மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.4.18

வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!


வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!

வேப்பம் பூ என்னும் அரிய மருந்து!

பங்குனி_அதிசயம்..!!

பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சாமி.. இருக்கு.

வியாதியே இல்லாத ஒரு வரம் கிடைச்சா எப்படி இருக்கும்...?  நடக்கிறதை பேசுங்கள் சார்... வெட்டியாகப் பேச நேரமில்லை ... யூஸ்புல்லா இருந்தா கேட்கலாம்... என்பீர்கள் ... சரிதான்..

பரம ஏழையிடம் போய் கேட்டுப் பாருங்கள்... பணத்தோட அருமை தெரியும்...
பணத்த என்ன பண்றதுன்னே தெரியாத பணக்காரன்கிட்ட கேட்டுப் பாருங்கள்... ஆரோக்கியத்தோட விலை தெரியும்... னு ஒரு பேச்சு வழக்கு உண்டு... ரொம்பவும் எதார்த்தமான உண்மை ....

ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் அதே நேரத்தில் தேவையான பணத்தையும் சம்பாதிக்க தெரிந்தவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்... என்பதை வியாதியால் உடல் கெட்டுப் போன பிறகே பெரும்பாலோர் உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டு , அதற்குப் பிறகு தேட ஆரம்பிப்பது தெரிந்த கதை...

எல்லாம் சரி... விஷயத்துக்கு வாங்க... சார்... என்கிற  உங்கள் ஆதங்கம் புரிகிறது எனக்கு..

ஆரோக்கியத்துக்கான வழிகள் ..என்று நம்ம பெரியவங்க சொல்லி வச்சுட்டு போயிருக்கறதுல , குறிப்பா இந்த பங்குனி மாதத்து அதிசயத்தை சொல்லத்தான் வந்தேன்...

வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...

இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை   சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..

 பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்!
நகரங்களில் இருப்பவர்கள், தமிழ் மருந்துக் கடைகளில் வேப்பம் பூ கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம்!

இந்த வேப்பம்பூ ,  ஒரிஜினல் மலைத்தேன்  , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால்  போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான்  இதன் விஷேஷமே..

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி...என்பதெல்லாம் தாண்டி "சுகரு "க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம் ..

எப்படி சாப்பிடலாம் ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவையென்றால் ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..

இல்லையென்றால் பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கிறது. படித்துப் பாருங்கள்! எப்படியாவது உட்கொள்ளுங்கள் சாமிகளா!.

நம் பெரியவர்கள் இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம்  பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க நண்பர்களே!

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..சரிதானே?
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. ரசத்தில் போட்டுச் சாப்பிடுவோம். மணத்தக்காளி வத்தலுடன் இதையும் வறுத்துப் பொடி செய்து சாதம் கலந்து சாப்பிடுவோம். எங்க வீட்டைச் சுற்றி இரண்டு வேப்ப மரங்கள்!

    ReplyDelete
  2. Good morning sir very useful tips for healthy life thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள பதிவு.தற்போது இதை கிராமங்களில் கூட யாரும் பயன்படுத்துவதில்லை.இதன்மருத்துவ குணம் பற்றிய நினைவூட்டலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    வேம்பு கசக்குமே என்போரும்
    உண்டால் கிடைக்கும் ஆரோக்கியம்
    பற்றிய அறியத்தக்க நல்லதொரு கட்டுரை! சபாஷ் வாத்தியார்!
    நன்றி ஐயா!

    ReplyDelete
  5. //////Blogger ஸ்ரீராம். said...
    ரசத்தில் போட்டுச் சாப்பிடுவோம். மணத்தக்காளி வத்தலுடன் இதையும் வறுத்துப் பொடி செய்து சாதம் கலந்து சாப்பிடுவோம். எங்க வீட்டைச் சுற்றி இரண்டு வேப்ப மரங்கள்!/////

    ஆஹா....கேட்கவே நன்றாக இருக்கிறது. நன்றி ஸ்ரீராம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful tips for healthy life thanks sir vazhga valamudan//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  7. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள பதிவு.தற்போது இதை கிராமங்களில் கூட யாரும் பயன்படுத்துவதில்லை.இதன்மருத்துவ குணம் பற்றிய நினைவூட்டலுக்கு நன்றி./////

    உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    வேம்பு கசக்குமே என்போரும்
    உண்டால் கிடைக்கும் ஆரோக்கியம்
    பற்றிய அறியத்தக்க நல்லதொரு கட்டுரை! சபாஷ் வாத்தியார்!
    நன்றி ஐயா!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com