மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label மனவளக் கட்டுரைகள். Show all posts
Showing posts with label மனவளக் கட்டுரைகள். Show all posts

20.4.22

வாருங்கள் அச்சமின்றி பயணிப்போம்!!


வாருங்கள் அச்சமின்றி பயணிப்போம்!!

விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நாம் கவலையின்றி பயணிக்கிறோம்.*

*அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும் நாம் அச்சமின்றி பயணிக்கிறோம்.*

*அப்படியே இரயிலையும் , பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நாம் நிம்மதியாய் உறங்கிக்கொண்டு பயணிக்கிறோம்...*

*பிறகு ஏனோ, சர்வ வல்லமை படைத்தவன் நம்மோடு பயணித்துக் கொண்டிருந்தும் எல்லாவற்றுக்காகவும் நாம் கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறோம்!?.*

ஆகவே எதற்கும் கவலைப் படாதீர்கள்: கலங்காதீர்கள்!

எல்லாவற்றையும் அவர் - நம்மோடு பயணிக்கும் இறைவன் பார்த்துக்கொள்வார்
---------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.22

பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்குவோம் வாருங்க்ள்!!!!



பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்குவோம் வாருங்க்ள்!!!!

18/03/2022, 07:56 - +91 73959 85927: சிற்பி ஒருவர் தான் சென்ற வழியில் ஒரு கடையருகே, பெரிய பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். அதன் அமைப்பைக் கண்டதும் மகிழ்ந்த அவர், அந்தக் கடைக்காரரிடம் ஐயா, இந்தப் பாறாங்கல்லை நான் எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். 

தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இருப்பதால்தான் போவோர் வருவோரெல்லாம் தடுக்கி விழுகின்றனர்! என்றார்
கடைக்காரர். 

சந்தோஷமாக அதை எடுத்துச்சென்ற சிற்பி அதனை ஒரு கடவுள் சிலையாகச் செதுக்கினர். அதன் அழகில் மயங்கி பலரும் அதனை வாங்கப் போட்டியிட்டனர். அவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் இருக்கவே, சிற்பி அவருக்கே சிலையைக் கொடுத்தார்.

சிலையை வாங்கிய கடைக்காரர். இந்த அழகான சிலையை வடிக்க, எந்த மலையிலிருந்து கல் எடுத்து வந்தீர்கள்? என வினவினார். 

சிற்பி அமைதியாகச் சொன்னார். ஐயா, தங்கள் கடை வாசலில் இடையூறாக இருப்பதாகச் சொல்லி எனக்குத் தந்தீர்களே, அந்தக் கல்தான் இது!

உங்களுக்குத் தடைக் கல்லாய்த் தெரிந்த அது. என் பார்வையில் கடவுளாகத் தெரிந்தது. அதில் இருந்த வேண்டாத பகுதிகளைச் செதுக்கித் தன்ளினேன். உள்ளே இருந்து தெய்வத்தின் உருவம் வெளிப்பட்டது!

நாமும் நம் வாழ்வில் பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்கினால், பலர் விரும்பும் வகையில் எல்லோரும் போற்றும் வண்ணம் வாழலாம்

-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.4.22

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!!!






மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!!!

மகிழ்ச்சிகரமாக  வாழ 40  வழிகள்!!!😀👑✒️😀❤️🤝
1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================================



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.22

பசுக்களின் மேல் பிரியம் வைப்போம்


பசுக்களின் மேல் பிரியம் வைப்போம்

கும்பகோணத்தை மையமாக வைத்து ஸ்ரீமடம்
செயல்பட்டுக் கொண்டிருந்த சமயம்.

மடத்தின் பின்புறம் பெரிய மாட்டுக் கொட்டில்,
மடத்துப் பசுமாடுகளுடன் கூட ஒரு புதிய பசுமாடு வந்து
வைக்கோல் தின்று கொண்டிருந்தது.தண்ணிர்
குடித்துக் கொண்டிருந்தது.

யாருடைய மாடு என்று தெரியவில்லை.
ஒருவரும் மாட்டைத் தேடிக்கொண்டும் வரவில்லை.
அக்கம் பக்கத்தில் தகவல் கொடுத்தும் பயனில்லை.

நாலைந்து நாட்கள் கடந்தன.

"அந்த மாட்டை வெளியே ஓட்டி விடலாமா?"
என்று பெரியவாளிடம் வந்து கேட்டார் கார்வார்.

"வெளிமாடு என்பதால் அந்தப் பசு மாட்டை வெளியே
துரத்தி விடுவதானால், நம்ம மடத்திலுள்ள பல வெளி
மனிதர்களையும் வெளியே அனுப்பி விட வேண்டும்!.."

(மடத்தில் எந்தக் காரியமும் செய்யாமல்,தான்
முக்கியமான பணி செய்வது போல் காட்டிக் கொண்டு
பலர் உண்டு, உறங்கி வந்தார்கள்)

"மாடு வாயில்லாப் பிராணி.அதனுடைய எஜமானன்
யார் என்று தெரியல்லே.நம்ம மாட்டுக் கொட்டகையிலேயே
இருக்கட்டும்.அதை ரட்சிக்க வேண்டியது நமது கடமை."
சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பசுமாடு சினைப்பட்டு
கன்றும் ஈன்றது.

கார்வார் மறுபடியும் வந்து நின்றார் பெரியவாள் முன்.
"சீயம்பால் காலம் முடிஞ்சு போச்சு...நல்ல ஜாதி மாடு...
புஷ்டியான தீனி....வேளைக்கு நாலு சேர் கறக்கிறது..."

"அந்த மாட்டுப் பாலை அப்படியே காளஹஸ்தீஸ்வரர்
கோயில் அபிஷேகத்துக்குக் கொடுத்து விடு.மாடு மடத்துக்குச்
சொந்தமானது இல்லை. பால் மடத்துக்கு வேண்டாம்."

இரண்டு நாட்கள் ஆயின.
"என்ன செய்கிறே அந்த மாட்டுப் பாலை?"
என்று கார்வாரிடம் கேள்வி.

அவர் அவசரம்,அவசரமாக, "தினந்தோறும் நாலு சேர்
பால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு கொடுக்க
ஏற்பாடு செய்துட்டேன்..." என்றார்.

"என்றாலும் தவறுதலாக மடத்து உபயோகத்துக்கு
வந்துடலாம் இல்லையா?...மாட்டையும்,கன்றையும்
ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடு."
அப்படியே செய்தார் கார்வார்.

ஆனால், அந்தக் கோயிலில் ஏற்கனவே நாலைந்து
பசுமாடுகள் இருந்தன.நிர்வகிப்பது கஷ்டமாக இருந்தது.
பசு மாடுகளை கோயில் அதிகாரி ஏலத்துக்குக்
கொண்டு வந்து விட்டார்.

ஏலத்தில் விட்டால், அவையெல்லாம் நேரே கசாப்புக்
கடைக்குத் தான் போகும் என்ற அச்சம் பெரியவாளுக்கு.

செல்வந்தரான ஒரு பக்தரிடம் சொல்லி எல்லா
மாடுகளையும் ஏலத்தில் எடுக்கச் சொன்னார்கள்.

பின்னர், அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களைப்
பார்த்து ஒவ்வொரு பசுமாடாகக் கொடுத்து விட்டார்கள்.
பசுக்களிடம் அவ்வளவு வாத்ஸல்யம் பெரியவாளுக்கு.
----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.4.22

கவன ஈர்ப்பின் முக்கியத்துவம்



கவன ஈர்ப்பின் முக்கியத்துவம்

தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான விசயத்தை தொடர்ந்து செய்து வந்தார்.

மகளுடன் சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார்.

பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார்.

அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்லிக்கொண்டே போவார். 

உதாரணமாக ஒரு டீ கடை என்றால்...

 "எனக்குத் தெரிஞ்சவர் இந்த கடைக்காரர்.

இங்கே 10 வருஷமாக டீ கடை வெச்சிருக்கார்.

தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறந்து விடுவார். 

அதுக்காக, 

4 மணிக்கே எழுந்து விடுவார். 

ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும். 

ஒரு நாளில் 17 மணி நேரம் வேலை செய்கிறார். 

அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேத்தான் இருப்பார்.

நீ கிளாஸ்ல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன். 

ஆனால், 

இவர் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. 

நின்றபடியே வேலை செய்தால்தான் வேலை நடக்கும். 

ஒரு குறிப்பிட்ட நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கும். 

அந்த நேரத்துல யாரையும் அதிகம் காத்திருக்க வைக்க முடியாது.

சுறுசுறுப்பா டீ கொடுக்கணும். டேஸ்ட்டும் நல்லா இருக்கணும்.''

இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம், சவால்கள் எனச் சொல்வார். 

அவர் செல்ல மகளும் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்பாள். 

அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியவாறு அழைத்துச் சென்று பள்ளியில் விடுவார் தன் மகளை.

ஒரு நாள் வகுப்பில் ஒரு பாடம் நடத்தும்போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது.

உடனே எழுந்த அந்தப்பெண், அதுபற்றி தனக்குத் தெரிந்ததை எல்லாம் கோர்வையாக சொல்லிக்கொண்டே போனாள்.

அது மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்த வகுப்பு ஆசிரியைக்கும் தெரியாத பல செய்திகளை வெளிப்படுத்துவதுமான ஒரு நிகழ்வாக இருந்தது.

அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம், அவர்களின் பொருளாதார சூழல் ஆகியவை வெளிப்பட்டன.

அவள் வகுப்பு ஆசிரியை வியந்து கைதட்டினார். 

மற்ற குழந்தைகளும் கூட அவளை வியந்து பார்த்தது. 

தன் தந்தைக்கு மனதார நன்றி சொன்னாள் அந்தச் செல்ல மகள்.

பொதுவாக, பொருளாதார ரீதியாக எளிய பணிகளைச் செய்பவர்களை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகம் செய்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்..?!

"சரியா படிக்கலைன்னா இப்படித்தான் நீயும் கூலி வேலை செய்து கஷ்டப்படணும்'' என்கிறோம்.

அதாவது, நம் குழந்தைகளுக்குள் பயத்தைப் புகுத்தி அதன் மூலமாக புது பொறுப்பை உருவாக்க இதை ஓர் உத்தியாக நினைக்கிறோம். 

ஆனால், 

அப்படிச் சொல்வதால் அவர்களுக்குள் பயம் மட்டுமா உருவாகிறது? 
நிச்சயமாக இல்லை!

அந்தப் பணியைத் தாழ்வாகவும், அதைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே மதிப்பும் குறைகிறது.

இது சரியான வழிமுறையா?

இங்கே செய்யப்படும் எல்லாவிதமான பணிகளும் முக்கியமானவைகளே.

எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே
என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்துவது மிக முக்கியம். 
 
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.             

பின் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே.
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.3.22

இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்துவர....!!!!



இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்துவர....!!!!

#இனியாவதுபின்பற்றுங்கள்.

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ..
இது சொந்த வீடா ..வாடகை வீடா ... 
வாடகை எவ்வளவு.... என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் ..
(அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் .
(அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. 
காபியா டீயா என்றால் .. 
கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள். அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள்.
இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது ..
அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை
அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க ... ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8. சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட "சாப்பிடுறீங்களா" என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள். மாறாக "சாப்பிடுங்க "என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க.
உறவுகளை வளர்க்க அதுவே உன்னத வழி.

9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்... 
வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்.. 
கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10. friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு ...பொதுவுல ...அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.

11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் ... பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் ...இப்படி சொல்றவங்க கிட்ட ../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க.
அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.

12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌.... 
வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்..
இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்.... 
இதை உணருங்கள்.

13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்..
மாறாக அன்பை காட்டுங்கள்.அதற்கே உலகளவில் அதிக demand.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் ... என்று...
பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்..
அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.

16.மிக முக்கியமான இன்னொன்று பிள்ளைக்கு கல்யாணமாயிடுச்சா?
குழந்தை எதுவும் ?
எத்தனை வருஷமாச்சு?
டாக்டரை எதுவும் பார்த்தீங்களா?
இது ஒரு கேவலமான உரையாடல்

17.இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள.
மற்ற அனைத்து நண்பர்களிடம் நாசூக்காகவும்,இயல்பாகவும் பழக கற்று கொள்ளுங்கள்.
--------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.3.22

இதல்லவோ சிறந்த நிர்வாகம்!

இதல்லவோ சிறந்த நிர்வாகம்!

 டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஜாம்ஷெட்பூரில் டாடா ஸ்டீல் ஊழியர்களுடன் வாராந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தார்.

 ஒரு தொழிலாளி ஒரு தீவிரமான பிரச்சினையை எடுத்துக் கொண்டார்.

 தொழிலாளர்களுக்கான கழிப்பறைகளின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது என்றார்.

 அதேசமயம், எக்ஸிகியூட்டிவ் கழிவறைகளின் தூய்மை மற்றும் சுகாதாரம் எப்போதும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 அதைச் சரியாக அமைக்க எவ்வளவு நேரம் தேவை என்று தலைவர் தனது உயர் அதிகாரியிடம் கேட்டார்.

 அதை சரி செய்ய நிர்வாகி ஒரு மாதம் கேட்டார்.

 சேர்மன், "நான் அதை ஒரு நாளில் செய்துவிடுகிறேன். எனக்கு ஒரு தச்சனை அனுப்பு" என்றார்.

 அடுத்த நாள், தச்சன் வந்தபோது, ​​*அவர் சைன் போர்டுகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்*.

 தொழிலாளர் கழிப்பறையில் உள்ள அடையாள பலகை *"நிர்வாகிகள்"* மற்றும் நிர்வாகிகளின் கழிப்பறையில் *"தொழிலாளர்கள்"* என்று காட்டப்பட்டுள்ளது.

 தலைவர் *இந்த அடையாளத்தை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்* என்று அறிவுறுத்தினார்.

 இரண்டு கழிப்பறைகளின் தரம் அடுத்த மூன்று நாட்களில் சம நிலைக்கு வந்தது.

 *தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது**

 ஒழுக்கம்:
 *_பிரச்சினையை கண்டறிவதற்கு விமர்சன சிந்தனை தேவை_*
 **ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை_*

 இது கதையல்ல உண்மை சம்பவம்...
-----------------------------------------------------------
 படித்ததில் பிடித்தது...
 அன்புடன்.
வாத்தியார்
===========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.3.22

நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் நல்லது!!!

நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான் நல்லது!!!

நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .

ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .

அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .

எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .

தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?

நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .

ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !

நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .

ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !

நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .

ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !

நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .

ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !

நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .

இன்று போல் நாளையில்லை . . .

அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !

அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !

அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !

அதில் பாபம் ஏதுமில்லை !

அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !

 உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாகவே இரு !
-------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.4.21

எது உங்கள் கையில்?



எது உங்கள் கையில்?

பசியை கொடுத்தவனே உணவையும் கொடுப்பான் வலியை கொடுத்தவனே மீள வழியை கொடுப்பான். 

தேடல் மட்டுமே உன் கையில்.

இன்றைய சிந்தனை 
.................................................................

"தேடல் இல்லா வாழ்க்கை...!"
..........................................................

உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கும் ஓட்டம் மனிதனின் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

*"தேடல் இல்லா வாழ்க்கை, கடலினில் விடப்பட்ட காகிதக் கப்பலை போல திசையறியாது மூழ்கிப் போகும்"*_

படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் அனைவரின்  கனவும் வாழ்க்கையில் ஒரு பெரிய நிலையை அடைவதே!, 

அதற்கான தகுதியை நம் கல்விமுறை கற்றுக் கொடுக்கிறதா....? என்றால் அங்கு பெரும் கேள்விக் குறிதான் நம் முன் நிற்கும்...

கல்லூரி என்னும் சிறு கூட்டிலிருந்து வேலை தேடிவரும் அனைவரின் கனவும் கையில் நல்ல வேலை, பை நிறைய ஊதியம், மகிழ்ச்சியான வாழ்க்கை இது மட்டும் தான்...

பெரும்பாலானோர் கற்றுகொள்ள விரும்பவில்லை. கற்றதை விற்கவே விரும்புகின்றனர். அப்படியே நாம் விற்க விரும்பினாலும், இங்கு யாரும் அதை வாங்க விரும்புவதில்லை...

வேலை தேடி நகரம் என்னும் பெருங்கடலுக்குள் நுழைந்து முத்தெடுக்க அனைவருக்கும் ஆசைதான்..

அது எந்த அளவு அனைவருக்கும் சாத்தியம் என்று தெரியவில்லை, பெரும்பாலானோருக்கு அது பலமுறை தோல்வியைதான் பரிசளித்திருக்கிறது...

கிராமங்களில் இருந்து வருவோரின் நிலைமை அதைவிட அபாயகரமாக இருக்கும்.. இரண்டு உலகங்கள்,  அறிமுகமில்லா உலகம், அறிமுகமில்லா மனிதர்கள், எனக் காணும் அனைத்தும் இங்கு புதிதாகதான் இருக்கும்...

*"இருபது வருடங்கள் கற்ற கல்வி சொல்லி கொடுக்காத பாடத்தை, ஒரு வருட தேடல் கற்று கொடுத்து விடும்...!*_

முதலில் நமக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் வெற்றிபெற கல்வி, அனுபவம் இரண்டு மட்டும் போதாது. அடுத்தது என்ன என்ன என்ற தேடல் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது...

உங்கள் தடைகளை உடைத்தெறிந்து புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி புதிதாக கற்க முடியவில்லையெனில், தேர்ந்தெடுத்த துறையில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லையென்று சாதித்துக் காட்டவேண்டும். 

தேடல் உள்ளவரை மட்டுமே இந்த வாழ்க்கையின் பல அழகிய தருணங்களை நம்மால் உணர முடியும். அந்த தேடல் மாறிக்கொண்டே  இருக்கும். தேடல் ஒன்றே நிரந்தரம்...

*ஆம் நண்பர்களே...!*

⚫ *தேடுங்கள்...! தேடுங்கள்...!! உங்கள் எல்லை எதுவென்று தெரியும் வரை ஓடுங்கள். வெற்றி உங்களை தழுவும் வரை தேடிக்கொண்டே இருங்கள். வெற்றி வெகு தூரமில்லை.விடியும் பொழுது வெற்றியுடன் விடியட்டும்...!*
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.4.21

வலிகளே நல்ல வழிகாட்டி...!


வலிகளே நல்ல வழிகாட்டி...!

வலிகளை ஏற்றுக்கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காணமுடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும்தான்...

வலி வந்தபோதுதான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடுதான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டதுதான் இந்த வாழ்க்கை...

உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும்போதுதான் அழகான உடற்கட்டைப் பெறமுடிகிறது...

இப்படித்தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக்கொள்ளும்போதுதான் வளமான வாழ்க்கை வாழ முடியும்...

'வலியை அனுபவியுங்கள்'; அதை பரிபூரணமாக உணருங்கள், ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள்...

*'வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகிவிடும்', வலி என்பது ஒரு துன்பம். அந்த துன்பம் ஓர் எச்சரிக்கை; அது ஒரு வழிக்காட்டியும் கூட...!*

வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழிகாட்டும்...

நமக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும், நமக்கான மாற்றத்திற்கானதாக மாற்றிக் கொள்ளும் சூத்திரம் 
தெரிந்தால் போதும்; அது உடல் வலியானாலும், மன வலியானாலும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது...

வலிகளை வெற்றிகளாக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...

*ஆம் நண்பர்களே...!*

*அனைத்து வலிகளும் நம்மைப் பக்குவப்படுத்தவே என்பதை புரிந்து கொள்ளுங்கள்...!*

*நாம் குறிக்கோளை எட்டிட வேண்டுமானால் சிறிய வலிகளைப் பொறுத்துத்தான் ஆகவேண்டும்...!!*

*வலிகளையும், இடையுறுகளையும் தாண்டிச் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்...!!!*
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.2.21

அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு..??*


அறிவுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன வேறுபாடு..??* 

*சிந்தனை கதை...* 

*அறிவுக்கும் புத்திசாலித்* *தனத்துக்கும் என்ன வேறுபாடு..??* 

சாக்ரடீஸின் சீடர் ஒருவர்

"ஐயனே, அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வேறுபாடு?'' என்று கேட்டார்

உடனே அவர், "அதோ இருக்கிறாரே ஒரு கிழவர், அவரிடம் சென்று இங்கிருந்து கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் என்று கேட்டு வா!'' என்றார்

சீடரும் அந்தக் கிழவரிடம் சென்று அவ்வாறே கேட்டார்

அவர் பதிலேதும் கூறவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். பலன் இல்லை

கிழவருக்குப் புத்திசுவாதீனம் இல்லையோ என்று நினைத்து, வந்த வழியே திரும்பிச் சில அடிகள் எடுத்து வைத்தார் அந்தச் சீடர்

உடனே கிழவர் அவரை அழைத்து, "நீ பத்து நிமிடங்களில் கிராமத்தை அடையலாம்!'' என்றார்

"நீங்கள் ஏன் இந்தப் பதிலை நான் கேட்டவுடன் கூறவில்லை?'' என்று சந்தேகத்துடன் கேட்டார் சீடர்

"நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய் என்பதைப் பார்க்காமல் எப்படியப்பா, நீ கிராமத்தை எவ்வளவு நேரத்தில் அடைவாய் என்பதைக் கூற முடியும்?'' என்று திருப்பிக் கேட்டார் அந்தக் கிழவர்

சீடர் வியப்பும் மரியாதையுமாக சாக்ரடீஸிடம் வந்து நடந்ததைக் கூறியதும்... 

சாக்ரடீஸ், "அதற்குப் பெயர் தான் புத்திசாலித்தனம்!'' என்றார்..!! 

படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்

=================== 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.1.21

30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்!!!


30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்!!! 

முப்பது வருஷத்துக்கு முன்னால நாம்ம ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... 

ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும்.

 பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.

சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.

 பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு

ஊர்க்கத முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.

 மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு சீட்டு விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.

 சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.

 விசேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.

 வழ வழப்பான சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.

இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.

 சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.

 இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.

 

எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.

 இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல , கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு.... இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்கும் தலைமுறைகளை பாக்க பரிதாபமாக இருக்கு.

இவர்கள் இழந்தது எத்தனையோ?.

இழக்க போவது எத்தனையோ?

 காக்கா கத்துது...உறவுகள்  வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.

 விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.🙏

 இந்த தலைமுறை மாறினால் மட்டுமே

அடுத்த தலைமுறை இழந்ததை மீட்கலாம்.

 பதிவு பிடித்து ஷேர் பண்ணினால் மட்டும் அல்லாமல்,

இந்த மொபைல் அடிமைத்தனத்திலுருந்து வாருங்கள்.

உங்கள் அடுத்த தலைமுறையோடு..

 படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.1.21

சினத்தைத் தவிர்த்து சிறப்பாக வாழ்வோம்!!!


சினத்தைத் தவிர்த்து சிறப்பாக வாழ்வோம்!!! 

'' சினத்தை தவிர்ப்போம்..''

.................................. 

நாம் ஒரு செயலை சரி என்று தீர்மானித்துக் கொண்டு வைத்து இருப்போம். அந்த செயலை மற்றொருவர் மீறும் போது நம்மை அறியாமலே நமக்கு மற்றவர் மீது சினம் வருவதற்கான முதல் படி ஆகும்

உலகத்தில் உள்ள அனைவரையும் நம்மால் சரியான நேர்கோட்டில் கொண்டு செல்ல முடியாது. இதனால், நமது வேலையும் செய்யமுடியாமல் தேவையில்லாத பிரச்சனைகளில் நாம் செல்ல நேர்ந்திடும்

ஓர் அரசன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடிய வில்லை

ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்து இருந்தார்.அவரை சந்தித்து தன் குறையை சொன்னான் அந்த மன்னன்.. 

அவர் மன்னனிடம்,' 

' என்னிடம் அதியமான பொன்னால் செய்த ஒரு குவலை ஒன்று இருக்கிறது..அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம் இல்லாமல் போய்விடும் என்று சொல்லி அந்த குவளையை அவனிடம் கொடுத்தார்

"உனக்குச் சினம் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக் குடி; பிறகு சினமே வராது" என்று கூறிவிட்டு சென்றார்

அன்றில் இருந்து அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது

பல வருடங்கள் சென்றன.அந்த குவளையை கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார்

அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவலை கொடுத்ததற்காக பலமுறை நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்

"மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்ப வில்லை. அது அதிசயமான குவளை அல்ல,. சாதாரணமான. குவளைதான்... 

''சினம்'' வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம்தானே குறையும்.. 

தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன

ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறினார்

ஆம்.,நண்பர்களே.., 

மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும்அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

நாம் கோபப்படும் போது மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது

எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்

எனவே, சினத்தை தணித்து அனைவரிடத்திலும்,அன்பு செலுத்தி, நற்புகழ் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.🙏🏻🌺💐

 படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்

==========================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.11.20

ஆர்வமும் திறமையும் ஆகிய இரண்டில் எது முக்கியம்?


ஆர்வமும் திறமையும் ஆகிய இரண்டில் எது முக்கியம்?

*"ஆர்வமும்,திறமையும்..''*

தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம்தான் அடிப்படை. ஆனால்,  ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்து விடாது. 

*எனவே திறமையில் சறுக்கல்கள் வரும்போது ஆர்வத்துக்குச் சற்றே அணை போட்டு விட வேண்டும்.* 

திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக் கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு அதைப் முதன்மை துறையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆர்வம் அதிகமாக உள்ளதை இழந்து விடாமல், பொழுது போக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக் கொள்ளலாம்.

ஆர்வம் மாறிக் கொண்டே இருக்கும்.ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும்

அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே தங்களது திறமையைக் கண்டு கொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு  சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.

ஒரு சிங்கம் ஒன்று ஒரு காட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.. அதற்கு ஒரு ஆசை. தன் காட்டில் வாழ்கின்ற மிருகங்களில் எதற்கு அதிக திறமை இருக்கிறது என்று சோதிக்கப் பார்க்க விரும்பியது..

அன்று மாலை காட்டில் உள்ள எல்லா மிருகங்களை அழைத்து தான் நடத்தப் போகும்  சோதனையை விளக்கி, நாளை காலையில் எல்லா மிருகங்களும் என் கூட்டுக்கு வர  வேண்டும் என்று சொல்லியது.

அன்றிரவு மிருகங்கள் யார் அந்த திறமைசாலி என்று குழம்பிக் கொண்டே உறங்க சென்றன!!!!  காலையில் சிங்கம் நம் திறமையை எப்படி சோதனை செய்யப் போகிறதோ?  என்ற  கவலையில் எல்லா மிருகங்களும் சிங்கத்தின் இருப்பிடத்துக்கு வந்தன..கூண்டில்இருந்து வெளியே வந்த சிங்கம் அங்கு கூடி இருந்த மிருகங்களை பார்த்து,  "அதோ தொலைவில் தெரிகிறதே, அந்த பனை மரத்தின் உச்சிக்கு யார் முதலில் சென்று வருகிறீர்களோ,  அவரே சிறந்த திறமைசாலி என்றது.

திகைத்துபோன மிருகங்கள் மரத்தை நோக்கி ஒடி சென்றன. அதில் ஏறத் தொடங்கின. முதலில் மரத்தின் உச்சியை அணில் தொட்டது. 

மற்ற எவற்றாலும் பாதி உயரம் கூட ஏற முடிய வில்லை. வெற்றி பெற்ற அணிலோடு காட்டின் தலைவனான தான் போட்டி இடப் போவதாக அறிவித்தது சிங்கம்..

ஆனால் அந்த சிங்கத்தால் மரத்தில் ஏற முடியாமல்  தோல்வியைத் தழுவியது. 

குழம்பிப்போன சிங்கம் ஒவ்வொரு மிருகத்திடமும் அதனதன் திறமையை கேட்டு அறிந்தது. சிறுத்தை நன்றாக ஓடுவேன் என்றது. குரங்கு மரம் விட்டு மரம் தாவுவேன் என்றது.யானை நான் அதிக எடையை சுமப்பேன் என்றது

 இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு திறமை உண்டு என்பதை அறிந்து கொண்டது சிங்கம் திறமையை சோதிக்க அனைவருக்கும் ஒரே மாதிரி போட்டி வைத்த தனது மடமையை எண்ணி வருந்திய சிங்கம்,பின்னர் தெளிவு அடைந்தது..

ஆம்.,நண்பர்களே..,

*ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்றுதான்  தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.* 

*எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக் கொள்வதுதான் சிறந்தது..*

*ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்து விடும்..*
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!