மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.12.18

Astrology: Quiz: ஜோதிடம். புதிர்: வரும் ஆனால் வராது - எதனால்?


Astrology: Quiz: ஜோதிடம். புதிர்: வரும் ஆனால் வராது - எதனால்?

கொடுத்துள்ள ஜாதகத்தை பொறுமையாக அலசி கேட்டுள்ள ஒரு  கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். பதில் சுருக்கமாக இருக்க வேண்டும்

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம். அன்பருக்கு ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. எல்லாம் வலுவான யோகங்கள். ஆனால் ஜாதகருக்கு அவருடைய 36 வயது வரை எந்த யோகமும் எடுபடாமல், எதிலும் வெற்றி அடைய முடியாமல் நொந்து போய் விட்டார். அந்த வயதிற்குள் வரவேண்டிய யோகங்கள் எல்லாம் வந்தால்தானே அந்த வயதில் வாழ்க்கை வளமாக இருக்கும்! 

இருக்கும் ஆனால் இல்லை - வரும் ஆனால் வராது என்ற அவருடைய அந்த வயது நிலைமைக்கு  ஜாதகப்படி என்ன காரணம்? உங்கள் பதிலை பின்னூட்டத்தில் (மட்டும்) எழுதுங்கள்!!!!

அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவகாசம்! சரியான பதில் 9-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்!

============================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

 1. ஐயா வணக்கம்,
  36 வயது வரை யோகம் பலனளிக்காததற்கு காரணங்கள்
  1, முதலில் 10 வருடம் நடந்தது விரையாதிபதி திசை,
  பிறகு நடைபெற்றது சுக்ரன் வீட்டில் அமர்ந்த கேதுவின் திசை 7 ஆண்டுகள்,
  பிறகு நடைபெற்றது பாதகாதிபதி சுக்ரன் திசை. எனவே 36 வயது வரை யோகங்கள் பலனிளிக்கவில்லை,
  2, சுக்ரன் 4ல் இருப்பது கேந்திராதிபத்ய தோசமும் ஆகும்.

  ReplyDelete
 2. அன்புள்ள அய்யா வணக்கம்!
  சுருக்கமான பதில். ஜாதகர் பிறப்பு விபரங்கள் அவசியமில்லை என நினைக்கிறேன்.
  அன்பர் கடக லக்கினக்காரர்.பிறந்தபோது புதன் 3 மற்றும் 12க்கு உரிய தசை.நண்மை இல்லை. அடுத்து வந்த கேது தசை 4ல் அமர்ந்து சுகக் கேடான அமைப்பு 7 வருடங்கள். அடுத்து வந்த சுக்கிரன் தசை 4ல் அமர்ந்து தசை நடத்தினாலும் சூரியன் மற்றும் கேது உடன் இணந்து கெட்டுள்ளதால் நண்மையை தர வாய்ப்பின்றி போனது. தவிர கடக லக்கினத்திற்க்கு சுக்கிரன் நண்மையைச் செய்ய வாய்ப்பில்லை.
  ஆக புதன் 10 + கேது 7 + சுக்கிரன் 20 ஆக மொத்தம் 37 வருடங்கள் ஜாதகர் யோகமின்றி வாழ்ந்திருப்பார். அடுத்து வந்த சூரியன் தசை 2ம் பதியாகி சுக்கிரன் தர வேண்டிய நல்ல பலன்களை தர ஆரம்பித்திருப்பார்.
  சரியான பதில் என நம்புகின்றேன்!!
  நன்றியுடன்
  - பொன்னுசாமி

  ReplyDelete
 3. ஐயா,
  07-12-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் பின்யோக ஜாதகமாகும். ஜாதகத்தில் என்னதான் யோகங்கள் இருந்தாலும் அதற்கான தசாபுத்திக் காலத்தில் தான் அந்த யோகங்கள் சித்தியாகும். இந்த ஜாதகருக்கு முதல் தசையாக வருவது கடக லக்னத்துக்கு 3,12 க்குரிய புதனின் தசை.அதற்கு அடுத்தது கேது தசை. ஏது தசை வந்தாலும் கேது தசை வரக்கூடாது அல்லவா? மூன்றாவது தசையாக வருவது கடக லக்ன பாதகாதிபதி சுக்கிரனின் தசை. ஆகவே, 36 வயது வரை, சுக்கிர தசை முடிவது வரை, எல்லாம் வருவது போல தான் இருக்கும். ஆனால் நல்லது எதுவுமே வராது.
  அடுத்து வருவது தனாதிபதி சூரியன் தசை,பின்பு லக்னாதிபதி சந்திரன் தசை, அதன்பின் கடக லக்ன யோகாதிபதி செவ்வாயின் தசை. ஆகவே இது பின் யோக ஜாதகமாகும்.
  அ.நடராஜன்,
  சிதம்பரம்

  ReplyDelete
 4. Dear Sir

  இருக்கு ஆனா இல்ல புதிருக்கான பதில்

  யோகங்கள் வேலை செய்வது அதற்குரிய தசை புத்தி மட்டும் புக்தியில் தான் . புதன் தவிர அணைத்து கிரங்கங்களும் ராகு கேது பிடியில் உள்ளது.
  மேலும் சந்திரன் சனியினால், செவ்வாய் மாந்தியினால் சுக்கிரன் கேது வினால் பாதிக்க பட்டு விட்டது .

  ஆதலால் இருக்கு ஆனா இல்லை நிலைமை இந்த ஜாதகருக்கு .

  நன்றி
  சந்திரசேகர ஆசாத்
  MOB. 8879885399

  ReplyDelete
 5. வணக்கம்
  28/10/1966, காலை 12.10 மணிக்கு வெள்ளி கிழமை ரேவதி நட்சத்திரம் பிறந்தவர். கடக லக்கினம் , முக்கியமான யோகம் இந்த ஜாதகத்தில் - சரஸ்வதி யோகம், மஹாலஷ்மி யோகம். யோக காரர்கள் : குரு , சந்திரன், செவ்வாய்

  1. 9ம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் வக்கிரமான சனி (7ம் வீட்டு அதிபதி) லக்கினாதிபதி சந்திரனுடன் சேர்ந்து புணர்ப்பு தோஷம் 2ம் வீட்டிலிருந்து செவ்வாயின் 8ம் பார்வை 9ம் வீட்டின் மீது இருப்பதால் கடுமையான செவ்வாய் தோஷம் . பாக்கியம் இருந்தும் இல்லாதபடி செய்து விட்டார்.

  2. 2ல் செவ்வாய் மாந்தியின் கூட்டு, 2ம் வீட்டு அதிபதி 4ல் சூரியன் கேதுவுடன் கூட்டு. ராகுவின் 7ம் பார்வை. 4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 4ல் அஸ்தங்கம் ஆகிவிட்டார். மஹாலஷ்மி யோகம் இருந்தும் செல்வம் சேரவில்லை. 16 வயது முதல் 36 வயது வரை சுக்கிர தசை . சனியும், சுக்கிரனும் 6/8 பார்வை . செல்வம் சேராது. 4ம் வீடு கல்விக்கும் பாதகம். சரஸ்வதி யோகம் இருந்தும் பலன் இல்லை.

  3. புதனின் 7ம் பார்வை 11ம் வீட்டின் மீது , சனியின் 3ம் பார்வை 11ம் வீட்டின் மீது இருப்பதால் வந்த பணமும் தங்க வில்லை, 11ம் வீட்டு அதிபதி சுக்கிரன் அஸ்தங்கம் மேலும் கேதுவுடன் கூட்டு.

  4. குரு எந்த வித யோகமும் தர கூடியவர் அல்ல இந்த கடக லக்கின காரர்களுக்கு. மேலும் 6ம் வீட்டு அதிபதியும் அவரே . 77 வயத்தில் தான் குரு தசை வருகிறது.

  சந்திரசேகரன் சூரியநாராயணன்

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா,1)புதன், சுக்கிரன் லக்ன பாபர்கள்.சனி சமம்.சுக்ரன் முதல் நிலை பாபர்.பாபர்கள் சுக்ரன் கேந்திரத்தில் ஆட்சி மற்றும் திரிகோணம் ஏறி அதிக தீமைக்கு காரணமாகிறார்கள்.2)கேதுவிற்க்கு வீடு கொடுத்த சுக்ரன் பாபர் ஆனதால் அவரும் நன்மையை தர இயலாது.2ம் அதிபதி சூரியன் லக்னத்திற்க்கு சமம்.அவர் கேந்திரத்தில் அமர்ந்து நீசபங்கம் அடைவதால் வலுப்பெறுகிறார்.3)சனி அமர்ந்த இடம் மெதுவாகவே வேலை செய்யுமாதலாலும் மேலும் அவர் கடக லக்னத்திற்க்கு நடுநிலையானவர் என்பதாலும் அவர் அமர்ந்த பாக்கிய ஸ்தானம் மெதுவாகவே வேலை செய்தது.4)எனவே வலுவான அமைப்புகள் இருந்தாலும், முதலில் வந்த புதன்,சுக்ர,கேது தசாவில் நன்மைகள் கிடைக்கவில்லை.அடுத்து வந்த சூரிய,சந்திர,செவ்,ராகு,குரு புத்திகள் மிகவும் சுபமாய் அமைந்தன.நன்றி.

  ReplyDelete
 7. இவையே எனது கணிப்பு, சரியா என்று கூறுங்கள்

  1. சுகஸ்தானத்தில் கேது - சுகமில்லை
  2. தனஸ்தானத்தில் மாந்தி - வருமானம் இல்லை
  3. சனி சந்திரன் சேர்க்கை - எதையும் தாமதப்படுத்தும்
  4. தனஸ்தானாதிபதி சூரியன் தசையில் (36 வயதுக்கு மேல்) - வளர்ச்சி (குடும்பம் + வருமானம்)

  ReplyDelete
 8. தங்கள் வலைப்பூவை நான் தற்பொழுது தான் பின்தொடர்கிறேன் , தங்களின் இந்தப் பணி உண்மையில் தன்னலமற்றது, ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் கிடைத்தப் பொக்கிஷம் இந்த வலைப்பூ என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

  நன்றி

  ReplyDelete
 9. Answar for quiz 07/12/2018
  Upto ten years puthanthesai (punarpudosam) ,then 7years kethu thesai,& ashthangam adaintha sukra desai 20years,So that after completed this desai that persons loosed more option in his life

  ReplyDelete
 10. வணக்கம் ஐயா
  அன்பர் பிறந்தது 27 /10 /1966 நேரம் இரவு 11 .32pm
  கடக லக்கினம் ரேவதி நக்ஷ்ட்ரம் மீன ராசி
  ஹம்ச யோகம் , மாளவ்ய யோகம் , லக்கினாதிபதியும் பாக்கியதிபதியும் பரிவர்த்தனை இருந்தும் 36 வயது வரை யோகம் வேலை செய்யவில்லை
  பதில் : அன்பார் பிறக்கும்போது புதன் மகா திசை 10 வருடம் கடக லக்கினத்திற்கு மூன்று பன்னிரண்டு குரிய தசை மேலும் அடுத்து கேது தசை ஏழு வருடங்கள் அதன் பின் சுக்கிரன் இருபது வருடம் , கடக லக்கினத்திற்கு பாதகாதிபதியான சுக்ரன் சூரியனுடன் அஸ்தங்கம் அதனால் பிறந்தது முதல் 37 வயது வரை நடைபெற்ற தசை ஜாதகனுக்கு யோகம் கிடைக்கவில்லை அதன் பின் அடுத்த வர விருக்கும் தசை ஜாதகனுக்கு யோகா திசை

  ReplyDelete
 11. ஐயா கேள்விக்கான பதில்
  1 .இரண்டாம் அதிபதி சூரியன் நீசம் ஆகி உள்ளார்
  2 .ஏழாம் அதிபதி சனி ஒன்பதாம் இடத்தில் சந்திரன் உடன் அமர்ந்து புனர்பூ தோஷத்தில் உள்ளார்
  3 .கடக லக்கினத்திற்கு செய்வாய் யோகக்காரன் அனாலும் இரண்டாம் இடத்தில் அமர்ந்ததால் திருமண தோஷத்தை ஏற்படுத்தியுள்ளார்
  4 கால சர்ப்பதோஷம் உள்ளதாலும் குருவின் பார்வை ஏழாம் அதிபதியின் மேல் உள்ளதாலும் தாமத திருமணம்
  தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி

  நன்றி


  ReplyDelete
 12. லக்கினாதிபதி சந்திரன் எட்டாம் அதிபதி வக்கிர‌ சனியுடன் இணைந்தது. சந்திரன் சனி சேர்க்கை புனர்ப்பூ தோஷம்? சுக்கிரன் அஸ்தங்கதமடைந்ததால் சுக்கிர தசா
  உதவி செய்யவில்லை. சுக்கிரதசா முடிய 37 வயது ஆனது. சூரிய சந்திரதசா நன்றாக இருந்தது.

  ReplyDelete
 13. Sir,
  Buthan is the lord of 3rd and 12th houses. Hence during its remaining dasa period of 10 years it gives bad results. Next ketu dasa follows for 7 years which also gives bad results. Sukra dasa which follows also gives bad results as sukran is the badaka for kataka lagna people. Eventhough parivartana yoga is there for moon and jupiter, jupiter being lord of 6th and 9th houses give bad results. Moon is caught between sani and mars eventhough it is seen by jupiter.Hence the yoga could not materialise until the age of 36.
  ---A.Saravanan, Puducherry.

  ReplyDelete
 14. காலசர்பதோஷம் இந்த ஜாதகத்தில் உள்ளது அதனால் அவருக்கு ரொம்ப கஷ்டம் இளம் வயதில் புதன் கேது சுக்குர மகா தசை 37 வயது
  வரை அது கடக லக்கனத்துக்கு நல்லது செய்யது சுகுரான் வேற ஆட்சி சூரியன் சுகுரான் கேதுவுடன் சேருந்துஇருக்குது ராகு கேது
  சந்திரனையும் சனியையும் து பிடுச்சியுனுருகு இப்படி பதால் குரு செவ்வாய் ராகு கேது பிடுச்சியுனுருகு
  raghu kethu kodi pikuthu sani moon combination

  ReplyDelete
 15. ஆசிரியருக்கு வணக்கம்.

  ஜோதிடம். புதிர்: வரும் ஆனால் வராது - எதனால்?"

  கடக லக்கினம், மீன ராசி ஜாதகர்.

  லக்னாதிபதி சந்திரன் 8ல் மறைவு.சனியுடன் கூட்டு.

  அவரின் பணக் கஷ்டத்திற்கு முதல் காரணம், தனாதிபதி சூரியன் 4மிடமான‌ துலாம் ராசியில் நீசமடைந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டார். லாபாதிபதி சுக்கிரனும் அதில் அமர்ந்து வலுவிழந்தார். ராகுவின் பார்வையும் அதன் மேலுள்ளது.

  இர.வெங்கடேஷ்.

  ReplyDelete
 16. அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்
  புதிரிற்கான விடை
  1. லக்னாதிபதி சந்திரன் (திரிகோணத்தில் அட்டமாதிபதி சனியுடன்) குருவுடன் (லக்கினம் ) பரிவர்த்தனை.
  2. விரயாதிபதி புதனும் திரிகோணத்தில்
  3. குடும்பாதிபதி சூரியன் கேந்திரத்தில் சுக்கிரனுடன் சுக்கிரனின் ஆட்சி வீடாகிய துலாத்தில்
  4. குடும்பஸ்தானத்தில் (திரிகோணம்/கேந்திரத்தின்) அதிபதியான செவ்வாய் வர்கோத்மம்
  ஏன் ஜாதகருக்கு அவருடைய 36 வயது வரை எந்த யோகமும் எடுபடாமல், எதிலும் வெற்றி அடைய முடியவில்லை – காரணம்
  • தசா புத்தி – பிறப்பிலிருந்து அட்டமாதிபதி சனியின் தசை, அதையடுத்து விரயாதிபதி பதனின் தசை, அதையடுத்து கேதுவின் தசை
  • அதன் பிறகு, அவர் 7.5 ஆண்டுகள் சனியின் பிடியிலிருந்தார் (5/1993 தொடக்கம் 6/ 2000 வரை). அந்த நேரத்திலே தசா புத்தி ஒன்றும் வேலை செய்யாது
  • அதன் பிறகு வந்த சுக்கிர தசை சூரியனின் புத்திக்கு பிறகுதான் அவரிற்கு விடிவுகாலம் தொடங்கியது. அதன் பிறகு வந்த சூரிய, சந்திர, செவ்வாய் தசைகளினால் மேலுக்கு வந்தார்
  மேற் சொன்ன காரணங்களிற்காக, ஜாதகரிற்கு 36 வயதுவரை ஒரு நல்ல பலனும் நடக்கவில்லை.
  அன்புடன்
  ராஜம் ஆனந்த்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com