மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.11.22

Lesson 76 அறுவை சிகிச்சை (Surgery)

Star Lessons

Lesson no 76

New Lessons

பாடம் எண் 76 

தலைப்பு அறுவை சிகிச்சை ()Surgery)

 

அறுவை சிகிச்சை (Surgery) என்றால் யாருக்குத்தான் பயம் இல்லை? 

Surgery is an act of performing surgery may be called a surgical procedure, operation, or simply surgery. In this context, the verb operate means to perform surgery. 

எத்தனை மன திடம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நிலவும் அசாத்திய மருத்துவமனைக் கட்டணங்களுக்கு எங்கே போவது? பணம் இருப்பவனை விட்டுத்தள்ளுங்கள். போதிய பணம் இல்லாதவன் என்ன செய்வான்? யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் அல்லது உறவினர்கள் / நண்பர்களிடம் கையேந்த வேண்டு்ம். அந்த நிலைமை பொருள் இல்லாதவனுக்கு வரக்கூடாது. ஏன் ஒருவருக்கும் வரக்கூடாது. இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு மேலே படியுங்கள். 

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி? 

அதை இன்று பார்ப்போம்! 

எட்டாம் வீட்டில் தேமே என்று தனித்திருக்கும் தீய கிரகங்களால், அந்தத் தீமை உண்டாகாது. 

சனி லக்கினாதிபதியாகவும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கவும், அத்துடன் ஆறாம் அதிபதியைப் பார்த்துத் தொலைக்கவும் செய்யும் நிலையில், அப்படி அமர்ந்திருக்கும் சனியைச் செவ்வாய் தன் பார்வையில் வைத்திருந்தால், ஜாதகனுக்கு ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட வேண்டிய நிலைமை ஏற்படும். 

ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்தினால் பாதிக்கப்பெற்ற நிலையில் - அதாவது சேர்க்கை அல்லது பார்வையால் - பாதிக்கப்பெற்ற நிலையில், ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு உட்பட நேரிடும். உதாரணம் ராகு, செவ்வாயின் பார்வையைப் பெற்று இருக்கும் நிலையில், ஜாதகனுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு முறை அறுவை சிகிச்சை நடக்கும். அது அவைகள் இருக்கும் இடத்தை வைத்து, அறுவை சிகிச்சைக்கு உட்பட இருக்கும் உடலின் அவயங்கள் மாறுபடும் 

அன்புடன்,

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.11.22

Lesson 75 Lesson on Panjangam

Star Lessons

Lesson no 75

New Lessons

பாடம் எண் 75

தலைப்பு பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன பலன்? 

பஞ்சாங்கத்தில், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்று ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிடப்பெற்றிருக்கும். அவற்றிற்கு

உரிய பொருள் என்ன என்பதைப் பற்றி முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன். 

நாளை வைத்துத்தான் என்ன கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியும். நட்சத்திரத்தை வைத்துத்தான் நீங்கள் பிறந்த ராசி தெரியும். திதியை வைத்துத்தான் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்கள் இறந்த நாள் தெரியவரும். அமாவாசை, பெளர்ணமி எல்லாம் தெரியவரும். 

அதுபோல யோகமும் முக்கியம். நீங்கள் அன்று செய்யும் செயல்கள் முடியுமா அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்று தெரியவரும். 

யோகங்கள், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்று மூன்று வகைப்படும். மரணயோகத்தன்று செய்யும் செயல்கள் திருப்தியாக முடியாது. சில செயல்கள் ஊற்றிக்கொள்வதோடு உங்களை அழைக்கழித்துவிடும். 

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு, மரண யோகத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அன்பர் வீடு திரும்பவில்லை. அவுட். மரணமடைந்துவிட்டார். மேலே சென்று விட்டார். 

மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும். 

திருமண முகூர்த்த நாட்கள் எல்லாம் மரணயோக தினத்தன்று இருக்காது. வேண்டுமென்றால் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். 

Routine work எனப்படும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கெல்லாம் யோகத்தைப் பார்க்க வேண்டியதில்லை. 

ஆனால் சுபகாரியங்களைச் செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், பணத்தை முதலீடு செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கும் யோகத்தைப் பார்க்க வேண்டும். 

எங்கே பார்க்க முடியும்? 

பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாட்காட்டிகளில் குறிப்பிட்டு இருப்பார்கள் 

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.22

Lesson 74 Teaching Profession

Star Lessons

Lesson no 74

New Lessons

பாடம் எண் 74

தலைப்பு வாத்தியார் வேலை 

வாத்தியார் என்றால் வாங்கய்யா, வாத்தியாரய்யாஎன்று திரைப்படங்களில் மக்கள் பாட்டுப்பாடி, பிரபலப் படுத்தும் வாத்தியார் அல்ல! பள்ளிகளில், கல்லூரிகளில், கலாசாலையில் பாடம் சொல்லிகொடுக்கும், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் வாத்தியார்.

அதாவது class teacher!

அதற்கு ஜாதகப்படி என்ன கிரக அமைப்பு வேண்டும்?

பத்தாம் வீட்டில் (House of profession) புதன் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 10ம் வீட்டைப் புதன் தன் பார்வையில் வைத்திருக்க வேண்டும். (That is mercury aspecting the 10th house)

இல்லையென்றால் பத்தாம் வீட்டு அதிபதியுடன் புதன் கூட்டணி (association) போட்டிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வீட்டுக்காரனும்  புதனும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் That is aspecting each other

இந்த அமைப்புக்களில் ஏதாவது ஒன்று உள்ளவர்கள்தான் வாத்தியாராக முடியும்!

--------------------------------------

எனக்கு இந்த அமைப்பு இல்லை. அதனால் நான் வாத்தியார் வேலைக்குப் போகவில்லை.

ஆனாலும் புதன் லக்கினத்தைற்கு 7ல் வலுவாக அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருப்பதால் பயிற்றுவிற்கும் திறமையைக் (Teachibg ability) கொடுத்தான். அதானால்தான் பதிவுகளில் எழுதி நான் வாத்தியாராக ஆனேன். அதுவும் கர்மகாரகன் சனி தனது கடைசி தசா புத்தியில் கொடி பிடித்துத் துவங்கி வைக்க, புதன் திசையில், பதிவில் வாத்தியாராக முழு அங்கீகாரம் கிடைத்தது!

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.22

Lesson 73 Chance of career in Films


Star Lessons

Lesson no 73

New Lessons

பாடம் எண் 73

தலைப்பு திரைப்பட வாய்ப்பு 

யாருக்குத்தான் ஆசை இல்லை? பெரும்பாலான மக்களுக்குத் திரைப்படங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் சொல்ல மாட்டார்கள். சிலர் கடும் முயற்சி செய்து அதில் ஒரு இடத்தைப் பிடிப்பார்கள். சிலர் அதுவாகத் தேடி வரட்டும் என்று காத்திருப்பார்கள்.

 பணம், பெயர், புகழ் என்று ஒரு சேர எல்லாம் கிடைக்கும் துறை ஒன்று உண்டென்றால், அது சந்தேகத்திற்கு இடமின்றி திரைப்படத்துறைதான். 

அதிலும் நடிகர் அல்லது பாடகர் என்றால் அதி விரைவில், புகழின் உச்சிக்குப் போய்விடலாம். எண்ணற்ற ரசிகர்கள் வேறு கிடைப்பார்கள். 

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி? 

அதை இன்று பார்ப்போம்! 

சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்! 

நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க! 

சரி, அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்? 

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும். 

4ஆம் வீட்டில் அல்லது 10ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலை. அல்லது 10ஆம் வீட்டின் மீது சுக்கிரனின் பார்வை அல்லது 10ஆம் வீட்டுக்காரனுடன் சுக்கிரன் கூட்டாக (ஒன்றாக) இருக்கும் நிலைமை ஆகியவை அந்த வாய்ப்பை நல்கும்!

------------------------------------------------------------------------------

உதாரணம் 

நடிகர் திரு ரஜினிகாந்த்தின் ஜாதகம். 

சிம்ம லக்கின ஜாதகர். சிம்ம லக்கினம் நாயகர்களுக்கு (Heroes) உரிய லக்கினம்

பத்தாம் வீட்டின் (ரிஷப வீட்டின்) அதிபதியே சுக்கிரன். அதுவும் அவர் அம்சத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார்.

லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் வீட்டைத் தன் பார்வையில் வத்திருப்பது ஒரு சிறப்பாகும்!

இந்த அமைப்புக்கள்தான் அவரை நடிகராக்கின!

அன்புடன்,

வாத்தியார்

================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.11.22

Lesson 72 Lesson on Amarak Yoga


Star Lessons

Lesson no 72

Date 3-10-2022

New Lessons

யோகங்கள்

பாடம்; அமரக் யோகம்! 

அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம். 

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள். 

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். உனக்காக நான், எனக்காக நீஎன்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான். 

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.11.22

Lesson 71 Lesson on Amala Yogam

Star Lessons

Lesson no 71

New Lessons

பாடம் எண் 71

யோகங்கள்

பாடம்; அமலா யோகம்! 

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா? 

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும். 

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். 

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன். 

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்

---------------------------------------------------------------------

யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள். 

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு 

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான். 

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.11.22

Lesson 70 Lesson on Adhi Yogam


Star Lessons

Lesson no 70

Date 30-9-2022

New Lessons

பாடம் எண் 70

யோகங்கள்

பாடம் ஆதி யோகம்! 

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்! 

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது! 

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது. 

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே னைஎன்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது! 

அன்புடன்,

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.11.22

Lesson 69 Ara Souri Yogam

Star Lessons

Lesson no 69

Date 29-9-2022

New Lessons

பாடம் எண் 69

 யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல். 

செளரி என்பதற்கு சனி என்று பொருளாம். 

சரி எப்படி எடுத்துக்கொள்வது? 

எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா? 

அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்? 

அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.

----------------------------------------------------------------

சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்! 

பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும். 

Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.

-----------------------------------------------------------------

என்னவிதமான கேடுகள்? 

சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different fortfolios). அவை அத்தனையும் கெடும். 

என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். 

எல்லோருக்குமா? 

இல்லை! 

வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும். 

உதாரணம்? 

இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள். 

ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் அதிகக்கேட்டைச் செய்யாதா? 

உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-)))) 

இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்! 

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!