மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.18

Astrology: ஜோதிடம்: 30-3-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 30-3-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் திருமதி மாயாவதி. பிறந்த தேதி 15 ஜனவரி 1956 பிறந்த நேரம் மாலை 7 மணி 50 நிமிடங்கள்.
பிறந்த ஊர் புது டெல்லி. (Daulatpur)

வகித்த பதவி உத்திரபிரதேச முதல்வர். பாராளுமன்ற உறுப்பினர்.கண்ஷிராம துவங்கிய பஹுஜன் சமாஜ் கட்சியின் தற்போதைய தலைவர்

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொள்ளவில்லை. சுமார் 13 பேர்கள் சரியான விடையை எழுதி
உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (6-4-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Mayawati
Friday, March 30, 2018 4:46:00 AM 
---------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகி திருமதி மாயாவதி நைனா குமாரி பிரபுதாஸ். பிறந்த தேதி 15 ஜனவரி 1956 பிறந்த நேரம் மாலை 7 மணி 51 நிமிடங்கள்.

பிறந்த ஊர் புது டெல்லி.
வகித்த பதவி உத்திரபிரதேச முதல்வர். பாராளுமன்ற உறுப்பினர்.கண்ஷிராம துவங்கிய பஹுஜன் சமாஜ் கட்சியின் தற்போதைய

தலைவர். யானைச்சின்னம்!
கடக லக்கினமும், லக்கினத்திற்கு ராஜ கிரகத்தின் நேர் பார்வை கிடைத்ததால் அர்சியலில் வெற்றி.லக்கினாதிபதி ஏழில், ஐந்தில்

சனி செவ்வாய் ராகு ஆகியவை திருமணம், குழந்தை ஆகியவற்றில் குறை வைத்தது.
K.MUTHURAMAKRISHNAN
Friday, March 30, 2018 6:48:00 AM
----------------------------------------------
3
Blogger Suresh said...
Name: Mayawati
Date of Birth: Sunday, January 15, 1956
Time of Birth: 19:50:00
Place of Birth: Daulatpur
Longitude: 77 E 26
Latitude: 28 N 39
Time Zone: 5.5
Friday, March 30, 2018 7:18:00 AM 
--------------------------------------------------
4
Blogger ARAVINDHARAJ said...
Name:Mayawati
Date of Birth:15-Jan-1956
Time of Birth:6:30:pm
Place of Birth:New Delhi,India
Profession:Politician.
Friday, March 30, 2018 8:04:00 AM 
-------------------------------------------
5
Blogger anand tamil said...
மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார்.

நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார். 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த

100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.
1984இல் கான்ஷி ராமால் தலித் மக்களுக்காக தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக

இருந்தார்.
Friday, March 30, 2018 10:30:00 AM
-----------------------------------------------
6
Blogger bg said...
BSP National president Mayawati born on Jan 15 1956.
Friday, March 30, 2018 10:43:00 AM 
---------------------------------------------
7
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் உத்திர பிரதேச முதலமைச்சர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி ஆவார்.

இவர் பிறந்தது 15/01/1956 இரவு சுமார் 7:50 மணியளவில். இவர் நான்கு முறை உத்தர பிரதேச முதலமைச்சராக பொறுப்பு

வகித்துள்ளார்.
Friday, March 30, 2018 11:35:00 AM
-------------------------------------------------
8
Blogger Elegant wears said...
Selvi Mayavathi
Date of birth - 15th jan 1956
Birth place : new delhi
Time : 7:51 pm
Friday, March 30, 2018 11:56:00 AM 
---------------------------------------------
9
Blogger angr said...
உ.பி. முன்னாள் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள்
Friday, March 30, 2018 12:04:00 PM
----------------------------------------------
10
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகி: மாயாவதி,
பிறந்த நாள்: 15/01/1956 @ 07.50 மணி மாலை
பிறந்த ஊர்: தில்லி / தௌலட்புர்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, March 30, 2018 2:23:00 PM
--------------------------------------------
11
Blogger G.Ramesh said...
Name of the personality: Ms. Mayawathi, Former CM of UP
DOB: January 15, 1956
TOB: 19.25
POB: Daulatpur (UP)
1. Retrograde Jupiter in 2nd house (Kudumba sthana), 3 malefic planets Rahu, mars & saturn in 5th house (putra sthana), venus in maraivu shtana 8th house etc makes her unmarried all through her life I believe.
2 Raja grahas Sun & Moon in 7th kendra house ( sun is in vargotama also) aspecting lagna and powerful Mars in its own house makes her a weighty and fearless personality in politics to reckon with I infer. 
Thanks
Ramesh Ganapathy
Nigeria
Friday, March 30, 2018 2:43:00 PM 
-------------------------------------------
12
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 30-3-2018) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு உரியவர் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயவதி அவர்கள். பிறந்த

தேதி ஜனவரி 15, 1956. 07.28 இரவு. பிறந்த ஊர் தௌலத்புர்.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, March 30, 2018 5:30:00 PM
----------------------------------------------
13
Blogger RAMVIDVISHAL said...
Answer MAYAVTHI
Friday, March 30, 2018 9:44:00 PM 
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.3.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 30-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  30-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  பெண்மணி. வட இந்தியர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.3.18

சமையலுக்கு சுவை ஊட்டும் பொருட்கள்!


சமையலுக்கு சுவை ஊட்டும் பொருட்கள்!

கறிச்சுவையூட்டிகள் (List of Provisions)

சமைக்கும் கறிகளின் சுவை, கறிச்சுவையூட்டிகளைப் பொருத்தே அமைகின்றன. அதாவது கறியில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவையூட்டும் பொருற்களே, ஒரு கறியின் சுவையை நிர்ணயிப்பவை என்றும் கூறலாம் . இக் கறிச்சுவையூட்டிகளை "பலச்சரக்குப் பொருற்கள்" என்றும் "வாசனைப்பொருற்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

இக் கறிச்சுவையூட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும், அதற்கான தமிழ் பெயர்களும் இங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. இதனூடாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்கள் என்ன என அறிந்துக்கொள்ளவும், தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்கள் (பெயர்கள்) என்ன என அறிந்துக்கொள்ளவும் முடியும். அப்பெயர்களுக்கு உரிய கறிச்சுவையூட்டிகளின் தோற்றம் எப்படி இருக்கும் என அறிந்துக்கொள்ள விரும்புவோர், குறிப்பிட்ட சுவையூட்டியின் ஆங்கிலப் பெயருடன் கூகுள் ஆண்டவரைக் கேட்டால் படத்துடன் விளக்கம் தருவார்!.


List of Provisions...

இல: ஆங்கிலம் தமிழ்
1 Acorus calamus வசம்பு
2 Almondsuhashuhasi பாதாம்பருப்பு
3 Anise seed சோம்பு/பெருஞ்சீரகம்
4 Asafetida பெருங்காயம்
5 Basil leaves துளசி இலை
6 Bay leaves புன்னை இலை
7 Bishop’s weed ஓமம்
8 Black cumin கருஞ்சீரகம்
9 Black pepper கருமிளகு
10 Butter வெண்ணைய்
11 Butter milk மோர்
12 Capsicum குடைமிளகாய்
13 Cardamom ஏலம்
14 Cashew nut முந்திரிப்பருப்பு
15 Cheese பாலாடைக்கட்டி
16 Chili powder மிளகாய் தூள்
17 Chilies மிளகாய் (கொச்சிக்காய்)
18 Cinnamon Sticks கறுவாப்பட்டை
19 Cloves கிராம்பு
20 Coconut milk தேங்காய் பால்
21 Coriander leaves கொத்தமல்லி இலை
22 Coriander powder கொத்தமல்லி தூள்
23 Crumb powder றஸ்குத் தூள்
24 Cubes வால்மிளகு
25 Cumin சீரகம்
26 Curds தயிர்
27 Curry leaves கறிவேப்பிலை
28 Curry powder (Masala) கறித்தூள் (பலச்சரக்குத்தூள்)
29 Daun Pandan leaves இரம்பை இலை
30 Dried chilies காய்ந்த/செத்தல் மிளகாய்
31 Dried ginger சுக்கு
32 Dried hottest chilies உறைப்புச்செத்தல் மிளகாய்
33 Dried shrimp உலர் சிற்றிறால்
34 Fennel பெருஞ்சீரகம்
35 Fenugreek வெந்தயம்
36 Gallnut கடுக்காய்
37 Garlic வெள்ளைப்பூண்டு, உள்ளிப்பூண்டு
38 Ghee நெய்
39 Gingelly oil நல்லெண்ணை
40 Ginger இஞ்சி
41 Gingili (seasame seeds) எள்ளு
42 Green cardamom பச்சை ஏலம்
43 Green chilli பச்சை மிளகாய்
44 Ground nut oil கடலையெண்ணை
45 Honey தேன்
46 Jaggery சக்கரை
47 Lemon எழுமிச்சை
48 Lemongrass வெட்டிவேர்/எழுமிச்சைப்புல்
49 Lemongrass powder வேட்டிவேர் தூள்
50 Licorice அதிமதுரம்
51 Long pepper திப்பிலி/ கண்டந்திப்பிலி
52 Mace சாதிபத்திரி
53 Milk பால்
54 Mint leaves புதினா
55 Musk கஸ்தூரி
56 Mustard கடுகு
57 Nigella-seeds கருஞ்சீரகம்
58 Nutmeg சாதிக்காய்
59 Oil எண்ணை
60 Onion வெங்காயம்
61 Palm jiggery பனங்கருப்பட்டி
62 Pepper மிளகு
63 Phaenilum மணிப்பூண்டு
64 Pithecellobium dulce (Madras thorn) கொடுக்காபுளி
65 Poppy கசகசா
66 Raisin உலர்திராட்சை
67 Red chilli சிகப்பு மிளகாய்
68 Rolong கோதுமை நெய்
69 Rose water பன்னீர்
70 Saffron குங்கமம்
71 Sago சவ்வரிசி
72 Salad onion செவ்வெங்காயம்
73 Salt உப்பு
74 Sarsaparilla நன்னாரி
75 Small chilli சின்ன மிளகாய்
76 Small onion சின்ன வெங்காயம்
77 Star anise நட்சித்திரச் சோம்பு
78 Sugar சீனி
79 Tail pepper வால்மிளகு
80 Tamarind புளி
81 Tomato தக்காளி
82 Turmeric மஞ்சல்
83 Turmeric powder மஞ்சல் தூள்
84 Vermicelli சேமியா
85 Vinegar காடி (வினிகர்)
86 White onion வெள்ளை வெங்காயம்


குறிப்பு:

1.
Cumin seeds - சீரகம்
Black pepper seeds - கருமிளகு

Cumin seeds, Black pepper seeds போன்ற பெயர்களின் "seeds" எனும் சொல்லும் ஆங்கிலத்தில் பின்னொட்டாக இணைந்து பயன்படுகின்றன. ஆனால் அவற்றை முறையே "சீரக விதைகள், கருமிளகு விதைகள்" எனத் தமிழில் கூறும் வழக்கம் இல்லை. சுருக்கமாக "சீரகம், கருமிளகு" என்று கூறும் வழக்கே உள்ளது. எனவே நானும் அவ்வாறே எழுதியுள்ளேன்.

2.
Cinnamon sticks - கறுவாப்பட்டை/ இலவங்கப்பட்டை

"Cinnamon Sticks" எனும் சொல்லில் "Sticks" எனும் சொல் தடிகள் அல்லது குச்சிகள் என்றே பொருள்படும். ஆனால் தமிழில் "பட்டை" எனும் சொல்லே பின்னொட்டாக புழக்கத்தில் உள்ளது.

3.
Coriander leaves கொத்தமல்லி இலை
Curry leaves கறிவேப்பிலை

Leaf  இலை
Leaves  இலைகள்

மேலுள்ள சொற்களில் “Leaves” எனும் சொல் "இலைகள்" என பன்மையாகவே பயன்படுகிறது. இருப்பினும் அவற்றை "கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை" என ஒருமையில் கூறும் வழக்கே நம் தமிழில் உள்ளது.

4.
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய கேரள மாநிலமான "கொச்சின்" துறைமுகத்தில் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது, அந்த காயின் பெயர், தமிழரின் பேச்சி வழக்கில் "கொச்சின் + காய் = கொச்சிக்காய்" என அழைக்கும் வழக்கானது எனும் ஒரு கூற்று உள்ளது. இப்போதும் இலங்கையில் சில இடங்களில் மிளகாய் என்பதை "கொச்சிக்காய்" என்று அழைப்போர் உள்ளனர். சிங்களவரிடம் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. 

ஆக்கம்: அன்புடன் அருண் HK Arun
அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.3.18

நீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்!!!


நீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்!!!

எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்?

காலை உணவு :

🍚 காலை உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 10 மணிக்கு மேல் காலை உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

🍚 காலை உணவு என்பது, அந்த நாளைத் தொடங்குவதற்கான சக்தியைத் தரக்கூடியது. காலை உணவு, மூளைக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. உடலின் இயக்கத்துக்கு உதவுகிறது.

🍚 அவசரமாகக் கிளம்பும் சூழலில், காலை உணவைப் பலரும் தவிர்ப்பார்கள். இப்படித் தவிர்ப்பதால், அவர்களுக்கு தலைவலி, செரிமான கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

🍚 காலை உணவைத் தவிர்ப்பவர்கள், மதிய உணவை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

🍚 காலை உணவில் இருக்க வேண்டிய உணவு வகைகள் தோசை, சப்பாத்தி, பொங்கல், காய்கறி உப்புமா, பூரி.

மிட் மார்னிங் :

🍚 காலை மற்றும் மதிய உணவு வேளைக்கு நடுவில் உள்ள மிட்மார்னிங் நேரமான 10:45 முதல் 11:30 மணி நேரமாகும். இந்த நேரத்தில் பழச்சாறுகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

🍚 டீ, காபி போன்றவற்றை மதிய உணவு வேளைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகப் பருகலாம்.

மதிய உணவு :

🍚 மதிய உணவை 12 மணி முதல் 1.30 மணிக்குள் சாப்பிட வேண்டும். அப்போது தான் எளிதாக செரிமானம் ஆகும். 3 மணிக்கு மேல் மதிய உணவை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

🍚 மதிய உணவுக்கும், காலை உணவுக்கும் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு சரியாகப் பராமரிக்கப்படும். இதனால் அதிகப் பசி மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

🍚 சரியான நேரத்துக்குச் சாப்பிட்டால் வாயுக்கோளாறு, நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

🍚 மதிய உணவில் இருக்க வேண்டிய உணவுகள் கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள், அசைவம், அரிசி சாதம், சாம்பார், கூட்டு.

மாலை ஸ்நாக்ஸ் :

🍚 மாலையில் 4 முதல் 5 மணிக்குள் ஈவினிங் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். ஸ்முத்தீஸ், ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழச்சாறுகள், காய்கறி சாலட், தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

இரவு உணவு :

🍚 இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

🍚 இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சாப்பிட வேண்டும். இல்லையெனில், தொப்பை, உடல்பருமன், செரிமானப் பிரச்சனை ஆகியவை ஏற்படும்.

🍚 சாப்பிட்டவுடன் தூங்கினால், உணவின் கலோரிகள் ஆற்றலாக மாறாமல், உடலில் சேர்ந்து உடல்பருமனுக்கு வழிவகுக்கும்.

🍚 இரவு உணவில் இருக்க வேண்டியவை இட்லி, இடியாப்பம், புட்டு, சப்பாத்தி, தோசை வகைகள்.

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.3.18

Short Story: சிறுகதை: மனக்கசப்பு!!!


Short Story: சிறுகதை: மனக்கசப்பு!!!

சென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் வெளிவந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது. நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------

திருமணமாகி மகிழ்ச்சியுடன் புகுந்த வீட்டிற்கு வந்த மருமகள், அடுத்து வந்த பதினைந்தாம் நாளிலேயே மனக்கசப்புடன் தன் தாய் வீட்டிற்குத் திரும்பிப் போய் விட்டாள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பார்ப்பவர்களைப் பரவசப்பட வைக்கும் அழகான பெண் அவள். பெயர் மகாலெட்சுமி. பெயருக்கு ஏற்றார்ப்போன்ற தோற்றமுடையவள். பெண் பார்க்கும் சமயத்தில் தோதைப் பற்றி கவலைப் பட்ட அவளுடைய பெற்றோர்களிடம், “ தோதைப் பற்றி நீங்கள் ஒன்றும் நினைக்க வேண்டாம். எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. உங்களால் முடிந்ததை உங்கள் பெண்ணிற்கு நீங்கள் செய்யுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று பையனின் தாயார் ரெங்கநாயகி ஆச்சி ஆறுதலாகச் சொல்லி விட்டார்கள்.

பெண்ணிற்கு வைரத் தோடு, வைரப் பூச்சரம், முப்பது பவுன் தங்க நகைகள் மட்டும்தான் அவளுடைய தாய் வீட்டில் போட்டார்கள்
சொன்னதைப் போலவே, மாப்பிள்ளையின் தாயார் ரெங்கநாயகி ஆச்சி திருமணத்தன்று, வைரத்தாலி, வைரத்தில் லாங் செயின், வைர வளையல்கள், தங்கத்தில் ஒட்டியாணம் என்று மருமகளை நகைகளால் அலங்கரித்து அசத்தி விட்டார்.   

காரைக்குடியில் ஐந்து விளக்குகள் அருகே தர்ம நாராயணன் செட்டியார் தெருவில்தான் ரெங்கநாயகி ஆச்சிக்கு வீடு. பெண் வீட்டாரும் காரைக்குடிதான். முத்துப் பட்டணத்தில் வீடு.

      “இரண்டு வீட்டாரும் சேர்ந்து திருமணத்தை ஒன்றாக நடத்தி வைப்போம். அலைச்சல் இருக்காது” என்று சொல்லி ரெங்க நாயகி ஆச்சி பெரிய திருமண மண்டபத்தைப் பிடித்து, திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார். எல்லா செலவுகளையும் தானே ஏற்றுக் கொண்டு, பெண் வீட்டாரிடம் நீங்கள் ஒன்றும் தர வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். ஆச்சியின் செல்வச் செழிப்புதான் அதற்குத் துணை செய்தது. எதிர்பார்த்தபடி அழகான மருமகள் கிடைத்த மகிழ்ச்சியில் ஆச்சியும் மனமுவந்து அதைச் செய்தார்கள்.

திருமணம் முடிந்த அடுத்த நாள் குலதெய்வக் கோவில், குன்றக்குடி என்று புதுமணத் தம்பதிகளை அழைத்து சென்றவர் நான்காம் நாள் அன்று தாங்கள் வசிக்கும் ஊரான திருச்சிக்கு கணவர், மணமக்கள், சகிதமாகப் புறப்பட்டு வந்து விட்டார்.

திருச்சிக்கு வந்த இரண்டாம் நாளிலேயே புது மருமகள் மகாலெட்சுமிக்கு இரண்டு விஷயங்கள் பிடிபட்டது. தன் கணவன் திருமணத்திற்கு முன்பு பார்த்து வந்த பெங்களூர் வேலையை உதறிவிட்டு  வந்து விட்டான். இனிமேல் அவன் திருச்சியிலேயே அவன் தந்தையாரின் தொழிலுக்கு உதவியாக இருக்கப் போகிறான் என்பது தெரிய வந்தது. அத்துடன் தான் பார்த்து வந்த ஐ.டி கம்பெனி வேலையை பெங்களூக்கு மாற்றிக் கொண்டு வேலையில் தொடர்வது சாத்தியமில்லை என்பதும் தெரிய வந்தது.

அவளுடைய கனவுகள் எல்லாம் தகர்ந்து விட்டது. நிலை குலைந்து போய்விட்டாள். அவள் பொறியியல் படிக்கும் காலத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்வானவள். படித்து முடித்தவுடனேயே நல்ல நிறுவனம் ஒன்றில் கை நிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்தது. முனைப்புடன் வேலையைக் கற்றுக் கொண்டவளுக்கு அந்த நிறுவனத்தின் மேலதிகாரிகளிடமும் நல்ல பெயர் இருந்தது. திருமணத்திற்குப் பிறகும் வேலையில் தொடர வேண்டும் என்ற கனவும் ஆர்வமும் அவளுக்கு இருந்தது.

பெண் பார்க்கும் சமயத்தில், தனித்துப் பேசும்போது அதை பாலாஜியிடமும் சொல்லியிருந்தாள். அவனும் சரி என்று சொல்லியிருந்தான். திருமணத்திற்குப் பிறகு இப்போது அதைப் பற்றிக் கேட்டால், பொறுமையாக இரு திருச்சியிலேயே உனக்கு ஒரு வேலை பார்த்துத் தருகிறேன் என்கிறான். அவளுக்கு நம்பிக்கை இல்லை. திருச்சியில் எங்கே பெரிய ஐ.டி கம்பெனிகள் உள்ளன? எல்லாம் ஏமாற்று வேலை என்று தெரிந்து கொண்டாள்.

தில்லை நகரில் உள்ள வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டாம் என்று நினைத்தால், திருவரங்கத்தில் எங்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளன. அங்கே போய்விடலாம் என்றும் சமாதானம் சொல்கிறான். கூட்டுக் குடும்பம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. எனக்கு என் வேலை முக்கியம், அதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டால், பொறுத்திரு. உன்னுடைய லீவை நீட்டித்து வை...பார்ப்போம் என்கிறான்.

அவளுக்கு நம்பிக்கை போய் விட்டது.

திருமணம் முடிந்த பதினைந்தாம் நாள் அவளைப் பார்க்க வந்த தன்னுடைய தந்தையுடன், இரண்டு நாளில் வருகிறேன் என்று மட்டும் இவர்கள் வீட்டில் சொல்லி விட்டு அவள் புறப்பட்டுப் போய் விட்டாள்.

போனவள் வரவில்லை. பிரச்சினையாகி விட்டது.

பிரச்சினையை முழுமையாகத் தெரிந்து கொள்ள, திருமணத்திற்கு  முன்பு  நடந்ததையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாருங்கள், அதைப் பார்ப்போம்!
   
  ******************************************************************************

ரியல் எஸ்டேட் ரெங்கநாதன் செட்டியார்.  திருச்சி நகரில்,  மிகவும் பிரபலமானவர். இடம் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புக்களைக் கட்டி விற்பனை செய்யும் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.

சுமார் நூறு பணியாளர்கள் அவரிடம் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். தன்மையாகத்தான் பேசுவார். எல்லோரிடமும் தன்மையாகத்தான் பழகுவார்.

ஒரு நாள், அவருடைய மனைவி ரெங்கநாயகி ஆச்சி வழக்கத்திற்கு மாறாக அவரிடம் அதிர்ந்து பேசவும் அவர் அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்.

      “என்ன சொல்கிறாய் ரெங்கநாயகி?” என்று அவர் மீண்டும் கேட்கவும், ஆச்சி அவர்கள் தன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு மெதுவாகச் சொன்னார்கள்.

      “எதற்காக நம் மகன் பாலாஜியை, பெங்களூர் வேலையை விட்டு விட்டு இங்கே வரச் சொல்கிறீர்கள்?”

      “நானாக வரச் சொல்லவில்லை! அவன் வேலை பிடிக்கவில்லை. அதிகமான பணிச் சுமை. காலை ஒன்பது  மணிக்குப் போனால் இரவு ஏழு மணிவரை வேலை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. சனிக்கிழமைகளில் கூட வந்து வேலை பார்க்கச் சொல்கிறார்கள்.தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்களுக்கு ஒரு நாள்தான் விடுமுறை கொடுக்கிறார்கள் என்று சொன்னான்”

     “ஆமாம். அவன் வேலை பார்ப்பது அமெரிக்கக் கம்பெனி. லெட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களே! வேலை பார்ப்பதில் என்ன தவறு? அவன் கூடப் படித்த பையன்கள் எல்லாம் முப்பதாயிரம், நாற்பதாயிரம் சம்பளத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு அறுபதாயிரத்தில் சேர்ந்தவனுக்கு இப்போது லெட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களே! அதற்காக சந்தோஷப் பட வேண்டாமா?”

      “அத்துடன் பெங்களூரையும் பிடிக்கவில்லை என்கிறான். நல்ல ருசியான சாப்பாடு கிடைக்கவில்லை என்கிறான்.மேலும் அங்கே நிலவும் அதீதமான போக்குவரத்து நெரிசலில் வண்டி ஓட்ட முடியவில்லை என்கிறான். அங்கே,    எங்கே பார்த்தாலும் பல இடங்களில் டிராஃபிக் ஜாமாகி விடுகிறதாம். அவன் குடியிருக்கும் மல்லேஷ்பாளையாவிலிருந்து மடிவாலா வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகிறதாம். நாம் ஊருக்கு காரை எடுத்துக் கொண்டு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். ஓம்னி பஸ்ஸில்தான் வந்து திரும்ப வேண்டும். பெங்களூரில் பன்னிரெண்டு லெட்சம் கார்கள் உள்ளனவாம். ஓலா டாக்ஸி மட்டும் ஒரு லெட்சம் வண்டிகள் ஓடுகின்றனவாம். வீட்டை விட்டு வெளியே வந்தாலே சள்ளையாக இருக்கிறது என்கிறான். அதனால்தான் வேலையை விட்டு வந்து விடு என்றேன்”

      “இங்கே வந்து என்ன செய்யப் போகிறானாம்?”

       “என்னுடன் சேர்ந்து என்னுடைய தொழிலைப் பார்க்கட்டுமே! எனக்கும் நம்பிக்கையான உதவியாளர் ஒருவர் வேண்டியதிருக்கிறது. அதே சம்பளத்தை இங்கே மாதா மாதம் நான் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். வீட்டோடு தங்கிக் கொள்ளலாம் இல்லையா? யோசித்துப் பார்!”

      "அதில் யோசிப்பதெற்கெல்லாம் ஒன்றும் இல்லை. அவனுக்கு ஒரு வருடமாகப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒன்றும் அமைய மாட்டேன் என்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் பலவிதமாகக் கேள்வி கேட்கிறார்கள். வேலையில் இருக்கிறான். வெளியூரில் இருக்கிறான், என்றால் பெண் கிடைக்கும். சொந்தத் தொழில் - அப்பச்சியோடு சேர்ந்து செய்கிறான் என்றால் பெண் கிடைப்பது கஷ்டம். ஆகவே திருமணம் முடியும்வரை அவன் வேலையில்தான் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் இருவரும் சேர்ந்து உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். அதுவரை என் பேச்சைக் கேளுங்கள். உங்கள் அண்ணன் மகன் இவனைவிட இரண்டு வயது மூத்தவன். அவனுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. ஏனென்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் கதை கதையாகச் சொல்வார்கள்”

       தன் மனைவியின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்தவர், அதற்குப் பிறகு பேசவில்லை. அவர்களின் உரையாடல் முடிவிற்கு வந்தது. இதுதான் திருமணத்திற்கு முன்பு நடந்தது.

       சென்னையில் பெண்பார்த்து திருமணத்தைக் கெட்டி செய்து கொள்ளும் சமயத்தில், பெண் வீட்டாரிடம், திருமணத்திற்குப் பிறகு பையன் வேலைக்குச் செல்ல மாட்டான். திருச்சியில் எங்களோடுதான் இருக்கப்போகிறான் என்பதை இவர்கள் சொல்லவில்லை. அதே போல் தன்னிடம் தனித்துப் பேசும்போது, திருமணத்திற்குப் பிறகும் நான் வேலைக்குச் செல்வேன்.என்று பெண் தன்னிடம் சொன்னதை பாலாஜி, தன் பெற்றோர்களிடம் சொல்லாமல் விட்டு விட்டான். அதை அவன் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுதான் காரணம். இப்போது அதுவே கோளாறாகப் போய் விட்டது.

       பெண் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். “நான் வேண்டுமென்றால் என் கணவர் இங்கே வரட்டும். நான் திருச்சிக்குப் போய் அவர்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதை விரும்பவில்லை. எனக்கு என் வேலை முக்கியம். நாளை முதல் நான் மீண்டும் வேலைக்குப் போகப் போகிறேன்” என்று உறுதியாகச் சொன்னவள், அதைச் செயல் படுத்தவும் துவங்கி விட்டாள்!

            *********************************************************************

ரெங்கநாயகி  ஆச்சியின் மூத்த சகோதரர் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் மன இயல் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, இப்போது பணி ஓய்வில் இருக்கிறார்.  திருமணமாகும் தம்பதியர்களுக்குள் பிரச்சினை என்றால் சிறப்பாகப் பேசி, பிரச்சினைகளை சரி செய்து, தம்பதிகளுக்குள் ஏற்படவிருக்கும் மனமுறிவை சரி செய்து, விவாகரத்தில் முடியாமல், இருவரையும் சேர்த்து வைக்ககூடிய வல்லமை பெற்றவர் அவர். திருமண ஆலோசகர் (Marriage Counsellor)

தன் சகோதரி வீட்டில் பிரச்சினை என்பதைக் கேள்விப் பட்டவுடன், புறப்பட்டு வந்து விட்டார். இவர்களிடமும் பேசினார். சென்னைக்குச் சென்று பெண்ணிடமும், பெண் வீட்டாரிடமும் பேசினார்.

என்ன செய்தால், பிரச்சினை சரியாகும் என்பதைத் தெளிவாகச் சொன்னார்:

     “அந்தப் பெண் மகாலெட்சுமி மிகுந்த மனக் கசப்போடு இருக்கிறாள். அவளுடைய மனக் கசப்பு நியாயமானது. அவள் படித்த படிப்பிற்கும், ஆர்வத்திற்கும் அவள் வேலைக்குச் செல்வது தவறில்லை. தவறெல்லாம் உங்கள் பக்கம்தான். திருமணத்திற்குப் பிறகு எங்கள் மகன் எங்களோடுதான் இருக்கப் போகிறான். பெங்களூருக்குச் செல்ல மாட்டான் என்பதை நீங்கள் மறைத்து விட்டீர்கள். அது முதல் தவறு. அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகும் நான் வேலைக்குச் செல்வேன் என்று சொன்னதை உங்கள் மகன் உங்களிடம் சொல்லாமல் மறைத்து விட்டான். அது இரண்டாவது தவறு. மனக் கசப்பிற்கு மருந்து கிடையாது. அந்த இரண்டு தவறுகளையும் சரி செய்வதுதான் முறையாகும். அதுதான் தீர்வும் கூட. தாமதிக்காமல் உடனே அதைச் செய்யுங்கள்”

       “என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள் அண்ணே” என்று ரெங்க நாயகி ஆச்சி இடை மறித்து சொல்லவும், அவர் தொடர்ந்து சொன்னார்:

       “என்னிடம் படித்த மாணவர்தான் பாலாஜி வேலை பார்த்த கம்பெனியின் முதன்மை அதிகாரி- அதாவது சி.யி.ஓ. நான் அவரைப் பார்த்து பாலாஜி மீண்டும் வேலையில் சேர ஏற்பாடு செய்கிறேன். அத்துடன் அவர்களுடைய சென்னைக் கிளைக்கும் மாற்றல் வாங்கித் தருகிறேன். மகாலெட்சுமி வேலை பார்க்கும் நிறுவனம் திருவான்மியூரில் இருக்கிறது. பாலாஜி யின் கம்பெனிக் கிளையும் திருவான்மியூரில் ஓ.எம் மார் ரோட்டில்தான் உள்ளது. திருவான்மியூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருவரும் தங்கி வேலைக்குச் செல்வதற்கு வசதியாக வீடு ஒன்றைப் பிடித்துக் கொடுங்கள். மற்றதெல்லாம் தானாக நடக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தட்டும். உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”

       தன் மூத்த சகோதரரின் ஆலோசனையைக் கேட்டு, அதன்படியே அனைத்தையும் ரெங்கநாயகி ஆச்சி செய்தார்.

       ஒரு ஆண்டு காலம் சென்றதே தெரியவில்லை.

       திருவான்மியூரில் உறையும் மருந்தீஸ்வரர் அருளால், அடுத்த ஆண்டே மகாலெட்சுமி ஒரு பெண் மகவை ஈன்றாள்.

       பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு மருத்துவமனைக்குச் சென்ற தன் மாமியாரிடம் மகாலெட்சுமி மகிழ்ச்சியோடு சொன்னாள்

       “அத்தை, இவளுக்கு ரெங்கநாயகி’ என்று பெயர் வைக்கலாம் என்று உள்ளேன்”

        அதைக் கேட்ட ரெங்கநாயகி ஆச்சியின் கண்கள் பனித்தன!!!!
------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.3.18

உங்கள் ஜாதகப் பலன்!!!


உங்கள் ஜாதகப் பலன்!!!

தங்கள் ஜாதகப் பலனை அறிந்து கொள்வதில் யாருக்குமே அதீத விருப்பம் இருக்கும்.

ஒரு முறை என் நண்பர் ஒருவர், தன் நெருங்கிய உறவினரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டுவந்தார். வந்தவர், பிரச்சினை என்ன என்பதைச் சொல்லாமல், “இந்த ஜாதகருக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ஜாதகத்தை வைத்து அது என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.

பொதுவாக மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தை வைத்து பிரச்சினையைக் கண்டு பிடித்து விடலாம்.

ஜாதகத்தைப் பார்த்தேன்.

ஐந்தாம் இடத்தில் மாந்தி. உடன் ஆறாம் வீட்டுக்காரனும் அங்கே உள்ளான்.

ஐந்தாம் வீட்டில் மாந்தி இருந்தால் மனப்போராட்டம். உடன் ஆறாம் வீட்டுக்காரனும் சேர்ந்திருந்தால், அது மன நோயாக மாறிவிடும்.

உடனே நான் சொன்னேன்: “ஜாதகன் மனநோயாளி ! (Mentally retarded)  சரியா?”

வந்தவர் அதிரிந்து போய் விட்டார்.“பொட்டில் அடித்தது போல, எப்படி சரியாகச் சொன்னீர்கள்?” என்று கேட்டார்

”ஜாதகம் அதைத்தான் சொல்கிறது” என்றேன்.

அதேபோல இன்னொரு முறை நண்பர் ஒருவர் வந்தார். “வியாபாரத்தில் பிரச்சினை. அது எப்போது தீரும் என்று பாருங்கள்”
என்றார்

வியாபாரத்தில் பிரச்சினை என்றால், பணத்தை வைத்துத்தான் பெரும்பாலும் பிரச்சினைகள் இருக்கும்.

ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன். சிம்ம லக்கின ஜாதகர். இரண்டாம் வீட்டில் மாந்தி. குரு மகா திசையில் புதன் புத்தி. மாந்தி அமர்ந்த இடத்து நாதனின் புத்தி. அது சிக்கலாக இருக்கும். தசா புத்தி எப்போது துவங்கியது என்று பார்த்துவிட்டுச் சொன்னேன்.

”உங்களுக்கு பத்து மாதங்களாக கடும் பணப் பிரச்சினை? சரியா? “ என்று கேட்டேன்.

அவர் அசந்து போய்ச் சொன்னார். “சரிதான். சரக்குக் கொடுத்த இடத்தில் எல்லாம் பணம் வரவில்லை. அது எப்போது சரியாகும்?” என்றார். அந்த தசாபுத்திக் காலம் 27 மாதங்கள். 17 மாதங்கள் பாக்கி இருந்தது. அதற்குப் பிறகுதான் தீரும். அதைச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன். அதன் படியே நடந்தது.
-----------------------------------------------------------------------
அதுபோல உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் கேளுங்கள். ஒருவர் ஒரு கேள்விதான் கேட்கலாம்.

அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. என்ன நிபந்தனை?

அது சஸ்பென்ஸ்.

என்ன சார் சஸ்பென்ஸில் விடுகிறீர்கள்?

நான் எழுத்தாளர். சிறுகதைகள் எழுதுவதில் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டு.. இதுவரை 140 சிறுகதைகள் எழுதியுள்ளேன். சஸ்பென்ஸ் இல்லாமல் கதையில் சுவாரசியம் ஏது?

விருப்பம் இருந்தால் எழுதுங்கள். நிபந்தனை சாதாரணமானதுதான்.

spvrsubbiah@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்!

Subject boxல் ஜாதகப்பலன் என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.3.18

Astrology: ஜோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் தற்போதைய இந்திய குடியரசுத் துணைத்தலைவரும், பாரதிய ஜனாதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான திரு.முப்பவரப்பு வெங்கைய்யா நாயுடு அவர்கள்.
பிறப்பு : ஜூலை 1, 1949 நேரம் : மதியம் 12 மணி, 8 நிமிடம்.
இடம் : சவட்ட பாலம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (30-3-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Venkaiah Naidu
Friday, March 23, 2018 4:56:00 AM 
----------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் இப்போது நமது துணைக் குடியரசுத்தலைவர் உயரதிரு வெங்கைய்ய நாயுடு அவர்கள். பிறந்த தேதி 1 ஜுலை 1949; மதியம் 12 மணி 7 நிமிடம் 30 வினாடிகள்.பிறந்த ஊர் நெல்லூர். ஆந்திரா.
லக்கினாதிபதி 9ல் அமர்ந்து குரு பார்வை பெற்றது. 9க்கு உடயவனும் குரு பார்வை பெற்றது.லக்கினமும் குரு பார்வை பெற்றது. ராஜகிருஹம் 10ல் அமர்ந்தது அவரை அரசியலில் வெற்றி பெறச் செய்துள்ளன.
கே. முத்துராமகிருஷ்ணன்,
kmrk1949@gmail,com
Friday, March 23, 2018 5:38:00 AM
--------------------------------------------
3
Blogger Maheswari Bala said...
Venkaiah naidu
July 1,1949 Friday 
Time:12:0:0
Place of Birth:chavata palem
Friday, March 23, 2018 7:17:00 AM 
--------------------------------------------
4
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: வெங்கைய்யா நாயுடு
பிறந்த நாள்: 01/07/1949 @ 12.00 மணி
பிறந்த ஊர்: சவட்டா பாலெம், 80 E 0 / 14 N 29
நன்றியுடன்
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, March 23, 2018 9:43:00 AM
---------------------------------------------
5
Blogger ARAVINDHARAJ said...
Name:Venkaiah Naidu
Date of Birth:01-07-1949
Time of Birth:12:10:pm
Place of Birth :Andhra Pradesh,India
Profession:Politician 
Friday, March 23, 2018 9:54:00 AM 
-------------------------------------------------
6
Blogger Suresh said...
Name: Venkaiah Naidu
Date of Birth: Friday, July 01, 1949
Time of Birth: 12:00:00
Place of Birth: Chavata Palem
Longitude: 80 E 0
Latitude: 14 N 29
Time Zone: 5.5
Friday, March 23, 2018 10:03:00 AM 
-------------------------------------------------
7
Blogger RAMVIDVISHAL said...
VENKAIYA NAIDU
JULY 01 1949
Friday, March 23, 2018 10:06:00 AM 
-------------------------------------------------
8
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர், நமது தற்போதைய இந்திய துணை ஜனாதிபதி திரு வெங்கய்ய நாயுடு அவர்கள். அவர் பிறந்தது 01/07/1949 பகல் சுமார் 12:00 மணியளவில்.
Friday, March 23, 2018 10:22:00 AM
---------------------------------------------
9
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 23-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
தற்போதைய இந்திய குடியரசுத் துணைத்தலைவரும், பாரதிய ஜனாதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான திரு.முப்பவரப்பு வெங்கைய்யா நாயுடு அவர்கள்.
பிறப்பு : ஜூலை 1, 1949
நேரம் : மதியம் 12 மணி, 8 நிமிடம்.
இடம் : சவட்ட பாலம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.
Friday, March 23, 2018 10:41:00 AM
-----------------------------------------------
10
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் :திரு வெங்கையா நாயுடு அவர்கள்
பிறந்த நாள் :1-july-1949
பிறந்த இடம் :நெல்லூர்
நேரம் : 12-00-00
நன்றி
Friday, March 23, 2018 12:13:00 PM
-------------------------------------------------
11
Blogger Muthu said...
Hon'ble Vice President of India Mr.Venkaiah Naidu. D.O.B: 01 July 1949. 11.15 am, Nellore District.
Friday, March 23, 2018 12:23:00 PM 
-----------------------------------------------
12
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரப் புதிரில் இடம்பெற்ற ஜாதகத்துக்குச் சொந்தக்காரர், இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, March 23, 2018 2:11:00 PM
-------------------------------------------
13
Blogger bg said...
Mr. Venkaiah Naidu born on July 1 1949.
Friday, March 23, 2018 5:21:00 PM 
-------------------------------------------------
14
Blogger G.Ramesh said...
Name of the Personality: Mr. Venkaiah Naidu, Vice-President of India
DOB: 1 July 1949
TOB: 12.00 PM
POB: Nellore, Andhra Pradesh
Thanks
Ramesh Ganapathy
Nigeria
Friday, March 23, 2018 5:27:00 PM 
-----------------------------------------------
15
Blogger Narayanan V said...
ஐயா
இன்றைய புதிருக்கான விடை.
துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு
பிறந்த தேதி: 1 ஜூலை, 1949 நேரம் - சுமார்1130 hrs
பிறந்த இடம்: நெல்லூர்
V Narayanan
Pondicherry
Friday, March 23, 2018 5:39:00 PM 
-------------------------------------------------
16
Blogger Shruthi Ramanath said...
It's venkaiyah naidu
Friday, March 23, 2018 6:33:00 PM 
------------------------------------------------------
17
Blogger Jothida Ratna Paartha Sarathi Astrology said...
hi sir ,
this is sarathi subramaniyam from Tirupur. pls note my finding below
person honarable vice president : Muppavarapu Venkaiah Naidu @ venkaiah naidu date of birt & place of birth : 01-07-1949 time 12.56Pm Nellore. AP
i just fin out sun is in 10th place so he may be in govt superior or like a king based on ia hve workout with jahanath hora software and find time , then search all president dob and get naidu garu 
Thanks,
Sarathi subramaniyam
Friday, March 23, 2018 7:00:00 PM 
---------------------------------------------------------------
18
Blogger thozhar pandian said...
ஜூலை 1 1949 பிறந்த இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு அவர்கள்
Friday, March 23, 2018 9:59:00 PM
-------------------------------------------------
19
Blogger Rajam Anand said...
Dear Sir,
The answer to the quiz is Mr Muppavarapu Venkaiah Naidu who was born on the 1st of July 1949 in Nallore India.
Kind Regards
Rajam Anand
Saturday, March 24, 2018 1:24:00 AM 
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.3.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 23-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  23-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா?  ஜாதகர் தென்னிந்தியர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.18

சிற்றின்பமும் பேரின்பமும்!


சிற்றின்பமும் பேரின்பமும்!

*சித்தர் வாக்கு.....*

*இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!*

*படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.*

*படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.*

*படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.*

*படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.*

*படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.*

*படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.*

*என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.*

*இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.*

*நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.*

*நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.*

*அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.*

*அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.*

*செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.*

*செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.*

*செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.*

*செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.*

*புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.*

*அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.*

*இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.*

*வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.*

*நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.*

*நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.*

*உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.*

*உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.*

*இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.*

*துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.*

*எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.*

*எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.*

*பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.*

*மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.*

*பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.*

*பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.*

*சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.*

*எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.*

*பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.*

*தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.*

*அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.*

*அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.*

*அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.*

*அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.*

*அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.*

*அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.*

*பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.*

*பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.*

*முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.*

*முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.*

*இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.*

*கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.*

*உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.*

*உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.*

*புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.*

*புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.*

*மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.*

*மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.*

*மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.*

*மரணத்தையும் வெல்வது பேரின்பம்.*

*மனமாய் இருந்தால் சிற்றின்பம்.*

*மனதைக் கடந்தால் பேரின்பம்.*

*வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.*

*எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.*

*பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.*

*மொத்தமாய் கண்டால் பேரின்பம்.*

*அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.*

*அகங்காரம் துறந்தால் பேரின்பம்.*

*தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.*

*அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.*

*ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.*

*ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.*

*துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.*

*துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.*

*ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.*

*இறைவனால் தரப்படுவது பேரின்பம்.*

*உலகைப் பற்றினால் சிற்றின்பம்.*

*இறைவனைப் பற்றினால் பேரின்பம்.*

*பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.*

*தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.*

*இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.*

*இன்பமான இன்பமே பேரின்பம்.*

*அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.*

*ஞானம் விரும்புவது பேரின்பம்*

*பெற்று மகிழ்வது சிற்றின்பம்.*

*கொடுத்து மகிழ்வது பேரின்பம்.*

*சக்தியை இழப்பது சிற்றின்பம்.*

*சக்தியாய் மாறுவது பேரின்பம்.*

*பற்றுக் கொள்வது சிற்றின்பம்.*

*பற்றற்று இருப்பது பேரின்பம்.*

*மாறுவது, தாவுவது சிற்றின்பம்.*

*மாறாதது நிலைத்தது பேரின்பம்.*

*நிலையற்றது சிற்றின்பம்.*

*நிரந்தரமானது பேரின்பம்.*

---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.3.18

ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம்!


ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம்!

பேஜர்போல ஒருநாள் ஸ்மார்ட்போன்களும் காணாமல் போகும்... அதன்பின்?*

ஸ்மார்ட்போன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகிறதா?

20 ஆண்டுகளுக்கு முன்புவரை அப்படித்தானே இருந்தோம் என்ற பதில் செல்லாது.

டெக்னாலஜிக்கு பழகிய பின், மொத்த உலகமும் ஸ்மார்ட்போனை வைத்து இயங்கத் தொடங்கிய பின், இப்போது ஸ்மார்ட்போன் மறைந்தால் என்னவாகும்? அப்படியெல்லாம் ஆகாது. வழியே இல்லை என்பவர்களுக்கு... நிச்சயம் ஆகும்.

*பேஜர், ஃபேக்ஸ்போல விரைவில் ஸ்மார்ட்போனும் காணாமல் போகும்.*

அப்போது மனிதர்களின் வாழ்க்கைமுறையே மாறிப்போயிருக்கும்.

*எலன் மஸ்க்...* அமெரிக்காவின் முக்கியமான தொழிலதிபர். எலக்ட்ரிக் வாகனங்கள் தொடங்கி விண்வெளிக்கு ராக்கெட் விடுவதுவரை அவரது ஐடியாக்கள் எல்லாமே வேற லெவல்தான். அந்த எலன் மஸ்க் நியூராலிங்க் ( Neuralink) என்றொரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனம், மனிதர்களின் மூளை நேரிடையாக இயந்திரங்களோடு தொடர்புகொள்ள உதவும் சிஸ்டத்தைத் தயாரிக்கப்போகிறது.

இப்போதைக்கு ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் அல்டிமேட் திட்டம், மனித மூளையை இயந்திரத்தோடு நேரிடையாக இணைப்பது.

*இதனால் ஸ்மார்ட்போன் காணாமல் போய்விடுமா?*

ஸ்மார்ட்போனில் என்னென்னவெல்லாம் இருக்கின்றன எனப் பார்ப்போம்.

அது லேப்டாப், கணினி ஆகியவற்றின் சிறிய வடிவம்தான். கேமரா, ஜிபிஎஸ், ஆகியவற்றின் தொகுப்புதான். கம்ப்யூட்டரில் செய்ய முடியாத எதையும் நம்மால் ஸ்மார்ட்போனால் செய்துவிட முடியாது.

அளவில் சிறியது என்பதும், எளிதில் எடுத்துச் செல்லலாம் என்பதுதான் ஸ்மார்ட்போனின் பலங்கள். ஆக, கணினி செய்யும் வேலைகளைச் செய்ய வேறு ஓர் எளிமையான வழி வந்தால், ஸ்மார்ட்போனுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்பதுதான் யதார்த்தம். அந்த எளிமையான வழியைத் தேடித்தான் எலன் மஸ்க் ஓடுகிறார். எலன் மஸ்க் மட்டுமில்லை. மார்க் சக்கர்பெர்கில் இருந்து அனைத்து டெக் ஜாம்பவன்களும் அந்த மாரத்தானை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள்.

ஸ்மார்ட்போனின் டச் வழி நாம் தரும் கட்டளைகளை ஒலி வழி தரும் டெக்னாலஜிதான் அடுத்த அட்டாக். இப்போதே சாம்சங் பிக்ஸ்பி, ஆப்பிள் சிரி எல்லாம் இருக்கின்றன. இருந்தாலும், அவற்றை பயன்படுத்துபவர்கள் குறைவு. இது அதிகரிக்கும்போது ஸ்மார்ட்போனின் வடிவமே மாறும். அது வேறு ஒரு பெயருடன் வேறு ஒரு பரிமாணத்துடன் களம் இறங்கும். அமேசானின் எக்கோ, கூகுள் அசிஸ்டன்ட்   எல்லாம் அதற்கான முன்னோட்டங்கள் தான்.

ஒலியை விட இன்னொரு விஷயம்தான் ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய எதிரியாக வளரக்கூடும். அது...
*ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி.* மைக்ரோசாப்ட், கூகுள், ஃபேஸ்புக் என எல்லோரும் இந்த ஆராய்ச்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஸ்மார்ட்போனின் திரை வழியே நாம் என்னென்னவெல்லாம் பார்க்கிறோமோ, அவையெல்லாம் 3டி வடிவில் நேரிடையாக நம் கண்களுக்குத் தெரியும்.

ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி சல்லிசான விலையில் கிடைக்கும் நாள்தான் முக்கியமான நாள். அது நடந்துவிட்டால், ஸ்மார்ட்போன் மட்டுமல்ல. திரை இருக்கும் அனைத்துப் பொருள்களும் தனது மதிப்பை இழக்கும். தொலைக்காட்சியில் தொடங்கி அனைத்து ஸ்க்ரீன் புராடக்ட்ஸும் இதில் அடக்கம். எந்தப் பொழுதுபோக்கு சாதனமும் உங்கள் பாக்கெட்டை ஆக்ரமிக்காது. அவை நம்மைச் சுற்றி, நிஜ உலகோடு இரண்டறக் கலந்து நிற்கும்.

இதை இப்படியும் சொல்லலாம். ஸ்மார்ட்போன்கள் காணாமல் போகும் அல்லது நாமே ஒரு ஸ்மார்ட்போனாக மாறக்கூடும்.

ஸ்மார்ட்போன்கள் காணாமல் போனால் அது மனித குலத்தின் முக்கியமான அத்தியாயம்.

ஏனெனில், அது இயந்திரங்களை மனிதர்கள் சுமந்து சென்ற காலத்தின் முடிவாக இருக்கும். மனிதர்களோடு இயந்திரங்கள் ஒன்றாக கலக்கத் தொடங்கும் காலத்தின் ஆரம்பமாக இருக்கும்.

*ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்* உதவியால் இயந்திரங்கள் சிந்திக்கத் தொடங்கிவிடும். அதே காரணத்தால் மனிதர்கள் சிந்திப்பதைக் குறைத்துவிடுவார்கள். அதன்பின், மனிதர்கள் வெறும் மனிதர்களாக மட்டுமே இருக்க மாட்டார்கள்.

யோசித்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால். இது நிச்சயம் நடக்கும். இவையெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளிலோ அல்லது 20 ஆண்டுகளிலோ நடந்துவிடும் என்பதுதான் கூடுதல் பயமாக இருக்கிறது.

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.3.18

ஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்!


ஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்!

திருப்பட்டூர் தலம் பற்றி 30 அற்புதங்கள்🌹🌿

1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.

2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.

3. இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள்
அங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில்
திருப்பட்டூராக மாறியது.

4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை
வணங்கி தொழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.

6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.

7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை
நறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.

9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும்.
அந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.

10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12
சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.

14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

15. குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.

16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.

17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில்
வெற்றி கிடைக்கும்.

18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம்
நிச்சயம் கிடைக்கும்.

19. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச்
சொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.

20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட
திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா
முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.

23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய
பூமியாக திகழ்ந்தது.

24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.

25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி
விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம்
கொழிக்கும் என்கிறார்கள்.

26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை
நிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.

28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில்
இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.

29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த
பலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.

30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி,
செயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.3.18

விதியும் சதியும்!


விதியும் சதியும்!

இயற்கையா ? - கார்ப்பரேட்டா ?

👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎நேரத்திற்கு  சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 தாகத்திற்கு  நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

👌👌 தரமான   இயற்கை உணவுகள்  இயற்கையின் விதி!

👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!

👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!

👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 சுகப் பிரசவம்  என்பது இயற்கையின் விதி!

👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!

👌👌யாரும்  இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும்  பழமும் தொடக் கூடாது என்பது  கார்ப்பரேட் சதி!

👌👌 யாரும் கொழுப்பு உணவுகள்  சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது  என்பது கார்ப்பரேட் சதி!

👌👊 பசி வந்தால் எந்த நோயும்   குணமாகும் என்பது இயற்கையின் விதி!

👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது  கார்ப்பரேட்  சதி!

👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!

👌👌நம் ஆரோக்கியத்தை  சொல்லும் உடலின் மொழி இயற்கையின்  விதி!

👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!

👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது  இயற்கையின் விதி!

👎எந்த நோயும் குணமாகாது என்பது  கார்ப்பரேட் சதி!

👌👌ஒவ்வொரு  மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின்  விதி.

👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.

👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

👎அதை வணிகமாக்கியது  கார்ப்பரேட் சதி!

👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும்,  இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!

இப்படிக்கு.,
இயற்க்கை காவலன்
--------------------------------------👍.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.18

Astrology: ஜோதிடம்: 16-3-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 16-3-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் நம் மேற்கு வங்காள முதல்வர்
திருமதி மமதா பானெர்ஜி அவர்கள்
அவர் பிறந்ததேதி 5-1-1955 மதியம் 12:10 மணி. கல்கத்தா

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 23 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (23-3-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
கொடுத்துள்ள ஜாதகம் மேற்கு வங்க முதலமைச்சர் தீதீ மமதா பானெர்ஜி அவர்களுடையது 5 ஜனவரி 1955ல் அதிகாலை 11 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.பிறந்த ஊர் கொல்கொத்தா. ராஜகிருஹமான சூரியன் 5ம் அதிபதி பாக்கிய ஸ்தனமான ஒன்பதில் அமர்ந்து கூடவே வெற்றி ஸ்தானதிபதி புதனும் இருந்து வெற்றி ஸ்தானத்தைப்பார்த்ததால் அரசியலில் வெற்றி பெற்றார். லக்கினாதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்தது செல்வம் செல்வாக்கை அளித்தது. 7ம் இடத்தில் சனி, சுக்கிரன் இருபுற‌மும் சூரியன் சனி ராகுவால் சூழப்பட்டதால் திருமன வாழ்வு அம்பேல்?
Friday, March 16, 2018 5:06:00 AM
------------------------------------------------------
2
Blogger sundinesh1 said...
Mamata banerjee
Friday, March 16, 2018 5:08:00 AM 
----------------------------------------------
3
Blogger Suresh said...
Name: Mamata Banerjee
Date of Birth: Wednesday, January 05, 1955
Time of Birth: 12:00:00
Place of Birth: Calcutta
Longitude: 88 E 20
Latitude: 22 N 30
Time Zone: 5.5
Friday, March 16, 2018 7:26:00 AM 
---------------------------------------------
4
Blogger Maheswari Bala said...
Name: Mamata Banerjee
Date of Birth: Wednesday, January 05, 1955
Time of Birth: 12:00:00
Place of Birth: Calcutta
Longitude: 88 E 20
Latitude: 22 N 30
Friday, March 16, 2018 8:24:00 AM 
----------------------------------------------------
5
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 16-3-2018) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு உரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அவர்கள். பிறந்த தேதி ஜனவரி 5, 1955. 12.00 மணி. பிறந்த ஊர் கல்கத்தா.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Friday, March 16, 2018 10:06:00 AM
--------------------------------------------
6
Blogger RAMVIDVISHAL said...
Mamtha Banerjee
05/01/1955
Friday, March 16, 2018 10:18:00 AM 
------------------------------------------------
7
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 16-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும், தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் "மம்தா பானர்ஜி"அவர்கள்.
பிறப்பு : 5 சனவரி 1955, மதியம் 12 மணி 10 நிமிடம்.
இடம் : கொல்கத்தா, மேற்கு வங்காளம்.
தன் வாழ்நாள் முழுவதும் மேற்கு வங்காள அரசியல் பணிக்காக அர்ப்பணித்து குடும்ப வாழ்க்கையை துறந்தவர்.
Friday, March 16, 2018 10:38:00 AM
------------------------------------------------
8
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் தற்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானெர்ஜீ அவர்கள். அவர் பிறந்தது 5/01/1955 சுமார் பகல் 12:00 மணியளவில். அவர் பன்முக திறமை கொண்டவர்.
Friday, March 16, 2018 10:45:00 AM
-------------------------------------------------
9
Blogger bg said...
Mamata Banerjee born on January 5 1955 in Calcutta.
Friday, March 16, 2018 11:36:00 AM 
--------------------------------------------------
10
Blogger Muthu said...
The birth chart is of West Bengal Chief Minister. Madam. Mamata Banerjee. 05.Jan.1955 1.pm, Kolkata.
Friday, March 16, 2018 11:44:00 AM 
--------------------------------------------------
11
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அவர்கள்
பிறந்த நாள் :5 /1 /1955
பிறந்த நேரம் :12.00
இடம் : கொல்கொத்தா
நன்றி
Friday, March 16, 2018 1:25:00 PM
-------------------------------------------------------
12
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: மம்தா பேனர்ஜி,
பிறந்த நாள்: 05/01/1955 @ 12.00 மணி
பிறந்த ஊர்: கல்கட்டா
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, March 16, 2018 1:27:00 PM
---------------------------------------------------------
13
Blogger angr said...
மாண்பு மிகு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்
Friday, March 16, 2018 1:29:00 PM
----------------------------------------------
14
Blogger sfpl fab said...
Answer
M/s Mamata Banerjee
Born 5 January 1955 (age 63), in Kolkata
Friday, March 16, 2018 1:31:00 PM 
-------------------------------------------------------
15
Blogger anand tamil said...
மம்தா பானர்ஜி (பிறப்பு 5 சனவரி 1955) இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும் ஆவார். இவர் தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் விளிக்கப்படுகிறார்.
Friday, March 16, 2018 1:45:00 PM
------------------------------------------------
16
Blogger Narayanan V said...
ஐயா
இன்றைய புதிர்க்கான ஜாதகி மம்தா பானர்ஜி அவர்கள், மேற்கு வங்க முதலமைச்சர்
வெ. நாராயணன்
புதுச்சேரி
Friday, March 16, 2018 2:52:00 PM
----------------------------------------
17
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மேற்கு வங்க முதல்வருமான செலவி. மமதா பானர்ஜி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, March 16, 2018 2:53:00 PM
--------------------------------------------------
18
Blogger Shruthi Ramanath said...
It's mamta Banerjee
Friday, March 16, 2018 4:48:00 PM
---------------------------------------------
19
Blogger G.Ramesh said...
Personality: Mamta Banerjee, Chief Minister, West Bengal
DOB: January 5, 1955
TOB: 12.15 PM
POB: Calcutta
Thanks
Ramesh Ganapathy
Friday, March 16, 2018 8:44:00 PM 
-------------------------------------------
20
Blogger thozhar pandian said...
ஜாதகத்திற்குரியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள். பிறந்தது ஜனவரி 5 1955. மேஷ இலக்னம், 5,9,10,11ம் வீடுகளுக்குரிய கிரகங்கள் உச்சம். இலக்கினாதிபதி செவ்வாய் 11ல். மிக சிறப்பான ஜாதகம் போல் தோன்றுகிறது.
Friday, March 16, 2018 8:51:00 PM
------------------------------------------------
21
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Mamata Banerjee who was born on 5th of January 1955 in Kolkata, India.
Kind Regards
Rajam Anand
Friday, March 16, 2018 9:48:00 PM 
-------------------------------------------------
22
Blogger Baskaran Ramasamy said...
5-Jan-1955 Mamta Banerjee
Friday, March 16, 2018 10:43:00 PM 
----------------------------------------------
23
Blogger ARAVINDHARAJ said...
Name:Mamata Banerjee 
Date of Birth:05-Jan-1955
Time of Birth:12:40:pm
Place of Birth:Kolkata,West Bengal 
Profession:Politician
Friday, March 16, 2018 10:56:00 PM 
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.3.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 16-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  16-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  பெண்மணி. வடநாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.3.18

Humour நகைச்சுவை: படித்துவிட்டு யாரும் சிரிக்கக் கூடாது


Humour நகைச்சுவை: படித்துவிட்டு யாரும் சிரிக்கக் கூடாது

நாடாளுமன்றத்தில் பேசும் போது பாஜக உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம்.

“ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம்.
ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்:அறை நிறையவில்லை.
அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்: அறை நிறையவில்லை.
மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கிஅறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”...........
அந்த உறுப்பினர் பின் சொன்னாராம்”அந்தமூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர் மோடி,அவர் பொறுப்பேற்றதும் நாட்டில்
இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”....

பின் வரிசையிலிருந்துஒரு குரல் எழுந்தது "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...?
-------------------------------------------------------------------------------------
2
தன் சட்டைப் பையினுள் இருந்து அழகான புதிய செல் போனை எடுத்த அந்த இளைஞன் கடற்கரையில் அமர்ந்திருந்த காதலியிடம் நீட்டி சொன்னான்....

" அன்பே ! இந்த செல் போன் உனக்குத் தான் . வைத்துக் கொள். "

பளபளப்பான அந்த செல் போனை வைத்த கண் வாங்காமல் பார்த்த காதலி அவனை முத்தமிட்டு கேட்டாள்.

" இது எனக்குத் தானா? என் மீது இவ்வளவு அன்பா? விலை அதிகமாக இருக்குமே ! எங்கே வாங்கினீர்கள்? "

காதலன் சிரித்துக் கொண்டே பதிலளித்தான் " இது வாங்கியதில்லை. ஓட்டப் பந்தயத்தில் பரிசாகக் கிடைத்தது. "
தன் காதலன் ஓட்டப் பந்தய வீரன் என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் மீண்டும் முத்தமிட்டு கேட்டாள்.

" ஓட்டப்பந்தயத்தில் எத்தனை பேர் ஓடினீர்கள் டார்லிங்? "
காதலன் பெருமையாகச் சொன்னான்.

*" மூன்று பேர்.  நான்,  செல்போன் கடைக்காரன், ஒரு போலீஸ்..."*
-----------------------------------------------------------------------------
3
தமிழ் மொழியில் மட்டுமே இது போன்ற வார்த்தை ஜாலங்கள் சாத்தியம்
அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.
காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.
எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.
காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?
எதிர் முனை : தெரியும் சார்.
காவலர் : யார் சுட்டது?
எதிர் முனை : சுடலை சார்.
காவலர் : யோவ் சுட்டங்களா இல்லையா?
எதிர் முனை : சுட்டாங்க சார்.
காவலர் : யார் சுட்டது?
எதிர் முனை : சுடலை சார்.
காவலர் : உங்கள் பேர் என்ன?
எதிர் முனை : சாரதி சார்.
காவலர் : கோபத்துடன் எந்த எடத்துல இருக்கீங்க
கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர்.
அந்த இடத்தில இருவர் மூவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
காவலர் : இங்க கொலையா பார்த்த சாரதி யாரு?
அங்கே இருந்த இருவர் கையை தூக்கி நான் தான் என்று கூறினார்.
ஒருவரைப் பார்த்து காவலர் : சொல்லுங்க என்ன பார்த்தீங்க?
பார்த்த சாரதி : நான் ஒன்னும் பார்க்கல சார் நான் இப்பத்தான் வந்தேன்.
காவலர் : யோவ் பிறகு எதுக்கு யா கையைத்தூக்குன.
பார்த்த சாரதி : என் பேர் பார்த்த சாரதி அதான் கையத் தூக்கினேன்.
இன்னொருவரைப் பார்த்து காவலர் : அப்பா நீ யாருயா?
சாரதி (போனில் பேசியவர்):  நான் தான் பார்த்த சாரதி.
கடுங்கோபத்தில் காவலர் : யோவ் உன் பேரு பார்த்த சாரதி யா?
சாரதி : இல்ல சார்.
காவலர் : நீ தான் யா சொன்ன பார்த்த சாரதினு.
சாரதி : ஆமா சார்.
காவலர் : அப்ப ஏன் இல்லனு சொன்ன?
சாரதி : என் பெரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் .
காவலர் : அப்ப உன் பேரு என்ன?
சாரதி : சாரதி சார்.
காவலர் : சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?
சாரதி : ஆமாம் சார்.
பார்த்த சாரதியப் பார்த்து
காவலர்  : அப்ப நீங்க
பார்த்த சாரதி : கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்.
சாரதியைப் பார்த்து
காவலர் : போன் செய்தது நீ தானா?
சாரதி : ஆமாம் சார்.
காவலர் : சுட்டது யார்?
சாரதி : "மூன்றாம் நபரைக்  காட்டி" இவர் தான் சார்.
மூன்றாம் நபரைப்  பார்த்து
காவலர் : நீ யாரு?
3ம் நபர் : நான் சுடலை சார்.
சாரதியைப் பார்த்து காவலர் : யோவ் அவரு சுடலைனு சொல்லுறாரு.
சாரதி :  ஆமாம் சார் அவர் சுடலை.
காவலர் : அப்ப சுட்டது யாரு?
சுடலையைக் காண்பித்து சாரதி : இவர் தான் சார்.
காவலர் இப்பொழுது கீழ்ப்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறார்.
ரசிக்கத் தக்கது.   ரசித்தேன்
ரசித்துச் சிரித்தேன்...
--------------------------------------------------------
4
ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.
உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.
உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.
உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள.. கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை பெற்று கொள்" என்கிறாள்.
உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான்.
உடனே அந்த பெண் அவனிடம், பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள்.
உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார்.
உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள்.
உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை" என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார்.
நீதி : அடேய்.. நீ LKG படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா.....
=========================================================
5
கல்லாபெட்டி சிங்காரத்தின் நகைச்சுவை!


இந்த 5ல் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.3.18

நேர்மைக்கு என்றுமே அழிவில்லை *


நேர்மைக்கு  என்றுமே அழிவில்லை *               

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர்  ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.

ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட
அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.

ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர்
தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா, என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்களும் எந்த சூழலிலும்
நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்” என்று
நா தழு தழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள்.

ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.

“அப்பா, உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களை விட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் றிவுரைகளையும்
கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்து விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம் போதும். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்" என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.

காலங்கள் உருண்டன.

கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்து விட்டாலும் ஒரு பார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை
நடத்திக்கொண்டிருந்தனர்.

பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா ???” என்றார்.

“ஆமாம்… சார்”

உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் .. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா ????”

“ஆமாம்… சார்” என்றாள் சற்று நெளிந்தபடி.

“ஒ நீங்க அவரோட டாட்டரா ??  இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னை விட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை.
ஏன்னா, என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி
கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்.”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த இதை விட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா. யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்.” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது.

அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலொவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.

இரண்டு ஆண்டுகள் சென்றன. ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.

இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா
செய்து விட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.

மாதம்  பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை
பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.

அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள். ???”

கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.

“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக
அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க ???”

“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர
நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்து விட்டேன்.”

“அப்போது என் தந்தை என்னிடம் கேட்டுக்கொண்டது என் அடியொற்றி செல்வீர்களா என்பதே  ??”

“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவருடைய படத்தை பெரிதாக மாட்டியிருக்கிறேன். அந்த ஆண்டவனுக்கு பிறகு எனக்கு எல்லாமே என் அப்பா தான்.” கண்களை துடைத்தபடி சொன்னாள் ப்ரியா.

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா ???

உண்மையான நல்ல பெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை. ஆனால்
அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை,  இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன.

கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்

"பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதை. விட      புண்ணியத்தை சேர்க்கவேண்டும்”* என்று.

*  நிறைய உண்மை கலந்த கதை இது !!!   *   நேர்மையாக   இருப்பதால்    கண்ணீர்  தான்   பரிசு    என்று   மனம்  கலங்காதீர்கள் * ....*உங்கள்    நேர்மை    தான்    உங்கள்   குடும்பத்தை    நிஜமாகக்
காப்பாற்றும்*   ,    *நமது   நாட்டையும்    நேர்மை தான்    காப்பாற்ற   வேண்டும் *.....ஆகவே   மகிழ்ச்சியாக  ,   நேர்மையாக    சமுதாயப்பணியாற்றுவோம்*  ....

லஞ்சம்    இல்லா   சமுதாயத்தை  நிச்சயமாகவே   உருவாக்குவோம்
=================================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!