மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.19

Astrology: Jothidam: 29-3-2019 புதிருக்கான விடை!!!!

Astrology: Jothidam: 29-3-2019 புதிருக்கான விடை!!!!

அம்மணி  ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து,  அந்த அம்மணி,  திருமணம் நடந்து,  ஒரு நாள் கூட கணவன் வீட்டில் வாழாமல் தன் தாய் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டாள். கணவன் குடும்பத்தார் தங்கமானவர்கள். யாருடைய சிபாரிசும் எடுபடவில்லை. எனக்குத் திருமண வாழ்வே வேண்டாம் என்று கூறி திரும்பிச் செல்ல மறுத்துவிட்டாள்.  தொட்டால் பூ மலரும். கை படாமல் அவள் உதிர்ந்தாள்!!!! ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி பதில் சொல்லுங்கள்!!!! ‘என்று கேட்டிருந்தேன்.

சரியான விடை: குடும்ப வாழ்க்கையே இல்லாத ஜாதகம் அது. குடும்ப ஸ்தானமாகிய 2ம் வீடு மொத்தமாகக் கெட்டுள்ளது. குடும்ப ஸ்தானத்தில் 12ம் வீட்டு அதிபதி சந்திரன் உடன் ராகுவின் கூட்டணி. அந்த வீட்டுக்காரன் புதன் நீசமானதோடு லக்கினத்திற்கு எட்டில். உடன் கேது. மற்றும் மாந்தி
4 மற்றும் 9ம் வீட்டுக்குரியவனும் யோககாரகனுமான செவ்வாய் நீசமானதோடு மட்டுமல்லாமல் 12ல் மறைவு (விரைய ஸ்தானம்)
பெண்களின் ஜாதகத்தில் பாக்கியாதிபதி நீசமாகி கெட்டிருந்தால் அவயோகம்.
சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் 8ல் மேலும் லக்கினாதிபதி பாப கர்த்தாரி யோகத்தில்
மேற்கூரிய காரணங்களால் ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய் விட்டது.

புதிருக்கான பதிலை 11 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 5-4-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger csubramoniam said...
ஐயா,
கேள்விக்கான பதில்
1 லக்கினாதிபதி சூரியன் எட்டில்
2 இரண்டாம் அதிபதி புதனும் நீசமாகி எட்டில் கூடவே சுக்ரனும் மாந்தியும் ,புதனும் சுக்ரனும் நீச்சபங்கமானதாலும் குருவின் பார்வை ஏழாம் இடத்திற்கு இருப்பதாலும் திருமணம் ஆனது
3 .பாக்கியாதிபதி செவ்வாய் விரயத்தில்
4 .திருமணத்திற்கான அனைத்து கிரகங்குலும் மறைவிடத்தில்
5 மேலும் பெண்களுக்கு எட்டாம் இடமே மாங்கல்ய ஸ்தானமாக கருதப்படுகிறது,இரண்டில் ராகு சந்திரனுடன்
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, March 29, 2019 1:58:00 PM
---------------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
லக்கினம், அதன் அதிபதி(8ல் மறைவு), 7ம் வீடு, மூன்றுமே வலுவிழந்த ஜாதகம்.
அம்சத்தில் நீசம் பெற்ற 7ம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அமர்ந்து தனது வீட்டினை பார்த்து வலுவிழக்கச் செய்து திருமண வாழ்க்கையினை சர்வநாசம் செய்தது.
மேலும் வாக்கு, குடும்ப தானத்தில் சந்திரனுடன் ராகு சேர்க்கை ஜாதகியின் மனநிலையில் வெறுப்பு அலட்சியம் ஏற்படுத்தியது.
4ம் வீட்டு, சுகஸ்தான அதிபதி செவ்வாய் ஆகி, அவர் நீசமும் வர்க்கோத்தமுமாகி 12ல் விரயத்தில் வீழ்ந்து வாழ்க்கை சுகத்த்தினை விரட்டியடித்துள்ளார்.
மொத்தத்தில் பாபக்கிரகங்கள் வலுப்பெற்று குடும்ப, மாங்கல்ய பலன்களை அடித்து விரட்டியிருக்கிறது.
இப்படி ஒரு ஜாதகம் அமையாது அந்தநேரம் கடந்து போயிருக்கலாம் என்றுதான் சொல்வேன்.
Friday, March 29, 2019 5:27:00 PM
---------------------------------------------------------------
3
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர்: தொடாமல் அவள் உதிர்ந்தாள்!
ஆசிரியருக்கு வணக்கம்.
சிம்ம லக்கினம், கன்னி ராசி ஜாதகி. கால சர்ப்ப தோஷ ஜாதகம்.
பெண்மணிக்கு திருமணம் நடந்தது. ஒரு நாள் கூட கணவன் வீட்டில் வாழவில்லை. தாய் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டாள்.
எனக்குத் திருமண வாழ்வே வேண்டாம் என்று கூறி திரும்பிச் செல்ல மறுத்துவிட்டாள்.
"தொட்டால் பூ மலரும். கை படாமல் அவள் உதிர்ந்தாள்!!!!"ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
கன்னி ராசி என்றாலே கண்ணீர் விடும் ராசி என்று சொல்வார்கள்.
1) லக்கினாதிபதி சூரியன் 8ல் தனுசு ராசியில் கேதுவுடன் சேர்ந்து கெட்டு விட்டார். மேலும் அம்சத்தில் நீசம் அடைந்து மாங்கல்ய தோஷத்தை உண்டாக்கினார். கூடவே மாந்தியும் சேர்ந்து குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்.
2) குடும்பாதிபதி வர்கோத்தம நீச‌ புதனும் 8ல் அமர்ந்து கெட்டுள்ளார். உச்ச சுக்கிரன் கூடவே உள்ளதால் நீச பங்கம் அடைந்து திருமண பாக்கியம் கிட்டியது.
3) குடும்ப ஸ்தானமான கன்னியில் 12ம் அதிபதி சந்திரன் ராகுவுடன் கை கோர்த்து கொண்டு ஈகோவை ஏற்படுத்தினார்.
3)பாபகத்திரியின் பிடியிலுள்ள‌ லக்கினத்தில் 6.7ம் இட அதிபதியான சனி அமர்வு மற்றும் அம்சத்தில் நீசம்.
4) சயன சுக ஸ்தானமான 12ல் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்து நீசம் அடைந்துள்ளார். கடுமையான செவ்வாய் தோச ஜாதகம்.
மொத்தத்தில், ஜாதகியின் லக்கினம், குடும்ப ஸ்தானம், களத்திரம்,
8மிடமான மாங்கல்ய ஸ்தானம், 12மிடம் எல்லாம் கெட்டுள்ளது. மேற்கண்ட காரணங்கள் மற்றும் ஜாதகியின் திருமண வயதில் வந்த ராகு தசை எல்லாம் சேர்ந்து கொண்டு மண வாழ்க்கையை முறித்து அவரை தாய் வீட்டிற்கு அனுப்பியது.
வழக்கம் போல் ஆசிரியரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Friday, March 29, 2019 5:37:00 PM
----------------------------------------------
4
Blogger TRB. Sanjai Kumarr said...
1. Maandi in 7th house in Navamsa, which destroyed the family life.
2. The lord of pleasure in this horoscope is mars, who is hidden in 12th house.
(Sugha bhava 4th house) in rasi chart
3. Further, bhagyadipati (lord of 9th house) also mars, hidden in 12th house. (Same
mars is hidden in 12th house in navamsa adding the malefic effects.
4. Rahu in 2nd house also denied family life.
5. Lord of comfort venus is hidden in 8th house...also it is in conjuction with
maandi...
These things of the horoscope denied family life to the native.
Thanks & Regards,
TRB. Sanjai Kumarr
Friday, March 29, 2019 7:52:00 PM
-----------------------------------------
5
Blogger J Murugan said...
வணக்கம் ஐயா
1. சிம்ம இலக்கினம், இலக்கினாதிபதி சூரியன் எட்டில் மறைவு மற்றும் கேது பகவான் பிடியில்.
2. களத்திர ஸ்தானம் பூர்வபுண்யாதிபதி குரு பார்வை பெற்றதால், திருமணத்தை நடத்தி வைத்தாலும்
3. இலக்கினத்தில் அமர்ந்து ஏழாமிடத்தை நேரடியாகப் தாக்கும் ஆறாம் இடத்தானின்(சனியின்) பார்வையாலும்
4. 2-8இல் ராகு-கேது, குடும்பாதிபதி புதன் இராசி மற்றும் அம்சத்தில் நீசம் அடைந்ததோடு அல்லாமல் எட்டாம் இட அமர்வுடன் கேதுவின் பிடி ஆகிய காரணங்களால் குடும்ப வாழ்க்கை மறுக்கப்பட்டது.
5. பொதுவான மங்கள காரகனும் மற்றும் சிம்ம இலக்கினத்தின் சுகபாக்கியாதிபதியுமாகிய செவ்வாய் இராசி மற்றும் அம்சத்தில் நீசமடைந்தது மற்றும் விரய ஸ்தானம் சென்று இல்லற சுகம் மற்றும் குழந்தை பாக்கியத்தையும் தடை செய்தது.
6. கட்டில் சுகத்தைக் குறிக்கும் 12ஆம் இட அதிபதி சந்திரனும் இராகுவிடம் பிடிபட்டார்.
7. களத்திர காரகன் சுக்கிரனும் கேதுவிடம் பிடிபட்டு,
8. மனோகாரகன் சந்திரன் ராகுவால் பாதிப்பு, மூன்றாம் இட அதிபதி சுக்கிரன் கேதுவால் பாதிப்பு மற்றும் மூன்றாம் இடத்தில் சனியின் பார்வை ஆகியவற்றால் யார் சொல்லியும் கேளாத மனநிலை ஏற்பட்டு
இலக்கினம் பாப கர்த்தாரி யோகத்தால் பாதிப்பு என்று இல்லற வாழ்க்கைக்கு உரிய அனைத்து கதவுகளும் மூடப்பட்டதால் ஜாதகருக்கு இந்நிலை ஏற்பட்டது.
பிழைகள் இருப்பின் பொருத்தருளுக பெரியோரே....
முருகன் ஜெயராமன்
புதுச்சேரி.
Friday, March 29, 2019 9:00:00 PM
------------------------------------------------------
6
Blogger Chandrasekaran Suryanarayana said...
Horoscope lesson- 03-29-2019
வணக்கம்.
25 மார்ச் மாதம் 1978, மாலை 4.30 மணிக்கு, ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி சிம்ம லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகி பிறந்தார்.
சிம்ம லக்கினத்திற்கு சூரியன் லக்கினாதிபதி. செவ்வாய் யோககாரகன் (4 & 9 பாக்கியஸ்தான வீட்டிற்கும், உரியவன்) புதன் (2 & பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன்) ஆகவே இவர்கள் மூவரும் ஜாதகத்தில் வலிமையுடன் இருப்பது முக்கியம்.
சிம்ம லக்கினம். அதிகாரமும் பலமும் எப்பொழுதும் பெற விரும்புவார். பார்வைக்கு கவர்ச்சியாக இருக்க கூடியவர். தைரியமிக்கவர். கோபமிக்கவர். எதிரிகளை தைரியமாக எதிர்ப்பவர். சிம்மத்தில் சனி இருந்தால் பிடிவாத குண முடையவர். எதற்கும் வளைந்து போகாதவர்.
லக்கினத்தில் சனி(3 பரல்)இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம். கீழ்த்தரமான சகவாசம் உடையவர்.
திருமணம் முடிந்து பிரிந்து இருப்பதற்கான காரணம் :
1. லக்கினம் (28 பரல்) பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் செவ்வாய் மறு பக்கம் ராகு) எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும். லக்கினம் வர்கோத்தமம்.
2. லக்கினாதிபதி சூரியன் 8ம் வீட்டில் கேதுவுடன், நீசமான புதனுடன் கூட்டு சூரியன் (3 பரல்) 8ல் இருந்தால் ஜாதகி துன்பத்தில் மூழ்க நேரிடும். நவாம்சத்தில் சூரியன் துலா ராசியில் நீசம். சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 8-ம் இல்லத்தில் வீற்றிருந்தால் ஜாதகி பிடிவாத குணம் உடையவர்.
3. 7ம் வீட்டு அதிபதி சனி (3 பரல்) நவாம்சத்தில் மேஷ ராசியில் நீசம். ஏழாம் வீட்டு அதிபதி நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் திருமணம் பிரிவில்தான் முடியும். 43 வயதில் (2021) சனி மகா தசை ஆரம்பம்.
4. 12ம் வீட்டில் அமர்ந்துள்ள செவ்வாயின் 8ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதால் திருமணம் பிரிவில்தான் முடியும். 7ம் வீட்டை தீய கிரகம் பார்த்தாலும் திருமணம் பிரிவில்தான் முடியும்.
9ம் வீட்டு பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய் 12ல் கடக ராசியில் நீசம். நவாம்சத்திலும் நீசம் . வர்க்கோத்தம். பெண்களுக்கு பாக்கியஸ்தானம் சரியாக அமையவில்லை என்றால் குடும்பம் அமைவது ரொம்ப கஷ்டம்.
5. 2ம் வீட்டு குடும்பஸ்தான அதிபதி புதன் மீன ராசியில் நீசம். நவாம்சத்திலும் நீசம் . வர்க்கோத்தம் . 2ம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவின் 7ம் பார்வை நேராக 8ம் வீட்டு மீது உள்ளது. 9 வயது (1987) முதல் 27 வயது வரை (2005) ராகு மகா தசை.
6. 2ம் வீடு 19 பரல். மிகவும் குறைவான பரல். பலவீனமான வீடாக அமைந்துள்ளது குடும்ப வீடு. 2ல் சந்திரன் இருந்தால் இளவயதில் திருமணம். செல்வாக்கு நிறைந்தவர். புத்திசாலித்தனம் உடையவர். 2ல் ராகு சோம்பல் உடையவர். வாயை திறந்தால் சண்டைதான். 2ல் சந்திரன் ராகு சேர்ந்து இருந்தால் கையில் காசு தங்காது.
7. 12ஆம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
8. சுக்கிரன் கேது சேர்ந்து 8ல் இருந்தால் ஜாதகிக்கு நிம்மதி இருக்காது.
9.. சுக்கிரன் 8ல் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். அழகான கண்களை உடையவர். சிம்ம லக்கினத்திற்கு சுக்கிரன் மிக பெரிய நன்மைகளை செய்யமாட்டார்
10. 11ல் அமர்த்துள்ள குருவின் 9ம் பார்வை 7ம் வீட்டின் மீது உள்ளது . குரு 8ம் வீட்டு அதிபதியும் ஆவார். 27 வயதில் (2005) குரு மகா தசை ஆரம்பம். 5ம் வீட்டுக்கும் அதிபதி ஆவார்
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, March 30, 2019 1:00:00 AM
--------------------------------------------------------
7
Blogger kmr.krishnan said...
அம்மணி 25 மர்ர்ச் 1978 அன்று மாலை 4. 30 போலப் பிறந்தவ்ர். சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
சிம்ம லக்கினம், கடகலக்கினம் ராசிக்காரர்களுக்குப் பொதுவாகவே திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமைவதில்லை.காரணம் 7ம் இடம் சனைச்சரனுக்கு உரியது.அம்மணிக்கு லக்கினத்திலேயே சனி என்பது அவரை எப்போதும் முகம் தூக்கி வைத்திருப்பவர்ரக, எதிமறை விளைவுகளை எதிர்பார்ப்பவராக ஆக்குகிறது.லக்கினம் செவ்வாய் ராகுவாலும் அணைக்கப்பட்டு பாபகர்த்தாரியில் இருக்கிறது.கணவன் ஸ்தானமாகிய 7ம் இடத்திற்கு செவ்வாய் பார்வை, சனி பார்வை. குரு பார்வையும் உண்டு.குரு பார்வையால் திருமணம் நடந்தது. ஆனால் சனி பார்வையும், செவ்வாய் பார்வையும் வலுவாக் ஐருந்ததால் திருமணம் கெட்டது.12ம் அதிபன் சந்திரன் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ராகுவுடன் சம்பந்தம்.எனவே குடும்பம் அமைவது தடுக்கப்பட்டது.ராகு சந்திரன் கூட்டணி ஜாதகிகிக்கு இயற்கைக்கு மாறான மன நிலையை கொடுத்திருக்கும். லக்கினாதிபதி சூரியன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்தது.பெண்களுக்கு களத்திரகாரனாக எடுத்துக்கொள்ளக்கூடிய செவ்வாய் 12ல் மறைந்து நீசம் அடைந்தது.சுக்கிரன் உச்சமானாலும் 8ல் மறைந்தது. அஷ்ட வர்கத்தில் 7ம் இடம் 23 பரலே பெறுகிறது. பாவாதி பலனில் 7ம் இடம் 10 வது ரேங்க். குடும்பஸ்தனம் 11 ரேங்க். ராகுதசா சுக்கிர புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.
தொடர்ந்து வந்த தசா புக்திகள் கைகொடுக்க்வில்லை.
நவாம்சமும் உதவவில்லை. களத்திரகாரகன் களத்திர ஸ்தனத்தில் மாந்தியும் 7ம் இடத்தில்.7ம் அதிபதி சனைச்சரன் நீசம் அடைந்து ராகுவுடன் சம்பந்தம்.குடும சதனதிபதி புதன் நீசம்.
சாமியாரிணி ஜாதகம்!
kmrk1949@gmail.com
Saturday, March 30, 2019 6:42:00 AM
------------------------------------------------------
8
Blogger ஃபெர்னாண்டோ said...
லக்னாதிபதி சூரியன் 8-ல் மறைவு, கேதுவுடன் இணைவு. அம்சத்தில் நீசம், கேதுவுடன் இணைவு..
லக்னத்திற்கு சுபர் பார்வை இல்லை. வர்கோத்தம லக்னம் என்பது ஒரு பலம்.
களஸ்திர ஸ்தானாதிபதி சனி பகை வீட்டில் அமர்வு, சுபர் பார்வை இல்லை. களஸ்திர ஸ்தானத்தின் மேல் அவரின் நேர் பார்வை. களஸ்திர ஸ்தானாதிபதி அம்சத்தில் நீசம், ராகுவுடன் இணைவு.
யோககாரகன் செவ்வாய் விரையத்தில் அமர்வு, நீசம், அவர் பார்வை களஸ்திர ஸ்தானத்தின் மேல்.
களஸ்திர காரகன் சுக்கிரன் உச்சமானாலும், கூட அமர்ந்த புதனின் நீசத்தை பங்கமாக்கி, பலம் குன்றியுள்ளார். அத்துடன், சுக்கிரன் 8-ல் மறைவு, பகையான சூரியன், கேதுவுடன் இணைவு.
குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்வு. உடன், விரைய ஸ்தானதிபதி சந்திரன்.
குடும்பாதிபதி புதன் நீசபங்கமானாலும், கேதுவுடன் இணைவு. அஷ்டமத்தில் மறைவு, விரையாதிபதியின் பார்வையில்.
குரு பார்வை புத்திர ஸ்தானத்தின் மேலும், ராசிக்கு 2-ன மேலும் உள்ளது, ஆனால், குரு அஷ்டமாதிபதியும் ஆவார். அத்துடன், குரு தனித்து அமர்ந்துள்ளார்.
ராசி ராகுவுடன் இணைவு.
ராசிக்கு 7-ல் சூரியன், சுக்கிரன், கேது.
ராசிக்கு 2-ல் விரைய நீச செவ்வாய் பார்வை.
ராசிக்கு 5-ல் குரு பார்வை உள்ளது, ஆனால், குரு அஷ்டமாதிபதியும் தனித்த குருவும் ஆவார்.
- ஃபெர்னாண்டோ
Saturday, March 30, 2019 1:52:00 PM
--------------------------------------------------------------
9
Blogger aravinth raj said...
வாத்தியாருக்கு வந்தனங்கள், 7-ம் பாவத்தின் மேலுள்ள குரு மற்றும் களத்திர ஸ்தானாதிபதி(சனி)யின் பார்வையால் திருமணம் நடந்தது.இருப்பினும் காரகன் & லக்னாதிபதி 8ல் அமர்ந்தும் (சுக்கிரன் உச்சமானாலும்) அம்சத்தில் 7ல் அமர்ந்தும்(காரகன் பாவ நாஸ்தி) வர்க்கோத்தம செவ்வாய் 12 ல் நீசம் அடைந்து(அயன சயன தோசம்) 2ம் வீடாகீய குடும்ப ஸ்தானத்தில் ராகு மேலும் அசவ்ய கால சர்ப தோசம் வாழ்க்கையின் 2ம் பாகத்தையும் (திருமண வாழ்க்கை)கெடுத்தது.
Saturday, March 30, 2019 5:21:00 PM
--------------------------------------------------------
10
Blogger anand tamil said...
லக்கினாதிபதி சூரியன் 8 இல் மறைவு,லக்கினம் பாபகர்தாரி யோகத்தில்
குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் ராகு
ஆறுக்குடைய சனி லக்கினத்தில்
8ம் இடத்தில சூரியன் ,சுக்கிரன் , புதன் மறைவு
யோகக்காரன் செவ்வாய் 12இல் மறைவு
கால சர்ப்ப தோஷமுடைய ஜாதகம் . ராகு கொடி பிடிக்கிறது.
7ம் இடத்திற்கு 7க்கு உடைய சனி மற்றும் குரு செவ்வாய் பார்வையால் திருமணம் நடந்தது .
ஆனால் அவர்களே 6 மற்றும் 8க்கு உடையவர்கள் .
மேற்கூறிய காரணங்களால் திருமணம் நிலைக்கவில்லை .
வாத்தியாருக்கு ஒரு வேண்டுகோள் : எப்போதும் நடந்து முடிந்தவற்றை பற்றியே விவாதிக்கிறோம் . ஒரு ஜாதகத்தை பதிவிட்டு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று விவாதிக்க வேண்டுகிறேன் .
ஏனெனில் ஜோதிடம் என்பது இறந்தகாலத்தை மட்டும் விவாதிப்பது அல்லவே !!!
எனவே இனிவரும் பதிவுகளில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என விவாதிக்கும்படி கேள்விகள் அமைக்கவும்
Saturday, March 30, 2019 5:50:00 PM
-----------------------------------------------------------
11
Blogger Lokes said...
லக்கினாதிபதி (ஹீரோ) சூரியன் கேதுவுடன் எட்டாம் வீட்டில். நோய், கடன், எதிரி தரக்கூடிய ஆறாமிடத்து பாபர் சனி லக்கினத்தில்.
களத்திர ஸ்தானாதிபதி சனி 7 க்கு 6 ஆம் வீட்டில் மறைந்தாலும், களத்திரகாரகன் சுக்ரன் உச்சமானதால் திருமணம் உண்டு. ராகு தசையில் சனி புத்தி பிற்பகுதியில் திருமணம் நடந்திருக்கலாம்.
குடும்ப ஸ்தானாதிபதி புதன் 8 ஆம் வீட்டில் நீசமாகி, 8 ஆம் வீட்டதிபதியோடு பரிவர்த்தனை. விரயாதிபதி சந்திரன் ராகுவோடு சேர்ந்து அமர்ந்து குடும்பஸ்தானத்தை கெடுத்தார்.
சுகம் மற்றும் பாக்கியஸ்தனாதிபதி செவ்வாய் 12 இல்.
ஜாதகருக்கு திருமணத்திற்கு பின் வந்த ராகு, குரு தசாபுத்திகள் கரைசேர்க்க வாய்ப்பில்லை. காரணம் ராகு சந்திரனோடு இருப்பதால் சந்திரனின் ஸ்தான அதிபத்யங்களான விரய, அயன, சயன போக விஷயங்களில் பிரச்சனை கொடுத்திருப்பார். சந்திரன் மனத்துக்காரகன் என்பதல் மனப்போராட்டங்கள் மிகுந்திருக்கும் காலம். குரு அட்டமாதிபதியாய் பரிவர்த்தனை மூலம் 8 இல் ஆட்சி ஆனதாலும், 8 ஆம் இடத்தில 4 கும் மேற்பட்ட கிரஹங்கள் இருப்பதாலும், குரு தனது தசையில் 8 ஆம் வீட்டு அதிபத்யங்களான ஆயுள், கண்டம், அவமரியாதை போன்றவற்றிற்கு வலு சேர்த்திருப்பார்.
சிபாரிசு ஈடுபடாததிற்கு காரணம் சிம்மம் லக்கினம் ஆகி அதில் அமர்ந்த சனி.
Saturday, March 30, 2019 7:37:00 PM
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.3.19

Astrology: ஜோதிடப் புதிர்: தொடாமல் அவள் உதிர்ந்தாள்!!!!!


Astrology: ஜோதிடப் புதிர்: தொடாமல் அவள் உதிர்ந்தாள்!!!!!

அம்மணி  ஒருவரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். பெண்மணிக்கு திருமணம் நடந்தது. ஒரு நாள்
கூட கணவன் வீட்டில் வாழவில்லை. தாய் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டாள். கணவன் குடும்பத்தார் தங்கமானவர்கள்.
யாருடைய சிபாரிசும் எடுபடவில்லை. எனக்குத் திருமண
வாழ்வே வேண்டாம் என்று கூறி திரும்பிச் செல்ல மறுத்துவிட்டாள். 

தொட்டால் பூ மலரும். கை படாமல் அவள் உதிர்ந்தாள்!!!!

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 31-3-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:

=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.3.19

அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!!!


அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!!!

*முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா?! பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?!*

திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது?!, ஏன் அவனுடைய நூறு குழந்தைகள் இறந்துபோனார்கள்?!.

குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.

அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?! என்றார்.

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் பிரபலமான முனிவரான வசிஷ்டரின் சீடன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.

அதன்படி, அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னப்பறவையின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்! அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

அதற்கு வசிஷ்டரின்  சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார். ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.

அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி  பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,
நூறு குழந்தைகள் என  நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னப்பறவையின் குஞ்சுகளை  உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாய் பறவை எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு  பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.!...

ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. பிறகு உனக்கு, கண் எதற்கு?!, அதனாலேயே நீ குருடனானாய்.!.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது.!.அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். 

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து போய் நின்றான்.!.

            - வியாச பாரதத்தில் இருந்து......
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.3.19

இதல்லவோ பெருந்தன்மை!!!!


இதல்லவோ பெருந்தன்மை!!!!

மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி மைக்கின் முன் வந்து நிற்கிறார்.அவர் பேசப்போகும் வார்த்தைகளை எதிர் நோக்கி ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்து நிற்கிறது,

"நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி வந்த யுத்தம் இதோ இன்றோடு முடிவுக்கு வருகிறது.ஆராய்ச்சி முடிவுகள் மிகச் சாதகாமான
விளைவுகளைத் தந்துள்ளன.இந்த வேக்சின் அருமையான முடிவுகளைத் தந்துள்ளது.பலதரப்பட்ட சோதனைகளைச் செய்து
பார்த்து விட்டோம்.அனைத்து சோதனைகளிலும் சாதகமான பலன்களே வந்துள்ளது.இந்த வேக்சின் முழுப் பாதுகாப்பானது.

இந்த வேக்சின் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.

இதை கண்டுபிடித்த நம் பல்கலைக்கழகத்தின் "அந்த மருத்துவர்" தனக்கு எந்தக் காப்புரிமையும் வேண்டாமென மறுத்து விட்டார்.

எனவே இன்றில் இருந்து இந்த மருந்து முழுக்க முழுக்க இலவசமாகத் தரப்படுகிறது"

---என்று பரபரப்பாக அறிவிக்கிறார்.

அவர் அறிவித்து முடித்து மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி,பெருத்த ஆரவாரம் எழுந்தது.

மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீர் விடுகின்றனர்.

அமெரிக்க நாடு முழுவதுமுள்ள தேவாலயங்களின் மணிகள் ஒலிக்கப்படுகின்றன, பிரார்த்தனைகள் நடக்கிறது.

தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் கூட ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டு--மௌன மரியாதை தரப்படுகிறது.

எதற்காக?

"அந்த ஒரு மனிதருக்காக.."

பத்திரிக்கைகளும்,புகப்படக்காரர்களும் அந்த மனிதரை--அந்த மருத்துவரை மொய்த்துக் கொண்டு,பல கேள்விகளைக்
கேட்டார்கள்.அனைத்திலும் பிரதானமாக அமைந்த கேள்வி

"நீங்கள் ஏன் இந்த வேக்சினுக்கு காப்புரிமையைப் பெறவில்லை,பெற்றிருந்தால் ட்ரில்லியன்களில் பணம் வந்திருக்குமே?" என்பது தான்.

இப்படிபட்ட ஒரு மாமருந்தை கண்டுபிடித்துவிட்டு,அதை காப்புரிமை செய்யாமல் இலவசமாகத் தந்துள்ளாரே.இதை
மட்டும் இவர் காப்புரிமை செய்து இருந்தால் இந்த மனித இனம் உள்ள மட்டும் இவருக்கு பணம் கொட்டிக் கொண்டிருக்குமே...
இவர் ஏன் அப்படி செய்யவில்லை....என்பதை அவர்களால்
நம்பவே முடியவில்லை.

எனவே ஒருமித்த குரலில் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டனர்.

அமைதியான சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்த அந்த மருத்துவர்,

"காப்புரிமையா?இதற்கா?எனக்கா? உலகத்திற்கு ஆற்றலைத்
தரும் சூரியன் அதற்காக காப்புரிமையைப் பெற்றுள்ளதா?"
---என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அடுத்த பணிக்கு சென்றுவிட்டார்.

விக்கித்து திகைத்து அதிசயித்து நின்றது உலகம்.

அதுமட்டுமல்லலல,அக்காலகட்டத்தில்வைரஸ் கிருமியால்
பரவும் நோய்களுக்கு லைவ் வைரஸ்களைக் கொண்டு
அதாவது உயிருடன் இருக்கும் வைரஸ்களைக் கொண்டு தான் வேக்சின்களைத் தயாரிப்பார்கள்.

அதாவது உயிருள்ள ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி--உடலின் நோயெதிர்ப்பு சக்தி--அந்த வைரசிற்கு
எதிராக போராடும் வல்லமையை,ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப் பெற வைப்பார்கள்.எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய்
எதிர்ப்புத் திறன் அந்த நோயை விரட்டி விடும்.

ஆனால் அந்த மருத்துவர் பயன்படுத்தியது இறந்த வைரஸ்களை.வைரஸ்களை ஆய்வகத்தில் வளர வைத்து-
பின் அதில் பார்மால்டிஹைடு வேதிபொருளை செலுத்த,அந்த வைரஸ்கள் முற்றிலும் செயலிழந்து போகும்.பின் அந்த
செயலழிந்த வைரஸ்களை உடலின் செலுத்தினால்--உடல்
வழக்கம் போல ஆண்டிபாடிகளை உருவாக்கும்.இதையும் அவர் காப்புரிமை செய்யவில்லை.

இப்படி மருத்துவ உலகின் மாபெரும் புரட்சிகளை செய்து விட்டு,அதை இலவசமாக மனித குலத்திற்கு அர்ப்பணித்துவிட்டு
அமைதியாகத் தன் அடுத்த பணியைப் பார்க்க சென்ற, அவர் மருத்துவர் தான் "ஜோன்ஸ் சால்க்."

அவரால் இரண்டே இரண்டு சொட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த நோய்--"போலியோ"...

போட்டோவில் இருப்பவர் தான் டாக்டர் ஜோன்ஸ் சால்க்.
-----------------------------------------------------------------------
படித்து வியந்தது, பகிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.3.19

Short Story: சிறுகதை: சித்தநாதன் கணக்கு


Short Story: சிறுகதை: சித்தநாதன் கணக்கு

அடியவன் எழுதி இந்த மாத மாத இதழ் ஒன்றில் வெளியாகி, பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை ஒன்றை, நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்து மகிழுங்கள்!!!!

அன்புடன்
SP.VR.சுப்பையா
-----------------------------------------------------------------------------
சிறுகதை: சித்தநாதன் கணக்கு! 

"அடுத்த பிறவி என்று ஒன்று இருந்து - ஒருவர் இறந்த பிறகு,
அவரிடம் இருக்கும் சொத்துக்களை, சேமித்து வைத்துள்ள பணத்தை அடுத்த பிறவிக்கு எடுத்துக் கொண்டு போகலாம்
என்ற வசதியையும் கடவுள் கொடுத்திருந்தால் - ஒரு பேச்சுக்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன் - உங்கள் அப்பச்சி உங்களுக்கென்று எதை வைத்துவிட்டுப் போயிருப்பார் - எவற்றையெல்லாம் கொண்டு போயிருப்பார் - சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று கதிரேசன் கேட்டவுடன் அவரது நண்பர் ராமண்ணன் புன்னகைத்தார்.
யோசனையில் ஆழ்ந்து விட்டார்.

ராமண்ணனின் முழுப்பெயர் இராமநாதன் செட்டியார். வயது 50 ஆகிறது. அவர் கதிரேசனுக்கு சமவயதுக்காரர். இருவரும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள். திருப்பூரில் வாசம். அண்ணன் என்று ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வார்கள். அதெல்லாம் ஒரு மரியாதைக்காகத்தான்.

"என்ன மெளனமாக இருகிறீர்கள் - கற்பனை செய்து மனதில் தோன்றுவதைச் சொல்லுங்கள்" என்று தொடர்ந்து சொன்னார் கதிரேசன்.

உடனே பட்டென்று பதில் சொன்னார் அவர்.

"இதில் கற்பனைக்கெல்லாம் ஒன்றும் வேலையில்லை. உண்மையைச் சொன்னால் - எங்கள் அப்பச்சி எங்களுக்கு ஒன்றையும் வைத்து விட்டு போயிருக்கமாட்டார். மேலும் எங்கள் இடுப்பில் இருக்கும் பட்டுக்கயிரைக் கூட நான் கட்டியது என்று உருவிக் கொண்டு போயிருப்பார்"

"பிறகென்ன? இருக்கும் ஐம்பது கோடி ரூபாய் சொத்தும் இலவசமாக
வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்குள் ஏன் இவ்வளவு சண்டை, சச்சரவுகள்? உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து பேசி சந்தோசமாக அவற்றைப்பிரித்துக் கொள்ளுங்களேன்.

"இல்லை கதிரேசன், பிரச்சினை பிறந்தவர்களால் இல்லை. எங்கள் வீட்டிலுள்ள அண்ணன், தம்பி ஆச்சி, தங்கைகளுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை. எங்கள் அறுவருக்கும் திருமணம் என்ற ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் நாங்கள் சின்னவயதில் இருந்ததைப்போன்று அன்பாகப் பாசமாக, ஒற்றுமையாக இன்று
வரை இருந்திருப்போம்.பிரச்சினை எல்லாம் வந்தவர்களால்தான். எங்கள் வீட்டுப் படியேறிவந்த மாப்பிள்ளைகள், மருமகள்களால்தான் எல்லாச் சிக்கல்களுமே.
என் மனைவியையும் சேர்த்துதான் இதைச் சொல்கிறேன். அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் என்று சேர்ந்து இனிக்கும் பாயசமாக இருந்த எங்கள் வாழ்க்கையில் உப்பு, புளி, மிளகாய்த்தூள் என்று காலதேவன் பல பொருட்களைக் கொட்டிக் கலந்து விட்டுப் போய்விட்டான். நாங்கள் இப்போது ருசிக்கும் பாயசமாகவும் இல்லை மணக்கும் குழம்பாகவும் இல்லை!"

"வந்தவர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் ராமண்ணே! உங்கள் ஆறு பேர்களுக்கும் இ¢டையே தற்போது ஒரே மாதிரியான எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் உள்ளனவா சொல்லுங்கள்!"

"எங்கள் ஆறுபேர்களுடைய எண்ணம், சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் கெட்டுப் போய் விட்டன. ஒப்புக்கொள்கிறேன். அதற்குக் காரணம் நான் சொன்னதுதான். எங்களைக் கட்டிக் கொண்டவர்களால் ஏற்பட்டதுதான் அது!"

புன்னகைத்த கதிரேசன் அழுத்தமாகச் சொன்னார்.

"சாவியில்லாத பூட்டை யாரும் தயாரிப்பதில்லை. அதுபோல இறையமைப்பில் தீர்வு இல்லாத பிரச்சினையே கிடையாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான் உங்கள் பிரச்சினைக்கான சாவி. அதாவது தீர்வு!"

"நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் எங்களிடம் சாவிகள் இல்லை. சாவிகளெல்லாம் வந்தவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது. வைக்கப்போரில் கட்டியிருக்கும் நாயைப் போல அவர்களும் திறந்து விடமாட்டார்கள். எங்களையும் திறக்க விடமாட்டார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவர்களிடம் இல்லை. அதை எங்களால் உண்டாக்கவும் முடியாது. அவர்களை மீறி ஒன்றும் செய்யவும் முடியாது"

"மற்றவர்களை விடுங்கள். நீங்கள் சொன்னால் உங்கள் மனைவி கேட்பாரா? மாட்டாரா?"

"சொந்த விஷயம் என்றால் கேட்பாள். பெரிய வீட்டுப் பிரச்சினை என்றால் கேட்க மாட்டாள். இல்லாத வீட்டில் இருந்து வந்தவள் என்பதற்காக, தன் நாத்தினார்கள் இருவரும் தன்னைக் கழுதையை விடக்கேவலமாக நடத்தினார்கள் என்கின்ற ஆதங்கம் அவள் மனதில் ஆறாத ரணமாக இன்றைக்கும் உள்ளது. அதை எப்படி ஆற்றுவது நீங்களே சொல்லுங்கள்?''

"சரி இந்த நாற்றச் சண்டையால் எதை இழக்கிறோம்? எதெது முடங்கிக் கிடக்கிறது என்பதை ஒருவர்கூட உணரவில்லையா?"

"என்னைத் தவிர யாரும் உணரவில்லை. உணரும் நிலையிலும் இல்லை. எல்லாவற்றிற்கும் தன்முனைப்புதான் (ego) காரணம். ஒருமுறை எடுத்துச் சொன்ன போது என்ன சொன்னார்கள் தெரியுமா?"

"என்ன சொன்னார்கள்?"

"உனக்கு மனசிருந்தால் ஒன்றும் வேண்டாம் என்று நீ விட்டுக்கொடுத்துவிட்டுப்போ. மற்றதை சட்டப்படி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். பழநியாண்டவன் சித்தம் அதுவாகத்தான் இருக்கும் என்றால் அதற்கும் நான் தயார் என்று சொல்லி விட்டுவந்தேன்"

"எப்போது சொன்னீர்கள்? யாரிடம் சொன்னீர்கள்?"

"எங்கள் பெரிய அண்ணனும், இரண்டாவது அண்ணனும் ஒரு கூட்டணியாக உள்ளார்கள். அவர்களிடம்தான், சென்ற வாரம் நடந்த தர்க்கத்தில் சொல்லிவிட்டு வந்தேன்"

"ஆண்டவன் சித்தம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? பாருங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்று சாமி வந்ததைப் போல சொன்னார் கதிரேசன்.

ராமண்ணன் வியப்பு மேலிடக் கேட்டார், "எப்படிச் சொல்கிறீர்கள்?"

"பழநியப்பன் சித்தநாதன். சித்தர்களுக்கெல்லாம் நாதன் அவன். அரிய சக்திகளை உடையவன். தன்னை நம்பியிருக்கும் பக்தர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பவன் அவன். அவன் சித்தம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்" என்று உணர்வு மேலிடச் சொன்ன கதிரேசன் தங்களுடைய உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவாறு எழுந்து விட்டார்.

என்ன நடந்தது?

மேலே படியுங்கள்!

***********************************************************8

ராமநாதனின் அப்பச்சி மெய்யப்ப செட்டியார் அவர்கள் தான் உயிரோடு இருந்த காலம்வரை எல்லாவற்றையும் தன் காலடியிலேயே வைத்திருந்தார். விளங்கச்
சொன்னால் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்.

அபரிதமான சம்பாத்தியம். பங்கு வணிகத்தில் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. மண் கூடப் பொன்னானது. உப்புமா கம்பெனிகூட அவர் பங்கை வாங்கினால் உலகளாவிய கம்பெனியாக மாறியது. நான்கு மகன்களையும் நன்றாகப் படிக்க வைத்தார். இரண்டு மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்ததோடு, கொட்டிக் கொடுத்துப் பெரிய இடங்களில் மணம் செய்தும் வைத்தார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, அதாவது தன்னுடைய 72வது வயதில், ஒரு நாள் பொட்டென்று போய்விட்டார். வீட்டோடு இருந்த நெடுங்குடிச் சமையற்காரரின் சாப்பாட்டை மத்தியானம் சாப்பிட்டு விட்டுப் படுத்தவர். எழுந்திரிக்கவேயில்லை.
அவருக்கு முன்பாகவே அவரது மனைவியும் போய்ச் சேர்ந்திருந்ததால், அவரை எழுப்பவும் ஆள் இல்லை.

அடுத்தவீட்டுச் செட்டியார்தான், அவரின் முகப்பு அறைக் கதவைத் தட்டிக் கண்டு பிடித்து அனைவருக்கும் தகவல் சொன்னார்.

கேதத்திற்கு வந்தவர்கள் 'நல்ல சாவு' என்ற சான்றிதழை வழங்கிவிட்டுப் போனார்கள்

மரணத்திற்கு மட்டும்தான் முன்னுரிமையும் இல்லை, வயது வரிசையும் இல்லை. எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. அவருக்கு ஆயுசுப் பலனை எழுதிக் கொடுத்த ஜோதிடர்கூட 90 வயது வரை வாழ்வார் என்று எழுதிக்
கொடுத்திருந்தார்.

பதினெட்டு ஆண்டுகளை எந்தக் கணக்கில் பற்று எழுதினான் காலதேவன் என்பது தெரியவில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது? போனவர் போனவர்தானே!

இருந்தவரை திடகாத்திரமாகத்தான் இருந்தார். அதனால்தான் எதையும் தன் மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கவில்லை. உயிலும் எழுதிவைக்கவில்லை.பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தார். எதற்கும் வாய்ப்பே இல்லாமல் காலதேவன் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டான்.

அதற்குப் பிறகுதான் சிக்கல் ஆரம்பமானது. அவரின் இறப்பை அறிந்த வங்கி அதிகாரிகள் அவர் பெயரில் இருந்த வங்கிக் கணக்குகள், வைப்புத் தொகைகளிலெல்லாம் சிவப்பு மையால் சுழி போட்டுவிட்டார்கள். அதுவே ஆறு கோடிக்குமேல் தேறும். பிள்ளைகளில் ஒருவர் கூட அந்தப் பணத்தில் கைவைக்க
முடியவில்லை. வாரிசுச் சான்றிதழ், ஆட்சேபனையின்மைக் கடிதம், உரிமை கோரும் கடிதம் என்று ஏகத்துக்கும் கெடுபிடி.

அப்பச்சியின் சவண்டிக்குள்ளாகவே இவர்களுக்குள் ஒற்றுமை போய்விட்டது. முதலில் வீட்டில் இருந்த 200 கிலோ வெள்ளிப் பாத்திரத்தில் ஆரம்பித்த சண்டை,
இரண்டு இடங்களில் அப்பச்சிக்குத் திரேக்கியம் செய்யும் நிலைமையில் முடிந்தது. கடைசியில் வங்கி லாக்கர்களில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.

பெட்டகத்தில் இருந்த இடம், பூமி கிரயப்பத்திரங்கள் எல்லாம் ஒரு மகன் கைக்குப் போய்விட்டது. பிரோ நிறைய இருந்த பங்குப் பத்திரங்கள் எல்லாம் இன்னொரு மகன் கைக்குப் போய்விட்டது. மொத்தத்தில் யாரும் எதையும் விற்கமுடியாத நிலைமை. யாரும் எதையும் அனுபவிக்க முடியாத நிலைமை.

நடப்புச் சண்டைகளால் அனைவருக்கும் பொழுது மட்டும் நன்றாகப் போகிறது!

***************************************************************

மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவிற்குச் சென்று விட்டுத் திரும்பிய இராமநாதன் செட்டியாரை, வக்கீல் நோட்டிஸ் வரவேற்றது. அவருடைய கூட்டணியில் இருந்த மூன்றாவது அண்ணன்தான் அதை அனுப்பியிருந்தார்.

பத்து ஆண்டுகளாகப் பிரிபடாமல் இருக்கும் தங்கள் குடும்பச் சொத்தைத் தன் காலத்திற்குள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாலும், அதற்குரிய சூழ்நிலை தங்கள் குடும்பத்தில் இல்லாததாலும், அசையாத சொத்துக்களில் தனக்குரிய பங்கைப் பிரிபடாத பங்காகத் (undivided share in the properties) தான்
விற்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாட்டில் தான் இறங்கியிருப்பதாகவும், அப்படி விற்கும் நிலையில் குடும்பத்தில் உள்ள மற்ற பங்குதாரர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லை என்றும் எழுதியிருந்தார்.

ராமநாதனுக்குச் சள்ளையாக இருந்தது. திருப்பூரில் தனது வியாபரத்தைக் கவனிப்பதா? அல்லது இதுபோன்ற நச்சரவுகளில் சிக்கிக் கொண்டு உழல்வதா?

தன் மனைவியை அழைத்து நோட்டிஸைக் காண்பித்தார்.

ஆச்சி தெளிவாகப் பேசினார்கள்.

"என்னை மட்டும்தான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது உங்களையும் உருட்ட ஆரம்பித்து விட்டார்கள். வீட்டில் ஐம்பது அறைகள் இருந்தாலும் ஒரு அறையில்தான் படுக்க முடியும். ஆயிரம் மாடுகள் இருந்தாலும் வேளைக்கு ஒரு ஆழாக்குப் பால்தான் குடிக்க முடியும். நமக்கு நீங்கள் தற்போது சம்பாதிப்பது போதும். சம்பாதித்துச் சேர்த்துவைத்திருப்பது போதும். உங்கள் அப்பச்சியின்
சொத்து ஒன்றுகூட வேண்டாம். எனக்கு ஒன்றுகூட வேண்டாம் என்று அத்தனை பேருக்கும் நீங்கள் நோட்டிஸ் கொடுத்துவிடுங்கள். அப்போதுதான் அடங்குவார்கள்"

செவிட்டில் அரைந்தாற்போன்று இருந்தது மனைவின் சொற்கள்.

மின்னலென ஒரு முடிவிற்கு வந்தார் ராமநாதன்.

அடுத்த இரண்டு நாட்களில் செட்டிநாட்டிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்று அதைச் செயல்படுத்தத் துவங்கினார்.

*********************************************************************
சிவன் கோவில் காரியக்காரரும், மற்றும் கூடியிருந்த அறங்காவலர்களும் திகைத்துப் போய்விட்டார்கள்.

தன் தந்தை வழிப்பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் சிவன் கோவிலுக்குத் தானமாக அளிக்கிறேன் என்று அவர் எழுதிக் கொண்டுவந்து கொடுத்த பத்திரத்தை ஒன்றிற்கு இரண்டுமுறை படித்துப் பார்த்தவர்களுக்கு வியப்பாகவும் இருந்தது. எழுதிக் கொடுத்த பத்திரத்துடன் சொத்து விவரம் பற்றிய லிஸ்ட்டும் விலாவரியாக இருந்தது. தற்போதைய மதிப்பும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் அறுபது கோடி ரூபாய்கள். வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து சம பங்காகப் பிரித்தால்கூட கோவிலுக்கு பத்துக் கோடி ரூபாய் வந்து சேரும்.

வந்தவர் தன் மனைவி, மகன், உடன் ஒரு வழக்குரைஞர் சகிதமாக பக்கா ஏற்பாட்டுடனேயே வந்திருந்தார்.

முதலில் சமாதானப் படுத்த முயன்றவர்கள், அவர் தெளிவாக இருந்ததால் முறைப்படி கோவிலின் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தார்கள்.

அடுத்து நடந்ததெல்லாம் முக்கியமில்லை. கோவிலின் அறங்காவலர் ஒருவர் மிகுந்த அரசியல் செல்வாக்கு உடையவர். தில்லியில் செளத்பிளாக் எனப்படும் மத்திய அரசின் பிரதான அலுவலகத்தில்கூட கோவில் மடப்பள்ளியில் நுழைவதைப் போன்று சர்வ சாதாரணமாக நுழைந்து திரும்பக்கூடியவர்.

ஆகவே எல்லாம் கைச் சொடுக்கிலேயே நடந்து முடிந்தது

ராமாநாதனின் வீட்டு உறுப்பினர்கள் அழைக்கபெற்றார்கள், நடந்த ஒரு வாரப் பஞ்சாயத்தில் அனைத்தும் சீரானது. மூன்று மாத காலத்தில் அனைத்தும் நேரானது. ராமநாதனின் சொத்துக்களை உடன்பிறப்புக்கள் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க கோவிலுக்கும் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாய் வந்து சேர்ந்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன, கதை முடியவில்லையா?

அதெப்படி முடியும்? சித்தநாதன் கணக்கு ஒன்று பாக்கியிருக்கிறதே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து வந்த ஆவணியில், ராமநாதனின் மகனுக்கும், கதையின் துவக்கத்தில் வந்தாரே கதிரேசன் - அவருடைய ஒரே மகளுக்கும் விமரிசையாகத் திருமணம் நடந்தேறியது.

ராமநாதன், தோது, பணம், வற்றல் வரளி, முறுக்கு, மாவுருண்டை வரதட்சினை என்று எதுவும் வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டதால், நொந்துபோன கதிரேசன், சும்மா விடக்கூடாது என்று நினைத்து, திருப்பூர் பெருமாநல்லூர் ரோட்டில் இருந்த அதுவும் புஷ்பா தியேட்டர் அருகில் இருந்த, தனக்குச் சொந்தமான இரண்டு
ஏக்கர் காலி மனையைத் தன் பெண்ணிற்குச் சீதனமாக எழுதிக் கொடுத்து விட்டார். அதன் சந்தை மதிப்பு முப்பது கோடி ரூபாய்.

காலி இடத்தை அப்படியே வைத்திருந்தால் யாராவது குடிசை போட்டுக் கொடி ஏற்றிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி, ராமநாதனும், அவருடைய மகனுமாகச் சேர்ந்து அங்கே பெரிய வணிக வளாகம் கட்டுவதற்கான ஏற்பாட்டில் இறங்கி யிருக்கிறார்கள்.

அதைவிடுங்கள். விஷயம் தெரிந்தவர்கள் ஊரில் என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா?

"சிவன் கோவிலுக்குப் போன ராமநாதனின் பங்கு, சித்தநாதன் மூலம் இரட்டிப்பாகத் திரும்பி வந்துவிட்டது. அதுதான் சித்தநாதனின் மகிமை!"

அது முக்கியம் இல்லை; இதுதான் முக்கியம்:
விட்டுக் கொடுத்தவர்கள் என்றும் கெட்டுப்போனதில்லை! அதுதான் வாழ்க்கை!
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.19

Astrology: Jothidam: 22-3-2019 புதிருக்கான விடை!!!!Astrology: Jothidam: 22-3-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, மனிதருக்கு அவருடைய தந்தையார் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஆனால் ஜாதகர் அவருடைய 45வது  வயதிற்குள் வியாபாரத்தில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டு எல்லா சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விட்டன. அன்றாடம் செல்விற்கே சிரமப்படும் நிலைமைக்கு ஜாதகர் ஆளாகி விட்டார்.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம் என்று ஜாதகத்தை அலசி பதில் சொல்லுங்கள் என்றிருந்தேன்!

சரியான பதில்: விரைய ஜாதகம்.
1. சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் 12ல்
2. 10ம் இடத்து அதிபதி (தொழில் ஸ்தான அதிபதி) சுக்கிரனும் 12ல்
3. உடன் கேது.
4. 2ம் வீட்டில் (தன ஸ்தானத்தில்) சனி
5. 2ம் வீட்டிற்கு உரிய புதன் அந்த வீட்டிற்கு 12ல்
6. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. மறுபக்கம் சனி
7. 22 வதற்கு மேல் வந்த மகா திசைகள் இரண்டுமே வலுவிழந்து நின்றன
மேற்கூரிய காரணங்களால் ஜாதகர் சிரம நிலைக்கு ஆளானார்

புதிருக்கான பதிலை 11 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 29-3-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger Ramanathan said...
2nd house lord Mercury in 1st house(12th house from its (2nd) house). He is also the 11th house lord
6th house lord and saturn in 2nd house
Lagna lord sun in viraya sthana(12th house)
viraya sthana(12th house) lord moon in 5th house with Maanthi
due to above configuration the person would have lost everything during moon dasa
Friday, March 22, 2019 1:03:00 PM
--------------------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
பொதுவாக நன்மை செய்ய முடியாத குட்டிச் சுக்கிர தசை தொடக்கம் தொடர்ந்து வந்த சூரிய, சந்திர மற்றும் செவ்வாய் தசைகளுமே விரயத்திற்கு காரணமாகின.
விரயத்தில் சூரியனும், அவருடன் அஸ்தமமான சுக்கிரன், விரய வீட்டு அதிபதி சந்திரன், மாந்தியுடன் அமர்வுபோன்ற காரணங்களால், விரயம் மேலும் 45 இற்குள் நடந்து முடிந்தது
Friday, March 22, 2019 6:57:00 PM
--------------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சூரியன் விரயத்தில்
2.லாபாதிபதியும் பண (அண்டா)இரண்டாம் அதிபதி புதன் லக்கினத்தில் , இரண்டாம் இடத்திற்கு பனிரெண்டில்
3 .தனகாரகன் குரு ஒன்பதில் (திரிகோணம் )
4 .ஜாதகரின் 28 வயதில் விரயாதிபதி சந்திர திசையில் ஐந்தாம்
இடத்தில அமர்ந்த சந்திரனும் மாந்தியும் நஷ்டத்தை ஏற்படுத்தி
ஜாதகரை நடு தெருவில் நிறுத்தி இருக்கக்கூடும்
5 . தன்னுடைய நாற்பத்து ஐந்தாவது வயதில் அனைத்தையும் இழந்திருக்க கூடும் செவ்வாய் எட்டாம் அதிபதி குருவின் பார்வை பெறுகிறார்
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, March 22, 2019 9:47:00 PM
----------------------------------------------------
4
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
03 ஆகஸ்ட் மாதம் 1952, காலை 8.05 மணிக்கு, மூல நட்சத்திரம் தனுசு ராசி சிம்ம லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர் பிறந்தார்.
45 வயதில் (1997) வியாபாரத்தில் நஷ்டம்,கஷ்டம், எல்லா சொத்துக்களும் கரைந்துவிட்டன.
காரணம் :
45 வயதில் (1997) ராகு மகா தசை ஆரம்பம். 6ம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவின் 7ம் பார்வையில் லக்கினாதிபதி சூரியன் உள்ளார். 6ம் வீடு 34 பரல். லக்கினம் 27 பரல். 6ம் வீடு லக்கினத்தை விட பலமாக இருந்தால் கடன் அதிகமாக இருக்கும். எதிரி பலமாக இருப்பார். நோய் அதிகமாக இருக்கும்.
6ம் வீட்டு அதிபதி சனி 2ல் அமர்ந்துள்ளார். 2ல் சனி (2 பரல்) இருந்தால் கையில் காசு தங்காது. இரண்டு குடும்பம், எல்லா தீமைகளும் பெண்களால் உண்டாகும்.
சிம்ம லக்கினம். லக்கினம் பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் கேது,மறு பக்கம் சனி)எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும்.
லக்கினாதிபதி சூரியன் 12ல் மறைவு, சுக்கிரன், கேதுவுடன் கூட்டு. ராகுவின் 7ம் பார்வையில் உள்ளார்.
11ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 12ல் கேதுவுடன் கூட்டு. கூட்டணி 12ல் இருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கை போர்க்களமாக இருக்கும். கணவனும் மனைவியும், எதிரிகளாக இருப்பார்கள்.
45 வயதில் (1997) அந்த நேரத்தில் கோள்சாரத்தில் லக்கினத்தில் ராகு அமர்ந்து, குரு மகரத்த்தில் நீசம், சனி 8ல் அமர்ந்து 2ம் வீட்டை பார்க்கிறது. எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை கையில் காசு இல்லாமல் செய்து விட்டது
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Saturday, March 23, 2019 12:23:00 AM
----------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
இந்த ஜாதகரின் செல்வ இழப்பிற்கான காரணங்கள்
ஜாதகரின் லக்கின அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் அமர்ந்து மிகுந்த பண விரயத்தை செய்தது .
மேலும் 12 இம் இடத்து அதிபதி சந்திரன் மாந்தி உடன் அமர்ந்து விரயத்தை அதிக படுத்தினார் .
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
Saturday, March 23, 2019 10:33:00 AM
------------------------------------------------------
6
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி மானே!!!!
ஆசிரியருக்கு வணக்கம்.
சிம்ம லக்கினம், தனுசு ராசி ஜாதகர்.
அவருடைய 45வது வயதிற்குள் வியாபாரத்தில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டு எல்லா சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விட்டன. அன்றாடம் செல்விற்கே சிரமப்படும் நிலைமைக்கு ஜாதகர் ஆளாகி விட்டார்.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
1) லக்கினாதிபதி சூரியன், 12ல் விரைய ஸ்தானத்தில் கேதுவுடன் சேர்ந்து அமர்ந்து வலுவிழந்துள்ளார்.
2) தனாதிபதி புதன் லக்கினத்தில் அமர்ந்து, இருபுறமும் பாபக் கிரகங்களால் சூழப்பட்டு கத்திரியின் பிடியுலுள்ளார். 9ல் அமர்ந்த குருவின் 5ம் தனிப்பார்வை புதன் மேல் விழுந்ததால் ஜாதகருக்கு அப்பனின் ஆஸ்தி கிட்டியது.
3) இரண்டாம் வீட்டில் 6ம் அதிபதி வில்லன் சனி அமர்ந்து ஜாதகரின் சொத்துக்களை கரைத்தார். 2ம் வீட்டிற்கு 22 பரல்கள் மட்டுமே.
4) விரையாதிபதி சந்திரன் தசையின் போது வந்த கோச்சார ஏழரை சனியும் கூடவே சேர்ந்து கொண்டு ஜாதகரை கடனில் தள்ளினர்.
5)அடுத்து வந்த யோகாதிபதி செவ்வாயின் தசையில் ஓரளவு மீண்டு நல்ல நிலைமக்கு திரும்பிருப்பார். பலம் வாய்ந்த தனகாரகன் குரு (7பரல்கள்)வின் நேரடிப் பார்வை செவ்வாயின் மேல்.
இரா. வெங்கடேஷ்.
Saturday, March 23, 2019 2:22:00 PM
-------------------------------------------------------
7
Blogger guru said...
வணக்கம்
லக்கினாதிபதி 12 இல் மறைந்ததும், தசையை நடத்திய கேது,சுக்கிரன்,சந்திரன் எல்லோரும் ஒரு விதத்தில் 12 மிடத்தோடு சம்பந்தப்பட்டதும், செவ்வாய் 3 இல் மறைந்து தன் வீட்டிற்கு 12 - இல் மறைந்ததும் , ஜாதகர் சொத்துக்களை இழந்ததற்கு முக்கிய காரணங்கள்.
பூர்வீகத்தை குறிக்கும் 5 -இல் 12 மதிபதியும், 9 -இல் 8 மதிபதியும் அமர்ந்தது முன்னோர் சொத்துக்கள் நிலைக்காததிற்கு மற்றோரு காரணம்.
லாப ஸ்தானத்தை 12 மதிபதி சந்திரன் பார்ப்பது நஷ்டம் ஏற்பட காரணமாகும்.
தன ஸ்தானத்தில் கடன் ஸ்தானாதிபதி சனி அமர்ந்தது மட்டுமல்லாமல் 2 மிட அதிபதி தன் வீட்டிற்கு 12 - இல் மறைந்ததும் அன்றாட வாழ்வே சிரமமானத்திற்கு காரணம்.
நன்றி
Saturday, March 23, 2019 3:56:00 PM
--------------------------------------------------------
8
Blogger TRB. Sanjai Kumarr said...
1. In this Jathagam, the native has got Jupiter(Guru)in 9th house (bhagya stanam)
which has made him to inherit father's property
2. In rasi chart, Saturn in 2nd house and this planet has made to spend all the
money. In navamsa chart also in 2nd house ragu, conforms the same.
3. Also the lord of materialistic comfort, Venus is hidden in 12th house. Hence the
acquired wealth has not stand for long.
4. Money would have been spent towards for health & to repay the debt as rahu in 6th
house.
5. Rahu dasa has started in his 45th age, hence he is facing problem for day to day
life.
Thanks & Regards,
TRB. Sanjai Kumarr
Saturday, March 23, 2019 10:26:00 PM
-----------------------------------------------------
9
Blogger Srini said...
38 வயதுக்கு மேல் நடந்த செவ்வாய் திசை வீழ்ச்சிக்கு கரணம். தசனதான் செவ்வாவை, அட்டாமதிபதியான குரு பார்த்து அதுவும் தனித்து பார்த்து பொருளாதார வீழ்ச்சியை கொடுத்து விட்டார்..
Saturday, March 23, 2019 11:31:00 PM
-----------------------------------------------------------
10
Blogger kmr.krishnan said...
அவர் வாழ்க்கையில் எந்த தசாவும் அவருக்கு உதவவில்லை. கேது தசாவில் பிறந்து, சுக்கிரதசா 22 வயஹுவரை. சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறந்து கேதுவாலும் சூரியனாலும் பாதிப்பு. லக்கினாதிபதி 12ல் மறந்து கேது சம்பந்தம்.
தன ஸ்தனத்தில் 6,7 க்குடைய சனி அமர்ந்ததும் கடன் காட்சியில் தள்ளியிருக்கும்.ராகு 6ல் அமர்ந்ததும் பலவித உடல் மனம், பண விஷயத்தில்
தட்டுப்பாடுகள் கடனை ஏற்படுத்தியிருக்கும்.
45ல் வந்த ராகுதசா ராகு புக்தி எல்லாவற்றயும் அழித்து அவரை நடுத்தெருவுக்கு அழைத்துவந்திருக்கும்.
Sunday, March 24, 2019 9:17:00 AM
-------------------------------------------------------------
11
Blogger Sanjai said...
- லக்கினாதிபதி பன்னிரெண்டில்
- 45 வயதில் ஆறாம் இடத்தில இருக்கும் ராகு தன் தசையில் எல்லாவற்றையும் புடிங்கிவிட்டார்.
- ஆறாம் idam என்பது - கடன் ருணம் வழக்கு.
Sunday, March 24, 2019 10:18:00 AM
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.19

Astrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே!!!!

Astrology: ஜோதிடப் புதிர்: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே!!!!

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய தந்தையார் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஆனால் ஜாதகர் அவருடைய 45வது  வயதிற்குள் வியாபாரத்தில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டு எல்லா சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விட்டன. அன்றாடம் செல்விற்கே சிரமப்படும் நிலைமைக்கு ஜாதகர் ஆளாகி விட்டார்.

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும்பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 24-3-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.3.19

மரணத்திற்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரும்?


மரணத்திற்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரும்?

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!

உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த.  முக்கியத்துவமும் கொடுக்காது....!!

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வர்.....!
1.உனது ஆடைகளை களைவர்.
2.குளிப்பாட்டுவர்.
3.புது துணி அணிவிப்பர்.
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
6.உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.
7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும்.

* உன்னுடைய உடமைகள்
*புத்தகங்கள்
*பைகள்
*செருப்புகள்
எல்லாம் வெளியேற்றப்படும்.

A.உறுதியாக விளங்கிக்கொள்,
* உனது பிரிவால் உலகம் கவலைப் படாது
*பொருளாதாரம் தடைப்படாது
*உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்
* உனது சொத்து வாரிசுக்குப் போய்விடும்
* இவ்வளவு சொத்து சொகத்தோடு வாழ்ந்தும் வெறும் கையுடன் படுத்திருப்பதை இருப்பதை உணர மாட்டாய்.

நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே!!!!!
(பாடி எப்ப வரும் ????) உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்

எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி என்று வாழும் போதே *வாழாமல்* உன்னை நீயே ஏமாற்றி விட வேண்டாம்

உன்னைப்_பற்றிய_கவலை -3 பங்காக்கப்படும்

1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்.
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்.
4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
5.உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.

#உன்னை_விட்டு_நீங்குவது
1.உடம்பு மற்றும் அழகு
2.சொத்து
3.ஆரோக்கியம்
4.பிள்ளைகள்
5.மாளிகை
6.மனைவி/கணவன்.

உனது ஜீவனுக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்.....

 எனவே, இவ்விஷயங்களில்_ஆசை_வை.

1. தவறாது கோவிலுக்கு செல்.

2. வேதத்தை பாராயணம் செய், தியானம் செய்.

3. பிறர் அறியா தர்மம் செய்

4. கடவுளை பற்றிய நல்லதை சொல்.

5. ஆத்மாவுக்கு உரியதை பற்றி சிந்தனை செய்.

6. கடவுள் பாராட்ட நல்ல செயல்கள் செய்.

7.யாருக்கும் கெடுதல் செய்யாதே.

உலகில் ஏதோ ஒன்றை தேடுகிறாய்...
தேடிக் கொண்டிருக்கிறாய்
ஆனால்,
மேற்கூறியது மட்டுமே உண்மை!!!
-------------------------------------------
படித்ததில் உணர்ந்தது: பகிர்ந்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.3.19

வாருங்கள் மேகமலைக்குப் போய் வருவோம்!!!


வாருங்கள் மேகமலைக்குப் போய் வருவோம்!!!

மேகமலை போறீங்களா... அப்போ இதைப் படிக்காம போய்டாதீங்க!

ஊட்டி, கொடைக்கானல், மூணாறு வரிசையில் ஜம்முனு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறது மேகமலை. தேனி மாவட்டம்
சின்னமனூர் அருகே உள்ள மேகமலை, பெயருக்கு ஏற்றார் போல மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஓர் அழகிய இடம்.

 மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள மேகமலை, வன உயிரின சரணாலயமாக விளங்குகிறது. அரிதான ஹார்ன்பில், சலீம்
அலி வவ்வால், எங்குமே காண கிடைக்காத ஹூட்டன் பிட் வைபர் பாம்பு முதலிய பல அரிய வகை பறவைகள், விலங்குகளின்
வாழிடமாக திகழ்கிறது மேகமலை. இது பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதற்கு ஏற்றார்போல அருமையான கிளைமேட் மேகமலைக்கு மக்களை
இழுத்துவருகிறது என்றே சொல்லலாம்.

எங்குமே காணமுடியாத சிறப்பான நில அமைப்பைக் கொண்ட மேகமலை ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு. 1920-களில் தேயிலை
தோட்டங்களை அமைத்தனர். தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அந்தத் தேயிலை தோட்டங்கள் விரிந்து
பரவியுள்ளன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மேகமலை தற்போது தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது.

*தடையாக இருந்த சாலை சீரானது*

மேகமலையை அறிந்தவர்கள் அச்சப்படுவது அதன் சாலையைப்பார்த்துதான். கல்லும் குழியுமாக இருந்த சாலையானது நான்குவருட தொடர் பணிகளுக்குப் பின்னர் தற்போது சீராகியுள்ளது. சின்னமனூரில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் நீளம்
கொண்ட மலைகளில் செல்லும் சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

வழியில் நம்மை வழிமறைக்கும் மேகங்களுக்கு நடுவே, மெதுவாக ஊர்ந்து செல்லும் அனுபவம் வேறெங்கும் கிடைக்காது என்றே சொல்லலாம்.

*என்னென்ன பார்க்கலாம் மேகமலையில்?*

ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவாணம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என
மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் அணையில் பிடிக்கப்படும் கோல்டு ஃபிஸ்களை அங்கேயே சூடாக
சமைத்துக்கொடுப்பார்கள். `உட்பிரையர்` என்ற தனியார் நிறுவனத்தாரின் தேயிலைத் தோட்டங்கள்தான் அங்கே அதிக பரப்பளவு கொண்டவை. அவர்களின் தேயிலைத் தொழிற்சாலைக்கு சென்று `டீ தூள்` தயாரிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஹைவேவிஸ் அணையைக் கடந்து சென்றால் `இறைச்சல் பாறை` என்ற அழகான அருவி ஒன்றைக் காணலாம். வருடம் முழுவதும் தண்ணீர் வரும் இந்த அருவித் தண்ணீர் மருத்துவகுணம் கொண்டது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

*இது யானை சீசன்*

பொதுவாக மேகமலையில் யானைகள் சுற்றித்திரிவது வாடிக்கை. தேயிலை தோட்டங்களுக்கு நடுவே உலாவரும் யானைகளை
மேகமலைக்குச் செல்லும் அனைவரும் பார்த்து ரசிப்பர். இந்நிலையில், சபரிமலை சீசன் ஆரம்பித்துள்ளதால், கேரள
வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகள், மேகமலைக்கு படையெடுக்கும். மேகமலையில் இருக்கும் வட்டப்பாறை, சன்னாசி
மொட்டை, போதைப்புல்மேடு போன்ற இடங்கள் யானைகள் வலசைச் செல்லும் பாதைகள். குறிப்பாக வட்டப்பாறை பகுதியில்
தினமும் காலை மாலை யானைக்கூட்டத்தைப் பார்க்கலாம். மேகங்கள் சாலையை சூழ்ந்து கிடக்க, அந்த மேகத்திற்குள் மறைந்து நின்றுகொள்ளும் யானைகளைக் கவனித்துதான் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகள் மட்டுமல்லாது
காட்டுமாடுகளையும் எளிதில் பார்த்து ரசிக்கலாம். மேகமலை மக்களோடு பழகிய யானைகள் மற்றும் காட்டு மாடுகள் மனிதர்களை எந்தத் தொந்தரவும் செய்வதில்லை.

*ஓர் அன்பான வேண்டுகோள்*

மேகமலைக்குச் செல்ல வேண்டும் என்றால், தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து காலை, மாலை இரு நேரங்களில் பேருந்து
வசதி உள்ளது. சொந்த வாகனத்தில் செல்பவர்கள், மேகமலை அடிவாரப் பகுதியான தென்பழஞ்சியில் அமைந்துள்ள
வனத்துறையின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டும். வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக, காலை 6 மணிக்கு
மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த விடுமுறை
தினங்களில் மேகமலைக்குச் சென்றவர்கள் வீசிவிட்டுச் சென்ற குப்பைகள் டன் கணக்கில் அள்ளப்பட்டன.

அரிய வகை உயிரினங்களின் வாழிடமான மேகமலையில் குப்பைகளையும், மது பாட்டிகளையும் தவிர்த்துவிட்டு வனச் சூழலை காக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மேகமலை வாசிகள் சுற்றுலாப்பயணிகளுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறார்கள். சில்லுனு காற்று, இதமான சூழல், கொஞ்சும் மேகம், முத்தமிடும் சாரல் என ரம்மியமான இடமாக இருக்கும் மேகமலை நம் கைகளில் இருக்கிறது.

விடுமுறை நாள்களில் குடும்பத்தோடு சென்று ரசிக்கச் சரியான இடமாக விளங்கும் மேகமலையில் சூழலை காக்கும் கடமையும்
நம்மிடமே!

மேலதிக தகவல்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Meghamalai
----------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.3.19

பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?

1. ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு  பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும்
என்பதை குறிக்கிறது.

2.ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது.

3.அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.

4.வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து விட்டால், அந்த குடும்பத்தினர் பணக்கஷ்டத்தை சந்திக்க
நேரிடும்.

5. ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவர்களின் சேமிப்பு பணம் கரையத்
தொடங்கும் என்று பொருள்.

6.வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

7.ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது பெரிய பண இழப்பை
ஏற்படுத்த போவதாக அர்த்தம்.

#இல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அதற்கு 10 எளிய
வாஸ்து குறிப்புகள் உள்ளன.

1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை

சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப்
பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு
உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.

2. ஒளிபிறந்தால் ஓடோடி வரும் செல்வம்

வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.

3. மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம்

பூஜை அறையிலும் பிரதான அறையிலும் மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.

4. கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை

சனிதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்கவும். வாரந்தோறும் பூஜித்து
புதிய பழத்தை வைக்கவும். இப்படி செய்தால் கண் திருஷ்டி உங்கள் இல்லத்தையும் உங்கள் குடும்பத்தாரையும் விலகி ஓடும்.

5. பூஜை அறையில் புனித கங்கை நீர்

புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம்
உண்டாகும்.

6. தீயசக்திகளை துரத்தும் உப்பு

வீட்டின் அறை மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிறைத்து வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து
நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது.

7. சரியான திக்கில் சமையலறை

வாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு
மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கோமா
என்பதை உறுதி செய்யுங்கள்.

8. சமையலறையில் மருந்துகள் வைத்தலாகாது

எந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள்
சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது.

9. படுக்கையறையில் தேவையில்லை முகம்பார்க்கும் கண்ணாடி

படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில்
இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள
கண்ணாடி பிணியையும் குடும்பத்தில் சச்சரவையும் ஈர்த்து வரும்

10. அமைதியைத் தூண்டும் மணியோசை

மணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை தவிடு பொடியாக்கும். காற்றில் எப்போதும் நல்ல சக்தியை பரப்பும்
தன்மை இந்த மணிகளுக்கு உண்டு.

#புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான்
உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு
நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது என்ற 

ரணத்தைப் பார்க்கலாம்
இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது.
பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது.
இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது.
 பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம்.
 மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது.
மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.

இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன
மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.19

அந்தக் காலத்தைப் பற்றி சுஜாதா அசத்தலாகச் சொன்னது!!!


அந்தக் காலத்தைப் பற்றி சுஜாதா அசத்தலாகச் சொன்னது!!!

1. கிழிந்த dressஐ தைத்து போட்டது அந்தகாலம், தைத்த dessஐ கிழித்து போடுவது இந்தகாலம்..

*சுஜாதாவை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்*

அந்தக் காலம் தான் நன்றாக இருந்தது....!

2. ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு

3. பேருந்துக்குள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் .,

4. மிதி வண்டி வைத்திருந்தோம்.,

5. எம் ஜி ஆர் உயிரோடு இருந்தார்.

6. ரஜினி, கமல் படம் ரிலிஸ்.

7. KB படங்கள் என்றால் ஒரு மாதம்அலசுவோம்

8. எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.

9. கல்யாண வீடுகளில் பந்திப் பாய் போட்டு சாப்பாடு

10. கபில் தேவின் கிரிக்கெட். FANTASTIC 5 நாள் MATCH

11. குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது.

12  எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது

13. வீடுகளின் முன் பெண்கள் காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்

14. சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்

15. தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒரு மாதத்துக்கு முன்பே  தயாராவோம்

16. புது SCHOOL UNIFORM தான் சிலருக்கு DEEPAWALI DRESS

17. டான்ஸில் ஆபரேஷன்தான் பெரிய ஆபரேஷன் நிறையப் பேர்கள் பண்ணிக் கொண்டார்கள்

18. வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்.,

19. எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்.,

20. சாலையில் எப்போதாவது வண்டி வரும்.,

21. மழை நின்று நிதானமாக பொழியும்

22. தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்.,

23. வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்கும் பாரமாயில்லை.,

24. எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.,

25. வெஸ்ட் இன்டீசை  வெல்லவே முடியாது.,

26. சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்.,

27. அம்மா பக்கத்தில் உறங்கினோம்

28. கொளுத்தும் வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்தோம்

29. முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்.,Shaving 50 பைசா

30. பருவப் பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர் - ,சிலிண்டர் மூடுதுணி போல்  யாரும் நைட்டி அணிய வில்லை.,

31. சுவாசிக்க காற்று இருந்தது., குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை.,

32. தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே  நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்.,

33. டாக்டர் வீட்டுக்கே வருவார்

34. காதலிப்பது த்ரில்லிங்கா  இருந்தது

35. சினிமா பாட்டு புத்தகம் கிடைக்கும்

36. மயில் இறகுகள் குட்டி போட்டன...புத்தகத்தில்.,

37. ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அப்பாவிடம் அடி வாங்கினோம்..,

38. மூன்றாம் வகுப்பிலிருந்து  மட்டுமே,ஆங்கிலம்.,

39. ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.,

40. மொத்தத்தில் மரியாதை இருந்தது..

தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்..,

படித்ததில் மனதை உருக வைத்தது....
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.19

Astrology: Jothidam: 15-3-2019 புதிருக்கான விடை!!!!Astrology: Jothidam: 15-3-2019 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, மனிதருக்கு அவருடைய 36வது வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை வந்தது. ஆசை
அதிகமாகி அனுதினமும் வீட்டைப் பற்றிய கனவே அவரைச் சுற்றிவரத் துவங்கியது. தசா, புத்திகள் தானே பலனைத் தரும். சில
ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் அதற்குரிய தசா, புத்தி (Major Dasa and Sub period) வந்த போது அவருடைய கனவு
நனவாகியது. ஆசை நிறைவேறியது. அவருடைய ஜாதகத்தை அலசி அவருடைய எந்த வயதில் கனவு நிறைவேறியது  அல்லது
எந்த தசா, புத்தியில் நிறைவேறியது என்பதைச் சொல்லுங்கள்'' என்று கேட்டிருந்தேன்

சரியான பதில்: ஜாதகருக்கு அவருடைய 36 வது வயதில் குரு மகா திசை ஆரம்பம். குரு திசை சுய புத்தி வழக்கம்போல வேலை
செய்யவில்லை. அடுத்து வந்த சனி புத்தியில் தசா நாதனும் புத்தி நாதனும் அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 Position) அதற்கு
அடுத்த புதன் புத்தியில், புதன்  குரு பகவானின் பார்வையைப் பெற்றிருப்பதால் அந்த திசா புத்தியில் ஜாதகரின் கனவு
நிறைவேறியது. அதாவது ஜாதகரின் 41வது வயதில் அவரது கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது!!!!

புதிருக்கான பதிலை 7 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 22-3-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
Around 41 years Guru dasa budan bhukthi or Sani bhukthi helped him to get the house.
Friday, March 15, 2019 6:14:00 AM
-----------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1.பாக்கியாதிபதி சனியின் திசையில் சுக்ர புத்தியில் ஐம்பத்து இரண்டு வயது ஆறு மாதங்களில் வீடு கட்டி இருப்பார்
௨.சனியும் சுக்ரனும் நாலாவது இடத்தில நல்ல நிலையில் உள்ளனர்
தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி
Friday, March 15, 2019 2:03:00 PM
-----------------------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
தங்கள் புதிருக்கான பதில்
1 ஜாதகர் சொந்த வீடு கட்டி குடியேறும் நிகழ்வு அவருடைய நான்காம் வீட்டில் அமர்ந்து இருக்கும் சனியின் தசை யில் நடந்தது .
ஏனென்றால் சனி அவருக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் ஆவார் .
ஆகவே சனி தசையில் புதன் புக்தியில் அந்த கனவு நினைவானது
நன்றி
P.CHANDRASEKARA AZAD
MOB. 8879885399
Friday, March 15, 2019 8:21:00 PM
----------------------------------------------------------
4
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
10 செப்டம்பர் மாதம் 1952, காலை 1.00 மணிக்கு, கிருத்திகை நட்சத்திரம் ரிஷப ராசி மிதுன லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர்
பிறந்தார்.
36 வயதில் (1988) வீடு கட்ட உருவான ஆசை, குரு மகா தசையில் புதன் புக்தியில் (1992) 40 வயதில் அவருடைய ஆசை
நிறைவேறியது. காரணம் ஜாதகத்தில் குருவின் 5ம் பார்வை 4ம் வீட்டு அதிபதி புதனின் மீது உள்ளது. அப்பொழுது
கோள்சாரத்தித்தில் குரு கன்னி ராசியில் ஜாதகருடைய 4ம் வீட்டில் அமர்ந்து அவருடைய ஆசையை நிறைவேற்றினார்.
4ம் வீடு சொத்து, சுகம், வீடு. லக்கினாதிபதி புதன், 4ம் வீட்டிற்கும் அவரே அதிபதி, 3ம் வீட்டில் சூரியனுடன் சேர்ந்து குருவின் 5ம்
பார்வையில் உள்ளார் .
தீய கிரங்கள் சூழ்ந்து இருந்தாலும் குருவின் பார்வையால் நிவர்த்தி அடைகிறார்.
4ல் சுக்கிரன் நீசம், சனியும் சேர்ந்து 4ல் அமர்ந்து, சொத்து, சுகம், கல்வி, வீடு தடங்கல், தாமதம் ஏற்படுத்தி ஜாதகரை உண்டு
இல்லை என்று ஆக்கிவிடுவார்.
வீடு அமைவதற்கான கிரகம் செவ்வாய். செவ்வாயின் பார்வையோ, குருவின் பார்வையோ 4ம் வீட்டின் மீது இல்லை. மாறாக
செவ்வாயின் பார்வை லக்கினத்தின் மீது உள்ளது. லக்கினம் (34 பரல்). குருவின் பார்வை 4ம் வீட்டு அதிபதி புதனின் மீது
இருக்கிறது. இது போதும் அவருடைய ஆசை நிறைவேறுவதற்கு.
ஜாதகருக்கு 71 வயதில் (2023) தான் லக்கினாதிபதி புதன் மகா தசை வருகிறது. அந்த வயதில் அவரால் என்ன செய்ய முடியும்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Friday, March 15, 2019 11:36:00 PM
-----------------------------------------------------
5
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர்: கனவு நிறைவேறும் காலம்?
மேச‌ லக்கினம், விருசப ராசி ஜாதகர்.
அவருடைய சொந்த வீடு கட்டும் ஆசை (அ) கனவு எந்த வயதில், எந்த தசா, புத்தியில் நிறைவேறியது?
1) ஜாதகரின் 36ம் வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை அதிகரித்தது.அப்போது அவருக்கு குரு மகாதிசை தொடங்கியிருந்தது. குரு பகவான் 11ல் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.
2) ஆனால் வீடு கட்டும் ஆசை உடனே நிறைவேறவில்லை. அதற்குக் காரணம் நிதி நிலைமை சரியில்லாததே. தனாதிபதி சந்திரன்
12ல் மறைவு மற்றும் அவரின் மேல் 6ம் அதிபதி செவ்வாயின் நேர் பார்வை.தனகாரகன் குருவும், தனாதிபதி சந்திரனும் 12,1
நிலைமையில் அமர்வு.
3) சில ஆண்டுகள் கழித்து, குரு தசை, சுக்கிரன் புத்தியில் அவருடைய கனவு நிறைவேறியிருக்கும். ஆனால் வங்கி கடன் பெற்றே கஷ்டப்பட்டு வீட்டை கட்டி முடித்திருப்பார்.
வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,
இரா.வெங்கடேஷ்.
Saturday, March 16, 2019 6:19:00 PM
-------------------------------------------------------
6
Blogger Sanjai said...
வணக்கம் ஐயா,
36 வயதில் குரு தசை தனது புக்தியில் வீடு காட்டும் எண்ணம் ஏற்பட்டது.
39 / 40 வயதில் குரு தசை புதன் புக்தியில் வீடு காட்டியிருப்பார்.
நன்றி
Saturday, March 16, 2019 11:55:00 PM
------------------------------------------------------
7
Blogger J Murugan said...
குரு மகாதசையில் வரும் புதன் புத்தியில் அவரது வீடு கட்டும் ஆசை நிறைவேறியது.
Sunday, March 17, 2019 12:38:00 AM
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.3.19

Astrology: ஜோதிடப் புதிர்: கனவு நிறைவேறும் காலம்?


Astrology: ஜோதிடப் புதிர்: கனவு நிறைவேறும் காலம்?

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய 36வது வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை வந்தது. ஆசை அதிகமாகி அனுதினமும் வீட்டைப் பற்றிய கனவே அவரைச் சுற்றிவரத் துவங்கியது. தசா, புத்திகள் தானே பலனைத் தரும். சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் அதற்குரிய தசா, புத்தி (Major Dasa and Sub period) வந்த போது அவருடைய கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது.

அவருடைய ஜாதகத்தை அலசி அவருடைய எந்த வயதில் கனவு நிறைவேறியது  அல்லது எந்த தசா, புத்தியில் நிறைவேறியது என்பதைச் சொல்லுங்கள்

சரியான விடை 17-3-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.3.19

அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்?


அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்?

அர்த்தமுள்ளஇந்துமதம் ........கவியரசர் கண்ணதாசன்

#அஷ்டமியும்நவமியும் .......

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .

நம் முன்னோர்கள் அஷ்டமி  அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ?  அதற்குக் என்ன காரணம் ?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி  வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration  பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுதமுடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.

இப்போது சொல்லுங்கள் பகுத்தறிவு வியாதிகள் முட்டாளா ? நம் முன்னோர்கள் முட்டாள்களா ?
-----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.3.19

எது சிறந்த பக்தி?


எது சிறந்த பக்தி?

துரியோதனனுடன் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற, அவர்களைக் கொன்றொழிக்க பல முயற்சிகள் செய்து வந்தான் துரியோதனன்.

ஆனாலும் பாண்டவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் எல்லாச் சூழ்ச்சியிலும் தப்பி, பத்து வருட வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழச் சென்றார்கள்.

காட்டில் வாழ்ந்து வந்த குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் பீமனோ, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபற்றுவதில்லை.

ஒருநாள் "நீ யானைபோல் பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்தார் தருமர்.

இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான்.

"நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான்.

அங்கு சென்ற அருச்சுனனும், நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர்.

மனம் இடிந்தவனாக,அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர்.

வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான்.

அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார்.

"இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன்.

"நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவானா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.

போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்." என்று உரக்கக் கத்தினான்.

உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆயிற்று. அவன் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அருச்சனன்.

தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் பக்தியே தூயதாகவும் தன்னலம் அற்றதாகவும் இருந்தது.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!!!!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.3.19

திருச்செந்தூர் முருகன் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.


திருச்செந்தூர் முருகன் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன

25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.

31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

சித்திரை, ஐப்பசி, தை - 3
ஆடி, தை அமாவாசை - 2
ஆவணி, மாசித் திருவிழா - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் - 2
மாத விசாகம் - 12
ஆனி தை வருடாபிஷேகம் - 3
தீபாவளி, மகாசிவராத்திரி - 4
மொத்தம் 36

42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.

43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.

44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.

49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.

51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.

52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.

53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.

55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.

57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.

58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.

59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.

60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்
---------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!