மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.17

இயற்கை வைத்தியம்! உங்களுக்காக


இயற்கை வைத்தியம்! உங்களுக்காக

*இஞ்சி*

தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.

*அன்னாசி*

இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

*வெங்காய சாறு*

வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

*எலுமிச்சை சாறு*

எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தேடவி, 20-15 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.

*பூண்டு*

பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

*கற்றாழை ஜெல்*

கற்றாழையில் உள்ள நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய நன்மைகளில் ஒன்று தான் மருக்களைப் போக்குவது. அதற்கு கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும்.

அம்மான் பச்சரிசி செடியில் வரும் பாலை மரு மீது தடவினால் மரு போய்விடும்

பிரம்மதண்டு செடியில் வரும் பாலை மருக்கள் மீது மட்டும் தடவ வேண்டும்.... அந்த பால் மற்ற இடங்களில் படாமல் தேய்த்து வரவும்

சித்த மருத்துவக் குறிப்புகள்

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.


தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


சுக்கு
...............
சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
................................
சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
....................................
சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
.....................................
சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
.....................................
சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்
....................................
சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
......................................
சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
..........................................
சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
.............................................
சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர்
வாந்தி, குமட்டல் நிற்கும்.
சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.
...............................................
சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
...................................................
சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
...................................................
சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
.................................................
தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.
சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
...................................................
சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
...................................................
சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.
--------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.10.17

நாகேஷ் சொன்ன நகைச்சுவை!


நாகேஷ் சொன்ன நகைச்சுவை!

முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்.படத்தின் பெயர் நினைவில் இல்லை. ஆனால்  காட்சி நினைவில் இருக்கிறது

நாகேஷ் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருவார். வீட்டில் இருக்கும் டைப்பிஸ்ட் கோபு நாகேஷைப் பார்த்துக் கேட்பார்.

"ஏண்டா ஜோசியருகிட்டே போனியே,என்ன சொன்னார் அவர்?"

அதற்கு நாகேஷ் அவருக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் உள்ள குரலில் பதில் சொல்வார்.

"அதெல்லாம் நல்லாத்தான் சொன்னாருப்பா!"

"அதான் என்ன சொன்னாருங்கிறேன்ல?"

"உனக்கு இந்தக் கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் எல்லாம் நாற்பது வயசு வரைக்கும்தான்னு  சொன்னாரு!"

"அதுக்கப்புறம்?"

"அதுவே பழகிப் போயிடும்னுட்டாரு!"

கொல்' லென்ற சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்ந்துவிடும்!
-----------------------------------------------------------------------------------
அது அவர் நகைச்சுவைக்காகச் சொல்லியது என்றாலும் பலருடைய ஜாதகத்தில் அது உண்மையாகவே இருக்கும்

ஏன் அப்படி?

குரு, சந்திரன், சுக்கிரன் மூன்றும் அதிக நன்மைகளைக் கொடுக்கக்கூடிய கிரகங்கள். அவைகள் மூன்றுமே ஒருவருடைய
அல்லது ஒருத்தியுடைய ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் (It these three planets are not placed in the right places) அந்த ஜாதகனுடைய அல்லது ஜாதகியுடைய வாழ்க்கை கடைசி வரை போராட்டங்கள்
மிகுந்ததாகவே இருக்கும்.

அந்த மாதிரி ஜாதகங்களுக்கெல்லாம், கருணை மிக்க கடவுள் நின்று போராடும் சக்தியைக் (Standing Power) கொடுத்திருப்பார்.

ஆனால் 40 வயதுவரை, அதாவது இளமைத் துடிப்புள்ள காலத்தில் இதெல்லாம் ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்கிறது? என்ற
துடிப்பு இருக்கும். 40 வயதிற்குமேல், சரி, இதுதான், நம்முடைய நிலைமை, என்று பக்குவப்பட்ட மனது உணர்ந்து விடும்.
ஆதலால், வருவதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலும் கிடைத்து விடும். வாழ்க்கைப் பயணத்தை ஒரு சோகம் கலந்த
மகிழ்ச்சியுடன் தொடர்வார்கள் அவர்கள்!

கூலி ஆளாக வேலையைத் துவங்குபவன், கடை வரைக்கும் கூலி வேலை பார்ப்பதற்கும், சைக்கிளில் செல்பவன் கடைசிவரை
சைக்கிளில் செல்வதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதற்கும், ஒரு சின்ன கிராம ரயில்வே ஸ்டேசனில், ஸ்டேசன் மாஸ்டராக
வேலைக்குச் செல்பவன், கடைசிவரை ஸ்டேசன் மாஸ்டராகவே வேலை பார்ப்பதற்கும், ஒரு இசையமைப்பாளரிடம், வயலின்ஸ்ட்டாக வேலை பார்ப்பவன், அதே சினிமாத்துறையில் கடைசிவரை, ஏதோ ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசித்துக் கடைசிவரை வாழ்க்கையை ஓட்டுவதற்கும், ஒரு ஸ்டுடியோவில்
 Light Boy Or Clap Boy வேலைபார்க்கும் ஒருவன் கடைசிவரை அதே
வேலையில் நீடிப்பதற்கும் - அவ்வளவு ஏன் பேருந்துகளில் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் வேலைக்குச் சேர்பவர்கள்
கடைசிவரை, அதே வேலையில் மன அமைதியோடு இருப்பதற்கும், நான் மேற்சொன்ன ஜாதக அமைப்புதான் காரணம்.

Twist, Up & Down உள்ள ஜாதகங்களில் 4 கிரகங்கள் நன்றாக இருக்கும், மீதி கிரகங்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள்
வாழ்க்கை ஏற்ற இறக்கம் உள்ளதாக இருக்கும்.

ஒரு நடிகர் ஒரே படத்தில் புகழின் உச்சிக்குபோய் விடுவார். அடுத்தடுத்து மேலூம் இரண்டு படங்கள் வெற்றியடைய, முதல்
படத்தில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நடித்தவர், நான்காவது படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் என்பார். அதையும்
கொடுத்து அவருடைய கால்சீட்டை வாங்க ஒரு கூட்டம்
அவருடைய வீடு வாசலில் காத்திருக்கும்.

இரண்டே ஆண்டுகளில் பத்துக் கோடி பணம் சேர்ந்து விடும். சென்னை தி.நகரில் பங்களா, பென்ஸ் கார் என்று வாழ்க்கை
தடபுடலாகிவிடும்

அதே நிலைமை நீடிக்குமா என்றால் - எப்படித் தெரியும்?

அவருடைய ஜாதகம் நன்றாக இருந்தால் நீடிக்கும். இல்லையென்றால் கிரகங்கள் ஊற்றிக் கவிழ்த்து விட்டு அல்லது அடித்துத் துவைத்து விட்டுப்போய் விடும்!

எப்படி?

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று அல்லது நான்கு படங்கள் தோல்வியுறும், மார்கெட் போய் விடும்.
ராசியில்லாத நடிகர் என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ஃபீல்டில் நிற்க வேண்டும் என்பதற்காக கையில் இருக்கின்ற காசைப்
போட்டுப் பெரிய பட்ஜெட் படமாக எடுப்பார்.அதுவும் நேரம் சரியில்லாத காரணத்தால் ஊற்றிக் கொண்டுவிடும். விட்ட பணத்தைப் பிடிப்பதற்காக கடன் வாங்கி மீண்டும் ஒரு சொந்தப் படம் எடுப்பார். அதுவும் ஓடாமல் அவரைச் சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கிவிடும்.

கடைசியில் கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்புவதற்காக சம்பாத்தித்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கடனை அடைப்பார். மீண்டும் லாட்ஜ் வாசம், எடுப்புச் சோறு என்றாகி விடும்.

இது சினிமாக்காரர்கள் என்று மட்டுமில்லை, பல தொழில் அதிபர்கள், வியாபாரிகள் வாழ்விலும் நடக்கின்றதுதான்.
சினிமாக்காரரை ஏன் முன்னிலைப் படுத்திச் சொன்னேன் என்றால், அது உங்களுக்கு சுலபமாக வசப்படும் அல்லது புரியும் என்பதால்.

இது ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்ததுதான். பெயரைச் சொல்லவில்லை. முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்

அந்த நடிகர் - பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவர் கஷ்டகாலம் வந்து, அனைத்தையும் இழந்து கோடம்பாக்கத்தில்
பொடி நடையாக ஒருமுறை நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்து அவரை வழி மறித்த பத்திரிக்கை
நிருபர் ஒருவர் அவரிடம் இப்படிக்கேட்டார்:

"என்ன அண்ணே, நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்?"

அவர் பதில் சொன்னார்:

"ஆமாம்ப்பா, கடவுள் பென்ஸ் காரில் போகச் சொன்னார் போனேன்; இப்போது நடந்துபோ என்றார்.நடந்து போய்க் கொண்டிருக்கிறேன். மீண்டும் என்னை அவர் பென்ஸ் காரில் போக  வைப்பார். போவேன்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. மீண்டும் அவருக்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. கதாநாயகன் வேடமல்ல;
குண சித்திர வேடம். சிறப்பாக நடித்தார். மீண்டும் பல
வாய்ப்புக்கள் அதே குணசித்திர வேடங்களில் நடிக்கத் தேடி
வந்தது. இன்று மீண்டும் நல்ல நிலைமையில் இருக்கிறார்
அவர்.
---------------------------------------------------------------------------
ஆகவே உங்களுடைய ஜாதகத்தைப் பற்றிய கவலையை எல்லாம் விட்டு விடுங்கள்.

நல்ல ஜாதகம் என்றால் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள் ஜாதகத்தைப் பற்றி யோசிக்கக்கூட

நேரமின்றி வாழ்க்கை முழு இன்ப மயமானதாக இருக்கும். அதிகாலையில் மும்பை மத்தியானம்  ஃபிராங்க்ஃபர்ட், நடு இரவு நியூயார்க் என்று பறந்து கொண்டிருப்பீர்கள்.வாழ்க்கையின் அவ்வளவு செளகரியங்களும் அதுவாகவே உங்கள் காலடிக்கு வந்து சேரும்.

அதேபோல உங்கள் ஜாதகம் சொல்லும் படியாக இல்லை யென்றால், நீங்கள் கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. உங்களுடைய துன்பங்களையும், அசெளகரியங்களையும் யாரிடமும்
கொடுத்துவிட்டு நீங்கள் தப்பிக்க முடியாது. உங்கள் துன்பங்களை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். துன்பப்படுபவனுக்கு மட்டும்தான் கடவுள் தோள்
கொடுப்பார். ஜாதகத்தில் அதற்குப் பெயர் நிற்கும் சக்தி!
That is standing power conferred by The Almighty!
--------------------------------------------------------------------
ஒரு குட்டிக்கதை மூலம் அதை விளக்குகிறேன்.

ஒரு பெரிய பக்தர் இருந்தார். எப்படியும் இறைவனைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற மன ஆதங்கத்துடன், ஒரு முறை அவர், தொடர்ந்து பல நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டதோடு, கடும்
பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

இறைவன் காட்சி கொடுத்தார்.அதோடு நில்லாமல் உன் பக்தியை மெச்சும் விதமாக ஒரு வரம் தருகிறேன். என்ன  வேண்டு மென்றாலும் கேள் என்றார்.

"நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக வரவேண்டும்.
அதுதான் என்னுடைய ஆசை! வேறொன்றும் வேண்டாம்"
என்று பக்தர் சொல்ல, அப்படியே நடக்கும், கவலையை விடு
என்று இறைவன் சொன்னார்.

பக்தர் விடவில்லை,"ஆண்டவரே, நீங்கள் எனக்குத் துணை யாகத்தான் உள்ளீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து
கொள்வது?" என்றார்

ஆண்டவன் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னார்.

"நீ அதை ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்
 உங்கள் ஊரில் உள்ள ஆற்று மணலில் நீ மட்டும் தனியாக
ஐம்பது அல்லது அறுபது அடி தூரம் நடந்து சென்று, திரும்பிப்பார்த்தாயென்றால் உன்னுடைய காலடிச் சுவடுகள் இரண்டுடன்உன்னுடன் நானும் நடந்து வந்ததற்கான காலடிச் சுவடுகளாக மணலில் பதிந்த மேலும் இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகள் உன் கண்களுக்குத் தெரியும்! அதுதான் அடையாளம்!" என்று சொல்லிக் கடவுள் மறைந்து விட்டார்.

பக்தரும் மிகவும் மகிழ்ந்து வீட்டிற்குத் திரும்பி விட்டார் வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது."உன்னைக் கண்டு நான்
ஆட, என்னைக் கண்டு நீ ஆட" என்று தன் மனைவியுடன்
மகிழ்வாக வாழ்ந்தார்.

ஒரு மூன்று வருட காலம் போனதே தெரியவில்லை!

ஒரு நாள் திடீரென்று நினைவிற்கு வர, ஆண்டவர் சொல்லியபடி கூட இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆற்று மணல்
பரிசோதனை செய்து பார்த்தார். என்ன ஆச்சரியம்? மணிலில் ஆண்டவர் சொல்லியபடியே இரண்டு ஜோடிக் கால் தடயங்கள் இருந்தன. அவரும் மன நிறைவோடு திரும்பி விட்டார்

காலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் அவர் தன் மனைவி, மக்களை யெல்லாம் விபத்தொன்றில் பறிகொடுக்க நேர்ந்தது. அது விதி
என்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டார். அடுத்தடுத்துத் தொடர்ந்து துன்பங்கள் அப்போதும் துணிவுடன் அவற்றை
எதிர் கொண்டார். கடைசியில் துறவியாகி ஊர் ஊராகக் கோவில் கோவிலாகச் செல்ல ஆரம்பித்தார்.

அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.

"நாம் நமது விதிப் பயனால் இப்படித் துன்பப் படுகிறோம் அப்போழுதே ஆண்டவரிடம், துன்பமில்லாத வாழ்க்கையைக்
கொடு என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கொழுப்புடன் ஒன்றும் வேண்டாம், விதித்ததை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ துணையாக மட்டும் வந்தால் போதும் என்றோம். சரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய ஆண்டவர் நன்றாக இருந்த காலத்தில் துணையாக வந்தார்.அதைக் கண்ணாலும் பார்த்தோம்.

இப்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தனியாக இருக்கிறோம். மூன்று வேளை உணவும், படுக்கக் கோவில் மண்டபங்களும் கிடைத்தாலும் வாழ்க்கை வெறுமைதானே - இந்த வெறுமையான நேரத்திலும் ஆண்டவன் நமக்குத் துணையாக வருகிறாரா - தெரியவில்லையே?"

இப்படி நினைத்தவர், உடனே, ஆண்டவனின் துணையைப் பரிசோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணி, கண்ணில்
கண்ட ஒரு ஆற்றின் மணல் பகுதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

ஒரு நூறு அடி தூரம்வரை நடந்தவர், திரும்பிப் பார்த்தார்.

என்ன சோதனை?

இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகளுக்குப் பதிலாக ஒரு ஜோடிக் காலடிச் சுவடு மட்டுமே தெரிந்தது.மனம் நொருங்கிப் போய்விட்டது அவருக்கு!

சுடு மணல் என்றும் பார்க்காமல், அங்கேயே உட்கார்ந்து கண்ணீர் மல்க, கதறியவாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கத்
துவங்கினார்.

அடுத்த ஷணமே ஆண்டவர் காட்சியளித்தார்.

இவர் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவாறு கேட்டார்.

"நியாயமா _ கடவுளே? நான் இன்பமாக இருந்த போதெல்லாம் என் கூடவே துணையாக நடந்து வந்த நீங்கள், எனக்குத்
துன்பம் வந்த நிலையில் என்னைக் கைவிட்டுப் போனதேன்?"

அண்டவன், புன்னகைத்துவிட்டுச் சொன்னார்:

"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான். நீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக
இருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால் உன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.
ஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க
விடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்
இந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத் தாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் - தெரிந்து கொள்வாய் பக்தனே!"
---------------------------------------------------------------------------
என்னுடைய தொழில் வேறு. I am a marketing agent ஜோதிடம் என்னுடைய தொழில் அல்ல - இதைப் பல முறைகள் சொல்லியிருக்கிறேன்.

தீவிரமாகப் படிப்பதும் எழுதுவதும் என்னுடைய பொழுது போக்கு!

ஒரு ஆர்வத்தில் வலையில் எழுதுகிறேன். அடுத்தவர்களுக்கு நான் படித்தவைகள் பயன் படட்டும் என்ற நல்ல நோக்கில் எழுதுகிறேன்

குறுகிய காலத்தில் (அதாவது 12 ஆண்டுகளில்) பல்சுவை - வகுப்பறை என்னும் என்னுடைய இரண்டு வலைப் பதிவுகளிலும் சேர்த்து இதுவரை 3000 பதிவுகளுக்கு மேல் பதிந்திருக்கிறேன்.

அதோடு தலா 15,000 முதல் 20,000 வாசகர்களைக் கொண்ட இரண்டு குறு மாத இதழ்களில் கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். 130ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்,
100ற்கும் மேற்பட்ட மனவளம், மற்றும் கவிதை ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.

தொடர்ந்து எழுதியும் வருகிறேன்

என்னுடைய ஒரே பிரச்சினை, நேரம் இன்மைதான்கடவுள் என் முன் தோன்றினால் - நாள் ஒன்றிற்கு 48 மணி நேரம் என்று எனக்கு மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்றுதான் அவரிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுப்பேன்

அவ்வளவு நேர நெருக்கடி!

பல அன்பர்கள் பின்னூட்டம் இடுகிறார்கள். "சார் நாங்கள் வேண்டுமென்றால் தட்டச்சு செய்து தரட்டுமா?" என்கிறார்கள்

அவர்களுக்கு என் நன்றி!

நான் கையால் எழுதி Scan செய்து அனுப்பினால்தானே அவர்கள் தட்டச்ச முடியும்?. அதே நேர அளவில் நான்
நேரடியகவே - மிகவும் வேகமாக Notepad'ல் தட்டச்சி விடுவேன்

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்  வாராவாரம் சில பதிவுகளை மட்டுமே பதிய முடிகிறது. பின்னூட்டங்களுக்கு முடிந்த நேரத்தில் மட்டுமே பதில் அளிக்க முடிகிறது. சில
சமயங்களில் அது தாமதமாகி விடுகிறது. ஆகவே வாசக அன்பர்கள் யாரும் தவறாக எதையும் நினைக்க வேண்டாம்
--------------------------------------------
இந்தக் கட்டுரையை 24-10-2007 அன்று எழுதி வகுப்பறையில் பதிவிட்டேன். இன்று நிறைய புது முகங்கள் இருப்பதால் அவர்களும் படிக்கட்டும் என்ற நல்ல நோக்கில் இன்று பதிவிட்டுள்ளேன்.

அதாவது இது மீள்பதிவு!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.10.17

Astrology: ஜோதிடம்: 27-10-2017 புதிருக்கான விடை!

        
     Actor: Shahruk Khan
-----------------------------------------------------
Astrology: ஜோதிடம்: 27-10-2017 புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரிய பிரபலம் நடிகர் ஷாருக்கான்!
அவர் பிறந்த தேதி: 2-11-1965 நேரம் அதிகாலை 2:30 மணி பிறந்த இடம்: தில்லி!

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 24 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (3-11-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கங்கள்!
02-11-1965 காலை 2-00 மணிக்குப் பிறந்தவர் நடிகர் ஷாருக் கான் அவர்கள்.
அன்புடன்,
பொன்னுசாமி
Friday, October 27, 2017 6:41:00 AM
---------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir,the answer is,The celebrity was King of Bollywood Shah Rukh Khan born on 02/11/1965 2.30am at New Delhi,Thiruvonam nakshtra 4th patham, magara rasi,Simma lagam at present sani dasa sukkura bukthi was running,am i correct sir, thanks for giving opportunity to participate in the quiz this is my first turn, thanks sir vazhga valamudan
Friday, October 27, 2017 7:01:00 AM 
--------------------------------------------------
3
Blogger Chandrasekaran Suryanarayana said...
This horoscope belongs to 
Actor: Shah Rukh Khan
DOB: NOVEMBER 02, 1965
TIME OF BIRTH : 02.30.00 AM
PLACE OF BIRTH : DELHI
LONGITUDE : 77 E 13
LATTITUDE : 28 N 39
TIME ZONE 5.5
Friday, October 27, 2017 7:17:00 AM 
-----------------------------------------------
4
Blogger sundinesh1 said...
SHah rukh khan
Friday, October 27, 2017 8:09:00 AM 
--------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
Actor Sharu khan Date of Birth 2 Nov 1965 : Time of birth: 2.33 AM; Place of birth New Delhi; Thiruvonam 4 m padam.
ruchaka, sasamaha, anabha, sunabha, thurthura, dhehapushti,parvatha, sathasanchara,yogaS present in his horoscope.
10th lord Sukra in 5th viewd by guru and 3,7th lord also viewd by guru made him famous in art. Sani, 7th lord in his own house viewed by Guru gave him much wealth.
Friday, October 27, 2017 9:12:00 AM 
-------------------------------------------------
6
Blogger SELVARAJ said...
ஜாதகர்: நடிகர் ஷாருக்கான்
பிறந்த தேதி: 02.11.1965. 2:31am
Friday, October 27, 2017 9:46:00 AM
------------------------------------------------
7
Blogger Kvp said...
Sharukh Khan. DOB 02-Nov-1965
Friday, October 27, 2017 9:56:00 AM 
-----------------------------------------------
8
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜோதிடப்புதிர்: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள் – 27/10/2017
ஜாதகர் பிறந்த நாள்: 1965 ஆம் வருடம் , நவம்பர் மாதம் , 2 ஆம் தேதி
பெயர்: ஷா ருக் கான் - (Shahrukh Khan (Born: November 2, 1965 at New Delhi) – Bollywood Super Star Actor, Film Producer)
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, October 27, 2017 10:24:00 AM
----------------------------------------------------
9
Blogger bala said...
Vanakkam iyya,
Mikka Nandri meendum puthir poti thudangiyatharku.
Jaathagar 2 Nov 1965 2.30 am New Delhi il piranthu Ullar. 
India ve "King khan" "Baadshah of Bollywood" "King of Kollywood" endur azhaikum Shah Rukh Khan thaan Jaathagar.
Simma lagnam hero kalin lagnam.. Super star Rajni pola ivarum thiruvonam natchthira karar.
Intha puthir poti meendum thodara vendum endru ketu kolgiren.. Intha puthir poti moolam nirayave katru kondom inum katru kolla aarvam ullathu.. Vagupil saga maanakar kalin purithalum avargalin kannota paarvayum matrum avargalin alasalgalum uthavu girathu.
Nandri,
Bala
Friday, October 27, 2017 10:35:00 AM
------------------------------------------------------
10
Blogger Sakthi Balan said...
வாத்தியாருக்கு வணக்கம் ..
புதிருக்கான விடை - நடிகர் ஷாருக் கான்
பிறந்த தேதி-நவம்பர் 2 1965
Friday, October 27, 2017 11:19:00 AM
------------------------------------------------------
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
நமது வகுப்பறை மீண்டும் விறுவிறுப்புடன் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது!!
மனமார்ந்த வாழ்த்துக்களுடன்
மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்!!!
அன்புடன்,
பொன்னுசாமி.
Friday, October 27, 2017 12:15:00 PM
--------------------------------------------------
11
Blogger anand tamil said...
2 November 1965 Sharukh Khan
Friday, October 27, 2017 1:10:00 PM 
---------------------------------------------------
12
Blogger Manivannan said...
வணக்கம் வாத்தியார் ஐயா!
மீண்டும் தாங்கள் ஜோதிட புதிர் பகுதியை ஆரம்பித்தது மட்டற்ற மகழ்சிச்சி ஐயா!

கோச்சாரப்படி,
**சனி ஒரு சுற்று வர 30 ஆண்டுகள் ஆகும். குரு ஒரு ஆண்டு எனில், சனி கும்பத்தில் இருப்பதும், குரு மிதுனத்தில் இருப்பதும் 1965-ஐ சுட்டிக்காட்டுகிறது. (நான் 95ல் பிறந்தவன் எனக்கும் சனி கும்பத்தில் இருப்பதால் சனியின் நிலை கண்டறிவது எனக்கு எளிதாகியது.)
**சூரியன் துலாமில் இருப்பது ஐப்பசி மாதத்தை குறிக்கிறது. அப்படியானால் அக்டோபர் - நவம்பர் மாதம்.
**சந்திரன் மகரத்தில் இருப்பது வளர்பிறையையும், சுய நட்சத்திர சாரத்தில் இருப்பது திருவோணம் நட்சத்திரத்தையும் குறிக்கிறது. தசா இருப்பு கடைசி பாதத்தை குறிக்கிறது.
**தீபாவளி 24 அக்டோபர் 1965 என்னும் போது 25 அக்டோபர் அமாவாசை ஆகிறது. சந்திரன் ஒரு ராசியை தாண்ட 2 1/2 நாட்கள் எனில், சூரியனை மூன்று ராசிகள் தாண்டி இருப்பதால் குறைந்தபட்சம் அமாவாசையில் இருந்து 7ஆம் நாள் ஆக இருக்கும் என்னும் கணிப்புப்படி 1 அல்லது 2 ஆம் தேதி நவம்பராக இருக்கும்.
**லக்னம் ஒரு ராசியை கடக்க இரண்டு மணி நேரம் ஆகும் எனில் சூரியனில் இருந்து பதினோராம் இடத்தில் இருப்பது நள்ளிரவு 2-4 மணியாக இருக்கும். (சூரிய உதயம் தோராயமாக காலை 6.00மணி என்ற கணக்கில்)
** அப்படியென்றால்,
1965 நவம்பர் இரண்டாம் நாள் நள்ளிரவு 2 மணிக்கு அப்பால் 4 மணிக்குள் ஐனனம்.
When I Google that Date, Its Shows the Name of the well-known Actor Shah Rukh Khan.
So, the Native of horoscope is Shah Rukh Khan.
Thanks!
With Regards,
Manivannan Nambiappan.
Friday, October 27, 2017 1:23:00 PM
------------------------------------------------
13
Blogger amuthavel murugesan said...
shah rukh khan 2.11.1965.
M.Santhi
Friday, October 27, 2017 2:07:00 PM 
----------------------------------------------------
14
Blogger Shruthi Ramanath said...
Sir as per my knowledge I think its the famous actor SHAH RUKH KHAN horoscope sir...
Date of birth : 2 nd - november-1965
Time of birth :2.30 AM 
Place of birth : new Delhi
riday, October 27, 2017 2:07:00 PM Delete
Blogger Shruthi Ramanath said...
Sir as per my knowledge I think its the famous actor SHAH RUKH KHAN horoscope sir...
Date of birth : 2 nd - november-1965
Time of birth :2.30 AM 
Place of birth : new Delhi
Friday, October 27, 2017 3:04:00 PM Delete
-----------------------------------------------
15
Blogger umajana said...
நடிகர் ஷாருக் கான் அவர்கள
Friday, October 27, 2017 3:46:00 PM
-----------------------------------------------
16
Blogger durai said...
ஷாருக்கான் இந்தி நடிகர்
02.11.1965 2.00 அதிகாலை
நாச்சிமுத்து
Friday, October 27, 2017 7:15:00 PM
---------------------------------------------
17
Blogger Thanga Mouly said...
Sha Rukh Khan...02/11/1965
Friday, October 27, 2017 7:28:00 PM 
-------------------------------------------------
18
Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
வகுப்பறை இப்போது மீண்டும் களை கட்ட ஆரம்பிக்கிறது.
நன்றி ஐயா
ஜாதகர் ஷாருக்கான் ஐயா
பிறப்பு விவரம்:
2/11/ 1965
நேரம்:
3; 20 காலை
இடம்
சென்னை என்று எடுத்துக்கொண்டேன்
Friday, October 27, 2017 8:55:00 PM
-------------------------------------------------
19
Blogger Lakshminarayanan Narasimhan said...
Sharukhan-DOB: 2-Nov-1965, Bollywood super star.
Friday, October 27, 2017 9:06:00 PM 
---------------------------------------------
20
Blogger thozhar pandian said...
நவம்பர் 2 1965 பிறந்த ஷாருக்கான்
Friday, October 27, 2017 9:44:00 PM
-------------------------------------------------
21
Blogger Stylish Thamizhan said...
குருவிற்கு வணக்கம்.
நாள் மாதம் வருடம் மட்டுமே கணித்ததில் ஓரளவு பிடித்து விட்டேன். நேரம் கணிக்கவில்லை மன்னிக்கவும்.
என் பதில் Sharukh khan
Friday, October 27, 2017 11:12:00 PM
------------------------------------------------
22
Blogger padman said...
2.11.1965 sharuk khan?? ji??
Friday, October 27, 2017 11:50:00 PM 
--------------------------------------------------
23
Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... In the yesterday's horoscope quiz, My answer is 
The native of the horoscope is SRK @ Shahrukh Khan... Bollywood film actor.
Date of Birth: 02.11.1965 at 2.50pm
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn
Saturday, October 28, 2017 1:59:00 AM 
-------------------------------------------------
24
Blogger gowri radhakrishnan said...
ஐயா, 27-10-17 ஜோதிட புதிருக்கான விடை, திரு.ஷாருக் கான், ஹிந்தி நடிகர்.
Saturday, October 28, 2017 6:10:00 AM Delete
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.10.17

Astrology: ஜோதிடப் புதிர்: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: ஜோதிடப் புதிர்: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்
இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்
சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை
வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்)
சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா
கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

4 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல புதிர் போட்டியை நடத்தியபோது, நிறைய அன்பர்கள் ஆர்வமுடன் கலந்து
கொண்டு சரியான விடையைச் சொல்லி என்னை அசத்திவிட்டார்கள். தொடர்ந்து நடத்தும்படி செய்தார்கள்.
இப்போது இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு
இன்றுதான் ஒரு புதிரை வலையில் ஏற்றியுள்ளேன். எத்தனை பேர்கள் பங்கு கொள்கிறீர்கள் என்று பார்க்கும் ஆவலில்
உள்ளேன்!!!!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

அத்துடன் இன்னொரு தளமும் இருக்கிறது உங்களுக்கு உதவ:
http://www.bornglorious.com/
Famous People's Birthdays

க்ளூ வேண்டுமா? ஜாதகர் அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்!!!!சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.10.17

Cinema: இளையராஜா: கோடை காலம் எப்போது குளிர்ச்சியாகும்?


Cinema: இளையராஜா: கோடை காலம் எப்போது குளிர்ச்சியாகும்?

சொல்லாத காதலின் வலியை மிக அற்புதமாகச் சொல்லிய பாடல் இது.

ஜெயச்சந்திரன் மற்றும் சுசீலா... ஆண் பெண் குரல்கள் அழகாக இணைந்து வரும் பாட்டு.

ஒருவர் விட்ட இடத்தில் மற்றொருவர் தொடங்க, அட... அட... அருமை.

பாடல் முடியும் பொழுது விழியோரமாய்த் துளிர்க்கும் இரு சொட்டு கண்ணீர் தான் இந்த பாடலின் அற்புதம்...

1980களில் நடிகை ராதிகாவுக்குப் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். நிறையப் படங்கள் இவரை மையப்படுத்தியே
வந்திருந்தன.

குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் வாயால் கலையரசி என்ற பட்டத்தையும் பெற்றதோடு அவரின் வசனத்தில் மிளிர்ந்த பல

படங்களில் நடித்திருக்கின்றார் ராதிகா.

இந்தப் பாடல் கவிஞர் வாலி அவர்கள் கலையுலகில் 25 ஆம் ஆண்டு பூர்த்தியான போது எழுதிய பாடல்.

அவர் தான், தன் முதல் பாடலைப் பாடிய சுசீலா இதையும் பாடவேண்டும் என்று சொல்ல, உடனே இசைஞானி அவர்கள் அதை

நிறைவேற்ற, நமக்குக் கிடைத்த இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். இதோ உங்களுக்காக...

பாடல்:
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்.
படம்: நானே ராஜா... நானே மந்திரி (1985).
இசை: இளையராஜா.
பாடலாசிரியர்: வாலி.
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & பி. சுசீலா.

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

(மயங்கினேன்) 

உறக்கம் இல்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கம் இல்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடை காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம்
கொதித்திருக்கும் கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

என்னாளும் தனிமையே எனது நிலமையோ
வந்த கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ

(மயங்கினேன்) 

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ

மணவறையில் நீயும் நானும் தான்
பூச்சூடும் நாளும் தோன்றுமோ

பொன் ராகம் பொழுது தான் இனிய பொழுது தான்
உந்தன் உறவு தான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே
===========================================
படித்ததில் பிடித்தது: பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
 வாத்தியார்

பாடலின் காணொளி:வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
=========================================================

25.10.17

மோடியின் உண்ணாவிரதத்தினால் உயர்ந்த சர்தார் சரோவர் அணை!!!


மோடியின் உண்ணாவிரதத்தினால் உயர்ந்த சர்தார் சரோவர் அணை!!!

இன்று மோடியின் பிறந்தநாள்.இந்த நாளில் சுமார்
25 வருடங்களுக்கு மேலாக 16,000 கோடி  ரூபாய் செல வில்
கட்டப்பட்டு வந்த சர்தார்சரோவர் அணையை இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.இதன் மூலம் உலகிலேயே இரண்டாவது பெரிய அணை 

மோடியால் கட்டப்பட்டது என்று நீர் மேலாண்மை வரலாற்றில் மோடியின் பெயர் நிலைத்து நிற்கும்.

சமீபத்தில் நான் வேலை பார்க்கும் இடத்தில் மேனேஜர்  ஒருவர்குஜராத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி மீண்டும் மதுரைக்கே வந்து இருந்தார்.வழக்கம் போ ல நலம் விசாரணைகள் முடிந்த பிறகு மோடியை பற்றி நான் கேட்க  பதிலுக்கு அவர் சொன்னது என்னை பிரமிக்க வைத்தது..
.
அவர் குஜராத்தில் உள்ள வத்நகர் அலுவலகத்தில் இருந்து மதுரைக்கு மாற்றலாகி வந்திருந்தார். அவரிடம் பேசிய பொழுது அவர் சொன்ன வார்த்தை கள் குஜராத்தில் ரோடுகள்,மின்சாரம் தண்ணீர் இந்த மூன்றும் சூப்பர் என்றார்.அதோடு அங்கே ஆபிசில் போர்வாட்டர்  கிடையாதாம். ஜெனரேட்டர் கிடையா தாம்.அந்தளவுக்கு தண்ணீர் கார்ப்பரேசன் குழாய்களில் வந்துவிடுமாம்.பவர் கட் என்கிற பேச்சே இல் லாததால் ஜெனரேட்டர் தேவையே கிடையாதாம்..ஆபிசுக்கே போர் ஜெனரேட்டர் கிடையாது என்றால் வீடுகளுக்கு சொல்லவா வேண்டும்.

அந்தளவிற்கு 24 மணிநேரமும் குஜராத்தில்  தண்ணீர் மின்சாரம் செய்து கொடுத்த மோடியை இன்றும் குஜராத் மக்கள் இங்குள்ள தமிழ் ஹீரோக்களை விட மேன்மையாக கொண்டாடுகிறார்கள் என்றார் இப்படி குஜராத் மக்கள் மோடியின் புகழ் பாடி நிற்க முக்கி ய காரணம் நர்மதா அணையில் கட்ட ப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை தான்.

இன்றளவில் நம் நாட்டில் 4300  அணைகள் கட்டப் பட்டு ள்ளன.இதில் இருந்து உலகளவில் இந்தியா வின் பெயரை சொல்லிக்கொண்டு இருப்பது மோடியால் விரிவுபடுத்தப்பட்ட சர்தார் சரோவர்  அணைதா ன்.ஆம்உலகின் இரண்டாவது கான்கிரீட் மூலம் கட்டப்பட்டபெரிய அணை என்கிற பெருமை இந்த அணைக்கே உள்ளது.

இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஆறு நர்மதா. இந்தியாவுக்குள்ளேயே உற்பத்தியாகும் ஆறுகளில், கிருஷ்ணா, கோதாவரிக்கு அடுத்து மூன்றாவது பெரியது. மத்திய பிரதேசத்தில் உற்பத்தியானாலும், குஜராத் வழியாகத்தான் பெருமளவு ஓடுகிறது. நர்மதா நதியின் முகத்து வாரத்திலிருந்து சுமார் 1163 கிலோமீட்டர் தொலைவில் குஜராத்தில் உள்ளது. நாவகம் .இங்குதான் கான்கிரீட் மூலம் கட்டபட்ட உலகின்இரண்டாவது பெரிய அணைஉள்ளது
..
முதலாவது அணை அமெரிக்காவில் கொலம்பியா நதியில் கட்டபட்ட கிராண்ட் கூலே  அணையாகும்.
பொதுவாக அணைகள்இரண்டு வகையில் உள்ளது. ஒன்று ஆர்ச் அணை இன்னொன்று கிராவிட்டி அணை.ஆர்ச் அணை என்றால் வளைவாக கட்டப்படுவது. கிராவிட்டி அணைகள் நேராக கட்டப்பட்டு இருக்கும்.உலகில்உள்ள பெரிய அணைகள் எல்லாம் கிராவிட்டி அணைகள் தான்.நம்ம முல்லை பெரியார்  அணையும் கிராவிட்டி அணைதான்.நம்ம கரிகால் சோழன் கட்டிய கல்லணை ஆர்ச் அணைகளில் ஒன்று.

சரி நாம் இந்த சர்தார்சரோவர் அணைக்கு வருவோம்.இந்த சர்தார் சரோவர் அணைக்கு என்ன விசேஷம் என்றால் கான்கிரீட் தொழில் நுட்பத்தின்மூலமாக கட்டபட்ட உலகில் உள்ள இரண்டாவது பெரிய அணை தான் சர்தார்  சரோவர் அணை.சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு மேல் 163 அடி உயரத்திற்கு கான்கிரீட் கலவைகளால் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையின் 
கட்டுமானத்தில் ஒரு தமிழனின் அறிவும் அடங்கியுள்ளது.

உலகமே போற்றும் இந்த கான்கிரீட் தொழில்நுட்பத் தில் நம்முடைய தமிழ்நாட்டின் பங்கும் இருக்கிறது
என்று எத்தனை பேருக்கு தெரியும்?பேராசிரியர் ராமகிருஸ்ணன் தெரியுமா? கோயம்புத்தூரில் பீளமேட்டில் பிறந்து அமெரிக்காவில் ஐக்கியமானவர். லாவா  இருக்கிறதல்லவா..அதாங்க எரிமலை குழம்பு.அதுபாறையாக மாறியதும் அதை உருக்கி அதில் இருந்து கொஞ்சூண்டு எடுத்து கான்கிரீட்டோடு சேர்த்து கட்டினால்  பில்டிங் படு ஸ்டிராங்காக இருக்குமாம்..இது இவரோட கண்டுபிடிப்பு..மவுலிவாக்கம் பில்டர்ஸ்க்கு இது தெரியாமல் போனது ஆச்சரியம் தான்..எதுவாக இருந்தாலும் 
கான்கிரீட் தொழில்நுட்பத்தில் நம்முடைய  மாநிலத்தில் பிறந்த ஒருவரின் அறிவும் இணைந்துள்ளது நமக்கு சந்தோசம் தானே..

வாழ்த்துக்கள் ராமகிருஸ்ணன் சார்..

சர்தார்  சரோவர் அணைக்கு நேரு 1961 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினாலும் இந்த அணையின் கட்டுமானப் பணிகள் குஜராத் மாநிலத்திற்கும் மத்திய பிரதேசத்துக்கும்  இடையில் ஏற்பட்ட ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களை முடித்து 1979ம் ஆண்டு தான் கட்டுமானப் பணியே ஆரம்பமானது.

1979ம் வருடத்திலேயே துவங்கப்பட்ட இந்த  சர்தார் சரோவர் அணை மோடி தன்னுடைய காலத்தில் திட்ட மதிப்பீட்டில் இருந்து 163 மீட்டர்  அதிகப்படி யான உயரத்திற்கு பல எதிர்ப்புகளுக்கிடையே கட்டி முடித்தார். இதனால் தான் இந்த அணை இன்று உல கில் இரண்டா வது பெரிய அணையாக போற்றப்படுகிறது

இந்த அணையின் உயரத்தை அதிகரிக்கக்கூடாது என்று மேதாபட்கர்  அருந்ததி ராய் போன்ற  கூட்டம் மக்களை பயமுறுத்தி போராட வைத்தாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தினால் அனைத்து  எதிர்ப்புகளையும் முறியடித்து தான் நினைத்ததை சாதித்தார் மோடி.

அரை மணி நேரம் மவுண்ட் ரோடில் உண்ணாவிரதம் இருந்ததற்க்கே அலப்பறை கொடுக்கும் திராவிட தலைவர்களிடையே 51 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருந்து மேதாபட்கர் போன்றவர்களை களத்தில் இருந்து துரத்திவிட்டு கட்டப்பட்ட 
இந்த சர்தார் சரோவர் அணை தன்னுடைய வரலாற்றில் மோடியின் பெயரை என்றும் சொல்லிக்கொண்டே இருக்கும்.

சர்தார் சரோவர் அணையில் நீர் தேக்கும் உயரத்தை உயர்த்த மோடிஎடுத்த முயற்சிகள் தான் இன்று ஒட்டு மொத்த குஜராத்தையும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. ஏனென்றால் மோடி முதல்வராக  பதவி ஏற்கும் முன் அணையின் உயரம் 90 மீட்டர் தான் இருந்தது.ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தன்னுடைய தொடர் முயற்சிகளால் இன்று 138 மீட்டர்  உயரத்திற்கு அணையில் நீரை தேக்கி வைத்து விட்டார்.

இந்த அணையில் இருந்து தான் உலகிலேயே நீளமான கான்கிரீட் கால்வாயான நர்மதா கால்வாய் திட்டம்  உருவாக்கப் பட்டுள்ளது,நர்மதா கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி பக்கத்து மாநிலமான ராஜஸ்தானுக்கும் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார் என்றால் அணையின் உயரத்தை அதிகரிக்க வேண் டும் என்று அவர் போராடிய அவசியத்தினை புரிந்து கொள்ளவேண்டும்.

சுமார் 70 மீட்டர் அகலத்தில் 7 மீட்டர் ஆழத்தில் 535 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு மெயின் கால்வாயை வெட்டி அதில் இருந்து 75,000 கிலோமீட்டர் தூரத்துக்கு துணைகால்வாய்கள் வழியே தண்ணீர் கொண்டு செல்ல தண்ணீர்  எங்கிருந்து வரும்,அதனால் தான் அணையில் நீர் தேக்கும் அளவை உயரத்த மோடி போராடி வெற்றிக்கண்டார். இப்பொழுது 4.73 மில்லியன் கியூபிக் 
மீட்டர்தண்ணீர் இந்த அணையில் சேமிக்கப்பட்டுள்ளது.

இதனால் 18 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இந்த அணையில் இருந்து வெளியேறும் நீரினால் பயன் பெறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.சுமார் மூன்று கோடி மக்களுக்கு அதாவது குஜராத்தில் 9633 கிராமங்கள்; மற்றும்131 நகர ங்கள் ராஜஸ்தானில் 1336  கிராமங்கள், 3 நகரங்கள்குடிநீர் வசதி பெறுகின்றன
.
நர்மதா கால்வாய் மூலம் குஜராத்தில் சுமார் 5 லட்ச ம் ஹெக்டேர் நிலங்கள்:உள்ள 15 மாவட்டங்கள்; 73 தாலுக்காக்கள்; 3,112 கிராமங்கள் . விவசாய வசதி பெற்றுள்ளது இது தவிர ராஜஸ்தானின் பார்மர் மற்றும் ஜல்லூர் மாவட் டங்களில் உள்ள 7.2 லட்சம் ஏக்கர் நிலங்களில்  விவசாயம் விரிவாகியுள்ளது.

அதோடு இந்த அணையில் இரு நீர் மின்நிலையங்க ள் அமைக்கப்பட்டு 1500.மெகாவாட்மின்சாரம் உரு வாக்கப்பட்டு குஜராத்  மகாராஸ்டிரா மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு
பிரித்து கொடுக்கப்படுகிறது. இப்படி நர்மதா நதியின்
திசையையே மாற்றி சர்தார் சரோவர் அணையில் தேக்கி
வைத்து  அதை குஜராத் முழுவதும் கொண்டு சென்று சோழநாடு சோறுடைத்து என்பது போல குஜராத்தை பருத்தியுடைத்து என்று மாற்றிய பெருமை மோடியையே சாரும்.

சோழ நாடு என்றவுடன் குலோத்துங்க சோழனின் முடிசூட்டும் விழாவில் அவ்வையார் பாடிய வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்.நெல் உயர குடி உயரும்.குடி  உயர கோன் உயர்வான் என்ற   பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

மோடி கட்டிய சர்தார் சரோவர் அணையினால் குஜ ராத்தில் விவசாய நிலங்களில் உள்ள  வரப்புகளின் கரைகள்  உயர்ந்ததால் அங்கு நீர் மட்டம் உயர்ந்த து.நீர்  மட்டம் உயர்ந்ததால்  பருத்தி கோதுமை நெல் பயிரிடும்விவசாயம் வளர்ந்தது. விவசாயம் பெருகி 
யதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.

இதனால்குடி உயர கோன்உயர்வான் என்ற அவ்வை யாரின் கூற்றை குஜராத் நிரூபித்தது. குஜராத் மக்க ளின் வாழ்வு 
முன்னேறியதால் அந்த மக்களை ஆண்ட  மோடி இன்று அந்த மாநிலத்தை உள்ளடக்கிய 29 மாநில ங்களையும் 7 யூனியன் பிரதேசங்க ளை யும் கொண்ட பாரத  நாட்டை ஆளும் பிரதமராக உயர்ந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த சர்தார் சரோவர் அணை தான்.

மேலதிக விவரங்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Sardar_Sarovar_Dam
--------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.10.17

எடை குறைய வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!


எடை குறைய வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!

உடம்பைக் குறைக்க... வைத்தியம்!

கொ ஞ்சம் தாட்டியான பொண்ணா பொறந்துட்டா அவ்வளவுதான்! அதுலயும் இடுப்புல எக்கச்சக்கமா சதை மடிப்பும்
இருந்துச்சுனா வேற வில்லங்கமே வேணாம்! மத்த பெண்களுக்கு இருக்கிறதைவிட மாதவிலக்குக் கோளாறுகள் அதிகமா வந்து
சேர்றதே குண்டா இருக்கிற பொண்ணுங்களுக்குத்தான்! இப்படி குண்டான உடம்பை வச்சுக்கிட்டு அவஸ்தைப்படுறவங்களுக்கு
வரப்பிரசாதமா இருக்கப் போகுது நான் சொல்லப் போற ரசம்! ‘அட.. ரசம் ஜீரணத்துக்குத்தானே உதவும். உடம்பைக் குறைக்கவுமா
உதவும்?’னு நீங்க கேட்கிறீங்கதானே.. நான் சொல்றது மிளகு ரசம் இல்லீங்க.. கொள்ளு ரசம்.

‘ஐயய்யே.. கொள்ளா? அதெல்லாம் குதிரை திங்கிறதாச்சே?!’னு கொல்லுனு சிரிக்கறீங்களா? சிரிக்காதீங்க. கொள்ளு
சாப்பிடுறதால தான் குதிரை அத்தனை சக்தியோட இருக்கு. மோட்டாரோட சக்தித் திறனையே ‘ஹார்ஸ் பவர்’னுதானே
சொல்லுறோம் (‘கொள்ளு’ பேரன், பேத்திகளோட பேசிப் பேசி எனக்கும் இங்கிலீஷ் கொஞ்சம் தெரியுமாக்கும்!). ஊளைச் சதையை
கரைச்சு, உடம்பை கிண்ணுனு வச்சுக்கற சக்தி கொள்ளுக்கு உண்டு!

சரி.. விஷயத்துக்கு வர்றேன். மாதவிலக்கு கோளாறு காரணமா குழந்தைப் பேறு வாய்க்காத பெண்கள், இதை முயற்சி செஞ்சு
பார்க்கலாம். மாதவிலக்கு ஆன ஐந்து நாட்களும் காலையில வெறும் வயித்துல கொள்ளு வேகவைச்ச தண்ணியை (சுமார் ஒரு
டம்ளர்) நல்லா கலக்கிக் குடிக்கணும். ரெண்டு, மூணு மாசம் இப்படி செஞ்சா கர்ப்பப்பையில இருக்குற கசடு, அழுக்குகள்
போறதோட, இடுப்புப் பகுதியில இருக்குற அதிகப்படி சதைகள் குறைஞ்சு சீக்கிரமே கர்ப்பமாவும் ஆவாங்க. இப்படி
பொண்ணுங்களுக்கு முக்கியமா தேவைப்படுற கொள்ளுவை வச்சு ரசம் செஞ்சா நல்லதுதானே?

கொள்ளு ரசம் எப்படி செய்றதுனு செய்முறை சொல்றேன்.. குறிச்சுக்கங்க. கால் கப் கொள்ளுவை எடுத்துக்கிட்டு, வெறும்
வாணலியில நல்லா வறுத்து, தண்ணியில ஊறப் போடுங்க. மறுநாள் காலையில அதே தண்ணியோட சேர்த்து, கொள்ளுவை நல்லா

வேகவைச்சு மசிச்சுக்கங்க! தேவையான அளவு புளியை தண்ணியில கரைச்சு, அதுல கொஞ்சம் ரசப்பொடி, உப்பு, பெருங்காயம், சுண்டைக்காயளவு வெல்லம் போட்டு கொதிக்க விடுங்க. கடைசியா, வேக வைச்ச கொள்ளுவை சேர்த்து, ரசம் நுரைச்சு வந்ததும் இறக்கி, நெய்யில சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிச்சுக் கொட்டினா.. கொள்ளு ரசத்தோட வாசனை எட்டூருக்கு மணக்கும்

இளைத்தவனுக்கு எள்ளு: கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பது கிராமியப் பழமொழி! அதையும் மனதில் கொள்ளுங்கள்!

வாழ்க வளமுடன்
--------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.10.17

Humour: நகைச்சுவை: சேதாரம் செய்கூலி இல்லாமல் கிடைத்த நகை!


Humour: நகைச்சுவை: சேதாரம் செய்கூலி இல்லாமல் கிடைத்த நகை!

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள்!
--------------------------------------------------
1
தன் சட்டைப் பையினுள் இருந்து அழகான புதிய செல் போனை எடுத்த அந்த இளைஞன்

கடற்கரையில் அமர்ந்திருந்த காதலியிடம் நீட்டி சொன்னான்....

" அன்பே ! இந்த செல் போன் உனக்குத் தான் . வைத்துக் கொள். "
பளபளப்பான அந்த செல் போனை வைத்த கண் வாங்காமல் பார்த்த காதலி அவனை முத்தமிட்டு

கேட்டாள்.

" இது எனக்குத் தானா? என் மீது இவ்வளவு அன்பா? விலை அதிகமாக இருக்குமே ! எங்கே

வாங்கினீர்கள்? "

காதலன் சிரித்துக் கொண்டே பதிலளித்தான் " இது வாங்கியதில்லை. ஓட்டப் பந்தயத்தில் பரிசாகக்

கிடைத்தது. "
தன் காதலன் ஓட்டப் பந்தய வீரன் என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் மீண்டும்

முத்தமிட்டு கேட்டாள்.

" ஓட்டப்பந்தயத்தில் எத்தனை பேர் ஓடினீர்கள் டார்லிங்? "

காதலன் பெருமையாகச் சொன்னான்.

*" மூன்று பேர்.  நான்,  செல்போன் கடைக்காரன், ஒரு போலீஸ்..."*
---------------------------------------------------------
2
உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை
         but
அந்த கரண்டித்தான் எங்க இருக்கூனு தெரியல்ல
                                   
😜😜😜😜😜😜😋😋
-----------------------------------------------------------
3

🕺🏻 ''டேய்..ஓடாதே..
நில்ரா..

எதுக்குடா

இவளை தூக்கிட்டு ஓடறே ?''

''நீங்கதானே சார் சொன்னீங்க.

விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால  , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 🏃🏻
---------------------------------------------------------------
4

🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா😐)"

"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"

"(ஆத்தி இடியாப்பமா இது😳😭) சூப்பர் செல்லம்👌😀"
---------------------------------------------------------------
5

👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி

அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி 😉😉😉                 
-----------------------------------------------------------------
6

சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?

கல்யாணத்துக்கு முன்னாடியா,  பின்னாடியா.....?

கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....

கல்யாணத்துக்கு முன்னாடி,
எனக்கு முருகனைத்தான்
ரொம்பப் பிடிக்கும் .....

அப்போ பின்னாடி.....?

அட,
அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம்
நான் வேண்டாத தெய்வமே
இல்லை.....!!!
--------------------------------------------
7                     

சத்தியவான் சாவித்திரி .....
தன் கணவனை.....
எமதர்ம ராஜாவிடமிருந்து
தன் தந்திர வரங்களால்
கடுமையாகப் போராடி மீட்டாள்.....

கதையின் கருத்து :--
ஒரு புருஷனை...
பொண்டாட்டிகிட்ட இருந்து .....
எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது.....!!!           
  -----------------------------------------------------
8                   

மனைவி:
ஏங்க!  உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு
என் புத்தியை
செருப்பாலத்தான் 
அடிச்சுக்கோணும்.....!

கணவன்:
செருப்பு இந்தா இருக்கு.....! 
புத்திக்கு எங்கே போவ!!??               
-----------------------------------------------------
9                           

கணவன்: 
"என்ன சமைச்சிருக்கே ...?
சாணி வரட்டி மாதிரி இருக்கு...
நல்லாவேயில்லை"....

மனைவி: 
"கடவுளே! .....
இந்த மனுஷன்
இன்னும் என்னவெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....?
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !               
--------------------------------------------------
10                           

மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா!  எவ்வளவு அதிகாரங்கள்.

😳😳🙄   
-----------------------------------------------------
11

 🤒 நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,

🤕 மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்..     
-----------------------------------------------------
12

😱 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு

பார்த்துட்டு வாங்களேன்.

😜 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 😍 😜   
--------------------------------------------------------
13

🙋🏻♂ தக்காளி சோறு பிரியாணி மாதிரி இருந்தா அது அம்மா சமையல்!

💁🏻♂ பிரியாணியே தக்காளி சோறு மாதிரி இருந்தா அது பெண்டாட்டி சமையல்!

😤 சாப்பிட்ட உடனே வாந்தி வந்துச்சுன்னா அது லவ்வர் சமையல்!
😂😂           
--------------------------------------------------------
14
💰 பர்ஸ்ல உள்ள காசை எல்லாம் பிடிங்கிக்கொண்டு

ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு...

அவன்தான் நகை கடைக்காரன்😆     
---------------------------------------------------------
15
நண்பர் : நான் தீவாளி-க்கு சேதாரம் செய்கூலி இல்லாம நகை வாங்கிட்டேன்....
மற்ற நண்பர் : எந்த கடைல வாங்கன
நண்பர் : என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....
😜😂🤣
-----------------------------------------------------------
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.10.17

Astrology: ஜோதிடம்: குடை யோகம்!!!


Astrology: ஜோதிடம்: குடை யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்!

Chhatra என்னும் வடமொழிச் சொல்லிற்குக் குடை என்று பொருள். குடை நமக்கு வெய்யிலும், மழையிலும் பாதுகாப்புத் தரும். அதுபோல இந்த யோகம், ஜாதகனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் பாதுகாப்புத் தரும்.

இந்த அமைப்புள்ள ஜாதகன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு, சுயநலமின்றி பாதுகாப்புத் தருவான்.

இன்பத்தில் பாதுகாப்பா? விளங்கவில்லையே என்று சொல்லாதீர்கள். இன்பமான சூழ்நிலையில், மனிதன் தகாத செயல்களைச் செய்து விடாமால் அவனைப் பாதுகாக்கும்! அதாவது அவனை நெறி பிறழாமல் பாதுகாக்கும்.

”ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?” என்று பாட்டெழுதி சக மனிதனைக் கவியரசர் கண்ணதாசன் சிந்திக்க வைத்தாரே - அத்தகைய ஆட்டமில்லாமல், பிறப்பில் இருந்து இறப்புவரை ஒருவனைப் பாதுகாக்கும் யோகம் இந்த யோகம்!
--------------------------------------------------------
யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். யோகத்தைத் தரும்

பலன்: ஜாதகன் பிறப்புமுதல் இறப்புவரை மகிழ்ச்சியாக இருப்பான். தனது உடன் பிறப்புக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவியாக இருப்பான். அன்பு மிகுந்தவனாக இருப்பான். சமூகத்தில் உயர்ந்தநிலையில் இருப்பவர்களின் மதிப்பைப் (செல்வாக்கைப்) பெற்றிருப்பான். அதீத புத்திசாலியாக இருப்பான். நீண்ட நாள் வாழ்ந்திருப்பான். அதைவிட முக்கியம், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.10.17

Astrology: தெட்சிணாமூர்த்தி என்பவர் யார்?


Astrology: தெட்சிணாமூர்த்தி என்பவர் யார்?

தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.

ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.

உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.

இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி.

தெட்சிணாமூர்த்தி சிவகுரு,தெற்கு நோக்கியும் குரு தேவகுரு வடக்கு நோக்கியும் உள்ளனர்

தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.

சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்,

குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...

தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்.

அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள்.

இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.

அதுவும் தவறு.

குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.

எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
------------------------------------
மேலதிகத் தகவலுக்கு: https://en.wikipedia.org/wiki/Dakshinamurthy

படித்தேன். பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.10.17

Astrology: ஜோதிடம்: உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா?


Astrology:  ஜோதிடம்: உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா?

உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா? 

     “என்ன சார் கேள்வி? ஆசை இருக்காதா பின்னே? என் ஜாதகத்தை மட்டுமல்ல எங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களின் ஜாதகத்தையும் அலசிப் பார்க்க வேண்டும்” என்கிறீர்களா!

அதற்கு ஜோதிடப் பாடங்களைப் படிப்பதுடன், பயிற்சிப் பாடங்களையும் படிக்க வேண்டும். கிரிக்கெட்டில் நெட் பிராக்டீஸ் உள்ளதல்லவா - அதைப் போல!!!

உதாரண ஜாதகங்களுடன் இரண்டு பயிற்சி பாடங்களை ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொடுப்பதாக உள்ளேன். அதைத் தனி இணைய தளத்தில் துவங்கலாம் என்று உள்ளேன். இங்கே எழுதினால் உடனுக்குடன் திருட்டுப் போகும்.

விருப்பம் உள்ளவர்கள், அதற்கான விதிமுறைகள் சேர்க்கைகளுக்கு  மின்னஞ்சலில் எழுதுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி: spvrsubbiah@gmail.com

Practical Lessons  - பயிற்சிப்பாடங்கள் என்று சப்ஜெக்ட் பாக்ஸில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

எத்தனை பேர்கள் இதில் விருப்பம் உடையவர்களாக இருப்பீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே உடனே எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.10.17

மொழிப் புரட்சி செய்யவிருக்கும் கருவி!


நவீன் பாலி


நஸ்ரியா நசீம்

மொழிப் புரட்சி செய்யவிருக்கும் கருவி!

இனி நீங்கள் எந்த மொழியில் பேசினாலும், உடனடியாக அதை நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக் கொடுக்கும் கருவி
வந்துள்ளது.

வழக்கம்போல கூகுள் ஆண்டவர்தான் அதைச் செய்திருக்கிறார். சந்தைக்கு எப்போது வருமென்று தெரியவில்லை.

நம் தமிழிலும் அது வருமா என்று தெரியவில்லை. கூகுள் ஆண்டவரின் முதன்மைச் செயலாளர் நமது தமிழர்தான். ஆகவே தமிழும் உள்ளிடப்பெற்றிருக்கும் என்று நம்புவோம். பொறுத்திருந்து வாங்குவோம். நமது பன் மொழிப் பிரச்சினைகள் தீரட்டும்!!!


--------------------------------------------------------------
2
இன்றையப் பெண்களின் கனவு என்ன தெரியுமா?

அதாவது திருமணத்திற்காக வரன் தேடும் ஆண்களின் நிலைமை என்ன தெரியுமா?

மலையாளப் பட இயக்குனர் ஒருவர் தன் படத்தில் அதற்கான காட்சி ஒன்றை இயக்கிக் காட்டியிருக்கிறார், நீங்களும் பாருங்கள்.

காட்சியில் நடித்தவர்கள் நவீன் பாலி மற்றும் நஸ்ரிமா நஸீம்===================================================================
3

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்


அன்புடன்

வாத்தியார்
==================================================================

13.10.17

Astrology: ஜோதிடம்: சக்ரா யோகம்


Astrology: ஜோதிடம்: சக்ரா யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!!!

சக்கரம் என்றவுடன் நமது மனக்கண் முன்பாக வந்து நிற்பது வண்டிச் சக்கரம்

வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். புராணத்தில் திருமாலின் கையில் உள்ளதும் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்!

இன்னும் பல சக்கரங்கள் உள்ளன!

காலச் சக்கரம்
வாழ்க்கைச் சக்கரம்
ராசிச் சக்கரம்
நவாம்சச் சக்கரம்

பொதுவாகச் சுழற்சியைக் கொடுப்பது எல்லாம் சக்கரம்தான்.

மனித உடம்பிலும் ஆறு சக்கரங்கள் இருந்து சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அதை மேலே உள்ள படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்), 3, 5,7,9,11   ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக் கொடுக்கும்.

பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான்.

சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்.

சார், 3ல் எனக்கு 2 இருக்கிறது, பாதி யோகம் உண்டா? என்று யாரும் கேட்க வேண்டாம். செயல்பாடுகள் பாதியாக இருப்பது பயன்படாது. நான்கு சக்கரங்களில், இரண்டுதான் இருக்கின்றன அல்லது இரண்டுதான் காற்றுடன் இருக்கின்றன எனும்போது கார் எப்படி ஓடும்?யோசித்துப் பார்த்து விட்டு எழுதுங்கள்!

நன்றி, வணக்கம்

அன்புடன்,
உங்கள் வகுப்பறை,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.10.17

ராமசேரி இட்லியைத் தெரியுமா?ராமசேரி இட்லியைத் தெரியுமா உங்களூக்கு?

ராமசேரி இட்லி

பாலக்காடு ராமசேரி இட்லி செய்முறை

நம்பினால் நம்புங்கள். நாலே நாலு இட்லி சாப்பிடுவதற்காகதான், ஐநூறு கிலோ மீட்டர் பயணித்து அந்த ஊருக்குப் போயிருந்தோம். தட்டு மீது வாழை இலை போடப்பட்டு, சுடச்சுட பரிமாறப்பட்டது இட்லி. ஒரு விள்ளலை பொடியில் தொட்டு வாயில் வைத்ததுமே, திருநெல்வேலி அல்வா மாதிரி தொண்டைக்குள் எந்த
சிரமமுன்றி இறங்குகிறது. சுவையும் சூப்பர்.

இதுதான் ராமசேரி இட்லி.

மறைந்த தொழில் அதிபர் அம்பானிக்கு, நம்மூர் சரவணபவன் இட்லி-சாம்பார் என்றால் உயிராம். அவருக்கு இட்லி சாப்பிட வேண்டுமென்று தோன்றும் நாட்களில் எல்லாம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சென்னை அதிகாரிகளின் ஏற்பாட்டில், ஒரு தனி விமானம் மூலமாக சென்னையிலிருந்து, மும்பைக்கு ஒரு பார்சல் இட்லி மட்டும் ‘ஸ்பெஷலாக’ செல்லுமாம். சென்னையில் சகஜமாக உணவுப்பிரியர்கள் வட்டாரத்தில் கூறப்படும் இந்தச் செய்தி உண்மையா, வதந்தியா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் ‘இட்லி’யை விரும்பாதோர் வட இந்தியரோ, வெளிநாட்டுக்காரரோ யாருமே இருக்க முடியாது.

இட்லி பயன்பாட்டின் ஒரே பிரச்சினை, அது சீக்கிரமே கெட்டுவிடும் உணவுப்பண்டம் என்பதுதான். அதை பதப்படுத்தி பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கிறது ராமசேரி.

பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில், சுமார்
28 கி.மீ. தூரத்தில் இருக்கும் குக்கிராமம் ராமசேரி
(கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியிலும்
செல்லலாம்). தமிழக எல்லைக்கு வெகு அருகில் கேரளத்துக்குள் இருக்கிறது இக்கிராமம்.

இந்த ஊரைப் பற்றியும், இந்த ஊர் இட்லியைப் பற்றியும் கோவையிலும், பொள்ளாச்சியிலும் இருப்பவர்களுக்கு
அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடாவருடம்
ஐரோப்பா, அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள், இட்லி சாப்பிடுவதற்காகவே ராமசேரி வருகிறார்கள். டூரிஸ்ட்டு
கைடுகள், வெளிநாட்டுப் பயணிகளுக்கு ராமசேரி இட்லியை பரிந்துரைத்தும் அழைத்து வருகிறார்கள். சாப்பிட்டவர்கள் சும்மா செல்வதில்லை. நாலு பொட்டலம் கட்டி, பார்சலும் வாங்கிச் செல்கிறார்கள். ஏனெனில் ஒருவாரம் வரை ராமசேரி இட்லி கெடுவதேயில்லை. எப்போது பொட்டலத்தைப் பிரித்தாலும் ‘ப்ரெஷ்’ஷாகவே இருப்பது, இந்த ஊர் இட்டிலியின் ஸ்பெஷாலிட்டி.

மலபார் பிரியாணி மாதிரி ராமசேரி இட்லியும் கேரளாவில்
ரொம்ப பிரபலம். ஒரு காலத்தில் ராமசேரி கிராமம் முழுக்க ஏராளமானவர்கள் இட்லி வியாபாரத்தில்  இறங்கியிருந்தார்கள். கூடையில் இட்லி சுமந்து, பாலக்காடு நகருக்கு சென்று வீடு
வீடாக விற்பார்கள். பிற்பாடு இவர்களில் பலரும் கோயமுத்தூர், திருப்பூர் என்று டெக்ஸ்டைல் வேலைக்கு சென்று விட்டார்கள். தற்போது ஆறு குடும்பங்கள் முழுக்க முழுக்க இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

“பொடி தவிர சட்னி ஏதேனும் உண்டோ சேச்சி”

“தப்பும், தவறுமா மலையாளம் பேசவேணாம். எங்களுக்கு
தமிழே நல்லா தெரியும். என் பேரு செல்வி” பரிமாறுபவர் புன்னகையோடு சொல்கிறார்.

அட தமிழர்கள்!

இட்லிக்கு பெயர்போன காஞ்சிபுரம்தான் ராமசேரி இட்லியின் ரிஷிமூலம். ஒரு நூறாண்டு வரலாறே இதற்கு உண்டு. காஞ்சிபுரத்தில் இருந்து பிழைப்பு தேடி ஒரு முதலியார் கேரளா பக்கமாக அந்த காலத்தில் ஒதுங்கினாராம். அவருடைய பரம்பரையில் வந்தவர்கள்தான் இப்போது ராமசேரியில் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் என்கிறார்கள். இருநூற்றி ஐம்பது ஆண்டு காலத்துக்கு முன்பே ராமசேரி இட்லி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.

மற்ற ஊர் இட்லிகளை மாதிரி இல்லாமல் சிறிய அளவு கல்
தோசை வடிவில், ராமசேரி இட்லி இருக்கிறது. கேஸ் அடுப்பு
மாதிரி நவீன வசதிகளை பயன்படுத்தினால், அச்சு அசலான ராமசேரி இட்லியின் சுவை கை கூடாது. விறகடுப்புதான் பயன்படுத்துகிறார்கள். அதுவும் புளிய மரத்து விறகுதான் எரிக்கிறார்கள் (இதற்கு பின்னிருக்கும் லாஜிக் என்னவென்று தெரியவில்லை). இட்லித்தட்டு, குக்கர் எதுவும் பயன்படுத்துவதில்லை.

இந்த இட்லியின் சுவை மாவு அடுப்பில் வேகும்போதே தொடங்குகிறது. அடுப்பு மீது நீர் நிரம்பிய ஒரு சாதாரண
பாத்திரம். அதற்கு மேல் பானையின் கழுத்து மாதிரி
தோற்றம் கொண்ட ஒரு மண் பாத்திரம். வாய்ப்பகுதி முழுக்க குறுக்கும் நெடுக்குமாக கயிறால் கட்டப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் ஒரு வெள்ளை துணி விரித்து, தோசை வார்ப்பதற்கு ஊற்றுவது மாதிரி இட்லிமாவை உள்ளங்கை அளவுக்கும் சற்று அதிகமான பரப்பளவில் ஊற்றுகிறார்கள். சூடாகும் பாத்திரத்தில் இருந்து மேலெழும்பும் நீராவியில்தான் இந்த இட்லி வேகுகிறது.
ஒரு அடுப்பில் ஒரே நேரத்தில் நான்கு இட்லி மட்டுமே சுடமுடியும். இரண்டு மணி நேரத்தில் 100 இட்லிகளை உருவாக்கக்கூடிய கட்டமைப்புதான் இங்கே இருக்கிறது.

மாவு உருவாக்க அரிசி, உளுந்தினை கலக்கும் விகிதம்
ரொம்பவும் முக்கியமானது. 10 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ
உளுந்து பயன்படுத்துகிறார்கள். மாவு புளிக்க நான்கு மணி
நேர இடைவெளி கொடுக்கிறார்கள்.

சென்னை நட்சத்திர ஓட்டல்களில் இட்லி சாப்பிட்டிருந்தால்,
‘இளநீர் இட்லி’ என்றொரு வகையினை நீங்கள் சுவைத்திருக்க முடியும். ராமசேரி இட்லி, மிருதுத் தன்மையிலும், சுவையிலும் இளநீர் இட்லியை ஒத்திருக்கிறது. ஒரு இட்லி மூன்றே மூன்று ரூபாய்தான். நான்கு இட்லி சாப்பிட்டாலே ‘திம்’மென்றிருக்கிறது.

திருமணம் முதலான நிகழ்ச்சிகளுக்கு இங்கே ‘ஆர்டர்’ செய்து
5,000 மற்றும் 10,000 எண்ணிக்கையில் மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.

பாலக்காடு, வாளையார், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருக்கும் ஓட்டல்காரர்களும் இங்கே வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.

“எந்த ஊர்லே எல்லாம் எங்க இட்லியை சாப்பிடறாங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா ஒரு முறை கேரளாவோட
தன (நிதி) மினிஸ்டர் வந்து எங்க கடையில் இட்லி
சாப்பிட்டார். எப்படி செய்யுறீங்கன்னு கேட்டு, அடுப்படி
வரைக்கும் வந்து பார்த்தார். மலையாள சினிமா
நட்சத்திரங்களும் கூட எங்க கடைக்கு வந்திருக்காங்க”
என்கிறார் சரஸ்வதி டீ ஸ்டாலின் உரிமையாளர் பாக்கியலட்சுமி அம்மாள்.

கடையின் பெயரில் டீ ஸ்டால் இருந்தாலும், இட்லிதான் பிரதான வியாபாரம். அதிகாலையில் இங்கே பற்றவைக்கும் அடுப்பு, நள்ளிரவானாலும் அணைக்கப் படுவதில்லை. தங்கள் இட்லிக்கு வெளியூர்களில் இருக்கும் அசாத்தியமான செல்வாக்கும், வணிக வாய்ப்பும் துரதிருஷ்டவசமாக இதுவரை ராமசேரி ஆட்களுக்கு
தெரியவேயில்லை.

சில காலத்துக்கு முன்பு தஞ்சையில் ‘இட்லி மேளா’ என்கிற
பெயரில் ஒரு நிகழ்வினை மத்திய உணவுப்பதப்படுத்தும் அமைச்சகம் நிகழ்த்தியது. இட்லியை உலகத் தரத்தில்
உருவாக்கி, பதப்படுத்தி ஏற்றுமதி செய்தால் அன்னிய
செலாவணி அதிகரிக்கும் என்கிற கருத்தினை
அவ்வமைச்சகத்தின் செயலர் முன்மொழிந்தார். இட்லி
ஆராய்ச்சிக்காக ரூ.2 கோடியும் அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டது. ராமசேரி இட்லியை, உணவுப் பதப்படுத்தும் அமைச்சகம் ஆராயும் பட்சத்தில் ‘இட்லி மேளா’வின் நோக்கம் நிறைவேறும்.

தமிழகமெங்கும் இருக்கும் பெரிய உணவு விடுதிகளும்கூட
ராமசேரி இட்லியை வாங்கி தங்கள் வாடிக்கையாளர்களின் நாக்குக்கு சுவை சேர்க்கலாம். பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய வணிக வாய்ப்பு ராமசேரி இட்லிக்கு
 உண்டு. உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் கூட,
ராமசேரி இட்லியை முன்வைத்து பெரியளவில் தொழில் திட்டங்களை தீட்டலாம். ஏனெனில் அயல்நாடுகளில் பீட்சா சாப்பிட்டு நொந்துப் போயிருப்பவர்கள், இட்லிக்காக தங்கள்
ஆவியையும் கொடுக்க சித்தமாக இருக்கிறார்கள்.

திருநெல்வேலி அல்வாவை நெல்லை தவிர, வேறு ஊர்களில் செய்தால் அதன் சுவை கைகூடுவதில்லை. இதே லாஜிக் ராமசேரி இட்லிக்கும் பொருந்துகிறது. இங்கே செய்முறை அறிந்துக்கொண்டு, தங்கள் ஊர்களில் சென்று ராமசேரி ஃபார்முலாவை அப்படியே பயன்படுத்தி, ‘இட்லி’ சுட்டவர்கள், முயற்சியில் கையை சுட்டுக்
கொண்டார்கள். “இதென்ன அதிசயம் என்று புரியாமலேயே இருக்கிறது” என்று நொந்துக் கொண்டார் நம்மோடு இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த திருப்பூர்க்காரர் ஒருவர்.

(நன்றி : புதிய தலைமுறை)
https://www.tripoto.com/trip/ramaserry-idly-saraswathi-tea-stall-near-palakkad-kerala-330555
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.10.17

கவிதை: வைரமுத்துவின் வைர வரிகள்


கவிதை: வைரமுத்துவின் வைர வரிகள்

*எனக்குப்பிடித்த வைரமுத்துவின் வைர வரிகள்:*

*'கொல்'  'கொள்ளையடி'*
*சரித்திரம் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''தழுவு'' ''முத்தமிடு''*
*கட்டில்கள் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''ஆராரோ'' ''சனியனே''*
*தொட்டில்கள் அதிகம் கேட்ட* *வார்த்தைகள்*

*''உனக்கெப்போது கல்யாணம்?''*
*விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''*
*வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''இன்னொரு ஜென்மம்*
*என்றொன்றிருந்தால்''*
*பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''கடைசியாய் எல்லாரும்*
*முகம்பார்த்துக்* *கொள்ளுங்கள்''*
*மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'*
*மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'பாலாறு - தேனாறு'*
*பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''மறக்காமல் கடிதம் போடு''*
*ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''அய்யா குளிக்கிறார்''*
*தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'அப்பா கோபமாயிருக்கிறார்'*
*குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'*
*ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*''நேற்றே வந்திருக்கக் கூடாதா''*
*கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'*
*மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்*

*போதுமடா சாமி!*
*போதும்! போதும்!*

*ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்*
*சாயம் போயின* *வார்த்தையின் நிறங்கள்*

*இனி ஒவ்வொரு சொல்லையும்*
*ஒட்டடை தட்டுவோம்*

*இனிமேல் வார்த்தைகளை*
*இடம் மாற்றிப் போடுவோம்*

*அத்தனை சொல்லிலும்*
*ஆக்சிஜன் ஏற்றுவோம்*

*வார்த்தை மாறினால்*
*வாழ்க்கை மாறும்*

*முதலில்*
*வாழ்க்கையிலிருந்து*
*வார்த்தையை மீட்போம்*
*பின்னர்*
*அர்த்தத்திலிருந்து*
*வார்த்தையை மீட்போம்*

*வாழ்வின் நீள அகலம் கருதி*
*வார்த்தைகளிலும் நாம்*
*மழித்தல் நீட்டல் செய்வோம்*

*மரித்தான் என்ற சொல்லை யெறிந்து*
*வாழ்வை வென்றான் என்று புகழ்வோம்*

*தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து*
*விலகி நிற்கும் வெற்றி*
*என்றுரைப்போம்*

*எதிரி என்ற வார்த்தை எதற்கு?*
*தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்*

*சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்*
*முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்*

*இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்*
*அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்*

*நொந்த தேகம் நோயில் விழுந்தால்*
*உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்*

*வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்*
*மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்*

*நிலவைத் தொலைத்த வானம் என்பதை*
*விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்*

*எதிர்மறை வார்த்தைகள்*
*உதிர்ந்து போகட்டும்*

*உடன்பாட்டு மொழிகள்*
*உயிர் கொண்டெழட்டும்*

*பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்*
*புதிய நிலத்தில் பதியன்போடுவோம்*

*புளித்த வார்த்தைகள் மாறும்போது*
*சலித்த வாழ்க்கையும்*
*சட்டென்று மாறும்*

-*வைரமுத்து*
*கவிப்பேரரசு
---------------------------------------------------------------
இணையத்தில் படித்ததைப் பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.10.17

கவியரசரின் பண்பும் பணிவும்!


கவியரசரின் பண்பும் பணிவும்!

தொலைக்காட்சி நம் நாட்டிற்குள் புகாத பொற்காலம் அது..!
.
அகில இந்திய வானொலி அத்தனை வீடுகளிலும் அரசாட்சி செய்து வந்த நேரம் .
.
அந்தக் காலத்தில்தான் , அநத கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
.
பேசிக் கொண்டிருந்தார் என்று சொல்வதை விட ...அடித்து துவைத்து கிழித்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம் .
.
கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – கண்ணதாசனை ..!

ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார் .
.
இதோ ..அது பற்றி அந்தப் பேராசிரியப் பெண்ணே சொன்னது :

"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை

அழைத்திருந்தார்கள்.
நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில்

எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து

நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து

என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”
.
அவ்வளவுதான் ..!
அடுக்கடுக்காக போன் கால்கள் ..!
யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!
.
“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். நீங்கள்

எடுத்துச் சொன்ன பிறகுதான் , இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது

தெரிகிறது.. அற்புதமாக பேசினீர்கள்..!”
.
இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க , உச்சி குளிர்ந்து போனது

அந்தப் பெண்ணுக்கு ..!

மறுபடியும் ஒரு போன் கால் !
=
“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.

மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."
.
பதறிப் போனார் அந்தப் பெண் . அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!

உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள , போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க ஸார் ..”
.
தொடர்ந்து கண்ணதாசன் :

"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு

தெளிவு படுத்த விரும்புகிறேன்.

பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , உங்களைப்போன்ற

பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.

ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும்

சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது.

அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை

எளிமைப்படுத்தி தருகிறேன்.

உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை

எடுத்துக்காட்ட
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?

ஆனால் அதையே நான்
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"
என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?"
.
ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் , இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த

கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் : “மன்னித்துக் கொள்ளுங்கள் ஸார் ..”
.
# இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :

“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது".
.
இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!
.
அடுத்த காரணம் .. திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் , இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு

நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
.
ஆம் ..!
.
“உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்”
.
வாழ்க வளமுடன்..!

 Whatsappல் படித்ததில், பிடித்து பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன்......

அன்புடன்
வாத்தியார்
===========================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!