மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.14

Astrology: Generational Gap தலைமுறை இடைவெளி

 
Astrology: Generational Gap தலைமுறை இடைவெளி

தலைமுறை இடைவெளி (Generational Gap) என்பதை வெள்ளைக்காரர்கள்தான் முதலில் சொன்னவர்கள். ஏற்றுக்கொண்டவர்கள்.

நாம் இன்னும் முறையாக, சரியாக ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்கொண்டு இளைஞர்களை திட்டிக் கொண்டிருக்கிறோம்

"காசு அருமை தெரியவில்லை!”

"கலாச்சாரம், பண்பாட்டை மதிக்கவில்லை!”

"பெரியவர்களின் பேச்சை, அனுபவத்தைக் காது கொடுத்துக் கேட்பதில்லை!”

என்றெல்லாம் அவசியமாகவோ அல்லது அவசியமில்லாமலோ திட்டிக் கொண்டிருக்கிறோம்

மற்றவர்கள் சொன்னால், நாம் முழுமையாக, அவர்களைப் பேசவிட்டுவிட்டுக் கேட்போமா? மாட்டோம்!

நம்மை நாம் ஓரளவுதான் திருத்திக் கொள்வோம். அதுபோல மற்றவர்களைத் திருத்துவதும் சாத்தியமில்லை.

யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை. அதை மனதில் கொள்ளுங்கள்!

மிளகாய்க்கு உள்ள காரமும், பாகற்காய்க்கு உள்ள கசப்பும், புளிக்கு உள்ள புளிப்பும் எப்படி இயற்கையானதோ, ஒரே மண்ணில் அவைகள் விளைந்தாலும், அந்தத் தன்மை எப்படி உண்டாகிறதோ, அப்படிதான், மனித மனங்களும், குணங்களும், எண்ணங்களும் இயற்கையானதாகும்,

லக்கினம், லக்கினநாதன், லக்கினகாரகன், மனகாரகன், லக்கினத்தின் மேல் விழுகின்ற சுபகிரகங்களின் பார்வைகள், தீய கிரகங்களின் பார்வைகள் அத்துடன் லக்கினத்தில் வந்தமரும் கிரகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றை வைத்துக் குணநலன்கள் எல்லாம் ஆளாளுக்கு மாறுபடும்.

மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள். சிம்ம லக்கினக்காரர்கள் பிடிவாதம் மிக்கவர்கள். அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள். கன்னி லக்கினக்காரர்கள் யாருடனும் ஈஸியாக கலந்து, அவர்களை நட்பாக்கிக் கொண்டுவிடுவார்கள். ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்து விடலாம். சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள லக்கினக்காரர்கள். எதெதற்கு அவர்களை வளைக்கலாம் என்பதைப் பதிவில் எழுத முடியாது. மகர லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள். கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையிலேயே நல்லவர்கள். யாருடனும் இயைந்து போகக்கூடியவர்கள். நிறைகுடம் போன்றவர்கள். அதனால்தான் அந்த லக்கினத்திற்குப் பூரண கும்பம் அடையாளச் சின்னமாகக் கொடுக்கப் பெற்றுள்ளது. கும்ப லக்கினப் பெண்கள் கிடைத்தால் (கல்யாணமாகாதவர்கள்) கண்ணை மூடிக்கொண்டு அவர்களை மணந்துகொள்ளலாம்.

உடன் பிறந்தவர்கள் அல்லது உடன் இருப்பவர்கள் அல்லது வந்து சேரும் தேவதைகளின் அல்லது பெண்ணாக இருந்தால் கண்ணாளர்களின் குணங்களும் மாறுபடும்.

இதுபோல எழுதிக்கொண்டேபோகாலாம். குண நலன்களை இன்னொரு நாள் கேலக்சி வகுப்பில் அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன். இன்று முதல் தலைமுறை இடைவெளி என்று சொல்லிக் கொண்டிராமல், அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நீங்கள் உண்டாக்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினைதான். Tensionதான்

பெற்றோர்கள் - பிள்ளைகள், கணவன் - மனைவி என்ற எல்லா உறவுகளுக்கும் நட்புகளுக்கும் அது பொருந்தும்!

ஆகவே தலைமுறை இடைவெளி என்று மொக்கையாகப் பேசிக் கொண்டிருக்காமல், இடைவெளியைக் குறைப்பது நம்கையில்தான் இருக்கிறது என்று யோசித்துச் செயல்படுங்கள்.

இந்த இளைஞன் அணிந்திருப்பது கிழிந்த உடையா? அல்லது இடத்திற்கு இடம் கிழித்துவிட்டுவிட்டு அணிந்து கொண்டிருக்கும் உடையா? பார்த்து, சரியான பதிலைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்


===================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.3.14

கருணை முகங்கள் ஆறு; கவலை எதற்கு கூறு?

 
 கருணை முகங்கள் ஆறு; கவலை எதற்கு கூறு?

பக்தி மலர்

28.3.2014

கருணை ... முகங்கள் ... ஓராறு
காக்கும் கரங்களோ ... ஈராறு
முருகன் ... வாழும் ... வீடாறு
முகம் பார்த்து ... இரங்க வேறாரு

கந்தன் ...
கருணை ... முகங்கள் ... ஓராறு
துணை என்று ... ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை ... தீர்ப்பது ... குகன் வேலை
வேலைப் போற்றுதல் ... நாவின் வேலை

கருணை ... முகங்கள் ... ஓராறு
அடியார்கள் ... அகமே அவன் கோயில்
அன்பே ... ஆலயத் தலைவாயில்
குடியாய் ... இருப்பான் ... குறை தீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்

கந்தன் ...
கருணை ... முகங்கள் ... ஓராறு
காக்கும் கரங்களோ ... ஈராறு
முருகன் ... வாழும் ... வீடாறு
முகம் பார்த்து ... இரங்க வேறாரு

- சூலமங்கலம்' சகோதரிகள்
======================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.3.14

Astrology: என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே!

 

Astrology: என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே!

புதிர் எண் 49ற்கான விடைகள்!

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே

-------------------------------------------
பலவிதமான நோய்கள் (Multiple diseases)

நோய் வாய்ப்படாத மனிதனே இருக்க முடியாது. சளி, காய்ச்சல், உடம்பு வலி என்று ஏதாவது உபத்திரவம் இருக்கும் அல்லது அவ்வப்போது வந்து போகும். அது இயற்கையானது. தாங்கக்கூடியது.

ஆனால் கடுமையான நோய்கள் இருந்தால் வாழ்க்கை ஜாதகனுக்கும் சுகப் படாது. அவனைச்  சுற்றியுள்ளவர் களுக்கும் சுகத்தைத் தராது. சமயத்தில் எப்போதடா இவன் போய்ச் சேர்வான் என்னும் மனநிலை நெருங்கிய உறவினர்களுக்கு ஏற்பட்டுவிடும்

கடுமையான நோய்கள் எவை?

உங்களுக்காகக் கூகுள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கிக் கீழே கொடுத்துள்ளேன்.

a chronic disease is a disease that is long-lasting or recurrent. The term chronic describes the course of the disease, or its rate of onset and development. A chronic course is distinguished from a recurrent course; recurrent diseases relapse repeatedly, with periods of remission in between. As an adjective, chronic can refer to a persistent and lasting medical condition. Chronicity is usually applied to a condition that lasts more than three months. The opposite of chronic is acute.

Examples of chronic diseases include:

    * Asthma
    * Chronic fatigue syndrome
    * Chronic osteoarticular diseases: rheumatoid arthritis, osteoarthritis
    * Chronic respiratory diseases: chronic obstructive pulmonary disease, asthma, pulmonary hypertension
    * Chronic renal failure
    * Diabetes mellitus
    * Chronic hepatitis
    * Autoimmune diseases, like ulcerative colitis, lupus erythematosus
    * Cardiovascular diseases: heart failure, ischemic cardiopathy, cerebrovascular disease
    * Epilepsy
    * Neoplasic diseases not amenable to be cured
    * Osteoporosis
    * Cancer
    * Sickle Cell Anemia
    * Chronic GHVD: intra-oral

Many chronic diseases require chronic care management for effective long-term treatment. Effective chronic disease control requires attention to social, behavioral, environmental and clinical aspects. Multiple morbidities can be common in older adults.

சரி, கடுமையான நோய் எதனால் உண்டாகிறது?

அது சம்பந்தமாக ஒரு ஜாதகத்தை நேற்றையப் பதிவில் கொடுத்திருந்தேன் அதை இப்போது அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்த ஜாதகத்தில் லக்கின நாதனும், ஆறாம் இடத்தானும் ஒரே ஆசாமி. அதாவது சுக்கிரன். அவன் எப்படி  உள்ளான்?

பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கின்றான். அவன் இருக்கும் விருச்சிக வீடு அவனுக்குப் பகைவீடு என்பது மட்டுமல்ல, அந்த வீட்டிற்கு இருபுறமும் பாபக் கிரகங்கள். அத்துடன் அது watery sign.

ஜாதகனுக்கு முதலில் நீரழிவு நோய் வந்தது. பின்பு கடுமையான மூட்டு வலி. பிறகு புற்று நோய்!

உடல் காரகன் சூரியன் எட்டில். அத்துடன் குருவும் எட்டில். குருவிற்குப் பகைவனான புதனும் குருவுடன் சேர்ந்துள்ளான். அத்துடன் தேய்பிறைச் சந்திரன். கேட்க வேண்டுமா? அனைத்துமே சாதகமாக இல்லை!

போதாதற்கு உச்சமான சனீஷ்வரனின் பார்வையும் அவர்கள் மேல் தீர்க்கமாக விழுகிறது. சனியைத் தூண்டிவிடும் விதமாக விரையாதிபதி செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் சனீஷ்வரனைக் கட்டம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

இவை எல்லாமுமாக ஒன்று சேர்ந்து ஜாதகனைப் படுத்தி எடுத்ததுடன் பரலோகத்திற்கும் அனுப்பிவைத்துவிட்டன.

ஆறாம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலே கடுமையான நோய்கள் உண்டாகும். அதை மனதில் வையுங்கள்
---------------------------------------------------------------------------
நேற்றைய புதிருக்கான சரியான விடை

1. ஆறாம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்ததால் கடுமையான நோய்கள் உண்டாகின!
2. எட்டாம் வீடு கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதால், ஜாதகர் நோய்களில் இருந்து மீளவில்லை. இறந்துவிட்டார்


இவ்விரண்டையும் சரியாக எழுதியுள்ளவர்களுக்கு மட்டுமே முழு மதிப்பெண். 

 திருவாளர் செல்வம் வேலுசாமி அவர்களும், திருமதி தனலெட்சுமி அவர்களும் இந்த ஜாதகத்தை முதலிலேயே கேலக்சி வகுப்பில் பார்த்திருக்கிறேன் என்று எழுதியுள்ளார்கள். அவர்களின் நேர்மையைப் பாராட்டுகிறேன்

கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
 1
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ NO.49 வணக்கம்.
    25th DEC. 1924ம் தேதி மாலை 4.07.01 மணிக்கு மூல நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தார்.
    1. முதல் காரணம்: ஆறாம் அதிபதி பாப‌கர்தாரி யோகத்தில் இருப்பதால் கடுமையான நோய்கள் உண்டானது.
    2. இரண்டாவது காரணம்: ஆறாம் வீட்டு அதிபதி சுக்கிரன் இருக்கும் விருச்சிக வீடு அவனுக்கு பகைவீடு. இது ஜல ராசி. இரு பக்கமும் பாப
கிரக‌ங்கள்.
    3. நோய்களிலிருந்து மீள முடியாமல் மரணம் அடைந்து இறைவனடி சேர்ந்தார்.
    ரிஷப லக்கினம் (32 பரல்கள்). லக்கினாதிபதி சுக்கிரன் (6 பரல்கள்) 7ம் வீட்டில். அதே சுக்கிரன் 6ம் வீட்டிற்க்கு அதிபதியும் அவரே.
    7ம் வீட்டில் (19 பரல்கள்-பலவீனம்) இருக்கும் சுக்கிரன் பாபகர்தாரி தோஷத்தில் உள்ளார். சுக்கிரன் இருக்கும் வீடு பகை வீடு விருச்சிகத்தில்.
அந்த வீட்டிற்க்கு இரு பக்கமும் பாப கிரக‌ங்கள் (ஒரு பக்கம் சனி, மறுபக்கம் சூரியன்). இது ஜல ராசி.
    ஆகையினால் ஜாதகருக்கு முதலில் நீரழிவு நோய் வ‌ந்தது (சுக்கிர தசையில் செவ்வாய் புக்தியில்). பிறகு மூட்டு வலி வந்தது (ராகு தசையில் சனி
புக்தியில்) அதன் பிறகு அது புற்று நோய்யாக மாறியது.
    (6ம் வீடுகளில் வரும் நோய்கள், அடிவயிறு, தொடைக்கும் இடுப்பிற்கும் இடைபட்ட பகுதிகள்,எலும்புகள், சதை பகுதி.)
    8ம் வீட்டில் குருவும், பகைவனான புதனும் குருவுடன் சேர்ந்துள்ளான். உடல் காரகன் சூரியன் 8ல் கூட்டு. தேய் பிறை சந்திரனும் 8ல் கூட்டு
சேர்ந்துள்ளான்.
    6ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனியின் 3ம் பார்வை, 8ம் வீட்டின் மீது. விரையாதிபதி செவ்வாயின் 8ம் பார்வை 6ம் வீட்டில் உள்ள சனியின் மீது.
    இவை எல்லாமுமாக ஒன்று சேர்ந்து ஜாதகனை படுத்தி மரணத்தை எற்படுத்தியது. கடைசியில் ஜாதகன் இறைவனடி சேர்ந்தார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.
    Wednesday, March 26, 2014 8:01:00 AM////
-------------------------------------------------------------
2
/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    6th place sani , 6th lord venus is in 7th. Mars aspects sani, creates blood related problems.
    6th lord venus is hemmed between malefic planets.
    lagna lord also venus. lagna lord and 6th lord is same. hence the person had experienced disease to the total life. He died because of diseases.
    He was unable to retrieve from diseases.

    Thanking you,
    Wednesday, March 26, 2014 11:52:00 AM/////

------------------------------------------------------------------------
3
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.49:
    The Native has affected by disease. Two important reasons for disease are:
    1. Sixth house lord and lagna lord (Venus) are one and the same, sitting in enemy house and with baba kathri yoga. Saturn is sitting in sixth house.When sixth house lord or sixth house affected by baba kathri yoga, The native will suffer by disease a lot.
    2. The authority for body (Sun) sitting in eighth house and getting Saturn's aspect as well as saturn getting Mars (twelfth house lord) aspect. This is very dangerous. Saturn dasha was running and followed by Mercury dasha. Dasha period also not supported.
    I strongly believe these are the main reasons for disease.
    In this horoscope, eighth house also affected. Mercury, Moom as well as Jupiter combusted by Sun and getting Saturn's aspect. Hence, below the heart body portion has severely affected.
    As a result, The Native has died.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 26, 2014 1:28:00 PM//////

------------------------------------------------------------
4
/////Blogger Srinivasa Rajulu.M said...
    1) அன்பரின் லக்னாதிபதி (மற்றும் ஆறுக்குடையதான சுக்கிரன்) கத்தரி யோகத்திலும், யோக காரகன் சனி ஆறில் மறைந்ததுவும், ஆத்ம மற்றும்
உடல் காரகர்கள் எட்டில் மறைந்த்துவும் அவரை ஆரோக்யமற்றவராகவே வைத்திருந்தன.

    2) ஆறாம் இடத்தைப் பார்க்கும் பாதகாதிபதி செவ்வாய், நோய் எதிர்க்கும் ஆற்றலைக் குறைத்துவிட்டார்.
    நுரையீரல் (3) மற்றும் வயிறு (6) சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அவதியுற்றவர். அடுத்தடுத்து வந்த திசைகளும் நோயைக் குணப்படுத்த
உதவவில்லை.
(ஆறுக்கு ஆறான 11-ல் பாதகாதிபதி. மற்றும் பதினொன்றுக்கு உடைய குரு எட்டில் மறைவு)
    Wednesday, March 26, 2014 2:29:00 PM/////
---------------------------------------------------------
5
/////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு.
    இது நமது கேலக்சி 2007 வகுப்பறையில் நடத்தபெற்ற பாடம். ஆகையால் நான் விடையை தெறிந்துகொண்டே கலந்துகொள்ள விருப்பம் இல்லை.
மன்னிக்கவும்.
    நன்றி.
    செல்வம்

    Wednesday, March 26, 2014 10:53:00 AM/////
----------------------------------------------------------
6
/////Blogger dhana lakshmi said...
    ஐயா அவர்களுக்கு
    1. லக்கினநாதன் மற்றும் 6ம் அதிபதி சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளார். சுக்கிரன் அமர்ந்துள்ள வீடு பகை வீடு மேலும் இரண்டு
பக்கமும் பகை கிரகங்கள்.
    2. சூரியன்,குரு,குருவிற்கு பகைவன் ஆன புதன் மற்றும் தேய்பிறை சந்திரன் அனைத்தும் 8ம் வீட்டீல்.
    3. சனியின் பார்வை மற்றும் செவ்வாயின் பார்வை
    4. 6ம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தால் கடுமையான நோய்கள் உண்டாகும்.
    இவர் 26/12.1924ல் பிறந்திருப்பார்.
    இந்த உதாரண ஜாதகத்தை ஏற்கனவே கேலக்சி 2007 வகுப்பில் பார்த்து உள்ளோம். (6.2.14 = போஸ்ட் - 83)
    அன்புடன்
    j.dhanalakshmi
    Wednesday, March 26, 2014 6:01:00 PM/////
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.3.14

Astrology: என்நாளும் வாழ்விலே கண்ணில்லா நோய்களே!

 
Astrology: என்நாளும் வாழ்விலே கண்ணில்லா நோய்களே!

பாட்டைக் கண்டு பயப்படாதீர்கள். ”எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே!” என்ற வரிகளைத்தான் பதிவிற்கு ஏற்றாற்போல மாற்றிக் கொடுத்துள்ளேன்!

Quiz No.49: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஒன்பது

26.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி தான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.


ஜாதகர் பலவிதமான நோய்களால் மருத்துவமனைக்கு அலையும்படி நேரிட்டது. ஜாதகரின் நோய்களுக்கு ஜாதகப்படி என்ன காரணம்? நோய்களில் இருந்து மீண்டுவந்தாரா? அவருடைய 6ஆம் வீட்டை வைத்து அலசி எழுதுங்கள். பழத்தை உரித்துக் கொடுத்துவிட்டேன். ஜூஸ் போடுவது மட்டும்தான் உங்கள் வேலை!

அவருடைய நோய்களுக்கு முக்கியமான காரணங்கள் இரண்டு உள்ளன! அவற்றைக் குறிப்பிட்டுப் பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

வழக்கமாக 2, 11, 4, 7 ஆம் வீடுகளை மட்டுமே அலசி வந்த உங்களுக்கு இன்று வித்தியாசமாக 6ஆம் வீட்டை அலசும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன்

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.3.14

Astrology: ESP (Extra-Sensory-Perception) என்றால் என்ன?

 
Astrology: ESP (Extra-Sensory-Perception) என்றால் என்ன?

நேற்றுப் புதிர்ப் பகுதியில் கொடுத்திருந்த ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல் ஃபிகர் அலி புட்டோ ஆவார். அதைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொன்ன அத்தனைபேர்களுக்கும் பாராட்டுக்கள்.

புட்டோவைப் பற்றிய  ESP செய்தியைக் கீழே கொடுத்துள்ளேன். அதையும் படித்துவிட்டுச் செல்லுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, அது பதிவில் வெளியானதுதான் என்றாலும், மீண்டும் ஒருமுறை படித்து உங்கள் நினைவாற்றலைப் புதிப்பித்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
Extra-Sensory-Perception

எங்கள் ஊரிலிருந்து (தேவகோட்டை) 20 கிலோ மீட்டர் தூரத்தில் ‘ஜனவழி' என்று ஒரு கிராமம் இருந்தது. அது திருவாடானை தாலுக்காவைச் சேர்ந்தது. அங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் தொண்டி கடற்கரை உள்ளது. ரம்மியமான சூழலில் உள்ள கிராமம் அது

அங்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறி சொல்பவர் (ஜோதிடர்) இருந்தார். இளைஞர். 26 அல்லது 28 வயதுதான் இருக்கும்
ஜாதகக் குறிப்பு, கைரேகை எதுவும் வேண்டாம்.

எதிரில் வந்து உட்காரும் நபரை அசத்துகிற மாதிரி, அவராகவே வந்தவருடைய பெயர், ஊர், வந்ததின் நோக்கம், அவர் கேட்க வந்த கேள்வி, அதற்குரிய பதில் என்று ஒர் நிமிடத்திற்குள் அனைத்தையும் சொல்லி முடித்து விடுவார். வந்தவர் கிறுகிறுத்துப் போய் விடுவார்.

இத்தனைக்கும் அந்த ஜோதிடர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு சிறிய தோட்டத்திற்குள் இருக்கும் ஓட்டு வீடு. பக்கத்திலேயே வந்தவர்களுடன் அமர்ந்து பேசுவதற்காக 10 x 15 அடிக்கு கூரை வேய்ந்த கொட்டகைக் கூடம். அவ்வளவுதான்.

காலை 9 மணி முதல் 12 மணி வரைதான் (குறி) சொல்வார்.குறுகிய காலத்திலேயே பிரபலமாகி, நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

காசு வாங்கமாட்டார். தட்சணையாக ரூ.1.25 மட்டுமே, வெற்றிலை பாக்கோடு அவர் அருகில் இருக்கும் தாம்பாளத்தில் வைத்துவிட்டு வந்து விடவேண்டும். காசையும், வெற்றிலை பாக்கையும் கடைசியில் வந்து அவருடைய தாயார் எடுத்துக் கொண்டு போவார் அவருடைய குருநாதரின் கட்டளையாம், அதற்கு மேல் காசு வாங்க மாட்டார்.

வருகிற ஜனங்களே, வீட்டு வாயிலிருந்து வரிசையாக நின்று அவரைப் பார்த்துவிட்டுப் போவார்கள்.

12 மணியானவுடன் எழுந்து விடுவார். அதற்குப் பிறகு நிற்பவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு அடுத்த நாள் மறுபடியும் வருவார்கள்
வருகிறவர்களுடன் அவருடைய உரையாடல் எப்படியிருக்கும் என்பதற்கு இரண்டு நிகழ்வுகளைக்  கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------
ஒரு பெரியவரும், அவருடைய மகனும் வந்து அவர் எதிரே அமர்கிறார்கள். இருவரும் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

"உங்களுடைய பெயர் மாரிமுத்து. கூடவந்திருப்பவர் உங்களுடைய மகன் சுடலைமுத்து. இருவரும் தொண்டியிலிருந்து வருகிறீர்கள் - இல்லையா?"

"ஆமாம், தம்பி"

" உங்களுடைய படகைக் காணவில்லை. காணாமல் போய் இரண்டு நாட்களாகி விட்டது இல்லையா?

"ஆமாம், தம்பி"

"அது கிடைக்குமா? அல்லது போனது போனதுதானா? என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள் இல்லையா?

"ஆமாம், தம்பி"

"அது இப்போது பட்டுக்கோட்டை அருகேயுள்ள முத்துப்பட்டிணம் கடற்கரையில் உள்ளது. அதைத் திருடிக்கொண்டு போனவர்கள் இப்போது அதை ஒளித்து வைத்திருக்கிறார்கள். மூன்று நாட்கள் கழித்துப் போங்கள். போகும்போது, உங்கள் குப்பம் ஆட்கள் சிலரை உதவிக்குக் கூட்டிக் கொண்டு போங்கள். படகை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான் சிரமம் ஒன்றும் இருக்காது. இப்போது நீங்கள் போகலாம்”
-----------------------------------------------
கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்து ஒரு பெரியவர் தன் மனைவியுடன் வந்து அவர் எதிரில் அமர்கிறார்.

"உங்கள் பெயர் பீம ராஜா. ராஜபாளையத்திலிருந்து வருகிறீர்கள்"

"ஆமாம்!"

"உங்கள் இரண்டாவது பெண்னிற்குத் திருமணம் கூடிவராமல் தள்ளிக் கொண்டே போவதால் கவலையோடு இருக்கிறீர்கள்"

"ஆமாம்!"

"இன்னும் ஒரு வருடம் கழித்து, அடுத்த சித்திரையில் திருமணம் நடக்கும். உங்கள் பெரிய பெண்ணைக் கொடுத்துள்ள சம்பந்தி வீட்டாரே வந்து தங்களுடைய அடுத்த பையனுக்கு உங்களுடைய இரண்டாவது பெண்ணைக் கேட்பார்கள். அந்தப் பையன்தான் மாப்பிள்ளை. கேட்டவுடன் சரி என்று சொல்லி விடுங்கள். அதுவரை இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் மெளனமாக இருங்கள்.இப்போது நீங்கள் போகலாம்"
---------------------------------------------------------------------
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டுமே 100% சரியாக நடந்தது. இதுபோல அவர் சொன்னதெல்லாம் நடந்தது! அந்தக் குறி சொல்பவருக்கு இது எப்படி சாத்தியமாயிற்று?

அதற்குப் ESP (Extra Sensory Perception) என்று பெயர். அந்த 'அசாத்திய எதையும் அனுமானிக்கும் சக்தி’யைப் பற்றி, இது போன்ற இன்னும் நான்கு பேர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது உள்ளதால் - சொன்னவுடன், விரிவான விளக்கம் தருகிறேன்
-------------------------------------------------------
அந்த ஜனவழி ஆசாமியின் முகவரியைக் கொடுக்க முடியமா? என்று கேட்பவர்களுக்கு:

அந்த மனிதர் இரண்டு வருடம் வரைதான் அங்கே இருந்தார் அதற்குப் பிறகு, பல பெரிய தலைகள் நுழைந்து, பணத்தைக் கொட்டிப் பலன்களைப் பார்க்க ஆரம்பித்ததும், அந்த மனிதர் தன் குருவின் கட்டளையை மீறிப் பணத்தின் மேல் பற்று வைக்க ஆரம்பித்ததும், அந்த சக்தி (ESP Power)   அவரை விட்டு நீங்கிவிட்டதாகவும், அவர் ஊரையே காலி செய்து கொண்டு கையில் கிடைத்த பணத்துடன் எங்கோ போய்விட்டதாகவும் தகவல்
---------------------------------------------------------------------
20.12.1971 முதல் 5.7.1977 வரை பாகிஸ்தானின் சர்வ வல்லமை படைத்த மனிதராக இருந்த திரு. ஜுல்ஃபிகர் அலி புட்டோ' வைத் தெரியாதவர்களே
இருக்க மாட்டார்கள்.

அவரைப் பற்றிய செய்திகளுக்கான தளம்:
http://en.wikipedia.org/wiki/Zulfikar_Ali_Bhutto

1977 ம் வருடத்தின் துவக்கத்தில் பங்ளாதேஷ் நாட்டிற்கு அரசியல் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த திரு.புட்டோ அவர்கள் அங்கே மிகவும் பிரபலமாக இருந்த கிஸ்டி' என்னும் ESP சக்தியுள்ள மனிதரைச் சந்திக்க விரும்பினார்.

ஏற்பாடு செய்யப்பெற்றது.

தனது பாதுகாவலர்கள் வெளியே நிற்க அவர் மட்டும் தனியாக உள்ளே சென்று கிஸ்டியின் முன் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்திருப்பது சர்வ வல்லமை படைத்த ஒரு பிரதமர் என்றெல்லாம் கவலைப்படாமல் கிஸ்டி தன்னுடைய பேச்சை சாதாரணமாகத் துவக்கினார்

"மிஸ்டர், புட்டோ!"

புட்டோ உற்சாகமாகச் சொன்னார் "யெஸ்!"

அடுத்து கிஸ்டியின் வாயிலிருந்து வந்த வார்த்தை புட்டோவின் உற்சாகத்தையெல்லாம் கடாசுவதைப் போல இருந்தது

"ஜாக்கிரதை ! (Be careful!)"

"என்ன சொல்கிறீர்கள்?" இது புட்டோ

"உங்களுக்குத் தூக்கு காத்திருக்கிறது!"

(You are going to be hanged)

புட்டோ அதிர்ச்சியடைந்தாலும், கணத்தில் அதை மறைத்துக் கொண்டு, தொடர்ந்து சொன்னார்

"என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும்: எனக்கு மூளை இருக்கிறது! (I can safe guard myself: I have brain)"

கிஸ்டி விடமல் சொன்னார்

"தூக்கில் தொங்கும் போது உங்கள் மூளையும் சேர்ந்துதான் தொங்கப் போகிறது"

அதற்குப் பிறகு சற்று நேரம் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் பேசி விட்டு புட்டோ திரும்பி விட்டார்

கிஸ்டி சொன்னது அப்படியே இரண்டு வருடங்களுக்குள் பலித்தது (நடந்தது) 4.4.1979ம் தேதியன்று புட்டோ பரிதாபமாகத் தூக்கில் தொங்க விடப்பட்டார். அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த புட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ இதைக் கேள்வியுற்று, தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு கிஸ்டியைச் சென்று சந்தித்து அழுதார். அப்போது கிஸ்டி அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு தன்னுடைய ESP சக்தியால் நடக்கப்போகின்ற இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

அதாவது அப்போது பதவியில் இருந்த ஜெனரல் ஜியா- உல்- ஹக் வெடி விபத்தில் இறப்பார் என்பதையும், அவர் இறந்தவுடன் பெனாசிர் பாகிஸ்தானின் பிரதமர் ஆவார் என்பதையும் சொன்னார்.

"பழங்கள் வெடித்துச் சிதறும்போது - நீங்கள் பிரதமராவீர்கள் என்றார். அதேபோல ஜியா சென்ற விமானத்தில் பழக்கூடையில் வைக்கப் பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததாலதான் விமானம் விபத்துக்குள்ளாகி, ஜியா அகால மரணமடைந்ததோடு, பெனாசிரும் பிரதமரானார்.

இவை அனைத்துமே துல்லியமாக அவைகள் நடக்கும் முன்பே கிஸ்டிக்கு எப்படித் தெரிந்தது?

அதுதான் இந்த ESP யின் சக்தி!

பெனாசிர், பங்ளாதேஷின் பிரதமர் எர்ஷாத் ஆகியோருடன் கிஸ்டி அவர்களும் சேர்ந்திருக்கும் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்-------------------------------------------
Clipping from Wikipedia:

General Zia-ul-Haq died in a plane crash on August 17, 1988. After witnessing a tank inspection in Bahawalpur, Zia had left the small town in Punjab province by C-130 Hercules aircraft. Shortly after a smooth take-off, the control tower lost contact with the aircraft. Witnesses who saw the plane in the air afterwards claim it was flying erratically. Directly afterwards, the aircraft nosedived before exploding in mid-air, killing General Zia and several other senior army generals, as well as American Ambassador to Pakistan Arnold Raphel. A common suspicion within Pakistan, although with no proof, is that the crash was a political assassination carried out by the American CIA or Russian KGB

--------------------------------------------
What is ESP?

ESP is the meaning of the supernatural phenomenon or the extra sensory perception ability. The abbreviation of Extra-Sensory-Perception is ESP in the world of common language. ESP (super willpower)…………..!

The power can be controlled by your thought and directed to anywhere you to go. The thought speed is faster than the velocity of light, which means that it can see through into the 10 year future indirectly. It also has infinite knowledge. That's why the power can tell you about anything that's happening or going to happen in your life.

ESP யின் அடிப்படை விவரங்களுக்குச் சுட்டி இங்கே உள்ளது: http://en.wikipedia.org/wiki/Extrasensory_perception
How ESP works? என்ற விவரங்களை முழுதும் அறிய Science - How stuff works - என்ற தளததைப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==============================================

24.3.14

Astrology: Quiz 48 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
 Astrology: Quiz 48 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் - பகுதி நாற்பத்தியெட்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஆஹா...அது இல்லாமலா?

1. அன்பர் இந்தியர் அல்ல!
2. அகில உலக பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

21.3.14

ஆறிரு தடந்தோள் வாழ்க!

 

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனி வேல் வாழ்க
குக்குடம் வாழ்க - செவ்வேல்
ஏறிய மஞ்னைஞ வாழ்க
ஆணை தன் அணங்கு வாழ்க
மாசில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம் !

----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.3.14

Astrology: இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்!

 

Astrology: இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்!

Quiz No.47: விடை

தொடர் - பகுதி நாற்பத்தி ஏழு!

20.3.2014

இன்றைய உலகத்தில், கையில் தாராளமாகப் பணம் இருந்தால் போதும், பல பிரச்சினைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று நொடியில் தீர்த்து விடலாம்.
அதை அறிந்துதானோ என்னவோ மக்கள் எல்லாம் கசைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் நன்றாக இருக்கட்டும். நான் பாடத்திற்கு வருகிறேன்.

பணம் இல்லாதவன் நிலைமை என்னவாகும்? அதைவிட, கடனில் மூழ்கி (மூழ்கி என்னும் வார்த்தையைக் கவனியுங்கள்) இருப்பவன் நிலைமை
என்னவாகும்?

அவர்களுடைய கஷ்டங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

12ஆம் வீட்டில் விரையத்தில் இருக்கும் சனியின் தசை நடக்கும்போது, அதை என் நெருங்கிய உறவினர் ஒருவர் அதை அனுபவித்து, என்னிடம்
அழுது தீர்த்திருக்கிறார். கையில் இருந்த பணமெல்லாம் கரைந்து, சனி திசையின் கடைசி ஆறு வருடங்கள் மிகவும் சிரமமத்திற்கு ஆளாகி
அவதிப்பட்டிருக்கிறார். அதுபோல 6ஆம் வீட்டுக்காரனின் திசையிலும் பலர் கடனில் மூழ்கி அவதிப்பட்டிருக்கிறார்கள்

நம் கெட்டிக்காரத்தனம் எல்லாம் கிரகங்களிடம் செல்லாது. கஷ்டம் என்றால் அனுபவித்தே ஆகவேண்டும்.

அது சம்பந்தமான ஜாதகம்தான் நேற்றுக் கொடுத்திருந்த ஜாதகம்!
-----------------------------------------------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்:

மேஷ லக்கினம். லக்கினாதிபதி 11ல் (லாபஸ்தானத்தில்)

இரண்டாம் வீட்டிற்கு உரிய (அதாவது தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.

11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.

ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.

மேலே உள்ள ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் தசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப்  போட்டு விட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. பிறகு சுக்கிரதிசை நடந்த காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.

நிதி நிலைமையை (பணத்தால் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை) அலசும்போது இந்த விதிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

சரியான விடை:

ஜாதகர் தனது மத்திய வயதில் பணத்தட்டுப்பாட்டிற்கு ஆளாகி, கடனில் மூழ்கி, பிறகு மீண்டு வந்தவர். மீண்டு வந்தார் என்பதுதான் முக்கியமான கணிப்பாகும். அதை எழுதியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். கலந்துகொண்ட மற்றவர்களுக்கும்
எனது பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------
1
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ NO. 47 வணக்கம்.
    1. செல்வந்தர். எல்லாவற்றையும் இழந்து, மீண்டு வந்தார்.
    மேஷ லக்கினம். லக்கினாதிபதி சூரியன் (5 பரல்கள்) 11ல் லாபஸ்தானத்தில்.
    தன‌ஸ்தானத்திற்கு உரிய 2ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (4 பரல்) உச்சம். லக்கினதிற்கு 12ல் அமர்ந்திருக்கிறார். மேஷ லக்கினகாரர்களுக்கு இது
விஷேச அமைப்பு. பணம் கொட்டும் இடம் இது. ஜாதகர் செல்வந்தர்.
    மேஷ லக்கினகாரர்களுக்கு, 5ம் வீட்டிற்கு உரியவன் சூரியனும், 9ம் வீட்டிற்க்கு உரியவனும் ஒன்று சேர்ந்து இருப்பதால் யோகங்களை
தருவார்கள்.
    11ம் வீட்டு அதிபதி சனி(5 பரல்க‌ள்) தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு 10ம் வீட்டில்.இது 11ம் வீட்டிற்கு 12ம் இடம் ஆகும்.
    6ம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், எழரை சனி நடந்தாலும் பணப்பிரச்சினைகள் உண்டாகும்.
    6ம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். கூட சனியும், கேதுவும் கூட்டு.
    (1996- 2001) 34 வயதில் காலகட்டத்தில் அவருக்கு 6ம் அதிப‌தியின் தசையும், 7/12 சனியும் சேர்ந்து ஜாதகரை உண்டு இல்லை என்று
ஆகிவிட்டது.அடுத்து வ்ந்த கேது தசையும் தொடர்ந்தது.
    இப்பொழுது சுக்கிர தசை நடக்கும் காலத்தில், பண கஷ்ட்டத்திலிருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, March 19, 2014 7:03:00 AM///////
-----------------------------------------------------------
2
//////Blogger ravichandran said...
    Respected sir,
    My answer for our today's Quiz No.47:
    The Native of the given horoscope Struggled by debt and overcome in Venus dasa period.
    Reason 1:
    Eleventh house lord Saturn is sitting twelfth house from it's own house. Money pipe is damaged.
    Reason 2:
    Second house lord Venus is sitting twelfth house from lakna and even though it is eleventh house from its own house, getting Saturn aspect as 3rd special aspect. Money storing vessel is broken.
    Reason 3:
    Saturn dasa followed by Sixth house lord Mercury dasa (dangerous) as well as Kedhu dasa (associated with Mercury(sixth house lord) and Saturn are not supported to save money. The Money pipe tap openers(dasa nathans)are not extented their hand to the native to overcome from
his debt during this period. He struggled a lot by debt.
    Overcome from debt:

    i) After 46 years, Venus dasa started. Venus is exalted in Pisces sign and assoicated with Moon. It is good. (These planets placed in
Navamasa as well)
    Hence, He has overcome from his debt in this dasa period.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 19, 2014 3:17:00 PM//////

---------------------------------------------------
3
////Blogger ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    இந்த ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 12 ல் மறைந்து விட்டதாலும்,
    தன காரகர் குரு பகவான் ஐந்தாம் அதிபதியுடன் சேர்ந்து பாதகஸ்தானத்தில்
    அமர்ந்துள்ளதாலும் ஜாதகர் பணக்கஷ்டம் உள்ளவர்தான். ஆயினும் சுக்கிர‌
    பகவான் உச்சம் பெற்று உள்ளதால் இவருடைய 44 வயதுக்கு பிறகு சுக்கிர‌
    தசை வரும் காலத்தில் பணக்கஷ்டம் நீங்கி இருக்கும்.

    அன்புடன்,
    அரசு.
    Wednesday, March 19, 2014 3:36:00 PM//////
-----------------------------------------------------------------
4
////Blogger venkatesh r said...
    மேஷ லக்னம், மீனராசி ஜாதகர். கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம்.
    1.ராகு 4லிலும், கேது 10லும் உள்ளனர். ஜாதகரின் அதிக பட்ச ஆசையால் தன் தாயாருடன் சுமூக உறவு இருக்காது என்றும் மற்றும் வீடு, வண்டி,
வாகனம் ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்க்கை பிரச்சனைக்கு உரியதாகவே இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. தவிர‌ 3 ராசிகளில் ஏழு கிரகங்களும் இருப்பதால் சூல யோகம், இளமையில் வறுமை.
    ஜாதகருக்கு இளமையில் சனி தசை, ஜாதக வில்லன் 3,6க்கு அதிபதியான புத தசை, கேது தசை என்று மாறி, மாறி வந்து அவரின் நிதி நிலைமை
படு மோசமாகவே இருந்து இருந்திருக்கும்.
    அதற்கு அடுத்து வந்த 2,7க்குரிய சுக்கிரன் தசையில் செல்வத்தை வாரி வழங்கியிருப்பார்
.தவிர லக்னாதிபதி 11ல், பாக்யாதிபதி குருவுட‌ன்
உள்ளார். இது ராஜ லக்ஷ்மி யோகத்தை தருகிறது.
    அதனால் ஜாதகர் இப்பொழுது ஒரு செல்வந்தர்.
    தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
    Wednesday, March 19, 2014 4:40:00 PM//////
-----------------------------------------------------------
5
//////Blogger Subamohan Subbu said...
    Respected Sir
    Good evening! My analysis of the horoscope is as follows. Please forgive the mistakes
    MESHA LAGNUM, MEENA RASI
    LAGNUM:
    1) No good planets aspecting Lagnum
    LAGNATHIPATHI
    1) At 11 th house along with Sun & 12 th house lord Guru
    2) Combusted by Sun
    SECOND HOUSE:
    Lord is at 12th position to lagnum and aspected by Saturn.Though he is exalted he is at enemy house in Amsam.
    Second house is aspected by weak Lagnathipathi
    Fourth house:
    1) Fourth house lord at 12 th position to lagnum
    2) Fourth house is aspected by Mercury who is the owner of 6th house. In addition 4th house occupied by Raghu.
    ELEVENTH HOUSE:
    1) Though the lord is at own house he is at 12th position to 11th house.
    2) Along with Kedhu and VILLAN Mercury.
    In addition there is strong KALASARPA DOSHAM
    Only positive aspect is Lagnathiapthi at 11th House along with Guru - Yoghum
    PREDICTIONS
    He is not born rich.He will have lot of financial problems in first part of life.Later he may earn because of Lagnathipathi in 11th position but to certain extent only.
    Dr.Mohan
    Brunei
    Wednesday, March 19, 2014 6:12:00 PM/////
-------------------------------------------------------
6
//////Blogger Chandrasekharan said...
    Respected sir,
    Lagnadhipathy Chevvai 11-il 4-m paarvayaga 2-i paarkiraar.idhu oru periya plus. 2-m adhipathy sukran Uccham and Karagan Guru 11-il. Ingey
guru avar veetirku (Dhanusu-ku 3-il and meenathirku 12-il amarvu adhanal Adhigamana panathai thandirukka vaipillai (Sukra dhasavil nilamai maari
irukkum). 11-m adhipathy sani 10-il(Avar veetirku 12-il)udan 3&6-ku adhipathy Budhan.
    Sukran uccham petru saniyin paarvayai petradhal.. Sukra dhasa ivarukku satru adhigamana panam tholil moolam vandhirukkum.
    20 vayadhirku piragu Budhan dhasavil migundha kastangalai anubavithu iruppar.
    Thank You.
    Wednesday, March 19, 2014 10:00:00 PM////
-------------------------------------------------------
7

///////kmr.krishnan
kmr.krishnan has left a new comment on your post "Astrology: இன்பம் சில நாள்; துன்பம் சிலநாள் என்றவர...":

25 பிப் 1963க்கு சனி, குரு, ராகு, கேது இருக்கும் இடங்கள் சரியாக உள்ளன. ஆனால் மற்ற கிரகங்களின் அமைப்பு சரியாக வரவில்லை.
குருவின் காலில் பிறந்தாலும், தன் வீட்டிற்கு12ல் மறைந்து சூரியனால் குரு அஸ்தங்க‌தம்.லக்னாதிபதியும் 8ம் அதிபதியுமான செவ்வாய் பகை வீட்டில்
அமர்ந்து சூரியனால் அஸ்தங்கதம். கால சர்ப தோஷமும் உள்ள‌து. ஆகவே சனி தசா முடியும் 34 வயது வரை ஜாதகர் சிரமத்திலேயே இருந்திருப்பார்.
3, 6க்கு உடைய புதன் லக்னத்திற்குப் பகைவர், 10ம் இடத்தில் அமர்ந்து கேதுவுடனும் சம்பந்தப்பட்டு சரியான வேலையையும் கொடுத்திருக்க
மாட்டார்.
சுக்கிரன் உச்சம், சுக்கிரன் உடன் சந்திரன் சம்பந்தம் ஆகியவை 34 வயதுக்குப்
பின்னர், திருமணத்திற்குப் பின்னர், ஜாதகர் சற்றே தலை தூக்கினார்

பொதுவாக செல்வ வளம் குன்றிய ஜாதகமே இது.//////
----------------------------------------------------------
8
/////Blogger Ravichandran said...
    Ayya,
    He born as poor and he struggled some time to earn money.During Venus Dasa perod, he started earning good(after age of 37) . The various reasons are: 1. Second house owner(Venus) is uccham. 2. Shani is in own house. 3. Kala sarpa dosa with Rahu in tail. This is the main factor changed his financial factor after age of 30.
    Your Student,
    Trichy Ravi
    Wednesday, March 19, 2014 12:00:00 PM//////
---------------------------------------------------

9
////Blogger MS RAJU said...
    ஜாதகரின் தன அதிபதி உட்சம் எனினும் 12ல் மறைவு அதே போல் சுக அதிபதியும் 12ல் மறைவு. மேலும் ஜீவிய அதிபதி ஆட்சி பெற்ற போதிலும்
பாப கிரக கூட்டனி, கால சர்பதோஷம் உல்லதால் ஜாதகர் தன் வாழ்வின் இரண்டாம் பாதியில் தான் நல்ல நிதி நிலமை பெற்று இருக்க முடியும்  
Wednesday, March 19, 2014 9:14:00 AM/////
----------------------------------------------
10
//////Blogger sundari said...
    வணக்கம் சார்.
    இவர் இளன் அசிப்பெற்று மேஷலக்னதிற்கு பாவியான‌ சனி திசையில் சுமராயிருப்பார் மையில் வறுமையில் வாடியவர் காரணம் 2ல்
சுபகிரகமில்லை 3ஆம் அதிபதி புதஅடுத்தந்தவீட்டிற்கு 8ல் மேலும் கேதுவுடன் சேர்க்கை மேலும் 10 11 ஆம் அதிபதி ஆட் புதன் திசை 3ஆம் 6ஆம்
அதிபதி நல்லாயிருக்காது
கேந்திரத்திலிருந்தால் கூட காரணம் மேஷலக்னதிற்கு பாவி கேது நல்லாயிருக்காது சுக்கிரன் ரொம்ப பணத்தி கொடுக்கும்
பாவி 12ல் உச்ச்ம் பெற்று சந்திரன் கூட சேர்ந்து மறைந்துவிட்டார் மேலும் 4ல் ராகு இள்மையில் வறுமை
    11லிருக்கும் குருமங்ளயோகம் 11ல் இருக்கும் சூஇர்யன் செவ்வாய் குரு லக்னதிற்கு யோக கிரகம் பாதுகத்துகொள்வார்கள்
    Wednesday, March 19, 2014 1:39:00 PM//////
------------------------------------------------
11
//////Blogger Sanjai said...
    1. பிறப்பில் வசதி உண்டு (லக்கிணாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி, பாகியதிபதி, 11ல் இருப்பது சிறப்பு)
    2. பூர்வ புண்ணியத்தில் குரு பார்வை இருப்பதால் பிறப்பில் வசதி உண்டு.
    2. பொருளாதாரம் பின்னாடைவு பின் நாட்களில் (4ம் அதிபதி சந்திரன், 2ம் அதிபதி சுக்ரன் இன் 12ல் மறைவு ஸ்தானம்)
    3. 4ல் உள்ள கடக ராகு - யோகத்தை ஏற்படுத்துவார்.
    4. புதன் தசை (3, 6 க்கு உடையவன்) பணத் தட்டுப்பாடு ஏற்படுத்துவார்.
    5. Finanacial hurdles in later part of life.
    Wednesday, March 19, 2014 7:09:00 AM/////
----------------------------------------------------------------
12
/////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குருவே,
    ஜாதகர் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருப்பார் காரணம் 2ம் அதிபதி சுக்கிரன் லகினதிற்க்கு 12இல் இருப்பினும் உச்சம் மற்றும் சுகாதிபதி சந்திரன்
சேர்க்கை, தானாதிபதியும் பாகியாதிபதியுமான குரு, லாப ஸ்தானத்தில் உடன் லக்னாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சேர்க்கை.
இவருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளது எனவே 35 வயத்திற்கு பிறகுதான் முன்னேற்றம் அதுவும் திருமணதிற்கு பிறகு ஏனெனில் 2ம் மற்றும் 7ம்
அதிபதி சுக்கிரன் லகினதிற்க்கு 12இல் உள்ளதால்.
    நன்றி
    செல்வம்
    Wednesday, March 19, 2014 6:30:00 PM/////
----------------------------------------------------------
13
////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    புதிர் 46க்கான விடை:
    ஆரம்ப காலங்களில் பணத்திற்க்காக அல்லாடி பின்
    படிப்படியாக முன்னேறி பணக்காரராக ஆனவர்.

    *7.3.1962 காலை 8.43 க்கு பிறந்தவர். * இது ஒரு காலஷர்ப்பதோஷம் உள்ள ஜாதகம்.மேஷ லக்கினம்,மீன‌
    ராசியான இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதியான சுக்கிரன் தன ஸ்தானாதிபதியாகி
    உச்சம்.
    *9மற்றும்12க்குரிய குரு கிரக யுத்தத்தில் தோல்வி,லக்கினாதிபதியான‌
    செவ்வாய் வெற்றி பெற்று போராடும் குணத்தை கொடுப்பார்.
    *10,11க்கு அதிபதியான சனி மகரத்தில் ஆட்சி எனினும் லக்கினம்,ராசி
    இரண்டுமே ராகு கேதுவின் பிடியில் எனவே ஜாதகருக்கு இளவ‌யது வாழ்க்கை
    போராட்டம் மிகுந்து இருக்கும்.
    *33 வயதிற்க்குமேல் பணவசதியில் படிபடியான முன்னேற்றம் ஆனது.
    சரியானவிடையினை தெரிந்து கொள்ள ஆவல் ஐயா.
    நன்றி ல ரகுபதி
    Wednesday, March 19, 2014 11:29:00 PM/////
----------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.3.14

Astrology: இன்பம் சில நாள்; துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி?

 
Astrology: இன்பம் சில நாள்; துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி? 

Quiz No.47: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஏழு!

19.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்.
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

கேள்வி இதுதான்: ஜாதகரின் நிதி நிலைமை பற்றி ஆராய்ந்து எழுதுங்கள்! வேறு ஒன்றையும் நீங்கள் எழுத வேண்டாம்! அதாவது ஜாதகர்  பிறவியிலேயே பணக்காரரா? அல்லது சம்பாதித்துப் பணக்காரர் ஆனவரா? அல்லது பணத்துக்கு கஷ்டப்பட்டு அல்லாடியவரா? அப்படி
அல்லாடியிருந்தால், கடைசி வரை கஷ்டப்பட்டாரா? அல்லது மீண்டு வந்தாரா? அனைத்தையும் அலசி எழுதுங்கள்!அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.3.14

Astrology: ஒளிந்திருந்து தாக்கும் எதிரி

 
Astrology: ஒளிந்திருந்து தாக்கும் எதிரி

எதிரிகளில் இரண்டு வகை உண்டு. நேரடியாக நம்மோடு சண்டைக்கு வருபவன் முதல் எதிரி. ஆனால் நம்மை, நாம் எதிர்பாராத நேரத்தில் ஒளிந்திருந்து தாக்குபவன் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகை ஆசாமிகளிடம்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எதிரிகள் என்றவுடன் நடமாடும் ஆசாமிகளை நீங்கள் நினைத்துக் கொள்ளாதீர்கள். நடமாட்டம் இல்லாத எதிரிகளைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

ஆமாம் சில நோய்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

இரத்தக் கொதிப்பு (Hypertension) அல்லது உயர் இரத்த அழுத்த நோய்தான் அவற்றுள் மிகவும் மோசமானது ஆகும்!

அதுபற்றி இன்று பார்ப்போம்!
-----------------------------------------------
மருத்துவர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றை உங்கள் பார்வைக்காக அப்படியே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படியுங்கள். பாடத்தைப் பின்னால் பார்ப்போம்:

1. இரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
    இரத்தக் கொதிப்பு (Hypertension) அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நம் உடலில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களின் உள் சுவர்கள் இரத்த ஓட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தும் அதிக அளவு தடையைக் குறிக்கும்.

2. இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?
    நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் "இரத்தக் கொதிப்பு" என்று கூறுகிறோம்.

3. இரத்தக் கொதிப்பு ஒரு வியாதியா?
    இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத்  தடுக்கவில்லையென்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.

4. இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?

    நாம் உண்ணும் உணவின் தன்மை.
    மன அழுத்தம்.
    எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
    புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்
    உடல் எடை அதிகரித்தல்
    ஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.
    சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.
    உடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.
    சத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.
    பரம்பரைத் தன்மை. (Genetic Predirposition)

5. இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
    இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை என்றாலும், சில முக்கிய மோசமான விளைவுகள் இரத்தக் கொதிப்பினால் ஏற்படுகின்றன.

பக்கவாதம் (Stroke)
    இரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்கமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.

பார்வை பறிபோகுதல்(Blindrers)
    விழிக்கோளத்தின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்களில், வெடிப்பினால் உண்டாகும் இரத்தக் கசிவு, கண்பார்வை குறைவு மற்றும் குருட்டுத்தன்மை விளைவுகளை உண்டாக்கும்.

சிறுநீரக செயலிழப்பு (Renel Failure)
    இரத்தக் கொதிப்பு இருப்பதே தொ¢யாமல் விட்டுவிட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், இரத்தக் கொதிப்பினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று பார்த்தோம். அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.

இதயநோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)
    இதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.

6. நமது இரத்த அழுத்தத்தை எப்படி அளப்பது?
    இரத்த அழுத்தத்தின் அளவு பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவுகளில் அறியப்படுகிறது. இரத்த அழுத்தம் அளக்கப்படும் போது இரண்டு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை
(1) சிஸ்டாலிக் அழுத்தம்
(2) டயஸ்டாலிக் அழுத்தம்

    முதலில் குறிப்பிட்டிருக்கும் சிஸ்டாலிக் அழுத்தம் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.
    இரண்டாவது அளவான டயஸ்டாலிக் அழுத்தம், இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.
    ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.
    140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)
    இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.

BP chart image7. இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?
    மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளல்:
    உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்
    அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.
3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:
    யோகா மற்றும் தியானம்(Meditation) ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.
4) உடற்பயிற்சி:
    தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.
5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்
    இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:
    நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.

    40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரிதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.

    உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

Rtn. Dr. S. முரளி, M.D.S.,
http://attur.in/health/hypertension.html
மருத்துவர் முரளி அவர்களுக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

-------------------------------------------------------------------
ஜாதகப்படி என்ன காரணம்?

செவ்வாய்தான் இரத்தத்திற்குக் காரகன். செவ்வாயின் அமைப்பை வைத்து இரத்த சம்பந்தமான நோய்களைக் கண்டறியலாம். அதுபற்றி இன்னொரு நாள் கேலக்சி2007 வகுப்பில் விரிவாகப் பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

===================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.3.14

Astrology: Quiz 46 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 46 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் - பகுதி நாற்பத்தியாறு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஆஹா...அது இல்லாமலா?

1. இது ஒரு அம்மணியின் ஜாதகம்
2. ஒருகாலத்தில் அகில உலகையும்  கலக்கிய பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

14.3.14

Film Songs அன்றும் இன்றும்


Film Songs அன்றும் இன்றும்

வாரம் முழுவதும் ஜோதிடத்தையே புரட்டிக்கொண்டு இருக்காமல், இன்று சற்று மனம் மாற்றத்திற்காக திரையிசைப் பாடல்களைப் பார்ப்போம்.
1958ஆம் ஆண்டில் வெளிவந்த படப் பாடல் ஒன்றையும், சமீபத்தில் வெளிவந்த படப் பாடல் ஒன்றையும் கொடுத்திருக்கிறேன்.

தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்போது வரும் திரையிசைப் பாடல்களும் தனித் தன்மை பெறுவது காலத்தின் கட்டாயமாகிறது.

இரசனை என்பது தனி மனித உணர்வு. தனி மனித சம்பந்தமானது. இரண்டு பாடல்களுமே உங்கள் மனதைத் தொடுமானால் எனக்கு மகிழ்ச்சியே!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------
முதலில் அன்று வந்த பழைய பாடல்:

படம்: நாடோடி மன்னன் (1958)
பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராஜன் & ஜிக்கி
பாடலாக்கம்: கவிஞர் சுரதா
நடிப்பு: புரட்சித்தலைவர் & சரோஜாதேவி

--------------------------------------------------
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி யேதும் இல்லை
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே ....
கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)


பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this song in the net

)
=============================================================
2. இன்றையப் பாடல்

படம்: டிஷ்யும் (2006)
நடிப்பு: ஜீவா & சந்தியா
பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
இசை: விஜய்ஆன்ட்டனி
பாடியவர்கள்: காயத்ரி,விஜய்ஆன்ட்டனி

----------------------------------------
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்


பாடலின் காணொளி வடிவம்
)

Our sincere thanks to the person who uploaded this song in the net

------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

13.3.14

Astrology: எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது


Astrology: எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது


Quiz 45 உங்களின் பதில்கள்

நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்தை வைத்து இரண்டு கேள்விகள் கேட்டிருந்தேன்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

சரியான விடை:
1. ஜாதகர் திருமணமானவர்
2. குடும்பவாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்தது. (இதைக் குறிப்பிட்டிருந்தாலே போதும்)

சிலர் பாதிக்கிணறைத் தாண்டினார்கள். அதாவது இரண்டில் ஒன்றிற்கு சரியான பதிலை அளித்திருந்தார்கள்

18 பேர்கள் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொள்வது முக்கியம் இல்லையா? அதனால் பாராட்டுக்கள்!சரியான பதில்களை எழுதி வெற்றி பெற்றவர்களின் பின்னூட்டங்களை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
இரண்டாம் கல்யாணம்!

வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒருமுறைதான் நடக்கும். பிறப்பும் ஒருமுறைதான். இறப்பும் ஒருமுறைதான்.அதுபோல் இன்னும் சில நிகழ்வுகளும் ஒருமுறை நடப்பதுதான் சிறப்பாக இருக்கும். உதாரணம் திருமணம்.

ஆனால் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக முதல் திருமணம் அவலத்தில் முடிந்துவிடுவது உண்டு! விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முதல் மனைவி இறந்து போயிருக்கலாம். அவர்களிடம் இந்த ஒருமுறை விதி எடுபடாது. தக்க காரணத்துடன் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை

ஆனால் அதற்கு ஒரு வயது வரம்பு உண்டு. அதிக பட்சம் நாற்பது வயது வரை அது சாத்தியப்படும். அதற்கு மேற்பட்ட வயது என்றால் ஒரு சிக்கல் உள்ளது. மணந்து கொள்ள ஒரு மகராசி வேண்டுமே?

பெரிய செல்வந்தர் என்றாலும், அவருடைய செல்வத்திற்காக அவரை மணந்துகொள்ள ஒருத்தி முன் வர வேண்டுமே?

ஜாதகருக்கு அவருடைய 32ஆவது வயதில் மனைவி இறந்து போய் விட்டாள். அவர் தன்னுடைய 40ஆவது வயதில் மறுமணத்திற்கு முயற்சி செய்தார்.

என்ன ஆயிற்று? சாத்தியமாயிற்றா?

ஜாதகம் எப்படியோ அப்படித்தானே ஆகும்?

வாருங்கள், அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!
------------------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்:சிம்ம லக்கின ஜாதகம். ரோஹிணி நட்சத்திரக்காரர்.

1.லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்) இருந்தாலும் 3 கிரகங்களுடன் கிரகயுத்தத்தில்.
2.இரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு
3.களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
4.யோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.
5.சந்திரன் தனித்து அவயோகத்தில் உள்ளார்
6.மாந்தி 12ல். அயன சயன போக பாக்கிய யோகத்திற்கு வேட்டு வைத்துவிட்டான்.
7.பன்னிரெண்டிற்கு உரிய சந்திரன் (விரைய ஸ்தான அதிபதி) உச்சம் பெற்றுள்ளார்.
8.லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்.
மேற்கூறிய அவலங்கள் எல்லாம் சேர்ந்து ராகு திசை முடிவதற்குள் சங்கை ஊதிவிட்டன. மனைவியை மேலே அனுப்பி, ஜாதகருடைய குடும்ப வாழ்க்கையை முடித்துவிட்டார்கள்

அவருக்கு அவருடைய மத்திய வயதில் குரு மகா திசை நடந்து கொண்டிருந்தது. குரு பகவானும் சூரியனால் அஸ்தமித்துவிட்டார். அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது.

அவர் பல வழிகளில் முயற்சி செய்தும் உரிய பெண் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது திருமண ஆசை நிறைவேறவில்லை.இரண்டாவது திருமணத்திற்கு வேண்டிய அமைப்பு அவர் ஜாதகத்தில் இல்லை! அவருக்கு மீண்டும் ஒரு குடும்பம் அமையவில்லை!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
1
Blogger thozhar pandian said...
    ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். 7ம் வீட்டு சனி அந்த வீட்டிற்கு 11ல். களத்திரகாரகர் சுக்கிரன் மூல திரிகோணத்தில். சிம்ம இலக்கினத்திற்கு யோக காரகர் செவ்வாயும் சொந்த வீட்டில் இருக்கிறார். 7ம் வீட்டை தனது விசேஷ பார்வையால் பார்க்கிறார்.
    ஆனால் ஜாதகருக்கு குழந்தை வரம் இல்லை. 5ல் சனி, 5ம் வீட்டுக்காரரும், புத்திர காரகருமான குரு பகவான் 5ம் வீட்டிற்கு 12ல் கிரக யுத்தத்தில் இருக்கிறார். மேலும் அயன சயன பாக்கியத்திற்கு உலை வைப்பது போல் 12ம் வீட்டில் மாந்தி. 2ம் வீட்டில் இராகு. இலக்கினம் மாந்திக்கும் இராகுவுக்கும் இடையில் சிக்கியுள்ளது. 2ம் வீட்டிற்கோ 5ம் வீட்டிற்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. இலக்கினாதிபதியும் கிரக யுத்தத்தில் சிக்கியிருக்கிறார். ஆக குடும்ப‌ வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனை.
    Wednesday, March 12, 2014 5:44:00 AM
----------------------------------------------------------
2
////Blogger Srinivasa Rajulu.M said...
    1) அன்பர் 25 வயதளவிலேயே திருமணம் புரிந்தவர்.
    2) விவாக ரத்தானவர். மீண்டும் மணம் புரிந்திருப்பார்.
    களத்திர காரகன் சனி, த்ரிகோணத்தில் அமர்ந்துள்ளார். காரகன் சுக்கிரன் மூன்றாம் இடமானாலும் ஸ்வஸ்தான பலம் பெற்றதால் செவ்வாய் திசையில் உச்ச சந்திரன் புத்தியில் திருமணம் நடந்திருக்கும். களத்திரஸ்தானத்தைச் சனியும் செவ்வாயும் பார்ப்பதாலும், மறைவிடத்தில் பாபகர்த்தாரியில் சுக்கிரன் இருப்பதாலும், நவாம்சத்தில் ப்ருஹஸ்பதி நீச்சமானமானதாலும் பெற்றோரை மீறி, பிரச்சினைகளுடன் நடந்த திருமணமாக இருந்திருக்கும்.
    குடும்பஸ்தானத்தில் அமர்ந்த ராஹு திசை குரு புக்தியில் விவாகரத்து ஆகி மீண்டும் சனி புக்தியில் மறுமணம் புரிந்திருப்பார். குடும்பஸ்தானத்தை சனியானவர் பத்தாம் பார்வையில் பார்ப்பதாலும், ஸ்தானாதிபதி புதன் குடும்பஸ்தானத்திற்கு மூன்றில் பகைவன் செவ்வாயுடன் பகை வீட்டில் அமர்ந்ததாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்துதான் இருக்கும்.
    புத்திரஸ்தானத்தில் சனி; ஸ்தானாதிபதி குருவோ அவ்விடத்துக்குப் பன்னிரண்டில் (மேலும் நவாம்சத்தில் நீச்சனாகி செல்லாக்காசாகி விட்டார்). மேலும் பன்னிரண்டில் மாந்தி சயனபோகத்திற்கு வேட்டு வைத்துவிட்டார். எனவே குழந்தைகள் கிடையாது.
    Wednesday, March 12, 2014 7:25:00 AM/////
------------------------------------------
3
/////Blogger Sanjai said...
    1. திருமணம் நடைபெறும்.
    2. 7க்கு உடையவன் சனி, தன் வீட்டிற்கு 11ல் (லாப ஸ்தானத்தில்) உள்ளத்தால் திருமணம் உண்டு.
    3. குடும்ப வாழ்க்கையில் இடையூறு உண்டு.
    4. 2ம் வீட்டின் அதிபதி புதன், 4ம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாய் தொடர்பால் கெட்டுவிட்டார்.
    5. குடும்ப ஸ்தானம் (2ல்) ராகு இருந்து அந்த வீட்டை ஆஃப் (off) செய்து விட்டார்.
    Wednesday, March 12, 2014 8:39:00 AM/////
----------------------------------------------
4
////Blogger rm srithar said...
    Respected sir
    1. He got married :- 7th place Saturn is in Fifth house so he got married.
    2. Family life:- is not good they got separation due to Rahu is in Second house & Saturn is seeing second house.so family life spoiled.
    Regards
    rm.srithar
    Wednesday, March 12, 2014 9:07:00 AM/////
-------------------------------------------------
5
/////Blogger SIVA said...
    திருமணம் உண்டு , காதல் அல்லது கலப்பு திருமணம் .. கஷ்டங்கள் மிகுந்த குடும்ப வாழ்வு..கவர்ச்சி உடையவராதலாள் பெண்சுகம் ஆசைப்படுபவர்
    Wednesday, March 12, 2014 10:20:00 AM/////
---------------------------------------------------
6
////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 45 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    1. களத்திரகாரகன் சுக்கிரன் 3ல் ஆட்சி பெற்றும், சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும் கண்டிப்பாகத் திருமணம் ஆகி இருக்கும். ஆனால் சனி 5ல் இருப்பதால் தாமதத் திருமணம். 7ம் அதிபதி 5ல் இருப்பது காதல் திருமணத்தைக் குறிக்கிறது.
    2. குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் ராகு நிம்மதியைக் கெடுப்பார், பண வசதி இருக்காது. 12ல் இருக்கும் மாந்தி இவரை எழ்மை நிலையில் வாடும்படி செய்திருப்பார். லக்கினத்துக்கு முன்னால் மாந்தியும், பின்னால் ராகுவும் இருப்பதால் பிரச்சினைகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை.
    Wednesday, March 12, 2014 10:33:00 AM/////
------------------------------------------------
7
////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Simma Lagnam Neengal solvadhu pole Herokalin Lagnam... Adhipathy Sooriyan 4-il and andha veetu adhipathy chevvai angey aatchi balam.
    Thirumanam Nadaipetra Jadhagam. 7-m adhipathy Sani lagnathirku 5-il and kumba veetirku 11-il and avaradhu veetai 3-m paarvayaga parkiraar. Yogadhipathy Chevvai 4-m paarvayaga 7-m veetai paarkiraar. karagan sukran 3-il aatchi balathudan amarvu adhanal thirumanam nadaipetru irukkum.
    Thirumana Valkai sandai sacharavugal niraindha valkayaga irukkum. 2-il raagu adhu kanni ragu adhanal nanmayai seidhalum, saniyin balatha 10-m paarvai 2-il kandippaga thirumana valkayil prechanaigal irukkum. 2-m adhipathy budhan 4-il avar veetirku 3-il.
    Thank You.
    Wednesday, March 12, 2014 11:12:00 AM/////
-------------------------------------------------
8
/////Blogger bg said...
    MA - aspect 7.
    SA - aspect 7.
    VE - in Papakarthari Yoga.
    All the above are against Marriage.
    This may lead to delay marriage.
    Marriage life
    Ra – in 2nd house.
    Ke – in 8 th house.
    JU aspect 8 th house.
    May lead to separation.
    Wednesday, March 12, 2014 11:20:00 AM/////
---------------------------------------------------
9
////Blogger Venkat Lakshmi said...
    உயர்திரு ஐயா: வணக்கம்.
    புதிர் 45க்கு விடை:களத்திரகாரன் சுக்கிரன் ஆட்சி ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு பதினொன்றில் அதனால் திருமணம் முடிந்திருக்கும். இரண்டில் ராகு மற்றும் 2ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு மூன்றில் அதனால் குடும்ப வாழ்க்கை சொல்லும்படி இல்லை.
    Wednesday, March 12, 2014 12:59:00 PM/////
-----------------------------------------------------
10
/////Blogger jagvettri@gmail.com said...
    கல்யானம் நடக்கும் தாமதமாக சனியின் 3ஆம் பார்வையால். குடும்பம்தான் (ராவாக உள்ளது )கெட்டுள்ளது.2ண்டில் ராகு .
    Wednesday, March 12, 2014 1:55:00 PM/////
---------------------------------------------------------
11  
/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    1. The native got married late.
    7th lord saturn delays, since it has aspected by uccha chandran he got married.
    2.His family life is not happy. Divorced.
    2nd place ragu, and 2nd lord is hemmed between malefics.
    Wednesday, March 12, 2014 3:24:00 PM/////
-------------------------------------------------------------
12
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.45:
    1. He has married.
    2. Rich and having family problem.(Having no child)
    Reason for-1:
    i. Seventh lord is sitting 11th house from its own house and aspecting its own house as it's third aspect.
    ii. Seventh house or lord not associated and aspected by benefic planets.
    iii. Lagna lord,yoga karaka (Mars)and eleventh and second house lord are in good position. It's great.
    Hence, all the above reasons, he got married.
    Reason for -2:
    i)In second house Rahu is sitting and getting sixth lord saturn aspects as its tenth aspect. Its bad.
    ii) second house lord is sitting in good position.
    iii) Fifth house lord is sitting twelfth house from its own house and sixth house lord saturn is sitting in fifth house. it affects child birth.
    iv) Seventh lord and lagna lord are in 1/12th position and even second house lord also. Hence, it denotes not happy married life.
    v) lagna lord, eleventh house lord, yoga karaka and dhana karaga all are sitting in one house. It is good for wealth.
    In short, He married but there is problem in family life.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 12, 2014 7:13:00 PM////
-------------------------------------------------
13
/////Blogger Raja Murugan said...
    வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம், ஜாதகருக்கு திருமணம் ஆகியிருக்கும், ஆனால் குடும்பம் நிலைக்காது.ஜாதகருக்கு குழந்தைகளால் பிரச்சினை உண்டு. வருமானம் அதிகம் வந்தாலும், செலவாளி.
    Wednesday, March 12, 2014 7:37:00 PM////
-------------------------------------------------
14
////Blogger vanikumaran said...
    7ம் வீடு, 7ம் அதிபதி சனியின் 3ம் பார்வையில் உள்ளது. 6ம் அதிபதி சனியின் 3ம் பார்வையும் 7ம் வீட்டிற்கு உள்ளது.
    7ம் அதிபதி 5ம் வீட்டில் திரிகோணத்தில் உள்ளது.
    காரகன் சுக்கிரன் பாபகத்தாரி யோகத்தில். ஆனாலும் பாக்கியாதிபதி, சுகாதிபதி, யோகாதிபதியாகிய செவ்வாயின் வலுவான 4ம் பார்வையால், தீமை பயக்கும் சனி, செவ்வாயின் பார்வை 7ம் வீட்டிற்க்கு உள்ளதால் கால தாமதமாக திருமணம் நடந்திருக்கும்.
    2. குடும்ப வாழ்விற்க்கு 2ம் வீடு ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளது.
    2ம் அதிபதி புதன் அஸ்தங்கம் அடைந்த யோகாதிபதி செவ்வாய் மற்றும் அஸ்தங்கம் அடைந்த அஸ்டமாதிபதி குரு உடன் 4ம் இடத்தி நல்ல நிலையில் இருப்பது போல் இருப்பது போல் இருந்தாலும் விரையாதிபதி சந்திரனின் பார்வையில் கெட்டுள்ளது.
    காரகன் குருவும் விரையாதிபதி சந்திரனின் பார்வையில் கெட்டுள்ளது.
    மேலும் சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டில் உள்ளது. சுப கிரகங்களின் பார்வை 2ம் வீட்டிற்க்கு இல்லாததால் குடும்ப வாழ்விற்க்கு வழி இல்லை என்றே தோன்றுகிறது.
    கஜ கேசரி யோகம், சசிமங்கள, புத ஆதித்ய யோகம் உள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு உதவுமா என்பதை பற்றி விளக்கவும்
    Wednesday, March 12, 2014 8:04:00 PM/////
------------------------------------------------------
15
/////Blogger janani murugesan said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    ஜாதகருக்கு திருமணம் ஆகியிருக்கும். இரண்டு விவாகம்.7க்குடைய சனி 5ல். சுக்ரன் 3ல் ஆட்சி.இருப்பினும் சுக்ரன் பாபக்கர்த்தாரி யோகத்தில் சனி பகை வீட்டில் which leads to second marriage.2ல் ராகு,2ம் வீட்டிற்கு சனியின் பார்வை குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்காது.
    12க்குடையவன் 10ல். 12ல் மாந்தி திடீர் இழப்புகள் உண்டாகும்.Which also leads the native to suffer in financial crisis.
    Wednesday, March 12, 2014 8:44:00 PM//////
---------------------------------------------------
16
/////Blogger sundari said...
    வணக்கம் சார்,
    திருமணம் செய்துகொண்ர்டா சுக்கிரன் ஆட்சி 7ஆம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 11ல் மேலும் சந்திரன் உச்சம் ரிசப ராசிகாரர்கள எளிதில் திருமணம் செய்துகொள்வார்கள் காரண்ம் ஏதோ கிடைத்த்து பண்ணிகொள்வோம் மனநிறைவு
    பொறுவார்கள் மேலும் 2ஆம் அதிபதி புதன் 4ல் அதோடு குரு சூரியன் செவ்வயோடு சேர்ந்திருகிறார்
    2.குடும்பவாழ்கை பிரச்சனைநிறைந்திருக்கும் காரணம் 2ல் ராகு கன்னி றாகு அதோடு நாலில் செவவாய் அந்தபிரசசனைகளை சாமாளித்து குடும்பத்தை ஒட்டலாம் 8லிருக்கும் கேது ரொம்ப குணகேட்டைதருவார்.
    Wednesday, March 12, 2014 8:48:00 PM/////
----------------------------------------------------------
17
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ 45 வணக்கம்.
    1. தாமதமான காதல் திருமணம் எற்பட்டு பிறகு பிரிவில் முடிந்தது.
    2. குடும்ப வாழ்க்கை சில காலம் ம‌ட்டுமே.
    15.12.1959ஆம் தேதி காலை 12.00 மணிக்கு மிருகசீருஷத்தில் பிறந்த ஜாதகருக்கு சிம்ம லக்கினம்.
    யோக‌கார‌ன் செவ்வாய். கூட‌ புத‌னும் வ‌லிமையாய் இருப்ப‌து அவ‌சிய‌ம். ந‌வாம்ச‌த்தில் புத‌ன் உச்ச‌த்தில் வ‌லிமையாய் (40 ப‌ர‌ல்க‌ள்) இருப்ப‌து அதிர்ஷ்ட்ட‌ம்.
    இந்த சிம்ம லக்கின ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியனுடன் செவ்வாய், புதன், குரு சேர்ந்து கேந்திரத்தில் இருப்பது அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கும் புதன் தசையில் புதன் புக்தியில் நிறைய செல்வங்கள் சேரும். இந்த‌ ஜாத‌க‌ர் கோடிஸ்வ‌ர‌ர்.
    ல‌க்கின‌ம் பாப‌க‌ர்தாரி தோஷ‌த்தில் உள்ள‌து. ஒரு ப‌க்க‌ம் மாந்தி ம‌ற்றோரு ப‌க்க‌ம் ராகு. ல‌க்கின‌ம் 37 ப‌ர‌ல்க‌ளுட‌ன் பலமாக உள்ள‌து.
    7ம் வீட்டு அதிப‌தி ச‌னி (1 ப‌ர‌ல்) திரிகோண‌த்தில் 5ம் வீட்டில் இருந்து கொண்டு 3ம் பார்வையாக‌ 7ம் வீட்டை பார்த‌தால் தாமதமாக காதல் திருமணம் எற்ப‌ட்ட‌து. சந்திரன் (6 பரல்கள்), சுக்கிரன் (5 பரல்கள்) சம பலத்தோடு இருப்பதால் காதல் திருமணம் எற்பட்டு நல்ல மனைவி அமைந்தார்..
    ஜாதகருக்கு குரு தசை சூரிய புக்தியில் 36 வயதில் காதல் திருமணம் நடந்தது.
    2ம் வீட்டின் அதிபதி புதன் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், ராசியில் 2ம் வீட்டு அதிபதி புதன் செவ்வாய், சூரியனுடன் கிரகயுத்ததில் இருப்பதாலும், குடும்ப வாழ்க்கை சில காலம் ம‌ட்டுமே. அதுவும் குரு தசை முடியும் வரை.
    அடுத்து வ‌ந்த‌ ச‌னி த‌சையில் ச‌னி புக்தியில் குடும்ப‌த்தில் பிரிவினை எற்ப‌ட்ட‌து. சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதுள்ளது.மேலும் 2ம் வீட்டினில் உள்ள‌ ராகுவும், 8ம் வீட்டினில் உள்ள கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது இருப்பதாலும் குடும்ப வாழ்க்கையில் பிரிவு எற்ப‌ட்ட‌து. 2ம் வீட்டின் மீது எந்த சுப பார்வையும் இல்லை.சுக்கிரன் 3ம் வீட்டில் மறைவிடங்களில் இருப்பது திருமணத்திற்க்கு எதிரான அம்சங்கள்.
    6ம் வீட்டு அதிபதி வில்லான சனியும் அவரே. ஆகையினால், சனி தசை சனி புக்தியில் பிரிவு எற்பட்டது. 6ம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
    நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான்.
    குரு 5ம் வீட்டிற்க்கு 12ல் 4ம் வீட்டில் அம‌ர்ந்திருப்ப‌தால் குழ‌ந்தை பாக்கிய‌மும் இல்லை.
    சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது சூரியனை பார்பதால் ராஜ யோகம், சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது செவ்வாயை பார்பதால் சசிமங்கல‌ யோகம், சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது குருவை பார்பதால் கஜகேசரி ‌ யோகம் எற்பட்டது.
    4ம் வீட்டில் சூரியனும் புதனும் சேர்ந்து இருப்பதால் புத ஆதித்திய யோகம் எற்பட்டது.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, March 12, 2014 10:45:00 PM////
------------------------------------------------------
18
/////Blogger Dallas Kannan said...
    Respected sir
    Here is my quick analysis. I am not happy about it, but hope I will get at least pass mark (50%)
    1. 7th lord Sani is in 5th place (11th place), sukran in own house (but papakarthari yogam), 2nd lord is with laknathipathi and yogakaran.
    He is married but delayed. Strong 5th lord, Moon and sukra indicates Love as well.
    2. Rahu in 2nd house, Sani's look at 2nd house indicates quarrels and possible multiple marriages. Sani in 5th place and Guru/5th lord in 12th place from its house indicates Children related complications/issues.
    Wednesday, March 12, 2014 11:06:00 PM/////
----------------------------------------------------------   =========================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.3.14

Astrology: ஆசையினாலே மனம்.....அஞ்சுது கெஞ்சுது தினம்!

 
Astrology: ஆசையினாலே மனம்.....அஞ்சுது கெஞ்சுது தினம்!

Quiz No.45: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஐந்து

12.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்வி. அந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==========================================

11.3.14

Astrology: நீல வண்ணக் கண்ணா வாடா! நீயொரு முத்தம் தாடா!

 
Astrology:  நீல வண்ணக் கண்ணா வாடா! நீயொரு முத்தம் தாடா!

நவரத்தினக்கற்களுக்கு எப்போதுமே மக்களிடம் ஒரு மவுசு உண்டு. சிலர் என்ன என்று தெரியாமலேயே, அடுத்தவன், நண்பன் சொன்னான் என்பதற்காக பணத்தை செலவழித்து வாங்கி நவரத்தினங்களை அணிந்து கொள்வார்கள்.


சூரியனுக்கு மாணிக்கம் Ruby
சந்திரனுக்கு முத்து Pearl
செவ்வாய்க்கு பவளம் Coral
புதனுக்கு பச்சை - மரகதம் Emerald
குருவிற்கு புஷ்பராகம் Topaz
சுக்கிரனுக்கு வைரம் Diamond
சனீஷ்வரனுக்கு நீலம் Sapphire
ராகுவிற்கு கோமேதகம் Garnet
கேதுவிற்கு வைடூரியம் Cat's eye, Lapis lazuli

என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய கல்லைப் பண்டைய நூல்கள் குறிப்பிட்டுள்ளன. உலகம் முழுவதும் மக்கள் இக்கற்களை விருப்பத்துடன், விலையைப்பற்றிக் கவலைப் படாமல் வாங்கி அணிந்து கொள்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட கல்லை, அதுவும் நமக்கு உரிய கல்லை வாங்கி அணிந்து கொண்டால், நமது தலை எழுத்துமாறிவிடுமா?

அது எப்படி மாறும்?

வாங்கிவந்த வரம் என்ன ஆவது?

நமது பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே திருமணம் ஆகிவிடுமா? வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு உடனே நல்ல வேலை கிடைத்துவிடுமா? பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணம் கொட்ட ஆரம்பித்துவிடுமா? நோய் நொடிகளால் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நோய்கள் தீர்ந்துவிடுமா? குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்குபவர்களுக்கு உடனே குழந்தை பிறந்துவிடுமா? நூறுவயதுவரை வாழும் ஆசை உள்ளவர்களுக்கு, அவர்களின் ஆயுள் கூடிவிடுமா?

அதெல்லாம் ஒன்று கூட நடக்காது. அவரவர் ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும்!

சரி கற்களால் ஒரு பயனும் இல்லையா? இருக்கிறது. யார் யார் என்ன என்ன கல்லை அணிய வேண்டும். அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இன்னொரு நாள் கேலக்சி வகுப்பில் அலசுவோம். அதுபோல ஜாதகத்தில் உள்ள எட்டாம் இடத்து அதிபதி (அஷ்டமாதிபதி - eighth lord) ற்கு உரிய கல்லை ஜாதகன் அணியவே கூடாது. போட்டுத் தள்ளிவிடும். அதையும் அலசுவோம்

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். அதைச் சொல்ல வந்தவன்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்து எழுதியுள்ளேன்.


நன்றி தினமலர் (முன்பு வந்த செய்தி). படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படம் பெரிதாகத் தெரியும்

நீலக்கல் என்றால், அது சனியின் கல் என்று சொல்லி பலரும் ஓடி விடுவார்கள். ஆனால் ஒரு அன்பர், அரியவகை நீலக்கல் ஒன்றை 28 கோடி
(அம்மாடியோவ்) ரூபாய்களைக் கொடுத்து ஏலத்தில் (போட்டியில்) வாங்கியுள்ளார். முதலில் அதைப் படியுங்கள். மற்றவற்றை இன்னொரு நாள் பார்க்கலாம்

அன்புடன்
வாத்தியார்

=============================================================
 நமது வகுப்பறையின் மூத்த மாணவர் திருவாளர் கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் நேற்றைய பதிவிற்கு, அதாவது எண் 8 நடைப் பயிற்சிக்குக்
கூடுதல் தகவல்களைத் தன்னுடைய பின்னூட்டத்தில் கொடுத்திருந்தார். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக. அவர் சுட்டிக்காட்டியபடி நானும்
கூகுள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கி ஒரு காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் பாருங்கள்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================