தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!
செட்டிநாட்டுப் பகுதிகளில் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சில கலை சொற்கள்
சத்த :~
சற்று என்பது மருவி சத்த என்றானது .
பைய :~
பொறுமை, மெதுவாக.
எங்குட்டு :~
எந்தப் பக்கம்.
எம்புட்டு :~
எவ்வளவு.
இம்புட்டோண்டு :~
சிறிதாக.
எம்புட்டு :~
என்னுடையது.
மகிர உள்ளது :~
நிரம்ப உள்ளது .
வெள்ளந :~
இருட்டு அகன்று 'வெள்ளி்' முளைக்கையிலே அதாவது வானில் வெள்ளி காலையில் குறிப்பிட்ட நேரமே தோன்றும் அது தோன்றும் பொழுது என்பது பொருள்
குறிச்சி :~
சாய்வு நாற்காலி.
கொட்டகை :~
மங்கல நிகழ்வுகளில் கொட்டகை என்றும் அதையே துயர துக்க நிகழ்வுகளில் பந்தல் என்றும் சொல்லும் வழக்கம்
மாடு கட்டுமிடத்தை
தொழுவம்
கட்டுத்தரை
வட்டி :~
உணவு உண்ணும் கும்பா
(வட்டில் என்பது பண்டையத் தமிழ் வழக்கு,)
அதாவது அசலில் கை வைக்காமல் அதன் வருமானத்தில் சாப்பிடுதல்
சிலாத்தி :~
சல்லடை.
சிட்டை
குறிப்பு
சுளகு சொளகு
முறம்.
மரவை
மரத்தால் ஆன தாம்பாளம்
போகினி / லோட்டா /
குவளை தோட்டா என்பது பர்மிய சொல்
குந்தாணி
உரல்.
திருகை
அரிசி உடைக்கப் பயன்படுத்தப் படும் ஒருவகை கல் உரல்
ஏவம் கேட்டல் :~
பரிந்து பேசுதல்.
கொண்டி :~
போக்கிரி.
(கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம் பெறுகிறது)
தாக்கல் :~
தகவல் தாக்கீது
ஒள்ளத்தி உள்ளத்தி
மிகச்சிறிய அளவு.
(எள் அத்தனை. எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்)
தொக்கடி தொக்கு + அடி
மிகக் குறைந்த விலை.
மருக்கோளி :~
பைத்தியம்.
வறளி :~
பிடிவாதக்காரர்.
மூதலித்தல் :~
மெய்ப்பித்தல்.
பட்டியல்
விலைச்சீட்டு
பெட்டகம் :~
இரும்பால் ஆன அலமாரி.
பெட்டக சாலை
பெட்டிக்குள் வைக்கும் இடம்
கேணி :~
கிணறு.
கிண்ணி :~
சிறு தட்டு.
பலகாரம்:~
பலாரம் ( காலைப் பலகாரம் , இராத்திரிப் பலகாரம் ) - டிபன்.
துடுப்பு :~
மரத்தால் ஆன ஒருவகைக் கரண்டி.
கொட்டான் :~
பனை ஓலையில் பின்னப்பட்ட ஒருவகைக் கூடை.
சத்தகம் :~
தேங்காய் கீறுவதற்கு பயன்படுத்தப்படும்
ஒரு வகை கத்தி போன்ற கரண்டி
வக்கூடை.
மூங்கிலால் பின்னிய கூடை
சுவத்தலமாரி :~
வீடுகளில் சுவற்றோடு பதிக்க பட்டிருக்கும் அலமாரி.
சீசா :~
கண்ணாடிக் குடுவை.
ரொட்டிக்கட்டு :~
பிஸ்கட் பாக்கெட்.
தாளிக்கிற பெட்டி :~
அஞ்சரை பெட்டி / அஞ்சு அறைப் பெட்டி.
இரவைக்கு :~
இரவு
கடிசு - கடிது :~
கடினம்.
சவுக்காரம் :~
சோப்பு.
கடைக்கால் :~
அஸ்திவாரம்.
தொலைவு :~
தூரம்.
பட்டியக்கல் :~
கருங்கல்லால் ஆன தரை
தொரட்டி :~
உயர்த்தில் உள்ள மரக்கிளைகளை வளைத்து ஒடிக்கப் பயன்படும் கருவி / துரட்டி.
அம்புட்டு :~
அவ்வளவு.
பூராத்தையும் :~
அனைத்தையும்.
சீவிக்கிரபொட்டி :~
கண்ணாடி சீப்பு வைத்து கொள்ளும் பெட்டி.
ஊரணி :~
குளம்.
புரவி :~
குதிரை.
அங்கிட்டு :~
அந்தப் பக்கம்.
இங்கிட்டு :~
இந்தப் பக்கம்.
பொட்டல் :~
மைதானம்.
விளக்கு வைக்கணும் :~
விளக்கு ஏற்றனும்.
ஏத்தனும்
ஏற்றனும்
ராக்கை :~
அடுக்கம் / Rack.
படைக்கிற அறை :~
சாமி அறை.
உக்குராண அறை :~
சேமிப்பு அறை - சமையல் சாமான்கள் அறை
முகப்பு (மோப்பு ) :~
வீட்டின் முன்பகுதி.
வளவு - வளைவு :~
செவ்வகமான மத்தியப் பகுதி.
திறந்த வெளியாகவும் இரு பக்கங்களிலும் அறைகள் கொண்டதாக அமைத்திருக்கும்.
வாரம் :~
தாழ்வாரம்.
பேழை :~
ஓலையால் செய்த பெட்டி.
தடுக்கு :~
ஓலையில் செய்த சிறு பாய்.
அவுக :~
அவர்கள்.
இவுக :~
இவர்கள்.
வந்தாக :~
வந்தார்கள்.
போனாக :~
போனார்கள்.
வருவாக :~
வருவார்கள்.
மேலைக்கு
பிற்பாடு
அதாவது யாராவது உதவி கேட்டு வந்தால் தரமாட்டேன் என்று சொல்லாமல் மேலைக்கு பார்போம் என்பர்
===========================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir, migavum arumaiyana pathivu, nandri vazhga valamudan sir
ReplyDeleteசென்னைக்கு என்று வழக்கு சொல் உள்ளது, அதை உங்களால் வகைபடுத்தவே முடியாது.
ReplyDeletethere are 10 words in this list that are used in Nanjil nadu also; a few others may also be common in different parts of Tamilnadu.
ReplyDeleteஐயா,
ReplyDeleteதனுசு லக்கனத்துக்கு கெட்டவனான சுக்கிரன் கன்னி ராசியில்(10 ல்) நீசமாகி உள்ளார்..
இதை களத்திர காரகன்(சுக்கிரன்) நீசம் என்று பொருள் கொள்ளவா.இல்லை லக்கனத்திற்கு கொட்டவன் நீசம் என்ற பொருள் கொள்ளவா....
நன்றி......
வி. நாராயணன், புதுச்சேரி
ReplyDeleteசார், நீங்க ரொம்ப மாறிடீங்க சார்.
இன்று ராகு கேது பெயர்ச்சி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லையே.
Respected Sir,
ReplyDeleteHappy morning... I come to know many words which are in prevail of your birth place.
Have a great day.
With regards,
Ravi-avn
ReplyDeleteஐயா வணக்கம்
வட்டார வழக்கு அருமை
நன்றி
கண்ணன்
பல வார்த்தைகள் அறியாதவைப்பா
ReplyDeleteNice summary. After long time, another post reminding how far we traversed in these days. Your stories on chettinad is great narrating many informations. Looking forward for more post those posts👍👍👍
ReplyDeleteவணக்கம் ஐயா,அடேங்கப்பா(இது எந்த ஊரென்று தெரயவில்லை) தனி அகராதியே போடலாம் போலிருக்கே.நன்றி.
ReplyDelete///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir, migavum arumaiyana pathivu, nandri vazhga valamudan sir////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
////Blogger SELVARAJ said...
ReplyDeleteசென்னைக்கு என்று வழக்கு சொல் உள்ளது, அதை உங்களால் வகைபடுத்தவே முடியாது.////
ஆமாம். உண்மைதான். அட்டோவில் செல்லும்போது கேட்ட பல வார்த்தைகள் உள்ளன, கஸ்மாலம், பேமானி, வூட்டாண்ட சொல்லிகினு வந்தியா நைனா.... என்பது போன்ற பல சொற்கள். எல்லாம் கெட்ட வார்த்தைகள், வசவு மொழிகள் என்பதை மட்டும் அறிவேன்!!!!
/////Blogger s m swamy said...
ReplyDeletethere are 10 words in this list that are used in Nanjil nadu also; a few others may also be common in different parts of Tamilnadu.////
இருக்கலாம். இவையெல்லாம் செட்டி நாடு என்று புகழ்பெற்ற காரைக்குடி, பள்ளத்தூர், கண்டனூர் போன்ற (மொத்தம் 75 ஊர்கள்) இடங்களில் மக்களால் பேசப்படும் சொற்களாகும். முடிந்தவரை தொகுப்பாகக் கொடுத்துள்ளேன். நன்றி!!!!
///Blogger mcxclient said...
ReplyDeleteஐயா,
தனுசு லக்கனத்துக்கு கெட்டவனான சுக்கிரன் கன்னி ராசியில்(10 ல்) நீசமாகி உள்ளார்..
இதை களத்திர காரகன்(சுக்கிரன்) நீசம் என்று பொருள் கொள்ளவா.இல்லை லக்கனத்திற்கு கொட்டவன் நீசம் என்ற பொருள் கொள்ளவா....
நன்றி......////
நீசமாகிவிட்டால் - உங்கள் மொழியில் சொன்னால் out ஆகி விட்டது என்று அர்த்தம். அவுட்டாகி பெவிலியனுக்குத் திரும்பி விட்டவர் கணக்கில் ரன்களுக்கு ஏது இடம். அதற்கான நஷ்ட ஈடு உங்கள் ஜாதகத்தில் இருக்கும் அதையும் பாருங்கள் நண்பரே!!!!
////Blogger Narayanan V said...
ReplyDeleteவி. நாராயணன், புதுச்சேரி
சார், நீங்க ரொம்ப மாறிடீங்க சார்.
இன்று ராகு கேது பெயர்ச்சி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லையே./////
இணையத்தில் எல்லா பாத்திரிக்கைக்காரர்களும் மாங்கு மாங்கென்று எழுதியுள்ளார்கள். அதை ஏன் நாமும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. கோச்சாரப் பலன்களை விட தசாபுத்திப் பலன்கள் தான் வலிமையானது. அதுவும் ஒரு காரணம்!!!! ஆகவே ஜாதகப்படி நடப்பு தசாபுத்திப் பலன்களையே பாருங்கள்
///Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... I come to know many words which are in prevail of your birth place.
Have a great day.
With regards,
Ravi-avn/////
ஆமாம். எல்லாம் எங்கள் பகுதி மக்களின் வாய்மொழிச் சொற்கள். நன்றி அவனாசி ரவி!!!!
///Blogger Kannan L R said...
ReplyDeleteஐயா வணக்கம்
வட்டார வழக்கு அருமை
நன்றி
கண்ணன்////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!
////Blogger ராஜி said...
ReplyDeleteபல வார்த்தைகள் அறியாதவைப்பா/////
இப்போது அறிந்துகொள்ளுங்கள் அதற்காகத்தான் அறியத்தந்துள்ளேன் சகோதரி!!!!
////Blogger selvaspk said...
ReplyDeleteNice summary. After long time, another post reminding how far we traversed in these days. Your stories on chettinad is great narrating many informations. Looking forward for more post those posts👍👍👍/////
பொறுத்திருங்கள் மேலும் அறியத்தருகிறேன். நன்றி நண்பரே!!!!
//////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அடேங்கப்பா(இது எந்த ஊரென்று தெரயவில்லை) தனி அகராதியே போடலாம் போலிருக்கே.நன்றி./////
இவையெல்லாம் செட்டி நாடு என்று புகழ்பெற்ற காரைக்குடி, பள்ளத்தூர், கண்டனூர் போன்ற (மொத்தம் 75 ஊர்கள்) இடங்களில் மக்களால் பேசப்படும் சொற்களாகும். முடிந்தவரை தொகுப்பாகக் கொடுத்துள்ளேன். நன்றி ஆதித்தன்!!!!