மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.12.21

Astrology: ஜோதிடம்: 27-12-2021 ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 27-12-2021 ம் தேதி புதிருக்கான விடை!

ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்து, ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா அல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா? அல்லது இல்லையா?” என்று கேட்டிருந்தேன்.

சரியான விடை: லக்கினத்தில் விரையாதிபதி (12th Lord) செவ்வாயின் ஆதிக்கம். அத்துடன் லக்கினாதிபதி குருவின் மேலும் அவருடைய பார்வை உள்ளது.
ஆறு வயது வரை கேது திசை..அதற்குப் பிறகு சுக்கிர திசை. குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும். இவை எல்லாம் சேர்ந்து பையனின் இளம் வயது வாழ்க்கையைக் கெடுத்தன.

ஆனால் லக்கினாதிபதி குரு பகவான் உச்சம் பெற்று வலுவாக இருப்பதாலும், பத்தாம் வீட்டுக்காரன் புதனின் மேல் பார்வையைச் செலுத்துவதாலும், பின் வாழ்க்கை சரியானது. புதன் வர்கோத்தமம் பெற்றிருப்பதைப் பாருங்கள்.  பையனின் வாழ்க்கை ஒளி மயமானது, தாமதமாக ஒளி கிடைத்தது. out door activities களில் பையன் முனைப்பாக இருந்ததால் யோகா வாத்தியாராக மாறி நன்கு சம்பாதிக்கத்துவங்கினான்.

அடுத்தவாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------.


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.12.21

Devotional:ஆன்மிகம்: ரத்தினகிரி முருகன் கோவில்



ஆன்மிகம்: ரத்தினகிரி முருகன் கோவில்

இன்று செவ்வாய்க் கிழமை. முருகப் பெருமானுக்கு உகந்த நாள். வாருங்கள் ஒரு புதிய முருகன் ஸ்தலத்திற்குச் சென்று வருவோம்!!!!

வேலூர் அருள்மிகு ரத்னகிரி பாலமுருகன் கோயில் இந்தியாவின் வேலூரில் உள்ள திருமணி குண்டத்தில் உள்ள முருகன் (கார்த்திகேயா) கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் ஆகும். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, மேலும் 14 ஆம் நூற்றாண்டின் கவிஞர் அருணகிரிநாதரால் குறிப்பிடப்பட்டது .

 மலை இருக்கும் இடத்தில் முருகன் இருக்கிறார் என்று கூறப்படும் பண்டைய இந்து மத நூல்களின்படி, இது ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. 

கோவிலில் உள்ள முருகன் சிலை மற்றும் குரு சுவாமி பாலமுருகன் அடிமை (பிறப்பு 1941) தெய்வத்தின் வெளிப்பாடுகள் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒரு முறை சென்று வாருங்கள்.எல்லா நலன்களும் பெற்று வாழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.12.21

Astrology: ஜோதிடம்: புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 14




Astrology: ஜோதிடம்: புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 14

கீழே ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா அல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா? அல்லது இல்லையா?




சரியான விடை இரண்டு நாட்களில் தெரியும்

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து,
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.21

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 23-12-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 23-12-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்


சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா?  பெண்மணி. கர்நாடகாவில் பிறந்தவர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.12.21

Astrology: ஜோதிடம்: 20-12-2021 புதிருக்கான விடை!!!!


Astrology: ஜோதிடம்: 20-12-2021 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பருக்கு அவருடைய நாற்பதுவயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப்பிறகும் ஆகவில்லை. பெண் துணையின்றி வாழ்க்கையைக் கழிக்கும்படியாகிவிட்டது  ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!! அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!  என்று கேட்டிருந்தேன்

சரியான விடை:
ஏழாம் வீட்டுக்காரனான செவ்வாய் தன் சொந்த வீட்டில் வலுவாக இருந்தாலும், பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் சூரியன் மற்றும் சனி மறு பக்கம் ராகு
ஜாதகருடைய 23வது வயதில் ராகு திசை துவங்கி விட்டது. ராகு 8ம் வீட்டில் இருப்பதோடு, சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கிறார். துலா லக்கினத்திற்கு சூரியன் பாதகாதிபதி. ஆகவே அந்த திசை முழுவதும் ஜாதகருக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டது.
அத்துடன் ராகுவின் மேல் சனியின் பார்வை விழுவதைக் கவனியுங்கள். ராகுவை சனி கட்டிப்போட்டுவிட்டார். (சனியின் பார்வை திருமணத்தைத் தாமதப் படுத்தும்)
சந்திர லக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் பாவ சந்திப்பில் அமர்ந்து வலிமையின்றி இருக்கிறார்.
மேலும் அந்த வீட்டுக்குரிய புதன் ராசி மற்றும் நவாம்சத்தில் சனியுட.ன் கூட்டாக உள்ளார். அதனால் அவரும் பிரயோஜனப் படாமல் போய்விட்டார் அடுத்து வந்த குரு மகாதிசையும் ஜாதருக்கு அனுசரணையாக இல்லாமல் போய்விட்டது. ஆகவே ஜாதகருக்கு கடைசிவரை திருமணமே நடக்கவில்லை!!!!

புதிருக்கான பதிலை நிறைய அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.12.21

Devotional: குக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா


Devotional: குக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா
   
கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

குக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா

கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் இந்த சுப்பிரமணியர் கோவில் உள்ளது. மேலும் இது குமார பர்வதா மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் குமாரதாரா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ளது. இந்தக்கோவிலுக்கு புராண வரலாறு ஒன்று உள்ளது. அதாவது முருகக் கடவுள் போரில் தாரகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை சம்ஹாரம் செய்த பிறகு தனது சகோதரர் விநாயகர் மற்றும் பக்தர்கள் புடைசூழ குமார பர்வதாவுக்கு வந்தார். 

அவரை இந்திரன் மற்றும் தேவர்கள் வரவேற்றனர். மேலும் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொள்ளும்படி இந்திரன் வேண்டுகோள் விடுக்க முருகப்பெருமான் சம்மதம் தெரிவித்தார். அதன்படி முருகர்-தெய்வானை திருமணம் நடந்தது. அப்போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மற்றும் தேவர்கள் அங்கு கூடினர். பல்வேறு புனித நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் ஆறாக ஓடியது. அதுவே குமாரதாரா நதியானதாக சொல்லப்படுகிறது.–

இதேப் போல் சிவ பக்தரும், நாகர்களின் தலைவரான வாசுகி தன்னை கருடன் தாக்காமல் இருப்பதற்காக குக்கே சுப்பிரமணியர் கோவிலில் உள்ள பிலாத் வாரா குகையில் தவம் இருந்தது. இதைத் தொடர்ந்து சிவனின் ஆணையை ஏற்று வாசுகியை இந்த தலத்தில் தனது பரமபக்தராக தன்னோடு இருக்கும்படி முருகப்பெருமான் அருள்புரிந்தார். இதனால் இங்கு வாசுகிக்கு பூஜை செய்தால், அது முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாகவே கருதப்படுகிறது. இந்த கோவிலில் வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பம் ஒன்று உள்ளது. 
 
வாசுகி பாம்பின் விஷம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக அந்த கருட கம்பம் இங்கு நிறுவப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் குமாரதாராவில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. 

மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமையப் பெற்று இருக்கிறது. இந்தக்கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ‘உருளு சேவை' என்னும் நிகழ்ச்சி சிறப்பம்சம் ஆகும்.

அன்பர்களே, வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள்! வாழ்வின் எல்லா சிறப்பு அம்சங்களையும் அவர் அருள்வார்!!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.12.21

Astrology: ஜோதிடப் புதிர்: அலசுங்கள் 13 கேள்வி


Astrology: ஜோதிடப் புதிர்: அலசுங்கள் 13 கேள்வி 

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அன்பருக்கு அவருடைய நாற்பதுவயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப்பிறகும் ஆகவில்லை. பெண் துணையின்றி வாழ்க்கையைக் கழிக்கும்படியாகிவிட்டது  ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 22-12-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.12.21

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 17-12-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  17-12-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா?  பெண்மணி. வட இந்தியர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.12.21

Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள் பகுதி 12 புதிருக்கான விடை!!!!

Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள் பகுதி 12  புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பர் வருத்தப்படும்படி இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார் (அல்ப ஆயுள் என்று வைத்துக் கொள்ளுங்கள்)
ஜாதகப்படி அதற்கு (இளம் வயதிலேயே இறந்ததற்கு) என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!  என்று கேட்டிருந்தேன்

சரியான விடை:
கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் சிக்கியதோடு. பாபகத்தாரி யோகத்திலும் சிக்கி கெட்டுப்போய் உள்ளார். ஒரு பக்கம் கேது, மறுபக்கம் செவ்வாய்.
இது அல்ப ஆயுசு ஜாதகம். அல்ப ஆயுசிற்கான எல்லா அம்சங்களும் ஜாதகத்தில் உள்ளன.
1. இரண்டு கேந்திரங்களில் தீய கிரகங்கள். 4ல் சனி, 7ல் செவ்வாய்.
2. லக்கினாதிபதியைவிட சனீஷ்வரன் வலுவாக (strong) உள்ளான்
3. சனியின் பார்வை லக்கினத்தின் மேல், அத்துடன் லக்கினாதிபதியின் மேல். சனி உச்சம் பெற்றுள்ளான்
4. செவ்வாயின் பார்வையும் லக்கினத்தின் மேல்.
5. எந்த சுபகிரகமும் கை கொடுத்து உதவக்கூடிய நிலையில் இல்லை. சந்திரன், குரு, சுக்கிரன், புதன் என்று நான்கு சுபக்கிரகங்களும் ஆறாம் வீட்டில் மொத்தமாக சிக்கிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் அவை அனைத்திற்கும் பாபகர்த்தாரி யோகம் வேறு.
ஆகவே ஜாதகர் அல்ப ஆயுளில் போய்ச் சேர்ந்து விட்டார் (இறைவனடிக்குத்தான்)

புதிருக்கான பதிலை பல அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.12.21

Devotional; ஆன்மிகம்; சிவன்மலை முருகன் கோவில்



Devotional; ஆன்மிகம்; சிவன்மலை முருகன் கோவில்

இன்று செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு உகந்த நாள். வாருங்கள், ஒரு முருகப் பெருமான் ஸ்தலத்திற்குச் சென்று அவரை வணங்கி வருவோம்!!!!

சிவன்மலை சுப்பிரமணியர் கோயில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோயில் ஆகும்.

அமைவிடமும் போக்குவரத்தும்

காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் சிவன்மலை மீது அமைந்துள்ளது.

இக் கோயிலின் அஞ்சல் முகவரி: அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், சிவன்மலை, காங்கயம் வழி, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு -638701.

அருகிலுள்ள பேருந்து நிலையம்: காங்கயம்; அருகிலுள்ள ரயில்நிலையம்: திருப்பூர்; வானூர்தி நிலையம்: கோயம்புத்தூர்.

சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது. கோயில் நிர்வாகத்தாரால் மலை மீதுள்ள கோயிலுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களிலும் செல்லலாம்.

பெயர்க்காரணம்

சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்ப தெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்பட்டது.

கற்பந்தல்கள் மற்றும் பூஜைகள்

மலைப்படியில் நடந்து செல்லும் போது பக்தர்கள் ஓய்வெடுக்க பல கற்பந்தல்கள் (மண்டபங்கள்) அமைந்துள்ளன.

தினசரி பூஜைகள்

முதல் பூஜை காலை 6 மணி

காலசந்தி காலை 9 மணி

உச்சிகாலம் மதியம் 12 மணி

சாயரட்சை மாலை 6 மணி

அர்த்தசாமம் இரவு 8 மணி

கோயில்

சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்குமுகமாக உள்ளன. மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.

பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக இருக்கிறார்.

இக்கோயிலின் தலவிருட்சமாக தொரட்டி மரம் உள்ளது.

மரபு வரலாறு

சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. இது பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு குடிகொண்டதாகவும் வரலாறு உள்ளது.

இந்த வரலாறு ’சிவமலைக் குறவஞ்சிப் பாடலில்’ கூட குறிப்பிடப்படுகின்றது.

அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம்
செய்ய வளைக்குங் காலை
முந்து கொடுமுடியுள் ஒன்று சிந்தி இங்கு
வந்த சிவமலை இம்மலையே!’

உத்தரவுப் பெட்டி

உத்தரவுப் பொருட்கள் வைக்கப்படும் பெட்டி

இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பூசைக்குப் பின்னர், அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளின் தேர்வு முறை

ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப் போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சித்தர்கள்

சிவன்மலையில் இன்றும் ஏராளம் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருக்கின்றனர். புண்ணியம் செய்தோர் கண்களில் அவ்வப்போது சில சித்தர்கள் புலப்படுவதுண்டு.

காசித் தீர்த்தம்

இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.

மற்ற சிறப்புகள்

சிவன்மலை சிறப்பு; மலையைச் சுற்றிலும் அட்ட துர்க்கை இருப்பதாகக் கூறுவர். ஆலாம்பாடி வனசாட்சி (காட்டம்மை) பாப்பிணி அங்காளபரமேஸ்சுவர், காங்கயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அத்தனூரம்மன், கர்யகாளியம்மன், செல்வநாயகி என்று எட்டு அம்மன் பெயர்களைக் சூழ்ந்துள்ள எட்டு இடங்களுக்குக் கூறுகின்றனர்.

மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.
நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.

சிவபெருமான் சன்னதி

ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் சன்னதியும் உள்ளது. சிவபெருமான், உமையம்மைக்கும் நவகன்னியருக்கும் தரிசனம் தந்தருளியதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

கருணை இல்லம்

1997 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் இக்கோயில் நிர்வாகத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ’கருணை இல்லம்’ ஒன்று இயங்கி வருகிறது. இத் திட்டத்தில் 25 குழந்தைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.

ஒருமுறை சிவன்மலைக்குச் சென்று முருகப் பெருமானை வழபட்டு வாருங்கள். வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் பெறுவீர்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
=====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.12.21

Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 12



Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 12

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்.  அன்பர் வருத்தப்படும்படி இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார் (அல்ப ஆயுள் என்று வைத்துக் கொள்ளுங்கள்)

ஜாதகப்படி அதற்கு (இளம் வயதிலேயே இறந்ததற்கு) என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 15-12-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.12.21

Astrology: ஜோதிடம்: 9-12-2021ம் தேதி புதிருக்கான விடை!



Astrology: ஜோதிடம்: 9=12=2021ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் தற்போதைய இந்திய குடியரசுத் துணைத்தலைவரும், பாரதிய ஜனாதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான திரு.முப்பவரப்பு வெங்கைய்யா நாயுடு அவர்கள்.

பிறப்பு : ஜூலை 1, 1949 நேரம் : மதியம் 12 மணி, 8 நிமிடம்.
இடம் : சவட்ட பாலம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!!!

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்தவாரம் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.12.21

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13 ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13 ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!



க்ளூ வேண்டுமா?  ஜாதகர் தென்னிந்தியர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.12.21

Astrology: ஜோதிடம்: 6-12-2021 அலசுங்கள் புதிருக்கான விடை!!!!



Astrology: ஜோதிடம்: 6-12-2021 அலசுங்கள் புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அந்த அன்பர். வங்கி அதிகாரியாக சுமார் 19 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியும். அவருக்கு எந்தவிதமான பதவி உயர்வும் கிடைக்கவில்லை. நியாயமாகக் கிடைக்கவெண்டியது கூடக் கிடைக்கவில்லை. மனிதர் நொந்து போய்விட்டார். 42 வயதாகி விட்டது. இனிமேலாவது கிடைக்குமா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு!!!!இதுவரை ஏன் கிடைக்கவில்லை? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!! என்று கேட்டிருந்தேன்

சரியான விடை 
அன்பர் கடக லக்கினக்காரர். லக்கினநாதன் சந்திரன் பாக்கியநாதன் (9th Lord) குருவுடன் சேர்ந்து 2ம் வீட்டில் சிறப்பாக உள்ளார். ஆனால் 10ம் வீட்டுக்காரரான செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து கெட்டுப் போய் உள்ளார். 7 மற்றும் 8ஆம் இடத்துகாரர் சனீஷ்வரனும் ராகுவுடன் சேர்ந்து கெட்டுப் போயிருக்கிறார்,

பிறப்பில் ஒரு ஆண்டு 7 மாதங்கள் இருந்த சுக்கிர திசை, பிறகு சூரியன் (6) சந்திரன் (10) செவ்வாய் (7) ஆகிய தசா மாற்றங்களுகுப் பிறகு அவர் வேலைக்குச் சேர்ந்த உடனேயே ராகு மகா திசை ஆரம்பித்து விட்டது. துவங்கியதில் இருந்தே அவருக்கு செக் வைத்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் அவருக்கு எந்த பதவி உயர்வும் கிடைக்கவில்லை. ஜாதகப்படி அவர் பட்ட வேதனைகளுக்கெல்லாம் அதுதான் காரணம்.

அதற்கு அடுத்து வந்த குரு மகாதிசையில் அவருக்கு எல்லாம் கூடி வந்தது. கர்மகாரகன் சனீஷ்வரனின் பார்வை குருவின் மேல் விழுவதைக் கவனியுங்கள்,

தசா புத்திகளின் முக்கியத்துவம் அதுதான். நல்ல மகா திசை நடக்கும்காலம்தான் எல்லாம் நன்மையாக இருக்கும்!

அடுத்தவாரம்து வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.12.21

Devotional: ஆன்மிகம்: அருள்மிகு கொடுங்குன்றநாதர் கோவில், பிரான்மலை


Devotional: ஆன்மிகம்: அருள்மிகு கொடுங்குன்றநாதர் கோவில், பிரான்மலை

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோவில்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று திருக்கொடுங்குன்றம் என்றழைக்கப்படும் பிரான்மலை ஸ்ரீ கொடுங்குன்றநாதர் ஆலயமாகும். ஒருசமயம் வாயு, ஆதிசேஷனுக்கிடையே தங்களில் யார் “பலசாலி” என்ற சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். ஆதிசேஷன் மேருமலையைச் சுற்றிக்கொள்ள வேண்டும், அதை வாயு பகவான் தனது பலத்தால் பெயர்க்க வேண்டும் என்பது போட்டி. ஆதிசேஷன், மலையை இறுகப் பற்றிக்கொண்டார். வாயு அதைப் பெயர்க்க முயன்றார். காற்று பலமாக வீசியதில், மேருமலையிலிருந்து சில துண்டுகள் பெயர்ந்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு துண்டே, இங்கே மலையாக திருக்கொடுங்குன்றம் என்ற பெயரில் உள்ளது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனும், முல்லைக்குத் தேர் ஈந்தவனுமான பாரி வள்ளல் ஆட்சி செய்த இடம் இப்பகுதி. அக்காலத்தில் இப்பகுதி பறம்பு நாடு என்றும் இம்மலை பறம்பு மலை என்றும் அழைக்கப்பட்டது. இன்று காலப்போக்கில் மருவி “பிரான்மலை” ஆகிவிட்டது.

மலை அடிவாரம், மலையின் நடுப்பகுதி, மலை உச்சி ஆகிய மூன்று நிலைகளிலும் சந்நிதிகள் கொண்டு காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்றநாதர் ஆலயம் தான். மலை உச்சியில் மங்கைபாகர் என்னும் பெயரில் ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். மங்கைபாகருக்கு உமாமகேஸ்வரர் என்றும் ஒரு பெயருண்டு. இறைவி தேனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். சந்தனம், புனுகு தைலக் காப்பிட்டு, அபிஷேகம், ஆராதனை செய்து இவரை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும், திருமணத் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.

தென்திசையை நேராக்க வந்த அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றார். அவ்வாறு அவர் வேண்டுதலுக்கிணங்க, இறைவன் மங்கையொரு பாகனாகக் காட்சி அளித்த பல தலங்களுள் இதுவும் ஒன்றாகும். அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய குடைவரைக் கோவில் இது. இங்குள்ள மங்கைபாகர் எதிரில் நந்தி இல்லை. சிவன், அகத்தியருக்கு திருமண காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் கைலாயத்தில் இருந்தார். எனவே, சிவன் இங்கு நந்தி இல்லாமல் காட்சி தருகிறார். கொடிமரம், பலிபீடமும் கிடையாது. லிங்க வடிவம் இன்றி சிவபெருமான் மங்கைபாகர் என்ற பெயரில் உருவத் திருமேனியுடன் காணப்படும் சிலை நவ மூலிகைகளின் சாறு கொண்டு செய்யப்பட்டதாகும். எனவே, இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. பெளர்ணமியன்று புனுகு, சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர்.

மங்கைபாகர் இத்தலத்தில் போக நிலையில் காட்சி தருகிறார். ஒவ்வொரு முறையும் இவருக்கு புத்தாடையையே அணிவிக்கின்றனர். ஒரேநாளில் பலமுறை வஸ்திரம் மாற்ற வேண்டி வந்தாலும், புது வஸ்திரமே அணிவிக்கப்படும். கையில் வேதங்களுடன் காட்சி தருவதால் இவருக்கு, “வேதசிவன்” என்றும் பெயருண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற, இவருக்கு வெள்ளை நிற மலர் மாலை, வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். இந்த சன்னதியின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் காணச்சென்ற தேவர்கள், அசுரர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.

மலை நடுப்பகுயில் உள்ள கோவிலில் மிக முக்கியமான சந்நிதியாய் விளங்குவது பைரவர் சந்நிதியாகும். இங்குள்ள பைரவர் வடுக பைரவராய் எழுந்தருளியிருக்கிறார். வடுகன் என்றால் “பிரம்மச்சாரி” என்ற பொருள் உண்டு. “வீரன்” என்ற பொருளும் கூறப்படுகின்றது. கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம் எனத் திகழ்கின்றது பைரவர் கோவில். தெற்கு நோக்கிய சந்நிதி. பைரவர் சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றார். நின்ற திருக்கோலம், சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. பண்டை அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமாக வாள் சார்த்தி வைக்கப்பட்டுள்ளதாம். பைரவருக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் காசிவிஸ்வநாதர் – விசாலாட்சி எழுந்தருளியுள்ளனர். வடுக பைரவர் தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் உள்ளன.

முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப்படுத்தினான். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவர் ஆகும். ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றையும், காரியத்தடைகளையும் களைபவர் இத்தலத்து பைரவர். கருப்பு வஸ்திரம் சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து இவரிடம் வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 அடுத்து கீழே உள்ள மலையின் அடிவாரப் பகுதியில் கிழக்குப் பார்த்து கொடுங்குன்றநாதர் மிகச் சிறிய லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கின்றார். கொடுங்குன்றநாதர் சந்நிதி வலம் வரும்போது அறுபத்துமூவர் மூலமூர்த்தங்களும், விநாயகர், அம்மையப்பர் சந்நிதிகளும் உள்ளன. நவக்கிரக சந்நிதிகளில் எல்லா கிரகங்களும் அமர்ந்த நிலையில் உள்ளன. அம்பாள் குயிலமுதநாயகி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இக்கோவிலின் வடகிழக்குப் பிரகாரத்தின் கூரைப் பகுதியில் தொங்கும் கல்வளையங்கள் சிற்பக் கலைச் சிறப்பு மிக்கவை.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும், இரு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். வழக்கமாக முருகன் சத்திதி எதிரில் இருக்கும் மயில் வாகனத்திற்கு பதிலாக இங்கு யானை உள்ளது. முருகன் சந்நிதி எதிரில் 18 துவாரங்களுடன் கூடிய மதில் உள்ளது. இந்த மதில் வழியாகத்தான் யானையைப் பார்க்க முடியும்.

இத்தலத்தின் தலவிருட்சம் உறங்காப்புளி மரம், பெயரில்லா மரம் என்று இரண்டு மரங்கள் உள்ளன. உறங்காப்புளி மரம் கோவிலுள் உள்ள தீர்த்தத்தின் கரையில் உள்ளது. பெயரில்லா மரம் மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்குப் பக்கத்தில் மலைக்கற்களின் இடுக்கில் உள்ளது. இதுவரை இம்மரத்தை என்ன பெயர், எந்த வகையைச் சார்ந்தது என்பதை யாராலும் அறிந்து கொள்ளமுடியாததால் இதனை பெயரில்லா மரம் என்று அழைக்கின்றனர். தீர்த்தம் தேனாழி தீர்த்தம். மகோதர மகரிஷி, ஆதிசேஷன், பிரம்மா, சரஸ்வதி, சுப்ரமண்யர், நந்தி ஆகியோர் வந்து வழிபட்டு அருள் பெற்றிருக்கின்றனர்.
 
மலையடிவாரத்தில் கோவிலின் நுழைவாயில் முன்புறம் அடையவளைந்தான் என்ற பெயர் கொண்ட திருக்குளம் உள்ளது. அதனை அடுத்துள்ள ராஜா மண்டபத்தைக் கடந்து, விநாயகரை வழிபட்டுப்பின் உச்சிக் கோவில், இடைக்கோவில், அடுத்து அடிவாரக் கோவில் என வழிபட வேண்டும் என்பது மரபாக இருக்கிறது.

ஏறுவதற்கு மிகவும் கடினமானது என்பதாலும், கொடிய பல வளைவுகளைக் கொண்டிருப்பதாலும் இது கொடுங்குன்றம் என்றழைக்கப்படுகின்றது. அடிவாரத்தில் இருந்து மலையுச்சிக்கு சுமார் 5 கி.மீ. நடக்க வேண்டும். செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது. சில இடங்களில் படிக்கட்டுகள் இல்லை. சித்தர்கள் பலர் இன்னமும் சூட்சும வடிவில் இந்த மலையில் வாழ்வதாக நம்பப்படுகிறது. மலையுச்சியில் முருகன் கோவில் ஒன்று உள்ளது. பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமியப் பெரியவரின் சமாதியும் (தர்கா) உள்ளது. முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்ததால் இந்த ஊர் என்றும் எப்பொழுதும் பசுமையாகவும், வளமாகவும் காணப்படுகின்றது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோவில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 195 வது தேவாரத்தலம் ஆகும்.

திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.

பிரார்த்தனை: கருத்து வேறுபாடுள்ள தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொள்ள ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் சுக்கிரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள், இங்கு அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
 
நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பிகைக்கு வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜைகள் செய்வித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

திறக்கும் நேரம்: காலை 6 – மதியம் 12 மணி, மாலை 4 – இரவு 8 மணி வரை. மலை மீதுள்ள மங்கைபாகர் சன்னதி மட்டும் மாலையில் 6.30 வரை திறந்திருக்கும்.

ஒருமுறை இததலத்திற்கு சென்று முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறுவீர்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.12.21

Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் Part 11


Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் Part 11

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். வங்கி அதிகாரியாக சுமார் 19 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியும். அவருக்கு எந்தவிதமான பதவி உயர்வும் கிடைக்கவில்லை. நியாயமாகக் கிடைக்கவெண்டியது கூடக் கிடைக்கவில்லை. மனிதர் நொந்து போய்விட்டார். 42 வயதாகி விட்டது. இனிமேலாவது கிடைக்குமா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு!!!!

இதுவரை ஏன் கிடைக்கவில்லை? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

கேள்விக்குரிய ஜாதகம்:



ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 8-12-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.12.21

Astrology: ஜோதிடம்: 9=12=2021ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 9=12=2021ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் தற்போதைய இந்திய குடியரசுத் துணைத்தலைவரும், பாரதிய ஜனாதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான திரு.முப்பவரப்பு வெங்கைய்யா நாயுடு அவர்கள்.

பிறப்பு : ஜூலை 1, 1949 நேரம் : மதியம் 12 மணி, 8 நிமிடம்.
இடம் : சவட்ட பாலம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!!!

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்தவாரம் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.12.21

Astrology: ஜோதிடம்: 2-12-2021ம் தேதி புதிருக்கான விடை!

Astrology: ஜோதிடம்: 2-12-2021ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் நம் மேற்கு வங்காள முதல்வர் திருமதி மமதா பானெர்ஜி அவர்கள்

அவர் பிறந்ததேதி 5-1-1955 மதியம் 12:10 மணி. கல்கத்தா

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! 

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்தவாரம் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
====================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 2-12-2021 ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  2-12-2021 ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

 நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

 சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!




 தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

 க்ளூ வேண்டுமாபெண்மணி. வடநாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்!!!!

 சரியான விடை நாளை வெளியாகும்!

அன்புடன்

வாத்தியார்

--------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.12.21

Astrology: ஜோதிடம்: அலசுங்கள் பகுதி 10 புதிருக்கான விடை!!!!

Astrology: ஜோதிடம்: அலசுங்கள் பகுதி 10  புதிருக்கான விடை!!!!

ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகி பட்டப் படிப்பில் சிறப்பாகத் தேர்வு பெற்றார். பிறகு ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பினார். அதிலும் சுலபமாகத் தேர்வாகி, படித்துப் பட்டம் பெற்றார். சில மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு நல்ல இடத்தில் (மாவட்டத்தில்) வேலை கிடைத்து, அமர்ந்தார். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேர்ந்தது.
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!’’’ என்று கேட்டிருந்தேன்

சரியான விடை: 
ஜாதகி துலா லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரனுடன் செவ்வாயும் (2 & 7ற்கு உரியவர்) சேர்ந்து லக்கினத்தை வலிமை மிக்கதாக்கினார்கள். 10ம் வீட்டில் உச்சம் பெற்ற நிலையில் குரு பகவானின் ஆதிக்கம், அந்த வீட்டிற்கு அதிபதி சந்திரன் 12ல் 9ம் வீட்டுக்காரர் புதன் மற்றும் 11ம் வீட்டுக்காரர் சூரியனுடன் சேர்க்கை. அத்துடன் ராகுவும் கூட்டாகச் சேர்ந்துள்ளார்  நடப்பு தசா நாதன் ராகு உச்சமான புதனுடன் கூட்டாகச் சேர்ந்து நல்ல பலன்களைக் கொடுக்கும் நிலையில் உள்ளார் 
இக்காரணங்களால் ஜாதகிக்கு வெற்றி மீது வெற்றி தொடர்ந்து கிடைத்தது!!!!!

இந்த ஜாதகத்தில் மிக்க பலம் பொருந்தியவர் குரு (8 பரல்) 10ம் வீட்டில் கடக ராசியில் உச்சம் பெற்று 7ம் பார்வையால் 4ம் வீட்டை பார்க்கிறார் .ஜாதகி கல்வியில் மிக உயர்ந்த பட்ட படிப்பை பெற்று சிறந்து விளங்கியதற்கு இது தான் காரணம் 

புதிருக்கான பதிலை பல அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். 

அடுத்தவாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!