மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு!Astrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு!

தலைப்பு: நல்ல மனைவி!!

எல்லா மனிதர்களுக்குமே, அதாவது இளைஞர்களுக்குமே, திருமணத்திற்குப் பெண் தேடும் சமயத்தில், ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அழகான பெண்ணாக இருக்க வேண்டும். படித்த பெண்ணாக இருக்க வேண்டும். குணமுள்ள, அனைவரையும் அனுசரித்துப்போகும் குணமுள்ள பெண்ணாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிலர் கூடுதலாக அவள் செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தால் பரவாயில்லை என்றும் எதிர்பார்ப்பர்கள்.

பெண்களுக்கும், அதாவது இளம் பெண்களுக்கும் அது போன்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கும். கூடுதலாக அவன் திறமைசாலியாகவும், கை நிறையச் சம்பாதிப்பவனாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

அப்படி எல்லாம், அதாவது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இருக்கக்கூடிய பெண்ணோ அல்லது பையனோ சுலபத்தில் கிடைத்துவிடுமா என்ன?

எல்லாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் அமையும். அதாவது ஜாதகத்தில் உள்ள அமைப்பின்படிதான் அமையும்.

ஜாதகத்தில் குறை இருந்தால் சிலர் பயந்துவிடுவார்கள். பயப்படாமல் முழுமையாக ஜாதகத்தை அலச வேண்டும்.

களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருந்தால் சிக்கல் என்று சிலர் நினைப்பார்கள். அதாவது சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு இரண்டு புறமும் உள்ள வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் அது பாபகர்த்தாரி யோகக் கணக்கில் வரும். அப்படி அமைந்திருந்தாலும் சேர்க்கை மற்றும் பார்வையால் அத்தீமை விலகிவிடும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாதகத்தை சுத்தமாக அலச வேண்டும்

ஒரு உதாரண ஜாதகத்தைவைத்து அதை இன்று அலசுவோம்
-------------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


தனுசு லக்கினம். பூச நட்சத்திரம்.
லக்கினாதிபதி குரு லக்கினத்தில் உள்ளார்
ஏழாம் வீட்டுக்காரரான புதன் லக்கினத்திற்கு எட்டில் உள்ளார். இருந்தாலும் அரச கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் கூட்டாக உள்ளார். சூரியன் இந்த ஜாதகத்திற்குப் பாக்கியநாதன் ஆவார் (9th lord)
களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார். முன் வீட்டில் சனி. அடுத்த வீட்டில் கேது.

என்ன ஆயிற்று?

பயப்படும்படியாக ஒன்றும் நடக்கவில்லை.

முதல் நிலை சுபக்கிரகமான குரு பகவான். லக்கினத்தில் அமர்ந்து தனது நேரடிப் பார்வையால், களத்திரஸ்தானத்தைப் பார்ப்பதுடன், களத்திரகாரனுக்கும் கை கொடுத்து தோஷங்களை நீக்கினார். குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். அவ்வாறு இந்த ஜாதகனுக்கும் தோஷங்கள் நீங்கி நல்ல மனைவி அமைந்தாள்! அதுதான் இந்த ஜாதகத்தின் மேன்மை

ஜாதகங்களை அலசும்போது, குருவின் பார்வையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.12.16

ஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்?


ஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்?

ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்கவேண்டிய அவசியமாகிறது

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர், தான் ஒரு சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காக ராஜசுய யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். யாகத்துக்கு உண்டான திரவியங்களை மற்ற அரசர்கள் தர வேண்டும். அத்துடன் தருமருக்கு அடிமை எனும் வகையில் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தருமருடன் போர் புரிய வேண்டும். தோற்றால், தோற்றவன் தருமருக்கு அடிமை. எனவே அவனது திரவியங்கள் தருமரை சேரும். வென்றால் வென்றவன் சுதந்திரமாக தருமருக்கு நட்பு அரசனாக இருக்கலாம். அவன் தருமருக்கு திரவியங்களை தர வேண்டியதில்லை. அந்த வகையில் தருமருக்கு ஏகப்பட்ட திரவியங்கள் சேர்ந்து விட்டன. இனி யாகம் செய்யவேண்டியதுதான் பாக்கி.

தனது தம்பியும் ஜோதிடக்கலை வல்லுனருமாகிய சகாதேவரை அழைத்து யாகத்துக்கான நல்ல நாள் குறிக்க சொன்னார். நல்ல நாளும் குறிக்கப்பட்டது. யாகத்துக்கு தலைமை தாங்க ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் வந்தார். யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆனால் அதனால் கிடைத்த பலன் என்ன? தருமர் சக்ரவர்த்தி ஆனாரா? இல்லையே. தருமர், தன் தாயார் மற்றும் குடும்பத்தாரோடு, உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி காட்டில் அலைய நேர்ந்தது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உத்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

உத்தவரின் கேள்வி::::::::::::::::::::::::::" ஐயனே, உலகித்தில் மிகச்சிறந்த ஜோதிடக்கலை வல்லுனராகிய சகாதேவர், நாள் குறித்தாரே! அந்த நாள் குறையுடையதா? சகாதேவர் ஜோதிடக்கலைக்கு துரோகம் செய்துவிட்டாரா? நீங்கள் தலைமை தாங்கினீரே! அவர்களுக்கு நீங்கள் அருள் புரியாமல் விட்டு விட்டீர்களா? எதனால் இப்படி நடந்தது?

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பதில்::::::::::::::::::::::::::::::: நாளும் சுபகரமானதே. என் அருளும் குறைவிலாததே. ஆனால் ராஜசுய யாகம் என்ற நல்ல காரியத்துக்கு, தருமர் திரட்டிய திரவியங்கள் பாப சம்பந்தப்பட்டவை.. போரில் அனேகம் பேர் இறந்தனர். பல அரசர்கள் வேதனையுடன் திரவியங்களை தந்தனர். இப்படி பாவப்பட்ட வழியில் கிடைத்த திரவியங்களை கொண்டு என்னதான் நல்ல நாள் பார்த்து { இது ஜோதிடர் தவறல்ல }, நல்ல காரியம் செய்தாலும், அது உடனே பலனளிக்காது. அதற்கென்று பலன் உண்டு அது தாமதமாக கிடைக்கும். என் அருளும் அப்படித்தான்


இப்படிப்பட்ட காரணங்களால், யாகத்தின் பலனும் என் அருளும் 14 ஆண்டுகள் தாமதமாக கிடைத்தன.

உத்தவரின் கேள்வி ஐயனே, மிகச்சிறந்த ஜோதிடரான சகாதேவருக்கு, தருமர் காடு போவார் என்று முன்னமே தெரியாதா?

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இது சகாதேவன் { ஜோதிடர் } செய்த தவறு. அண்ணன் நாள் பார்க்க சொன்னான். யாகத்துக்குண்டான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த சகாதேவன், எப்படியும் யாகம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தில், நாள் குறித்தான். அவன் , அண்ணனுக்கு தம்பியாக இருந்து நாள் குறித்தானே தவிர, ஜாதகருக்கு ஒரு ஜோதிடராக இருந்து செயல்படவில்லை. செயல்பட்டிருந்தால், தருமனுக்கு தற்போது சக்ரவர்த்தி ஆகும் யோகம் உள்ளதா? என ஆராய்ந்திருப்பான்.


ஆகவே ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்கவேண்டிய அவசியமாகிறது. இந்த பொறுப்பு, ஜாதகருக்கும், ஜோதிடருக்கும் உண்டு. அதே போல் மிக நுணுகி ஆராய்ந்து நல்ல நாள் பார்த்தாலும், அதிலும் ஒரு குறை ஏற்படுகிறது என்றால் அது ஜோதிடர் தவறு இல்லை என்பதை மேற்கண்ட பாரத நிகழ்வின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நாம் ஜோதிடராக இருந்தாலும்கூட நம்மை அறியாமல் தவறு செய்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஒரு ஜோதிடர் ஜாதகம் பார்க்கும் வேளையில், தனது மகிழ்ச்சி, துன்பம், போண்ட மன உணர்வுகளுக்கு இடம் தராமல் இருக்க வேண்டும். வந்திருக்கும் ஜாதகர் உறவினரா? நண்பரா? ஏழையா? பணக்காரரா? மேதையா? பேதையா? என்ற பேதங்களுக்கும் இடம் தராமல் நடுவு நிலையுடன் இருந்து ஜோதிட பலன் உரைக்க வேண்டும்.
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.12.16

வெதுவெதுப்பான குடிநீரின் அற்புதமான உபயோகங்கள்!


வெதுவெதுப்பான குடிநீரின் அற்புதமான உபயோகங்கள்!

அவசியம் படியுங்கள்

மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. கிடைத்த பகுதியை அப்படியே கொடுத்துள்ளேன். தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
*BENEFITS OF WARM WATER 👉👉👉*

*A group of Japanese Doctors* confirmed that warm water is 💯 % effective in resolving some health problems👇, including:

Headache, migraine,  high blood pressure, low blood pressure,  pain of joints, sudden increasing and decreasing of heartbeat, Epilepsy, increasing level of cholesterol, cough, bodily discomfort,  golu pain, asthma, hooping cough, blockage of veins, diseases related to uterus & urine, stomach problems, poor appetite, also all related diseases to the eyes, ear & throat.

*HOW TO USE WARM WATER 👉👉*

Get up early in the morning and drink approximately 4 glasses of warm water when the stomach is empty. *Do not eat anything 45 minutes thereafter.*

You may not be able to make 4 glasses at the beginning, but slowly you will.✍

The warm water therapy will resolve the health issues within reasonable periods:👇

👉 Diabetes in 30 days
👉 Blood pressure in 30 days
👉 Stomach related issues in 10 days
👉 All types of cancer in 9 months
👉 Blockage of veins in 6 months
👉 Lack of hunger (Poor appetite) in 10 days
👉 Uterus and related diseases in 10 days
👉 Nose, Ear & Throat problems in 10 days.
👉 Women's menstrual  problems in 15 days,
👉 Heart diseases in 30 days
👉 Headache/Migraine in 3 days
👉 Low blood pressure in 30 days.
👉 Cholesterol in 4 months
👉 Epilepsy and paralysis continously in 9 months
👉 Asthma in 4 months.

*COLD WATER IS BAD FOR YOU:*

🌻In the past, people used to say that if cold water does not affect you at young age, it will harm you at old age👇

*👉 Cold water closes  4 veins of the ♥ heart and causes heart attack 💔;* Cold drinks are main reason for Heart Attack.
👉 Cold  water💦 creates problems in liver; makes fat stuck with liver. Most of the people waiting for the transplant of liver are victims of cold water drinking.
👉Cold water affects internal walls of stomach.
👉Cold water affects stomach and big intestines and results in cancer.

*👉Please, don't keep this to yourself, share with all your loved ones.*
------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.12.16

ப்ரஷர் குக்கரைத் தூக்கிப் போடுங்கள்!


ப்ரஷர் குக்கரைத் தூக்கிப் போடுங்கள்!

சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம்?
வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.*

"எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.

சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்".

இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.

இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.

உதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.

இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.

இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.

உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.

அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.

சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%

இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.

இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.

Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
--------------------------------------------
படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.16

கவிதை நயம்: எதை எது வெல்லும்?

கவிதை நயம்: எதை எது வெல்லும்?

நீலவான் குடையின் கீழே
   நின்றாடும் உலகம் எங்கும்
கோலமோர் கோடி! ஆடி(க்)
   குலவுமோர் காட்சி கோடி!
காலையும் மாலையும் என்றும்
   கடும்பகல் இராப்போழ் தென்றும்
காலமோ விரைந்து போகும்
   காண்பதோ குறைவே யாகும்!

பூவமை வாசல் கன்னிப்
   புதுமலர் பெண்கள் பாடப்
பாவகை பலமன் றங்கள்
   பல்வகை நடனம்; நெஞ்சில்
ஆவலைக் கிளப்பும்; போதை
   ஆயிரம் மதுக்கிண் ணங்கள்;
காலனும்  வேலி யின்றிக்
   கட்டவிழ்த் தாடும் சங்கம்!

ஆடைகள் புதுவண் ணங்கள்
   ஆங்காங்கு நாடு தோறும்
மேடைகள் பலவண் ணங்கள்
   மெல்லிய மடவார் காட்டும்
ஜாடைகள் பலவா றாகச்
   சமைத்தநற் கறிகள், நீந்த
ஓடைகள் அருவி ஆறு
   உலகமே கலையின் கூடம்!

சில்லென்ற காற்று வந்து
   தேகத்தைத் தழுவும் குன்றம்
புல்லென்ற இறைவன் மெத்தை
   போகத்தின் நினைவை யூட்டிச்
செல்கின்ற மேகக் கூட்டம்
   சிறுமழைத் தூறல் சாரல்
கொல்கின்றாள் இயற்கை அன்னை!
   கொஞ்சத்தான் பருவம் இல்லை!

சிங்கப்பூர் பாங்காங் ஹாங்காங்
   செல்வம்சேர் கோலா லம்பூர்
இங்கிலாந் தமெரிக் காவோ(டு)
   எழிலான பிரான்ஸூ ஜப்பான்
எங்கெங்கே விமானம் போகும்
   எல்லாமும் காணத் தோன்றும்,
இங்கேநான் வாழும் எல்லை
   இவைகாணும் அளவா யில்லை!

அணைக்கவோ இரண்டே கைகள்
   அனுபவித் துறவை வாழ்வில்
இணைக்கவோ ஒன்றே உள்ளம;
   இயறகையைச் சுகத்தை நித்தம்
பிணைக்கவோ சிலநாள் வாழ்க்கை;
   பெரும்பெரும் நினைவை யெல்லாம்
அணைக்கவோ வருவான் காலன்;
   அளந்துதான் கொடுத்தான் தேவன்!

இருபதே வயதாய் என்னை
   இருநூற்று ஐம்ப தாண்டு
பருவத்தில் அவன்வைத் தானேல்
   பார்க்கின்ற அனைத்தும் பார்த்து
மருவற்ற பெண்கூட் டத்தின்
   மடியிலே புரண்டு நித்தம்
ஒருகிண்ணம் மாற்றி மாற்றி
   உலகத்தை அனுப விப்பேன்!

இறைவனா விடுவான்? என்னை
   இருபாலும் விலங்கு போட்டுக்
குறையுள்ள மனிதனாக்கி
   குரங்கென ஆட்டு வித்து
முறையாக வயது போக
   முதுமையும் நோயும் தந்து
சிறைவாசம் முடிந்த தேபோல்
   ஜீவனை முடித்து வைப்பான்!

இதயத்தை எண்ணம் வெல்லும்
   இளமையை முதுமை வெல்லும்
அதிகமாய்த் தோன்றும் நெஞ்சில்
   ஆசையைக் காலம் வெல்லும்;
மதியினை விதியே வெல்லும்
   வாழ்க்கையைக் கனவே வெல்லும்
வதைபட்ட நிலையில் இந்த
   மனிதனை மரணம் வெல்லும்!
                            - கவியரசர் கண்ணதாசன்

===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.16

Astrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின் திசை நன்மை செய்யுமா? அல்லது செய்யாதா?

Astrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின் திசை நன்மை செய்யுமா? அல்லது செய்யாதா?

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் அனைவருக்கும் ஏற்படும் ஒரு சந்தேகம்., ஒரு கிரகம் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தால், அதனால் பயன் இல்லை என்கிறார்களே, அதே கிரகத்தின் மகா திசை எப்படி இருக்கும்?

அதி ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று பார்ப்போம்!
-------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


ஜாதகர் 1969 ஆம் ஆண்டு பிறந்தவர். சிம்ம லக்கின ஜாதகம். அவிட்ட நட்சத்திரம்.
1. லக்கினாதிபதி சூரியன் 11ல் (லாப ஸ்தானத்தில்)
2. இரண்டில் குரு. ஆனால் உடன் கேதுவும் உள்ளார்.
3. சிம்ம லக்கினத்திற்கு யோக காரகனான செவ்வாய் கேந்திரத்தில் (4ல்) உள்ளார்
4. விரையாதிபதி சந்திரன் ஏழில் அமர்ந்து லக்கினத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்துகிறார்.
5. ஒன்பதாம் இடத்தில் (பாக்கியஸ்தானத்தில்) சனீஷ்வரன். ஆனால் அவர் நீசமாகியுள்ளார்
6. பத்தில் சுக்கிரனும், புதனும்.

ஜாதகனின் 36ஆவது வயதில் சனி மகா திசை ஆரம்பம். கேள்வி இதுதான். அந்தத் திசை ஜாதகனுக்கு நன்மை செய்யுமா? அல்லது கேடு செய்யுமா?
கேள்வி இரண்டு: ஜாதகனுக்கு அந்தத் திசையில் வீடு வாங்கும் பாக்கியம் உள்ளதா?

சனி நீசமானாலும் திரிகோண ஸ்தானத்தில் (9ல்) உள்ளார். அத்துடன் வேறு தீய கிரகங்களின் கூட்டணியோ பார்வையோ இல்லாமல் இருக்கிறார். ஆகவே அவர் நன்மையைச் செய்வார். ஒன்பதாம் இடத்தின் வலிமை அப்படி.

ஜாதகனுக்கு (அவிட்ட நட்சத்திரம்) முதல் திசை செவ்வாய் திசை. இரண்டாவதாக ராகு திசை. மூன்றாவதாக குரு மகா திசை. சனி திசை 4ஆவது திசையாகும். ஜோதிடத்தை வகுத்த முனிவர்களின் கணக்குப்படி நான்காவதாக வரும் சனி திசை நன்மையைச் செய்யாது.

இரண்டு ஜோதிட விதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், பெரிய அளவில் நன்மைகள் இல்லாவிட்டாலும், கெடுதல் இருக்கது. அதாவது சராசரியாக இருக்கும். பயப்படத்தேவையில்லாத நிலைமை!

சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், இடம் வீடுகளுக்கு உரிய நான்காம் வீட்டில் இருப்பதால், ஜாதகனுக்கு வீடு வாங்கும் பாக்கியம் உண்டு.

செவ்வாய் சுக்கிரனின் வலுவான பார்வையுடன் இருப்பதால், சனி திசை சுக்கிரபுத்தியில் ஜாதகனின் அந்த ஆசை நிறைவேறும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.12.16

தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பு!


தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பு!

‘இட்லி’ என்ற உணவின் வயது 700 ஆண்டுகள்.  ஆம்...  இட்லி தென்னிந்தியாவில் காலை உணவின் ராஜாவாக 700 ஆண்டுகளாய்  இருந்து வருகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா என அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உணவாகவும் இட்லி இருக்கிறது.

ஒரு வயது குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை, அனைவரும் சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கிறது. இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என கேட்டபோது, ‘ஏராளம்... ஏராளம்...’ என்கிறார் உணவியல் நிபுணர் ராதிகா.

* பொதுவாக ஒருவருடைய  உயரம் மற்றும் எடையைப் பொறுத்துதான்  உணவையும், அதன் அளவையும் தீர்மானிக்க முடியும். அந்த அடிப்படையில் எல்லாருக்குமான  உணவாக இட்லி இருக்கிறது. அதுபோல இட்லி எல்லா காலத்திலும் சாப்பிடக்கூடிய உணவாகவும். இந்தியாவின் தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

* ஒரு இட்லியில் 60 முதல் 70 கிலோ கலோரிகள் வரை அடங்கி இருக்கிறது. 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போ ஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து ஒரு மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியவை உள்ளது.

* தினமும் 4 இட்லிகள் எடுத்துக்கொண்டால் 300 முதல் 350 கலோரி கள் உடலுக்கு கிடைக்கும். இட்லியோடு சட்னி சாம்பார் சேரும்போது எல்லா ஊட்டச்சத்தும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.

* இட்லி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது, தசைகளுக்கு பலம் அளிக்கிறது. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பையும் அளிக்கிறது. உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் செரிக்கக்கூடிய உணவாகவும் பயண நேரங்களில் உண்பதற்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது.

* இட்லியோடு சாம்பார் சட்னி மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது. மீன் குழம்பு, மட்டன் குழம்பு, கார குழம்பு என்று எடுத்துக்கொள்வது தவறு. மேலும், இட்லியோடு வடை, போண்டா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

* வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது. வயிற்று புண்கள் ஆறுவதோடு செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் இட்லி உதவுகிறது.

* இட்லி இரண்டு மணி நேரத்துக்குள் செரிக்க கூடிய உணவாகும். குழந்தைகளுக்கு தினமும் இட்லி ஊட்டுவது நல்லது. அவர்கள் விரும்பும் வகையில் ரவை, ராகி, வெஜிடபிள், கேரட் துருவல், பீட்ரூட் துருவல் போன்றவை கலந்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் இட்லியைக் கொடுக்கலாம்.

* இட்லியை காலைப் பொழுதில் எடுத்துக்கொள்வது சிறந்தது. புரதச்சத்து ஒவ்வாமை உள்ளவர்கள் இட்லியில் அரிசிக்கு பதிலாக ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம்.

* நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இட்லியை குறைவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வதும் சிறந்தது.

* இட்லி நீராவியில் வேக வைக்கும் உணவு என்பதால் கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத உணவாக இருக்கிறது.

* இட்லி மாவை 12 மணிநேரம் ஊற வைப்பதால் இயற்கையாகவே கூடுதலான உயிர்சத்துக்கள் உருவாகின்றன.

* இட்லி மாவு 12 மணி நேரம் புளித்த பிறகு பயன்படுத்த வேண்டும். அதிகம் புளிக்கும்படியும் பயன்படுத்தக்கூடாது.

* இட்லியை வீட்டில் தயார்செய்து சாப்பிடுவதே சிறந்தது. இட்லி மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டல்களில் பேக்கிங் சோடா பயன்படுத்துகிறார்கள் அது இட்லியின் பயனைக் கெடுப்பதோடு உடலுக்கும் நோய்களைத் தருகிறது. இட்லி மென்மையாக இருக்க பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தயம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கும் நல்லது.

* இட்லியில் நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால் 12 மணிநேரம் கெட்டுபோகாமல் இருக்கும். இட்லியை பிரிட்ஜில் வைக்க கூடிய அவசியமும் இருக்காது. மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் அடித்தளமாக இட்லி இருக்கிறது.
-------------------------------------------
படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.12.16

நிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்!


நிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்!

சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !
அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !

கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள்  தொலைக்காட்சி நிருபர்கள்  ..!
.
அந்த பெண்ணின் பெயர்  ஸ்ருதி ... வயது 24  ..!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் ...!

கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !
.
அந்தப் நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
“இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”

அந்தப் நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட  கேள்வி :
 “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”
.
ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.
எதுவும் பேசவில்லை .

பின் அமைதியாக சொன்னார் :  “இல்லை ..  என் குடும்பம்  மிக மிக  எளிமையான  குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!”

நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள் : “ மேடம் ..உங்கள் குடும்பம் .... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன் ..?”
.
ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம் .
நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ..?

“மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

“ஸாரி ..என்ன கேட்டீர்கள் ..?”

“உங்கள் அப்பா – அம்மா ...?”

ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் . “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ”

நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள் : “எங்கே  மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”
.
ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார் : “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..”

“ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .

ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார் : “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான்   இருக்கிறார் !”

நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !

ஒரு நிருபர் கேட்டார் : “ ஓ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
“இல்லை..”
இன்னொரு நிருபர் கேட்டார் : “சீனியர் வக்கீலா ..?”
“இல்லை..”
.
வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி , கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில்  ஒதுங்கி நின்றார் .

நிருபர்களைப் பார்த்து கேட்டார் :
“நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் .

அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க ... ஸ்ருதி தன் கையாலேயே அதை  வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க ...
டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?”

ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார் : “எங்கே..?”

நிருபர்கள் சற்றே குழம்பி ..
 “மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு  அறிமுகப்படுத்தி வைப்பதாக ....”

ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?.....ஓகே ...போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு , சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார்
:
 “அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !”
.
திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !
.
ஸ்ருதி அந்த டீ விற்பவரின்  அருகில் நின்று கொண்டு , நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார் : “ இவர்தான் என் அப்பா ...பல வருஷங்களாக  டீக்கடை நடத்தி வருகிறார் . இதோ .. இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான்  எங்கள் டீக்கடை இருக்கிறது ... கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான்  டீ விற்பனை செய்கிறார் .. இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து , இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக
இருக்கிறேன் ...!”

நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .

ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே .. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும் .. நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .. நான் வரட்டுமா ..?”

ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார் .
அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .
.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே”
.
(நன்றி : Deccan Herald & india times)
19/12/16
========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.12.16

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..?

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..? 

இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.

உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை.

மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி.

இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.

அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.

மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.

வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.

இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது.

பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.
-----------------------------------------
படித்தேன்;பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.12.16

Short Story: சிறுகதை: சுயம்பு சுந்தரம் செட்டியார்


சிறுகதை: சுயம்பு சுந்தரம் செட்டியார்

அடியவன் எழுதி இந்தமாத, மாத இதழ் ஒன்றில் வெளியான சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்
---------------------------------------------------------------
செட்டிநாட்டின் மையப் பகுதியில் உள்ளது அந்த ஊர். சுமார் 500 புள்ளிகளையே கொண்ட ஊர் அது.அந்த ஊரில் சுந்தரம் என்ற பெயரில்  பத்துப் பேர்கள் இருந்ததால், ஒவ்வொருக்கும் அவர்களுடைய வீட்டை வைத்து அடையாளப் பெயர்கள் இருந்தன. ஆனால் நம் நாயகருக்கு அவருடைய பெயரை வைத்துத்தான் அவருடைய வீட்டிற்கே அடையாளப் பெயர். சுயம்பு சுந்தரம் செட்டியார் வீடு என்றால் அனைவருக்கும் தெரியும்.

ஊருக்கு நடுவில் இருந்த கண்டி கதிரேசன் செட்டியார் வீட்டிற்குச் சொந்தமான 33 செண்ட் தோட்டத்தை விலைக்கு வாங்கி சுயம்பு சுந்தரம் செட்டியார் சொந்தமாக வீட்டைக் கட்டிய பிறகு, ஊர் மக்கள் அந்த வீட்டிற்கு அடையாளப் பெயராக அவர் பெயரையே வைத்து விட்டார்கள்.
அது மட்டுமில்லாமல் உள்ளூர் நகரத்தார் பள்ளிக்கூடத்திற்கு அவர் ஐம்பது லட்ச ரூபாய்களையும், பஞ்சாயத்து ஒன்றியத்திற்கு அதன் வளர்ச்சிக்காக ஐம்பது லட்ச ரூபாய்களையும் கொடுத்து நிதி உதவி செய்ததால், அவர் வீடு இருந்த தெருவிற்கும் அவருடைய பெயரையே வைத்துவிட்டார்கள். ’சுயம்பு சுந்தரம் செட்டியார் வீதி’ என்பது அதன் பெயர்.

புதிதாக அந்த ஊருக்கு விஷேசங்களுக்காக வருகிற நகரத்தார்களுக்கு அந்தப் பெயர் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

ஒருமுறை அந்த ஊரில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்காக வந்திருந்த பேராசிரியர் ஒருவர் பெயர்க் காரணம் கேட்ட போது, உள்ளூரைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஒருவர் அவருக்கு விளக்கம் சொன்னார்:

“என்னப்பா, வித்தியாசமான பெயராக இருக்கிறதே?”

“ஆமாம், நாங்களாக வைத்த அடையாளப் பெயர்தான் அது”

“சுயம்புலிங்கம், சுயம்பு விநாயகர் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். சக மனிதனுக்கு எப்படி சுயம்பு என்ற பெயரை வைப்பீர்கள்? முதலில் சுயம்பு என்றால் என்ன? அதற்கு விளக்கம் சொல்!”

“சுயம்பு என்றால் சுயமாக வளர்வது. தானாக வளர்வது.”

”மனிதன் எப்படித் தானாக வளர முடியும்? சுயமாக வளர முடியும்? சுயமாக வேண்டுமென்றால் முன்னேறலாம். ஆனால் சுயமாக வளரமுடியாதே!
பிறந்ததில் இருந்து 18 வயதுவரை யாராவது வளர்க்க வேண்டுமே? சுயமாக எப்படிப் பிறக்க முடியும் அல்லது வளர முடியும்? அப்படியிருக்கையில் அந்தப் பெயரை ஏன் அவருக்கு அடைமொழியாக வைத்தீர்கள்?”

சின்ன வயதில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய திருமணம் கூட தாமதமாகத்தான் நடைபெற்றது. யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. கடைசியில் பெற்றோர் இன்றி பெரிய தகப்பனார் வீட்டில் வளர்ந்து வந்த பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டார். அவருடைய முப்பதாவது வயதில்தான் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அந்தக் காலத்தில் அது தாமதமான வயதுதான். இப்போது அவருக்கு 65 வயது. முட்டி மோதி நானாகத்தான் சுயமாக - சுயம்புவாக, யாருடைய உதவியும் இன்றி வளர்ந்தேன். முன்னுக்கு வந்தேன் என்று அடிக்கடி சொல்வார். அது மட்டுமில்லாமல் பேசுகின்ற ஒவ்வொருவரிடமும் வயது வித்தியாசமில்லாமல் யோசனைகளை, அறிவுரைகளைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.
”எல்லா பாதைகளும் ஒரே இடம் சேர்வதில்லை, எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கவில்லை, எல்லா மனிதர்களும் ஒரே குணத்துடன் படைக்கப்படவில்லை. ஆகவே நம் வழியை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பார். அத்துடன் அடிக்கடி தன்னைப் பற்றியும் பெருமையாகச் சொல்வார். பேச்சில் சுயம்பு என்ற வார்த்தை தூக்கலாக இருக்கும்”

“சரி போகட்டும் விடு. முடிந்தால் ஒருமுறை அவரை சந்தித்துப் பேச வேண்டும்” என்று வந்தவர் சொன்னவுடன் அவர்களுடைய உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது

           ********************************************

சுந்தரம் செட்டியார் 1950ம் ஆண்டில் பிறந்தார். அவர் பிறந்த 24-6-1950ம் தேதியில்தான் புரட்சித் தலைவர் நடித்த மந்திரி குமாரி படம் வெளியானது. அப்போது அவருடைய தந்தை சொக்கலிங்கம் செட்டியாருக்கு வயது 38. வீட்டில் ஐந்து பெண் குழந்தைகள் இருந்தன. கடைசிப் பெண் குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் சுந்தரம் செட்டியார் பிறந்தார். சுந்தரம் செட்டியாருக்கும் அவருடைய மூத்த சகோதரி சிகப்பி ஆச்சிக்கும் 15 வயது வித்தியாசம். சுந்தரம் செட்டியார் பிறந்தபோது அவருடைய தாயார் சகுந்தலா ஆச்சி பிரசவத்தில் இறந்து போனார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சுந்தரம் செட்டியார் கைக்குழந்தையாக இருந்தபோது அவரைத் தூக்கி வளர்த்தவர் அவருடைய மூத்த சகோதரிதான்.

மூத்த சகோதரி திருமணமாகிப் போனபோது அடுத்த சகோதரி பார்த்துக் கொண்டார். இப்படியே பதினெட்டு வயது வரை சுந்தரம் செட்டியார் தன்னுடைய சகோதரிகளின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். தாயில்லாமல் வளர்ந்தவன், தாய்ப்பால் குடிக்காமல் வளர்ந்தவன் என்ற மனக்குறை அவருக்கு எப்போதும் உண்டு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பக்கம் அவர்கள் குடும்பத்திற்கு எழுபது ஏக்கர் ஏலக்காய் தோட்டம் இருந்தது. திருவாரூக்கு அருகில் எண்பது ஏக்கர் விளை நிலம் இருந்தது. மனைவி இறந்த பிறகு சுந்தரம் செட்டியாரின் தந்தை சொக்கலிங்கம் செட்டியாரின் வாழ்க்கை உப்புச்சப்பு அற்றதாகி, எந்தச் சுவையுமின்றி ஆகிவிட்டது. சொக்கலிங்கம் செட்டியார் செட்டிநாட்டிலுள்ள தங்கள் வீட்டிலேயே காலத்தை ஓட்டி விட்டார். தோட்டங்களை எல்லாம் குத்தைகைக்கு விட்டுவிட்டார். குத்தகைப் பணத்திலேயே காலம் ஓடியது.

ஐந்து பெண் குழந்தைகள் இருந்தால், அரசனும் ஆண்டியாகிப் போவான் என்பார்கள். சொக்கலிங்கம் செட்டியார் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
தன்னுடைய ஐந்து பெண் குழந்தைகளையும், உரிய வயதில் திருமணம் செய்து கொடுத்து விட்டார். திருமணச் செலவுகளில் அவருடைய பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தும் கரைந்து போய் விட்டன. அத்துடன் தன்னுடைய 59வது வயதில், ஹார்ட் அட்டாக்கில் அவரும் இறந்து போய் விட்டார்.

நம் நாயகர் சுந்தரம் செட்டியாருக்கு அப்போது 21 வயது. காரைக்குடி கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை அவர் முடித்திருந்த நேரம். தன்னுடைய தந்தை இறந்த பிறகு காரைக்குடியில் இருந்த பங்குத் தரகர் அலுவலம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தவர், ஐந்து ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தார். பங்குச் சந்தையின் நெளிவு சுளிவுகளை சிரத்தையாகக் கற்றுக் கொண்டார்.

அவ்வப்போது தானும் சிறிய அளவில் பங்கு வணிகம் செய்து, பணம் சேர்த்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்குச் சென்று, பெரிய அளவில்  வர்த்தகம் செய்து பொருள் ஈட்டினார். இன்று அவருக்கு நூறு கோடிக்கு மேல் பணம் தேறும். சென்னையில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கிப் போட்டிருந்தார். எல்லாம் முறைப்படி வருமான வரி கட்டி வந்த பணம்.

அவருக்கு ஒரே ஒரு மகன். அவன் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியாளர் படிப்பைப் படித்துத் தேறினான். அவனை அமெரிக்காவிற்கு அனுப்பி எம்.எஸ் படிக்க வைத்தார். படித்துவிட்டு அந்த நாட்டிலேயே வேலைக்குச் சேர்ந்த அவன்,  சொல்லாமல் கொள்ளாமல் தன்னுடன் வேலை பார்த்த கொங்கணிப் பெண் ஒருத்தியை, அவளுடைய அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டுவிட்டான்.

அந்த நிகழ்வால் மிகவும் நொடிந்து போய் விட்டார் சுந்தரம் செட்டியார்

                     ************************************************

ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்த தன்னுடைய மூத்த சகோதரி சிகப்பி ஆச்சியிடம் தன்னுடைய மனக்குறைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டார் சுந்தரம் செட்டியார்.

பொறுமையாக அவருடைய குறைகளைக் கேட்ட சிகப்பி ஆச்சி, அவரைச் சமாதானப் படுத்தும் விதமாகப் பேசத் துவங்கினார்:

”ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி, காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் என்று துவங்கும் பாடலை எழுதிய கவியரசர் கண்ணதாசன் அதன் சரணத்தில் அற்புதமாக இரண்டு வரிகளை எழுதியிருப்பார்.
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை”
ஆகவே எதுவும் நம் கையில் இல்லை. எல்லாம் விதிப்படிதான் - விதித்தபடிதான் நடக்கும்! இதில் நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை!”

“ நான் வளர்த்ததை எல்லாம் மறந்து விட்டு, என்னிடம் சொல்லாமல் என் மகன் திருமணம் செய்து கொண்டு எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததைத்தான் என்னால் தாங்க முடியவில்லை!”

“யாரும் யாருக்காகவும் பிறக்கவில்லை. யாருடைய வாழ்க்கையும் யார் கையிலும் இல்லை. எல்லாம் கர்ம வினைப்படிதான் நடக்கும். நல்லது கெட்டது எல்லாம் பூர்வ புண்ணியப்படிதான் நடக்கும். நீ சுயமாக - சுயம்புவாக வளர்ந்ததாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாயே - அது உண்மையல்ல.யாரும் சுயமாக வளரமுடியாது. பிறப்பதற்கும், நன்றாக வளர்வதற்கு இறையருள் வேண்டும். பிறருடைய உதவி வேண்டும். அதை உனக்கு உணர்த்தான் இறைவன் உனக்கு இப்படியொரு மனக்கஷ்டத்தைக் கொடுத்தான். மனிதர்கள் மட்டுமல்ல மரங்கள் கூட அவைகள் செடிகளாக இருக்கும் போது நீர் ஊற்றி, ஆடு மாடு தின்று விடாமல் பராமரித்தால்தான் வளரும். தானாக முளைத்து வளரக் கூடியது கருவேலமரம் ஒன்றுதான். ஆகவே நாம் நம்மைக் கருவேலமரம் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. நகரத்தார்கள் எல்லாம் சந்தனமரம் போன்று இருந்தவர்கள். இருக்க வேண்டியவர்கள். நீ இனிமேல் சந்தன மரமாக இரு. நிறைய தர்ம காரியங்களைச் செய்!”

சுந்தரம் செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது.

ஆச்சியின் சொற்களால் உள்ளம் நெகிழ்ந்தது. கண்கள் பனித்து விட்டன.

அதற்குப் பிறகு, இப்போது அவர் யாருக்கும் அறிவுரை சொல்வதும் இல்லை. சுயம்பு என்ற வார்த்தையைப் பயன் படுத்துவதுமில்லை.

அடுத்தமுறை ஊருக்குச் சென்றவர் தன்னுடைய வீடு இருக்கும் தெருவின் பெயரை மாற்றும்படி செய்தார். இப்போது அதன் பெயர் ‘சுந்தரேஷ்வரன் சாலை” ஆமாம் உள்ளூர் சிவன் கோயிலில் உறையும் ஈசனின் பெயர்!

   ======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒரு உதாரண ஜாதகம்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒரு உதாரண ஜாதகம்!

ஒரு அன்பான பெற்றோர்களுக்குக் கடும் சோதனை. அவர்களுடைய பத்து வயது மகனுக்கு, ஒரு தீராத நோய் வந்து விட்டது. அத்துடன் அவர்களைக் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. பெரும் செலவையும் அது கூட்டிக் கொண்டு வந்தது.

மருத்துவர்கள் அந்த நோய்க்கு வாய்க்குள் நுழையாத ஒரு பெயரைச் சொன்னார்கள். Muscular dystrophy (MD) என்றார்கள். உடலின் சதைப் பகுதிகள் நாளுக்கு நாள் பலவீனமாகி இறுதியில் உடலின் பல இடங்கள் செயல் இழந்து போகும் என்றார்கள். மருந்துகளின் மூலம் பையனின் மரணத்தைத் தள்ளிப்போடலாம் என்றார்கள். இருபது ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கலாம் என்றார்கள். அதுவரை விடாமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள்

பையனின் ஜாதகம் என்ன சொல்கிறது?

அதை இன்று பார்ப்போம்
----------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


1
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் ஏழில் சனியின் வீட்டில். அவனுடன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய மூவரும் உள்ளார்கள். புதன் இந்த ஜாதகத்திற்கு விரையாதிபதி (12th lord). பொதுவாக லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்று சேர்ந்தால், ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. அத்துடன் ராகுவும் இருப்பதால், நிலைமை இன்னும் மோசம். மற்றவர்களையும்  கஷ்டத்திற்கு உள்ளாக்கக்கூடிய அமைப்பு அது!

2
கடக லக்கினத்திற்கு யோக காரகனான செவ்வாய் ஆறில் போய் அம்ர்ந்து கொண்டதால், அவனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை! அவனுடன் கூட்டாக அஷ்டமாதிப்தி சனியும் உள்ளான்
.
3
உடல்காரகன் சூரியன் லக்கினத்திற்கு எட்டில் அமர்ந்துவிட்டான். அவனாலும் பிரயோஜனமில்லை.

4
அத்துடன் பாக்கியாதிபதி குரு பன்னிரெண்டில் போய் அமர்ந்து கொண்டுவிட்டான். அவனாலும் பிரயோஜனமில்லை.

5
ஆயுள்காரகன் ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு, எட்டாம் வீட்டைப் பார்க்கிறான். அதனால் ஜாதகனுக்கு அல்ப ஆயுள் என்பது விதி

6
சந்திர ராசிக்கு எட்டாம் வீடு, அதன் அதிபதி சூரியன் பார்வையில், அதனால் உடல் தேறுவதற்கு சற்று வாய்ப்பு உள்ளது.

7.
ஆனாலும் லக்கினதிபதி கேந்திரத்தில் அமர்ந்திருந்தாலும், உடன் இரண்டு தீய கிரகங்களின் கூட்டணி. அதன் பலனும் ஜாதகனுக்கு அல்ப ஆயுள்

8
பையனின் நடப்பு திசை யோககாரகன் செவ்வாயின் திசை, அதனால் ஜாதகனுக்கு, மருந்து, மாத்திரைகளின் மூலமும், பிரார்த்தனைகளின் மூலமும் சிறிது தேறியது. அடுத்து வந்த ராகு திசையும் கஷ்டங்களைக் கொடுத்தது. ராகு சனியின் வேலையைச் செய்யும். ராகு தன் திசை முடியும்போது, பையனை மேலே அனுப்பி வைத்தது. அதாவது இறைவனடியில் சேர்த்தது!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.12.16

உலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆகும்?


உலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆகும்?

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்..

எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..அதேபோல.. ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..

"அதோ  தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன்" என்று சொல்லி மறைந்தார்..

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்.. அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்..

சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

மன்னன் "அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்" என்று உரக்க சப்தமிட்டான்..

அதற்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது..

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர்

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.."விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான்.

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ளத் துவங்கினர்.

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும்,தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..

அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்..

கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி "எங்கே உன் மக்கள்" என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக "அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள்" என்றான் மன்னன்..

அதற்கு கடவுள் "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து... என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்" என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.🙏
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.12.16

ஆன்மீகம்: கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்!

ஆன்மீகம்: கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்!

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை என்ற நூலில் இருந்து!

1.பகவானே ,கொள்ள வேண்டியது எது ?
           குரு சொல்லும் வசனம்

2.தள்ள வேண்டியது எது ?
             வீண் செயல்

3.குரு யார் ?
       உண்மை அறிஞன் ,தத்துவ ஞானி ,தன்னை அடைந்த மாணவனின் நன்மைக்காக ஓயாமல் பாடுபடுகிறவன் .

4.மிகவும் இனியது எது ?
        தருமம்

5.எவன் சுத்தம் உள்ளவன் ?
       மனச்சுத்தம் உள்ளவன் .

6.எவன் பண்டிதன் ?
         விவேகி .

7.எது நஞ்சு ?
      குரு மொழியை அலட்சியம் செய்தல்

8.மனிதர் வேண்டத்தக்கது எது ?
     தனக்கும் பிறருக்கும் நன்மை .அதற்கே பிறவி .

9.எதிரி யார் ?
    முயற்சி இல்லாச் சோம்பல் .

10.முழுக் குருடன் யார் ?
     ஆசை வலைப்பட்டவன் .

11.சூரன் யார் ?
     பெண்களிடம் மயங்காத வைராக்கியம் உடையவன் .

12.செவிக்கு அமுதம் எது ?
     சாதுவின் உபதேசம் .

13.பெருமை எதனால் ?
      எதையும் பிறரிடம் வேண்டாமையினால் .

14.தாழ்வு எது ?
      தாழ்ந்தவனிடம் யாசிப்பது .

15.எது வாழ்வு ?
    குற்றமின்மை .

16.எது மடமை ?
   கற்றும் ,கற்ற வழியில் நில்லாமை .

17.நரகம் எது ?
    பிறர் வசம் இருப்பது .

18.செய்யத்தக்கது எது ?
   உயிருக்கு இனிமை .

19.அனர்த்தம் விளைவிப்பது எது ?
     அகம்பாவம் .

20.சாகும் வரை மனதைக் குடைவது எது ?
        மறைவில் செய்த பாவம் .

21.முயற்சி எதன் பால் ?
       கல்வி ,ஈகை ,நல்ல மருந்து --இவற்றின் பால் .

22.எதிலிருந்து விலகுவது ?
   தீயர் ,பிறர் மனைவி ,பிறர் பொருள் .

23.விருப்புடன் எதைச் செய்வது ?
    தீனாரிடம் கருணை ,நல்லவரிடம் நட்பு .

24.உயிரைக்கொடுத்தாலும் திருத்த முடியாதவர் யார் ?
    ,மூர்க்கர், சந்தேகப்பேர்வழிகள் ,தாமசர் ,நன்றி கெட்டவர் .

25.சாது யார் ?
    ஒழுக்கமுள்ளவன் .
    தீய  நடத்தை இல்லாதவன்.

26.உலகை வெல்பவன் யார் ?
     உண்மையும் பொறுமையும் கொண்டவன் .

27.உயிர்க்கூட்டம் யாருக்கு வசமாகும் ?
     உண்மையை இனிமையாக பேசுபவனுக்கு .

28.குருடன் யார் ?
     காரியமில்லாதவன் ,தகாததை செய்பவன் .

29.செவிடன் யார் ?
      நல்லுரை கேளாதவன் .

30.ஊமை யார் ?
  தக்க காலத்தில் இன்சொல் பேசத்தெரியாதவன் .

31.ஈகை எது ?
  கேளாது கொடுத்தல் .

32.நண்பன் யார் ?
   தீமை புகாது தடுப்பவன் .

33.கவனமாக வாழ்வது எப்படி ?
    இன்சொல் ,ஈகை ,அறிவு ,செருக்கின்மை ,பொறுமை ,சௌகரியம் ,தியாகத்துடன் கூடியவை உடையவன் செல்வன் ஆவான்.

34.அறிவுடையார் யாரை வணங்குவர் ?
     இயல்பாகவே அடக்கமுடையவரை .

35-உலகம் யாருக்கு வசப்படும் ?
     தருமசீலராய் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .

36.விபத்து யாரைத் தீண்டாது ?
    அடக்கத்துடன் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .

37.சரஸ்வதி யாரை விரும்புவாள் ?
      சுறுசுறுப்பான மூளை ,நீதி நெறி --இரண்டும் உடையவரை .

38.லட்சுமி யாரை விட்டு விலகுவாள் ?
     அந்தணர் ,குரு ,தேவர் ---இவர்களை தூற்றித் திரிபவரை .

39.கவலை இல்லாதவன் யார் ?
     பணிவுள்ள மனைவியும் ,நிலையான செல்வத்தையும் உடையவன் .

40.மனிதர் சம்பாதிக்கத் தக்கவை  எவை ?
     கல்வி ,செல்வம் ,புகழ் ,புண்ணியம் .

41.எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது எது ?
     கருமித்தனம் .

42.பெரிய தீட்டு எது ?
      கடன் தொல்லை .

43.கடவுளுக்கு பிரியமானவர் யார் ?
     தானும் மனத்துயர் இன்றி, பிறர் மனத்தையும் புண் படுத்தாதவர் .

44.நம்பத்தகாதவன் யார் ?
     சதா பொய் சொல்லுபவன் .

45.பொய் எப்போது தீதில்லை ?
     தருமப் பாதுகாப்பின் போது .

46.உடலெடுத்தவருக்கு எது பாக்கியம் ?
    ஆரோக்கியம் .

47.யார் தூய்மையானவன் ?
     எவனுடைய மனத்தில் களங்கம் இல்லையோ ,பொறாமை இல்லையோ அவனே தூய்மையானவன் .

48.தாமரை இலையில் தண்ணீர் நிற்காதது போல வாழ்க்கையில் நிலையில்லாமல் இருப்பவை எவை ?
       இளமை ,செல்வம் ,ஆயுள் .

49.சாதிக்க வேண்டியது எது ?
   என்ன நேர்ந்தாலும் மற்றவர்களுக்கு எப்போதும் நன்மையே நாம் செய்ய வேண்டும் .

50.துக்கம் இல்லாதவன் யார் /
     கோபம் இல்லாதவன் .

51.அந்தணன் உபாசிப்பது எவரை /
     காயத்திரி ,சூரியன் ,அக்னி ,சம்பு .

52.இவற்றில் உள்ளது என்ன ?
     சுத்த சிவ தத்துவம் .

53.யார் பிரத்தியட்ச தேவதை ?
     மாதா .

54.பூஜ்ய குரு யார் ?
     தந்தை .

55.சர்வதேவதாத்மா யார் ?
     வேதவித்தையும் நல்ல கர்மானுஷ்டானமும் கொண்டவன்.

56.எதனால் குலம் அழியும் ?
      சாது ஜனங்களை புண்படுத்துவதால் .

57.யார் வாக்கு பலிக்கும் ?
     சத்திய ,மௌன ,சம வீலர் வாக்கு.

-----------------------------------------
படித்தேன், பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.12.16

Health Tips: 448 நோய்களுக்கும் ஒரே மருந்து!

 

Health Tips: 448 நோய்களுக்கும் ஒரே மருந்து!

 448 நோய்களை குணமாக்கும் துளசி.

மருத்துவர்கள் வெறும் மருத்துவர்களாக மட்டும் அல்லாமல். மனோ தத்துவ நிபுணர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு பெண்மணிக்கு புற்று நோய் மிக முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யபட்டது. ஆனால். அந்தப் பெண்மணியை  அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்.  உங்களுக்கு என்ன தான் ஆபரேஷன் பண்ணாலும்.....  அது உங்களுக்கு முற்றி போனவுடன் தான்.  ஆபரேஷன் பண்ணியிருக்கு. அதனால. நீங்க அதிக பட்சம் இன்னும் 3 மாதங்கள் தான் உயிரோடு   இருப்பீர்களென்று அந்த மருத்துவர் சொல்ல. அதை கேட்டு பயத்தாலேயே தினம், தினம் அந்தப் பெண்மணி செத்துக் கொண்டு இருந்தார்கள்.

தினமும் வெறும் வயிற்றில். செம்பு பாத்திரத்தில் நிரப்பிய  துளசி நீரை குடியுங்கள். என்று எனக்கு தெரிந்த. புற்று நோய்க்கான சிறந்த மருத்துவத்தையும் அவர்களுக்குச் சொல்லி விட்டு வந்தேன். மேலும் அங்கு ஒரு கொலையும் செய்தேன். நான் கொன்றது யாரைத் தெரியுமா? உலகின் மிகக் கொடிய நோயான பயத்தை.

இப்பொழுது அந்தப் பெண்மணி. பயப்படுவதே இல்லை. நான் கூறியபடியே. தினமும் தூங்கி எழுந்தவுடன். முதலில் அவர்கள் சிரித்த முகத்துடன் கண்ணாடியைப் பார்கிறார்கள். எனக்கு இன்றிலிருந்து எல்லாம் நன்றாகவே இருக்கும். நான் நீண்ட நாள் வாழுவேன் என்று உரக்க. தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள். பிறகு பத்து  நிமிடம் வஜ்ராசனம். அதை செய்த பிறகு. வெறும் வயிற்றில் செம்புப் பாத்திரத்தில் இருந்து துளசி நீரை எடுத்து  அருந்துகிறார்கள். உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இப்பொழுது அவர்களுக்கு இருக்கிறது.

சென்ற 2015  ஏப்ரல் மாதம் அந்த அம்மாவிற்கு மருத்துவர் 3 மாதம் கெடு விதித்தார்.

இன்றுவரை அந்த அம்மா ஆரோக்கியமாக இருக்கிறார்கள்!

மரபணு மாற்றப்பட்ட காய்கள், பழங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் உண்பது புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணம். வடக்கே பல இடங்களில் புற்று நோயாளிகளுக்கு என்று தனியாக சிறப்பு ரயில் விடும் அளவு புற்று நோயாளிகள்  அங்கே இருக்கிறார்கள்.

புற்று நோய் என்று அல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி.

துளசியின் மகத்துவம் பாப்போம்.

 ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, அல்லது 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம்   ஊர வைக்க  வேண்டும். பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம். அதாவது 48 நாட்கள் குடித்தால். புற்று நோய் பூரணமாகக் குணம் ஆகும். அது உடலின் எந்த பகுதியில் இருந்தாலும். மிக முற்றி போனால். ஆரம்ப  நிலையிலேயே. புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு. இந்த துளசி சிகிச்சையை மேற்கொண்டால். புற்று நோய்  மட்டுமல்ல. 448 விதமான நோய்கள் குணமடையும். துளசியின் மருத்துவ பண்புகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட  உண்மை.

சரி. அந்த துளசி நீரை. எவர்சில்வர் பாத்திரத்தில் விட்டு குடிக்கலாம். அதிக வசதி இருந்தால். தங்க பாத்திரத்தில் கூட விட்டு குடிக்கலாம். செம்பு பாத்திரம் ஏன்?

தாமிர சத்து  [செம்பு] உடலுக்கு தேவையான ஒன்று. தைராய்ட் வர உடலில் தாமிர சக்தி குறைவதும் ஒரு காரணம். தைராய்ட் நோய் உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துதல். தைராய்ட் நோய்க்கு  சிறந்த சிகிச்சை. கீழ் வாதம் முதலான நோய்கள் குணமாகும். உடலில் உள்ள புண்களை குணப்படுத்துவதுடன் . புதிதாக. உடலில் அணுக்களையும் உற்பத்தி  செய்யும் சக்தி தாமிரத்திறகு  உண்டு. தாமிரப் பாத்திரத்தில் நிரப்படும் சாதாரண நீரே.  உடற் கட்டியை குணபடுத்தும் என்றால். தாமிர துளசி நீர் பற்றி சொல்லவா வேண்டும்?

துளசி நீர், புற்று நோயை குணபடுத்தும் என்று சித்த மருத்துவமோ, ஆயுர் வேத மருத்துவமோ. சொல்லியிருக்கிறதா என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீ சொல்லும் இந்த செய்தி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா? கை வைத்தியம், பாட்டி வைத்தியம் பண்ணி சரி பண்ண. புற்று நோய் ஒன்னும் bp, சுகர்  அல்ல. அது ஆட் கொல்லி நோய். என்று. உங்களில் பலர்  கேட்பது புரிகிறது. உங்களது கேள்வி. மிக நியாயமானதும் கூட. துளசி புற்று நோயை குணபடுத்தும் என்பதை. உலக அளவில் நடந்த பல அறிவியல் ஆய்வுகள் முடிவு செய்துள்ளது. அதில் ஒன்று. NDTV இதை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வு சம்பந்தமாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதன் லிங்க் கீழே.

http://www.ndtv.com/india-news/tulsi-enters-us-lab-to-fight-cancer-548197

Tulsi  Cures  Cancer  என்று google ளில் டைப் செய்து பாருங்கள். இதே போல். பல ஆய்வுகளின் முடிவை google  சொல்லும்.

வியாதி உள்ளவர்கள் தான். தாமிர பாத்திரத்தில் துளசி நீரை விட்டு குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்பளர் துளசி நீரை பருகுங்கள். மண் பானை நீரை விட தாமிர பாத்திர நீர் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது.

பெருமாள் கோவில்களில். தாமிர பாத்திரத்தில் துளசி நீர் பன்னெடுங்காலமாக கொடுக்கும் ஆன்மிக சடங்கினுள் ஒரு மிக பெரிய அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது உங்களுக்கு புரிகிறதா?

இந்த உலகிலேயே. மிக சிறந்த புண்ணிய  நதி. தாமிர சக்து அதிகம் உள்ள தாமிரபரணி ஆறு தான்.

திராட்சையின் விதைகளும் புற்று நோயை குணப்படுத்த கூடிய மருந்தாக இருக்கிறது. வேர்கடலையில் அதிக அளவு ஒமேகா 3 இருப்பதால் அதுவும் புற்று நோய் வரும் ஆபத்தை குறைக்கும். மேலும் நல்ல உடல் வலுவை தருவதுடன். IQ  லெவலையும் அதிகரிக்கும் சக்தி ஒமேகா 3 க்கு இருக்கிறது
---------------------
படித்தேன். பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்

==================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.12.16

சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!


சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா  அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன  பிரியும், பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!

பிரச்சினை இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கை என்பது சீட்டாடத்தைப் போன்றது. கையில் 13 கார்டுகளுடன் நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும். ஒரு கார்டை நீங்கள் கீழே இறக்கினால், பதிலுக்குக் கீழே இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சீட்டாடுபவர்களுக்கு அல்லது முன்பு ஆடியவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

அத்துடன் சிலருக்கு ஒரு பிரச்சினைதான் இருக்கும். அதைத் தீர்த்தவுடன் அடுத்த பிரச்சினை வரும். ஆனால் சிலருக்குக் ஒரே நேரத்தில் நான்கைந்து பிரச்சினைகள் இருக்கும். அதாவது ரம்மி சேராமல, கையில் சில ஜோக்கர்க்ளும் பல பெரிய கார்டுகளும் கையில் இருப்பது போன்ற நிலைமை!

அதுபோல ஒரு அன்பருக்கு ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள். செய்யும் தொழில் சீராக இல்லை. அதில் நஷ்டம். திருமண வாழ்க்கையில் பிரச்சினை. மனைவியுடன் சுமூகமான உறவு இல்லை. கடும் பணப் பிரச்சினை. உடல் நலமின்மை. இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தி எடுத்தன!

ஆளை விட்டால் போதும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்னும் நிலைமை!

அது எப்படி ஓடிப்போக முடியும்? விதி விடுமா?

என்ன ஆயிற்று அவருக்கு?

வாருங்கள் அவருடைய ஜாதகத்தை அலசுவோம்? அவருக்கு நாம் என்ன உதவியா செய்யப் போகிறோம்? இல்லை! நமது பயிற்சிக்காக அதை இன்று அலசுவோம்
--------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


1. ஜாதகத்தில் உள்ள பெரிய குறை கேமதுருமா யோகத்தின் பிடியில் ஜாத்கம் உள்ளது.  கேமதுருமா யோகம் என்பது மோசமான அவ யோகம். உங்கள் மொழியில் சொன்னால் தரித்திர யோகம். அந்த அவயோகம் உள்ள ஜாதகன் வறுமையில் வாடும்படியாகிவிடும். Kema Druma Yoga is said to occur when there is no planet positioned in either second house or in the twelfth house from Moon; சந்திரனுக்கு இரண்டு பக்கமும் எந்த கிரகமும் இல்லாமலும், உடன் எந்த கிரகமும் இல்லாமலும், சந்திரன் தனித்து இருக்கும் நிலைமை!

2. யோககாரகனான செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். அவனால் பயனில்லாமல் போய்விட்டது.

3. அதே போல 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய புதனும் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். இரண்டாம் வீடு பணத்திற்கான வீடு. பதினொன்றாம் வீடு லாபத்திற்கான வீடு.

4. லக்கினத்திற்கு எட்டாம் வீட்டுக்காரன் (அஷ்டமாதிபதி) குரு அந்த வீட்டிற்கு 12ல், அதாவது லக்கினத்திற்கு ஏழில் அமர்ந்து திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்தான். எட்டாம் அதிபதி என்றாலே கஷ்டங்களைக் கொடுப்பவன். அதை மனதில் வையுங்கள்.

5. அத்துடன் ஜாதகனுக்குக் குரு திசை நடந்த போது, எட்டாம் அதிபதி லக்கினத்தையும் சூரியனையும் பார்த்ததால் ஜாதகனுக்கு உடல் நலம் இல்லாமலும் போய் விட்டது.

ஜாதகன் கடைசிவரை எந்த நன்மையையும் அடையவில்லை. சிம்ம லக்கின ஜாதகன் என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.12.16

குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?


குட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும்?

ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். *செல்வம்* இல்லாவிட்டாலும் *சந்தோசமும் மன அமைதியுடனும்* இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து *”அந்தச் செல்வந்தர் மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”* என்றார்.

*விஷ்ணுவும்* அதற்குச் சம்மதித்துவிட்டு *நாரதரை* பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது நாரதரைப் பார்த்து, *“நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்"* என்று செல்வந்தரரிடம்
சொல்லுங்கள்.

அவர் *‘தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’* என்று கேட்பார்.

அதற்கு நீங்கள் *‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’* என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

*”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்”* என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு சென்றர். பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், *“நீங்கள் யார்?”* என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார். அதற்கு அந்தச் செல்வந்தர் *“தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”* என்று கேட்க, நாரதரும், *நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.* அதற்கு அந்த செல்வந்தர் *“அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?”* என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார். அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது. ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, *“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?”* என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை *நாராயணனிடம்* வந்து சொன்னார்

கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை. இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று
பற்றுவதே *”உண்மையான பக்தி”* இப்பொழுது தெரிகிறதா? *ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று பதிலளித்தார் நாராயணன்.*

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ… அது போல், கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். *அதற்கு காரணமே இருக்கக் கூடாது.* காரணம் என்று வந்தால் அது *வியாபாராமாகிவிடும்.*

*இறைவனிடம் எதைக்கேட்டாலும் அது வியாபாரம் தான்!*

ஏதோ ஒன்றுக் கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று *இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.*

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி
இருக்கிறதே, அதற்கு தான் *பக்தி* என்று பெயர். 🙏
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.12.16

நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!


நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!

1) மிகமிக நல்ல தொரு நாள் எது ?
பதில் - இன்று

2) மிகப் பெரிய வெகுமதி எது?
பதில் – மன்னிப்பு

3) நம்மிடம் இருக்க வேண்டியது எது?
பதில் – பணிவு

4) நம்மிடம் இருக்கக் கூடாதது எது ?
அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு

5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது?
பதில் – சமயோஜித புத்தி

6) நமக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது?
பதில் – பேராசை

7)நமக்கு எளிதாக வரக்கூடியது எது
அதுக்கு இதுதான் பதில் – குற்றம் காணல்

8) நம்மிடம் இருக்க கூடாத கீழ்த்தரமான செயல் எது?
பதில் - பொறாமை

9) நாம் எதை நம்பக்கூடாது?
பதில் – வதந்தி

10) எதுன்னு கேட்டது - நமக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது எது?
பதில் – அதீத பேச்சு

11) நாம் செய்யவேண்டியது எது?
பதில் – உதவி

12) நம்மிடம் இருந்து விட்டொழிக்க வேண்டியது எது?
பதில் – விவாதம்

13) நமது உயர்வுக்கு வழி எது?
பதில் – உழைப்பு

14) நாம் எதை நழுவ விடக்கூடாது?
பதில் – வாய்ப்பு

15) பிரி(ய)க்கக் கூடாதது எது?
பதில் – நட்பு

16) நாம் எதை மறக்கக் கூடாது ?
பதில் – நன்றி
 —
இந்த  (16) செல்வங்களை பின் பற்றி  வாழ்கையில் முன்னேற்றம் அடையுங்கள்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.12.16

எதற்காகக் காத்திருக்கப் பழக வேண்டும்?


எதற்காகக் காத்திருக்கப் பழக வேண்டும்?
--------------------------------
சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில்
தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 'தியானம் செய். நான் அழைக்கும் வரை காத்திரு'.

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேறும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு

நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த  கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு

பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை

ஒட்டப்பந்தையம் அல்ல

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால், உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும்
உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.

உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால் உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால் வாழப் பழகுவாய்.இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.

எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.12.16

Health Tips: ஆறாவது விரல் எது?


Health Tips: ஆறாவது விரல் எது?

மகேஷ் அங்க பாரேன் முழு நிலா எவ்வளவு அழகா இருக்கு என்று மகேஷ் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தவாறே கூறினாள் மகா...

"என் இந்த நிலாவ விடவா அந்த நிலா அழகு "என்று சொல்லிக்கொண்டே மகாவை கட்டியணைத்தான் மகேஷ்!

" விடு மகேஷ்... வயித்துல இருக்க உன் பிள்ளை உதைக்குறான் "

" ஏய் லூசு அவன் உதைக்கல டி... என் அப்பனுக்கு அம்மா மேல எவ்ளோ லவ் பாருனு சந்தோசத்துல துள்ளி குதிக்குறான் "என்று சொல்லிக்கொண்டே மகாவை மேலும் இருக்கமாய் அணைத்துக் கொண்டான் மகேஷ்!

மகேசும் மகாவும் காதலிச்சு பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க... அவங்க காதலோட சாட்சியா இப்போ மகா வயித்துல ஆறு மாத கரு...

மகேஷ் ஒரு பன்னாட்டு நிறுவனத்துல உயர் பதவியில இருக்கின்றான்!  கை நிறைய சம்பளம்!

****************************************************************/********************

மறுநாள் நீண்ட நேரமாகியும் மகேஷ் படுக்கையை விட்டு எழுந்திருக்காததால் மகா எழுப்பினால்...

"மகேஷ் எழுந்திருங்க டைம் ஆச்சி ஆபிஸ்க்கு போகலையா "

மகேஷ் எழுந்து...

" மகா என்னனு தெரியல தொண்டை ரொம்ப வலியாயிருக்கு... பேசக் கூட கஷ்டமா இருக்கு மகா... "திக்கி திணறி வலியோடு சொல்லி முடித்தான் மகேஷ்!

" அய்யோ என்னாச்சி மகேஷ்... கிளம்புங்க நாம டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடலாம் "

" நான் ஜெய்க்கு போன் பண்ணி வர சொல்லி அவன்கூட போய்ட்டு வர்றேன் மகா... நீ எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு "

" சரி மகேஷ் "

************, ******************************************************

" சொல்லுங்க மகேஷ் எத்தனை நாளா வலியிருக்கு "

" நைட்ல இருந்துதான் டாக்டர் "

" ஓகே... நான் ரெண்டு நாளைக்கு மெடிசின் தர்றேன் சாப்பிடுங்க... சரியாகலனா ரெண்டு நாள் கழிச்சி வாங்க "

" ஓகே டாக்டர் " மகேஷ் டாக்டர் எழுதிக் கொடுத்த மருத்துவ சீட்டை பெற்றுக்கொண்டு வெளியேறினான்!

*****************, ******************************************************

இரண்டு நாட்களாகியும் வலி குறையாததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றான் மகேஷ்!

" டாக்டர் இன்னும் வலி குறையல டாக்டர் "

" மகேஷ் உங்களுக்கு புகை பிடிக்குற பழக்கம் இருக்கா.... ஐ மீன் ஸ்மோக்கிங் ஹேபிட் "

" ஏ... ஏன் கேக்குறிங்க டாக்டர் " மேசை பயம் தொற்றிக்கொண்டது!

" பயப்படாதீங்க ஒரு சந்தேகத்துக்காக கேக்குறேன் "

" ம்ம்ம்... இருக்கு டாக்டர் "

" ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க "

" மினிமம் இரண்டு பாக்கெட் "

" ஓகே பைன்.... பயப்படாதீங்க ஒரு சந்தேகத்துக்காக நாம ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்துடுவோம்... "

" என்ன டெஸ்ட் டாக்டர் "

" கேன்சர் டெஸ்ட்... இது ஒரு சந்தேகத்துக்காகதான்... நீங்க லேப்ல சேம்பல் கொடுத்துட்டு போங்க... ரிசல்ட் வர ஏழு நாளாகும்... நீங்க நெக்ஸ்ட் வீக் வாங்க "

" டாக்டர் எனக்கு கேன்சர்னு சொல்றீங்களா??? "

" ஹலோ மகேஷ் இது ஜஸ்ட் ஒரு கிளாரிபிகேஷன் அவ்வளவுதான்... நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க... "

************************************************************************************

இந்த ஏழு நாட்கள் மகேஷிற்கு நரகமாய் நகர்ந்தது...

மகா அவனை நெருங்கி வந்தாலும் இவன் விலகி செல்ல நிறைய மனக்கசப்புகள் இருவருக்குள்ளும்!

மகேஷ் மனதில் பயத்தை சுமந்து கொண்டு மருத்துவமனை சென்றான்!

"வாங்க மகேஷ்... "

" டாக்டர் ரிசல்ட் வந்துடுச்சா "

" ம்ம்ம்.... மகேஷ் உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா??? "

டாக்டர் கேட்ட கேள்வி மகேசின் பயத்தை மேலும் கூட்டியது!

" ம்ம்ம்...."என்று தலையாட்டினான் மகேஷ்!

"சாரி மகேஷ் உங்களுக்கு கேன்சர்னு ரிப்போர்ட் வந்திருக்கு "

மகேசும் மனதிற்குள் அவ்வார்த்தை பேரிடியாய் இறங்கியது!

" ஐய்யோ டாக்டர் என்ன சொல்றீங்க.... டாக்டர் நான் இப்போதான் வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சிருக்கேன் இதுக்குள்ள அது முடிஞ்சி போச்சினு சொன்னா எப்படி டாக்டர்.... என் குழந்தை... என் குழந்தை முகத்த கூட நான் இன்னும் பார்க்கல... அய்யோ மகாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்.... டாக்டர் இது சரி பண்ண முடியாதா?  ஏதாச்சும் வழி இருக்கா டாக்டர்... நான் வாழனும் டாக்டர்... என் மகா கூட நான் வாழணும் "என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான் மகேஷ்!

" மகேஷ் நோய் வரதுக்கு முன்னாடி நாம இதெல்லாம் யோசிக்கறதில்லை... கேன்சரை குணப்படுத்த முடியாது... மரணத்தை வேணும்னா கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம்...அதுவும் வலியோட"

" ஐய்யோ டாக்டர் நான் வாழனும் டாக்டர் "

" மகேஷ் உங்க வாழ்க்கை யாரால போச்சினு இப்போ தெரியுதா "

" என் அற்ப சுகத்துக்காக சிகரெட் பிடிச்சி என் வாழ்க்கையோட சேர்த்து மகா வாழ்க்கையையும் அழிச்சது சிகரெட்தான் டாக்டர் "

" சிகரெட் பிடிக்காதீங்கனு எத்தனையோ வழிமுறைல நம்ம அரசாங்கம் சொல்லுது எவன் கேக்குறிங்க.... நோய் வந்ததுக்கப்புறம் தெரிஞ்சிருந்தா நான் தொட்டிருக்க மாட்டேன்னு அழறீங்க...

இப்போ நான் சொல்றேன் நீங்க இந்த பழக்கத்த விட்டுட்டு போய் குடும்பத்தோட சந்தோசமா வாழுங்க..."

"டாக்டர் என்ன சொல்றீங்க "

" யெஸ் உங்களுக்கு கேன்சர் இல்ல... ட்ரோட் இன்பெக்சன் ஆகியிருக்கு... இது தொடர்ந்தா கேன்சர் வர வாய்ப்பிருக்கு... இதை நான் முதலே சொல்லியிருந்தா நீங்க ஆஸ்பிடட்டல்ல இருந்து வெளிய போனதும் இந்த ஏழுநாள் டென்சனை போக்க சிகரெட்ட பத்த வெச்சிருப்பீங்க... இப்போ சொல்லுங்க சிகரெட் பிடிப்பீங்களா? "

" அய்யோ டாக்டர் இனிமே மனசால கூட அந்த சனியனை நினைக்க மாட்டேன்... இது கடவுள் எனக்கு கொடுத்த இன்னொரு வாழ்க்கை "
என்று கண்களில் கண்ணீரோடு டாக்டரை கையெடுத்து கும்பிட்டான் மகேஷ்!
-----------------------------------------------------
உதட்டோடு உறவாடி உயிரை பறிக்கும்...ஆறாவது விரல் சிகரெட்! வெளியேறுவது புகை மட்டுமல்ல உங்கள் புன்னகையும்தான்!
-----------------------------------------
படித்ததைப் பகிர்ந்தேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.12.16

Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்கும் வேலையும்!


Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்கும் வேலையும்!

தலைப்பு: கல்வியும், வேலையும்

அந்தக்காலத்தில், அதாவது 40களில் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால், வேலை கிடைத்தது. இந்தியன் வங்கியிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் (அப்போது அவ்விரண்டு வங்கிகளும் தனியார்கள் வசம் இருந்தது) அல்லது டி.வி.எஸ் போன்ற நிறுவனங்களிலும் வேலை கொடுத்தார்கள்

பிறகு ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து, பட்டப் படிப்பு (எந்தப் படிப்பு படித்திருந்தாலும் பட்டதாரி என்றால் போதும்) படித்தவர்களுக்கு வேலை கிடைத்தது.

இன்று நிலைமை அப்படியல்ல. தொழில் சார்ந்த கல்விகள் படித்தவர்களுக்கும், உயர் கல்வி படித்தவர்களுக்கும் அல்லது பொறியியல் படித்தவர்களுக்கும் மட்டுமே வேலை கிடைக்கிறது.

உலகம் போட்டிகள் நிறைந்ததாக உள்ளது. பொருளாதாரம் தாறு மாறாக உள்ளது. விலைவாசி அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கிரது. வாழ்க்கை பல அவலங்கள் நிறைந்ததாக உள்ளது.

ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலை வாட்டி எடுக்கிறது. படி, படி என்று குழந்தைகளை அவர்கள் வாட்டி எடுக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்த்ச் சூழ்நிலையில், ஒரு இளைஞன் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் என்ன ஆகும். அவனுடைய பெற்றோர்களின் நிலை என்ன?

வீட்டில் தன்னுடைய பெற்றோர்கள், பணம் செல்வழித்துப் படிக்க வைப்பதற்குத் தயாராக இருந்தும் அந்த இளைஞனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை. அவர்கள் எவ்வள்வோ வற்புறுத்தியும், அவன் தத்தித் தத்தி ஒரு இளங்கலை பட்டப் படிப்பு வரை படித்து, அதில் பார்டரில் தேர்வு பெற்றான். B.A (Literature) படித்தான். அதற்குப் பிற்கு, மேல் படிப்புப் படிக்க சண்டித்தனம் செய்தான்.

அவன் நிலை என்னவாயிற்று? அவனுக்கு என்ன வேலை கிடைத்தது? ஜாதகப்படி அது சரிதானா?

வாருங்கள் இன்று அதை அலசுவோம்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் லக்கின அதிபதி சந்திரன் உள்ளார்.

அஷ்டம அதிபதி (எட்டாம் வீட்டுக்காரன்) சனி, லக்கினத்தில் வந்து அமர்ந்துள்ளான். விரையதிபதி (12ஆம் வீட்டுக்காரன்) புதன் 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளான். அவர்களால் நன்மையல்ல!

நான்காம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்த காரனத்தினால் ஜாதகனுக்கு உயர் கல்வியில் ஆர்வமில்லாமல் போய்விட்டது.

பாக்கிய ஸ்தானத்தில் (9ஆம் வீட்டில்) குரு பகவான். ஆட்சி பலத்துடன் உள்ளார். இது சற்று ஆறுதலான விஷயம்

ஐந்தாம் அதிபதி செவ்வாயும், பதினொன்றாம் அதிபதி சுக்கிரனும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள். இது ஜாதகத்திற்கு ஒரு சிறப்பை, மேன்மையைக் கொடுக்கும்
-----------------------------------------------
1
பத்தாம் வீட்டில் கேது வந்து டெண்ட் அடித்து அமர்ந்துள்ளார். ஆனாலும் பத்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் 11ல் (லாப ஸ்தானத்தில்) உள்ளார். அத்துடன் 11ஆம் வீட்டுக்காரன் சுக்கிரனின் பார்வையும் பத்தாம் அதிபதி செவ்வாயின் மேல் உள்ளது. அதனால் ஜாதகன் எந்த வேலை பார்த்தாலும் அதில் உயர்வு உண்டு. அதில் முன்னேற்றம் காண்பான். செய்யும் வேலை அல்லது தொழிலால் வளம் பெரும்!

2
கர்மகாரன் சனி தன்னுடைய விசேடப் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்க்கின்றான். அதனால் அவனும் கைகொடுப்பான். பாக்கியாதிபதி குருவின் பார்வையும் சனியின் மேல் விழுகிறது. அதுவும் கர்மகாரகனுக்கு நன்மையானதே. லக்கினத்திற்கும் நன்மையானதே!. குரு தனது ஆட்சி வீட்டில் வலுவாக உள்ளார்
.
3
இரண்டாம் வீட்டுக்காரன் (House of finance) சூரியனின் பார்வையும் லக்கினத்தின் மேல் விழுகிறது. சனியின் மேலும் விழுகிறது. அதுவும் நன்மையானதே. இந்தக் கூட்டு அமைப்புக்கள் ஜாதகனை நல்ல இடத்தில் உட்கார வைக்கும்! ஜீவனத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

4
கர்மகாரகன் சனியுடன் இருக்கும் பூர்ண சந்திரன், ஜாதகனுக்கு எழுத்து, பத்திரிக்கை, நிருபர் போன்ற வேலைகளில் நல்ல திறமையை வழங்கும்.(Media, reporting, communication fields etc)

5
ஜாதகன் முதலில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் ஒரு ஆண்டு வேலை செய்து பயிற்சி பெற்றுப் பிறகு ஒரு பத்திரிக்கைக்கு மாறிச் சேர்ந்து படிப்படியாக உயர்வு பெற்றான்.

6
ஜாதகனின் 25ஆவது வயதில் அது நடந்தது. அப்போது அவனுக்கு சுக்கிர திசை. சுக்கிரனின் மேல் குருவின் பார்வை படுவதையும் கவனியுங்கள். பாக்கியநாதன் கை கொடுக்க ஜாதகனுக்கு எல்லாம் கூடி வந்தது. பாக்கிய நாதன் கை கொடுத்தால் எதுவும் கூடி வரும். அதை மனதில் வையுங்கள்!

7.
கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயின் பார்வையும் சுக்கிரன் மேல் விழுவதைப் பாருங்கள். யோககாரகனின் பார்வையும் கை கொடுக்கும். அதையும் மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.12.16

கவலைகளை என்ன செய்ய வேண்டும்?


கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

💥இறைவன் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.💥

துறவி ஒருவர் ஒருநாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார். அங்கே தன் உடைகளைக் கழற்றி தரையில் வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது ஒருவன் அந்த வழியாக வந்தான். கரையின் மீது எவருடைய ஆடைகளோ இருப்பதைக் கண்டான் அவன். உடனே ஆற்றுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனது கண்ணுக்கு எதுவும், யாரும் தென்படவில்லை. பக்கவாட்டில் இருந்த கரைகள் அவனை மறைத்திருந்தன.

"அடடா! யாரோ ஒருவர் கவனமில்லாமல் இதனை இங்கே விட்டுவிட்டுப் போயிருக்கிறார். அவர் வரும் வரை இதனைப் பாதுகாப்போம்!" என்று எண்ணி அங்கேயே ஆடைகளுக்குக் காவலாக நின்றான்.

ஆற்றில் வெகு நேரம் நீராடிய பின்னர் துறவி கரையேறினார். அவர் தன்னுடைய உடைகளை எடுக்க முற்பட்டபோது அங்கே நின்றிருந்த மனிதன் அவரிடம், "பெரியவரே! உடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டுச் செல்லலாமா? எவரேனும் களவாடிச் சென்றிருந்தால் உங்கள் கதி என்ன ஆவது?" என்றான்.

அவர் சிரித்தார். "ஓஹோ ! நான் உடைகளை அவன் பொறுப்பில் விட்டுவிட்டுப் போயிருந்தேன். அவன் அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்..!” என்றார் சர்வ சாதாரணமாக.

எல்லா நிகழ்வுகளும் இறைவனின் செயலே என்பதுதான் ஞானம். ஓர் பொருள் கிட்டியது என்றால் இது இறைவன் நமக்கு அளித்தது என்று நினைத்து அதனை மகிழ்ச்சியோடு ஏற்க வேண்டும்.அது தொலைந்தாலோ அல்லது மறைந்தாலோ இறைவனால் அது எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது என்று கருதவேண்டும்.

அதனால்தான் ஞானியர் எந்தப் பொருள் பத்திரமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்வதும் இல்லை. எந்தப் பொருள் களவு போனாலும் அதற்காக அவர்கள் வருந்தப்படுவதும் இல்லை.

உங்கள் கவலைகளை இறைவனிடம் விட்டு விடுங்கள். நிச்சயமாக அவர் உங்களுக்கு அருள் புரிவார்!!!
----------------------------------------------------------------------------
படித்ததைப் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.11.16

Health Tips: அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

Health Tips: அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.

புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

வியர்வையால் உடல் துர்நாற்றம் வீசுகிறதா? மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். சிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும்.இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு! மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

பருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையேதான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு, இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக்கு குளிர்ச்சியையும் தரும்.

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும்குணமாக்குகிறது.

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால்தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!