மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.18

மண் பானையின் மேன்மை!!!


மண் பானையின் மேன்மை!!!

*"மண்பானை* *நீர்- 7- 8 pH அளவு"* *இரத்தத்தில் pH அளவும்* *எலும்பு,* *மூட்டு வலியும்...!*

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் . இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).

ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .

*நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!*
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

*இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.*

இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

*இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!*

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.*

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

*குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.*
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு
*மண்பானை நீர் - 7- 8 pH அளவு.*

*R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.* தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து *மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.*

நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .

இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

*கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.*
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.

பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.

*இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!*

சமுதாய நலனில் அக்கறை உள்ள படித்ததில் இ௫ந்து பிடித்தது !!!
ஆக்கம்: பொன்.தமிழரசன், சேலம்.
-------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.12.18

Astrology: quiz: 28-12-2018 புதிருக்கான விடை!!!


Astrology: quiz: 28-12-2018 புதிருக்கான விடை!!!

கேள்வி இதுதான்: ஜாதகப்படி எது நல்லது? வேலையா அல்லது வியாபாரமா?

பதில்: வியாபாரமே சிறந்தது. அதுதான் ஜாதகருக்கு மேன்மையைக் கொடுக்கும்.

மகர லக்கின ஜாதகர். லக்கினாதிபதி சனீஷ்வரன் 5ல் அது திரிகோண வீடு. 6 & 12ல் கேதுவும் ராகுவும் துணிவைக் கொடுக்கும்

10ம் வீட்டுக்காரரான சுக்கிரன் 11ல் உடன் 9ம் அதிபதி புதனும் கூட்டாக உள்ளார். புதன் வியாபாரத்திற்கான கிரகம். அவர் 10ம் அதிபதியுடன் சேர்ந்து இருப்பதோடு அவர்கள் இருவரும் கர்மகாரகன் சனீஷ்வரனின் (authority for profession) பார்வையைப் பெறுகிறார்கள், ஜாதகர் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டினார்.

பலரும் கவனிக்க மறந்த ஒன்று ஜாதகத்தில் தன யோகம் உள்ளது (பண வரவிற்கான யோகம்) ஐந்தாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் 11ம் வீட்டில் அமர அவர்கள் இரண்டாம் வீட்டுக்காரர் சனீஷ்வரனின் பார்வையைப் பெறுகிறார்கள், இந்த அமைப்பு ஜாதகருக்கு தனயோகத்தை உண்டாக்கியுள்ளது!!!!

புதிருக்கான பதிலை 11 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 3-1-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
******Blogger anand tamil said...
அவருடைய ஜாதகப்படி வியாபாரமே சிறந்தது .
10க்கு உடையவன் 11இல் அமர்ந்து 5 இல் அமர்ந்த லக்கினாதிபதி சனியை பார்க்கிறான் . பாக்கியாதிபதி புதனும் உண்டான் அமர்ந்து லக்கினாதிபதியை பார்க்கிறார் . இவர் நிச்சயம் தொழிலில் பல மேன்மைகளை அடைந்திருப்பார்
Friday, December 28, 2018 9:15:00 AM
-----------------------------------------------------
2
******Blogger Thanga Mouly said...
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்,
வகுப்பறைக்கு வந்து போனாலும் பல்வேறு வேலைப்பளு காரணமாக எதிலும் கலந்து சிறப்பிக்க இயலவில்லை.இவ்வார புதிரின் எனது மேலோட்டமான கருத்து;
ஜாதருக்கு மனம், செயல் காரகர்கள் மேலோங்கியும், 4, 10 வீடுக்கள் பலமாகவும், அவற்றின் அதிபதிகளும் முறையே தொழில் ஸ்தானம், லாபஸ்தானத்தில் பரிவர்தனையுடன் இருப்பது ஜாதகருக்கு வியாபார திறனையும் மேலும் அம்சத்தில் உச்சம் பெற்ற சூரியன் ஆளுமையினை அளிக்கின்றது. நிபுணத்துவ , சசிமங்கள யோகங்கள் கூடவே வியாபார சந்தைக்கு பக்கபலம்.
தங்கள் விளக்கம் அறிய ஆவல்
Friday, December 28, 2018 9:45:00 AM
------------------------------------------------------
3
******Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
இந்த ஜாதகர் வேலை செய்வதை விட சுய தொழில் செய்வதே சிறந்தது .
ஏன்னெனில் இந்த ஜாதகரின் 11 இம் இடது அதிபதி செவ்வாய் லக்கின கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் திரி கோணத்தில் 10 ஆம் இடத்தில அமர்த்து தொழில் செய்வதை சிறப்படைய செய்கிறது
மேலும் 11 ஆம் இடத்தில லாப ஸ்தானத்தில் சுக்கிரனும் புதன் வுடன் கூட்டாக அமர்ந்து லாபத்தை அடைய செய்யும் கிரக அமைப்பாக உள்ளது .
நவாம்ச கட்டத்திலும் லக்கின அதிபதி சனி 11 ஆம் இடத்தில அமர்ந்து தொழில் செய்வதை சிறப்பு அடைய செய்கிறது .
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Friday, December 28, 2018 10:47:00 AM
------------------------------------------------------
4
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)கர்மகாரகன் சனியே வியாபாரமாய் இருந்தாலும்,அது அடிமைத் தொழிலாக இருந்தாலும் அவரே காரகர்.2)புதனின் வலு,6ம்,11ம் இடம்,அதன் அதிபதிகள் இருப்பு,பார்வை சேர்க்கையே வியாபாரமா வேலையா என்று முடிவு தரும்.
3)இங்கு 6ம் இடமே அதிக சுபமாய் உள்ளது.8ம்அதிபதி சூரியன்,12ம்அதிபதி குருவுடன் சேர்ந்து,குருவுடன் சேர்ந்ததால் ராகுவும் சுபமாகி 6ம்வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளனர்.4)11ம் வீட்டிற்க்கு,சுப வீட்டில்,திரிகோணம் ஏறிய சனி பார்வையுள்ளது.சரி அது வியாபாரத்திலா வேலையிலா என்று பார்தால் அங்கே 10ம் அதிபதி சுக்கிரன்,அடிமைத் தொழிலுக்கான 6ம் அதிபதி புதனுடன் அமர்ந்து அவரும் கர்மகாரகன் பார்வையை பெறுவதால் வேலையே என்று ஆயிற்று.லாபாதிபதி செவ்வாய் எங்கேயென்று பார்த்தால் அவரும் தன் வீட்டிற்க்கு 12ல் மறைவு.வியாபாரத்தில் லாபம் அதிகமாயிருந்தால்தான் கட்டுப்படியாகும்.5)ஆகவே வேலையே அதுவும் வெளி நாட்டில் வேலை.அது தலைப்பிற்க்கு,தேவை இல்லாததால் அது பற்றி விவாதிக்கவில்லை.நன்றி.
Friday, December 28, 2018 1:13:00 PM
-------------------------------------------------------------
5
******Blogger csubramoniam said...
ஐயா தங்களின் கேள்விக்கான பதில்,
1 .லக்கினாதிபதி திரிகோணத்தில்,
2வியாபாரத்திற்கு அதிபதியான புதன் பதினொன்றில் பத்தாம் அதிபதி சுக்கிரனுடன் நிபுண யோகத்தில்
3 .எட்டாம் அதிபதி சூரியன் பனிரெண்டாம் இடத்தில் அதன் அதிபதி குருவுடன் சேர்ந்து ராஜா யோக அமைப்பு
4 பத்தாம் அதிபதி சுக்ரனும் பதினொன்றாம் அதிபதி ய்வாயுடன் பரிவர்த்தனையில் ஆகவே வியாபாரமே ஜாதகருக்கு பொருந்தும்
நன்றி
தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கும்
மாணவர்
Friday, December 28, 2018 5:01:00 PM
----------------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
ஜாத‌கர் 17 டிசம்பர் 1972 அன்று காலை 10 மணி 9 நிமிடங்களுக்குப் பிறந்த‌வர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
சூரியன் 12ல் மறைந்து ராகு சம்பந்தம் ஏற்பட்டதால் அரசு வேலைக்கு வாய்ப்பில்லை.மூன்றாம் இடத்து அதிபன் குரு 12ல் மறைந்ததால் சுய தொழில் ,வியாபாரம் சரியாக வருமா என்ற கேள்வி வருகிறது.
ஆனால் 10ம் அதிபதி 11லும்,11ம் அதிபதி 10லும் ஆக பரிவர்த்தனை. இது வியாபரத்திற்கு ஏற்றது. புதன் வியாபாரத்திற்கான கார‌கன் 11 லாபஸ்தானத்தில்!சனி வக்கிரம் அடைந்துள்ளார்.சனியும் செவ்வாயும் 6க்கு 8 என்ற நிலையில் நிற்பது ஆகியவை துணிந்து வியாபாரத்தில் இறங்கச் சொல்வதும் தயக்கமாக உள்ளது.
எனவே இடங்களின் பலத்தை அஷ்டவர்க்கப்படி எடுத்துக் கொண்டு முடிவு சொல்லநினைத்தேன். வேலை ஸ்தானமான 10ம் இடம் 35 பரல் பெற்று முன்னணியில் நிற்கிறது. வியாபாரத்திற்குண்டான 3ம் இடம் 30 பரல்தான்.
எனவே இவருக்கு தனியார் துறையில் மாதசம்பள் வேலையே சரியானது என்று எனக்குத் தோன்றுகிறது.
Friday, December 28, 2018 5:51:00 PM
------------------------------------------------
7
Blogger venkatesh r said...
புதிர்: வேலையா அல்லது வியாபாரமா, ஜாதகம் என்ன சொல்கிறது?
ஆசிரியருக்கு வணக்கம்.
மகர லக்கினம், மேஷ ராசி ஜாதகர்.
லக்கினாதிபதி, தனாதிபதி மற்றும் தொழில்காரகனுமான சனி 5மிடமான ரிஷப ராசியில் மாந்தியுடன் கூடி வக்கிரகதியில்.
லக்கினத்திற்கு பத்தாம் இடமே வியாரத்திற்குரிய பலனை தெரிந்து கொள்ளும் இடமாகும். ஜீவன ஸ்தானம் 6 , 8 , 12 ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவது மிகுந்த தீமையான பலன்களையே வாரி வழங்கும். ஒரு வேளை களத்திர பாவம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் கூட்டு தொழில் செய்யலாம் , களத்திர பாவமும் பாதிக்க பட்டிருந்தால் ஜாதகர் ஓரிடத்தில் அடிமை தொழில் செய்வதே சால சிறந்தது .
4,11க்கு அதிபதி செவ்வாய் 10ல் பலமுடன் அமர்ந்துள்ளார். 7ம் அதிபதியான வளர்பிறை சந்திரன் 4ல் அமர்ந்து சந்திர மங்கள யோகத்தை கொடுக்கிறார்.
வியாபாரத்தில் கொடிகட்டி பறக்க வேண்டுமானால் பத்தாமிட‌ம் பலம் பெறுவதோடு வித்தைக்குரியோனாகிய புதன் கிரகம் சிறப்பாக இருத்தல் வேண்டும். ஆனால் யோககாரகனும், 10க்கு அதிபதியுமான சுக்கிரன் 11ல் புதனுடன் அமர்ந்திருந்தாலும், பாபகர்த்தாரியின் பிடியிலுள்ளனர்.
இதைத்தவிர பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானம்மும் பலம் பெற்றிருக்க வேண்டும் . அப்படி இருந்தால்தான் தொழில் வித்தகர், தொழில் மேதை, தொழிலதிபர் என்று பெயரும் புகழும் பெறுவதோடு , வியாபாரத்தில் வெற்றி பெற முடியும்.
10மிடமும், 11மிடமும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. 10ம் அதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார்.பத்துக்கு அதிபதி நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அதன்படிதான் தொழில் அமையும் யோகம் அமைகிறது.
மேற்கண்ட கிரக நிலைகள், 4,7,10மிடங்கள் மற்றும் நடப்பு தசா புத்திகளை கொண்டு ஆராய்ந்ததில் ஜாதகர் வியாபாரம் செய்வதை விட அடிமைத் தொழில் செய்வதே நல்லது.
ஆனால் சொந்தத் தொழில் செய்வதானால் கூட்டுத் தொழில் செய்வது ஓரளவு நன்மை பயக்கும்.
வாத்தியாரின் மேலான கணிப்பை எதிர் நோக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Saturday, December 29, 2018 5:37:00 PM
---------------------------------------------------------
8
******Blogger guru said...
பிறந்த தேதி : 17 - Dec 1972
மகர லக்கினம்- 30 பரல்கள் . சனி ஐந்தில் வக்கிரம் பெற்று பதினொன்றாமிடத்தை பார்க்கிறார்.
10 மிடத்தில் செவ்வாய் திக் பலம் பெற்று லக்கினத்தையும் லக்கினாதிபதியையும் பார்க்கிறார். செவ்வாய் - சுக்கிரன் பரிவர்த்தனையோடு 35 பரல்கள் பெற்று 10 மிடம் வலுவாக உள்ளது. ஜாதகர் யாருக்கும் அடிமையாய் இருப்பதை விட சொந்த காலில் நிற்கவே விரும்புவார்.
11 மிடத்தில் புதனும் சுக்ரனும் சேர்க்கை. 6 ,9 குடைய புதன் 8 பரல் பெற்று 11 மிடத்தில் வலுவாக உள்ளதால், வேலைக்கு செல்வதை விட வியாபாரமே லாபம் தரும் என தெரிகிறது.
7 மதிபதி சந்திரன் 10 மிதத்தை பார்ப்பதும் 7 மிடத்தை சனி பார்ப்பதும் 7 மிடம் 31 பரல் பெற்றதும் , கூட்டு வியாபாரமும் ஜாதகருக்கு கை கொடுக்கும் என்பதை காட்டுகிறது.
விபரீத ராஜ யோகம் கூட பின்னாளில் ஜாதருக்கு திடீர் உயர்வை தரலாம்.
ஆக வேலைக்கு செல்வதை விட வியாபாரமே மேலானதாக தெரிகிறது.
Saturday, December 29, 2018 6:18:00 PM
--------------------------------------------------------------
9
Blogger dhinesh subramaniam said...
இவர் மகர லக்கினம் பத்தில் செவ்வாய், சந்திரனின் பார்வையுடன் உள்ளது. இவர் சமையல் கலையில் வல்லவராக இருக்க வாய்ப்பு உண்டு.பத்தாம் அதிபதி (தொழில் ஸ்தானாதிபதி ) சுக்ரன் 11 ல் புதனுடன் உள்ளது. வியாபாரத்திற்கு புதனின் ஆசி வேண்டும்.ஆனால் இங்கு புதனும் சுக்ரனும் மாந்தியுடன் சேர்ந்த சனியின் பார்வையில் உள்ளது.லக்கின பாவரான செவ்வாய் 10 ல், மற்றோரு லக்கின பாவரான சந்திரனின் பார்வையில் உள்ளது. கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும்.கேட்டரிங்(நீர்-சந்திரன்,நெருப்பு-செவ்வாய் ),ராணுவம், பாய்லர் companies சம்பந்தப்பட்ட வேலை அமையும். ஏனெனில் செவ்வாய் ராசி சக்கரத்தில் பத்தாம் பாவத்தோடு தொடர்புடையது, நவாம்சத்திலும் 10 ல் உள்ளது. சூரியனோ செவ்வாயோ பத்தாம் பாவத்தோடு தொடரபுகொண்டால் அரசு வேலை கிடைக்க ஒரு வாய்ப்பு உண்டு. - என்னுடைய opinion .
Saturday, December 29, 2018 7:37:00 PM
------------------------------------------------------
10
******Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
28-12-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகம் மகர லக்ன ஜாதகம். 6, 9 க்குடைய புதன் 11ல். அதுவும் கூட 10 க்குரிய சுக்கிரன் சேர்க்கை. தர்மகர்மாதிபதி யோகம். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை. எந்த தொழில் செய்தாலும் பெருத்த லாபம் கிட்டும். ஏழாம் பாவத்தை லக்னாதிபதியான சனி பார்வை செய்கிறார். இதுவும் தொழிலில் லாபம் ஏற்படுவதை குறிக்கும் அமைப்பாகும். ஆறாம் பாவமும் குரு பார்வையுடன் நன்றாக உள்ளது. ஆனால், அஷ்டவர்கத்தில் ஆறாம் பாவத்தைவிட ஏழாம் பாவமே அதிக பரல்கள் (27,31) பெறுவதால் சொந்த தொழில் செய்வதே சிறந்தது.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Saturday, December 29, 2018 9:42:00 PM
-------------------------------------------------------------
11
Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்
புதிரிற்கான விடை
1. லக்னாதிபதியும் குடும்பாதிபதியுமான சனி 5ம் வீட்டில் (கேந்திரத்தில் மாந்தியுடன்)
2. 10ம் அதிபதியும் 11ம் அதிபதியும் பரிவர்த்தனை.
3. விரயாதிபதி குருவுடன் அட்டமாதிபதியும், ராகுவும் சேர்ந்து இருக்கின்றனர்கள்
4. 9ம் அதிபதி புதன் 11ம் வீட்டில்
5. 10ம் வீட்டை வளர்பிறை சந்திரன் 7ம் பார்வையாக பார்க்கின்றார்
ஜாதகர் சொந்த தொழில் செய்வாரா அல்லது ஆபிஸில் வேலை செய்வாரா – காரணம்
• தசா புத்தி – அட்டமாதிபதி சூரியனின் தசை 22 வயது வரை, அதையடுத்து சந்திர தசையில் 7.5 ஆண்டுகள் சனியின் பிடியிலிருந்தார் (4/1998 தொடக்கம் 7/ 2002 வரை). விரயாதிபதி பதனின் தசை, அதையடுத்து செவ்வாய் தசை
• அதன் பிறகு வந்த செவ்வாய் தசையில்தான் அவரிற்கு விடிவுகாலம் தொடங்கியது.
• அதன் பிறகு வந்த ராகு தசை அடுத்து குரு தசை (7.5 ஆண்டுகள் சனியின் பிடியிலிருந்தார்).
• ஆகவே அவரிற்கு தன் தொழில் செய்வதிற்கு நேரமும் காலமும் சரியில்லை.
• பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன் கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான். ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்
மேற் சொன்ன காரணங்களிற்காக, ஜாதகரிற்கு சொந்த தொழில் செய்வதிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, December 30, 2018 1:54:00 AM
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.12.18

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!!


ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தால் யாருக்குத்தான் சந்தோஷமாக இருக்காது. உங்களுக்கு அப்படியொரு வாய்ப்பு!!!

இன்னும் இரண்டு நாட்களில் இந்த ஆண்டு நிறைவுபெற உள்ளது. வாத்தியாருக்கு ஒரு பிரச்சினை. அவர் எழுதி வெளியிட்ட செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள்’ தொகுப்பு நூல்களில் 30 செட் நூல்கள் விற்காமல் தேங்கி உள்ளது. அவற்றை விற்று பதிப்பித்தவர்களுக்கு இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம்.

4 புத்தகங்கள் கொண்ட ஒருசெட் கதைத் தொகுப்பு நூல்களின்  விலை (கூரியர் செலவு உட்பட) ரூ500:00  மட்டுமே!!!!

அவற்றை ஒரு 30 அன்பர்கள் வாங்கி வாத்தியாருக்கு உதவி செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்தப் பதிவு!

வாங்குபவர்களுக்கு பிரதி உபகாரமாக உங்களுடைய ஜாதகம் 33 பக்கங்கள் ( PDF வடிவில் - மின் அஞ்சலில்) கிடைக்கும்.
அத்துடன் நீங்கள் உங்கள் ஜாதகத்தை வைத்து நீங்கள் கேட்கும் ஒரு கேள்விக்கு ஜாதகத்தை அலசி பலனும் சொல்லப்படும்!

விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்: மின்னஞ்சல் முகவரி umayalpathippagam@gmail.com

First cum first basisல் முதலில் வரும் 30 மின்னஞ்சல்களுக்கு மட்டுமே இந்த சலுகை!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: Quiz: புதிர்: வேலையா அல்லது வியாபாரமா, ஜாதகம் என்ன சொல்கிறது?

Astrology: Quiz: புதிர்: வேலையா அல்லது வியாபாரமா, ஜாதகம் என்ன சொல்கிறது?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பரணி நட்சத்திரக்காரர். ஜாதகர் வியாபாரம் செய்து பொருள் ஈட்ட ஆசைப் பட்டார். அவருடைய பெற்றோர் வேலைக்குச் செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபமும் வரும் நஷ்டமும் வரும் என்றார்கள். அதாவது  அவருடைய ஜாதகப்படி எது நல்லது? வேலையா அல்லது வியாபாரமா?

ஜாதகத்தை அலசி பதில் எழுதுங்கள்

சரியான விடை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.18

அமைதியான மனதைப் பெற 8 வழி முறைகள்!!!!அமைதியான மனதைப் பெற 8 வழி முறைகள்!!!!

1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் :-

பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள்
சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.

2.மறக்கவும்... மன்னிக்கவும் :-

இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய
மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம்
ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு
கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல்,
மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.

3. பாராட்டுக்காக ஏங்காதீர்கள் :-

உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று
உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றல் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.

4. பொறாமைப்படாதீர்கள் :-

நாம் எல்லோருக்குமே பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில்
கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல்
பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்க்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை
பொறாமைப் பட்டு வாழ்வில் எதுவும் ஆக போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதை தவிர.

5. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள் :-
தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைபீர்களிலானால் நீங்கள் தோற்ப்பதர்க்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாற தொடங்கும்.

6. தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் :-

இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான
சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு
அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து
கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன ஊறுதியையும் பெறலாம்.

7. செய்ய முடிவதையே செய்யுங்கள் :-

இது எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு
அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது
நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன்
வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை
பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.

8.தினமும் தியானங்கள் :-

தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன
அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம்
முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை
வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை
அதிகரித்து வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.12.18

விழாக்களின் முக்கியத்துவம் என்ன?


விழாக்களின் முக்கியத்துவம் என்ன?

சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டதுதான் விழாக்கள்!!!!

எங்கும், எதற்கும் செல்லாமல், அரச மரத்தடி பிள்ளையார்களாகவே காலம் கழித்து விடும் மனிதர்கள் நம்மில் அநேகர் உண்டு. வாழ்வின் எல்லைகளை குறுகலாகவும், சிறிதாகவும் அமைத்து, இப்படி சிறை வாழ்க்கையை மேற்கொள்வோர், உண்மையில் இரக்கத்துக்கு உரியவர்கள்.

திருமணம், மற்ற நல்லது, கெட்டதுகளுக்கு ஒன்றாகக் கூட வேண்டும் என்பதே, சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டது தான்!

ஆனால், இவ்வாறு பழகும் தன்மை பலரிடம் இல்லாமல் போகக் காரணம், எதிலும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் குணமே!
இதுவே, இவர்களை, இருந்த இடத்தை விட்டு நகர விடாமல் செய்யும் முக்கிய காரணியாக உள்ளது. இப்படி கணக்கு பார்க்கும் குணம் உள்ளோர், 'அவன் என் வீட்டு விசேஷத்தில் அரை மணி நேரம் தான் இருந்தான்; நான் அஞ்சு நிமிஷம் கூட, அதிகமாக இருக்க மாட்டேன்...' என்று எதிர் மறையாக நடந்து கொள்ளவோ, கணக்கு பார்க்கவோ வேண்டியதில்லை.

எதிராளிகளை வெற்றி கொள்வது, கணக்கு பார்த்து நடந்து கொள்வதில் இல்லை; பெருந்தன்மையாக நடப்பதில் தான் உள்ளது.

இரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் இப்படிச் சொன்னார்... 'அவன் தான் அப்படி நடந்துகிட்டான்...நம்மாளு ரொம்ப பெருந் தன்மை; எதையுமே வெளிக் காட்டிக்காம, ரொம்ப நேரம் கல்யாண வீட்டில் இருந்தாரு. அது மட்டுமல்ல, சில வேலைகளைத் தானே எடுத்துப் போட்டு செஞ்சாரு... நம்மாளு மாதிரி யாரும் வர மாட்டாங்க...' என்று உச்சி முகர்ந்து சொல்லி விட்டார்.

கேள்விப் பட்ட, 'கணக்கு' மனிதருக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய் விட்டது.

ஓர் அழைப்பு என்பதை வெறும் காகிதமாக பார்க்கக் கூடாது; அதை, உணர்வும், உயிர்ப்பும் அடங்கிய இதயமாக பார்க்க வேண்டும்.
விசேஷம் மற்றும் நல்லது, கெட்டதுகள் இதயங்களை ஒன்று சேர்க்கின்றன; பல புதிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பழைய உறவுகளை - நட்புகளை சந்திக்கிற போது, அந்த இடத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

புதிய அறிமுகங்கள், பல வகைகளில் நமக்கு பயன் படுகின்றன. நம் உறவு, நட்பு, ஏன், தொழில் கூட விரிவடைய வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கல்லுாரி தாளாளரின் அறிமுகம், வேலை வாய்ப்பிலோ, கல்வி அட்மிஷனிலோ முடிய வாய்ப்பு இருக்கிறது.

ஒரு மருத்துவரின் அறிமுகம், நல்ல மருத்துவத்திற்கும், அநியாய மருத்துவ பில் வழியே நாம் தீட்டப் படாமல் தப்பிப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது.

ஒரு பயணச் சீட்டு ஆய்வாளரின் அறிமுகம், தவிர்க்க முடியாத ஓர் அவசரப் பயணத்தின் போது, ஒரு, 'பர்த்' கிடைப்பதில் கூட முடியலாம்.

வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், நுாலாம்படை உடலில் படிவதைத் தவிர, வேறு என்ன அதிசயம் நிகழ்ந்து விடும்!
'கல்லுாரி விழா; வாப்பா...' என்கிறாள் மகள். 'அடப் போம்மா... செம போரு; அதுங்க அடிக்கிற கூத்தை எவன் பாக்கறது...' என்று மறுக்கிற தந்தை, மிகப் பெரிய தவறை செய்கிறார்.

இவரது இலக்கு கல்லுாரி விழா கலை நிகழ்ச்சிகள் அல்ல; அழைத்த மகளின் அன்பிற்கு செவி சாய்த்து, அவளது உணர்விற்கு மதிப்பு கொடுப்பது தான்!

அவ்விழாவிற்கு போனால், மகளின் தோழிகள் பற்றி அறியலாம்; அவர்களது அப்பாக்கள், அம்மாக்களின் அறிமுகம் பிற் காலத்தில், தன் மகளின் எதிர்கால விஷயத்தில் நம்ப முடியாத நன்மையான முடிவுகளை எடுக்க உதவலாம்.

சரி, எங்கும் வராமல், இவர் சேமிக்கும் நேரத்தை, நல்ல படியாக பயன் படுத்தினாரா என்றால், இல்லை. வெட்டியான முறையில் இவர் போக்கிய பொழுதை, மகளுக்கென அளித்திருந்தால், வட்டியும், முதலுமாய் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது தானே!

எந்த விழாக்களையும், விழாக்களாக பார்க்காதீர்கள்; வீழ்ந்து விடாமல் இருக்க உதவும் வாய்ப்புகளாகக் கருதுங்கள்.
விழாக்கள் எனில் கலந்து கொள்ளக் காரணங்கள் தேட வேண்டுமே தவிர, அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்களை தேடக் கூடாது!
-----------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.12.18

நீங்களும், நானும் பனை மரமும்!!!!


நீங்களும், நானும் பனை மரமும்!!!!

பனை மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டதும் பாதிப்புக்கு முக்கிய காரணமா?

கஜா புயலால் 7 மாவட்டங்கள் அடியோடு சிதைந்து கிடக்கிறது!

காற்றின் வேகத்துக்கு இவ்வளவு பலமா என எண்ணி பார்க்கும் போது அதையும் முன்னோர்கள் சமாளித்த விதம் வியப்பை
தருகிறது!

ஆழிப் பேரலையை சமாளிக்கும் திறன் பனைமரத்துக்கு உண்டு என்பதை அறிந்த முன்னோர்கள் கடலோர மாவட்டங்களில்
‘பனைக்கு பத்தடி’ என்ற முறையில் வளர்த்துள்ளனர்!

கோடிக்கணக்கான பனை மரங்கள் அணிவகுத்து நின்ற தமிழக கடற்கரையோரங்களில் இன்று தேடி பார்த்தாலும் ஒரு பனை
மரத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு வெட்டி அழித்துவிட்டனர்

அதன் பாதிப்பு தான் இன்று புயல் போன்ற இயற்கை சீற்றங்களை சமாளிக்க முடியாமல் கடலோர மாவட்டங்கள் தவிக்கும் நிலை
உள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் 50 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளது!

50-60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்துள்ளது!

ஏரி, குளங்களில் மண் அரிப்பை தடுப்பதற்காக கிராமப்புறங்களில் பனை மரங்கள் சுற்று சுவர் போன்று நடப்பட்டிருந்த காலம்
எல்லாம் போய் அவற்றை எல்லாம் தாறுமாறாக வெட்டி எடுத்து செல்கின்றனர்!

அதன் எதிரொலியாக பனை மரங்களின் அழிவை காட்டும் புள்ளி விபரங்கள் நமக்கு அதிர்ச்சியை தருகிறது!
1970ம் ஆண்டுகளில் சுமார் 6 கோடி பனைமரங்கள் இருந்துள்ளன. இந்த 40 ஆண்டுகளாக எவ்வளவு பனைமரங்கள்

குறைந்தனவோ, அந்த அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பனைமரங்களை வெட்டி வீழ்த்தியிருப்பதாக தெரிவிக்கின்றன.

தற்போது வெறும் 4 கோடி பனைமரங்கள் மட்டுமே தமிழகத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது

#கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை! மற்ற மரங்களை எல்லாம் சுருட்டி வீசியிருக்கிறது. ஆனால் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை. #கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் பனைமரம் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறது!

இப்படிப்பட்ட பனை மரத்தின் அருமை பெருமைகள் தெரியாமல் வேட்டையாடி வருகிறார்கள்!

தமிழகத்தில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. கள் விற்பனை சூடு பிடித்தால் மது விற்பனை குறைந்து விடும் என கருதி தமிழக அரசும் பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வேதனைக்குரிய ஒன்று.
இலங்கையில் ஒரு பனைமரத்தை வெட்டினால் ஜாமீனில் வெளி வரமுடியாத பெரும் குற்றம் ஆகும்.

தமிழகத்திலோ அரசாங்கத்தின் பொக்லைன் போனால் தோண்டுவது பனை மரமாகத் தான் உள்ளது.

இலங்கையில் சட்டம் போட்டு காப்பாற்றுகின்றனர். இங்கு திட்டமிட்டு பனையை அழித்து கொண்டிருக்கின்றனர்!
-------------------------------------------------------------------------
படித்ததில் அதிர்ந்தது!!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.18

Astrology: quiz: 21-12-2018 புதிருக்கான விடை!!!


Astrology: quiz: 21-12-2018 புதிருக்கான விடை!!!

லக்கினம் வலுவாக அதாவது நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் நினைத்ததை அடைய முடியும். அனுபவிக்க முடியும்!
ஜாதகர் துலா லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திலேயே உள்ளார், உடன் பாக்கியாதிபதி புதனும் கூட்டாக உள்ளார். அத்துடன் வர்கோத்தமம் பெற்ற குரு பகவானும் லக்கினத்திலேயே உள்ளார். எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த துலா லக்கினத்திற்கு யோக காரகனான சனீஷ்வரன் 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளார்.

பத்தாம் வீட்டின் அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு 7ல் அமர்ந்து அந்த வீட்டைத் தன் பார்வையில் வைத்துள்ளார். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வையும் பத்தாம் வீட்டில் மேல் உள்ளது. அத்துடன் செவ்வாய் கர்மகாரகன் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது.

இந்த அமைப்பெல்லாம் சேர்ந்து ஜாதகரை நல்ல உத்தியோகத்தில்  அமர்த்தின!!!!!

ஜாதகருக்கு அவருடைய  30ஆவது வயதில் ராகு மகாதிசையில் சுக்கிர புத்தியில் எல்லாம் ஈடேறியது. நடந்தது!!!
ராகு 5ஆம் வீட்டில் உள்ளார். அவர் தான் இருக்கும் வீட்டின் அதிபதி சனியின் பலன்களைக் கொடுக்க வேண்டும். சனி 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கின்றார். அத்துடன் 3 சுபக்கிரகங்கள் - சுக்கிரனையும் சேர்த்து அவரைப் பார்க்கின்ரன. அதைக் கவனியுங்கள்!!!! ஆகவே அந்த புத்தியில் எல்லாம் நடந்தன!!!!

புதிருக்கான பதிலை 12 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 28-12-2018 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger csubramoniam said...
ஐயா கேளிவிக்கான பதில்
1 .லக்கினாதிபதி சுக்ரன் லக்கினத்தில் அமர்ந்துள்ளார்
2 கூடவே லாபாதிபதி சூரியனுடன் கூட்டு
3 பூத ஆதித்ய +நிபுண யோகம்
4 .ஒன்பதாம் அதிபதி புதன் லக்கினத்தில் (கடல்கடக்கும் யோகம்)
௫.பத்தாம் அதிபதி சந்திரனும் செய்வாய் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் இடத்தை நேரடிப்பார்வையில் வைத்திருப்பதால் தொழிலில் நல்ல முனேற்றம் ஏற்பட்டுள்ளது
ராகு திசை சுக்ர புத்தியில் வெளிநாட்டு யோகம் அமைய்ந்துள்ளது
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி .
Friday, December 21, 2018 1:13:00 PM
--------------------------------------------------------
2
Blogger Sanjai said...
சுக்கிரனுக்கு, (லக்கினாதிபதிக்கு) 9ஆம் (புதன்) அதிபதி மற்றும் 12 ஆம் அதிபதியுடன் (புதன்) தொடர்பு உண்டு . ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் உண்டு.
10 க்கு உடைய சந்திரன் 4 ல் இருந்து தன் வீடான கடகத்தை 7 ம் பார்வையாக 10 ம் இடத்தை செவ்வாயுடன் சேர்ந்து பார்க்கிறார்.
9 ம் அதிபதி நல்ல நிலையில் இருந்து தீய கிரகத்தின் பார்வை பாராமல் இருந்தால் வெளிநாடு செல்ல முடியும்.
5th & 7th அதிபதி பரிவர்த்தனை (சனி, செவ்வாய்) வெளிநாடு போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்
Friday, December 21, 2018 8:24:00 PM
------------------------------------------------
3
Blogger venkatesh r said...
ஆசிரியருக்கு வணக்கம்.
புதிர்: என்னதான் அதிசயமோ ஜாதகத்திலே?
துலா லக்கினம், மகர ராசி ஜாதகர்.
யோக காரகன் சனி ஏழில்.... பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்.
வாத்தியாரின் பழைய பாடம் இது....கீழே!
Quote:
(துலா லக்கினத்திற்கு சனி யோக காரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு, சனி 4ஆம் மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு உரியவர். அந்த லக்கின ஜாதகருக்கு கல்விக்கும், அறிவிற்கும் உரியவராவார். அந்த இரண்டு இடங்களையும், அவற்றிற்குரிய பலன்களையும் நெறிப்படுத்தி ஜாதகனை மேன்மைப் படுத்துபவர் அவர். ஆனால் ஜாதகத்தில் சாதாரண நிலையில் அமர்ந்திருக்கும் சனி, அவற்றை அள்ளிக் கொடுக்க மாட்டார். பங்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பார். (Ration shopகளில் நமக்குப் பொருட்கள் கிடைப்பதைப் போல அவைகள் கிடைக்கும்)
ஆனால் அதே துலா லக்கின ஜாதகத்தில் சனி, பரிவர்த்தனை பெற்றிருந்தால், குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளுக்கான பலன்களை அள்ளி அள்ளிக் கொடுப்பார். அவர் இரட்டைச் சனியாகிவிடுவார் . நன்மைகள் இரண்டு மடங்காகிவிடும். சனியின் சுயவர்க்கப்பரல்கள் 5ம் அல்லது அதற்கு மேலும் இருந்தால் (அதாவது அந்த ஜாதகத்தில்) பலன்கள் நான்கு மடங்காகக்கூட ஆகிவிடும்!
அதே சனி பரிவர்த்தனை பெற்றும் பலமின்றி இருந்தால், அவஸ்தைகளும், சிரமங்களும் இரண்டு மடங்காகிவிடும். பலன்கள் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் காலதாமதமாகி, நமது பொறுமையை சோதித்து, கடைசி நிமிடத்தில் கிடைப்பதாக இருக்கும்.}
Un-Quote:
ஜாதகத்தில் மாளவ்ய யோகம், ரூசக யோகம், கஜ கேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல ராஜ யோகங்கள் உள்ளன. மேற்கண்ட காரணங்களால், ஜாதகருக்கு 30 வயதிற்குள் வெற்றிகரமான வாழ்க்கை கிடைத்து வெளி நாட்டில் நல்ல உத்தியோகம்;கை நிறைய சம்பளம் போன்ற ஆசைகள் நிறைவேறின.
இரா.வெங்கடேஷ்.
Friday, December 21, 2018 8:42:00 PM
--------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது போல் எடுத்துக்கொண்டு காரணம் சொல்லப்படுகிறது.
2,7க்கு உடைய செவ்வாய் 4ம் இடம் கேந்திரம் ஏறி உச்சம் அடைந்தார்.ஆகவே தனமும்,பொதுவாழ்க்கை, மனைவி ஆகியவை நன்றாக அமைதல் வேண்டும்.செயலாற்றல் அதிகம் இருக்கும்.
வலுப்பெற்ற செவ்வாயுடன் 10ம் அதிபதியான சந்திரன் இணைந்து, வேலைக்கான 10ம் இடத்தினையே பார்த்தனர். எனவே வேலை கிடைப்பதில் தடை இல்லை.
வேலை கார‌கனான சனி பகவான், (லக்கினத்திற்கு யோககாரகன், ராசி அதிபதி) 7ல் அமர்ந்து நீச பங்கம் ஆகி சுக்கிரன்,குரு, புதன் ஆகிய சுபர் பார்வையப் பெற்று வேலைக்கான அதிர்ஷ்டத்தைக் கொடுத்தார்.
லாப ஸ்தானதிபதி சூரியன் லக்கினத்தில் அமர்ந்து நீசபங்கம் ஆனது அதிர்ஷ்டமானது.
ராகு கேதுவைத் தவிர மற்ற ஆறு கிர‌கங்களும் குருவின் பார்வைய, சம்பந்ததைப் பெற்றனர்.இது மிகுந்த அதிர்ஷ்டம் அளித்தது.குரு ஒன்பதாம் இடத்தைப் பார்த்தது, ஒன்பதாம் அதிப‌னுடன் கூட்டணி ஆகியவை மிகுந்த அதிர்ஷ்டம் அளித்தது.
ஜாதகரின் 18 வயதுமுதல் 36 வயதுவரை ராகுதசா. சாதாரணமாக மகர ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டுப்பயணம் உண்டு.மேஷம் கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகள். இவர்களுக்கு வெளிநாட்டு வாசம் சகஜம். இவர் துலாம் லக்கினம் மகர ராசி.ராகுதசாவில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டானது.9,12 அதிபதியான புதன் லக்கினத்தில், சரராசியில் அமர்ந்து குரு சம்பந்ஹ்தம் பெற்றது வெளிநாட்டுப்பயணம் ,வேலை ஆகியவை அமைந்தன.
kmrk1949@gmail.com
Saturday, December 22, 2018 4:27:00 AM
----------------------------------------------
5
Blogger Ramanathan said...
All favourite planets positioned in Lagna
**Lagna Lord Sukran, 2nd house lord Guru(in same place in navamsa), 11th house lord Suryan, 9th house lord Budhan
3rd house(of victory) is very strong
**Mars and Moon together in 3rd house.
**3rd house lord Saturn and 7th house lord Mars interchanged
**10th house lord moon in 3rd house aspecting 10th house
The drawbacks nullified
**Saturn(neecham) in 7th house
The most important reason for achieving success in less than 30 years
**Rahu is alone in 5th house. The dasa of Rahu would have ensured success
The real drawbacks. They are milder given the strength of other planets
**Mandhi in 2nd house
**12th house lord Budhan in lagnam
**6th house lord Guru in lagnam
**Ketu in 11th house
Saturday, December 22, 2018 10:05:00 AM
---------------------------------------------------------------
6
Blogger ponnusamy gowda said...
அய்யா வணக்கம்!
என்னதான் அதிசயமோ ஜாதகத்திலே?-யா . என்னதான் இல்லே ஜாதகத்திலே? என்னென்னவோ அதிசயங்கள் இருக்கு ஜாதகத்திலே!
ரிஷப லக்கினம் லக்கினாதிபதி லக்கினத்திலேயே ஆட்சி.கூடவே பாக்கியாதிபதி புதனும் லாபாதிபதி சூரியனும் கூடவே முழு சுபரான குரு பகவானும் அமர்ந்து லக்கினமே யோகர் என நிரூபித்துள்ளது.முழு யோகரான சனி பகவான் 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறார். 7ல் சனி பகவான் திக் பலம். தான் அமர்ந்த வீட்டு அதிபதியான செவ்வாயுடன் பரிவர்த்தனை. நீச்ச சனிபகவானை நீச்சமான சூரிய பகவான் பார்வை செகிறார். அதிசயம் என்னவெனில் சூரிய பகவானும் சனீஸ்வர பகவானும் இருவருமே நீச்ச பங்கம் அடைந்தது சிறப்பு. லக்கினத்தில் அமர்ந்த குருவும் புதனும் திக் பலம் அடைந்து ஜாதகரை அதிபுத்திசாலியாக ஆக்கியுள்ளனர். குரு வர்க்கோத்தமும் அடைந்துள்ளார். 8,12 அதிபதிகள் லக்கினத்திலேயே பலமடந்ததால் வெளிநாடு வாசம்.ராஜ கிரகமான 10மதிபதி சந்திரனும் சுக ஸ்தானாதிபதி செவ்வாயும் 4ல் அமர்ந்து ( 4ல் சந்திரன் திக் பலம் ) சொந்தவீட்டை பார்த்து பலப்படுத்தியுள்ளார்!
நடப்பு குரு திசை 2021 ல் முடிந்து சனி திசையில் ஜாதகரின் யோகம் இன்னும் பலப்படும்!
அதிசய ஜாதகம் - வாழ்த்துக்கள் ஜாதகருக்கும் குருவிற்க்கும்!!!
-பொன்னுசாமி.
Saturday, December 22, 2018 11:17:00 AM
------------------------------------------------------
7
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
21-12-2018 அன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் துலா லக்ன ஜாதகமாகும். வெளிநாட்டு பயணத்திற்கு 9, 12 ஆம் வீடுகள் பலம் பெற்றிருக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் 9, 12 ஆம் வீடுகள் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.9, 12 ஆம் வீடுகளின் அதிபதியான புதன் கிரகம் லக்னத்தில் லக்னாதிபதியான சுக்கிரனுடன் சேர்ந்துள்ளார். அவருடன் குருவும் லாபாதிபதியான சூரியனும் சேர்ந்துள்ளனர். குரு வர்கோத்தமம் பெற்றுள்ளார். ஆகவே, அவருக்கு வெளிநாட்டு வேலை, வசதி வாய்ப்பு எல்லாம் சுலபமாகக் கிடைத்தது.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Saturday, December 22, 2018 11:25:00 AM
-----------------------------------------------------------
8
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
என்ன தான் அதிசயமோ புதிருக்கான பதில்
1 ஜாதகத்தில் 10 - இம் இடத்து அதிபதி சந்திரன் உச்ச செவ்வாய் யோடு இணைந்து சந்திர - மங்கள யோகம் பெற்று உள்ளது. மேலும் 4 மற்றும் 7 இம் இடத்து அதிபதி பரிவர்த்தனை யோகம் பெற்று நீச பங்க ராஜா யோகத்தில் உள்ளது.
2 11 இம் இடத்து அதிபதி மற்றும் 9 இம் இடத்து அதிபதி கூட்டாக இணைந்து லக்கினத்தில் குரு பார்வை பலம் பெற்று புத ஆதித்ய யோகம் பெற்று கல்வி மூலம் முன்னேற்றம் பெற்று நிறைய சம்பாத்தியம் பெற்றார்.
3 சுக்கிரன் வெளி நாடு செல்லும் அமைப்பை மேம்படுத்தி அதை பெற்றோர் மூலம் நிறைவு செய்தார் . இவர் லக்கின அதிபதி ஆதலால் இவர் தசை வரும் போது எல்லாம் நடந்தது .
நன்றி
சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Saturday, December 22, 2018 12:00:00 PM
----------------------------------------------------
9
Blogger sundari said...
வணக்கம் சார்
18 வயதிலிருந்து ராகு தசை தொடங்கியது ராகு 5 இருக்குது பொதுவா ராகு வெளிநாடு அதாவது அந்நிய தேசத்திலிருந்து பணம் பெரும் கிரகம் அந்த
திசையில் அவர் வெளிநாடு சென்று பணம் சம்பாதித்தார் மேலும் அது குருவின் லட்சுமி ஸாதனம் அந்த யிடம் குருபார்வை பெற்றுஇருக்குது
மேலும் சந்திரன் மகரத்தில் இருக்குது அது நீரை குறிக்கும் இடம் தண்ணி ராசியிலிருந்தால் வெளிநாடு செல்லுவார்கள் மேலும் வெளிநாட்டை குறிக்கும் 9 அதில் சனி குரு பார்வை பெற்றுஇருக்குது 11 கேது நினைத்தது நடக்கும் மாளவியா புத ஆதித்ய ருச்சகய சந்திரா மங்களம் அம்ச யோகம் இருக்குது துலா லக்கனம் எல்லா சந்தோசம் கிடைக்கும்
Saturday, December 22, 2018 1:35:00 PM
-----------------------------------------------------------
10
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)லக்னம் சர லக்னமாகி,லக்னாதிபதி லக்னத்தில்.அவரே 8க்கும் அதிபதியாகி வெளி நாட்டு பயணத்தை கொடுக்கிறார்2)நீண்ட பயணத்திற்க்கு காரணமான பாக்யாதிபதி புதன் லக்னத்தில்.அவரே 12க்கும் அதிபதியாகி,லக்னத்துடன் சம்மந்தப்பட்டு வெளிநாட்டில் பிழைக்கும் தன்மையை தருகிறார்3)லாபாதிபதி சூரியன்,நீசபங்கமாகி லக்னத்தில் அமர்ந்து 8,9,12அதிபதிகளுடன் இணைவு.4)3,6க்கு உடையவரான குரு லக்ன பாபர் என்றாலும்,இயற்க்கை சுபராதலால்,அவர் சேர்க்கை உத்யோகம் பார்க்கும் அமைப்பை கொடுத்தது5)யோககாரன் சனி 7ல் அமர்ந்து லக்னத்தை பார்ப்பது.சந்திர கேந்திரத்தில் இருப்பதால் நீச்ச பங்கமாகி வலுவாகிறார்.6)10ம் இடமும் சரம் மற்றும் நீர் ராசியாகி,அதன் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து வளர்பிறை சந்திரனாகி 10ம் இடத்தை பார்ப்பதும்7)மேல்படிப்பிற்க்கான 5 ம் இடத்தில் அமர்ந்த ராகு தசா ராகு புத்தியில்(ராகுக்கு வீடு கொடுத்தவர் சனி ஆதலால்)வெளி நாட்டிற்க்கு படிக்க சென்றவர் அங்கேயே வேலைபார்க்கும் வாய்ப்பை பெற்றார்.நன்றி.
ஐயா ஒரு சந்தேகம்.
11ம் அதிபதி எல்லா
லக்னங்களுக்கும் பாபர் என்கிறார்கள்.அவரே லாபாதிபதியாகிறார்அவர் பார்த்த அமர்ந்த சேர்ந்த பலன்களை எப்படி கணிப்பது
Saturday, December 22, 2018 9:26:00 PM
--------------------------------------------------------
11
Blogger guru said...
Birth date:15-Nov-1969 : 6 am
strong lagna. sukran in own house.
guru aspects rahu in 5th place.
uccha sevvaai in 4th place with moon(chandra mangala yoga)
all gave good higher education.
uccha sevvaai(second house god) aspects 10th & 11th place
10th god chandran conjuncts sevvaai, both aspects 10th place.
so houses 2 & 10&11 strongly related.
. yogakaragan sani aspects 9th house and 12th god budhan.
All these gave foreign job and good money in rahu dasa.
After age 18, rahu dasa started.
Rahu gave good yoga from the starting of the dasa.
Person achieved all the yoga within 30 yrs.
Saturday, December 22, 2018 10:40:00 PM
-------------------------------------------------------------------
12
Blogger திலக் ஜெ.பாலமுருகன் said...
வாத்தியார் அய்விற்கு வணக்கம்.
எமது ஜாதக ஆய்வை முழுமையாக பின்னூட்டத்தில் பதிவிட இயலவில்லை.
தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு Classroom2007@gmail.com க்கு அனுப்பியுள்ளேன்.
தாங்கள் அடியேனின் ஆய்வில் தவறேதும் இருப்பின் சுட்டி காட்டுமாறு பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்.
ஸ்ரீ உச்சிஷ்ட மஹகணபதி போற்றி!
வாத்தியார் அய்யாவிற்கு பணிவான வணக்கம்.
ஜாதகர் பிறந்த தேதி: 15-11-1969
பிறந்த நேரம்: 04:30:40Am (தோராயம்)
லக்னம் : துலாம்
இராசி/ஜென்ம நட்சத்திரம்: மகரம்/உத்திராடம் 3ம் பாதம்.
தற்போது வயது: 49வ 1மா.
சித்த யோகம், வளர்பிறையில், புதன் ஹோரையில் ஜனித்த ஜாதகம்.
லக்னம் 05° 10' பாகையில் துலாத்தில். லக்ன பாவமுனை உபாதிபதி சூரியன். சூரியன் 11ம் வீடான சிம்ம வீட்டோன். காரகத்தில் சம்பாத்திய காரகன். லக்கன பாவமுனைக்கு உபாதிபதியாக வீற்றிருப்பது சிறப்பு. மேலும் சூரியன் குரு நட்சத்திரத்திலும், சூரியனே உபநட்சத்திரமாக சுயவலு பெற்றதும் ஜாதகர் கவுரவம் மிகுந்த பாரம்பரியமிக்க குடும்பத்தில் ஜனித்திருப்பார்.
ஜாதகர் பருமனற்ற உயரமான தோற்றம் உடையவர். திடமான ஆரோக்கியம் உடையவர்..
லக்ன பாவமுனை 1,3,9 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதால் ஆழ்ந்த நுண்ணறிவும், திடமான முடிவுகளையும் எடுக்க கூடியவர்.
ஆராய்ச்சி சிந்தனையும், புதியனவற்றில் மிகுந்த ஈடுபாடும் உடையவர்.
தன ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவமுனை செவ்வாய் வீடான விருச்சிகத்தில் 4° 47' பாகையில் சனியின் உப நட்சத்திரத்தில் விழுந்துள்ளது. கர்ம காரகன் சனி நின்ற நட்சத்திரம் வித்தியாகாரகன் புதன், உப நட்சத்திரம் ஞான காரகன் கேது. சனி -> புதன் | கேது.
மேலும் சனி (2,4,8,10) நிலையான பாவங்கள் என்று சொல்ல கூடிய 2,4,10ற்கும், இரட்டைபடை பாவங்களை இணைத்து இயக்க கூடிய 8யையும் வைத்திருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பு. கேந்திர பாவங்களில் மிகவும் வலிமை வாய்ந்தது 10ம் இடம். அதை சனியே முன்னின்று இயக்குவதால் கர்ம காரகன் நல்ல யோகத்தை வழங்குவான். மேலும் இரண்டாம் பாவம் தனஸ்தானம் வலுவாக 2,4,6,8,10 தொடர்பு பெற்றது செல்வ சேர்க்கைகக்கு அதி சிறப்பான அமைப்பு.
ஜாதகரின் அறிவாற்றல், புதிய சிந்தனை, முயற்சி, புதியன நாடுதல், நரம்பு மண்டல பலமறிதல் போன்ற காரகங்களை உணர்த்தும் 3ம் பாவத்திற்கு சந்திரன் உபாதிபதியாக அமைந்து 1,3,9,11 ஆகிய இயற்கை பேரறிவை வழங்கும் பாவங்களுடன் நல்லுறவு பூண்டது பிறப்பிலே நல்ல அறிவை விதிவகையில் வழங்கி உள்ளது.
இருப்பினும் சந்திரன் ஒரு மாறும் நிலை கிரகம். தசா புக்திக்கு தகுந்தார் போல் சிந்தனை மாற்றம் தருபவர். ஆகையால் ஜாதகரின் என்ன ஓட்டம் சனி மற்றும் புதன் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலகட்டத்தில் சற்று தாருமாறாக இருக்கும்.
நான்காம் பாவம் இரட்டை படை தொடர்பு. பொறியியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்காகூடிய ஜாதகம்.
6,7ம் பாவ அடிப்படையில் சுய தொழிலைவிட அடிமை தொழிலே சிறப்பு.
உள்நாட்டில் அரசாங்க உத்தியோகம் சற்று கடினமே.
தொலைதூர வகையில் வருமானத்தை குறிக்க கூடிய 9ம் பாவத்திற்கு சுபிட்ச காரகன் சுக்கிரன் அமைந்து, மேலும் தொடர்பு கொண்ட பாவங்கள் 2,4,6,8,10. ஆக ஜாதகருக்கு வெளிநாட்டு வருவாய் 100% உறுதி.
ஜாதகர் உள் நாட்டில் தங்கி ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு வருவாய் ஈட்டுவாரா அல்லது வெளிநாட்டில் வேலை செய்து வருவாய் ஈட்டுவாரா?
ஜாதகரின் வேலையை குறிக்கும் ஆறாம் பாவம் உபய மற்றும் நீர் ராசியான மீனம்.  இந்த பாவத்திற்கு உபாதிபதி புதன். மேலும் வெளிநாட்டு வாழ்க்கையை குறிக்க கூடிய 12ம் பாவத்திற்கும் உபாதிபதியாக அமைந்தது மிக சிறப்பாக அமைந்துள்ளது.
12ம் பாவம் 1,3,5,9 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதால் ஜாதகர் வெளிதேச வாழ்க்கையால் பெரிய அனுகூலம் அடைவார்.
பெரும்பாலான பாவங்கள் 10ம் பாவத்தை தொடர்பு கொண்டுள்ளதால் ஜாதகர் நல்ல உயர்நிலையில் பணிபுரிவார்.
இந்த ஜாதகர் தாமதமாக திருமணம் புரிந்திருப்பார். முதல் களத்திரத்தில் சற்று பிரச்சனைகளை சந்தித்திருக்க வாய்ப்புகள் உண்டு.
கடுமையான புத்திர தோஷத்தையும் காட்டுவதல் தாமதமாக பிள்ளைகள் பிறந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
தனி வாழ்வில் சில எதிர்பாராத சிக்கல்கலையும் சந்தித்திருக்க வாய்ப்புகள் காணபடுகின்றது. குறிப்பாக சனி, கேது, குரு, ராகு, சுக் ஆகிய புத்திகளில் பெரும்பகுதி இல்லற வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைகள் வலுத்து இருக்கும்.
கேது, ராகு, புதன், சூரி,சந் ஆகிய புத்திகளில் புறம் சார்ந்த விஷயங்களில் பொருளாதாரம், தொழில், வேலை, முதலீடு, பொறுப்புணர்வு, அந்தஸ்த்து, மனகட்டுபாடு போன்ற அறிவு பூர்வமாண விஷயங்கள்,  குறிப்பாக பணிபுரியும் இடங்களில் எதிர்மறையான பலன்களை ஜாதகர் சந்தித்திருப்பார்.
இளம் வயதில் ஜாதகர் ஏன் வெளிநாடு சென்றார்?
ஜாதகருக்கு ராகு தசை 18வயது 06 மாதத்தில் ஆரம்பித்தது. பொதுவாக ராகு இருக்கும் நிலையில் இருந்து மாறுபட்ட நிலைக்கு மாற்றும் குணம் உடையவர். வெளிநாடு செல்ல இவர் ஆசி மிகவும் அவசியம். பொதுவாக சாயா கிரகங்கள் செயற்கை வாழ்க்கையை விரும்பவைத்திடும்.
மேலும் ராகு தசையாக முன்னின்று நடத்திய பாவங்கள் 3,6,9,12. இவை அனைத்தும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஏற்ற சிறப்பான பாவங்கள். 12 என்பது மறைந்து வாழுதல், 9 என்பது தொலைதூர பயணங்கள், 6 என்பது வேலை, 3 என்பாது சிறு தூர பயணம்.. இடம் மாறுதல்.
ஆக ராகு திசை ஜாதகர் இளம் வயதில் வெளிநாடு சென்று பொருளீட்ட பக்க பலமாக தன் தசையில் கொடி காட்டியுள்ளார்.
ஜாதகர் தனது 29 வயது நெருக்கத்தில் கேது புக்தியில் வெளிநாடு செல்லவோ அல்லது அதற்கு முந்திய புதன் புக்தியில் கேது அந்தரம் (26வ 09மா), ராகு அந்தரம் (27வ 10மா), குரு அந்தரம் (28வ 3மா) ஆகிய கால கட்டங்கள் மிகவும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு சாதகமாக உள்ளன.
மேற் குறீப்பிட்ட அமைவுகள் ஜாதகரின் பொருளாதாரம் வெளிநாட்டு வாழ்வில் சிறப்படைய விதி கொடுப்பினையும், தசா புக்திகளின் நீண்ட கொடுப்பினையும் ஒருங்கே அமைந்ததின் விளைவு ஜாதகர் இளம் வயதிலே வேளிநாடு சென்றார்.
இவருக்கு குரு தசை தற்போது நடை பெற்று வருகின்றது. சூரிய புக்தியும், சந்திர புக்தியும் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் இல்லை. தற்போது குடும்ப வாழ்க்கையில் சற்று அதிகமாக கவனம் செலுத்துவார். தாயாருக்கு சுகவீன குறை ஆரம்பித்திற்கும். செவ்வாய் புக்தி (01/2019 - 12/2019) மத்திம பொருளாதார வருவாய்.
ராகு புக்தியில் நிலை சற்று மாறும் (12/2019 - 05/22)
அடியேனுக்கு சிற்றவிற்கு அறிந்த வகையில் எமது ஆய்வை பகிர்ந்துள்ளேன். தவறேதும் இருப்பின் வாத்தியார் அய்யா சுட்டிகாட்டிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
இப்படிக்கு,
திலக்.ஜெ.பாலமுருகன்.
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.12.18

Astrology: Quiz: புதிர்: என்னதான் அதிசயமோ ஜாதகத்திலே?


Astrology: Quiz: புதிர்: என்னதான் அதிசயமோ ஜாதகத்திலே?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் உத்திராட நட்சத்திரக்காரர். வெளிநாடு போக வேண்டும். நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பளத்தில் சேர வேண்டும் என்று ஆசைப் பட்டார். அவருடைய பெற்றோரும் ஆசைப்பட்டார்கள். எல்லாம் ஈடேறியது. அதாவது அவருடைய 30 ஆவது வயதிற்குள்ளாகவே எல்லாம் நடந்தது. அவருடைய ஜாதகப்படி அந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி பதில் எழுதுங்கள்

சரியான விடை 23-12-2018 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===================================================

20.12.18

எதெது எப்போது கெடும்?


எதெது எப்போது கெடும்?

*எது கெடும்*

பாராத பயிரும் கெடும்
பாசத்தினால் பிள்ளை கெடும்
கேளாத கடனும் கெடும்
கேட்கும்போது உறவு கெடும்
தேடாத செல்வம் கெடும்
தெகிட்டினால் விருந்து கெடும்

ஓதாத கல்வி கெடும்
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
சேராத உறவும் கெடும்
சிற்றின்பன் பெயரும் கெடும்
நாடாத நட்பும் கெடும்
நயமில்லா சொல்லும் கெடும்

கண்டிக்காத பிள்ளை கெடும்
கடன்பட்டால் வாழ்வு கெடும்
பிரிவால் இன்பம் கெடும்
பணத்தால் அமைதி கெடும்
சினமிகுந்தால் அறமும் கெடும்
சிந்திக்காத செயலும் கெடும்

சோம்பினால் வளர்ச்சி கெடும்
சுயமில்லா வேலை கெடும்
மோகித்தால் முறைமை கெடும்
முறையற்ற உறவும் கெடும்
அச்சத்தால் வீரம் கெடும்
அறியாமையால் முடிவு கெடும்

உழுவாத நிலமும் கெடும்
உழைக்காத உடலும்  கெடும்
இறைக்காத கிணறும் கெடும்
இயற்கையழிக்கும் நாடும் கெடும்
இல்லாலில்லா வம்சம் கெடும்
இரக்கமில்லா மனிதம் கெடும்

தோகையினால் துறவு கெடும்
துணையில்லா வாழ்வு கெடும்
ஓய்வில்லா முதுமை கெடும்
ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
அளவில்லா ஆசை கெடும்
அச்சப்படும் கோழை கெடும்

இலக்கில்லா பயணம் கெடும்
இச்சையினால் உள்ளம் கெடும்
உண்மையில்லா காதல் கெடும்
உணர்வில்லாத இனமும் கெடும்
செல்வம்போனால் சிறப்பு கெடும்
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்

தூண்டாத திரியும் கெடும்
தூற்றிப்பேசும் உரையும் கெடும்
காய்க்காத மரமும் கெடும்
காடழிந்தால் மழையும் கெடும்
குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்
குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்

வசிக்காத வீடும் கெடும்
வறுமைவந்தால் எல்லாம் கெடும்
குளிக்காத மேனி கெடும்
குளிர்ந்துபோனால் உணவு கெடும்
பொய்யான அழகும் கெடும்
பொய்யுரைத்தால் புகழும் கெடும்

துடிப்பில்லா இளமை கெடும்
துவண்டிட்டால் வெற்றி கெடும்
தூங்காத இரவு கெடும்
தூங்கினால் பகலும் கெடும்
கவனமில்லா செயலும் கெடும்
கருத்தில்லா எழுத்தும் கெடும்
----------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.12.18

உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!!உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா?  அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!!

இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.

40 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது.

40 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம்.

10,000 கி.மீ பதவுசா வண்டியை ஓட்டுங்க. அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்.40 வயதும் அப்படிதான். பல விஷயங்களில் அனுபவப்பட்டு தெளிந்து வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்.

40 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள்.

1.புதியதை தேடுங்கள்

சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம். 40 களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும். சோம்பேறித்தனம் சொம்போடு உட்கார்ந்து மொக்கை போடும். எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க, புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள்.

2.இளைஞர்களோடு பழகுங்கள்

40 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து அங்கிள் அசோசியஷனை உருவாக்காதீர்கள். உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள்.  உங்களுக்கு 25 வயதில் இருந்த அவர்களிடம் இருக்கும். அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைக்கும். அங்கிள் அசோஷியனில் உட்கார்ந்தால் இன்னும் வயசாகும்.

3.அழகாக உடை உடுத்துங்கள்.

அழகான உடைகளை தேர்வு செய்யுங்கள். காமா சோமா என்று ஒரு காம்பினேஷனில் உடை போட்டுக் கொண்டு திரியாதிர்கள். 40 வயதில் நரையும் வழுக்கையும் அழகுதான். உலகின் அழகான, நிறைய பேரை ஈர்க்கன்றவர்களில் 40+கார்கள்தான்.

4.பயணம் செல்லுங்கள்.

 உடனே 40+ ஆட்கள் பத்துபேரை கூட்டிக் கொண்டு கோயில் கோயிலாக கிளம்பிவிடாதீர்கள். இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வித்தியாசமான இடங்களுக்கு செல்லுங்கள். வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள். திசையறியா பயணங்கள் செல்லுங்கள். இல்லையென்றால், 40 வயதில் அங்கிள் ஆன நீங்கள், 50 வயதில் கிழவனாகி விடுவீர்கள்.

5.நிறைய படியுங்கள்

மூளைக்கு தீனிபோட ,நிறைய படியுங்கள் தேர்வு செய்து படியுங்கள். புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களை வாசியுங்கள். அவர்கள் பேச்சை கேளுங்கள். அறிவுப் பகிர்தல் நடக்கும் இடங்களில் எல்லாம் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மேற்சொன்ன விஷயங்களை செய்தால் 40+ ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

மூளையும், மனசும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வரப் போகிறது.

எப்போதுமே முதல் இன்னிங்கசை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கறது. நீங்கள் 40+ கார்ராக இருந்தால் தாமதிக்காதீர்கள்.

இது உங்கள் ஆட்டம் துவங்குங்கள்.
----------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.12.18

ஏழு தலைமுறை நடிகர்!!!!


ஏழு தலைமுறை நடிகர்!!!!

M.N.நம்பியார்

7 தலைமுறை, 70 ஆண்டுகள்!

நடிக்க வந்து ஐந்து ஆண்டுகளை முடித்து விட்டாலே 'எங்கெங்கோ' போய் விடும் இக்காலத்து நடிகர்களுக்கு மத்தியில், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நடிப்புலகில் தனி இடத்தைப் பிடித்து, தனது இடத்திற்கு அருகில் கூட யாரையும் அண்ட முடியாத அளவுக்கு தனி முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார் எம்.என். நம்பியார்.

இந்தியில் பிரான் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தார். அவரது இடத்தை இன்னும் எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லை. அப்படி ஒரு அபாயகரமான வில்லன். அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் அவ்வளவு அபாரமாக இருக்கும்.

தமிழுக்கும் அப்படி கிடைத்த பயங்கர வில்லன்தான் நம்பியார். அவரை நிஜமாகவே வில்லனாகப் பார்த்தார்களாம் அக்காலத்துப் பெண்கள். அந்த அளவுக்கு அவரது முக பாவனையும், வசன உச்சரிப்பும் படு தத்ரூபமாக இருந்ததுதான் காரணம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டு கால நீண்ட, நெடிய பயணத்தைக் கொண்டது நம்பியாரின் திரையுலக அனுபவம். 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்ட பழுத்த அனுபவஸ்தர். வில்லத்தனத்தில் மட்டுமல்லாமல், பக்தியிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

கிட்டத்தட்ட 65 ஆண்டு காலம் தொடர்ந்து சபரிமலைக்குப் போய் வந்தவர். இதனால்தான் அவரை குருசாமிகளுக்கெல்லாம் குருசாமி என்று அய்யப்ப பக்தர்கள் புகழ்கிறார்கள், மரியாதை செய்தார்கள்.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர். ஆனால் அவர்களுக்கெல்லாம் மகுடமாக, மகா வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்.

அவருடைய பெயரை உச்சரித்தாலே ஒரு திகில் ஏற்படும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்தவர்.

மஞ்சேரியிலிருந்து ஊட்டிக்கு ..

கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறந்தவர்தான் நம்பியார். இவருடைய இயற்பெயர் நாராயணன் நம்பியார். ஊர்ப் பெயரையும் சேர்த்து எம்.என். நம்பியார் ஆகி விட்டார்.8 வயதில் ஊட்டியில் டீ கடை நடத்தி வந்த தனது அக்காள் கணவரின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தார் நம்பியார். அங்கு தங்கி பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். 5ம் வகுப்பு வரை படித்தார்.சகோதரியின் குடும்பம் கஷ்டமான நிலையில் இருப்பதைப் பார்த்த அவர் அவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல், 13வது வயதில் சென்னைக்கு வந்தார்.

ஊட்டியலிருந்து நாடகத்திற்கு ..

சென்னைக்கு வந்த நம்பியாருக்கு நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் வந்தது. இதனால், நவாப் ராஜமாணிக்கம் நடத்தி வந்த நாடக கம்பெனியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடம்தான் கிடைத்தது. பின்னர் அந்த நிறுவனத்தின் பக்த ராமதாஸ் நாடகம் திரைப்படமாக உருவாகியது.

1935ம் ஆண்டு அந்த நாடகம் தமிழிலும், இந்தியிலும் திரைப்படமானது. நாடக அனுபவத்தை கருத்தில் கொண்டு நம்பியாருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு ..

இப்படித்தான் சினிமாவுக்கு வந்து சேர்ந்தார் நம்பியார். அவருக்கு முதல் படத்தில் கிடைத்த சம்பளம் ரூ. 40.

எத்தனை படங்களில் ஒரு நட்சத்திரம் நடித்திருக்கிறார் என்பது எண்ணிக்கையில் நிகழ்த்தப்படும் சாதனை. அதைப் போலவே ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு எத்தனை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசம் காட்டி எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முதல் சாதனையைப் படைத்தவர், தமிழ் ரசிகர்களின் நித்திரையிலும் பயமுறுத்திய முத்திரை வில்லன் எம்.என்.நம்பியார்.

ஆனால் இன்றைய தலைமுறை தமிழ் ரசிகர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்ததும், அதேபோல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்ததும்தான் நினைவுக்கு வரும். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், அந்த நிறுவனத்தின் அதிபரும் இயக்குநருமான டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் 1950-ல் வெளியாகிப் பெரிய வெற்றிபெற்ற ‘திகம்பரச் சாமியார்’ படத்தில் 12 வேடங்களில் கலக்கினார் நம்பியார்.

சிறு சிறு வேடங்களாக நடிக்கத் தொடங்கிய நம்பியாருக்கு ஆரம்பத்தில் ஹீரோ வேடங்களும் கூட கிடைத்தன. ஆனால் வில்லன் வேடத்தில்தான் அவர் பரிமளித்தார்.இது, எம்.ஜி.ஆருடன் இணைந்த பிறகு பன்மடங்கா பிரகாசிக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் படத்தில் வில்லனா, கூப்பிடு நம்பியாரை என்று கூப்பிடும் அளவுக்கு இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அமர்க்களமாக அமைந்தது.

இருவரும் இணைந்து நடிக்காத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு இந்த ஹீரோவும் - வில்லனும் இணைந்தே நடித்து வந்தனர்.

சர்வாதிகாரி படத்தில் நம்பியாரின் வில்லத்தனம் வெகுவாகப் பேசப்பட்டது. அவரும், எம்.ஜி.ஆரும் போட்ட கத்திச் சண்டை அப்போது வெகு பிரசித்தம்.தொடர்ந்து தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் தங்கம் என இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.

வெறுக்க வைத்த வில்லத்தனம் ..

இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக - அதி பயங்கர வில்லனாக - தொடர்ந்து நடித்ததால் நம்பியாரை நிஜமாகவே வில்லனாக நினைத்து விட்டனர் அந்தக் காலத்துப் பெண்கள்.

படம் பார்க்கும்போது நம்பியாரை, எம்.ஜி.ஆர். அடிக்கும் காட்சிகளுக்கு அமோக வரவேற்பு இருக்குமாம். அதிலிருந்தே மக்கள் எந்த அளவுக்கு நம்பியாரை பார்த்து பயந்தார்கள், கோபமாக இருந்தார்கள் என்பதை உணரலாம்.

இதைத்தான் பின்னாளில் இயக்குநர் வி.சேகர் தயாரித்த நீங்களும் ஹீரோதான் படத்தில் ஒரு காட்சியாகவே வைத்தார். அதில், நம்பியாரும், பி.எஸ்.வீரப்பாவும் ஒரு படப்பிடிப்புக்காக கிராமத்திற்கு வருவார்கள்.

அவர்களுக்கு தங்க வீடு கிடைக்காது. ஒவ்வொரு வீடாக ஏறி, இறங்கி வீடு கேட்பார்கள். ஆனால் இவர்தான் எம்.ஜி.ஆருக்கு எதிராக சதி செய்தவர், எனவே வீடு கிடையாது என்று ஒவ்வொருவரும் கூறுவது போல காட்சி அமைத்திருப்பார்கள்.இப்படி தனது வில்லத்தன நடிப்பால் அந்தக் கேரக்டருக்கே ஒரு தனி முத்திரையை உருவாக்கி விட்டவர் நம்பியார். அவரைத் தவிர வேறு எந்த வில்லன் நடிகருக்கும் இப்படி ஒரு இமேஜ் இதுவரையிலும் அமையவில்லை, இதற்கு முன்பும் அப்படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியாக எம்.ஜி.ஆருடன், 75 படங்களில் இணைந்து நடித்துள்ளார் நம்பியார்.

சிவாஜிக்கும் வில்லன் ..

எம்.ஜி.ஆரைப் போலவே, சிவாஜி கணேசனுக்கும் வில்லனாக நடித்தவர் நம்பியார். இருவரும் இணைந்து அம்பிகாபதி, உத்தமபுத்திரன், தில்லானா மோகானாம்பாள், திரிசூலம், சிவந்த மண், லட்சுமி கல்யாணம் என ஏராளமான படங்களில் நடித்தனர். சிவாஜிக்குத் தம்பியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நம்பியார்.

அந்தக் காலத்து மும்மூர்த்திகளில் ஒருவரான ஜெமினி கணேசனுடனும் நிறையப் படங்களில் நடித்தவர் நம்பியார்.இந்த மூன்று நடிகர்களின் படங்களிலும் தவறாமல் நம்பியார் இடம் பெறுவது அப்போது வழக்கமாக இருந்தது.

7 தலைமுறையினருடன் ..

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், அடுத்த தலைமுறையான ரஜினி, கமல், விஜயகாந்த், அவர்களுக்கு அடுத்த தலைமுறையான விஜய் உள்ளிட்டோருடன் நடித்த பெருமைக்குரியவர் நம்பியார். மொத்தம் 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து அவர் சாதனை படைத்துள்ளார். அவரது மொத்த படங்கள் ஆயிரத்தைத் தாண்டும். நடிப்பனுபவமோ 70 ஆண்டுகள்.

வில்லத்தனத்தில் கலக்கிய நம்பியார் பின்னர் குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவை வேடங்களிலும் அசத்த ஆரம்பித்தார்.தூறல் நின்னு போச்சு படம் மூலம் இப்படி டிராக் மாறிய நம்பியார் காமெடியிலும் கலக்கியவர்.நம்பியாரின் மருமகன் தான் நடிகர் சரத் பாபு ஆவார்.

சபரிமலை அய்யப்பனின் தீவிர பக்தராகவும் மிளிர்ந்தவர். தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்குப் போய் வந்த சாதனை படைத்தவர். இவரைத்தான் சபரிமலைக்குச் செல்லும் திரையுலகினர் குருசாமியாக ஏற்று செயல்பட்டு வந்தனர்.எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, நம்பியார் இருமுடி கட்டிச் செல்லும்போது, எம்.ஜி.ஆர். அனுப்பி வைக்கும் மாலைதான், அவருக்கு முதலில் அணிவிக்கப்படுமாம்.
----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.12.18

நீங்கள் அறிய வேண்டிய விஷயங்கள்.


நீங்கள் அறிய வேண்டிய விஷயங்கள்.

1. கோயிலுக்குச் செல்வதற்கு காலை நேரம் உகந்தது,

2. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

3. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் எடுத்து இட்டுக் கொள்வதே நல்லது.

4. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும் போது கண்களை மூடிக் கொண்டு வணங்கக் கூடாது.

5. பெண்கள் மாதவிலக்கின் போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

6. செவ்வாய்க் கிழமை, புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.

8. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும்.

9. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.

10. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

11. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

12. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

13. எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றுவது தவறு என்பது பெரியோர்கள் கருத்து.

14. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

15. வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது.

16. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

17. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

18. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.

19. கோயிலுக்குள் செல்லும் போது, கோயில் வாசலில் பிச்சை கேட்கும் வறியவர்களுக்கு தானம் செய்து விட்டுப் போக வேண்டும் அதாவது அந்த தானம் செய்த தர்ம பலனுடன் தான் இறைவனின் சன்னதியை அடைய வேண்டும் கோயிலில் சென்று இறைவனை தரிசித்து விட்டு வறியவர்களுக்கு தானம் செய்வது நல்ல பலனை அளிக்காது.

20. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

21. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது பேசினால் சுபம் தடைபடும்.

22. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது நாம் அணைக்கக் கூடாது.

23. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியே தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

24. புனித தீர்த்தங்களில் இறங்கும் போது எடுத்த எடுப்பில் காலை குளத்தில் வைக்கக் கூடாது. குளத்தின் தீர்த்தத்தை தலையில் தெறித்து அனுமதி வாங்கிய பிறகு தான் குளத்தில் கால்களை வைக்க வேண்டும். அது போல கோயிலுக்குள் செல்லும் போது வாய்ப்பு இருந்தால் கால்களை கழுவி விட்டு செல்வது நல்லது. இறைவனை தரிசித்து விட்டு வந்த பின்னர் கால்களை கழுவுதல் கூடாது.
-----------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.12.18

Astrology: quiz: 14-12-2018 புதிருக்கான விடை!!!


Astrology: quiz: 14-12-2018 புதிருக்கான விடை!!

சந்திரன்தான் மனகாரகன். He is the authority for mind. He controls the mind
தேய்பிறைச் சந்திரன். (தீங்கானவர்) எட்டாம் வீட்டில். உடன் கேதுவின் சேர்க்கை. அத்துடன் கேது மகா திசை. எல்லாம் சேர்ந்து
ஜாதகரைப் பாடாய்ப் படுத்திவிட்டன.

31வது வயதில் சுக்கிர மகா திசை ஆரம்பம். தசா நாதன் 7ம் இடத்தில் இருந்து லக்கினாதிபதி குரு பகவானை நேரடியாகப்
பார்க்கிறார். இருவரும் சேர்ந்து ஜாதகருடைய எண்ணங்கள் செயல்கள் நடத்தை மற்றும் மன நிலைமையை முற்றிலுமாக மாற்றி விடுவார்கள். அதற்குப் பிறகு ஜாதகருடைய வாழ்க்கையில் முழுமையான வசந்தம்தான்!!!!!

புதிருக்கான பதிலை 9 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 21-12-2018 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 7 ஆகஸ்டு 1972ல் மாலை 4 மணி 54 நிமிடங்கள் 30 வினாடிக்குப்பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று
எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜாதகருடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் சூரியன் . மனோகாரகனான சந்திரன் சூரியனால் எரிக்கப்பட்டு
வலுவிழந்தார்.புத்திகாரகனான புதனும் சூரியனால் அஸ்தங்கதம் ஆனார்.கடக ராசிக்கு யோககாரகனான செவ்வாய், சுறு
சுறுப்புக்குக்காரணமான செவ்வயும் சூரியனால் அடி வாங்கினார்.
லக்கினாதிபதி குரு பகவான் வக்கிரம் அடைந்தார். லக்கினமும், குருவும் ராகு மாந்தியால் சூழப்பட்டு லக்கினமே
வலுவிழந்தது.ராகு குருவைத்தவிர மற்ற அனைத்து கிரகங்களும் சனி செவ்வாய் ஆகியவர்களுக்கு இடையே
மாட்டிக்கொண்டன.இவையெல்லாம் அவருடைய ஊக்கத்தைக் கெடுத்து மன அழுத்தத்தினைக் கொடுத்தது.
அஷ்டவர்கத்தில் சனைச்சரனைத்தவிர மற்றவர்கள் அனைவரும் சுய வர்கபரல் 4க்கும் குறைவாகப்பெற்றனர். லக்கினத்திற்குப்
பத்தாம் இடம் 35 பரலும் 6ம் இடம் 43 பரலும் பெற்றதால் காலதாமதாகவேனும் அரசாங்க வேலை கிடைத்தது.27 வயதில் கேது
தசா சனி புக்தியில் 2க்கு உரிய சனி பகவான் 6ல் அமர்ந்து சுய வர்கத்தில் 7 பரல் பெற்று 6ம் இடமும் 10ம் இடமும் அஷ்டவர்கத்தில்
வலுப்பெற்றதால் வேலை கிடைத்தது.
kmrk1949@gmail.com
Friday, December 14, 2018 5:57:00 AM
-----------------------------------------------------------
2
Blogger sundari said...
சார் வணக்கம்
சந்தரன் சனி பார்வையில் இருக்குது அப்புறம் குணத்தை பற்றி சொல்லும் 8 இடம் கிரகம் பல இருந்தல் அந்த மகா தசையில்
ரொம்ப போராட்டமாக யிருக்கும் சுகுரான் ஆறு அப்புறம் 11 அதிபதி தனசுலக்கணத்துக்கு பாவிய இரு ந்தாலும் 7 இருப்புதல் பாதி
நாளாய்இன்பம் துன்பம் கொடுப்பார் ஆட்சி சந்தரன் அப்புறம் சூரியன் தனுசுக்கு நண்பன் அதனால் 8 இருத்தாலும் துன்பம் தராது
செவ்வாய் தசை 5 12 அதிபதி அது 9 இருக்குது நல்ல இருக்கும்
Friday, December 14, 2018 10:05:00 AM
----------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா,
தங்களின் கேள்விக்கான பதில்
1 ஆறாம் அதிபதி சுக்ரனின் நேரடி பார்வையில் லக்கினம்
2 .புதன் திசை ,கேது இருவரும் எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளனர்
3 .அடுத்து வந்த சுக்ர திசையில் அவருக்கு அரசாங்க உத்யோகம் கிடைத்துள்ளது ஏனனில் சுக்ரன் பதினொன்றுக்கு அதிபதியும்
ஆவான்
4 .பனிரெண்டில் மாந்தி விரயத்தை ஏற்படுத்துவார்
5 .சனீஸ்வரரி ன் நேரடி பார்வை இல் விரயஸ்தானம்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி
Friday, December 14, 2018 3:50:00 PM
------------------------------------------------------
4
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
என்னதான் ரகசியமோ இதயத்திலே விற்கான பதில்
1 பத்தாம் இடத்து அதிபதி புதன் 8 இல் மறைவு . மேலும் கேது வுடன் கூட்டணி நவாம்ச கட்டத்திலும் ராகு வுடன் கூட்டணி.
2 ராசி அதிபதி மற்றும் மனோகாரகன் சந்திரன் 8 இல் மறைவு. எதிலும் பிடிப்பற்ற நிலை., மேலும் கேது வுடன் கூட்டணி ,
நவாம்சத்திலும் மாந்தி வுடன் கூட்டணி .
3 வர்கோத்தம லக்கினம் , குரு லக்கினத்தில் இருப்பதாலும் செவ்வாய் நல்ல யோகா காரகனாக இருப்பதாலும் செவ்வாய் தசை இல்இருந்து ஓரளவு நல்லது நடக்கும் .
நன்றி
சந்திரசேகர ஆசாத்
MOB. 8879885399
Friday, December 14, 2018 4:39:00 PM
-------------------------------------------------
5
Blogger ponnusamy gowda said...
அய்யா வணக்கம்!
அன்பரின் ஜாதகம் ஒரு வரப்பிரசாத ஜாதகம்.லக்னம் தனுசு லக்கினாதிபதி குரு லக்கினத்தில் ஆட்சி. 7ம் அதிபதி புதன் 8ல். உயிர்
மனம் இரண்டுக்கும் காரணகர்த்தாக்களான சூரிய சந்திரன் 8ல் அமர்ந்ததும் கேது சேர்க்கை மற்றும் ராகுவின் பார்வை பெற்றதும்
மிக கேடான அமைப்பு.தர்ம கர்மாதிபதிகளான சூரியன் புதன் 8ல் அமர்ந்து யோகம் செயல் படவில்லை. ஆறாமிடத்து வில்லன் 7ல்
அமர்ந்து குரு பார்வையால் நல்ல மனைவி அமைந்தாலும் 2ல் அமர்ந்த ராகு குடும்ப வாழ்க்கையை கெடுத்திருக்க
வேண்டும்.தவிறவும் தனுசு லக்கினத்திற்க்கு சுக்கிரன் நன்மைகளை தருவதில்லை.
ஆக 20 வருட சுக்கிர தசையும் போராட்டமான வாழ்வே. அடுத்த சூரிய தசை கிரகன தோஷம் பெற்றதாலும் நண்மையில்லை.
சந்திரன் ஆட்சியாகி ராகு கேதுவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மற்றும் சனியின் நட்சத்திரம் பூசத்தில் அமர்ந்ததால் புனர்பூ
தோஷமும் பெற்று சனியின் பார்வை பெறுவதாலும் மனநோய்க்கு ஆளாகியிருப்பார்.
9ல் அமர்ந்த செவ்வாய் 5க்கு உடையவராகி லக்கினாதிபதி குரு பார்வை பெற்று தசை நடந்தபோது சற்று ஆறுதலான மாற்றம்
ஏற்ப்பட்டிருக்கும்.
ஆக சனி 5 + புதன்17 + கேது7 + சுக் 20 + சூரி 6 + சந் 10 = ஆக 65 வயது வரை அமைதியற்ற வாழ்க்கை .
அன்புடன்
-பொன்னுசாமி
Friday, December 14, 2018 6:03:00 PM
---------------------------------------------------------------
6
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
8th ஆகஸ்ட் 1972ம் தேதி மாலை 4.29.01 மணிக்கு பூச நட்சத்திரத்தில் தனுர் ராசியில் ஜாதகர் பிறந்தார்.
1. எட்டாம் வீடுதான், அதிக கஷ்டங்களைக் கொடுக்கக்கூடியது. ஒருவனைத் தலகீழாகப் புரட்டிப்போடுவதும் அந்த
வீட்டுக்காரன்தான். 8ம் வீட்டு அதிபதி சந்திரன் 8ல் அமர்ந்து தீய கிரங்களுடன் கூட்டு ( சனியின் 3ம் பார்வை , ராகுவின் 7ம்
பார்வை, 8ம் வீட்டின் மீது , சந்திரன்-கேதுவுடன் 8ல் கூட்டு.)
2. 8ம் வீட்டு அதிபதி சந்திரன் கெட்டு இருப்பதால் ஜாதகன் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும்.
3. எட்டாம் வீட்டுக்காரனும்,(சந்திரன்) பத்தாம் வீட்டு அதிபதியும் (புதன்) ஒன்று சேர்ந்து 8ல் இருந்தால், ஜாதகன் அவனுடைய
வேலையில் பலவிதக் கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும்.
4. குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டமஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது. துக்கம் நிறைந்து இருக்கும்.
5. 6ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 7ல் அமர்ந்து லக்கினத்தை பார்க்கிறார். கஷ்டங்கள் அதிகமாகும்.
6. அரசகிரகமான சூரியனுக்கு 7ம் வீட்டில் ராகு இருக்கக்கூடாது. சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குகள், பெயர், புகழ்
ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்.
7. ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும். மன
வேதனை ஏற்படும் (சந்திரனும் ராகுவும் நேர் பார்வையில்)
8 புதனுடன் கேது சேர்ந்திருந்தால் சேர்க்கையால் நன்மை இல்லை.
9. இந்த ஜாதகத்தில் சனி (7 பரல்) 6ம் வீட்டில் (43 பரல்) பலமாக இருக்கிறார் . அவருடைய 7ம் பார்வை 12ம் வீட்டின் மீது
இருப்பதால் ஜாதகர் அயனம், சயனம் பாதிப்பு.
லக்கினாதிபதி குரு லக்கினத்தில் இருப்பதால் எதையும் தங்கும் சக்தியை கொடுப்பார்.
சுக்கிர தசை - குரு புக்த்தியில் 40 வயதில் (2012-2014) வாழ்வில் வசந்தம் ஏற்படும். காரணாம் 11ம் வீட்டின் அதிபதி சுக்கிரனும்
ஆவார். 11ம் வீடு (31 பரல்). குருவின் 7ம் பார்வையில் உள்ளார்.
சுக்கிரன் பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் சனி, மறு பக்கம் கேது) இருந்தாலும் குருவின் பார்வையால் தோஷம் இல்லாமல்
செய்துவிடும்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, December 15, 2018 6:03:00 AM
--------------------------------------------------------
7
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, The person was born on 08/08/1972 time 4.55pm,He was born on amavasai thithi. During amavasai moon lose his energy more over Fifth house is said to. Be house of mind the lord mars is combustion with sun and karaga moon also loss his energy and mercury also combustion with sun,so three planets combustion with sun makes frustration in his life and dasa bukthi also not favored him upto 2021 after that sun dasa begins and lagna lord guru in lagna makes him little free after the completion of venus dasa, thank you sir
Saturday, December 15, 2018 10:00:00 AM
-------------------------------------------------------------
8
Blogger Sanjai said...
1. சந்திரன் எட்டாமிடம்
2. எட்டாமிடத்தில் கிரக யுத்தம் - எதிலும் பிடிப்பு இல்லை
3. கேது அருகில் விரக்தி மனப்பான்மை / வெறுப்பு
4. சனி ஆறாமிடம், 3 ம் பார்வை சந்திரனை பார்க்கிறது, எதிலும் தாமதம்
5 சனி மாந்தி தொடர்பு - தொழிலில் தடை தாமதம்
6 நவாம்சத்தில் சந்திரன் மாந்தி தொடர்பு - மன அழுத்தம் / வெறுப்பு
Saturday, December 15, 2018 11:43:00 AM
--------------------------------------------------------------
9
Blogger venkatesh r said...
ஆசிரியருக்கு வணக்கம்.
தனுசு லக்கினம், கடக ராசி ஜாதகர்.
லக்கினாதிபதி குரு பகவான் லக்கினத்தில் வக்கிர கதியில். அவர் மேல் 6ம் அதிபதி அசுர குருவின் பார்வை.
மனோகாரகனும் அட்டமாதிபதியுமான சந்திரன் தன் வீட்டிலேயே இருந்தாலும் கூடவே கேது, சூரியன் கூட்டினால் வலுவிழப்பு.
சனியின் 3ம் பார்வை,ஏழிலுள்ள ராகுவின் பார்வையினால் ஜாதகருக்கு மன வலிமையற்ற நிலை, தாழ்வு மனப்பான்மை
உண்டாயிற்று. தற்பொழுது கோச்சார ராகு வேறு கடக ராசியில் அமர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டு நிலைமையை
மேலும் கெடுத்து கொண்டுள்ளார். அவர் மிதுன ராசிக்கு மாறியவுடன் நிலைமை சீரடைந்து நடப்பு சுக்ர தசையில் ஜாதகரின்
வாழ்வில் வசந்தம் வீசும்.
வாத்தியாரின் சரியான கணிப்ராபினை எதிர் நோக்கும்,
இரா.வெங்கடேஷ்
Saturday, December 15, 2018 6:17:00 PM
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.12.18

Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ இதயத்திலே?


Astrology: Quiz: புதிர்: என்னதான் ரகசியமோ இதயத்திலே?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பூச நட்சத்திரக்காரர். துவக்கத்தில் சனி மகா திசையில் இருப்பு சுமார் 5 ஆண்டுகள். அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் புதன் மகா திசை. தசா நாதன் 8ல். தொடர்ந்து கேது மகா திசை 7 ஆண்டுகள். அதன் நாதனும் 8ல்
ஒன்றுமே பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. ஜாதகர் 21 வயதில் இருந்து மருந்து விநியோகஸ்தர்களிடம் வேலை பார்த்தார். 27வது வயதில் அரசாங்க வேலை கிடைத்தது. ஆசிரியர் வேலை.

ஜாதகருக்கு எதிலுமே பிடிப்பு இல்லை. மன அழுத்தம், வெறுப்பு உணர்வு, தாழ்வு மனப்பான்மை.என்று எல்லா உணர்வுகளுமே அவரை அவஸ்தைக்கு உள்ளாக்கின.

இந்த மன நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்? அது எப்போது மாறும்? அவர் வாழ்வில் வசந்தம் எப்போது?

ஜாதகத்தை அலசி பதில் எழுதுங்கள்

சரியான விடை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.12.18

விழாக்களின் முக்கியத்துவம் என்ன?


விழாக்களின் முக்கியத்துவம் என்ன?

சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டதுதான் விழாக்கள்!!!!

எங்கும், எதற்கும் செல்லாமல், அரச மரத்தடி பிள்ளையார்களாகவே காலம் கழித்து விடும் மனிதர்கள் நம்மில் அநேகர் உண்டு. வாழ்வின் எல்லைகளை குறுகலாகவும், சிறிதாகவும் அமைத்து, இப்படி சிறை வாழ்க்கையை மேற்கொள்வோர், உண்மையில் இரக்கத்துக்கு உரியவர்கள்.

திருமணம், மற்ற நல்லது, கெட்டதுகளுக்கு ஒன்றாகக் கூட வேண்டும் என்பதே, சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டது தான்!

ஆனால், இவ்வாறு பழகும் தன்மை பலரிடம் இல்லாமல் போகக் காரணம், எதிலும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் குணமே!
இதுவே, இவர்களை, இருந்த இடத்தை விட்டு நகர விடாமல் செய்யும் முக்கிய காரணியாக உள்ளது. இப்படி கணக்கு பார்க்கும் குணம் உள்ளோர், 'அவன் என் வீட்டு விசேஷத்தில் அரை மணி நேரம் தான் இருந்தான்; நான் அஞ்சு நிமிஷம் கூட, அதிகமாக இருக்க மாட்டேன்...' என்று எதிர் மறையாக நடந்து கொள்ளவோ, கணக்கு பார்க்கவோ வேண்டியதில்லை.

எதிராளிகளை வெற்றி கொள்வது, கணக்கு பார்த்து நடந்து கொள்வதில் இல்லை; பெருந்தன்மையாக நடப்பதில் தான் உள்ளது.

இரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் இப்படிச் சொன்னார்... 'அவன் தான் அப்படி நடந்துகிட்டான்...நம்மாளு ரொம்ப பெருந் தன்மை; எதையுமே வெளிக் காட்டிக்காம, ரொம்ப நேரம் கல்யாண வீட்டில் இருந்தாரு. அது மட்டுமல்ல, சில வேலைகளைத் தானே எடுத்துப் போட்டு செஞ்சாரு... நம்மாளு மாதிரி யாரும் வர மாட்டாங்க...' என்று உச்சி முகர்ந்து சொல்லி விட்டார்.

கேள்விப் பட்ட, 'கணக்கு' மனிதருக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய் விட்டது.

ஓர் அழைப்பு என்பதை வெறும் காகிதமாக பார்க்கக் கூடாது; அதை, உணர்வும், உயிர்ப்பும் அடங்கிய இதயமாக பார்க்க வேண்டும்.
விசேஷம் மற்றும் நல்லது, கெட்டதுகள் இதயங்களை ஒன்று சேர்க்கின்றன; பல புதிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பழைய உறவுகளை - நட்புகளை சந்திக்கிற போது, அந்த இடத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

புதிய அறிமுகங்கள், பல வகைகளில் நமக்கு பயன் படுகின்றன. நம் உறவு, நட்பு, ஏன், தொழில் கூட விரிவடைய வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கல்லுாரி தாளாளரின் அறிமுகம், வேலை வாய்ப்பிலோ, கல்வி அட்மிஷனிலோ முடிய வாய்ப்பு இருக்கிறது.

ஒரு மருத்துவரின் அறிமுகம், நல்ல மருத்துவத்திற்கும், அநியாய மருத்துவ பில் வழியே நாம் தீட்டப் படாமல் தப்பிப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது.

ஒரு பயணச் சீட்டு ஆய்வாளரின் அறிமுகம், தவிர்க்க முடியாத ஓர் அவசரப் பயணத்தின் போது, ஒரு, 'பர்த்' கிடைப்பதில் கூட முடியலாம்.

வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், நுாலாம்படை உடலில் படிவதைத் தவிர, வேறு என்ன அதிசயம் நிகழ்ந்து விடும்!

'கல்லுாரி விழா; வாப்பா...' என்கிறாள் மகள். 'அடப் போம்மா... செம போரு; அதுங்க அடிக்கிற கூத்தை எவன் பாக்கறது...' என்று மறுக்கிற தந்தை, மிகப் பெரிய தவறை செய்கிறார்.

இவரது இலக்கு கல்லுாரி விழா கலை நிகழ்ச்சிகள் அல்ல; அழைத்த மகளின் அன்பிற்கு செவி சாய்த்து, அவளது உணர்விற்கு மதிப்பு கொடுப்பது தான்!

அவ்விழாவிற்கு போனால், மகளின் தோழிகள் பற்றி அறியலாம்; அவர்களது அப்பாக்கள், அம்மாக்களின் அறிமுகம் பிற் காலத்தில், தன் மகளின் எதிர்கால விஷயத்தில் நம்ப முடியாத நன்மையான முடிவுகளை எடுக்க உதவலாம்.

சரி, எங்கும் வராமல், இவர் சேமிக்கும் நேரத்தை, நல்ல படியாக பயன் படுத்தினாரா என்றால், இல்லை. வெட்டியான முறையில் இவர் போக்கிய பொழுதை, மகளுக்கென அளித்திருந்தால், வட்டியும், முதலுமாய் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது தானே!

எந்த விழாக்களையும், விழாக்களாக பார்க்காதீர்கள்; வீழ்ந்து விடாமல் இருக்க உதவும் வாய்ப்புகளாகக் கருதுங்கள்.
விழாக்கள் எனில் கலந்து கொள்ளக் காரணங்கள் தேட வேண்டுமே தவிர, அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்களை தேடக் கூடாது!
-----------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

இறங்கி அடிக்கும் இந்தியா


இறங்கி அடிக்கும் இந்தியா

டாலருக்கு எதிராக களமிறங்கிய இந்தியா கூட களம் இறங்கிய ரஷ்யா,  இந்தியாவுடன் அணி சேர்ந்த இங்கிலாந்து .. அமெரிக்கா அதிர்ச்சி! 

 அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தியா எடுத்த நிலைப்பாடுக்கு ஆதரவாக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிட்டிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

அமெரிக்காவிற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகள் அணி சேர்ந்து வருவது உலக அரசியலில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் நிறுவன அதிபருடன் பிரதமர் மோடி வருடாந்திர சந்திப்பை நடத்தினார். எல்லா வருடமும் நடக்கும் இந்த சந்திப்பில் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியமான விவாதம் ஒன்று செய்யப்பட்டது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்கும் போது, டாலருக்கு பதிலாக இந்தியா ரூபாய் வழியாகத்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 உலகில் எண்ணெய் வள நாடுகளுக்கு மிக முக்கியமான கஸ்டமராக இந்தியா இருப்பதால் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது பிரிட்டிஷ் நாடும், , அமெரிக்க டாலரை உலக வர்த்தகத்தில் பயன்படுத்த மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக பவுண்டுகளை பயன்படுத்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

  அமெரிக்காவிற்கு எதிராக  ரஷ்யாவும் களமிறங்கி உள்ளது. தங்களது நாட்டு பணமான ரூபலை, டாலருக்கு பதிலாக சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இந்த மூன்று நாடுகளின் ( இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து ) முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

இதுவரை பெரும்பாலான உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க டாலரில்தான் பொருட்களை வாங்கி வந்தது. தற்போது அதற்கு எதிராக மூன்று பெரிய நாடுகள் களம் குதித்து உள்ளது.

இந்நிலையில் மோடி சீன அதிபரை சந்திக்கிறார் இதுவும் கவனிக்க வேண்டிய ஒன்று. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை

இது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் துனிச்சளான முடிவுக்கு மக்களாகிய நாம் துணை நிற்போம்

பல சீர்திருத்தங்களை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் பாரதப் பிரதமருக்கு பாராட்டு!!!!
---------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.12.18

கஜா புயலுக்கு காரணம் என்ன?


கஜா புயலுக்கு காரணம் என்ன?

ரொம்ப  முக்கியமான,அதிர்ச்சியான விஷயம் ஒன்னு இந்த கஜா புயலை பற்றியது. பதிவு கொஞ்சம் பெரியது இருந்தாலும் படியுங்கள்
______________________________
நில அமைப்பு வல்லுனரின் கூற்று

எங்களோட எம்ப்ளாயி ஒருத்தர் பிரிட்டிஷ் காரர், ஜியோபிசிஸ்ட் தொழில்,  வயது 68 பழுத்த பழம் பார்க்க நம்ப இந்தியன் தாத்தா மாதிரியே இருப்பார், பூலோக சம்பந்த பட்ட விசயங்களில் அத்துபடி, ஆபிஸ் ரூம்ல உக்காந்துகிட்டே பெட்ரோல் ரிக்ல இன்னும் எத்தனை அடில பெட்ரோல் இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்ற வேலை, மனுஷன் லொக்கேசனை  பார்த்தே சொல்லுவார் அந்த அளவுக்கு மண்டை, சம்பளம் நம்ப இந்திய மதிப்பில் சுமார் மாதம் 15 லட்சம் கொடுத்து அவரோட சேவை  சவூதி நாட்டுக்கு தேவை என்ற காரணத்தால் இன்னும் ரிடயர்ட் கொடுக்காம வச்சிட்டு இருக்கோம்.

இன்னைக்கு அவரை பார்க்க போய் இருந்தேன் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது கஜா புயலை பற்றிய பேச்சு வந்தது அப்படியே சொன்னேன் எங்க ஊரு திருச்சில புயல் வரத்துக்கு எல்லாம் சான்சே இல்லை ஆனால் போட்டு தாக்கிட்டு போய்டுச்சு எப்பவுமே நடக்காத விசயமாக ,கடலே இல்லாத  திண்டுகல் என்ற ஊருல மையம் கொண்டு இருந்துச்சுன்னு சொன்னேன். இதை எல்லாம் கேட்டு கொண்டே இருந்த மனுஷன் நம்ப ஊரு மேப்பை எடுத்து அக்கு வேறாக ஆணி வேறாக ஒவ்வொரு கிரமாம் முதற் கொண்டு நமது ஊர் பெயரை  சொல்லி ஆச்சரிய படுத்தினார்.

ஆனால் அவர் அதற்கு மேல் சொன்ன ராகம் எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்த கஜா புயல் தமிழகத்தை தாக்க கூடிய அவசியமே வந்து இருக்காது இது ஆந்திரா கொல்கத்தாவை தாக்கி இருக்க வேண்டியா புயல் என்ன பண்றது உங்க கவர்மென்ட் வெத்தலை பாக்கு வச்சு திரும்பி நின்னுட்டு ஏறிட்டு போடான்னு (அவர் இதவிட கொச்சையா சொன்னார்) புயலை வலியக்க கூட்டிட்டு வந்து விட்டார்கள் என்று கூறினார். அட என்னங்கசார்  புயலை யாரவது கூப்பிட முடியுமான்னு நான் எதிர் கேள்வி கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்னது யாரும் புயலை கூப்பிட முடியாது ஆனால் வர வைக்க முடியும்ன்னு சொன்னாரு அதெப்படின்னு கேட்டேன்.

புயல் வந்த திசைகளை கவனித்தயான்னு கேட்டார் நாகப்பட்டினம் வழியாக வந்து அப்படியே வந்துடுச்சுன்னு சொன்னேன் ஆமாம் கரெக்ட் புயல் வந்த திசைகள் எல்லாம் என்ன தொழில் நடக்குதுன்னு கேட்டார்..அங்கே எல்லாம் விவசாயம் தான் இப்ப தான் ஒரு ரெண்டு மூணு வருசமாக மீத்தேன், குருட் ஆயில் எடுத்துகிட்டு இருக்காங்கன்னு சொன்னேன்..ஆங் நான் சொல்ல வந்த விஷயத்துக்கு நீ வந்துட்ட இப்ப சொல்றேன் கேட்டுக்கோ ஒரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாசின்னா குளிர்ந்த இடத்தை நோக்கி அது பயணம் செய்யாது வெப்பம் எங்க அதிகமாக இருகிறதே அந்த இடத்தை நோக்கி தான் பயணம் பண்ணும் குளிர்ந்த இடம் நோக்கி போனால் வலுவிழந்து மழையாக மாறி போய்டும் நீ சொன்ன இடம் எல்லாம் மீத்தேன் போன்ற வெப்பமான பொருட்கள் எடுக்க படுவதால் அந்த இடம் முழுவது வெப்ப காடாக இருக்கும். புயலுக்கு வெப்பம் என்பது பிரியாணி சாப்பிடுவதை போன்றது ரொம்ப பிடித்த மான காரியம் வெப்பம் மண்டல பகுதிகள்

வெப்பமான இடத்தை நோக்கி செல்லலும் பொழுது அதோட வேகம் 1000 மடங்கு அதிகரித்து  இருக்கிற இடத்தை எல்லாம் துவம்சம் செஞ்சிட்டு போய்டும்ன்னு சொன்னாரு. நீங்கள் உங்க ஊருல இன்னும் எவ்வளவுக்கு எவ்வளவு ரிக் தோண்டுரீங்களோ அந்த அளவுக்கு புயலின் வேகம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற ஷாக் நியுசையும் சொன்னார். சரி சவுதில ஆயிர கணக்கான ரிக் இருக்கு இங்கே ஏன் புயல் வர மாட்டேங்குதுன்னு சொன்னேன் சவூதி அரேபியாவை பொறுத்த வரை கிழக்கு சைடு தான் அராம்கோ எண்ணை நிறுவனம் எல்லாம் இருக்கு பூலோகப் படி அங்கே உள்ள கடலின் அளவு சிறியது ஈரானுக்கும் சவுதிக்கும் நடுவில் குறைந்த அளவு தூரம் தான் கடல் ஆகையால் புயலில் வேகம் மிக மிக குறைவு மேலும் இங்கே புயல் அடித்தாலும் ஒன்றும் ஆகப் போவது இல்லை இது பாலை வனம் மரங்கள் ஏதும் கிடையாது ஆகையால் நமக்கு எதுவும் தெரிவது இல்லைன்னு சொன்னார்.

அவர் சொன்னதை எல்லாம் வச்சு பார்க்கும் பொழுது மல்லி பட்டினம் - நாகபட்டினம் நரிமணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலை அங்கே உள்ளது அதன் வழியாக தமிழகத்தில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமா கிழக்கு நோக்கி நகர்ந்து  அங்க இருந்து புதுகை, தஞ்சை டெல்ட்டா மாவட்டங்கள் வழியாக பயணித்து திருச்சி வழியாக திண்டுக்கல்லில் மையம் கொண்டு துவம்சம் செய்து சென்று இருக்கிறது. இந்த ஊர்கள் அனைத்தும் சிறிது காலத்துக்கு முன்பு மீத்தேன் எடுபதற்காக மக்கள் போராட்டம் செய்த பகுதிகள் என்பதை ஒன்று கூட்டி பார்க்கும் பொழுது எனக்கு தலை சுற்றி விட்டது.

எனக்கு ஜியோபிசிஸ்ட் போன்ற துறைகளில் அந்த அளவுக்கு பரிட்சியம் கிடையாது, இது எந்த அளவுக்கு உண்மை என்றும் என்னால் அளவிட முடியவில்லை .அந்த துறையை சார்ந்த நண்பர்கள் அந்த பிரிடிஷ் காரர் கூறியது சரியா என்று விளக்கவும்.

பதிவு எழுதி 10 மணி நேரம் கழித்து இடைச் செருகள்: இந்த பதிவை படித்த ஒரு மீடிய நண்பர் ஒரு கேள்வி கேட்டார் நாகபட்டினம் புயல், தனுஷ் கோடி புயல், தானே, நிஷா புயல் எல்லாம் எப்படி அதெல்லாம் இந்த மீத்தேன் வரதுக்கு முன்னாடியே வந்துடுச்சேன்னு உடனே அவருக்கு போனை போட்டு கேட்டேன்

அந்த புயலுக்கும் இந்த புயலுக்கும் உள்ள வித்தியாசத்தயும் பாதிபப்பையும் கவனிக்க சொன்னார் நாகபட்டினம் புயல் வந்த பொழுது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் சேதாரம், தனுஸ்கோடி ராமேஸ்வரம் தீவு மட்டுமே சேதாரம். கரையை கடந்த உடனே வலுவிழந்து நீர்த்து போய் விட்டது, ஆனால் இந்த கஜா புயல் கரைக்கு ஏறிய உடன் தான் முன்பு இருந்த வலுவை விட மேலும் மேலும் ஆக்ரோஷமாக கிட்ட தட்ட நான்கு ஐந்து மாவட்டங்களை துவம்சம் செய்து முக்கியமாக மீத்தேன் எடுக்கும் நில பரப்புகளான டெல்ட்டா மாவட்டங்களை புரட்டி போட்டு தமிழகத்தின் மைய பகுதியில் (திண்டுக்கல்) நிலை கொண்டு கொடைக்கானல் மலை பகுதியில் மோதி நீர்த்து போய் விட்டது. அங்கே கொடைக்கானல்  மலை இல்லாவிட்டால் இன்னும் மேற்கு நோக்கி நகர்ந்து என்றுமே  புயலுக்கு வாய்போ இல்லாத கோவையையும் பதம் பார்து இருக்கும் என்று அடித்து கூறுகிறார்.
-------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!