மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.12.16

கவலைகளை என்ன செய்ய வேண்டும்?


கவலைகளை என்ன செய்ய வேண்டும்?

💥இறைவன் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.💥

துறவி ஒருவர் ஒருநாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார். அங்கே தன் உடைகளைக் கழற்றி தரையில் வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது ஒருவன் அந்த வழியாக வந்தான். கரையின் மீது எவருடைய ஆடைகளோ இருப்பதைக் கண்டான் அவன். உடனே ஆற்றுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனது கண்ணுக்கு எதுவும், யாரும் தென்படவில்லை. பக்கவாட்டில் இருந்த கரைகள் அவனை மறைத்திருந்தன.

"அடடா! யாரோ ஒருவர் கவனமில்லாமல் இதனை இங்கே விட்டுவிட்டுப் போயிருக்கிறார். அவர் வரும் வரை இதனைப் பாதுகாப்போம்!" என்று எண்ணி அங்கேயே ஆடைகளுக்குக் காவலாக நின்றான்.

ஆற்றில் வெகு நேரம் நீராடிய பின்னர் துறவி கரையேறினார். அவர் தன்னுடைய உடைகளை எடுக்க முற்பட்டபோது அங்கே நின்றிருந்த மனிதன் அவரிடம், "பெரியவரே! உடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டுச் செல்லலாமா? எவரேனும் களவாடிச் சென்றிருந்தால் உங்கள் கதி என்ன ஆவது?" என்றான்.

அவர் சிரித்தார். "ஓஹோ ! நான் உடைகளை அவன் பொறுப்பில் விட்டுவிட்டுப் போயிருந்தேன். அவன் அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்..!” என்றார் சர்வ சாதாரணமாக.

எல்லா நிகழ்வுகளும் இறைவனின் செயலே என்பதுதான் ஞானம். ஓர் பொருள் கிட்டியது என்றால் இது இறைவன் நமக்கு அளித்தது என்று நினைத்து அதனை மகிழ்ச்சியோடு ஏற்க வேண்டும்.அது தொலைந்தாலோ அல்லது மறைந்தாலோ இறைவனால் அது எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது என்று கருதவேண்டும்.

அதனால்தான் ஞானியர் எந்தப் பொருள் பத்திரமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்வதும் இல்லை. எந்தப் பொருள் களவு போனாலும் அதற்காக அவர்கள் வருந்தப்படுவதும் இல்லை.

உங்கள் கவலைகளை இறைவனிடம் விட்டு விடுங்கள். நிச்சயமாக அவர் உங்களுக்கு அருள் புரிவார்!!!
----------------------------------------------------------------------------
படித்ததைப் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. வணக்கம் ஐயா,மனச்சுமை தீர இது ஒரு மருத்துவ பதிவு.தற்போது எது நடந்தாலும் அது நல்லதிற்கே என்று எடுத்துக் கொள்கிறேன்.மனதில் சுமையில்லை.இனி எது நடந்தாலும் இறைவன் என் நலனுக்காகவே அருளியிருக்கிறார் என்றும்,தீதாயிருந்ருதால், தீமையில் இருந்து காக்க சிறு துயரை(தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல)கொடுத்திருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்கிறேன்.ஆட்டுவிக்கும் ஆண்டவன் இல்லாமல் ஆட்டமேது.நன்றி.

    ReplyDelete
  2. Respected sir,

    Good morning sir. Great thinking. Everything from THE ALMIGHTY, Nothing to worry, believe THE ALMIGHTY and ALMIGHTY will take care. Thank you for your message.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. நன்றி ஐயா,
    நான் இன்று மிகவும் கவலையுடன் இருந்தேன் உங்களது கட்டுரையால் ஆறுதல் கிடைத்தது மிக்க நன்றி.
    எனக்கு ஒரு சந்தேகம் தனுஷு லக்கினாதிபதி குரு மகரத்தில் வக்ர நீசம் அடைந்து ராகுவுடன் கூட்டும் வைத்து மிதுனத்திலிருக்கும் செவ்வாயின் பார்வையும் பெற்று கடகத்திலிருக்கும் சுக்ரனின் பார்வையும் பெற்று (சுக்கிரனுடன் கூட்டு கேது மற்றும் 8௮ம் இடம்) குரு சுயவர்க பரலில் ஐந்துபரல் பெற்றிந்தால் ஜாதகனின் வாழ்வை சந்தோசமாக வைப்பாரா அவரது புத்தி காலத்தில்.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    கலக்கலான கட்டுரை.தெளிவான சிந்தனைக்குத் தேன்!
    Short & crisp in detail & to understand!
    சபாஷ், வாத்தியாரையா!

    ReplyDelete
  6. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மனச்சுமை தீர இது ஒரு மருத்துவ பதிவு.தற்போது எது நடந்தாலும் அது நல்லதிற்கே என்று எடுத்துக் கொள்கிறேன்.மனதில் சுமையில்லை.இனி எது நடந்தாலும் இறைவன் என் நலனுக்காகவே அருளியிருக்கிறார் என்றும்,தீதாயிருந்ருதால், தீமையில் இருந்து காக்க சிறு துயரை(தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல)கொடுத்திருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்கிறேன்.ஆட்டுவிக்கும் ஆண்டவன் இல்லாமல் ஆட்டமேது.நன்றி./////

    உண்மைதான். உங்களின் புரிதலுக்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  7. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Great thinking. Everything from THE ALMIGHTY, Nothing to worry, believe THE ALMIGHTY and ALMIGHTY will take care. Thank you for your message.
    with kind regards,
    Visvanathan N////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  9. /////Blogger Vasudevan Tirumurti said...
    அருமை அருமை!////

    நல்லது. நன்றி வாசுதேவன்!

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    Very true Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. ////Blogger VM. Soosai Antony said...
    நன்றி ஐயா,
    நான் இன்று மிகவும் கவலையுடன் இருந்தேன் உங்களது கட்டுரையால் ஆறுதல் கிடைத்தது மிக்க நன்றி.
    எனக்கு ஒரு சந்தேகம் தனுஷு லக்கினாதிபதி குரு மகரத்தில் வக்ர நீசம் அடைந்து ராகுவுடன் கூட்டும் வைத்து மிதுனத்திலிருக்கும் செவ்வாயின் பார்வையும் பெற்று கடகத்திலிருக்கும் சுக்ரனின் பார்வையும் பெற்று (சுக்கிரனுடன் கூட்டு கேது மற்றும் 8௮ம் இடம்) குரு சுயவர்க பரலில் ஐந்துபரல் பெற்றிந்தால் ஜாதகனின் வாழ்வை சந்தோசமாக வைப்பாரா அவரது புத்தி காலத்தில்./////

    கவலையைப் பற்றிய பாடத்தைப் படித்துவிட்டு, கவலையுடன் கேள்வி ஒன்றைக் கேட்கிறீர்களே?
    நம்பிக்கையுடன் இருங்கள். நடக்க வேண்டிய காலத்தில் நல்லது நடக்கும்!

    ReplyDelete
  12. ////Blogger smruthi sarathi said...
    Nice story sir////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. ////Blogger R VIJAYAKUMAR GEDDY said...
    Excellant////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கலக்கலான கட்டுரை.தெளிவான சிந்தனைக்குத் தேன்!
    Short & crisp in detail & to understand!
    சபாஷ், வாத்தியாரையா!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com