மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.7.17

ஜிஎஸ்டியின் ஆரம்பமே மகிழ்ச்சி!!!!


ஜிஎஸ்டியின் ஆரம்பமே மகிழ்ச்சி!!!!

சொல்பவர்கள் யார்? லாரி டிரைவர்கள் சாமிகளா..!!!

ஜிஎஸ்டியின் நன்மை என்பது உடனடி பலன் அல்ல . அது ரோடு போடுவது போன்றதாகும்.

ஆரம்பத்தில் ஒரு புது ரோடு வரும்.பொழுது மக்களுக்கு உண்டாகும் இடைஞ்சல்களும், அது உருவான பிறகு அதனால் மக்களுக்கு கிடைக்கும் பலனும் நான்கு  வழி சாலை உருவாக்கத்தின் பொழுது
மக்களுக்கு உண்டான சிரமங்களும் அதனால் இப்பொழது கிடைக்கும் பலன்களும் நமக்கு தெரிந்ததே..

அதே மாதிரி தான் ஜிஎஸ்டியும்..ஆரம்பத்தில் வியாபாரிகளால் உருவாக்கப்படும் விலை யேற்றங்களால்  விலை வாசி உயர்வது போன்ற தோற்றம் தெரிந்தாலும் நாளடைவில் பொருட்களின் விலை வாசி குறைந்து விடும்..

சரிப்பா அது வரும் போது வரட்டும் இப்பொழுது ஜிஎஸ்டியால் என்ன நன்மை என்கிறீர்களா.

ஜிஎஸ் டியால் நேற்று முதல் மாநிங்களின் எல்லையில் இருக்கும் சுங்க சாவடிகள் மூடப்பட்டு வருகின்றன.

நேற்று வரைமணிக்கணக்கில்  ஏன் நாள்கணக்கில் கூட  லாரிகள் வெளி மாநில எல்லைகளில் காத்து நின்ற லாரிகள்
இன்று சர்சர்ன்னு  டோல்கேட்டை தாண்டி பறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஜிஎஸ்டி தான்..

இனி மாநிலம் விட்டு மாநிலம் எடுத்து செல்லப்படும் பொருட்களுக்கு டேக்ஸ் ஆகியிருக்கா இல்லையா என்கிற பில் வெரிபிகேசன் தேவையில்லை.

அதோடு மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பொருட் களுக்கு  நுழைவு வரி என்கிற பெயரில்  டொல்கேடடில் காத்திருந்து கணக்கு சொல்லும் காலம் இனி இல்லை.

கணக்கு சரியில்லாத லாரிகளை மிரட்டி லஞ்சம் ஜிஎஸ்டிம் ஆபிசர்கள் வரப்போவதில்லை.

ஜிஎஸ்டியில் அங்கமான இன்டகிரேட்டடு ஜிஎஸ்டி் என்கி்ற ஜஜிஎஸ்டி மூலம் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு விற்பனை யாகும் பொருட்க ளுக்கு கேரளா அரசிற்கு நேரிடையாகவே வரி போய் விடும் என்பதால் கேரள எல்லைகளில் உள்ள டோல்கேட்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன..

இதோ இதைப்பற்றி இன்றைய தினத்தந்தியில் வந்துள்ள செய்தி இதோ....

கோவை மண்டலத்தில் வணிக வரித்துறை கட்டுப் பாட்டில் வாளையாறு, கே.ஜி. சாவடி, பிச்சனூர், மீனாட்சிபுரம், கோபாலபுரம், கூடலூர் ஆகிய 6 சோதனை சாவடிகள் உள்ளன.

அந்த 6 சோதனை சாவடிகளும் நேற்று முதல் மூடப்பட்டன. இதில் லாரி டிரைவர்களுக்கு அதிக நெருக்கடி கொடுத்து வந்தது தமிழக–கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச்சாவடி.

இங்கு கேரள அரசு சார்பில் உள்ள வணிக வரித்து றை சோதனை சாவடியில் தினமும் ஆயிரக்கணக் கான லாரிகள் அணிவகுத்து நிற்பது வழக்கம்.

வாளையாறில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி, போலீஸ் சோதனை சாவடிகள் இருந்தாலும் கேரள அரசின் வணிக வரித்துறை சோதனை சாவடியில் தான் அதிக வாகனங்கள் நிற்பது வழக்கம்.

இதற்கு காரணம் கேரள அரசின் வருமானத்தில் வணிகவரி
முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கேரளாவுக்குள் வரும்
லாரிகளில் உள்ள சரக்குகளுக்கு வணிகவரி செலுத்தப்பட்டுள்ளதா என்று...ஊழியர்கள் தீவிரமாக சோதனை செய்த பின்னரே லாரிகளை உள்ளே அனுமதித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. நேற்று முதல் அமலான தை தொடர்ந்து மாநிலங்களுக்கிடையில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.

அதன்படி வாளையாறு வணிகவரி சோதனை சாவடியும் மூடப்பட்டது. இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவர்கள் லாரி டிரைவர்கள் என்று சொன்னா ல் மிகையாகாது

வாளையாறு சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு சரக்கு ஏற்றி வந்த நாமக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் தியாகராஜன் என்பவர் கூறியதாவது:–

நான் வடமாநிலங்களிலிருந்து அடிக்கடி சரக்குகள் ஏற்றிக் கொண்டு கேரளா செல்வேன்.

எனக்கு ஒடிசா மற்றும் வாளையாறு சோதனை சாவடிகள் தான் சோதனையான சாவடிகள். ஒடிசா சோதனை சாவடியில் 2 நாட்களும், வாளையாறில் 4 நாட்களும் காத்திருக்கவேண்டும்.

வாளையாறு சோதனை சாவடியில் சரக்கு ஏற்றி வரும் லாரிகள் அங்குலம் அங்குலமாக தான் நகர்ந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் எங்களால் லாரியை விட்டு இறங்கவும் முடியாது.

அதிகாலை நேரங்களில் எங்களால் காலை கடனை கூட கழிக்க முடியாத அவஸ்தையை அனுபவித்து வந்தோம்.

ஆனால் தற்போது சோதனை சாவடி மூடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் நாக்பூரிலிருந்து எலக்டிரிக்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு காலை 8 மணிக்கு வாளையாறு வந்தேன்.

இங்கு லாரியை நிறுத்த வேண்டிய அவசியமில்லாததால் பாலக்காடு சென்று சரக்குகளை இறக்கி விட்டு மதியம் 2 மணிக்கே வாளையாறு திரும்பி விட்டேன்.

கேரளாவுக்குள் சென்று சரக்குகளை இறக்கி விட்டு வருவதற்கு ½ நாள் தான் ஆனது. ஆனால் முன்பு 4 நாட்கள் ஆனது என்று அந்த டிரைவர் கூறியுள்ளார்.

இது தாங்க ஜிஎஸ்டியால் உண்டான உண்மையான நிகழ்வு.

மற்றபடி 4 இட்லி சாப்பிட்டதற்கு 18% வரி போட்டுள்ளார்களே  இது தான் ஜிஎஸ்டியின்  பலனா என்று முட்டாள் தனமாக பேசுவது நல்லதல்ல...

4 நாட்கள். கேரள மாநிலத்தின் எல்லையில ஒரு லாரி் காத்திருந்த  காலம் போய் 4 மணி நேரத்தில் நுழைந்து சரக்கை டெலிவரி செய்து விட்டு வருகிறது என்றால் அந்த லாரி டிரைவரின் உழைப்பும் நேரமும் எப்படி வேஸ்டாகாமல் மிச்சமானது என்று வயிற்றில் பசியை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Good morning sir very useful information sir thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. மோதிஜியின் திட்டங்கள் எல்லாமே உடனடியாகப் பயனளிக்காமல் நாள்படப் பயனளிக்கக் கூடியவை என்கிறார்கள். ஆனால் கல்வியறிவு குறைந்த,வறுமை நிறைந்த நம் நாட்டிற்கு உடனடிப் பயன் அளிக்கும் திட்டங்களும் தேவைதான்.

    ReplyDelete
  3. இந்த உண்மையை நீங்கள் கூறினால், உங்களை "பக்தாள்" லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,இதில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்கிறார்கள்.நல்லதே நடக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்.நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information sir thanks sir vazhga valamudan sir////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    மோதிஜியின் திட்டங்கள் எல்லாமே உடனடியாகப் பயனளிக்காமல் நாள்படப் பயனளிக்கக் கூடியவை என்கிறார்கள். ஆனால் கல்வியறிவு குறைந்த,வறுமை நிறைந்த நம் நாட்டிற்கு உடனடிப் பயன் அளிக்கும் திட்டங்களும் தேவைதான்.////

    ஆமாம். மக்கள் எதிர்பார்ப்பதும் அதுதான்!!! நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger SELVARAJ said...
    இந்த உண்மையை நீங்கள் கூறினால், உங்களை "பக்தாள்" லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்./////

    சேர்த்தால் சேர்த்துவிட்டுப் போகிறார்கள். உண்மையை யார் வேண்டுமென்றாலும் கூறலாம் என்பார் கவியரசர். நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  8. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,இதில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்கிறார்கள்.நல்லதே நடக்கும் என நம்பிக்கையுடன் இருப்போம்.நன்றி./////

    ஆமாம். நல்லது. நடக்கும் இறைவன் இருக்கிறார்! நம்பிக்கையோடு இருப்போம் ஆதித்தன்! நன்றி!!!!

    ReplyDelete
  9. ////Blogger t.nagoji rao said...
    Miga Sariya Sonneergal Ayya.....////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  10. Dear Sir,
    மாதம் ஒரு முறை kerala செல்வது வழக்கம்.(பண்னய பார்க). இந்த வாரம் செல்லும் பொது , அந்த கண் கொள்ளாகாட்சிய பார்க்கலாம். :)

    இந்த மகிழ்ச்சி Driver ku மட்டுமே அல்ல. அந்த வழியாக பொகும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும்.

    நன்றி ஐயா இந்த நல்ல தகவலை விரைவில் கொடுத்தமைக்கு.

    Saravanan.V
    hope college coimbatore.

    ReplyDelete
  11. ////Blogger saravanan v said...
    Dear Sir,
    மாதம் ஒரு முறை kerala செல்வது வழக்கம்.(பண்னய பார்க). இந்த வாரம் செல்லும் பொது , அந்த கண் கொள்ளாகாட்சிய பார்க்கலாம். :)
    இந்த மகிழ்ச்சி Driver ku மட்டுமே அல்ல. அந்த வழியாக பொகும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும்.
    நன்றி ஐயா இந்த நல்ல தகவலை விரைவில் கொடுத்தமைக்கு.
    Saravanan.V
    hope college coimbatore./////

    நல்லது. நன்றி சரவணன்!!!!

    ReplyDelete
  12. WITH LOT OF CRITICISM FROM TAMIL NADU ON GST YOUR POSTING HAS COME AS A BREATHER. YOU HAVE ECHOED THE FEELINGS OF THE MAJORITY OF OUR PEOPLE WHO FEEL HELPLESS UNDER THE ONSLAUGHT OF THE PERVERTED MEDIA, WHO HAVE BEEN PORTRAYING ONLY THE NEGATIVE SIDE.

    YOU ARE DIFFERENT.

    KIND REGARDS
    R VASSUDEVAN
    9840731028

    ReplyDelete
  13. /////Blogger R VASSUDEVAN said...
    WITH LOT OF CRITICISM FROM TAMIL NADU ON GST YOUR POSTING HAS COME AS A BREATHER. YOU HAVE ECHOED THE FEELINGS OF THE MAJORITY OF OUR PEOPLE WHO FEEL HELPLESS UNDER THE ONSLAUGHT OF THE PERVERTED MEDIA, WHO HAVE BEEN PORTRAYING ONLY THE NEGATIVE SIDE.
    YOU ARE DIFFERENT.
    KIND REGARDS
    R VASSUDEVAN
    9840731028/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com