மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.12.16

Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்கும் வேலையும்!


Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்கும் வேலையும்!

தலைப்பு: கல்வியும், வேலையும்

அந்தக்காலத்தில், அதாவது 40களில் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால், வேலை கிடைத்தது. இந்தியன் வங்கியிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் (அப்போது அவ்விரண்டு வங்கிகளும் தனியார்கள் வசம் இருந்தது) அல்லது டி.வி.எஸ் போன்ற நிறுவனங்களிலும் வேலை கொடுத்தார்கள்

பிறகு ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து, பட்டப் படிப்பு (எந்தப் படிப்பு படித்திருந்தாலும் பட்டதாரி என்றால் போதும்) படித்தவர்களுக்கு வேலை கிடைத்தது.

இன்று நிலைமை அப்படியல்ல. தொழில் சார்ந்த கல்விகள் படித்தவர்களுக்கும், உயர் கல்வி படித்தவர்களுக்கும் அல்லது பொறியியல் படித்தவர்களுக்கும் மட்டுமே வேலை கிடைக்கிறது.

உலகம் போட்டிகள் நிறைந்ததாக உள்ளது. பொருளாதாரம் தாறு மாறாக உள்ளது. விலைவாசி அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கிரது. வாழ்க்கை பல அவலங்கள் நிறைந்ததாக உள்ளது.

ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலை வாட்டி எடுக்கிறது. படி, படி என்று குழந்தைகளை அவர்கள் வாட்டி எடுக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்த்ச் சூழ்நிலையில், ஒரு இளைஞன் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் என்ன ஆகும். அவனுடைய பெற்றோர்களின் நிலை என்ன?

வீட்டில் தன்னுடைய பெற்றோர்கள், பணம் செல்வழித்துப் படிக்க வைப்பதற்குத் தயாராக இருந்தும் அந்த இளைஞனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை. அவர்கள் எவ்வள்வோ வற்புறுத்தியும், அவன் தத்தித் தத்தி ஒரு இளங்கலை பட்டப் படிப்பு வரை படித்து, அதில் பார்டரில் தேர்வு பெற்றான். B.A (Literature) படித்தான். அதற்குப் பிற்கு, மேல் படிப்புப் படிக்க சண்டித்தனம் செய்தான்.

அவன் நிலை என்னவாயிற்று? அவனுக்கு என்ன வேலை கிடைத்தது? ஜாதகப்படி அது சரிதானா?

வாருங்கள் இன்று அதை அலசுவோம்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் லக்கின அதிபதி சந்திரன் உள்ளார்.

அஷ்டம அதிபதி (எட்டாம் வீட்டுக்காரன்) சனி, லக்கினத்தில் வந்து அமர்ந்துள்ளான். விரையதிபதி (12ஆம் வீட்டுக்காரன்) புதன் 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளான். அவர்களால் நன்மையல்ல!

நான்காம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்த காரனத்தினால் ஜாதகனுக்கு உயர் கல்வியில் ஆர்வமில்லாமல் போய்விட்டது.

பாக்கிய ஸ்தானத்தில் (9ஆம் வீட்டில்) குரு பகவான். ஆட்சி பலத்துடன் உள்ளார். இது சற்று ஆறுதலான விஷயம்

ஐந்தாம் அதிபதி செவ்வாயும், பதினொன்றாம் அதிபதி சுக்கிரனும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள். இது ஜாதகத்திற்கு ஒரு சிறப்பை, மேன்மையைக் கொடுக்கும்
-----------------------------------------------
1
பத்தாம் வீட்டில் கேது வந்து டெண்ட் அடித்து அமர்ந்துள்ளார். ஆனாலும் பத்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் 11ல் (லாப ஸ்தானத்தில்) உள்ளார். அத்துடன் 11ஆம் வீட்டுக்காரன் சுக்கிரனின் பார்வையும் பத்தாம் அதிபதி செவ்வாயின் மேல் உள்ளது. அதனால் ஜாதகன் எந்த வேலை பார்த்தாலும் அதில் உயர்வு உண்டு. அதில் முன்னேற்றம் காண்பான். செய்யும் வேலை அல்லது தொழிலால் வளம் பெரும்!

2
கர்மகாரன் சனி தன்னுடைய விசேடப் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்க்கின்றான். அதனால் அவனும் கைகொடுப்பான். பாக்கியாதிபதி குருவின் பார்வையும் சனியின் மேல் விழுகிறது. அதுவும் கர்மகாரகனுக்கு நன்மையானதே. லக்கினத்திற்கும் நன்மையானதே!. குரு தனது ஆட்சி வீட்டில் வலுவாக உள்ளார்
.
3
இரண்டாம் வீட்டுக்காரன் (House of finance) சூரியனின் பார்வையும் லக்கினத்தின் மேல் விழுகிறது. சனியின் மேலும் விழுகிறது. அதுவும் நன்மையானதே. இந்தக் கூட்டு அமைப்புக்கள் ஜாதகனை நல்ல இடத்தில் உட்கார வைக்கும்! ஜீவனத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

4
கர்மகாரகன் சனியுடன் இருக்கும் பூர்ண சந்திரன், ஜாதகனுக்கு எழுத்து, பத்திரிக்கை, நிருபர் போன்ற வேலைகளில் நல்ல திறமையை வழங்கும்.(Media, reporting, communication fields etc)

5
ஜாதகன் முதலில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் ஒரு ஆண்டு வேலை செய்து பயிற்சி பெற்றுப் பிறகு ஒரு பத்திரிக்கைக்கு மாறிச் சேர்ந்து படிப்படியாக உயர்வு பெற்றான்.

6
ஜாதகனின் 25ஆவது வயதில் அது நடந்தது. அப்போது அவனுக்கு சுக்கிர திசை. சுக்கிரனின் மேல் குருவின் பார்வை படுவதையும் கவனியுங்கள். பாக்கியநாதன் கை கொடுக்க ஜாதகனுக்கு எல்லாம் கூடி வந்தது. பாக்கிய நாதன் கை கொடுத்தால் எதுவும் கூடி வரும். அதை மனதில் வையுங்கள்!

7.
கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயின் பார்வையும் சுக்கிரன் மேல் விழுவதைப் பாருங்கள். யோககாரகனின் பார்வையும் கை கொடுக்கும். அதையும் மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

 1. Excellent analysis Sir.thanks a lot.

  ReplyDelete
 2. வணக்கம் அய்யா,

  இன்று முதல் தமிழில் எழுத முயற்சி எடுத்து உங்களுக்கு பின்னூட்டங்களை தெரிவிக்க விழைகிறேன். தங்களின் அலசல் பாடம் நன்றாக உள்ளது. நன்றி !

  அன்புடன்

  விசுவநாதன் N

  ReplyDelete
 3. இன்று நிலைமை அப்படியல்ல. தொழில் சார்ந்த கல்விகள் படித்தவர்களுக்கும், உயர் கல்வி படித்தவர்களுக்கும் அல்லது பொறியியல் படித்தவர்களுக்கும் மட்டுமே வேலை கிடைக்கிறது.///

  .. உண்மை.
  படிக்காதவர்கள் தொழில் செயகிறார்கள்.
  படித்தவர்கள் இவர்களிடம் வேலை செயகிறார்கள்..

  தொழில் விரும்பினால் படிக்க .வேண்டாம்.
  வேலை செய்ய வேண்டுமானால் படிக்கணும்..

  ReplyDelete
 4. பாடம் அருமை,
  ஐயா கடக லக்கின பாக்கிய நாதன் 12ல் அமர்ந்து சுய வர்க்க பரல் 6 பெற்றிருந்தால் அவன் தசா புத்தியில் நன்மை செய்வானா? அவன் அமர்ந்த வீட்டின் (மிதுனம்) பரல் 40.

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா,மிகச்சிறப்பான மற்றும் மிகத்தெளிவான அலசல்.இப்படி ஒரு ஆசான் கிடைக்க பாக்யாதிபதியும்,பாக்ய ஸ்தானமும் வலுவாக இருக்கவேண்டும்.நன்றி.

  ReplyDelete
 6. ஐயா வணக்கம்
  எளிதில் புரியும் வண்ணம் உள்ளது
  நன்றி ஐயா
  கண்ணன்

  ReplyDelete
 7. வணக்கம் குருவே!
  அசத்தலான அலசல்! இன்றைய அலசல் மூலம் பலவற்றைக் கற்க முடிகிறது!
  நன்றி குருநாதா!

  ReplyDelete
 8. ////Blogger KJ said...
  Excellent analysis Sir.thanks a lot.////ந்

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. /////Blogger Visvanathan N said...
  வணக்கம் அய்யா,
  இன்று முதல் தமிழில் எழுத முயற்சி எடுத்து உங்களுக்கு பின்னூட்டங்களை தெரிவிக்க விழைகிறேன். தங்களின் அலசல் பாடம் நன்றாக உள்ளது. நன்றி !
  அன்புடன்
  விசுவநாதன் N////

  ஆமாம். தமிழில் தட்டச்சக் கற்றுகொள்வது சுலபம். உங்களைப் பார்த்து மற்றவர்களும் முயற்சி செய்வது நல்லது. நன்றி!

  ReplyDelete
 10. /////Blogger வேப்பிலை said...
  இன்று நிலைமை அப்படியல்ல. தொழில் சார்ந்த கல்விகள் படித்தவர்களுக்கும், உயர் கல்வி படித்தவர்களுக்கும் அல்லது பொறியியல் படித்தவர்களுக்கும் மட்டுமே வேலை கிடைக்கிறது.///
  .. உண்மை.
  படிக்காதவர்கள் தொழில் செயகிறார்கள்.
  படித்தவர்கள் இவர்களிடம் வேலை செயகிறார்கள்..
  தொழில் விரும்பினால் படிக்க .வேண்டாம்.
  வேலை செய்ய வேண்டுமானால் படிக்கணும்../////

  உண்மைதான். வேப்பிலையாரே! இன்றைக்கு திருப்பூர், நாமக்கல், சிவகாசி ஆகிய 3 ஊர்களிலும் நீங்கள் சொல்வதுதான் நடக்கிறது!. நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 11. /////Blogger VM. Soosai Antony said...
  பாடம் அருமை,
  ஐயா கடக லக்கின பாக்கிய நாதன் 12ல் அமர்ந்து சுய வர்க்க பரல் 6 பெற்றிருந்தால் அவன் தசா புத்தியில் நன்மை செய்வானா? அவன் அமர்ந்த வீட்டின் (மிதுனம்) பரல் 40./////

  ஒவ்வொரு பின்னூட்டத்திலும் உங்கள் ஜாதகத்தை வைத்து ஒரு கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறீர்களே! உதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்வது தவறு. முழு ஜாதகத்தையும் வைத்து உங்களின் ஜாதக பலன்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

  ReplyDelete
 12. /////Blogger kmr.krishnan said...
  nice sir////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்

  ReplyDelete
 13. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,மிகச்சிறப்பான மற்றும் மிகத்தெளிவான அலசல்.இப்படி ஒரு ஆசான் கிடைக்க பாக்யாதிபதியும்,பாக்ய ஸ்தானமும் வலுவாக இருக்கவேண்டும்.நன்றி./////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 14. /////Blogger Kannan L R said...
  ஐயா வணக்கம்
  எளிதில் புரியும் வண்ணம் உள்ளது
  நன்றி ஐயா
  கண்ணன்//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!

  ReplyDelete
 15. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  அசத்தலான அலசல்! இன்றைய அலசல் மூலம் பலவற்றைக் கற்க முடிகிறது!
  நன்றி குருநாதா!/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

  ReplyDelete
 16. படிக்காதவன் அமெரிக்காவின் அதிபதி ஆகிறார்.
  வரிகட்டாமல் ஏமாற்றியவர் அதிபதி ஆகிறார்.
  அரசியல் என்பது என்ன தெரியாமல் இன்று அதிபதி ஆகிவிட்டார்.
  சரியான நேரத்தில் தங்களுடைய ஜாதக பாடம் வெளியாகி உள்ளது.
  எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் தங்களுடைய ஜாதகம் என்னை மீன்டும் மீண்டும்
  வகுப்பு அறைக்கு அழைக்கின்றது.
  நல்ல தெளிவான பாடம்.
  நன்றி.

  ReplyDelete
 17. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
  படிக்காதவன் அமெரிக்காவின் அதிபதி ஆகிறார்.
  வரிகட்டாமல் ஏமாற்றியவர் அதிபதி ஆகிறார்.
  அரசியல் என்பது என்ன தெரியாமல் இன்று அதிபதி ஆகிவிட்டார்.
  சரியான நேரத்தில் தங்களுடைய ஜாதக பாடம் வெளியாகி உள்ளது.
  எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் தங்களுடைய ஜாதகம் என்னை மீன்டும் மீண்டும்
  வகுப்பு அறைக்கு அழைக்கின்றது.
  நல்ல தெளிவான பாடம்.
  நன்றி./////

  நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. எல்லாம் ஜாதகப் பலன் அல்லது ஜாதகக் கோளாறு.பாமரர்களின் மொழியில் சொன்னால் தலை எழுத்து! வேறு என்ன சொல்ல முடியும்?
  உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. கர்மபலன் கைகொடுக்கும் என்பதை நிரூபிக்கும் விதமான ஜாதகம். அருமையான அலசல். நன்றி.

  ReplyDelete
 19. /////Blogger dearsreeni said...
  கர்மபலன் கைகொடுக்கும் என்பதை நிரூபிக்கும் விதமான ஜாதகம். அருமையான அலசல். நன்றி.////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com