மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.09

Lessons on Astrology: Moolaththrikonam: மூலத்திரிகோணம்!

”வாத்தி(யார்), எத்ற்காக இந்தப் படம்?”
”மனிதனின் மூலத்திரிகோணம் இவர்தானே?”
”சரி, கையில் ஏன் பாட்டிலோடு?”
”அண்ணனுக்கு இன்னும் வீக்என்ட் முடியவில்லை!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: Moolaththrikonam: மூலத்திரிகோணம்!

திரிகோணம் என்றால் தெரியும். அது என்ன மூலத்திரிகோணம்?

மூலத்திரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கு வேர்ப் பகுதி. ஒரு மரத்தின் வேர்ப்பகுதி பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் நமக்குத் தெரியும். அதுபோல ஒரு கிரகத்தின் வேர்ப் பகுதி மூலத்திரிகோணம் எனப்படும்!

புதன், சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் சொந்தம். அந்த இரண்டு வீடுகளில் எது வேர்ப்பகுதியோ அதுதான் அந்த கிரகத்தின் மூலத்திரிகோணம்!சந்திரனுக்கு மட்டும் அதன் உச்ச வீடான ரிஷபம் வேர்ப்பகுதி. அதாவது அதன் மூலத்திரிகோணம்.

மற்ற கிரகங்களுக்கான மூலத்திரிகோண வீட்டைக் கீழே கொடுத்துள்ளேன்:

சூரியன் - சிம்மம்
சந்திரன் - ரிஷபம்
செவ்வாய் - மேஷம்
புதன் - கன்னி
குரு - தனுசு
சுக்கிரன் - துலாம்
சனி - கும்பம்
---------------------
ராகுவிற்கு - கன்னி
கேதுவிற்கு - மீனம்

(ராகு, கேதுவிற்கு சொந்த வீடு கிடையாதே? அவைகளுக்கு எப்படிக் கன்னியும், மீனமும் வேர்ப்பகுதிகளாக இருக்க முடியும் என்று யாரும் கேட்க வேண்டாம். பழைய ஜோதிட நூல் ஒன்றில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்வோம். கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். எடுத்துக் கொண்டால், வாழ்க்கை முழுவதும் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதை மனதில் வையுங்கள்)
++++++++++++++++++++++++++++++++

மூலத்திரிகோணத்தில் இருக்கும் கிரகம் அலுவலகத்தில் இருப்பதைப் போன்றது. அவைகள் தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கும். அலுவலகத்தில் அரைத் தூக்கத்தில் வேலை செய்யும் சிகாமணிகளுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். அவர்கள் பதிவைவிட்டு விலகவும்!

மூலத்திரிகோணத்தில் இருக்கும் சுக்கிரன் இயற்கையாகவே ஜாதகனுக்கு நல்ல மனைவியைப் பிடித்துத் தருவார் (அட, இது நன்றாக இருக்கிறதே!) ராசி வரிசையில்/கிரகச்சுற்றில் இது ஏழாம் இடம். அதை மனதில் வையுங்கள்.

மூலத்திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான் இயற்கையாகவே ஜாதகனுக்குத் தர்மப்படி நடக்கும் சூழ்நிலையையும், உரிய காலத்தில் குழந்தை பாக்கியத்தையும் கொடுப்பார் (அட, இதுவும் நன்றாக இருக்கிறதே!)

மூலத்திரிகோணம் என்பது உச்சத்திற்கு நிகரானது. அதோடு பாதுகாப்பானது. சொந்த வீட்டில் அக்கிரகம் இருப்பதால் பாதுகாப்பானது. அக்கிரகம் வலிமையாக இருப்பதுடன், ஜாதகனுக்குப் பல நன்மைகளையும் அள்ளித்தரும்!
+++++++++++++++++++++++++++++++++++
ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதைவிட, மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தமத்தில் பலன்கள் இரட்டிப்பாகும். நல்லதும் இரட்டிப்பாகும், தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமைகளும் இரட்டிப்பாகும். மூலத்திரிகோணத்தில் அந்தப் பிரச்சினை இல்லை! அதை மனதில் வையுங்கள்

நட்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! 

28.11.09

காரைக்குடிக் கலாச்சாரம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடிக் கலாச்சாரம்!

இரண்டு நாள் பயணமாகக் காரைக்குடிக்குச் சென்றிருந்தேன். நான்கு சுப நிகழ்வுகள். திருமண விழாக்கள். கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி என்னவென்றால், எனது செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - மூன்றாம் தொகுப்பு - நூலின் 650 பிரதிகளை ஒரு குடும்பத்தினர் விலைக்கு வாங்கி, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாகக் கொடுத்தனர்.

அதுபோல வேறு ஒரு நண்பர் வீட்டுத்திருமணத்தில் நான் எழுதிய பரந்தாமன் எனும் சிறு நூலை (1/16 அளவு - 24 பக்கங்கள் - 800 புத்தகங்கள்) நானும் வந்திருந்த விருந்தினர்கள் படித்து மகிழ பரிசாகக் கொடுத்தேன்.

அது மட்டுமல்ல. காரைக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கல்லுப்பட்டி என்னும் சிற்றூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். அவர்கள் மூன்று புத்தகங்களையும், ஸ்ரீராமர், அனுமன் ஜாதகப் படத்தையும் பரிசாகக் கொடுத்து அசத்திவிட்டனர். அதோடு வந்திருந்த அனைவருக்கும் சுவையான விருந்து, அத்துடன் திரு.சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றது.

திருமணத்திற்கு வந்து திரும்புபவர்களுக்குப் பயணக் களைப்பு ஏற்படுமா என்ன?

காரைக்குடிப் பகுதியில் நிலவிவரும் இந்தக்கலாச்சாரம், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும்.

ஆமாம், பிறந்தநாள் விழா, திருமண விழாக்கள், மணிவிழாக்கள், ஆகியவற்றில் வரும் விருந்தினர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கும் பண்பு வளர வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்

படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பாருங்கள். படங்கள் பெரிதாகத் தெரியும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++


ஸ்ரீராமர், அனுமன் ஜாதகங்கள்
பட்டிமன்ற நிகழ்ச்சி

வாத்தியாரின் குட்டிப் புத்தகம்

பரிசாகக் கிடைத்த திரு.ரா.கணபதி அவர்கள் எழுதிய காமகோடி, ராம்கோடி நூல்

பரிசாகக் கிடைத்த இலக்கியமேகம்.திரு.சீனிவாசன் அவர்கள் எழுதிய சுந்தரகாண்டம் நூல்


பரிசாகக் கிடைத்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பகவத்கீதை விளக்க உரை நூல்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

25.11.09

Short Story: ஆசையின் அளவு!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story: ஆசையின் அளவு!

இறைவன் எழுந்தருளினார். அவர் எழுந்தருளிய இடம் ஒரு வனாந்தரப் பகுதி.
அவர் எங்கே வேண்டுமென்றாலும் எப்பொது வேண்டுமென்றாலும் எழுந்தருள்வார். பாஸ்போர்ட், விசா, டாலரில் கை இருப்பு, பாதுகாப்பு சோதனைகள், போர்டிங் பாஸ் என்று எந்த சிக்கலும் இல்லாதவர் அவர்!

திரைப்படங்களில் வரும் நாட்டாமைக்காரரின் தோற்றத்தில் அவர் இருந்தார்.

அங்கே நடுத்தர வயதுக்காரன் ஒருவன், காட்டு மர மொன்றை வெட்டி விறகாக்கிக் கொண்டிருந்தான். மூன்று சுமைகளுக்கான விறகுகள் சேர்ந்திருந்தன.

காலையில் இருந்து வெட்டிக்கொண்டிருப்பான் போலும் வியர்த்து விறுவிறுத்திருந்தான். களைத்தும் போயிருந்தான்.

அவன்மேல் இரக்கம் கொண்டு, அவனருகில் சென்ற இறைவன், கணீரென்ற குரலில் சொன்னார்:

“வெட்டியது போதும், போ!”

திடுக்கிட்டுத் திரும்பிய அவன், அவரை இந்த வனப் பகுதியின் சொந்தக்காரர் என்று நினைத்துப் பயத்துடன் சொன்னான்,” அய்யா, என்னை நம்பி, என் வீட்டில், பத்து ஜீவன்கள் இருக்கின்றன. இங்கே இருந்து வெட்டிக் கொண்டு போய் விற்கும் விறகுகளை வைத்துத்தான் என் ஜீவனம் நடக்கிறது. நான் தேக்கு மற்றும் சந்தன மரங்களில் கையை வைக்க மாட்டேன். எரிக்கப் பயன்படும் கருவேல மரங்களைத்தான் வெட்டுவேன். இன்னும் ஒரு நான்கு நாழிகைகள்
வெட்டிவிட்டுப் புறப்படுகிறேன். தயவு செய்து அதை நீங்கள்அனுமதிக்க வேண்டும்!”

அவன் சொல்வது உண்மை என்பதை உணர்ந்த இறைவன், அவனுக்கு உதவி செய்து, அவனுடைய வறுமையைப் போக்கலாம் என்று முடிவு செய்தார்.

சற்று தூரத்தில் கிடந்த, செங்கல் ஒன்றின் அளவில் இருந்த, கல் ஒன்றைக் காட்டி, அதை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்.

அவனும் செய்தான்.

அவன் கொண்டுவந்த கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று ஜொலிக்கும் தங்கமாக மாறியது அந்தக்கல்! பளபளவென்றும் மின்னியது.

விறகுவெட்டி, அவரை இறைவன் என்று உணராமல், ஏதோ சித்து வேலைக்காரர் என்று நினைத்துவிட்டான். மேலும் கிடைத்த தங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சி கோள்ளாமல், சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

“என்ன, மகிழ்ச்சிதானே? இதை வைத்து உன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்.போய் வா” என்றார்

சட்டென்று அவன் சொன்னான்,” அய்யா, இதை வைத்து என் கஷ்டங்கள் அனைத்தும் முழுமையாகத் தீராது!”

புன்னகைத்த இறைவன், “ அதைக் கீழே வைத்துவிட்டு, அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வா” என்று சற்று தூரத்தில் இருந்த பாறாங்கல்லைக் காண்பித்தார்.

அவனும், மகிழ்வுடன் ஓடிச் சென்று, அந்தப் பாறாங்கல்லைத் தூக்க முடியாமல், சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து அவர் முன்னே நின்றான்.

அவன் கொண்டுவந்த அந்தப் பாறாங்கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று அதுவும் ஜொலிக்கும் தங்கமாக மாறியது!.

திகைத்துப்போன அவன் ஒரு கணம் யோசித்தான். மின்னலாக யோசித்தவன், அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.

“அய்யா உங்களைப் போலவே எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் அது தங்கமாக மாறும் சக்தியை, என்னுடைய ஒரு விரலுக்கு கொடுத்துவிடுங்கள். நான் வேண்டும் போது தொட்டு, வேண்டிய தங்கத்தை நானே பெற்றுக் கொள்கிறேன்”

புன்னகைத்த கடவுள்,” இவன் பேராசை மிக்கவன்: என்றைக்குமே பக்குவப்படமட்டான்” என்ற முடிவிற்கு வந்தார். சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகன்றார். ஆமாம் கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்தார்.

விறகு வெட்டி திகைத்துப் போனான். தங்கமாகமாறிய கற்கள் இரண்டும் மீண்டும் கற்களாக மாறித் தரையில் கிடந்தது. வந்தது இறையென்று உணர்ந்த விறகு வெட்டி கலங்கிப்போனான். கலங்கி என்ன பயன்? காலம்கடந்த கலக்கம். அவன் வாழ்க்கை முழுவதும் விறகு வெட்டிப் பிழைப்பதிலேயே கரைந்தது.

ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை இருக்கக் கூடாது! மனம் பக்குவப்பட்டால் மட்டுமே இறைவன் திருவடியில் சேர முடியும்!
----------------------------------------------------
மின்னஞ்சல் பாடம் (எண் 12) அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

A to P வரை துவக்க எழுத்தைக் கொண்ட பெயர்களுக்குப் புது மின்னஞ்சல் ஐ.டி ஒன்றை ஏற்படுத்தி அனுப்பியுள்ளேன். மற்றவர்களுக்குப் பழைய மின்னஞ்சல் ஐ.டியிலேயே பாடங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்குமேல் அனுமதியில்லை எனும் கூகுள் ஆண்டவரின் கட்டுப்பாட்டிற்குத் தலைவணங்கி, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால், அவர்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து விட்டேன். ஒரே சமயத்தில் அனைவருக்கும் பாடங்கள் செல்வதற்காக இந்த ஏற்பாடு

முதல் பிரிவிற்கு : vaaththiyar2010@gmail.com
இரண்டாவது பிரிவினருக்கு: vaaththiyar@gmail.com

பாடங்கள் கிடைக்காதவர்கள், அந்தந்தப் பிரிவிற்கே கடிதம் எழுதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் 60 மணி நேர விடுப்பில், சொந்த ஊருக்குச் செல்வதால், அடுத்த வகுப்பு 28.11.2009 சனிக்கிழமை காலையில் துவங்கும்.

நேரம்?

இணைய வகுப்பிற்கு ஏது நேரம் அல்லது காலம்? வாத்தியார் துவங்கும் நேரம்தான் வகுப்பறையின் நேரம். நீங்கள் வரும் நேரம்தான் உங்களுக்கான வகுப்பறை நேரம்!

சரி, காலை 10:30 மணி என்று வைத்துக்கொள்ளுங்கள்!

விடுமுறையில் செல்வதால், உங்களுக்கு இங்கேயும் பாடம். அங்கேயும் (மின்னஞ்சல் வகுப்பிலும்) பாடம். அனைவரும் Home work செய்து, எடுத்துக் கொண்டு வாருங்கள்

அன்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!

Lesson on Astrology: Basic Strength: அடிப்படை வலிமை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Astrology: Basic Strength: அடிப்படை வலிமை!
--------------------------------------------------
உச்சம் பெற்ற கிரகத்திற்கும், வர்கோத்தமம் பெற்ற கிரகத்திற்கும், மூலத்திரி கோணத்தில் இருக்கும் கிரகத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
--------------------------------------------------
முதலில் கிரகங்களின் அடிப்படை நிலைமையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, பிறகு மேலே உள்ள கேள்விக்கு வருவோம்.

1. இயற்கைத் தன்மை அல்லது இயற்கைக் குணம்:
நன்மை செய்யக்கூடிய கிரகம் அல்லது தீமை செய்யக்கூடிய கிரகம்
(நல்லவன் அல்லது கெட்டவன்) (benefic or malefic)

2. வலிமை:
பலம் பொருந்தியவன் அல்லது பலமில்லாதவன். அல்லது இப்படி வைத்துக்கொள்ளுங்கள்: வலிமை உடையவன் அல்லது வலிமை இல்லாதவன் strength (strong or weak)

கிரகங்களுக்கு இந்த நிலைப்பாடுகள் உண்டு. அதை உதாரணங்களுடன் விரிவு படுத்திப்பார்ப்போம்:
------------------------------------------------
1
சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஜாதகத்தில் வலிமையான நிலையில்:

பலன்: உங்களை விரும்பும் மாமனார். உங்களுக்காக உயிரையும் தரக்கூடியவர். அதோடு அவர் கோடிஸ்வரர்! (அட, நன்றாக இருக்கிறதே:-)))
-------------------------------------------------
1 -A
சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஆனால் வலிமை குன்றிய நிலையில்:

பலன்: தன் குழந்தைகளின் மேல் மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாய் - ஆனால் குழந்தைகளைக் கவனித்து, சீராட்டி வளர்ப்பதற்கு வேண்டிய பொருளாதாரம் இல்லாத நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் தினமும் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைமையில் உள்ள தாய்!
---------------------------------------------------
2
தீய கிரகம் - ஆனால் வலிமை குன்றிய நிலையில்:

பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் அவன் இருப்பதோ சிறையில் எனும் நிலைப்பாடு!
----------------------------------------------------
2 -A
தீய கிரகம் - ஜாதகத்தில் வலிமையான நிலையில்:

பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்!
-------------------------------------------------
சரி, இப்போது கேள்விக்கு வருவோம். உச்சம், வர்கோத்தமம், மூலத்திரிகோணம் என்று ஒரு கிரகம் கையில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A என்னும் கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிவிடும்! அல்லது ஒதுங்கிவிடும்.

உச்சத்திற்கும், மூலத்திரிகோணத்திற்கும் தனி மதிப்பு, மரியாதை உண்டு. முறையாகக் கல்லூரியில் படித்த பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். வர்கோத்தமம், அவற்றிற்கு அடுத்தபடிதான். அஞ்சல் வழிக் கல்வியில் கற்ற பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி முறையாகப் படித்த பட்டதாரிகளிலும், பிலானி, ஐ.ஐ.டி, களில் படித்த பட்டதாரிகளுக்கும் உப்புமா கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல, கிரகங்களுக்கும் படித்த விதத்திற்கான தனி மதிப்பு உண்டு. படிப்பை வைத்து உத்தியோகமும் சம்பளமும் கிடைப்பதைப் போல, கிரகங்கள் வாங்கிய மதிப்பெண்களை வைத்து ஜாதகனுக்குப் பலன்கள்
கிடைக்கும்.பெற்ற மதிப்பெண்களையும், கிடைத்த வேலையையும் வைத்துத்தான் கிரகங்கள் ஜாதகத்தில் வேலை செய்யும்!

கிரகங்களின் மதிப்பெண்கள்: தராதரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்:

உச்சம் - 100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை

இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்.

40% வரை பாஸ். 40% ற்குக்கீழே ஃபெயில்

ஒருவரின் ஜாதகத்தில் சனீஷ்வரன் துலா ராசியில் இருந்தால் அவன் உச்சம் பெற்று இருப்பான். உச்சம் பெற்று அவன் அங்கே வலிமையோடு இருந்தால், உங்களுக்கு அவன் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல உங்களை விரும்பும் கோடீஸ்வர மாமனாராக இருப்பான். அல்லது அங்கே உச்சம் பெற்றும் வலிமை குன்றிய நிலையில் இருந்தால், உங்கள் மீது மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாயைப் போல இருப்பான். அதே சனீஷ்வரன் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ ராசியில் இருந்தால் நீசமாகி இருப்பான். நீசம் பெற்றவன் வலிமையின்றி இருந்தால் 2ஆம் எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். வலிமையோடு இருந்தால் 2-A எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள்.

அர்த்தமானதா? புரியும்படி உள்ளதா?
-----------------------------------------------
வர்கோத்தமத்தைப் பற்றி முன்பே எழுதிவிட்டேன். மூலத்திரிகோணத்தைப்பற்றி எழுத வேண்டும். அதை நாளை எழுதுகிறேன். பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

23.11.09

முடிவும், துவக்கமும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++
முடிவும், துவக்கமும்!

1
சில பூக்கள் சூரிய ஒளியில் மலர்கின்றன; சில பூக்கள் நிழலில் மலர்கின்றன. நாம் எந்த இடத்தில் மலர்வோம் என்று கடவுளுக்குத் தெரியும். ஆகவே கவலை யின்றி, எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

2
எதுவும் தன்னிச்சையாக நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். விடாமுயற்சியின் மூலம்தான் வெற்றிபெற முடியும். நன்மைகளை யாரும் தேடித்தர மாட்டார்கள். நீங்கள்தான் தேடிப் பெற வேண்டும்!

3
மற்றவர்களுடைய எண்ணங்களை மாற்றுவதற்கு முதல் வழி உங்களுடைய எண்ணங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்! வெண்ணையை உருக வைக்கும் அதே சூரியன்தான், களி மண்ணைக் கெட்டியாக்குகிறது! உங்கள் எண்ணப்படிதான் வாழ்க்கை அமையும். நல்லவற்றையே எண்ணுங்கள்!

4
வெள்ளத்தில் மீன்கள் பூச்சிகளைப் பிடித்துத் தின்கின்றன. வெள்ளம் வடிந்தவுடன் பூச்சிகளுக்கு மீன்கள் இறையாகின்றன. காலதேவன் ஆளாளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பான். நமக்கும் ஒரு காலம் வரும் என்று நம்பிக்கையோடு இருங்கள்.

5
ஒரு இடத்தில் சூரிய அஸ்தமனம் எனும்போது, இன்னும் ஒரு இடத்தில் சூரிய உதயம் இருக்கும். மனது ஒடிந்து போகாதீர்கள். முடிவு என்று நீங்கள் நினைப்பது ஒரு புதிய துவக்கமாக இருக்கலாம்!

6
பத்து சதவிகித வாழ்க்கை உங்கள் செயல்களால் உருவாவது. வருவதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிர்றீர்கள் என்பதை வைத்துத்தான் மீதமுள்ள 90% வாழ்க்கை, அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

20.11.09

Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

ஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் சொல்வார்:

“சார், உங்கள் பெண்ணிற்கு நீங்கள் லெட்டர் எழுதினா, அது அன்பு. நான் எழுதினா, அது காதல்!”

அதுபோல, கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும் (mutual aspect) பரிவர்த்தனைக்கும் (mutual exchange of places) வித்தியாசம் உண்டு!

பரஸ்பர பார்வை என்பது அன்பு. பரிவர்த்தனை என்பது காதல்.

காதலில், காதலர்கள் இருவருமே நேசம் மிகுந்தவர்களாக, விசுவாசமிக்கவர் களாக, ஒத்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தால் காதல் திருமணத்தில் முடியும். வாழ்க்கை ஒளி மயமாக இருக்கும்.

அதுபோல பரிவத்தனையாகும் கிரகங்கள் இருவருமே சுபக்கிரகங்களாக இருந்தால், அவர்கள் பரிவர்த்தனையான வீட்டிற்கான பலன்கள் அசத்தலாக இருக்கும். ஜாதகனின் வாழ்க்கை அந்த இரண்டு வீடுகளைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும்

காதலர்கள் இருவரில், ஒருவர் வேஷக்காரராக, வில்லத்தனம் மிகுந்தவராக இருந்தால் காதலின் முடிவு அல்லது அவர்களின் மண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
+++++++++++++++++++++++++++++++++
சரி, காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு, வேறு உதாரணம் சொல்கிறேன்.

பரஸ்பர பார்வை:
1
உங்கள் நண்பர் - அதாவது உங்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், அன்பு மிக்கவர், உங்கள் மேல் பிரியமுள்ளவர், உங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?
2.
உங்களுக்கு வேண்டாத விரோதி எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?

பரிவர்த்தனை:
1. மிகவும் செல்வாக்கு, சொல்வாக்கு, பண பலம் மிகுந்த நண்பர் உங்களுக்குத் தொழிலில் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?

2.உங்கள் விருப்பத்திற்கு மாறாக, தீயவன் ஒருவன், ஏமாற்றிக் கவிழ்க்கக் கூடியவன் ஒருவன் உங்களுக்குக் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?
+++++++++++++++++++++++++++++++++
கோள்களின் பரஸ்வர பார்வையாலும், பரிவர்த்தனையாலும் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விரிவான பாடம் அடுத்த பாடம். பாடத்தின் தலைப்பு: கிரகங்களின் பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும் (Mutual aspect and exchange of planets)

அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடமாக வரும்!
++++++++++++++++++++++++++++++++++

“வாத்தி (யார்) எப்போது அது வரும்?”

”மூன்று நாட்கள் கழித்து 24.11.2009 செவ்வாய்க்கிழமையன்று வரும்”

”ஏன் அப்படி?”

”இடையில் மூன்று நாட்கள் வாத்தியார் வெளியூர் செல்வதால் வகுப்பறைக்கு விடுமுறை!”

“சரி, அதை ஏன் இப்போதே சொல்லி, எங்களைச் சஸ்பென்ஸில் வைத்துவிட்டுப் போகிறீர்கள்?”

“பத்திரிக்கைகளுக்குக் கதைகள் எழுதி எழுதி, அடுத்தவர்களை சஸ்பென்சில் வைப்பது வாத்தியாருக்குக் பழகிவிட்டது. ஆகவே குறுகுறுப்போடு பொறுத்திருங்கள். பாடம் சுவையாக இருக்கும்!”
........................................................................
வகுப்பறை பதிவேட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,012
மின்னஞ்சல் வகுப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 760 மட்டுமே!
மீதம் உள்ளவர்களுக்குப் பாடம் வேண்டாமா?
உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தெரிந்தால்தானே பாடங்களை அனுப்ப முடியும்?

ஆகவே இதுவரை மின்னஞ்சல் பாடங்கள் கிடைக்காதவர்கள், தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வாத்தியாருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

gmail contacts folderல் வருகின்ற பெயர்களைச் சேர்ப்பதற்கு (வாத்தியாரின் பல வேலைகளுக் கிடையே) இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். ஆகவே தெரிவித்த பிறகு மூன்று நாட்கள் பொறுமை காக்க வேண்டும். அதையும் மனதில் வையுங்கள்

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
........................................................................
அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

19.11.09

Lesson on yoga: Amala Yoga: அம்லா யோகம்!++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yoga: 

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++

 

18.11.09

Lessons on yogas: சரஸ்வதி யோகம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas:

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.11.09

Lessons on yogas: Dainya Parivartana Yoga: தைன்ய பரிவர்த்தனை யோகம்!

பயந்துவிடாதீர்கள். அம்மணி துஷ்டத்தனத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவ்வளவுதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas:

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

16.11.09

Lessons on Yogas: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Yogas:

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++++++

14.11.09

நகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது?


++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது?

Week end posting!

பள்ளிக்கூட நகைச்சுவை! (School Jokes)
+++++++++++++++++++++++++++++++
1
வாத்தியார்: உன் பெயர் என்ன?

மாணவன்: மை நேம் ஈஸ் சூரஜ் பிரகாஷ்

வாத்தியார்: தமிழில் கேட்டால், தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்

மாணவன்: என் பெயர் சூரிய ஒளி!
............................................................................
2

வாத்தியார்: 1869ல் என்ன நடந்தது?

மாணவன்: காந்திஜி பிறந்தார்!

வாத்தியார்: 1873ல் என்ன நடந்தது?

மாணவன்: காந்திஜிக்கு நான்கு வயது?
....................................................................
3
வாத்தியார்: காந்திஜியின் அஹிம்சை போராட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் நமக்கு என்ன கிடைத்தது?

மாணவன்: ஒரு நாள் விடுமுறை கிடைத்தது!
...................................................................
4
வாத்தியார்: ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒத்த நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணம் கூறு
(give an example of Coincidence)

மாணவன்: என்னுடைய அப்பா, அம்மா இருவருக்கும், ஒரே நாளில் ஒரே இடத்தில் திருமணம் நடந்தது!
...................................................................
5
வாத்தியார்: உன் அப்பாவிற்கு என்ன வயது?

மாணவன்: எனக்கு என்ன வயதோ அதுதான் என்னுடை அப்பாவின் வயது!

வாத்தியார்: அது எப்படி?

மாணவன்: நான் பிறந்த பிறகுதான் அவர் அப்பாவானார்!
...................................................................
6
வாத்தியார்: தவளை ஒன்று இருக்கிறது. கார் ஒன்று இருக்கிறது. உருளைக்கிழங்கின் விலை கிலோ முப்பது ரூபாய். அப்படியென்றால் என் வயது என்ன?

மாணவன்: 32 வயது!

வாத்தியார்: உனக்கெப்படித் தெரியும்?

மாணவன்: என் அக்காவின் வயது 16. அவள் ஒரு அரைக் கிறுக்கு. அதை வைத்து உங்கள் வயதைச் சொன்னேன்!
-----------------------------------------------
எல்லாம் எங்கோ கேட்ட மாதிரி உள்ளதா? இருக்கலாம். மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் மட்டும் என்னுடையது. இரண்டாம் முறை படிப்பதில் தவறில்லை! அதனால் பதிவிட்டேன்!

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

13.11.09

Lesson on Yoga: Dhwaja Yoga: துவஜ யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga: 

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++++++

12.11.09

Lesson on yoga: Chakra yoga: சக்கர யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Lesson No.20

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்!

11.11.09

Lesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்!

"If you do not hope, you will not find what is beyond your hopes"
படத்தைக் கர்சரால் அழுத்திப் பார்த்தால், அருமையான இந்த வாசகம் தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.19

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

9.11.09

தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

7.11.2009 சனிக்கிழமையன்று மதியம், கோவை, குமரகுரு பொறியியற் கல்லூரியில், தமிழ்மணம் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி பயிலரங்க வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் சென்று
வந்தேன்.

நிகழ்ச்சி மதியம் 2:30 மணிமுதல் 4:45 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

அக்கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் முனைவர்.திரு முத்துக்குமார் அவர்களூம். பேராசியர். திரு. தங்கமணி அவர்களும் நிகழ்ச்சிக்குச் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்கள் கணினியில் தமிழின் மேன்மை குறித்தும், வளர்ச்சி குறித்தும், எதிர்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கள் குறித்தும் நல்லதொரு உரை நிகழ்த்தினார். சக பதிவர்
திரு.ரவி அவர்கள் (விக்கிபீடியா ரவி) தமிழில் கிடைக்கும் மென்பொருள் பற்றியும், தமிழில் தட்டச்சுவது பற்றியும் செயல்முறை விளக்கங்களை அளித்து நல்லதொரு உரை நிகழ்த்தினார்.

துவக்கத்தில் திரு. காசி ஆறுமுகம் அவர்களையும், INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்களையும் வந்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ளூம் வண்ணம் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்கள்

தமிழ்மணத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் ஏழு பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

1. திரு.காசி ஆறுமுகம்
2.திரு.லாதானந்த்,
3.திரு. சஞ்சை காந்தி,
4. மரவளம்.திரு.வின்சென்ட்,
5. ecogreenunits திரு.எஸ்.கே.பாபு,
6. திரு.ரவி
7. அடியவன்

பயிற்சி வகுப்பிற்கு, அக்கல்லூரியில் கணினி பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்கள், சுமார் 36 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தேன். அதை நீங்கள் கண்டு மகிழக் கீழே கொடுத்துள்ளேன்.

நன்றி, வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா


பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்கள்

தொப்பியுடன் அமர்ந்திருப்பவர் பதிவர் சஞ்சை காந்தி, அவருக்குப்பின்னால் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.லதானந்த். அதேவரிசையில் இடது கோடியில் மஞ்சள் சட்டையுடன் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.ரவி.

திரு.கவியரசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி!

திருவாளர்கள் காசி.ஆறுமுகம், லாதானந்த்! பின் வரிசையில் அடியவன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

8.11.09

வாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்!


வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் அச்சாகி வந்து விட்டது.

அச்சாகி வந்த அன்றே அச்சாகிய 1,000 பிரதிகளில் 850 பிரதிகள் விற்று விட்டன.

காரைக்குடியில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்வு ஒன்றில், வரும் விருந்தினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காக அவற்றை,திருமண விழாவை நடத்தவிருக்கும் குடும்பத்தினர் 650 பிரதிகளை விலை கொடுத்து
வாங்கிச் சென்றுள்ளனர். வாத்தியாரின் நண்பர்கள் நால்வர் தலா 50 பிரதிகளை வாங்கிக்கொண்டு விட்டார்கள்.

மீதமுள்ள 150 பிரதிகளில், 100 பிரதிகள், வாத்தியாரின் உறவினர்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

ஆக, வெறும் 50 பிரதிகள் மட்டுமே வெளி விற்பனைக்கு!

விருப்பமுள்ளவர்கள், எழுதலாம், கூரியர் தபாலில் அனுப்பிவைக்கப்படும். புத்தகம் கைக்குக் கிடைத்த பிறகு, நீங்கள் பதிப்பகத்தாரின் வங்கிக் கணக்கில் உங்கள் இடத்தில் இருந்தவாறே பணத்தைச் செலுத்தலாம்.
அல்லது காசோலை (AWB Cheque) அல்லது வரைவோலை (Demand Draft) அல்லது மணியார்டர் (Postal Money Order) மூலமாக பணத்தை அனுப்பலாம்.

புத்தகம் பற்றிய விவரம்:
பத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன
பக்கங்கள் 160
விலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக
ஆக மொத்தம் ரூ.100:00
இந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் முகவரி umayal2005@gmail.com
--------------------------------------------------------------------
இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்திருப்பவர்கள்.

1. திரு.SM.வீரப்பன், துணைப் பொது மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திருச்சிக் கோட்டம், திருச்சி (இவர் தீவிர வாசகர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர். அதோடு திரைப்பட இயக்குனர் திரு. வசந்த் அவர்களின் மூத்த சகோதரர்)

2. கவித்தென்றல். காசு.மணியன் அவர்கள். ஆத்தங்குடி

படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பார்த்தால் படங்கள் பெரிதாகத்தெரியும். அணிந்துரையின் முத்தாய்ப்பான வாசகங்களை நீங்கள் படிக்க முடியும்!

எனது முதல் சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.

எனது இரண்டவது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.+++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் புத்தகம் பிரதிகள் இல்லை. இரண்டாவது புத்தகம் 20 பிரதிகள் உள்ளன. அது வேண்டுபவர்கள் எழுதினால் பதிப்பகத்தார் அதையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்

அன்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!

7.11.09

Humour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Humour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்!

எச்சரிக்கை: Week End Post or You can take it as Weak End Post
++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தை மறந்து விட்டு, சற்று நிம்மதியாகவும், மகிழ்ச்சியோடும் இருப்போம். வாருங்கள்! இது முற்றிலும் நகைச்சுவைக்காக எழுதப்பெற்றது. உம்மன்னா’ மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவு அல்ல!

++++++++++++++++++++++++++++++++++++++++++++

1

”வீட்டில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள் அல்லது காரை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.”

”என்ன அது ?”

“புது மோட்டார் சைக்கிள் அல்லது புதுக்காரின் விலையைக் கேளுங்கள்”

“அதே போல நம் மனைவி அழகாக இல்லையே எனும் வருத்தத்தைப் போக்க ஏதாவது வழி இருக்கிறதா?”

“இருக்கிறது. அழகான பெண்ணிடம், அவள் கணவன் அடிவாங்கும்போது அல்லது கடி வாங்கும்போது பாருங்கள். “
+++++++++++++++++++++++++++++++++++
2.

தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பிரச்சினைக்காக ஒட்டுமொத்தமாகப் பன்னிரெண்டு பெண்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிபதி சொன்னார்: “ உங்களில் யார் வயதில் மூத்தவரோ, அவர் வந்து குறைகளின் சாரம்சத்தைச் சொல்லலாம்”

யாரும் முன் வரவில்லை. அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் போய்விட்டார்கள். வழக்கும் தள்ளுபடியாகிவிட்டது.
+++++++++++++++++++++++++++++++++
3

“நல்ல வக்கீலுக்கும் (good lawyer) பெரிய வக்கீலுக்கும் (great lawyer) என்ன வித்தியாசம்?

”நல்ல வக்கீலுக்கு சட்டம் நன்றாகத் தெரியும், பெரிய வக்கீலுக்கு நீதிபதியை நன்றாகத் தெரியும்!”
+++++++++++++++++++++++++++++++++
4.

சிறந்த நடிகரை அரசு தேர்ந்தெடுத்தால், அதற்குப் பெயர் தேசிய விருது!

சிறந்த நடிகரை மக்கள் தேர்ந்தெடுத்தால், அதற்குப் பெயர் தேர்தல் விருது!
+++++++++++++++++++++++++++++++++++
5.

எட்டாம் வகுப்பில், வாத்தியாரம்மா சொன்னார்: “ நான் கோடீஸ்வரன் ஆனால் என்ன செய்வேன் என்பதுதான் கட்டுரையின் தலைப்பு. அனைவரும் எழுதுங்கள்.”

சற்று நேரம் ஆனது.

ஒரு பயல் மட்டும் எழுதாமல் சும்மா உட்கார்ந்திருந்தான்.

அவன் அருகில் சென்ற வாத்தியாரம்மா கேட்டார்,” நீ ஏன்டா எதையும் எழுதாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறாய்?”

அவன் மெல்லிய குரலில் சொன்னான்:

“நான் என் செயளாலருக்காகக் காத்திருக்கிறேன் (I’m waiting for my secretary)”
+++++++++++++++++++++++++++++++++++
6

இரவு மணி பதினொன்று. ஒரு ஆதர்ச தம்பதிகள் கட்டிலில் படுத்திருந்தார்கள். இருவரும் வயதானவர்கள் (இதைக் கவனத்தில் கொள்ளவும்)

கணவன் அரைத் துக்கத்தில். மனைவிக்குத் தூக்கம் வரவில்லை.

மனைவி, குறையுடன் சொன்னாள்:

“இப்போதெல்லாம் நீங்கள், முன்னைப் போல இல்லை. மாறிவிட்டீர்கள். என் கையைப் பிடித்தவாறுதானே படுத்துக் கொள்வீர்கள். இன்று ஏன் அப்படிச் செய்யவில்லை?”

அரைத் தூக்கக் கணவனின் கை தன்னிச்சையாக வந்து மனைவியின் கையைப் பற்றிக் கொண்டது.

மனைவி தொடர்ந்து சொன்னாள்:

“முன்பெல்லாம் படுத்துத் தூங்கும் முன்பு, நீங்கள் என் கன்னத்தில் முத்தமிடுவது வழக்கம். இன்று ஏன் அதைச் செய்யவில்லை.

அதுவும் நடந்தது.

“முன்பெல்லாம் முத்தமிட்டவுடன் நீங்கள் என் ஆட்காட்டி விரலைச் செல்லமாகக் கடிப்பது வழக்கம். இன்று ஏன் அதைச் செய்யவில்லை?”

சாடாரென்று எழுந்த கணவன், போர்வையை உதறிவிட்டு, கட்டிலை விட்டு இறங்கினான்

மனைவி பதற்றத்துடன் கேட்டாள் ”எங்கே போகிறீர்கள்?”

”தொண தொணக்காமல் இருடி ராசாத்தி. பல் செட்டை எடுத்துக் கொண்டு வருகிறேன்!”

“+++++++++++++++++++++++++++++++++++
7. ஆண்டு இறுதி தேர்வு

பட்டப் படிப்பு. கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. கேள்விகள் எல்லாம், ”ஆமாம்/இல்லை” என்று டிக்’ அடிக்கும்படியான கேள்விகள்.

அனைவரும் விறுவிறுப்பாகத் தேர்வு எழுதிக் கொண்டிருக்க, ஒருவன் மட்டும், கேள்வித்தாள் முழுவதையும் ஒரு முறை பார்த்துவிட்டுத் தன் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தை வெளியே எடுத்தான்.

பணத்தைச் சுண்டிப் பார்த்து, தலை வரும் கேள்விகளுக்கு ஆமாம் என்றும், பூ வரும் கேள்விகளுக்கு இல்லை என்றும் டிக் அடித்துக் கொண்டே வந்தான். ஒரு வழியாக எழுதி முடித்தான். பேனாவை மூடி மகிழ்ச்சியோடு தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டான்.

சற்று தூரத்தில் இருந்து அந்தக் கருமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேர்வுக் கண்காளிப்பாளர், தொலைகிறான் என்று சும்மா இருந்துவிட்டார்.

சற்று நேரம் சென்றது.

அரங்கின் மறு பக்கம் சென்று விட்டுத் திரும்பியவர், நமது ஆசாமி என்ன செய்கிறான் என்று பார்த்தார். இப்போது அவன் வியர்க்க விறுவிறுக்கக் கலவரத்துடன் காசை மீண்டும் சுண்டிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வியப்படைந்த அவர், அவன் அருகில் சென்று மெல்லிய குரலில் கேட்டார்,” மறுபடியும் எதற்குக் காசைச் சுண்டிப் போட்டுப் பார்க்கிறாய்?”

அவன் கலங்கிய குரலில் சொன்னான்: “ எழுதியதை சரி பார்க்கிறேன். ஒன்றும் சரியாக வரமாட்டேன் என்கிறது!”
++++++++++++++++++++++++++++++++++++++++
8.
டீச்சர்: ஒரு வார்த்தை நான்கு முறை வரும்படியாக சொற்றொடர் ஒன்றைச் சொல்லு!

மாணவன்: லாரா தத்தா பிரெயன் லாராவை மணந்தால் அவருடைய பெயர் லாரா லாரா என்று மாறிவிடும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த எட்டில் எது நன்றாக உள்ளது?

நட்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

6.11.09

Lesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்குமென்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்"
- கவியரசர் கண்ணதாசன்

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்!

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை இன்று எழுதியிருக்கிறேன்.

நவாம்சத்தைப் பற்றிப் பலருக்கும் சில குழப்பங்கள் உள்ளன.

நவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி.

Navamsa is the one by ninth division of a rasi chart. It is the magnified version of a rasi chart

ஒரு திரைப் படத்தில் நாகேஷ் ஜோக்காகச் சொல்வார்.” மேலாக ஊற்றினால் ரசம்: கலக்கி ஊற்றினால் சாம்பார்”

அதைப்போல மேலாகப் பார்ப்பதற்கு ராசி, கலக்கிப் பார்ப்பதற்கு நவாம்சம் என்று சொல்லலாமா?

சொல்ல முடியாது. ஜோதிட விற்பன்னர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

ராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது.

வைத்தியர் நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம்.

சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.

ஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும்.

ஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை, பாடத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன்.

அதாவது ராசிச் சக்கரத்தின் உபயோகம் என்ன? நவாம்சச் சக்கரத்தின் உபயோகம் என்ன? என்பதை விவரமாக எழுதியிருக்கிறேன்.

அனைவரும் படித்துப் பயன்பெறுங்கள் அல்லது படித்து மகிழுங்கள். அது உங்கள் சாய்ஸ்!
-----------------------------------------------------------------
”வாத்தி (யார்) பாடம் எங்கே?”

”அது மின்னஞ்சல் பாடம்”

“ஏன் அது மின்னஞ்சல் பாடம்?”

“அதில் பல வில்லங்கமான தகவல்கள் உள்ளன. அதோடு அது மேல் நிலைப் பாடம். இங்கே எழுதினால், வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள். ஆகவே அது மின்னஞ்சல் பாடமாகக் கொடுக்கப்பெற்றுள்ளது.”

“மின்னஞ்சல் பாடம் எப்போது வரும்?”

“மின்னஞ்சல் வகுப்பில் பதிவு செய்துள்ள மாணவக் கண்மணிகளில், A to P எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு முதலில் (வெள்ளிக் கிழமையன்று) வரும். R to Y எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு அடுத்த நாள் (சனிக்கிழமையன்று) வரும்”

“ஏன் அப்படி?

“ மின்னஞ்சல் வகுப்பறையில் சுமார் 700 மாணாக்கர்கள் உள்ளார்கள். கூகுள் ஆண்டவர் நாளொன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்புவதற்கு தடா போட்டுள்ளார். ஆகவே இரண்டு பிரிவாக - 25 மணி நேர இடைவெளிக்குள் அவைகள் அனைவருக்கும் வந்து சேரும்!”

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

5.11.09

Lessons on Yogas: Nisva Yoga : நிஸ்வா யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.18

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

4.11.09

Lessons on Yogas: Devendra Yoga: தேவேந்திர யோகம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.17

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

3.11.09

Lessons on yoga: Ara Sauri Yoga ஆர செளரி யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.16

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!