மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.18

பறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யார்?


பறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யார்?

நமது ஊரில் இருக்கும்  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். வருடத்தின் குறிப்பிட்ட சில மாதங்களில் வேடந்தாங்கலைத் தேடி பறவைகள் படையெடுத்து வரும். அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வருபவை. வடஅமெரிக்க கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் கனடா முதல் சைபீரியா வரை உலகின் பல இடங்களில் இருந்தும் பல்வேறு வகை பறவைகள் அங்கு வருகின்றன. இதில் பெரும்பாலானவை இனப்பெருக்கத்திற்காக வருபவை, சிலவை வேறு எங்கோ செல்லும் வழியில் இங்கே சில காலம் தங்கிச் செல்பவை. எது எப்படியாக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் வேறு இடத்திற்கு வழி தவறாமல் வந்து சேர்கின்றன. இப்படிப் பல வருடங்களாக இந்த விஷயம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது, அதில் வேடந்தாங்கல் என்பது சிறிய உதாரணம்தான் உலகம் முழுவதிலுமே பல இடங்களில் பறவைகளின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது.

வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும் போது அவை இலக்கின்றி பறந்து திரிவதைப் போல தோன்றினாலும் உண்மையில் அவை அப்படிப் பறப்பதில்லை. அவைகளுக்குத் தெரிந்த வழியில்தான் பறந்து செல்கின்றன. எந்த ஒரு பறவையாக இருந்தாலும் காலையில் இரை தேடிச் செல்லும் பின்பு மாலையில் சரியாக தனது இடத்தை அடைந்து விடும். பழக்கப்பட்ட இடங்களில் இருப்பதுதான் இப்படிச் சரியான பாதையைக் கண்டுபிடிக்கின்றன என்பதில்லை. எடுத்துகாட்டாகப் புறாப் பந்தயத்தில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் சென்று பறக்க விடப்படும் புறாக்கள் சில நாட்களில் வளர்க்கப்படும் இடங்களுக்கு வந்து சேர்ந்து விடும்.வானில் பறக்கும்போது திசையைச் சரியாக அறிந்துகொண்டால் மட்டுமே ஒரு பறவையால் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் இந்த விஷயத்தில் பல வருடங்களாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய குழப்பம் உண்டு. 'பறவைகள் எப்படிச் சரியான வழியைக் கண்டுபிடிக்கின்றன'? அது மட்டுமின்றி  பூமியின் திசையை எப்படி அறிந்து கொள்கின்றன என்பது போன்ற விஷயங்கள் பல வருடங்களாகவே மர்மமாக இருந்து வந்தது.

பூமியைச் சுற்றி காந்தப்புலம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பூமியின் இந்த காந்தப்புலன் பல வகைகளில் உதவிகரமாக இருக்கிறது. பல வருடங்களாகவே காம்பஸ் எனப்படும் திசைகாட்டியின்  உதவியுடன் மனிதர்கள் திசைகளை அறிந்து வந்திருக்கிறார்கள். பறவைகளும் கூட திசைகளை அறிவதற்குப் பூமியின் காந்தப்புலத்தை பயன்படுத்தக்கூடுமோ என்ற சந்தேகம் பல வருடங்களாக இருந்துவந்தது. எனவே அதைச் சார்ந்து  அவற்றின் மூளைக்குள் திசைகாட்டி இருக்கிறது, அதன் இறக்கைகளில் இருக்கும் இரும்புதான் திசையைக் கண்டறிய உதவுகிறது என்பது போன்ற கருத்துக்கள் பல வருடங்களாகவே கூறப்பட்டு வந்தன. இறுதியாகப் பறவைகள் எப்படி திசையை சரியாகக் கண்டறிகின்றன என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் ஜீப்ரா பின்ச் ( zebra finche) மற்றும் யூரோப்பியன் ராபின் ( European robin) என்ற இரண்டு வகை பறவைகளில் நடத்திய தொடர்ச்சியான  ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்  Cry4 என்ற புரதம்தான் அவைகளுக்குத் திசையை கண்டறிவதற்கு உதவியாக இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.  கண்களின் ரெட்டினா பகுதியில் இருக்கும் இந்த  Cry4  புரதம் கிரிப்டோகுரோம் என்ற வகையைச் சேர்ந்தது, இது தாவர வகைகள் மற்றும் விலங்குகளில் காணப்படும் வழக்கமான புரதமாக இருக்கிறது. இந்தப் புரதம் ஒளி உணர் தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்தப் புரதம் கண்களில் இருப்பதால் பறவைகளும் பார்வையின் மூலமாகவே பூமியின் காந்தப்புலத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. இந்தப் புரதம் சிரிகார்டியன் ரிதத்திலும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. பறவைகள் இடம்பெயரும் காலகட்டத்தில் இந்தப் புரதம் பறவைகளுக்கு அதிகமாகச் சுரப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

படித்ததில் வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.18

Astrology: ஜோதிடம்: 27-4-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 27-4-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் தென்னாப்பிரிக்கத் தலைவர் திரு நெல்சன் மண்டேலா அவர்கள்
பிறப்பு விபரம்: 18-7-1918 14.54 மணி உம்டாடா என்னும் கிராமம், சவுத் ஆப்பிரிக்கா

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 15 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த திங்கட்கிழமை (7-5-2018) சந்திப்போம்! 4-5-2018 அன்று வாத்தியார் வெளியூர்ப் பயணம் ஆகவே புதிர் போட்டி 2 நாட்கள் தள்ளி வைக்கப்பெற்றுள்ளது. அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Name: Nelson Mandela
Date of Birth: Thursday, July 18, 1918
Time of Birth: 14:54:00
Place of Birth: Umtata
Longitude: 28 E 47
Latitude: 31 S 35
Time Zone: 2.0
Friday, April 27, 2018 7:12:00 AM
-------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Farmer South African President Nelson Mandela, born on 18/07/1918,2.54pm at Umtata.
Friday, April 27, 2018 7:55:00 AM
-----------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
இது உயர்திரு நெல்சன் மன்டெலா அவர்களுடைய ஜாதகம் என்று நினைக்கிறேன்.பிறந்த தேதி 18 ஜூலை 1918.தென் ஆப்பிரிகா நிறவெறி வேற்றுமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற காந்தீய சிந்தனையாளர்.
Friday, April 27, 2018 9:03:00 AM
----------------------------------------------
4
Blogger anand tamil said...
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
Friday, April 27, 2018 9:45:00 AM
---------------------------------------------------------.
5
Blogger sfpl fab said...
Mr.Nelson Mandela
DOB:-18.07.1918
Time nearby 5pm
Place :-South africa
Friday, April 27, 2018 10:47:00 AM
---------------------------------------------
6
Blogger bg said...
Former South African president Nelson Mandela born on July 18 1918.
Friday, April 27, 2018 11:49:00 AM
----------------------------------------------------
7
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Mr Nelson Mandela
Born on: 18th July 1918 @ 14.54 hours.
Place of birth: Umtata, South Africa.
Best Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, April 27, 2018 2:17:00 PM
----------------------------------------------
8
Blogger ARAVINDHARAJ said...
Name:Nelson Mandela
Date of Birth:18-Jul-1918
Place of Birth:Mvezo,South Africa.
Profession:Lawyer,Politician.
Friday, April 27, 2018 2:34:00 PM
----------------------------------------
9
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 27-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவரும், அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான‌
"பாரத ரத்னா"திரு. நெல்சன் ரொலிலாலா மண்டேலா அவர்கள்
பிறப்பு : சூலை 18, 1918, மாலை 5 மணியளவில்.
இடம் : முவெசோ, தென்னாப்பிரிக்கா.
இந்தியர் அல்லாத ஒருவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது என்றால் அது திரு.நெல்சன் மண்டேலா அவர்களுக்கு மட்டுமே.1990ம் ஆண்டு அதனைப் பெற்றார்.
Friday, April 27, 2018 3:07:00 PM
----------------------------------------------
10
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் மறைந்த தென்னாபிரிக்காவின் கறுப்பினத் தலைவர் திரு.நெல்சன் மண்டேலா ஆவார். இவர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரும் ஆவார். இவர் பிறந்தது 18/07/1918 சுமார் பகல் 2:54 மணியளவில்.
Friday, April 27, 2018 3:39:00 PM
-------------------------------------------------
11
Blogger csubramoniam said...
ஐயா,
சத்தத்திற்கு உரியவர் மரியாதைக்கு உரிய தென்னாப்பிரிக்கா குடியரசு தலைவர் :நெல்சன் மண்டேலா அவர்கள்
தேதி :18-july-1918
இடம் :houghton estate,johansberg,south arica
நேரம்: 17.00 hours aproximate
நன்றி
Friday, April 27, 2018 3:44:00 PM
-----------------------------------------------
12
Blogger sundinesh1 said...
Nelson Mandela
Friday, April 27, 2018 11:37:00 PM
-----------------------------------------------------
13
Blogger thozhar pandian said...
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள்
Saturday, April 28, 2018 2:29:00 AM
----------------------------------------------
14
Blogger Suresh said...
Name: Nelson Mandela
Date of Birth: Thursday, July 18, 1918
Time of Birth: 14:54:00
Place of Birth: Umtata
Longitude: 28 E 47
Latitude: 31 S 35
Time Zone: 2.0
Saturday, April 28, 2018 4:02:00 AM
------------------------------------------------
15
Blogger Rajam Anand said...
Dear sir
The answer to the quiz is former president of south Africa Mr nelson mandela who was born on 18th of july 1918.
Kind regards
Rajam Anand
Saturday, April 28, 2018 4:56:00 AM
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.4.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 27-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  27-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  வெளிநாட்டுக்காரர். அகில உலகப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.4.18

Cinema: துள்ளுவதோ இளமை பாடல் பிறந்த கதை!


Cinema: துள்ளுவதோ இளமை பாடல் பிறந்த கதை! 

*"துள்ளுவதோ இளமை...தேடுவதோ தனிமை.. அற்புதமான இசையமைப்பு எல் ஆர் ஈஸ்வரி, டி எம் எஸ் தேன்கலந்த கம்பீர குரலில், வாத்தியாரின் விறுவிறு நடிப்பு  இனிமை, சொல்ல வார்த்தை இல்லை.*

*வாலி, தாள லயத்துடன் பாடலை அனுபவித்து எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தன்  இசைத் திறனை  காட்ட அமோக வெற்றி பெற்ற பாடல் இது! வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் உலக இசையைப் பயன்படுத்த எம்.எஸ்.வி. தவறியதில்லை.*

*அப்படி உருவானது தான் “துள்ளுவதோ இளமை” பாடல். ஸ்பெயின் நாட்டில் பிரசித்திப் பெற்ற புல் ஃபைட் இசையான “பேசோ டாப்லே” வகையைச் சார்ந்தது இந்தப் பாடல்.*

*பேசோ டாப்லே என்பது இரட்டை அடிகள்(ஸ்பானியச் சொல்). ஸ்பெயின் நாட்டில் பிரபலமாக நடைபெற்று வந்த காளைகளை அடக்கும் போட்டிகளில் போட்டியாளர் மேடைக்கு வருகையில் வாசிக்கப்படும் இசை. இவ்வகை இசை பிரான்ஸில் சுவீகரிக்கப்பட்டு உலகம் முழுதும் பரவியது. பிரான்ஸில் இது ப்ளமேங்கோ போன்ற பல்வேறு வடிவங்களைப் பெற்றது.*

*இப்படிப் பல அம்சங்களைக் கொண்ட இசையை எம்.எஸ்.வி. தனது பாணியில் பயன்படுத்தியுள்ளார்.பேசோ டாப்லே இசையின் அடிப்படை இலக்கணம் இரண்டு தாளங்கள் .இப்போது பாடலைக் கவனியுங்கள்*

பட்டு முகத்து சுட்டிப் பெண்ணை
கட்டியணைக்கும் இந்தக் கைகள்.......
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
*என, பாடல் முழுதும் இரு சீர் வரிகள்.*
*பாடலின் துவக்கத்தில் அதிவேக ப்ளமேங்கோ கிட்டாரும், ட்ரம்ஸின் தாளமும், ஒரு நொடி அமைதிக்குப் பின்னர் ‘பட்டுமுகத்து சுட்டிப் பெண்ணை’ என்று ஆண்கள் கோரஸ் வரும் பொழுது, அதிலொரு இடையிசை புகுத்தி காஸ்டனட், கிட்டார், ட்ரம்ஸ் மூன்றையும் இசைக்கவிட்டு இது காளைச் சண்டைப் பாடல் என்பதை உறுதிப்படுத்தி விடுகிறார். வழக்கம் போல இப்பாடலுக்கும் பெண் குரலுக்கு அவர் நாடியது எல்.ஆர். ஈஸ்வரியை. ‘துள்ளுவதோ இளமை’ என்று குறைவான சுருதியில் தொடங்கும் பாடல் ‘அள்ளுவதே திறமை’ என்று உயரே போய், அத்தனையும் புதுமை என்று கீழே இறங்கிடும்.*

*முதல் சரணத்தில் வரிகளிலும் இரண்டு சீர்கள் மட்டுமே *
மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி நீராட ஓடிவா நீராட ஓடிவா வேல் ஆடும் பார்வை தாளாத போது வேல் ஆடும் பார்வை தாளாத போது நோகாமல் ஆடவா நோகாமல் ஆடவா 
*இதில் ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை வருமாறு அமைத்திருப்பார். அதிலும் ஒவ்வொரு வரியும் அடுத்தடுத்து வரும்பொழுது சொற்களில் கமகங்களைக் கவனியுங்கள். ‘நீ..ராட ஓடிவா நீராட ஓடிவா’. எம்.எஸ்.வி. நினைத்ததை எல்.ஆர். ஈஸ்வரி முற்றிலும் உணர்ந்து பாடுவதில் தான் எவ்வளவு சுகம்.*
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை நானாக அள்ளவா நானாக அள்ளவா தீராத தாகம் பாடாத ராகம் தீராத தாகம் பாடாத ராகம் நாளெல்லாம் சொல்லவா நாளெல்லாம் சொல்லவா

*இரண்டாம் இடையிசை மிகச் சிறப்பானது, ப்ளமேங்கோ நடையில் சேர்ந்து இசைத்து முடித்திட, பேசோ டாப்லே பாணிக்குத் தாவிடும். பின்னர்  TMSஸின் கணீர்க் குரலுக்கு ஈஸ்வரியின் குரலிலிருந்த குழைவைக் கொண்டு வருவது கடினம். இருந்தாலும் ‘நாளெல்லாம் சொல்லவா’ என்ற வரியில் மிகச் சிறப்பாகவே பாடியிருப்பார்.*

*அடுத்த இடையிசையில்  இசை கருவிகள் இணைந்திட பேசோ டாப்லேவுக்கு வந்துவிடும். இந்த முறை டி.எம்.எஸ்., ஈஸ்வரி இணைந்திட, ‘வாய்பேசத் தோன்றுமா’ என்ற வரியில் மீண்டுமொரு முறை அசத்துவார் ஈஸ்வரி.*
காணாத கோலம் நீ காணும் நேரம் வாய் பேச தோன்றுமா வாய் பேச தோன்றுமா ஆணோடு பெண்மை ஆறாகும் போது வேறு இன்பம் வேண்டுமா....

*இறுதியில் பெரும் அதிர்வுகளோடு, பேசோ டாப்லே அடையாளங்களோடு பாடல் முடிவடையும். இன்றைய தலைமுறையை வசீகரிக்கும் பாடலை அளித்தது அத்தனையும் புதுமை.இதோ உங்களுக்காக!*

*கருவூட்டம்: சுந்தர சீனிவாசன்*
படம்: :குடியிருந்த கோவில்  1968
இசை: எம்.எஸ்.வி
பாடலை இயற்றியவர்: வாலி
பாடியவர்கள்: TMS & L.R.ஈஸ்வரி     
நடிப்பு: எம்.ஜி.ஆர் & ராஜஸ்ரீ
--------------------------------------------------------
கேட்டதில் ரசித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
Video clipping of the song:வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.4.18

உலகப் புத்தக தினம்.


உலகப் புத்தக தினம்.

23-4-2018 அன்று உலக புத்தக தினம். நாம் இரண்டு நாட்கள் தாமதமாக அதைக் கொண்டாடுகிறோம்!

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா..

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

 தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்
என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த
புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்
சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
-ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
-டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
-இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
-பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
-லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
-ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
-சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போங்கள்
-மாசேதுங்

உலக புத்தக தின வாழ்த்துகள்!!!!
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.4.18

கூடுதல் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


கூடுதல் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா?

♥👉 எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக தான். நாம் செய்யும் செயல் வெற்றி பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

#நினைத்த காரியம் நடக்க :

🌺 விக்னங்கள், இடையு றுகள் நீங்க - விநாயகர்

🌺 செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

🌺 நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

🌺 வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

🌺 ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்

🌺 மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

🌺 கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி

🌺 திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

🌺 மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி

🌺 புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

🌺 தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கடாசலபதி

🌺 புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி

🌺 விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி

🌺 உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபு ரணி

🌺 வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்

🌺 சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

🌺 பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்

🌺 பில்லி, சு ன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்

🌺 கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்

🌺 காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்

🌺 மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை

🌺 நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்

🌺 மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்

🌺 எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்

🌺 ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்

🌺 அம்மை நோய்கள் - மாரியம்மன்

🌺 ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு

♥♥வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்
-----------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.4.18

பணம் சேர என்ன செய்ய வேண்டும்?


பணம் சேர என்ன செய்ய வேண்டும்?

யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை? எல்லோரும் தான் பணம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே செல்வம் கொழிக்கிறது. பலருக்கு நிராசையாகத் தானே இருக்கிறது? நினைப்பது தான் நடக்கும் என்றால் எல்லாரும் பணக்காரர்கள் ஆகியிருக்க வேண்டுமே! ஏன் நம்மில் பலருக்கு பணப்பற்றாக்குறை உள்ளது? ஆழ்மனச் சக்தி, அஃபர்மேஷன், நேர்மறை சிந்தனை எல்லாம் வேலை செய்யவில்லையா பண விஷயத்தில்?

இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பணம் இல்லை என்று குறை சொல்பவர்களைக் கொஞ்சம் அலசலாமா?

பண பயம்

“பணம் என்ன மரத்திலயா காய்க்குது!, “ பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படணும்.” “பணம் வந்தா நிம்மதி போயிடும்”, “ நம்ம ராசி சாண் ஏறுனா முழம் சறுக்கும்”, “பண விஷயத்தில யாரையும் நம்ப முடியாது” “அளவுக்கு அதிகமா ஆசைப்படக்கூடாது”, “ஒரு செலவு போனா அடுத்த செலவு கரெக்ட்டா வந்திரும்” “நம்மளுக்கு கை கொடுக்க ஆளில்லை”, “நமக்கு இதுவே ஜாஸ்தி”, “ஒரு ஜாக்பாட் அடிச்சா எல்லாம் சரியாயிடும்” “கடனைக் கடன் வாங்கித்தான் அடைக்க வேண்டியிருக்கு” - இப்படி அதிகமாக அவர்கள் பேசும் எண்ணங்கள் என்ன என்று கூர்ந்து நோக்குங்கள். காரணம் புரியும்.

பணம் சம்பாதிக்கும் லட்சியத்தை விடப் பணம் பற்றிய பயமும் பேராசையும்தான் தவறான முடிவுகளை எடுக்கவைக்கும்.

தடால் தீர்வு

பணச்சிக்கலில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தப் பணத்தேவையையும் ஏதாவது ஒன்றைத் தடாலெனச் செய்து தீர்க்க நினைப்பார்கள். பணம் தேவையா? எங்காவது கடன் வாங்கு அல்லது அடகு வை அல்லது எதையாவது விற்று ஏற்பாடு பண்ணு. எதையாவது செய்து பணம் புரட்டு. இந்த அவசரமும், எதையும் அலசி ஆராயாமல் எடுக்கும் முடிவுக்குக் காரணமான எண்ணம்: “இதை இப்போது சமாளிக்கலாம். பிறகு வருவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!” என்பதுதான்.

இந்த எண்ணமும் செயலும் காலம் காலமாய்த் தொடரும். பிறகு இது வாழ்க்கை முறை ஆகும்.

ஒரு நண்பர் சொன்னார்: “எனக்கு வர வேண்டிய கடன் தொகை 16 லட்சம். கொடுக்க வேண்டிய கடன் 12 லட்சம் தான். ஆனால் வர வேண்டியது நேரத்துல வராததால் சொத்தை வச்சு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்கிறேன்..” ரொட்டேஷன் என்பது தமிழ்ச்சொல் போலவே ஆகிவிட்டது. இது நாயர் பிடித்த புலி வால் கதைதான். முதலில் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு புது ஆளிடம் கடன் வாங்குவது. எந்தக் காலத்திலும் செலவும் குறையாது. கடனும் முடியாது. கடனால் மூழ்கிய குடும்பங்கள் பல எனக்குத் தெரியும்.

பணக் கண்ணோட்டம்

வரவுக்கும் மேலே செலவு செய்வது, தெரியாத தொழிலில் முதலீடு செய்வது, பணம் இல்லை என்பதற்காக எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ளாதது, எப்படியாவது கடன் வாங்கலாம் என்ற துணிச்சல், தவறான பொருளாதார முடிவுகள் எடுப்பது, பிறர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது என்று ஏராளமான தவறான முடிவுகளுக்குக் காரணம் பணம் பற்றிய பிசகான எண்ணங்களே. பண ஆசை இருந்தும் பணம் பற்றிய பிழையான எண்ணங்கள் தவறான முடிவுகளையே எடுக்க வைக்கும்.

உலகின் பணம் கொழிக்கும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் சரி, மார்வாடிகளாக இருந்தாலும் சரி, செட்டியார்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்குப் பணம் பற்றிய சில அடிப்படையான கண்ணோட்டங்கள் உண்டு.

வேலை,தொழில் தரும் பணம்

சிக்கனம் முக்கியம். சின்ன வரவு செலவுக்கும் கணக்கு வேண்டும். உறவு என்றாலும் பண விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும். வீணான பகட்டுச் செலவை விடக் கையிருப்பு சொத்தே சமூக மதிப்பு. எல்லா வயதிலும் உழைக்க வேண்டும். எளிய வாழ்க்கை வாழ வேண்டும். உத்தரவாதம் தராத தொழில்களில் முதலீடுகள் கூடாது. எல்லாவற்றையும் விட “பணம் சம்பாதிப்பது மிக முக்கியம். அதைத் திறன்படச் செய்வது தான் உயர்வுக்கு வழி” என்பதை உணர்ந்தவர்கள்.

மீட்டர் வட்டி, சீட்டுக்கம்பெனி மோசடி என அனைத்துப் பொருளாதார மோசடிகளிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். “எதையாவது செய்து சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும்” எனும் எண்ணம் தான் அவர்களைப் புதைகுழியில் தள்ளுகிறது.

நல்ல வேலையில், நல்ல தொழிலில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் பணத்தை எண்ணுவதை விட அதன் காரணமான வேலையையும் தொழிலையும் பற்றி அதிகம் எண்ணுவர். தொழில் மேம்படும்போது செல்வம் கொழிக்கும்.

பற்றாக்குறை மனநிலை

பிடித்ததை நம்பிக்கையுடன் செய்யும்போதும் பணம் வரும். இதுதான் உண்மை. பணம் பற்றிய பயம் இல்லாதபோது பணம் வரும். பணம் பற்றிய எண்ணத்துடன் கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவை உள்ளபோது செல்வம் சேராது.

பற்றாக்குறை மன நிலையில் பணத்துக்காகப் போராடுகையில் பணம் என்றும் பற்றாக்குறையாகவே இருக்கும்.

பணம் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இருங்கள். லக்ஷ்மி வரும் போது வரவேற்பது போல, போகும்போதும் வாழ்த்தி, நன்றி சொல்லி, மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தியுங்கள்.

பணம் தரும் பாடங்கள்

“எனக்குப் பணம் பெரிசில்லை...!” என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.

பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.

பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு சில பாடங்களை உங்களுக்கு வழங்க முயல்கிறது. அந்த பாடங்களை நீங்கள் கற்கும் வரை அவை உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்!  #கூகுளில்படித்தது
-----------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.18

Astrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளவரும் நான்கு முறை தேசிய
திரைப்பட விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றவருமான திருமதி.ஷ்ரேயா கோஷல் அவர்கள்
பிறப்பு : மார்ச் 12, 1984, மதியம் 12 மணி 08 நிமிடம்.
இடம் : பஹரம்பூர், முர்ஷிதாபாத் (மா), மேற்கு வங்காளம்.
இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 14 பேர்கள் சரியான விடையை எழுதி
உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (27-4-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Shreya ghoshal (singer)
Monday march 12,1984
Time :12:00:00
Place of Birth:durgapur
Friday, April 20, 2018 5:42:00 AM
----------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகி: ஷ்ரேயா கோஷால். பின்னணிப் பாடகி. கல்கத்தாவில் பிறந்தவர்.
பிறந்த தேதி 12 மர்ர்ச் 1984; நண்பகல் 12 மணி 20 நிமிடம் போல் பிறந்தவர்.
Friday, April 20, 2018 7:21:00 AM
---------------------------------------------
3
Blogger bg said...
Shreya Ghosal famous playback singer born on Mar 12 1984 in west Bengal.
Friday, April 20, 2018 9:02:00 AM
----------------------------------------------
4
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரப்புதிரில் இடம்பெற்ற ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பாடகி ஷ்ரேயா கோசல் அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, April 20, 2018 10:25:00 AM
---------------------------------------------
5
Blogger Shruthi Ramanath said...
It's shreya ghosal sir
Friday, April 20, 2018 11:37:00 AM
------------------------------------------
6
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் ஆவார். இவர் பிறந்தது 12/03/1984 பகல் சுமார் 12:00

மணியளவில்.இவர் பெங்காலி, கன்னடம். தமிழ், தெலுங்கு அசாம், முதலிய பல மொழிகளில் பாடியுள்ளார்.
Friday, April 20, 2018 11:55:00 AM
-----------------------------------------------
7
Blogger Muthu said...
Sir, The person is Ms. Shreya Ghoshal, Popular Singer, D.o.B. 12.03.1984. 1.00 p.m. Murshidabad, West Bengal.
Friday, April 20, 2018 12:25:00 PM
-----------------------------------------------
8
Blogger ARAVINDHARAJ said...
Name:Shreya Ghosal
Date of Birth:12-Mar-1984
Place of Birth:Kolkata,WestBengal.
Profession:Singer,Playback Singer.
Friday, April 20, 2018 4:24:00 PM
----------------------------------------------
9
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Shreya Ghosal who was born in calculate on 12th of March 1984.
Regards
Rajam Anand
Friday, April 20, 2018 5:22:00 PM
-----------------------------------------------
10
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 20-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளவரும் நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும்,

ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றவருமான
திருமதி.ஷ்ரேயா கோஷல் அவர்கள்
பிறப்பு : மார்ச் 12, 1984, மதியம் 12 மணி 08 நிமிடம்.
இடம் : பஹரம்பூர், முர்ஷிதாபாத் (மா), மேற்கு வங்காளம்.
இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.
Friday, April 20, 2018 5:42:00 PM
-----------------------------------------------
11
Blogger Ariyaputhiran Natarajan said...
Dear sir,
The given horoscope is that of SHREYA GHOSAL. Date of birth is 13-03-1984 place: Kolkata
Yours
A. Natarajan
Friday, April 20, 2018 9:43:00 PM
------------------------------------------------
12
Blogger thozhar pandian said...
ஜாதகத்தை பார்த்து வங்காளத்தில் பிறந்த அகில இந்திய பிரபலம் என்றவுடனேயே நினைத்தேன் இது பிரபல பாடகி ஷ்ரேயா

கோசலின் ஜாதகமாகத்தான் இருக்க வேண்டும் என்று.
Friday, April 20, 2018 10:12:00 PM
----------------------------------------------
13
Blogger G.Ramesh said...
Name: Shreya Ghosahl
DOB: 12th March 1984
TOB: 12.00 noon
POB: Durgapur
Ramesh Ganapathy
Nigeria
Friday, April 20, 2018 11:24:00 PM
-------------------------------------------------
14
Blogger RAMVIDVISHAL said...
Singer shreya Goshel
12/03/1984
Saturday, April 21, 2018 1:22:00 AM
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.4.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  20-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா?  வங்காளத்தில் பிறந்தவர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.18

Cinema நெஞ்சைத் தொட்ட பாடல்!


நெஞசைத் தொட்ட பாடல்!

*"பொட்டு வைத்த முகமோ....." பெண்ணின் முகத்திற்கு இன்னும் வசீகரத்தை கொடுப்பது பொட்டு என்று சொல்லாமல்
சொல்கிறார் கவிஞர்!

கவிஞர் கண்ணதாசன் இயற்றி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில்  எஸ்.பி.பாலு & பி.வசந்தா  பாடிய  ஒரு
அருமையான பாடல்.  ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த இப்பாடல் மலை பிரதேசத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது*

*பாடலில் சிவாஜிக்கு எஸ்.பி.பி. பாட, ஜெயலலிதாவிற்கு வசந்தா ஹம்மிங் பாடினார். சிறுவயது முதலே பரதம் முதலிய நடனப்
பாணிகளைப் பயிற்சி செய்திருந்த ஜெயலலிதா, பாரம்பரிய நடனம் பரிமளித்த இந்த பாடலில் உயர்ந்து நின்றார். படத்தில் ‘பொட்டு
வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப்
பார்த்து வியந்தார் பாலு. அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்பிபிக்குக் கிட்டியது.* 

*நடிகர் திலகத்திற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல் .இந்தப் பாடலில் பி.வசந்தாவின் ஹம்மிங் குரல் அற்புதமாக
இழைந்தது...ஹம்மிங் ராணி’யாகப் பயன்படுத்தும் ஒரு போக்கை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஆரம்பித்து அதையே
வசந்தாவின் முத்திரையாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.  இந்தப் பாடலில் தனக்கு பி.வசந்தா பின்னணிப் பாடினார்

என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அவருக்குப் பின்னாளில் கலைமாமணி விருதை வழங்கினார் ஜெயலலிதா...மிகப் பெரிய
நட்சத்திரப் பாடகியாக பரிணமிக்கவிட்டாலும்,  இந்த ஆந்திர குயில் பல மொழிகளில் பல நல்ல பாடல்களைப் பாடி,  நிறைவான
குடும்பத்தலைவியாக இருப்பவர.*

*இயற்கையை வர்ணிக்கும்போது பெண் போல் இருப்பதாக சொல்கிறார்....  கண்ணதாசன் கற்பனையில் மாலை நேரத்து அழகை...  பெண்ணை போல்  என்று வர்ணிக்கிறார்...  இந்த பாடல் ஒலிப்பதிவு செய்த அன்றே இரவில் அகில இந்திய வானொலியில் சுடச்சுட ஒலிப்பரப்பினார்களாம். "தரையோடு வானம் விளையாடும் கோலம் ... இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன் " போன்ற வரிகளில் ஆன்மாவின் காதலை கசியவிட்டிருப்பார் கண்ணதாசன். கேட்டு ரசியுங்கள். இதோ உங்களுக்காக!*

*கருவூட்டம்: சுந்தர சீனிவாசன்*

 ┈━❀••🌿🍁🌺🍁🌿
*பாடல் வரிகள்:*
பொட்டு வைத்தமுகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ... கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
புன்னகைப் புரிந்தாள்,,,,,

(பொட்டு வைத்த..)

ஆஆஆஆஆஆஆ.....
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
லலாலலாலலாலலா
என்னுடன் கலந்தாள் லலாலலாலலாலலா

ஆஆஆஆஆஆஆஆ. ஹொஹொஹொஹோ

மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா
நிழல் போல் மறைந்தாள். லலாலலாலலாலலா

பொட்டு வைத்த முகமோ ஓஓஓஓஓ.
கட்டி வைத்த குழலோ ஓஓஓஒ…..
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ லலாலலாலலாலலா
அந்தி மஞ்சள் நிறமோ லலாலலாலலாலலா

┈┉❀••🌿🍁🌺🍁🌿
🎬 :சுமதி என் சுந்தரி-1971
🎻 : எம்.எஸ்.வி
🖌:   கண்ணதாசன்
🎤 :SPB& பி.வசந்தா
👥 : சிவாஜி & ஜெயலலிதா
 ┈━❀••🌿🌺🌿••┉┈
ஆக்கம்: இசைப் பாயணத்தில் சுந்தர சீனிவாசன்
----------------------------------------------------------
கேட்டதில் பிடித்தது!

அன்புடன்
வாத்தியார்
===========================
பாடலின் காணொளி வடிவம்:வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.4.18

வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!


வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!

வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!

பங்குனி_அதிசயம்..!!

பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சாமி.. இருக்கு.

வியாதியே இல்லாத ஒரு வரம் கிடைச்சா எப்படி இருக்கும்...?  நடக்கிறதை பேசுங்கள் சார்... வெட்டியாகப் பேச நேரமில்லை ... யூஸ்புல்லா இருந்தா கேட்கலாம்... என்பீர்கள் ... சரிதான்..

பரம ஏழையிடம் போய் கேட்டுப் பாருங்கள்... பணத்தோட அருமை தெரியும்...
பணத்த என்ன பண்றதுன்னே தெரியாத பணக்காரன்கிட்ட கேட்டுப் பாருங்கள்... ஆரோக்கியத்தோட விலை தெரியும்... னு ஒரு பேச்சு வழக்கு உண்டு... ரொம்பவும் எதார்த்தமான உண்மை ....

ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் அதே நேரத்தில் தேவையான பணத்தையும் சம்பாதிக்க தெரிந்தவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்... என்பதை வியாதியால் உடல் கெட்டுப் போன பிறகே பெரும்பாலோர் உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு , அதற்குப் பிறகு தேட ஆரம்பிப்பது தெரிந்த கதை...

எல்லாம் சரி... விஷயத்துக்கு வாங்க... சார்... என்கிற  உங்கள் ஆதங்கம் புரிகிறது எனக்கு..

ஆரோக்கியத்துக்கான வழிகள் ..என்று நம்ம பெரியவங்க சொல்லி வச்சுட்டு போயிருக்கறதுல , குறிப்பா இந்த பங்குனி மாதத்து அதிசயத்தை சொல்லத்தான் வந்தேன்...

வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...

இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை   சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..

 பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்!
நகரங்களில் இருப்பவர்கள், தமிழ் மருந்துக் கடைகளில் வேப்பம் பூ கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம்!

இந்த வேப்பம்பூ ,  ஒரிஜினல் மலைத்தேன்  , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால்  போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான்  இதன் விஷேஷமே..

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி...என்பதெல்லாம் தாண்டி "சுகரு "க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம் ..

எப்படி சாப்பிடலாம் ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவையென்றால் ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..

இல்லையென்றால் பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கிறது. படித்துப் பாருங்கள்! எப்படியாவது உட்கொள்ளுங்கள் சாமிகளா!.

நம் பெரியவர்கள் இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம்  பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க நண்பர்களே!

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..சரிதானே?
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.4.18

வாங்கி வந்த வரம்!


வாங்கி வந்த வரம்!

*வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை..;*

1.  நிறைய சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.. மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு..!

2.  பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை..!

3.  எந்த வயதிலும் எந்த கல்வி  கலையையும் கற்கும் வாய்ப்பு..!

4.  பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது..!

5.  நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை..!

6.  நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்..!

7.  அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது..!

8.  எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்..!

9.  தீய பழக்கவழக்கங்களுக்கு  அடிமையாகாதிருத்தல் மற்றும்  தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்..!

எல்லாவற்றிற்கும் மேலாக,
                                           
10.   *கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்*..!

வரம் வாங்கிப் பிறந்தால் மட்டுமே கிடைக்கக் கூடியவை
-----------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.4.18

காவிரிக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?


காவிரிக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?

*மீண்டும் நீதிமன்ற கூண்டில் நின்றாள், காவிரி.*

*"என்னமா காவிரி, நீ இன்னும் வீட்டுக்குப் போகலையா?",* அதிர்ச்சியுடன் கேட்டது நீதி தேவதை...

"இல்லை, இன்னும் சிறைப்பட்டுத்தான் கிடக்கிறேன்...
நிரந்திர விடுதலையும் இல்லை, பரோலும் இல்லை...
இன்னும் எத்தனை நாட்கள் தான்,
நான் அணையிலே சிறைப்பட்டுச் சாக வேண்டும்?".

*"ஏம்மா, உன்னை மீட்டெடுத்துச் செல்ல வாரியம் அமைத்தேனே?".*

"உங்களைப் பார்த்தல் சிரிப்புதான் வருகிறது..
நடை பாதையில் விளம்பரப் பலகை வைக்க கூடாதுன்னு சொன்னீங்களே,
*கேட்டார்களா?*
மதுபானக் கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்தீர்களே,
*கேட்டார்களா?*
இன்னும் எவ்வளவோ ஆணைகள் கேட்பாரற்று போனது...
இதில் வாரியம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்!?".

*"சரி, உனக்காக யாரு வாதாடப்போறா?".*

"என்னக்காக நிறையபேர் போராடுவதால்,  வாதாட யாரும் வரவில்லை...".

*"சரி, நான் உனக்கு என்ன செய்யணும்?".*

"உங்களை மதிக்காத நாட்டில், எனக்காக நீங்கள் என்ன செய்ய முடியும்?
முடிந்தால், இந்நாள் வரைக்கும் வாரியத்தை அமைக்காத ஆதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைது செய்து அந்த அணையில் இடுங்கள்".

*"கேட்க மறந்தேன்... நீ ஏன் அந்த மண்ணிற்கு செல்ல வேண்டுமென துடிக்கிறாய்? பல வருடங்களாக தண்ணீரை சேமிக்க ஒரு சிறு அணையோ, குளமோ, குட்டையோ வெட்டாத அந்த மண்ணிற்கு நீ சென்றாலும், இறுதியில் கடலில் தான் கலப்பாய்... இருந்தாலும் ஏன்...?".*

"என்னால் அந்த மண் குளிருமென்றால்,
என்னால் அங்கு ஜீவன்கள் வாழுமென்றால்,
என்னால் அங்கு காய் கனிகள் விளையுமென்றால்,
அங்குச் செல்ல எப்போதும் துடிப்பேன்..
நான் கடலில் கலப்பது அவர்கள் தேர்தெடுக்கும் தலைவர்கள் கொடுக்கும் சாபம்...
அதற்காக என்னை கடவுளாய் போற்றும் அவர்களைத் தண்ணீரின்றி சாகடிக்க எனக்கு விருப்பமில்லை...".

*"புரிகிறது உன் வேதனை.. ஆனால் என் ஆணையை மதிக்காதவர்களை என்னால் என்ன செய்ய முடியும்... என்றாவது ஒரு புரட்சி வெடித்தால், அதனூடே உனக்கு விடுதலை கிடைத்தால், எனக்கு மகிழ்ச்சியே... இருந்தாலும் காவிரி நீரில் அரசியல் சாக்கடை கலந்திருக்கும் வரை அது கடினமே... காத்திரு மகளே, காவிரி".*
---------------------------------------------------------------------------
தூரத்தில்..., தமிழ் நாட்டில், யாரோ ஒரு விவசாயி, தொண்டை நீர் வற்றக் கத்தினார், *"அடேய், கர்நாடகத்துக்கு போக வேண்டிய காய்கறி லோடு கிளம்பியாச்சா... சீக்கிரம் கிளம்பு...".*

அன்பிற்குரிய அயல்வாசியே!!
இறுதிச் சொட்டு நீர் இந்த மண்ணில் இருக்கும் வரை,
இங்கு விவசாயம் இருக்கும்..,
விவசாயியும் இருப்பான்..,
அவன் விவசாயமும் செய்வான்..,
தான் பட்டினி கிடந்தாலும்,
விளையும் கனியை உனக்கு அனுப்புவான்..,
அதைத் தின்று விட்டு....காவிரியை மட்டும் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்!!!
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.18

Astrology: ஜோதிடம்: 13-4-2018ம் தேதி புதிருக்கான விடை!

----------------------------------------------------------------------------------------------------

Astrology: ஜோதிடம்: 13-4-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் திருவாளர் சித்தராமையா, தற்போதைய கர்நாடகா முதல்வர் ஆவார்
பிறந்த தேதி 12.8.1948 நேரம் பகல் 12:10 மணி  ஊர்: மைசூர் அருகிலுள்ள கிராமம்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 16 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (20-4-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரப்புதிரில் இடம்பெற்ற ஜாதகத்துக்கு உரியவர் தற்போதைய கர்நாடக முதல்வர் திரு. சித்தராமையா அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, April 13, 2018 9:58:00 AM
-------------------------------------------------
2
Blogger bg said...
Siddaramaiah Chief Minister of Karnataka born on aug 12 1948
Friday, April 13, 2018 10:10:00 AM
---------------------------------------------
3
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Karnataka Chief Minister and leader of Indian National Congress Respected Thiru.Siddaramaiah,born on 12/08/1949 time 12.10pm ,Mysore ,thulam lagnam, visaga nakshtra,viruchaga rasi,lagna lord in 9th house makes him luxurious life and in tenth house sun with Mercury makes him success in political
Friday, April 13, 2018 12:05:00 PM
--------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
ஜாதகர் உயர்திரு கே. சித்தராமைய்யா, கர்னாடக முதல்வர்.பிறந்த தேதி 12 ஆகஸ்ட் 1948; பிறந்த நேரம் ப்கல் 12 மணி 7 நிமிடம் 30 வினாடிகள்.பிறந்த ஊர் சித்தராமன் ஹுண்டி டி நரசப்பூர் மைசூரு மாவட்டம்.
சூரியனுக்கு குரு பார்வை, 10ம் இடத்திற்கு குரு பார்வை, சூரியன் 10ம் இடத்தில் அமர்ந்தது, புதன் 10ம் இடத்தில் அமர்ந்தது ஆகியவை பேச்சாற்றலக் கொடுத்து
அரசியல் வாதியாக்கியது.9ம் அதிபதி 10ல் அமர்ந்டது தலைமைப் பண்பை அளித்தது.
Friday, April 13, 2018 12:15:00 PM
------------------------------------------------
5
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உரிய பிரபலம் தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரியை தடுத்து நிறுத்தும் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அவர்கள்
DOB :12-08-1948
TIME OF BIRTH :12:00 A.M
PLACE OF BIRTH :MYSORE
நன்றி
Friday, April 13, 2018 1:05:00 PM
------------------------------------------------
6
Blogger Muthu said...
Mr.Siddaramaiah, Hon'ble CM of Karnataka. D.o.B. 12.08.1948. 12.30 pm. Mysore
Friday, April 13, 2018 2:29:00 PM
----------------------------------------------
7
Blogger sfpl fab said...
Answar:- Siddaramaiah
Dob 12.08.1948
Time 11am
Place:-Mysore
Friday, April 13, 2018 2:36:00 PM
---------------------------------------------
8
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் தற்போதைய கர்நாடக முதலமைச்சர் திரு. சித்தராமையா அவர்கள். அவர் பிறந்தது 12/08/1948 பகல் சுமார் 12:00 மணியளவில்.
நன்றி.
Friday, April 13, 2018 3:36:00 PM
----------------------------------------------
9
Blogger Rajam Anand said...
Dear Sir
Siddaramaiah is an Indian politician and present Chief Minister of Karnataka who was born on 12th August 1948.
Kind Regards
Rajam Anand
Friday, April 13, 2018 3:40:00 PM
-----------------------------------------------
10
Blogger ARAVINDHARAJ said...
Name:Siddaramaiah
Date of Birth:12-Aug-1948
Place of Birth:Mysore,Karnataka.
Profession:Politician.
Friday, April 13, 2018 4:14:00 PM
----------------------------------------------------
11
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 13-4-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் கர்நாடக மாநில முதல்வர் சித்தரமையா ஆவார். பிறந்த தேதி ஆகஸ்ட் 12, 1948. மைசூரில் பிறந்தவர்.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Friday, April 13, 2018 4:22:00 PM
----------------------------------------------------
12
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: சித்தாராமைய்யா, கர்னாடகா முத்லமைச்சர்
பிறந்த நாள்: 12/08/1948 @ 12 மணி
பிறந்த ஊர்: மைசூர்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, April 13, 2018 5:13:00 PM
----------------------------------------------
13
Blogger G.Ramesh said...
Name : Siddaramaiah, Chief Minister of Karnataka
Date of Birth : August 12, 1948
Time of Birth : 11:45 PM
Place of Birth : Mysore
Ramesh Ganapathy
Nigeria
Friday, April 13, 2018 5:35:00 PM
---------------------------------------------
14
Blogger venkatesh r said...
"ஜோதிடப் புதிர் 13-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
கர்நாடக மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர்
திரு. சித்தராமைய்யா அவர்கள்.
பிறப்பு: ஆகஸ்ட் 12, 1948.
இடம் : சித்தராமன ஹுண்டி கிராமம், வருணா ஒன்றியம்,மைசூர்.
நேரம் : காலை 11 மணி, 45 நிமிடம்.
Friday, April 13, 2018 8:30:00 PM
---------------------------------------------
15
Blogger thozhar pandian said...
12 ஆகஸ்ட் 1948 பிறந்த மாண்புமிகு கர்னாடக மாநில முதல்வர் சித்தராமையா அவர்கள்
Friday, April 13, 2018 8:41:00 PM
---------------------------------------------
16
Blogger sundinesh1 said...
Siddaramaiah , Chief minister of karnataka
Friday, April 13, 2018 10:12:00 PM
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.4.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  13-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  தென்னிந்தியாவில் பிறந்தவர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.18

கோடைகாலத்தில் நாம் செய்ய வேண்டியவை!


கோடைகாலத்தில் நாம் செய்ய வேண்டியவை!

காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்

பழைய சாத தண்ணீர் ( வாரம் 2 நாட்கள் )

ஊற வைத்த வெந்தயம் ( வாரம் 2 நாட்கள் )

பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி - இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்தும்
சாப்பிடலாம் )

( வாரம் 2 - 3 நாட்கள் )

காலை எழுந்தவுடன் தாக உணர்வை கவனித்து, அதற்கேற்ப தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக பெருங்குடலின் நேரமாகிய 5 மணி முதல் 7 மணி வரைஇருக்கும் தாக உணர்வு மிக முக்கியமானது. அப்போது நாம் குடிக்கக்கூடிய தண்ணீர் நமது குடல்களை சுத்தப்படுத்தி நல்ல பசி உணர்வை கொடுக்கும். நல்ல ஜீரணத்துக்கும் உதவிசெய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.

காலை உணவாக கம்மங்கூழ், பழைய சாதம், கேழ்வரகு கூழ் போன்றவற்றை வாரம் 2 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உடன் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும்அதற்கு கொத்தமல்லி மற்றும் புதினா துவையல்களையும் தொட்டுக்கொள்ளலாம்.

பழைய சாதத்தை இரவு மண் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிட வேண்டும். பழைய சாத தண்ணீர் குடிக்கும் போதோ சாதமாக சாப்பிடும் போதோ, மண்பாத்திரத்தில் ஊற வைக்கப்பட்டிருந்தால் அது சுவையாகவும், குளிர்ச்சி தரும் வகையிலும் அமையும்.

முடிந்தவரை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே தண்ணீரை தவிர ( முறையான தாகம் இருந்தால் மட்டும் ) எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மதிய உணவு சாப்பிட போவதற்கு முன்னர் சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு அதன்பின்னர் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம். இதன் மூலம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுஇடையில் தண்ணீர் தேவைப்படுவதை தவிர்க்க முடியும். இது நல்ல தரமான ஜீரணத்தை உறுதி செய்யும்.

மதிய உணவில் நீர்க்காய்கள் நிறைய சேர்த்துக்கொள்ளலாம். ( புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, பீர்க்கங்காய் முக்கியமானவை ). .

மதிய உணவில் வாரம் 3 - 4 நாட்களாவது மோர் சேர்த்துக்கொள்வது நல்லது. மோரை கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி போட்டு ஊறவைத்து பயன்படுத்தலாம். மோரை தாளித்துபயன்படுத்துவது அதன் புளிப்பு தன்மையை குறைப்பதாக அமையும்.

அசைவ உணவுகள் சாப்பிடுவதாக இருந்தால் மதிய வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். இரவு எடுத்துக்கொள்வதாக இருந்தால் 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுமுடித்துவிடுங்கள். அசைவத்தில் காரமும் மசாலாக்களும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அசைவ உணவுகளில் ஆட்டு இறைச்சியின் மார்பெலும்பில் சூப் வைத்துகுடிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும் ஒரு அற்புத உணவாகும்.

மாலை வேளைகளில் தேவைப்பட்டால் பழ ரசங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

நாள் முழுக்கவே தாக உணர்வை நன்கு கவனித்து அதற்கேற்ற வகையில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிக்க கூடாது என்பதையும்மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான் இன்றைக்கு நாம் பெரும்பாலும் குடிக்கின்றோம். அந்த தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து அதனோடு வெட்டி வேர் சேர்த்து தண்ணீர்குடிக்கலாம். குறைவான நீரில் முழுமையாக தாகம் நீங்க இது பெரும் உதவியாக இருக்கும். ( 30 லிட்டர் தண்ணீருக்கு 3 வெட்டி வேர்கள் )

எப்போதுமே அமர்ந்த நிலையில் வாய் வைத்து தண்ணீர் குடிப்பதே நல்லது.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும். ( தாகம் இல்லாவிட்டாலும் கூட
பரவாயில்லை )

குளிர்சாதன அறைகளில் தூங்குபவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி என்பது நிச்சயமாக நமது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. அதேநேரத்தில் அதிக சூட்டில் இரவு தூக்கம் வராமலும் கஷ்டப்பட வேண்டாம். எனவே ஏசி யின் பயன்பாட்டு அளவை முடிந்த வரை குறைத்து கொள்ள திட்டமிட வேண்டும்.

உதாரணம்: அதிகாலை 3 மணிக்கு மேல் ஏசி-யை அனைத்து விட வேண்டும். 3 மணிக்கு மேல் நமது நுரையீரலின் பிரத்யேக நேரமாகும். இந்த நேரத்தில் தூய்மையான ஆக்சிஜன்காற்றில் பரவிக்கிடக்கும். எனவே 3 மணிக்கு மேல் ஜன்னல்களை திறந்து விட்டு காற்றோட்டமான சூழலில் உறங்குவது ஏசி யின் பாதிப்புகளில் இருந்து நம்மை ஓரளவு காக்கும்.

பழங்களை பொறுத்தவரை தர்பூசனியும், மாதுளையும், கிர்ணியும் கோடை காலத்தில் நமது உடலின் நீர் சமநிலையை பாதுகாக்க உதவும் முக்கிய பழங்களாகும். எனவே ஒருநாளைக்குஅவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக சாப்பிட்டு விட வேண்டும்.

தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட தலைக்கு குளித்து நல்லது. மேலும் அதிக நேரம்குளிப்பதும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மற்றும் சமநிலையில் வைக்கும்.

அதேபோல, வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து நல்லது. தலைக்கு தேய்ப்பது மட்டுமல்லாமல் உடல் முழுக்கவே தேய்த்து இளங்காலை வெயிலில் ( 6 முதல் 7.30மணி வரை ) ஒரு 30 முதல் 40 நிமிடங்கள் வரை கண்கள் மூடி அமர்ந்துவிட்டு பின்னர் இதமான நீரில் குளித்து விடுவது நமது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

அவ்வப்போது இளநீர் குடிப்பதும், எலுமிச்சை ஜூஸ் குடிப்பதும், வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் நமது நீர் சக்தியின் தரத்தை உறுதி செய்யும். ஒவ்வொரு முறை இளநீர் குடிக்கும் போதும்அதன் வழுக்கையையும் சாப்பிட வேண்டும்.

கோடை காலத்தில் இரவு உணவாக தோசை, பரோட்டா, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை தவிர்த்து விட்டு, ஆவியில் வேக வைத்த உணவுகளையும், களி உள்ளிட்டஉணவுகளையும் சாப்பிடுவதே நல்லது.

கோடை காலத்தில் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல இரவு உறங்க செல்லும் முன் நமது இடுப்பு பகுதிகள் உள்ளிட்டபிறப்புறுப்பு பகுதிகளை நன்கு கழுவிவிட்டு உறங்க செல்வது சுத்த தன்மையை ஏற்படுத்துவதோடு, நமது சிறுநீரக பகுதிகளை குளிர்ச்சிப்படுத்தும் விதமாகவும் அமையும்.

கோடைகாலங்களில் வியர்வை மூலமாக நடைபெறும் கழிவு நீக்கம் முழு அளவில் இருக்கும். எனவே நமது வியர்வை துவாரங்களில் தடையில்லா திறந்த நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும். எனவே சோப் உபயோகங்களை குறைத்துவிட்டு இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வைதுவாரங்களை அடைக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். பொதுவாகவே அனைத்து காலங்களிலுமே சோப் பயன்படுத்தாமல் குளியல் பொடியை பயன்படுத்துவதே நல்லது. அப்படியேசோப் பயன்படுத்தினாலும் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். சோப் தேய்த்து விட்டு, வெறும் கையாலோ அல்லது நார் போன்ற பொருட்களாலோ நமது வெறும்உடலை தேய்த்துவிடுவதன் மூலம் சோப்களின் ரசாயனங்கள் நமது வியர்வை துவாரங்களை அடிப்பதை தடுக்க முடியும்.

பொதுவாகவே கோடை காலங்களில் அதிகாலை நாம் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியும். எனவே இரவு உணவை சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் தூங்க சென்றுவிடுவது தான் நல்லது.அதுதான் போதுமான தூக்க நேரத்தை உறுதி செய்யும்.

கூடுமானவரை 9 மணிக்கு மேல் மொபைல், டிவி, கணிப்பொறி பயன்பாடுகளை நிறுத்திவிட்டு உறங்க சென்றுவிடுவது மிக மிக நல்ல பலன்களை நமக்கு ஏற்படுத்தும்.

கோடைகாலங்களில் மொட்டை மாடியில் படுக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். இதில் எந்தவித பாதகங்களும் இல்லை. இருந்தாலும், உறங்க செல்வதற்கு 4 மணி நேரத்திற்குமுன்பாக அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

ஃபோம் மெத்தைகளில் படுத்து உறங்குவதை தவிர்த்துவிட்டு தரையில் பாய்விரித்து அதன் மீது ஜமுக்காளம் அலல்து போர்வை விரித்து உறங்குவது மிக நல்லது. வெறும் தரையில்படுக்க வேண்டாம்.

வீட்டில் முழுமையான காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே நமது வீட்டினுள் உறையும் உஷ்ணத்தை வெளியேற்றிவிடும்.

ஜீன்ஸ் உள்ளிட்ட மிக இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

IT துறைகளில் பணியாற்றுபவர்கள் நாள் முழுக்கவே ஏசி அறையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்கள் இரவு உணவாக பழங்கள் மட்டும் சாப்பிடுவது அவர்களின் உடல்உஷ்ணத்தை குறைக்கும். மேலும் அதுபோன்ற சூழலில் அவர்கள் மாலை சிற்றுண்டியை சற்றே அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது இரவு உணவாக பழங்களே போதுமானதாகஇருக்கும்.

தூய்மையான பசும்பால் கிடைத்தால் இரவு உணவாகவோ அல்லது இரவு உணவுக்கு பின்னரோ சிறிதளவு எடுத்துக்கொள்வது நல்லது. ஜீரண குறைபாடுகள் இருப்பவர்கள் பாலைதவிர்த்து விடுவது நல்லது.

மார்க்கெட்டிங் துறைகளில் பணிபுரிபவர்கள், வியாபாரம் காரணமாக வெயிலில் வெளியில் அலையக்கூடிய சூழலில் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கழுவிக்கொள்ளுங்கள். முகம்கழுவும் போது பின் கழுத்தையும், காதுகளின் உட்புறத்தையும், கழுத்து பகுதிகளையும் தண்ணீரால் நனைப்பது மிகவும் முக்கியம்.

பெண்களுக்கு பொதுவாகவே நீரின் தேவை அதிகம் இருக்கும். எனவே குறிப்பாக பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லத்தரசிகளும், பணிபுரியும் பெண்களும்தங்களுக்கு அருகில் கண்டிப்பாக ஒரு தண்ணீர் குவளையை வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தாகம் எடுத்த மறுநொடி நீர் அருந்திவிட்டு தான் அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாகவே நீரின் தேவையை உணராதவர்களாகவும் அறியாதவர்களாகவுமே இருப்பார்கள். எனவே அவர்களை அவ்வப்போது தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.

இவைகளெல்லாம் போக நமது வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுபவங்கள் சொல்லும் கோடைகால குறிப்புகளையும் கவனத்தில் கொண்டு கடைபிடிக்கலாம்.

கோடை காலம் என்பது நமது இதயமும், சிறுகுடலும் அதிக வேளை பளுவுக்கு ஆளாகக்கூடிய காலமாகும். எனவே அந்த உறுப்புகளை சரியான சக்தி நிலையில் பராமரிக்கவேண்டுமானால் மேற்சொன்ன அனைத்து குறிப்புகளையும் கடைபிடிப்பது நன்மையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமானஅனுபவங்களை தருவதாக அமையும். முக்கியமாக கோடை காலத்தில் நாம் செய்யக்கூடிய இந்த உணவு முறை ஒழுக்கங்கள் அடுத்தடுத்த பருவ காலங்களுக்கு உகந்த உடல் சூழலைஉருவாக்கி தந்து ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வை நாம் வாழ்வோம்

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==========================வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.4.18

கதையல்ல நிஜம்.


கதையல்ல நிஜம்.

அன்பர்களே. இதனைப் படிக்க சற்று நேரம் ஆகும். ஆகவே நேரம் இருக்கும்  போது கண்டிப்பாக இதனைப் படிக்கவும்...

நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை
போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய சாஸ்திரங்களையும்
அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ
ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று. ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்”
என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட “அம்மா! நீ பெண். தனியாக வாழ
இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள்

கூறினாலும்”காசி விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்”என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து, பிறகு, வேறு வழியில்லை
என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, ”அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும்,
இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்”என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.
“தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார்!  அவற்றை செயல்படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே, பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன்
இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல “இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்”என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.

இறைவனின் திருவுள்ளம்,இந்தப்  பெண்ணை, சோதிக்க எண்ணியது.அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ்
பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து,
ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல்,
அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு”என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது.

இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி “எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது. இறைவா! நான் செய்தது சரியோ? தவறோ?
தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும்,கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை.
அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்”என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.

ஒரு நாள்,ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார். ”மகளே! கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார்.அவரைச் சென்று பார். உனக்கு
உதவி கிடைக்கும்” என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு
அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார். அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?. எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க,
இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி,அக்கால கணக்கின்படி “ஐந்து லக்ஷம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே, நீங்கள், ஐந்து லக்ஷம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது
சிறு,சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்.” என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். ”இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லக்ஷம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள்
அமர்ந்திருக்கிறார்கள். ”தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்” என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார். “பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால்
அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள
வேண்டாமா? சரி. உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால்
எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?” என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி, ”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன்.

அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர்
மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள்.

“மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை”என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா! உங்களுக்கே தெரியும். உங்கள்
வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம்
கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன். ஐந்து லக்ஷத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்”என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய,பாவங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப்
பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார். “அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன்
வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, ”எம்பிரானே!
அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர், இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின்
கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை
கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து, ”அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப்
பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ,
அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மிதக்கும்”என்று கூறுகிறாள். செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”.“இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார். ”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும்  உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால்,இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு உறங்கச் செல்கிறாள். இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து தனத்தைக்
கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்? என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, ”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு,
கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள்
நீரைப் பருகுகின்றன?” என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”என்று ஏற்பாடு செய்து விட்டு,
இவரும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார்.

காலை மணி ஆறு ஆகிறது.காலை மணி ஆறு ஆகிறது.

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான். *குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு
மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க பகவான் (சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார்.* அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது. “ஒரு மாடு நீர் அருந்திய
புண்ணியமே, ஐந்து லக்ஷத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்” என்பதை புரிந்து கொண்டு, “என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.

அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300,400
ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம். இதை அகத்தியம்பெருமான், அடிக்கடி, அடியேனுக்கு நினைவூட்டி இருக்கிறார்.

எப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ, ”தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே?
 ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா?  மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே?
 நாமும் அது போல வாழவில்லையே?  தனத்தை சேர்த்து வைக்கவில்லையே?”  என்ற எண்ணம் வரும்போதெல்லாம்,
 இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும். எனவே, மெய்யன்பர்களே! இதைக் கதை என்று பார்க்காமல், நடந்த நிகழ்வு என்று சாக்ஷாத் அகத்திய பகவான் குறிப்பிட்டுக் காட்டியுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஓம் நமசிவாய அன்பே சிவம் சிவசிவ..

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.4.18

வெள்ளியங்கிரி மலையின் மேன்மை!


வெள்ளியங்கிரி மலையின் மேன்மை!

*வெள்ளியங்கிரி மலை*

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.

இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.

தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.

மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார். இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.

இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.

மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர். கையில் மூங்கில் தடிகளின் உதவியுடன் ஏறுதல் சிறப்பு ஆகும்.

மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும் சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம  நிலையில் அமைந்துள்ளது

மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.

சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது.

மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.

முதல் மலை பிரணவ சொரூபம் வெள்ளிவிநாயகர் உறைவிடம்

இரண்டாம் மலை சுவாதிஷ்டானம் பாம்பாட்டிச் சுனை

மூன்றாம் மலை மணிப்பூரகம் அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை

நான்காம் மலை அநாகதம் ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம்

ஐந்தாம் மலை விசுக்தி நிலை பீமன் களியுருண்டை மலை

ஆறாம் மலை ஆக்ஞை நிலை சேத்திழைக்குகை, ஆண்டி சுனை

ஏழாவது மலை சஹஸ்ரஹாரம் சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி ஆண்டவர்)

பூண்டியை அடிவாரமாகக் கொண்ட வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனித உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.

*திருச்சிற்றம்பலம்!!!*

*ஓம் நமசிவாய !!! சிவாய நம ஓம் !!!*

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.4.18

முதியவர்களுக்கு சில வேண்டுகோள்கள்!


முதியவர்களுக்கு சில வேண்டுகோள்கள்!

நம் பிள்ளைகளோ, உறவுகளோ, குடும்பத்தவரோ நம்மை மிகவும் மதிக்கவில்லையே, அலட்சியப்படுத்துகிறார்களோ  என்ற அவசரப்பட்ட முடிவிற்கு வந்து மனதை  அலைபாய விட்டு, வருத்தம் - வேதனையை 'குதிரையாக்கி' அதன்மீது 'சவாரி' செய்யாதீர்கள்!

இன்றைய வாழ்க்கை முறையில், வீட்டில் மகன், மகள், மருமகள் இவரின் பேரப் பிள்ளைகள் உட்பட, பலரும் படிப்பு, பணிகள் என்பதில் சுறுசுறுப்பாக இருப்பதாலும்,  அவர்களது மனநிலை (Mindset) பழைய கூட்டுக் குடும்ப  நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு, வேலையில்லாது எப்போதும்  வீட்டுக்குள் இருந்த காரணத்தால், அப்போது நெருக்கம் இருந்திருக்கலாம்; இப்போதுள்ள காலச் சூழ்நிலை, நேரம், கைத்தொலைபேசி யுகம் - இவைகளைக் கணக்கிட்டுக் கொண்டால் முதியவர்கள் சங்கடப்பட வேண்டியதில்லை.

ஆனால், அலட்சியத்தோடு செல்பவர்களாகும் இளைஞர்களை நாம்  ஏற்க முடியாது.

குறைந்த தேவைகளும், எவருடனும் இணைந்து சற்று  விட்டுக் கொடுத்த - தன்முனைப்பில்லாத வாழ்க்கை முறை நாம் எந்த வயதிற்கு ஏறினாலும் நமக்கு ஒருபோதும் ஏமாற்றத்தைத்  தராது. எதிர்பார்ப்பு எங்கே அதிகமோ ஏமாற்றமும் அங்கேதான் அதிகம், மறவாதீர்!

அண்மையில் முதுகுடி  மக்களுக்கான உலக நாளையொட்டி மூத்த மருத்துவ நண்பர் ஒருவர் அனுப்பிய முக்கிய எச்சரிக்கைத் தொகுப்புகள் சில.

அமெரிக்காவில் 51 விழுக்காடு முதுகுடிமக்கள் படிக்கட்டுகளில் ஏறும் போது விழுந்து விடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படி விழுந்து மரணமடைவோர்  எண்ணிக்கை கூடிய வண்ணமே உள்ளது.

60 ஆண்டுகளை கடந்த முதியவர்கள் 10 செயற்பாடுகளில் மிக்க கவனம் தேவை.

இவைகளை அறவே தவிர்ப்பது நல்லது.

1. படிக்கட்டு ஏறாதீர்கள்; அப்படி ஏறித்தான் தீர வேண்டுமெனில், பக்கத்தில் உள்ள சுவர் அல்லது பிடிப்புகளைப் பிடித்துக் கொண்டே ஏறுங்கள்.

2. உடனடியாக உங்கள் தலையைச் சுற்றாதீர்கள் - திருப்பாதீர்கள்; முதலில் உங்கள் முழு உடலையும் நின்று நிதானித்து பிறகு திருப்புங்கள். (Warm up your whole body)

3. கீழே உள்ள கட்டை விரலைத் தொடுவதற்காக உடலை வளைக்காதீர்கள். மேலே சொன்னபடி - அதற்கு முன் உங்கள் முழு உடலை நிதானித்துக் கொள்ளுங்கள்.

4. உங்கள் கால்சட்டைகளை (Pants)  காலில் மாட்டிக் கொள்ள முயலும்போது,  நின்று கொண்டு போடா மல், பக்கத்தில் அமர்ந்த 
- உட்கார்ந்த நிலையில் போடுங்கள். அதுவே பாதுகாப்பானது. தடுக்கி கீழே விழுந்து விடாமல் அம்முறை நம்மை 'தடுத்தாட் 
கொள்ளும்.'

5. மல்லாந்து படுத்துள்ள நிலையில், முகம் மேலே பார்க்கும் நிலையில் உடனே (திடீரென்று) எழுந் திருக்காதீர்கள். 
மெதுவாக ஒருபுறம் திரும்பி - இடதுபுறம் அல்லது வலதுபுறம் உடலைத் திருப்பி பிறகு எழுந்திருக்கப் பழகுங்கள்.

6. உடற்பயிற்சிக்கு முன் உங்கள் உடலைத் திருப்பி வளைக்காதீர்கள் - உடலை நின்று நிதானித்து கொண்ட பின்பே திருப்பிட முயலுங்கள்.

7. பின் பக்கமாக நடக்க முயலாதீர்கள். பின்பக்கம் விழுந்தால் அதனால் ஏற்படும் அடியும், காயமும் மிகப் பெரியவை ஆகலாம்; மறவாதீர்!

8.  மிகவும் கனமான பொருள்கள் - பெட்டி சாமான்களை தூக்கிட அப்படியே இடுப்பை வளைக்காதீர்கள். முதலில் உங்கள் 
முழங்கால்களை வளைத்து, பாதி அமர்ந்தது போன்ற நிலையில் அவைகளைத் தூக்கிடுங்கள்.

9. படுக்கையிலிருந்து தடால் என்று வேகமாக எழுந்து விடாதீர்கள். சில நிமிடங்கள் அமர்ந்த பிறகு, மெதுவாக எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

10.  மலங்கழிக்கும்போது அதிகமாக 'முக்கி' முயற்சி செய்யாதீர்கள்; அது இயல்பாக வருகிற போது வரட்டும். அதுவே உங்களை ஒரு
நேரத்தில் கதவைத் தட்டி அழைக்கும்; கவலைப்படாதீர்கள்.

கவனிக்க: அருள்கூர்ந்து இந்த வாழ்வியல் கட்டுரையை உங்களின்  மூத்தகுடி முதிய நண்பர்களுக்கும் அனுப்பிடுங்கள் அல்லது விவாதத்தில்  பேசு பொருளாக கவனஞ் செலுத்துங்கள்!

நாம் எவ்வளவு  காலம் வாழுகிறோம் என்பதைவிட, பிறருக்குத் தொந்தரவு, தொல்லை தராத 'சுதந்திர வாழ்வு' வாழுவதே முக்கியம்! அப்போதுதான்  நம்மீதும் எவருக்கும் சலிப்போ, வெறுப்போ, சங்கடமோ ஏற்படாது - இல்லையா?

படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.4.18

Astrology: ஜோதிடம்: 6-4-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 6-4-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் திருமதி  ஐஸ்வர்யா ராய் பச்சன். முன்னாள் உலக அழகி பட்டத்தை வென்றவரும் இன்னாள் திரைப்பட நடிகையும் ஆவார்
பிறந்த தேதி 1-11-1973 நேரம் காலை 7;20 மணி ஊர்: மங்களூர் கர்நாடகா

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (13-4-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger ARAVINDHARAJ said...
Name:Aishwarya Rai
Date of Birth:01-Nov-1973
Time of Birth:6:30:AM
Place of Birth:Mangalore,Karnataka.
Occupation:Actress,model.
Friday, April 06, 2018 7:20:00 AM 
----------------------------------------------
2
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகி: ஐஸ்வர்ய ராய் பச்சன்
பிறந்த நாள்: 01/11/1973 @ 07.20 மணி
பிறந்த ஊர்: மங்களூர், கர்னாடகா
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, April 06, 2018 9:07:00 AM
----------------------------------------------
3
Blogger Suresh said...
Name: Aishwarya Rai Bachchan
Date of Birth: Thursday, November 01, 1973
Time of Birth: 07:20:00
Place of Birth: Mangalore
Longitude: 74 E 51
Latitude: 12 N 54
Time Zone: 5.5
Friday, April 06, 2018 9:08:00 AM 
-------------------------------------------------
4
Blogger angr said...
முன்னாள் உலக அழகியும் ,இந்நாள் நடிகையுமான திருமதி ஐஸ்வர்ராய் ஜாதஹம்
Friday, April 06, 2018 9:13:00 AM
------------------------------------------
5
Blogger anand tamil said...
ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1, 1973) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.
Friday, April 06, 2018 9:47:00 AM
--------------------------------------------------
6
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரப்புதிரில் இடம்பெற்ற ஜாதகம், 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களுடையது.
எஸ். பழனிச்சாமி
Friday, April 06, 2018 10:27:00 AM
-------------------------------------------------
7
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் உலக அழகி பட்டம் வென்ற திருமதி ஐஸ்வர்யாராய் பச்சன் ஆவார். இவர் ஒரு மாடல் அழகி மற்றும் பல மொழிகளில் நடித்த நடிகையும் ஆவார். இவர் பிறந்தது 01/11/1973 காலை சுமார் 7:20 மணியளவில்.
Friday, April 06, 2018 10:51:00 AM
----------------------------------------------------
8
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 6-4-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் உலக அழகியும் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆவார். பிறந்த தேதி நவம்பர் 1, 1973. மங்களூரில் பிறந்தவர்.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Friday, April 06, 2018 11:02:00 AM
-------------------------------------------------
9
Blogger kmr.krishnan said...
ஜாதகி புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்ய ராய். பிறந்த தேதி 1 நவம்பர் 1973. பிறந்த இடம் மங்களூரு; காலை 7 மணி 20 நிமிடம் போல.
Friday, April 06, 2018 11:30:00 AM
--------------------------------------------
10
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 6-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
பிரபல இந்திய நடிகையும், உலக அழகிப் பட்டத்தை வென்றவருமான‌
"பத்மஸ்ரீ"திருமதி. ஐஸ்வர்யா ராய் பச்சன்.
பிறப்பு : 1 நவம்பர் 1973
நேரம் ; காலை 7 மணி 10 நிமிடம்.
இடம் : மங்களூர், கர்னாடகா.
Friday, April 06, 2018 11:58:00 AM
------------------------------------------------
11
Blogger bg said...
Aishwarya Rai born on Nov 01 1973 in Mangalore.
Friday, April 06, 2018 1:15:00 PM 
--------------------------------------------
12
Blogger ponnusamy gowda said...
AISHWARYA SRI NOV1 1973.
Friday, April 06, 2018 2:24:00 PM 
-------------------------------------------
13
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர் திருமதி ஐஸ்வர்யா ராய் அவர்கள்
பிறந்த தேதி 1 -11 -1973
நேரம் காலை 7 20
இடம் மங்களூர்
நன்றி
Friday, April 06, 2018 2:30:00 PM
------------------------------------------------
14
Blogger Jothida Ratna Paartha Sarathi Astrology said...
Hi sir 
please find below my finding, 
Name: Aishwarya Rai Bachchan
Date of Birth: Thursday, November 01, 1973
Time of Birth: 07:20:00
Place of Birth: Mangalore
Longitude: 74 E 51
Latitude: 12 N 54
Friday, April 06, 2018 4:04:00 PM 
----------------------------------------------
15
Blogger Muthu said...
Miss.World. Actor. Aishwarya Rai Bachchan. D.o.B. 01.Nov.1973. 7.00 am. Mangalore.
Friday, April 06, 2018 4:20:00 PM 
---------------------------------------------------
16
Blogger Maheswari Bala said...
Name: Aishwarya Rai Bachchan
Date of Birth: Thursday, November 01, 1973
Time of Birth: 07:20:00
Place of Birth: Mangalore
Longitude: 74 E 51
Latitude: 12 N 54
Friday, April 06, 2018 6:35:00 PM 
--------------------------------------------------
17
Blogger thozhar pandian said...
நவம்பர் 1 1973 பிறந்த நடிகை திருமதி ஐஸ்வர்யா இராய் பச்சன் அவர்கள்
Friday, April 06, 2018 9:54:00 PM
------------------------------------------------
18
Blogger RAMVIDVISHAL said...
Aishwarya Roy 
DOB 01-11-1973
Saturday, April 07, 2018 12:45:00 AM 
--------------------------------------------------
19
Blogger Rajam Anand said...
Dear sir,
The answer to the quiz Aishwariya Rai who was born on 1st of November 1973 in Mangalore. 
Kind regards
Rajam Anand
Saturday, April 07, 2018 3:29:00 AM
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!