மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.17

நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா? இதைப் பாருங்கள்!!!


நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா? இதைப் பாருங்கள்!!!

பலருக்கும் அவர்கள் பார்க்கும் வேலை திருப்தியையும் தராது. மகிழ்ச்சியையும் தராது. அதற்கு ஜாதகம் காரணம் என்றாலும், மனநிலைமையும் ஒரு காரணம்.

மற்றவர்கள் செய்யும் கடினமான வேலைகளைப் பார்க்கும்போது தான் நமது வேலை பரவாயில்லை என்ற எண்ணம் வரும்

உங்களுக்காக இன்று ஒரு காணொளியைக் கீழே பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்துவிட்டு உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------


==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.17

Astrology: ஜோதிடம்: வர்கோத்தம யோகம்!!!


Astrology: ஜோதிடம்: வர்கோத்தம யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்! An ordinary bus will become a double Decker bus!

பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!

++++++++++++++++++++++++++++++++++++++
லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

மற்ற பலன்கள்:

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்

கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
---------------------------------------------
இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி  வழங்கும்

இவை எல்லாமே பொதுப்பலன்கள்.

தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம்.

அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.
------------------------------------------------------------
ஏழாம் வீட்டு அதிபதி, ராசி மற்றும் நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி  கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான்.

இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும், பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!

இதைப்போலவே மற்ற கிரகங்களுக்கும் பலனை ஊகித்துக் கொள்ளுங்கள். வாத்தியாரை ஊகித்துச் சொல்லும்படி உங்கள் ஜாதகத்தை எடுத்து நீட்டாதீர்கள். பாவம் வாத்தியார். அவருக்கு நேரம் இல்லை!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.17

தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!


தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!

செட்டிநாட்டுப் பகுதிகளில் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சில கலை சொற்கள்

சத்த :~
சற்று என்பது மருவி சத்த என்றானது .

பைய :~
 பொறுமை, மெதுவாக.

எங்குட்டு :~
எந்தப் பக்கம்.

எம்புட்டு :~
எவ்வளவு.

இம்புட்டோண்டு :~
சிறிதாக.

எம்புட்டு :~
என்னுடையது.

மகிர உள்ளது :~
நிரம்ப உள்ளது .

வெள்ளந :~
இருட்டு அகன்று 'வெள்ளி்' முளைக்கையிலே   அதாவது வானில் வெள்ளி காலையில் குறிப்பிட்ட நேரமே தோன்றும் அது தோன்றும் பொழுது என்பது பொருள்

குறிச்சி :~
சாய்வு நாற்காலி.

கொட்டகை :~
மங்கல நிகழ்வுகளில் கொட்டகை என்றும்  அதையே துயர துக்க நிகழ்வுகளில் பந்தல் என்றும் சொல்லும் வழக்கம்

மாடு கட்டுமிடத்தை
தொழுவம்
கட்டுத்தரை

வட்டி :~
உணவு உண்ணும்  கும்பா
(வட்டில் என்பது பண்டையத் தமிழ் வழக்கு,)
அதாவது அசலில் கை வைக்காமல் அதன் வருமானத்தில் சாப்பிடுதல்

சிலாத்தி :~
சல்லடை.

சிட்டை
குறிப்பு

சுளகு  சொளகு
முறம்.

மரவை
மரத்தால் ஆன தாம்பாளம்

போகினி / லோட்டா /
குவளை  தோட்டா என்பது பர்மிய சொல்

குந்தாணி
 உரல்.

திருகை
அரிசி உடைக்கப் பயன்படுத்தப் படும் ஒருவகை கல் உரல்

ஏவம் கேட்டல் :~
பரிந்து பேசுதல்.

கொண்டி :~
போக்கிரி.
(கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம் பெறுகிறது)

தாக்கல் :~
தகவல்  தாக்கீது

ஒள்ளத்தி  உள்ளத்தி
மிகச்சிறிய அளவு.
(எள் அத்தனை. எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்)

தொக்கடி  தொக்கு + அடி
மிகக் குறைந்த விலை.

மருக்கோளி :~
பைத்தியம்.

வறளி :~
பிடிவாதக்காரர்.

மூதலித்தல் :~
மெய்ப்பித்தல்.

பட்டியல்
விலைச்சீட்டு

பெட்டகம் :~
இரும்பால் ஆன அலமாரி.

பெட்டக சாலை
பெட்டிக்குள் வைக்கும் இடம்

கேணி :~
கிணறு.

கிண்ணி :~
சிறு தட்டு.

பலகாரம்:~
பலாரம் ( காலைப் பலகாரம் , இராத்திரிப் பலகாரம் ) - டிபன்.

துடுப்பு :~
மரத்தால் ஆன ஒருவகைக் கரண்டி.

கொட்டான் :~
பனை ஓலையில் பின்னப்பட்ட ஒருவகைக் கூடை.

சத்தகம் :~
தேங்காய் கீறுவதற்கு பயன்படுத்தப்படும்
ஒரு வகை கத்தி போன்ற கரண்டி

வக்கூடை.
மூங்கிலால் பின்னிய கூடை

சுவத்தலமாரி :~
வீடுகளில் சுவற்றோடு பதிக்க பட்டிருக்கும் அலமாரி.

சீசா :~
கண்ணாடிக் குடுவை.

ரொட்டிக்கட்டு :~
பிஸ்கட் பாக்கெட்.

தாளிக்கிற பெட்டி :~
அஞ்சரை பெட்டி / அஞ்சு அறைப் பெட்டி.

இரவைக்கு :~
இரவு

கடிசு - கடிது :~
கடினம்.

சவுக்காரம் :~
சோப்பு.

கடைக்கால் :~
அஸ்திவாரம்.

தொலைவு :~
தூரம்.

பட்டியக்கல் :~
கருங்கல்லால் ஆன  தரை

தொரட்டி :~
உயர்த்தில் உள்ள மரக்கிளைகளை வளைத்து ஒடிக்கப் பயன்படும் கருவி / துரட்டி.

அம்புட்டு :~
அவ்வளவு.

பூராத்தையும் :~
அனைத்தையும்.

சீவிக்கிரபொட்டி :~
கண்ணாடி சீப்பு வைத்து கொள்ளும் பெட்டி.

ஊரணி :~
குளம்.

புரவி :~
குதிரை.

அங்கிட்டு :~
அந்தப் பக்கம்.

இங்கிட்டு :~
இந்தப் பக்கம்.

பொட்டல் :~
மைதானம்.

விளக்கு வைக்கணும் :~
விளக்கு ஏற்றனும்.

ஏத்தனும்
ஏற்றனும்

ராக்கை :~
அடுக்கம் / Rack.

படைக்கிற அறை :~
சாமி அறை.

உக்குராண அறை :~
சேமிப்பு அறை - சமையல் சாமான்கள் அறை

முகப்பு (மோப்பு ) :~
வீட்டின் முன்பகுதி.

வளவு - வளைவு :~
செவ்வகமான மத்தியப் பகுதி.

 திறந்த வெளியாகவும் இரு பக்கங்களிலும் அறைகள் கொண்டதாக அமைத்திருக்கும்.

வாரம் :~
தாழ்வாரம்.

பேழை :~
 ஓலையால் செய்த பெட்டி.

தடுக்கு :~
ஓலையில் செய்த சிறு பாய்.

அவுக :~
அவர்கள்.

இவுக :~
 இவர்கள்.

வந்தாக :~
வந்தார்கள்.

போனாக :~
போனார்கள்.

வருவாக :~
வருவார்கள்.

மேலைக்கு
பிற்பாடு
அதாவது யாராவது உதவி கேட்டு வந்தால் தரமாட்டேன் என்று சொல்லாமல் மேலைக்கு பார்போம் என்பர்
===========================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.17

பாற்கடல் அருவியைத் தெரியுமா உங்களுக்கு?

பாற்கடல் அருவியைத் தெரியுமா உங்களுக்கு?

அதன் பெயரை உள்ளபடி சொன்னால் தெரியலாம். அதன் பெயர்  Dudhsagar Falls

கோவா - கர்நாடகா எல்லையில் மண்டோவி நதியில் அமைந்துள்ளது இந்த அருவி. பார்ப்பதற்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை சென்று பார்த்து, ரசித்து வாருங்கள்.

4 அடுக்கு அருவி.
உயரம் சுமார் 1,000 அடிகள்
அகலம்  100 அடிகள்

கோவாவில் உள்ள பனாஜி நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. (Madgoan - Belgaum Road)
45 K.M east from Madgoan and 80 KM south from Belgaum 

Area Name: பகவான் மஹாவீர் சரணாலயம்.

அருவியைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள், ரம்மியமாக இருக்கும்  பருவ மழை காலங்களில் போய் வருவது நல்லது. அற்புதமாக இருக்கும்.

இரயில் பாதையும் உள்ளது. கோவா - ஹைதராபாத் இரயில் பாதை தடம் இதன் வழியாகத்தான் செல்கிறது.

அருவி தொடர்பான 3 காணொளிகளை உங்கள் பார்வைக்காக வலை ஏற்றியுள்ளேன்

போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள். என்ன சரிதானா?

முதலில் காணொளிகளைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
====================================


Video Clipping One


Video Clipping Two


Video Clipping Three


=========================================================

 வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

25.7.17

Humour: நகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?


Humour: நகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?

*படிச்சுட்டு சிரிப்பீங்களா?*

Lady : உள்ளே வரலாமா டாக்டர்?

Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.

Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!

Dr : எப்படிப் போறான்?

lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?

Dr : சரி... சாப்ட்டானா?

Lady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா. இப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.

Dr: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது?

lady : ச்சீசீ...அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.

Dr : ஓஓஓஓ அப்படியா.! சரி,சொல்லுங்க ...

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க? நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.

Dr : ஓ சாரி...

Lady : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா.! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்.

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்.

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னுமா கொடுக்கறீங்க?

Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி.

Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா....

Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.

Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை.பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

Dr : முருகா! ஏம்மா இப்படி சோதிக்கிறே.! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!

Dr : ம் ...கொடுத்து வெச்சவர்! சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?

Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க,பிரியாணி சாப்பிடலாமா?

Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது.சரி,உங்க பையன் எத்தனை தடவை போனான்?

Lady : எங்க டாக்டர்?

Dr : ம்! என் தலை மேல...லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ.நாலுதடவை போனான்.

Dr : தண்ணி மாதிரி போனானா?

Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா.

Dr : அம்மா இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்.இந்த மாத்திரைய மூனு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க.அப்புறம் இந்த பவுடர.....

Lady : பூசிவிடவா டாக்டர்?

Dr : ம். ஆமாம்,.அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க.சாவடிக்கறீங்களே.! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா

நடத்துறேன்? சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா.
ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா,திரும்ப வந்து எங்கிட்ட காட்டுங்க.

Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்?

Dr : அம்மா அங்காள பரமேஸ்வரி

Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்.

Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்கனு சொன்னேன்.புரிஞ்சதா?

Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்சக் காட்டணும்..?

Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது.வெளியில ஹ்ரிதிக் ரோஷன்னு கூப்பிடுவோம்.

Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க. எனக்கென்ன வந்துச்சு.!

Lady : டாக்டர், சாப்பாடு டயட் பத்தி சொல்லலியே?

Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ?

Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி.

Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்.

Dr : தாயே, இது உங்களுக்கு சொன்னேன். ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும் நீங்க டயட்ல இருக்கணும்.

Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் பிரியாணிய என்ன செய்ய?

Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

Lady : ஏன், அவங்க உங்க செட்டப்பா?

Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்.

Lady : டாக்டர் பீஸ்?

Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா.

Lady : அப்போ செட்டப்புதான்.நான் வரேன் டாக்டர்.

Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!

(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு.  )

கண்ணீர் வருகிறமாதிரி சிரிச்சு ரெம்ப நாளாச்சு !!

அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.17

இரத்த விருத்தியைப் பெறுவது எப்படி?


இரத்த விருத்தியைப் பெறுவது எப்படி?

Health Tips

*துவர்ப்பு சுவை* 🌸
     
நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச்  சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

தமிழ் மருந்துக் கடைகளில் கடுக்காய் பொடியாகவே கிடைக்கும்!! அரைக்கும் வேலையே உங்களுக்கு இல்லை!!!!

🌿 *கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்*

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை, சுவையின்மை,
பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை, தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், பாத எரிச்சல்,
மூல எரிச்சல், இரத்தபேதி,
பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன்,
ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

🌿 *இளமை பெற*

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்று கூறுவர்.

காலையில் இஞ்சி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து தெளிவித்து கீழ்தங்கும் வண்டலை தவிர்த்து 15மிலி எடுத்து சமளவு தேன் சேர்த்துசாப்பிடலாம்.

மதியம் சிறிது சுக்கு தூளை சுடுநீரில் கலந்து   சாப்பாடிற்கு முன் அருந்தலாம் .

இரவு உணவிற்க்கு பின் கடுக்காய் தூளை சுடு நீரில் கலந்து அருந்தலாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.7.17

Astrology: ஜோதிடம்: துஷ்கிரிதி யோகம்Astrology: ஜோதிடம்:  துஷ்கிரிதி யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்

களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் அதிபதி, லக்கினத்தில் இருந்து 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர். அதாவது 7ஆம் வீட்டுக்காரன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் நிலைமை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

இந்த யோகம் மோசமான யோகம். அவ யோகம். இந்த யோகம் இல்லாமல் இருப்பது நல்லது.

பலன்:

ஜாதகனின் நடத்தையால், ஜாதகனின் மனைவிக்கு, ஜாதகனிடம் சுமூகமான, அன்பான உறவு இருக்காது!. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜாதகன், பிறன் மனைகளின் மேல் கண்ணாக இருப்பான். அதாவது சட்டத்திற்குப் புறம்பான பெண் உறவுகளூக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பான்.

ஊர் சுற்றியாக இருப்பான். அவனுக்குப் பால்வினை நோய்கள் இருக்கும். உறவினர்களால் வெறுக்கப்பட்டவனாக இருப்பான். எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருப்பான்.

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களோடு இந்த அமைப்பால், சிலர் அரச தண்டனைக்கும் ஆளாக நேரிடும்

ஜாதகத்தின் வேறு சுப கிரகங்களின் அமைப்பால் இந்த அவ யோகம் இல்லாமலும் போய்விடும். ஆகவே பயப்பட வேண்டாம்!!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.17

நீங்களும் உங்கள் கல்லீரலும்!!


நீங்களும் உங்கள் கல்லீரலும்!!

Health Tips

*நெல்லி முதல் மஞ்சள் வரை... கல்லீரல் காக்கும் இயற்கை உணவுகள்!*

கல்லீரல் பிரச்னைகள் வருகிற வரைக்கும் அதன் நலன் பற்றிப் பெரும்பாலும் யாரும் சிந்திப்பதே இல்லை. நாம் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலைச் சென்றடையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடைசியாகச் சாப்பிட்ட சாப்பாடு, வேலை முடிந்த பிறகு குடித்த குளிர்பானம் அல்லது உட்கொண்ட மருந்தும்கூட கல்லீரலை அடைந்திருக்கும். எனவேதான், `கல்லீரலுக்கு நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்’ என அழுத்தமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

திராட்சை, விஷ்ணு கிரந்தி, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மதுசாரா  கல்லீரல் நோயிலிருந்தும் (Non-alcoholic fatty liver disease) இந்த உணவுகள் நம்மைக் காப்பாற்றுகின்றன. மணமுள்ள காய்கறிகளான வெங்காயம், பூண்டு போன்றவை நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலைச் சுத்திகரிக்கக்கூடியவை. கல்லீரலைச் சுத்திகரிக்கவும் பாதுகாக்கவும் உதவும் உணவுப் பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆனாலும், ஏற்கெனவே கல்லீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகுதான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

*இஞ்சி*

இஞ்சி, உணவின் சுவையைக் கூட்டுகிறது. அதோடு, கல்லீரல் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சி உடலின் செரிமான மண்டலத்தைச் சீராக்கும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். மதுசாரா  கல்லீரல்  நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளவர்கள், கண்டிப்பாக இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*நெல்லி*

நெல்லிக்காய் கல்லீரலுக்குப் புத்துயிரூட்டக்கூடியது. வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களைச் சரிசெய்யும் ஆயுர்வேத சிகிச்சையில், நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் இது உதவும். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை (Hypolipidemic) உள்ளது. எனவே கல்லீரலின் சுமையை இது  குறைக்கும்.

ஒமேகா-3 நிறைந்த உணவுகள்
கல்லீரலைப் பாதுகாக்க தினசரி உணவில் ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  வஞ்சிர மீன், முட்டை, வால்நட் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேரும் நிகழ்வை (Triglyceride synthesis) ஒமேகா-3 உணவுகள் தடுக்கின்றன. இது தொடர்பாக ஓர் ஆய்வே நடந்திருக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேரும் நோயான ஹைபர்லிபிடிமியாவால் (Hyperlipidemia) பாதிக்கப்பட்ட சிலருக்கு 5 மி.லி ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தினமும் இரண்டு வேளைகளாக, 24 வாரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தச் சிகிச்சையின் முடிவில் அல்ட்ரோஸோனோகிராபி (Ultrasonography) முறையில் அவர்களைப் பரிசோதித்ததில், கல்லீரல் பாதிப்புகள் நீங்கி அவர்கள் நலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மணமுள்ள உணவுகள்

*பூண்டு*

பூண்டு, வெங்காயம் போன்ற மணமுள்ள உணவுகளும் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. அவற்றில் உள்ள சல்ஃபர்தான் மணம் உருவாகக் காரணமாவது. சல்ஃபர், கல்லீரலில் என்ஸைம் உற்பத்திக்கு உதவுவது. நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலுக்குத் தேவையானது இந்த என்ஸைம்கள்தான்.

காய்கறிகள்

பூண்டு மற்றும் வெங்காயத்தின் மணத்தை சிலரால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள், சல்ஃபர் அதிகமுள்ள வேறு சில காய்கறிகளைச் சாப்பிடலாம். முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் சல்ஃபர் நிறைய உண்டு. இவற்றில் உள்ள குளுக்கோசினோலேட் (Glucosinolate) என்ற சல்ஃபர் கலந்த கலவை, என்ஸைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சு நீக்கத்துக்கு உதவும்.

*ஸ்ட்ராபெர்ரி*

ஸ்ட்ராபெர்ரியில் பாலிபினால் (Polyphenols) மற்றும் அந்தோசயனின் (Anthocyanins) அதிகம் உள்ளன. இவை வீக்கம், கட்டி முதலியவற்றுக்கு எதிராகச் செயல்படுபவை. இவை சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கூட. ஸ்ட்ராபெர்ரி கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

*பீட்ரூட்*

பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids) என்ற நிறமி, கல்லீரலைப் பாதுகாக்க உதவக்கூடியது. பீட்ரூட் ஜூஸ் அருந்துவது, கார்சினோஜென் (Carcinogen)   எனும் புற்றுநோய் காரணியை உடலில் சேராமல் தடுக்கும். தொடர்ந்து பீட்ரூட்டை நீண்ட நாட்களுக்குச் சாப்பிடுவது கல்லீரல் பாதிப்புகளிலிருந்து  நம்மைப் பாதுகாக்கும்.

திராட்சைப்பழம்

புளிப்பான திராட்சைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது, குடல் நன்றாகச் செயல்பட உதவுவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.  திராட்சையில் உள்ள `நாரின்ஜெனின்’ (Naringenin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், கல்லீரல் கொழுப்பை நீக்க உதவும்.
 
விஷ்ணு கிரந்தி

விஷ்ணு கிரந்தியில் டீ போட்டுக் குடிப்பது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. சிலர் இதை சாலட்களிலும் பயன்படுத்துவார்கள். `சிலிமரின்’ (Silymarin)  என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் நிறமி இதன் விதைகளில் உள்ளது. இவை கல்லீரல் நச்சை வெளியேற்ற உதவுவதோடு மட்டுமில்லாமல் கல்லீரலை சேதப்படுத்தும் டைல்னோல் (Tylenol) மருந்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் காப்பாற்றும். புதிய செல்கள் வளர உதவிசெய்து, கல்லீரலைப் புத்துயுயிரூட்டவும் விஷ்ணு கிரந்தி உதவும்.

*மஞ்சள்*

இயற்கையான வழிமுறை மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் மஞ்சள் இல்லாத பட்டியல் நிச்சயம் இருக்க முடியாது. ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவ முறைகளில் நூறாண்டுகளுக்கும் மேலாக கல்லீரல் சிகிச்சைக்கு மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது தவிர கல்லீரலை சுத்திகரிக்கவும், பாதுகாக்கவும் சில ஜூஸ்களும் டீக்களும் உதவுகின்றன.

கலர்ஃபுல் ஜூஸ்

தேவையானவை:
கேரட் - 3, வெள்ளரிக்காய் (சிறியது) - 1, எலுமிச்சைப்பழம் - 1/2, ஆப்பிள்  - 1.
செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஜூஸாக்கிக் கொள்ளவும். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிதைவதற்குள் ஜூஸைக் குடித்துவிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இந்த ஜூஸைக் குடித்துவர கல்லீரல் சுத்தமாகும்.

*எலுமிச்சை - கிரீன் டீ*

அரை கப் கிரீன் டீயை ஆறவைத்துக்கொள்ளவும்.  அதனுடன் பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றை சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு வாழைப்பழத்தையும் கலந்துகொள்ளவும். இதை தினமும் குடித்துவர, கல்லீரல் சுத்தமாகும். கிரீன் டீயில், ஈ.ஜி.சி.ஜி (EGCG) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது கல்லீரலைப் பாதுகாக்க உதவும்.

இஞ்சி - மஞ்சள் சாறு

அரை டீஸ்பூன் மஞ்சள், சிறிய துண்டு இஞ்சி, பாதி எலுமிச்சையின் சாறு இவற்றுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இது குடலைச் சுத்தம் செய்யும். பித்தக்கற்கள் வருவதைத் தடுக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.

கல்லீரல் நம் கண்ணுக்குத் தெரியாத ஓர் இடத்தில் இருப்பதால், நாம் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் ஒரு பகுதி ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலில்தான் போய்ச் சேரும். கல்லீரலில் சேரும் கொழுப்பை, நச்சுப்பொருட்களை வெளியேற்றவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அவை பெரிய நோய்களாக மாறி நம்மைப் பாதிப்பதற்கு முன்னர் இயற்கை வழிமுறைகள் மூலம் கல்லீரலைக் காப்போம்!

படித்தேன்; பகிர்ந்தேன்!!

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.17

கலக்கல் காணொளிகள்!

கலக்கல் காணொளிகள்!

இன்று உங்களுக்காக 3 வீடியோ கிளிப்புக்களைப் பதிவிட்டுள்ளேன். எல்லாம் சிறிய காணொளிகள்தான். அவசியம் பாருங்கள்.

அன்புடன்
வாத்தியார்
==========================
1
உடல் நலத்திற்காக 9 நிமிட உடற்பயிற்சிகள்!


கிட்டத்தட்ட சரியான பதிலைப் பற்றி தென்கச்சி சுவாமிநாதன்  கூறியது!!!


3
இந்தக்  காலத்து சமையலை விளாசுகிறார் இந்த அன்பர். அவருடைய குரலும் மொழி வளமும் கலக்கலாக உள்ளது!!!


=====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.17

சி.ஏ.படித்தவர்களுக்கான வாய்ப்புக்கள்!!!!சி.ஏ.படித்தவர்களுக்கான வாய்ப்புக்கள்!!!!

சி ஏ படிப்பு

தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போதுபோல் இருக்கிறது எனச் சொல்லமுடியாது. இப்போது, எம்.எஸ்.ஸா, எம்.சி.ஹெச்சா என்றெல்லாம் துணைக் கேள்வி கேட்கிறார்கள். அதன்பின்னர் பொறியியல், அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு காலம் வந்தது. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. அதேசமயம், சராசரி வரவேற்புடனும் இருந்திருக்கிறது. ஆனால், இன்றுவரை ஒரு துறை மட்டும் வருடத்துக்கு வருடம் பெரிய அந்தஸ்த்தோடு வளர்ந்து வருகிறதென்றால் அது C.A. முடித்த ஆடிட்டர்கள் இயங்கும் தணிக்கைத் துறைதான். அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வேலையில்லாத வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உண்டு. ஏன், போணியாகாத மருத்துவர்கள்கூட உண்டு. ஆனால், வேலையில்லாத ஆடிட்டரைப் பார்ப்பது அரிது. 100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை.

பை நிறையச் சம்பளம். இருந்தும் போதுமான அளவு ஆடிட்டர்கள் தமிழகத்தில் இல்லை.

இதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலாவது கடினமான தேர்வு முறை.

இரண்டாவது இத்துறைபற்றி பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.

விழிப்புணர்வு இருக்கும் பெற்றோர்களிடமும், மாணவனிடமும் இந்தப் படிப்பை முடிக்க முடியுமா எனும் சந்தேகம், முடிக்காமல் விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடுமே! என்ற பயம்.

அடுத்ததாக, சி.ஏ. முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால்
ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தம்.

முதலில் சி.ஏ. தேர்வுபற்றி பார்ப்போம்.

சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ்
ஆப் இந்தியா (ICAI) எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் பவுண்டேசன் கோர்ஸ், அடுத்ததாக சி.ஏ. இண்டர் எனப்படும் தேர்வுகள், அது முடிந்ததும் மூன்று ஆண்டுகள் ஆடிட்டர் ஒருவரிடம் கட்டாயப் பயிற்சி எடுக்க வேண்டும். அதன்பின்னர், சி.ஏ. பைனல் எனப்படும் தேர்வுகள். இதைக் கடந்தபின்னர் ஆடிட்டர் என்று அழைக்கப்படுவார்கள்.

இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம். இளங்கலைப் பட்டம் வாங்கியவர்களுக்கு இது தேவையில்லை. பி.காம்.தான் என்றில்லை. எந்த டிகிரியாக இருந்தாலும் சி.ஏ. படிக்க பதிவு செய்துகொள்ளலாம். பி.காம். படித்தவர்களுக்கு இந்தத் தேர்வுகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். சி.ஏ. இண்டரில் முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 3 பேப்பர்களும் இருக்கும். இதில், எந்த ஒரு பேப்பரில் பாஸ் செய்யாவிட்டாலும் மீண்டும் அந்த குரூப்பில் எல்லா பேப்பர்களையும் திரும்ப எழுதவேண்டும். ஒரு குரூப்பில் எல்லாவற்றிலும் பாஸ் செய்தாலும் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட சதவிகித மார்க்கையும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்பவும் எல்லா பேப்பர்களையும் எழுத வேண்டும். சி.ஏ. பைனலிலும் அப்படித்தான். அதில், முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 4 பேப்பர்களும் இருக்கும். இந்த பைனல் தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும். தேர்வு அட்டவணையும்கூட இடையில் விடுமுறையின்றி தொடர்ந்து இருக்கும்.

பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் ரெகுலர் வகுப்புகள் இருக்கும். எனவே, தினமும் படிக்கும் வாய்ப்பு, காதில் பாடத்தைக் கேட்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், சி.ஏ.வில் நாம் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்வதுபோல தன்னிச்சையாகப் படிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டங்களும் ஒவ்வொரு ஆண்டு பார்லிமெண்ட் பட்ஜெட் தாக்கல் ஆனவுடன் அதற்கேற்ப மாறும். மேலும், இடையிலும்கூட பார்லிமெண்ட்டில் நிறைவேறும் சட்டங்களைப் பொறுத்து மாறும். பயிற்சி செய்யும் ஆடிட்டர்கள்தான் அத்தனை புத்தகங்களையும் வாங்கி அடுக்க முடியும்.

இரண்டாவதாக, பெற்றோர்களின் போதிய விழிப்பின்மை. மற்ற தொழில்நுட்பப் படிப்புகள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் செய்திகள் வரும். இன்று விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இன்று தேர்வு என்று. ஆனால் இந்தப் படிப்புபற்றி எந்தப் பத்திரிகையிலும் செய்தி வராது. இதைப்போலவே, மத்திய அரசு நடத்தும் AIIMS போன்ற தேர்வு சென்டர்கள் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில்தான் இருக்கும். எனவே, மற்ற பள்ளி மாணவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வே இருக்காது.

மேலும், இந்தப் படிப்பைப்பற்றி பெற்றோர்கள் யாரிடம் விசாரித்தாலும் மிக எதிர்மறையாகவே பதில்வரும். ‘இத
முடிக்கிறது கஷ்டம்ங்க’ என்பார்கள். எனவே, பெற்றோர்கள்
மிகவும் தயங்குவார்கள். மேலும், சி.ஏ. படிப்புக்கு பதிவு செய்தவர்களில் வெற்றி சதவிகிதம் 0.1க்கும் குறைவு என்பதும் பெற்றோர்களை யோசிக்கவைக்கும். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, வெறும் கையோடு வந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.

அடுத்ததாக, டிகிரி முடித்தவர்கள் இந்தப் படிப்பை முடிக்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். ஆடிட்டரிடம் பயிற்சிபெறும் (ஆர்டிகிள்ஷிப்) காலத்தில் இப்போதும்கூட 3000 ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படுகிறது. பொறியியல் படித்தவன் 21 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். ஆடிட்டருக்கு 30 வயதில்தான் வருமானம். எனவே, மகனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பவர்கள் இதற்குத் தயங்குவார்கள். மேலும், குடும்பம் அவனை சப்போர்ட் செய்யாவிட்டல் தன் பொருளாதார நிலை குறித்து விரக்தியடைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனால், இதிலிருந்து விலகிக்கொண்டவர்களும் அதிகம்.

ஆனால், என் மகன்/மகள் இதை முடிக்கட்டும் என மன தைரியத்துடன் பி.காம். படிக்கவைத்து, ஆறு, ஏழு ஆண்டுகள் பொருளாதாரரீதியாக சப்போர்ட் செய்தால் தலைமுறைக்கும் எந்தக் கவலையும் இல்லாத ஒரு முன்னத்தி ஏர் கிடைக்கும். ஏனென்றால், ஒரு ஆடிட்டர் என்பவர் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுடனேயே எப்போதும் பழகுபவர். அவரின் சிபாரிசு எந்தக் கல்வி நிலையத்திலும், கம்பெனியிலும் எடுபடும். அந்த பழக்கவழக்கங்களின் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறையை வளர்த்துவிடலாம்.

சி.ஏ. இண்டரில் தமிழகத்தில் நிறையப்பேர் தேர்வு பெற்றுவிடுகிறார்கள். பைனலில்தான் தேர்வாக முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், ஆர்டிகிள்ஷிப் காலத்தின்போது ஆடிட்டரிடம் இயைந்துபோக முடியாமையும் ஒரு காரணமாக இருக்கும். ஆடிட்டரிடம் இருப்பது பண்டைய கால குருகுலவாசம் போலத்தான். இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக அமைவது ஐசிடபிள்யூ ஏ (ICWA) எனப்படும் காஸ்ட் அக்கவுண்டிங் கோர்ஸ்.

இதிலும் பவுண்டேசன், இண்டர், பைனல் என சி.ஏ. போலவே படிநிலைகள். ஆனால், ஆடிட்டரிடம் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேர்வுகளும் சி.ஏ.வோடு ஒப்பிடுகையில் சற்று எளிதாக இருக்கும்.

சி.ஏ.வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், சி.ஏ. முடித்தவர்கள் ஒரு நிறுவனத்தின் தலை முதல் அடி வரை உள்ள செயல்பாடுகளை தணிக்கை செய்பவர்கள், அந்த நிறுவன வளர்ச்சிக்கு எப்படிச் செயல்பட வேண்டுமென யோசனை கூறுபவர்கள், வரி விதிப்பு முறைகளை ஆராய்ந்து நிறுவன வளர்ச்சிக்கு/லாபத்துக்கு ஏற்ப யோசனை சொல்பவர்கள். ஆனால், ஐசிடபிள்யூஏ முடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராஜக்ட்டுக்கு எவ்வளவு செலவாகிறது? அதற்கேற்ற லாபம் இருக்கிறதா? இல்லை நஷ்டமா? என கணக்குப் பார்ப்பவர்கள். ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள். ஆனால், இவர்கள் கணக்கை தணிக்கை செய்ய மாட்டார்கள். இவர்களுக்கும் பெரிய அளவில் டிமாண்ட் இருக்கிறது. சம்பளமும் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஆறிலக்கத்தை எட்டிவிடும்.

சி.ஏ.இண்டர் பாஸ் செய்து, பைனலில் தவறியவர்கள் சற்று முயற்சித்தால் ஐசிடபிள்யூஏ பாஸ் செய்துவிடலாம். ஓரளவுக்கு ஒரேமாதிரியான பாடத்திட்டம்தான் இருக்கும். எலுமிச்சையை குறிவைத்துத் தோற்றவர்கள் தர்ப்பூசணியை எளிதில் குறி தவறாமல் அடிக்க முடியுமல்லவா?

அப்படியும் பாஸ் செய்ய முடியவில்லையென்றால், சி.ஏ. இண்டர் பாஸ் செய்தவர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) “அக்கவுண்ட் டெக்னீசியன்” என்னும் சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள் எந்த நிறுவனத்திலும் அக்கவுண்டண்டாகப் பணியாற்றலாம். சி.ஏ.வை கடுமையாகப் படித்து தோல்வியடைந்தவர்கள் வங்கித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.

பெற்றோர்கள் இருவரும் நல்லவேலையில் இருக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்னை இல்லை என்றால் தைரியமாக பிள்ளைகளை சி.ஏ.வுக்கு திருப்பிவிடலாம். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காது அவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருந்தால் ‘வேலை இழப்பு’ என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத பெருமைமிகு தணிக்கையாளர் சமூகத்தில் உங்கள் பிள்ளையும் ஒரு அங்கமாகலாம்.

படித்ததில் பிடித்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.7.17

மனதை நிமிர்த்த வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!


மனதை நிமிர்த்த வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!

மனவளக் கட்டுரை

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத்
தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமான
வற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம்
தெளிவடையும். தன்னம்பிக்கை பெருகும். வெற்றி நெருங்கும்.

1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

6.       சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்

கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.        இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.        கஷ்டம் தான் … ஆனா முடியும்.

10.      நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.

11.      இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.      விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14.      ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.

15.      இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.      இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.      இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

19.      முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.      திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24.      சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

25.      ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு  ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

26.      உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.      ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?

31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.

32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,  * வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்

முயற்சியுடன் எழுந்திடுங்கள்!  உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.வெற்றி நமதே!!!

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.7.17

Astrology:ஜோதிடம்: வஞ்சன சோர பீதி யோகம்!


Astrology:ஜோதிடம்: வஞ்சன சோர பீதி யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடம்

பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள்.

Vanchana Chora Bheethi Yoga
vañchana — cheating
chora' - thief
bheethi - fear

ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை
திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும் யோகம் இந்த யோகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாருக்கு இது இருக்கும்?

இன்றைய உலகத்தில் பாதிப்பேர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். வாய்ப்புக் கிடைத்தால் திருட்டுத்தனம் செய்யக்கூடியவர்கள்.
ஆள் கிடைத்தால் மொட்டை போடக்கூடியவர்கள். அதனால் அவர்களைத் தவிர்த்து, மற்றுள்ளவர் பலருக்கு இந்த அமைப்பு
இருக்கும். அதே போல ஏமாற்றுப் பேர்வழிகள், அடுத்தவனை எப்போதுமே சந்தேகத்துடனேயே பார்ப்பவர்கள். ஆகவே
அவர்களுக்கும் இந்த அமைப்பு இருக்கும்.

The combinations pertaining to this Yoga are found in almost all horoscopes, so that we are all guilty of cheating and being cheated one another in some form or the other. It is a tragedy of our social life that a merchant minting millions at the cost of the poor is left scot-free while the poor, committing theft in the face of poverty and want, are booked by law. Cheating is practiced in a variety of ways. Fertile brains find countless methods to cheat their associates. The merchants have various ways of cheating their clients. The lawyer is equally successful. The medical man commands many ways to defraud his patients.
-------------------------------------------------------------
லக்கின அதிபதி, ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம்
உண்டு! உண்டு! உண்டு!

அதேபோல லக்கினத்தில் தீய கிரகம் இருந்து கேந்திரத்தில் மாந்தி இருந்தாலும் அல்லது மாந்தி, கேந்திர அதிபர்களுடன்
கூட்டணி போட்டு இருந்தாலும் ஜாதகனுக்கு இந்த அவயோகம் இருக்கும்

பலன்: ஜாதகன் எப்பொதுமே ஒருவித பய உணர்வுடன் இருப்பான்.
--------------------------------------------------------
The Lagna lord is with Rahu, Saturn or Ketu

Result : The person will be constantly suspicious of people around him, afraid of being taken advantage of, swindled or stolen from. The native will always entertain feelings of suspicion towards others around him. He is afraid of being cheated, swindled and robbed.

அதே போல ஜாதகன் பல வழிகளிலும் தன் செல்வத்தை இழந்தவனாகவும் இருப்பான்.

In all these cases, the person will not only have fears from cheats, rogues and thieves but he will also have huge material losses.

அன்புடன்,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.7.17

Humour: நகைச்சுவை: எதற்காக டைவோர்ஸ் தரமுடியாது என்று ஜட்ஜ் சொன்னார்?


Humour: நகைச்சுவை: எதற்காக டைவோர்ஸ் தரமுடியாது என்று ஜட்ஜ் சொன்னார்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்
-------------------------------------------
1
பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.

ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்....
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்....
😀😍😇😜😎😝😭😆😂
2
*மாணவன்* : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்!
*ஆசிரியர்* : இப்பவாவது உணர்ந்தியே!
*மாணவன்* : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
😀😍😇😜😎😝😭😆😂
3
*தொண்டன் 1*: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
*தொண்டன் 2*: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.
😀😍😇😜😎😝😭😆😂
4
*மருத்துவர்* : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு..
*பெண்* : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க.
😀😍😇😜😎😝😭😆😂
5
எல்லா *stage*'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா *கோமா stage*'ல டான்ஸ் ஆட முடியுமா?
😀😍😇😜😎😝😭😆😂
6
*டாக்டர்*: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
*நோயாளி*: ஏன் டாக்டர்?
*டாக்டர்*: ஸ்டெதஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..
😀😍😇😜😎😝😭😆😂
7
*நோயாளி*: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
*டாக்டர்* : இந்த டானிக்கை சாப்பிடுங்க.
*நோயாளி*: சாப்பிட்டா இருமல் சரியாப் போயிடுமா ?
*டாக்டர்*: no no...நல்லா இருமலாம்...
😀😍😇😜😎😝😭😆😂
8
*டாக்டர்* : தற்கொலைக்கு முயற்சி செஞ்சீங்களாமே?
*நோயாளி*: ஆமா டாக்டர் வயித்துவலி பொறுக்கமுடியல....
*டாக்டர்*: நான் தான் நாளைக்கு ஆப்பரேஷன் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல.... ஒரு நாள் பொறுக்கமுடியாதா....
😀😍😇😜😎😝😭😆😂
9
*ஒருவர்:* எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?
*டாக்டர்*: ஏன்?
*ஒருவர்*: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்...
😀😍😇😜😎😝😭😆😂
10
*நடிகை*: ''டாக்டர்! எனக்கு பல்லு கூச்சமா இருக்கு !''
*டாக்டர்*: ''பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!''
😀😍😇😜😎😝😭😆😂
11
*டாக்டர்*: தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்
*ஒருவர்*: இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன். என்ன... என் மனைவிதான் அதை காபினு சொல்றா..
😀😍😇😜😎😝😭😆😂
12
என்ன டாக்டர் இது... பிரிஸ்கிரிப்ஷன்ல 'ஐ லவ் யூ...'ன்னு எழுதியிருக்கீங்க..?'
''சாரி! இது நர்சுக்கு கொடுக்கவேண்டிய சீட்டு... இடம் மாறிடுச்சு!''
😀😍😇😜😎😝😭😆😂
13
''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.''
''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்....'''
😀😍😇😜😎😝😭😆😂
14
‘‘ஆபரேஷன் பண்ணி எப்படியாவது எங்க அப்பாவைக் காப்பாத்திடுவீங்கன்னு நினைச்சேன்...ஸ்ரீ ஏமாத்திட்டீங்களே டாக்டர்...’’
‘‘நல்ல கதையா இருக்கே... நீங்களே வீணா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா பொறுப்பு?’’
😀😍😇😜😎😝😭😆😂
15
ராமு :எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்காரு.தெரியுமா.?
சோமு :இப்பத்தான் டைனோஸரஸே கிடையாதே.!
ராமு :எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே.அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!!!!!
😀😍😇😜😎😝😭😆😂
16
சார்…மீனுக்கு புழு வாங்கணும், அங்கே பக்கத்துல
கடை இருக்கா..?–
ரேஷன் கடை இருக்கு பாருங்க…!!
😀😍😇😜😎😝😭😆😂
17
மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"
கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"
மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"
=======================================
18
ஜட்ஜ்: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்.

விண்ணப்பதாரர்: ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச்

சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை . கஷ் டமாக  அதனால்தான். விவாகரத்து தாருங்கள்.

ஜட்ஜ்: இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. பத்து பாத்திரட்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. அப் படியும் போகலேண்ணா பேக்கிங் பவடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படி பட்ட தீச்சல் கடாயா  இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும். அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி நல்ல
தண்ணியில ஒருதடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷின்ல போட்டா துணி தும்ப பூ மாதிரி
இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா?

விண்ணப்பதாரர்: ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

ஜட்ஜ் : என்ன புரிஞ்சது.?

விண்ணப்பதாரர்: எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட நிருத்திகிட்டா, ஆன நீங்க துணியும்
தோயக்கிறீங்க ண்ணிட்டு.
-----------------------
மேலே உள்ள 18ல் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.7.17

சிறிது நேரம் குதித்ததால் ஏற்பட்ட பயன்!!!


சிறிது நேரம் குதித்ததால் ஏற்பட்ட பயன்!!!

Health Tips

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன்.வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட!

தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..

அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை.

சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை.

இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.

டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.

‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.

அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..

போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர்.

‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான
இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.

‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!!

‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார்.

அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!

நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்.

மருத்துவர்_பெற்ற_பலன்_இவ்வுலகும்_பெற_வேண்டி  பகிர்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.7.17

கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!


கடவுள் வேறு..கடவுள் சிலைகள் வேறு...!

இன்றைய சிந்தனை 1

“மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு.”

எவ்வளவு சிம்பிளாக சொல்லி விட்டார் வாரியார்...?

கேள்வி : “தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?”

வாரியார் பதில் : “சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்.. மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும். கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார்.
---------------------------------------------------------
2
இன்றைய சிந்தனை..
2

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார்.

அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார்.

அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்க லாமே?!''  என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.
 
உடனே ராக்ஃபெல்லர்,

''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக...இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது.

வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.

உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

எந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான்.

 உழைப்பு ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது. அந்த உறுதியான தன்னம்பிக்கை யுடன், இணைந்த உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான்.

ஆம்.,நண்பர்களே.,

மனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது உழைப்புத்தான்.

உழையுங்கள்!  உழையுங்கள்!

அதுவே அனைத்து நோய்க்கும் மருந்து”..

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.7.17

ஜிஎஸ்டியின் ஆரம்பமே மகிழ்ச்சி!!!!


ஜிஎஸ்டியின் ஆரம்பமே மகிழ்ச்சி!!!!

சொல்பவர்கள் யார்? லாரி டிரைவர்கள் சாமிகளா..!!!

ஜிஎஸ்டியின் நன்மை என்பது உடனடி பலன் அல்ல . அது ரோடு போடுவது போன்றதாகும்.

ஆரம்பத்தில் ஒரு புது ரோடு வரும்.பொழுது மக்களுக்கு உண்டாகும் இடைஞ்சல்களும், அது உருவான பிறகு அதனால் மக்களுக்கு கிடைக்கும் பலனும் நான்கு  வழி சாலை உருவாக்கத்தின் பொழுது
மக்களுக்கு உண்டான சிரமங்களும் அதனால் இப்பொழது கிடைக்கும் பலன்களும் நமக்கு தெரிந்ததே..

அதே மாதிரி தான் ஜிஎஸ்டியும்..ஆரம்பத்தில் வியாபாரிகளால் உருவாக்கப்படும் விலை யேற்றங்களால்  விலை வாசி உயர்வது போன்ற தோற்றம் தெரிந்தாலும் நாளடைவில் பொருட்களின் விலை வாசி குறைந்து விடும்..

சரிப்பா அது வரும் போது வரட்டும் இப்பொழுது ஜிஎஸ்டியால் என்ன நன்மை என்கிறீர்களா.

ஜிஎஸ் டியால் நேற்று முதல் மாநிங்களின் எல்லையில் இருக்கும் சுங்க சாவடிகள் மூடப்பட்டு வருகின்றன.

நேற்று வரைமணிக்கணக்கில்  ஏன் நாள்கணக்கில் கூட  லாரிகள் வெளி மாநில எல்லைகளில் காத்து நின்ற லாரிகள்
இன்று சர்சர்ன்னு  டோல்கேட்டை தாண்டி பறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஜிஎஸ்டி தான்..

இனி மாநிலம் விட்டு மாநிலம் எடுத்து செல்லப்படும் பொருட்களுக்கு டேக்ஸ் ஆகியிருக்கா இல்லையா என்கிற பில் வெரிபிகேசன் தேவையில்லை.

அதோடு மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பொருட் களுக்கு  நுழைவு வரி என்கிற பெயரில்  டொல்கேடடில் காத்திருந்து கணக்கு சொல்லும் காலம் இனி இல்லை.

கணக்கு சரியில்லாத லாரிகளை மிரட்டி லஞ்சம் ஜிஎஸ்டிம் ஆபிசர்கள் வரப்போவதில்லை.

ஜிஎஸ்டியில் அங்கமான இன்டகிரேட்டடு ஜிஎஸ்டி் என்கி்ற ஜஜிஎஸ்டி மூலம் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு விற்பனை யாகும் பொருட்க ளுக்கு கேரளா அரசிற்கு நேரிடையாகவே வரி போய் விடும் என்பதால் கேரள எல்லைகளில் உள்ள டோல்கேட்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன..

இதோ இதைப்பற்றி இன்றைய தினத்தந்தியில் வந்துள்ள செய்தி இதோ....

கோவை மண்டலத்தில் வணிக வரித்துறை கட்டுப் பாட்டில் வாளையாறு, கே.ஜி. சாவடி, பிச்சனூர், மீனாட்சிபுரம், கோபாலபுரம், கூடலூர் ஆகிய 6 சோதனை சாவடிகள் உள்ளன.

அந்த 6 சோதனை சாவடிகளும் நேற்று முதல் மூடப்பட்டன. இதில் லாரி டிரைவர்களுக்கு அதிக நெருக்கடி கொடுத்து வந்தது தமிழக–கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச்சாவடி.

இங்கு கேரள அரசு சார்பில் உள்ள வணிக வரித்து றை சோதனை சாவடியில் தினமும் ஆயிரக்கணக் கான லாரிகள் அணிவகுத்து நிற்பது வழக்கம்.

வாளையாறில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி, போலீஸ் சோதனை சாவடிகள் இருந்தாலும் கேரள அரசின் வணிக வரித்துறை சோதனை சாவடியில் தான் அதிக வாகனங்கள் நிற்பது வழக்கம்.

இதற்கு காரணம் கேரள அரசின் வருமானத்தில் வணிகவரி
முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கேரளாவுக்குள் வரும்
லாரிகளில் உள்ள சரக்குகளுக்கு வணிகவரி செலுத்தப்பட்டுள்ளதா என்று...ஊழியர்கள் தீவிரமாக சோதனை செய்த பின்னரே லாரிகளை உள்ளே அனுமதித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. நேற்று முதல் அமலான தை தொடர்ந்து மாநிலங்களுக்கிடையில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.

அதன்படி வாளையாறு வணிகவரி சோதனை சாவடியும் மூடப்பட்டது. இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவர்கள் லாரி டிரைவர்கள் என்று சொன்னா ல் மிகையாகாது

வாளையாறு சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு சரக்கு ஏற்றி வந்த நாமக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் தியாகராஜன் என்பவர் கூறியதாவது:–

நான் வடமாநிலங்களிலிருந்து அடிக்கடி சரக்குகள் ஏற்றிக் கொண்டு கேரளா செல்வேன்.

எனக்கு ஒடிசா மற்றும் வாளையாறு சோதனை சாவடிகள் தான் சோதனையான சாவடிகள். ஒடிசா சோதனை சாவடியில் 2 நாட்களும், வாளையாறில் 4 நாட்களும் காத்திருக்கவேண்டும்.

வாளையாறு சோதனை சாவடியில் சரக்கு ஏற்றி வரும் லாரிகள் அங்குலம் அங்குலமாக தான் நகர்ந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் எங்களால் லாரியை விட்டு இறங்கவும் முடியாது.

அதிகாலை நேரங்களில் எங்களால் காலை கடனை கூட கழிக்க முடியாத அவஸ்தையை அனுபவித்து வந்தோம்.

ஆனால் தற்போது சோதனை சாவடி மூடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் நாக்பூரிலிருந்து எலக்டிரிக்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு காலை 8 மணிக்கு வாளையாறு வந்தேன்.

இங்கு லாரியை நிறுத்த வேண்டிய அவசியமில்லாததால் பாலக்காடு சென்று சரக்குகளை இறக்கி விட்டு மதியம் 2 மணிக்கே வாளையாறு திரும்பி விட்டேன்.

கேரளாவுக்குள் சென்று சரக்குகளை இறக்கி விட்டு வருவதற்கு ½ நாள் தான் ஆனது. ஆனால் முன்பு 4 நாட்கள் ஆனது என்று அந்த டிரைவர் கூறியுள்ளார்.

இது தாங்க ஜிஎஸ்டியால் உண்டான உண்மையான நிகழ்வு.

மற்றபடி 4 இட்லி சாப்பிட்டதற்கு 18% வரி போட்டுள்ளார்களே  இது தான் ஜிஎஸ்டியின்  பலனா என்று முட்டாள் தனமாக பேசுவது நல்லதல்ல...

4 நாட்கள். கேரள மாநிலத்தின் எல்லையில ஒரு லாரி் காத்திருந்த  காலம் போய் 4 மணி நேரத்தில் நுழைந்து சரக்கை டெலிவரி செய்து விட்டு வருகிறது என்றால் அந்த லாரி டிரைவரின் உழைப்பும் நேரமும் எப்படி வேஸ்டாகாமல் மிச்சமானது என்று வயிற்றில் பசியை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.7.17

Astrology: ஜோதிடம்: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!


Astrology: ஜோதிடம்: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

Lessons on Yogas:

”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில்
பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு
எங்கே போவது?

இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல்
அல்லாடுபவர்கள் முதல் வகை!
2. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று
தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது
தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டு போய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.

அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!

ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும்
வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.

அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன்
இரண்டாவது சாய்ஸ்!

எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது.

ஒரு கவிஞன் எழுதினான்.

”அணைக்க 
ஒரு அன்பில்லாத மனைவி;
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும், 
எனோ இன்னும்
வாழ்க்கை கசக்கவில்லை!”

இந்த நிலைமையில்தான் பாதிப்பேர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)

Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.

அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகம் என்பது கிரக்கூட்டு அல்லது சேர்க்கை அல்லது சேரும் இடத்தைப் பொறுத்து வருவது. நல்ல யோகங்கள் ஜாதகத்திற்கு வலுவைச் சேர்க்கும். எதிர்மறையான யோகங்கள் ஜாதகத்தின் வலிமையைக் குறைக்கும். ஒன்றை வைத்து, ஒன்றை முடிவு செய்ய முடியாது.

இந்த அமைப்பைப் பெற்றிருப்பவர்கள், எதற்கும் கவலைப் பட வேண்டாம். கவலைப் பட்டு என்ன ஆகிவிடப்போகிறது? நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலைப் படாதீர்கள்.

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண் 337 என்று எப்படி வரும்.

இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?

கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பர்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.7.17

என்னுடையது என்று உள்ளது எது?


என்னுடையது என்று உள்ளது எது?

வாழ்க்கைத் தத்துவம்!

 மரணம் :
வா  மனிதா . .நீ  கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.."

மனிதன்:
"இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

மரணம் :
"மன்னித்துவிடு மனிதா . உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."

மனிதன் :
நான்   இரவு , பகலாக  உழைத்து  சேர்த்த   எனது  பொருளாதாரம் . .

மரணம் :
"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு ..

மனிதன் :
"என்னுடைய திறமைகள். .

மரணம் :
"அவை உன் சூழ்நிலைகளுடன் சம்மந்தப்பட்டது..

மனிதன் :
"அப்படி என்றால் என் மனைவி,மக்கள்  மற்றும்   உற்றார்  உறவினர் . .

மரணம் :
அவர்கள்   உன்   இதயத்துடன்  சம்பந்தப்பட்டவர்கள் . .

மனிதன்:
எனது  உடல்?

மரணம்:
"அது இந்த  மண்ணுக்கு   சொந்தமானது

மனிதன்:
(கண்களில்   நீர் வழிய -) "என்னுடையது என்று எதுவும் இல்லையா?"

மரணம்:
நீ வாழ்ந்த  ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..
நீ  செய்த  தர்மம் , பிறருக்கு  நன்மை  செய்தது  ,
பிறர்  துன்பத்தில்   பங்கு  கொண்டது  ,
பிறருக்கு  தீங்கு  செய்யாமல்  இருந்தது ,  
போன்ற  நல்ல  செயல்கள் , மற்றும்  நீ  செய்த
பாவ  கருமங்கள்..இவை  மட்டுமே  உன்னுடையது . .
மற்ற   எதையும்   இறுதிக் காலத்தில் நீ  உன்னுடன் கொண்டு போக முடியாது..

*வாழும்  காலம்  கொஞ்சமே......*மனிதா  நீ  மாறிவிடு ,உன்  மறு  உலகத்திற்காக...*

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.7.17

அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?


அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
1
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
2
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
3
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
4
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
5
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
6
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
7
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
8
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
9
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
10
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.7.17

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை!!!!


சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை!!!!

கவியரசர் எழுதிய பாடல் ஒன்று அதிகம் யாரைச் சிந்திக்க வைத்தது?

ஆமாம். அவருடைய மகன் காந்தி கண்ணதாசன் அவர்களைத்தான் அந்தப் பாடல் அதிகம் சிந்திக்க வைத்தது!

எப்படி?  அவர் எழுதிய கட்டுரையைப் படியுங்கள் - தெரியவரும்!!!
-------------------------------------------------
இன்று  நான் கேட்ட ஒரு பழைய பாடல்...என்னை ரொம்பவே சிந்திக்க  வைத்தது ..!

“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”

எத்தனையோ ஆண்டுகளாக  கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்தான் இது ..! ஆனால்  இன்று ஏனோ....இந்தப் பாடலின் ஒரு சில வரிகள்,  என்னை அறியாமலேயே ,  மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ... ஓடி  வந்து உட்கார்ந்து கொண்டு..அர்த்தம்  தெரிந்து கொள்ள  என்னை அழைத்தன..!

 “சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
         திருச்சபை வழக்குரைத்த  முறையும் பொய்யோ?”
.
இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....அது என்ன சிவலிங்கம் சாட்சி
சொன்ன கதை..?

நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...

“ அது வந்து....அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று....அதற்கு மேல்.... .... முழுசா  தெரியலியே..!”

சரி...பாடலை எழுதியவர் கண்ணதாசன்..! சும்மா எழுத மாட்டார்  அவர் ஒரு வரி எழுதினால் ..அதற்குள்ளே ஓராயிரம்  அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!

அங்கும் இங்கும் தேடி ஓடி... சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....அது  இதுதான்...!

அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ..அவன் பெயர் அரதன குப்தன் ..மதுரையைச் சேர்ந்த ஒரு
பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே   வாழ்ந்து வந்தானாம்...

காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த ,  அவன் தங்கைக்கும் ,
தங்கையின்  கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...

எதிர்பாராமல் ஒரு நாள், அரதன குப்தனின்  தங்கையும் , அவள் கணவரும்  இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர  ....உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற  ரத்னாவளியையும் அழைத்துக்  கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற  இடத்திலே... ஒரு புன்னைவனம் ..அதில்  ஒரு வன்னிமரம்  ..அருகில்  ஒரு சிவலிங்கம்..சற்றுத் தள்ளி  ஒரு
கிணறு...கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!

காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்...  கதறி அழுதாள் ...காரணம்...அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...

நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....தற்செயலாக  அந்த வழியாக வருகிறார்  திருஞானசம்பந்தர்

....நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம்  முறையிட...உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...

சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப்  புரிந்து   கொண்டாராம் சம்பந்தர்....

அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே  ஒரு தாலியைக்  கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்.. இந்த கல்யாணத்திற்கு   சாட்சிகள் ...அங்கே இருந்த ஒரு
வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!

இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....கணவனோடு இன்னொரு  பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை  , உள்ளது  உள்ளபடியே  சொல்ல... அதை கொஞ்சமும்  நம்பவில்லையாம் முதல் மனைவி..!

வழக்கு சபைக்கு வந்தது...

திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும்,
வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...

முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம்  இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”

கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....

கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....! கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம்
ரத்னாவளி....

“ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது  எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல்  இறைவா..சொல்....?”

ரத்னாவளி பெரும்  குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்...

"நாங்கள் சாட்சி.."

குரல் வந்த திசையில் கூட்டத்தினர்  அனைவரும் திரும்பிப் பார்க்க....ஈசன் அங்கே நின்றாராம்...

“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... அதற்கு நாங்கள் மூவருமே சாட்சி”

“ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக  திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும்  ,

இன்று முதல் ,இந்த மதுரை   கோவிலில்,  என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில்  சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம்
ஈஸ்வரன்...!

பார்த்தவர்  அனைவரும்  பரவசப்பட்டுப் போனார்களாம்..!

இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... வன்னி மரம் ,  கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?

ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது  இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!

#
கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும்  “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம்
திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!

[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறார் கல்கி..]

#.. கதையைப்   படித்து முடித்த நான் , கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்தேன்...! “சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”

கண்ணதாசன்  எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் ,  இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! இந்தக் கதையை முழுவதும்  படிக்காமல் , கண்டிப்பாக  கண்ணதாசனால் அந்த ஒருவரியை   எழுதி இருக்க முடியாது..!

சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை
அர்த்தங்கள் இருக்கும்..?

அவற்றை  தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான
கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை  அவர்  படித்திருக்க வேண்டும் ..?

 # அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் , எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு  சாத்தியமாயிற்று ..?

“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும்  அவனுக்கு  மரணமில்லை”

# கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும்  அல்ல...பூஜிக்க வேண்டிய  கவிஞன்..!

ஆக்கம்:  காந்தி கண்ணதாசன் அவர்கள்! அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.7.17

மகிழ்ச்சி எங்கே கிடைக்கும்?


மகிழ்ச்சி எங்கே கிடைக்கும்?

அழகான  பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்

அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."

கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார். அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி *மகிழ்ச்சியை* வரவழைப்பது என்று சொல்லச்  சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..

" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.இப்படி இருக்கையில்
ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று *மழை* பெய்து கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக *வருடிக்* கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக *புன்னகைத்தேன்*..!!!

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை *சந்தோஷிக்கிறது* எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த *மகிழ்ச்சிக்கு* அளவே இல்லை. அவரை *மகிழ* வைத்து நான் *மகிழ்ந்தேன்*.

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் *மகிழ* நானும் பெரு *மகிழ்வுற்றேன்*.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.

*மகிழ்ச்சி* என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."

இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள்.  அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.

ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம்  *மகிழ்ச்சி,*  அது   அவளிடம்இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது  நீங்கள் எவ்வளவு *மகிழ்ச்சியாக* இருக்கிறீா்கள் என்பதில் இல்லை..........................................
உங்களால்அடுத்தவர் எவ்வளவு *மகிழ்ச்சி* ஆகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது...

*மகிழ்ச்சி* என்பது போய் சேரும் இடம் அல்ல அது ஒரு பயணம்...

*மகிழ்ச்சி* என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்...

*மகிழ்ச்சி* என்பது ஏற்றுக்கொள்வது அல்ல அது ஒரு முடிவு...

நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள்் என்பதில் இல்லை *மகிழ்ச்சி*
நீங்கள்யார் என்பதில் தான் *மகிழ்ச்சி* !!!

*மகிழ* வைத்து *மகிழுங்கள்* உலகமும் இறையும் உங்களைகண்டு *மகிழும்*..!!!
----------------
அன்புடன்
வாத்தியார்
===================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.7.17

லெக்கிங்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள்!!!

லெக்கிங்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள்!!!

லெக்கிங்ஸ் அணிவதால் பெண்களுக்கு உண்டாகும் தீமைகள் என்னவென்று தெரியுமா?

பெண்கள் லெக்கிங்ஸ் அணிவதை மிக அதிகமாக விரும்புகின்றனர். லெக்கிங்ஸ் அவர்களுக்கு வசதியான உடையாகவும், அழகாகவும் காட்டுகிறது. ஆனால் இது நமது நாட்டில் இருக்கும் வெப்பநிலைக்கு ஏற்றது தானா? இதனால் எத்தனை ஆரோக்கிய பிரச்சனைகள் வருகிறது என தெரியுமா?

லெக்கிங்ஸ் மட்டுமில்லாமல் இறுக்கமான உடை அணிவதையும் பெண்கள் நிறுத்த வேண்டியது அவசியம். ஏன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று செய்யும் யோகவிற்கு அணியும் யோக உடை கூட ஆபத்தை உண்டாக்கும் என தெரியுமா?

உடல் சூடாகிறது

இறுக்கமான உடைகள் மற்றும் லெக்கிங்ஸ் அணிவது, சருமத்தில் வறட்சியை உண்டாக்குகிறது. இது சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கை வியற்வை மூலமாக வெளியேற அனுமதிப்பதில்லை. இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது.

பாக்டிரியா மற்றும் பூஞ்சைகள்

இறுக்கமான உடைகளை அணிவதால் சில இடங்களில் சிவப்பு கொப்புளங்கள் உண்டாகிறது. கால்களில் உள்ள வேர்கால்கள் அதிகமாக பாதிக்கிறது. இதனால் பாக்டிரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகின்றன. இரவிலாவது தளர்ச்சியான உடைகளை அணிவது சிறந்தது.

படர்தாமரை

பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு உடல் சூடு காரணமாக உள்ளது. இறுக்கமான ஆடைகள் அணிவதால் உடல் சூடு வெளியேற முடியாமல் போகிறது. மேலும் அதிகப்படியான வியற்வையும் உள்ளேயே தங்கிவிடுகிறது. இதனால் அரிப்பு, உடல் சிவப்பாதல் ஆகியவை உண்டாகிறது.

இது படர்தாமரை வர காரணமாக உள்ளது. படர்தாமரையால் உண்டாகும் அரிப்பு தாங்கமுடியாதது. மேலும் இது பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் உடற்பயிற்சி செய்யும் போது இறுக்கமான உடைகளை அணிவது அதிகமான வியற்வை தேங்க வழிவகுக்கும்.

அரிப்பு

படர்தாமரையை விட கொடுமையானது அரிப்பு தான். இது பூஞ்சைகளினால் உண்டாகிறது. உடல்பயிற்சி மற்றும் ஓடும் போது லெக்கிங்ஸ் அணிவதால் அதிகமான வியற்வை உண்டாகிறது. இதனால் பல தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் லெக்கின்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உடற்பயிற்சி முடிந்ததும், உடையை மாற்றிவிடுவது நல்லது, மேலும் சுத்தமாக குளிப்பது அவசியம். பூஞ்சைக்கு எதிராக செயல்படும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.

ஈஸ்ட் தொற்று

அதிகப்படியான பெண்கள் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்ட் சூடாக இருக்கும் இடத்தில் நன்றாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் அணியும் லெக்கிங்ஸ் அது வளர நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருகிறது. நாள் முழுவதும் லெக்கிங்ஸ் உடன் இருப்பது தவறானது.

வறட்சியை உண்டாக்குகிறது

லெக்கிங்ஸ் உங்களது உடலின் ஈரப்பதத்தை குறைத்து உடல் அரிப்பு ஏற்பட காரணமாவதுடன், லெக்கிங்ஸில் இருக்கும் தூசிகள் உங்களது தோலை வறட்சியடைய வைக்கிறது. இறந்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வலியை உண்டாக்கும் சிவப்பு புண்களை உண்டாக்குகிறது. லெக்கின்ஸை கழட்டிய உடன் குளிக்க வேண்டியது அவசியம்

உடல் எடையை அதிகரிக்கிறது

லெக்கிங்ஸ் அணிவதால் உடல் அதிகரிக்கிறது. சதைகள் இறுக்கமாகி தோற்றத்தையும் கெடுக்கிறது.

ஆகவே லெக்கிங்ஸ் தேவைதானா என்பதை யோசித்து நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!!!

இந்தப் பதிவு இளம் பெண்களுக்கு மட்டுமில்லை! வீட்டில் இளம் பெண்களுடன் இருக்கும் வயதான அப்பாக்களுக்கும், மாமாக்களுக்கும் (அதாவது மாமனார்களுக்கும்) மற்றும் சகோதரர்களுக்கும்சேர்த்துத்தான்!!!

அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!