மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.22

Lesson 34 and 35 Lesson 10th House Part 2 and 3


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 34
Date  19-8-2022
New Lessons
பாடம் எண் 34

பத்தாம் வீட்டைப் பற்றிய பாடத்தின் தொடர்ச்சி -
பகுதி - 2

பத்தாம் வீட்டு அதிபதி மற்ற இடங்களில் சென்று அமர்வதால் ஏற்படும் பொதுப் பலன்கள்

பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில் வெற்றிமேல் வெற்றியைக் காண்பான். பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ அல்லது தீய வீடுகளில் (6,8,12ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ சிரமப்படுவான். போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி ஏறினால் நான்கடி சறுக்கும்!
++++++
1.
Tenth lord placed in the lagna or 1st house

லக்கினத்தில் அமர்ந்திருந்தால்:
தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை அடைவான். சுய தொழில் செய்வான். தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில் இருப்பான்.தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான். மற்றவர்களால் போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான்.
இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்.
++
2.
Tenth lord placed in the 2nd house

இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்: 
ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன். இரண்டாம் வீடு என்பது 10ஆம் வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும் கை நிறையப் பொருள் ஈட்டுவான். தன்னுடைய குடும்பத் தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும் தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள்.

பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம் அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் பெரும் நஷ்டங் களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத் தொழிலையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித் தவிப்பான்.
++++++
3.
Tenth lord placed in the 3rd house

மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும். பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில் பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின் பங்கும் இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும்
விரும்பப்படும் நிலை கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல் மதிப்பு இருக்கும். 3ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து ஆறாவது வீடாக அமைவதால் இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
++++++++
4.
Tenth lord placed in the 4th house

நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடையவராக இருப்பார்.(person with knowledge in various subjects) இந்த அறிவாற்றலால் பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும் அல்லது கட்டடங்களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு
உயர்வார். அரசியல் அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார். தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான வீட்டையும், வாகனங்களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்
களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
++++++++
5
Tenth lord in the 5th House

ஐந்தாம் வீட்டில் இருந்தால்
வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால் பணம் கொழிக்கும். இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள பலர் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள்.அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம் வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால், இவர்களுக்கு மறைமுக எதிரிகளும் இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த முயல்வார்கள்.
++++++++
6
Tenth lord in the 6th House

ஆறாம் வீட்டில் இருந்தால்:
நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில் இருந்தால், அதில் பிரகாசிப் பார்கள். அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர் என்று பெயர் பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள். அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள் வேலையில் உயர்வதற்கு
அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
+++
7
Tenth lord in the 7th House

ஏழாம் வீட்டில் இருந்தால்:
பத்தாம் அதிபதி இந்த இடத்தில் இருந்தால் ஜாதகரின் தொழில் அல்லது வேலை மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும் அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பார்.அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும். நிர்வாகத்திறமைகள்
உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள், அதோடு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும். இந்த இடம் 10ஆம் வீட்டிற்குப் பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய
வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.
+++++++++
8
Tenth lord in the 8th House

எட்டாம் வீட்டில் இருந்தால்:
இந்த வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலி களாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள். பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த கொள்கைகளை உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப் படுபவர்களாகவும், விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8ஆம் இடம் பத்தாம் வீட்டிற்குப் 11ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம்
கிடைக்கும் வேலைகள் அமையும்.
++++++++++
9
Tenth lord in the 9th House 

ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார். பரம்பரைத் தொழிலில் நாட்டம் உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர் என்பதுபோன்றவேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடையவராகவும் இருப்பார். இவர்களுக்கு இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டுதலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். மனவள மேம்பாட்டுத்துறையில் (psychological counseling) நுழைந்தால் சிறப்பானதொரு
இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்
+++++++++
10
Tenth lord in the Tenth House

பத்தம் வீட்டு அதிபதி 10ல் இருந்தால் தங்கள் தொழிலில் அல்லது வேலையில் பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு
கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தும் அமைப்பாகும். தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு
உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும், அரசுத் தொடர்பும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளைப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்
+++
11
Tenth lord in the 11th House

பத்தாம் அதிபதி 11ல் இருந்தால், ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும், மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள். பெரு நோக்குடையவர்களாக இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும் இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும். பலராலும் விரும்பப்படுவார்கள். இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை
உடையவர்களாக இருப்பார்கள்.
++++++++++
12.
Tenth lord in the 12th House

பத்தாம் அதிபதி 12ல் இருந்தால்.
வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். சிலர் வெளி 
நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முறையற்று நடந்தால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த
அமைப்பினர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும்
அவற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்குத் தீர்வுகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
.....................................

இதன் அடுத்த பகுதி நாளை வெளி வரும்

(தொடரும்)
24/08/2022, 09:52 - umayal2005@gmail.com: ✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 35
Date 20-8-2022
New Lessons
பாடம் எண் 35

10ம் வீட்டைப் பற்றிய  பாடத்தின் தொடர்ச்சி - 
பகுதி - 3

பத்தாம் வீட்டின் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களை பார்த்தீர்கள்

சுப கிரகங்கள், மற்றும் தீய கிரகங்கள் வந்து 10ம் வீட்டில் அமரும் போது   பலன்கள்  வேறுபடும்

 அவற்றை
இன்னொரு  நாள் விவரமாகப் பார்ப்போம் 

10ம் வீட்டைப் பற்றி சுமார் 30 பக்கங்கள் எழுதியுள்ளேன்  வகுப்பறையில் அவைகள் உள்ளன
அங்கே சென்று படிக்க வேண்டுகிறேன்

ளனது ஜோதிட புத்தகம் இரண்டிலும் அவைகள் உளளன
புத்தகம் வைத்திருப்பவர்கள் அதில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்

அவற்றை முழுமையாகத் தர இயலாது சாமிகளா

கோள்சாரப்படி 10ம் வீட்டை லக்கினமாக வைத்து பாரத்தால் அந்த இடத்திற்கு 6_8, 12ல்  கோள்சாரச் சனி வரும் போதெல்லாம்  வேலையில் அல்லது செய்யும் தொழிலில் பிரச்சினைகள் உண்டாகும் அதை மனதில் கொள்க

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.22

lesson No.33 Lesson on 10th House


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number  33
New Lessons
பாடம். எண் 33

இன்று பத்தாம் வீட்டைப் பற்றிய பாடம்

பத்தாம் வீடு!

ஜோதிடத்தின் முக்கியமான பகுதி இதுதான். அதுபோல கடினமான பகுதியும் இதுதான்.

பத்தாம் வீடு, ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும் தொழிலை அல்லது வேலையைக் குறிப்பிடுவதாகும். 

பார்வைகளை, அந்த இடத்தில் வந்தமரும் கிரகங்களை, அதிபருடன் சேர்கின்ற அல்லது கூட்டணி போடுகின்ற கிரகங்களை, அதேபோல கர்மகாரன் சனீஷ்வரனின் நிலைமை ஆகியவற்றைப் பொறுமையாக அலசுவதன் மூலம் ஒருவரின் ஜீவனத்திற்கான வழியை அறியலாம். இதில் அஷ்டகவர்க்கம் பெரும் உதவியாக இருக்கும்.

முதலில் ஒருவனுக்கு வேலை உண்டா இல்லையா அல்லது தொழில் செய்வானா என்று பார்ப்பதற்கும், அல்லது தொழில் ஸ்தானம் முழுமையாகக் கெட்டிருந்தால் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரைச் சுறிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பானா என்று பார்ப்பதற்கு இந்த வீடு உதவி செய்யும். உத்தியோகத்தில் அல்லது வேலையில் எந்த அளவிற்கு ஒருவன் உயர்வான் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வான் என்று பார்ப்பதற்கும் இது உதவும். எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவான் அல்லது கீழே விழுவான் என்று பார்ப்பதற்கும் உதவும்.

இந்த ஜோதிடக் கலையை நிர்மானித்த முனிவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த வேலை வாய்ப்புக்களும், தொழில்களும் மிகச் சிலவே. பின்னாட்களில் வந்த ஜோதிட மேதைகள் தங்கள் அனுபவத்தால் எழுதி வைத்து விட்டுப்போன ஏராளமான f குறிப்புக்களும் உள்ளன. அவை அனைத்தையும் ஒருவன் கற்றுத் தேர்ந்திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் உள்ள வேலை வாய்ப்புக்களை வைத்து ஒரு குறிப்பிட்ட வேலையை, ஜாதகனுக்காகச் சொல்வது இயலாது.

ரயில்வேயில் வேலை கிடைக்கும் என்று ஒருவனுக்கு எப்படிச் சொல்ல முடியும்? அல்லது நீ கனரக வாகனம் ஓட்டும் வேலைக்குச் செல்வாய் என்று எப்படிச் சொல்ல முடியும்? அரசு வேலை என்று சொல்லலாம். அவ்வளவுதான் அரசுத்துறையில், ஆயிரம் வேலைகள் உள்ளன!. 

உடல் உழைப்பு வேலை என்று சொல்லலாம். உடல் உழைப்பிலும் ஆயிரக்கணக்கான வேலைகள் உள்ளன.

நீ வியாபாரம் செய்து பொருள் ஈட்டுவாய் என்று சொல்லலாம். எந்த வியாபாரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மருத்துவத் துறையில் வெற்றி பெறுவாய் என்று சொல்லாம். மருத்துவத் துறையில்தான் எத்தனை பிரிவுகள் உள்ளன? டாக்டரும் மருத்துவத் துறைதான், மருந்து உற்பத்தி செய்பவரும் மருத்துவத் துறைதான், மருத்துவமனை வைத்திருப்பவரும், மருந்துக் கம்பெனி விற்பனைப் பிரநிதியும் மருத்துவத் துறைதான்.

கலைத்துறையில் எத்தனை பிரிவுகள் உள்ளன? சுக்கிரனும் ராகுவும், அல்லது சுக்கிரனும், புதனும் அல்லது ராகுவும், புதனும் எந்த ஜோடி சம்பந்தப்பாட்டாலும் கலைத் துறையில் சிறப்படைய முடியும். ஆனால் கதை வசனம், இயக்கம், இசை, நடிப்பு என்று அதில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன இல்லையா?

ஆகவே உயர்வைச் சொல்ல முடியுமே தவிர உயர்வு அடையும் காலத்தைச் சொல்ல முடியுமே தவிர, வேலையை மிகத்துல்லியமாகக் குறிப்பிட முடியாது. அதை நினைவில் வையுங்கள்.

இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும்
பொருத்திருங்கள்

அன்புடன் 
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.8.22

Star Lessons Lesson no 32 ஒன்பதாம் வீடு - பகுதி - 2


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 32
New Lessons
பாடம் எண் 32

ஒன்பதாம் வீடு - பகுதி - 2

அ) தந்தை. பூர்வீகச் சொத்துக்கள்
ஆ) அறம், கொடை, தர்மச் செயல்கள் போன்ற நிகழ்வுகள். அவற்றைச் செய்யும் பாக்கியங்கள்.
இ) தலைமை. தலைமை ஏற்கும் வாய்ப்பு, புகழ், சமூக அந்தஸ்து போன்றவை.

1.Father & ancestral properties
2.Righteousness & charity
3.Leadership & fame

ஒன்பதாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும

9th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது ஒன்பதாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
ஒன்பதிற்குரியவன், இலக்கினத்தில் இருந்தால், ஜாதகன் சகல பாக்கியங்களையும் உடையவனாக இருப்பான். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் இடத்தில் பக்தியும், மரியாதையும் உடையவனாக இருப்பான். தான தர்மங்களில் நாட்டமுடையவனாக இருப்பான்.
2
ஒன்பதிற்குரியவன், இரண்டில் இருந்தால்,குடும்பம் விருத்தி உடையவனாக இருப்பான். பிறர் சொத்துக்களைப் பெறுபவனாக, உயர் நிலையில் உள்ளவனாக இருப்பான்.
3
ஒன்பதிற்குரியவன் மூன்றில் இருந்தால்,சகோதர அனுகூலம், பிதுர் தோஷம் உடையவனாக இருப்பான். பிதுர் சொத்துக்களை இழப்பவனாக இருப்பான்.
4
ஒன்பதிற்குரியவன் நான்கில் இருந்தால், பெற்றோர் அதரவு, தாய்வழி உறவினர் ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான். வீடு, மனை, வாகன யோகம் செல்வம் உடையவனாக இருப்பான்.
5.
ஒன்பதிற்குரியவன் ஐந்தில் இருந்தால், புத்திரர்களால் யோகம், பிதுர் சொத்துக்கள், அரசு அனுகூலம் உடையவனாக இருப்பான். வீடு, மனை, வாகனம், தெய்வ வழிபாடு, பணியாட்கள் உடையவனாக இருப்பான்.
6
ஒன்பதிற்குடையவன் ஆறில் இருந்தால்,பிதுர் சொத்துக்கள் விரையமாகிவிடும்.புத்திர தோஷம், பாக்கிய நாசம், கடன் உள்ளவனாக ஜாதகன் இருப்பான்.
7.
ஒன்பதிற்குரியவன் ஏழில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் விருத்தியடையும். லட்சுமிகரமான மனைவி கிடைப்பாள். புத்திர வழியில் நன்மைகள் அடையப் பெறுவான்.
8
ஒன்பதிற்குரியவன் எட்டில் இருந்தால்,பாக்கிய நாசம், புத்திரநாசம் உண்டாகும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். இந்த இடத்துடன் சனி, ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால் பிதா அங்கக்குறைவு உடையவராக இருப்பார்.
9
ஒன்பதிற்குரியவன் ஒன்பதில் ஆட்சி பலத்துடன் இருந்தால், பிதாவுக்கு ஆயுள் தீர்க்கம். பாக்கியங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். தெய்வ வழிப்பாட்ட்டில் நாட்டம் உடையவனாக இருப்பான். சிறப்பான குடும்பம், பணியாட்கள், பந்தங்கள் உடையவனாக இருப்பான்.
10
ஒன்பதிற்குரியவன் பத்தில் இருந்தால், பாக்கியங்கள், சுயசம்பாத்தியம் உடையவனாக ஜாதகன் இருப்பான். சொத்து, சுகம், பெரிய மனிதர்களின் நட்பு உடையவனாக இருப்பான். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவான்.
11
ஒன்பத்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், தந்தை படிப்படியாக உயர்ந்த நிலையை அடைவார். குடும்ப செளகர்யம், தெய்வீக வழிபாடு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
ஒன்பதிற்குரியவன் பன்னிரெண்டில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் விரையமாகும். வழக்குகள், தன விரையம் உடையவனாக ஜாதகன் இருப்பான். அயன, சயன, போகம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.

9ம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவு பெறுகிறது

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.8.22

Lesson 31 Lesson on Ninth House


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 31
New Lessons
பாடம் எண் 31

இன்று ஒனபதாம் வீட்டைப் பற்றிய பாடம்

ஒன்பதாம் வீட்டிற்கு பாக்கிய ஸ்தானம் என்று பெயர் ( House of gains)
பாக்கியம் என்றால் என்ன?
உங்கள் முயற்சி இல்லாமல் அதுவாகக் கிடைக்கும் நன்மைகள் எல்லாம் பாக்கியமாகும்

9ம் வீடு தந்தைக்கு உரிய இடம் இந்த வீடும் தந்தைக்கு காரகன் சூரியனும் வலிமையாக இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார்
அவர் ஜாதகனை நன்கு படிக்க வைத்து, நல்ல வேலையில் சேர்த்து, நல்ல குடும்பத்துப் பெண்ணை அவனுக்கு மணம் முடித்து வைத்து அவனை மேன்மைப் படுத்தும் அத்தனை வேலைகளையும் சிறப்பாகச் செய்து 
வைப்பார்

இந்த வீடும், காரகனும் நன்றாக இருந்தால்தான் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்
இல்லை என்றால் கிடைக்காது

 பெண்களுக்கு இந்த வீடு அதி முக்கியமானது நல்ல கணவன், குழந்தை   நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை என்று அவளுக்கு வேண்டியது எல்லாம் கிடைக்கும்

இந்த வீட்டு அதிபதி 6, 8, ,12ம் இடங்களில் அமரக்கூடாது. நீசம் அடையவும் கூடாது

 2. தர்மச் செயல்கள்  , அறப் பணிகள் கோவில் திருப்பணிகள் செய்வதற்கான அமைப்பை ஜாதகனுக்கு கொடுப்பது இந்த வீடுதான்

3. தலைமை தாங்கக் கூடிய அமைப்பைக் கொடுப்பதுவும் இந்த வீடுதான்

இதன் தொடர்ச்சி - அதாவது அடுத்த பகுதி நாளை வெளிவரும்
பொறுத்துக் கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.22

Lesson 30 Lesson on Eighth House Part 3

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 30
New Lessons
பாடம் எண்30

எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - 
3 வது பகுதி

 நடக்குமென்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்

1
ராசிகளில் மேஷம், கடகம், துலாம் ,மகரம் - ஆகியவை சரராசிகள் எனப்படும். 
இந்தச் சரராசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு  அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். 
மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம். அதன் அதிபதி சனி. மேஷத்திற்கு
சனி பாதகாதிபதியாகிறார். கடகத்திற்கு 11-ம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன். கடகத்திற்கு பாதகாதிபதியாகிறார்.   துலாத்திற்கு 11-ம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். துலாத்திற்கு சூரியன் பாதகாதிபதியாகிறார். 
பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மரணத்தைக் கொடுப்பார்கள்.
மற்றபடி அவர்கள் வேறு எந்த உபத்திரவத்தையும் கொடுக்க மாட்டார்கள் 
-------------------------------------------------------------------
உதாரணத்திற்கு மேஷ ராசியை எடுத்துக் கொள்வோம். அதன் பாதக அதிபதி சனி. அதன் லாபாதியும் அவரே! ஜாதகனுக்கு பலவிதங்களில் லாபத்தைக் கொடுத்துக்கொண்டே வருபவர் உரிய நேரம்  வரும்போது ஜாதகனைப் போட்டுத் தள்ளவும் தயங்க மாட்டார். ஜாதகனுக்கு ஹீரோவாக செயல்பட்ட சனி, ஒரே நாளில் வில்லனாகிக் கத்தியை உருவி ஒரே போடாகப் போட்டு மேலே அனுப்பிவிடுவார்,

லாபாதிபதியே பாதகாதிபதியாவது அப்படித்தான் நடக்கும். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல் படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல்படுவார். மாரகம் என்று வரும் போது மரணத்தைக் கொடுக்கத் தயங்க மாட்டார். கடமை தவறாதவர்கள் கிரகாதிபதிகள்!
-------------------------------------------------------
2
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற்கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர். அவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனி யோககாரகன் ஆவார். அவர் தன்னுடைய தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார். 

ஆயினும் ஜாதகனுக்கு ஆயுள் முடியும்போது அவர் தன் கடமையைச் செய்யாமல் விடுவதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நன்மைகளைச் செய்தவர், ஆயுள் முடியம்போது மரணத்தைக் கொடுக்கத் தவறுவதில்லை!
---------------------------------------------------------
3
உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கு அதிபதி குரு பாதகாதிபதியாகிறார். 
தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில்  திருமணத்தைச் செய்து வைத்து ஜாதகனை மகிழ்வித்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது, ஜாதகனை மேலே  அனுப்பிவைக்கவும் செய்வார்கள். 

மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார் யார் என்பதைச் சொல்லிக்கொடுத்துவிட்டேன்.

இனி அடுத்தபாடம்
++++++++++++++++++++++
  “நடக்குமென்பார் நடக்காது
      நடக்காதென்பார் நடந்துவிடும்
   கிடைக்குமென்பார் கிடைக்காது
      கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்”

என்று கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதினார். அது ஜோதிடத்திற்கு முற்றிலும் பொருந்தும்.

ஜோதிடத்திற்குப் பலவிதிகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ளன. எல்லாவற்றையும் சீர் துக்கிப் பார்த்துப் பலனைச்  சொல்ல வேண்டும். அதற்கு ஜோதிடத்தில் நல்ல பாண்டித்யமும், பொறுமையும் வேண்டும். அதைவிட முக்கியமாக தெய்வ அனுக்கிரகமும் வேண்டும். அப்போதுதான் வாக்குப் பலிதம் இருக்கும். சொன்னது சொன்னபடி நடக்கும்.

இல்லாவிட்டால் ஊற்றிக் கொண்டுவிடும்.

தசாபுத்திப் பலன்களையும், கோள்சாரப் பலனையும், எந்த ஜோதிடன் வேண்டுமென்றாலும் சரியாகச் சொல்வான். மரணத்தைக் கணிப்பதற்கு மட்டும் அதீதத் திறமையும், ஞானமும் வேண்டும்.

என் சொந்தக்காரர் ஒருவருக்கு, ஜோதிடர் ஒருவர், நீங்கள் இன்னும் பத்து ஆண்டுகள் உயிரோடு இருப்பீர்கள் என்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அடுத்து வந்த மூன்றாவது மாதமே இறந்துவிட்டார். சும்மா இறக்கவில்லை. வயிற்றில் பெரிய வீக்கம் ஏற்பட்டு, பத்து நாட்கள் மருத்துவமனையில், அவதிப்பட்டுவிட்டு இறந்து போனார்.

அதுபோன்று நிறைய உண்மைக் கதைகள் இருக்கின்றன.

அதானால்தான் ஜோதிடம் கற்கும்போது முதல் விதியாக இதைச் சொல்லித் தருவார்கள்:

ஜோதிடத்தால் என்ன நடக்கவுள்ளது என்பதை மட்டுமே ஜோதிடர் கோடிட்டுக் காட்டலாம். ஆனால் அறுதியிட்டுச் சொல்லக் கூடாது. அந்த சக்தி ஆண்டவன் ஒருவருக்கு மட்டுமே உண்டு!
------------------------------------------
முதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:

பிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது! பாலரிஷ்ட தோஷம்!

ஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று  வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம் நிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.

ரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே! அதனால் குழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.

சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.

எது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.

அதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):

கண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:

1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப்  பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம். 

2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.

3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின்  பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.

4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்

5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்

6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில்  சுபக்கிரகங்களான குரு  அல்லது  சுக்கிரன் பாபகர்த்தாரி  யோகத்தில்  மாட்டிக் கொண்டிருந்தால்  குழந்தைக்குக் கண்டம்

7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்

8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.

9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்

10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை  என்றால், குழந்தைக்குக் கண்டம்
--------------------------------------------------------------------
முக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில்  சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக  ஐம்பது  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட  தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச்  செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.

இல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.

அடுத்ததாக அல்பாய்சு, மத்திம ஆயுசு, பூரண ஆயுசு ஆகியவற்றிற்கான கிரக அமைப்புக்களைப் பார்க்க வேண்டும்

இன்றல்ல. 
இதன் தொடர்ச்சியாக அது வராது இன்னொரு  சமயத்தில் வரும். 

இடைப்பட்ட நாட்களில் வேறு பாடங்கள் வெளியாகும்

 தொடர்ந்து சாம்பார் சாதத்தையே சாப்பிட்டுக்கொ வண்டிருக்க  முடியுமா? அதாவது தொடர்ந்து எட்டாம் பாடத்தையே படித்துக் கொண்டிருக்கலாமா?
 இடையில் வற்றல்குழம்பு, ரசம்,  கெட்டித் தயிர், பாயசம் என்று வெரைட்டியாக உணவு இருக்க வேண்டாமா? 

ஒரு வார்த்தை சொல்லுங்கள்!

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.
வாழ்க வளமுடன்!
=================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.8.22

Lesson 29 Lesson on eighth House Part Two


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Twenty Nine
Date 12-8-2022
New Lessons
பாடம் எண் 29

எட்டாம் வீட்டைப்பற்றிய பாடத்தின் தொடர்ச்சி

எட்டாம் வீட்டிற்கு அதன் அதிபதி முக்கியம்
அது போல ஆயுள் காரகன் சனீஷவரனும் முக்கியம்

இருவரும் ஜாதகத்தில் இருக்கிறார்களோ அதை வைத்து பலன்கள் கிடைக்கும்

இன்று எட்டாம் வீட்டு அதிபதி (Owner) எங்கே இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

 எட்டாம் அதிபதி சென்று அமர்ந்த இடத்திற்கான பலன்கள்

1 எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால், சொல்லவே வேண்டாம். கடனிலேயே தினமும் முங்கிக் குளிக்க வேண்டும். ஜாதகனுக்கு வியாதிகள், கடன் தொல்லை, வறுமை மூன்றும் சட்டைப் பையிலேயே இருக்கும் (அதாவது கூடவே இருக்கும்) எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் (Misfortune) தொடர்ந்து வரும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும்.

2 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்:
கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான  உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும் ஜாதகனின் வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும்  தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான்
அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது.அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு  செய்து அழித்துவிடுவான். உடல் நலம் இருக்காது.மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான்.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

3 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்:
உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. உடன் பிறப்புக்கள் என்றால் கட்சிக்காரர்கள் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் என்று பொருள் கொள்ளவும்.மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். ஏன் சமயத்தில் காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும்.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய  கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு  இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

4.எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:
தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும்  இருக்காது.குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை விட்டுப்போகும்.சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது.வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள்  சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும்.
ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும்.சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும்.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

5 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்:
பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன்  விரோதப்போக்கு நிலவும்.அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின்  பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும்.அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும்.இந்த சேர்க்கை,  தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால்,சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த  இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும்.இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்

6.எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்:
அற்ப ஆயுள் (** இது பொது விதி) உடல் ஸ்திரமாக இருக்காது.ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான்.சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும்.இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகம் ஏற்படும். ஜாதகனுக்கு செல்வம் சேரும். புகழ் உண்டாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். அவன் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும். (அப்பாடா, இதுவரை சொன்ன வற்றில் இது ஒன்றுதான் அம்சமாக,  சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.)

7 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்:
பூரண ஆயுள் உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள்.இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும்
சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்  இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.

8.எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்:
ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு:


9 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்:
பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும்.ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் (உங்கள் மொழியில் சொன்னால் கெட்டிருந்தால்) ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார். இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும்.இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்!

10 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்:
ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும். அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும். அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும்.
எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.

11. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்:
மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும். நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும் இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.

12 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்:
தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள்.ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும்.
சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான்.
எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான் (அட, இது ஒன்றுதாங்க நன்றாக உள்ளது)

(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.8.22

Lesson 28 Lessson on Eighth House

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Twenty Eight
New Lessons
பாடம் எண் 28

இன்று எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம்

எட்டாம் வீடு முக்கியமான வீடு
ஜாதகனின் வாழ் நாட்களைச் (Longevity) சொல்லும் வீடு
லக்கினம் பிறப்பைச் சொல்லும் வீடு
எட்டாம் வீடு இறப்பைச் சொல்லும் வீடு

லக்கினத்திற்கு 8ல் இருப்பது 8ம. வீடு 
8ம் வீட்டிற்கு 6ல. இருப்பது லக்கினம்  இரண்டும அஷ்டம சஷ்டம நிலைப்பாட்டில் உள்ளன

எட்டாம் வீட்டை வைத்து ஒரு ஜாதகனின் ஆயுளைச் சொல்லலாம் (That is the Life span of the native of the horoscope)
அவனுடைய மரணம் எவ்வாறு இருக்கும் என்பதும்  தெரிய வரும்

8ம் வீட்டைப் பற்றி இங்கே  சுருக்கமாகத்தான் சொல்ல உள்ளேன்
எனது நூலில் 8ம் வீட்டைப் பற்றி விரிவான பாடங்கள் உள்ளன
(14 அத்தியாயங்கள் 48  பக்கங்களில் உள்ளன)
அவற்றை முழுமையாக இங்கே தர இயலாது)
மொத்தப் பாடங்களும் எனது வகுப்பறையில் உள்ளன  அங்கே சென்று படித்துக் ்கொள்ள வேண்டுகிறேன்
எனது புத்தகம் 2ஐ வைத்திருப்பவர்கள் அதை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்

எட்டாம் வீட்டிற்கு 3 முக்கியமான பணிகள்
1. ஜாதகனின் ஆயுள் (longevity ) 
2. இறக்கும் விதம் (Way of death)
3. வாழ்க்கையில் சந்திக்கவிருக்கும் கஷ்டங்கள் (difficulties) அவமானங்கள்(  degradation)
ஆகியவைகள் தெரியவரும்

ஜோதிடத்தில் இது சவாலான பகுதி

யாரும் தங்கள் ஜாதகத்தை வைத்துக் கொண்டு குழம்ப வேண்டாம்

அடியவன் எழுதியுள்ள 14 அத்தியாயங்களையும் முதலில் படியுங்கள். ஒரு தெளிவு பிறக்கும்

 Don't jump to any conclusion by seeing general rules

1. எட்டாம் வீட்டு அதிபதி கஷ்டமான பலன்களையே கொடுப்பார்,
2. மரணம், விபத்தில் அடிபடுதல், 
3.கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, அதாவது வறுமையான சூழல்
4. அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை
ஆகியவற்றை அவர்தான் ஏற்படுத்துவார்

மனிதனின் ஆயுள் 4 வகைப்படும்
1. குழந்தைப் பருவத்தில் மரணம் - 8 வயதிற்குள்
2. அற்ப ஆயுள் - இது 8ல் இருந்து 32 வயதிற்குள் ஏற்படும்
3. மத்திம ஆயுள் -  இது 32 முதல் 64 வயதிற்குள் 
4. பூரண ஆயுள் 64ற்கு மேல் 80, 100, 120 வயது வரை

எப்போது மரணம் ஏற்படும் ?
நம் வாழ் நாட்களை நிர்ணயிப்பவர்கள் 8ம. வீட்டு அதிபதியும் 3ம் வீட்டு அதுபதியும்
இந்த வீடுகளுக்கு 12ம் வீடுகள்
7ம் வீடும் 2ம் வீடும்
அந்த இரண்டு வீட்டுக்கார்ர்களும்தான் நம்மை சிவலோகம் அல்லது வைகுண்டத்திற்கு அனுப்பி வைப்பவர்கள்

அதாவது 2;மற்றும் 7ம் வீடுகளின் திசை/ புத்திகளில் மரணம் ஏற்படும்

உதாரணத்திறகு சிம்ம லக்கினக்கார்ர்களுக்கு 2ம் அதிபதி புதன் 7ம் அதிபதி சளீஷ.வரன்
அவரகளுக்கு புதன் திசை சனி புத்தியில் அல்லது சனி திசை புதன் புத்தியில் மரணம் ஏற்படும  இது பொது விதி

ஏதற்காக பொது விதி என்கிறீர்கள் ?
நீங்கள் குழம்பக்கூடாது என்பதற்காகத்தான் சாமிகளா

 It is very simple in Ashtagavarga  you can know it from Suyavarga of Saturn

விளக்கம் இன்னும் உள்ளது
அது 2வது பகுதியாக நாளை வரும்
அன்புடன் 
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.8.22

Lesson 27 Lesson on Seventh House

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number twenty seven
Date 10-8-2022 wednesday
New Lessons
பாடம் எண் 27

இன்று ஏழாம் வீட்டைப்பற்றிய பாடம்

ஏழாம் வீடு ஒருவரின் திருமண வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் வீடு

7ம் வீடு, அவ் வீட்டின் அதிபதி (Owner) களத்திரகாரகன் சுக்கிரன் (Authority for marriage)  ஆகியவை வலிமையாக இருந்தால் சின்ன வயதிலேயே (அதாவது உரிய வயதிலேயே) திருமணம். நடக்கும்

ஜாதகப்படி எப்போது திருமணம் நடக்கும்?

சுக்கிர திசை/ புத்திகளில் அல்லது ஏழாம் வீட்டுக்காரன. திசை / புத்திகளில் திருமணம் நடக்கும்

ஏழாம் வீட்டில் குரு பகவான் இருந்தால்  நல்ல மனைஙி கிடைப்பார்  பெண்ணாக இருந்தால் நல்ல கணவர் கிடைப்பார் 
7ம் வீட்டுக்கார்ர்  திரிகோணம் அல்லது கேந்திர வீடுகளில் இருந்து அவர் குருவின் பார்வையைப் பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பார்

சந்திரன் அல்லது சுக்கிரன் 7ல் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பார்
குருவும் சுக்கிரனும்  சேர்ந்திருந்தால் படித்த மனைவி கிடைப்பார்

எல்லா பெண்களுமே இப்போது படிக்கிறார்கள் என்றாலும்  படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பார

 லக்கினத்தைவிட 7ம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தால்     நீங்கள் எதிர் பாரக்கும மனைவி அமைவார்

யாராக இருந்தாலும அஷ்டகவர்க்கத்தின்  மொத்தப் பரல்கள் 337 தான்
அம்பானிக்கும் 337 தான் எனக்கும்,  உங்களுக்கும் 337தான அதை மனதில் வையுங்கள்

337 வகுத்தல் 12 வீடுகள் - சராசரி ஒரு வீட்டிற்கு 28 பரவகள்தான்
7ம் வீட்டில் 30 பரல்களுக்கு மேல் இருந்தால் நல்ல மனைவி கிடைப்பார்

 7ம் வீட்டுக்காரன் லக்கினத்திற்கு 12்ம் வீட்டில் அல்லது 6ம் வீட்டிலோ (அது 7,ம் வீட்டுற்கு 12ம. வீடு) அமர்ந்திருந்தால. திருமண வாழ்க்கையில் அடிக்கடி உரசல்கள் ஏற்படும்  சிலருக்கு அந்த உரசல்கள் பெரியதாகி விவாகரத்து வரை சென்றுவிடும்
7ம் வீட்டில் 28 பரல்களுக்கு மேல் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்

7ம. வீட்டுக்காரன் நீசம் அடையக்கூடாது்  6, 8, 12ம் இடங்களில் அமர்ந்திருக்கக்
கூடாது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருக்கக் கூடாது் திருமண வாழ்விற்கு அது நன்மையான அமைப்பல்ல

7ம் வீட்டில் சுக்கிரன்,  குரு, புதன் ஆகிய கோள்கள் மூன்றும் ஒன்றாக இருந்தால் ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண். மனைவியாகக் கிடைப்பார்
சுக்கிரனும் சனியும் சேர்ந்திருந்தால் கஷ்டப் படுகிற வீட்டுப் பெண் மனைவியாகக் கிடைப்பாள்

அவள் உழைக்கக்கூடிய,  அனுசரித்துப போக்க்கூடிய பெண்ணாக இருப்பாள்

 லக்கினாதிபதியும் ஏழாம் வீட்னுக்காரனும் சேர்ந்து 6, 8, 12ம்க வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு திருமணம் நடைபெறாது
( இது பொது விதி)

ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு வர இருக்கும் அல்லது  வந்திருக்கும் மனைவியின் நட்சத்திரத்தைத் தெரிந்து கொள்ள முடியுமா?

முடியும்

அதறகான பாடம் விரிவானது்  அதை இன்னொரு சமயம்  தனிப்பாடமாக எழுதுகிறேன் பொறுத்துக் கொள்ளுங்கள்
 ( எனனுடைய  2வது புத்தகம் பக்கம் எண் 301ல் அந்தப் பாடம் உள்ளது)

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.22

Lesson 26 Sixth House

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Twenty Six
Date 9-8-2022
New Lessons
பாடம் எண். 26

இன்று ஆறாம் வீட்டைப் பற்றிய பாடம்

ஆறாம் வீட்டிற்கு மூன்று செயல்கள்

ஒரு ஜாதகனின் நோய், கடன், எதிரி ஆகியவற்றை விவரிப்பது இந்த வீடுதான்
( Diseases, Debts and Enemies)

உலகில் யார் செல்வந்தன்?
யாருக்கு கடனும், நோயும் இல்லையோ அவன்தான் செல்வந்தன்

பணம் இருப்பவன் எல்லாம் பணக்காரன் அல்ல
கடனும் நோயும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவன் பணக்காரன்

நோய்களில் இரண்டு வகைகள் உள்ளன. தீர்க்கக்கூடிய நோய் தீர்க்க முடியாத நோய்

ஆறாம் வீடும், அதன் அதிபதியும பலம் இன்றி இருப்பவர்களுக்கு பிணிகள் ( தீராத நோய்கள்) உண்டாகும் 
உடல் காரகன. சூரியன் ஜாதகத்தில் வலிமை இன்றி இருந்தால் அவருடைய கோள்சாரத்தில. அவர. 6ம் வீட்டுக்காரனை கடக்கும் போதும் அல்லது பார்க்கும் போதும் நோயகள்  வந்து உபத்திரவம்  செய்யும்

6ம. வீட்டுக்காரன் பலவீனமாக இருந்தால், ஜாதகனை பல இடங்களிலும் கடன் வாங்க வைத்து அவதிப்பட வைத்துவிடும்  அதுவும் 6 வீட்டுக்காரனின் திசை/ புத்திகளில் ஜாதகன் நொந்து போய் விடுவான்
2ம் வீட்டில் மாந்தி இருக்க அந்த வீட்டுக்காரனின் திசை புத்தியிலும் ஜாதகன் கடன் தொல்லையால் அவதிப்பட  நேரிடும்

6ம. வீட்டுக்காரன் பலவீனமாக இருந்தால், ஜாதகனுக்கு பல வகைகளிலும் எதிரிகள் இருப்பார்கள்  அதுவும் 6ம் வீட்டுக்காரனின் திசை/ புத்திகளில் ஜாதகனுக்கு அவனுடைய எதிரிகளால்  பிரச்சினைகள் உண்டாகும்

ஆறாம் வீட.டில் 30  அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு எந்த வித பாதிப்பும். ஏற்படாது் எல்லாவற்றையும் எதிர் கொள்ளும் ஆற்றல் அவனிடம் இருக்கும்
கடன் கொடுத்தவன் கடனைத் திருப்பிக் கேட்கப் பயப்படுவான்
எதிரிகளும் அவனிடம  உரசல் ஏதும் இல்லாமல்  அவனைப் பார்த்தால், பாரத்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள்
இல்லை என்றால் உதை வாங்கிக் கொண்டு ஓடிப் போய் விடுவார்கள்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.22

Lesson 25 Lesson on 5th House

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Twenty five
New Lessons
பாடம் எண் 25

இன்றைய பாடம் ஐந்தாம் வீட்டைப் பற்றியது

5ம. வீட்டிற்கு மூன்று செயல்பாடுகள்
1. பூர்வ புண்ணியம.(வாங்கி வந்த வரம்)
2. குழந்தை பாக்கியம.
3. மனதிற்கான, அறிவிற்கான இடம் ( House of mind and keen intelligence)

பூர்வ புண்ணியம் என்பது முன ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள், தர்மங்கள், புண்ணியங்களுக்கான பலன்கள். Mark sheet என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த வீடும், வீட்டு அதிபதியும் வலிமையாக இருந்தால் அதிகமான புண்ணியத்தோடு பிறவி எடுத்துள்ளதாக நீங்கள் திருப்திப் பட்டுக்கொள்ளலாம்  பலன்கள சிறப்பாக இருக்கும்

அந்த வீட்டு அதிபதி 6, 8, 12ம் வீடுகளில் டெண்ட் அடித்து அமர்ந்திருக்கக் 
கூடாது நீசம் அடைந்திருக்கவும்  கூடாது்

அப்படி இருந்தால் பலன்கள் இருக்காது

குழந்தை பாக்கியத்திற்கு இந்த வீட்டைத்தான் அலச வேண்டும்
இந்த 5ம் வீடு, அதன் அதிபதி சென்று அமர்ந்த இடம், குழந்தைக்கான காரகன் குரு பகவான் இருக்கும் இடம் ஆகிய 3 இடங்களுமே  சிறப்பாக அமைந்திருக்க வேண்டும் 3 இடங்களிலுமே 28 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்  இருந்தால் திருமணம் ஆன ஒரு ஆண்டிலேயே குழந்தை பிறந்து விடும் இல்லை என்றால் தாமதமாகும்  அந்த 3 ,இடங்களிலுமே 25 பரல்களுக்குக் குறைவாக இருந்தால் குழந்தை பாக்கியம் இருக்காது. தம்பதிகள் இருவருக்கும் இதை வைத்து அலச வேண்டும்  இருவரில் ஓருலருக்கு பரல்கள் நன்றாக இருந்தால் அது கை கொடுக்கும்  சற்று கால தாமத்த்துடன் அத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கும்

இந்த வீட்டிற்கு மனமும் ஓரு அங்கம் (Yes it is house of Mind and keen intelligence)
இந்த வீடும் வீட்டின் அதிபதியும் வலிமையாக இருந்தால் ஜாதகனுக்கு Strong Mind  இருக்கும். குழப்பமில்லாத தெளிவான மனம் இருக்கும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.8.22

Lesson 24 நான்காம் வீட்டைப் பற்றிய பாடம்

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Twenty Four
Date 6-8-2022
New Lessons
பாடம் எண் 24

இன்று நான்காம் வீட்டைப் பற்றிய பாடம்

நான்காம் வீட்டிற்கு மூன்று பணிகள்
1. தாய்க்கான வீடு
2. கல்விக்கான வீடு
3. வாழ்க்கை வசதிகளுக்கான வீடு ( Comforts in Life)

நான்காம் வீடு கல்விக்கான வீடு் அல்லவா - 
கால தேவன் கல்வியையும் அறிவையும் ஒன்றாக வைக்கவில்லை் தனித்தனி வீடுகள் அறிவிற்கு ஐந்தாம்  வீடு் 

இரண்டையும் ஒன்றாக வைத்திருந்தால் என்ன ஆபியிருக்கும் யோசித்துப் பாருங்கள்

அந்த வீடு கெட்டிருந்தால் அந்த ஜாதகனுக்கு கல்வியும் இல்லாமல் அறிவும் இல்லாமல். அடி முட்டாளாக இருப்பான்

கல்விக்கும், அறிவிக்கும் தனித்தனி வீடுகள் இருப்பதால் படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு.

படிக்காத மேதைகளுக்கு கர்ம வீரர் காமராஜரையும்  கவியரசர் கண்ணதாசன் அவர்களையும் சொல்லலாம்

தாய்க்கும், தந்தைக்கும் தனித்தனி வீடுகள் தாய்க்கு இந்த 4ம் வீடு. தந்தைக்கு 9ம் வீடு.

அதுபோல தந்தைக்குக காரகன் (Authority) சூரியன்  தாய்க்கு காரகன் (Authority) சந்திரன்  ஜாதகத்தில்
4ம் வீடும் சந்திரனும் வலிமையாக இருந்தால் நல்ல தாய் அமைவார்
அது போல இந்த வீடும் கல்விக்காரகன் புதனும் வலிமையாக இருந்தால் ஜாதகன் கல்வியில் மேன்மை பெற்று விளங்குவான்
4ம் வீடும் சுக்கிரனும் வலிமையாக இருந்தால் ஜாதகன் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வசதிகளையும் பெற்று சுக போகங்களுடன் வாழ்வான்

இந்த வீட்டிற்கு அதிபதி (Owner) திரிகோணம் அல்லது கேந்திர வீடுகள் ஒன்றில் இருப்பது நன்மையானது.

6, 8, 12ம் வீடுகளில் அமர்ந்திருக்கக்கூடாது. அத்துடன் நீசம் அடைந்திருக்கவும் கூடாது்  
தீய கிரகங்களின் சேர்க்கையையும். பார்வையையும் பெற்றிருக்கக்கூடாது்

முக்கியமாக மாந்தி இந்த வீட்டில் வந்து குடியிருக்கக
கூடாது. வந்து குடி இருந்தால் மூன்று செயல்பாடுகளில் ஒன்றை முடக்கி விடுவார்

விளக்கங்கள் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.8.22

Lesson 22 and 23 இரண்டாம் மற்றும் மூன்றாம் வீடுகள்

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number twenty two 
New Lessons
பாடம் எண் 22

இன்று இரண்டாம் வீட்டைப் பற்றிய பாடம்

இரண்டாம் வீட்டிற்கு 3 பணிகள்
1. குடும்ப ஸ்தானம், 
2.பண ஸ்தானம் 3.வாக்கு ஸ்தானம் ஆகியவை
House of Family, House of wealth  (Money, ) House of Speech

இந்த 2ம் வீட்டுக்கார்ர் (Owner) வலிமையாக இருந்தால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். தனகாரகன் குரு பகவான் நன்றாக இருந்து அவர பாரவையும் இந்த வீட்டின் மேல் இருந்தால் பணம் கையில் தாராளமாக புரளும். அதே அமைப்பில் புதனும் இருந்தால் ஜாதகனின் பேச்சுத்திறமை அருமையாக இருக்கும் அவன் சொலல்வது எல்லா இடங்களிலும்  எடுபடும்

இரண்டாம் வீட்டில் யார் இருக்கக்கூடாது?

தீய கிரகங்கள் இருக்கக்கூடாது. அவர்களின் பார்வையும் கூடாது.

முக்கியமாக மாந்தி  இங்கே வந்து அமரக்கூடாது. அவர் ஜாதகனை குடும்பம் நடத்த விடமாட்டார்  பணி நிமித்தமாக ஜாதகன் ஒரு ஊரிலும் அவன் மனைவி ஒரு ஊரிலும் இருக்க நேரிடும். அல்லது ஜாதகன் மனைவியை இங்கே விட்டு விட்டு பணம் சம்பாதிப்பதற்காக துபாய்க்குச் சென்று விடுவான்

வேறு அமைப்புக்களால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்தால்,   மாந்தி அதை விட்டு விட்டு பண வரவில் கை வைத்துவிடுவான் ஜாதகன் பணப் பிரச்சினையில் உழல நேரிடும் கடனில் அவதிப்பட நேரிடும்.
இந்த வீட்டில் சனி அல்லது ராகு இருந்தாலும்  அதே பிரச்சினைதான்
அதற்கு விதி விலக்கு உண்டு அது என்னவென்றால் 2ம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்க வேண்டும்  அவ்வாறு உச்சம் பெற்றிருந்தால் ஜாதகன் செல்வந்தனாக இருப்பான்
அதற்கு உதாரணமாக நடிகர் ரஜினி காந்த் அவர்களின் ஜாதகத்தைச் சொல்லலாம்

மொத்தத்தில் 2ம் வீட்டுக்காரன் 6, ,8, 12ம. வீடுகளில் அமர்ந்திருக்கக் கூடாது் அத்துடன் தீய கிரங்களின் சேர்க்கையையும் பார்வையையும் பெற்றிருக்கக் கூடாது்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no twenty three
New Lessons
பாடம் எண் 23
 
இன்று மூன்றாம். வீட்டைப் பற்றிய பாடம்

ஜாதகத்தின் இருட்டான வீடுகளில் மூன்றாம் வீடும் ஒன்று
எட்டாம் வீட்டிற்கு எட்டாம் வீடு இந்த மூன்றாம் வீடு

ஜாதகத்தில் ஜாதகனின் துணிச்சல், சகோதரன், சகோதரிகள், வெற்றி, ஆகியவற்றிற்கான வீடு அது

அந்த வீட்டுக்காரன்  வலிமையாக இருந்தால் பலன்கள் சிறப்பாக இருக்கும்

மூன்றாம் வீட்டுக்காரன் எங்கே இருந்தால் நல்லது?

லக்கினத்தில் இருந்தால் நல்லது்
3ம் இடத்திற்கு அது 11ம் இடம் ஆகவே பலன்கள் சிறப்பாக இருக்கும்  ஜாதகன் செல்வாக்கோடு இருப்பான் அவன். உடன் பிறந்தோர் எல்லாம் அவன் மேல் பிரியமாக இருப்பார்கள்

ஆரோக்கியம. உடையவனாக இருப்பான் அதீத துணிச்சல் உடையவனாக இருப்பான் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உடையவனாக இருப்பான்

3ம் வீட்டுக்காரன் எங்கே இருக்கக்கூடாது?
லக்கினத்திற்கு 2ம் வீட்டில் இருக்கக்கூடாது் அது 3ற்கு 12ம் வீடு்
அப்படி இருந்தால் ஜாதகன் தைரியம் இல்லாதவனாக இருப்பான் மேலும் லொடுக்கு பார்ட்டியாக இருப்பான் அதாவது ஆரோக்கியம் இல்லாதவனாக நோஞ்சானாக இருப்பான்

6ம வீடு, 8ம் வீடு ஆகியவற்றிலும் இருக்கக்கூடாது். நீசம் பெற்றும் இருக்கக்கூடாது

3ம் வீட்டுக்காரன் 3ம்  வீட்டிலேயே உச்சம் அல்லது ஆட.சி பெற்றிருந்தால் ஜாதகன் செல்வாக்கோடு, மகிழ்ச்சியோடு இருப்பான் அவனுடைய சகோதரன், சகோதரிகள் எல்லாம் வசதியோடு செல்வந்தர்களாக இருப்பார்கள் ஜாதகனுக்கு ஆதரவாக இருப்பார்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.8.22

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!

அன்புடையீர்
இன்று சுதந்திர தினம்
மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் 
வாத்தியாரின் வாழ்த்துக்கள்

அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.22

Lesson 20 & 21 ராகு மற்றும் கேதுவைப் பற்றிய புதுப் பாட்ம்

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 20
New Lessons
்பாடம்.எண். 20

ராகு & கேது பற்றி இன்று பார்ப்போம்

நவகிரகங்களில் ராகு & கேதுவை தவிர்த்து மற்ற 7 கிரகங்களுக்கும் நாடகள் உள்ளன  ஞாயிற்றுக்கிழமை    முதல் சனிக்கிழமை வரை 7 நாட்கள்
அதே போல வீடுகளும் உள்ளன
சூரியனுக்கு (சிம்மம்) சந்திரனுக்கு (கடகம்) மற்ற 5 கிரகங்களுக்கும தலா 2 வீடுகள் உள்ளன
ஆனால் ராகுவிற்கும் கேதுவிற்கும் தினமும 90 நிமிடங்கள் அவர்களுக்கான காலமாக உள்ளன
அந்த நேரத்தில் யாரும் சுப காரியங்களைச. செய்ய மாட்டார்கள்

அவர்களுக்கு வீடுகளும் இல்லை.
ஆனால் அவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் வீட்டிற்கு உரிய கிரகத்தின் வேலையைச் செய்வார்கள்

லக்கினத்தில் ராகு அல்லது கேது இருந்தால் திருமணம் தாமதமாகும்
27 வயதிற்கு மேல்தான் திருமணம். கூடிவரும்

ராகு மகா திசை 18 ஆண்டுகள்
கேது மகா திசை 7 ஆண்டுகள்
அவர்களின் மகா திசைகளில் தீமையான பலன்களே அதிகமாக இருக்கும். மனிதனை புரட்டி எடுத்துவிடுவார்கள்   90% பேரகளுக்கு தீமையானதாகத்தான் இருக்கும்
ஒரு சிலருக்கு மட்டும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்

உதாரணத்திற்கு  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைச் சொல்லலாம்
அவருடைய முதல் படமான பராசக்தி 1952ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியைப் ்பெற்றது். அப்போது துவங்கிய ராகு மகா திசை அவருக்கு தொடர்ந்து 18 ஆண்டுகள் வெற்றிகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தது்
1970ம் ஆண்டில் வெளிவந்த வீயட்நாம் வீடு படம். வரை தொடர்ந்து வெற்றிப் படங்கள்
எல்லாம் ராகுவின் கைங்கரயம.

சூரியனோடு ராகு சேர்ந்தால்  பூர்வீக சொத்துக்களுக்கு கேடு.
சந்திரனோடு ராகு சேர்ந்தால் மன அமைதிக்குக கேடு

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 21
New Lessons
பாடம் எண். 21

இன்று லக்கினத்தைப பற்றிய பாடம்

வானம் 12 ராசிகளாக உள்ளது  என்பது உங்களுக்குத் தெரியும்

பிறப்பின் போது பிறக்கும் குழந்தை  வானத்தை பார்க்கும் ராசிதான் அக்குழந்தையின் லக்கினம்

எண் ஜான் உடம்பிற்கு சிரசே ( தலையே) பிரதானம் என்பார்கள்  அதுபோல ஜாதகத்தில் அதன் தலைப் பகுதியான லக்கினம்தான் பிரதானம் -   அதி முக்கியம்

லக்கினம் வலிமையாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்  ஜாதகன் வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ முடியும்
He will have with standing power to face any situation in life

 லக்கினத்திற்கு இரண்டு முக்கியமான பணிகள் உள்ளன
ஜாகனின் தோற்றத்தை (appearance)  நிர்ணயிப்பது லக்கினம்தான் அதுபோல ஜாதகனின் குணத்தையும் (character)  நிர்ணயிப்பதும் லக்கினம்தான்
லக்கினத்தில் மாந்தி  இருந்தால் அவற்றிற்கு கேடு

லக்கின அதிபதியின் அமைப்பும் முக்கியம். 
லக்கினமும, லக்கின அதிபதியும் பாபகர்த்தாரி தோஷத்தில் சிக்கியிருக்கக்
கூடாது. தீய கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் கூடாது

:லக்கின அதிபதி எங்கே இருக்க வேண்டும்?

திரிகோணம் அல்லது கேந்திரங்கள் ஒன்றில் இருக்க வேண்டும்

11ம் வீட்டில் இருந்தால் நல்லது்
அது லாப ஸ்தானம்   (House of gains) அதன் பலன் -- குறைந்த முயற்சி அதிக லாபம்  Minimum efforts : Maximum benefits

 வக்கினாதிபதி 12ம் வீட்டில் அமர்ந்திருக்கக்
கூடாது. அது விரைய வீடு. ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப பயன் படாது. அவனைச் சுற்றியிருப்பவர்களுக்குத்தான் பயன்படும்.
ஆனால் விரையாதிபதி (12th Lord) லக்கினத்தில் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன்  வாழ்க்கை யாருக்கும் பயன்படாது

 விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.8.22

இரண்டு பாடங்கள்: செவ்வாய் மற்றும் சனீஷ்வரனைப் பற்றிய 2 பாடங்கள்


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number eighteen
New Lessons
பாடம் எண் 18

இன்று ஜாதகத்தில்   செவ்வாயின் பங்களிப்பைப் பார்ப்போம்

கடகம், மற்றும் சிம்ம லக்கினக்கார்ர்களுக்கு செவ்வாய் யோக காரகன் Authority for Luck
 
 அவ்விரு லக்கினகார்ர்களின் ஜாதகத்திலும் செவ்வாய் வலிமையாக இருந்தால் அவர்களுக்கு எல்லாம் தேடி வரும் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

செவ்வாய் ஆற்றல், திறமைக்கான கிரகம் ஒரு ஜாதகன் எப்போதும் சுறு சுறுப்பாக  இருக்கிறான் என்றால் அவனுடைய ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இருக்கும்
வெட்டிக கொண்டு வா என்று சொன்னால் வெட்டி கட்டிக் கொண்டு வந்திடுவான்

நிலம்,  இடம் Landed Properties களுக்கான கிரகம் செவ்வாய்
இவை ஜாதகனுக்குக் கிடைக்க ஜாதகனுக்கு 4ம் வீட்டு அதிபதியுடன் செவ்வாயும் வலு்வாக இருக்க வேண்டும்
 
 7 & 8ம. வீடுகளில் செவ்வாய் இருந்தால் அது திருமண பந்தத்தில் தோஷத்தை உண்டாக்கும்  அதை செவ்வாய் தோஷம் என்பார்கள்
செவ்வாய் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டிலோ இருந்தால் தோஷம் இல்லை என்று சில ஜோதிடர்கள சொல்வார்கள்
ஆனால் நீங்கள் தோஷம் இருப்பதாக்க் கொண்டே செயல்படுங்கள்

அன்புடன்
வாத்தியார்
===============================================================
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 19
New Lessons
பாடம் எண்  19

சனீஷ்வரனைப் பற்றி இன்று பார்ப்போம்

சனீஷ்வரனைப் பற்றிய பயம் நிறைய பேர்கள் மனதில் உள்ளது

எதற்கு  பயம்?

கிரகங்களில் சனீஷ்வரன்னும் முக்கியமானவர்
அவருக்கு இரண்டு இலாக்காக்கள் உள்ளன
அவர்தான் ஆயுள்காரபன் மற்றும் வேலைக்கான காரகன்
Yes, he is the authority for work
கர்மகாரகன்

மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு சனீஷ்லரன் அதிபதி (Owner)

கும்ப லக்கினக்கார்ர்களுக்கு சனீஷ்வரன் நல்ல இடங்களில் இருந்தால் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்  அதாவது திரிகோணம் அல்லது கேந்திரங்களில் இருக்கவேண்டும்
நீசம் அடைந்திருக்கக்கூடாது. ஏனென்றால் கும்ப லக்கினத்தற்கு லக்கினாதிபதி சனீஷ்வரன் அத்துடன் 12ம் வீட்டிற்கும் (விரைய வீடு) அதிபதி சனீஷ்வரன்

 So the Kumba Lagna native will face either great success or great failures according to the placement of Saturn in their horoscope

கடக லக்கி்னம் மற்றும. சிம்ம லக்கினக்காரகர்களின் ஜாதகத்தில்  7ம் இடத்தின் அதிபதி சனீஷ்வரன்  அவர் 6ம. வீடு மற்றும் 12ம் வீடுகளில் அமர்ந்து இருக்கக் கூடாது. இருந்தால் திருமண வாழ்க்கையில் உரசல் ஏற்படும் 
சிலருக்கு விவாக ரத்துவரை அந்த உரசல் செல்லக்கூடும்.
எனக்கு இந்த அமைப்பில்தான் ஜாதகம. உள்ளது. ஆனால் திருமண வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது - இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டு யாரும் கத்தியைத் தூக்கிக் கொண்டு வரவேண்டாம்
வேறு அமைப்புக்களால் அவ்வாறு இருக்கலாம்  
நான் சொல்வது பொதுவிதி்

 ரிஷப லக்கினம் மற்றும் துலா லக்கினக்கார்ர்களுக்கு சனீஷ்வரன் யோக்காரகன்
(Authority for Luck)
எல்லாவித நன்மைகளையும் சனீஷ்வரன் வாரி வழங்குவான்

He should be in a good. place in the horoscope

: சனீஷ்வரன் ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு தீர்க்கமான நீண்ட ஆயுள்

அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.22

ஜாதகத்தில் சந்திரனின் முக்கியத்துவம்


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Seventeen
Date 29-7-2022
New Lessons
பாடம் எண்17

இன்று ஜாதகத்தில்  சந்திரனின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம்

சந்திரன்தான் தாய்க்கு உரிய கிரகம். ஜாதகத்தில் சந்திரன் வலிமையோடு இருந்தால் நல்ல தாய்  கிடைப்பார் 

அத்துடன் சந்திரன்தான் மனதிறகு உரிய கிரகம்
Yes, Moon is the authority for mind

சந்திரன் 3,6,8,12ம் வீடுகளில் மறையாமலும், நீசம் பெறாமலும், தீய கிரகங்களுடன்  சேராமலும் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல மனம். அமையும்
(Clear mind)

சந்திரனோடு,தீய கிரகங்கள் சேர்ந்தால் ஜாதகன் குழப்பமான மனதை உடையவனாக இருப்பான்

சந்திரனோடு ராகு சேர்ந்தால் ஜாதகன் எப்போதும் கவலை உடையவனாக இருப்பான்

 சந்திரனோடு சனி சேர்ந்தால், புனர்பூ தோஷம் ஜாதகனுக்கு மனைவியுடன் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும் சிலருக்கு பிரிவு வரை சென்று விடும்

சந்திரனும. செவ் வாயும் சேர்ந்தால். சசி மங்கள யோகம்
சந்திரனும் குருவும் சேர்ந்தால் குருச சந்திர யோகம்
இவை இரண்டும் நல்ல யோகங்கள்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.22

தந்தைக்கு உரிய கிரகம்

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Sixtee
New Lessons
பாடம் எண் 16

கிரகங்களில் அரச கிரகம் சூரியன்

சூரியன் தந்தைக்கு உரிய கிரகம்

ஜாதகத்தில் சூரியன் வலிமையாக இருந்தால் நல்ல தந்தை அமைவார்

சூரியன் 3, 6, 8, 12ம் இடங்களில் மறையக்கூடாது
திரிகோணம் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால் அரசு வேலைகள் கிடைக்கும் 

அரசியல் வாழ்க்கைக்கும் இதே அமைப்பு  இருக்க வேண்டும்

சூரியன்  உடலுக்கும் காரகன்  சூரியன் வலிமையாக இருந்தால் உடல் நலமும் நன்றாக இருக்கும்

சூரியன் 12ம் வீட்டில். அமர்ந்தால்  ஜாதகன் சின்ன வயதிலேயே தன் தந்தையை இழக்க நேரிடும்

இதற்கு உதாரணம் மகாத்மாவின ஜாதகம்

சூரியன் கெட்டிருந்தால் பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது

அன்புடன்
வாத்தியார
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.8.22

Star Lessons Lesson number Fifteen குரு பகவான்

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Fifteen
New Lessons
பாடம் எண் 15

ஜாதகத்தில் குருவின் முக்கியம்துவம் என்ன?

அவர்தான் தனகாரகன்
Yes he is the authority for finance
அவர. வலிமையாக இருந்தால் ஜாதகனுக்கு பணக்  கஷ்டமே வராது

 லக்கினத்தில் குரு இருந்தாலும் அல்லது லக்கினத்தை  குரு பாரத்தாலும் ஜாதகனுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் குரு பகவான் கை கொடுப்பார்

ஜாதகனு்க்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பவர் குரு பகவான்தான்

ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, குரு பகவான் மூவரும்  வலிமையாக இருந்தால் (கணவன் & மனைவி இருவருக்கும்) திருமணமான ஓரு வருடத்திலேயே அத்தம்பதியருக்கு குழந்தை பிறக்கும்
அவ்வாறு இல்லை என்றால் குழந்தை பிறப்பது தாமதமாகும்

 குரு பகவான் ஜாதகத்தில் எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் அவர் நன்மையே செய்வார் 
அவர் நம்பர் ஒன் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.8.22

Star Lessons Lesson number Fourteen சுக்கிரனின் முக்கியத்துவம்


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Fourteen
New Lessons
பாடம் எண் 14

ஜாதகத்தில் சுக்கிரனின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்

சுக்கிரன் சுபக்கிரகம்
அவன்தான் அனைவருக்கும் திருமணத்தை நடத்தி வைப்பவன்
Yes, he is the authority for marriage

சுக்கிரன் நல்ல அமைப்பில் இருந்தால் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும்  இல்லை என்றால் திருமணம் அநியாயத்திற்கு தாமதமாகும்

லக்கினம் அல்லது ஏழாம் வீட்டில் சுக்கிரன் அமையப் பெற்ற ஜாதகன் அல்லது ஜாதகி கவர்ச்சிகரமாக இருப்பார்கள்

சுக்கிரன் கலைகளுக்கு உரிய கிரகம் ஓவியம்,  சிற்பக்கலை, நடிப்பு, எழுத்து, கவிதை போன்று அனைத்து  கலைகளும் - அதாவது அவற்றில் ஒன்று ஜாதகனுக்கு பிடிபட வேண்டும் என்றால் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமர்ந்திருக்க வேண்டும்

சுக்கிரன் மறைவிடத்தில் (3,6,  8, 12) அமரக்கூடாது்  அதுபோல் நீசம் பெற்று இருக்கவும் கூடாது்

சுக்கிர மகா திசை சின்ன வயதில் வரவும.கூடாது் குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்
ஜாதகனை சொகுசாக வைத்திருந்து ஜாதகனுக்கு முறையான கல்வி,, நல்ல பழக்க வழக்கங்கள் கிடைக்காமல் செய்து விடும்

மத்திய வயதில் வரவேண்டும்
 
விளக்கம. போதுமா?
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.8.22

✴️✴️✴️✴️✴️ Star Lessons Lesson number Twelve திருமண பொருத்தம்

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number  Twelve
New Lessons
பாடம் எண் 12

ஜாதகம் பார்த்துச் செயதாலும் சில திருமணங்களில், திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்கிடையே பிரச்சினை தலை தூக்குகிறதே, என்ன காரணம.?

ஜாதகம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் நட்சத்திர பொருத்தம பார்ப்பதுடன் செவ்வாய். தோஷம் இல்லாமல் இருக்கிறதா என்றும். பார்க்கிறார்கள்
வேறு விஷயங்களை அலசுவதில்லை

7ம் அதிபதியின் நிலைப்பாடு அதி முக்கியமானதாகும்

அவர் நீசமாக இருக்கக்கூடாது.
லக்கினத்திற்கு
12ம. வீட்டிலும் 6ம் வீட்டிலும் அமர்ந்திருக்கக்கூடாது. 6ம் வீடு ஏழாம் வீட்டிற்கு 12ம் வீடு. அதை நினைவில் வையுங்கள்

12ம் வீடு விரைய வீடு. திருமண வாழ்க்கையில் பிரச்சினை உண்டாகும். சில பிரச்சினை விவாகரத்து வரைக்குமே இழுத்துக் கோண்டு போகும்

ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் அதாவது விரையச் சனி நடக்கும் காலத்தில் திருமணம் செய்வதும் நல்லதல்ல

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.8.22

Star Lessons Lesson number eleven பண வரவு

✴️✴️✴️✴️✴
Star Lessons
Lesson number eleven
New Lessons
பாடம் எண் 11

சிலருக்கு பணம். கொட்டுகிறது. வீடு, வண்டி, வாகனம், குடும்பம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்
வேறு சிலருக்கு பணம் பற்றாக்குறை, கழுத்தை நெறிக்கும் கடன் சுமை என்று அவதிப்படுகிறார்கள்
ஜாதகப்படி இந்த இரண்டு வேறுபட்ட நிலைப் பாடுகளுக்கும் காரணம் என்ன?

2ம் வீடும் 11ம் வீடும் தான் பணத்திற்கான வீடுகள்
2nd house is the house of finance and 11th house is the house of profit (லாப ஸ்தானம்)
நினைவில் வைத்துக் கொள்வதற்காக நான் கீழ்க்கண்டதுபோல்  சொல்வது வழக்கம்
11ம் வீடு குழாய் (Pipe) 2ம் வீடு அண்டா (Drum)
குழாய் ரிப்பேர் என்றால் தண்ணீர் வராது. அதுபோல் அண்டா ஓட்டை என்றால் வந்த பணம் தங்காது. ஆகவே இரண்டுமே நன்றாக இருக்க வேண்டும்

ஜாதகப்படி இரண்டு வீட்டு அதிபதிகளுமே திரிகோணம் அல்லது கேந்திர வீடுகளில் இருக்க வேண்டும் அத்துடன் சுப கிரங்களின் சேர்க்கை அல்லது பார்வையோடும. இருக்க வேண்டும்

சிரமமின்றி தெரிந்து கொள்ள சர்வாஷ்டகவர்க்கம்    
துணை செய்யும்

ஆமாம் இரண்டு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.8.22

*திருப்புமுனை* *Turning Point*

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Ten
Date 1-8-2022
New Lessons
பாடம் எண் 10

 *திருப்புமுனை* 
   *Turning Point* 

திருப்புமனை எனபது நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். என்று  வைத்துக் கொள்ளுங்கள்

படித்து முடித்தவுடன. வேலை கிடைத்து வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் துவங்குவது

திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கையைத் துவங்குவது

இடம். வாங்கி நம் கனவு வீட்டைக. கட்டத. துவங்குவது
போன்ற நிகழ்வுகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்

 ஒரு இசை மேதையின் பிறந்த ஆண்டை வைத்து அதை உங்களுக்கு விளக்குகிறேன்

அவர் பிறந்த ஆண்டு 1943

அதன கூட்டல் தொகை 
1943
     17
------------
1960 
     16
-------------
1976
     23
------------
1999
     28
+-----------------+

1960ம்  ஆண்டுவரை தனது கிராமத்தில் வசித்து வந்த அவர், தனது சகோதர்களுடன் கிளம்பி ஊர. ஊராகச் சென்று கம்யூனிஸ்ட்  கூட்டங்களில. மேடைக் கச்சேரிகள் செய்யத் துவங்கினார.
கைக்கும் வாயக்குமான  அளவில்தான் வருமானம்
கஷ்டப்பட.டார்கள்
அந்தக் கஷ்டத்திலும் வாய்ப்பாட்டு, ஹார்மோனியம் கிட்டார. மோன்று பல வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார்

சில இசை அமைப்பாளர்களின் குழுக்களில் சேர்ந்து பணியாற்றினார்

16 ஆண்டுகள்  கழிந்தன்  அவர் வாழ்க்கையில் அதிரடியான திருப்புமுனை ஏற்பட்டது

 பஞ்சு அருணாசலம் அவர்களின் அன்னக்கிளி படத்திற்கு இசை அமைக்கும் பாக்கியம் கிடைத்தது
பாடல்கள்  அனைத்தும் சூப்பர் ஹிட்.
ராஜா இசை உலகின் உச.சத்திற்கே சென்று விட்டார்
பிறகு நடந்த்தெல்லாம் அனைவருக்கும. தெரியும்

இதுபோல் நீங்களும் உங்கள் பிறந்த ஆண்டின் கூட்டல் தொகையைப் போட்டுப் பார்த்து நடந்த திருப்பு முனைகளையும் நினைத்துப் பாருங்கள்

சரியாக இருந்தால். பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!