மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.7.07

ஜோதிடம் - பாடம் எண்.32


--------------------------------------------------------------------------
ஜோதிடம் - பாடம் எண்.32

தலைப்பு: கால சர்ப்ப தோஷம் Cum யோகம்

அதென்ன தோஷம் cum யோகம் என்று அனேகம் பேர்களுக்கு சந்தேகம் வரும். ஒன்று தோஷம் என்று சொல்ல வேண்டும் அல்லது யோகம் என்று சொல்ல வேண்டும் - அதுதானே முறை!

அல்ல!

ஒரு குழந்தையை வளர்த்துப் பட்டப்படிப்பு படிக்க வைக்கின்ற வயதுவரை - சுமார் 21 வருட காலம் என்று வைத்துக் கொள்வோம் - செலவு செய்ய வேண்டிய காலம். அதே குழந்தை படித்துமுடித்தவுடன் வேலை கிடைத்துச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு அது வரவு வரும் காலமாக மாறிவிடும் அல்லவா - அது போலத்தான் இதுவும்.

கால சர்ப்ப தோஷம் அமைந்த ஜாதகன் முதலில் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தோஷம் நீங்கி அவன் வாழ்க்கை அசுர வேகத்தில் செழிப்பு மற்றும் சந்தோஷம் மிக்கதாக மாறிவிடும். அந்த செழிப்பு மற்றும் சந்தோஷத்தின் அளவு அவனுடைய ஜாதகத்தில் (Basic Chart) உள்ள கிரகங்களின் சுய பலத்தையும், அமைப்பை யும் வைத்து மாறுபடும்

சரி, கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? அதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு தீய கிரகங்கள், வானவெளியில் 180 டிகிரியில் இன்றை ஒன்று எதிர் நோக்கியவாறு இருக்கும். சுழற்சியில் இரண்டின் வேகமும் ஒரே அளவு என்பதால். அந்த 180 டிகிரில் ஒரு இம்மி கூட மாற்றம் இருக்காது.

அவை இரண்டைத் தவிர மற்றும் உள்ள ஏழு கிரகங்கள், அடுத்தடுத்தோ அல்லது கூட்டாகவோ அந்த இரண்டு கிரகங்களுக்கு நடுவே வானவெளியில் இருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அந்த கிரகங்கள் மாட்டிக்கொண்டுவிடும்.

All the other seven planets will be hemmed or sandwitched between Rahu and Ketu. This position in a horoscope is called as Kala Sarppa Dosha

அதன் கால அளவு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. சிலர் அதை 33 வருட காலம் என்று சொல்வார்கள். வேறு சிலர் அதை லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ, அததனை வருடம் அது உணடெ ன்பார்கள். அந்தக் கருத்துப் பிரச்சினைகள் எல்லாம் இடையில் பல ஜோதிட வல்லுனர்களால் ஏற்பட்டவை.பொதுவாக முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை.

நடக்கப்போகும் நன்மையைப் பிறகு பார்த்துக்கொள்வோம். அதற்குத் தீர்வு உண்டா என்றால் இல்லை.

அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

You can't shift or shed down it

பரிகாரம் உண்டா? உண்டு! அது இறைவழிபாடு மட்டுமே!

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேச்சுவரம் கோவில், காஞ்சிபுரத்தில் ஊள்ள சித்திர குப்த சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம், ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்கள் அதற்குரிய ஸ்தலங்களாகும்.

அங்கே சென்று மனமுருகி வழிபட்டால், வரும் தீமைகளை எதிர் கொள்ளும் சக்தியைப் பெறலாம். நன்றாகக் கவனிக்கவும் - தீமைகள் இம்மிகூடக் குறையாது. ஆனால் அதை Just like that எதிர் கொள்ளும் மன வலிமை கிடைக்கும்.

காலசர்ப்ப தோசத்தினால் ஏற்படும் தீமைகளை வகைப் படுத்த முடியுமா?

முடியும்!

அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

(தொடரும்)
------------------------------------------------------------------------------------------
காலசர்ப்ப தோசத்தினால் இளம் வயதில் மிகவும் சிரமப்பட்டுப் பிறகு சிறப்பானதொரு வாழ்வைப்பெற்ற - நமக்கெல்லாம் மிகவும் பரீட்சயமான இருவரின் ஜாதகங்களைக் கீழே கொடுத்துள்ளேன். அது உங்கள் பார்வைக்காக!

பயிற்சி வகுப்பு:(Practical Class)
1
பாக்யராஜ் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? அதன் சிறப்பு என்ன? உச்சம்பெற்ற கிரகம் எது? அதன் பலன் என்ன? அவருடைய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகம் எது? சிறப்பு என்று சொல்வதன் காரணம் என்ன?

2.
இளையராஜா அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி யார்? அவர் யாருடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்? அதன் பலன் என்ன? பரிவத்தனை பெற்ற கிரகங்கள் எவை? லக்கினத்தில் சனி வந்து அமர்ந்ததின் சிறப்பு என்ன?

முன்பு நடத்திய பாடங்கள் மறக்காமல் இருந்தால் இதற்குப் பதில் சொல்லலாம்?

சரி, யார் யார் சரியாகப் பதில் சொல்லப்போகிறீர்கள் - யார் யார் பெஞ்ச் மேல் நிற்கப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

நாளை சந்திப்போம்!

17 comments:

 1. வணக்கம் ஐயா
  பதில்
  1 லக்கினாதிபதி 7 இல் , புத ஆதித்த யோகம் ,தனாதிபதி சேர்க்கையும் உண்டு
  செவ்வாய் உச்சம் ,ஆயினும் 8 ம் இடம் என்பதால் 2ம் வீட்டைப் பார்த்து முதல் மனைவி மரணம்
  மிக சிறப்பு 9 இல் குரு , 1,3,5 க்குப் பார்வை ,பூர்வ புண்யஸ்தானம் பார்வை பெற்றது சிறப்பு(கேதுவை குரு பார்த்தது கோடீஸ்வர யோகம் ?)

  இளையராஜா ஜாதகத்தில் லக்கினாதிபதி சுக்கிரன் , அவர் உச்சம பெற்ற குரு மற்றும் ராகுவுடன் சேர்க்கை (கோடீஸ்வர யோகம ?)
  சந்திரன் குரு பரிவர்த்தனை( இரண்டும் உச்சம் ) ,லக்னத்தில் சனீஸ்வரன் தர்மகர்மாதி பதியாக,
  ஐயா என்னையும் பெஞ்சுமேல் ஏற்றுவீர்களா
  தயவுசெய்து வகுப்பில் தொடர்ந்து இருக்க அனுமதியுங்கள்

  ReplyDelete
 2. //பாக்யராஜ் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? அதன் சிறப்பு என்ன?//

  லக்னாதிபதி குரு சனியின் வீட்டிலும், சனி குருவின் இடத்திலும் இருந்து பரிவர்த்தன யோகம் அடைகின்றனர்!

  ReplyDelete
 3. //பாக்யராஜ் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி குருவின் வீட்டில் இருக்கிறார். அது ஜாதகரின் ராசி மற்றும் ஏழாம் இடம் என்பதே அதன் சிறப்பு.

  8-ல் உள்ள செவ்வாய் உச்சம்பெற்ற கிரகம்.

  அதன் பலன் என்ன?

  அவருடைய ஜாதகத்தில் மிகவும் 9-ம் இடமான பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கிரகம் குருவினால் சிறப்பு.

  இளையராஜா அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி சுக்ரன். அவர் சூரியன், சந்திரன், புதன் மற்றும் சனியுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்.
  அதன் பலன் என்ன?

  பரிவத்தனை பெற்ற கிரகங்கள் எவை?
  தெரியவில்லை.

  லக்கினத்தில் சனி வந்து அமர்ந்ததின் சிறப்பு: லக்னத்திற்கு 9-ம் வீட்டுக்குடைய(பாக்ய ஸ்தானம்) கிரகமான சனி லக்னத்திலே இருந்தால்,பெரியவர்களிடத்திலே, பிதா, குரு, தெய்வம் ஆகியோரிடம் பக்தி, சாஸ்திர ஆராய்ச்சி, வீடு, பூமி. வண்டி, வாகனம், சமூகத்தில் பெரிய பதவிகளுடன் இருப்பார்கள்.

  ReplyDelete
 4. பாடங்கள் அனைத்தும் மறந்து விட்டது குருவே. மீண்டும் திருப்பி பார்த்து விட்டு எழுதுகின்றேன்.

  அன்புடன்
  இராசகோபால்

  பாக்யராஜ்
  லக்னாதிபதி - புதன் - 7-வது வீட்டில் (குருவின் வீட்டில்)
  உச்சம் - செவ்வாய்
  7-ல் சந்திரன், புதன்
  9-ல் குரு

  இளையராஜா
  லக்னாதிபதி - சுக்கிரன் - குருவுடன் சேர்க்கை
  சுக்கிரன் வீட்டீல் சந்திரன் - சந்திரன் வீட்டீல் - சுக்கிரன் - பரிவர்த்தன யோகம்
  9-ம் & 10-ம் இடத்திற்குரிய சனி பகவான் 1-ல் அமர்வது சிறப்பு.

  ReplyDelete
 5. சுப்பையா ஐயா,

  கஜகச்சேரி, சகட யோகம், உடுக்கை யோகம் இது பற்றி தாங்கள் அறிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

  நன்றி .

  ReplyDelete
 6. Bhaagya Raj's Jaathagam
  1. Lagnathibathi Budhan is in Dhanusu and joins with Suriyan makes Bhudhathiya Yogam in Kendram

  2. Chevvai - Ucha Graham

  3. Guru at 9th house is very special "ODI PONAVANUKKU ONBATHIL GURU"

  Ilaiya Raaja's Jaathagam

  1. Lakinaathipathi - Sukkiran
  2. Sukkiran joins with Guru & Raaghu
  3. Parivarthani Grahams - Chandhiran & Sukkiran

  P.s : I heard that Ilaiyaraaja's raasi is Kumbham...but according to the chart given here..it's rishabam.

  ReplyDelete
 7. Dear Sir

  I am new to this blog, The Lessons are fantastic, I am from Coimbatore. Will get back to you after going thru the older lessons and try to answer ur Questions.

  Thank you
  Kadirvel

  ReplyDelete
 8. அன்புள்ள ஆசிரியருக்கு,

  மீண்டும் பாடத்தை தொடர்ந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

  இப்படிக்கு,
  இரா.ரகுபதி

  ReplyDelete
 9. பாக்யராஜ்
  ------------------

  லக்கினம் --- மிதுனம்
  லக்கினாதிபதி --- புதன். இது குருவின் இடத்தில் உள்ளது.
  உச்சம் --- செவ்வாய்
  புதன் சூரியனுடன் சேர்ந்து இருப்பது புத ஆதித்ய யோகம்
  9 ல் குரு இருப்பது சிறப்பு.

  இளையராஜா
  -----------------------

  லக்கினம் --- ரிஷபம்
  லக்கினாதிபதி --- சுக்கிரன். குரு மற்றும் ராகுவுடன் சேர்க்கை.
  உச்சம் --- சந்திரன் மற்றும் சுக்கிரன்
  பரிவர்த்தனை கிரகங்கள் - சுக்கிரன் மற்றும் சந்திரன்.


  இப்படிக்கு,
  இரா.ரகுபதி.

  ReplyDelete
 10. In Bhagyaraj's chart 5nd lord and 7th lpord are together.SO love marraige..

  ReplyDelete
 11. whether the people have born with this kalasarba thosam have to face a lot of problem upto 33 years... what about remaining period of life...

  ReplyDelete
 12. Nice sir. I am born with Kalasarba thosham and I am 37years now. Yes. I had really suffered a lot. Now things seems to be better but not very good. Is there any pooja to be performed to go ahead well in life.

  ReplyDelete
 13. அன்புள்ள் அய்யா, வண்கககம், மிக்க நன்றி.

  ReplyDelete
 14. Dear Sir

  Iam H.sankar from kalyan-west Thane dist maharashtra.

  Can you please provide the registration code to register myself with you for learning your lessons.

  Thanks

  H.Sankar B.sc AICWA, ACCA(UK)

  ReplyDelete
 15. hi sir Im s.k.Konienath from Srilanka

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com