மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.10.17

கும்பகோணம் சாப்பாட்டின் மகத்துவம்!!!


கும்பகோணம் சாப்பாட்டின் மகத்துவம்!!!

கும்பகோணத்தின் ஹோட்டல்கள் !!!!!
--------------------------------------------------
வெங்கடா லாட்ஜ்
ஆரிய பவன்
முருகன் கபே
மணிகண்ட விலாஸ்
மங்களாம்பிகா காபி ஹோட்டல்
ஐயப்ப விலாஸ்
ஹேமரிஷி மண்டபம்
மாமி மெஸ்

பெரிய கடை தெரிவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்களமாக இருக்கும்.

ஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.

மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபேயின் முறுகல் மாவு தோசை +சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன்
அனைவரையும் கட்டிபோடும்.

சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ் .இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும்
கும்பகோணத்தில் இன்றும் பூரியை boori என்றுதான் அழைப்போம்.

கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி

ஹோட்டல் . இப்போது hifi ஆக மாறிவிட்டது .இதை சின்ன வயசில் நாங்கள் அர்த்தம் தெரியாமல் இப்படி பிரித்து பிரித்து
சொல்லி சந்தோஷப்படுவோம் மங்களாம்பி +காகாபி+ ஹோட்டல்..அதன் காபி......டம்ளரை கீழே வைக்க மனமே வராது

சாரங்கபாணி கோயில் அருகே உள்ள மாமி மெஸ் இங்கே காலை யில் கீரை வடை மதியம் சாப்பாடுக்கு இடம் கிடைக்காது

அப்படி இடம் பிடித்து மசால் வடையுடன் சாப்பாடு 🍚 அப்பப்பா என்ன சுவை 😋

நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ். .இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். இங்கு மட்டும் வாழை இலை கிடையாது .வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி .இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும். so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.

பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம் .அது ஒரு
கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.

இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி .அதற்கு ஊற்றிக்கொள்ள அந்த கால injection பாட்டிலில் நல்லெண்ணெய் .அட அட அடா......சொர்க்கம்...சொர்க்கம்.

இதில் எந்த ஹோட்டல் சென்றாலும் எது சாப்பிட்டாலும் முடிவு என்பது காபியோடுதான் என்பது எழுதப்படாத சட்டம்.

அதுவும் எப்படி தெரியுமா? கார சராமான டிபன் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவாமல் வாய் கொப்பளிக்காமல் காபியை
அப்படியே வாயில் சரித்துக்கொள்ளும்போது நம் நாக்கின் சுவையானது இன்னும் கொஞ்சம் காரமாகி மூன்றே நொடிகளில்
இனிப்புக்கும் மாறும் அந்த நேரம் இருக்கிறதே .... அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். (COURTESY-MY NATIVE
FRIEND)...

அட அட என்ன ரசனையப்பா இதை எழுதியவருக்கு
----------------------------------------------------------
இரசனையுடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

 1. நல்ல சாப்பாட்டுக்காரர் ஐயா!

  ReplyDelete
 2. Good morning sir very useful information about kumbakonam hotels thanks sir vazhga valamudan

  ReplyDelete
 3. Respected sir,

  Good morning sir. You have tempted me to go to Kumbakonam to taste the items mentioned in your message especially in the Hotels mentioned by you. What a surprise to know the item wise hotels in kumbakonam. Very good information on dishes available in Hotels and their special characters.


  regards,

  Visvananthan N

  ReplyDelete
 4. அருமை அருமை. பாரம்பரியத்திற்கு ஏது ஈடு இனை.

  ReplyDelete
 5. ஐயா வணக்கம்
  உமிழ்நீர் சுரந்து விட்டது ஐயா
  நன்றி

  கண்ணன்

  ReplyDelete
 6. ////Blogger kmr.krishnan said...
  நல்ல சாப்பாட்டுக்காரர் ஐயா!/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

  ReplyDelete
 7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir very useful information about kumbakonam hotels thanks sir vazhga valamudan/////

  நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

  ReplyDelete
 8. /////Blogger Visvanathan N said...
  Respected sir,
  Good morning sir. You have tempted me to go to Kumbakonam to taste the items mentioned in your message especially in the Hotels mentioned by you. What a surprise to know the item wise hotels in kumbakonam. Very good information on dishes available in Hotels and their special characters.
  regards,
  Visvananthan N/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!!!!

  ReplyDelete

 9. ////Blogger SELVARAJ said...
  அருமை அருமை. பாரம்பரியத்திற்கு ஏது ஈடு இனை./////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!!!!

  ReplyDelete
 10. ////Blogger Kannan L R said...
  ஐயா வணக்கம்
  உமிழ்நீர் சுரந்து விட்டது ஐயா
  நன்றி
  கண்ணன்//////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!!!

  ReplyDelete
 11. எல்லாம் சரி. ஆனால் தமிழர்கள் அரிசி உணவை தவிர்த்து நமது தமிழ் பாரம்பரிய உணவு வகைகளான கம்பு, கேழ்வரகு, பாசிப்பயறு போன்றவற்றை உண்ண தொடங்க வேண்டும். இவை சிறிது உண்டாலே பசி அடங்கும். கார்போ ஹைட்ரேட் சிறிதாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால்தான் தமிழர்கள் இதை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். பிறகு அரிசி வெளி மாநிலத்திலிருந்து வந்து நமது உணவை பின் தள்ளி நமது ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சர்க்கரை நோய் எல்லாம் வருகிறது. தமிழர்கள் தங்களது பாரம்பரிய உணவுக்கு மாற வேண்டிய நேரமிது. அரிசி தோசைக்கு பதிலாக கேப்பை தோசை உண்டு பாருங்கள். சுவையும் உண்டு, இரண்டு சிறிய தோசைகளிலேயே பசி அடங்கி விடும். உடலும் வலுப்பெறும்.

  தமிழன் என்று ஆரோக்கியத்தை மறந்து சுவைக்காக மட்டும் வாழத்தொடங்கினானோ அன்று பிடித்தது கேடு. நரம்பில்லாத நாக்கு மனிதனை என்ன பாடு படுத்துகிறது.


  அரிசி உணவை தவிர்க்கவே முடியாத என்று வாழ்ந்த நான், மிக குறுகிய காலத்திலேயே அதை விடுத்து தமிழ் உணவுகளுக்கு மாறி விட்டேன். இப்போது எனக்கு அரிசி பிடிக்கவில்லை. உடற்பயிற்சிக்கு கேப்பையும் பாசிப்பயறும் மிகவும் உதவுகிறது. தனியாக புரதம் தேவையில்லை. No need for protein supplements.

  ReplyDelete
 12. சபாஷ் ! சரியான கலெக்சென்...!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com