதி 6

 Short Cut Astrology - 6

 குறுக்குவழி ஜோதிடம் புகுதி 6

 அடுத்து ராசிகளைப் பற்றிப் பார்ப்போம்

 ஜோதிட  ராசிகள் விபரம்

 ஜோதிடத்தின்படி 12 ராசிகள் உள்ளன:

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி,

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,

 இவை சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களும்  மற்ற கிரகங்களும் 

ஆட்சி செய்யும் இடங்கள் ஆகும்,

 மேலும் ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மற்றும் குணாதிசயங்கள்

உள்ளன, அவை தனிப்பட்ட ஜாதகத்தை தீர்மானிக்க உதவுகின்றன.

 12 ராசிகளின் தமிழ் மற்றும்  ஆங்கில பெயர்கள் விபரம்

:மேஷம் (Aries)

ரிஷபம் (Taurus)

மிதுனம் (Gemini)

கடகம் (Cancer)

சிம்மம் (Leo)

கன்னி (Virgo)

துலாம் (Libra)

விருச்சிகம் (Scorpio)

தனுசு (Sagittarius)

மகரம் (Capricorn)

கும்பம் (Aquarius)

மீனம் (Pisces)

ஒவ்வொரு ராசியின் அளவும் 30 டிகிரிகள் 12 ராசிகளின் மொத்த அளவு 360 டிகிரிகள்

வட்ட வடிவில் இருக்கும்

 முதலில் இருப்பது மேஷ ராசி. அது  0 டிகிரியில் துவங்கி 30 டிகிரியில் முடியும்

அடுத்து வரும் ராசிகள் ஒவ்வொன்றிற்கும் 30 டிகிரிகள் தான்                                                                                                                                                                                                                            

 டிகிரி என்பதன் தமிழாக்கம் பாகை

 ஆனால் நாம் நம் வசதிக்காக சதுர வடிவில் அவற்றை எழுதி வைதிருக்கிறோம்/ ஏழுதுகிறோம்                                       

 ராசிகளுக்கு உள்ளடக்கம் உள்ளது அது என்ன என்பதை அடுத்த பாடத்தில் பார்ப்போம்

 அன்புடன் வாத்தியார்

 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.12.25

Short cut Astrology - ஒரு விளக்கம்

Short cut Astrology - ஒரு விளக்கம்

அதென்ன குறுக்குவழி ஜோதிடம்?

பண்டைய நூல்களில் ஆயிரக்கணக்கான ஜோதிடப் பாடங்கள் 
செய்யுள் வடிவில் உள்ளன
ஏன் செய்யள் வடிவம்?
அந்தக் காலத்தில் காகிதம் குறிப்பு புத்தகம் கணினி எல்லாம் கிடையாது
பனை ஓலைகளே கதி
உரைநடையில் எழுத முடியாமல் செய்யுள்களாக எழுதினார்கள்
அவை அனைத்தையும் படித்து அர்த்தம் தெரிந்து நீங்கள் ஜோதிடம் கற்றுக் கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிடும்
அடியவன் வாங்கிய குமாரசுவாமியம். கேரள மணிகண்டம். பிருகத் ஜாதகம்
 போன்ற தமிழ் நூல்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ஆங்கில நூல்களின் 
மூலம் ஜோதிடத்தைக் கற்றுத் தேறினேன்

எனக்குத் தெரிந்த ஜோதிடம் பலருக்கும் பயனளிக்கட்டும் என்ற பெருநோக்கில்  
2007ம் ஆண்டில் துவங்கி 18 ஆண்டுகளாக இணைய பதிவில் (Blogspot) எழுதிக் கொண்டிருக்கிறேன்
அதன் முகவரி: http://classroom2007.blogspot.com

1200 பாடங்களுக்கு மேல் உள்ளது
இன்னும் எளிமையாக முக்கியமான  ஜோதிட விதிகளை மட்டும் சொல்வதற்கான என்னுடைய புது முயற்சிதான்  இந்த குறுக்கு வழி  ஜோதிடம்

Your support and cooperation is important to make my efforts successful 
நன்றி வணக்கத்துடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.10.25

Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா Saraswathi Yoga

Astrology: சரஸ்வதி யோகம் வைரின்ச்ச யோகா
Saraswathi Yoga
Vairincha Yoga


சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும்.

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான்.

இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga)
Vairinchi means Saraswathi and this is a yoga for learning.

யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும்.

இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்

ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
-------------------------------------------------------
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை.

அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

உங்களில் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். 

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.10.25

Astrology: பாரிஜாத யோகம். Parijatha Yoga

Astrology: பாரிஜாத யோகம். 
Parijatha Yoga


பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப்  பரப்பும் தன்மை கொண்டது.

திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்!
--------------------------------------------------------
சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.

பலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.10.25

Astrology: கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Results of exalted planets

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1 ஜாதகத்தில் சூரியன் உச்ச வீடில் இருந்தால்,  ஜாதகன் செல்வந்தனாக இருப்பார். மேன்மையான குணம் உடையவனாக இருப்பார். வீரம் மிக்கவனாக இருப்பார்.

2.சந்திரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகருக்கு  நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் எப்போதும் கிடைக்கும்!

3. செவ்வாய் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் பகட்டான மனிதராக இருப்பார். வீரம் மிக்கவராக இருப்பார். வேற்று ஊரில் வசிப்பவராக இருப்பார்.

4. புதன் உச்சம் பெற்று  இருந்தால் அறிவாற்றல் மிக்கவராக இருப்பார்.

5. குரு உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர், கல்வி, புகழ், செல்வம் உடையவராக இருப்பார்.

6. சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், ஜாதகர் இயல், இசை, நாடகம், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவராகவும், தேர்ச்சி உடையவராகவும் இருப்பார்.

7.சனி உச்சம் பெற்று இருந்தால் அரசியலில் தலைமை பதவியும், அல்லது அரசு கெளரவ பதவியும், தொழிலாளர் தலைவராகவும் இருப்பார்

அன்புடன்,
வாத்தியார்
=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.9.25

Astrology: கிரகங்கள் நீச வீட்டில் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Results of neecha planets

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1. சூரியன் நீசம் அடைந்திருந்தால் ஜாதகர் தன்னைச் சார்ந்தவர்களாலேயே தாழ்ந்த நிலை பெறுவார்.

2. சந்திரன் நீசம் அடைந்திருந்தால் உடல் நலம் பாதிக்கும். ரோகம் உடையவராக இருப்பார்.

3. செவ்வாய் நீசம் அடைந்திருந்தால், மனம் பாதிக்கப்படும். மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

4. புதன் நீசம் பெற்றிருந்தால், உறவினரால் பகை ஏற்படும்.

5. குரு நீசமடைந்திருந்தால், புகழ் இல்லாதவராக இருப்பார். ஏழ்மை உடையவராக இருப்பார்.

6. சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், கெட்ட எண்ணங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை ஏற்படும். மனைவியிடமிருந்து பிரிந்து
இருக்கும் நிலை ஏற்படும்.

7.சனி நீசமடைந்திருந்தால் ஒழுக்கக்குறைபாடு ஏற்படும். தாழ்நிலை ஏற்படும். வறுமையால் வாடும் நிலையும் ஏற்படும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.9.25

Astrology: கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது, அதாவது ஆட்சி பலத்துடன் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

 Astrology: கிரகங்கள் சொந்த வீட்டில் இருக்கும்போது, அதாவது ஆட்சி பலத்துடன் இருக்கும்போது கிடைக்கும் பலன்கள்!

Results of planets in their own house

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1. சூரியன் தனது ஆட்சி வீட்டில் இருந்தால், ஜாதகர் அறிவாற்றலும், அழகான, கவர்ச்சியான தோற்றம் உடையவராகவும் இருப்பார்.

2. சந்திரன் சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் தெளிவான மனநிலை உடையவராக இருப்பார்.

3. செவ்வாய் தனது சொந்த வீட்டில் இருந்தால்,  ஜாதகர் செயல் வீரராக இருப்பார். கொள்கைவாதியாக இருப்பார்.

4. புதன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் பல கலைகளை அறிந்தவராக இருப்பார். பேச்சற்றல் உடையவராக இருப்பார்.

5. குரு தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் கல்வியாளராக இருப்பார். வேதங்களை, புராணங்களை அறிந்தவராக இருப்பார்.

6. சுக்கிரன் தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் செல்வந்தரகவும், நல்ல செயல்களைச் செய்பவராகவும் இருப்பார்.

7.சனி தனது சொந்த வீட்டில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சி உடையவராகவும், புகழ் உடையவராகவும் இருப்பார்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.25

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் நட்பு வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் நட்பு வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல நண்பர்களைக் கொடுப்பார். ஜாதகர் தர்ம குணம் உடையவராக இருப்பார்.

2. சந்திரன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் மகிழ்ச்சியானவராகவும், புகழ் பெறுபவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர் தனக்கு விருப்பமான நபர்களை ஆதரிப்பவராக இருப்பார்.

4. புதன் நட்பு ராசிகளில் இருந்தால், ஜாதகர், நகைச்சுவை உணர்வு உடையவராக, செயல் வீரராக, செல்வந்தராக இருப்பார்.

5. குரு நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் பல நல்ல காரியங்களை செய்பவராக இருப்பார்.

6. சுக்கிரன் நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் நல்ல நண்பர்களை உடையவராக இருப்பார். செல்வம் உடையவராக இருப்பார்.

7. சனி நட்பு வீடுகளில் இருந்தால், ஜாதகர் மற்றவர்களை நம்பி வாழ்வார்.

அன்புடன்,
வாத்தியார்
================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.9.25

Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

Astrology: கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்!

கிரகங்கள் பகை வீடுகளில் இருக்கும்போது கொடுக்கும் பலன்கள்

எல்லாம் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து பலன்கள் மாறுபடும். கூடலாம். குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

1.சூரியன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மை நிலையிலும், பெண் ஆசை உடையவராகவும் இருக்க நேரிடும்.

2. சந்திரன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் அழகற்றவராகவும், இருதய நோய் உடையவராகவும் இருப்பார்.

3. செவ்வாய் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர் ஏழ்மையில் வாழ நேரிடும். பகைவர்களால் துன்பமும், அதிர்ஷ்டமற்ற நிலையும் உண்டாகும்.

4. புதன் பகை ராசிகளில் இருந்தால், ஜாதகர், அறிவாற்றல் இல்லாதவராக, பகைவரால் தொல்லை அடைபவராக  இருப்பார்.

5. குரு பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் நியாயம் இல்லாதவராக, ஏழ்மை உடையவராக, அரக்க குணம் கொண்டவராக இருப்பார்.

6. சுக்கிரன் பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் துன்பம் அனுபவிப்பவராக, கீழான பணி செய்பவராக, பல கெடுதலான காரியங்களைச் செய்பவராக  இருப்பார்.

7. சனி பகை வீடுகளில் இருந்தால், ஜாதகர் தூய்மையற்றவராக, தொல்லைகள் உடையவராக, பல வியாதிகளால் துன்பம் அடைபவராக இருப்பார்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.25

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.

Astrology: களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன். 
The authority for Marriage


எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா? அதாவது ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் இல்லை!

Authority என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும். தந்தைக்கு அத்தாரிட்டி சூரியன். தாய்க்கு அத்தாரிட்டி சந்திரன் என்று இருப்பதுபோல களத்திரத்திற்கு, அதாவது திருமணத்திற்கு அத்தாரிட்டி சுக்கிரன் மட்டும்தான்!

வாழ்க்கையில் உள்ள எல்லா சுகங்களுக்கும், படுக்கை சுகம் உட்பட (அதாவது ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணிற்கு ஆண் பரிசமும்) எல்லா சுகங்களுக்கும் உரியவன் சுக்கிரன்தான். ஆகவே அவன்தான் திருமணம் செய்து வைக்கும் அதிகாரமும் கொணடவனாவான்.

பெண்களுக்கு மட்டும் ஒரு துணைக் காவடியும் உண்டு. மெயின் காவடியை சுக்கிரன் தூக்குவான். துணைக் காவடியை குரு பகவான் தூக்குவார். அதனால்தான் பெண்களுக்கு மஞ்சள் கயிற்றைத் தாலிக் கயிறாக அணிவிக்கிறோம். மஞ்சள் நிறமுடைய தங்கத்தில் திருமாங்கல்யத்தைச் செய்கிறோம். பெண்களைத் தினமும் மஞ்சள் பூசிக் குளி என்கிறோம்.தங்கம் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு விரளி மஞ்சளை, மஞ்சக் கயிற்றில் கட்டி அணிவிக்கின்றோம். இவை எல்லாம் குருபகவானை மகிழ்விப்பதற்கும், அவரின் ஆசீகளைப் பெறுவதற்கும்தான்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் மட்டும் செவ்வாயைக் கூப்பிட்டுப் பார்ப்போம். அதுபோல செவ்வாய் தோஷத்திற்கும் அவர் வந்து நிற்பார். அவரின் பங்களிப்பு அவ்வளவுதான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
===============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.25

Astrology: கல்வியின் மேன்மை

Astrology: கல்வியின் மேன்மை 

கல்வியைப் பற்றிச் ஜோதிடம் சொல்வதென்ன?

    ”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை”
          - திருக்குறள்

    ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல - மு.வ உரை. கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல - சாலமன் பாப்பையா உரை
-----------------------------------------------
மாடு என்றால், தமிழில் செல்வம் என்ற பொருளையும் கொடுக்கும். கல்வியைத் தவிர மற்றதெல்லாம் சிறந்த செல்வம் இல்லை என்கிறார்கள். சரி, நாமும் ஒப்புக்கொள்வோம்.

அத்தகைய சிறந்த செல்வம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். கல்வி வியாபாரமாகிவிட்ட சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள கொடுமை அது. அதை நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆகவே அதை விடுத்து, ஜாதகப்படி கல்வி கிடைக்க என்ன அமைப்பு என்பதை மட்டும் பார்த்து நாம் நம் மனதை சாந்தப் படுத்திக்கொள்வோம்!
----------------------------------------------
இயற்கையாகவே ஒருவருக்குத் தடையற்ற கல்வி கிடைப்பதற்கு லக்கினாதிபதி ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். லக்கினாதிபதி கேந்திரங்களிலோ (1,4,7,10th houses), அல்லது திரிகோணங்களிலோ (1,5,9th houses) அல்லது 2 அல்லது 11ஆம் வீட்டிலோ சென்று அமர்ந்திருப்பது நன்மை பயக்கும். அதைவிடுத்து லக்கினாதிபதி 6 அல்லது 8 அல்லது 12ம் வீடுகளில் அமர்ந்திருப்பது நல்லதல்ல. ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். அந்தக் கஷ்டங்களில் முறையான கல்வி கிடைக்காமையும் சேர்ந்து கொள்ளும்.

நான்காம் வீடுதான் கல்விக்கான வீடு. நான்காம் வீடுதான் தாய்க்கான வீடு. தாய்தான் ஒரு குழுந்தைக்கு முதல் ஆசான். என்னவொரு ஒற்றுமை பாருங்கள். தன் தாயிடமிருந்துதான் ஒரு குழந்தை நிறையக் கற்றுக்கொள்கிறது. நான்காம் வீடுதான் ஜாதகனுக்கு அடிப்படைக் கல்விக்கும், பட்டப் படிப்புவரை உள்ள கல்விக்கும் உரிய இடமாகும்.

ஐந்தாம் வீடு அறிவிற்கான இடமாகும். It is the place for keen intelligence. ஒருவன் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற துறைகளில் உயர்கல்வி பெற ஐந்தாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும்.
--------------------------------------------------
கல்வி பெறுவதற்குத் தடை ஏற்படுத்தும் ஜாதக அமைப்புக்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றைக் கவனமாகப் பாருங்கள். அவற்றில் எது இருந்தாலும் ஜாதகன் கல்வி மற்றும் உயர் கல்வியைப் பெற முடியாது!

1. இரண்டாம் வீட்டின் அதிபதி, நான்காம் வீட்டின் அதிபதி, ஐந்தாம் வீட்டின் அதிபதி ஆகியவர்களில் எவரும் நீசம் அடைந்திருக்கக்கூடாது.

2. 2ம், 4ம் & 5ஆம் வீடுகள் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்ககூடாது.

3. அதேபோல்  2, 4 & 5ஆம் வீட்டின் அதிபதிகளும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்ககூடாது.

4. இரண்டாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது அவர்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்திருக்கக்கூடாது

5. புதன் மேஷம் அல்லது விருச்சிகத்தில் போய் அமர்ந்திருக்ககூடாது.

6. புதன் நீசமடைந்திருக்ககூடாது.

7. புதன் செவ்வாயின் பார்வையில் இருக்கக்கூடாது.

8. குரு நீசம் பெற்றிருக்கக்கூடாது.

9. சூரியன் நீசமடைந்திருக்கக்கூடாது.

மேற்கூறியவை அனைத்தும் பொதுவிதிகள். சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையை வைத்து இந்த அமைப்பினால் ஏற்படும் கெடுதல்கள் குறையலாம். அல்லது இல்லாமல் போகலாம்.

அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.9.25

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்

Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம் 

தலைப்பு: சொந்த ஊர்

சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்

ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? படித்து முடித்தவுடன், பலர் வேலை வாய்ப்பின் காரணமாக வெளியூருக்குச் சென்று வசிக்க நேரிடுகிறது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும்படியான சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.

அங்கே சென்று, அதாவது வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று, எவ்வள்வு பொருள் ஈட்டினாலும் அல்லது எத்தனை வசதிமிக்க வாழ்க்கை வாழ்ந்தாலும், மனதிற்குள் சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும். சிலர் அதை வெளிப்படுத்துவார்கள். சிலர் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தாமல் கமுக்கமாக இருப்பார்கள்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா
அடஎந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக் கீடாகுமா ”

என்று ஒரு அற்புதமான பாடல் மூலம் இளையராஜா அதை பலரும் அறியப் பாடலாகச் சொன்னார்.

மத்திய வயதில் வெளி நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சொகுசான வாழ்க்கையால் பலர் தங்களை மறந்து அங்கே இருந்தாலும், வயதான காலத்தில், சொந்த ஊர் ஏக்கம் பலருக்கும் வந்து விடும்.

தங்கள் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மாதம் ஒருமுறையாவது தங்கள் ஊருக்கு வந்து விட்டுப் போவார்கள். வட மாநிலங்களில் இருப்பவர்கள் வருடம் ஒருமுறையாவது வந்து விட்டுப்போவார்கள். சிங்கப்பூர், துபாய், அல்லது அமெரிக்கா போன்ற தூர தேசங்களில் இருப்பவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வந்து விட்டுப் போவார்கள்.

ஆனால் வயதானவர்கள், அதாவது 60 அல்லது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் ஊரை விட்டுத் திரும்பி வந்து, தங்கள் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கும். பலருக்கும் அது கிடைக்காமல் போய்விடும்.

வயதான காலத்தில், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள், அதாவது மனைவி மற்றும் மக்கள் (பிள்ளைகள்) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அதைச் சற்று அலசுவோம்

-------------------------------------------------------------
லக்கினாதிபதி, 12ல் இருந்தால் ஜாதகனை வெளியூருக்குத் தள்ளிக் கொண்டு போய் விடுவார். நம்ம ஜாதகரும், தில்லியில் அரசு வேலையில் பல்லாண்டுகள் இருந்தவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். 1996ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றதும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாக முயன்றார். அது உடனடியாக நடக்கவில்லை. அவருடைய மனைவியும் மக்களும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுடன் அவரும் தொடர்ந்து தில்லியிலேயே இருக்கும்படி ஆயிற்று. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது ஏக்கம் தீர்ந்தது. சொந்த ஊருக்குத் திரும்பிவந்து செட்டிலானார்.

1. லக்கினாதிபதி செவ்வாய் 12ல் உடன் பூர்வ புண்ணியாதிபதி சூரியன். செவ்வாய் ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்றுள்ளார்.
2. பூர்வபுண்ணிய அதிபதி சூரியனும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில்

அந்த அமைப்பால், அவர் சொந்த ஊரைவிட்டு தூரமான இடத்திற்குச் சென்று ஜீவிக்க வேண்டியதாயிற்று. அதே அமைப்பு அப்படித் தள்ளிக்கொண்டு சென்றவனைச் சட்டென்று சொந்த் மண்ணிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்காது. அவன் ஜீவனம் செய்த ஊரிலேயே இருக்கும்படியாகிவிடும்.

ராகு கொடி காட்டினால்தான் இடமாற்றங்கள் ஏற்படும். Jupiter is the ruling planet for distant places. இந்த ஜாதகத்தில் குரு 9ற்கு உரியவர். அத்துடன் அவர் ஒன்பதாம் வீட்டிலேயே இருக்கிறார். ஆனால் அவருடன் கூட்டாக இருக்கும் ராகு, (குரு திசை ராகு புத்தியில்) தன்னுடைய புத்தியில் அவருக்கு இட மாற்றம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தான்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.9.25

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்!

Astrology: இயற்கையான சுபக்கிரகங்களும், இயற்கையான தீய கிரகங்களும்! 

நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா?

நமக்கு நாம் எப்போதும், எந்த நிலையிலும் நல்லவர்தான். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கு நியாயமாகவும், நன்மை உடையதாகவும்தான் தெரியும்!

ஆனால் நாம் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். அல்லது மற்றவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!

நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்பது இரண்டு வகைப்படும். இயற்கையாகவே நல்லவர்கள் அல்லது இயற்கையாகவே கெட்டவர்கள் என்று இரண்டுவகைப் படுத்தலாம். அடிப்படைக் குணங்கள் எல்லாம் நல்லவையாக இருந்தால், இயற்கையாகவே நல்லவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஜோதிடத்தில், கிரகங்களை அவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்கள்.

இயற்கையாகவே நல்ல கிரகங்கள். அதாவது சுபக்கிரகங்கள்.

குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய 4 கிரகங்களும் இயற்கையாகவே நல்ல கிரகங்கள். ஒருவருடைய ஜாதகத்தில் அவைகள் வலிமையாக இருக்க வேண்டும்

இயற்கையாகவே தீய கிரகங்கள்

சனி, செவ்வாய், ராகு & கேது ஆகிய 4 கிரகங்களும்  இயற்கையாகவே தீய கிரகங்கள் ஆகும்! தீய கிரகத்துடன் சேரும் புதன் நன்மையைச் செய்வதில்லை.அதுவும் தீயதாகவே மாறிவிடும்!


அன்புடன்,
வாத்தியார்
===========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.25

Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்)

Astrology: துவஜ யோகம்! (கொடி பிடிக்கும் யோகம்) 

Lesson on Yoga: Dhwaja Yoga:

துவஜ எனும் வடமொழிச் சொல்லிற்குக் கொடி (flag) என்று பெயர். கொடி யோகம் என்று இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கொடி யோகம் என்றால் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போகும் யோகம் அல்ல! கொடியை உருவாக்கித் தலைமை தாங்கும் அல்லது தலைமை ஏற்கும் யோகம்.

இந்த யோகத்துடன் ஒரு குழந்தை பிறந்தால், நாட்டிற்குத் தலைமை தாங்கும் யோகத்துடன் அந்தக் குழந்தை

பிறந்துள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தலைமை தாங்குவது என்பது எந்த அளவிற்கு (Level) வேண்டுமென்றாலும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து இருக்கலாம்.
..........................................................................

யோகத்தின் அமைப்பு: ஜாதகத்தில், தீய கிரகங்கள் எல்லாம் எட்டாம் வீட்டில் இருக்க, சுபக்கிரகங்கள் எல்லாம் லக்கினத்தில் இருக்க வேண்டும்.

தீய கிரகங்கள்: செவ்வாய், சனி, ராகு அல்லது கேது
சுபக்கிரகங்கள்: குரு, சுக்கிரன், சந்திரன்

பலன்: ஜாதகன் தலைவனாக இருப்பான். அவன் உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.

A planetary combination formed by all the malefic placed in the 8th house and
all benefices in the ascendant. Under this combination, a leader is born
==================================================
சார், நான் மேஷ லக்கினக்காரன் செவ்வாய் எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? அல்லது நான் மகர லக்கினக்காரன், சனி எப்படி எனக்குத் தீய கிரகம் ஆகும்? என்று யாரும் கேட்க வேண்டாம். ரிஷிகள் இந்த யோகத்திற்கான விதி முறைகளைக் கூறியுள்ளபோது அதை அப்படியே எடுத்துக் கொள்வது நல்லது! மாட்டேன் என்றால் - It is your problem and it is not concerned with astrology!

அன்புடன்
வாத்தியார்!
----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.25

Astrology: துர் யோகம் (கெட்ட யோகம்)

Astrology: துர் யோகம் (கெட்ட யோகம்) 
கெட்ட யோகம்!
Lessons on Yogas: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு எங்கே போவது?

இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் முதல் வகை!
2. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டுபோய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.

அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!

ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.

அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன் இரண்டாவது சாய்ஸ்!

எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது.

ஒரு கவிஞன் எழுதினான்.

”அணைக்க
ஒரு அன்பில்லாத மனைவி;
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும்,
எனோ இன்னும்
வாழ்க்கை கசக்கவில்லை!”

இந்த நிலைமையில்தான் பாதிப்பேர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)

Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.

அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகம் என்பது கிரக்கூட்டு அல்லது சேர்க்கை அல்லது சேரும் இடத்தைப் பொறுத்து வருவது. நல்ல யோகங்கள் ஜாதகத்திற்கு வலுவைச் சேர்க்கும். எதிர்மறையான யோகங்கள் ஜாதகத்தின் வலிமையைக் குறைக்கும். ஒன்றை வைத்து, ஒன்றை முடிவு செய்ய முடியாது.

இந்த அமைப்பைப் பெற்றிருப்பவர்கள், எதற்கும் கவலைப் பட வேண்டாம். கவலைப் பட்டு என்ன ஆகிவிடப்போகிறது? நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலைப் படாதீர்கள்.

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண் 337 என்று எப்படி வரும்.

இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?

கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பர்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

அன்புடன்
வாத்தியார்
==========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.9.25

Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)

Astrology: கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) 
--------------------------------------------------
Lesson on Yogas: Grahamalika Yoga

மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள்.

சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம்.

நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில்
கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.
இருந்தால் அது மாலையோகம் எனப்படும்

பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும்,
செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்
---------------------------------------------------------------------
A planetary combination under which all planets occupy
consecutive houses leaving the intervening cardinal houses
vacant. The individual under this combination is happy,
handsome, and is provided with much ornaments, gems
and jewels.
--------------------------------------------------------------
ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த
ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும்
அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்!

Grahamalika \"planetary garland\" Yoga:
All the nine planets consecutively in six or seven houses from the
lagna. The native with a Grahamalika Yoga will be
fortunate
------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.25

Astrology: மகாபாக்கிய யோகம்!

Astrology: மகாபாக்கிய யோகம்! 

இன்றைய பாடத்தில் ஒரு எளிமையான யோகத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.
----------------------------------------------------------

ஒற்றைப்படை ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகளிலும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகளிலும் சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பகற் பொழுதில் பிறக்கும் ஜாதகனுக்கு, ஆண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பெண்களுக்கு:

இரட்டைப்படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகளிலும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகளிலும்,லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இரவுப் பொழுதில் பிறக்கும் ஜாதகிக்கு, பெண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பலன்: நல்ல பண்புகளைப் பெற்றவனாக அல்லது பெற்றவளாக ஜாதகன்/ஜாதகி இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். அன்பே உருவானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும்!

Mahabhagya Yoga for Men - in day time birth, when Sun,Moon and ascendant in odd signs and for Women - night time birth when Sun,Moon and ascendant in even signs,than this yoga is formed.The native of this yoga is to be of good character,Helping to others,Kind and famous. Nullification is depend on placement of other planets.
+++++++++++++++++++++++++++++++++++++++
”ஓகோ, இதுதான் இந்த யோகத்தின் பலனா? நான் மகா பாக்கியம் எனும் தலைப்பைப் பார்த்தவுடன், ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியமோ என்று நினைத்து, மூச்சிரைக்க ஓடோடி வந்தேன்.” என்று சொல்பவர்கள் அடுத்துவரும் வரிகளைப் படியுங்கள்.

பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம். ஓக்கேயா?

அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.25

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! Lesson on Yogas: Mathru Nasa Yoga

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! 
Lesson on Yogas: Mathru Nasa Yoga

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும்

அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.
++++++++++++++++++++++++++++++++++++++
1
பந்துபிஸ்த்தயக்த யோகா:
(உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது
பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.
அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
2
மாத்ருநாச யோகா:
(தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய
கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள்
பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.25

Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period

Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period 

பிள்ளை வளர்ந்து இளைஞனாகி விட்டால், தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான். இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள். கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான். வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள் என்று ஞானி ஒருவன் சொல்லிவைத்தான்.

உரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ளப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!
-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது!

உலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுபோல நல்ல நிலைமையில் இருக்கும் எவனும் ஜோதிடத்தையோ அல்லது ஜோதிடரையோ நாடமாட்டான். ஒரு கஷ்டம் வரும்போதுதான், அதுவும் அவனால் அதைத் தீர்க்க முடியாத நிலை அல்லது சூழ்நிலை வரும்போதுதான், தன் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுப்பான்.

முன்பு ஒரு முறை நண்பர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார்: “நான் செய்யாத தவறிற்காக, இப்போது என் அலுவலகத்தில் பெரிய பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறேன்”

நான் கேட்டேன்: “நீ தவறு செய்யாமல் எப்படி அவர்கள் உன்னை ஆட்படுத்துவார்கள். அதில் உன் பங்களிப்பு ஏதாவது நிச்சயமாக இருக்க வேண்டும்”

“ஆமாம், எனக்குக் கீழே உள்ளவன் செய்த தவறு. அவன் மீது நம்பிக்கை உள்ள காரணத்திற்கக, அவன் வைத்த காகிதங்களில் அவற்றை ஆராயமல் கையெழுத்துப் போட்டேன். அது மட்டுமே நான் செய்த தவறு!”

“போதாதா? அவனைப் போன்றவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை இடுவதற்குத்தானே உன்னை நியமித்திருக்கிறார்கள். நீ  ஒன்றைப் படிக்காமல் எப்படி கையெழுத்துப்போடலாம்? இது வேலையில் அக்கறையின்மை கணக்கில் வரும்”

“வரும் என்ன, வந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. விசாரணை நடைபெறுகிறது. எனக்கு ஒலையோடு நிற்குமா அல்லது வேலை போய்விடுமா என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது”

அவன் தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். வாங்கிப் பார்த்தேன்.

இதுபோன்ற கேள்விகளுக்கு, தொழில் ஸ்தானமாகிய 10ஆம் இடத்தை லக்கினமாக வைத்துக் கொண்டு, ஜாதகத்தில் உள்ள அமைப்புக்களைப் பார்க்க வேண்டும்.

அவர் மேஷ லக்கினக்காரர். பத்தாம் இடம் மகரம். அதன் அதிபதி, அதாவது பத்திற்கு உரியவன், சனீஷ்வரன், அவன் அந்த வீட்டிற்கு 5ஆம் இடத்தில் திரிகோணமேறி இருந்தான். அதுவும் நட்புவீட்டான ரிஷபத்தில். ஆகவே வேலையில் ஒரு ஸ்திரமும், முன்னேற்றமும் இருக்கும்.

சரி, இப்போது உள்ள பிரச்சினை எதனால்? அது தற்காலிகமானதா? எத்தனை நாட்கள் நீடிக்கும்? எப்போது உய்வு வரும்?

அதற்கு கோள்சாரச் சனியைப் பார்க்க வேண்டும். அதுவும் கேள்விக்குரிய பத்தாம் வீட்டை வைத்தே பார்க்க வேண்டும்.

அன்றையத் தேதியில், சனி சிம்மத்தில் இருந்தார். அது 10ஆம் வீட்டிற்கு எட்டாம் இடம். அதனால்தான் வேலையில் பிரச்சினை. அடுத்த சனிப்பெயர்ச்சி இன்னும் 3 மாதகாலத்தில் நடைபெறவுள்ளது.

ஆகவே நான் சொன்னேன். ”மூன்று மாத காலம் உன்னைப் பணிநிறுத்தம் (suspend) செய்யலாம். அதற்குப் பிறகு உண் பணி அங்கேயே தொடரும். வேலையை விட்டு உன்னைத் தூக்கும் வாய்ப்பு இல்லை”

அதன்படியே நடந்தது.

இதை ஒரு உதாரணத்திற்காகவே சொன்னேன்.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜாதகத்தை ஆராயும் வழிமுறைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

1. கோள்சாரச் சனி 10ஆம் இடத்திற்கு, 6, 8 & 12ஆம் வீடுகளில் பயணிக்கும் காலங்களில், வேலை அல்லது தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். பிரச்சினைகள் உண்டாகலாம்.

2. ஆறாம் வீட்டில் (அந்த வீட்டிற்கு ஆறாம் இடத்தில்)பயணிக்கும் காலத்தில், தொழிலில் போட்டியாளர்கள் உருவாகி, நமக்கு இடைஞ்சலை உண்டாக்கலாம். எதிரிகள் ஏற்படலாம். நமது தொழிலை ஸ்தம்பிக்கச் செய்யலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில், நமக்கு எதிரானவர்களால், அல்லது நம்மைப் பிடிக்காதவர் களால், பாதிப்புக்கள் உண்டாகலாம். அவப்பெயர் உண்டாகலாம். அந்தக் காலகட்டத்தில் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்

3. எட்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு எட்டாம் இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். தொழிலை மாற்ற நேரிடலாம். தொழிலில் பலவிதமான சிக்கல்கள் (difficulties) ஏற்படலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் அவருக்கு இடமாற்றம் ஏற்படலாம். கீழ் நிலைக்குத் தள்ளப்படலாம் (depromotion) அல்லது தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றப்படலாம்.

4. பன்னிரெண்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு பன்னிரெண்டாம்  இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில், விரையங்கள் (Financial losses) ஏற்படலாம். தொழிலைக் கைவிட நேரிடலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் சம்பளம் குறைக்கப்படலாம். நமது பணியால், அலுவலில் ஏற்படும் நஷ்டத்திற்கான ஈட்டுத்தொகையை நாம் கட்டும்படி நேரிடலாம். அல்லது வேலையை விட்டே விலக நேரிடலாம்.

பயப்பட வேண்டாம். இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, அவற்றில் உள்ள கிரக நிலைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.25

Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)



Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)

1. வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். (exchange of houses) சூரியன் மற்றும் சனீஷ்வரனின் ஆகிய இருவரும்  பரிவர்த்தனை
பெற்றிருத்தல் விதிவிலக்கு. இந்தக் கணக்கில் வராது.
2. வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருத்தல்.
3. உச்சம் பெற்ற கிரகம் அமர்ந்திருக்கும் வீடு. (A house occupied by an exalted planet - எந்த கிரகமாயிருந்தாலும் சரி.
4. வீட்டின் இருபுறமும் நன்மை பயக்கக்கூடிய கிரகங்கள் அமர்ந்திருப்பது. (hemmed between two good planets) சுபக்கிரகங்கள்,

மேலே கொடுத்திருக்கும் விதிகள் ஒரு வீட்டின் வலிமையை அதிகப் படுத்துவதாகும். அந்த எட்டு விதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
விதிகளின்படி அமைந்திருக்கும் வீடுகள் வலிமை உடையதாகும்.

முதல் விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது. உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு
அடுத்ததுதான். அதுவும் 2 to 8 என்று இறங்குமுக வரிசையில் இருக்கும். பலமும் அப்படித்தான் அமையும்.

அதாவது, முதல் விதிப்படி 8 மடங்கு பவர் என்றால், அடுத்த விதிக்கு ஏழு மடங்கு பலம் என்று குறைத்துக்கொண்டே வந்து பலனைப்
பாருங்கள்.
---------------------------------------------------------------------
பலம் எப்போது குறையும் அல்லது இல்லாமல் போகும்?

1. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகளின் (Owners of inimical houses) பார்வையில் விழும் வீடுகள் வலிமையை இழக்கும்.
2. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகள் வந்து அமரும் வீடுகளும் (houses occupied by the lord of 6, 8 &12th houses) வலிமையை இழக்கும்
3. ஒரு வீட்டின் அதிபதி  6, 8 & 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்தாலும், அவர் தன் வலிமையை இழந்து விடுவார். உதாரணம் லக்கினாதிபதி

12ல் அமர்ந்தால் - அது விரைய வீடு - தன் வலிமையை இழந்து விடுவார். அதுபோல எந்த அதிபதி அங்கே அமர்ந்தாலும் தன் வலிமையை
இழந்துவிடுவார். அந்த அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. மற்றவர்களுக்குத்தான் பயன்படும். 

அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!