மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.3.19

அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!!!


அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!!!

*முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா?! பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?!*

திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது?!, ஏன் அவனுடைய நூறு குழந்தைகள் இறந்துபோனார்கள்?!.

குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.

அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?! என்றார்.

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் பிரபலமான முனிவரான வசிஷ்டரின் சீடன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.

அதன்படி, அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னப்பறவையின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்! அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

அதற்கு வசிஷ்டரின்  சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார். ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.

அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி  பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,
நூறு குழந்தைகள் என  நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னப்பறவையின் குஞ்சுகளை  உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாய் பறவை எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு  பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.!...

ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. பிறகு உனக்கு, கண் எதற்கு?!, அதனாலேயே நீ குருடனானாய்.!.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது.!.அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். 

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து போய் நின்றான்.!.

            - வியாச பாரதத்தில் இருந்து......
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir Nothing is stronger than destiny excellent sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    கதை தத்ரூபம்!இறைவனுக்கு நல்லவன் கெட்டவன் என்ற பேதம்
    ஒருபோதும் இருந்ததில்லை! உணர்ச்சி வசப்படாதவர்.
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதானே every action has reaction !
    திருதராஷ்டிரன் என் குருடாக இருந்தான் என்பதுகூட தெளிவாக கண்ணபெருமானல் விலக்கப்பட்டிருக்கிறது!
    அவனது முந்தைய ஜென்மத்தில்
    நிலையும் விளங்குகிறது!
    இறைவன் மனிதன் அல்ல, நிலைமைக்குத் தகுந்தபடி மாறி நடப்பதற்கு!
    எல்லாம் கிருஷ்ண அர்ப்பணம்!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Excellent post....

    Thanks for sharinng...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. சர்வம் கிருஷ்ணார்பணம்.நல்லவிளக்கம் கண்ணணிடம் கிடைத்ததை எங்களுடன் பகிர்வுக்கு.நன்றி

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir Nothing is stronger than destiny excellent sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  6. ///Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    கதை தத்ரூபம்!இறைவனுக்கு நல்லவன் கெட்டவன் என்ற பேதம்
    ஒருபோதும் இருந்ததில்லை! உணர்ச்சி வசப்படாதவர்.
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதானே every action has reaction !
    திருதராஷ்டிரன் ஏன் குருடாக இருந்தான் என்பதுகூட தெளிவாக கண்ணபெருமானால் விளக்கப்பட்டிருக்கிறது!
    அவனது முந்தைய ஜென்மத்தில்
    நிலையும் விளங்குகிறது!
    இறைவன் மனிதன் அல்ல, நிலைமைக்குத் தகுந்தபடி மாறி நடப்பதற்கு!
    எல்லாம் கிருஷ்ண அர்ப்பணம்!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  7. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Excellent post....
    Thanks for sharinng...
    Have a great day.
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  8. /////Blogger Happenings.......... said...
    சர்வம் கிருஷ்ணார்பணம்.நல்லவிளக்கம் கண்ணணிடம் கிடைத்ததை எங்களுடன் பகிர்வுக்கு.நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com