மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.10.17

Astrology: ஜோதிடம்: குடை யோகம்!!!


Astrology: ஜோதிடம்: குடை யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்!

Chhatra என்னும் வடமொழிச் சொல்லிற்குக் குடை என்று பொருள். குடை நமக்கு வெய்யிலும், மழையிலும் பாதுகாப்புத் தரும். அதுபோல இந்த யோகம், ஜாதகனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் பாதுகாப்புத் தரும்.

இந்த அமைப்புள்ள ஜாதகன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு, சுயநலமின்றி பாதுகாப்புத் தருவான்.

இன்பத்தில் பாதுகாப்பா? விளங்கவில்லையே என்று சொல்லாதீர்கள். இன்பமான சூழ்நிலையில், மனிதன் தகாத செயல்களைச் செய்து விடாமால் அவனைப் பாதுகாக்கும்! அதாவது அவனை நெறி பிறழாமல் பாதுகாக்கும்.

”ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?” என்று பாட்டெழுதி சக மனிதனைக் கவியரசர் கண்ணதாசன் சிந்திக்க வைத்தாரே - அத்தகைய ஆட்டமில்லாமல், பிறப்பில் இருந்து இறப்புவரை ஒருவனைப் பாதுகாக்கும் யோகம் இந்த யோகம்!
--------------------------------------------------------
யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். யோகத்தைத் தரும்

பலன்: ஜாதகன் பிறப்புமுதல் இறப்புவரை மகிழ்ச்சியாக இருப்பான். தனது உடன் பிறப்புக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவியாக இருப்பான். அன்பு மிகுந்தவனாக இருப்பான். சமூகத்தில் உயர்ந்தநிலையில் இருப்பவர்களின் மதிப்பைப் (செல்வாக்கைப்) பெற்றிருப்பான். அதீத புத்திசாலியாக இருப்பான். நீண்ட நாள் வாழ்ந்திருப்பான். அதைவிட முக்கியம், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

 1. Good morning sir once again a good yoga sir thanks sir vazhga valamudan

  ReplyDelete
 2. குடை யோகம் இல்லாததால், கடை யோகமாவது இருக்கும் என காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
 3. வணக்கம் குருவே!
  ஓஹோ! அபரிமிதமான நன்மைகள்
  தரும் யோகமாக இருக்கிறதே!!
  அறியக் தந்தமைக்கு நன்றி ஐயா!!

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா,ராகு மற்றும் கேதுவையும் சேர்த்தா?அப்படி என்றால் காலசர்ப்ப யோகம் வந்துவிடுமே.நன்றி.

  ReplyDelete
 5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir once again a good yoga sir thanks sir vazhga valamudan//////

  நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

  ReplyDelete
 6. /////Blogger SELVARAJ said...
  குடை யோகம் இல்லாததால், கடை யோகமாவது இருக்கும் என காத்திருக்கின்றேன்./////

  337 என்ற பரல்கள் யோகம் அனைவருக்கும் உள்ளதே! அதனால் கவலையை விடுங்கள்!!!! நன்றி!

  ReplyDelete

 7. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  ஓஹோ! அபரிமிதமான நன்மைகள்
  தரும் யோகமாக இருக்கிறதே!!
  அறியக் தந்தமைக்கு நன்றி ஐயா!!//////

  நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

  ReplyDelete
 8. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,ராகு மற்றும் கேதுவையும் சேர்த்தா?அப்படி என்றால் காலசர்ப்ப யோகம் வந்துவிடுமே.நன்றி./////

  காலசர்ப்ப தோஷமே பின்பு யோகமாக மாறுமே!!! அத்துடன் குடை யோகமும் சேர்ந்து கொள்ளும். நன்றி ஆதித்தன்!!!!

  ReplyDelete
 9. Dear sir, umbrella is best for ever. Like this yogam.

  ReplyDelete
 10. நமக்கு குடையோகம் இருக்கான்னு தெரியலையே...
  கஷ்டம்தான் குடைந்து கொண்டிருக்கிறது ஐயா...

  ReplyDelete
 11. /////Blogger Kesavaraj & Kalaivani said...
  Dear sir, umbrella is best for ever. Like this yogam.////

  நல்லது. நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 12. ////Blogger பரிவை சே.குமார் said...
  நமக்கு குடையோகம் இருக்கான்னு தெரியலையே...
  கஷ்டம்தான் குடைந்து கொண்டிருக்கிறது ஐயா.../////

  யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை! பொறுத்துக் கொண்டு நம் வேலைகளை நாம் உற்சாகத்துடன் பார்க்க வேண்டியதுதான். அதுதான் விவேகமும் கூட! நன்றி!!!!

  ReplyDelete
 13. 23-sep-1981. 2:30 am. All planets are with in 180 degree. then i too lucky guy?

  ReplyDelete
 14. ///Blogger hari kumar said...
  23-sep-1981. 2:30 am. All planets are with in 180 degree. then i too lucky guy?////

  யெஸ். வாழ்த்துக்கள்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com