மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.18

இவரல்லவா உண்மையான ஹீரோ!!!


இவரல்லவா உண்மையான ஹீரோ!!!

பாரிஸ் நகரின் ‘ஹீரோ’ வைப் பாராட்டுவோம் வாருங்கள்!

26-5-2018  சனிக்கிழமை அன்று இரவு 8 மணி இருக்கும். பாரிஸ் 18 ம் வட்டாரத்தில் உள்ள, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 4 வது மாடியிலே, நான்கு வயது குழந்தை ஒன்று தவறி கீழே விழப்போகிறது. ஆனால் தெய்வாதீனமாக அக்குழந்தை ஒரு கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருந்தது. எந்த நேரத்திலும் விழுந்துவிடும் என்கிற நிலை.

அப்போது கீழே இருந்த ஒரு கெபாப் உணவகத்தில் உதைபந்தாட்டப் போட்டியினைக் காண வந்திருந்த ஒரு இளைஞனுக்கு மக்கள் கூக்குரல் இடும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று வெளியே பார்த்தான். நிலைமை மோசம்.

உடனே மின்னல் வேகத்தில், வெறும் 32 மணித்துளிகளில் 4 ம் மாடிக்குத் தாவி ஏறிக் குழந்தையைக் காப்பாற்றி விட்டான். அந்த இளைஞனின் *பெயர்:* *Mamoudou Gassama.*

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இந்த இளைஞனின் வீரச் செயல்தான் இன்று பிரான்ஸ் முழுவதும் பேச்சு. ‘பாரிசின் ஹீரோ’ என ஊடகங்களும் மக்களும் போற்றிப் புகழ்கிறார்கள்.

பாரிஸ் முதல்வர் ஆன் இதால்கோ ‘ 18 ம் வட்டாரத்தின் ஸ்பைடர்மான்’ என்று புகழ்ந்துள்ளார்.

இந்த இளைஞனுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கோரிக்கைகள் குவிகின்றனவாம்...

உண்மையில் அசுர சாதனைதான்
-------------------------------------------
பார்த்தேன் பகிர்ந்தேன்

உங்களுக்காக அதன் காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.5.18

Short Story சிறுகதை: ஈரமண்


Short Story சிறுகதை: ஈரமண்

அன்புடையீர்
மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை. அந்த இதழில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. நீங்கள் படித்து மகிழ அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்
அன்புடன்
SP.VR. சுப்பையா, கோயமுத்தூர் - 641012
-------------------------------------------------------------
”ஈரமண்ணில் எதை வேண்டுமென்றாலும் விளைவிக்கலாம். அந்த மண் காய்ந்து போய்விட்டால் ஒன்றும் விளையாது. அதுபோல ஒரு பெண் ஈரமண்ணாக இருக்கும்போதே திருமணம் செய்தால், நாம் சொல்கின்ற மாப்பிள்ளைக்கு ஒன்றும் சொல்லாமல் கழுத்தை நீட்டுவாள். கல்யாணம் செய்து கொள்வாள். அதே பெண் சற்று வயதாகி காய்ந்த மண்ணாகி விட்டால் சிரமம். சிக்கல். அவள் கேட்கின்றபடிதான் நாம் மாப்பிள்ளை பார்க்க வேண்டும்” என்று சிவலிங்கம் செட்டியார் அடிக்கடி சொல்வார்

அதற்கு என்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கும் அவரே விளக்கம் சொல்வார்.

“பதினெட்டிலிருந்து  இருபதோரு வயதுவரைதான் பெண் ஈரமண்ணாக இருப்பாள். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ந்துபோய் இருபத்தியேழு வயதிற்குமேல் சுத்தமாகக் காய்ந்த மண்ணாகி விடுவாள்.”

”இந்தக் காலத்துப் பெண்கள் படிக்க வேண்டும் என்கிறார்கள். படித்தவுடன் வேலைக்குப் போக வேண்டுமென்கிறார்கள். பிறகு வேலையில் செட்டாக வேண்டுமென்கிறார்கள். செட்டாகி ஒரு நிலைக்கு வரும்போது நீங்கள் சொல்கின்ற இருபத்தேழு வயதாகி விடுகிறதே” என்றால் அதற்கும் பதில் சொல்வார் சிவலிங்கம் செட்டியார்:

”பெண்ணிற்கு கல்வி அவசியம். படிக்க வையுங்கள். எதற்காக வேலைக்கு அனுப்புகிறீர்கள்? படித்து முடித்தவுடன் திருமணம் செய்துவிடுங்கள். எதற்காக வேலைக்கு அனுப்புகிறீர்கள்? வேலைக்கு அனுப்புவதால்தான் பல கோளாறுகள்!”

"என்னவிதமான கோளாறுகள்?”

”தன் தந்தையைவிட அதிகம் சம்பளம் வாங்குகிறாள். பொருளாதார சுதந்திரம் கிடைக்கிறது. பலதரப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கிறது. வெளியுலகக் கண்ணோட்டம் கிடைக்கிறது. தன்னுடன் வேலை பார்க்கும் அழகிய தோற்றமுள்ள இளைஞனைப் பார்க்கும்போது, அவனைத் திருமணம் செய்து கொண்டால் என்ன என்ற எண்ணம் உண்டாகிறது.
நமது பாராம்பரியம், கலாச்சாரம், வரலாறு எல்லாம் தெரியாத காரணத்தால், அதில் தவறில்லை என்ற சிந்தனையும் உண்டாகிறது.
பல பெண்கள் திசை மாறிச் செல்வதற்கு அதுவே காரணம். வீட்டிற்கு வந்து கண்ணைக் கசக்குவதால், பெற்றவர்களும் வேறு வழியில்லாமல் அவள் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். அவள் விரும்பும் பையன் என்ன மொழிக் காரணாக இருந்தாலும், என்ன இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவளுக்குத் துணைபோக வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இது போன்று இன்னும் சில காரணங்கள் உள்ளன. அதனல்தான் சொல்கிறேன். படிக்க மட்டும் வையுங்கள். வேலைக்கு அனுப்பும்
தவறைச் செய்யாதீர்கள்!”

இவ்வாறாக தன் சகோதரர் சிவலிங்கம் செட்டியார் பலமுறை சொன்னதைக் கேட்டு, மனதில் பதிந்து விட்ட காரணத்தால், அவருடைய தம்பி சண்முகம் தன் மகள் சாலாவிற்கு, அவள் பி.காம் பட்டப் படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதிய உடனேயே திருமணம் செய்து வைத்து விட்டார்.

தன் மூத்த சகோதரி மீனாட்சி ஆச்சி மகன் விஸ்வநாதனுக்கே திருமணம் செய்து வைத்து விட்டார். திருமணம் சென்ற சித்திரை மாதம் விமரிசையாக நடந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் மணமக்களின் ஜோடிப் பொருத்ததோடு, பெயர்ப் பொருத்தமும் சிறப்பாக அமைந்ததைப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள
                 **************************************************************************
சென்னையில் திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் கோவில் அருகில்தான் மீனாட்சி ஆச்சிக்கு வீடு. ஒரு கிரவுண்டு மனையில் தரையோடு கட்டப்பட்ட வீடு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆச்சியின் மாமனார் முன்னின்று கட்டிய வீடு. முன் பக்கம் செம்பருத்தி, நந்தியா வட்டை, பவளமல்லிச் செடிகளுடன் அம்சமாக இருக்கும்.

திருமணமான தம்பதிகள், திருமணமான ஐந்தாம் நாளே பல கனவுகளுடனும் மீனாட்சி ஆச்சியுடனும், ஆச்சியின் அன்புக் கணவர் சின்னய்யா செட்டியாருடனும் சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.

”நடக்குமென்பார் நடக்காது: நடக்காதென்பார் நடந்துவிடும்” என்ற கவியரசரின் பாடல் வரிகள் உள்ளதைப் போல மீனாட்சி சென்னைக்கு வந்து,  அத்தை வீட்டின் அழகை ரசித்து முடித்த மகிழ்ச்சி இரண்டு நாட்களுக்குமேல் நிலைக்கவில்லை.

தன் மகனையும், மருமகளையும் அழைத்த மீனாட்சி ஆச்சி, மெல்லிய குரலில் சொன்னார்:

”உங்கள் இருவருக்காகவும் பக்கத்துத் தெருவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றைப் பிடித்து வைத்திருக்கிறேன். கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர், தேவையான பாத்திரங்கள் எல்லாம் உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை நல்ல நாள், அங்கே பால் காய்ச்சி உங்களைக் குடிவைக்கலாம் என்று உள்ளேன்.”

உடனே விஸ்வநாதன் குறுக்கிட்டுப் பேசினான்:

”எதற்காக ஆத்தா, தனிக் குடித்தனம்? இத்தனை பெரிதாக நம் சொந்த வீடு இருக்கும்போது, எங்களை ஏன் தனிக் குடித்தனமாகப் போகச் சொல்கிறாய்?”

”நீங்கள் சின்னஞ் சிறுசுகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அத்துடன் உங்களுக்குக் குடும்பப் பொறுப்பும் வரவேண்டும். அதற்காகத்தான்”

”மாதாமாதம் பதினெட்டாயிரம் அல்லது இருபதாயிரம் வாடகை வேறு கொடுக்க வேண்டுமே?”

”ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறாயே - கொடுப்பதில் தப்பில்லை. பணம் பற்றவில்லை என்றால் என்னிடம் கேள் - நான் தருகிறேன். எனக்குத் திருமணமான போது, உங்கள் அப்பச்சி அப்போது பம்பாயில் இருந்தார். பைகுல்லா பகுதியில் வீடு பிடித்து வைத்திருந்தார். திருமணமான மூன்றாவது நாளே பம்பாய்க்குப் புறப்பட்டுப் போனோம். எல்லாம் புதிது புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களைத் தனியாக அனுப்பி வைக்கிறேன்.”

அதற்குமேல் ஆச்சியின் மகன் ஒன்றும் சொல்லவில்லை. ஆச்சி அவர்கள் முடிவு செய்தபடியே புதுமணத் தம்பதிகள் இருவரும் தனிக் குடித்தனம் போய்விட்டார்கள்

                  ****************************************************************************

தனிக் குடித்தனம் போன பிறகுதான் சின்னச் சின்ன பிரச்சினைகள் தலை தூக்கின.

விசாலாட்சிக்கு சமைக்கவே தெரியாது. படிக்கின்ற காலத்தில் சமையலறைப் பக்கமே போக மாட்டாள். படித்து முடித்து முடிக்கவே  திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்.

முதல் நாள் காலை, உப்புமா என்ற பெயரில், கோதுமை ரவையில் சாலா உப்புமா செய்து வைக்க, ஒரு வாய் சாப்பிட்ட விஸ்வநாதன், அதில் உப்பு கூடுதலாக இருக்க சாப்பிடாமல் எழுந்து விட்டான். கம்பெனி கேண்ட்டீனில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி, எழுந்து போய் விட்டான்.

சாலாவிற்கு மிகுந்த வருத்தமாகப் போய் விட்டது.

விஸ்வநாதன் தன் தாயாரின் சமையலில் அசத்தலாக சாப்பிட்டுப் பழகியவன். கத்தரிக்காய் கெட்டிக் குழம்பு, கருணைக் கிழங்கு மசியல், முருங்கைக்கீரை - வாழைப்பூ துவட்டல், புடலங்காய் கூட்டு என்று விதம் விதமாக சாப்பிட்டுப் பழகியவன்.

பதினோரு மணிக்கு, தன்னைப் பார்க்க வந்த தன் மாமியாரிடம், கண்ணில் கண்ணீரோடு சாலா விஷயத்தைச் சொல்ல
அவர்கள் ஆறுதலாகச் சொன்னார்கள்:

”நோ பிராப்ளம். இரவு தங்க மட்டும் இந்த வீட்டைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பெரிய வீட்டிற்கு இருவரும் வந்து விடுங்கள். மூன்று அல்லது நான்கு மாத காலம் நான் உனக்கு பயிற்சியாக சமையலைச் சொல்லித் தருகிறேன். அங்கேயே சாப்பிடுங்கள். உனக்கு நன்றாக சமையல் வரும்வரை வாத்தியார் வேலையை நான் செய்கிறேன். என்ன சரிதானே?”

தனக்கு சுத்தமாக சமைக்கத் தெரியாது என்பதைச் சொல்லாமல் இருந்ததற்காக தன் அத்தையிடம் மன்னிப்புக் கோரிய சாலா, அன்று முதலே தன் அத்தையிடம் சமையலைக் கற்றுக் கொள்ளத் துவங்கினாள்.

அதற்குப் பிறகு எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது.

*****************************************************************************

காலதேவனின் ஓட்டத்தில் ஆறு மாத காலம் போனதே தெரியவில்லை.

சாலா உண்டாகியிருந்தாள். பெண் மருத்துவர் கர்ப்பத்தை உறுதி செய்தார். அதற்குப் பிறகும் சாலாவின் பகற் பொழுது அவளுடைய மாமியார் வீட்டிலேயே தொடர்ந்தது.  ரம்மியமாகவும் கழிந்தது.

சாலா மாமியார் வீட்டில் வளைய வளைய வந்ததுடன், மாமியாரின் மீது அளவில்லாத அன்பைப் பொழிய, அவர்களும் அவளுடைய அன்பில் மயங்கி விட்டார்கள்.

சாலாவின் மீது இருந்த பிரியத்தின் காரணமாக, பிடித்திருந்த குடியிருப்பு வீட்டைக் காலி செய்து விட்டு, தன் மகனையும், மருமகளையும் தங்களோடு ஒன்றாக இருக்கச் சொல்லிவிட்டார் மீனாட்சி ஆச்சி. அவர்கள் இருவருக்கும் வீட்டில் தனி படுக்கை அறை ஒன்றையும் கொடுத்துவிட்டார்.

சாலாவின் மாமாவும் வங்கி ஒன்றில் பொது மேலாளர் பதவிவரை உயர்ந்து சென்று பின் பணி ஓய்விற்குப் பிறகு வீட்டோடுதான் உள்ளார். வீட்டில் இருந்தவாறே பங்கு வணிகத்தில் ஈடு பட்டிருந்தார். முன் பக்கத்தில் அவருக்கான பிரத்தியோக அறை இருந்தது. சாலாவின் அன்பான நடவடிக்கை அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

சாலாவும் சமையலைக் கற்றுக் கொண்டு அசத்தத் துவங்கி விட்டாள். கும்மாயம், வெள்ளைப் பணியாரம், கொழுக்கட்டை, பச்சைத் தேங்குழல் என்று இடைப் பலகாரம் வரை எல்லாம் செய்யத் துவங்கி விட்டாள். மேலும் இணையதள உதவியுடன், சைனீஷ் உணவுகளையும் செய்யத் துவங்கினாள். கோபி மஞ்சூரியன் செய்தால் சைனாக்காரனே அசந்துவிடுவான். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.

சாலாவின் பெற்றோர்கள் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக சென்னைக்கு வந்திருந்தவர்கள், தாங்கள் எதிபார்த்ததைவிட சாலா அதிக சமர்த்தாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதைப் பார்த்துவிட்டு மிகவும் அதிசயத்துப் போனர்கள்.

அதைவிட அதிசயம் ஒன்றும் நிகழ்ந்தது.

காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி உற்பத்தி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தவர், தன் ஆச்சிக்கும், மகளுக்கும் தலா நான்கு பட்டு சேலைகளைக் கொண்டு வந்து கொடுத்ததோடு, தன் ஆச்சியிடம் மெதுவாக வினவினார்:

”ஆச்சி, சாலாவின் பிரசவத்தை நாங்கள் காஞ்சிபுரத்திலேயே வைத்துக் கொள்கிறோம்....”

மீனாட்சி ஆச்சியின் பதில் வியப்பாக இருந்தது.

”சாலாவைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. சாலா சென்னையிலேயே எங்களோடு இருக்கட்டும். சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். அவளுடைய பிரசவத்தை எனக்குத் தெரிந்த பெண் மருத்துவர் மூலம் நான் பார்த்துக்கொள்கிறேன். மருந்தீஸ்வரர் அருளால் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கட்டும். அவளைப் போலவே அது அழகாகவும், குணவதியாகவும் இருக்கட்டும். அதுதான் என் பிரார்த்தனையும், வேண்டுகோளும்”

அவர்களுடைய பேச்சு அத்துடன் நிறைவிற்கு வந்தது!

***********************************************************************

தங்கள் ஊர் சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் சென்ற சண்முகம் அண்ணன், தன் சகோதரர் சிவலிங்கம் செட்டியாரைப் பார்த்து, சாலாவின் மேன்மையான வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு தன் சந்தேகத்தைக் கேட்டார்:

”அண்ணே, எத்தனை காலமானாலும், எந்த சூழ்நிலையானாலும், சில பெண்கள் மட்டும், காய்ந்து போகாமல் ஈர மண்ணாகவே இருக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்?”

”தினமும் தண்ணீர் விடப்படடும் மண் காய்ந்து போகாமல் ஈரமாகவே இருக்கும். அதுபோல அன்பெனும் தண்ணீரை தொடர்ந்து ஊற்றுவதால், அந்தப் பாக்கியம் கிடைக்கப் பெற்ற பெண்கள் எப்போதும் ஈர மண்ணாகவே இருப்பார்கள்”

தன் சகோதரரின் நெஞ்சைத் தொடும் இந்தப் பதிலால் சண்முகம் அண்ணனின் கண்கள் பனித்துவிட்டன

**********************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.5.18

தர்மத்தின் அளவுகோல் எது?


தர்மத்தின் அளவுகோல் எது?

தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர், மகளின் திருமணத்திற்காக பணம் பெற எண்ணினார்.
தலைநகருக்கு புறப்பட்டார்...

வழியில் சாப்பிட ரொட்டி கட்டிக் கொண்டார். வழி நெடுக, கடவுளே! திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டும், என வேண்டிக் கொண்டார். பசியெடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து ரொட்டியைக் கையில் எடுத்தார்.

மனதிற்குள், இந்தஉணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும், தோலுமாக வந்து நின்றது.

இரக்கப்பட்ட அவர் ஒரு ரொட்டியை அதன் முன்வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது.

இரக்கப்பட்ட விவசாயி  அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடா விட்டால் என்ன உயிரா போயிடும்?

ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான நாமும் முடிந்ததை செய்வது தானே முறை எனதனக்குள் சொல்லிக் கொண்டார். பசியைப் பொறுத்துக் கொண்டுதலைநகரை அடைந்தார்.

அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனைச் சந்தித்து, தான் வந்தவிஷயத்தை  தெரிவித்தார்.

 போஜன் அவரிடம்,என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே! நீங்கள்ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு ஒன்று என்னிடம் இருக்கிறது.

அது எந்த அளவு  எடை காட்டுகிறதோ, அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள், என்றார் மன்னர்.

தர்மம் செய்யுமளவு பணம் இருந்தால், நான் ஏன் உங்களிடம் வரப் போகிறேன்? வழியில் நாய் ஒன்றுக்கு  உணவு அளித்தேன். அதற்கு ஈடாக, உங்கள் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டேன். எனவே. நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை, என்று அடக்கமாகச் சொன்னார் விவசாயி.

உங்கள் பசியைப் பொறுத்துக் கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே என்ற போஜன் தராசைக் கையில் எடுத்தார்.

.ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும், மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தான்.

கஜானாவில் இருந்த தங்கம் முழுவதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.

வியந்தமன்னன்,உங்களைப் பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க  வந்திருக்கும் தாங்கள் யார்? என்றான்.

மன்னா! நான் ஒருவிவசாயி. என்னைப்பற்றி சொல்லுமளவு  வேறு ஏதுமில்லை, என்றார்பணிவுடன்.

அப்போது தர்மதேவதை அங்கு தோன்றினாள். போஜனே!  தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம்.

கொடுத்தவரின் மனமே அதன் அளவுகோல். இவர் மனம்  மிகவும் பெரியது. அதனால், நீ எவ்வளவு பொன் வைத்தாலும் தராசு முள் அப்படியே தான் இருக்கும்.

அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ, அதைக் கொடுத்தால் போதுமானது, என்றாள். இதை ஏற்ற மன்னன், விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழியனுப்பினான்.

மகளின் திருமணம்  சிறப்பாக நடந்தது.

ஆத்மார்த்த மனதுடன் உன் கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. அதுவே நமது தர்மம்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.5.18

நீங்களும் ரயிலில் முன்பதிவு விதிமுறைகளும்!


நீங்களும் ரயிலில் முன்பதிவு விதிமுறைகளும்!

*ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது  என தெரியுமா?*

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒருமுறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்பட கேட்டிருப்போம்.

ஆனால், இது ஏன், எதனால் பஸ்களில் விருப்பமான சீட் புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ?

*உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...*

*தியேட்டரும் - ரயில் வண்டியும்!*

நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம்.
 
ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம்.

ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக  அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

கோச்! பொதுவாக ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.

*டிக்கெட் புக் ஆகும் முறை!*

நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு 
செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த  இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.

பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.

*புவியீர்ப்பு மையம்!*

ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

*கடைசி நேரத்தில்...*

கடைசி நேரத்தில் டிக்கெட்  யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற 
இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம்.

*சற்று யோசியுங்கள்!*

 நூறு கிலோமீட்டர்  வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு.

இதை தவிர்க்க தான்  இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது.

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.5.18

Astrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகர் முன்னாள் பிரத‌மர் கனம் தேவகவுடா அவர்கள். பிறந்த‌ தேதி 18 மே 1933 பிறந்த நேரம்:காலை 11 மணி. பிறந்த இடம் :ஹாசன் (கர்நாடகா)

அந்த ஜாதகத்திற்கு உரியவர் : நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார்
17 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த திங்கட்கிழமை (1-6-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் நமது நாட்டின் 11வது பிரதம மந்திரியும், 14வது கர்நாடக முதலமைச்சருமான திரு.தேவ கௌடா ஆவார். அவர் பிறந்தது 18/05/1933 காலை சுமார் 11:00 மணியளவில். நன்றி.
Friday, May 25, 2018 5:55:00 AM
----------------------------------------------------
2
Blogger Maheswari Bala said...
Name: H. D. Deve Gowda
Date of Birth: Thursday, May 18, 1933
Time of Birth: 11:00:00
Place of Birth: Hassan
Longitude: 76 E 3
Latitude: 13 N 1
Haradanahalli Doddegowda Deve Gowda was the 11th Prime Minister of India (1996–1997) and the 14th Chief minister of the state of Karnataka (1994–1996).
Friday, May 25, 2018 6:27:00 AM
--------------------------------------------------
3
Blogger bg said...
Mr. H.D. Deva Gowda born on May 18 1933 in Hassan.
Friday, May 25, 2018 8:36:00 AM
--------------------------------------------
4
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 25-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
பெயர் : எச். டி. தேவ கவுடா
பிறப்பு : 18.05.1933
இடம் : ஹ‌ரதனஹள்ளி, மைசூர்.
நேரம் : காலை 10 மணி, 58 நிமிடம்.
ஹ‌ரதனஹள்ளி தொட்டெகவுடா தேவெகவுடா இந்தியக் குடியரசின் 14வது பிரதமராகவும் (1996–1997), கர்நாடக மாநிலத்தின் 11வது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.
1999ல் ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மத சார்பற்ற ஜனதா தளம் (JD-S) என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இன்றளவும் உள்ளார்.
Friday, May 25, 2018 10:52:00 AM
----------------------------------------------
5
Blogger Ananthakrishnan K R said...
Dear Sir,
Native: H D Deve Gowda
Born on: 18/05/1933 @ 11.00 AM
Place of birth: Hassan, India
Sincerely,
K R Ananthakrishnan
Chennai
Friday, May 25, 2018 11:05:00 AM
------------------------------------------------
6
Blogger anand tamil said...
ஹெச். டி. தேவ கவுடா என்று பரவலாக அறியப்படும் ஹரதனஹல்லி தொட்டெகௌடா தேவெ கௌடா (பிறப்பு மே 18,1933[1]) இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமராகவும் (1996–1997) கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சராகவும் (1994–1996) இருந்தவர் ஆவார்.
Friday, May 25, 2018 11:18:00 AM
----------------------------------------------
7
Blogger sfpl fab said...
Answar for 25.05.2018
Former Prime Minister of India
Haradanahalli Doddegowda Deve Gowda is an Indian politician who served as the 11th Prime Minister of India from 1 June 1996 to 21 April 1997. He was previously the 14th Chief Minister of Karnataka from 1994 to 1996. Wikipedia
Born: 18 May 1933 (age 85 years), Haradanahalli
Friday, May 25, 2018 12:13:00 PM
----------------------------------------------
8
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was H.D.Deve Gowda 11th Prime Minister of India and Former Chief Minister of Karnataka was born in Hassan, Karnataka on18/05/1933 time 11am,Cancer lagna,Kumba rasi,Sasa yoga,Dharma Karmathipathy yoga,Guru mangala yoga,guru chandra yoga was present,10th lord mars in vargottama.
Friday, May 25, 2018 12:44:00 PM
-----------------------------------------------
9
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உரியவர் தேவ கவுடா அவர்கள்
நாள்/நேரம் 18-5=1933/11.00A.M
இடம் : ஹரடனஹல்லி,KARNATAKA
Friday, May 25, 2018 1:31:00 PM
-------------------------------------------------
10
Blogger ARAVINDHARAJ said...
Name:H.D Deve Gowda
Date of Birth:18-May-1933
Place of Birth:Haradanahalli,India.
Profession:Politician.
Friday, May 25, 2018 1:34:00 PM
-------------------------------------------------
11
Blogger angr said...
முன்னாள் பிரதமர் திரு.H.D.தேவ கவுடா அவர்கள்
Friday, May 25, 2018 1:49:00 PM
----------------------------------------------
12
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 25-5-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பாரத முன்னாள் பிரதமர் தேவ கௌடா ஆவார். பிறந்த தேதி மே 18, 1933.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Friday, May 25, 2018 4:28:00 PM
-------------------------------------------------------
13
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் முன்னாள் பிரத‌மர் கனம் தேவகவுட. பிறந்த‌ தேதி 18 மே 1933
பிறந்த நேரம்:காலை 11 மணி. பிறந்த இடம் :ஹரதன ஹள்ளி(கர்நாடகா)
கடகலக்கினம் அரசியல் வாதி ஆக்கியது.
சனி கேந்திரத்தில் சொந்த வீட்டில் இருந்து சசமகாயோகம் தந்தது. அதுஅரச தோரணை தந்தது.சுக்கிரன் ஆட்சியில் ராஜகிரகத்துட்ன் லாபத்தில். அதனால் அர‌சாங்க‌ வருமானம்.சுக்கிரதசா ராகுபுக்தியில் பிரதமரே ஆகிவிட்டார்.லக்கினாதிபதி சந்திரனுக்கு பாக்யாதிபதி குரு, யோககாரகன் செவ்வாயின் பார்வை.கஜகேசரி யோகம். லக்கினத்தில் மாந்தி, சந்திரனுடன் ராகு, சுக்கிரன் அஸ்தங்க‌தம்,இரண்டில் கேது ஆகியவை ஏற்ற இறக்கததைத் தந்தது.
Friday, May 25, 2018 6:01:00 PM
-----------------------------------------------
14
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Mr H D Deve Gowda who was born on the 18th of may 1933 in Mysore, India
Kind regards
Rajam Anand
Friday, May 25, 2018 7:51:00 PM
----------------------------------------------
15
Blogger Muthu said...
Mr.H.D.Deve Gowda. 18.5.1933. 10.30.a.m. Haradanahalli,Karnataka
Friday, May 25, 2018 10:44:00 PM
-----------------------------------------
16
Blogger thozhar pandian said...
மே 18 1933 பிறந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அவர்கள்
Saturday, May 26, 2018 12:17:00 AM
--------------------------------------------------------
17
Blogger RAMVIDVISHAL said...
18/05/1933
H.D Devagowda
Saturday, May 26, 2018 3:17:00 AM
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.5.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 25-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  25-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா?  தென்னிந்தியர்.  அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
=========================================================

24.5.18

ஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?


ஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்?

நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள்? இன்டெர்வியூவில் பகீர் கேள்வி!

ஐஎஎஸ் நேர்முக தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும்  அதற்கான பதில்களும் தான்.... இவை , 'திங் அவுட் ஆப் பாக்ஸ்' வகையை
சேர்ந்தவை...

ஐஏஎஸ்  தேர்வில் வெற்றி பெற சிறப்பாக படித்தால் மட்டும் போதாது. சில சாதுரியமான விஷயங்களும்  தெரிந்திருக்க வேண்டும்.

சரியாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் அது தவறாகப்  போக வாய்ப்புள்ளது.

ஐஏஎஸ் என்பது கடக்கமுடியா தீவில்லை ஆனால் அதனை சரியாக முறையில் கணக்கிட்டு கடந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

கடந்த கால ஐஎஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட சுவரஸ்யமான கேள்விகள் சில...

கேள்வி 1: நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால்  என்ன செய்வீர்கள்?

பதில்: என் தங்கைக்கு உங்களை விட சிறந்த வாழ்க்கை துணை வேறு யாராக இருக்க முடியும்.

கேள்வி 2: ஒரு முட்டை மேலிருந்து கான்கிரிட் தரையில் போடப்படுகிறது ஆனால்  உடையவில்லை ஏன்?

பதில்: ஏன்னா கான்கிரிட் தரை முட்டையை விட பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி 3: பாதி ஆப்பிள் போல் இருப்பது?

பதில்: இன்னொரு பாதி ....

கேள்வி  4: 5+5+5=550? ஒரே ஒரு நேர்கோடு மட்டும் போட்டுக்கொள்ளலாம் ஆனால் விடை 550 வர
வேண்டும்.

பதில்: 5 ஆம் எண்ணின் பக்கத்தில் உள்ள + குறியீட்டில் சாய்வாக ஒரு கோடு போடப்படுகிறது. இதன் பின் +சிம்பிள் 4ஆக
மாற்றப்படுகிறது. விடை 545+5=550?

கேள்வி 5: ராமன்  தன்னுடைய முதல் தீபாவளியை எங்கு கொண்டாடினார்?

பதில்: இந்த கேள்வி நாம் ஏற்கனவே  பிரியமான தோழி படத்தில் பார்த்துவிட்டோம் என நினைக்கிறீர்களா அந்த கேள்விகள்
யூபிஎஸ்சியில்  கேட்கப்பட்டதுதான்.
நரகாசுரனை கொன்றதால் தீபாவளி கொண்டாடுகின்றோம் இல்லையா?
நரகாசுரனை கொன்றது யார்? கிருஷ்ணன். ஆக கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பு ராம அவதாரம்
எடுக்கப்பட்டது. எனவே ராமரருடைய காலத்தில் தீபாவளி இல்லை. சிம்பிள்.

கேள்வி 6 : செவன் ஈவன்  நெம்பர் சொல்லுங்கன்னு கேட்ட கேள்விக்கு

பதில்: சிம்பிள் சார் செவன்ல இருந்து 'எஸ்' ரிமூவ் பண்ணா  ஈவன் நம்பர் கிடைத்து விடும்.

கேள்வி7: தொடர்ந்து வரும் மூன்று நாட்களை அவற்றின் பெயர்களின்றி எவ்வாறு சுட்டிக்காட்டுவீர்கள்?

மூன்று நாட்கள் தொடர்ந்து வரிசைப்படுத்த வேண்டும். ஆனால்  புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வரக்கூடாது?

பதில்: நேற்று, இன்று, நாளை

கேள்வி  8: 1918 ஆம் ஆண்டில் முடிவு என்ன?

பதில்: 1918 ஆம் ஆண்டின் முடிவு 1919 ஆண்டு தொடக்கம்.

கேள்வி 9: ஒரு மனிதன் 8 நாட்கள் தூங்காமல் வேலை செய்ய முடியுமா?

பதில்: முடியும் இரவில் தூங்கிக் கொள்ளலாம்.

கேள்வி10: உங்களை நோக்கி ஒருவர் துப்பாக்கி காட்டுகிறார் என்ன செய்வீர்கள்?

பதில்:  அந்த துப்பாக்கியை பார்பேன் புடிச்சிருந்தா வாங்குவேன். புடிக்கலைன்னா சாரி சொல்லி நான் வாங்க  விருப்பலைன்னு சொல்லிருவேன்.
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.5.18

விசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்!


விசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்!

😜 சிரிக்க மட்டுமே: வேறு எந்தப் பிரச்சினையும் வேண்டாம்!!!!

1
*நீயெல்லாம் நல்லா வருவடா*

மாணவன் பரிட்சை எழுதும் போது பேப்பர் மேல *திமுக துணை* னு எழுதினான்,

இதை பாத்த வாத்தியார்  கட்சி பேரெல்லாம் எழுத கூடாதுனு சத்தம் போட்டார்,

அதுக்கு அந்த மாணவன் அது கட்சி பேரு இல்ல சார் சாமி பேர் (திருச்செந்தூர் முருக கடவுள் துணை)அத தான் சார் சுருக்கி எழுதுனேன்னு சொன்னான்,,,

அடுத்த நாள் பரிட்சை எழுதும் போது இந்த தடவை *அதிமுக துணை* னு எழுதினான்,

அதை பாத்த வாத்தியார் பையன திரும்பவும் திட்டுனார்,

அதுக்கு அந்த பையன் சார் கோபப்படாதீங்க நேத்து எழுதும் போது அருள்மிகுவ விட்டுட்டேன் (அருள்மிகு திருச்செந்தூர் முருக கடவுள் துணை) அத சுருக்கித்தான் சார் அதிமுக துணைனு எழுதுனேன்னு சொன்னான்.....!
-------------------------------------------------------------------
2
ப்ளஸ்டூவில் தேர்ச்சி பெற்ற  அனைத்து வருங்கால ஊழியர்களுக்கும் வாழ்த்துகள்.......
ஃபெயிலான அனைத்து வருங்கால தொழிலதிபர்களுக்கும் வாழ்த்துகள்......
பரீட்சையே எழுதாத வருங்கால அரசியல்வாதிகளுக்கும் வாழ்த்துக்கள்...
-------------------------------------------------------------------------
3
Dialogue between a Priest and a drunk alcoholic :- 

Priest:   Don't drink too much liquor. You will go to hell. 
Alcoholic - What about the guy who sells  the liquor? 
Priest - He will also go to hell. 
Alcoholic - What about him who sells tandoori  chicken outside the Liquor Store? 
Priest - He too will go to hell. 
Alcoholic - Then I have no problem in going to hell.
-------------------------------------------------------------------
4
#கணவன் :- கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்

#மனைவி :- எங்க என்ன விஷயமா போறீங்க?

#கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்

#மனைவி :- தண்ணியடிக்கவா? தெளிவா சொல்லித் தொலைங்க...😝😜😀😀😀😀

மனைவிடா 👌
---------------------------------------------
5
*ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.*

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

*ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’*

டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்... இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு.

அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

*ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,*
*மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?*

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.

*சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.*
*நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.*

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.
---------------------------------------------------------------
6

In a poor zoo in India, a lion was offered not more than 1 kg of meat a day.

The lion thought that its prayers were answered when one day a USA zoo manager visited the zoo and requested the zoo management to shift the lion to USA..🇱🇷

🦁The lion was so happy and started thinking of a central A/C environment, 🐑a goat or two every day.

On its first day after arrival, the lion was offered a big bag sealed very nicely, for breakfast The lion opened it quickly but was shocked to see that it contained a few bananas 🍌and some boiled vegetables.🍆

The lion thought that may be they cared too much for him and were worried about his stomach, as he had been recently shifted from India.

The next day the same thing happened. On the third day again the same food - a bag of bananas, was delivered.

The lion was furious ; it stopped the delivery boy and blasted him, 

'Don't you know that I am the Lion - King of the Jungle.. ? What's wrong with your management ? Why are you delivering bananas and boiled vegetables to me daily ?'

The delivery boy politely said,

"Sir I know you are the King of the Jungle. But you have been brought here on a monkey's visa🐒!!!!"

Moral of the story :👌
To all the H1B visa aspirants.... Better to be a lion in India than a monkey elsewhere....
------------------------------------------------------------------------------
7
ரஜினி ஆப்மூலமா மூனு லட்சம் பேரு கட்சில சேந்துட்டாங்க.....
: அத ஏன்யா சோகமா சொல்ற....நல்ல விசயம்தானே.....
: அதுல ரெண்டு லட்சம் பேரு *ஜப்பான்காரனுவ....*
😜😜😜
-------------------------------------------
8
மனைவி: டின்னர் வேணுமா...😃😃
கணவன்: சாய்ஸ் இருக்கா....?
மனைவி: ரெண்டு இருக்கு....😉😉
கணவன்: என்னென்ன....???😁
மனைவி: வேணும்....வேண்டாம்..!!😂😂
----------------------
9
“உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே..?🎞📺
 அவங்க மேல அவ்வளவு பிரியமா?”🤗😘😍
“அட நீங்க ஒண்ணு .. .. 🤦🏻♂
ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல..”🤐😷
--------------------------
10
 என்னடா உதட்டெல்லாம் காயம்?
ஒண்ணுமில்லடா wife  ஊருக்கு போறா ரெயில் ஏத்திவிட்டு வந்தேன்
அதுக்கு.....
சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...
---------------------------------
11
😜😜😝
*கணவர் : செல்லம் சப்பாத்தி**சூப்பரா செஞ்சிருக்கடி*
*மனைவி : 😡😡*
*கணவன் :நல்லாருக்குன்னு தானே சொல்றேன்**அப்புறம் ஏன் முறைக்கிற..*
*மனைவி : அது தோசை*
😳😳😒
--------------------------------------------
12
“டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்”
🍶🍵🤕🤒
“டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா..”☕😂🤣😜
-----------------------------------------------
13
*டாக்டர் :-* வாங்க ,                உட்காருங்க ,               சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க ,           நாக்க நீட்டுங்க..          திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க ....இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?
*வந்தவர் :-* ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!😂😃😂
--------------------------------------------
14
அந்த காலத்துல வள்ளுவர், வாசுகின்னு கூப்பிட்டதும் கிணத்துல வாளியை அப்படியே விட்டுட்டு, வாசுகி பறந்து வந்தாங்களாம்.
இப்ப அது மாதிரி கூப்பிட்டா வாசுகி அங்கயே நின்னுருப்பாங்க, வாளி மட்டும் பறந்து வரும்
😂😂😂😂
-------------------------------------------
இவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.5.18

திருவரங்கனும் ஏழாம் எண்ணும்!


திருவரங்கனும் ஏழாம் எண்ணும்!

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை

கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. பெருமை உடைய
(1) பெரிய கோவில்
(2) பெரிய பெருமாள்
(3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன்
(5) பெரியவசரம்
(6) பெரிய திருமதில்
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம்  கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்

(1) ஸ்ரீதேவி
(2) பூதேவி
(3) துலுக்க நாச்சியார்
(4) சேரகுலவல்லி நாச்சியார்
(5) கமலவல்லி நாச்சியார்
(6) கோதை நாச்சியார்
(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில்

எழுந்தருளுவார்.
(1) விருப்பன் திருநாள்
(2) வசந்த உத்சவம்
(3) விஜயதசமி
(4) வேடுபறி
(5) பூபதி திருநாள்
(6) பாரிவேட்டை
(7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.

(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆடி
(4) புரட்டாசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை  நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்
.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆவணி
(4) ஐப்பசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.

(1) கோடை உத்சவம்
(2) வசந்த உத்சவம்
(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை
(4) நவராத்ரி
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம்
(7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

(1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்
(2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
(3) குலசேகர ஆழ்வார்
(4) திருப்பாணாழ்வார்
(5) தொண்டரடிபொடி ஆழ்வார்
(6) திருமழிசை ஆழ்வார்
(7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.

(1) நாழிகேட்டான் கோபுரம்
(2) ஆர்யபடால் கோபுரம்
(3) கார்த்திகை கோபுரம்
(4) ரெங்கா ரெங்கா கோபுரம்
(5) தெற்கு கட்டை கோபுரம்-I
(6) தெற்கு கட்டை கோபுரம்-II
(7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்
.
(1) வசந்த உத்சவம்
(2) சங்கராந்தி
(3) பாரிவேட்டை
(4) அத்யயநோத்சவம்
(5) பவித்ர உத்சவம்
(6) உஞ்சல் உத்சவம்
(7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.

(1) பூச்சாண்டி சேவை
(2) கற்பூர படியேற்ற சேவை
(3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை
(4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
(5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
(6) தாயார் திருவடி சேவை
(7) ஜாலி சாலி அலங்காரம்

#பூலோக #வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க #வாரீர்
------------------------------------------------------------------
2
பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து,
"இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா...." என்றார்.

வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,
"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது...." என்றார்

திடுக்கிட்ட பண்ணையார், "இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்..." என்றார்

இறைவன், "இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது..." என்றார்.

விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து,
"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா....." என்றார்.

அவன் "ஆம்" என்றான். பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக  அறைந்தார்.
"உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்..." என்றார்.

அவன், "உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன், மீதமுள்ள எல்லாப் பழத்தையும்
கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.." என்றான்.
பண்ணையாருக்குப் புரிந்து விட்டது.

ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை.....
கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது ஏழைகளுக்குப் போய்ச் சேராது.
ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்......
கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்.
ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி, இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்......
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்...
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.5.18

விதிப்படி பயணம்


விதிப்படி பயணம்
   
உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது. உனதுவாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே.

ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.

ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?

நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்ததே.

மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”
என்றார் வள்ளுவர்.

ஊழ் என்பது பூர்வ ஜன்மத்தையும், விதியையும் குறிக்கும்.

பூர்வ ஜன்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜன்மத்தின் விதி நிர்ணயிக்கப்பெறுகிறது.

அதனை, ‘ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றான் இளங்கோ.

போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜன்மத்தில் எழுதப்படுகிறது.

ஆகவே விதியின் கோடுகள்தாம் உன்னை ஆட்சி செய்கின்றன என்பது, இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நீ எண்ணியது நடந்தாலும் நடக்காவிட்டாலும், எண்ணாதது நடந்தாலும், யாவும் உன் விதி ரேகைகளின் விளைவே.
முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.

“எல்லாவற்றுக்கும் கால நேரம் வர வேண்டும்” என்கிறார்களே இந்துக்கள், அதற்கு என்ன காரணம்?

இன்ன காரியங்கள், உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான்.

நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.

இரண்டாவது உலக யுத்தத்தின்போது, ஹிட்லருக்கு இருந்த வசதியும், ஆயுதப் பெருக்கமும் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.

ஒரே நாளில் போலந்தைப் பிடித்தான்.

வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லாவாகியாவைப் பிடித்தான்.

குண்டு போடாமலேயே பிரான்ஸைப் பிடித்தான்.

அவன் விரும்பியிருந்தால் ஐரோப்பாவையும், ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம்.

வெறும் வாய் வேட்டுக்களையே விட்டுக் கொண்டிருந்த சர்ச்சிலை, அவன் கனடாவுக்குத் துரத்தி யடித்திருக்கலாம்.

(சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓடத் திட்டமிட்டிருந்தார்.)

அகில ஐரோப்பாவையும் பிடித்துவிட்டால், உலகத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக் காலனிகளாக இருந்த ஆசிய - ஆப்பிரிக்க , அரேபிய நாடுகள் - சுமார் எண்பது- குண்டுகள் போடாமலேயே அவன் கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும்.

இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதே.

ஆனால், விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சி புரிந்தது.

பிரிட்டனைக் ‘கோழி குஞ்சு’ என்று அவன் கேலி செய்துவிட்டு, ‘யானையைச் சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும் என்று சோவியத் யூனியனுக்குள் நுழைந்தான்.

‘அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப்படுகிறது’ என்று விதி சிரித்தது.

சோவியத் யூனியனின் பருவகாலத்தில் அவன் சிக்கிச் சிக்கி இழுபட அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களைத் தயார் செய்து கொண்டு விட்டன.

எச்சரிக்கையாக இருந்திராததால், உலகத்தையே ஆண்டிருக்கக்கூடிய ஹிட்லர், தன் பிணத்தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்துபோனான்.

எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பி விடும் விதி. ஹிட்லரின் ஆணவதையும் அழிவை நோக்கித் திருப்பிவிட்டது.

உலக வரலாறுகளை கூர்ந்து நோக்குங்கள்.

நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?

நினைப்பவன்தான் நீ. முடிப்பவன் அவன்.

இந்துக்களின் தத்துவத்தில் இது முக்கியமானது.

நம்முடைய லகான் இறைவன் கையிலே உள்ளது என்பதை, இந்துமதம்தான் வலியுறுத்துகிறது.

பிச்சைக்காரி ராணியான கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் அதிர்ஷ்டம் என்ற பெயரிலோ, துரதிர்ஷ்டம் என்ற பெயரிலோ விதியின் பரிசளிப்பு.

“ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே, இப்படி ஆகிவிட்டதே” என்று நீ பிரலாபித்துப் பயனில்லை.

“அப்படித்தான் ஆகும் என்று நீ ஜனிக்கும்போது எழுதப்பட்டிருக்கிறது.

ராமனையும் விதி ஆண்டது. சீதையையும் விதி ஆண்டது.

காமனையும் விதி ஆண்டது ரதியையும் விதி ஆண்டது.

சோழ நாட்டுக் கோவலனின் விதி. மாதவியின் மயக்கத்திலே இருந்தது.

கண்ணகியின் விதி மதுரையிலே இருந்தது.

பாண்டியன் நெடுஞ்செழியன் விதி, ஒரு காற்சிலம்பில் அடங்கியிருந்தது.

அலெக்சாண்டரின் விதி, பாபிலோனியாவில் முடிந்தது.

ஜூலியஸ் சீஸரின் விதி, சொந்த நண்பனின் கையிலே அடங்கியிருந்தது.

நெப்போலியனின் விதி, அவனது பேராசையிலே அடங்கியிருந்தது.

காந்திஜியின் விதி, கோட்ஸேயின் கைத்துப்பாக்கியில் அடங்கி இருந்தது.

அடிமைகள் கிளர்ந்து எழுந்ததும், ஆதிக்க வெறியர்கள் விழுந்து துடித்ததும், காலமறிந்து கடவுள் விதித்த விதி.

கடவுளே இல்லை என்று வாதிடுவோரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறைவன் ஏன் விதிக்கிறான்?

தங்கள் கொள்கைகள், தங்கள் கண் முன்னாலேயே தோல்வி அடைவதைக் கண்டு சாக வேண்டும் என்றுதான்!

உண்மையான பக்தி உள்ள சிலருக்கு ஆண்வன் ஏன் நீண்ட ஆயுளைத் தருகிறான்?

‘தாங்கள் பக்தி செலுத்தியது நியாயமே என்று அவர்களும், அவர்களைப் பார்த்துப் பிறரும் உணர்வதற்காகத்தான்.

இறைவன் விதியை ஒருவேடிக்கைக் கருவியாக வைத்திருக்கிறான்.

சக்தியும் சிவனும் பூமியில் பூமியில் பல வேடங்களில் பிறந்ததாக இந்துக் கதைகள் கூறுவது, இறைவன், தானும் விதிக்கு ஆட்பட்டு, அதன் சுமையை அனுபவிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.

அந்தக் கதைகளை வெறும் கதைகளாக நோக்காமல், இறைவனின் தத்துவங்களாக நோக்கினால், மானிடத் தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும்.

விதி - மதி ஆராய்ச்சியில் மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

அதை ஒரு கதையாக மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன்.

பிரவாகம்
-----------
ஞானி, பிரகதீஸ்வரர், திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார். அவர் பெரிய மகான், உண்மையிலேயே ஞானி. சிறுவயதிலே துறவு பூண்டவர்.

கல்மண்டபத்தின் வடக்கில் அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.

எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.

வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்த ஞானியார், ‘யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்’ என்று தெரிவித்தார்.

யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்ப்பார்த்தார்கள்.

மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.

நடுத்தர வயது; தீட்சண்யமான கண்கள்; பந்த பாசங்களில் அடிபட்டுத் தேறி வந்தது போன்ற ஒரு தெளிவு.

சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.

“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.

அவர் சொன்னார்:

“சுவாமி! விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்திருக்கின்றன. ‘விதியை மதியால் வெல்ல்லாம் என்றும், மதியை விதி வென்றுவிடும்’ என்றும், இரண்டு கருத்துக்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்”

கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.

மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.

மண்டபம் காலியாயிற்று.

இரண்டு நிமிஷங்கள் கழித்து, எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார். திபுதிபுவென்று எல்லோரும் ஓடி வந்து அமர்ந்தார்கள்.

ஞானியார் கேட்டார்.

“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்காந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?”

எல்லோரும் விழித்தார்கள்.

நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.

கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:

பாருங்கள், இந்தச சின்ன விஷயத்தில் கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.

கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!

இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”

கேள்வியாளர் கேட்டார்:

“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்: இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

ஞானியார் சொன்னார்:

“அறியாமையே விதியின் கைப்பாவை.

அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்து விட்டால், விதியும் இல்லை. விதித்தவனும் இல்லை.”

கேள்வியாளர் கேட்டார்:

“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”

ஞானியார் சொன்னார்:

“இருக்கின்றன!

இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.

உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழ விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்தப் பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எபோது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கும் நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி”

கேள்வியாளர் கேட்டார்:

“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது எங்கிருந்து தொடங்குகிறது?”

ஞானியார் சொன்னார்:

சூன்யத்தில் நிர்ணயிக்கப்படுகின்றது; ஜனனத்தில் தொடங்குகிறது. தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்கள் எத்தனைபேர்? வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது. கோழை தோல்வியுற்றால், அது கோழைத் தனத்தால் கிடைத்து. ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பற்றாலோ, அவை விதியால் நிர்ணயிகப்பட்டவை! வரலாற்று நதியைத் தனி மனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை. விதியே அழைத்துச்சென்றிருக்கிறது

கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.

மாதர்களாலேயே ஆரம்பமான பிரஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!

ஒன்று நடைப்பெற்ற பின்னால், ‘கொஞ்சம் அப்படிச்செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!

மதி ஏன் தாமதமாகச்சிந்திக்கிறது?

விதி முந்திக்கொண்டு விட்டது!”

கேள்வியாளர் கேட்டார்:

“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக்கூடியது ஒன்றுமே இல்லையா?”

ஞானியார் சொன்னார்:

“இருக்கிறது!

பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.

அதைப்பள்ளம் என்று தெரிய வைத்தது விதி.

விதி வாசலைத் திறந்து கொடுத்தால் மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.

விதி வாசலை மூடிவிட்டால்,மதி அதிலே மோதிக் கொண்டு வேதனை அடைகிறது.

விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.

தந்தையைக்கொன்று சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சில நேரம் விதியை வென்றிருக்கலாம்.
ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்று விடுகிறது. நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாததை உறுதி பெறுவதும், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினாலே. அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.

சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவதால் வந்த மதி.

யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.

தொடக்கம் பலவீனமானால், முடிவு பலமாகிறது.

தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது!

தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

அப்படி யாராவது இருக்கிறார்களா?”

ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.

கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.

மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானியார் அமைதியாக்க் கேட்டார்:

“உங்கள் மதி வேலை செய்யவில்லையா?”

கேள்வியாளர் அமர்ந்தார்.

ஞானியார் சொன்னார்:

ஜனனத்துக்கு முன்பும் மரணத்திற்குப் பின்பும், நாம் எங்கிருந்தோம், எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது. இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது. நான் துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று. காலை வெயிலில், நமது நிழல் நம் உயரத்தை விடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது. மதியத்தில் நம்மை விட அது கூனிக்குறுகி காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது. மாலையில் அது மீண்டும் உயரமாகிறது.

ஆனால் நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது. நம் உருவமே விதி; நம் நிழலே மதி!”

மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.

சபை கலைந்தது.

கேள்வியாளர் மட்டும் வெளியே நின்று கொண்டிருந்தார்.

“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே! மதியால் விதியை ஆராய்ச்சி செய்ய முடியும், ஆட்சி செய்ய முடியாது.” என்றபடி ஞானியார் நடந்தார். கேள்வியாளர் பின் தொடர்ந்தார்.

நன்றி :- கவிஞர் கண்ணதாசன்.
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.5.18

Astrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் : George V (George Frederick Ernest Albert; Birthe 3 June 1865 and died on  20 January 1936) was King of the United Kingdom and the British Dominions, and Emperor of India, from 6 May 1910 until his death in 1936. Time of Birth 1:18 AM London

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 14 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த திங்கட்கிழமை (25-5-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் ஆவார்.அவர் பிறந்தது 03/06/1865 பின்னிரவு சுமார் 1:18 மணியளவில். நன்றி
Friday, May 18, 2018 8:00:00 AM
------------------------------------------
2
Blogger Maheswari Bala said...
Name: King George V
Date of Birth: Saturday, June 03, 1865
Time of Birth: 01:17:59
Place of Birth:London
Longitude: 0 E 10
Latitude: 51 N 29
Friday, May 18, 2018 8:28:00 AM
---------------------------------------
3
Blogger bg said...
King George V son of king Edward VII and also Grandson of Queen Victoria born on June 3 1865 at Marlborough House London.
Friday, May 18, 2018 10:47:00 AM
------------------------------------------------
4
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரப்புதிரில் இடம்பெற்ற ஜாதகம் இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களுடையது.
எஸ். பழனிச்சாமி
Friday, May 18, 2018 11:18:00 AM
----------------------------------------------------
5
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
The native is King George V born on 3rd June 1865 @ 01.18 AM at London, United Kingdom.
Thanks,
K R Ananthakrishnan
Chennai
Friday, May 18, 2018 12:43:00 PM
-----------------------------------------------
6
Blogger ARAVINDHARAJ said...
Name:George V (George Frederick Ernest Albert.)
Date of Birth:03.Jun.1865
Place of Birth:Marlborough House.
Nationality:United Kingdom,India.
Friday, May 18, 2018 12:57:00 PM
------------------------------------------------------
7
Blogger GOWDA PONNUSAMY said...
George V of the United Kingdom born on 3, June 1865.
George V (George Frederick Ernest Albert; 3 June 1865 – 20 January 1936) was King of the United Kingdom and the British Dominions, and Emperor of India, from 6 May 1910 through the First World War (1914–1918) until his death in 1936. George was a grandson of Queen Victoria and Prince Albert and the first cousin of Tsar Nicholas II of Russia and Kaiser Wilhelm II of Germany. From 1877 to 1891,
Regards
-Ponnusamy
Friday, May 18, 2018 2:34:00 PM
-----------------------------------------------
8
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good evening sir the famous celebrity was King George V, Born on 03/06/1865 time1.17am,United Kingdom
Friday, May 18, 2018 4:45:00 PM
------------------------------------------------
9
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 18-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
King of the United Kingdom and the British Dominions, and Emperor of British India,
George V (George Frederick Ernest Albert).
பிறப்பு : சூன் 3, 1865
நேரம் : விடிகாலை 01 மணி 30 நிமிடம்
இடம் : Marlborough House, London.
Friday, May 18, 2018 5:27:00 PM
-----------------------------------------------
10
Blogger Muthu said...
Sir, The answer is King George V, Former King of the United Kingdom. D.o.B. 03.June.1865
Friday, May 18, 2018 8:05:00 PM
------------------------------------------
11
Blogger thozhar pandian said...
ஜூன் 3 1865 இங்கிலாந்தில் பிறந்த அரசர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள்
Friday, May 18, 2018 10:17:00 PM
-------------------------------------------------
12
Blogger RAMVIDVISHAL said...
George Frederick Ernest Albert - King of United Kingdom (George V)
Saturday, May 19, 2018 3:28:00 AM
-------------------------------------------------
13
Blogger angr said...
இங்கிலாந்து மன்னராக இருந்த ஐந்தாம் ஜார்ஜ் அவர்களுடைய ஜாதகம்
Saturday, May 19, 2018 3:34:00 AM
------------------------------------------------------
14
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the Quiz is King George V of Great Britain who was born on June 3rd 1865 in London.
Kind Regards
Rajam Anand
Saturday, May 19, 2018 3:47:00 AM
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 18-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  18-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்

இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்

சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை

வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர். வெளிநாட்டுக்காரர். அகில உலகப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.5.18

மகளிருக்கான முதல் மருத்துவமனை!


மகளிருக்கான முதல் மருத்துவமனை!

ஒரு மருத்துவச்சுடரின் மகத்தான சரிதம்:

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும்  மிஷனரி மருத்துவர்கள்.

அக்காலத்தில் இந்தியர்களின் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்தவர்கள். அவர்களோடு  14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள். வந்த இரு மாதங்களில் அவள் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்.

தந்தையுடன் வேலூரில் விடுமுறையைக் கழித்துகொண்டிருந்தாள் அந்த சிறுமி. அச்சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் அவளைப் புரட்டிப் போட்டன.

என்ன சம்பவங்கள் ?

ஒரு நள்ளிரவில் அவரகள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றான் ஒரு பிராமணன். அவன் கண்கள் டாக்டரம்மாவைத் தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் "என்ன" என்கின்றார்? "என் மனைவிக்குப் பிரசவம். டாக்டரம்மாவை அனுப்ப முடியுமா?"

"இல்லை ..அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள. நான் வரட்டுமா ?" என்கின்றார் அவர்.

"இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்தான்  பிரசவம் பார்க்க வேண்டும் . கட்டுப்பாடு அது. என்னால் மீற முடியாது "என கண்களைத் துடைத்துகொண்டே செல்கின்றார்.

மறுநாள் அந்த கர்ப்பிணியின் இறந்த உடலை  ஐடாவின் வீட்டின் முன்னால் எடுத்துச் செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத் தந்தை அழ, தன்னையும் அறியாமல் ஐடாவும் அழுகின்றாள்.

இரு நாட்கள் கழித்து ஓர்  இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதே கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியேறுகி்றார் அந்த இஸ்லாமியக் கணவர்.

மறுநாள் அதே ஊர்வலம்.

மனதால் வெடித்து அழுதாள் ஐடா, 'என்ன தேசமிது? பெண்களைப்  படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம் . கொடுமை ! '.

இதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டுமென்று அவளுக்குத்  தோன்றியது.

 நிச்சயம் இங்கு மகளிரைப் படிக்க வைக்க முடியாது, நாமே டாக்டராகி இவர்களோடு தங்கிவிட்டால்?

அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து டாக்டரனாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன.

திரும்பி அதே வேலூருக்கு வந்தாள். இனி ஒரு கர்ப்பிணியினை சாக விடமாட்டேன் என்று சொல்லி ஒரு மருத்துவனையைத் தொடங்கினாள்.

இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது. 

பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைக்கு வந்தனர். எந்த மதக் கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இல்லை.

இந்நாட்டுப் பெண்களைப் படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களைக் காப்பாற்றுவேன் என சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் .

அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக தன்னால் அந்தக்கால யதார்த்த வாழ்விற்கு எதைச் செய்ய முடியுமோ அதை செய்தாள்

அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் சொகுசான வாழ்வு.

நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.

அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிகப் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது -

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக !

 உலகின் மிகத் தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர் !

ஏராளமான  மருத்துவ மனைகள் இன்று வந்துவிட்ட போதிலும் , இப்போதும்  மிகப்  பெரியதும், சேவை மனப்பான்மையோடு மிகத்  தரமான சிகிச்சை கொடுப்பதும்  வேலூர் சிஎம்சி மருத்துவமனையே !

 ஐடா யார்? அவருக்கும் இம் மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

நம் மக்களுக்காக அழுதிருக்கிறார், நம் மக்களின் சாவினைத் தடுக்க டாக்டராகி  வந்து இங்கு தன் வாழ்வினை அர்ப்பணித்திருக்கிறார்.

அந்த வணங்கத் தக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடுகின்றது !

  இந்த நல்ல தருணத்தில் ஐடா என்ற அந்த  மகத்தான மருத்துவச் சுடருக்கு  நாமும் நமது இதய பூர்வமான  அஞ்சலிகளைச்  செலுத்துவோம்

மேலதிகத் தகவல்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Ida_S._Scudder
-------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.5.18

விலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்?


விலை கொடுத்து வியாதிகளை ஏன் வாங்குகிறீர்கள்?

*நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும் தண்ணீரைச் சுத்தம் செய்வதற்கு சாதனங்களை வைத்திருக்கிறோம்.*

*இந்த R.O சாதனத்தில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்*.

*அதை உதறி தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்*

*நாம் என்ன நினைப்போம்...அப்பப்பா நல்ல வேளை, இந்த வாட்டர் பில்டர்  இருந்ததால் இந்த தூசுக்கள் நம் உடம்பிற்குள் செல்லவில்லை என்று.*

*ஆனால் நான் என்ன நினைப்பேன் என்றால் இந்த தாதுப் பொருட்கள் இந்தக் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள மனிதர்களின் உடம்பில் செல்லவில்லையே...நிச்சயமாக அவர்கள் நோயோடு இருப்பார்கள் என்று நினைப்பேன்.*

*கண்ணுக்கே தெரியாத அந்தத் தூசுகளை பணம் செலவு செய்து சில கருவிகளை வாங்கி அதிலுள்ள தாதுக்களை பிரித்து எடுத்துக் கீழே கொட்டுகிறோமே!.*

*அது தூசுக்கள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய தாதுப் பொருட்கள் ஆகும்.*

*நீங்கள் தண்ணீரைப் பார்த்தால் அதில் அந்தத் தூசுகள் உங்கள் கண்ணுக்கே தெரியாது..*

*ஆர்.ஓ.சாதனத்தை பயன் படுத்தினால் மட்டுமே அந்தத் தூசுகள் கண்ணுக்குத் தெரியும்.*

*தண்ணீரில் கண்ணுக்கே தெரியாத தூசுகளைப் பார்த்து பயப்படுகிறோமே...*

*ஆனால், கொத்து பரோட்டா, சிக்கன் 65, ஆனியன் ரோஸ்ட் என்று கடினமான பல பொருட்களைச் சாப்பிடும் நாம் கண்ணுக்கே தெரியாத அந்த சின்னச் சின்ன தாதுப் பொருட்களை ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு ஆர்.ஓ வில் ஊற்றி வடிக்கச் செய்ய வேண்டும்..*

*யாருடைய வீட்டில் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு R.O மெஷின் இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ள அனைவரும் உங்கள் இரத்தத்தில் உங்களுக்குத் தேவையான தாதுப் பொருட்கள் இல்லாமல் மருந்துக் கடைகளில் சென்று இந்த தூசுகளை மருந்து என்ற பெயரில் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே அசைக்க இயலாத உண்மை.*

*தண்ணீரில் இருக்கும் அந்தத் தாதுப் பொருட்களை R.O செய்யாமல் குடித்தால் நாம் மருந்து மாத்திரை என்ற தூசுக்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.*

*எனவே தண்ணீரை ஆர்.ஓ (R.O) செய்யக் கூடாது.*

*தண்ணீரை R.O செய்து குடித்தால் மனிதனுக்கு நோய் வரும்.வாழ்நாள் முழுவதுமே தீராது..*

*சரி...*

*மினரல் பாட்டில் வாட்டர் -ஐ பயன்படுத்தலாமா?*

*மினரல் வாட்டர் பயன்படுத்தவே கூடாது.*

*மினரல் வாட்டர் கம்பெனிகளில் Anti Scale Dosing Machine என்று ஒரு மெஷின் இருக்கும்.*

*இந்த மெஷினின் வேலை தண்ணீரில் உள்ள அனைத்து தாதுப் பொருட்களையும் எடுத்து விட்டு சப்பைத் தண்ணீராக மாற்றுகிறது.*

*எனவே நல்ல தண்ணீரை ஒன்றுமில்லாத சப்பைத் தண்ணீராக மாற்றுவதற்கு நாம் பல வேலைகளை செய்து அதை பாட்டிலில் அடைத்துப் பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம்.*

*எனவே தயவு செய்து பாட்டிலில் அடைக்கப் பட்ட மினரல் வாட்டர் என்று அழைக்கப்படும் தண்ணீரில் உள்ள இயற்கையான சத்துகளே இல்லாத Packaged Drinking Water ஐ யாருமே பயன்படுத்தக் கூடாது.*

*குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைதான் என்ன?...*

*தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது.*

*ஆர்.ஓ R.O செய்யக் கூடாது.*

*பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது.*

*வேறு எப்படித்தான் தண்ணீரை சுத்தப் படுத்துவது என்று கேட்டால்,  சாதாரணமாக குழாயில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம்.*

*அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.*

*உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச் சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே.*

*யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க் கிருமியாலும் நோய் வராது.*

*நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்..*

*குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது?...*

*தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது.தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது.*

*சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும்.*

*எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என TV, பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள்.*

*உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டு விட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டிலில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது.*

*அப்பொழுதுதானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டிலில்  தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.*

*மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் R.O பிளான்ட் மற்றும் பாட்டிலில்* *அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை* *புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து* *பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து, அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள்.*

*உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது.*

*இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது,*

*தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நாங்கள் நினைத்தால் உங்களது மன திருப்திக்காக சில காரியங்களை செய்யலாம்.*

 *நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.*

*மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.*

*மண் பானையில் குடி தண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால்* *அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் இயற்கையாகவே சக்தியை அளிக்கிறது.*

*எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த Water Filter மண் பானை ஆகும்.*

*நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் ஆர்.ஓ எனும் குப்பை மிஷினை வாங்கி வைத்து இருக்கிறீர்களே*

*நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும். தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது.*

*ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு Water Filter வாட்டர் பில்டரை யாரும் பயன்படுத்துவதே இல்லை.*

*எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.*

*வெள்ளை நிற பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டலாம்.*

*வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் தண்ணீரை வடி கட்டினால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டு செய்யும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*

இதனால்தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல்
மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடி கட்டிய நீரில் குளிப்பாட்டி குணப் படுத்தி இருக்கிறார்கள்.

எனவே தேவைப் பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப் படுத்தலாம்.

செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலமாகவும் தண்ணீரை சுத்தப் படுத்தலாம்

செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது.

அதில் உள்ள கெட்ட பொருள் அழிக்கப் படுகிறது. தாமிரத்திற்கு அந்த சக்தி இயற்கையிலேயே உள்ளது.

எனவே செம்பு என்ற தாமிர உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க
பயன் படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை
சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கும்.

பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்பதை அறவீர்களா?.

அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம்.

செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப் படுத்த முடியும்.

*எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி,செம்பு என்ற தாமிர உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது* நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு R.O. சிஸ்டத்தை உபயோகிக்க வேண்டும்?.*

இதுவும் இல்லாமல் பூமியில் உள்ள மண்ணில் உள்ள அடுக்குக்கு எத்தகைய தண்ணீரையும் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு.

அதே போல் மண்ணை சுட்டு கேன்டில் முறையில் எவர்சில்வர் வாட்டர் பில்டர் பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.அதுவும் இயற்கையான எளிதான முறைதான்.அதில் மூன்று கேன்டில் உள்ள வாட்டர் பில்டர் அனைத்து குடும்பத்துக்கும் உகந்தது.

*வடிந்த தண்ணீரை மண் பானையில் ஊற்றி மகிழ்வுடன் அருந்துங்கள்.*

*என் அருமை மக்களே!...நோய் தீர்க்கும் குடி தண்ணீரை உதாசீனம் செய்யாதீர்கள்.*

------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.5.18

சிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

சிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

சிறிய பிரச்சினைகள் - புத்த துறவி ஒருவர் சொன்ன ஒரு அருமையான கதை

இதில் புதைந்துள்ள உண்மையை நாம் புரிந்து கொண்டு மனதில் நிறுத்தி விடவேண்டும். அதன் பிறகு நமது வாழ்கையின் மகிழ்ச்சியை குவிக்கிறோமோ இல்லையோ, துயரங்களை கணிசமாக குறைக்கலாம்.

ஒரு பெரிய சக்ரவர்த்திக்கு ஓரே ஒரு மகள். அதாவது ராஜகுமாரி. இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது. கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது. போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள். அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.

மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, இந்த சிறுமி ஒத்துழைக்கவில்லை. கண்ணை கசக்கியும் அழுதும் தொடர்ந்ததால் காயம் பெரியதானது.

அரசருக்கு தன் மகள் காயம் பெரிய வருத்தம் தந்தாலும் மகள் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்துவதை மன்னர் விரும்பவில்லை.

அரண்மனை மருத்துவர் தனது இயலாமையை தெரிவித்து கழண்டு கொண்டார். சிறுமி அழுவதும் கண்களை கசக்குவதும் தொடர்ந்ததால் காயமும் எளிதாக ஆறுவதாக இல்லை.

இந்த செய்தியை அறிந்த பெரியவர் ஒருவர், மருத்துவரல்லாத ஒரு வைத்தியர். இந்த நோயை மருந்து இல்லாமலேயே குணப்படுத்த முன்வந்தார். அரசரும் ஒப்புக்கொண்டார்.

இதை தொடர்ந்து பெரியவர் சிறுமியை பரிசோதித்தார். உதட்டை பிதுக்கினார். பின், அரசரைக்கண்டு தனியாக பேச வேண்டுமே என்றார்.

சிறுமி உள்பட அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸ். மன்னர் வந்தார். மன்னரிடம் ஏதேதோ பெரியவர் விளக்கினார்.

பின் சிறுமியும் கேட்கும்படியாக, அரசரிடம் விளக்கம் தந்தார். இந்த கண்ணில் உண்டான காயம் மிக விரைவில் குணமாகிவிடும் இது பெரிய விஷயமில்லை.

ஆனால், நான் கவலைப்படுவது அதற்காக இல்லை. இந்த பெண்ணுக்கு வால் ஒன்று முளைக்க இருக்கிறது. அது வளர்ந்தால், சுமார் முப்பது அடிவரை வளரும். அதன் பின் என்னாகுமோ எனக்கு தெரியவில்லை. அதுவும் பெரிய ஆபத்தில்லை.

சில நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். சிறிது வால் தோன்றியதும் எனக்கு உடனடியாக அறிவித்து விடவேண்டும். அதற்கு மிக சிறந்த மருந்து ஒன்று உண்டு.

அதைக்கொண்டு வால் வளராமல் செய்துவிடலாம், எவ்வளவு விரைவில் எனக்கு தகவல் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகமாக வால் பெரிதாகாமல் தடுக்கலாம் என்கிறார்.

வாலுள்ள பெண்ணா? சிறுமி, ராஜகுமாரிக்கு பயம் தோன்றியதில் வியப்பில்லை. படுக்கை அறையிலிருந்த இந்த சிறுமி வெளியே வரவில்லை. வால் முளைத்ததா என்று அறிவதிலேயே கவனமாக இருந்தாள்.

கண் வெகுவிரைவிலேயே குணமானது. மருத்துவரல்லாத வைத்தியர், சிறுமியை பரிசோதித்து, வால் முளைப்பதற்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக கூறினார்.

 எல்லாமே நல்லபடியாக முடிந்தது. அரசரும் பொன்னும் பொருளும் அள்ளித்தந்து வைத்தியரை பாராட்டினார். .

இந்த கதை சொல்லும் மிக முக்கிய வாழ்க்கைப்பாடங்கள் என்ன? மருத்துவர் வெற்றி அடைந்தது எப்படி ? இந்த பெண்ணின் கவனத்தை கண்ணிலிருந்து கழட்டி வால் முளைக்கும் என்று பயமுறுத்தி கதை ஒன்றை கட்டி, இல்லாத ஒன்றில் மாத்தி விட்டார் அல்லது திருப்பினார் இந்த வைத்தியர், கண் தானாக சரியாகியது.

இதை இருகோடுகள் தத்துவம் எனவும் சொல்லலாம். அதாவது சிறிய பிரச்சனைகளை ஒரு பெரிய பிரச்சனை இடம் தெரியாமல் அழித்துவிடும்.

 நாம் தினம்தோரும் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனையும் உண்மையாகவே கடுமையானவை இல்லை. ஆனாலும் அதைமட்டுமே நாம் தீவிரமாக உற்று கவனிக்கும் போது, அது அசுர உரு எடுத்து நம்மை பயமுறுத்துகிறது. அதே சமயம் நம் கவனம் திருப்பப்பட்டாலோ, அதே பிரச்சனைகள் நம்மை துன்புறுத்துவது இல்லை.

மனிதன் தன் பிரச்சனைகளிலிருந்து நிரந்தர விடுதலை பெற, ஞானிகள் கண்டுபிடித்து சொன்ன வழி, மனதை தான், தனது என்பதிலிருந்து கழற்றி கடவுள் சமுதாயம் என்பதில் மாற்றிவிட வேண்டும்!.

சுய நலத்தை கழற்றி வைத்துவிட்டு பொதுநல சேவை, சமூக சேவை என்று இறங்கிவிட்டால், நமது பிரச்சனைகள் மற்றவர் பிரச்சனைகள் முன்னால் சிறியதாகமாற, ஒளிந்து ஓடிவிடும்.

இதனால் இரண்டு மிகப்பெரிய லாபம், நமது கவலைகளும் பிரச்சனைகளும் இடம் தெரியாமல் ஓடிவிடும். அதோடு, நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நம்மால் நன்மைதானே?
-----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.5.18

பாவத்தின் தந்தை யார்?


பாவத்தின் தந்தை யார்?

அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது.

பாவத்தின் தந்தை யார்?

அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.

பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.

யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?

அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.

வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன.

ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே!

அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்.

“என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.

“அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்.

பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!

“பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்.

“சொல்கிறேன். ஆனால் இங்கல்ல, எனது வீட்டிற்கு வாரும். அங்குவர தட்சிணையாக ஒரு பொன் காசு தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள்.

அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச் சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்.

“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.

பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!

“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.

“வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.

“சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் அழகை முழுமையாகப் பாருங்கள். அதை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்.

பண்டிதர் அவள் அழகை இரசித்துப் பார்த்தார். உடன் அலங்கரிக்கும் வைர மாலை அவர் கண்களைக் கவர்ந்தது.

“சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் படுத்தார்.

ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள்.

பண்டிதர் துடிதுடித்துப் போனார்.

“இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை, பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?”

தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது. அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது.
கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார்.

சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடலானார். நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.

“மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்.

“மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன். என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.

“ஆஹா! பாவத்தின் தந்தை ஆசையா? பேராசையா. சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்.

“நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.

ஆமாம், பாவத்தின் தந்தை பேராசை தான்!
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!