மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.7.17

Astrology: ஜோதிடம்: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!


Astrology: ஜோதிடம்: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

Lessons on Yogas:

”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில்
பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு
எங்கே போவது?

இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல்
அல்லாடுபவர்கள் முதல் வகை!
2. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று
தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது
தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டு போய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.

அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!

ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும்
வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.

அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன்
இரண்டாவது சாய்ஸ்!

எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது.

ஒரு கவிஞன் எழுதினான்.

”அணைக்க 
ஒரு அன்பில்லாத மனைவி;
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும், 
எனோ இன்னும்
வாழ்க்கை கசக்கவில்லை!”

இந்த நிலைமையில்தான் பாதிப்பேர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)

Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.

அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகம் என்பது கிரக்கூட்டு அல்லது சேர்க்கை அல்லது சேரும் இடத்தைப் பொறுத்து வருவது. நல்ல யோகங்கள் ஜாதகத்திற்கு வலுவைச் சேர்க்கும். எதிர்மறையான யோகங்கள் ஜாதகத்தின் வலிமையைக் குறைக்கும். ஒன்றை வைத்து, ஒன்றை முடிவு செய்ய முடியாது.

இந்த அமைப்பைப் பெற்றிருப்பவர்கள், எதற்கும் கவலைப் பட வேண்டாம். கவலைப் பட்டு என்ன ஆகிவிடப்போகிறது? நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலைப் படாதீர்கள்.

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண் 337 என்று எப்படி வரும்.

இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?

கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பர்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29 comments:

 1. Good morning sir,one doubt sir,for natural malefic planets the good placement is 3,6,10 and 11 in that circumstances,the 10th house lord is placed in 6th house,it is 9th to tenth house what was the result sir kindly explain me sir,thanks sir vazhga valamudan sir

  ReplyDelete
 2. ayya vanakkam. great last two line/statements. nice to know. anbudan kittuswamy

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,ஜாதக அமைப்பு எப்படி ஆயினும் கவலைப்பட்டு ஒன்றும் ஆவதில்லை என்பதே உண்மை.நன்றி.

  ReplyDelete
 4. Sir, its true. I saw many jatagam like this criteria. Thanks for your updation. Still i am not get the YOGA results for my horoscope sir.

  ReplyDelete
 5. எனக்கு பத்தாம் அதிபதி புதன் அவர் சிம்மத்தில்
  என்ன செய்ய 12ல் மறைந்து இருக்கிறார்..

  எல்லாம் இறைவன் திருவருள்
  என்று அமைதி கொள்கிறேன்.

  ReplyDelete
 6. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

  நல்லதொரு பதிவு ஐயா.

  என் கன்னியா லக்னத்திற்கு லக்னாதிபதியே பத்தாம் வீட்டு அதிபதியாக வந்து நான்காம் வீட்டில் சூரியனுடன் பத்து பாகையில் அமர்ந்து அஸ்தமணம் அடைந்து இவர்களுடன் சந்திரனும் கூட்டு சேர்வது எத்தகைய பலனை தரும் என அறிய ஆவலாக இருக்கிறேன் ஐயா.

  ஆனால் தங்களது அஷ்டவர்க்க பாடங்களை படித்தறிந்தவன் என்ற முறையில் எனக்கு பத்தாம ்வீட்டில் இருக்கும் 32 பரல்களின் எண்ணிக்கை தன்னம்பிக்கை அளிக்கிறது.

  நன்றிகளுடன்,
  மணிவண்ணன் நம்பியப்பன்.

  ReplyDelete
 7. சிம்ம லக்கினம்
  சூரியன் 1 ராகு 11, சுக்கிரன் 12ல் பாப கர்த்தாரி மற்றும்
  3ம் வீட்டில் சந்திரனுடன் பரிவர்த்தனை
  கேட்கவா வேணும்

  I got employed in distant places. All the times the nature of work changes.

  With the 10th Lord in 12th, should one can try business?
  Will 12th house always indicate loss? Or can it be considered as distant land? I know few other have similar chart but doing well in business or financially.


  ReplyDelete
 8. Vanakkam iyya,

  Inoru seithaiyaium inge pathivida virumbugiren. Thangal paadathil irunthu kathukondathu thaan...

  Ithey dur yogam (10 aam athipathi - 6/8/12 il amarnthalum), 10 aam athipathi vargothamam petraal nar palangal amayum endru oru paadathil padithathu nyabagam ullathu.

  Antha vargothama balathaal 10aam athipathiyin dasa/bukthi/anthrangalil narpalan erpadum endru nyabagam ullathu :) :)

  nandri,
  Bala

  ReplyDelete

 9. // பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார்
  கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்//

  ரைட்டு தல!!
  இந்த கட்டுரைய படிக்க ரொம்ப ஆறுதலா இருக்கு!!! நன்றி.

  ReplyDelete
 10. Sir,

  please, write about marriage impacting yogam.

  Looking forward to seeing it.

  Still, I am on your waiting list for Jathagam reading request for my son.

  Thansk, Ragini Santhosh

  ReplyDelete
 11. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir,one doubt sir,for natural malefic planets the good placement is 3,6,10 and 11 in that circumstances,the 10th house lord is placed in 6th house,it is 9th to tenth house what was the result sir kindly explain me sir,thanks sir vazhga valamudan sir/////

  6ம் வீடு, 9ம் வீடு போன்ற அமைப்புக்களால் கலவையான பலன்கள். கவலையை விடுங்கள்!!!!


  ReplyDelete
 12. //////Blogger kittuswamy palaniappan said...
  ayya vanakkam. great last two line/statements. nice to know. anbudan kittuswamy////

  ஆமாம். உங்களைப் போன்ற பலருக்காகத்தான் அந்த வரிகள். நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 13. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,ஜாதக அமைப்பு எப்படி ஆயினும் கவலைப்பட்டு ஒன்றும் ஆவதில்லை என்பதே உண்மை.நன்றி.////

  அதுதான் உண்மை.
  காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா - நாம்
  கவலைப்பட்டு கண் கலங்கி என்னைய்யா??
  - கவியரசரின் வரிகள்!

  ReplyDelete
 14. ////Blogger t.nagoji rao said...
  Sir, its true. I saw many jatagam like this criteria. Thanks for your updation. Still i am not get the YOGA results for my horoscope sir.////

  கிடைக்க இருப்பது கிடைக்காமலா போய்விடும்? பொறுமையாக இருங்கள் நண்பரே!!!!

  ReplyDelete
 15. ////Blogger வேப்பிலை said...
  எனக்கு பத்தாம் அதிபதி புதன் அவர் சிம்மத்தில்
  என்ன செய்ய 12ல் மறைந்து இருக்கிறார்..
  எல்லாம் இறைவன் திருவருள்
  என்று அமைதி கொள்கிறேன்./////

  நஷ்ட ஈடு என்ன உள்ளது என்று பாருங்கள் வேப்பிலையாரே!!!

  ReplyDelete
 16. ////Blogger Manivannan said...
  ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
  நல்லதொரு பதிவு ஐயா.
  என் கன்னியா லக்னத்திற்கு லக்னாதிபதியே பத்தாம் வீட்டு அதிபதியாக வந்து நான்காம் வீட்டில் சூரியனுடன் பத்து பாகையில் அமர்ந்து அஸ்தமணம் அடைந்து இவர்களுடன் சந்திரனும் கூட்டு சேர்வது எத்தகைய பலனை தரும் என அறிய ஆவலாக இருக்கிறேன் ஐயா.
  ஆனால் தங்களது அஷ்டவர்க்க பாடங்களை படித்தறிந்தவன் என்ற முறையில் எனக்கு பத்தாம ்வீட்டில் இருக்கும் 32 பரல்களின் எண்ணிக்கை தன்னம்பிக்கை அளிக்கிறது.
  நன்றிகளுடன்,
  மணிவண்ணன் நம்பியப்பன்.//////

  32 பரல்கள் உள்ளது அல்லவா? பொறுமையாக இருங்கள். எல்லாம் நல்லபடியாகவே அமையும்!!!!!

  ReplyDelete
 17. ////Blogger selvaspk said...
  சிம்ம லக்கினம்
  சூரியன் 1 ராகு 11, சுக்கிரன் 12ல் பாப கர்த்தாரி மற்றும்
  3ம் வீட்டில் சந்திரனுடன் பரிவர்த்தனை
  கேட்கவா வேணும்
  I got employed in distant places. All the times the nature of work changes.
  With the 10th Lord in 12th, should one can try business?
  Will 12th house always indicate loss? Or can it be considered as distant land? I know few other have similar chart but doing well in business or financially./////

  நீங்கள் நினைக்கும் அதுபோன்ற ஆசாமிகளுக்கெல்லாம் 2ம் அதிபதியும், 11ம் அதிபதியும் வலுவாக இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் மணி மேட்டரில் வெற்றிகரமாக இருப்பார்கள்

  ReplyDelete
 18. /////Blogger bala said...
  Vanakkam iyya,
  Inoru seithaiyaium inge pathivida virumbugiren. Thangal paadathil irunthu kathukondathu thaan...
  Ithey dur yogam (10 aam athipathi - 6/8/12 il amarnthalum), 10 aam athipathi vargothamam petraal nar palangal amayum endru oru paadathil padithathu nyabagam ullathu.
  Antha vargothama balathaal 10aam athipathiyin dasa/bukthi/anthrangalil narpalan erpadum endru nyabagam ullathu :) :)
  nandri,
  Bala/////

  ஜோதிடம் பெரிய கடல். பல விதிவிலக்குகளும் உண்டு. ஆகவே அலசும் போது நீங்கள் எழுதியுள்ளது தெரியவரும்! நன்றி!!!!

  ReplyDelete
 19. ////Blogger Happy said...
  // பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார்
  கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்//
  ரைட்டு தல!!
  இந்த கட்டுரைய படிக்க ரொம்ப ஆறுதலா இருக்கு!!! நன்றி.////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 20. /////Blogger Ragini Santosh said...
  Sir,
  please, write about marriage impacting yogam.
  Looking forward to seeing it.
  Still, I am on your waiting list for Jathagam reading request for my son.
  Thansk, Ragini Santhosh////

  நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள் சகோதரி!!!!

  ReplyDelete
 21. மிக்க நன்றி அய்யா.
  நான் தங்களின் மாணவன் அல்ல
  தங்களின் பதிவுகளை படித்து ஈர்ப்பு கொண்டவன்
  இந்த எளியோன் கேள்விக்கு பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
  என் பெயர் C T PALANISWAMY
  பிறந்த ஊர் சென்னிமலை ERODE
  பிறந்த நேரம் 18 1 1977 8.05 AM
  லக்கினம் மகரம்
  ராசி தனுசு
  நட்சத்திரம் பூராடம் 1 ம் பாதம்
  ராசி கட்டம்
  1 ல் சூரியன்
  2 ல் சுக்கிரன்
  4 ல் குரு கேது
  5 ல் மாந்தி
  7 ல் சனி
  10 ல் ராகு
  12 ல் சந்திரன் செவ்வாய் புதன்
  நவாம்சம் கட்டம்
  லக்கினம் சிம்மம்
  ராசி சிம்மம்
  1 ல் சந்திரன் புதன்
  2 ல் செவ்வாய்
  4 ல் ராகு
  5 ல் குரு
  6 ல் சனி மாந்தி
  7 ல் சூரியன்
  9 ல் சுக்கிரன்
  10 ல் கேது
  சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்
  1 ல் 27
  2 ல் 32
  3 ல் 27
  4 ல் 28
  5 ல் 28
  6 ல் 22
  7 ல் 22
  8 ல் 25
  9 ல் 30
  10 ல் 42
  11 ல் 31
  12 ல் 23
  தாஸா புத்தி

  சுக்கிரன் 18 1 1977 TO 15 2 1995
  சூரியன் 15 2 1995 TO 15 2 2001
  சந்திரன் 15 2 2001 TO 15 2 2011
  செவ்வாய் 15 2 2011 TO 15 2 2018
  ராகு 15 2 2018 TO 15 2 2036
  12 ல் உள்ள சந்திரன் அவனுடய தசைஇல் அடித்து துவைத்து காயப்போட்டு விட்டான்
  அடுத்த தசை செவ்வாய் துவைத்து தொங்க விட்டு கொண்டு இருக்கிறான்
  இனி வரும் ராகு தசை எப்படி இருக்கும்?
  ராகு 10 ல் உள்ளான்
  10 ம் அதிபதி சுக்கிரன் 2 ல்
  2 ம் வீட்டில் 32 பரல்கள்.
  சுக்ரன் 7 சுயவர்க்க பரல்கள்.
  10 ம் வீட்டில் 42 பரல்கள்

  ReplyDelete
 22. துர்மரணம், துராசை,துர்ஸ்வபனம், போன்ற வடசொற்களில் 'தீய' என்ற பொருளில் 'துர்' பயன் படுத்தப்படுகிறது. கெட்ட என்பது அதிகம் பேச்சு வழக்கில் பயன் படுத்துகிறோம். அதுவும் சரிதான் எனினும், தீய எனப‌து மேலும் இலக்கியத் தரமானது.'துர் யோகா'என்பதனை 'தீயயோகம்' என்று கூறுவது மேலும் சிறப்பு.

  எனக்கு கடகராசி கடக லக்கினம் . எனவே 5,10க்கு உரிய செவ்வாய் யோக காரகன். 12ல் மறைந்துவிட்டார். நீச குரு வர்கோத்தமம். சனி வர்கோத்தமம்.
  ராசியில் நீசம் ஆன சுக்கிரன் அம்சத்தில் உச்சம்.இவையெல்லாம் எனக்கு எல் ஐ சியில் வேலையைக் கொடுத்தன. ஆனால் அதில் வளர்ச்சி அடைய முடியவில்லை.

  ReplyDelete
 23. /////Blogger Palaniswamy Ravi said...
  மிக்க நன்றி அய்யா.
  நான் தங்களின் மாணவன் அல்ல
  தங்களின் பதிவுகளை படித்து ஈர்ப்பு கொண்டவன்
  இந்த எளியோன் கேள்விக்கு பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்
  என் பெயர் C T PALANISWAMY
  பிறந்த ஊர் சென்னிமலை ERODE
  பிறந்த நேரம் 18 1 1977 8.05 AM
  லக்கினம் மகரம்
  ராசி தனுசு
  நட்சத்திரம் பூராடம் 1 ம் பாதம்
  ராசி கட்டம்
  1 ல் சூரியன்
  2 ல் சுக்கிரன்
  4 ல் குரு கேது
  5 ல் மாந்தி
  7 ல் சனி
  10 ல் ராகு
  12 ல் சந்திரன் செவ்வாய் புதன்
  நவாம்சம் கட்டம்
  லக்கினம் சிம்மம்
  ராசி சிம்மம்
  1 ல் சந்திரன் புதன்
  2 ல் செவ்வாய்
  4 ல் ராகு
  5 ல் குரு
  6 ல் சனி மாந்தி
  7 ல் சூரியன்
  9 ல் சுக்கிரன்
  10 ல் கேது
  சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்
  1 ல் 27
  2 ல் 32
  3 ல் 27
  4 ல் 28
  5 ல் 28
  6 ல் 22
  7 ல் 22
  8 ல் 25
  9 ல் 30
  10 ல் 42
  11 ல் 31
  12 ல் 23
  தாஸா புத்தி

  சுக்கிரன் 18 1 1977 TO 15 2 1995
  சூரியன் 15 2 1995 TO 15 2 2001
  சந்திரன் 15 2 2001 TO 15 2 2011
  செவ்வாய் 15 2 2011 TO 15 2 2018
  ராகு 15 2 2018 TO 15 2 2036
  12 ல் உள்ள சந்திரன் அவனுடய தசைஇல் அடித்து துவைத்து காயப்போட்டு விட்டான்
  அடுத்த தசை செவ்வாய் துவைத்து தொங்க விட்டு கொண்டு இருக்கிறான்
  இனி வரும் ராகு தசை எப்படி இருக்கும்?
  ராகு 10 ல் உள்ளான்
  10 ம் அதிபதி சுக்கிரன் 2 ல்
  2 ம் வீட்டில் 32 பரல்கள்.
  சுக்ரன் 7 சுயவர்க்க பரல்கள்.
  10 ம் வீட்டில் 42 பரல்கள்////

  பத்தாம் வீட்டில் 42 பரல்கள் உள்ளனவே! ஆகவே நம்பிக்கையோடு இருங்கள். நல்லது நடக்கும் நன்றி!!!!

  ReplyDelete
 24. ////Blogger kmr.krishnan said...
  துர்மரணம், துராசை,துர்ஸ்வபனம், போன்ற வடசொற்களில் 'தீய' என்ற பொருளில் 'துர்' பயன் படுத்தப்படுகிறது. கெட்ட என்பது அதிகம் பேச்சு வழக்கில் பயன் படுத்துகிறோம். அதுவும் சரிதான் எனினும், தீய எனப‌து மேலும் இலக்கியத் தரமானது.'துர் யோகா'என்பதனை 'தீயயோகம்' என்று கூறுவது மேலும் சிறப்பு.
  எனக்கு கடகராசி கடக லக்கினம் . எனவே 5,10க்கு உரிய செவ்வாய் யோக காரகன். 12ல் மறைந்துவிட்டார். நீச குரு வர்கோத்தமம். சனி வர்கோத்தமம்.
  ராசியில் நீசம் ஆன சுக்கிரன் அம்சத்தில் உச்சம்.இவையெல்லாம் எனக்கு எல் ஐ சியில் வேலையைக் கொடுத்தன. ஆனால் அதில் வளர்ச்சி அடைய முடியவில்லை./////

  உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

  ReplyDelete
 25. மன்னிக்கவும். இன்று தான் பாடத்தை படித்தேன்.
  தாங்கள் கூறியது 100 சதவிகிதம் உண்மை.
  எனக்கு 10ம் வீட்டுக்காரன் புதன் 8ல் அமர்ந்து கேதுவுடன் கூட்டு. 8ம் வீடு 10ம் வீட்டிலிருந்து 11ம் வீடாகிறது. மேலும் 10ம் வீட்டில் சனி அமர்ந்து குருவின் 5 ம் பார்வையில் உள்ளார்.
  இறைவன் அருளால் காலம் ஓடி கொண்டு இருக்கிறது.


  ReplyDelete
 26. ஐயா அவர்களுக்கு வணக்கம்! நீண்ட இடைவெளிக்கு பிறகு, உங்கள் பதிவை படிக்கிறேன்! நன்றி! என்னுடைய பிறப்புக் குறிப்பு அமைப்பும் மேற்கன்டவை போலத்தான்!

  ReplyDelete
 27. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
  மன்னிக்கவும். இன்று தான் பாடத்தை படித்தேன்.
  தாங்கள் கூறியது 100 சதவிகிதம் உண்மை.
  எனக்கு 10ம் வீட்டுக்காரன் புதன் 8ல் அமர்ந்து கேதுவுடன் கூட்டு. 8ம் வீடு 10ம் வீட்டிலிருந்து 11ம் வீடாகிறது. மேலும் 10ம் வீட்டில் சனி அமர்ந்து குருவின் 5 ம் பார்வையில் உள்ளார்.
  இறைவன் அருளால் காலம் ஓடி கொண்டு இருக்கிறது. /////

  உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 28. /////Blogger Suresh cinnappa said...
  ஐயா அவர்களுக்கு வணக்கம்! நீண்ட இடைவெளிக்கு பிறகு, உங்கள் பதிவை படிக்கிறேன்! நன்றி! என்னுடைய பிறப்புக் குறிப்பு அமைப்பும் மேற்கன்டவை போலத்தான்!////

  அதனாலென்ன? நஷ்ட ஈடு வழங்கப் பெற்றிருக்கும் அதையும் பாருங்கள் நண்பரே!!!! நன்றி!!!!

  ReplyDelete
 29. வணக்கம் ஐயா,
  சனிதிசை சனிபுத்தியில் ஏற்பட்ட அவப்பெயர் அடுத்தடுத்த புத்திகளில் மாறுமா?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com