மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.15

இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச் சொன்னார் அவர்?


இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம்  என்று எதற்காகச் சொன்னார் அவர்?

திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள்.

வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீ சுர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீ சுர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது. வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.

 வடகலை திருமண் காப்பு


தென்கலை திருமண் காப்பு
வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை
வைணவ சம்பிரதாயத்தில் வடகலை தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.
திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

தென்கலை திருமண்
பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் (நெற்றியில் பட்டை அடிப்பது parallel lines),


வடகலை திருமண்
வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்)

நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் சம்பிரதாயம்.
1. நெற்றி
2. நடு வயிறு (நாபி)
3. நடு மார்பு (மார்பு)
4. நடுகழுத்து (நெஞ்சு)
5. வலது மார்பு
6. வலது கை
7. வலது தோள்
8. இடது மார்பு
9. இடது கை
10. இடது தோள்
11. பின்புறம் அடிமுதுகு
12. பின்புறம் பிடரி
இவ்வாறு திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாள் நாமங்கள் இவை:
கேசவாய நம என்று நெற்றியிலும்
நாராயணாய நம என்று நாபியிலும்
மாதவாய நம என்று மார்பிலும்
கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
விஷ்ணவே நம என்று வலது மார்பிலும்
மதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்
த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
வாமனாய நம என்று இடது நாபியிலும்
ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்
பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்
தாமோதராய நம என்று பிடரியிலும்
திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.
========================================
தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதிய  பாடல் தொகுப்பில் உள்ள ஒரு முத்தான பாடல்:

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பச்சை மா மலை போல் மேனி  = பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்
பவளம் வாய் = பவளம் போன்ற சிவந்த திருவாயையும்
செம் கமலம் கண் = செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுமுடைய
அச்சுதா = அச்சுதனே!
அமரர்ஏறே = நித்யஸுரிகளுக்குத் தலைவனே!
ஆயர்தம் கொழுந்தே = இடையர் குலத்தில் தோன்றிய இளக்குமாரனே
என்னும் = என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற
இச்சுவை = இந்த அநுபவ ருசியை
தவிர = விட்டுவிடும்படி
யான்போய் = யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று
இந்திர லோகம் ஆளும் = (அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற
அச்சுவை = அந்த அநுபவருசியை
பெறினும் = அடைவதாயிருந்தாலும்
வேண்டேன் = (அதனை) விரும்பமாட்டேன்.
==================================================
இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம்  என்று எதற்காகச் சொன்னார் பெரியாழ்வார் ?
அரங்கநாதா, அனுதினமும் உன்னை தரித்து கிடைக்கின்ற மகிழ்ச்சியை விடப் பெரியது என்ன இருக்கிறது? ஆகவே எனக்கு இந்திர லோகத்தை ஆளுகின்ற பதவி கிடைத்தாலும் அது எனக்கு வேண்டாம். இதுவே (உன்னைத் தரிசித்து மகிழ்கின்ற பாக்கியம்) போதும் என்றார் பெரியாழ்வார்
-----------------------------
நேற்றைய பின்னூட்டத்தில் வாசகர் ஒருவர் வேண்டுகோள்
விடுத்திஒருந்தார். அதற்காக உடனடியாக இந்தப் பதிவு

/////Blogger R VASSUDEVAN said...
it is very good and also inspiring. pray that you come out like this on Vaishnavism
also.it will be a great service to the present generation.
R Vassudevan/////

உங்களின் விருப்பம் நாளையே நிறைவேற்றப்படும். ஆமாம். நாளை திருமண்ணின் சிறப்புப் பற்றிய கட்டுரை!///////


எப்படி இருக்கிறது சாமி பதிவு?. இந்திரலோகம் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று சொல்வோமா? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
===================================================
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.10.15

அவ்வப்போது எதை அணிய வேண்டும்?அவ்வப்போது எதை அணிய வேண்டும்?

அவ்வப்போது எதை அணிய வேண்டும்?  வான்ஹுசைன் சட்டை, கே.ஜி டெனிம் பேன்ட். 4 சவரன் தங்கத்தில் கைக்கு ஒரு பிரேஸ்லெட், எட்டாயிரம் ரூபாயில் கைக்கு ஒரு வெளிநாட்டுக் கடிகாரம், என்று உங்களுக்கென்று தனியாக ஒரு பட்டியல் வைத்திருப்பீர்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு, திருஞானசம்பந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள்!

நெற்றியில் அணிந்து கொள்ளும் திறுநீற்றைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

" திருநீறு " இந்த உயிருக்கு எப்படிப் பயன்படுகிறது என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார்.

சைவத் திருவேடங்களில் திருநீறு உருத்திராக்கம் சடாமுடி ஆகியன இம்மூன்றும்  மிகவும் உன்னதமாக போற்றப்படுகின்றன

 இறைவனே திருநீற்றினை மேனி ( உடல் முழுவதும்)  முழுவதும் பூசி விரும்பி அணிந்துள்ள குறிப்புகள் புராணங்களிலும் உபநிடதங்களிலும் ஆகமங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்துள்ளன

 திருநீற்றின் ஆற்றலால் திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில்  வென்றது வரலாற்றுச் சான்றக உள்ளது

 அடியார் பெருமக்கள் திருநீற்றினை இறைவன் அருளிய பெரும் செல்வமாக ( சொத்தாக)  போற்றி அணிய வேண்டும்

 கையிருப்பில் திருநீற்றுப்பை வைத்துக்கொண்டு அவ்வப்போது திருவைந்தெழுத்து ( சிவாயநம)  என  நினைந்து அணிய வேண்டும்

 திருநீற்றின் மகிமை முழுவதும் அறியாததாலேயே அடியார் பெருமக்கள் கூட திருநீற்றினை நிறைய அணியா நிலை உள்ளது

"திருஞானசம்பந்தர் வாக்கில்”  விபூதியின் பெருமை பற்றிச் சொன்னதை விரிவாகப் பார்ப்போம்

1: மந்திரம் ஆவது நீறு
2: வானவர்கள் அணிவது நீறு
3: அழகு தருவது நீறு
4: வணங்கப்படுவது நீறு
5: வேத சிவ  ஆகமங்களில் புகழ்ந்து கூறப்படுவது நீறு
6: கொடிய துயர்களை ( துன்பங்களை) நீக்க கூடியது நீறு
7: சிவஞானம் தருவது நீறு
8: அறியாமையை போக்குவது நீறு
9: ஓதத் தக்கது நீறு
10: உண்மையாய் நிலைபெற்றிருப்பது நீறு
11: முத்தி தருவது நீறு
12: முனிவர் அணிவது நீறு
13: சத்தியமாவது நீறு
14: தக்கோர் புகழ்வது நீறு
15: இறைவனிடம் பக்தியை ஏற்படுத்துவது நீறு
16: போற்றிப் பரவ இனியது நீறு
17: எண் வகைச் ( அட்டமா சித்திகளை)  சித்திகளை அருளுவது நீறு
18: காண இனியது நீறு
19: கவர்ச்சியை ( தேஜஸ் - ஒளியை)  கொடுப்பது நீறு
20: போற்றி அணிந்து கொள்வோருக்கு பெருமைகள் கொடுப்பது நீறு
21: கொடிய மரணத்தை தவிர்ப்பது நீறு
22: அறிவை  ( ஞானத்தை) தருவது நீறு
23: உயர்வை ( மேலான நிலையை)  அளிப்பது நீறு
24: பூசிக் கொள்ள இனியது நீறு
25: புண்ணியம் தருவது நீறு
26: அதன் ( திருநீற்றின்)  பெருமை பேச இனியது நீறு
27: பெருந்தவப் புரிவோருக்கு உலகியல் ஆசை கெடுப்பது நீறு
28: முத்தியாகிய ( திருவடிப்பேறு, முக்திப்பேறு)  நிலையான பேரின்பம் நல்குவது நீறு
29: உலகோரால் ( உலகியல் வாழ்க்கை வாழும்)  புகழப்படுவது நீறு
30: செல்வங்கள் ( நிலையான செல்வம்)  ஆவது நீறு
31 : உலகியல் துன்பம் நீக்குவது நீறு
32: மன வருத்தங்களை  தணிப்பது நீறு
33: வானுலகம் அளிப்பது நீறு
34: பொருத்தி ( உடல் முழுவதும்)  அமைவது நீறு
35: புண்ணியர்கள் பூசுவது  நீறு
36: முப்புரங்களை அழித்தது நீறு
37: இம்மைக்கும் மறுமைக்கும் துணையாய் இருப்பது நீறு
38: அதன் ( திருநீற்றின் தன்மைகளை நூலில் பார்த்து உணர்வது)  பெருமைகளை பயிலப்படுவது நீறு
39: பாக்கியமாவது நீறு
40: அறியாமையால் மூழ்கும் துயிலை தடுப்பது நீறு
41: மும்மலங்களை ( ஆணவம்,கன்மம்,மாயை)  அகற்றி சுத்தம் செய்வது நீறு
42: சிவ பக்தனான இராவணன் விரும்பி  அணிவது நீறு
43: அதன் ( திருநீற்றின்)  பெருமைகளை எண்ணி இன்புறத் தகுவது நீறு
44: பாரசக்தி ( பார்வதி அம்மை அம்சம்)  வடிவமானது நீறு
45: எல்லா பாவங்களையும் ( பஞ்ச மகா பாவங்கள்)  நீக்குவது நீறு
46: தராவணமாவது ( அசுரர்கள் விரும்பி அணியும்)  (தரா -சங்கு) நீறு
47:தத்துவங்களாவது ( 36 தத்துவங்கள் மற்றும் 60 தாத்வீகங்கள்)  நீறு
48: திருமாலும் நான்முகனும் அறியாதது நீறு
49: மேலுறையும் ( கவசமாக)  தேவர்கள் காப்பாக மேல் அணிவது நீறு
50: பிறவிப் பிணி ( அறியாமை என்ற இருள்)  அடையும் உடலிடர் தீர்த்துப் பிறவி அறுப்பது நீறு
51 : புத்தரும் சமணரும் காண அவர்கள் கண்களை திகைக்கச்செய்வது  நீறு
52: அதை  திருவைந்தெழுத்தை ( சிவாயநம) கருதி  தியானிக்க இனியது  நீறு
53: எண் ( எட்டு திசைகளிலும்)  திசைகளிலும் சிவமே பரம்பொருள் என வாழும் மெய்ஞானிகள் ஏற்றிப் போற்றுவது நீறு
54: அண்டமெல்லாம் வாழும் சிவனடியார்கள் பணிந்து போற்றுவது  நீறு
55: பாண்டியனின் தீப்பிணியை உலகோர் முன் திருநீற்றின் பெருமைகளை பாட அவன் பிணி தீர்த்தது நீறு

இவ்வாறு திருநீற்றின் பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆகவே திருநீறு நமக்கெல்லாம் கவசம் போல் உடலில் உள்ள உயிரை ஈடேற்றும் ஒரு சிறந்த மருந்தாகும்

இந்தப் பிறவி என்னும் நோயை தீர்க்க வல்லமை வாய்ந்த மாமருந்தாகும் திருநீறு  எனவே சிவனடியார்கள் எப்போதும் திருநீற்றை பூசிக்கொண்டே இருக்க வேண்டும்

திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------
திருஞான சம்பந்தர் அருளிய மூலப் பாடல் உங்களுக்காகக் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருஆலவாய் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 66வது திருப்பதிகம்)
2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 2.66.1

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.2

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.3

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.4

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.5

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.6

எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே. 2.66.7

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே. 2.66.8

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே. 2.66.9

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே. 2.66.10

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 2.66.11

       - திருச்சிற்றம்பலம் -
===========================================================
இன்றைய பக்தி மலர் எப்படி உள்ளது?
ஒரு வரி சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

29.10.15

ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்! நம்ம ஊருக்கு எப்போது வருமாம்? கேட்டுச் சொல்லுங்கள் சாமிகளா!


ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்! நம்ம ஊருக்கு எப்போது வருமாம்? கேட்டுச் சொல்லுங்கள் சாமிகளா!

ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீர்! – ஆந்திராவில் அமோகம்.!

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் கிராமங்களின் நிலை நகரத்திற்கு இணையாக மாறிக் கொண்டு வருகிறது.
இதையொட்டி பல்வேறு கிராம மக்களுக்கு, துாய்மையான குடிநீர்
கிடைக்க கிராமங்கள் தோறும், ஏ.டி.டபிள்யூ., குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்
பட்டுள்ளது.

கடந்த, 2012 ஏப்ரல் 7ல், ஆந்திர மாநிலம், வரங்கல் மாவட்டத்தின் வெங்கடாபுரத்தில் இத்திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப் பட்டது.இத்திட்டம்

பெரும் வர்வேற்பைப் பெற்றதால், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா உள்பட, 351 கிராமங்களில் இதை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

‘பாலவிகாஸ்’ என்ற நிறுவனம் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.’துாய்மை குடிநீர்’ திட்டத்தின் கீழ்
702 ஏ.டி.டபிள்யூ., ப்ளான்டை இந்நிறுவனம் கிராமங்கள் தோறும்
ஏற்படுத்தி உள்ளது.இந்த இயந்திரங்களை அமைக்க கிராம
மக்களிடமிருந்து ஒரு குடும்பத்திற்கு 1,000 ரூபாய் வசூலித்து மீதி
தொகையை பாலவிகாஸ் நிறுவனம் ஏற்று ஒவ்வொரு கிராமத்திலும்
இரண்டு ஏ.டி.டபிள்யூ., இயந்திரங்களை ஏற்படுத்தியது.

ஆயிரம் ரூபாய் அளித்த குடும்பத்தினருக்கு அவர்களின் பெயரில்
ஒரு, ஏ.டி.டபிள்யூ., கார்டு வழங்கப்பட்டது.அந்த கார்டை இயந்திரத்தில் சொருகி துாய்மையான குடிநீர் பெறலாம். ஒரு கார்டு மூலம் ஒரு ரூபாய் அளித்து நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் குடிநீர் வரை பெற்றுக் கொள்ளலாம்.

 காலை, 6:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை குடிநீர் வரும்படி
இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிஷனல் தேவைக்கு நான்கு
ரூபாய் செலுத்தி 20 லிட்டர் குடிநீர் பெறலாம்.

இதற்காக, ஆண்டுக்கு 360 ரூபாய் மட்டுமே இந்நிறுவனம் வசூலிக்கிறது.
இந்த கார்டுகளை ஆண்டுக்கு ஒருமுறை, ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள
வேண்டும். அத்துடன் எவ்வளவு தண்ணீர் பெற்றுள்ளனர், அதற்குண்டான தொகை அனைத்தையும், அந்த இயந்திரத்தில் கார்டு செலுத்தி தெரிந்து
கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------
அங்கே கிடைப்பதுபோல நம் ஊருக்கும் நல்ல குடிநீர் வந்தால்
எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.? 20 லிட்டர் தண்ணீரின் விலை
ஒரு ரூபாய்தானாம் சாமி. இங்கே (கோவையில்) 20 வாட்டர் கேனின்
விலை ரூ.40:00

அப்பனே குரு பகவானே கொஞ்சம் கண் திறந்து பார்த்து தமிழ்நாட்டிற்கும் இந்த வசதி கிடைக்க வழி செய்யப்பா சாமி!

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.10.15

புற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்?


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படல் பெரிதாகத் தெரியும். நீங்கள் பாரப்பதற்கு வசதியாக இருக்கும்
---------------------------------------------------------------------
புற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்?

பசு காப்பாற்றியதா அல்லது காப்பாற்றவில்லையா? விபரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்
---------------------------------------------------------------------------------------------
புற்றுநோய்லிருந்து என்னை காப்பாற்றிய பசு :
written by Amit Vaidhya
________________________________________
நான் அமித் வைத்யா. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து பொருளாதரத்தில் டாக்டர் பட்டம் பெற்று என்னுடைய
27 வயதிலேயே தொழில் ரீதியில் மிக உயர்த நிலையை அடைந்ததின் மூலம் பொருளாதாரத்தில் உயர்தவன் .சுறுசுறுப்பான வாழ்க்கையானாலும் ஆரோக்யமான வாழ்க்கை அல்ல. வயதுக்கு மீறிய சாதனை செய்தவன் .

"என்னுடைய கனவுகளெல்லாம் என்னுடைய தந்தை இறந்த சில மாதங்களுக்கு பின்னர் எனக்கு முதல் நிலை புற்றுநோய் தாக்கி உள்ளது என்று கண்டுபிடித்ததற்கு பின்னால் தகர்ந்தது". நியூயார்க்கில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.

சிலமாதம் ஓரளவு உடல் நிலை சரியாக இருந்தது. ஆனால் தீடீர் என்று என்னுடைய அம்மாவுக்கும் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக சில நாட்களில் உயிர் இழந்தார். அதற்கு பிறகு எனக்கு மீண்டும் புற்றுநோய் பரவ ஆரமித்தது. குடலில் பரவிய அது வேகமாக என்னுடைய நுரையீரலையும் பதம் பார்த்தது.

ஒரே பிள்ளையான நான் தனிமையாக உணர்ந்தேன்.

மருந்துகளையும் மாத்திரைகளையும் என்னுடைய உடல் ஏற்க மறுக்கிறது என்றும் நான் இன்னும் சிறுது நாட்களில் இறந்து விடுவேன் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். முதலில் அச்சப்பட்ட நான் பின்பு என்னுடைய பெற்றோர்களை பார்க்க போகிறோம் என்று தேற்றிக்கொண்டேன். என்னுடைய மரணதிற்கான ஏற்பாடுகளை நானே செய்தேன்.

இறப்பதற்கு முன் இந்தியாவில் உள்ள என்னுடைய உறவினர்களை சந்திக்கும் ஆவலில் இந்தியாவிற்கு கிளம்பினேன். உடல் இருக்கும் நிலையில் இந்திய மண்ணில் என்னுடைய கால் படுமா என்று தெரியவில்லை. வந்து சேர்ந்தேன்.

உறவினர்கள் என்னுடைய நிலைமையை நினைத்து வருந்தினார்கள். அவர்களில் ஒருவர் மாற்று மருத்துவம் ஒன்று புற்றுநோய்க்கு குஜராத்தில் உள்ளதாகவும் செலவே இல்லாததாகவும் சொன்னார்.

இறப்பின் விளிம்பில் இருக்கும் நான் சரி பார்போம் என்று அங்கு சென்றேன். யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டது. வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசும் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் அடங்கிய பஞ்சகவ்யம் கொடுக்கப்பட்டது..கீமோ தேரோபியில் அத்தனை சுவையையும் இழந்த நான் நம்பிக்கையோடு அதை அருந்தினேன். சிலநாட்களில் என்னுடைய புற்றுநோய் பரவாமல் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொன்னது.

40 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை தொடர முடிவு செய்தேன். அங்கே ஒரு விவசாயி எனக்கு தன்னுடைய வீட்டில் சிறிய அறையைக் கொடுத்தார். கூடவே அன்பையும் கொடுத்தார். சில நாட்களில் என்னுடைய புற்றுநோய் குறைந்து இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. நான் சிறிது நடக்க துவங்கினேன் பின்னர் நடைபயணம் மேற்கொள்ள முடிந்தது, நடந்த நான் ஓடத்துவங்கினேன், என்னுடைய இருண்ட வாழ்கையில் மகிழ்ச்சியை உணரத் துவங்கினேன். 18 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் எனக்கு புற்றுநோய் முழுவதுமாக குணமாகியது.

மரணத்திற்கான ஏற்பாடுகளை செய்த நான் வாழ்வதற்காக ஏற்பாடுகளை துவங்கினேன்.

தற்போது "ஹீலிங் வைத்யா" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் பாதிக்க பட்டவர்களுக்காக பணியாற்றிக் கொண்டிருகின்றேன். நான் மீண்டும் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. எனக்கு இந்தியா நிறையக் கொடுத்துள்ளதை உணர்ந்துள்ளேன். அதே நேரத்தில் இந்திய மக்கள் இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதையும் பார்க்கிறேன்..

தற்போது புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.....
புனித புற்றுநோய் --- புற்றுநோயிலிருந்து என்னை காப்பாற்றிய பசு
மேலும் படிக்க : www.healingvaidya.org
http://www.live4todayamit.com/press.html.  
============================================
மேலதிகத் தகவலுக்கு இதையும் க்ளிக்கிப் படியுங்கள்:
http://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_panchakavya.html
=================================================================
Please share this msg. Maybe useful to someone

அன்புடன்,
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.10.15

Humour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும் என்ன வித்தியாசம்?


Humour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும்  என்ன வித்தியாசம்?

முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும் என்ன வித்தியாசம்? விளக்கிச் சொல்கிறார் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. காணொளி உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

-------------------------------------------------------------------------------------------------
2


என்ன செய்தார் கஸ்டமர் கேர் வாடிக்கையாளர்?

கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.

தனது வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது.

அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில்
சென்றார். அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான
எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே
அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.

"வணக்கம்" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்.
பின் குரல் தொடர்ந்தது...

"தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...ஃபார் இங்க்லீஸ் பிரஸ் நம்பர் 2..." என்று சொன்னது...

என்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1 ஐ அழுத்தினார்.

இப்பொழுது

"தெரிந்தவர் என்றால் எண் 1 ஐ அழுத்தவும் தெரியாதவர் என்றால்
எண் 2 ஐ அழுத்தவும் கடன் வாங்க வந்தவர் என்றால் எண் 3 ஐ
அழுத்தவும் கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4 ஐ அழுத்தவும்
பேசியே அறுப்பவர் என்றால் எண் 5 ஐ அழுத்தவும் நண்பர் என்றால்
எண் 6 ஐ அழுத்தவும் சொந்தக்காரர் என்றால் எண் 7 ஐ அழுத்தவும்
கூட்டமாய் வந்திருந்தால் எண் 8 ஐ அழுத்தவும் பால், பேப்பர்,
தபால்காரர் என்றால் எண் 9 ஐ அழுத்தவும் மீண்டும் முதலில்
இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்" என்ற அறிவிப்பு வந்தது.

ஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில்
வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2 ஐ அழுத்தினார்.

மீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...

"வாருங்கள் வாருங்கள்"
"வீட்டின் முதலாளி சிறிது பணி காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்" என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.

"சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி!
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!"

என்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது....
கஸ்டமர் கேர் மனிதர் வெறுத்துப்போய் விட்டார்.

பாடல் முடியும் முன்பே எண் 2 ஐ அழுத்தினார்.
"அன்பரே! நீங்கள் முழுப்பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.

"நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்"

மனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக
இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.
பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2 ஐ அழுத்தினார்.

"மன்னிக்கவும். இன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க
இயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார். ஆனால் உங்களால்
திரும்பி போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டு
மென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும்
என அறிவித்தது.

தன்னைத்தானே நொந்து கொண்டவராய்...

"உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் அவர் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது...

தன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி
வரை 'ஸ்டார்ட்' ஆகவேயில்லை...வேக வேகமாக தள்ளிக்கொண்டு,
அந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே தன் வீடு நோக்கி கிளம்பினார்.

எங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது....

"எங்களுக்கும் காலம் வரும்".
(எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்
உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளும்போது?)
----------------------------------------------------------------
கஸ்டமர் கேரில் சிக்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.10.15

Quiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி!


Quiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி!

26.10.2015

இந்த 100 ஆவது புதிரில் ஒரு 50 பேர்களாவது கலந்து கொண்டிருக்க வேண்டாமா? கலந்து கொண்டது 28 பேர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.


கொடுக்கப்பெற்றிருந்த ஜாதகம் இந்கிலாந்து ராணி எலிசபெத் 2 அவர்களின் ஜாதகம். அதைக் கண்டுபிடித்துக் கூறியவர்கள் 20 பேர்கள் மட்டுமே அவர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள். ஜாதகத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. அனைவரும் பல விதங்களில் பட்டியலிட்டுள்ளார்கள்.
அன்பர் Chandrasekaran Suryanarayana அவர்கள் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். அவருக்கு எனது விசேடமான பாராட்டுக்கள். அவற்றை எல்லாம் படித்துப் பாருங்கள். கீழே கொடுத்துள்ளேன். நானும் அவற்றை மீண்டும் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

லக்கினத்திற்கு 7ல் அல்லது சந்திர லக்கினத்திற்கு 7ல் செவ்வாய் இருந்தால் அது களத்திர தோஷத்தை உண்டாக்கும். ஆனால் குரு அங்கே உடனிருந்து 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் தோஷத்தைக் கட்டுப்படுத்தி விட்டது. அதைப் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் ஒன்றை மட்டும் யாரும் குறிப்பிடவில்லை: அது. செவ்வாய் சந்திர ராசிக்கு யோக காரகன் ஆகவே அவன் தோஷத்தைத் தரவில்லை. யோகக்காரகன் கெடுதலைச் செய்வானா என்ன? ஆகவே செய்யவில்லை

அன்புடன்
வாத்தியார்
========================================
போட்டியில் வெற்றி பெற்ற அன்பர்களின் பதில்கள் - உங்கள் பார்வைக்கு!
1
/////Blogger sundinesh1 said...
ஜாதகத்தின் சிறப்புகள் :
ஏழாம் அதிபதி ஏழில், குருவின் பார்வை
செவ்வாய் உச்சம் , சூரியன் உச்சம் , சந்திரன் ஆட்சி
செவ்வாய் சனி பரிவர்த்தனை , சனி 11'இல்
குரு நீச்சபங்கம் , குரு சந்திர யோகம் , குரு மங்கள யோகம்
சுக்கிரன் இரண்டில் - நல்ல குடும்பம் , காதல் திருமண வாய்ப்பு
அஷ்டலக்ஷ்மி யோகம் ( குரு கேந்திரம், ராஹு 6'இல்)
சந்திரன் ஆட்சி பலத்தில் உள்ளது மற்றும் குருவின் பார்வையுடன் இருக்கிறது, 2'ம் அதிபதி 11'இல் , 2'இல் சுக்கிரன். நல்ல திருமண வாழ்க்கை . திருமணத்தில் சிக்கல் இருந்திருக்கலாம்
this is the horoscope of Elizabeth 11 , born April 21, 1926 2:40 AM
Friday, October 23, 2015 7:41:00 AM///////
-------------------------------------------
2
/////Blogger Ravichandran said...
Ayya,
1, This is Elizabeth II horoscope
2. Specialites of this horoscope are:
Sun is Uccham
Guru and Chevvai are in Neecha Panga Rajayogam
Shani and Chevvai Parivarthanai
Rahu is 6th house(good place for Rahu)
Bhudhan is neecham
Chandran is in own house
Yogakaran Sukran is in second house(wealth, family house)
Guru/Chevvai and Chandran aspecting each other.
Lagna owner is looking own house(shani)
3. Kalathra dosam got cancelled, because Guru and Chandran aspecting each other.
Your Student,
Trichy Ravi
Friday, October 23, 2015 10:00:00 AM /////
-----------------------------------------------
3
/////Blogger katu raj said...
1) 21/april/1926 elizabeth II
2) Lagna,11th lord in parivarthna yoga
sun, mars are ucham
3) 7th lord moon in his own place, kalathira karagan Venus in his friend's place, Jupiter in neesapanga raja yoga, so kolathra thosam not work.
Friday, October 23, 2015 10:07:00 AM /////
-------------------------------------------
4
/////Blogger bala said...
Vankkam Iyya,
100 pathivuthu migavum arputhamanathu. Mikka nandri :)
Kelvikaana badhilgal :
1. Intha jaathagar - Elizabeth II - Elizabeth Alexandra Mary (Queen of UK) avargaludayathu - 21 April 1926
Wiki link : https://en.wikipedia.org/wiki/Elizabeth_II
(Raaja vin paarvai raniyin pakkam - Nammaduya 100 aavathu pathivum Elizabeth raniku urithaaki ullirgal) :) :)
2. Jaathagathin sirapugal :
a) Lagnathipathium, 11 aam athipathium parivarthanai - Less efforts, high beneficial
b) Lagnathil - Guru mangala yogam - (guruvum, sevvaiyum sernthu ullathu) - neecha banga raja yoga amaipu
c) Jathagathil - Guru chandra yogam, sasi mangala yogamum ullathu (ulgathil ulla pengalil sirantha pennaga, anaivarukum theriyum prabala nabaraga ulagil vaazhpavar)
d) Laganthai 7aam athipathi paarvai - penmani migavum azhaganavar - Elizabeth azhagirku solla venduma :) :)
e) 6il raagu - neenda aayul + pala sandaigalai paarthavar
f) 2il sukkran - Yogathipathi sukkaran magara lagnathirku - (8aam idathai paarkirar - neenda ayul+theerga sumangali aavar)
g) 3il neecha budhan - 9aam idathirku neradi paarvai - bagyasthanam strong aaga ullathu - (9aam veetirku guru+budhan paarvai)
f) 8aam idathirku - Laganthipathi/2aam athipathi(sani)+(sevai)+sukran paarvai ullathu. - Neenda aayuludan ullar.
g) astamathipathi suryan ucham + Thanthaiku uriya graham aanathal - thanthai moolamaga arasu aalum urimaium kidaithathu
3. Kalathira dhosham :
Kalathira dhosam atipatu ponathu. Sevai yin 7/8aam parvai - 7 aam idathirku ullathu+ 8aam idathirku ullathu - Lagnathil ulla guruvin parvaiyum 7aam idathirku+ sevaium guruvum sernthu ullathal + sevaiyai sani than 3aam paarvaiyinal lagnathayum, lagnathil ulla guru/sevaiyayum than katupaatil veithu ullar.
Enaku therinthathai koori ullen... veru yogangal irupathi vaathiyar koorungal ... katru kolgiren.
Nandri,
Bala
Friday, October 23, 2015 11:27:00 AM /////
----------------------------------------------
5
//////Blogger kmr.krishnan said...
1.இங்கிலாந்து மகாராணி எலிசபத் 2 அவர்களின் ஜாதகம்.21/22 ஏப்ரல்1926ல் பிறந்தவர்கள்.
2.சூரியன் உச்சம், செவ்வாய் உச்சம், சந்திரன் ஆட்சி,செவ்வாய் கேந்திரத்தில்
உச்சம்(ருசக யோகம்) கஜ கேசரி யோகம், குரு, புதன் நீச பங்கம். ராகு ஆறில் இருப்பது ஆகியவை ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்.
3.களத்திர தோஷம் செல்லுபடியாகவில்லை.குருவின் பார்வை சந்திரனுக்கு
இருப்பதால் மண வாழ்க்கை நன்கு அமைந்தது.
Friday, October 23, 2015 12:00:00 PM /////
------------------------------------------
6
//////Blogger venkatesh r said...
"Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்?"
100 வது புதிர் போட்டிக்கு நல்வாழ்த்துக்கள்.
விடைகள் :
1. யாருடைய ஜாதகம் இது?
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்.
Elizabeth II (Elizabeth Alexandra Mary; born 21 April 1926
[a]) is, and has been from her accession in 1952, Queen of the United Kingdom, Canada, Australia, and New Zealand, and Head of the Commonwealth. She is also Queen of 12 countries that have become independent since her accession: Jamaica, Barbados, the Bahamas, Grenada, Papua New Guinea, Solomon Islands, Tuvalu, Saint Lucia, Saint Vincent and the Grenadines, Belize, Antigua and Barbuda, and Saint Kitts and Nevis.
[b]Elizabeth was born in London as the elder daughter of the Duke and Duchess of York, later King George VI and Queen Elizabeth, and educated privately at home. Her father acceded to the throne on the abdication of his brother Edward VIII in 1936, from which time she was the heir presumptive. She began to undertake public duties during the Second World War, in which she served in the Auxiliary Territorial Service. In 1947, she married Philip, Duke of Edinburgh, with whom she has four children: Charles, Anne, Andrew, and Edward.
[c] She is the world's oldest reigning monarch as well as Britain's longest-lived. In 2015, she surpassed the reign of her great-great-grandmother, Victoria, and became the longest-reigning British head of state and the longest-reigning queen regnant in history.
2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் : ருசக யோகம், குரு மங்கள யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல ராஜ யோகங்கள் உள்ளன. செவ்வாய் மற்றும் சூரியன் உச்சம், செவ்வாய் மற்றும் சனி பரிவர்த்தனை, யோககாரகன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் உள்ளது போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா?
அல்லது ஆகவில்லையா? என்ன காரணம்?
செல்லுபடியாகவில்லை. களத்திராதிபதி சந்திரன் அம்சத்தில் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலும், குருவின் பார்வை அந்த தோசத்தை நீக்கியது. களத்திரகாரகன் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் இருந்து தன்னுடைய தசாவில் நல்ல கணவன் மற்றும் குடும்ப பாக்கியத்தை வழங்கினார்.
Friday, October 23, 2015 1:01:00 PM //////
-------------------------------------------
7
//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
1. இது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் அவர்களின் ஜாதகம்.
2. லக்னத்தில் குரு, லக்னத்தை சந்திரன் பார்கிறார், குரு மங்கள யோகம், சசி மங்கள யோகம், கஜ கேசரி யோகம், ருச்சக யோகம், லக்னாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனை யோகம், பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கும் அமைப்பு...
3. களத்திர தோஷம் செல்லுபடியாகவில்லை. லக்னதிர்க்கு 7மிடத்தை குருவும், 8மிடத்தை சுக்கிரனும் பார்த்தார்கள். சந்திரனுக்கு 7மிடத்தில் குரு அமர்ந்தும், 8மிடத்தில் சுக்கிரனும் அமர்ந்து நல்லது செய்தார்கள்.
நன்றி
செல்வம்
Friday, October 23, 2015 2:25:00 PM /////
------------------------------------------
8
/////Blogger asbvsri said...
Quiz Answer 100:
ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
• ஜாதகர் ராணி இரண்டாம் எலிசபெத். 21 ஏப்ரல் மாதம் 1926 ல் பிறந்தவர்.
• ஜாதகத்தில் லக்னாதிபதி சனியும், நான்கு மற்றும் 11 ஆம் வீட்டின் அதிபதியான செவ்வாய் பரிமாற்றம் பெற்றுள்ளார்கள்.
• லக்னாதிபதி ஆயுள்காரகன் லக்னத்தை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார்.
• யோககாரகன் சுக்ரன் 2 ஆம் வீட்டில், தன ஸ்தானத்தில்.
• எட்டாம் அதிபதி சூரியன் நான்கில் உச்சம்.
• 12 க்கும் 3 க்கும் அதிபதி குரு லக்னத்தில் நீச்சம்.
• 1952 ல் யோக காரகன் சுக்ரன் அவருடைய தசையில் செவ்வாயின் புக்தியில் ராணியாக்கினார்.
• ஏழாம் அதிபதி சந்த்ரன் ஏழில் ஆட்சி. உச்ச செவ்வாயும் நீச்ச குருவும் பார்க்கிறார்கள். நவாம்சத்தில் கேதுவுடன், ராஹு மற்றும் சூரியன் பார்வையில் தோஷம் பெற்றுள்ளார். ஆனால் குருவின் பார்வையால் தோஷம் செல்லுபடியாகவில்லை.
K R Ananthakrishnan, Chennai
Friday, October 23, 2015 5:18:00 PM//////
-----------------------------------------
9
/////Blogger Rajam Anand said...
Dear Guruji
I. This person was born on 21/4/1926 and it is Queen Elizabeh II – Queen of England
Lagna is Capricorn and the Yogakaraka Venus is in the 2nd house from Lagna.
1. Debilitated planets: Jupiter in Capricorn and Mercury in Pisces
2. Exalted planets: Sun in Aries and Mars in Capricorn and thus forming Neecha Panga Raja Yoga in Capricorn the Ascendant
3. Ruling planets: Moon in Cancer
II. Yogas
1. Gaja Kesari yoga in kendra from both ascendant and moon;
2. Neesa panga Raja Yoga
3. Chandra Mangala Yoga
III. Marriage and Romance
i) Even though Jupiter is debilitated but it forms Neecha Panga Raja Yoga with exalted Mars.
ii) Seventh house is occupied by Moon which is his own house and the Kalasthirakara Venus is in 2nd house.
iii) Yogakaraka for Capricorn Ascendant is Venus. So therefore Venus in a very strong position.
All these point to a strong marriage.
Thank you for extending the deadline to Mondays.
Kind Regards
Rajam Anand
Friday, October 23, 2015 7:12:00 PM/////
----------------------------------------
10
////Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. The horoscope belongs to Queen Elizabeth II, Great Britain. Date of birth 21st April 1926.
2. Horoscope has many Rajayogas. Lagna has exalted mars and debiliated jupiter. Neecha banga Raja Yoga. Mars and Saturn exchange yoga and also aspecting lagna. Sun exalted. Moon in own place. Rahu Kethu in good position. Ruchaka yoga is also in exalted.
3. 7th place moon in own place. 2nd lord in 11th saturn. Debiliated jupiter aspects moon. However jupiter played good role since it is in neecha banga raja yoga. Hence the manglik was cancelled.
Thanking you sir.
C. Jeevanantham
Friday, October 23, 2015 7:53:00 PM//////
----------------------------------------
11
/////Blogger vanikumaran said...
Queen Elizabeth II
Born: April 21, 1926 (age 89), Mayfair, London, United Kingdom
Spouse: Prince Philip, Duke of Edinburgh (m. 1947)
Children: Charles, Prince of Wales, Anne, Princess Royal, Prince Edward, Earl of Wessex, Prince Andrew, Duke of York
Parents: Queen Elizabeth The Queen Mother, George VI
Grandchildren: Prince William, Duke of Cambridge, Prince Harry, more
Friday, October 23, 2015 8:36:00 PM ////////

பாதிக்கிணறுதானே தாண்டியுள்ளீர்கள்? ஜாதகத்தின் சிறப்பு மற்றும் களத்திர தோஷம் பற்றி எல்லாம் எழுதவில்லையே நீங்கள்
----------------------------------------------------
12
/////OpenID guest2015 said...
QUEEN ELIZABETH -2
APRIL 21 1926
RAJA GRAHANGAL SUN EXALTATION / MOON OWN HOUSE
Neecha jupiter with exalted mars gives Neecha bhanga raja yogam.
venus yogakaraka in 2nd house jupiter aspecting 7th house makes the family life strong.
9th lord mercury aspects its own house.
thanks
sree
Saturday, October 24, 2015 1:16:00 PM//////
-----------------------------------------------
13
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் QUIZ 100:
1. இங்கிலாந்து எலிசபத்து மாகாராணி -2 அவர்களின் ஜாதகம்.
21 ஏப்ரல் 1926 ஆம் தேதி புதன் கிழமை காலை 2.40:00 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த மாகாராணிக்கு மகர லக்கினம். யோகக்காரர்கள் : புதன், சுக்கிரன். மகர லக்கினம் (32 பரல்) லக்கினாதிபதி சனி 11ம் வீட்டில்.
2. ஜாதகத்தில் உள்ள சிறப்புகள் :
1. இவர் புதன் மகா தசையில் பிறந்தார். பாக்கியஸ்தான 9ம் வீட்டு அதிபதி புதன். புதன் நீசம் அடைந்தாலும், நீச பங்கம் ஆகிறது . 9ம் வீடு தந்தைக்கான வீடு. அப்பொழுது அவருடைய தந்தை இங்கிலாந்தில் ராஜாவாக இருந்தார். பிறக்கும் பொழுதே ராஜ வீட்டு கன்னுகுட்டி .
2. லக்கினாதிபதி சனி (5 பரல்) 11ம் வீட்டில்.- 39 பரல்கள். குவிந்து கிடக்கும் செல்வங்கள் ராணியாக இருப்பதற்கு.
3. லக்கினத்தில் செவ்வாய் (5 பரல்) உச்சம் - அரசாளும் திறமை . இந்த உலகில் பல நாடுகளுக்கு ராணியாக இருந்தார். லக்கினம் (32 பரல்) லக்கினம் பலமாக உள்ளது . (In 2012 Queen Elizabeth II celebrated her Diamond Jubilee, having spent 60 years on the throne. This makes The Queen the second longest reigning British monarch, after her great-great-grandmother, Queen Victoria)
4. 2ம் வீட்டில் சுக்கிரன் (5 பரல்) இருந்தால் சுகமாக வாழ்பவர்கள் . அவர் 10ம் வீட்டிற்கும் அதிபதி. தங்கம், வைரம், வைடூரியம் , ரத்தினங்கள் போன்ற செல்வங்கள் குவிந்தன. விட்டு வைக்காமல் இந்தியாவிலிருந்து கோகினூர் வைரத்தையும் எடுத்து சென்றனர் . 2ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அதிகமான உறவுகள் இருக்கும்.
5. சூரியன் உச்சம். ராஜ கிரகம் உச்சமாக இருப்பதால் இவருடைய புகழ் உலகு எங்கிலும் பரவிகிடைக்கிறது.
6. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 7ம் வீட்டில் இருப்பதால் அழகு மிகுந்த மகாராணி என்று எல்லோராலும் பாராட்டுபெற்றவர்.
7. புதன் மாக தசை அடுத்து, கேது தசையில் இரண்டாம் உலக போரில் ஹிட்லரால் பாதுகாக்கப்பட்டார்.அப்பொழுது இவருக்கு இளம் வயது. 12ம் வீட்டில் கேது இருப்பதால் மறைந்து வாழும் நிலைமை. பிறகு வெளி நாடுகளுக்கும் சென்றார் இந்த கேது தசையில்.
8. அதற்கு அடுத்த 20 வருட சுக்கிரதசையில் லண்டனில் ராணியாக பதவி ஏற்றார். 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் , சூரியனின் 7ம் பார்வை 10ம் வீட்டின் மீது இருப்பதாலும் இது அமைந்தது.
C. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது.
7ம் வீட்டு அதிபதி சந்திரன்(3 பரல்) 7ம் வீட்டில் கடக ராசியில் இருப்பதால், சந்திரன் பலவீனமாக உள்ளார்.
செவ்வாயின் 7ம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது இருப்பதாலும், நவாம்சத்தில் வக்கிரமான சனி கடக ராசியில் இருப்பதாலும், சுக்கிரனும், சந்திரனும் அஷ்டமம், சஷ்டமம் (8/6) நிலைமை இருப்பதாலும், 7ம் வீடு தோஷம் உள்ளது.
லக்கினத்தில் உள்ள குரு (7 பரல்) உச்சமான செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால் நீச பங்கம் ஆகிறது.
குரு வின் 7ம் பார்வை 7ம் வீட்டில் உள்ள சந்திரனின் மீது பார்ப்பதால் தோஷம் செல்லுபடியாகவில்லை.
நவம்பர் மாதம் 20ம் தேதி 1947ல் சுக்கிர தசை சுக்கிர புக்தியில் இவருக்கு திருமணம் நடைபெற்றது . அப்பொழுது இவருக்கு வயது 21.
லக்கினத்திலிருந்து 5ம் வீடு ரிஷப ராசி அதிபதி சுக்கிரன் 2ல். குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டின் மீது இருப்பதால், சுக்கிரன் இவருக்கு நான்கு குழந்தைகளை கொடுத்தார்
------------------------------------------------------------------------------------
கெட்டகாலம்:
1992ல் ராகு தசையில் இவருடைய மகன்கள் பிரிந்து விட்டனர். மகளுக்கு திருமண விவாக ரத்து எற்பட்டது.அவர் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி (Buckingham Palace) தீ பிடித்து கரையானது. 6ம் வீட்டில் ராகு இருப்பதே காரணம். ராகுவின் 7ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதால் விரயங்கள் கொடுக்கும் வீடாகும்.
Sunday, October 25, 2015 2:00:00 AM ///////
-----------------------------------------
14
/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Thanks for giving more time for us to answer.
Answer:
Queen Elizabeth II.
So many Yogams. Not sure I can write them all.
Guru manga, Neecha Panga, Gaga kesari, chandra mangala are some.
Panapoo thosam as in Navamsa: sani is in moon's place and moon is in sani's place. With so many yogams, and Guru's parvai and good placement of Sukra she overcome the Kalathira Dosa. still married and have 4 sons/daughters.
Sunday, October 25, 2015 5:01:00 AM /////
--------------------------------------------
15
//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
1)இது உலகப் புகழ் பெற்ற எலிஸபெத் மஹாராணியாரின் ஜாதகம்.21 ஏப்ரல் 1926 காலை 3 மணிக்கு லண்டன் மாநகரில் பிறந்தவர்.
2) ஜாதகத்தில் உள்ள பல சிறப்புக்களை என்னவென்று சொல்வது?
மகர லக்கினம், லக்கினாதிபதியும், 2ம் பதியுமான சனி பகவான் 11ல்.சிறப்பான அம்சம்.
3) லக்கினத்தில் 11ம் பதி செவ்வாய் உச்சமாக அமர்ந்து,லக்கினத்தில் அமர்ந்த நீச்ச குருவை நீச்ச பங்க ராஜயோகமடைய செய்துள்ளார்.
லக்கினத்திலேயே குருமங்கள யோகம்.அரச கிரகங்களான சூரியன் உச்சம், 7ம் பதி சந்திரன் ஆட்சி பெற்று லக்கினத்தை தன் நேர்ப்பார்வையில் வைத்துள்ளார்.சந்திர மங்கள யோகம்.
லக்கினத்திற்கு லக்கினாதிபதி சனியின் பார்வை.இப்போதைக்கு இது போதும்.
4) களத்திர தோஷம் செல்லுபடியாகாது.
ஏழாம் பதியின் நேரடி பார்வை, குருபகவானின் சேர்க்கை, சனி, சுக்கிரன் பரிவர்த்தனையோடு, சுக்கிர பகவான் 2ல் அமர்ந்து ஆசிர்வதித்துக் கொண்டுள்ளார்.
வாத்தியாரின் ஆணித்தரமான போதனை லக்கினத்தில் குரு பகவான் அமர்வு, ஆசிர்வதிக்கப் பட்ட ஜாதகம்.
5) 6ல் அமர்ந்த ராகு ராஜ யோகத்தை கொடுத்துள்ளது.
அவசர பதில், மன்னிக்கவும்.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Sunday, October 25, 2015 8:21:00 AM //////
--------------------------------------
16
//////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
கீழுள்ள வாசகங்களை படியுங்கள் தங்களுடையது தான். அதுவே எனது விருப்பமும் ஆகும்.
Blogger Subbiah Veerappan said...
புதிருக்கான சரியான விடை:
இசையரசி, பாரதரத்னா, திருமதி. எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் ஜாதகம். 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி காலை 8:40 மணிக்கு மதுரையில் பிறந்தவர்.
சரியான விடையை சுமார் 50 பேர்கள் எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் எழுதியவர்களையும் சேர்த்துச் ொல்கிறேன்.அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
இந்த எண்ணிக்கை 100 ஆக வேண்டும் அதுவரை இந்தப் பயிற்சி வகுப்புத் தொடரும்!
அன்புடன்
வாத்தியார்
Tuesday, October 01, 2013 6:27:00 AM
எம்.திருமால்
பவளத்தானூர்
Sunday, October 25, 2015 9:17:00 AM //////

இரண்டு ஆண்டுகளாக நட்த்தியும் 100 பேர்கள் தேறவில்லை எனும் போது வருத்தமாகத்தான் உள்ளது. பாடம் தொடரும் வேறு விதத்தில்!
-----------------------------------------------
17
/////Blogger Thirumal Muthusamy said...
sir,
quiz no:100
Horoscope is for Elizabeth Alexandra Mary; born 21 April 1926
M.thirumal
pavalathanur
Sunday, October 25, 2015 10:21:00 AM //////

பாதிக்கிணறுதானே தாண்டியுள்ளீர்கள்? ஜாதகத்தின் சிறப்பு மற்றும் களத்திர தோஷம் பற்றி எல்லாம் எழுதவில்லையே நீங்கள்
-------------------------------------------------
18
//////Blogger Arumugavel said...
1. யாருடைய ஜாதகம் இது?
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926)
2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் என்னென்ன?
சுகஸ்தானாதிபதி மற்றும் லாபஸ்தானதிபதி செவ்வாய் லக்னத்தில் உச்சம். சூரியன் மற்றும் சனி உச்சம். லாபஸ்தானத்தில் சனி . சந்திரன் ஆட்சி. செவ்வாய் சனி பரிவர்த்தனை.குரு நீசபங்க ராஜ யோகம்.ராகு 6ஆம் இடத்தில் இருப்பது நன்று.
3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா?
அல்லது ஆகவில்லையா? என்ன காரணம்?
களத்திர தோஷம்:
செவ்வாய் பார்வை களத்திரஸ்தானத்தில். உச்ச சனியின்(வக்கிர) 3ஆம் பார்வை லக்னத்தில் செவ்வாயின் மேல்.
சுக்கிரன் இரெண்டாம் வீட்டில் இருக்கிறார் . குருவின் பார்வையும் 7 ஆம் வீட்டின் மேல் உள்ளதால் திருமணத்தடை நீங்கியது .
இது புதிய மாணவனது முதல் புதிர் விடை. ஜாதகரை கண்டுபிடித்ததால் பதிலளிக்க முடிந்தது. தவறேனும் இருந்தால் மன்னிக்கவும்
அன்புடன்,
செ . ஆறுமுகவேல்
Sunday, October 25, 2015 1:22:00 PM
Blogger Arumugavel said...
எனது பதிலில் ஒரு திருத்தம். சனி உச்சம் இல்லை . மேலும் குரு நீச பங்க ராஜ யோகத்தில் இல்லை.
அன்புடன்,
செ . ஆறுமுகவேல்
Sunday, October 25, 2015 1:32:00 PM//////
---------------------------------------------
19
/////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz No.100:
1. This Native of the horoscope is Queen Elizabeth II
Born on 21.04.1926 at 2:40 am in London.
2. i) There are lot of Yogas. We know all obiviously that Cancer zodiac native are blessed to involve in politics. like wise, In her horoscope, Mars and Jupiter co-joined,Mars is exalted.
ii) Kaja kesari Yoga in good place as well as Sasi maggala yoga too.
iii) Sun is exalted in 4th place.
iv) Moon is in own house.
v) Lagna lord in 11th place as well as mutual exchange with 11th lord.
These all gave her to become a queen of many countries for long and long time as well as long life.
3. There is no kalathra dhosa. Everthing eradicated by blessed planets.
Great horoscope.
Have a great day.
With kind regards,
Ravichandran M.
Monday, October 26, 2015 12:42:00 AM//////
--------------------------------------------
20
//////Blogger Venkat Lakshmi said...
உயர்திரு வாத்தியார் ஐயா வணக்கம்.புதிருக்கான எனது பதில்,
1.மேதகு இங்கிலாந்து மகாராணி எலிசபத் அவர்கள் ஜாதகம்.
பிறந்த தேதி:21-04-1926
பிறந்த நேரம்: 2.40 am
2.லக்கனாதிபதி 11ல், லக்கனத்தில் 4க்கும் 11க்கு உடைய செவ்வாய் உச்சம்,உடன் நீசமான குரு நீசபங்க ராஜயோகம் 7ம் வீட்டு அதிபதி 7ல் ஆட்சி, 8ம் வீட்டு அதிபதி உச்சம்,அதனால் ஆயுள் தீர்க்கம்.
Monday, October 26, 2015 12:56:00 AM /////
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.10.15

Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்?

Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்?

23.10.2015

புதிர் போட்டியின் நூறாவது பதிவு இது!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகர் ஆயில்ய நட்சத்திரக்காரர். கர்ப்பச்செல் இருப்பு புதன் திசையில் 11வருடம் 9 மாதங்கள் 25 நாட்கள்

படத்தின் மீது கர்சரை வைத்துக் க்ளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்
------------------------------------------------------------------------------
1. யாருடைய ஜாதகம் இது?
2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் என்னென்ன?
3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா?
அல்லது ஆகவில்லையா? என்ன காரணம்?

க்ளூ வேண்டுமா? கிடையாது! சீனியர்கள் சண்டைக்கு வருவார்கள்.
ஆகவே கிடையாது. ஆனால் பதிவின் தலைப்பிலேயே ஒரு க்ளூ உள்ளது.

உங்கள் பதிலை, சுருக்கமாக அல்லது விரிவாக எப்படி
வேண்டுமென்றாலும் எழுதுங்கள்.

போட்டிக்கான பதில் 26.10.2015 திங்கட்கிழமை காலையில் வரும்.
ஆகவே பலர் கேட்டுக்கொண்டபடி நிறைய அவகாசம் கொடுக்கப்
பெற்றுள்ளது. அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.10.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


அன்புடன்,
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.10.15

நகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன? கீழே உள்ளது படித்துப் பாருங்கள்!


நகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன? கீழே உள்ளது படித்துப் பாருங்கள்!

இன்றும் நகைச்சுவைதான். பூஜாகால விடுமுறையை இப்படிக் கொண்டாடுவோம்
---------------------------------------------------
மனம் விட்டு சிரியுங்க😆
வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍
------------------------------------------
: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.
----------------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு...."SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
----------------------------------------
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
--------------------------------------
நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது டாக்டர்!
டாக்டர்: எப்படி சொல்ற?
நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?
----------------------------------------
மனைவி: ”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
கணவன்:”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்.
---------------------------------------
ஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு பேச மாட்டாள்.
மற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது கிடைக்குதோ அத என் மேல வீசி அடிப்பா.
மூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய துவைக்க ஆரம்பிச்சிடுவா.
மற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி?
மூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும் போதே அத அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.
---------------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
----------------------------------------
அன்றோரு நாள்.....
-
-ஒரு மாலை வேளை.....
-
-ரயில்வே ஸ்டேஷன் அது.......
_
_நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே......
_
_நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது.......
_
_உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்.......
_
_அப்போது தான்....
_
_அப்போது தான்....
_
_அந்த வார்த்தையை நீ சொன்னாய்......
_
_அய்யா...... தர்மம் போடுங்க சாமி......
---------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
----------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
----------------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
---------------------------------------
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா? அவன் யாருக்கும் எதுவும் தரமாட்டன்
---------------------------------------
ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்?
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டஇருந்து கடன் வாங்கணும்னு சொன்ன..நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்
தலைமை ஆசிரியர் :?!?!
----------------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
---------------------------------------
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
----------------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
---------------------------------------
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????
----------------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்
டொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க
---------------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
---------------------------------------
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
----------------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
----------------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
---------------------------------------
நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
----------------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
---------------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து
குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
---------------------------------------
 என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
---------------------------------------
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்!"
---------------------------------------
கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
----------------------------------------
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''
''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''
---------------------------------------
 அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்? "
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம் "
------------------------------------------
மேலே உள்ளவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன், 
வாத்தியார்
===================================================
இது உபரி:

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.10.15

Humour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண்டியதுதான்!


Humour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண்டியதுதான்!

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டுமே பார்க்கவும். வேறு விவகாரம் வேண்டாம்!
----------------------------------------------------------------------------------------
வங்கி மேலாளருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்:

”ஏம்ப்பா, மாடு வாங்கணும்ன்னு லோன் வாங்கறியே கரெக்டா கட்டுவியா?”

“என்ன சார் நீங்க. கட்டல்லைன்னா ஓடிடாதா?, நிச்சயமா கட்டி வைப்பேன் சார்”.

“நான் கேட்டது மாட்டை இல்லை.”

“மாடு இன்னும் வாங்கவே இல்லையே, அதை எப்படிக் கேப்பீங்க.?”

“அப்ப வாங்கினப்புறம் கேட்டா.?”

“வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது.”

“மாட்டைக் கேக்கறதுன்னு நான் சொன்னது அதை இல்லை.”

“பின்னே எதை.?”

“மாடு வாங்கினப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்.”

“மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படிக் குடுப்பேன்?”.

”ஐயோ…. சரி.. ஆரம்பிச்ச இடத்துக்கு வருவோமா?

”கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை.”

“நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தான் கேட்டீங்க.”

“உன்னை ஏன் கட்டணும்.?”

“என்னைக் கேட்டா? நீங்கதானே சொன்னீங்க, கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு. அப்ப என்னைன்னுதானே அர்த்தம்?”

“கேட்டது உன்னைத்தான்.”

“அப்படீன்னா ஏன் என்னைக் கட்டணும்ன்னும் நீங்களே சொல்லிடுங்க.”

“கட்டறதுன்னா மாடும், நீயும்தானா?..மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா.?”

“மூணாவதான்னா… நீங்கதான் இருக்கீங்க”.!.

“என்னைப் பிடிச்சி கட்டிடு. இல்லைன்னா உன்னைக் கடிச்சாலும் கடிச்சிடுவேன்.”

“அப்பவே சொன்னாங்க அந்த பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்ன்னு.”
======================================================
எப்படி உள்ளது சாமிகளா?

அன்புடன்,
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.10.15

புதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான் இரக்கம் உண்டு!


புதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான் இரக்கம் உண்டு!

17.10.2015

நேற்றைய புதிருக்கான சரியான பதில்:

ஜாதகருக்கு 25 வயது முதல் 43 வயது வரை நடைபெற்ற ராகு திசை அவரை போட்டுப் பார்த்து, முன்னேற விடாமல் முடக்கி வைத்தது. அதற்குப் பிறகு வந்த குரு திசை, தடைகளை எல்லாம் விலக்கி வேலையிலும், வாழ்க்கையிலும் அவருக்கு உயர்வை அளித்தது

ஜாதகத்தைப் பாருங்கள்:கடக லக்கின ஜாதகம். பூர நட்சத்திரம்

1. பத்தாம் அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் போய் அமர்ந்துள்ளார்

2. அத்துடன் அவர் சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கி அவதியில் (பலவீனமாக) உள்ளார்

3. ஏழு மற்றும் எட்டாம் அதிபதி சனியின் சேர்க்கை வேலை உயர்விற்குத் தடையாக இருந்தது. ஜாதகனின் 43ம் வயதுவரை அதே நிலைமைதான்! (அதாவது 18 வருட காலம் ராகுதிசையின் பிடியிலும் இருந்தார்)

4. அதற்குப் பிறகு குரு திசை ஆரம்பமானவுடன். மாற்றங்கள் ஏற்பட்டன.
குரு தன்னுடைய ஒன்பதாம் (விஷேச) பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால், அந்த மாறுதல் ஏற்பட்டது. நல்ல காலம் வந்தது

5. குருவுடன் லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்திருப்பதால், அதுவும்
இரண்டாம் வீட்டில் அவர்கள் இருவரும் இருப்பதால், உத்தியோகம்
மற்றும் பண வரவில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். உயர்வைக் கொடுத்தார்கள்

6. சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கியிருந்த பத்தாம் அதிபதிக்கு, குரு பகவான் தன்னுடைய தசாபுத்தியில் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்

7. குருவின் விஷேசப் பார்வையால், அதன் பார்வை பெறும் வீட்டை
வைத்து, அதன் திசையில் (குரு திசையில்) ஜாதகனுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும். அதை மனதில் கொள்க அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தப் பாடம்!
---------------------------------------------
போட்டியில் 14 பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். பலனை துள்ளியமாகவோ அல்லது ஒட்டியோ எழுதி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 11 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின்
பெயர்கள் கீழே உள்ளன
------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================================
1
//////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 30 ஜனவரி 1956ல் பிறந்தவர்.பிறந்த நேரம் மாலை 5 மணி 12 நிமிடங்கள்.பிறந்த ஊர் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகரின் பத்தாம் இடத்துக்காரரான செவ்வாய் ஐந்தில் சனி ராகு என்ற பகைவர்களால் பாதிக்கப்பட்டார்.அவரே இந்த கடக லக்கினக்காரருக்கு யோககாரகன்.
கர்மகாரகன் சனைச்சரன் பகை வீட்டில். சுய வர்கபரல் 2 மட்டுமே. செவ்வாயுக்கு 4 மட்டுமே. பத்தாம் வீட்டுக்கு 24 பரல் மட்டுமே.
24 வயதில் செவ்வாய் தசா சூரிய புக்தியில் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தது. தொடர்ந்து வந்த ராகு தசாவில் 18 ஆண்டுகள் செக்குமாடு போல் ஒரே வேலையில் முன்னேற்றம் இல்லாமல் அவதிப்பட்டார்.
கிட்டத்தட்ட வேலையில் என்னை போல 'அதிர்ஷ்டம்' இவருக்கு.
Friday, October 16, 2015 6:50:00 AM //////
--------------------------------------------
2
Blogger thozhar pandian said...
கடக இலக்கினம். 10ம் வீட்டிற்கு பாக்கியாதிபதி குரு பார்வை உள்ளது. ஆனால் குரு தசை இவருக்கு 43 வயதில் தான் வரும். 25 வயதிலிருந்து இவருக்கு இராகு தசை தொடங்குகிறது. 10ம் வீட்டு செவ்வாய் தனது மற்றொரு வீடான விருச்சிகத்தில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும், 10ம் வீட்டிற்கு எட்டில். உடன் தொழில்காரகர் சனி மற்றும் இராகு. ஆக இராகு தசையில் இவருக்கு பதவியில் முன்னேற்றம் இல்லை. அதன் பிறகு வரும் குரு தசையில் இவருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
Friday, October 16, 2015 7:10:00 AM /////
--------------------------------------------
3
/////Blogger ARIMALAM said...
குருவே நமஹா:
10அதிபதி செவ்வாய் 10க்கு 8ல் சனி/ராஹூ கூட்டில். செவ்வாய் சுய வீட்டில் எனவே செவ்வாய் திசை கடைசியில் வேலை கிடைத்தது. அடுத்து ராஹூ திசை 18 வருடம் உயர்வில்லை(10க்கு8ல்). குரு திசையில் சனி புக்தியில் (சனி 10க்கு 10ம் அதிபதி அதன் வீட்டை பார்பதால்)உயர்வு கிடைத்தது. 10க்கு பாக்கியாதிபதி குரு 10ஆம் இடத்தை தன் 9ஆம் பார்வையில் பார்பதால் கிடைத்தது.
வணக்கம்.
Friday, October 16, 2015 9:02:00 AM //////
---------------------------------------------
4
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 99க்கான பதில்.
ஜாதகர் பிறந்த நேரம் : 30 Jan 1956 17:10 மணி
கடக லக்கினம். சிம்மராசி. 24வயதிற்கு மேல்வந்த ராகு திசை(18 வருடம்) சனி மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து ஜாதகருக்கு வேலை முன்னேற்றத்தை தடை செய்தனர்.
அடுத்து வந்த குரு திசையில் ஜாதகருக்கு பணி உயர்வு கிடைத்திருக்கும்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, October 16, 2015 9:32:00 AM /////
--------------------------------------------
5
////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.99:
10 ஆம் அதிபதி செவ்வாய் ராகு மற்றும் சனியோடு சேர்ந்து அவருடைய ராகு திசையில் பதவி உயர்வு இல்லாமல் பணி புரிந்து இருப்பார்.
குருவின் 9 ஆம் பார்வை 10 ஆம் இடத்தின் மேல் இருப்பதால் அவருடைய
குரு திசையில் பதவி உயர்வு பெற்று இருப்பார்.
மு.சாந்தி.
Friday, October 16, 2015 9:50:00 AM //////
---------------------------------------------
6
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
99 புதிர்கான பதில்
10 ஆம் அதிபதி அந்த இடத்துக்கு 8ல் உள்ளார். மேலும் அவர்
தீய கிரகங்கள் கூட்டணி யில் உள்ளார்
கர்மகாரகன் தீய கிரகங்கள் சேர்க்கை
சந்திர ராசிக்கு 10 ல் கேது.
நன்றி
கண்ணன்.
Friday, October 16, 2015 2:47:00 PM/////
---------------------------------------------
7
////Blogger bala said...
Vanakkam Iyya,
Kataka lagna jaathagar.
Lagnathipathi 2il + Bagyaathipathiyudan (9aam athipathi - Guru) kootani.
Velaiku - 10aam idam paarka pada vendum, Promotions - 5aam idam pugazh,udhyogathil menmai, puthira baagyam, arivu aagiyavatrai kurikum.
Kataka lagnathirku - (yogathipathi + 5&10 ku athipathi) - Sevvai
Intha jaathagathil - 5aam idathil ullar. thirikona amaipu petrullar. 
10aam athipathi 5il (Andha veetirku 8il) + Lagnathin 8aam athipathi (sani) + ucha Ragu vudan kootani
Sevai - sani+ragu kootaniyinal balam izhandhu ullar, ivai anaithum 5aam idathil ullathu + avaruku 24 vayadhil aaramithathu raagu dasai(18 yrs)
ithanaal avaruku velayil menmai(Promotions) kidaika thaamatham aanathu.
Jathagathil guru vin vishesha paarvai (9aam paarvai) - 10aam idathirku ullathu
Pinnar vantha guru dasai chandran/sevvai buthiyil avaruku velayil menmai kidaithathu. 
nandri,
Bala
Friday, October 16, 2015 3:58:00 PM //////
--------------------------------------------------
8
///////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 99.
1,,கடக லக்னம் .லக்னாதிபதி சிம்மத்தில் உடன் குரு
2..குரு 9ம் பார்வையாக 10 ம் வீட்டை பார்ப்பது வேலை கிடைத்தது..!!
3..10ம் வீட்டதிபதி செவ்வாய் 5ல் சனி ராஹுவுடன் கூட்டணி சரியில்லை ..10 படி ஏறினால்11. படி சறுக்கும்
4..லாபஸ்தானத்தில் 11ல் கேது .மூவர் பார்வை ...லாபமே இல்லது போனது .அதாவது உயர்வு இல்லை../////
வேண்டுகோள் ..
100 வது புதிர் மிக சிறப்பான ஜாதகம் கொடுத்து அலசுங்கள் ..
தனிப்பட்ட வலைத்தளம் ..
தற்போது புதிர் போட்டியில் பங்கு பெரும் மாணவர்களை சேர்க்க வேண்டும் .மேலும் வலை தள கொள்ளளவு பொறுத்து .மாணவர்களிடம் சிறிது கட்டணம் வசூல் செய்து சேர்த்து கொள்ள வேண்டுகிறேன் ..
வகுப்பில் மூத்த மாணவர்கள் திரு kmrk +திரு வேப்பிலை சாமி .அவர்களின் கருத்து ..
நன்றி .
Friday, October 16, 2015 6:46:00 PM //////
-----------------------------------------
9
/////Blogger Senthil J said...
பிறந்த தேதி 30.01.1956 ----- நேரம் 5.12 பி ப ----- இடம் சென்னை
பத்தாம் இடம் குரு பார்வை // ஏழாம் இடத்தில் சூரியன் புதன் கூட்டு // புத அதித்ய யோகம் // எனவே அவர் பார்த்தது அரசாங்க வேலை. லக்னாதிபதி திசையில் பணி கிடைத்தது.
காரகன் சனீஸ்வரன் 2 பரல்களுடன் // செவ்வாய் ராகு கூட்டு // லக்னத்திற்கு ஐந்தாம் இடம் என்றாலும் 10ம் இடத்திற்கு 8ம் இடம் //
பாவக அதிபதி செவ்வாய் 4 பரல்களுடன் // சனீஸ்வரன் ராகு கூட்டு // 10ம் இடத்திற்கு 8ம் இடம் //
பாவகம் 24 பரல்களுடன்
அவரது 24 வது வயதில் லக்னாதிபதி திசையில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டு காலம் அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு திசையில் அவர் பார்த்த வேலையில் உயர்வு (promotion) எதுவும் கிடைக்க வில்லை. இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி செவ்வாய் மற்றும் ராகு திசை முடியும் வரை அப்படியே இருப்பார். அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு திசை முடிந்த பிறகு 1998 க்கு பிறகு குரு திசையில் உயர்வு கிடைத்தது.
Friday, October 16, 2015 6:56:00 PM /////
---------------------------------------------
10
////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இந்த ஜாதகருக்கு 24 வயதுக்குமேல் அட்டமாதிபதி சனியுடன் கூட்டு சேர்ந்த ராகுவின் தசை அவருக்கு முன்னேற்றத்தை கொடுக்கவில்லை. அதற்க்கு பிறகு வந்த பாக்கியாதிபதி குருவின் தசையில் முன்னேற்றம் அடைந்திருப்பார். காரணம் தன ஸ்தானத்தில் அமர்ந்து 10மிடத்தை தன் பார்வைளும் வைத்து குரு தசை நடத்தினார்.
நன்றி,
செல்வம்
Friday, October 16, 2015 7:56:00 PM /////
-----------------------------------------------------
11
/////Blogger KJ said...
Respected Sir
Due to Ragu dasa, native didnot get benefits in his job because Ragu sits from 8 From tenth house also 10th house owner sits from 8th house also with 8th house owner Sanibagavan. He got promotion in Guru dasa who sits in second house With Moon. 
Thanks
Sathishkumar GS
Friday, October 16, 2015 11:55:00 PM /////
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.10.15

Quiz: புதிர்: நமது சட்டங்கள் எங்கே செல்லாது?


Quiz: புதிர்: நமது சட்டங்கள் எங்கே செல்லாது?

Quiz.99

16.10.2015

நமது சட்டங்கள் எங்கே செல்லாது?
நமது சட்டங்கள் கிரகங்களிடம் செல்லாது!

சிலருக்கு இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி அப்படியே தேமே என்று இருப்பார்கள். உடல் தோற்றத்தில் ஆரோக்கியத்தில்
அப்படியே இருந்தால் மார்க்கண்டேயன் என்று பெருமையாகச்
சொல்லலாம். வேலையில் அப்படியே இருந்தால், எப்படிப் பெருமையாகச் சொல்ல முடியும்? அல்லது மகிழ்ச்சி கொள்ள முடியும்?

ஒருவர் அவரது 24 வது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது
ஆண்டு காலம் அவருக்கு அவர் பார்த்த வேலையில் உயர்வு 
(promotion) எதுவும் கிடைக்க வில்லை. அவர் பார்த்தது அரசாங்க
வேலை. சட்டப் படியான உயர்வு கூட அவருக்குக் கிடைக்க வில்லை. கிரகங்களின் முன்னால் நமது சட்டங்கள் என்ன செய்ய முடியும்?

அதற்கு என்ன காரணம்? அவருக்கு எப்போது உயர்வு கிடைத்தது ?என்பதை ஜாதக ரீதியாக அலசிப் பதிலை எழுதுங்கள்.

ஜாதகம் கீழே உள்ளது.


பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரு சில வரிகளில் காரணத்துடன் எழுதுங்கள்!
=============================================================
அடுத்த புதிர் பாடம் 100 வது பாடம் ஆகும். இந்தப் பகுதியைத் துவங்கும்
போது 100 பாடங்களையாவது எழுத வேண்டும் என்று முடிவு
செய்திருந்தேன். இறையருளால் அதன்படியே நடந்துள்ளது,
100 பாடங்கள் என்பது 100 வாரங்கள் இரண்டு வருட காலம் என்பதை
மனதில் வையுங்கள். அடுத்த வாரத்துடன் இந்தப் பகுதி நிறைவு
பெறுகிறது.

அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசனை செய்து எழுதுங்கள்.

அதுபோல வரும் தீபாவளி நாள் முதல் (10th November'2015) புதிய வகுப்பைத் துவங்கி  (closed classroom) மீண்டும் ஜோதிடப் பாடங்களை
(மேல்நிலைப் பாடங்களை) விறு விறுப்பாக எழுதலாம் என்று உள்ளேன். இங்கே வகுப்பறையில் தினமும் 5, 000 பேர்கள் வந்து செல்கிறார்கள்.

அத்தனை பேர்களையும் எனது சொந்த இணைய தளம் (My own web site) தாங்காது. அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைவான எண்ணிக்கையிலேயே உறுப்பினர்களைச் சேர்க்கலாம் என்று உள்ளேன். எந்த அடிப்படையில்
அந்த வகுப்பிற்கு உறுப்பினர்களைச் சேர்க்கலாம் என்பதையும்
எழுதுங்கள்.

 உங்கள் யோசனைகள்  வரவேற்கப்படுகின்றன.

email:
classroom2007@gmail.com
or
spvrsubbiah@gmail.com

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.10.15

அடப்பாவிகளா, இப்படியும் ஏமாற்றுவீர்களா?


அடப்பாவிகளா, இப்படியும் ஏமாற்றுவீர்களா?

திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தருக்கு நேர்ந்த கதி!!! 
உஷார் நண்பர்களே 👀 👀👂👂

சென்ற வாரம் ஒரு நபர் திருப்பதி திருமலைக்கு ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவுடன் முகம் தெரியாத ஒரு நபர் பதட்டத்துடன் சாமி தரிசனம் செய்தவரை அணுகி  "என்னுடைய மணிபர்ஸ்ஸை யாரோ திருடிட்டாங்க,ஊருக்கு செல்வதற்க்கு பணம் இல்லை,எனது வீட்டிற்க்கு ஒரு போன் பண்ணிக்கிறேன்,அவங்க என்னுடைய அக்கவுன்ட்ல பணம் போட்டுடுவாங்க,உங்க போனை கொஞ்சம் கொடுங்க"என்றான் பரிதாபமாக.

சாமிதரிசனம் செய்தவரும் தனது செல்போனை அந்த நபருக்கு கொடுத்து உதவியுள்ளார்.

செல்போனை வாங்கிய நபர் செல்போன் பேசியபடியே திடீரென மறைந்து விட்டான்.

சாமிதரிசனம் செய்தவரும் அவனை தேடி அலைந்தும் கிடைக்கவில்லை.

இதனிடையே செல்போனை திருடிச் சென்ற நபர் எப்படியோ சாமிதரிசனம் செய்த நபரின் மனைவிக்கு போன் செய்து, "உங்கள் கணவர் திருப்பதியில்
வாகன விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் ஆபத்தாக சிகிச்சை பெற்று வருகிறார்,மருத்துவ செலவிற்கு அவசரமாக ரூ.40ஆயிரத்தை
ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டும், உடனே நான் கூறும் பேங்க்
அக்கவுன்டிற்கு பணத்தினை செலுத்துங்கள் அவசரம்" என்று
கூறியுள்ளான்.

பிறகு செல்போனை திருடிய நபர் திருமலையில் இருந்து திருப்பதிக்கு
வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கேஷியரிடம் பில் கொடுக்கும் போது "தனது பர்ஸ்ஸை காணவில்லை"எனவும் அதில்
தனது பணம் மற்றும் ஏடிம் கார்டு இருந்தது எனவும் கூறியுள்ளான்.

பரிதாபத்துடன் ஓட்டல் மேனேஜரிடம் "உங்கள் பேங்க் அக்கவுன்ட்
நெம்பரை தாருங்கள்,எனது வீட்டிற்கு போன் செய்து பணம் போடச்
சொல்கிறேன்"என்று நைசாக பேசி நெம்பரை வாங்கி அதனை சாமி
தரிசனம் செய்து செல்போனை இழந்த நபரின் மனைவிக்கு தந்து
அவரும் அந்த பேங்க் அக்கவுன்டிற்க்கு ரூ40ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்திய விவரத்தினை திருட்டு பயலுக்கு சொல்லியுள்ளார் மனைவி. இதனை அறிந்த திருடன் ஓட்டல் மேனேஜரிடம் சென்று பணம் போடப்பட்ட விவரத்தினை கூறி அவர் மூலமாகவே ATM மூலம்
பணத்தினை எடுத்து சாப்பிட்ட தொகைக்கு பணம் கொடுத்துவிட்டு
நன்றி சொல்லிவிட்டு கம்பி நீட்டியுள்ளான்.

இதனிடையே சாமி தரிசனம் செய்த நபர் ஊருக்கு புறப்பட்டுவிட்டார்.
அவரது மனைவியோ தனது உறவினர்களுடன் பதட்டத்துடன்
திருமலைக்கு வந்து எல்லா மருத்துவமனைகளுக்கும் அலைந்து திரிந்துள்ளார். அவரது கணவர் பெயரில் யாரும் மருத்துவமனையில்
இல்லை என்றவுடன் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த
விவரத்தினை போலிஸிடம் கூறியுள்ளனர்.

போலிஸாரும்  ஓட்டல் மேனேஜரை விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்துள்ளனர்.
போலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செல்போனை தந்து உதவி, பணத்தினை இழந்து, பதட்டமாகி,மன உளச்சல் ஆகி நிம்மதி இழந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்.

எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள் .எச்சரிக்கையாக இருங்கள் நண்பர்களே.😳😳😳

நன்றி:தி இந்து நாளிதழ்.
10/10/2015,
💥💥💥💥💥💥💥💥
===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.10.15

பக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவார்?

பக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவார்?

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’?
என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது
நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை
விளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில்
இருப்பதை போலவே கூறினேன்...”

“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன்
சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ
உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை
உட்கொள்கிறோம். ”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.
------------------------------------
இணையத்தில் படித்தது. அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.15

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 
இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல் 
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!