புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்!
மெல்லிசை மன்னருக்கு ஒரு அஞ்சலி!
சுமார் 60 ஆண்டு காலம் திரையுலகில் கோலோச்சிய திருவாளர்
M.S. விஸ்வநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர்
ஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைப்
பதிவு செய்கிறேன். எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்தனை செய்கிறேன்.
சுமார் 1,200 படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவற்ரில் பல பாடல்கள் நம் மனதில் தங்கியுள்ளன.
பல கவிஞர்கள் அவருடைய இசைக்கு உறுதுணையாக அற்புதமான
பல பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்கள். அவர்களில் கவியரசர்
கண்ணதாசன் அவர்களும் கவிஞர் வாலி அவர்களும் குறிப்பிடப் பட வேண்டியவர்களாகும்.
அவர்கள் எல்லாம் வாழ்ந்து பல ஆக்கங்களைக் கொடுத்து காலத்தில்
நாமும் வாழ்ந்திருந்தோம் என்பதே நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயமாகும்.
வாழ்க அவர்களுடைய புகழ்!
மறக்க முடியாத, மறுக்க முடியாத மேதை M.S. விஸ்வநாதன்.
அவர் இறக்கவில்லை. திரையிசை வடிவில் அவர் என்றும் நம்முடன்
வாழ்ந்து கொண்டிருப்பார்!
கவியரசர் கண்ணதாசன் இன்று இருந்தால் இப்படித்தான் சொல்வார்:
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மெல்லிசை மன்னன் புகழ் பாடுங்களேன்!
அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

