மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.11.09

தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

7.11.2009 சனிக்கிழமையன்று மதியம், கோவை, குமரகுரு பொறியியற் கல்லூரியில், தமிழ்மணம் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி பயிலரங்க வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் சென்று
வந்தேன்.

நிகழ்ச்சி மதியம் 2:30 மணிமுதல் 4:45 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

அக்கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் முனைவர்.திரு முத்துக்குமார் அவர்களூம். பேராசியர். திரு. தங்கமணி அவர்களும் நிகழ்ச்சிக்குச் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்கள் கணினியில் தமிழின் மேன்மை குறித்தும், வளர்ச்சி குறித்தும், எதிர்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கள் குறித்தும் நல்லதொரு உரை நிகழ்த்தினார். சக பதிவர்
திரு.ரவி அவர்கள் (விக்கிபீடியா ரவி) தமிழில் கிடைக்கும் மென்பொருள் பற்றியும், தமிழில் தட்டச்சுவது பற்றியும் செயல்முறை விளக்கங்களை அளித்து நல்லதொரு உரை நிகழ்த்தினார்.

துவக்கத்தில் திரு. காசி ஆறுமுகம் அவர்களையும், INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்களையும் வந்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ளூம் வண்ணம் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்கள்

தமிழ்மணத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் ஏழு பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

1. திரு.காசி ஆறுமுகம்
2.திரு.லாதானந்த்,
3.திரு. சஞ்சை காந்தி,
4. மரவளம்.திரு.வின்சென்ட்,
5. ecogreenunits திரு.எஸ்.கே.பாபு,
6. திரு.ரவி
7. அடியவன்

பயிற்சி வகுப்பிற்கு, அக்கல்லூரியில் கணினி பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்கள், சுமார் 36 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தேன். அதை நீங்கள் கண்டு மகிழக் கீழே கொடுத்துள்ளேன்.

நன்றி, வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா


பயிலரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்கள்

தொப்பியுடன் அமர்ந்திருப்பவர் பதிவர் சஞ்சை காந்தி, அவருக்குப்பின்னால் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.லதானந்த். அதேவரிசையில் இடது கோடியில் மஞ்சள் சட்டையுடன் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.ரவி.

திரு.கவியரசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி!

திருவாளர்கள் காசி.ஆறுமுகம், லாதானந்த்! பின் வரிசையில் அடியவன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

57 comments:

 1. பகிர்வுக்கு மிக்க நன்றிகள் வாத்தியாரே..!

  ReplyDelete
 2. Dear Sir,

  Thank you. Very Interesting. Photo's are very nice. Best wishes for your contribution

  Chandrasekaran Surya

  ReplyDelete
 3. ரொம்ப நன்றி அய்யா.

  ReplyDelete
 4. sir,
  I am happy to know such kind of Tamil website associations, and it is nice that you have attended, and i expect that you will let us know more about Tamil computing(hope you will write a separate article on usage and other details of Tamil Computing). Thanks and with regards. sakthi ganesh.

  ReplyDelete
 5. Sir I expect /Hope that you will write about what you have extracted from that conference. Thanks. sakthi Ganesh.

  ReplyDelete
 6. Dear Sir

  Nallathoru nikalazhiyai Pakirthamaikku Nandri.


  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 7. இத்தனைக்கும் நடுவில் தாங்கள் கூட்டங்களுக்கும் நேரம் ஒதுக்குவது ஆச்சரியமே!தமிழ்மணம் பரப்பும் உங்கள் அருந்தொண்டு வாழ்க!வளர்க!

  ReplyDelete
 8. Dear Sir,

  Glad to see your contribution on this meeting.

  By the way Present for today.

  Best Regards
  Saravana

  ReplyDelete
 9. ///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  பகிர்வுக்கு மிக்க நன்றிகள் வாத்தியாரே..!/////

  எல்லாம் உங்களைப் போன்ற தமிமணம் பரப்புகின்ற அன்பர்களுக்காகத்தான் உண்மைத் தமிழரே!

  ReplyDelete
 10. /////csekar2930 said...
  Dear Sir,
  Thank you. Very Interesting. Photo's are very nice. Best wishes for your contribution
  Chandrasekaran Surya/////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. /////செந்தழல் ரவி said...
  ரொம்ப நன்றி அய்யா.////

  நல்லது. நன்றி செந்தழலரே!

  ReplyDelete
 12. /////Sakthi Ganesh said...
  sir,
  I am happy to know such kind of Tamil website associations, and it is nice that you have attended, and i expect that you will let us know more about Tamil computing(hope you will write a separate article on usage and other details of Tamil Computing). Thanks and with regards. sakthi ganesh./////

  எனக்குத் தெரிந்தவற்றை முன்பே எழுதியிருக்கிறேன் நண்பரே! தேவைப்படும் புது விஷயங்களையும் அவ்வப்போது எழுதுவேன் நண்பரே!

  ReplyDelete
 13. ///Sakthi Ganesh said...
  Sir I expect /Hope that you will write about what you have extracted from that conference. Thanks. sakthi Ganesh./////

  பேச்சுக்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டு வரவில்லை. கேட்டது மனதில் இருக்கிறது!

  ReplyDelete
 14. ////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Nallathoru nikalazhiyai Pakirthamaikku Nandri.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman

  நன்றி ராஜாராமன்!

  ReplyDelete
 15. /////Priya said...
  thank you sir/////

  நன்றி சகோதரி!

  ReplyDelete
 16. /////kmr.krishnan said...
  இத்தனைக்கும் நடுவில் தாங்கள் கூட்டங்களுக்கும் நேரம் ஒதுக்குவது ஆச்சரியமே!தமிழ்மணம் பரப்பும் உங்கள் அருந்தொண்டு வாழ்க!வளர்க!/////

  இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன் கிருஷ்ணன் சார். நேரம் நம் கையில்தானே இருக்கிறது!

  ReplyDelete
 17. /////Saravana said...
  Dear Sir,
  Glad to see your contribution on this meeting.
  By the way Present for today.
  Best Regards
  Saravana/////

  நன்றி சரவணகுமார்!

  ReplyDelete
 18. பகிர்வுக்கு நன்றி ஆசானே.

  ReplyDelete
 19. அய்யா இனிய காலை வணக்கம்,

  இனிய பகிர்வுக்கு நன்றி அய்யா ....

  ReplyDelete
 20. அறிவார்ந்த, அறிதற்கு அரிய,
  அரிய பல அத்தனையும்
  தமிழில் வார்த்து கணிப்பொறியில் சேர்ப்பீர்.

  கணிப்பொறி எனும் கருவிக்கொண்டு
  கணநேரத்தில் கலைகள்ப் பல
  கற்றிடுவோம்-அதையும்
  கன்னித் தமிழிலே பெற்றிடுவோம்.

  அறிவார்ந்த சான்றோரே, தமிழ்மணத்தில்
  தாமரையாய், அல்லியாய்,
  மணக்கும் மல்லிகையாய்,
  தாழம் பூவாய், ரோஜாவாய்,
  மனத்தை மயக்கும் பிச்சிப் பூவாய்,
  பார்ப் போரை பரவசப் படுத்தும்
  பன்னீர் பூவெனும் எழுவர் நீவீர்,
  வலைப்பதிவில் தமிழ்மணம் பரப்பி;
  தரணி வாழ் தமிழர்கள்
  உள்ளம் எல்லாம் நிறைந்தொரே!
  வாழ்க நீவீர்! வளர்க உம் தொண்டு!!.

  (கணனி ('ண'கரத்தை தொடர்ந்து 'ண'கரமன்றி 'ன'கரம் வராது) என்னும் இச் சொல்லில் இலக்கணப் பிழை இருப்பதாய் என் சிற்றறிவுக்குத் தோன்றிற்று தமிழ் அறிவார்ந்த பெரியோர் விளக்குங்களேன். "ஆப்பிள்" பழத்திற்கும் "ராபர்ட்" "ஜோசப்" போன்ற பெயர்களுக்கும் மொழிபெயர்ப்புச் செய்யாதது போல் இதையும் கம்ப்யூட்டர் எனக் கொள்ளலாமே. ஆங்கிலத்தில் "கவட்டபில்லை" ,"அரிசியை" ,"சந்தனத்தை" ஏன் ஜப்பானிய சுனாமியை அப்படியேத் தானே கொண்டுள்ளார்கள். நீங்கள் சந்திக்கும் தமிழறிஞர்களை கேளுங்களேன். வெகுநாட்க்களாய் என்மனதில் எழுந்து நிற்கும் கேள்வி.)

  தகவலுக்கு மிக்க நன்றி அய்யா.
  அன்புடன்,
  ஆலாசியம் கோ.

  ReplyDelete
 21. எப்படி அய்யா இப்படி இடையறாமல் உழைக்க முடிகிறது உங்களால் ரகசியம் என்னவோ ? எங்களால் தொழிலை கவனித்தால் மற்ற விசயங்களை கவனிக்க முடிவதில்லை . மற்ற விசயங்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் தொழிலில் லாபம் குறைகிறது . கட்டாயம் தாங்கள் லாபம் குறைந்தாலும் பரவால்லை என்று தான் இந்த வலை பதிவை இயக்க முடியும் ,. எப்படி நேரத்தை மிச்ச படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை அய்யா ?

  ReplyDelete
 22. Dear sir,

  I just(1hour back) met a Kerala Jothidar(In USA now) in a Andhra restaurant, he came to meet her daughter family in Los Angeles.

  அவர் முக்கியத்துவம் தருவது,

  1. குரு பார்வை பெற்ற மாந்தி க்கு அதிக முக்கியத்துவம்.
  2. ஆண், பெண் லக்னங்கள் 1 & 7 லில் அமைவது
  3. இருவர் ஜாதகத்திலும் சுக்ரனின் அமர்வு. ( இருவருக்கும் ஒரே இடத்தில அமர்வுக்கு மிக்கியத்துவம்)

  Just wanted to share with you and our team members. Also I would like to share your thoughts on this.

  Thanks
  Saravana

  ReplyDelete
 23. /////சிங்கைசூரி said...
  பகிர்வுக்கு நன்றி ஆசானே.////

  நன்றி சிங்கைக்காரரே!

  ReplyDelete
 24. ////astroadhi said...
  அய்யா இனிய காலை வணக்கம்,
  இனிய பகிர்வுக்கு நன்றி அய்யா ..../////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 25. /////Alasiam G said...
  அறிவார்ந்த, அறிதற்கு அரிய,
  அரிய பல அத்தனையும்
  தமிழில் வார்த்து கணிப்பொறியில் சேர்ப்பீர்.

  கணிப்பொறி எனும் கருவிக்கொண்டு
  கணநேரத்தில் கலைகள்ப் பல
  கற்றிடுவோம்-அதையும்
  கன்னித் தமிழிலே பெற்றிடுவோம்.
  அறிவார்ந்த சான்றோரே, தமிழ்மணத்தில்
  தாமரையாய், அல்லியாய்,
  மணக்கும் மல்லிகையாய்,
  தாழம் பூவாய், ரோஜாவாய்,
  மனத்தை மயக்கும் பிச்சிப் பூவாய்,
  பார்ப் போரை பரவசப் படுத்தும்
  பன்னீர் பூவெனும் எழுவர் நீவீர்,
  வலைப்பதிவில் தமிழ்மணம் பரப்பி;
  தரணி வாழ் தமிழர்கள்
  உள்ளம் எல்லாம் நிறைந்தொரே!
  வாழ்க நீவீர்! வளர்க உம் தொண்டு!!.
  (கணனி ('ண'கரத்தை தொடர்ந்து 'ண'கரமன்றி 'ன'கரம் வராது) என்னும் இச் சொல்லில் இலக்கணப் பிழை இருப்பதாய் என் சிற்றறிவுக்குத் தோன்றிற்று தமிழ் அறிவார்ந்த பெரியோர் விளக்குங்களேன். "ஆப்பிள்" பழத்திற்கும் "ராபர்ட்" "ஜோசப்" போன்ற பெயர்களுக்கும் மொழிபெயர்ப்புச் செய்யாதது போல் இதையும் கம்ப்யூட்டர் எனக் கொள்ளலாமே. ஆங்கிலத்தில் "கவட்டபில்லை" ,"அரிசியை" ,"சந்தனத்தை" ஏன் ஜப்பானிய சுனாமியை அப்படியேத் தானே கொண்டுள்ளார்கள். நீங்கள் சந்திக்கும் தமிழறிஞர்களை கேளுங்களேன். வெகுநாட்க்களாய் என்மனதில் எழுந்து நிற்கும் கேள்வி.)
  தகவலுக்கு மிக்க நன்றி அய்யா.
  அன்புடன்,
  ஆலாசியம் கோ.////

  கணினி எனும் சொல்லை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். நாமும் பயன்படுத்துவதில் தவறில்லை! இப்போது வரும் திரைப் படப் பாடல்கள் இலக்கணத்தோடா வருகின்றன? கேட்டு ரசிக்கவில்லையா? அது போலத்தான் இதுவும்!

  ReplyDelete
 26. ////prabakar.l.n said...
  எப்படி அய்யா இப்படி இடையறாமல் உழைக்க முடிகிறது உங்களால் ரகசியம் என்னவோ ? எங்களால் தொழிலை கவனித்தால் மற்ற விசயங்களை கவனிக்க முடிவதில்லை . மற்ற விசயங்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் தொழிலில் லாபம் குறைகிறது . கட்டாயம் தாங்கள் லாபம் குறைந்தாலும் பரவால்லை என்று தான் இந்த வலை பதிவை இயக்க முடியும் ,. எப்படி நேரத்தை மிச்ச படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை அய்யா ?////

  எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு!

  ReplyDelete
 27. Saravana said...
  Dear sir,
  I just(1hour back) met a Kerala Jothidar(In USA now) in a Andhra restaurant, he came to meet her daughter family in Los Angeles.
  அவர் முக்கியத்துவம் தருவது,
  1. குரு பார்வை பெற்ற மாந்தி க்கு அதிக முக்கியத்துவம்.
  2. ஆண், பெண் லக்னங்கள் 1 & 7 லில் அமைவது
  3. இருவர் ஜாதகத்திலும் சுக்ரனின் அமர்வு. ( இருவருக்கும் ஒரே இடத்தில அமர்வுக்கு மிக்கியத்துவம்)
  Just wanted to share with you and our team members. Also I would like to share your thoughts on this./////

  1. குரு பார்வை பெற்ற அனைத்திற்குமே முக்கியத்துவம் உண்டு!
  2. திருமண பொருத்தத்திற்கு அது உகந்தது. 1/7 ராசிகளுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஈர்ப்புடன் இருப்பார்கள்
  3. இருந்தால் நல்லதுதான்!

  ReplyDelete
 28. Good morning,

  Thanks for the good chapter.

  ReplyDelete
 29. ஐயா வணக்கம்

  கணினி பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் நடந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றது பற்றிய பதிவு நன்று.

  இந்த இடத்தில் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசை. சில அரசாங்க அலுவலகங்களில் இன்னும் தமிழ் typewriter வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கணினி இருந்த போதும் தட்டச்சு இயந்திரந்த்தை தான் பயன் படுத்துகிறார்கள். கணினி என்பதே வேலை பளுவை குறைப்பதற்கும் எளிதாக குறுகிய நேரத்தில் வேலையை முடிப்பதற்குமான கருவி, ஆனால் அரசாங்க அலுவலர்கள் " இது கம்பியூட்டருக்கு போய் வரணும். நேரம் ஆகும். நாளைக்கு வாங்க. கையிலே எழுதுறதுன்னா இப்பவே முடிச்சு கொடுத்திருவேன் " என்பார்கள். இது ஏன் என்று புரியவில்லை ???

  நன்றி

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. அய்யா,

  ஒரு கிரகம் வலுவாக உள்ளது என்றால்,

  1. அட்சி & உட்சம்
  2. அவர் அமைந்த இடத்தில 30 பரலுக்கு மேல்
  3. சுய வர்க்கத்தில் 5 க்கு மேல் பரல்கள்.

  மேற்கூறிய மூன்றும் வேண்டுமா?

  நன்றியுடன்
  சரவணா

  ReplyDelete
 31. செவ்வாய் - சிகப்புக்கல்
  பெண்கள் - மாதவிலக்கு
  தொடர்பான விரிவானப்
  பாடம் வருமா?
  நன்றிகள்.

  ReplyDelete
 32. ////Rama said...
  Good morning,
  Thanks for the good chapter.////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 33. ///RVC said...
  thanks for sharing sir...!////

  நல்லது.நன்றி~!

  ReplyDelete
 34. ////T K Arumugam said...
  ஐயா வணக்கம்
  கணினி பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் நடந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றது பற்றிய பதிவு நன்று.
  இந்த இடத்தில் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசை. சில அரசாங்க அலுவலகங்களில் இன்னும் தமிழ் typewriter வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கணினி இருந்த போதும் தட்டச்சு இயந்திரந்த்தை தான் பயன் படுத்துகிறார்கள். கணினி என்பதே வேலை பளுவை குறைப்பதற்கும் எளிதாக குறுகிய நேரத்தில் வேலையை முடிப்பதற்குமான கருவி, ஆனால் அரசாங்க அலுவலர்கள் " இது கம்பியூட்டருக்கு போய் வரணும். நேரம் ஆகும். நாளைக்கு வாங்க. கையிலே எழுதுறதுன்னா இப்பவே முடிச்சு கொடுத்திருவேன் " என்பார்கள். இது ஏன் என்று புரியவில்லை ???
  நன்றி
  வாழ்த்துக்கள்///

  இப்போது ஒவ்வொரு துறையாகக் கணினி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. முழுமைபெற சற்றுக் காலம் பிடிக்கும்!

  ReplyDelete
 35. ////Saravana said...
  அய்யா,
  ஒரு கிரகம் வலுவாக உள்ளது என்றால்,
  1. அட்சி & உட்சம்
  2. அவர் அமைந்த இடத்தில 30 பரலுக்கு மேல்
  3. சுய வர்க்கத்தில் 5 க்கு மேல் பரல்கள்.
  மேற்கூறிய மூன்றும் வேண்டுமா?
  நன்றியுடன்
  சரவணா/////

  ஒரு பெண்ணிற்கு
  அழகு
  அறிவு
  கல்வி
  திறமை
  குணம்
  அதிர்ஷ்டம்
  ஆகிய ஆறும் அவசியம்.
  இந்த ஆறும் சேர்ந்த பெண்ணை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? முடியாது.
  அது போல ஜோதிடத்தில் எல்லா விதிகளும் கூடி வராது.நீங்கள் சொல்வதில் 3ல் 2 இருந்தால் போதும்!

  ReplyDelete
 36. ////Alasiam G said...
  செவ்வாய் - சிகப்புக்கல்
  பெண்கள் - மாதவிலக்கு
  தொடர்பான விரிவானப்
  பாடம் வருமா?
  நன்றிகள்.////////

  பெண்களின் ஜாதக விஷேங்கள் எனும் தலைப்பில் தொடர் பதிவாக எழுத உள்ளேன். இப்போதல்ல. பிறகு!

  ReplyDelete
 37. Dear Sir,

  Thanks for taking us to 'payilarangam'.

  2. what is the difference between 'giragha parvai' and 'giragha drishti'?

  g.raju

  ReplyDelete
 38. பதிவுகள் அனைத்தும் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.
  ஆச்சிவந்தாச்சு பத்திரிக்கையில் தங்களின் கதை ஓன்றைப் படிதிதிருக்கிறேன்.நன்றி.

  ReplyDelete
 39. Dear Sir,

  could you please forward me the 8 & 9th lessons to my below email ID.

  I did not receive it.

  saravana221078@hotmail.com

  Thanks
  Saravana

  ReplyDelete
 40. குரு வணக்கம்,

  இரண்டு நாட்கள் வகுப்புக்கு வர இயலவில்லை

  த‌ங்க‌ளின் 8 நகைசுவையும் 8 தேன் கலவைகள் மட்டுமல்ல‌

  சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தது...

  (குரு ஒரு நகைசுவையை பதிவிடுகிறார் என்றால் அது முத்தாக தானே இருக்கும். 8 நகைசுவையும் 8 முத்துக்க்ள்)


  "தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!" சென்று வந்ததை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குருவே


  அன்புடன் மாணவன்
  சிறுதுளி

  ReplyDelete
 41. good morning sir,

  Due to rain i am unable to attend the class on 9th November.

  Today I have attend a tamil function.
  Will write the subject to yr mail.

  Sankar
  Karur.

  ReplyDelete
 42. 3 நாள் இடைவெளிக்குப் பிறகு வகுப்பறைக்கு வருகிறேன். நல்லதொரு கருத்து பகிர்வு. பல காலமாகவே எனக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் ஆவதில்லை. அதாவது யாரும் அழைப்பதில்லை. அழைத்தாலும் நான் போவதில்லை.

  ReplyDelete
 43. ஐயா !

  இன்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவரது வீட்டில் 60 வது திருமணம் நடந்தது.
  மகிழ்ச்சியாக இருந்தது.
  தமிழில் திருமணம் ஐயா.
  இசை தமிழில் திருமணம் ஐயா!
  தேவாரம், திருவாசகம் என எல்லாமே தமிழ் மனம்!
  எங்கள் வீட்டு புதுமனை புகுவிழா கூட தமிழில்தான் நடந்தது அப்போது அனுபவிக்க
  முடியாததை இன்று ஆனந்தமாக அனுபவித்தேன்!

  இதை எழுதுவது உங்களிடமும் நம் நண்பர்களிடமும் சந்தேகம் கேட்கத்தான்.

  தமிழில் யாகம்!
  தமிழில் மந்திரம்!
  தமிழில் விழா !
  எல்லாமே தமிழ் !
  எனக்கு சரி, சம்மதேமே!

  தங்கள் கருத்து ?

  சங்கர்
  கரூர்

  ReplyDelete
 44. Dear Sir,

  In rasi chart 10th place sukran and sun.
  Sun is lagnapthi (simha lagnam)
  Sukran in his own house (rishbam).

  In navamsa chart sukran in kanni rasi (his nessa rasi).
  But budan & chandran in Thulam rassi and sukran in kanni rasi with parivatna yoga in navamsa chart.
  Is it (sukran) will give any thing because of parivatna yoga???

  ReplyDelete
 45. vanakkam ayya nan ungal puthiya manavan..

  ReplyDelete
 46. /////raju said...
  Dear Sir,
  Thanks for taking us to 'payilarangam'.
  2. what is the difference between 'giragha parvai' and 'giragha drishti'?
  g.raju///

  Planetary aspects are called graha drishti (பார்வை)

  ReplyDelete
 47. ////Anna said...
  பதிவுகள் அனைத்தும் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.
  ஆச்சிவந்தாச்சு பத்திரிக்கையில் தங்களின் கதை ஓன்றைப் படிதிதிருக்கிறேன்.நன்றி.////

  நானே சுவாரசியமான ஆள்தான். அதனால் என் எழுத்துக்கள் சுவாரசியமாக இருப்பதில் வியப்பில்லை.அப்படி எழுதவில்லை என்றால் இத்தனை பேர்களைப் படிக்கவைப்பது எப்படி சாத்தியமாகும்? நன்றி!

  ReplyDelete
 48. ////Saravana said...
  Dear Sir,
  could you please forward me the 8 & 9th lessons to my below email ID.
  I did not receive it.
  saravana221078@hotmail.com
  Thanks
  Saravana////

  சென்னைக்குப்போக சென்னை செல்லும் ரயில் ஏற வேண்டு. கொச்சிக்குப்போக கொச்சி செல்லும் ரயிலில் ஏறவேண்டும். மின்னஞ்சல் பாடம் வரவில்லை என்றால், அந்த ஐ.டி.க்கு எழுதுங்கள். அர்த்தமாயிந்தாண்டி சரவனாகாரு?

  ReplyDelete
 49. /////Bharathi said...
  குரு வணக்கம்,
  இரண்டு நாட்கள் வகுப்புக்கு வர இயலவில்லை
  த‌ங்க‌ளின் 8 நகைசுவையும் 8 தேன் கலவைகள் மட்டுமல்ல‌
  சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தது...
  (குரு ஒரு நகைசுவையை பதிவிடுகிறார் என்றால் அது முத்தாக தானே இருக்கும். 8

  நகைசுவையும் 8 முத்துக்க்ள்)
  "தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!" சென்று வந்ததை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குருவே
  அன்புடன் மாணவன்
  சிறுதுளி/////

  எப்போதும் சிறுதுளியாக வாருங்கள். அடை மழையாக (பாராட்டுக்களுடன்) வராதீர்கள்!:-)))

  ReplyDelete
 50. /////jadam said...
  good morning sir,
  Due to rain i am unable to attend the class on 9th November.
  Today I have attend a tamil function.
  Will write the subject to yr mail.
  Sankar
  Karur.////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 51. ////ananth said...
  3 நாள் இடைவெளிக்குப் பிறகு வகுப்பறைக்கு வருகிறேன். நல்லதொரு கருத்து பகிர்வு.

  பல காலமாகவே எனக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் ஆவதில்லை. அதாவது யாரும்

  அழைப்பதில்லை. அழைத்தாலும் நான் போவதில்லை.////

  கவலைப்படாதீர்கள். வகுப்பறை சார்பில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன். கலந்து கொண்டு கலக்குங்கள் (மேடையில்)

  ReplyDelete
 52. ////jadam said...
  ஐயா !
  இன்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவரது வீட்டில் 60 வது திருமணம் நடந்தது.
  மகிழ்ச்சியாக இருந்தது.
  தமிழில் திருமணம் ஐயா.
  இசை தமிழில் திருமணம் ஐயா!
  தேவாரம், திருவாசகம் என எல்லாமே தமிழ் மனம்!
  எங்கள் வீட்டு புதுமனை புகுவிழா கூட தமிழில்தான் நடந்தது அப்போது அனுபவிக்க
  முடியாததை இன்று ஆனந்தமாக அனுபவித்தேன்!
  இதை எழுதுவது உங்களிடமும் நம் நண்பர்களிடமும் சந்தேகம் கேட்கத்தான்.
  தமிழில் யாகம்!
  தமிழில் மந்திரம்!
  தமிழில் விழா !
  எல்லாமே தமிழ் !
  எனக்கு சரி, சம்மதேமே!
  தங்கள் கருத்து ?
  சங்கர்
  கரூர்////

  கேட்க நன்றாக இருக்கிறது! நடைமுறைக்கு எத்தனை தூரம் சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. முதலில் அவற்றின் மீது நம்பிக்கை வந்தாலே போதும். இன்றைய நேரமின்மை எனும் சூழ்நிலையில் அவற்றை ஒருவர் தன் இல்லத்தில் நடத்துவே பெரிய விஷயம்!

  ReplyDelete
 53. ///Rama said...
  Dear Sir,
  In rasi chart 10th place sukran and sun.
  Sun is lagnapthi (simha lagnam)
  Sukran in his own house (rishbam).
  In navamsa chart sukran in kanni rasi (his nessa rasi).
  But budan & chandran in Thulam rassi and sukran in kanni rasi with parivatna yoga in

  navamsa chart.
  Is it (sukran) will give any thing because of parivatna yoga???////

  இதுவரை சுமார் 270 பாடங்களை எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் முதலில் நன்றாகப் படித்து மனதில் ஏற்றுங்கள். எந்த சந்தேகமும் வராது!

  ReplyDelete
 54. ////rajesh said...
  vanakkam ayya nan ungal puthiya manavan../////

  தங்கள் வரவு நல்வரவாகுக! முதலில் பழைய பாடங்களை எல்லாம் படியுங்கள். சரியா?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com