மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.20

எது உண்மையான பக்தி?

எது உண்மையான பக்தி?

*ஒரு குட்டிக்கதை!*

மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும் ?

ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார்.

செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.

பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர்
மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி
நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்" என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.

அவர் 'தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’
என்று கேட்பார்.

அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்”என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு செல்கிறார்.

பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.

அதற்கு அந்தச் செல்வந்தர் *“தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”* என்று கேட்க, நாரதரும், நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.

அதற்கு அந்த செல்வந்தர் *“அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?”* என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.

அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது.

ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, *“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?”* என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார்.

கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.

இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன்,நீயே சரணம் என்று
பற்றுவதே ”உண்மையான பக்தி” .

இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று
பதிலளித்தார் நாராயணன்.

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது
மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ*… அது போல், கடவுளுடன்
நமது மனமும் கலந்துவிட வேண்டும்.

நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும்.

அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம் என்று வந்தால் அது *வியாபாரமாகிவிடும்.*

ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால்
வியாபாரமாகி விடும்.

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் *பக்தி* என்று பெயர்.
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.3.20

மாணிக்கவாசகர் என்னும் முதன்மை சிவபக்தர்!!!!


மாணிக்கவாசகர் என்னும் முதன்மை சிவபக்தர்!!!!

🌺🌺#மாணிக்கவாசகர்🌺🌺

மாணிக்கவாசகர் சிவபெருமானை நோக்கி #பத்துப்_பத்தாக திருவாசகத்தில் பாடுகிறார்.

அவை:

💠 பிரிவால் வருந்திய தலைவியின் தாய், அது குறித்து தோழியிடம் வினவுதல் போன்ற செய்திகள் அமைந்த பாடல்கள்

#அன்னைப்_பத்து

💠 தலைவி, குயிலை அழைத்து தலைவனிடம் தூது அனுப்பும் விதமாக, குயிலிடம் கூறுவது போன்ற பாவனையில் அமைந்த

பாடல்கள் #குயில்_பத்து

💠 சிவானுபவத்தை அனுபவித்த ஜீவன், முழுவதுமாக அதனை அனுபவிக்க ""யான் இன்னும் செத்திலனே!"" என இரங்கும் பாவத்தில் பாடியது

#செத்திலாப்_பத்து

💠 வேதநாயகனிடம் சரணாகதி புகும் கருத்தை தெரிவித்து பாடியருளியது

#அடைக்கலப்_பத்து

💠 கயிலைவாசனிடம் அருளைப் பெற்றிட ஆசைப்பட்டதை அறிவித்து பாடியது

#ஆசைப்_பத்து

💠 ஒப்பற்றவனின் அளப்பரிய பெருமையை வியந்து தனக்கு அருள்செய்த கருணையை வியந்து பாடியது

#அதிசயப்_பத்து

 💠 ஈசனுடன் இரண்டறக் கலக்கும் நாள் என்று கொலோ? என ஏங்கும் பாவனையில் அமைந்திருப்பது

 #புணர்ச்சிப்_பத்து

💠 "நான் பற்றிலேன்! இனி வாழாமையை வேண்டினேன்" என்ற பாவனையில் பாடியது

#வாழாப்_பத்து

💠 "இப்பிறப்பை விட்டு உன் திருவடி சேர்வதற்கு அன்பு கொண்டழைத்தால் என்ன?" என வினவி, ஆதரித்து அருள  விண்ணப்பித்த பாடல்கள்

#அருட்பத்து

💠 தில்லையில் மணிவாசகர் கண்ட ஆனந்தக்கூத்தை அறிவித்து பாடியருளிய பாடல்கள்

#கண்ட_பத்து

💠 எப்போதும் சிவானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திட பாடி அருளியது

#பிரார்த்தனைப்_பத்து

💠 ஆத்மநிவேதனம் செய்தலாகிய அனைத்தையும் ஈசனிடம் ஒப்படைக்கும் பாவனையில் பாடியது

#குழைத்த_பத்து

💠 சிவானந்தம் மேலிட்ட நிலையை அறிவித்த பாடல்களாக அமைந்தவை

#உயிருண்ணிப்_பத்து

💠 சிவநெறியைச் சேராத எதனைக் கண்டாலும் அஞ்சும் நிலையை உரைப்பது

#அச்சப்_பத்து

💠 சிவனையும் சைவநெறியையும் சிக்கெனப் பிடித்த செய்தியை உரைப்பது

#பிடித்த_பத்து

💠 அனுபவ இடையீடு இல்லாமல் இன்பத்தில் இருத்திய ஈசனை புகழும் பாடல்கள்

#குலாப்_பத்து

💠 சிவானந்த மேலிட்டை சொல்லத் தெரியாது விம்மும் நிலையை உரைப்பது

#அற்புதப்_பத்து

💠 நீலகண்டனின் திருவடி தமது சென்னியில் (தலையில்) இருக்கும் சிறப்பை கூறுவது

#சென்னிப்_பத்து

💠 அடியார்களின் அழைத்துக் கொண்டு சிவபெருமான் உடைய திருவடியை நோக்கி பயணிக்கும் பாவணையில் பாடியருளியது

#யாத்திரைப்_பத்து

சிவ சிவ

#எம்பெருமானுக்கு_சமர்ப்பணம்
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.3.20

Astrology: Quiz: புதிர்: மோசடி வழக்கில் சிக்கி அவதிப்பட்ட அன்பரின் ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: மோசடி வழக்கில் சிக்கி அவதிப்பட்ட அன்பரின் ஜாதகம்!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ரேவதி நட்சத்திரம். தான் வேலை பார்த்த அலுவலகத்தில் மோசடி வழக்கில் சிக்கி வேலையை இழந்ததோடு கெளரவம் மரியாதை என்று அனைத்தையும் இழந்து, வழக்கில் சிக்கி அவதிப்பட்டார் அன்பர். பிறகு ஜாமீனில் வெளியேவந்து வழக்கை கீழ் / மேல் நீதிமன்றங்களில் சந்தித்து இறுதியில்  பூரண விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார்.

இப்போது இரண்டு கேள்விகள்:
1. அன்பர் வழக்கில் சிக்கியதற்கான காரணம் என்ன?
2. அதேபோல் போராடி விடுதலை பெற்று வெளியே வந்ததற்காக காரணம் என்ன?

ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!
சரியான விடை 29-3-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.3.20

நீங்களும் நானும் ஆக்ஸிஜனும்!

நீங்களும் நானும் ஆக்ஸிஜனும்!

"பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்...?*

*ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்...?*

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை'னு கேக்கறீங்களா...?

காரணம் இருக்கு... அதை கடைசியா சொல்றேன்... இப்ப பதில் சொல்லுங்க... 

"இதென்ன கேள்வி...? எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்...!" என்கிறீர்களா...?

ஓகே... நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்...?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை... என்ன... எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது... பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை...' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்...

இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூலக்கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது...
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும்ம்'ன்னு இருட்டா கருப்பா ஆயிடும்.  மேலும் இப்போது பார்ப்பதை போல அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம், குவிக்க பட்ட நிலையில் கிடைக்கும். (சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க, இன்னும் விடியலை போல'னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும்... அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கியப் பிணைப்பு ஆக்சிஜன் தான்.

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும். எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன். அதாவது வாயு. அதுவும் அது எப்படி பட்ட வாயு...? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன். எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவியாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள்... நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல... சூரியனில் உள்ள புறஊதாவை ஓசோன் (O 3) தான் வடிகட்டி அனுப்புகிறது. அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்கபடாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிசமான அளவில் குறைந்துவிடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும்...!  (ஹலோ நான் சொல்றது கேக்குதா...? ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்கபடுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம்.. ஓடும் கார்.. பைக்.. எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும். (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான். அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக் கொள்ளும்...!

இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி... ஐந்தே ஐந்து நொடி...  பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?

நிச்சயமாக முடியாது தானே...?
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்...? 

அப்படிப்பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி செய்ய முடியாத ஆக்சிஜனை ஒரு மரத்தால் உற்பத்தி செய்ய முடியும்...!

எனவே

*"மரம் வளர்ப்போம்...! ஆக்சிஜன் பெருக்குவோம்...!"*

நன்றி:tamil.pratilipi.com
------------------------------------------
படித்ததில் பிடித்த பதிவு
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.20

சீட் பெல்ட்டின் முக்கியத்துவம்!!!!

சீட் பெல்ட்டின் முக்கியத்துவம்!!!!

மருத்துவர் இளங்கோவன் 30 ஆண்டுகள் கால நண்பர். தர்மபுரிக்கு முதன் முதலாக வந்த காலத்திலிருந்து, நன்மையிலும் தீமையிலும் பங்கேற்றவர். தே.மு.தி.கவின் மாநில அவைத்தலைவராக இருக்கிறார்.

ஒரு நாள் (26.11.2019) அதிகாலை ஒரு மணி அளவில், சென்னையை நோக்கி அவரும், அவருடைய நண்பர் மூளை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர். சங்கரும் இன்னோவா காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஓட்டுனர் காரை ஓட்டிக் கொண்டிருக்க, முன் இருக்கையில் மருத்துவர் சங்கர் அமர்ந்திருந்தார். நடுவில் இருக்கும் இருக்கையில் மருத்துவர் இளங்கோவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். 

அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருக்கும் சுங்கச்சாவடி முன்பாக நிதானமான போது, பின்னால் வேகமாக வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று காரின் பின்புறத்தில் இடித்தது. இடித்த வேகத்தில் படித்துக்கொண்டிருந்த இளங்கோவன் புரண்டு விழுந்தார். அவர் உடனடியாக எழுந்து, வண்டிக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகளைப் பார்த்தார். லாரி ஓட்டுனரிடம் சண்டையிட்டது மட்டுமல்லாமல், இழப்பீடு குறித்துப் பேசி காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

மீண்டும் இன்னோவா வாகனத்திலேயே சென்னையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வண்டி புறப்பட்டவுடன் இளங்கோவன் "தலை கொஞ்சம்  வலிக்கிறது. சிடி ஸ்கேன் செய்து பார்த்து விடலாமா?" என்று கேட்டார்.

மருத்துவர் சங்கர் 'சரி' என்றுச் சொல்லி சிறிதுத் தொலைவில் இருந்த சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இளங்கோவன் காரிலிருந்து இறங்கி சிடி ஸ்கேன் அறைக்கு நடந்து  சென்றார்.

சிடி ஸ்கேனில் மண்டைக்குள், மூளையைச் சுற்றி சிறிது ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது. உடனே மருத்துவர் சங்கர் சென்னையில் இருக்கும் அவருக்குத் தெரிந்த மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரைத் தொடர்பு கொண்டார். அவர் உடனடியாக நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டுவரச் சொன்னார்.

அப்பொழுது இளங்கோவனுக்கு கொஞ்சம் வாந்தி வந்தது. லேசாகத் தலைச் சுற்றுவது போல இருந்தது. எனவே ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். வண்டி போகப் போக இளங்கோவனுக்கு மயக்கம் அதிகமானது. மருத்துவமனையை நெருங்கும்போது முழு நினைவையும் இழந்தார். சிம்ஸ் மருத்துவமனையின் அவசரப் பிரிவின் வாயிலிலேயே காத்திருந்த மூளை நரம்பியல் மருத்துவர் சூரியபிரபு  நோயாளியை உடனடியாக அறுவை அரங்கத்துக்கு மாற்றச் செய்தார்.

எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் நேரடியாக கொண்டுச் செல்லப்பட்ட நோயாளிக்கு, தலையில் இருக்கும் மயிரை அகற்றுவது கூட அறுவை அரங்கிலேயே செய்யப்பட்டு உடனடியாக அறுவைச் சிகிச்சைத் தொடங்கியது. மண்டை ஓட்டிற்குள் மூளையைச் சுற்றி இருந்த 300 மில்லி ரத்தம் அகற்றப்பட்டது. ரத்தக் கசிவு காரணமாக இருந்த ரத்தக்குழாய் கண்டறியப்பட்டு ரத்தப்போக்கு நிறுத்தப்பட்டது. மிகப் பெரிய ஆபத்திலிருந்து மருத்துவர் இளங்கோவன் தப்பினார்.

அவருடன் மூளை, நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரான மருத்துவர் சங்கர் இல்லாமலிருந்தால், சவிதா மருத்துவமனையிலிருந்து சிம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஏதேனும் போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டிருந்தால், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சூரிய பிரபு அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வராமலிருந்தால், அறுவை அரங்கம் வேறு ஒரு அறுவை சிகிச்சை காரணமாக உடனடியாகக் கிடைக்காமல் இருந்தால்..... இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்திருந்தாலும் விளைவு விபரீதமாக இருந்திருக்கும். சரியான நேரத்தில் ஆபத்து கண்டறியப்பட்டு, மிகச் சரியான நேரத்தில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நடந்த விபத்து மிகச்சிறிய விபத்து. யாருக்கும் பெரிய வெளிக்காயம் கிடையாது. விபத்துக்குப் பின்னர் வாகனம் உடனடியாக ஒட்டப்பட்டது. இந்தச் சிறிய விபத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் அளவுக்கான காயத்தை ஏற்படுத்தியதன் காரணம், ஏற்பட்ட காயம் தலைக்காயம் என்பது தான்.

சீட் பெல்ட் அணிவது உயிர் காக்கும் என்பதற்காகத்தான் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.  வளர்ந்த நாடுகளில், காரில் இருக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயம். குழந்தையாக இருந்தால், குழந்தைக்கான சீட் பெல்ட் உள்ள இருக்கையில் இருக்க வைக்க வேண்டியது கட்டாயம். நம் நாட்டில் ஓட்டுனரும், ஓட்டுனருக்கு அருகில் இருப்பவரும் சீட் பெல்ட் அணிவது மட்டுமே கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இளங்கோவன் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்து இருந்தால் இந்த விபத்தினால் சிறு காயம் கூட ஏற்பட்டிருக்காது.

அவர் சீட் பெல்ட் அணியாமல் படுத்து இருந்ததுதான் ஆபத்தை ஏற்படுத்தியது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கச் செயலாளராக இருந்த அறிவுச்செல்வன் இதேபோல பின்னிருக்கையில் படுத்திருந்த காரணத்தினால்தான் சிறிய விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தர்மபுரி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆனந்தகுமார், பின் இருக்கையில் படுத்துக் கொண்டு பயணம் செய்த போது, இதேபோல பின்னால் வந்த வாகனம் மோதி, கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்து சில ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார்.

இந்தியச் சாலைகளில் பயணம் செய்வது உலகத்திலேயே மிக ஆபத்தானது. சாலை அமைப்புகள், குறியீடுகள் ஆகியவற்றில் மிகப்பெரிய தவறுகள் இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே முகநூலில் எழுதி இருக்கிறேன்.
ஆனால் சாலைப் பயணமில்லாமல் இந்த நூற்றாண்டில் வாழவே முடியாது.

முடிந்தவரை சாலைப் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற, கவனத்துடனும் பொறுமையுடனும் செல்வது அவசியம். எந்தச் சூழ்நிலையிலும் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். இரயில் பயணம், சாலைப் பயணத்தை ஒப்பிடும்போது பலமடங்கு பாதுகாப்பானது.

எல்லாவற்றையும்விட, வாகனத்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். படுத்துக்கொண்டு போவது எந்த விதத்திலும் பாதுகாப்பில்லாதது.

தலைக் காயங்கள் சில மணித்துளிகளிலேயே மரணம் தரக்கூடியவை. இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவது தற்கொலை முயற்சி என்றே கருதப்பட வேண்டும்.

https://www.youtube.com/watch?v=y3InF19dzlM
https://www.youtube.com/watch?v=s-ARAkG3oPE

ஆக்கம்:
மருத்துவர் இரா. செந்தில்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்
27.11.2019, இரவு. 9.00 மணி
-------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.3.20

மாமன்னன் மனுநீதிச் சோழன்


மாமன்னன் மனுநீதிச் சோழன்

வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின் அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின் ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை.

மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது.

அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரி பிரதானியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக் கண்டு கண்கள் கலங்க நின்றான்.

பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.

"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும். என்று முடிவு செய்தான்.

உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .

.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.

என்ன அதிசயம்? தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.

விண்ணிலிருந்து ஒரு அசரீரியின் குரல் கேட்டது. "சோழ மன்னா! தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.மன்னன் மனம் மகிழ்ந்து தன் மகனை அணைத்துக் கொண்டு உச்சி மோந்தான்.

நீதி என்று வரும்போது துலாக் கோல்போல் இருந்து நீதிவழங்கிய சோழ மன்னனை நம் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதல்லவா!

திருவாரூரில் மனுநீதி சோழன் கல் தேர், திருவாரூர் கோயிலின் இடது புறத்தில் வடக்கு மட வளாகத்தில் இருக்கும் கல் தேர் மண்டபம்.

'வாயில்லா ஜீவனின் உணர்வும், தன் மகனின் உயிருக்கு இணையானது' என்று மதித்தவன் மனுநீதி சோழன். அப்படிப்பட்ட அரசர்கள் ஆண்ட நாடு நம் தமிழகம்.✍
----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.3.20

அடங்கிப்போன உலகம்!!!!


அடங்கிப்போன உலகம்!!!!

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,
மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,
யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றது,
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன

தவளை கூட துள்ளி ஆடுகின்றது,
பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,
சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல,
மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை,
உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான்
விஞ்ஞானமென்றன்
என்னன்னெவோ உலக நியதி என்றான்

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்

ஓடினான், பறந்தான், உயர்ந்தான், முடிந்த மட்டும் சுற்றினான்,
கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது
அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ,
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்

அவன் வீட்டில் முடங்கி கிடக்க,
வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்.,
கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன்.
தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

அவமானத்திலும் வேதனையிலும்
கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து
கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்...
-----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.20

Astrology: Quiz: புதிர்: 20-3-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 20-3-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகதைக் கொடுத்து,
அன்பர் திருவோண நட்சத்திரக்காரர். படிக்கிறகாலத்தில் ஒழுங்காகப் படிக்கவுமில்லை, வேலையில் சேர்ந்தால் ஒரு இடத்திலும் ஒழுங்காக வேலை பார்க்கவுமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார். அத்துடன் தன்னுடைய பெற்றோர்களுக்கு
பாரமாக இருந்தார்.அவரின் இந்த நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: 14 வயதில் ராகு திசை ஆரம்பித்தது. லக்கினமும் ஏழாம் வீடும்
கேது மற்றும் ராகுவின் பிடியில் உள்ளது, அந்த அமைப்பு சின்ன வயதில் நிலையில்லாத வாழ்க்கையைத்தான் கொடுக்கும். ராகு திசை முடியும்
போது - அதாவது ஜாதகரின் 31வது வயது வரை நிலைமை அப்படித்தான் நீடித்தது.அதற்குப் பிறகு குரு மகா திசை துவங்கியவுடன் நிலைமை
தலை கீழாக மாறிவிட்டது.3 & 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் குரு பகவானின் சேர்க்கை நல்ல மாற்றங்களை உண்டாக்கியது.
அத்துடன் 2ல் இருக்கும் லக்கினாதிபதி சூரியனுடன் கூட்டாக உள்ள
2 & 11ம் அதிபதி புதன் ஜாதகனுக்கு நல்ல பணவரவையும் உண்டாக்கினார். ஜாதகன் மேன்மையுற்றான். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 4 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். (ஏன் எண்ணிக்கை குறைந்து விட்டது?)

அடுத்த வாரம் 27-3-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில்
1. சிம்ம லக்கினம், திருவோண நக்ஷத்திரம், மகர ராசி ஜாதகர் பொறுப்பு இல்லாமல் இருந்ததற்கான காரணங்கள்
2. ஜாதகரின் லக்கினத்திலேயே செவ்வாய் அமர்ந்து யார் சொல்லையும் கேளாமல் இருக்க செய்தார் மேலும் ராகு பார்வை
மற்றும் கேதுவின் லக்கினத்தில் அமர்ந்த நிலை இதனை அதிக படுத்தியது.
3. மாதா ஸ்தான காரகன் சுக்கிரன் நான்காம் இடத்திற்கு பனிரெண்டில் மறைந்து தாய் சொல்லையும் கேட்க மறுத்தார்,
மேலும் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்த பிதா காரக ஸ்தானத்தில் நீச சனி
தந்தை சொல்லையும் மதிக்காத நிலை செய்தார்.
4. இவரின் செவ்வாய் தசை முதல் ராகு தசை வரை அவ்வாறு இருக்க செய்தார், இவற்றின் 32 ஆம் வயதில் வந்த குரு
தசையில் இருந்து இவர் பொறுப்புடன் நடந்து கொள்ள ஆரம்பித்தார் ஏனென்றால் குருவின் நேரடி பார்வை நீச சனி மீதும்
பத்தாம் இடத்து அதிபதி சுக்கிரனுடன் அதன் சொந்த வீட்டில் வெற்றி ஸ்தானத்தில் உள்ளதாலும் அதை செய்தார், குரு
இவரின் லக்கினத்திற்கு சுப கிரகமாகும்.
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, March 20, 2020 10:51:00 AM
-----------------------------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 அக்டோபர் 1970 அன்று அதிகாலை 2 மணி 51 நிமிடம் 30 வினாடி போலப் பிறந்தவர் .பிறந்த இடம் சென்னை  என்று எடுத்துக்கொண்டேன்.
கல்விக்கான காரகன் புதன் உச்சம் பெற்று இருந்தாலும் சூரியனால் எரிக்கப்படது. நான் காம் இடத்திற்கான செவ்வாய்
லக்கினத்திலே இருந்தாலும் கேதுவின் பாதிப்பால் படிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருக்கும்.நான்காம் இடத்தின் அதிபதி கேது சூரியனுக்கு
இடையில் அகப்பட்டுக்கொண்டு படிப்பைக்கெடுத்தது.சந்திரன்
ஒன்றைத்தவிர மற்ற எல்லா கோள்களும் சுய வர்கத்தில் 4ம் அதற்குக்குறைவாகவும்.எனவே படிப்பில் கவனக்குறைவு.
எட்டாம் இடம் ராகுவாலும் சனியினாலும் சூழப்பட்டதால்
கவுரக்குறைவு ஏற்படும்படி நடக்கும் செயல்களில் ஈடுபாடு
ஏற்பட்டிருக்கும்.
அவருடைய 14 வயதில் ராகு தசா துவங்கிவிட்டது.32 வயதுவரை நீடித்தது.அந்தக்காலம் அவர் சரியான வேலையில்லாமலும் ,படிப்பைமுடிக்காமலும் சோம்பேறியாக இருந்திருப்பார்.
வேலைக்கான காரகன் சனைச் சரன் நீசம் பெற்று வக்கிரமும்
அடைந்ததால் வேலையில் நிலை பெறமுடியவில்லை.
குருதசாவில் எழுந்திருந்திருப்பார். சுயமான வியாபாரர்த்தில்
ஈடுபட்டு நன்கு முன்னேறியிருப்பார்.கஜகேசரி யோகம்
கைகொடுத்திருக்கும்.
Friday, March 20, 2020 4:27:00 PM
-----------------------------------------------------------
3
Blogger C Jeevanantham said...
Dear Sir,
4th lord is responsible for studies. 4th lord mars is along with kethu in lagna. since
4th lord is with kethu it is bad for studies. Also Saturn is neecham. Hence the native is
not showing interest in studies and rounding. Since lagna lord is in
2nd, he become responsible person after the age 30.
Thanking you sir.
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, March 20, 2020 6:16:00 PM
---------------------------------------------------------
4
Blogger csubramoniam said...
ஐயா,
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி இரண்டில் தனாதிபதி புதனுடன்
2 .கர்மகாரகன் சனி நீசம்
3 .ஜாதகரின் ராகு திசை வரை பயன் அளிக்கவில்லை (25 வயது வரை )
4 .பின் வந்த குரு திசை சனி புத்தியில் முப்பது வயதில் வெற்றிக்கான மூன்றாம் இடத்தில சுக்கிரனுடன் அமர்ந்த குரு சனி தன பார்வையால் சனீஸ்வரனை கட்டுப்படுத்தி வியாபாரத்தை அமைத்து கொடுத்திருக்கிறார்,
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, March 20, 2020 7:08:00 PM
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.3.20

Astrology: Quiz: புதிர்: தனது முப்பதாவது வயது வரை பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த அன்பரின் ஜாதகம்!!!!!


Astrology: Quiz: புதிர்: தனது முப்பதாவது வயது வரை பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த அன்பரின் ஜாதகம்!!!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். படிக்கிறகாலத்தில் ஒழுங்காகப் படிக்கவுமில்லை, வேலையில் சேர்ந்தால் ஒரு இடத்திலும் ஒழுங்காக வேலை பார்க்கவுமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார். அத்துடன் தன்னுடைய பெற்றோர்களுக்கு பாரமாக இருந்தார்.

அவரின் இந்த நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 22-3-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.3.20

Cinema ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே


தமிழ் நாட்டையே கலக்கிய பாடல்!
படம் 1957ல் வெளிவந்த முதலாளி திரைப்படம்

முதலாளி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நடிகை தேவிகாவின் முதல் தமிழ்ப் படமும் இதுதான்!!!!

வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு பணத்தை வாரி வழங்கிய படமாகும்!!!!

முதலாளி
இயக்கம் வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்பு எம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
கதை ஏ. கே. வெங்கட ராமானுஜம்
இசை கே. வி. மகாதேவன்
நடிப்பு எஸ். எஸ். ராஜேந்திரன்
டி. கே. ராமச்சந்திரன்
சிவசூரியன்
பக்கிரிசாமி
சி. கே. சௌந்தர்ராஜன்
தேவிகா
எம். என். ராஜம்
முத்துலட்சுமி
ராஜேஸ்வரி
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடு அக்டோபர் 22, 1957
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
படம் : முதலாளி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப்

பாடல் ஆக்கம்
கவி காமு ஷெரீப்:


=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.3.20

இரண்டணா - சுஜாதாவின் சிறுகதை.


இரண்டணா - சுஜாதாவின் சிறுகதை.

இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நௌ¤நௌ¤கள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்ததுக கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை துக்கிப் பார்ததால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்.

இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள் நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலநதைப்பழம் லேக்கா உருண்டை கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர் கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார்.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி அதனுடன் வருக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு பெடரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டு வாங்கலாம்.

ரங்கராஜாவில் 'காப்டன் மார்வல்' படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி நிலையத்தில் அவர் சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம் விகடன் பத்திரிகை நீல நிறத்தில் அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞசுவதுடன் ஒரு காத்தாடி தலையாரி பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்ன வெல்லர்ம இரண்டணாவில் வாங்கலாம்!.

அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன் சொல்கிறேன் பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய் வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத் அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள். ஈயம் பூசினது வாயகன்றதுநான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான் ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு வந்து "மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்" என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக் காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான்.

ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில் இருந்தார்கள் இநத அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார் சாதி வழக்கத்துககு மாறாக பலசரக்கு கடைவைத்திருநத ஒரே அய்யங்கார் சன்னமான குரலில் வரவேற்பார் எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார் நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும் கண்ணெதிரே, இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில் பனை விசிறிக் கொண்டு இருப்பார் அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை சீமெண்ணை எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்.

"என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா வேப்பெண்ணையா" என்றார்.

அப்போது தான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து "என்ன எண்ணை பாட்டி?".

"உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைதவிர எதாவது பயன்படுத்துவமா நல்லெண்ணைதாண்டா". மீண்டும் ஓடிப்போய் "ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா".

"நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா" நான் மீண்டும் ஓடி வந்து சொல்ல "ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா".

"நீ சொல்லவே இல்லையே பாட்டி" என்றேன் நியாயம் தானே "காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான் ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச் சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே கொட்டிடப் போறே" இந்த எச்சரிக்கைகளுக் கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல் வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது.

ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முட்டியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்து தான் அரையர் கடைக்கு போக முடியும் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது. மத்தளம் அவ்வப்போது உருமியது பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள் அவளை விட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக தூக்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம் வரைந்து அதில் பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூககு இறகு போர்த்திய போர்வை கருப்புத் துண்டு என்று பல வித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க "வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை, மனுசனை பாம்பாக்குவேன் பாம்மை மனசனாக்குவேன்" ஒரு கீரி ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கெர்ணடிருக்க மோடி மஸ்தான் என்னையே பார்த்து "பயப்படாத பக்கத்ல வந்து குந்து" என்று என்னை அழைத்தான் அந்த பரட்டை தலை சிறுமி சின்ன பல் வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்.

ஆழாக்கு எண்ணெயை மறந்தேன் முதல் வரிசையில்போய் உட்கார்ந்து கொண்டுவிடடேன் அவ்வப்போது மத்தளம் தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்.

"கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகிலல போட்டுப் பேன் பாம்பை எடுத்து ஆட்டுவேன்… இது என்ன?" என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்.

"ஒரணா" "என்னது ஒக்காளியா" என்று கேட்க சபையில் சிரிப்பு" நெருப்பில அரதம் வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாரும் பார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா இருப்பேன் மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன் தண்ணில நடப்பேன் நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?" என்று கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி"பாழும் வவுத்துக்காக!".

"நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷியாயிருச்சுன்னு ஒரணா ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப் புள்ளையை பந்தாடப் போக்ஷற்ன்" எல்லாரும் பலமா கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித் தான்.

நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கிய மானேன் "தகிரிய முள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க" என்று கேட்க ஒரு சிறுவன் முன்னால் வந்து நின்றான் அந்தப் பையனை கூப்பிட்டு அவன் முன் விரல்களை என்னவோ பண்ண அவன் சட்டென்று துங்கிப் போக அழுக்குத் துணடால் போர்த்திப் படுக்க வைத்தான் "யார் வூட்டுப் புள்ளையோ இது" என்றான் தரையில் ஒரு முகம் வரைந்தான் அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை வைத்தான் பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது.

த என்று அதை அதட்டினான் உள்ளுணர்வில் அஙகிருந்து விலக வேண்டும என்று தான் தோன்றியது ஆனால் கட்டிப்போட்டவன் போல ஆகிவிட்டேன சன்மத்துககு இந்த இடத்தை விட்டு விலகப் போவதில்லை கீரிப்பிள்ளை ஒன்றுக்குப் போனது அந்த பைஜாமா சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருநது கயிற்றுக்கு எவ்வி அதன் மேல லாவகமாக நடந்தாள் அதன் பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ பண்ணி அவளை சுற்றினான் இந்த நேரத்தில் எல்லாம் பையன் கண்மூடிப் படுத்திருந்தான் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. "யார் பெத்தபுள்ளையோ இதை எழுப்பவாணாமா?".

"வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா" என்று சொன்னபோது சபையோர் மெல்ல எழுநதிருக்க "ஏய்!" என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் "பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு வாங்காம போகமாட்ன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு" என்று கையில் அந்த பேனைக் கத்தியை எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான் படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது.

"இதான் உனக்காகும் ராத்தரி" அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கி ப்போய் நின்றோம் மௌமான சூழ்நிலையில் அவன் கத்தியைக் காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம வந்தான் நான் எனனிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட இல்லை உடுக்கை அடித்துக் கொண்டே சற்றி வந்தான் கீரி சுற்றிக் கொண்டு இருந்தது வித்தை எப்போது முடிந்தது ஞாபகமில்லை மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன் போல நடந்து வந்தேன் வீட்டின் அருகில் வந்த போது தான் நிஜ உலகத்து நிதர்சனங்கள் எனக்கு உரைக்க "எங்கே இரண்டணா" என்பது மட்டுமின்றி எங்கே கிண்ணி?.

"கிண்ணியையும் வைத்துவிட்டு வந்து விட்டேன பாட்டி சமயலறையிலிருநது குரல் கொடுத்தாள்" ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல வச்சுட்டு பாடம் படிக்கபோ" என்றள் மீண்டும தெருக் கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக் காரன் சாமக்கிரியைகளை கவர்ந்து கொண்டு சென்றிருக்க வேண்டும் விறிச் சோடியருந்தது தெரு போய் விட்டான்.

நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம் எதிரொலித்தது சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன் தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போட்டிருக்க மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது வித்தை காரன் அருகில் சென்க்ஷற்ன அந்தப் பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன் பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்ததுக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும் என்பது போல் "வா தம்பி" "நான் வந்து கீழ சித்திரை வீதில விததை பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டடங்க அந்த கிண்ணி என்னுது" "தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒரு கண்டிசன் "என்ன" எங்கூட வரியா வித்தை காட்ட லர்ல்குடி பிச்சாண்டார கோவில் இந்த பக்கம் குளித்தலை "அந்தப்பக்கம் புதுக்கோட்டை வரைக்கும் போகலாம்" என்றாள். பைஜமா சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்.

"ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா" என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன் "என் கிண்ணியை கொடு" " கொடுக்கறேன் கொடுக்கறேன்" அவன் என்னிடம அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப் போது நீட்டி நீட்டி கொடுப்பது போல் கொடுத்து கையை இழுத்து கொண்டான் நான் பெரிசாக அழ ஆரமபித்ததும் கொடுத்தான் "கிண்ணியை கொடுத்துடடு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ் அலகாபாத் கல்கத்தா "நான் வீட்டுக்கு திரும்பும் போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்" "வரல்ல? வரப்ப ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா" என்றாள் நான் ஓடி வந்து அவசரமாக என் உண்டியலை உடைத்து எட்டு காலணா சேர்த்து அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில் எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு கையால் புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழன்று சுழன்று ஆட... எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.20

உங்கள் வயது அறுபதை தாண்டிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!


உங்கள் வயது அறுபதை தாண்டிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!

60/65 வயதிற்கும் மேல் உள்ள ஆண்கள், பெண்களுக்கு, சில முக்கியமான டிப்ஸ்:-

1. கவலைப் படுவதால் எந்தப் பலனும் இல்லை என்பதால்- எதற்காகவும்,  யாருக்காகவும் கவலைப் பட வேண்டாம்.

2.வீட்டைத் தண்ணீர் கொண்டு  துடைக்கும்பொழுது. நடக்க வேண்டாம்.

3.ஸ்டூல்,நாற்காலி,மீது ஏறி பொருட்களை எடுப்பது, சுத்தம்செய்வது, துணிகளை காயப்போடுவது, ஆகியவற்றை    தவிர்க்கவும்

4.கார் தனியாக ஓட்டவே கூடாது.கூட யாராவது கண்டிப்பாகக் கூட  இருக்க வேண்டும்!

5.மாத்திரைகளை வேளாவேளைக்கு தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

6.உங்களை எந்த விஷயம் சந்தோஷப்படுத்துதுதோ அதை யாருக்காகவும்,காம்ப்ரமைஸ் செய்துகொள்ள வேண்டாம்!!!!.

7.வங்கிக்கு அதிகப் பணம் எடுக்கச்சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம்.

8.வீட்டில் தனியாக இருக்கும்பொழுது அறிமுகமில்லாதோர் வந்தால் கவனமாக அச்சூழலைக் கையாள வேண்டும்.

9.படுக்கையறையிலும், டாய்லெட்டிலும் காலிங் பட்டன்  அவசியம்.அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும்.

10.சைக்கிள்,டூவீலர் ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

11.வாழும்வரைசந்தோஷம்.. அது அதிமுக்கியம்.

கடந்தகாலம்,எதிர்காலத்தைப்பற்றி......சிந்தனைகூடாது. நிகழ்காலம் உன்னதம். அதைமுழுமையாக வாழவேண்டும்.
வாழ்க வளமுடன்! நல்ல நலமுடன்! நல்வாழ்த்துக்கள்!
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.3.20

கரோனா இந்தியாவுக்கு செய்த நன்மைகள் :

கரோனா இந்தியாவுக்கு செய்த நன்மைகள் :

ராக்கட் வேகத்தில் பறந்த பங்காளி #சீனா பொருளாதாரத்தை அடிச்சு உதச்சு உட்கார வைத்து உள்ளது கரோனா 👌

29 வருஷத்தில் இல்லாத அளவு #கச்சா_எண்ணெய் விலை வீழ்ச்சி ,  பேரல் 31 டாலர். இந்தியாவுக்கு 10000 கோடி லாபம்.👍

CAA மாதிரி சில #போராட்டங்கள் தானாக அடங்கி போனது...😊

#இத்தாலி கொத்து கொத்தாக சாகிறார்கள், #அமெரிக்காவில் நடுங்கி உக்காந்து இருக்கிறார்கள் ..

மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியா மட்டும் #ஆன்மீகபூமினு கரோனா பயம் சுத்தமா இல்லை..💐

Yes bank கொள்ளையர்கள் வெளிநாடு தப்ப முடியவில்லை😊

மெக்கா மதினா , ரோம்  வரலாறு காணாத அளவுக்கு வெறிச்சோடி போனது.
ஆனால் இந்தியாவில் #கோவில்கள் நிரம்பி வழிகிறது.💐

#அசைவம் சாப்பிடும் ஊரெல்லாம் அலரிக்கிட்டு இருக்கு..😢
#சைவம் சாப்பிடும் இந்தியர்கள் எதையும் இழக்க வில்லைனு கெத்து வாழ்க்கை👍

கரோனா மோடியின் #நண்பன்,
So , கரோனா #வைரஸ் அல்ல.. 
அது 2020 ல வந்த இந்தியாவின் #தேவ_தூதன்..☺

பிகு :இந்தியா 2020 ல் வல்லரசு என்ற அப்துல்கலாம் #கருநாக்கு பளிச்சிடும் போல..💐
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.3.20

Astrology: Quiz: புதிர்: 13-3-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 13-3-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அம்மணியின் ஜாதகத்தைக் கொடுத்து, மூல நட்சத்திர ஜாதகி. திருமணமான ஆறு மாதங்களில் எந்தக் காரணமுமின்றி கணவனை விட்டுப் பிரிந்து போய் விட்டார்,
எத்தனையோ சிபாரிசுகள் வைத்தும் தன் பெற்றோர்களை விட்டு வந்து
தன் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். கணவனின் மனநிலைமையை எண்ணிப் பாருங்கள்! அந்தப் பெண்ணின்
நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி
அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: திருமண வாழ்விற்கு அமைப்பில்லாத ஜாதகம். ஏழாம் வீடு மொத்தமாகக் கெட்டுள்ளது, 7ம் அதிபதி புதன் லக்கினத்திற்கு 12ல் -
விரைய ஸ்தானத்தில் (House of Loss). அத்துடன் செவ்வாயின்
பார்வையுடன், லக்கினமும் சந்திர லக்கினமும் தனுசுதான். அந்த
வீட்டிற்கு 7ல் சனீஷ்வரனும் கேதுவும் இருக்கிறார்கள். அந்த
அமைப்பும் கெட்டுள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் லக்கினத்தில்.
ஆனால் ராகுவுடன் கூட்டணி. மேலும் சனியின் பார்வையுடன்.
அந்த அமைப்பும் கெட்டுள்ளது. ஜாதகிக்கு திருமண வாழ்வு மறுக்கப்
பெற்ற ஜாதகம். ஆகவே கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தவில்லை.
அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 11 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை
வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் 
எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 20-3-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger Gowda Ponnusamy said...
அன்புடன் வணக்கங்கள்!
ஜாதகி 31-10-1973 காலை 10 மணிக்கு பிறந்தவர்.தனுசு லக்கினம்.
லக்கினாதிபதி குரு நீச்சம். 2மிடம் கெட்டுள்ளது.
6 மற்றும் 8ம் அதிபதிகள் சுக்கிரனும் சந்திரனும் இணைந்து ராகு மாந்தியுடன் கூட்டாக அமர்ந்து லக்கினத்தை கெடுத்துள்ளனர்.
சனியும் கேதுவும் இணைந்து 7ல் அமர்ந்து 7மிடத்தையும் லக்கினத்தையும் கெடுத்துள்ளனர்.
7ம் அதிபதி சயன ஸ்தானமான 12ல் அமர்ந்ததுடன் செவ்வாயின் பார்வையும் உள்ளதால் 12மிடமும் கெட்டது.
திருமண யோகமற்ற ஜாதகம்
அன்புடன்
-பொன்னுசாமி.
Friday, March 13, 2020 12:07:00 PM
-------------------------------------------------------------
2
Blogger C Jeevanantham said...
ஐயா
சுக்கிரன் உடன் ராகு மற்றும் மாந்தி சேர்ந்து உள்ளது . 2 ஆம் அதிபதி சனி பகவான் உடன் கேது சேர்ந்து கெட்டு விட்டது . 7 ஆம் அதிபதி 12 இல் மறைந்து விட்டார். லக்கின அதிபதி யும் 2 இல் நீச்சம் ஆகி விட்டார் . எனவே அம்மணி
குடும்ப வாழ்க்கையை மறுத்து விட்டார்.
Thank you
C. Jeevanantham.
Friday, March 13, 2020 12:20:00 PM
-------------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 31 அக்டோபர் 1973 அன்று காலை 11 மணிக்குப்பிறந்தவர் பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்ட்டேன்.
லக்கினத்திலேயே ராகு: லக்கினத்திலேயே 6,8 அதிபர்கள்;லக்கினத்திலேயே மாந்தி. 7ம் இடத்திற்கான புதன் 12ல் மறைவு;7ம் இடத்தில் சனி கேதுவுடன்;வக்கிரம் அடைந்த சனி. சுக்ரன், களத்த்ரகாரகன் ராகுவால் பாதிக்கப்பட்டார்.மாந்தியால் பாதிக்கப்பட்டுள்ளார்;
7ம் அதிபன் புதன் வக்கிரம்.7ம் இடத்திற்கு 20 பரல் மட்டுமே.
நவாம்சத்தில் 6,8 அதிபர்கள் 7ம் இடத்தில்.
இந்தக்காரணங்களால் திருமணம் முறிந்தது
Friday, March 13, 2020 2:21:00 PM
-----------------------------------------------------
4
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிர் வந்து உள்ளது
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்
1. தனுசு லக்கினம் , தனுசு ராசி ஜாதகி கொண்ட விடாப்பிடியான பிரிவிற்கான காரணங்கள்
2. பொதுவாக திருமண வாழ்வை தீர்மானிப்பது இரண்டாம் இடம், ஒன்பதாம் இடம் மற்றும் ஏழாம் இடம் ஆகும்
3. இவரின் இரண்டாம் இடத்து அதிபதி சனி இரண்டிற்கு ஆறு மற்றும் சனி அமர்ந்த நிலையில் இருந்து எட்டு என்ற நிலையில் உள்ளார். இது நீண்ட திருமண பந்தத்திற்கு உகந்ததல்ல.
4. மேலும் இரண்டாம் இடத்தில் லக்கின அதிபதி குரு நீசமாக உள்ளார். லக்கினத்திலேயே அமர்ந்த மாந்தி குண கேட்டை கொடுத்தது மேலும் லக்கினத்தில் அமர்ந்த ராகு அதனை அதிக படுத்தியது
5. ஏழாம் இடத்து அதிபதி புதன் ஏழிற்கு ஆறில் மறைந்து நல்ல பலன்களை தர இயலவில்லை, மேலும் ஏழில் சனி மற்றும் கேது கெட்ட பலன்களையே தந்தது.
6. ஒன்பதாம் இடத்து அதிபதி சூரியன் செவ்வாயின் நேரடி பார்வையால் நல்ல பலன்களை தர இயலவில்லை
மேற்கூறிய காரணங்களினால் நீண்ட திருமண வாழ்வு ஜாதகிக்கு இல்லாமல் போனது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, March 13, 2020 2:39:00 PM
---------------------------------------------------------
5
Blogger அடியேன் யுவராஜ் said...
ஐயா வணக்கம்!
1>லக்னாதிபதி குரு 2ல் அமர்ந்து நீச்சம் குடும்பம் பாதிப்பு
2>2ஆம் அதிபதி சனி தன் வீட்டுக்கு 6ல் கேதுவுடன் சேர்க்கை
3>உபயோகமாக லக்னத்திற்கு 7ஆம் அதிபதி பாதகாதிபதி ஆகும் புதன் 12ல் அமர்ந்து சுகத்தை கெடுத்தது புதன் தன் வீட்டுக்கு 6ல்.
4>7ல் அமர்ந்த கிரகம் சனி மற்றும் கேது ஆகும். சனி லக்ன அசுபர் மற்றும் இயற்கை அசுபர் கேது இயற்கை அசுபர் 7ஆம் இடம் பாதிப்பு.
5>கலஸ்திரக் காரகனான சுக்கிரன் கேது சாரம் பெற்றுள்ளார்.
6>கணவன் காரகனான செவ்வாய் கேது சாரம் பெற்று ஆட்சி பலத்தில் உள்ளதால் கணவனை அமைத்துக் கொடுத்தார்
சனி கேதுவால் பிரிக்கப்பட்டது.
7>மாங்கல்ய ஸ்தானமான 8ஆம் அதிபதி லக்னத்தில் உள்ளதால் உண்டு
8>புதன் அமர்ந்த சாரம் தவிர அனைத்து கிரகங்களும் அசுபர் சாரம்.
9>திருமணத்திற்கு உண்டான 2ஆம் இடம் 7ஆம் இடம் 12ஆம் இடம் செவ்வாய் சுக்கிரன் பாதிப்பு.
10>பாக்யாதிபதியான சூரியன் நீச்சம்.
இப்படிக்கு
அடியேன் யுவராஜ்.
Friday, March 13, 2020 3:57:00 PM
-----------------------------------------------------------
6
Blogger Th.Shabarinaathan said...
ஒரு அற்புதமான ஜாதகம் இன்று. என்னைப் பொருத்தமட்டில் இதுப் போன்ற ஜாதகர்கள் இருக்கின்றார்களா என்று ஒரு ஐய்யமே. நான் ஜாதகம் பார்ப்பதில் அரைகுரைகூட இல்லை. வெறும் ஓரிரு பாடங்களை அதிலும் ஒரிரு விடயங்களை மட்டும் ஞாபகம் வைத்திருப்பவன். எனக்கு என்ன தேன்றுகின்றது இந்த ஜாதகத்தில் என்றால் லக்னத்தில் சந்திரனும்,
சுக்கிரனும், எப்போதும் உசிப்பி விடும் பாபி ராகுவும், மொத்தமாக வீட்டின் பலனை கெடுக்கும் மாந்தியும் உள்ளனர்.
முதலிரு கிரகங்களால் தோற்றத்தில் அழகும், நிறமும் சுந்தரமானவலாக இருப்பாள். இரண்டாம் அதிபதி 7 இல். உடன் ஞானகாரகன் கேது கூட்டனி. ஏழாம் அதிபன் புதன் 12‍ல் மறைந்து அந்த வீட்டின் அதிகாரத்தை மறைத்தான். அதை வழினடத்தும் முடவன் நவாம்சதிதில் ஆட்சிப் பெற்றதால் ராசியில் முழு பலத்துடன் செயல் பட்டு, ஜாதகிக்கு பாதி நன்மையும், பாதி கஷ்டமும் தரவல்லவன், ஆனால் உடன் கேது, எதயும் நல்லபடி நடக்கவிடாமல் காலை வாரி ஞானம் தருபவன். இரண்டாம் வீட்டின் மேல் சனியின் பார்வைப் பட்ட குரு. இந்த ஜாதகத்தில் யோககாரகன் சூரியன், நீசமாகி வாழ்வை பெரிய சந்தோஷ்மில்லாமலாக்கினான். சூரியன் கெட்டதானால் ஜாதகியின் பெற்றோர்கள் இவரை அடித்து வழற்காமலும், சொல்லிக்கொடுத்தும் வழற்க மாட்டார்கள், குறிப்பாக சூரியனான தந்தை. தாயாரின் பேச்சு பெரிதும்
செல்லுபடியாகாது. ஆட்சிபெற்ற செவ்வாய், பெண்ணிற்க்கு தனித்து நின்றாலும் ஆலுமையையும் உடன் சிரிய தைரியத்தையும், திமிரையும் கொடுத்திருப்பான். புதன் மறைந்திருப்பாதாலும், அமர்ந்தவீட்டினதிபதி செவவாய் ஆட்சியென்பதாலும், படிப்பில் அதிகபட்ஷ‌ம் ஏதாவது ஒரு டிகிறி. அதுவே அதிகம். அரிவு ஆட்சிபெற்ற செவ்வாயின் பலனாலும், கெட்டுப்போன சந்திரனாலும் எகப்பட்ட மனப் போராட்டமும், ஏகசிந்தனையுமிருக்கும். எகத்திற்கு என்னங்களை அசைப்போடுவார், செவ்வாய் பேசவும் வைப்பார்.
நவாம்சத்தில் 7‍ம் வீட்டில் எதிரும் புதிருமாய், சுக்கிரனும், பிரகஷ்பதியும். செட்டே ஆகாத துனைவனை இது ஏற்படுத்தும்.
இரண்டாம் திருமணம் செய்தால் மனம்புரிந்தவனான நல்ல துனைவனாகவும் வரலாம். நவாம்சத்தில் 10‍ல் புதனுடன் கூடிய மனோகாரகன், பண‌ம் சம்மந்தபட்ட‌, ஜீவனாம்சம், தொழில் சார்ந்த விஷயங்களில் மனதை உருத்தி அலைக்கழிக்கும்.அப்புறம் திசா புக்தி. சின்னவயதிலேயே சுக்கிர திசை. குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும். சுக்கிரனோடு ராகு வேரு. சொல்லவா வேண்டும். அனேகமாக சுக்கிரதிசையிலேயே திருமனம் செய்திருந்தால் (அதாவது 21 வயதுக்குல்) வாழ்க்கையின் கடைசி 20 ஆன்டுகள் மீண்டும் சுகமாக வாழ்வார். ஆனால் என் கருத்து இவர் சூரிய திசையிலே திருமணமானவர். அதான் கனவனை பிரிந்துவிட்டார். இல்லையென்றால் கனவனோடு ஈடுபாடு இல்லாமல், சண்டை சச்சரவோடுமட்டும் இருந்திருப்பார்.
எனைப் பொருத்த மட்டில் இத்தகைய ஜாதகர்கள் நடந்த நல்லதும், கெட்டதையும் அசைப் போட்டுக் கொண்டே இருப்பவர்கள். கறைப்பவர் கரைக்கவேண்டும். சொன்னால் இவர்களுக்கு புரியும். ஆனால் செவ்வாயினால் ஏதாவது ஒரே ஒரு விசயம் மட்டும் அறிவை ஆட் கொல்லும். அதை அறிந்து நிவர்த்தி செய்தாலேப் போதும். பிறட்ஷனை முடிந்துவிடும்.
எல்லோரும் கடவுலின் பிள்ளைகலென்றாலும், இவர்கள் முற்பிறவியின் வினைப்பயனாக எல்லாம் கொண்டுவந்தும்
நிம்மதியின்றி வாழ வேண்டியிருக்கும்.
சரி விஷயத்திற்கு வருவோம், எப்படி இருக்கிறது எனது கற்பனை. :)
Saturday, March 14, 2020 2:52:00 AM
-----------------------------------------------------
7
Blogger seethalrajan said...
வணக்கம் ஐயா! கொடுக்க பட்ட ஜாதகத்தில் லக்கின அதிபதி குரு நீச்சம். 7ல் சனி,கேது, களத்திர அதிபதி சுக்கிரன்,
குடும்ப அதிபதி சந்திரன் ராகுவால் பாதிப்பு, மேலும் 7,12 ம் இடம் பாதிப்பு உள்ளாயிருக்கு எனவே படுக்கை சுகம் இல்லை. 5ல் ஆட்சி பெற்ற செவ்வாய், காரகன் குரு பாதிப்பு. இவைகளால், பிரிவு ஏற்பட்டு உள்ளது. நன்றி.
Saturday, March 14, 2020 11:47:00 AM
---------------------------------------------------------
8
Blogger csubramoniam said...
ஐயா ,
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி குரு இரண்டில் நீசம் அது குடும்ப ஸ்தானத்திற்கு உரிய வீடு
2.லக்கினத்தில் 6 ,8 ஆம் அதிபதிகளின் சேர்க்கை மாந்தியுடன்,
3.௩. எழில் சனி கேது
ஏழாம் அதிபதி புதன் பனிரெண்டில் மறைவு எல்லா கிரகங்களும் திருமணத்திற்கு எதிராகவே அமைத்துள்ளன ஆகவே
ஜாதகிக்கு மன வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Saturday, March 14, 2020 12:35:00 PM
-----------------------------------------------------------
9
Blogger Ram Venkat said...
தனுசு லக்கினம், தனுசு ராசி ஜாதகி.
அவர் திருமணமான ஆறு மாதங்களில் எந்தக் காரணமுமின்றி கணவனை விட்டுப் பிரிந்து போய் விட்டார்,அந்தப் பெண்ணின் நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்கினாதிபதியும், ராசியாதிபதியுமான குரு பகவான் 2மிடத்தில் நீசமடைந்துள்ளார்.
2) குடும்பாதிபதி சனி 2மிடத்திற்கு 6மிடமான களத்திரத்தில் அமர்ந்து கேதுவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.
3)களத்திராதிபதி புதனோ 12மிடமான விருச்சிகத்தில் மறைந்து கத்திரியின் பிடியுலுள்ளார்.
4) பாக்கியாதிபதி சூரியனும் நீசமடைந்துள்ளார்.
5) லக்கினத்தில் மாந்தி +ராகு+சந்திரன்+ 6ம் அதிபதி சுக்கிரன் கூட்டணியில் ஜாதகியின் பிடிவாதத்தன்மை அதிகமாகி விட்டு கொடுக்கும் மனநிலை இல்லாமற் போனது.
மேறகண்ட கிரக நிலை காரணமாக, ஜாதகி திருமணமாகி ஆறே மாதத்தில் எக்காரணமுமின்றி தன் கணவனை விட்டு
பிரிந்து, பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
Saturday, March 14, 2020 4:38:00 PM
---------------------------------------------------------------
10
Blogger sundari said...
sir, 7th house has sani and kethu puthan in 12th house lagana is having 8th house moon moon got sani vision sun neecham lagana is having mandhi that is why
Saturday, March 14, 2020 5:20:00 PM
-----------------------------------------------------
11
Blogger பூங்குன்றன் said...
1. 2ம் அதிபதி 2க்கு ஆறில் மறைவு
2. 2ல் நீச கிரகம்
3. 7ல் சனி கேது 'பற்றற்ற நிலை'
4. அஷ்டக சஷ்டக அதிபதிகளின் 7ம் பார்வை
Saturday, March 14, 2020 9:43:00 PM
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.3.20

Astrology: Quiz: புதிர்: திருமணமான ஆறு மாதங்களில் பிரிந்துபோன மனைவியின் ஜாதகம்!!!

Astrology: Quiz: புதிர்: திருமணமான ஆறு மாதங்களில் பிரிந்துபோன மனைவியின் ஜாதகம்!!!

ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. மூல நட்சத்திரம். திருமணமான ஆறு மாதங்களில் எந்தக் காரணமுமின்றி கணவனை விட்டுப் பிரிந்து போய் விட்டார், எத்தனையோ சிபாரிசுகள் வைத்தும் தன் பெற்றோர்களை விட்டு வந்து தன் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். கணவனின் மனநிலைமையை எண்ணிப் பாருங்கள்!

அந்தப் பெண்ணின் நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 15-3-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.3.20

எம்.எஸ்.விக்கும் சிவாஜிக்கும் இடையே நிகழ்ந்த சவால்!


எம்.எஸ்.விக்கும் சிவாஜிக்கும் இடையே நிகழ்ந்த சவால்!

ஒரு நாள் சிவாஜி கணேசனிடமிருந்து எம்.எஸ்.விக்கு டெலிபோன் வந்தது.

சீண்டலான குரலில், ’உன்னை ‘மெல்லிசை மன்னன்’னு எல்லாரும் சொல்றாங்க! மியூசிக்கில் அத்தனை பெரிய ஆளா நீ? ஹாலிவுட்ல கிளிஃப் ரிச்சர்ட்னு ஒரு பாடகர்.. நீ கேள்விப்பட்டிருக்க மாட்டே!’ என்று சிவாஜி சொல்ல, ’இப்ப அவனுக்கு என்ன?’ என்று எம்.எஸ்.வி. கேட்டாராம்.

’அவன் ஸ்லோ ஃபேஸ்ல ஒரு மெலடி பாடி இருக்கான். என்ன பிரமாதமா பாடி இருக்கான் தெரியுமா? அது மாதிரி ஒரு பாட்டு உன்னால டியூன் போட முடியுமா?’ என்று சிவாஜி சவால் விடும் தொனியில் கேட்டதும், சுருக்கென்று எம்.எஸ்.விக்கு கோபம் வந்துவிட்டதாம்.

‘அப்படி ஒரு பாட்டு போட்டால், அதுக்கு ஏத்தா மாதிரி உங்களால நடிக்க முடியுமா?’ என்று கேட்டுவிட்டார் எம்.எஸ்.வி.

’நீ போட்டுக் குடு! நான் நடிக்கிறேனா இல்லையான்னு பார்!’ என்று சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டார் சிவாஜி.

அவ்வளவுதான்! பரபரப்பாகிவிட்டார் எம்.எஸ்.வி.! ஹார்மோனியத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து, அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு டியூனை போட்டு விட்டார். அதற்கு முன்பாகவே கவிஞர் கண்ணதாசனுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லி விட்டார். எனவே, டியூன் ரெடியானதும், அதை டெலிபோனிலேயே போட்டுக்காட்டி, அதற்கேற்றபடியாக ஒரு மென்மையான பாடலையும் எழுதும்படிச் சொல்லிவிட்டார்.

நேரே புறப்பட்டு, கண்ணதாசனைப் போய்ப் பார்த்து, அவர் தயாராக எழுதி வைத்திருந்த பாட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டார் எம்.எஸ்.வி.

எங்கே தெரியுமா? பாடகர் டி.எம்.எஸ். வீட்டுக்கு. அவரிடம் விஷயத்தை விளக்கிச் சொன்னதுமே,

’நான் இப்போது ஹை பிட்ச்சில் பாட்டுக்கள் பாடி, அவை எல்லாமே பெரிய அளவில் ஹிட் ஆகிக்கொண்டிருக்கின்றன! இந்த சந்தர்ப்பத்தில், என்னைப் போய் ஒரு மென்மையான டியூனுக்கு பாடச் சொல்றீங்களே?’’ என்று கேட்டாராம் டி.எம்.எஸ்..

’இது ஒரு சவால்! சிவாஜி எனக்கு மட்டும் விட்ட சவால் இல்லை! விஸ்வநாதன், கண்ணதாசன், டி.எம்.சௌந்தரராஜன் என மூணு பேருக்குமாக சேர்த்து விட்டிருக்கும் சவால். இதற்கு நாம சரியான பதில் சொல்லியே ஆகணும்!’ என்று அவரிடம் பேச, டி.எம்.எஸ். பாட சம்மதித்து விட்டாராம்.

மறுநாளே, டி.எம்.எஸ். அந்தப் பாட்டைப் பாட, ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாட்டின் டேப்பை எம்.எஸ்.வி.யே நேரில் சிவாஜி வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய்க் கொடுத்தார்.

‘குடுத்துட்டுப் போ! பாட்டைக் கேக்கறேன்! அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லறேன்!’ என்று சொல்லி, எம்.எஸ்.வி.யை அனுப்பிவிட்டார் சிவாஜி.

டைரக்டர் பீம்சிங்கின் ‘சாந்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இந்த சவால் சம்பவம் நடந்தது.
ஒரு நாள் காலை டைரக்டர், சிவாஜிக்கு டெலிபோன் செய்தபோது, ’இன்றைக்கு ஷூட்டிங் வேணாம். பாட்டுக்கான ஷூட்டிங்கை ஒரு நாள் தள்ளிப் போடுங்க!’ என்று சிவாஜி சொன்னதும், டைரக்டருக்கு லேசான அதிர்ச்சி. சிவாஜிக்கு உடல் சௌகரியமில்லை போலிருக்கு என நினைத்து டைரக்டரும் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டார். மறுநாள் போன் செய்தபோதும், ‘‘இன்றைக்கும் ஷூட்டிங் வேண்டாம்’ என்று சிவாஜி சொல்ல, பீம்சிங் டென்ஷனாகி விட்டார்.
யாராவது, ஏதாவது தப்பாக சிவாஜியிடம் சொல்லி இருப்பார்களோ! அதனால் சிவாஜிக்கு கோபமோ! என்ற ரீதியில் சிந்திக்கத் துவங்கிவிட்டார் பீம்சிங்.

இதை இப்படியே விட்டால், வேண்டாத பின்விளைவுகள் ஏற்பட்டு, பெரிய சிக்கல் வரலாம் என்று பயந்து, பீம்சிங் நேரே சிவாஜி வீட்டுக்கே போய் விட்டார்.

’என்ன உடம்பு ஏதும் சரியில்லையா? வேற ஏதாவது பிரச்னையா? ஏன் ஷூட்டிங்கை தள்ளி வைக்கச் சொல்றீங்க? ஏதாவது இருந்தா என்கிட்ட சொல்லுங்க! எல்லாத்தையும் நான் சரி பண்றேன்’ என்று கேட்டார் பீம்சிங்.
சிவாஜி ஆழ்ந்த மௌனத்துக்குப் பின், ஷூட்டிங்கை தள்ளி வைக்கச் சொன்னதன் காரணத்தை பீம்சிங்கிடம் சொன்னார். ’தமாஷாக, எம்.எஸ்.வி.யிடம் ஒரு ஸ்லோ பேஸ் டியூன் போடச் சொன்னேன். ரொம்பப் பிரமாதமா ஒரு டீயூன் போட்டிருக்காரு.. கவிஞரோ அதுக்கு ஏத்தா மாதிரி பிச்சு உதறி இருக்காரு! எல்லாத்துக்கும் மேல இந்த டி.எம்.எஸ். எப்படிப் பாடியிருக்காரு! இதையெல்லாம் மேட்ச் பண்ற மாதிரி  நான் நடிக்க வேணாமா? அது பத்தித்தான் ரெண்டு நாளா நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்!’ என்று சொல்லிவிட்டு,  ‘‘இந்தப் பாட்டுக்கு ஒரு கார்டன் செட் போடு! கையில் ஒரு சிகரெட் இருக்கட்டும்.. மீதியை நான் பார்த்துக்கறேன்!’ என்றாராம்.

அடுத்த சில தினங்களில் சிவாஜி விருப்பப்படியே அந்தப் பாட்டும் படம் பிடிக்கப்பட்டது. சிவாஜியின் நடிப்பைப் பார்த்து பிரமித்த எம்.எஸ்.வி., நேரே சிவாஜியின் வீட்டுக்குப் போய் அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டி, ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம்.
அந்தப் பாட்டு எது என உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? ’யார் அந்த நிலவு? ஏன் இந்தக் கனவு?’.

(நடிகர்  கலைமாமணி ஏ.ஆர்.எஸ். எழுதிய தித்திக்கும் நினைவுகள் நூலில் இருந்து.)
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.3.20

சீனாவின் நோய்களுக்கான காரணம்!


சீனாவின் நோய்களுக்கான காரணம்!

சீனாவில் மட்டும் குறிப்பிட்ட நோய்கள் ஏன் பரவுகின்றன, அக்காலத்தில் இருந்தே ஆசியாவின் நோயாளி என அந்நாடு ஏன் சொல்லபட்டது எனபதற்கான காரணங்கள் சில உண்டு அவற்றில் முக்கியமானது பசு

சீனர்கள் உணவியலிலும் வாழ்வியலிலும் பசு மாட்டுக்கு முக்கியத்துவம் கிடையாது. பாலோ நெய்யோ தயிரோ அவர்கள் அறியாதவை

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பன்றி, கோழி, வாத்து, நண்டு இன்னும் பல நடப்பன ஊர்வன பறப்பன, மாடுகள் மிக குறைவு, அதன் பயன்பாடும் பாலும் மிக மிக அரிதானவை, 4 பசு கொடுத்தாலும் வெட்டி சூப் வைப்பார்களே தவிர பால் கறக்கவோ தயிர் கடையவோ தெரியாது

அவர்கள் உணவே வேறு, எலும்புக்கு வலுவூட்டுமோ தவிர வேறு ஒன்றும் செய்யாது. மாமிச சூப் சில கீரைகள், மீன்கள் மற்றும் கிடைப்பவை எல்லாம் எனும் ஒருமாதிரி சூப் சாப்பாடு அது

அதில் பாதியோ மீதியோ கூட வெந்திருக்காது, மசாலா என்பதோ தேங்காய் என்பதோ சேராது

இதே உணவு பாரம்பரியமே சீனா, ஜப்பான் , கொரியா, ஹாங்காங் என பல அந்த இனமக்கள் வாழும் நாட்டில் உண்டு.

பன்றியும் நண்டும் வாத்தும்  ஆற்று மீனுமே பிரதானம் , கோழி கூட இப்பொழுது வந்ததே

ஆம் உலகம் அறுதியிட்டு சொல்கின்றது பசுமாடு புழங்கும் இடங்களிலும், மாட்டுசாணம் பூசப்படும் இடங்களிலும் தொற்றுநோய் வாய்ப்புகள் குறைவு

நெய் பிரதான நோய் எதிர்ப்பு உணவு இதைத்தான் "நெய் இல்லா உண்டிபாழ்" என சொன்னது தமிழகம்

வடக்கே சப்பாத்தியில் நெய் ஊற்றாமல் உண்ணக்கூடாது என்பது தத்துவம்

மேற்காசியாவில் நெய்பயன்பாடு இல்லை எனினும் தயிரும் வெண்ணையும் பிரதான உணவுகள்

ஒருமனிதன் வெண்ணெய் உண்பது நல்லது என்பது மருத்துவ உலகம் சொல்லும் உண்மை, இந்துக்கள் கண்ணன் முதல் ஆஞ்சநேயர் வரை வெண்ணைய் படைத்து வைத்து உண்ணும் தத்துவம் இதுதான்

மேற்கத்தியவர்கள் காலை உணவில் கட்டாயம் சிலதுண்டு வெண்ணெய் அல்லது பாலாடை இருக்கும்

ஆம் பசுவும் அது கொடுக்கும் பொருளும் சாதாரணம் அல்ல, அவை நோய் முதல் பல விஷயங்களை விரட்டி ஆரோக்கியம் கொடுக்கும்

அதை அணு அணுவாக உணர்ந்த தேசமிது, அதனால்தான் பால் தயிர் நெய் என அதன் பயன்பாடு ஆலயம் முதல் எல்லா இடத்திலும் அதிகம், மருந்தில்லா நோய்களும் பரவாது

அக்காலத்தில் வீட்டுமுற்றத்தில் சாணம் தெளிக்கும் தத்துவமே கிருமி நாசினி என்பதாகும், சாணத்தில் ஹோமியமும் கலந்திருந்தது

பால் அருந்துவது இந்து பண்பாடு, பிறப்பு முதல் இறப்பு வரை பாலே பிரதானம். பாலும் பழமும் என்பதெல்லாம் இந்திய அடையாளத்தில் ஒன்று

அதை கடைசிவரை மாற்றமுடியாமல் வெள்ளையன் பாலில் டீ அல்லது காபி தயாரித்து தன் வியாபாரத்தை நடத்தினான் , பாலில் டீ கலக்கும் காபி கலக்கும் பாணி இந்தியாவிலே பிரதானம்

சும்மா சங்கி, ஹோமியம், சாணம் என சொல்பவன் சொல்லிகொண்டிருப்பான்,

ஆனால் சீனாவில் மட்டும் ஏன் வித வித நோய் உருவாகின்றது என்பதற்கும், சீன இனங்கள் ஏன் அடிக்கடி சிக்குகின்றது என்பதற்கும் உலகம் கண்ட விஷயங்களில் ஒன்று அவர்களிடம் பசுமாட்டு வளர்ப்பும் பால் பொருட்கள் உபயோகமும் அதிகம் இல்லை என்பதே..

பசுவினை அர்த்தமில்லாமல் இத்தேசம் கொண்டாடவில்லை, கோமாதா என கொண்டாடி கண்ணன் அருகில் நிறுத்தியதிலும், அவன் வெண்ணெய் தின்றான் எனச் சொன்னதிலும் அர்த்தமில்லாமல் இல்லை.

கண்ணன் மாடுமேய்ப்பவனாக வந்ததிலும் தத்துவம் இல்லமால் இல்லை..

சிவனுக்கு வாகனமாக காளையினை வைத்ததிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

வழிபாடு முதல் வீடுவரை நெய்யும் தயிரும் பாலும் புழங்க சொன்னதிலும், ஒருபிடி சாணத்தை பிள்ளையாராக வாசலில் வைக்க சொன்னதிலும் விஞ்ஞானமும் ஆரோக்கியமும் இல்லாமல் இல்லை

அன்றே மிகப் பெரும் உணவு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு முறையினை பசுவில் இருப்பதைச் சொல்லி அதை தெய்வநிலைக்கு வைத்திருந்த இந்துபாரம்பரியம் ஆச்சரியமும் அதிசயமான அறிவும் கொண்டதாகும்...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...
---------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.3.20

தி. நகர் உஸ்மான் சாலை வரலாறு!!!!


தி. நகர் உஸ்மான் சாலை வரலாறு!!!!

மதராஸ்  #உஸ்மான்_சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ.........
--------------------------------------------------
"முதல் தலைமுறை மனிதர்கள்".

மதராஸ், தி.நகரில் வணிக  நிறுவனங்கள் நிறைந்த #உஸ்மான் #
சாலைகளில் நடந்து செல்லும்போது, " #யார்_இந்த_உஸ்மான்"
என்ற கேள்வி  எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் 
சிந்தியுள்ளார் ஆசிரியர்.
ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் "முஸ்லீம்களின் அரசியல் பரிணாம  வளர்ச்சி" என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

#உஸ்மான் - ஒரு சுருக்கச்  செய்தி : கான் பகதூர் சர் #முகமது_உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 - 1960.
பிரிட்டிஷ்  இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் 
பெற்றார்.

1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள்.
1924ல் சென்னை மாநகராட்சி மேயர்.
1916 - நீதிக்கட்சி தோற்றம் - உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு - 1919 திருச்சி 
மாநாட்டுத் தலைவர்.
1920 முதல் சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க
1934 வரை  சட்டமன்ற உறுப்பினர்.
1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாகசபையின் துணைத்தலைவர்.
1932 - 34  சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.

1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency - 
Acting.
இதன்மூலம் இந்தியமாகாணங்களிலேயே கவர்னர் பதவி வகித்த #முதல்_இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் - 
அத்துடன் #முதல்_தமிழர்,
#முதல்_முஸ்லீம் என்ற பெருமையும் கூட. அந்த வருடம் சென்னை சென்னைப் பல்கலையில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப்  பல்கலைக்கழக வரலாற்றில் #இந்தியர்_ஒருவர் "வேந்தர்"
என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு 
இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்
பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் 
நிலைக்கு உயர்ந்த #உழைப்புதான்.

1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India.
1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,
Member of the Executive Council of Viceroy of India. இக்குழுவில் 
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர் சி.பி.இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.

1920 ல் கான் சாகிப் பட்டம்.
1921 ல் கான் பகதூர் பட்டம்.
1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.
1928 ல் இங்லாந்தின் உயரிய  "நைட் - Knight " விருது.
அதே ஆண்டில் "சர் - Sir" பட்டம்.

KCSI - Most exalted Order of the Star of India, Knight 
Commander Order of
           Chivalry - Founded by Queen Victoria in 1861.

இதுபோல் தமிழகத்தின் 30  ஆழுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட 
வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

Thanks for the information:
வெளியீடு : நிலவொளி பதிப்பகம், சென்னை.
#முகநூல்_பதிவு
நெய்வேலி சார்லஸ்
---------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.3.20

புளியோதரை புராணம் - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது


புளியோதரை புராணம் - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது 

ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!

எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன்  நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!

புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர்  போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.. அடுத்து நிறம்.!

புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்.. அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..

ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி!அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.!  பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது..

புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு,  அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்க டலைப் பருப்புகள்.!

நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்! நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்..

அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/ புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!

மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. அசுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!

முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!

அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து  பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும் பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு.. ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..

புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.! அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக் கு (ரு)சி வந்துவிடும்.! திருப்பதி,  மயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான் ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்..

கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.! பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார் புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்..

 “புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாரு” போல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!!

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.3.20

Astrology நல்ல செயல்களுக்கான நாட்கள்


Astrology நல்ல செயல்களுக்கான நாட்கள்
Auspicious days for good deeds

நல்ல செயல்கள் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

புது மனை வாங்குவது, நிலம் வாங்குவது, திருமணத்திற்கு வரன் பார்ப்பது, புதுத் தொழில் துவங்குவது. வேலைக்கு மனுப் போடுவது போன்று எண்ணற்ற செயல்கள் உள்ளன. அவைகள் நமக்கு சாதகமாக வெற்றிகரமாக முடிவதற்கு நல்ல நாட்களில் துவங்க வேண்டும்.

இடைஞ்சல் இல்லாமல், தோல்விகள் இல்லாமல், முடிவதற்கு நல்ல நாட்களில் அவற்றைச் செய்யத் துவங்க வேண்டும்.

அது மட்டுமா? ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போதும், மருத்துவரை முதன் முதலில் பார்க்கப் போகும்போதும், ஒரு சுற்றுலாப் பயணம் செல்லும்போதும் கூட நேரம், காலம் பார்த்துத்தான் துவங்க வேண்டுமாம்.

பாடலைப் பாருங்கள்:

ஆதிரை பரணி கார்த்திகை
    ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதரு விசாகஞ் சோதி
    சித்திரை மகமீ ராறும்
மாதனங் கொண்டார் தாரார்
    வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
    பாம்பின் வாய்த்தேரை தானே!

பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களிலும் கடன் வாங்கிக் கொண்டவர் திருப்பித் தருவதும், பிரயாணம் போனவர் திரும்புவதும், நோயாய்ப் படுத்தவர் தேறுவதும் அரிதாம்.

பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொண்ட தேரை போல் ஆகிவிடுமாம்! அதாவது அதிகச் சிக்கலாகுமாம்.

இதெல்லாம் சாத்தியமா என்று கேட்காதீர்கள்? முயன்றால் சாத்தியப்படும்!

நாள் நட்சத்திரங்களைப் பார்த்துக் காரியங்களைச் செய்யுங்கள் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்தப் பாடம்!

அன்புடன்,
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.3.20

எழுத்தாளர் ராகி.ரங்கராஜன் பற்றி எழுத்தாளர் சுஜாதா!!!!!


எழுத்தாளர் ராகி.ரங்கராஜன் பற்றி எழுத்தாளர் சுஜாதா!!!!!

ரா.கி.ரங்கராஜன் பற்றி சுஜாதா

திரு ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கும் நம் மதிப்பிற்குரிய சுஜாதா அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு. இருவருமே மற்றவரைப் பற்றி மனமாரப் புகழ்வார்கள். குமுதத்தில் சுஜாதா எழுத ஆரம்பித்த போது, ஏற்கனவே அங்கு (ரா.கி.) ஒரு ரங்கராஜன் இருந்ததால், தன் (எழுது) பெயரை "சுஜாதா" என மாற்றிக்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஹென்றி ஷாரியர் (Henri Charriere - a French writer) எழுதிய ‘பாப்பியான் (Papillon) ’ என்ற புத்தகத்தை ‘பட்டாம்பூச்சி’ என்ற பெயரில் திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மொழி பெயர்த்தார்.

அந்தப் புத்தகத்தில் ஆத்மார்த்தமாக சுஜாதா எழுதிய அணிந்துரையிலிருந்து சில பகுதிகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன் –:)

“ரங்கராஜன் சுதந்திரம் வந்த புதுசிலிருந்தே எழுதி வருகிறார் என்பது என் அனுமானம். ஆரம்ப காலங்களில் அவர் கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அவருடைய சிறுகதைகள் ‘பல்லக்கு’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

துவக்க நாட்களிலேயே குமுதம் நிறுவனத்தில் சேர்ந்து அவர்கள் ‘கல்கண்டு பத்திரிகையுடன் கூடவே வெளியிட்ட ‘ஜிங்லி’ என்ற சுவாரஸ்யமான சிறுவர் பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார். ‘ஜிங்லி’யின் அகால மரணத்திற்கு வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். பிறகு குமுதம் ஆசிரியர் குழுவில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதத் துவங்கினார்.

அதேசமயம் குமுதத்தில் ‘சூர்யா’ என்பவர் தரமான சிறுகதைகளை எழுதிவந்தார். ‘ஹம்சா’ என்பவர் வேடிக்கை நாடங்களும் டி.துரைஸ்வாமி துப்பறியும் கதைகளும் ‘கிருஷ்ண குமார்’ திகில் கதைகளும் ‘மாலதி’ குறும்பு கதைகளும் ‘முள்றி’ மழலைக் கட்டுரைகளும் ‘அவிட்டம்’ நையாண்டிக் கவிதைகளும், 'மோகினி' என்பவர் சினிமாவை / அதன் நடிகர்/நடிகைகளைப் பற்றி எழுதி வந்தார்கள்.

பிற்காலத்தில் நான் குமுதத்தில் எழுதத் துவங்கி ஆசிரியர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது ‘சூர்யா’ வின் செய்தி என்கிற சிறப்பான சிறுகதைக்கு ஏதோ ஒரு நிறுவனம் பரிசளித்திருந்த செய்தியில் கதையின் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் என்று குறிப்பிட்டிருந்தது.

விசாரித்ததில் நான் மேற்சொன்ன அத்தனை எழுத்தாளர்களும் ரங்கராஜன் ஒருவரே என்கிற விவரம் தெரிந்து எனக்கு அப்போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.

ஓர் எழுத்தாளர் கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவது எல்லாம் சகஜம். என்னாலேயே முடிகிறது. ஆனால் எப்படி ஒரே எழுத்தாளரால் நடையிலேயே கருத்திலோ உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்கள் போல எழுத இயலும்? இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்: கல்கி.

நேரில் சந்திக்கும்போது ரங்கராஜன் இத்தனை திறமைகளையும் ஒரு சின்னப் புன்னகையில் மறைத்துவிடுவார்.

ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும், பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்தப் பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில், ரங்கராஜன் ஒரு கர்ம யோகி; குமுதம் ஸ்தாபன விசுவாசம்; ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி; கிடைத்தது போதும் என்கிற திருப்தி; சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு நேசம்; வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி நெற்றியில் ஸ்ரீசூர்ணம், நண்பர்களைக் கண்டால் கட்டி அணைத்து முதுகில் ஒரு ஷொட்டு; பெரிசு பெரிசாக குண்டு பேனாவில் எழுதப்பட்டச் சிறகடிக்கும் எழுத்து. ஏறக்குறைய ஒரு லைப்ரரி அளவுக்கு இவர் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகள் அனைத்தையும் திருமதி கமலா ரங்கராஜன் பைண்டு பண்ணி வைத்திருக்கிறார். இவரது படைப்புகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. சின்னத்திரையில் வந்திருக்கின்றன.

இத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூட போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று!”
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!